வாழ்வுரிமைக்காகப் போராடியவர்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்கிறது இந்த அரசும் அதற்கு ஒத்தூதும் ஊடகங்களும். மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்ட பிணங்களைச் சாட்சியாய் வைத்துக்கொண்டு, தூத்துக்குடியெங்கும் எதிரொலிக்கும் மரண ஓலங்களுக்கு மத்தியில் எதிரொலிக்கும் இந்தக் குரல் யாருடையது?
தூத்துக்குடி இன்று, பாஞ்சாலக்குறிச்சி அன்று, இது மண்ணைக் காக்கும் போராட்டம்,
வெல்லும் தமிழகமே எழுந்து நின்று!
நீண்ட ஆயுள் பெற கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி. பாருங்கள் ! பகிருங்கள் !
மக்கள் அதிகாரம் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் ஆற்றிய உரை!
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயி சங்கத்தின் திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ.
படைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் ! நாமே அந்த உலகம் ! உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் !
“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ராஜூ ஆற்றிய உரையின் வீடியோ.
புத்தக வாசிப்பின் அவசியத்தையும் அதன் பலன்களையும் எடுத்துச் சொல்கிறது இந்த வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...
காவிரி நீர் வராததால் நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.
தங்கம், செய்கூலி - சேதாரம்,அட்சய திரியை என எங்கு பார்த்தாலும் மஞ்சள் புழுவாய் நெளியும் நகைக்கடை விளம்பரங்களை பகடி செய்கிறது இந்த வீடியோ... .
யாரை இதுநாள் வரை ஆக மோசமாக அவதூறு செய்தார்களோ, இருட்டடிப்பு செய்தார்களோ அந்த மார்க்ஸ் இப்போது முதலாளித்துவவாதிகளுக்குத் தேவைப்படுகிறார். அப்படி என்னதான் செய்தார் மார்க்ஸ்? விளக்குகிறது இந்த வீடியோ!
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது மகஇகவின் இப்பாடல் வீடியோ
காதல் குறித்த பத்து முக்கியமான அம்சங்களை தொகுத்துத் தருகிறது இந்த பார்வை பத்து வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...
திருச்சியில் போக்குவரத்து போலீசு காமராஜால் கொல்லப்பட்ட உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் மத்தியில் தோழர் கோவன் பாடிய புதிய பாடலின் வீடியோ!