Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 517

போயஸ் தோட்டத்து பூசாரி : தத்துவஞானி சமஸ் – தி இந்து அன்றும் இன்றும்

9
சமஸ்

 தத்துவஞானி சமஸ் அன்றும் இன்றும்

“குமாரசாமியின் காந்தி கணக்கு” தீர்ப்பால் ஜெயா விடுதலையானதும் தத்துவஞானி சமஸ் என்ன சொன்னார்?

“இனியாவது அரசியல் நடக்குமா?” என்று மே 16, 2015 அன்று அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில மேற்கோள்கள்….

“ஜெயலலிதா விடுதலை தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத்தான் பதிலுக்குக் கேட்கிறேன்: இன்றைக்குத் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூடச் சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று. ஒரு தலைவருக்கு கூட இங்கு  திராணி இல்லையே, ‘நீதிமன்றத்தில் அவர் வென்றால் என்ன; மக்கள் மன்றத்தில் அவரை நாங்கள் வெல்வோம்’என்று சொல்ல? இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பின் நியாய தர்மங்களை முன் வைத்து விவாதிப்பதில் அரசியல்ரீதியாக அர்த்தம் ஏதேனும் உண்டா?

ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும். அதுதான் அவரை எதிர்ப்பவர்களுக்கு உண்மையான அரசியல் வெற்றி. தமிழக எதிர்க் கட்சிகளிடம் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடி அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து ஜெயலலிதாவை வீழ்த்தும் உத்தி இல்லை. மாறாக, ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கின் மனநிலையில் இருக்கின்றன; ஜெயலலிதாவை வீழ்த்தி, தங்கள் இருப்பை வெளிக்காட்ட இந்த வழக்கை மட்டுமே ஒரே துருப்புச் சீட்டாகப் பிடித்துத் தொங்குகின்றன. ஜெயலலிதா இல்லாத இடத்தில் கம்பு சுழற்ற ஆசைப்படுகின்றன.

ஜெயலலிதா வழக்கு அதிமுகவுக்கு உயிராதாரப் பிரச்சினையாக இருப்பதன் நியாயம் புரிந்துகொள்ளக் கூடியது. ஏனைய கட்சிகளும் அதையே கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது. அரசியல் நடத்த, மக்களை அணிசேர்க்க இவர்களுக்குத் தமிழகத்தில் பிரச்சினைகளே இல்லையா என்ன?”……

-சமஸ் (மே 2015)

இனி இன்று அதாவது ஜெயா சசி கும்பல் தண்டிக்கப்பட்ட பிறகு பிப்ரவரி 15, 2017 அன்று தத்துவஞானி சமஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு “ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்..மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!”. அதிலிருந்து ஒரு மேற்கோள்..

“கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். ஆட்சியோடு தொடர்புடைய அவர்கள் சார்ந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. ஒருகுற்றவாளியிடம் மக்கள் ஆட்சிப் பரிபாலனம் பெறுவதைக் காட்டிலும் கொடுமை இல்லை. “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ்தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

அந்தச் சதியின் நீட்சிதான் நிழல் அதிகார மையமே நிஜ அதிகார மையமாக உருவெடுக்கும் கனவிலும் ஒளிந்திருக்கிறது. எது ஒரு குற்றவாளிக்கு இந்த அசாத்திய துணிச்சலைத் தந்தது? நீதியின் மீதான பயமின்மைக்கு அதில் முக்கியமானபங்கு உண்டு. தாமத நீதிப் பரிபாலனத்துக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமதமான இந்தத் தீர்ப்பு ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு விடுதலையைத் தந்துவிட்டது; ஆனால், தண்டனையை ஏழரைக் கோடி மக்கள் இன்று சுமக்கிறார்கள். இந்திய நீதித் துறை தன்னை ஆழமான சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்!”

– சமஸ் (பிப்ரவரி 2017)

இரண்டையும் படித்த பிறகு திருவாளரும் தத்துவஞானியுமான சமஸை எப்படி அழைக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தி இந்து அன்றும் இன்றும்

ரோடு ஒத்துப்போவதில் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மட்டும் விதிவிலக்கல்ல. தி இந்துவின் தமிழ்ப் பதிப்பே பாசிச ஜெயாவுக்கு சிறப்பிதழ் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். ஜெயலலிதாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்த போது “தி இந்து” என்ன எழுதியது?

அன்று………..

போயஸ் தோட்டத்தின் ஆஸ்தான பூசாரியான தினமணிக்குப் போட்டியாக அறிவார்ந்த முறையில் காவடி தூக்கிய “திஇந்து” குமாரசாமி தீர்ப்பு குதூகலத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, ஜெயலலிதாவின் மறுவருகை நல்லதாக அமையட்டும் என்று தலையங்கம் தீட்டியது. அதில் ஜெயாவின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக ஆரூடம் கூறும்ஆசிரியர் அசோகன், “சுணங்கி நிற்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து அடித்து ஓட்டுவது எவருக்கும்சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் மாநிலம் அதைத் தான் எதிர்பார்க்கிறது” என்கிறார்.

நீதிபதி குமாரசாமி கணக்கில் செய்துள்ள மோசடி அம்பலமாகி நாறிக் கொண்டிருந்த போது, நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தா தொகையைக் கூட்டினால் இந்தக் கணக்கு நேராகிவிடும் என்று ஜெ. கும்பலுக்கு ஆறுதல் கூறும் தி இந்து, ஜெ.கும்பல் வாரியிறைத்த பல கோடி பணத்தில் நீதித்துறையின் ஒவ்வொரு படிக்கட்டையும் உரிய முறையில் கவனித்துப் பச்சையான அயோக்கியத்தனங்கள் மூலம் ஜெ. கும்பலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ள அ.தி.மு.க. வக்கீல்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்தவர்கள், “ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று தலைப்பிட்டு ஏதோ மாபெரும் சாதனையாளர்களாகக் காட்டியது. அப்போது சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அம்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெரிய தடையைத் தாண்டிய அம்மா, இடைத்தேர்தல் என்ற சிறிய தடையை அலட்சியமாகத் தாண்ட ஓடோடி வருவதைப் போல கருத்துப்படம் போட்டு தனதுவிசுவாசத்தைப் பறைசாற்றியது.

இன்று………

“நல்ல எச்சரிக்கையாக அமையட்டும்!” என்று பிப்ரவரி 15, 2017 அன்று தலையங்கம் எழுதியிருக்கிறது தி இந்து. அதிலிருந்து சில மேற்கோள்கள்….

//ஆளும் அதிமுகவினர் இந்தத் தீர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டும். “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாகச் சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்டஇல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு. வருவாய்க்குப் பொருந்தாமல் ஈட்டும் முறைகேடான பணத்தைச் செலுத்துவதற்காகவே முகமூடி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பதை அதிமுகவினர் ஊன்றிப் படிக்க வேண்டும்.

இந்த வழக்கில் ஏற்பட்ட தாமதம் மக்களுக்குக் கசப்பைத் தருவது, அது இந்திய நீதித் துறையின் பெரிய பலவீனம் என்றாலும், ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களும் அவர்கள் உடனிருக்கும் நிழல் அதிகார மையங்களும் என்றாவது ஒருநாள் நிச்சயம் நீதியின் முன்னர் தண்டனையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனும் நம்பிக்கையை மக்கள் மனதில் இத்தீர்ப்பு விதைத்திருக்கிறது. அரசியல் தூய்மை எனும் பதம் வெறுமனே வாய் வார்த்தையாக இல்லாமல் இனியேனும் நனவாகும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் எழுவதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் இத்தீர்ப்புக்கு முகங்கொடுக்க வேண்டும். அவர்களுடைய மாற்றம்அதிமுகவிடமிருந்து தொடங்க வேண்டும்!//

தி இந்து தலையங்கம் (பிப் 15 2017)

பாருங்கள்.. தீர்ப்பை ஊன்றிப் படிக்க வேண்டும், முகங்கொடுக்க வேண்டும் என்று உபதேசிப்பவர்கள், தங்கள் முகத்தில் தாங்களே துப்பிக் கொள்கிறோம் என்று நினைக்கவில்லை. தி இந்துவின் ஆசிரியர் அறிவாளிகளை விட அதிமுகவினர் எவ்வளவோ மேல்!

பாக்கின் உளவாளி பாஜக துருவ் சக்சேனா கைது !

2
துருவ் சக்சானா மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

हम तुम्हे मारेंगे और ज़रूर मारेंगे लेकिन हु बन्दूक हमारी होगी, गोली भी हमारी होगी, वक़्त भी हमारा होगा बस जगह तुम्हारी होगी” (hum tumhe maarenge aur zaroor maarenge lekin hu bandook hamaari hogi, goli bhi hamaari hogi, vaqt bhi hamaara hoga bas jagah tumhaari hogi)

துருவ் சக்சேனா

– கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 29 அன்று ட்விட்டரில் துருவ் சக்சேனா.

தன் பொருள் ”நாங்கள் உன்னைக் கொல்வோம்; நிச்சயம் கொல்வோம். துப்பாக்கி எங்களுடையதாக இருக்கும், தோட்டாக்களும் எங்களுடையதாக இருக்கும், நேரம் கூட எங்களுடையதாக இருக்கும் – ஆனால், இடம் மட்டும் உன்னுடையதாக இருக்கும்” – இது சாவ்தாகர் எனும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் பேசிய வசனம்.

அது இந்திய இராணுவம் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களின் மேல் ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் நடத்தியதாக பீற்றிக் கொண்ட சமயம். எனவே இந்த வீரவசனத்தை துருவ் சக்சேனா யாரைப் பார்த்து சொல்லியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதில் எந்தச் சிரமும் இருக்கப் போவதில்லை. ஆம், பாகிஸ்தானைப் பார்த்து துருவ் சக்சேனா அடித்த பல்வேறு வீர வசனங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துருவ் சக்சேனாவின் பிற சமூக வலைத்தள பதிவுகளில் தேசியம், தேசபக்தி குறித்தெல்லாம் நாட்டு மக்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறார்.

யார் இந்த துருவ் சக்சேனா?

துருவ் சக்சேனா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். குறிப்பாக அதன் இணையப் பிரச்சார பீரங்கிகளில் ஒருவர் – மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தேசபக்தர்களின் சார்பாக தீவிரமாக களமாடி வந்த துருவ் சக்சேனா, தற்போது தீவிரவாத தடுப்பு போலீசாரால் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

துருவ் சக்சேனா செய்த குற்றம் – தேசதுரோகம். குறிப்பாக சொல்வதானால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இந்திய இராணுவம் குறித்த இரகசிய தகவல்களை கள்ளத்தனமாக கொடுத்தார் என்பது தான் துருவ் சக்சேனாவின் மீதான குற்றச்சாட்டு. இந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சில ஆச்சரியங்கள் உள்ளன. பாகிஸ்தான் உளவாளிகளாகச் செயல்பட்டு துருவ் சக்சேனாவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பத்து பேரில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. மத்தியில் மட்டுமின்றி மத்திய பிரதேசத்திலும் நடப்பது பாரதிய ஜனதா ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தடுப்புப்  பிரிவைச் சேர்ந்த போலீசு உயரதிகாரி சஞ்சீவ் சமி கூறும் போது, கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே நடத்தி வந்தார்களெனவும், அந்தத் தொலைபேசி இணைப்பகத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்திய இராணுவ அதிகாரிகள் பேசுவது போல பேசி ஜம்மு காஷ்மீரில் நிலை கொண்டிருக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகளிடமிருந்து இராணுவ நடவடிக்கைகள் குறித்த இரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். துருவ் சக்சேனாவும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் பணத்துக்காகவே இந்தக் காரியங்களில் ஈடுபட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை மோடியை எதிர்ப்பதோ, மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளை விமர்சிப்பதோ தேசதுரோகச் செயலாக சித்தரிப்பது வழக்கம். தமது தலைவரின் மேல் சொல்லப்படும் எந்தவொரு சிறிய விமர்சனத்துக்கும் சீறியெழுந்து எதிரி வினையாற்றும் பாரதிய ஜனதாவின் இணையக் கூலிப்பட்டாளம், விமர்சிப்பவர்களை மட்டுமின்றி அவர்களது ஏழேழு தலைமுறையினரையும் இந்தியாவுக்கு எதிரானவர்களாகவும் தேசதுரோகிகளாகவும் சித்தரிப்பது வழக்கம். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தேசபக்தர் துருவ் சக்சேனாவோ இந்திய நாட்டுக்கும் பாகிஸ்தான் கொடுத்த நோட்டுக்கும் ஒரே நேரத்தில் வாலாட்டியுள்ளார்.

இந்துத்துவ கும்பலுக்கு இந்திய சுதந்திரப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த துரோக வரலாறு இருக்கும் நிலையில், எங்கே விவாதமென்றாலும் அங்கெல்லாம் ஆஜராகி தேசபக்த கூச்சலை ஓங்கி ஒலிப்பதும், இந்திய தேசியத்தின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதும் வழக்கம். கூட்டமாக உள்ள பேருந்தில் குசு விட்டவன் எவனோ அவனே எல்லோரையும் முந்திக் கொண்டு “என்னய்யா நாத்தம்” என மூக்கைச் சுளிப்பது போல அடிவயிற்றிலிருந்து ‘பாரத் மாதாகீ ஜேய்’ என்று கூவிக் கொண்டே தேசத்தை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளார் துருவ் சக்சேனா.

பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் உடன் துருவ் சக்சேனா

பெரும்பாலான முதலாளிய ஊடகங்கள் இந்த விவகாரம் குறித்து பேசாமல் கள்ள மௌனம் சாதித்தாலும்,  ஓரிரு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி நாற்றமெடுக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் துருவ் சக்சேனாவுக்கும் தமது கட்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாக மறுத்துள்ள மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகர்கள், தனிப்பட்ட முறையில் தமது கட்சியினுள் அந்நிய தேசத்தின் உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக இந்தியா டுடே பத்திரிகையின் செய்தியாளரிடம் புலம்பியுள்ளனர்.

அரசியல் ரீதியில் உருத்திரண்டுள்ள இந்துத்துவ சித்தாந்தம் அதன் பிறப்பிலேயே ஏகாதிபத்திய சேவையையும், தேச துரோகத்தையும் அடித்தளமாக கொண்டதாகும். ‘சுதந்திர’ இந்தியாவில் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க தனி அமைச்சகம் அமைத்து சேவை புரிந்த ஒரே ஆட்சி பாரதிய ஜனதாவினுடையது என்பதும், இராணுவத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அதற்கான சமீப கால நிரூபணங்கள். விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?

தேசத்தின் மேல் பற்றுக் கொண்டவர்கள் பாரதிய ஜனதாவையும் இந்துத்துவ கும்பலையும் வேரோடு ஒழித்துக் கட்டுவது ஒன்றே தலையாய தேசபக்த நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்வதோடு உடனடியாக அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும்.

மேலும் படிக்க

ISI agents arrested in Madhya Pradesh linked to BJP; party leaders privately express anguish over possible infiltration

மகிழ்ச்சி என்பது போராட்டமே : மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை

1
ருமேனியாவின் மோடி: பிரதமர் சோரின் க்ரிண்டேனு
ருமேனியாவின் மோடி – பிரதமர் சோரின் க்ரிண்டேனு

மிழகத்தின் உரிமைகளைத் தொடர்ச்சியாக நசுக்கி வரும் மத்திய அரசுக்கும், அதற்குத் துணை போகும் மாநில அரசுக்கும் எதிராக 2017 ஜனவரி மாதம்  மெரினாவிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான  போராட்டத்தைப் பெருந்திரளாக இலட்சக்கணக்கான தமிழக மக்கள் ஒன்றிணைந்து நடத்தினர். அதைப் போன்றதொரு பெருந்திரள் மக்கள் எழுச்சி ருமேனியா நாட்டிலும் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக  நடைபெற்று வருகிறது. வால்வீதி ஆக்கிரமிப்புப் போராட்டம் தொடங்கி தற்போது தமிழகம், ருமேனியா வரை, தங்களைக் காப்பாற்றுவதாக கூறிக் கொள்ளும் அரசு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையை இழந்த மக்கள், தங்களது உரிமைகளை பறித்தெடுக்க சமரசமின்றி வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஆளுங்கட்சியான சோசலிச டெமாக்ரட்டிக் கட்சி, கடந்த 2017 ஜனவரி மாதம் 31-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில்  ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது. அந்த அவசரச்சட்டத்தின் படி ருமேனியாவில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஈடுபடும் முறைகேடுகளின் மதிப்பு 48,000 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக இருந்தால் அவை குற்றமாகக் கருதப்படாது. அவர்களை சிறையில் அடைக்கத் தேவையில்லை. அதே போல், ஏற்கனவே சிறையில் இருப்பவர்களின் சிறை தண்டனையை ரத்து செய்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்றும் ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது ருமேனிய அரசு.

ருமேனியாவில் இது வரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தற்போது தண்டனையை அனுபவித்து வரும் மற்றும் விசாரணையில் இருக்கின்ற அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எண்ணிக்கை சுமார் 2,000 பேர். இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை தப்புவிப்பதற்காகவே கொண்டு வரப்படும் இச்சட்டத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் சோரின் க்ரிண்டேனு கூறியிருக்கும் காரணம் என்ன தெரியுமா ? சிறைகளில் ஏற்பட்டிருக்கும் இட நெருக்கடிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் இது என்று அறிவித்திருக்கிறார் கிரிண்டேனு.

rome-people-protest-flag
வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்

பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பல்கள் சூதாடுவதற்கு ஏதுவாக நமது கையில் ரொக்கமாக இருக்கும் ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளில் குவிப்பதற்காகச் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என அறிவித்த மோடியிடமிருந்து தான் இந்த உபாயத்தை கிரிண்டேனு கற்றிருப்பார் போலும்.

ஊழல் அதிகாரிகள் மட்டுமல்லாமல், குறிப்பாக தமது ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லிவியூ ட்ராக்னியாவை அதிகார துஷ்பிரயோக முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவிக்கவே இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது ருமேனிய அரசு. இதனை உணர்ந்தே ருமேனிய மக்கள் ஆத்திரமடைந்து வீதிக்கு வந்திருக்கின்றனர். ஊழல்வாதிகளுக்கு ஆதரவான இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இத்தகைய மோசமான சட்டத்தைக் கொண்டு வந்த ஆளும் கட்சி பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தலைநகரான புச்சாரெஸ்ட்டில் 3,00,000க்கும் அதிகமான மக்கள் ஒன்று குழுமி 15 நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர ருமேனியாவின் 55 முக்கிய நகரங்களில், மக்கள் அரசு அலுவலகங்களின் முன்னால் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.

பொதுமக்களின் ஆத்திரத்தைக் கண்டு மிரண்ட ருமேனிய அரசு, கடந்த 2017 பிப்ரவரி 5, ஞாயிறன்று அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும் ஆட்சியாளர்கள் பதவி விலகினால் தான் அங்கிருந்து கலைவோம் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கும் தமிழக மக்களால் நிகழ்த்தப்பட்ட மெரினா எழுச்சிக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன.

rome-people-protest-night
செல்போனின் ஒளி வெள்ளத்தில் – மெரினாவின் அதே உற்சாகம்

பாலாற்றுப் பிரச்சினை, காவிரி பிரச்சினை, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி மறுப்பு, ஜல்லிக்கட்டுக்கு சட்டதிருத்தம் கொண்டு வர மறுப்பு எனத் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சித்து வந்த மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசிற்கு எதிராக, தமிழக மக்கள் மெரினாவில் கொதித்தெழுந்தது போல், தொடர்ச்சியான ஊழல் முறைகேடுகளாலும், அதிகார துஷ்பிரயோகங்களாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வந்த ருமேனிய மக்கள் ஒட்டுமொத்தமாக கொதித்தெழுந்து வீதிக்கு வந்து விட்டனர்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கண் துடைப்புக்காக அவசரச் சட்டத்தை இயற்றிவிட்டு பிரச்சினை முடிந்துவிட்டது என அறிவித்த பன்னீரைப் புறக்கணித்து நிரந்தரச் சட்டம் இயற்றும் வரைப் போராடுவோம் எனத் தமிழக மக்கள் தொடர்ந்து போராடியதைப் போல ருமேனிய மக்களும் ஆளும் சோசலிஸ்ட் டெமாக்ரடிக் அரசாங்கம் பதவி விலகும் வரை களையப்போவதில்லை என தொடர்ந்து போராட்டத்தில் இருக்கின்றனர்.

இரவிலும் அதே உற்சாகத்துடன் போராட்டக்காரர்கள்.
இரவிலும் அதே உற்சாகத்துடன் போராட்டக்காரர்கள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அவசரச் சட்டத்தை ஏற்காமல் நிரந்தரச் சட்டத்திற்காகத் தொடர்ந்து போராடிய இளைஞர்களையும், மாணவர்களையும், பாஜக, அதிமுக மற்றும் அவர்களின் அடிவருடிக் கும்பல்கள் எவ்வாறு சமூக விரோதிகள் எனச் சாடினார்களோ அதைப் போலவே, ருமேனியாவிலும் போராட்டத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் மக்களை சமூகவிரோதிகள் பின் இருந்து இயக்குவதாக ஆளும் கட்சியின் மூத்த தலைவரான லிவியூ ட்ராக்னியாவும் கூறியுள்ளார். மக்கள் எழுச்சியை ஒடுக்க ஆளும்வர்க்கங்கள் ஆர்வத்தோடு உபயோகிக்கும் மூன்று சொற்கள் –” சமூகவிரோதிகள் – தேசவிரோதிகள் – தீவிரவாதிகள் ” உலகம் முழுவதும் போராடும் மக்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிப்பது தான் ஆளும்வர்க்கங்களின் ஒருமித்த சித்தாந்தக் கோட்பாடாக இருக்கும் போலிருக்கிறது.

தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை
தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை

ருமேனிய மக்களின் எழுச்சி குறித்துப் பேசும் போது, மற்றொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்று ருமேனிய மக்கள் எந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்களோ, அத்தகையதொரு சட்டம் , தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் முதல் ஜெயலலிதாவால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர் தொடங்கி, உயரதிகாரிகள் வரை, யார் மீதாவது லஞ்ச ஊழல் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனில், தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத் தான் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று ஜெயா அரசு ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. மக்களைச் சுரண்டி அரசு அதிகாரிகள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கை முழுங்கிக் கொழுத்த ஜெயா, தனக்கு சம்பாதித்துத் தரும் தனது அடிமைகளைப் பாதுகாக்க இந்த அரசாணையைப் பிறப்பித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் தமது உரிமைகளை மீட்க சிலிர்த்தெழுந்த இதே தமிழக மக்கள் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட  இந்த அரசாணை குறித்து எவ்வித எதிர்ப்புமின்றி அமைதியாயிருந்தனர். ஒரு வருடத்தில் மக்கள் எழுச்சி நிகழும் அளவிற்கு அப்படி என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன ? மேலே நாம் குறிப்பிட்ட பல்வேறு காரணங்களோடு மற்றுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது ஜெயலலிதா என்னும் தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது தான்.

rome-people-protest
ஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி தோண்டும் மக்கள்

உலகம் முழுவதிலும், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி இவ்வாறு பெருந்திரளாகத் திரண்டு நின்று போராடுவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. வால்வீதி போராட்டம் தொடங்கி, தற்போது மெரினா, ருமேனியா என்று தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

பெருந்திரளாகக் கூடி ஒரு திருவிழாவைப் போல தமது போராட்டத்தை நடத்திய தமிழகத்தை நாம் மெரினாவில் கண்டோம். இதோ ருமேனியாவின் புச்சாரெஸ்ட்டிலும் அதைப் போன்றதொரு திருவிழாவாக இப்பெருந்திரள் மக்கள் எழுச்சியை மக்கள் கொண்டாடுகின்றனர். அவர்களின் போராட்டம் வெல்கிறதோ, தோற்கிறதோ ஆனால், இது உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்களின் அடிவயிற்றைக் கலங்கச் செய்து கொண்டிருக்கிறது. சட்ட வரையறைகளைத் தாண்டி நடைபெறும் இத்தகைய மக்கள் போராட்டங்கள், தோற்றுவிக்கும் போராட்ட உணர்வு, உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின் பெருங்கனவிற்கு சவக்குழி தோண்டத் தொடங்கியிருக்கின்றன. ஆசான் மார்க்சின் சொல் உழைக்கும் வர்க்கத்தின் சொல்லாகவே என்றென்றும் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான நிரூபனம் தான் மெரினாவும், புச்சாரெஸ்ட்டும்.

marina-protest
மெரினாவில் திரண்ட தமிழ் மக்கள்

”மகிழ்ச்சி என்பது போராட்டமே ” – மார்க்ஸ்

– கதிர்

செய்தி ஆதாரம்:
Bucharest: Thousands protest decriminalising corruption
Protesters in Romania denounce plan to decriminalise misconduct offences
Romania protests continue despite repeal of corruption decree

போலீஸ் வன்முறை : எங்களை எதிர்த்துப் பேச எங்களிடமே அனுமதியா ?

0

கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ல்லிகட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய  காவல்துறையை கண்டித்து  கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.

ஜல்லிகட்டு வேண்டும் என்று போராடிய மணவர்கள், இளைஞர்கள், மாணவிகள் பொதுமக்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தடியடி நடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியது, அதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.   100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அந்த செயலை கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி 4 நாள் முன்னதாகவே 31.01.2017 அன்று கேட்கப்பட்டது.  ஏற்றுக்கொண்ட கோத்தகிரி ஆய்வாளர் இறுதி நாளில் அனுமதி இல்லை, இன்னும் மூன்று நாட்கள் கழித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேளுங்கள் என்றனர். அதன்படி 03.02.2017 அனுமதி கேட்டகப்பட்டு திட்டமிட்டபடி கோத்தகிரி ஜீப் நிலையம் பகுதியில் காலை 10.30 மணி முதல் 11.45 வரை நடந்தது. அதில் மக்கள் அதிகார அமைப்பை சார்ந்த தோழர்.ரவி தலைமை வகித்தார்.

கண்டன உரை நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தை சார்ந்த பொருளாளர் விஜயன் உரையாற்றினார்.  அவர் பேசுகையில் காவல்துறையினர் வெறி செயலை அம்பலப்படுத்தினார்.  மேலும் அவர்களை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரை மக்கள் முன்னால் கிழித்துள்ளனர்.  கிழித்த காவல்துறையை கண்டித்து பேசினார்.  வேடிக்கை பார்த்த பொதுமக்களுக்கு அறைகூவலாக நீங்கள் வீதியில் இறங்கி இதுபோல் அமைப்புகளில் இணைந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறி முடித்தார்.

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பாலன் கண்டன உரையாற்றினார்.  அவர் பேசுகையில் துரோகிகள் யார், நாட்டுப் பற்றாளர்கள் யார்? நாட்டையும் இயற்கை வளத்தையும், நீர்நிலைகளையும் காக்க போராடுபவர்கள் தேச துரோகி என்றால், நாங்கள் அதை செய்கிறோம், அப்படியே நாங்கள் தேசத் துரோகியாகவே இருக்கிறோம் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.  யார் தேச துரோகி யார் நாட்டு பற்றாளர்கள் என்று ஜல்லிகட்டு போராட்டத்தில் வெளிப்படுத்தினார்கள்.  மத்திய மாநில அரசுகளை எப்படி திட்டினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இனி நாட்டை சூறையாட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்  மாணவர்கள் இளைஞர்கள் என்று கூறி முடித்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது
பார்ப்பனிய கும்பல் தமிழகத்தை அழிக்க நினைத்தது.  அது இலட்சக்கணக்கான காளைகளை உருவாக்கியது. அந்த எழுச்சியை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது. மத்திய மாநில அரசுகளை தன் வார்த்தைகளால் குத்தி கிழித்தது.  அதை கண்டு அஞ்சி நடுங்கிய அரசுகள் நீர்த்து போகும் வண்ணம் ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்தது.  அதை ஏற்க மறுத்த மாணவர்கள் உறுதியாக போராடினார்கள்.  அதை கண்டு சமூக விரோதிகளை உள்ளே சென்று விட்டனர் என்று தடியடியை நியாயப்படுத்தியது.  காவல்துறை ஒரு ஏவல்துறையாக மாறிவிட்டது. அனைத்து போராட்டத்தையும் ஈவு இரக்கம் இன்றி அடித்து சித்திரவதை செய்கிறது.  காவேரி போராட்டம் முல்லைபெரியார் போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம், மாற்றுத் திறனாளிகள் போராட்டம், மக்கள் நல பணியாளர்கள் போராட்டம், தேயிலை விவசாயிகள் போராட்டம் என அனைத்து வாழ்வாதார பிரச்சனைக்காக போராடினாலும் அடித்து சித்திரவதை செய்வது பொய்வழக்கு போடுவது என்று உள்ளனர்.

இதற்கு மக்கள் அதிகாரம் தான் மாற்று என்று  பேசியதோடு பாதிக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பொதுமக்கள் அனைவருக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.  தடியடி நடத்திய காவல் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி  விடுதலை  செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மீண்டும் பெரிய போராட்டத்திற்கு தயங்க மாட்டார்கள் மக்கள் என்று எச்சரித்து பேசினார்.  ஆர்ப்பாட்டம் இடையே ஜல்லிகட்டுக்கு இல்லை டில்லிக்கட்டு, தேசத் துரோகி ஆக வேண்டும் என்றால் பெப்சியை குடி, திருத்த முடியுமா போலீசை திருத்த முடியுமா என்ற பாடல்கள் பாடப்பட்டது.  இறுதியில் நன்றியுரையாற்றினார், மக்கள் அதிகார அமைப்பு சார்ந்த வெங்கட்.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி.

***

எழுந்துநின்ற தமிழகமே எதிர்த்து நில்! போடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மெரினாவில் மாணவர்களின் போராட்டத்தைக் கலவர பூமியாக்கி நரவேட்டை நடத்திய போலிசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, தேனி மாவட்டம் போடி நகரில் கடந்த 03/01/2017 அன்று விவிமு சார்பில் கண்டனக் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, அனுமதி கோரியபோது, “எங்களை திட்டுறதுக்கு எங்ககிட்டயே அனுமதி கேட்டு வர்றியா” என்று விறைப்பாக பேசி மறுத்துவிட்டனர். அடுத்து டி.எஸ்.பி.இடம் முறையிட்டபின், மாவட்ட எஸ்.பி. இடம் பேசிவிட்டு, “இங்க எந்த அசம்பாவிதமும் நடக்கலையே. தேனியில்தான் சின்ன தள்ளுமுள்ளு நடந்தது. நீங்க அங்க போயி ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டியதுதானே” என்று சலித்துக் கொண்ட டி.எஸ்.பி இறுதியில், “ஒரு மணி நேரத்தில் முடித்துக் கொள்ள வேண்டும்” என்று பெரிய மனதுடன் அனுமதித்தார். இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்த்து போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய நகர்பகுதிகளில் குறிப்பாக மாணவர்களிடம் பிரசுரம், போஸ்டர் மூலமாக விரிவான  பிரச்சாரம் செய்திருந்தோம். பஸ் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் உணர்வுபூர்வமான ஆதரவுடன் தாராளமாக நன்கொடை அளித்தனர் !

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். வாஞ்சிநாதன்

போடி நகரச் செயலாளர் தோழர் A.T. கணேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். வாஞ்சிநாதன் அவர்கள் பேசுகையில் “தமிழகம் முழுக்க ஆறுநாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல்தான் இருந்தது. போலிசு நுழைந்த பிறகுதான் கலவரமானது. போராடிய மாணவர்கள் இளைஞர்கள், பெண்களை மண்டையை உடைத்தது, ஆட்டோக்களுக்கும், குடிசைகளுக்கும், மீன் மார்க்கெட்டுக்கும் தீயிட்டுக் கொளுத்தியது, வீட்டிற்குமுன் இருந்த வாகனங்களை அடித்து உடைத்தது எல்லாமே போலீசுதான்! இதுவெல்லாம் அப்பட்டமாக மீடியாக்களில் அம்பலாமான பிறகும் சமூகவிரோதிகள் தான் கலவரத்துக்கு காரணம் என்று சாதிக்கிறது தமிழக அரசு!

உண்மையான சமூக விரோதிகள் போலீசுதான் என்பது ஊடகங்கள் மூலம் மக்களிடம் அம்பலமாகிப் போனதால் தற்போது கண்துடைப்பு விசாரணைக் கமிசன் அமைத்து நாடகமாடுகிறது அரசும் போலீசும்!” என்று சமூகவிரோதிகளை தோலுரித்துக் காட்டியவர் மேலும், “போராடிய மாணவர்களை மட்டுமல்ல, அடைக்கலம் கொடுத்து உதவிய மீனவ மக்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது போலீசு ! போராட்டம் நடந்த ஆறு நாட்களும் இந்த அரசும், போலீசும், நீதிமன்றங்களும், இவர்களின் சட்டங்களும் முற்றாக செயலற்று முடங்கிப் போனது ! சுமூகமாக இப்போராட்டத்தை முடித்தால் ருசிகண்ட பூனைகளாக ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இதுபோன்ற போராட்டங்களுக்கு மக்கள் திரண்டு விடுவார்கள். தங்களது அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். மீண்டும் இப்படி ஒரு ஆபத்து நமக்கு எதிராக திறந்துவிடக் கூடாது என்ற பயத்தில்தான் போலிசின் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது அரசு ! இந்த அரசின் கட்டமைப்பு முழுவதும் தோற்றுப் போனதன் அடையாளம்தான் இந்த தாக்குதல்!” என்று தாக்குதலுக்கான காரணத்தையும் விளக்கிப் பேசினார்.

இறுதியாக, “முல்லைப்பெரியார் அணிக்காகவும், காவிரி நீர் உரிமைக்காகவும் போராடிய விவிமு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்காக போராடிய ம.க.இ.க., டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம், ஆகிய அமைப்புகளைத்தான் சமூக விரோதிகள் என்று போலீசும், அரசும் பீதியூட்டி வருகிறது! புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும்தான் உண்மையான மக்கள் நண்பர்கள் என்பதை இப்போராட்டம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இறுதிவரை களையாமல் நின்று கேட்டுசென்றனர். அலங்காநல்லூர் மக்களின் அனுபவத்தை சம்பவமாக தோழர் விவரித்துக் கூறியது பலரையும் கவர்ந்ததாக மக்கள் கூறினார். மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலரும் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி
தேனி மாவட்டம்.

***

வேதையில் மக்கள் அதிகாரம் சார்பில் 4.2.17 அன்று சல்லிக்கட்டு போரட்டத்தை கலவரமாக்கிய போலிஸ் அதிகாரிகளை கண்டித்தும் அவர்களை கைது செய்திட வலியுறுத்தியும் தோழர் தனியரசு தலைமையில் (மக்கள் அதிகாரம்) மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது. இதில் வேதையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சிசுந்தரம் (தி.மு.க), தோழர் ஒளிச்சந்திரன் (விவசாயிகள் அமைப்பு), மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மாரிமுத்து, பாலு, ஆசாத், வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். சிறப்புரையாக தோழர் காவேரி நாடன் (மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்),காவல் துறையின் அதிகாரத்திமிரை விளக்கி  பேசினர். சுமார் 100க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டம் பகுதி மக்களிடம் வரவேற்பை உருவாக்கியுள்ளது. வேறு எந்த அரசியல்; அமைப்புகளும் இதுபற்றி வாய்திறக்காத நிலையில் மக்கள் அதிகாரம் தலைமையேற்று நடத்தியது சிறப்பாக அமைந்தது.

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

28
தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை
ஓவியம்: முகிலன் (2014-ம் ஆண்டு)

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள்.

குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முழு தீர்ப்பையும் படிக்கும்போது மேலும் விவரங்கள் தெரியவரும்.

அன்று குன்ஹாவுக்கு எதிராக அதிமுக காலிகள் நடத்திய வெறியாட்டங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தக் காலிகள் எல்லாம் இப்போது பன்னீர் பக்கம் இருக்கிறார்கள். அல்லது வந்து விடுவார்கள். அல்லது இன்னொரு கும்பல் சசி சார்பில் உருவாகும்.

பரப்பன அக்ரகாரா சிறையில் இருந்தபோது, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா என்ற குற்றவாளியின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டுதான் பன்னீர் ஆட்சி செய்தார். எல்லா அரசு அதிகாரிகளின் தலைமீதும் அந்த குற்றவாளியின் படம்.

ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்து சிறை சென்றிருந்தால், மீண்டும் படத்தை வைத்து ஆட்சி நடத்தியிருப்பார்கள். இதில் சந்தேகமே இல்லை.  ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்திருக்கும் அதிமுகவினர் அந்தப் படத்தை எடுத்து கொளுத்தவா போகிறார்கள்?

இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது போல கொண்டாடுகிறது பாரதிய ஜனதா கும்பல். பாரதிய ஜனதாவும் சோ, குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் இதுநாள் வரை குன்ஹா தீர்ப்பைப் பற்றி சொல்லி வந்தது என்ன? இந்த பார்ப்பன வெறி பிடித்த கிரிமினல்கள்தான் இன்று சசிகலாவை மட்டும் வில்லியாக்கி, ஜெயாவை தேவதையாக்க முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆரம்பத்தில் ஊழலின் கறை படியாமல்தான் இருந்தாராம். இவர்களுடைய சகவாசத்தின் காரணமாகத்தான் அவர் ஊழலுக்கு பலியாகிவிட்டாராம். இப்போது யாருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைத்திருக்கிறதாம். இது நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தீர்ப்பு பற்றி தமிழிசை சவுந்தரராசனின் தொலைபேசி பேட்டி.

நாம் எதிர்த்துப் போராடவேண்டிய மிக முக்கியமான பித்தலாட்டம் இதுதான்.

இந்த தீர்ப்பு நமக்கு தெரியாத புதிய உண்மை எதையும் புதிதாக சொல்லி விடவில்லை. உண்மையிலேயே இதில் பெருமை ஏதேனும் உண்டென்றால், அது குன்ஹாவை மட்டுமே சாரும். ஜெயலலிதாவின் கிரிமினல்தனங்களையும் அவரால் கூலிக்கு அமர்த்தப்பட்ட மாபெரும் சட்ட வல்லுநர்களின் தகிடுதத்தங்களையும் மீறி, சட்டத்தின் எந்த சந்திலிருந்தும் தப்பிக்க முடியாத வண்ணம் மடக்கி, ஒரு தீர்ப்பை வழங்கினாரே, அது மாபெரும் சாதனைதான்.

அதாவது இந்த சட்டங்களின் வரம்புக்கு உட்பட்டு ஜெயலலிதா சசிகலா என்ற கிரிமினல் இரட்டையர்களை தண்டித்தது என்பது, கல்லில் நார் உரித்ததற்கு சமமானது. அதை குன்ஹா செய்தார்.

இந்த தீர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுவிட்டது என்றோ, இனி ஊழல் பேர்வழிகள் அஞ்சி நடுங்குவார்கள் என்றோ யாரும் கருதிவிட வேண்டாம். அப்படி ஒரு வெங்காயமும் நடக்காது.

66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு. கடந்த 5 ஆண்டுகளிலேயே அந்த தொகையைப் போன்று ஆயிரம் மடங்குக்கும் மேல் சொத்து குவித்து விட்டது ஜெ சசி கும்பல்.

பன்னீர், நத்தம், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது. அதற்குப் பிறகு என்ன? அன்புநாதன் மீது என்ன நடவடிக்கை? சேகர் ரெட்டி, ராம் மோகன ராவ் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் நேரத்தில் மூன்று கன்டெயினர் பிடித்த விவகாரத்தில் நடந்தது என்ன?

இது வெறும் சசிகலா விவகாரமல்ல, ஜெயா விவகாரம் மட்டுமல்ல. அ.தி.மு.க என்பதை ஒரு கிரிமினல் மாஃபியா கும்பல். அது தேன் எடுத்தவன் புறங்கை நக்குவது என்பதைப் போல ஊழல் செய்யும் கும்பல் அல்ல. கொள்ளையடிப்பதற்காகவே திட்டங்கள் தீட்டுகின்ற, கொள்ளையடிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்ட கிரிமினல் கும்பல். இந்த கும்பலை ஒரு கட்சி என்று அங்கீகரிப்பதும், அதற்கு வேறு தலைவர் தேர்ந்தெடுத்துக் கொண்டால் நல்லாட்சி நடத்துவார்கள் என்று கூறுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இப்போது அப்படிப்பட்ட அயோக்கியத்தனம்தான் நடக்கிறது. பன்னீர், எடப்பாடி, செங்கோட்டையன், தம்பிதுரை என்ற எந்த கிரிமினல் தலைமை தாங்கப் போகிறார்கள் என்பதா நமது கவலை? இந்தக் கிரிமினல் கும்பல் தலையெடுக்கவே கூடாது. அதிமுக என்ற கிரிமினல் கும்பலுக்கு மக்கள் தருகின்ற ஒரு தண்டனை எல்லா கட்சிகளின் கிரிமினல்களுக்கும் பாடமாக இருப்பது மட்டுமல்ல, கிரிமினல்களை மக்கள் நேரடியாக தண்டிப்பது என்பதற்கும் ஒரு முன்னோடியாக அமைய வேண்டும்.

மன்னார்குடி மாஃபியாவை வழக்கு போட்டு தண்டிப்பதென்றால் ஒரு காலத்திலும் முடியாது. சரியாக சொல்வதென்றால், சட்டபூர்வமான முறைகளின் மூலம் ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க முயல்வது என்பது முட்டாள்தனமானது  என்பதற்கு ஜெயலலிதா மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு நிரூபணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த வழக்கில் கடந்த காலத்தில் நடந்திருக்கும் விசயங்களை ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பீர்களேயானால், இந்த உண்மை புரியும்.

இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் முதல் தத்து, குமாரசாமி உள்ளிட்ட பல நீதிபதிகள் வரை உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பலர் பயந்து ஓடியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இத்தனை காலம் இழுத்தடிக்கப்பட்டதே ஒரு நாடகம். இது முன்னரே வந்திருந்தால் ஜெயா உள்ளே போக வேண்டியிருந்திருக்கும்.

இந்த மொத்த வழக்கிலும், குன்ஹா அளித்த தீர்ப்பு என்பது ஒரு விதிவிலக்கு. பரப்பன அக்கிரகாரா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயாவும் சசியும் திருந்தி விட்டார்களா? முன்னை விட வெறியுடன் கொள்ளையடித்தார்கள். 2001 முதல் இன்று வரை இவர்கள் சேர்த்திருக்கும் சொத்துகள் எத்தனை? ஜாஸ் சினிமாஸ் போல எத்தனை சொத்துகள்? அவையெல்லாம் யார் மீது வழக்கு போட்டு எப்போது பறிப்பது?

வழக்கு போட்டு நீதிபெறும் வழி முறையை, ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மோடி சட்டத்தை திருத்தினால்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியும், மாநில அரசு எதுவும் செய்ய முடியாது என்றார்கள். பிறகு பன்னீர் கேட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் திருத்த முடியாது, நீங்கள் மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வாங்கித்தருகிறோம் என்றார் மோடி. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிடக் கூடாது என்பதால், தீர்ப்பு சொல்லாதே என்றார்கள். உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அப்புறம் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கு விலங்கு நல வாரியம் உள்ளிட்டோர் இடைக்கால தடை வாங்காமல் கவனித்துக் கொண்டார்கள்.

இத்தனையும் எப்படி நடந்தது. ஏன் நடந்தது? மெரினா போராட்டம் தொடங்கும் வரையில் எதுவுமே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், போராட்டத்தின் தீவிரத்தை கண்டார்கள். “நீ சட்டம் போடுவியோ, தீர்ப்பு எழுதுவியோ அது உன் வேலை. ஜல்லிக் கட்டு நடக்கும் என்று உறுதியாகும் வரை நாங்கள் விடுவதில்லை” என்று மக்கள் நின்றார்கள். சட்டத்தை மக்கள் மதிக்கவில்லை. தடையை மீறி நடத்தினார்கள்.

இனிமேல் இதனை அங்கீகரிக்காவிட்டால், சட்டத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கும் புரிந்து விட்டது.

அதனால்தான் ஏதாவது ஒரு வழியில் இதனை சட்டரீதியாக தீர்த்து வைக்கவில்லை என்றால், மக்கள் படிப்படியாக அரசாங்கத்தின் அதிகாரத்தையே எல்லா விவகாரங்களிலும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சம் ஆளும் வர்க்கத்துக்கு வந்தது.

அதன் விளைவுதான் மாநில அரசின் சட்டம்.

அதாவது மக்களின் விருப்பத்துக்கு அரசும் நீதிமன்றமும் பணிந்தன.

அதே வழிமுறையை ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவும் நாம் கையாள முடியும். கையாள வேண்டும்.

அதிமுக என்ற கிரிமினல் மாஃபியாவை அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்ட வேண்டும். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அம்மா என்றழைக்கப் படும் கிரிமினலின் படங்களும் பெயர்களும் தமிழகத்தின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படவேண்டும்.

இதை நோக்கி நமது கோரிக்கைகளை அமைத்துக் கொள்வோம். போராடுவோம்.

 

கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !

12
பணத்தோடும் பந்தலோடும் வரவேற்கிறது காஞ்சிமடத்தின் முகப்பு.

வேதம் விதித்த தர்ம வழியில் நடப்பவன் புண்ணியத்தைத் அடைகிறான். ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்பவன் பாவத்திற்கு ஆளாகிறான்”- இது இறந்து போன காஞ்சி சங்கராச்சாரியாரின் சிந்தனை. “கற்புக்கரசிகளை மனைவியாகக் கொண்டிருப்போருக்குத்தான் கடவுள் தெரிவார்” – இது வைகைப்புயல் வடிவேலாரின் சிந்தனை. முன்னதின் தராரதரத்தை பின்னவர் ‘புரிய’ வைக்கிறார் என்பதற்கு காஞ்சி சங்கரமடத்தில் பார்த்ததும் கேட்டதுமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒரு நண்பரைப் பார்ப்பதற்கு காஞ்சிபுரம் சென்றிருந்தேன். ஊர் சுற்றி பார்க்கும் வைபவத்தில் காஞ்சி மடமும் உண்டு என்பதால் அங்கும் சென்றோம். அன்று கூட்டம் அதிகமில்லை. இருப்பினும் வந்தவர்களில் பெரும்பான்மையினர் சுண்டிவிட்டால் சிவக்கக்கூடிய வெண்ணிற வேந்தர்கள்தான். எங்களையும் உள்ளிட்ட ‘கரிய’ அசுரர்கள் ஓரிருவர்தான். முதலில் சங்கராச்சாரி தரிசனம் தரும் கருவறை இதுதான் என்று கல்லாலான கால் பாதத்தைக் காண்பித்தார்கள். அந்த அறையில்தான் ஜயேந்திர சரஸ்வதி பொது மக்களுக்கு காட்சி அளிப்பாராம். இப்போதெல்லாம் அவர் அதிகம் பேசுவதில்லையாம். அதுவும் அதிஷ்டம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காட்சியும் கொஞ்சம் கற்கண்டும் கிட்டும் என்றார்கள். கருவறையின் அருகிலேயே மண்டையில முக்கால் பாக முடிய வழித்து விட்டு கால் பாக முடியோட புண்ணியத்தை அடையும் வழியான வேத பாடத்தைப் பதினைந்து வயது மதிக்கத்தக்க பார்ப்பன சிறுவர்கள் பரிதாபமான முறையில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து கண்ணாடி அறை ஒன்றில் மனுசனா சிலையா என்று இனங்காண முடியாத காஞ்சிப் பெரியவரின் மெழுகுச்சிலையொன்று இருந்தது. அதற்கு மிகவும்  சுத்தமான ஆடை, செருப்பு மற்றும் அதனை சுற்றி பணம் (பக்தர்கள் போடும் காணிக்கை) என எல்லாம் பளிச்சென்று இருந்தது. உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது.

அதுக்கு நேர்மாறாகக் கருவறைக்குப் பின்புறம் ஒரு இடத்தில் சிலையைப் போல் அமர வைக்கப்பட்டிருந்தார், ஒரு உயிர் உள்ள வயதான சாமியார். அவருக்கு சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கலாம். ஒரு குடித்தன வீட்டில் ஓரமாக இருக்கும் மாட்டுத் தொழுவம் போல இருந்தது அந்த இடம். நீளமான வரண்டாவின் ஓரம் இரண்டடி சிமண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார் அவர். இரண்டு சொம்புத் தீர்த்த தண்ணீர், ஒரு சொம்பு குடிதண்ணீர், ஏதோ இரண்டு ஆன்மீகப் புத்தகங்கள், ஏதோ சாமி புகைப்படம், விபூதி, குங்கும கிண்ணம் எல்லாம் அந்த சாமியாரின் அருகில் அதே பெஞ்சில் இருந்தன. அவர் உடம்பு முழுவதும் விபூதி பட்டை, சந்தன குங்குமப் பொட்டு, கழுத்தில் மணி மாலை, வரித்து கட்டியக் கோவணம், தூக்கிக் கட்டிய கொண்டை தலைமுடி, ஒரு முழ நீளத்துக்குத் தாடி என வீற்றிருந்தவரைப் பார்க்கும் போது பக்தியை விட பரிதாபமே வரும்.

உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது. – பெரிய சங்கராச்சாரியாரின் மெழுகுச் சிலை.

அந்த இடம் பல நாள் சுத்தம் செய்யாத நிலையில் எலி நடமாட்டத்துக்கு சாட்சியாக எலிப் புழுக்கைகள் தெயவீக் மணத்தை தாண்டி மணம் வீசின. அங்கேதான் அவர் தங்கியும் இருக்கிறார். அவர் அமர்ந்திருந்த திண்ணைக்கு கீழேயே டாய்லெட் வடிவில் சிமெண்டால் கட்டியிருந்தார்கள். அதில் சிறுநீர் கழித்தால் அது சாக்கடையோடு சேர்ந்து விடும். அதுல வேதனை என்னன்னா அவசரத்துக்குக் கோவணத்த அவுத்துட்டு அவரால ஒன்னுக்குக் கூடப் போக முடியாது. தடியக் கூட ஊனி நேரா நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில இருக்கும் அவரால இருக்கி கட்டிய கோவணத்த (சன்னியாசி கோவணக்கட்டு) எப்படி அவிழ்க்க முடியும்?

மூன்று நாள் விடாது பெஞ்ச மழையில கூட அவர வெத்து உடம்போட  வச்சுருந்ததப் பாக்க மனசு தாங்கல. சாப்டிங்களா குளிருக்குப் போர்வ வேணுமான்னு ஒரு குழந்தையிடம் கேட்கச் சொன்ன போது, அது அவர் காதுக்கே கேட்டு உடனே திரும்பிப் பார்த்தார். அதில்   ஏக்கம் இருந்தது. அதே நேரம் அப்போது அங்கே வந்த ஒரு நடுத்தர மனிதர், “நல்லபடியா திருப்பதி போய்வர உங்க ஆசீர்வாதம் வேணுன்னுப் அந்தப் பெரியவரிடம் கேட்டதும் கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போல அவர் பார்வையில் அத்தனை எரிச்சலும், சலிப்பும் இருந்தது. “கடவுள் இல்லேன்னு சொல்றவன விட இருக்குன்னு சொல்றவனுக்குதான் கடவுள் இல்லைன்னு உறுதியா தெரியும்”னு சொன்ன பெரியாரின் உண்மையை நினைவுபடுத்தியது அந்த பார்வை.

ஒரு பச்சக் குழந்தை முகத்துக்கு முன்னாடி ஒரு கிலுகிலுப்பையை ஆட்டினா அது சிரிக்கும் உற்சாகமடையும். அதே குழந்தை வளர்ந்து முதிர்ந்து கட்டிலில் கிடக்கும் போது உற்சாகமூட்ட கிலுகிலுப்பையை ஆட்டுனா சிரிக்குமா.? சிரிக்காது. முடியாத முதுமையில் ஜீவனற்றப் பார்வையும் உணர்ச்சியற்ற முகமுமாகப் பார்ப்போரை பரிதாபப்பட வைக்கும் தோற்றத்தோடு இருந்தவரை ஒரு சாமியாராக் பிடித்து வைத்திருக்கின்றனர். அருங்காட்சியகத்தில் இருக்கும் தொன்மம் வாய்ந்த பொருள் போல அல்லது உயிரியல் பூங்காவில் இருக்கும் அபூர்வ விலங்கு போலவும், அதை பலர் அதியசமாக பார்ப்பதுமாய் இருந்தது அந்த சாமியாரின் நிலைமை. நல்ல உணவும் உறக்கமும் தேவைப்படும் தள்ளாத வயதில் இல்லாதக் கடவுளைக் காப்பாத்த இவரை சித்திரவதை செய்கிறார்கள்.

அடுத்து உயிரற்ற சிலையையும் உயிருள்ள மனிதனையும் காட்சிப் பொருளாக்கி ஆன்மீகத்தை நிலைநிறுத்தி ஆளுகின்ற காஞ்சி சங்கரமடத்தின் மற்றொரு பாவக்கணக்கைப் பார்ப்போம்.

சென்னை ராஜிவ்காந்தி மருந்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் நோயாளி அல்லாத காத்திருப்போர் தங்குமிடத்தில் தற்செயலாக கோகிலாம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்டு ஒரு பத்து நாள் இருக்கும்.

சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க – கோகிலாம்மா. இடம்: சென்னை அரசு மருத்துவமனை.

“சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க. அறிமுகம் இல்லாத மனுசாள் கூட என்னப் பாத்து பாவம் பண்ணின ஜென்மமுன்னு சொல்லும் போது பூமிக்கு பாரமாத்தான் நான் பொறந்தேன்னு நெனைக்காம இருக்க முடிலையே!. யாரைச் சொல்லியும் குத்தமில்ல. சக மனுசாகிட்ட எப்புடி நடந்துக்கனுமின்னு பணம்தான் சொல்றது. ராமா! ராமா! இதுக்கு மேலேயும் லோகத்துல நேக்கு இருக்க முடியலப்பா….” என்று திடிரெனக் கதறி அழுதார் கோகிலாம்மா.

ஐம்பது வயதைக் கடந்திருக்கும் அவர் 20 நாளுக்கு மேலாகக் கணவருடன் மருத்துவமனை வளாகத்தில் தான் தங்கியிருந்தார். மிகவும் பரிதாப நிலையில் தரையில் சுருண்டு அவர் கணவர் படுத்திருந்தார். வயிறு வலி, கிட்னியில் பிரச்சனை என்று இங்கு சேர்ந்த அவர்களைப் பாண்டிச்சேரி புற்றுநோய் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்து வரச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. வீடே இல்லாத அவர்கள் புதுவைக்குப் போக பஸ்சுக்குப் பணமில்லாது அங்கேயே தங்கியிருந்தனர்.

கோகிலாவின் கணவர் பாலசுப்பிரமணியன், புரோகிதத்தையே தொழிலாகக் கொண்டவர் . இவர்களுக்குப் பிறந்த குழந்தை மனவள பாதிப்போடு வளர்ந்து இன்றைக்கு அவனுக்கு பதினைந்து வயது இருக்கும் என்றார் கோகிலா. மகன் பிறந்ததும் சிறிது காலத்திலேயே புரோகிதத் தொழில் பிடிக்காமல் விசேசத்துக்குச் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளார். காலப்போக்கில் மனவளர்ச்சி பாதித்த மகனுக்கு மருத்துவம் செய்துகொண்டு சென்னையில் வாழ்வதற்கான வருமானம் கிடைக்காததால் சொந்த ஊர் சாதிசனத்தின் மேல் நம்பிக்கை வைத்து காஞ்சிபுரத்துக்குத் திரும்பியுள்ளார். ஐயர் என்ற தகுதியில் சங்கரமடத்தில் சமையல் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

“காஞ்சியில ஒரு சின்ன வாடகை வீட்டுல குடியிருந்துட்டு சங்கரமடத்துல 12 வருசமா சமையல் வேலை செஞ்சுட்டு இருந்தோம். சாப்பாடு மடத்துல முடிஞ்சுரும். வாங்கற சம்பளம் வாடகை, மருந்துக்கும் தான் சரியாருக்கும். ஆசப்பட்டு  ஒன்னு கூட வாங்கிச் சாப்பிட முடியாது.

எந்த நேரமும் அவர் அனல்லேயே நிப்பார். பாத்தரம் தேய்க்கறது, காய் கழுவறது, சுத்தம் செய்றதுன்னு தண்ணியிலேயே எம்பொழப்பு போகும். கால் கையெல்லாம் நரம்பு இழுத்துகிட்டு புண்ணாயிருச்சு. அவருக்கும் கிட்னியில கட்டி வந்தது. நாலு பேரு நல்லவங்க வர்ர எடம் உங்களப் பாத்து முகம் சுழிக்கக் கூடாது வேற வேலை பாத்துக்குங்கன்னு சங்கர மடத்துல சொல்லிட்டாங்க. பத்து வருசத்துக்கு மேல மடத்துல வேலபாத்தோம். திடீர்னு ஒரு நாள் எந்த உதவியும் செய்யாம வரவேணாம்னு சொன்னதும் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னே ஒண்ணும் தோணல”.

மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

மடத்தில் உள்ள சில மேல் மட்ட நிர்வாகிகளிடம் உதவி கிடைக்கவில்லை என்றதும் மடாதிபதி ஜெயேந்திர  சங்கராச்சாரியிடமே கோகிலா தம்பதியினர் தன் குறையைக் கொட்டியுள்ளார்கள்.

“அய்யா நாங்க 10 வருசத்துக்கு மேல மடத்துலதான் வேலை செய்றோம். உங்கள விட்டா எங்களுக்கு வேற போக்கிடம் கெடையாது. முடியாத பிள்ளைய வச்சுருக்கோம். நீங்க பாத்து உதவி செஞ்சாதான் உண்டுன்னு ஒரு தடவ இல்ல நாலு தடவ சங்கராச்சாரி கால்ல விழுந்துருக்கேன். மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

புளிச்ச ஏப்பக்காரனுக்கு பசியேப்பம் புரியாதுங்க. அதனாலதான் ‘அழுவாதப் பாப்பா இந்தா வாழப்பழம்னு’ கல்கண்டத் தூக்கி கையில கொடுக்குறாரு சங்கராச்சாரி. சாதி பாசமெல்லாம் ஒடம்புல தெம்பு இருக்கற வரைதான். முடியாதவங்கள யாரு வேலைக்கி வச்சுக்குவா? நல்லவா கெட்டவா யாருன்னு தெரியாம உலகம் புரியாம இருந்துட்டோம். எங்க ஆளுங்களுக்கு நீங்க எவ்வளவோ தேவலாம்”.

ஆயிரம் பேருக்கு அன்னதானமா இருந்தாலும் அற்புதமா சமைப்பாராம் கோகிலாவின் கணவர். அவர் சமைச்சதை வயிராற சாப்பிட்டு வாயார வாழ்த்தினவங்க எத்தனெப் பேர் இருப்பாங்க, ஒருத்தர் புண்ணியம் கூட அவங்களக் காப்பாத்தாம நடுத்தெருவுல விட்ட போது பார்ப்பனராவே இருந்தாலும் கடவுள் மேல கோபம் வரத்தேனே செய்யும்?

பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு.

“வாடகை கொடுக்க முடியாம வீட்ட காலி செஞ்சுட்டு கோயில்ல அன்னதானம், தெரிஞ்ச வீட்டு திண்ணையிலப் படுக்கையின்னு ஆறு வருசமா இப்படிதான் வாழ்க்கைய ஓட்டறோம். இந்த நெலமையில எம்பிள்ளைய எங்கூட எப்புடி வச்சுக்க முடியும். அவர் தங்கச்சிதான் பாத்துக்குது. அவங்களும் வசதியானவங்க கிடையாது. ஏதோ எங்க கையில கெடைக்கிற காச எப்பையாவது கொடுப்போம்.

மடத்துக்கு வந்துபோன மாமா ஒருத்தர் நாலு வருசமா மாசம் 500 ரூபா உதவி செஞ்சாரு. அவருக்கும் பெரிய சம்பாத்தியம் இல்ல, பிள்ளைகள வச்சுட்டு சிரமப்படுறவருதான் இருந்தாலும் எங்க மேல எறக்கப்பட்டு குடுத்துட்டு இருந்தாரு.  பிறகு அவரும் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சம்பாத்தியம் போதல மண்ணிச்சுருங்கோ, மாமின்னு கைய விரிச்சுட்டார்.”

 

இதுதான் கோகிலாம்மாவின் கதை. அரசு மருத்துவமனையில் இருக்கும் இல்லாமை எனும் வறுமையை கொண்டிருக்கும் மக்கள் கோகிலாம்மாவுக்கு முடிந்த அளவு உதவுகிறார்கள். அம்பானி, டாடா, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்கள் வந்து போகும் பணம் பிதுங்கும் சங்கர மடம் உதவ முடியாதென்று கைவிரித்து விட்டது. பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு என்பதை கோகிலாம்மாவும் அந்த தொண்டுக் கிழ சாமியாரும் உணர்த்துகிறார்கள்.

காஞ்சிப் பெரியவரின் அருளுரையின் படி பார்த்தால் காஞ்சிமடத்தில் இருந்த பெரியவர், வேதம் விதித்த தர்ம வழியைப் பின்பற்றிப் புண்ணியத்தை அடைந்தவர். கோகிலா தம்பதியோ ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்து பாவத்துக்கு ஆளானவர் என்பதுதான்.

மனு தர்மத்தை ஒழிக்காமல் சங்கரராமன்களுக்கும், கோகிலாம்மாக்களுக்கும் நீதி கிடைப்பதில்லை, சங்கராச்சாரிகளுக்கும் தண்டனை கிடைப்பதில்லை!

– சரசம்மா

பாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

0
உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.

சுயமரியாதையை அழித்து…  பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து…

‘‘டவுள் மீதும் தேசியத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட, திராவிட இயக்கத்தால் வெறுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண், அத்திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கட்சிக்குத் தலைவியாகி, அதனைத் தனது இரும்புப் பிடியில் வைத்திருந்தது வரலாற்று முரண், அதிசயம்’’ என்றெல்லாம் ஊடகங்கள் ஜெயா அ.தி.மு.க.விற்குத் தலைமை தாங்கியதை ஆச்சரியத்தோடு விவரிக்கின்றன.

42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)
42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)

கடந்த ஐம்பது, அறுபது ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாற்றிலிருந்து இருந்து பார்த்தால், அ.தி.மு.க.வின் தலைவியாக பார்ப்பன ஜெயா கோலோச்சியது, அதிசயமாகவோ, முரணாகவோ இருக்காது. பெரியாருக்குப் பிறகான திராவிடர் கழகம், பெரியாரின் கொள்கைகளைப் பூஜைக்குரியாதாக்கி, பெரியார் திடலுக்குள்ளேயே ஒடுங்கிப் போய்விட்டது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவான திராவிட முன்னேற்றக் கழகமோ, அதன் தொடக்கத்திலேயே பெரியாரின் கடவுள் மறுப்பு, நாத்திகப் பிரச்சாரம், பார்ப்பன எதிர்ப்புகளில் சமரசம் செய்துகொண்டு, பின்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் திராவிட இயக்கத்தின் அங்கமாகக் கருதுவதே கேலிக்குரியது. மீசை வைத்தவனெல்லாம் வீரன் எனப் பார்ப்பதைப் போன்று பாமரத்தனமானது. பெரியாரை இன்றுவரை இந்து மத விரோதியாக, தேச விரோதியாகப் பார்க்கிறது, ஆர்.எஸ்.எஸ். ஆனால், பெயரில் மட்டுமே திராவிடத்தைக் கொண்டுள்ள அ.தி.மு.க.வை, ‘‘நாத்திகத்தை நாகரிகமாக்கிய, தேசியத்தை எள்ளி நகையாடிய, நாட்டு ஒற்றுமையைக் குலைத்த, தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி (அ.தி.மு.க.)’’ என மதிப்பிடுகிறார், ஆர்.எஸ்.எஸ்.−ஐச் சேர்ந்த குருமூர்த்தி (துக்ளக் தலையங்கம், 28.12.16).

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி இந்து முன்னணியின் விஜயபாரதத்தில் வந்த கட்டுரையின் தலைப்பு, ‘‘எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை.’’

ஒருவனுடைய கொள்கை உறுதியை எதிரிகள் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்ற அடிப்படையைக் கொண்டு பார்த்தால், அ.தி.மு.க. திராவிட இயக்கத்தில் தோன்றிய கோடாரிக்காம்பு, புல்லுருவி என்பதற்கு, குருமூர்த்தி, விஜயபாரதத்தின் மதிப்பீடுகளைத் தாண்டி வேறு சான்றுகள் தேவையில்லை.

நாத்திகம், கடவுள் மறுப்புக்கு விரோதமான கோவில், குளங்களைச் சுற்றி வருவது, சாதி ஒழிப்பைக் கைவிட்டு சாதி அரசியல் நடத்துவது, ஓட்டுப் பொறுக்குவதற்கும், அதிகாரத்தைப் பிடிப்பதற்கும் பெரியாரின் கொள்கைவிட, பார்ப்பன ஆதிக்க சக்திகளோடு சமாதான சகவாழ்வு வாழ்வது எனத் திராவிட ஓட்டுக்கட்சிகள் சீரழிந்தும், பார்ப்பன அடிமைத்தனத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கிப் போய்விட்ட நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கழிசடைக் கட்சிக்கு ஒரு பார்ப்பனத்தித் தலைவியாக வந்தது இயல்பான பரிணாம வளர்ச்சிதான்.

பா.ம.க. போன்ற சாதிக் கட்சிகளைத் தவிர, மற்றைய ஓட்டுக்கட்சித் தலைவர்கள் பொதுவெளியில் தம்மைக் குறிப்பிட்ட சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் பிற்போக்குத்தனத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், ஜெயாவோ தனது சாதி அடையாளத்தைக் காட்டிக் கொள்ள தயங்கியதேயில்லை. அவர் முதன் முறையாக முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்தவுடனேயே, தமிழகப் பிராமணாள் சங்கம், ‘‘நடப்பது நம்மவா ஆட்சி’’ எனப் புளகாங்கிதத்தோடு அறிவித்தது. அதற்கு அங்கீகாரம் கொடுப்பதைப் போல, ‘‘நான் பார்ப்பனத்திதான்’’ எனச் சட்டமன்றத்திலேயே சாதித் திமிரோடு அறிவித்தார், ஜெயா.

ஆட்சிக்கு வந்த நான்காவது மாதத்திலேயே (செப்.91) கும்பகோணம் மகாமகம் திருவிழாவைப் பிரம்மாண்டமாக நடத்தி 48 தமிழர்களைப் பலியிட்டார். தனது தோழி சசியோடு குளத்தில் நீராட வந்த ஜெயாவிற்குத் தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், கெடுபிடிகளால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, அரசின் கணக்குப்படி 48 தமிழர்கள் உடல் நசுங்கி, மூச்சுத் திணறிச் செத்துப் போனார்கள். இவ்வளவு பேர் இறந்து போனதை, பலர் படுகாயமடைந்ததை அறிந்தும்கூட, பார்ப்பன ஜெயா நேரில் வந்து பார்வையிடவில்லை, ஆறுதல் தெரிவிக்கவில்லை. மாறாக, நீராடி முடித்த கையோடு, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்னை திரும்பினார். பார்பனியமும் அதிகாரமும் சேர்ந்த கலவை எப்படியிருக்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்று.

உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.
உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.

நரசிம்ம ராவ் அரசில் அமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த அருணாசலம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே, அவரைத் தனது தனி விமானத்தில் ஏற்றிச் செல்ல மறுத்து, விமானத்திலிருந்து இறக்கிவிட்டு அவமதித்தார். ‘‘அம்முவுக்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும்’’ என எம்.ஜி.ஆர். சொன்னதாக நக்கீரன் இதழ் கட்டுரை வெளியிட்டவுடன், அவ்விதழ் அலுவலகத்தின் மீது அ.தி.மு.க. குண்டர் படையை ஏவிவிட்டுத் தாக்குதல் தொடுத்தார். முதல்வர் ஜெயாவைக் கேவலப்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி நக்கீரன் இதழ் ஆசிரியர் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. மாட்டுக் கறி தாழ்த்தப்பட்டோருடனும் தீண்டாமையோடும் தொடர்புடையது என்ற பார்ப்பன சாதிவெறிதான் நக்கீரன் இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வழக்குகளுக்கும் காரணம். தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தி, வளர்மதி சட்டமன்றத்தில் பேசியதை பெயருக்குக்கூடத் தடுக்காமல், ரசித்தார்.

நடிகர் சிவக்குமார், தனது மூத்த மகன் சூர்யா−நடிகை ஜோதிகா திருமணப் பத்திரிகையை  ஜெயாவிடம் கொடுக்கச் சென்றபொழுது, கூட வந்திருந்த சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தியிடம், ‘‘நீயாவது உங்க அப்பா, அம்மா விருப்பப்படி சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்’’ என ஜெயா புத்திமதி சொன்னதாக நினைவுகூர்ந்திருக்கிறார், சிவக்குமார். இது ஏதோ கவுண்டர் சாதிவெறியர் சிவக்குமாரை அந்தச் சமயத்தில் திருப்திபடுத்தச் சொல்லப்பட்ட அறிவுரை மட்டுமல்ல; சனாதன சாதிக் கட்டுமானத்தின் மீது ஜெயாவிற்கு இருக்கும் பிடிப்பு, வெறியின் வெளிப்பாடும்கூட.

இவையெல்லாம், ஜெயா, தன்னளவிலேயே பார்ப்பன சாதிவெறி பிடித்தவர், தீண்டாமை பாராட்டுபவர் என்பதைப் பொதுவெளியில் அம்பலப்படுத்திய நிகழ்வுகள். அவரது அரசோ, பார்ப்பனத்தி தலைமையின் கீழ் தேவர், கவுண்டர் சாதிவெறிக் கும்பல் குத்தகைக்கு எடுத்த ஆட்சியாக இருந்தது.

சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான இந்து முன்னணி தமிழகத்தில் காலூன்ற எம்.ஜி.ஆர்., அரசு ஆதரவாக இருந்தது என்றால், எம்.ஜி.ஆரின் தோழியான ஜெயா ஜி, காக்கி டவுசர் போடாத ஆர்.எஸ்.எஸ். பேர்வழியாகவே நடந்துகொண்டார். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாக, மைய அரசு நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், ‘‘ராமனுக்கு அயோத்தியில் கோவில் கட்டாமல், பாகிஸ்தானிலா கட்ட முடியும்?’’ எனக் கூச்சமின்றி ஆர்.எஸ்.எஸ். திட்டத்திற்கு ஆதரவளித்துப் பேசினார். வருமானமில்லாத கோவில்களில் பூஜை, புனஸ்காரங்களை நடத்துவதற்கு வைப்பு நிதித் திட்டம், திருக்கோவில்களில் அன்னதானத் திட்டம் − என அரசு நிதியை மானியமாக பார்ப்பனக் கோவில்களுக்கு அள்ளிக் கொடுத்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின், தமது மீட்பரைச் சந்திக்கும் தில்லைவாழ் தீட்சிதர்கள். (கோப்புப் படம்)
சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின், தமது மீட்பரைச் சந்திக்கும் தில்லைவாழ் தீட்சிதர்கள். (கோப்புப் படம்)

சூத்திர சாதி மக்களின் வழிபாட்டு முறைகளை மறுக்கும் விதமாக, கிடா வெட்டும் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தைப் பார்ப்பன செல்வாக்கு மண்டலமாக மாற்ற முயன்றார். இந்த இரண்டு சட்டங்களைத் தமிழகத்தில் ஆதரித்தவர்கள் இரண்டு பிரிவினர்தான். ஒன்று, ஆர்.எஸ்.எஸ். கும்பல், மற்றொன்று பார்ப்பன சாதிவெறியர்கள். இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பிறகு நடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மண்ணைக் கவ்வியதையடுத்து, இந்த இரண்டு சட்டங்களை ஜெயா திரும்பப் பெற்றதைத் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் கசப்பு மாத்திரையைப் போல விழுங்கி நின்றது.

தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டமும், தீட்சிதர்கள் என்ற கொள்ளைக்கூட்டத்தின் பரம்பரைச் சொத்தாகக் கருதப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் நிர்வாகம், கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவும் பார்ப்பன ஜெயா ஆட்சியில்தான் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டன என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. பார்ப்பன ஜெயா அரசு தீட்சிதர்களோடும் சிவாச்சாரியர்களோடும் கள்ள உறவு வைத்துக் கொண்டு இந்த இரண்டு வழக்குகளைத் தோற்கடிக்கும் விதத்திலேயே உச்சநீதி மன்றத்தில் நடத்தியது.

இப்படி ஒருபுறம் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலிருந்து பார்ப்பனப் பண்பாட்டை, பார்ப்பன ஆதிக்கத்தைத் திணித்த ஜெயா, மறுபுறம் கீழே தனது கட்சி அணிகள், தன்னை ஆதரித்த உதிரி வர்க்கங்களிடம் பார்ப்பன மூடத்தனங்களை வளர்த்துவிட்டார். சசிகலாவிற்கு அடுத்து, ஜெயாவைச் சுதந்திரமாகச் சந்தித்தவர்கள் மலையாள ஜோதிடர்களும், வாஸ்து நிபுணர்களும்தான். அ.தி.மு.க. அமைச்சர்களும், நிர்வாகிகளும் தமிழகத்தை மொட்டையடித்தற்கு அப்பால் செய்த வேலை அம்மாவுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கியதுதான்.

ஜெயாவின் பிறந்த நாட்களின்பொழுது தங்கத் தேர் இழுத்த, பால் காவடி எடுத்த, உடம்பில் வேப்பிலையைச் சுற்றிக் கொண்டு தீச்சட்டி ஏந்திய உடன்பிறப்புகள், அவர் ஊழல் குற்றத்திற்காகச் சிறையில் தள்ளப்பட்டபொழுதும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையிலும் யாகம் வளர்த்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், மொட்டையடித்துக் கொண்டார்கள், அலகு குத்திக் கொண்டார்கள். இதற்கெல்லாம் ஆட்களைப் பிடிப்பதற்கு ரேட் வேறு நிர்ணயிக்கப்பட்டது. பக்தி என்ற பெயரில் பார்ப்பனக் கும்பல் திணித்திருந்த மூடப்பழக்கங்களுக்கு எதிராக இயக்கம் கண்டு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகம், ஜெயாவால், அவரது விசுவாசக் கூட்டத்தால் அவமானப்பட்டு, கேவலப்பட்டு நிற்கிறது.

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோவிலுக்குத் தங்க வாளைக் காணிக்கை செலுத்தித் தொடங்கி வைத்த இந்த அருவருக்கத்தக்க பார்ப்பன மூடப் பண்பாட்டை, இழிந்த, உச்சநிலைக்கு எடுத்துச் சென்றார் ஜெயா. சுயமரியாதை அரசியலைப் பேசிவந்த தமிழகத்தில், அதற்கு எதிரான அடிமைத்தனமும், மூடத்தனமும் மீண்டும் கோலோச்ச தொடங்கியதைத்தான், தமிழகத்தில் மீண்டும் ஆன்மீகம் தழைக்கத் தொடங்கிவிட்டது எனவும், தமிழகம் தேசிய நீரோட்டத்தோடு கலக்கத் தொடங்கி விட்டது எனவும் குறிப்பிட்டுக் கொண்டாடுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

– ரஹிம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

1

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

யாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..

“சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

அவள்  நந்தினி.

பன்னீரின் கண்ணீரும் சசிகலாவின் கைக்குட்டையும்

5

அம்மா சமாதி

ன்னீர் வடிக்கும்
கண்ணீரில்
அம்மா சமாதியே
அரை அடி உயரும்.

opsசசி துடைக்கும்
கைக்குட்டையில்
காவிரி டெல்டா
ஒருபோகம் விளையும்.

அம்மாவை நினைத்தாலே
அழத்தான் முடியும்.
அவர்களுக்கோ,
அழுகை
சிரிப்பின் முக்காடு
சிரிப்பு
அழுகையின் வேக்காடு.

அழுகைப் போட்டியில்
யாருக்கு முதல் பரிசு?.
தடுமாறுது தமிழகம்
அழுகாச்சி காவியத்தில்
அமுக்கி எடுக்குது ஊடகம்.

சிரித்ததனால்
நான் மனிதன் என்பது
பன்னீரு
சிரித்ததனாலேயே
நீ மனிதனில்லை
என்பது வெந்நீரு.

நீ
பெரிய  குளமென்றால்
நான்
மன்னார் குடி!

அம்மாவுக்கே
நான்தான் ஆன்மா
அடைக்கலம் தருமோ
அம்மா ஆன்மா?
மெரினா தியானத்தை
கலைக்கும்  சின்னம்மா!

பேயைப்  பற்றி
அதன் பாட்டியிடம்
புகார் சொல்வது போன்றது
சின்னம்மாவைப் பற்றி
பெரியம்மாவிடம்
முறையிடுவது.

sasikalaமுதலில்,
எனக்கு எதிரே
உட்காரும் தைரியம்
உங்களுக்கு எப்படி வந்தது?
கடைக்கண் பார்வைக்கு
கிடையாசனத்திலேயே கிடந்தவர்
அரியாசனத்திற்காக
பத்மாசனமா?
கோபத்தில் குமுறுது
அம்மாவின் ஆவி!

பேய்களை சமாளிக்க
ஒரே வழி
பேயாகி விடுவதுதான்.
பேய்களுக்கு கால்களில்லை
நிமிர்ந்து நிற்க முடியாது
நேரத்திற்கேற்ப நெளியலாம்.
இடம் தாவி அலைகின்றன
கரைவேட்டி ஆவிகள்.

பினைக்கைதிகளோடு
ஊரையே சுற்றுது
மன்னார்குடி பஸ்.
அம்மாவைச் சுற்றிவந்து
பழத்தைக் கேட்கிறார்
ஒ.பி.‍எஸ்.

நாம்
வாழ்வுக்கு வழி தேடுகிறோம்
அவர்களோ
சமாதி தேடுகிறார்கள்.

செத்தாலும் விடமாட்டார்
ஜெயலலிதா!
எச்சரிக்கைத் தமிழகமே
ஏய்ப்பவருக்கு
அம்மா சமாதி
ஏமாந்தவனுக்கு
அடுத்த சமாதி!

துரை. சண்முகம்

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்

1

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 3

மது விவசாயத்தை அழிக்க திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது தான் பசுமைப் புரட்சித் திட்டம். அதைப் பற்றி நாம் விரிவாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார் மரபுசார் விவசாயச் செயல்பாட்டாளர் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றார்.

drought2
கீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு.

“அது பற்றி ஏற்கனவே நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிறைய ஆய்வுகளும் நம்மிடம் இருக்கின்றன. நீங்க… இந்த சமயத்தில் தஞ்சை விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைக்கு பாரம்பரிய விவசாயம் முன்வைக்கும் தீர்வுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” என்றோம்.

”அதாவதுங்க.. நம்மளோட பாரம்பரியமான விதைகள், பயிர் ரகங்களையெல்லாம் பசுமைப் புரட்சியிலே அழிச்சிட்டாங்க. அதில் சில ரகங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தாங்கக் கூடியவை; அதே போல சில ரகங்கள் கடுமையான வெள்ளத்தையும் தாங்கி வளரக் கூடியவை. பாரம்பரிய ரக நெல்லுக்கு இப்ப போடக்கூடிய அளவுக்கு ரசாயன உரங்கள் தேவையில்லை”

“ஆனால், பாரம்பரிய நெல் ரகங்கள் ஒட்டு ரக பயிர்களை விட விளைச்சல் குறைவாக இருக்கும் என்று தானே சொல்றாங்க?”

”அது ஒரு விசமத்தனமான பிரச்சாரம் சார். ஒரு ஏக்கருக்கு முப்பது மூடை என்பது தான் நவீன ரக பயிர்களுக்கு அரசே நிர்ணயம் செய்திருக்கிற சராசரி உற்பத்தி அளவு. இதுலே அரசே நிர்ணயம் செய்திருக்கிற செலவு பார்த்தீங்கன்னா 20 ஆயிரம். அதாவது, மழை, தண்ணீர் எல்லாம் சரியா இருந்தா… அரசு சொல்லும் கணக்குப் படி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு போக விளைச்சலுக்கு கிடைக்கப் போற லாபம், 5,500. இன்னொரு போகம் நெல்லும் விளைஞ்சி, நடுவுல மாற்றுப்பயிரும் சரியா விளைஞ்சா ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் 20 ஆயிரத்துக்கும் கொஞ்சம் குறைவா வரலாம். அதே பாரம்பரிய விவசாய முறையிலயும் ஏறக்குறைய இதே அளவுக்கு விளைச்சல் இருக்கும்.. ஆனா, செலவுன்னு பார்த்தா உர செலவு மிச்சம். அதுல ஒரு மூன்று அல்லது நான்காயிரம் ரூயாய்கள் ஒரு போகத்துக்கு மிச்சமாகும். வருசத்துக்கு பத்துலேர்ந்து பன்னிரண்டு ஆயிரம் அதிகமா கிடைக்கும்”

”சரிங்க.. ஆனா ஒட்டுமொத்த விவசாயத்துக்கான அடிக்கட்டுமானமே அரசின் கொள்ளைகளால உடைத்து நொறுக்கப்படுது. அரசோட நோக்கமே விவசாயத்தை அழிக்கிறதா இருக்கும் போது பாரம்பரிய விவசாயம் மட்டும் இந்த சூழல்லே இருந்து தப்பிக்க முடியுமா?”

“அது முடியாது என்பதை ஏற்கிறேன். அரசினுடைய விவசாய விரோத கொள்கைகளுக்கும் சேர்ந்தே தான் நாங்க போராடிகிட்டு இருக்கோம். ஆனா, இதற்கு மேல விவசாயம் உயிரோட இருக்கனும்னா அதுக்கு பாரம்பரிய விவசாயம் மட்டுமே ஒரே தீர்வா இருக்கும்னு நம்புறோம்” என்றார்.

தனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்
தனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்

“ஆனால், கருநாடகத்திலேர்ந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் அந்த மாநிலத்தின் மொத்த கழிவும், குறிப்பா பெங்களூரில் இருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் இரசாயனக் கழிவு நீரும் கலந்து தான் வருது. இதே நிலைமை இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் நீடிச்சா தஞ்சை மண்ணே விசமாகிப் போகாதா? ஒட்டுமொத்த சூழலும் மாசுபடும் போது, பாரம்பரிய விவசாயம் மட்டும் எப்படிக் காப்பாற்றும்?”

”அது முடியாது என்பது சரி தான். அப்படியான பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்பதையும் ஏற்கிறேன். ஆனால், இந்த சூழலுக்குள்ளேயே பாரம்பரிய விவசாய முறை ஓரளவுக்காகவது விவசாயியைக் காப்பாற்றும் என்பது தான் எங்களது வாதம்” என்றார்.

நாங்கள் அவரோடு உரையாடி விட்டுக் கிளம்பினோம். விவசாயம் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டு வரும் போக்கை அவர் உணர்ந்துள்ளார். எனினும், அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தை பாரம்பரிய முறைகளின் மூலம் காப்பாற்றி விட முடியும் என்பதை ஆணித்தரமாக நம்பவும் செய்கிறார். பாரம்பரிய விவசாயத்தைப் பரவலாக்க நம்மாழ்வார் துவங்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளையும், தற்போது நடத்தப்பட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் குறித்தும் விளக்கினார்.

”விவசயாம் சார்ந்த மாற்றுத் தொழில்கள்” எனும் பெயரில் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதே அரசின் கொள்கையாக இருக்கும் சூழலில் மரபுசார் விவசாய உத்திகள் மட்டும் விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட முடியாது என்கிற எதார்த்தத்தை உணரவில்லை என்பது ஒருபுறம் இருக்க; இன்னொரு புறம் மரபுசார் வேளாண்மை குறித்த பிரச்சாரங்கள் ஏதோவொரு வகையில் விவசாயிகளுக்கு தற்காலிக நம்பிக்கை ஏற்படுத்தும் என்.ஜி.ஓ அரசியலையே முன்வைக்கின்றன.

தற்போது ஆங்காங்கே நடந்து வரும் மரபுசார் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு – அதில் குறிப்பாக அரிசி ரகங்களுக்கு – சந்தையில் உள்ள வரவேற்பைக் குறித்து அறிந்து கொள்ள தஞ்சையில் உள்ள அரிசி ஆலை மற்றும் அரிசி மண்டி ஒன்றின் உரிமையாளர் திரு பால்ராஜ் அவர்களைச் சந்தித்தோம்.

”நம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது உண்மை தான். அதெல்லாம் ஆரம்பத்திலேயே முடிஞ்சி போச்சு. இப்ப அதிகமா யாரும் கேட்கிறதில்லே. ஒரு சிலர் வாங்கிட்டு இருக்காங்க.. மத்தபடி பாரம்பரிய ரகங்களை வாங்கி வைத்தா தேங்கிடுது” என்கிறார் பால்ராஜ்.

”பாரம்பரிய அரிசி ரகங்கள். சிறு தானிய உணவு வகைகளை சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி மாதிரியில்லே சொல்றாங்க? அப்புறம் ஏன் மக்கள் அதை விரும்பி வாங்கறதில்லே”

“அதுல உண்மை இருக்குன்றது என்னோட சொந்த அனுபவம் தம்பி. நானே கூட பாரம்பரிய ரகங்களை சாப்பிடுவேன். அதைச் சாப்பிட்டா உடம்பே லேசான மாதிரி இருக்கும். உடம்புலே அசுத்தம் தேங்காது.. சர்க்கரை வியாதி கட்டுக்குள்ளே இருக்கும்..”

Organic-Rice2
நம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது

“எங்களோட கேள்வி… அப்படி இருக்கும் போது மக்கள் ஏன் விரும்பி வாங்குறதில்லே?”

”நம்ம ஆளுங்களுக்கு சோறைப் பிசைந்து கையில் ஏந்தினால் அதில் சாம்பாரோ ரசமோ பற்றி நிற்கணும். வழிஞ்சி ஓடினா ஆகாது. சாம்பார், பருப்புக் குழம்பு, காரக்குழம்பு, ரசம் மாதிரியான நம்முடைய சமையல் முறைக்கு இந்த ரகங்கள் சரியா செட் ஆகிறதில்லே. கர்நாடகா பொன்னி, ஆந்திர பொன்னி ரகங்கள் இங்கே எடுபடாம போகிறதுக்கும் இதே தான் காரணம். ஆனாலும், சிறு தானியங்களை வாங்கறவங்க வாங்கிக்கிட்டு தான் இருக்காங்க.. ஏதோ உப்புமா பொங்கல் மாதிரியாச்சும் வச்சி சாப்பிடுறாங்க…. சிக்கல் என்னான்னா, இப்படி உடல் நலனுக்காக பிடிவாதமா வாங்குறவங்க சிறுபான்மையா இருக்காங்க. மத்தபடி பெரும்பாலானவங்க சாதாரண அரிசி தான் வாங்கறாங்க”

“அதுக்கு என்ன காரணம்?”

“நம்முடைய சமையல் முறை தான். இந்த முறையான சமையலுக்கு எத்தனையோ தலைமுறைகளா நாம் பழக்கப்பட்டிருக்கோம். மாற்றிக் கொண்டு வருவது அத்தனை சுலபமில்லை… எனக்குத் தெரிஞ்சு பாரம்பரிய விவசாயத்துக்கு மாறினவங்க பலரும் விளைச்சலுக்கு சந்தை இல்லாத காரணத்தாலே பழையபடி நவீன விவசாய முறைக்கு மாறியிருக்காங்க..”

”நீங்க பல வருசங்களா விவசாயிகள் கிட்டே இருந்து நெல் கொள்முதல் செய்திருக்கீங்க. உங்களோட அனுபவத்திலேர்ந்து இத்தனை வருசங்கள்லே சாகுபடி முறைகள்லே என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கு?”

பசுமைப் புரட்சிக்கு முன்னே மேலத் தஞ்சைலேர்ந்து மேற்கே திருச்சி வரைக்கும் வரகு சோளம் தான் பயிரிடுவாங்க. இந்தப் பகுதிகள்லே இயற்கையா அமைஞ்சிருந்த ஆற்றுப் பாசன முறையும் சரி, மழையை நம்பியிருந்த மானாவரி பாசன முறையும் சரி, அந்த மாதிரி பயிர்களுக்குத் தான் ஏதுவானதா இருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்னே, இந்தப் பகுதிகள்லே ஒரு சில இடங்கள்லே இருந்த நெல் சாகுபடி பரவலாச்சி. இன்னைக்கு நீங்க எங்கயுமே வரகு பயிரைப் பார்க்கவே முடியாது”

“அப்படின்னா நெல் உற்பத்தியோட அளவு அதிகரிச்சிருக்க வேணுமே?”

“ஆமாம். சில ஆண்டுகளுக்கு அதிகரிக்கத் தான் செய்தது. இப்ப கடந்த பத்தாண்டுகள்லே என்ன நிலைமைன்னா.. கீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு. இயற்கையா நெல் விளையறதுக்கு ஏதுவான அந்தப் பகுதியோட உட்கட்டமைப்புகள் எதுவும் புனரமைக்கப்படவே இல்லை”

“இப்ப உங்களோட கொள்முதல் எப்படி இருக்கு?”

“டெல்டா மாவட்டங்கள்லே நெல் விளைச்சல் எந்தளவுக்குக் குறைஞ்சிருக்கோ அதே அளவுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, செஞ்சி, காஞ்சிபுரம் போன்ற பகுதிகள்லே அதிகரிச்சிருக்கு. அங்கெல்லாம் ஆறு-கால்வாய் பாசனம், போர்வெல் பாசனம்னு செய்யுறாங்க. அதே மாதிரி வெளி மாநிலங்கள்லே இருந்தும் நெல் வருது. ஆந்திரா கருநாடகாவிலேர்ந்து நெல் வருதுன்றது ஒரு பக்கம்… இப்ப சில வருடங்களா ஒரிசா, மேற்கு வங்கத்திலேர்ந்து கூட வருது. அதுவும் ரொம்ப சல்லிசான விலைக்கே வருது”

”சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் இப்படி ஒரு வாதம் முன்வைக்கிறாங்க.. அப்படியே விவசாயம் டெல்டா பகுதியிலே அழிஞ்சாத் தான் என்ன? வேறு தொழில் பிழைப்புன்னு போயிட வேண்டியது தானே. லாபமில்லாத விவசாயத்தை ஏன் கட்டியழ வேணும்? தொழிற்சாலைகள், ஐ.டி அப்படின்னு எத்தனையோ வழியிருக்கே?”

”இல்லைங்க.. அவங்க சொல்ற மாதிரி இல்லை. நான் விவசாயிகளோட நெருங்கிப் பழகியவன் என்கிற முறையில சொல்றேன். இங்கேர்ந்து திருப்பூருக்கு வேலைக்குப் போனவனெல்லாம் கொஞ்ச நாள்லே திரும்பி ஓடியாந்துடறான். ஏன்னா.. இது அவன் நிலம். அவனோட சொந்தம். திருப்பூர் பனியன் கம்பெனி அப்படியா? காலைலே சோத்தைக் கட்டிக்கிட்டு உள்ளே போனா சிறைக்கைதி மாதிரி சாயந்திரம் வரைக்கும் அடைஞ்சி கிடக்கனும். அங்கே எதுவும் சொந்தம்னு இல்லை. சுதந்திரமா வேலை செஞ்சி பழகினவங்களை இப்படி அடிமைகளைப் போல அடைச்சி வேலை வாங்கறதும் கஸ்டம்.. இவங்க அப்படி வேலை செய்யிறதும் கஸ்டம்..”

”சரி, இங்க வந்தா மட்டும் என்ன சொர்க்கமாவா இருக்கப் போகுது?”

“இது சொர்க்கம் இல்லை தான். இங்கே பிழைப்பு இல்லை தான். சோத்துக்கு வழி இல்லை தான்.. ஆனா அடிமையா இருக்க வேண்டியதில்லை தானே… சுதந்திரம் இருக்கில்லே?”

“கூலி விவசாயிகளோட நிலைமை?”

“அவங்க தங்களோட தேவைகளை சுருக்கிக்கிட்டாங்க. நூறு நாள் வேலைத்திட்டத்திலே கிடைக்கிற கொஞ்சம் கூலிய வைத்து வாழ்க்கையை ஏதோ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. உடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை”

photo-26
உடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை

”சரி, குறைந்த பட்சம் டெல்டா மாவட்டங்களோட தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்காவது நெல் சாகுபடி நடக்குதா?”

“இல்லைங்க.. இப்ப வெளி மாநில நெல் கணிசமா வர ஆரம்பிச்சிடுச்சி. இனி வர்ற வருசங்கள்லே இது அதிகரிக்கும்”

“ஆந்திரா கர்நாடகா பொன்னி பற்றி சொன்னீங்க. அதுக்கும் நம்முடைய அரிசிக்கும் என்ன வித்தியாசம்?”

“நம்முடைய முறைக்கும் அவங்க முறைக்குமான வித்தியாசம் தான். அதாவது நாங்க நெல்லை வாங்கி ஒரு இரவு முழுக்க ஊற வைப்போம். அடுத்த நாள் அவித்து காயவைத்து பின்னாடி மிசின்லே போடுவோம். நம்முடையது பழைய முறை. அவங்களோடது நவீன முறை. நேரடியா நீராவில அவிச்சிருவாங்க..”

“எப்படியும் அவிக்கிறது தானே.. இதிலே என்ன வித்தியாசம்?”

”வித்தியாசம் இருக்கு. பழைய முறைப்படி அவிக்கும் போது நெல் ஒரே சமமா அவியும் – காயும். நீராவில அவிக்கும் போது நெல்லோட இரண்டு பக்கங்களும் அதிகப்படியா அவியும். அப்புறம், ஆவி நெல்லுக்குள்ளே ஊடுருவிப் போயிரும். அதனால ரெண்டு பிரச்சினை இருக்கு.. ஒன்னு, அந்த அரிசியை நீங்க ரொம்ப நாளைக்கு சேமித்து வைக்க முடியாது – வண்டு விழும். இன்னொன்னு, சோறு வடிக்கும் போது அரிசியின் முனைப்பகுதிகள் வெந்து நடுப்பகுதி வேகாமலும் போயிடும். சோறு விரை விரையா நிற்கும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நம்முடைய சமையல் முறைக்கு இது ஒத்து வராது. குழம்பில் சோற்றைப் பிசைந்து கையில் ஏந்தினால் எல்லாம் தனித்தனியா நிற்கும்.. சேராது. ஆனா இனி வேற வழி இருக்காது.. பழகிக்க வேண்டியது தான்”

அவர் சொன்னதில் உண்மை இருந்தது. மக்கள் இதற்குள் வாழக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். விவசாயம் பொய்த்ததற்கு இயற்கையின் மேல் கைநீட்டிய பலரும், உட்கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டிருப்பதைக் கேள்விக்குட்படுத்தவில்லை. பலரும் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு சரியாக கூலி கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அதே நேரம், அந்த திட்டமே விவசாயத்தை புதைகுழியில் வீழ்த்தும் ஒரு சதியின் அங்கம் என்பதை உணரவில்லை.

என்.ஜி.ஓ குழுக்கள் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை மக்களுக்கு ஏதோவொரு வகையிலான நம்பிக்கையை விதைக்க முற்பட்டு வருகின்றன. இந்தப் பேரழிவை எதிர்த்துப் போராடாமல், அதற்குள்ளேயே தங்களுக்கென்று ஒரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட முடியும் என்கிற சிந்தனையை விதைப்பதில் கணிசமான அளவுக்கு வெற்றி ஈட்டியுள்ளன.

எனினும், எதார்த்த வாழ்க்கையின் பாடங்கள் மக்களுக்கு உண்மை எதுவென்று பளிச்சென்று காட்டி வருகின்றன. விவசாயத்தைக் காப்பதற்கான போராட்டங்களாக இல்லாவிடினும், கீழத் தஞ்சையின் பல பகுதிகளில் வேறு வேறு காரணங்களை முன்னிட்டு சிறு சிறு பகுதிப் போராட்டங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டார் உடன் வந்த தோழர். விவசாயத்தின் அழிவே டெல்டா மாவட்டங்களின் மற்ற பிரச்சினைகளுக்கான அனைத்தும் தழுவிய காரணமாக உள்ளதை மக்கள் அறிந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதே நீண்ட கால நோக்கில் இதற்கான தீர்வாக இருக்கும்.

– முற்றும்

நேர்காணல் : வினவு செய்தியாளர்கள்

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – போராட்டச் செய்திகள்

0

kanchipuram-ndlf-protest- (2)

காஞ்சிபுரம்

டந்த ஜனவரி 17 முதல் 23 வரை சென்னை மெரினாவில் துவங்கிய போராட்டம்  மதுரை கோவை திருச்சி உள்பட  தமிழகம் முழுவதும்  ஜல்லிகட்டு  உரிமைக்கான  போராட்டமாக  துவங்கி  தமிழக மக்களின்  உரிமைக்கான போராட்டமாக  வளர்ந்தது. பல லட்சகணக்கான மக்கள் திரண்ட போராட்டம் பாசிச மோடி தலைமையிலான மத்திய அரசையும்  மாநில அரசையும் பணிய வைத்தது.

மாணவர்கள் – இளைஞர்கள்  துவங்கிய  இப்போராட்டத்தில்   “மக்கள் அனைவரும்  உணர்வுப் பூர்வமாகவும் சுய கட்டுப்பாட்டுடனும்  போராடியது  அரசு அதிகார வர்க்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வெற்றியடைந்து விட்டோம் என்ற  பெருமித  உணர்வை அனுபவத்தையும் மாணவர்கள் இளைஞர்கள்  மக்கள் பெற்று விடக் கூடாது என்பதற்க்காகதான்  போலீசு கும்பல்  கொலை வெறித் தாக்குதலை நடத்தியது. இதற்கெதிராக மக்களை திரட்டி உடனடியாக  ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற அடிப்படையில்  மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே “ போலீசு ராஜ்ஜியம் காட்டு மிராண்டி தர்பாரை கண்டித்து ” என்ற முழக்கத்தின் அடிப்படையில்  கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

kanchipuram-ndlf-protest- (1)தனது தலைமை உரையில்  “போலீசின்  காட்டு மிராண்டித் தனத்தை கண்டித்தும்  மாணவர்கள் – மக்கள் போராட்டத்தை உயர்த்திப் பிடித்தும்  பேசினார்.  அதைத் தொடர்ந்து  போலீசின் கொலை முகத்தை அம்பலப்படுத்தியும் அதன் தாக்குதலை  கண்டித்தும்  அதேப் போல  மோடி  தலைமையிலான மத்திய அரசை அம்பலப்படுத்தியும்  முழக்கமிடப்பட்டது. அடுத்து  பு.மா.இ.மு – வின் தோழர் துணை வேந்தன் பேசுகையில் ” இளைஞர்களின்  போராட்டத்தில்  சுயகட்டுப்பாடும்  ஒழுங்கும்,  அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தையும்  அவர்களது  இருப்பையும் செல்லா காசாக்கி விட்டது.  மாணவர்கள் எல்லாவற்றையும்  பேசினார்கள்  அதன் விளைவு  கோக் –பெப்சி  புறக்கணிக்கும்படி முழங்கிய அவர்களது முழக்கம்  நடை முறை சாத்தியமாயிருக்கின்றது  இப்படிப்பட்ட சீரிய போராட்டத்தை  திட்டமிட்டுதான் போலீசு தாக்குதல் நடத்தி தடுத்திருப்பதை  சுட்டிக்காட்டி  தமது கண்டனத்தை பதிவு செய்தார்”

இறுதியாக  கண்டன  உரையாற்றிய  பு.ஜ.தொ.மு – வின் மாவட்டச் செயலாளர்  தோழர் சிவா  பேசுகையில் ”மாணவர்கள் – இளைஞர்கள் மெரினாவில் மூட்டிய தீ தமிழகம் முழுவதும் பற்றி படர்ந்தது. தன்னெழுச்சியாக திரண்ட பல லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களை ஒழுங்குப்படுத்தியதும் அதற்கு கட்டுப்பட்டு  மற்றவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தது என்பதை மக்கள் ஒவ்வொருவரும்  போராட்டத்தை உணர்வு  பூர்வமாக  பார்த்தனர்”. நாளை ஒவ்வொரு பிரச்சனைக்கும் இப்படி திரண்டு விட்டால் தமது கொள்ளையை, சுரண்டலை நடத்த முடியாது அல்லவா !  அதன் வெளிப்பாடுதான்  போலீசு கும்பலின் கொலை வெறித்தாக்குதல்.  இந்த தாக்குதலுக்கு  திட்டமிட்டு  உத்தரவிட்டது  RSS  – ன் அடியாளான  ஆளுநர் வித்யசாகர்தான்  இதற்கு பன்னீரும் பக்க kanchipuram-ndlf-protest- (3)வாத்தியம் வாசித்திருக்கின்றார்.  இந்த போலீசு கும்பலை தற்போது இருக்கும் சட்ட – நீதிமன்ற  முறையில்  ஒரு போதும் தண்டிக்க முடியாது. இதுவரை தண்டித்ததாக  வரலாறும் இல்லை. ஏனெனில்  மக்களுக்கு எதிராக இருக்கும்  அரசமைப்பின்  ஒர் அங்கம்தான்  இந்த  போலீசு.  ஆகவே  மக்களுக்கு எதிராக இருக்கும்,  நிலுவுகின்ற  அரசமைப்பை  துக்கியெறிந்து விட்டு  மக்களுக்கு  அதிகாரம் அளிக்க கூடிய  புதிய ஜனநயக புரட்சிக்கு  அணி திரள வேண்டுமென கூறி தனது உரையை  நிறைவு செய்தார்.

அதைத் தொடர்ந்து முழக்கமிடப்பட்டது இப் போராட்டத்தில்  மாணவர்களும், இளைஞர்களும்,  AX  கிளை தொழிலாளர்களும், பெண்களும்  உணர்வுடன்  முழக்கமிட்டனர். இறுதியாக   மாவட்ட செயற் குழு  உறுப்பினர் தோழர் பழனி வேல்  நன்றியுரையுடன் ஆர்பாட்டம் நிறைவுற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
காஞ்சிபுரம்  மாவட்டக்குழு
8807532859.

***

கும்மிடிப்பூண்டி

tiruvallur-east-ndlf-protest1போலீசு ராஜ்ஜியம்: காட்டுமிராண்டி தர்பாரைக் கண்டித்து…. கண்டன தெருமுனைக்கூட்டம்.

ல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமெங்கும் அமைதிவழியில் போராடிய மாணவர்கள் மீது போலீசு நடத்திய வெறியாட்டத்தைக் கண்டித்து பு.ஜ.தொ.மு சார்பாக, கடந்த 02.02.17 அன்று மாலை 5 மணியளவில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே கண்டன தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு  மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் SRF புதிய ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ரமேஷ் தனது கண்டன உரையில், போலீசை நாம் கண்டிக்க தனியாக கூட்டம் போட்டு கண்டிக்க தேவையில்லை! மக்களே போலீசை பற்றி நன்கு அறிந்து கொண்டுள்ளனர் என்பதையும், மூன்று நாள் தன்னுடைய மெரினா அனுபவத்தில் இளைஞர்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். மேலும் இளைஞர்களின் போராட்டம் என்பது ஜல்லிக்கட்டோடு நின்று விடக்கூடாது. தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

tiruvallur-east-ndlf-protestஜனநாயக தொழிற்சங்க மையத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் அப்பு தனது கண்டன உரையில் போலீசு திட்டமிட்டு வன்முறை நடத்தி, நடுக்குப்பத்தில் மீன் சந்தையை கொளுத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த மீன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது கேவலமாக இல்லையா என சாடினார். இனி வரும் தருணங்களில் புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைந்து பாசிச அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.

இறுதியாக, பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் இரா.சதீஷ் கண்டன உரையில், போலீசின் வன்முறை வெறியாட்டம் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நம் கண் முன்னே பல உதாரணங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் போலீசு உள்ளே புகுந்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை தாக்கியது கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம், முல்லை பெரியாறு போராட்டத்தின் போது போராடிய லட்சக்கணக்கான விவசாயிகளை தாக்கியதை சுட்டிக்காட்டினார். போலீசு என்பது ஒரு அடக்குமுறை கருவி என்பதை நாம் புரிந்துகொள்ள மேற்கண்ட நிகழ்வுகளில் உணரவேண்டும் என்று பேசினார். அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பில், தான் ஏற்று கொண்ட வேலைகளிலிருந்து எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், அதனை திமிர்த்தனமாக செய்யும் அளவிற்கு நடைமுறையில் இன்று மாறிவருகிறது. இதனை மக்கள் சக்தியால் வெல்ல முடியும்! என்பதை வலியுறுத்தி பேசினார்.

இந்த கூட்டத்தின் வாயிலாக,

மெரினா போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பஞ்சாயத்த கலைக்கப் பார்த்தாரு பன்னீரு, சுப்புர.. சுப்புர.. சுப்புமணி சாமி என்ற இரண்டு பாடல்கள் பாடியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கண்டன முழக்கமிட்டு தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.
94444 61480

***

சென்னை பட்டாபிராம்

tiruvallur-west-ndlf-protest2புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 02.02.2017 அன்று மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகில், மெரினாவில் கலவரம் செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டித்து: எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுதிக்கு உட்பட்ட கிளை மற்றும் இணைப்பு சங்கத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய தோழர் சரவணன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமாக மட்டும் இப்போராட்டத்தை சுருக்கி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருவதற்கு எதிராக தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை மத்திய-மாநில அரசுகளின் துணையோடு, காவல்துறையினர் கலவரமாக்கினர் என்றும், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.

tiruvallur-west-ndlf-protest3டிஐ மெட்டல் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சக்திவேல், கூட்டத்தை வாழ்த்தி பேசினார். குறிப்பாக சரியான நேரத்தில் காவல்துறையை கண்டித்து இத்தெருமுனைக் கூட்டம் நடைபெறுவதாகவும். மக்கள் எந்த பிரச்சனைக்காக போராடினாலும் முதலில் வருவது காவல்துறையினர் தான் என்றும், ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கையும் காவல்துறையினர் தான் பாதுகாப்பது போல் போலி மாயையை உருவாக்க முனைகின்றனர். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் ஒரு வன்முறையோ, வழிப்பறியோ, அசம்பாவிதங்கள் இன்றி கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. இதனை கலவரமாக்கியது காவல்துறையினர் தான் என்றும், அவர்களை தண்டிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என கூறினார்.

இத்தெருமுனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் செயலாளர் தோழர் முகிலன் சிறப்புறையாற்றினார். காவிரி பிரச்சனை, பாலாற்றில் தடுப்பணை, சிறுவானி ஆற்றில் புதிய அணை டெல்டா விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, நியூட்ரினோ,கெயில்,மீத்தேன் திட்டங்கள் திணிப்பு ஆகிய ஒட்டு மொத்த பிரச்சனையில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டம். மீனவர் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கியுள்ளனர், வீடுகளை அடித்து உடைத்தும், குடிசைகளுக்கும், ஆட்டோக்களுக்கும் தீவைத்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், அப்பகுதி பெண்களுடைய சுருக்கு பை மற்றும் உடைமைகளை திருடியும், தஞ்சம் புகுந்த மக்களுக்கு அரணாக நின்ற மக்களை கண்மூடித்தனமான முறையில் தாக்கியும் வாழ்வாதாரத்தையே சூறையாடியுள்ளனர். கலவரத்தை செய்த காவலர்களையும், வழிநடத்திய அதிகாரிகளையும் கைது செய்யாமல், 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். காவல்துறையினர் தான் நாட்டில் சீருடை அணிந்த சமூக விரோத கும்பல் என்றும், அவர்களுடைய சமூக விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு அம்பலத்தினார். காவல் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சிறையிலடைக்க வேண்டும், கைது செய்யப்பட்ட tiruvallur-west-ndlf-protest1அப்பாவி மக்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அனைத்து உரிமைகளுக்காகவும் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் லெட்சுமணன் நன்றியுரையாற்றினார்.  பகுதி மக்கள் அனைவரும் கூட்டத்தை ஆங்காங்கே நின்று கவனித்தனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

***

பட்டுக்கோட்டை

ல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிரான போலீசின் ரவுடித்தனத்தைக் கண்டித்து 01.02.2017 காலை 10.30 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மண்டலக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

pattukottai-protestசமுக ஆர்வலர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் C.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டாரத் தலைவர் தோழர் ராமலிங்கம், உழைக்கும் மக்கள் கட்சி தோழர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் முரளி, கவிஞர் முருகையன், மக்கள் அதிகாரம் தோழர் ராஜா ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போலீசின் அராஜக ரவுடித்தனத்தைக் கண்டித்தும் குறிப்பாக விசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் உழைப்பாளிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த அரசு கட்டமைப்பு எதிராக நிற்கிறது, பச்சை துரோகம் செய்கிறது என்பதை தோலுரித்துக் காட்டினார்கள்.

பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மக்கள் அதிகாரம்
பட்டுக்கோட்டை

***

தருமபுரி

போலீசு  ராஜ்ஜியம்…. எழுந்து  நின்ற  தமிழகமே! எதிர்த்து  நில்! என்கிற  முழக்கத்தின்  கீழ்   தருமபுரியில்   மக்கள்  அதிகாரம்  சார்பாக   நடைபெற்ற   கண்டன  ஆர்ப்பாட்டம்.

தமிழமகத்தின்  உரிமைகள்  பல பறிக்கப்பட்ட நிலையில்  தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டையும்   ஜல்லிக்கட்டுக்கும்  தடைவிதித்தது   டெல்லிக்கட்டு.  அந்த  டெல்லிக்கட்டுக்கு  எதிராக  மெரினாவில்  லட்சகணக்கான  மாணவர்கள்  இளைஞர்கள்  ஒன்று கூடி  எந்த அரசியல்  கட்சிகளையும்  அனுமதிக்காமல்     அமைதியான  வழியில்  போராடிக்கொண்டிருந்த   மாணவர்கள்  போராட்டத்தை    கண்டு  உலகமே  வியக்கும் வண்ணம்  அமைந்த  அந்த போராட்டத்தை      காவிக்கூட்டமும், காவல்துறையும்  கைக்கோர்த்துக்கொண்டு  காட்டுமிராண்டிதனமாக   தாக்கியும்,  மீனவ குடும்பங்களை தாக்கியும், அவர்களுடைய  சொத்துக்களையும்  துவசம் செய்து  வெறிக்கொண்டு  தாக்கியதையும் உலகமே அறியும்.

20170203 Pstr - Colour-800x600போலீசின்   ரவுடித்தனத்தை  அம்பலப்படுத்தி  தமிழகம்  முழுவதும்  மக்கள்  அதிகாரம் பல்வேறு கட்ட பிரச்சாரங்களையும்,  கண்டன  ஆர்ப்பாட்டங்களையும்  நடத்தி  வருகிறது.  அதனுடைய  ஒரு பகுதியாக   தருமபுரியில் 03.02.2017 அன்று  மாலை  3  மணியளவில்   பி.எஸ்.என்.எல்.   அலுவலகம்  அருகே  கண்டன  ஆர்ப்பாட்டத்தை  நடத்தியது.  காமராஜர்  சிலையிலிருந்து  பறையிசை  முழங்க  போலீசு ராஜ்ஜியத்தை  அம்பலப்படுத்தி  வழிநெடுகிலும்  பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதனை ஆயிரகணக்கான மக்கள்  நின்று  கவனித்தனர். ஆர்ப்பாட்டத்தினை   தருமபுரி   மண்டல  ஒருங்கிணைப்பாளர்  தோழர். முத்துக்குமார்  தலைமை தாங்கினார்.  அவர் பேசுகையில், சமூகத்தில்  வாழ்வுரிமைகள்  பறிக்கப்படுவதற்கு  எதிராக  போராடும்  மக்களை  எங்குபார்த்தாலும் போலீசு  கடுமையாக  ஒடுக்கி வருகிறது. மெரினாவில்   லட்சகணக்கான  மக்கள்   ஜல்லிக்கட்டுக்காக   தொடங்கிய  போராட்டம்   அடுத்தடுத்து  காவிரிப் பிரச்சினை, விவசாயி பிரச்சினை,  மீத்தேன் திட்டம்,  மீனவர் பிரச்சினை, கல்வி  உரிமை  பரிப்பு  நோக்கி    வடிவமெடுத்தது. அப்படி  வடிவமெடுக்கும்  போதுதான்  மோடியும், ஓபிஎஸ்-ம்   இந்த அடக்கு முறையை  ஏவிவிட்டனர்.   மக்களின்  பாதுகாவலன்   மக்களின்  நண்பன்  எனறு சொல்லிக்கொள்ளும்  போலீசு,  மக்களின்  சொத்துக்களை  சூறையாடி  தாக்குகிறது.  எனவே  அரசின்  உறுப்பாகிய  போலீசும், ராணுவமும்  ஆக்டோபஸ்  போல   மக்களின்  உரிமைகளை  பறிக்கிறது. இந்த  அரசமைப்பே   மக்களுக்கு  எதிரானது.  எனவே  ஜல்லிக்கட்டுக்காக   லட்சகணக்கான   மக்கள்   ஒன்றிணைந்தது போல  ஒட்டுமொத்த  பிரச்சினைகளுக்காகவும்   போராட வேண்டிய  தருணமிது என்று  அறைகூவினார்.

அடுத்தாக  விடுதலை சிறுத்தைகள்  கட்சி  தருமபுரி மண்டல செயலாளர்  நந்தன்  பேசுகையில் இந்திய  பேரரசால் காவிரி, முல்லை, பாலாறு, மீத்தேன், அணுஉலை என  பல்வேறு  திட்டங்களால் தமிழினம்  வஞ்சிக்கபடுகிறது.  தமிழகத்தின்   பண்பாடு கலாச்சாரத்தில்   கைவைத்ததின் விளைவாக லட்சகணக்கான மாணவர்களும்  இளைஞர்களும் ஒன்றிணைந்து  அறவழியில் சாதி, மதம்  கடந்து  குடும்பம் குடும்பமாக  கலந்து கொண்டு போராடினார்கள்.  இந்திய  பேரரசுக்கு எதிராக, பண்பாட்டை  மீட்டெடுக்கும்  போராட்டம்  நாளுக்கு நாள்  அரசியல் பரிமாணமாக  மாறியதன்  விளைவாக  இவ்வளவு பெரிய  வன்முறையை  கட்டவிழ்த்துவிடப்பட்டுருக்கிறது.  தமிழக வரலாற்றில்   பரமக்குடி, மாங்குடி, திட்டக்குடி என்று போலீசால் ஒடுக்கப்பட்டுள்ளன. எனவே  மிகப்பெரிய  காண்டுமிராண்டி, ரவுடித்துறை என்றால்  போலீசும், ராணுவமும்தான்.  இப்படி  காஷ்மீரில்  இராணுவம்   அத்துமீறுகிறது. தமிழகத்தில்  போலீசு அத்து மீறுகிறது.  இந்தியாவில்   மிகப்பெரிய  பயங்கரவாதி  பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் -ம் தான்    இவர்கள்  கூட்டம் போட, கொடிபிடிக்க   அனுமதி வாங்கவேண்டியதில்லை, ஆனால்  மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடி புடிச்சாலோ  குச்சி வைத்து இருந்தாலே தேச விரோதி என்கிறார்கள். காக்கி உடையும்,  மிடுக்கு மீசையும் யாருக்காக,   மேட்டுக்குடிக்காக  இருக்கிறார்கள். எனவே  அதிகாரத்தை  சாதி, மதவாத  சக்திகளோடு கைக்கோர்த்து செயல் படுவதை காவல்துறை  கைவிடவில்லை என்றால்   தமிழகம்  மீண்டும்  மக்கள்  புரட்சியாக  வெடிக்கும் என்று காவல்துறைக்கு  எச்சரிக்கை விடுத்தார்.

20170203 Program-600x900ஓய்வு பெற்ற   ஆசிரியர் திருவேங்கடம் பேசுகையில்,   மக்களுக்கு  நடக்கும்  தீய செயலுக்கு எதிராக   குரல் கொடுக்கும்  இயக்கம்தான்   மக்கள் அதிகாரம். சாதி, மதம் கடந்து  மாற்றுக்கட்சியினர் ஆசிரியர்கள் உட்பட  எங்களை எல்லாம் ஒன்று சேர்த்த  மக்கள் அதிகாரத்திற்கு  நன்றி. ஜனநாயக நாட்டில்  விளையாட கூட உரிமையில்லை, ஐல்லிக்கட்டை  நடத்த  முடியவில்லை என்று மன்னிப்பு கேட்கிறார் மத்தியமைச்சர் என்றால்  இதற்காகவா  இவர்களுக்கு ஓட்டுப்போட்டோம். இவர்களை நம்பி  ஜல்லிக்கட்டை  நடத்த முடியாது  போராடினால் தான்  தீர்வு என்று  அறவழியில்  போராடிய  மாணவர்களுக்கு  பரிசு கொடுக்காமல் லத்திசார்ஜ் கொடுக்கிறார்கள். இருப்பினும் லட்சகணக்கான  மாணவர்கள்  ஒன்று சேர்ந்து உறுதியாக  போராடியது நாங்க எல்லாம் வாழமுடியும் என்ற  தன்னம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது. எனவே  தாக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும், கைதுசெய்யப்பட்டவர்களை  விடுதலை செய்யவேண்டும். அதோடு  தமிழகம் வீறுகொண்டு  எழுந்துவிட்டது  இனிமேல்  எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினார்.

சி.பி.எம்  மாவட்ட  செயற்குழு உறுப்பினர்  அர்ச்சுணன்  பேசுகையில்,  தமிழகத்தில்  ஜனவரியில்  கடுமையான வறட்சி, 200 க்கும் மேற்பட்ட  விவசாயிகள்  இறப்பு,  குடிநீர்  பஞ்சம், நீட் தேர்வு என பல்வேறு பிரச்சினைகளால் ஆசிரியர், அரசுஊழியர்கள்  என   பல போராட்டங்களை  நடத்தியிருக்கிறார்கள்.  எல்லா போராட்டங்களிலும் காவல் துறை  வஞ்சகம்  செய்துள்ளது. ஜல்லிக்கட்டு  மத்திய  அரசு  கண்டுகொள்ளாத  நிலையில் எதிச்சதிகார  ஆட்சிக்கு எதிராக  ஜல்லிக்கட்டுக்கான   போராட்டம்  தொடங்கி  விவசாயத்துக்கும்  போராடுவோம் என்று  அடுத்தக்கட்ட நகர்வை எடுத்த போது  லத்தி கம்பு  நிற்கிறது. அடுத்ததாக  கடுமையான  அடக்குமுறையை  ஏவிவிடுகிறது.  தண்ணீர்  பிரச்சினைக்கு ரோட்டுக்கு வந்தால் போலீசின்  லத்தி வருகிறது.  அதே  பால்குடம்,தேன் குடம், ஆர்.எஸ்.எஸ்-ன் ஸ்வாக நடத்தினால்  பாதுகாக்கிறது  அவர்கள் அனுமதி வாங்க தேவையில்லை, இதிலிருந்தே  காவல்துறையில் எந்த அளவிற்கு  ஆர்.எஸ்.எஸ்  ஊடுருவியிருக்கிறது என்பதை  பார்க்க முடியும். காவல்  துறை என்பது   அடக்குமுறை  கருவி  என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும். அடக்குமுறைகள் வர, வர  உழைக்கும்  மக்கள்  திரண்டு  முறியடிப்பார்கள்  என்பதுதான்  வரலாறு  என்றார்.

மக்கள்  உரிமை  பாதுகாப்பு மையம்  மாவட்ட செயலாளர்  ஜானகிராமன்  பேசுகையில், பயங்கரவாதம், தீவிரவாதம்  சேர்ந்ததுதான் போலீசு ராஜ்ஜியம். போலீசே வகுத்துக்கொண்ட  சட்டத்தை  பூட்சு காலால்   புதைத்துவிட்டு ஜல்லிக்கட்டுக்காக  போராடிய மாணவர்களை   தாக்கியிருக்கிறார்கள். இது உலகத்திலே  நடக்காத ஒன்று. மிருகம் வேட்டையாடுவதை  போல  இங்கே  மக்களை வேட்டையாடிருக்கிறார்கள் . தன்னெழுச்சியாக  எழுந்த  போராட்டம்  ஒரு தலைமையின்  கீழ்  திரண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்   இந்த தாக்குதல். கல் எடுத்து  மண்டையை உடைக்கிறது  காவல் துறை  இந்த செயலை ரவுடிகள்தான் செய்வார்கள் . இந்த  ரவுடிதனத்தின் மூலம்  7  கோடி  தமிழ் மக்களுக்கும்  பல கோடிகளை  செலவு செய்து  அம்பலப்படுத்த வேண்டியதில்லை போலீசே  அம்பலப்படுத்திக் கொண்டது. இந்த  அரசுகட்டமைவில் நேர்மையாக வேலை செய்யமுடியாது, அதுதான்  விஷ்னுபிரியா  தற்கொலை எனவே   போலீசு, நீதீமன்றம், சட்டமன்றம், எல்லாமே   பீட்டாவுக்காக இருக்கிறது.  மான்சாண்டோ, பெப்சி  போன்ற  பன்னாட்டு  நிறுவனங்களை  பாதுகாப்பதற்காக  இருக்கிறது. இவர்களை  வீழ்த்துவதை  தவிர  நமக்கு  வாழ்வு இல்லை, தாக்குவோம், போராடுவோம் வெற்றிபெறுவோம்  என்றார்.

புதிய  ஜனநாயக  தொழிலாளர்  முன்னணி  செயலாளர்   தோழர் பரசுராமன்  பேசுகையில்,  ஜல்லிக்கட்டு போராட்டம்   மோடியின்  அதிகாரம்  தமிழகத்தில்  செல்லாது  என்பதை  நிருபித்திருக்கிறது.  பெரியார் பிறந்த  மண்ணில்  பார்ப்பன  பண்பாட்டுக்கு  ஒரு செருப்படி  விழுந்திருக்கிறது என்றால்  மிகையல்ல திட்டமிட்டு   சினிமாவால்    ஆபாச வக்கிரங்களை  பரப்ப படும்   தமிழ் மண்ணில்   இந்த போராட்டத்தில்  அது போன்ற  அசம்பாவதம் ஏதும்  நடக்கவில்லை,  கிடைத்த  உணவை   சரியாக  பகிர்ந்து  உண்பது இப்போராட்டத்தில்  வெளிப்பட்டது. அப்படி  அமைதியான  வழியில்  போராடி கொண்டிருந்த   மாணவர்களை  காட்டுமிராண்டித்தனமாக  தாக்கியது  போலீசு, எனவே  போலீசு  ஆளும் வர்க்கத்தின்   அடியாள் படை, கூலிப்படை   முசாப் நகர் கலவரத்தில்  அடியாட்கள்  இருந்தார்கள்,  தமிழகத்தில்   காக்கி உடைகள் கொண்ட அடியாட்களை  கட்டவிழ்த்து விட்டுருக்கிறார்கள்.  இந்த  மாணவர்களின்  உறுதியான  போராட்டம்   தமிழக மக்களுக்கு  மட்டுமல்ல  காஷ்மீர், நாகாலாந்து, உத்திரப்பிரதேசம்  மக்களுக்கும்   நம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மோடியின்  அதிகாரம் செல்லாது என்பது அடித்து நொறுக்கிருக்கிறது இந்த போராட்டம்  எனவே  இது போராடும் தருணம் அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

புரட்சிகர  மாணவர்- இளைஞர் முன்னணி   மாவட்ட செயலாளர்  தோழர்  அன்பு  பேசுகையில், தமிழகத்தில் லட்சகணக்கான  மாணவர்கள் ஒன்றுதிரண்டு அமைதியான  முறையில் போராடி கொண்டிருந்தோம்.  அதில் யார் வன்முறையை  தூண்டியது, ஆட்டோவுக்கு  தீ வைப்பது   யார்?  மீனவர்களின் சொத்துக்களை சூறையாடுவது யார்? போலீசா? மாணவர்களா?  காவல்துறை  மக்களின்  நண்பன்  என்கிறார்கள்   ஏன் அடிக்கிறார்கள்  அடிக்கிறவர்களா  நண்பர்கள்.  டாஸமார்க், சமச்சீர்கல்வி, ஜல்லிக்கட்டு இது போன்ற  பல உரிமைகளுக்காக போராடும்போது  அடக்குமுறைகள்  ஏவப்படுகிறது. இந்த  அடக்குமுறைக்கு  எதிராக  எழுந்து நின்றுவிட்டோம். எதிர்த்து நிற்போம். மீண்டும்  இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக  ஒன்று கூடுவோம். என்று  போலீசுக்கு  எச்சரிக்கை விடுத்தார். இப்படி  போலீசுக்கு  எதிராக  வலுத்த குரல்  ஜனநாயக சக்திகளுக்கும் , மக்களுக்கும்  நம்பிக்கை ஏற்படுத்தும்  விதமாக  ஆர்ப்பாட்டம்  அமைந்தது.

தகவல்: மக்கள்  அதிகாரம், தருமபுரி
தொடர்புக்கு: 81485 73417

ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை : மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி

4

people-power-press-release-header09.02.2017

பத்திரிகைச் செய்தி

 

ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல.

னைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் – எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர்-சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல தேர்தல் சூதாட்டத்தில் ஆளை மாற்றுவதைத் தொடர்ந்தால் இன்று பன்னீர், நாளை சசிகலா, அப்புறம் வளர்மதி என்பதுதான் கதியாகும்.

“மூன்றுமுறை முதல்வராக இருந்த என்னை மிரட்டி பதவியைப் பிடிங்கிக் கொண்டார்கள்” என்று ஒப்பாரி வைக்கிறார், பன்னீர்! அதைப் பார்த்து நாம் அனுதாபப்படலாமா? “இதோ, இன்னும் எங்கள் காயங்கள் ஆறவில்லை, வலிகுறையவில்லை. கடந்த வாரம் நீதானே போலீசை ஏவி எங்கள் மாணவனின் கண்ணைப் பறித்தாய், இன்னொருவனின் கையை முறித்தாய்; எங்கள் மீனவரின் முகத்தைச் சிதைத்து ஜெயிலில் அடைத்தாய்; எங்கள் தாயின் மண்டையை பிளந்தாய்; எங்கள் சொத்துக்களைச் சூறையாடினாய்! இப்போது பதவி பறிபோனதென்று எங்களிடம் வந்து முறையிடுகிறாயே, வெட்கமில்லையா? கடந்த மாதம்தான் அலங்காநல்லூரில் நாங்கள் விரட்டியடித்ததை அதற்குள் மறந்துவிட்டாயா” என்றல்லவா நாம் விரட்டவேண்டும்?

“துரோகம் செய்துவிட்டார்! அம்மாவின் கட்சியைப் பிளந்து விட்டார்! எதிரிகளோடு சேர்ந்து சதி செய்கிறார்!” என்று பன்னீரைப் பார்த்துப் பதறுகிறது, சசியின் மன்னார்குடி மஃபியா. 25 ஆண்டுகள் தமிழ்நாட்டையே கொள்ளையடித்துக் கோடி கோடியாக சொத்துக்களைக் குவித்து வைத்துள்ள அந்தக் கும்பலின் கூப்பாட்டிற்குக் காதுகொடுப்பார் எவருமில்லை. தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் அந்தக் கும்பலைத் திட்டித் தீர்ப்பதைக் காண்கிறோம்.

இன்று, கொலை வெறியோடு கத்தியை உருவிக்கொண்டு நிற்கும் சசி – பன்னீர் இருவருக்குமே குறி பதவியும் அதிகாரமுமே. ஜெயலலிதா விவாதம், கட்சி ஒற்றுமை தவிர இப்போது நடக்கும் சண்டையில் கூட தவறியும் அவர்களின் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளைப் பேசுவதில்லை. அந்தப் பழைய கதைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஜெயலலிதாவும் அவரது கட்சியும் இன்று எந்த நிலையில் தமிழகத்தை விட்டுப் போயிருக்கின்றனர் பாருங்கள்!

வாழ்விழந்த விவசாயிகள், வேலையிழந்த தொழிலாளர்கள், எதிர்காலம் இழந்த வணிகர்கள், உயிரை பறிகொடுக்கும் மீனவர்கள், கல்வி இழந்த தம்பிமார்கள், சமத்துவத்திற்கு ஏங்கும் சகோதரிகள், சாதி தீண்டாமையால் கருகும் தளிர்கள் என போராட்ட வரிசைகள் ஒன்றை ஒன்று முந்துகிறது. மணலை பறிகொடுத்த ஆறுகளும், நீரை பறிகொடுத்த ஏரிகளும், கிரானைட் கொள்ளையால் அழிந்த மலைகள், தாது மணல் கொள்ளையால் பாழான கடற்கரைகள், நீர்நிலைகளை அழித்தவர்கள்தான் விவசாயிகள் மரணத்தை கொச்சைப்  படுத்துகிறார்கள். செய்த வேலைக்கு ஆறு மாதமாக கூலி கொடுக்க வக்கில்லாதவர்கள், வாங்கிய கரும்புக்கும், பாலுக்கும் காசு கொடுக்க திராணியற்ற இந்த அரசும், அதிகார வர்க்கமமும்தான் மக்களிடம் சுரண்டிய பணத்தை கோடிக்கணக்கில் சம்பளமாகவும், லஞ்சமாகவும், கொள்ளையடித்துத் கொழுக்கிறது! பறிகொடுத்த மக்கள் இந்தக் கொள்ளைக் கூட்டத்திடமே ஆட்சியைக் கொடுக்கலாமா?

அதிகாரிகள் சட்டப்படி செயல்படுவார்கள்; அரசியல்வாதிகள் மக்கள் விருப்பபடி நடப்பார்கள்; நீதிபதிகள் நடுநிலையோடு மனசாட்சிப்படி தீர்ப்பு சொல்வார்கள்; ஒருவர் தவறு செய்தால் மற்றவர்கள் தடுப்பார்கள், தண்டிப்பார்கள் என நம்பிய காலம் மலையேறிவிட்டது ! இதை மாற்றியமைக்கப் போராடுவதுதான் ஒரே தீர்வு. இதை சரி செய்வதோ பழுது பார்ப்பதோ முடியாது. மீண்டும் மீண்டும் இந்த கட்டமைப்புக்குள் தீர்வை தேடினால் வாழ்வாதாரங்களும், வாழ்வுரிமைகளும் மேலும் மேலும் பறிபோகும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொகுத்து பாருங்கள். மோடி அரசியல், ஓ.பி.எஸ். அரசியல் எல்லாம்  அழுகி நாறுகிறது.

நல்ல நீதி, நிர்வாகம் நிலைநாட்டப்படும் என யாருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த அமைப்புமுறைக்குள் மக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றி தரமுடியாத நிலைக்குப் போய்விட்டது. ஓட்டுக்கட்சிகள் வேண்டாம், அதிகாரிகள் வேண்டாம் நாங்களே பார்த்து கொள்கிறோம் என இந்த அமைப்பு முறைக்கு வெளியில் நின்று போராடிய மாணவர்களோடு குமுறி கொண்டிருந்த அனைத்து மக்களும் ஒன்றிணைந்தனர். அத்தகைய மெரினா போராட்ட உணர்வுக்கு, கருத்தாக்கத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆளை மாற்றி சிந்திப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

ஊழலும், கொள்ளையும், கிரிமினல்மயமும், தேசத்துரோகமும், புற்றுநோயாக இந்த அரசகட்டமைப்பு முழுவதும் பரவி பயனற்றதாகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டால் அதற்கு செவிசாய்க்காமல் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். மக்கள் விரோதமாக மாறிய, நெருக்கடிக்குள் சிக்கிய இந்த அரசுகட்டமைப்பை சரி செய்யலாம் என மீண்டும் மீண்டும் எடுக்கும் முயற்சிதான் சசிகலாவா? ஓ.பி.எஸ்ஸா? என நிற்கிறது.  மெரினா போராட்ட அனுபவத்தில் இந்த அரசுகட்டமைப்பிற்கு வெளியில் மாற்றை, தீர்வைத் தேட வேண்டும் உருவாக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் தமிழக மக்களை மன்றாடுகிறோம்.

தீ பிடித்த வீடு போல் தீர்க்கப்படாமல் மக்களின் பிரச்சினைகளால் நாடே பற்றி எரிகிறது. ஆங்கிலேயனிடம் கோரிக்கை வைக்கவில்லை, வெளியேறு நாங்கள் பார்த்து கொள்கிறோம் என போராடினோம். இந்த அரசு கட்டமைப்பை நம்பாமல், தமிழக மக்கள் விடமாட்டோம் என விடாப்பிடியாக போராடியதால் வென்றது மெரினாப் போராட்டம்! எப்படி போராட வேண்டும் என அது கற்றுக்கொடுத்துள்ளது!

மெரினா போராட்டம்,  குமுறிக்கொண்டிருந்த மக்கள் ஒன்றிணைந்த மாபெரும் மக்கள் எழுச்சி. சாதி மத பிளவுகளை சுக்கு நூறாக்கி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்த முன்னுதாரணமிக்க போராட்டம். மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த போராட்டத்தை,  அரசும், போலீசாரும் எப்படி பழிதீர்த்தனர் என்பதை கண்கள் சிவக்க, நெஞ்சம் பதற மக்கள் அனைவரும் பார்த்தார்கள். கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என கூசாமல் பழி போட முயன்று அவமானபட்டு தோற்றது போலீசு.

காளையில் பற்றிய தீ காவிரி உரிமைக்கும், கல்வி உரிமைக்கும், பரவக்கூடாது என்ற பய பீதியால் அலங்காநல்லூரிலும், சென்னையிலும், கோவையிலும் திட்டமிட்டு  நடத்தப்பட்டதுதான் போலீசு வன்முறை வெறியாட்டம். அடைக்கலம் கொடுத்த மீனவர்கள், ஆதரித்த மக்கள்,போராடிய மாணவர்கள், முன்னின்ற இளைஞர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக போராடுவதுதான் வீரம்.

மாணவர்களே, இளைஞர்களே வாருங்கள்! தமிழகத்தை மெரினாவாக்குவோம்!

இவண்
வழக்கறிஞர். சி,ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்,  தமிழ்நாடு.

***

இது வேற தமிழ்நாடு !
மாணவர்களே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே வாருங்கள் !
தமிழகத்தை மெரினாவாக்குவோம் !

ops-sasi-poster-1பொதுக்கூட்டம்:
19-2-2017 ஞாயிறு மாலை 5 மணி,
அம்பேத்கர் பாலம், சிட்டி சென்டர் அருகில், சென்னை

நிகழ்ச்சிநிரல்:

தலைமை:
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்

சிறப்புரை:
தோழர் மருதையன்
பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு

தோழர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தோழர் தியாகு, ஆசிரியர்
உரிமைத் தமிழ் தேசம்

திரு.இரா.சங்கரசுப்பு
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

திரு. சாமுவேல்
சமூக ஆர்வலர், அம்பேத்கர் பாலம்

மற்றும் பாதிக்கப்பட்டோர் நேருரை

அனைவரும் வாருங்கள் ! தமிழகத்தை மெரீனாவாக்குவோம் !!

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம் – 9176801656

ஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் – ஒரு தொகுப்பு

0
அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.

வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக…

 ‘‘ஒன்றரைக்கோடிஉறுப்பினர்களைக்கொண்டபெரியதொருஅரசியல்கட்சிக்குத்தலைமைதாங்கியஜெயலலிதா, தன்மீதுதொடரப்பட்டவழக்குகளைமுகாந்திரமாகக்கொண்டு, வன்முறையில்ஈடுபடக்கட்சியினரைநேரடியாகவோ, மறைமுகமாகவோதூண்டியதில்லை.’’ (புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், தினமணிக் கதிர், 11.12.2016)

‘‘அவரது ஆட்சியைப் பற்றி எத்தனையோ குறைகளைக் கூறலாம். ஆனால், ஜெயாவின் நிர்வாகத் திறமையும், அவரது ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சட்டம்ஒழுங்கு நிலையும், ….. பெண்மைக்குத் தரப்பட்ட மரியாதையும் பாதுகாப்பும் தமிழகம் உள்ளவரை நினைவுகூரப்படும்.’’ (தினமணி தலையங்கத்தில்)

L&O_P1
ஸ்பிக் நிறுவனப் பங்குகள் விற்பனை ஊழல் வழக்கில் ஜெயாவிற்கு எதிராகக் கோப்பில் குறிப்புகள் எழுதியதற்காக ஆசிட் வீசித் தாக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா.

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே, ‘‘தமிழகத்தில் இருந்த தாலி பறிக்கும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக’’த் தடாலடியாக அறிவித்தார், ஜெயா.  இதன் மூலம் தனது வருகையே, இருப்பே சமூக விரோதக் கும்பலுக்குக் கிலி ஏற்படுத்திவிட்டதாகக் காட்டிக் கொண்டார், அவர்.

ஆனால், கடந்த ஐந்தாண்டில், 2016 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை, தமிழகத்தில் 7,630 கொலைகளும், 8,119 கொள்ளைச் சம்பவங்களும், 11,245 கொலை முயற்சிகளும் நடந்துள்ளன.

பெண்களின் பாதுகாப்போ, தினமணி தலையங்கத்தில் மெச்சிப் பாராட்டியிருப்பதற்கு நேர்மாறாக, 3,360 பாலியல் வன்முறைகளும், 6,431 பெண் கடத்தல் சம்பவங்களும் நடந்து, பெண்கள் அச்சத்தோடுதான் தெருவில் இறங்கி நடமாட வேண்டிய சூழ்நிலை நிலவியது.

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற உள்ளூர் இளைஞர்கள் மட்டுமல்ல, போலீசு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்கூட மணல் கொள்ளை மாஃபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய பல பேர் காணாமல் போனார்கள். ரியல் எஸ்டேட் தொழில் தகராறு, போட்டி காரணமாக நடுரோட்டில் படுகொலைகள் நடந்தன. இப்படித் தமிழகம் தொழில்முறை கிரிமினல் மாஃபியா கும்பலின் களமாக மாறிப் போயுள்ள சூழ்நிலையில், ஜெயா ஆட்சியில் சட்டம்−ஒழங்கு சிறப்பாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகவும் இருந்ததாகப் பச்சைப் பொய்யை எழுதுவதற்கு தினமணி கூச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனைவிடப் பெரிய பொய் அ.தி.மு.க.வை அகிம்சாமூர்த்திகளாகப் பாராட்டும் பத்திரிகையாளர் மாலனின் புகழாரம். தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், அக்கட்சியும், முதலமைச்சர் ஜெயா தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரையிலான அக்கட்சியின் அதிகாரப் பிரதிநிதிகளும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சட்டத்தின் ஆட்சிக்கே சவாலாக இருந்தனர் என்பதும், அந்த வகையில் சட்டவிரோத கிரிமினல் மாஃபியா கும்பலைவிட அ.தி.மு.க. அபாயகரமானதாக இருந்தது, இருந்து வருகிறது என்பதும்தான் உண்மை.

ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.
ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.

பத்திரிகையாளர் மாலன் அ.தி.மு.க. வன்முறையை ஆராதிக்கும் கட்சி அல்ல என்ற தனது புகழாரத்தில் அ.தி.மு.க.வினரால் மூன்று கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வன்முறைச் சம்பவத்தை விதிவிலக்கு எனக் குறிப்பிடுகிறார். ஆனால், தன்னை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் ஜெயா வகுத்த விதியாக இருந்தது. ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய வன்முறைகளை, கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டுப் பாருங்கள், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்று குற்றஞ்சுமத்த, யாரும் தயங்கவே மாட்டார்கள்.

ஜெயா, முதல் முறையாகத் தமிழகத்தின் முதல் அமைச்சராக மே,1991−இல் பதவியேற்றார். அவர் முதலமைச்சராகிய அடுத்த மூன்றாவது மாதத்திலேயே ”தராசு” வார இதழ் அலுவலகம் மீது அ.தி.மு.க. கும்பல் கொலை ஆயுதங்களைக் கொண்டு நடத்திய வன்முறைத் தாக்குதலில், அப்பத்திரிகையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கத்திக் குத்துப்பட்டு இறந்து போனார்கள்.

மே 19, 1992 அன்று பட்டப்பகலில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் அவரது முகம், கழுத்து மற்றும் கைகள் வெந்து போயின. இத்தாக்குதல் நடந்தபோது, அவர் தமிழக வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தார். ஜெயா சம்பந்தப்பட்டிருந்த ஸ்பிக் பங்குகள் விற்பனை ஊழல் தொடர்பான கோப்புகளில், சந்திரலேகா ஜெயாவிற்கு எதிராகக் குறிப்புகளை எழுதியிருந்தார் என்ற காரணத்திற்காகவே, அதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வெறியோடு அவர் மீது ஆசிட் வீசப்பட்டது என்பது பின்னர் அம்பலமானது.

இந்த இரண்டு தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில், அப்பொழுது மைய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், அவர் பயணம் செய்த காரின் மீது கற்கள், தடிகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ப.சிதம்பரத்தின் மீது தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பலுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

ஜெயா−சசி கும்பல் தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவன நிலத்தை அடிமாட்டு விலையில், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வளைத்துப் போட்டது அம்பலமான நிலையில், அவர்கள் மீது இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 169−ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.  இதையடுத்து அவரது அலுவலகத்தில் புகுந்த ரவுடிக் கும்பல், ‘‘அம்மா மீதே வழக்குத் தொடரும் தைரியமா உனக்கு?’’ எனக் கேட்டபடியே, கத்தி, இரும்புக் கம்பிகளைக் கொண்டு அவரைத் தாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைத்துப் போட்டது. உடம்பின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவரை எப்படியாவது கொன்றுவிடத் திட்டம் தீட்டிய அ.தி.மு.க. கும்பல், அந்த மருத்துவமனையின் மின் இணைப்பைத் துண்டித்தது.

ஜெயா ஆட்சியின் ஊழல்களையும், வன்முறைகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்த நக்கீரன் இதழின் பிரிண்டர் கணேசன் அய்யா போலீசு நிலையத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டு, போலீசாரல் சித்திரவதை செய்யப்பட்டார். இச்சித்திரவதை நடந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே உடல் நலிவுற்று இறந்துபோனார் அவர்.

எதிர்கட்சியினர், பத்திரிகைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல, அச்சமயத்தில் தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சேஷன் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் ஜெயா−சசி கும்பல் வன்முறைகளையும் மிரட்டல்களையும் ஏவிவிட்டது.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி தந்து உத்தரவளித்தார், ஆளுநர் சென்னா ரெட்டி. இதற்குப் பாடம் கற்பிக்கும் முகமாக, சென்னாரெட்டி புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த வழியில் திண்டிவனம் அருகே வழிமறித்த அ.தி.மு.க. கும்பல், அவர் காரின் மீது  கற்களையும் செருப்புகளையும் வீசியெறிந்து தாக்குதல் தொடுத்தது. சுப்பிரமணிய சுவாமி உரையாற்றிக் கொண்டிருந்த சென்னை பொதுக்கூட்டத்தில் ஆசிட் பல்புகளும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.

அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.
அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.

ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்த சென்னாரெட்டியின் உத்தரவு குறித்த வழக்கில், அந்த உத்தரவை ஏற்றுத் தீர்ப்பளித்த நீதிபதி சீனிவாசனின் வீட்டிற்கு மின் இணைப்பும், குடிநீர் விநியோகமும் நிறுத்தப்பட்டன.

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அருணாச்சலத்தின் மருமகன் மீது கஞ்சா வழக்கைப் போட்டு, அந்நீதிபதியை மறைமுகமாக மிரட்டியதையடுத்து, அவர் விசாரணையிலிருந்து விலகிக் கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனா மீதும், அவ்வழக்கின் அரசு வழக்குரைஞராக இருந்த பி.வி. ஆச்சார்யா மீதும அடுக்கடுக்காக அவதூறுகளையும் வழக்குகளையும் தொடுத்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இந்த மனரீதியான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா அவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.

ஜெயாவின் இரண்டாவது தவணை ஆட்சியில், தி.மு.க. சென்னையில் நடத்திய ஊர்வலத்தைக் கலைப்பதற்காக, அயோத்திகுப்பம் வீரமணியைப் பயன்படுத்திக் கொண்டது அவரது அரசு. கடற்கரைச் சாலையில் ஊர்வலம் சென்றபோது, ரவுடி வீரமணி கும்பல் கற்களை வீசித் தாக்கி மோதலை ஏற்படுத்தியது. இதனைச் சாக்கிட்டு போலீசும், வீரமணி கும்பலும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு தி.மு.க.வினரையும் பத்திரிகையாளர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தனர். ஒரு பெண்ணின் ஆட்சியில் நடந்த இந்தத் தாக்குதலின்போது, பெண் பத்திரிகையாளர்களைக்கூட போலீசு விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியின்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால் ஜெயா தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அ.தி.மு.க.வினர் சட்டம்−ஒழுங்கை, பொதுமக்களின் பாதுகாப்பை, நீதித்துறையை எந்தளவிற்கு மதித்து நடந்து கொண்டனர் என்பது உலகமே காறிஉழிழ்ந்த ஒன்று.

அ.தி.மு.க. கும்பல் நடத்திய அத்துணை ரவுடித்தனங்களுக்கும் தமிழக போலீசு உடந்தையாக இருந்தது என்பது மட்டுமல்ல, ஜெயாவின் ஆட்சியில் போலீசும் உளவுத் துறையும் போயசு தோட்டத்தின் கூலிப்படையாகவே நடந்து கொண்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதியை வீடு புகுந்து கைது செய்தபொழுது, தமிழக போலீசும் உயர் அதிகாரிகளும் ஆடிய ஆட்டமும்; ஜெயாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் கணவர் நடராஜனின் தோழி செரீனா, ஜெயாவின் ஆடிட்டராக இருந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது தமிழக போலீசு போட்ட கஞ்சா வழக்குகளும் அத்துறை ஜெயாவின் ஏவல் நாய் என்பதைத் தமிழகத்திற்கே புரிய வைத்தன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.

கட்சிக்காரர்களை வேவு பார்ப்பது தொடங்கி, அவர்கள் மேலிடத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைத்த சொத்துக்களைக் கைப்பற்றி போயசு தோட்டத்தில் ஒப்படைப்பது வரை ஜெயாவிற்கு அனைத்துமாக இருந்து சேவை செய்தது, தமிழக போலீசு. இந்த விசுவாசம் காரணமாக, போலீசுக்கு சலுகைக்கு மேல் சலுகையாக வாரி வழங்கி, அதனை வளர்த்துவிட்டார். பெருந்தீனி தின்று கொழுத்துப் போன பங்களா நாய் சும்மா இருக்குமா? பொய் வழக்குகள், கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட போலீசின் அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்ததோடு, தமிழகத்தின் பாளையக்காரனாகவும் போலீசு நடந்து கொண்டது.

கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய போலீசு, அம்மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் கிணற்றில் விஷத்தைக் கலந்தது. இந்த அட்டூழியம் நடந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயாவோ, தனது வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமண தயாரிப்புகளில் மூழ்கிப் போயிருந்தார். பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைச் சட்டமன்றத்திலேயே ஆதரித்துப் பேசினார், அவர்.

இவை அனைத்தும் கால்தூசு என்பது போல, அரசியல் சாசனத்திற்கே பெப்பே காட்டியவர்தான் புரட்சித் தலைவி; எவையெல்லாம் புனிதமாகக் கூறப்படுகிறதோ, அவற்றின் டவுசரைக் கழட்டி, அம்மணமாக்கியவர்தான் அம்மா.

சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில், சபாநாயகரைத் தவிர வேறு யாரும் அமரக்கூடாது என்பது மரபு. அந்த மரபைத் துச்சமாகத் தூக்கிப் போட்டு, அந்த இருக்கையில் தான் அமர்ந்தும், சட்டமன்ற உறுப்பினரே அல்லாத சசிகலாவைத் துணை சபாநாயகர் இருக்கையில் உட்கார வைத்தும் சட்டமன்றத்தை போயசு தோட்டமாக்கினார்.

2001 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வந்த சமயத்தில், ஜெயா, பிளஸண்டே ஸ்டே விடுதி வழக்கிலும், டான்சி ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார். ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற உண்மையை மறைத்து இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெயாவின் வேட்பு மனு தாக்கல் விவாதப் பொருள் ஆன நிலையில், மேலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார், ஜெயா.

ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.
ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாதென்பது தேர்தல் விதி. அந்த விதியை மீறி அவர் நான்கு தொகுதிகளுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததற்குக் காரணம், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் தனது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடக் கூடாதென்ற கிரிமினல் தந்திரப் புத்தியாகும். அவர் போட்ட கணக்குப்படியே அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், அப்போதிருந்த தி.மு.க. அரசுதான் சதி செய்து, ஜெயாவைப் போட்டியிட முடியாதவாறு செய்துவிட்டதாக ஜெயாவும் அவரது விசுவாசிகளும் கூசாமல் அவதூறுகளை அள்ளிவிட்டனர்.

அச்சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்திருந்த அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்த ஜெயா, அப்போதைய தமிழக ஆளுநராக பாத்திமா பீவியை விலைக்கு வாங்கி முதலமைச்சராகி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த குற்றவாளி நாட்டை ஆளலாம் என்ற புரட்ச்சியை நிகழ்த்திக் காட்டி, மரபு, சட்டம், அரசியல் சாசனம் என்ற புனிதங்களின் மீது சாணியைக் கரைத்து ஊற்றினார்.

இங்கே நாம் தொகுத்திருக்கும் ஜெயா−சசி கும்பலின் கிரிமினல் குற்றச் செயல்கள் அனைத்தும் ஏதோ அநாதிக் காலத்தில் நடந்தவை அல்ல. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழக மக்களின் கண் முன்னே நடந்தவை. 1996 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வைத் தமிழக மக்களே ஓரங்கட்டித் தோற்கடித்தனர். 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மட்டுமல்ல, ஜெயாவும் தோற்கடிக்கப்பட்டதற்கு அவரது ஊழல், வக்கிர ஆட்சிதான் காரணமாக இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைத்துவிட்டு, ஜெயாவை உன்னதத் தலைவியாகப் புகழந்து தள்ளுகின்றன, ஊடகங்கள். தமிழக மக்களும் பழசையெல்லாம் மறந்துவிட்டு, தமக்கேயுரிய இரக்க குணம் காரணமாக, ஊடகங்களின் பொய்யுரைக்குத் தலையாட்டுகிறார்கள்.

ஜெயலலிதா மீது ஒன்பது ஊழல் வழக்குகள் பதியப்பட்ட பிறகு, ஒரு பொட்டு நகைகூட அணியாமல் தனது தோற்றத்தை எளிமையாக மாற்றிக்கொண்ட அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நகைநட்டு இல்லாமல் பார்த்த பெண்கள், ‘‘அந்தப் படுபாவி (கருணாநிதி) எல்லாத்தையும் புடுங்கி வெச்சுக்கிட்டாராமில்லே’’ எனப் பேசிக் கொண்டதாகத் தனது அஞ்சலியில் பதிவு செய்கிறார், பத்திரிகையாளர் வாஸந்தி. பொதுமக்களிடம் காணப்படும் இந்தப் பாமரத்தனம்தான், ஒரு கிரிமினல் மாஃபியா தலைவியைத் தமிழகத்தின் அம்மாவாகத் திணிப்பதற்கான அடிப்படையைத் தருகிறது.

– குப்பன்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !

1

ருப்புப் பணத்தையும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பது, போதை மருந்து கடத்தல் ஆகியவற்றையும் தனது பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒழித்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் மோடி.  ஆனால், நவம்பர் 8−ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 50 நாட்களில் கருப்புப்பணம் கடுகளவும் ஒழியவில்லை. கருப்புப்பண பேர்வழிகள் அஞ்சி நடுங்கிடவுமில்லை. மாறாக,  ஒரு புதிய கருப்புப்பணச் சந்தை உருவாகியுள்ளதோடு, வங்கிகளின் துணையோடு கருப்பை வெள்ளையாக்கும் மோசடிதான் பெருகியுள்ளது.

பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.
பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.

கருப்பை வெள்ளையாக்குவதிலும் பணக்கடத்தலிலும் ஈடுபட்ட குற்றத்துக்காக கடந்த ஜூன் 2013−இல் ரிசர்வ் வங்கியால் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட தனியார் நிறுவனம்தான், ஆக்சிஸ் வங்கி. அப்பேர்பட்ட யோக்கியவானாகிய ஆக்சிஸ் வங்கியின் டெல்லி− சாந்தினி சவுக் கிளையில், கடந்த நவம்பர் 8−ஆம் தேதி முதலாக ஒருவார காலத்திற்குள் போலி ஆவணங்கள் மூலம் 44 புதிய வங்கி கணக்குகளைத் தொடங்கி, அவற்றில் ஏறத்தாழ ரூ.450 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதவிர, பல நூறு கோடி அளவுக்குப் பணப்பரிமாற்ற மோசடிக்கு உடந்தையாக இருந்த டெல்லி காஷ்மேரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையை சேர்ந்த இரு மேலாளர்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

‘‘கோப்ரா போஸ்ட்’’ எனும் வலைத்தளம், நாட்டின் ஐந்து மண்டலங்களில் நடத்திய இரகசிய விசாரணையின் மூலம் ( Operation Red spider)  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய தனியார் வங்கிகள் பல்வேறு வழிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 8−ம் தேதி முதல் டிசம்பர் 7−ம் தேதி வரை தமிழகத்தில் 9,000 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு, ஒரு கிளைக்கு ஏறத்தாழ ரூ.87 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 900 கிளைகளைக் கொண்டுள்ள தனியார் வங்கிகளுக்கு, ஒரு வங்கிக் கிளைக்கு ஏறத்தாழ ரூ.6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட 8 மடங்கு அதிகமாகும்.

கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.
கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.

பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகவும், தனியார் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் உள்ள நிலையில், இவ்வளவு பணத்தை கொண்டு தனியார் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக பணம் வழங்கியிருக்கலாம். ஆனால், தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது. இதிலிருந்தே தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட புதிய நோட்டுகள் கருப்புப் பணப் பேர்வழிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதை உணர முடியும்.  நவ.8 முதல் ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி. ஆகிய தனியார் வங்கிகள் எவ்வளவு பழைய நோட்டுக்களை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கியுள்ளன என்பதை ரிசர்வ் பாங்க் கவர்னர் தேதி வாரியாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ள போதிலும், இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளிலும் பழைய நோட்டுகளை மாற்றவும், பணப் பரிமாற்றங்களுக்கும் தடை விதித்து, தமிழகம் உள்ளிட்ட எதிர்த்தரப்பு ஆளும் மாநிலங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையினரைக் கொண்டு சோதனைகள் நடத்துகிறது, மோடி அரசு. ஆனால், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவை நிர்வாக இயக்குனராகக் கொண்டுள்ள குஜராத்தின் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.500 கோடி அளவுக்கும், குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக இருக்கும் மற்றொரு கூட்டுறவு வங்கியில் ரூ.200 கோடி அளவுக்கும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளபோதிலும், மோடி அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. குஜராத் கூட்டுறவு வங்கிகளில் கமிசன் அடிப்படையில் புதிய நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருவதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக யாதீன் ஓசா என்கிற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மோடிக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை மோடி அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

axis bank_pic3
தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே, ஏடிஎம் கடவு எண்களைத் திருடும் மோசடிகள் தொடரும் நிலையில், ஒருவரது வங்கிக் கணக்கில், அவருக்குத் தெரியாமல் பணத்தைப் போட்டு எடுப்பதென்பதும் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. உ.பி. மாநிலம் மீரட்டில் வசிக்கும் ஏழைப் பெண்ணாகிய ஷீதல் யாதவ் என்பவரது பாரத ஸ்டேட் வங்கியிலுள்ள ஜன்தன் கணக்கில் ரூ. 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பின்னர் அது கணினிக் கோளாறினால் ஏற்பட்ட தவறாகச் சித்தரிக்கப்பட்டது. தருமபுரியிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியிலுள்ள புலிகரை கிராமத்தின் இந்தியன் வங்கியில், நகைக் கடனுக்கு வட்டிக் கட்டவில்லை என்பதால் முடக்கப்பட்டிருந்த சிவகுமார் என்ற விவசாயியின் கணக்கில் 1,32,758. ரூபாய் போடப்பட்டு பின்னர் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. வங்கி மேலாளரான பிரபாகரன், இதுபோல பல விவசாயிகளது வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு பின்னர் வேறு கணக்கிற்கு பல இலட்சங்களை பரிமாற்றம் செய்துள்ள மோசடியை மக்கள் அதிகாரம் அம்பலப்படுத்தியது.

இறக்குமதிக்கான கோடிக்கணக்கான தொகையை வெளிநாட்டிலுள்ள நிறுவனத்துக்கு அனுப்புவதாகக் கூறித்தான், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி − இறக்குமதி வர்த்தகம் வாயிலாக வருடந்தோறும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் கருப்பணம் வெளியேறி வருகிறது. இந்த வர்த்தகத்திற்குரிய பில்கள் உள்ளிட்ட மின்னணு பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் நடந்துள்ளன. இப்படிச் சட்டபூர்வமாக மட்டுமின்றி, சட்டவிரோத வழிகளிலும் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு  இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி. என்ற தனியார் வங்கி போதை மருந்து கடத்தல் பணத்தைக் கைமாற்றிய விவகாரமும், டெல்லியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையொன்றின் வழியாகப் போலியான ஏற்றுமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கருப்புப் பணம் கடத்தப்பட்ட விவகாரமும் வங்கிகளின் நிழல் உலகப் பின்னணியை ஏற்கெனவே அம்பலமாக்கியிருக்கின்றன.

மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு...!
மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு…!

உண்மை இவ்வாறிருக்க, மோடியும் பா.ஜ.க. கும்பலும் வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள்தான் வெளிப்படையானவை என்றும், அதில் முறைகேடுகள் இருக்காது, இதன் மூலம் சட்டப்படியான வருமான வரியை விதிக்க முடியும், மின்னணு பரிமாற்று முறை வந்தால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் நாட்டு மக்களின் காதுகளில் இன்னமும் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கிகள் மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் அச்சகம், ரொக்கப் பணத்தைப் பாதுகாக்கும் கருவூலம் ஆகியவற்றின் வழியாகவும் பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த இடங்களிலும் சோதனை நடத்த வேண்டுமென்கிறார். ஆனால் இதற்கு விளக்கமளிக்காத மோடி அரசோ, ஒருசில வங்கிக் கிளைகளில் மட்டும் சோதனை நடத்துவதோடு நின்றுவிட்டது. மணற்கொள்ளை மாஃபியா சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட புதிய ரூ. 2,000 நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து வந்தது என்பதை அந்த நோட்டுகளின் எண்ணை வைத்தே கண்டறிய முடியும் எனும் போது, மோடி அரசோ அது பற்றி வாய்திறக்க மறுக்கிறது. மறுபுறம், நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் சோதனை செய்து மோசடிகளைத் தடுப்போம் என்று வெற்றுச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் சோதிக்குமளவுக்கு அடிக்கட்டுமான வசதிகளோ, போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகளோ இல்லை என்று வங்கி ஊழியர் சங்கங்களே இந்த வெற்று வாக்குறுதியை அம்பலப்படுத்துகின்றன.

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது உலகறிந்த ஒரு மோசடி. மோடி அரசோ, இன்றைய கிரிமினல் முறையிலான அரசுக் கட்டமைப்பைக் கொண்டே இதனைச் சாதிக்க முயற்சிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகளும் கருப்புப் பணப் பேர்வழிகளும் தங்களது வழக்கமான கிரிமினல் நடவடிக்கைகளால், மோடியின் ஊதிப் பெருக்கப்பட்ட கருப்புப்பண ஒழிப்புத் திட்டத்தின் காற்றைப் பிடுங்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

– குமார்

***

பணமற்ற பொருளாதாரம்: உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர், அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.

swipingலாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து, போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து, போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.

அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணை முதலாளிக்கிட்ட குடுத்து, போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், போன மாசம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2,000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், போன மாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை லாட்ஜ் ஓனர்கிட்ட குடுத்தாரு.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை, நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.

இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே திரும்பிப் போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, வைத்திய பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி, யாருக்கும் இழப்பில்லாம.

இப்ப நம்ம மோடியின் புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்?

வேலைக்கார அம்மாவோட பே டிஎம் ஆப்ல 1%, டீக்கடை ஆப்ல 1%, பால் பண்ணை ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பே டிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பே டிஎம் ஆப்ல 1% – இப்பிடி பே டிஎம் பாக்கெட்டுக்கு ரூ.5 + 4.95 + 4.90 + 4.85 + 4.80 = ரூ.24.50- போயிடும். 500 ரூவாயில ஆரம்பிச்ச ட்ரான்ஷாக்சன், லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது ரூ.475.50 ஆகிடும்.

(குறிப்பு : இப்போதைக்கு ட்ரான்ஷாக்சன் சார்ஜ் 2.9% வரைக்கும் இருக்கு. எளிதா கணக்குப் போடுறதுக்காக 1% ஆக எடுத்துக்கிட்டோம்.)

இதுல யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? இப்பவாவது புரிஞ்சிக்குங்கோ, இது யாருக்கான திட்டம்னு !

– அன்பு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?

0

ஞ்சம் பொழைக்க
தவிக்கும் ஊரில்
பஞ்சரத்ன கீர்த்தனை
பட்டுப்போன
ஆற்றங்கரையில்
பட்டுப்புடவைகள் வாசனை.

slideரசிக்க முடிந்தவர்
ரசிக்கலாம்
உழவர் நெஞ்சு வெடித்த
ஓசை மறந்து
உஞ்ச விருத்தி பஜனை !

காவிரியின் தாள கதி
காவியால் நிர்க்கதி
கர்நாடாகாவிடம் மல்லுக்கட்டி
கழனிகள் அதோ கதி !
இதற்கு இல்லை
உங்களிடம் ஒரு சுருதி
கூச்சமில்லாமல்
கொலைக்களத்தில்
களிப்புடன் கர்நாடக `சங்கதி’ !

வந்தவருக்கெல்லாம்
சோறு போட்ட
தஞ்சை பூமியே காலி
தியாகய்யரையும்  ஊட்டி வளர்த்த
நெற்களஞ்சியம் மூளி !

நாற்றசையும் சுவரம் இன்றி
மருதப்  பண் மரணம்
பார்த்துப் பதறாத
உங்கள் `அலங்காரம்’.
பசும் பால் காபிக்கு
கும்பகோணம்
பாடி மகிழ
ஆரோகணம், அவரோகணம்.

“கருணையிலாதது கண்ணா ?”
கேட்டார் வள்ளுவர்
கண்டும் சுரணையிலாதது
பண்ணா ?
கேட்கத் துடிப்பது உழவர்.

கார்ப்பரேட்  ஆராதனை
விளைநிலம் விழுங்கி
கொள்ளையிடுது நாட்டை.
வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல்
உங்கள் நாவில் துள்ளுது ‘நாட்டை

மதகோசை முடங்கி
பயிரோசை ஒடுங்கி
உயிரோசை அடங்கும் புல்லினம்.
இதற்கொரு உணர்ச்சியில்லாமல்
இதயம் மரத்தது இசையா !
நீங்கள்
என்ன வகை உயிரினம் ?

கழுத்து மணி இல்லாமல்
கலை இழந்து
கால்நடைகள் குரலெடுக்க  முடியாமல்
வாயில் நுரை தள்ளி.
கழுத்து ஆரம் ஆட்டி
காதணி குழையக் காட்டி
காய்ந்த ஊருக்கு நடுவே
களைகட்டும் உங்கள்
ஆரபி, வராளி

குரல், துத்தம், கைக்கிளை
உழை, இளி, விளரி, தாரம்
எனும் ஏழுவகைத் திருடி
தமிழ் தாள உறுப்புகள்
“அலகு ”  லகுவாகி
“துரிதம்”  த்ருதம்  ஆகி
‘அரைத்துரிதம்’ அனுத்ருதம்  ஆகி
களவாடி   தமிழிசையை
கர்நாடக இசையாக்கி
தமிழ் நிலம் பாடாமல்
வக்ர ராகமும்,
தமிழில் பாடினால் தீட்டு எனும்
அக்ரகாரமும்

கெளளை‘ பாடும் சத்தத்தில்
தன்மானத்தில்
தவளை சாகுது  மொத்தத்தில்.

வரப்பில்
வேலி முள்
எனத் தொட்டால்
வெளுத்து காய்ந்து கிடக்கும்
ஓணாண்.

வெங்காயச் சருகென
விலக்கினால்
வாசலில்
மக்கிக்கிடக்கும்
வண்ணத்துப் பூச்சி

தொட்டிலின் மேல்
ஒட்டடை
எனத் தட்டினால்
துருப்பிடித்து
வெகு நாளாய்
மறந்துபோன கருக்கரிவாள்

இறந்த விவசாயியின் முகத்தை
நிழற்படத்தில் வெறித்து,
வடியும் தாயின் கண்ணீரைப்   பார்த்து
விளங்காமல் பயந்து
செதும்பும் குழந்தை.

ஏன் இந்தத் துயரம்
எது இதன் அடி நாதம் ?
ஊன் உருகும்
உங்கள் புல்லாங்குழலில்
இதற்கோர் இழை உண்டா…

‍பொங்கலுக்கு வழியின்றி
உழவன் வீட்டில் கருமாதி
உங்களுக்கு என்ன ?
உறுத்தாமல்   அனுபவிக்க
காம்போதி

இந்தனைக்கும்  நடுவே
இத்தரையில் அமர்ந்து
தொடை தட்டி, சுதி கூட்டி
பஞ்சமம், சட்சம்
உங்களால் முடியும்
ஆம்
உங்களால் முடியும்
பசையற்ற நிலத்தில்
இசைக் கூத்தடித்த
உங்களால் மட்டுமே முடியும் !

– துரை. சண்முகம்

குறிப்பு: ஒற்றை மேற்கோளில் வருபவைகள் ராகங்களின் பெயர்கள்.