privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்அறிவியலா? இறையியலா? புதிய கலாச்சாரம் செப்டம்பர் வெளியீடு

அறிவியலா? இறையியலா? புதிய கலாச்சாரம் செப்டம்பர் வெளியீடு

-

“பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மரபணு சிகிச்சையெல்லாம் இருந்தது” என்று புகழ்பெற்ற மருத்துவர்கள் அவையிலே ஒரு முட்டாள் பகிரங்கமாக உளறுகிறார். அதை முட்டாள்தனமென்று பதிவதற்கு கூட இங்கே ஊடகங்களுக்கு தைரியமில்லை. இன்னும் அந்தக் காலத்தில் புஷ்பக் விமானம், அணுகுண்டு, தொலைக்காட்சி அனைத்தும் இருந்ததென மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும் – தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்ஸும் நாடெங்கும் பரப்பி வருகின்றனர்.

21-ம் நூற்றாண்டிலேயே இதுதான் நிலையென்றால்18 – 19-ம் நூற்றாண்டின் சூழல் இன்னும் துயரமானது. உலகம் தோன்றிய வரலாற்றுக்கான முன்னுரையை எழுதிய கலீலியோ, மனிதகுலம் தோன்றி வந்த வரலாற்றை கண்டுபிடித்த டார்வின் இன்னபிற சாதனையாளர்களெல்லாம் இத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்டே நாம் பெருமைப்படும் அரிய கண்டுபிடிப்புகளை தேடிப்பிடித்தனர். அவைதான் இன்றைய வாழ்க்கையின் வசதிகளுக்கு அடிப்படை.

அந்த வசதிகளை இடையறாது அனுபவித்தாலும் அறிவியலை தூற்றுவதில் மதவாதிகள் சலிப்பதில்லை. பாமரர்களுக்கு அறிவியல் போய்ச் சேர்ந்து விட்டால் உலகெங்கிலும் உள்ள மதங்களின் புனிதச் சந்தை ஒரே நாளில் மூடப்பட்டுவிடும்.

அறிவியலை நேரடியாக தடை செய்வது மதங்களென்றாலும், அறிவியலின் அறிவார்ந்த கண்ணோட்டமும், சமூகப் பயன்பாடும் மக்களுக்கு போய்ச் சேரக்கூடாது என்பதில் முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் உறுதியாக இருக்கின்றனர். மக்களை கண்காணிப்பதோ, குண்டு போட்டு அழிப்பதோ இல்லை மெல்லக் கொல்லும் வாழ்வியல் பிரச்சினைகளோ அனைத்திலும் கூட அறிவியலை அவர்கள் கேடாக பயன்படுத்துகிறார்கள்.

நிகழ்காலத்தில் மதங்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடும் கருத்தியல் களத்தில் மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை எதிர்த்து அவர்களது இணைய தளங்களை முடக்கி போடும் நடைமுறை களத்திலும் அறிவியல்தான் மக்களின் ஆயுதம். அத்தகைய உற்சாகத்தை இங்கே தொகுப்பட்டிருக்கும் கட்டுரைகள் தருமென்று நம்புகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
செப், 2015

இதழில் இடம் பெற்றுள்ள தலைப்புகள்

1. துருக்கி அரசை அச்சுறுத்தும் இணைய போராளிகள்

2. அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!

3. உடல் நாற்றத்தைப் போற்றுங்கள்!

4. கண்காணிக்கப்படுவதால் உங்களுக்கு என்ன இழப்பு?

5. பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோவிந்தா, கோவிந்தா!

6. கடவுளை நொறுக்கிய துகள்!

7. அமெரிக்கா : சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள்!

8. மைக்ரோசாஃப்டை சுதந்திர மென்பொருள் இயக்கம் வீழ்த்துமா?

9. புராணங்கள், அறிவியல், சமூகம்

10. டார்வின் : உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஓர் அறிமுகம்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________