privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இந்திய அரசியலின் இழிநிலை : ஆ.விகடனில் தோழர் மருதையன் !

இந்திய அரசியலின் இழிநிலை : ஆ.விகடனில் தோழர் மருதையன் !

-

னந்த விகடனுக்காக ம.க.இ.க பொதுச்செயலாளர் தோழர் மருதையனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் இது.  உரையாடலின் போது நாங்கள் செய்த ஒலிப்பதிவிலிருந்து அதன் சுருக்கப்படாத முழுமையான வடிவத்தை இங்கு வெளியிடுகிறோம். இதில் இன்றைய இந்திய அரசியலின் உண்மை முகம், ம.க.இ.கவின் தேர்தல் புறக்கணிப்பு, மாற்று திட்டம், திராவிட அரசியலின் சீரழிவு, ஈழப்பிரச்சினையின் தற்போதைய நிலை,  ரசிய-சீன பின்னடைவு,  நேபாள மாவோயிஸ்டுகளின் வெற்றி… அனைத்தும் ஒரு பறவைப் பார்வையில் சுருக்கமாக இடம் பெறுகின்றன. தேர்தல் புறக்கணிப்பு குறித்த எமது அரசியல் நிலைப்பாட்டை இந்த நேர்காணல் எளிமையாக எடுத்துரைக்கிறது. வரும் நாட்களில் இது குறித்த விரிவான கட்டுரைகளை வெளியிடுவதற்கு இந்த நேர்காணல் ஒரு முன்னுரையாக இருக்கும்.
நட்புடன்
வினவு

ஓட்டுக்கட்சிகளை மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?

”ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால், அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை. 1950&லிருந்து இன்றுவரை இந்த தேர்தல் அரசியலில் மக்கள் பங்கேற்று வருவதால் ‘வாக்குச்சீட்டு அரசியலில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று யாரும் சொல்ல முடியாது. ஒட்டுப்போடுகிற மக்களிடம் சென்று ‘தேர்தலில் ஓட்டுப்போடுவதால் என்ன நடக்கும்?’ என்று கேட்டால், ‘எதுவும் நடக்காது’ என்று மிகத் தெளிவாக பதில் சொல்வார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சாலைவசதி, குடி தண்ணீர் என தேர்தல் அரசியல் மூலம் எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து வைத்திருக்கிறார்கள். பழநி கோயிலுக்குப் போகும் பக்தனுக்குக் கூட ‘முருகனுக்கு மொட்டைப்போட்டா ஏதாவது நல்லது நடக்கும்’ என்று நம்பிக்கை இருக்கிறது. ஓட்டுப் போடுகிறவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கூட கிடையாது.

இருந்தாலும் ஓட்டுப்போடுகிறார்கள் என்றால், அது வேறு வழியில்லாத கையறு நிலை. இரண்டாவது இது ஒரு ஆஸ்வாசம். கருணாநிதி மாற்றி, ஜெயலலிதா. அந்தம்மாவை மாற்றி கருணாநிதி என்று மக்கள் தங்களின் கோபத்தை தணித்துக்கொள்வதற்கான வாய்ப்பு. மூன்றாவது வாக்காளர்களில் கணிசமான பிரிவினர் ஊழல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஓட்டு வாங்கிட்டுப் போறவன் எப்படியும் எதையும் செய்ய மாட்டான்னு தெரியும். அதனால் உடனடியா ‘இப்ப என்ன தர்ற?’ என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அண்ணாச்சிக் கடையில் சோப்பு, ஷாம்பு வாங்கும் வாடிக்கையாளன் ‘என்ன ஆஃபர் இருக்கு?’ என்று கேட்பதுபோல ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் ஆஃபர் கேட்கும் அளவுக்கு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கீழ்மட்ட கிராமங்கள் வரை இந்த ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இந்தப் பணத்தை வாங்கி விநியோகிப்பவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. ‘அந்த ஊர்ல அவ்வளவு கொடுத்தீங்க, எங்களுக்கு மட்டும் இவ்வளவுதான் கொடுத்திருக்கீங்க’ என்று ‘உரிமை’யை போராடிப் பெறும் குழுக்களாக அவை மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த ஜனநாயகத்தை ‘இது இப்படித்தானே இருக்க முடியும்?’ என்று அதன் சகல சாக்கடைத்தனங்களோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். இது தேர்தலுக்கு மட்டுமில்லை. ‘போலீஸுன்னா அப்படித்தான் இருக்கும், கோர்ட்டுன்னா அப்படித்தான் இருக்கும்? வேறு எப்படி இருக்க முடியும்?’ என்பதுவரைக்கும் நீள்கிறது. வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது. எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும். அதுதான் தீர்வு. அது வரைக்கும் நம் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே… அதனால் இதற்கு ஒரு மாற்று கிடையாது என்று சிந்திக்க வேண்டியது இல்லை. ஓட்டுப்போடுவது என்ற நடவடிக்கை 1950&களில் நம்பிக்கையோடு ஆரம்பித்தது. இன்று அது ஒரு கொடுக்கல்&வாங்கள் வியாபாரமாக மாறிவிட்ட சூழலில் அவநம்பிக்கையின் எல்லையில் நின்றுகொண்டுதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ‘இருந்தாலும் போடுறாங்கல்ல’ என்பது இந்த அமைப்பு முறையை நியாயப்படுத்துவதற்கும், இதனால் ஆதாயம் அடைபவர்களும் சொல்கிற ஒரு வாதம், அவ்வளவுதான்.

வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று.  கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை, பேச்சுரிமை என மற்ற உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

சரி, அப்படியானால் என்னதான் மாற்று?

” ‘தேர்தலே கூடாது என்கிறீர்களா, ஜனநாயகமே கூடாது என்கிறீர்களா, சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறீர்களா?’ என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. தேர்தலே தப்பு என்று சொல்லவில்லை. இது ஒரு போலி ஜனநாயகம் என்கிறோம். ஓட்டுப்போடும் உரிமை இருப்பதினால் மட்டுமே இது ஜனநாயக நாடாகிவிடாது. வாக்குரிமை என்பது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. நம் நாட்டில் மக்கள் ஓட்டுரிமையைத் தவிர வேறு எந்த உரிமையையும் கேட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை தருவதும் இல்லை, விரும்புவதும் இல்லை. கல்வி, வேலை, உணவு, விவசாய விளை பொருளுக்கான விலை என இவை எல்லாம் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். பேச்சுரிமைக் கூட அடிப்படை உரிமைதான். இந்த உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?

வேறு ஒரு உதாரணத்தின் வழிக்கூட இதை பேசலாம். இப்போது ஈழப் பிரச்னையில் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் மக்கள், அந்த ஒடுக்குமுறையின் கீழ் வாழ சம்மதிக்கவில்லை. ராஜபக்ஷே என்ன சொல்கிறார்? ‘பெரும்பான்மை தமிழர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள், ஈழம் கேட்பவர்கள் சிறுபான்மையினர்’ என்கிறார். இப்போது இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான சிறந்த ஜனநாயக வழி என்ன? தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தமிழர்கள் இலங்கையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்களா, தனித்திருக்க விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த கருத்துரிமையின் மீது குண்டு வீசப்படுகிறது. இதை ஆதரிப்பவர்கள்தான், சுப்பிரமணியன் சாமியின் மீது முட்டை வீசியதை கருத்துரிமையின் மீதான தாக்குதல் என்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்த விஷயம், வாக்குரிமைதான் ஜனநாயகம் என்ற சித்திரம் ஒரு மோசடி. அது பல ஜனநாயக உரிமைகளில் ஒன்று. மற்ற ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வாக்குரிமை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் எந்த பயனும் இல்லை. அது ஈராக்கில் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமை மாதிரி. ஜனநாயகம் பற்றிய இந்த புரிதலின்மையுடன் மக்கள் வைக்கப்பட்டிருப்பது அவர்கள் இந்த மோசடிக்கு இரைவாதற்கு ஒரு முக்கியமான காரணம்.

இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும். ம.க.இ.க&வைப் பொருத்தவரைக்கும் ‘புதிய ஜனநாயகம்’ என்று ஒரு மாற்றை சொல்கிறோம். அதில் தேர்தல் உண்டு. ஆனால் அந்த தேர்தல் இப்படி ‘வாக்காள பெருமக்களே’ என்று அழைக்கிற தேர்தலாக இருக்காது. டாடாவையும், அவரால் துப்பாக்கி சூடுபெற்ற சிங்கூர் விவசாயியையும் சமப்படுத்தி வாக்காளப் பெருமக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் மோசடியை அது செய்யாது. அது, விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்கங்கள், சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும். அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும், தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அதற்குள்ளே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்கள் போடும் சட்டங்களை தாங்களே அமுல்படுத்தும் அதிகாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். accountable and answerable to the people and representative.  கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக, அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு தொழிற்சங்க தேர்தலைப்போல அது எளிமையானதாக இருக்கும். செயலாளர் சரியில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து எடுத்துவிடலாம். இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. இந்த உத்தரவாதங்கள் இருக்கும்போதுதான் ஜனநாயகம் என்பது உண்மையிலேயே இயங்கும். உண்மையிலேயே அது பெரும்பான்மை மக்களின் நலனுக்கானதாக இருக்கும். அப்படி ஒரு மாற்றைதான் நாங்கள் முன் வைக்கிறோம். அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும், சீனாவிலும் அமுலில் இருந்தது.

சோவியத் யூனியன்தான் உடைந்துவிட்டதே, சீனாவிலும் இப்போது முதலாளித்துவ ஆட்சிதானே..?

அப்படிப் பார்த்தா கடந்த 300, 400 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் ஜனநாயகம் வெற்றியடைந்ததாக சொல்ல முடியுமா..? ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு மிகச் சாதாரண விஷயம். பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒரு புதிய மக்கள் அரசை உருவாக்குவதற்கு நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும். அது மோடி மஸ்தான் வித்தை கிடையாது. ‘அது தோற்றுவிட்டதே’ என்பது அது தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை செய்ய வேண்டும். ‘அதான் தோத்துடுச்சே, தோத்துடுச்சே’ன்னா நேபாளத்தில் எப்படி வென்றது?

நேபாளத்திலும் அவர்கள் தேர்தல் பாதைக்குதானே வந்திருக்காங்க?

”தேர்தல் பாதைதான். ஆனால் ஒரு புரட்சிக்குப் பிறகு முடியாட்சியை அகற்றி வந்த குடியாட்சி. ஒரு தீவிரமான மக்கள் போராட்டத்துக்குப் பிறகு வந்த குடியாட்சி. இதற்கு அடுத்ததா அடுத்தக் கட்டத்துக்குப் போகனும். நம்ம நாட்டுல இருக்குற பாராளுமன்றம் மக்கள் போராட்டத்தினால் வந்தது அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக வெள்ளைக்காரனால் போடப்பட்ட எலும்புத்துண்டு. நம்மை நிறுவனமயப் படுத்துவதற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு. அதனுடைய உச்சத்தை இன்று எட்டிவிட்டது. அன்று பெரிய முதலாளிகளும், செல்வந்தர்களும் அந்த சபையை அலங்கரித்தார்கள். 60 ஆண்டுகள் கடந்து ஒரு சுற்று வந்த பிறகு இன்றைக்கும் கோடீஸ்வரர்கள்தான் அந்த சபையை அலங்கரிக்கிறார்கள். இந்த ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதற்கு இதெல்லாம்தான் ஆதாரம்.”

நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது?

ஊழல் மட்டுமே பிரச்னை என்று சொல்ல முடியுமா..?

”ஊழல் மட்டுமல்ல. உண்மையான மக்கள் அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் மையமான பிரச்னை. ஊழல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு. ‘ஊழல் மட்டுமே பிரச்னை. ஆகையால் நல்லவர்களைத் தேர்தெடுங்கள்’ என்றுதான் அதை நியாயப்படுத்துகிறவர்கள் சொல்கிறார்கள். நல்லவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? நான் ரொம்ப எதார்த்தமா கேட்கிறேன். ஒரு கட்சியில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும்? ‘உன் சாதி என்ன, நீ எவ்வளவு செலவு செய்வே?’ இந்த ரெண்டு கேள்விகள்தானே இன்னைக்கு டிக்கெட் கிடைக்க அடிப்படையா இருக்கு? கட்சியிலேர்ந்து சுயேச்சை வரைக்கும் இதுதான் தீர்மானிக்குது. நீ நல்லவனா, கெட்டவனா என்ற கேள்வியா… அது இல்லை. அப்புறம் எப்படி நல்லவனை தேர்ந்தெடுப்பது? அதனால் ஊழல்தான் பிரச்னை என்பது அடிப்படைப் பிரச்னையிலிருந்து திசை திருப்பக்கூடிய ஒரு வாதம். இந்த அமைப்பை சீர்திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற வாதம்.”

நேபாளத்தில் வந்திருப்பதும் முதலாளித்துவ ஆட்சிதானே..?

”அங்கு முடியாட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் வந்திருக்கிறது. இன்னும் முதலாளித்துவம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை என்றாலும் கீழிருந்து மேல் நோக்கி வந்திருக்கும் புரட்சி அது. ஆனால் இந்தியாவில் கீழிருந்து மேல் வரை எல்லா வகையான முதலாளித்துவக் கூறுகளையும் வைத்துக்கொண்டே ஜனநாயகத்தை ஒரு குல்லா மாதிரி போட்டார்கள். இது ஒரு கோமாளித் தொப்பி மாதிரி. ஜனநாயகமும் இருக்குது, தீண்டாமையும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, சாதியும் இருக்குது. ஜனநாயகமும் இருக்குது, ஊர் கட்டுப்பாடும் இருக்குது. கோவை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு முடி திருத்தும் தொழிலாளி இன்னைக்கும்  ஊர் உத்தரவு வாங்காமல் கடை வெச்சிட முடியுமா..?”

 

தேர்தல் அரசியலை நீங்க எதிர்க்குறீங்க. ஆனால் தேர்தல் அரசியலில் வந்த கருணாநிதியே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்என்று சட்டம் கொண்டு வந்தார். ஆனால் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபின்னர் அங்குள்ள கோயில்களில் தென்னிந்திய பார்ப்பனர்களை பூசாரிகளாக தொடர்ந்து வைத்துக்கொள்வதா, நேபாளப் பார்ப்பனர்களை நியமிப்பதா?என்றுதான் சர்ச்சை வந்தது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இதையெல்லாம் தாண்டி அவர்கள் போக வேண்டும். அதுதான் அடுத்த கட்டமாகவும் இருக்கலாம். ‘கருணாநிதியே’ என்றால், இங்கு நமக்கு திராவிட இயக்கம், பெரியார், சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் என்று ஒரு மரபு இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நேபாளத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளினால் கீழ்மட்ட அளவில் சாதி ஒழிக்கப்பட்டிருக்கலாம். கருத்தியல் தளத்தில் சாதி, மதம் ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்றால் என்னால் உடனே சொல்ல முடியவில்லை. அதற்கு ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படலாம். அதேநேரம் இங்கே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம்தான் போடலாம். ஆனால் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் கோயிலுக்குள் போக முடியாது என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்.”

நேபாளத்தில் சாதியக் கட்டுமானம் எப்படி இருக்கிறது?

”கிராமப்புறங்களைப் பொருத்தவரை ஓரளவுக்குத் தகர்க்கப்பட்டிருக்கிறது. முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருந்தால் நேபாள காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கக்கூடாது. இப்போது என்ன நிலைமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு என்னிடம் விவரங்கள் இல்லை.”

ஈழப் பிரச்னையில் இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழப் பிரச்னை எப்படி எதிரொலிக்கும் என நினைக்கிறீர்கள்?

”ஈழப் பிரச்னை சம்பிராதாயமான முறையில் பேசப்படும். ‘ஆரம்பத்துலேர்ந்து குரல் கொடுத்தேன். முதல் தீர்மானம் நான்தான் போட்டேன்’ என்று கருணாநிதி சொல்வார். ‘போர் என்றால் அப்பாவிகளும் சாகத்தான் செய்வார்கள்’ என்று சொன்ன அம்மையார் பிறகு உண்ணாவிரதம் நடத்தினார். ஈழப் பிரச்னையை இதைவிட யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள். இவர்களும் மிச்சமிருக்கும் அணிகளும் ஈழப் பிரச்னையை ஒரு ஊறுகாய்போல் பயன்படுத்துவார்கள். இதற்கு மேல் இதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னை என்பது சிங்கள பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற நிலையைத் தாண்டி இந்திய அரசு, சிங்கள அடக்குமுறையின் அங்கமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்தியா ஈழத் தமிழர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது என்பது மிக நேரடியாக வெளிவந்துவிட்டது. இந்திய நாட்டின் மக்கள் என்ற அடிப்படையில் நாம் கொடுக்கின்ற வரிப்பணமும், வழங்கியிருக்கிற அதிகாரமும் தமிழ் மக்களுக்கு எதிராக, ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இவர்கள் அத்தனை பேரும் உடந்தையாக இருக்கிறார்கள். இதைப்பற்றி ஒரு வாக்காளன் கேள்வி கேட்டால் அவனுக்குத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இன்னொன்று, ஏதோ காங்கிரஸ் அரசுதான் ஈழத் தமிழனுக்கு துரோகம் இழைக்கிறது என்பதில்லை. இதற்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் யாழ் கோட்டையை புலிகள் சுற்றி வளைத்தபோது அதற்குள் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள ராணுவத்தினர் சிக்கியிருந்தனர். அப்போது ‘உடனே முற்றுகையை விலக்கிகொள்ள வேண்டும். இல்லை என்றால் இந்திய விமானங்கள் வரும்’ என்று வாஜ்பேயி அரசு மிரட்டியது. முற்றுகை விலக்கப்பட்டது. அதற்கு வைகோ முதல் நெடுமாறன் வரைக்கும் அனைவரும் உடந்தை. ‘இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. அனுசரித்துப் போனால்தான் ஈழ விடுதலை சாத்தியம்’ என்ற கண்ணோட்டத்தில் இதை செய்தார்கள். ஆக இந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பேசுபொருளாக இருக்கும்பட்சத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவின்  தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக,  யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

ஈழப்போரில் இந்தியாவின் தலையீட்டுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார நலன்கள் பற்றி?

இந்தியாவில் இருக்கும் பெரும் தரகு முதலாளிகள் அத்தனை பேருக்கும் இலங்கை என்பது லாபமுள்ள சந்தை. டாடாவுக்கு அங்கே டீ எஸ்டேட் இருக்கிறது, மஹிந்திரா கார் கம்பெனிக்கும், டி.வி.எஸ்ஸுக்கு இலங்கை என்பது மிகப்பெரிய வாகன மார்க்கெட், அம்பானிக்கு வரிசையா பெட்ரோல் பங்க் இருக்குது, திரிகோணமலையில் ஓ.என்.ஜி.சி&க்கு எண்ணெய் கிணறுகள் இருக்குது, போர் நடந்துகொண்டிருக்கிற இந்த சூழலில் ஏர்டெல் மிட்டல் கடந்த மாதம் இலங்கை முழுவதற்குமான சேவையை அங்கு ஆரம்பித்திருக்கிறார். கடந்தமுறை பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய்விட்டு வந்த பின்னர் போர் நிறுத்தத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பாக, இலங்கையில் யுத்தத்தால் சீரழிந்தப் பகுதிகளை புணரமைக்க இந்தியா உதவும் என்று முந்திக்கொண்டு அறிவித்தார். நாளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் இதேபோன்று பெருமுதலாளிகளின் நலனுக்காகத்தான் பேசும். இதுதான் இந்திய ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.

இன்னொன்று ஈழ மக்களின் போராட்டத்தை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இதுவரைக்கும் இங்கு சொல்லப்படும் ஒரே ஒரு காரணம், ‘அவர்கள் நம் ரத்த உறவுகள்’ என்பது. இது ரொம்ப அபத்தமானது. எந்த ஒரு இனத்தையும், அந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை அந்த நாட்டு ஆட்சியின் கீழ் இருத்தி வைக்கக்கூடாது. இதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சேர்ந்திருப்பதா, பிரிந்துப் போவதா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குதான் உண்டு. இந்த நியாயம் காஷ்மீருக்கும் பொருந்தும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொருந்தும். இதை யாரும் பேசலை. தீவிரமான ஈழ ஆதரவாளர்கள் கூட, ‘இந்தியாவில் பிரச்னை இல்லை. அங்குதான் பிரச்னை’ என்கிறார்கள். என்ன அயோக்கியத்தனம் இது? காஷ்மீரில் இதுவரைக்கும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்திய ராணுவத்தின் பாதி பேர் அங்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இந்தியா ஏன் சிங்கள அரசை ஆதரிக்கிறது என்பதை ஈழ ஆதரவாளர்களும் கூட விளக்குவதில்லை. ‘ஏதோ முட்டாள்தனமா நடக்குது, சில அதிகாரிகள் இந்த மாதிரி பண்ணிட்டாங்க’ என்கிறார்கள். ‘ஜி.பார்த்தசாரதி இருந்தார். அவர் அருமையா பண்ணினார்’ என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ பார்த்தசாரதி ‘தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார்.

‘இந்தியாவின் தயவில்தான் ஈழத் தமிழன் உயிர்வாழ முடியும்’ என்பது ஒடுக்குபவனின் கருத்து மட்டுமல்ல, ஈழ ஆதரவாளர்களின் நிலையும் அதுதாவாகத்தான் இருக்கிறது. தமிழக மக்கள் மனங்களில் மனிதாபிமான அடிப்படையிலான இரக்க உணர்ச்சியைத் தாண்டி, ‘நீயும் தமிழன், நானும் தமிழன்’ என்ற உணர்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாக இதனுடைய நியாயம் விளக்கப்படவில்லை. அது பாரதூரமான அளவு அரசியல் பிரச்னையாகும் அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. அப்படி சொல்லப்படாதபோது நாம் அதில் அதிகமாக எதிர்பார்ப்பது கூடாது. தவிரவும் ஈழத்தை தனிநாடாக அங்கீகரிக்க இந்தியா முனையுமானால் இங்கு காஷ்மீருக்கும், வட கிழக்கு மாநிலங்களுக்கும் அதே தீர்வை கொடுக்க வேண்டியிருக்கும். பொதுவா ‘தமிழகம் முழுவதும் ஒரு எழுட்சி நிலவுகிறது’ என்று சொல்லலாம். அது யதார்த்தமா இருக்கனும். நம்ம மனசுல ஆசைப்படுறதுனால அது எழுட்சியா ஆகிடாது.

இந்த தேர்தலில் எவை பேசப்பட வேண்டிய பிரச்னைகளாக இருக்க வேண்டும்?

எவை பேசப்பட வேண்டியவையோ அவைப்பற்றி இவர்கள் யாரும் பேசப்போவதில்லை. கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி, இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா, இது கொண்டு வந்து சேர்த்த நன்மை, தீமைகள் என்ன என்பதுபற்றி வலது, இடது கம்யூனிஸ்டுகள் உள்பட எந்தக் கட்சியும் பேசாது. இந்த கொள்கைகள்தான் நாட்டின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களா இருந்திருக்கு. இந்தக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் இந்தியா முழுவதும் பல மக்கள் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இதைப்பற்றி யாரும் பேசப்போவதில்லை. நகர்மயமாதலில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தியக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 50:50 என்ற விகிதத்திற்கு தமிழ்நாட்டின் நகர&கிராம விகிதாச்சாரம் வந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக விவசாயம் சுருங்கிவிட்டது. அதனால்தான் வட மாநிலங்களைப்போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு இல்லை. இந்தப் பிரச்னைப்பற்றி பேசப்போவதில்லை. இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தொழிற்வளர்ச்சியின் காரணமாக சென்னையை சுற்றி வந்திருக்கும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் எவற்றிலும் தொழிற்சங்க உரிமை கிடையாது. தொழிற்சங்கம் ஆரம்பித்த குற்றத்துக்காக 250 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலை நேரம் என்பது இல்லாமல் போய்விட்டது. இந்தப் பிரச்னைகள் பற்றி யாரும் பேசப்போவதில்லை. அமெரிக்காவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதை எதிர்த்துக் கேட்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எதிர்ப்பு என்ற உணர்வே தெரியாத அடிமைகளைப்போல பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதைப்பற்றியும் பேசப்போவதில்லை.

எது பேசப்படும் என்றால், ஜெயலலிதாவுக்கு ஒரு பாய்ண்ட் போதும். குடும்ப ஆட்சி. அந்தம்மாவுக்கு அது போதும். அது சட்டமன்ற தேர்தலா, நாடாளுமன்ற தேர்தலா, உள்ளாட்சித் தேர்தலா… அதெல்லாம் தேவையில்லை. அத்தோட சேர்த்து ‘ஹைகோர்ட்ல அடிக்கிறாங்க, லா காலேஜ்ல அடிக்கிறாங்க, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, தீவிரவாத சக்திகள் தலைதூக்கி விட்டன’ இவ்வளவுதான் அந்தம்மாவுக்கு பாய்ண்ட். கலைஞரைப் பொருத்தவரைக்கும் நல்லாட்சி, சாதனைகள். அதைத்தவிர தளபதி அழகிரி இருப்பதால் அவர்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கலாம்.

கொள்கை என்பது இப்போது கிடையாது. பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது.

கொள்கை என்பது இப்போது கிடையாது. இது நாங்கள் சொல்கிற விமர்சனம் இல்லை. அவர்களே சொல்வதுதான். பா.ம.க&வுக்கு ஒரு கொள்கை, கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கொள்கை. ‘இப்படி ஆளுக்கு ஒரு கொள்கை வெச்சுக்கிட்டு அ.தி.மு.க&வோடப் போய் சேர்றீங்களே?’ன்னு கேட்டா, ‘கொள்கைக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை’ன்னு பதில் வருது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக்கும் தொடர்பில்லை. ஆனால் இவர்களுக்குள் ஆழமான வேறொரு கொள்கை ஒற்றுமை இருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளில் கம்யூனிஸ்டுகள் உள்பட எல்லோருக்கும் ரொம்ப தீர்க்கமான ஒற்றுமை இருக்கிறது. அதுதான் இவர்களை ஒன்றிணைந்திருக்கிறது. இவர்களுக்கு இப்போது உள்ள பிரச்னை எல்லாம் தங்களுடைய வேற்றுமையை மக்களிடம் நிரூபிப்பதுதான். ‘நாங்க வேற’ன்னு காட்டனும். ஹமாம், லக்ஸ், ரெக்சோனா சோப்பு வியாபாரிகள் எப்படி தங்களது சோப்பு மற்றதைவிட வேறுபட்டது என்று காட்டிக்கொள்கிறார்களோ அதுபோல ‘நாங்க வேற கட்சி’ என்று நிரூபிப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு வேற்றுமை தேவைப்படுகிறது. அதன் வழியா அதிகாரத்தை சுவைப்பதற்கு. மற்றபடி கொள்கை வேறுபாடு என்பது இல்லை. இந்த வேறுபாடு பொய்யாக இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலின் விவாதப் பொருள்களும் பொய்யாகவே இருக்கின்றன. நம்ம நாட்டுல எதுடா எலெக்ஷன் பிரச்னைன்னா, ராஜீவ்காந்தி செத்துப்போனா அதுதான் பிரச்னை, ஜெயலலிதா முடியைப் பிடிச்சு இழுத்தா அதுதான் அந்த எலெக்ஷன் பிரச்னை. கருணாநிதி ‘ஐயோ கொல்றாங்க’ன்னு கத்துனா அந்த தேர்தலின் பிரதான பிரச்னை அதுதான். காங்கிரஸ் மீது இப்போது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு தேர்தலில் பிரதிபலிக்கும் என்றாலும் அது ரொம்ப வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும். ஜெயலலிதா ரொம்பத் தாமதமா ஈழப் பிரச்னையைப்பத்தி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களும் ஒரு எல்லைக்கு மேல் பேசமாட்டாங்க. சரியா சொல்லனும்னா இதுக்கு மேல பேசத் தேவையில்லைன்னு நினைக்கிறாங்க.

இறையாண்மை என்ற சொல் இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. கைதுகள் நடக்கின்றன. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

”இறையாண்மை என்ற சொல்லுக்கு அர்த்தமாவது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை. அரசுகளுக்கு இடையேயான உறவைப் பொருத்தவரை ஒரு நாடு தன்னைத்தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை அல்லது அதிகாரம்தான் இறையாண்மை என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவோட இறையாண்மையை ஏற்கெனவே வித்தாச்சு. அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய இறையாண்மையை அமெரிக்காவிடம் விற்ற மன்மோகன் சிங்தான் இன்று இந்தியாவின் பிரதமர். அவர் படத்தைக் கொழுத்தினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு கருத்தைப் பேசக்கூட உரிமையில்லாத ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது, வாக்குரிமை இருக்கிறது என்று சொல்வதைப்போல கேலிக்கூத்து வேறெதுவும் இல்லை. இலங்கையில்தான் பிரச்னை என்றில்லை. இங்கேயே சகல அடக்குமுறைகளும் நடக்குகின்றன. துப்பாக்கிகள் தேவைப்படவில்லை, அவ்வளவுதான்.

ஜனநாயகத்தின் பொய்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்கலாம். உயர்நீதிமன்றம் என்பது என்ன? அரசியல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு கட்டடம். அங்கு ஒரு போலீஸ் அத்துமீறல் நடக்கிறது. வழக்கறிஞர்கள் தாக்கப்படுகிறார்கள். போலீஸ் அடிச்சா வாங்கிட்டு மட்டும் போயிருந்தாங்கன்னா அவங்க உண்மையான ஜனநாயகத்துக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள். திருப்பி அடிச்சதுதான் பிரச்னை. ‘இப்படி கல்லால எல்லாம் அடிக்கக்கூடாது. எங்கக்கிட்ட ஒரு பெட்டிஷன் போடுங்க. நாங்க ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துறோம்’னு சொல்ற ஜட்ஜே உள்ளே உட்கார்ந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட், ‘நீங்க கோர்ட்டுக்குப் போங்க, நாங்க பார்த்துக்குறோம்’ என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லாததினால்தான் வக்கீல்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது படிக்காத பாமர மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும். படித்த வழக்கறிஞர்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவே இருக்கும் நீதிபதிகள் அத்தனை பேரும் இன்று ரோட்டில் நிற்கிறார்கள். காரணம், அவர்கள் யாருக்கும் நடப்பில் உள்ள இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.”

திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம்.

திராவிடக் கட்சிகள்பற்றிய உங்கள் பார்வை என்ன?

”திராவிட இயக்கத்துக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அதை மறுக்க முடியாது. இதை நான் பெரியார் என்ற பார்வையிலிருந்து சொல்கிறேன். அதற்குப் பிறகு திராவிட இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. அவர்கள் அறிவித்துக்கொண்ட கொள்கைகளான சாதி ஒழிப்பு முக்கியமானது. ‘திராவிடம்’ என்பதெல்லாம் பொதுவான வார்த்தை. அதை வைத்துக்கொண்டு அவர்கள் எக்காலத்திலும் ‘நாங்கள் கம்யூனிஸ்ட்’ என்று உரிமை கொண்டாட முடியாது. பெரியாரைப் பொருத்தவரைக்கூட கருத்தியல் ரீதியா கம்யூனிஸத்தின் மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார்.

சாதி ஒழிப்பு என்ற நிலையைத் தாண்டி அவர்கள் ஏன் போகலை என்றால் இந்த நிறுவனத்துக்குள் அவர்கள் வந்தது ஒரு முக்கியக் காரணம். அப்படி இந்த நிறுவனத்துக்குள் திராவிட இயக்கம் வரும்போது பார்ப்பனர் அல்லாத உயர்சாதி, உயர் வர்க்கத்தின் பிரதிநிதியாக மாறுகிறது. அவர்களுடைய நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உடனேயே பார்ப்பனர்கள் உடனான சமரசம் தொடங்குகிறது. பிறகு வட இந்திய தரகு முதலாளிகளும் தேவைப்படுகிறார்கள். திராவிட இயக்கம் என்பது அண்ணா காலத்திலேயே முடிந்துபோய்விட்டது. அதை அறிவிக்க வந்தவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின், வருகையும், வெற்றியும் திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி குறித்த அதிகாரப் பூர்வ பிரகடனம். திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து மறுக்கிறார்கள். காங்கிரஸ் தேசியவாதிகள், பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கத்தின் பாத்திரத்தை மறுப்பது என்பது வேறு. நாங்கள் மறுப்பது என்பது வேறு.”

ம.க.இ.க. மற்ற இயக்கங்களை, அமைப்புகளை, கட்சிகளை யாரையுமே ஏற்றுக்கொள்வதில்லை என்ற விமர்சனம் பற்றி?

”ஒருத்தர் இன்னொருவரை நிராகரிப்பதால்தான் இத்தனை கட்சிகளே இருக்கின்றன. ம.க.இ.க. தெளிவாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்காக ஒரு இயக்கமாக இருக்கிறது. தனது கொள்கைகளின் அடிப்படையில் அது மற்றவர்களை நிராகரிக்கிறது. நான் ஒரு தனிக்கட்சி வைத்திருப்பதே மற்றவர்களை நிராகரிக்கத்தான் என்றால், ஒவ்வொரு கட்சியும் மற்றவர்களை நிராகரிக்கிறது என்றுதான் போகும். எங்கள் மீது பொதுவாக சொல்லப்படுவது ‘எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பது. ‘நீங்க சொல்லியிருக்கும் விமர்சனம் தவறு’ என்று சொல்லலாமேத் தவிர, ‘நீங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறீர்கள்’ என்பதையே ஒரு விமர்சனமாக வைப்பது எப்படி சரியாகும்?  ம.க.இ.க. ஒத்தக் கருத்துடன் இருக்கக்கூடிய அமைப்புகளுடன் இணைந்து அவ்வப்போது போராடுகிறது. ஆனால் ஒவ்வொரு பிரச்னைக்கும் 40, 50 அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவது, அது அத்துடன் காணாமல் போய்விடுவது என்ற கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அத்தகைய கூட்டமைப்புகளில் நாங்கள் இணைவதில்லை. அதுவும் கூட இப்படி கருதுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”

  1. ம.க.இ.க பற்றி எதுவும் தெரியாமல் ஏதோ குருட்டாம்போக்கில் இந்த வலைப்பக்கத்திற்கு வந்து இப்போது தொடர்ந்து படித்து வரும் எனக்கு திரு. மருதையனின் நேர்காணல் பிடித்திருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் பல இந்த இயக்கதினால் பேசப் படுவது எனக்கு ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கனாகிய எனக்கு அரசியல் அமைப்பில் இந்த சுருதியில் பேசும் ஒரு அமைப்பும் இருப்பது தெம்பு அளிக்கிறது.

  2. நீங்கள் ஏன் நேபாள மாவோயிஸ்டுகளை போல தேர்தலில் நிற்க்ககூடாது?

  3. மாற்றூ பாதைக்கு, பல சிக்கல்கள் இருக்கிறது. அதுவும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளீல். பல ரூபங்களீல் தப்பிக்க வழியின்றீ, பிரச்சினைகளால் சூழப்பட்டிருக்கிறோம். மொழி, சாதி,மதம், பொருளாதாரம்,இனம்,முதாளீத்துவம், வெகுசன ஊடகம், கார்பரேட்,அரசு,அரசு நிறூவனங்கள்……..
    திரு.மருதையன் சொல்வதுபோல், Lumpen Democracy எதிர்த்து ஒரு நெடிய போராட்டமாகும்.
    ஈழப்பிர‌ச்சினையில், நீங்க‌ள் புதிய‌ கோணத்தை முன் வைக்கிறீர்க‌ள்(Indian corporate investments in srilanka). இது முக்கியமாக எனக்குப்படுகிறது. இதை பற்றீ விரிவாக ஆராயவேண்டும். மேலும், இப்பிரச்சினையில், இங்கு, எந்தவொரு ஊடகமும் LTTE விமர்சிக்க தயங்குகிறார்கள் அல்லது அஞ்சுகிறார்கள் ( துன்பியல் நிகழ்வை தவிர). இதனால்தான், மீண்டும் மீண்டும் தவறூகளீ செய்கிறார்கள். மாற்றூக்கருத்துக்கொண்டவர்களீ ஒழித்துக்கட்டியது, குழந்தைப்போராளீகள் இப்படி பல தவறூகள் வரலாற்றூ நெடுகிலும் உண்டு. உலக அளவில், மிகப்பெரிய வெறூப்பை சம்பாதித்துவிட்டார்கள். இதற்கு இன்னொரு சமீப நிகழ்ச்சி, மார்க்சிய சிந்த்தாத்தின் அடிப்படையில் இயங்கும் WORLD SOCIALIST FORUM இயக்கத்தவர்கள் ஈழப்போரை நிறூத்த அய்ரோப்பாவில் பிப்ரவரி 4, 7 இல் போராட்டம் நடத்தியபொழுது, LTTE வன்முறீயில் ஈடுபட்டு, WORLD SOCIALIST FORUM இயக்கத்தவர்களீ போராட்டம் செய்யவிடாமல் தடுத்தது. பார்க்க ( http://www.wsws.org/articles/2009/mar2009/ltte-m09.shtmல்) அதாவது, ஈழத்தமிழர்களூக்கு நாங்கள்தான் (LTTE) ” ரட்சகர்களாக” பாவித்துக்கொண்டது.

    அத‌னால்தான், ஈழத்த‌மிழர்க‌ளூக்கு ஆத‌ர‌வாக‌ நாம் பேசும்போது, “நீங்க‌ள் LTTE ஆத‌ர‌வாளரா?” என்ற Negative Question எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.மறூபுறம், LTTE விம‌ர்சித்தால், ” நீங்க‌ள் த‌மிழின‌ துரோகியா?” என்ற இன்னொரு Negative Question எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக‌ சாத‌ர‌ண அப்பாவி ஈழ மக்க‌ள் சிங்க‌ள பேரினவாத‌த்திற்கும், LTTE ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கும் இடையில் சிக்கியிருக்கிறார்க‌ள். இதற்க்கிடையில், தமிழ் நாட்டு அரசியல்வாதிகள்,மற்றூம் திரைப்படம் சம்பந்தபட்டவர்களூக்கு இப்பிரச்சினை ஒரு பொழுதுபோக்கு விளாயாட்டாக ஆகிவிட்டது. இன்னொரு தமாஷ், சிலபேர், che guvera படம் போட்ட T shirt அணீந்து கொண்டு ஈழப்பிரச்சினையை உரக்க பேசுவது. இவர்களூக்கு ” CHE” வும் தெரியாது, ஈழப்பிரச்சினையும் தெரியாது( இவர்கள் ஏதாவது தமிழ்நாட்டு மக்கள் பிரச்சினையை பேசியிருக்கிறார்களா?). நீங்கள் சொல்லும் முக்கியமான கருத்தான “ஈழப்பிரச்சினையை தொப்புள் கொடி உறவாக பார்ப்பது” ( rhetoric dialogue) என்ற அபத்தத்தை ஒத்துக்கொள்ளூகிறேன். மற்றூம்,உங்களீன் திராவிட கட்சிகளீன் பார்வை எனக்கு உடன்பாடு உண்டு.
    ஒரு ச‌ந்தேக‌ம், தேர்த‌ல் புர‌க்க‌ணீப்புக்கு, 49(0) ப‌ய‌ன் ப‌ற்றீ உங்க‌ள் க‌ருத்து என்ன‌?
    கொடுமை என்ன‌வெனில், இந்த‌ நிமிட‌ம் நான் இந்த‌ பின்னூட்ட‌த்தை எழுதிகொண்டிருக்கும் நேர‌த்தில், ஈழத்தில்,எவ்வ‌ளவு அப்பாவி ம‌க்கள்,குழந்தைகள்,வயோதிகர்கள், உயிர் இழந்து கொண்டிருப்பார்க‌ளோ?

  4. பேட்டி அருமை. விகடனில் நிறைய வெட்டியிருக்கிறார்கள்.

    வினவு தளத்தில் வரும் பதிவுகளை பிடிஎஃப் கோப்பாக மாற்றும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். தளத்தில் நிர்வாகி இதில் கவனம் செலுத்தலாம்

  5. entha paper etuthalum election news, indiya muzhuvathum ethu thaan nilai, ottu poruki naaikallin therthal kootani apatama santharpavaatham mellum mellum nalla therikirathu.

    ”ஓட்டரசியல் என்பது வேறு ஒரு மாற்று தெரியாத காரணத்தினால், அது பழக்கப்பட்டுப்போன காரணத்தினால் மக்களால் பின்பற்றி வரப்படும் ஒரு நடைமுறை.”

    makkalukku mattru arasiyalai katru kotuka vendum.
    intha therthalai purakanipom.

  6. Comrade,
    PALA has to take cognizance that Periyar has gone beyond the ‘abolition of caste’ i.e to fight for separate tamil nation. As India is a braminical framework, there are many decks which reinforce on the economical infrastructure. The nation state freedom for the enthnic nationalities from indian brahminical framework is the ultimate revolution india. The indian society, especially, tamil nadu agitated only for the issue of their ethnicity. The recent eelam issue is one such example. There is no clear cut class margin in tamil nadu and also in india. Because the class affinity is divided across by the caste affinity. Also in india, the communist forces are intruded by the brahminical facists, they never accept the caste based social structure, a reality, which marxism does not recognise. This is the reason how the brahmins easily intrude the communist forces. This at every stage denies the issue of brahminical facism.
    I raise the issue that in eelam genocide, the brahminical facists denies the recognition of tamil ethnic nationallity in india. India, a brahminical facist framework, does not want eelam because of the reason that in tamilnadu the ethnic agitation would come into fore. It is not the issue of imerialists brokers like TATA/AMBANI etc interest. Because india’s eelam stand is well before Free Trade Agree ment with Srilanka. It is only after 2000. But india’s eelam stand is well before this trade relationship atleast 25 years back.

    Read The Hindu ,march 23, 2009 page 16
    “China had opposed a motion in the United Nations Security Council for a discussion on the humanitarian crisis triggered by the war in the north on the ground that it was an internal matter of the island nation and the military operations had no effect on international peace and security; informed the UNSC not to interfere in Srilankan’s internal affairs; the UNSC was compelled to withdraw the motion on two occasions due to stern opposition from China.”
    the communist china is against the tamils who fight for their self-determination and supports srilankan genocide. It is the nature of a communist state. This is the communist autocracy. Also think of how china treated tibetian.

    PALA has failed to raise the issue of ethnic nationalist free determinism which had been suppressed by the indias braminical facist regime. Why PALA has taken the brokering capitalists as the front issue in eelem matter? It is a wrong approach. Ethnic nationalism of tamils in india is the issue in front. Think of Cho, Subramaniasawamy, Hindu Ram, Jayalalitha and why they are denying eelam.

    i have read an article in karunthinai.blogspot.com. it is the right approach.

    -question everything.
    yours
    karunchivappu.

  7. மிகத் தெளிவான முறையில் தோழர்.மருதையன் பேட்டி அமைந்துள்ளது.தேர்தல் காலக்கட்டத்தில் இப்படியொரு பேட்டியை வெளியிட ஆ.விகடன் எப்படி துணிந்தது.ஏன் ஓட்டு போட வேண்டும்?என்ற கேள்விக்கு மட்டுமல்ல மாற்று என்ன என்ற சாதாரண மனிதனின் சந்தேகத்திற்கும் ஓரளவு விளக்கமளித்து,மேலும் ஒரு தூண்டுதலை போட்டு வைத்திருக்கிறார்..ம.க.இ.க.வின் மாநிலச் செயலர்.மகிழ்ச்சியாக இருக்கிறது.

  8. மிக அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள் பாரதி தம்பி.

    ‘’இங்கே ரெண்டு அணிதான் இருக்கு. ஒன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரிகள் அணி, இன்னொன்னு துரோகிகள் அணி. ஜெயலலிதா வகையறா நேரடியாக எதிர்ப்பவர்கள். இந்தப் பக்கம் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு காட்டிக்கொடுத்து துரோகம் இழைப்பவர்கள்.’’

    மருதையனின் கருத்து நூறு சதவிதம் உண்மை.
    ஈழத்தமிழனின் சாவில் ஓட்டு வேட்டையாடும் பொறுக்கிகள் தான் இவ்விரு அணியினரும்.

  9. ஆனந்த விகடனில் இந்த பேட்டி வந்ததைக் கேள்விப்படும் பொது எனக்கும் நம்ப முடியாமல் தான் இருக்கிறது.

  10. னாடு முழுவதும் தேர்தல் ஜுரம் பரப்ப்பட்டு வரும் நிலையில் தோழர்.மருதையனின் விளக்கமான பேட்டி உணர்வற்ற நிலையில் உள்ள மக்களை தட்டி யெழுப்ப பயன்படும் ஆய்தமாகும். இதை ஜனனாயகவாதிகள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முன் உள்ள கடமையாகும்.ஓட்டு அரசியல் என்பது “வாராது வந்த மாமணி” என உள்ள நிலையை அடித்து நொறுக்காமல் நம்மால் ஒரு அடி கூட முன்னெடுக்க முடியாது.

  11. ‘ஜி.பார்த்தசாரதி இருந்தார். அவர் அருமையா பண்ணினார்’ என்று பழ.நெடுமாறன் சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ பார்த்தசாரதி ‘தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புலி ஆதரவு சக்திகளை ஒடுக்கனும்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கார்’

    நெடுமாறன் குறிப்பிட்ட ஜி.பார்த்தசாரதி நேரு, இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்தவர்.
    இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளை
    உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்.
    அவர் காலமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது மகன்
    அசோக் பார்த்தசாரதி மத்திய அரசில் செயலாளராக இருந்தார், பின்னர் ஜவகர்லால்
    நேரு பல்கலையில் பேராசிரியராக இருந்தார். இந்துவில் கட்டுரைகள் எழுதுகிறார். 80களிலிருந்து ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்து வரும் நெடுமாறன் ஜி.பார்த்தசாரதியை சந்திருக்க வாய்ப்புண்டு.

    இப்போது அவுட்லுக் உட்பட பலவற்றில்
    கட்டுரைகள் எழுதும் ஜி.பார்த்தசாரதி
    ஒரு அயலுறவு பணி முன்னாள் அதிகாரி.
    ஆகவே நெடுமாறன் கூறியது சரி.
    மருதையன் கூறியது தவறு.

  12. ‘அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும், சீனாவிலும் அமுலில் இருந்தது’

    அங்கு கட்சிதான் வேட்பாளர்களை
    நியமிக்கும். மக்கள் ஆதரவுடன் அவர்கள்
    பெரும் வெற்றி பெறும் ‘மக்களாட்சி’ அங்கு
    நடைமுறையில் இருந்தது. மருதையன்
    கூறுவது ஒற்றைக் கட்சி சர்வாதிகாரம்.
    அங்கு மக்களுக்காக கட்சி என்பதில்லாமல் கட்சிக்காக மக்கள், கட்சிக்காக அரசு என்று
    இருந்தது. கருத்துரிமையே இல்லாத நாட்டில்
    மக்கள் யாரை நீக்க கோர முடியும். எத்தனை
    முறை பொலிட்பீரோ உறுப்பினர்கள் ரஷ்யாவில் மக்கள் கோரியதன் பேரில்
    நீக்கப்பட்டார்கள். இம் என்றால் சிறைவாசம்,
    ஏனென்றால் வனவாசம் என்றுதானே அங்கு
    இருந்தது.

  13. ம.க.இ.க வின் பெரியாரிய கிரகணம்

    //இன்றைய சீனம், அண்டை நாட்டில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டும் காணமல் விட்டுவிட்டு, இலங்கைப் பேரினவாதத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் வக்காளத்து வாங்குகின்றதே? இலங்கையின் இனப்படுகொலைக்கு மூடுதிரை போடுகிறதே. இதன் பொருள் என்ன? அமெரிக்கக் கொடியை எரிப்பாய் போற்றி ம.க.இ.கவே சீனத்தின் கொடியை தீயிட்டுக் கொளுத்தத் தயாரா? இதோ தீக்குச்சி.//

    http://karunthinai.blogspot.com/2009/04/blog-post.html

  14. ஏதோ ஒரு பார்த்தசாரதி,
    ஏன்னா கீழே உள்ள வரிகளை படிசிங்களா?

    //இப்போது உள்ளது இரட்டை ஆட்சிமுறை. சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம். இப்படி ஒரு இரட்டை ஆட்சிமுறை இல்லாத, இந்த அதிகார வர்க்கம் ஒழித்துக்கட்டப்பட்ட ஒரு ஜனநாயகம் வேண்டும். தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.//

  15. //கடந்த 15 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமய கொள்கை ஒரு உச்சத்தை எட்டி, இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்குப் பிறகு முட்டாள்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 18 ஆண்டு காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த கொள்கைகள் இனியும் இந்தியாவுக்குத் தேவையா////

    1991இல் இந்தியாவின் நிலை மிக மிக அபாயகரமாக இருந்தது. அதை பற்றிய எம் பதிவு இது :

    http://nellikkani.blogspot.com/2008/05/1991.html

    இப்பதிவின் இறுதியில் நான் எழுப்பிய கேள்ள்விக்க்கு தோழர் மருதையன் அல்லது பிற தோழர்கள் பதில் அளிக்க முடியுமா ? இன்று அய்.எம்.எஃப் இடம் இருந்து இந்தியா ‘தப்பிவிட்டது’. எப்படி ?

    பொருளாதார விசியங்கள் வேறு, வறட்டு சித்தாந்தம் வேறு.

  16. பொய்களையே தன்னுடைய ஆடைகளாகவும்,புரட்டையே வாழ்க்கை முறையாகவும் கொண்டு உயிர்வாழும் ஆர்.ஸ்.ஸ். அம்பீ அதீய்மானீன் “திவால்” பசப்புகளை மே 29 2008 அன்றெ GGG என்பவர் அவருக்கு தெரிந்த அரசியல் கண்ணோட்டத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்
    ggg said… மே 29, 2008 11:30

    1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

    டால்ர் தான்உலகின் ரிசர்வ் கரன்சி இன்று.// யூரோ அதற்கு போட்டியாக இருக்கிறது – டாலர் மாற்றவே முடியாத இடத்தில ஒன்றும் இல்லை இல்லை

    ந‌ம‌து மொத்த இற‌க்குமதியின் டாலர் மதிப்பில், ந‌ம் ஏற்றும‌தியை விட‌ மிக‌ மிக‌ அதிக‌ம். //

    ஆம் உண்மை தான் இந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம்
    உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125
    பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம்.
    ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம்
    181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர்
    மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி
    துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா
    முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான்.

    டால‌ர் ப‌ற்றாக்குறையை ச‌மாளிக்க‌ மூன்று வ‌ழிக‌ள்தான ///
    நீங்கள் சொல்லு இந்த மூன்று வழிகளும் மீண்டும் dolor சேற்றில் போய் விழுந்து மண்ணைக் கவ்வுவதர்க்குதான் உதவும் – அதற்கு பதிலாக மற்று திட்டம் பற்றி கொஞ்சம் பார்க்கலாம் ..

    நமது இறக்குமதியில்
    பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல்
    தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை
    பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க
    முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர
    குறைய போவதில்லை.
    இந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது?

    இதற்க்கு இரண்டு வழிகள் உள்ளன

    # மாற்று எரிபொருள் பக்கம் போவது
    # மின்சார சக்தியை அதிகப் படுத்துவது.

    மாற்று எரிபொருளாக தர்ப்போது பரிந்துரைக்கப்படும் எத்தனோல் தயாரிப்பது செலவு குறைவான பாதுகாப்பான விஷயம்.
    ஒரே கல்லில் பலமாங்க்காய் போல இதில் நமக்கு லாபங்கள் அதிகம்

    எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு,
    மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள்
    வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்
    மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள்
    மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும். ஒரு கார்
    தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு
    கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி
    பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து
    எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

    டோலோரும் மிச்சமாகும்.

    மின் சக்தியை அதிகப் படுத்துவதன் மூலம் கணிசமான எரிவாயு செலவுகளை மின் அடுப்புகள் பயன் படுத்த பரிந்துரை செய்வதன் மூலம் தவிர்க்கலாம்.

    ‘சோசிய‌லிச‌’, ‘சுதேசி’ கொள்கைக‌ளாஇ 1947 முத‌ல் 1991 வ‌ரை இந்திய‌ அர‌சு
    மேற்கொண்ட‌தால்,//
    1981 இல் இந்தியா வாங்கிய 5000ம் dolor கடன் வட்டி போட்டு குட்டி போட்டது அது வளர்ந்து — 1991 ல் நிதிப் பற்றாக்குறைக்கு வழி வகை செய்தது. இந்திரா காலத்திலிருந்தே நம் தேசம் சுதேசிக் கொள்கை கலை கைவிடத் தொடங்கி விட்டது – எனவே தவறான தகவல்களை புள்ளி விபரமாகத் தராதீர்கள்.

    ந‌ம‌து ப‌ற்றாகுறை ப‌ட்ஜெட்டுக‌ளால் ப‌ண‌ வீக்க‌ம் மிக‌ மிக‌ அதிக‌மாகி, அர‌சின் மொத்த‌
    க‌ட‌ன் மிக‌ அதிக‌மாகி, ரூபாயின் நிக‌ர‌ ம‌திப்பு ப‌டிப‌டியாக‌ ப‌ல‌ ம‌ட‌ங்குகுறைந்த‌து. ஆனால் அர‌சு ‘நிர்ணிய‌த்த‌’ ரூபாய் (டால‌ர்) ம‌திப்பு, ரூபாயின் உண்மையான‌ ச‌ந்தை ம‌திப்பை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்…அதிகாரிகள் மட்டும் அரசியல்வாதிகளின்
    ‘புண்ணியத்தில்’ அடைந்தவர்கள், கொளளாஇ லாபம் பார்த்தனர்.///

    ம‌ன்மோக‌ன் சிங் அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ ‘தார‌ள‌ம‌ய‌மாக்க‌ல்’ கொள்கைக‌ளை அம‌ல்ப‌டுத்த‌ தொட‌ங்கினார். அன்னிய முத‌லீடுக‌ள் ப‌ல‌ த…………….க‌ர‌ண்ட் அக்க‌வுண்ட் க‌ணாக்கில் ரூபாய் / டால‌ர் அன்னிய‌
    செல‌வாணி வ‌ர்த‌க‌ம் முத‌ன் முறையாக‌ அனும‌திக்க‌ ப‌ட்ட‌து.///

    கையாலாகாத இந்த ஆட்சியாளர்கள் – லட்சக் கணக்கான கோடி ரூபாய் வரிபாக்கிகளை வசூலிக்க திராணியில்லாமல் நம்மை உலக கடன் வலையில் சிக்க வைத்து – இப்போது நமை பொருளாஆதார அடிமைகளாக – பொருளாதார காலனி நாடாக வழிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான சாட்சியே மேலிருக்கும் பத்திக்கான விளக்கம்.

    அடேங்கப்பா என்ன ஓர் சாதுரியம் ? லட்சக்கணக்கான கொடிகளை குவித்துவிட்டார் மனமோகன சிங்கி !!!

    நமது குளத்தின் நீர் எல்லாம் கோகோகோலா குடித்து உரிஞ்சியத்தை வேடிக்கை தானே பார்க்க முடிந்தது ?

    அளவுக்கு மீறி – சரியான திட்டமிடல் இல்லாமல் இது போன்ற கொலைக் காரர்களை அனுமதித்ததன் விளைவாக –

    என்றான் போன்ற கம்பெனி-கள் மின்சாரத்தை கொள்ளை விலைக்கு விற்றதை பார்த்துக் கொண்டிருந்தைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்?

    இன்றும் – சிறு வணிகம் கூட நான்தான் செய்வேன் என்று கூவிக் கொண்டு வலமர்ட் கம்பெனியும் இன்னும் பலரும் தேசத்தின் பொருளாதார ஸ்திரத் தன்மையை கலக்க கட்டியம் கட்டுவதும் இங்கெ தானே நடக்கிறது?

    ——————————————————————————————————————–
    கடைசியாக 1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? ஒன்றும் ஆகியிருக்காது – மக்கள் விழித்துக் கொண்டிருப்பார்கள். திறமையான கொள்ளைக் கூட்டத்தின் கையில் ஆட்சியை கொடுத்ததின் விளைவை உணர்ந்திருப்பார்கள். மீண்டும் ஒரு சுதந்திரப் போர் வெடித்திருக்கும். இன்று – வகுப்புவாதமும் கொள்ளை கூட்டமும் இணைந்த ப.ஜா.க வா? – கொள்ளைகாரர்களும் அரசியல் பூசலும் நிறைந்த காங்கிரஸா ?

    மேலே அழுகிய பழமா? – கீழே அழுகிய பழமா? எது வேண்டும் என்ற கேவலாமான கேள்விஇலிருந்து மக்கள் தப்பித்திருப்பார்கள்

    சோசிய‌லிச‌’, ‘சுதேசி’ கொள்கைகள் உருப்படியாக பின்பற்றப் பட்டிருந்தால் இந்த நிலையே வந்திருக்காது அதியமான்

  17. “கதிர்,

    உமக்கு சொந்த புத்தியே கிடையாதா ? ஜிஜிஜி என்பவர் உளரியதை அப்படியே
    பேஸ்ட் செய்வது தான் உமது ‘திறமையையோ ? பொருளாதாரம் பற்றிய‌ அடிப்படை அறிவே இல்லாத பின்னோட்டம் என்பதால் அதற்க்கு நான்
    பதிலலிக்கவில்லை.”……..
    என்று சொல்லியிருக்கும் ” உத்தமர்” அதியமான்
    மே 31, 2008 அன்றெ GGG க்கு பதிலும் அளித்துள்ளார். மே 31, 2008 12:05
    K.R.அதியமான் said…

    GGG @ Pulesi420 @ Sidhan,

    Very easy for you to say that. all your alternatives are impractial and not enough to say the least. Alternative bio-fuels for petro products. fine in theory. but how much time and effort will be needed to totally get rid of our need for petro imports ? and until then ?

    You talk casually about India being bankrupt in 1991. If we had not opened up, then rupee would have sunk very easily to Rs.1000 per USD nd petro prices risen many hundred times with terrible shortage and chaos. See the terrible condition of Zimbawe now.

    And this converstaion on blogger would not be taking place now.

    All this talk about mortaging our nation to MNCs, US was always there right from 50s from people like you. You havn’t answered how
    Swadhesi polices could have been implemented more ‘effectively’ ;
    mere rhetoric and practical reality is totally different.

    In is my humble opinion, you do not know what your are talking about…

  18. அயோக்கிய சிகாமணிகள்,
    னாட்டை அன்னியனுக்கு காவு கொடுக்கும் கயவர்கள், பாரதியம் பேசிக்கொண்டே கொல்லைப்புறத்தில் பாரத மாதாவை(?!) படுக்கையறையில் ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள், பன்னாட்டு கம்பெனிகளின் பாதந்தாங்கிகள்,……இன்னும் இன்னும்…. நீள்பவர்கள், “அம்பிகளாகவோ” “ஆர்.எஷ்.எஷ்” காரர்களாவோ மட்டும் தான் இருக்க வேண்டும் யார் சொன்னது? ” நவின உத்தமர் அதியமானும்” அதில் இணைந்துள்ளார் என்பதை நாம் அவர் பதிலால் அறிவோம் நண்பர்களே!

  19. அட அர டிக்கட்டே! கருந்திணையில் கட்டுரை எழுதியவர் இன்றுவரை ம.க.இ.க வில்தான் இருக்கிறார். இனியும் ம.க.இ.க வில்தான் இருப்பார். ஆனால் பார்ப்பான் மருதையனுக்கு உறவினர் இல்லை. தமிழன். முடிந்தால் அவரது கேள்விகளுக்கு பதில்சொல். சொல்லாவிட்டாலும் பரவாயில்லை தயாரித்துவைத்துக்கொள். உங்கள் இயக்க தோழர்களுக்குள் விவாதங்களில் அவை எதிரொலிக்கும். அப்போது பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

  20. Harward Professor அதியமான் அவர்களே,
    “1991 புரட்சி” பற்றீ பேசுகிறீர்கள். இந்த 1991/2000 வருட வெங்காயம் எல்லாம் வேண்டாம். நான் அடிப்படை கேள்வியை கேட்கிறேன்.” உலக அளவில் எப்படி/எப்போது டாலர் ஒரு முக்கியமான FX (Foriegn exchange) கரன்சியாக மாறீயது?” இதன் சூட்சமம்தான் என்ன?.எல்லா நாடுகளூம், குறீப்பாக மூன்றாம் உலக நாடுகளீன் பெரும்பாலான பன்னாட்டு வர்த்தகங்கள் அனைத்தும் எப்படி Dollar dependence ஆக மாறீன? இதற்கு பின்னால்தான், அமெரிக்க ஏகாதிப்பத்தியமும், முதாளீத்துவ பயங்கரமும் இருக்கிறது. இந்த வரலாற்றூ மோசடிகளீ பற்றீ எழுத 500 பக்கங்கள் தேவை. விருப்பம் இருந்தால் google search இல் தேடவும். அப்படியே ஒரு வாதத்திற்க்காக “1991 புரட்சி” அங்கீகறீத்தாலும், என்ன நடந்தது உலக அளவில், குறீப்பாக இங்கு?
    SEZ க்காக எவ்வளவு விவசாயிகள் விரட்டப்பட்டும்/மிரட்டப்பட்டும் இருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு மின் வெட்டு? எவ்வளவு யூனிட் மின்சாரம் SEZ க்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்பது தெரியுமா? WTO ஒப்பந்தப்படி Montessa மற்றூம் Geneticaly modified seed ஆல் எவ்வளவு பேருக்கு பாதிப்பு என்பது உங்களூக்கு தெரியுமா? WTO ஏன் குழந்தை தொழிலார்களீ பற்றீ கள்ள மொளனம் சாதிக்கிறது? எவ்வளவு விவசாயிகள் நகரத்திற்கு பிச்சைக்காரர்களாகவும்/ரிக்ஷா ஒட்டுபவர்களாகவும் மாறீயிருக்கிறார்கள் என்பது தெரியுமா? எவ்வளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் தெரியுமா? 1975ல் இந்திய GDP ல் விவசாயத்தின் பங்களீப்பு (41%) இதுவே, 2005ல் 17% ஆக குரைந்தது ஏன் தெரியுமா? coke/pepsi வந்தபிறகு எவ்வளவு நிலத்தடி நீர் குறாந்து/மாசுப்பட்டும் இருக்கிறது என்பது தெரியுமா? சரி, “1991 புரட்சி” வேற என்ன கொண்டுவந்தது. IT/Automobile கம்பெனிகள் வந்ததெதன்றால், இதனால் பயன் அடைந்தது யார்? middle class/upper middle class மட்டும்தானே? அதனால்தானே உங்களால் ” எனக்கு மொபைல் போன், இணயதளயம் இத்தியாதிகள்” என்றூ உங்களீ முன்னிருத்தியும்,உங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பேசமுடிகிறது. பொறூளாதாரம், அரசியல் பாதிக்கப்பட்டவர்களீன் பார்வையில்தானே பார்க்க வேண்டும்? அதுதானே அறம்? போகட்டும், 1991 பிறகு, Retail Revolution நடக்கிறதே? இதனால் யார் பாதிக்கபட்டார்கள் என்பது தெரியுமா? Reliance வ்ந்து அண்ணாச்சி காய்கறீகடையை ஒழித்தது. coffee day வந்து, நாயர் டீ கடையை ஒழித்துக்கொண்டிருக்கிறது.. Green Trend/Lime lite Salon(Cavin care group) வந்து சாதாரண ஏழை முடிதிருத்துபவனை அழித்து கொண்டு இருக்கிறது. Feel good store (Naidu hall group) வந்து சாதாரண பேன்சி ஸ்டோர் அழிந்து கொண்டு இருக்கிறது. தாரளமயவாக்கம் தெருவுக்குத்தெரு சாமியார்களாயும்,அறமில்லாத அரசியல்வாதிகளாயும், குட்டி முதலாளீகளயும், இவர்கள் பின்னால் கல்லூரிகளீயும் ( இந்த வியாபரம் தனிக்கதை),பினாமிகளீயும் உருவாக்கி ஏழையை இன்னும் பரம ஏழையாக உருவாக்கிருக்கிறது. இன்னும் முதலாளீகளீ பல திருட்டுத்தனங்களீ செய்ய உதவியிருக்கிறது. இந்த தாரளமயவாக்கத்தின் அடிப்ப‌டையே Spending culture அதாவ‌து நுக‌ர்வோர் க‌லாச்சார‌த்தை ஊக்குவிப்ப‌துதான். தொழில்நுட்ப‌ம் வேறூ/முதாளீத்துவ‌ம் வேறூ. Economic Times/Business india படித்து விட்டு பொருளாதாரம் பேசாதீர்கள். இதையெல்லாம் தெரிந்துகொள்வ‌த‌ற்கு Harward Business Review தேவையில்லை. தாரளமயவாக்கத்தின் மூல‌மாக‌ உங்க‌ளூக்கு கிட்டியிருக்கும் இணய‌த‌ளத்தில் sainath, vandana shiva, badri raina,Arundhati Roy என்றூ டைப் அடித்து ப‌டிக்க‌வும்.

  21. Hi Just wanted to write somewhere and feel that this is a right place.
    At this election time I saw so many messages abt MK and DMK that this regime has brought so many industries in TN.
    As a part of this industry representative I couldn’t avoid writing this against those fools.
    When there is a Power problem govt says it is due to the old govt. If there are some new plants, industries and companies coming in TN within 90 days of DMK period govt claims it is because of them. Doesn’t it sound too funny and making everyone stupid.
    No company can decide overnight is starting a branch or plant at any location. Minimum of a year reqd to decide and analyze the factors.
    Hence just showing off with signing MOU doesn’t mean that anyone is responsible for that. If it is entertained t’row DMK cadres can claim the responsibility even when you have a new kid in family.

    As well said by Narayana Moorthy when he was asked abt Dayanithi Maran’s comment ” The IT growth is 40% because of me ” he said “Maran is correct, It should have been 60% if he is not there”.

    Try to understand a mere cheater and power phanatic who swindled crores of money and doesn’t have any self discipline (3 wives) cannot be a leader for any decent group.

  22. பெரியாரியல் சர்வரோகநிவாரணியா இல்லையா என்பது அல்ல வாதம். இன்றைய தமிழகத்தில் நடந்த தில்லைச் சமரில் பயன்படுத்தப்பட்டது பெரியாரிய மரபு தானே அன்றி, வர்க்க மரபு அல்ல என்பதே. கருந்திணை எழுத்தாளரும் ஒரு கம்யூனிஸ்டு காரர்தான் போலத் தெரிகிறது. ஆனால் அதன் இயலாமை பற்றி அவர் கவலைப்படுகிறார். ஏனெனில் கம்யூனிசம் என்ற சித்தாந்தத்தை விளக்கிப் புரியவைத்து அக்ரகாரத்திலிருந்து ஒரு புரட்சிகர கூட்டத்தைக் கூட்டிவந்து பார்ப்பன பாசிசத்தையும், சமஸ்கிருத பண்பாட்டு ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராட களப்பணியாளர்களை உருவாக்க முடியுமா என்பது தான் கேள்வி. அது தான் முடியாது என்பது வெட்ட வெளிச்சம். எனவே கம்யூனிசம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட முடியவில்லையே என்பது தான் சமூக எதார்த்தம். நமது சமூகத்திற்காகத்தான் நாம் போராடுகிறோமே தவிர கம்யூனிசத்திற்காக ஒரு போராட்டம் என்பது இல்லை. கம்யூனிசக் காதல் என்பது ஒரு மன வியாதி அவ்வளவு தான்.
    கங்கைகொண்டானில் நந்திகிராமம் உருவாக்க முடியவில்லை. ஆனால் அதை இயல்பாக ஒரு மம்தா பானர்ஜி செய்ய முடிந்திருக்கிறது என்றால் அது நக்சல்பாரி மரபு.
    விவாதிக்கும் போது நாம் எந்தச் சமூகத்தில் இருந்து விவாதிக்கிறோம் என்பது முக்கியும். கருந்திணை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து தான் பெரியாரியலையும், கம்யூனிசத்தையும் விவாதிக்கிறது. எனவே சமூகம் தான் முக்கியம். ஜான் பொலிட்சர் (கம்யூனிச தத்துவ அறிஞர்) சொல்வதுபோல தத்துவம் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும். எனவே அன்னாந்து பார்த்து யாரும் கொட்டாவி விடவேண்டியதில்லை. சமூகத்தைப் பாருங்கள்.
    ஒரு அரங்கக் கூட்டத்தில் ம.க.இ.க சென்னை கம்யூனிச போதகர் ஒருவர் மறுகாலணியாதிக்கத்தை எதிர்ப்பது தொடர்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கூறினார். கூட்டத்திலிருந்த நாங்கள் எல்லோரும் அப்படியென்றால் நாம் பயன்படுத்தும் ‘நோக்கியோ’ செல்போனை என்ன செய்வது என்று கேட்டோம். அதற்கு அவர், போன் நோக்கியோ பயன்படுத்திக்கொள்ளுங்கள் வேறவழியில்லை, சிம்கார்டு வேண்டுமென்றால் பி.எஸ்.என்.எல் பயன்படுத்துங்கள் என்று கூறினார். நாங்கள் திருப்தி அடியவில்லை. அதைத் தெரிவித்தோம். ஆனால் அந்த விவாதத்தை அவர் அத்தோடு முடித்துக்கொண்டார்.
    பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை தீயிட்டுக்கொளுத்தும் ம.க.இ.கவின் போராட்டம் என்ன ஆனது? அது இயல்பற்ற, நடைமுறைத் தன்மையற்றதாகிவிட்டது. பெரும்பாலான ம.க.இ.க தோழர்கள், சோனி, சாம்சங், சான்சூயி, ரிலையன்ஸ், டாடா இண்டிகாம், போன்றவை தயாரிக்கும் பொருட்களைத் தான் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு தோழரிடம் கேட்டேன், அதற்கு அவர் பதில் சொன்னார், ‘அட ஏங்க, அது எல்லாம் ஆகிற கதையா’ என்று அலுத்துக்கொண்டார். எனவே போராட்டமும் அதன் தத்துவமும் நடைமுறைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பது அவசியம். அது அந்தப் போராட்டத்தில் இல்லை. தோழர்களே இப்படியென்றால், பொதுமக்கள்? கொஞ்சம் யோசிங்கப்பா?
    பெரியாரின் பார்வையிலேயே, பொருளாதாரப் புரட்சிக்கு கம்யூனிசத்தைதான் பயன்படுத்தவேண்டும். ஆனால் பார்ப்பானை எதிர்க்க ஆரியப் பண்பாட்டு எதிர்ப்பை வீழ்த்த இந்த மண்ணில் பெரியாரியலை விட்டால் வேறவழியில்லை. அதற்கு தில்லைப் போரே சாட்சியம். அதன் மூலவர், கருந்திணை சொன்னது போல் பெரியாரே. நானும் தில்லை மாநாட்டிற்கு சென்றிருந்தேன். சம்பந்தமே இல்லாத மார்க்சு, எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ மட்டும் தான் மேடையில் இருந்தார்கள் வெறும் படங்களாக. ஆனால் அன்றைய தத்துவம் என்பது பெரியாரியலாகத் தான் இருந்தது. பெரியார் தாசன் நிறைய பேசினார். அவர் ஆளு கொஞ்சம் அப்படியிப்படி இருந்தாலும் பெரியாரியலை சரியாகவே பேசினார். அவர் ஒரு கேள்வி கேட்டார், “தீட்சிதன் போயி சுப்ரீம் கோர்ட்டிலே அவனுக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கிட்டு வந்துட்டான்னா, நீங்க இப்ப வெற்றி மாநாடு கொண்டாடுறீங்களே, அப்ப என்ன எழவு மாநாடா கொண்டாடுவீங்க”. பார்ப்பனீயம் ஒரு அகில இந்திய கட்டமைப்பு. அதாவது அதுதான் இந்தியக் கட்டமைப்பின் அச்சு என்றும் கூட சொல்லலாம். உயர்நீதி மன்றத்தில் நிறைய தமிழ்ச் சிந்தனையாளர்கள், பார்ப்பன எதிர் சிந்தனையாளர்கள் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால் உச்ச நீதி மன்றத்தில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது. பார்ப்பான் உச்ச நீதி மன்றத்திலும் வீழ்த்தப்பட வேண்டும் என்பது நமது தாகம்.
    ஒன்னுமில்லை, ராமர் பாலம் இன்னும் கிடப்பில இருக்கிறது, இதே உச்ச நீதிமன்றத்திலே. என்ன கொடுமை இது.
    தமிழகத்தில் தமிழின உணர்வு என்றுமே நீரு பூத்த நெருப்பாகத்தான் உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. கடந்த சில மாதங்களாக அது எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. புரியவைக்கப்படவும் ஆனது. ஆனால் அந்தத் தமிழின உணர்வு தமிழ் தேசிய இன உணர்விற்கான விதையும் வீரியமும் உடையது. அதனை ஒரு அரசியல் கட்சி எடுத்துச் செய்ய வேண்டும். அதற்கான கட்சிகள் எல்லாம் திமுக விலிருந்து எல்லோரும் ஏமாற்றி விட்டார்கள். தேசிய நீரோடை (சாக்கடையில்) நீந்திக்கொண்டு இருக்கிறார்கள். இன்றை களத்தில் தமிழின உணர்வை இரண்டு அணிகள் மறைத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்று ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், மற்றொன்று ம.க.இ.க. அவர்கள் ஈழச்சிக்கலில் முன் வைத்திருக்கும் எதிரி இரண்டாம்பட்ச மானவன் தான். ஆனால் முதல் எதிரி பார்ப்பன பாசிச தேசிய இன ஒடுக்கல் இந்தியாவே. தேசிய இன எழுச்சியை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. லெனின் அங்கீகரிக்கின்றார். ஆனால் மார்க்சியம் பேசும் ம.க.இ.க அந்தச் சுழல் நிதர்சனமாக கண்முன் தெரியும் போதும் அதை மழுங்கடிக்கும் சதியில் ஈடுபடுவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவது உண்மையே.
    செஞ்சீனத்தின் கம்யூனிச துரோகம் மிகவும் கொடுமையானது. அதை மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவனும் எதிர்ப்பான். எதிர்க்கிறான். ம.க.இ.க? சீனக்கொடியை ம.க.இ.கவால் எரிக்க முடியாது. அது கம்யூனிசக் கள்ளக்காதல். தமிழனாவது புடலங்காயாவது என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
    கருந்திணை சொல்வது போல கம்யூனிசம் என்பதே ஒரு சமூகத்தில் எதார்த்தமாக இருக்கின்ற சீற்றத்தை ஒழுங்குபடுத்தி புரட்சி செய்வதுதான். ஆனால் இங்கிருக்கின்ற கம்யூனிஸ்டுகளோ வர்க்கப் புரட்சி பற்றி கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். அவலை நினைத்து உரலை இடித்த கதையாக. வர்க்கப் பிரச்சனையை முன்னிறுத்தியவுடன் ஈழம் ஏற்றிய இன உணர்வை கருவறுத்துவிட்டு, கிளர்ச்சியும் செய்ய முடியாமல் கங்கைகொண்டானாக்கிவிட்டார்கள். இப்ப சந்தோசமாப்பா. ஒரு கட்டமைப்பான இயக்கம் என்பது தத்துவ அரசியலில் வெல்லவேண்டும். கூட்டம் மட்டும் கூட்டினால் போதாது. அதுதான் கங்கைகொண்டானுக்கும் தில்லைக்கும் உள்ள வேறுபாடு. அதனால் கங்கைகொண்டானில் போய் பெரியாரியலைப் பயன்படுத்த முடியாது. பெரியாரியல் நம் சமூகம் சார்ந்த தத்துவம். வர்க்கம் சார்ந்தது அல்ல. வர்க்கப் போராட்டத்திற்கு பெரியார் கம்யூனிசத்தைதான் முன்னிறுத்துகிறார். அவரும் சிங்காரவேலரும் சேர்ந்து போராடிய நாட்கள் ஆராயத்தக்கது. அது தான் பாலபாடம். ஆனால் தமிழகத்தில் இயங்கு சக்திக்குத் தக்கவாறு யோசிக்கும் போது பார்த்தால் வர்க்கப்போராட்டம் கண்ணில் தெரியவில்லை. சாதியாலும், மிகப்பெரிய மத்தியதர வர்க்கத்தாலும், பார்ப்பன சதியாலும் மண்டிய இந்தியாவில் அதற்கான பின்னடைவுகள் நிறைய. நந்திகிராமம் இல்லையென்றால் குஜராத் என டாடாவிற்கு இந்தியா வழிகாட்டுகிறது. வர்க்கப் போராட்டத்தின் எதார்த்த சிக்கலை தத்துவ ரீதியாக ஆராய்ந்து, நடைமுறைக்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் கம்யூனிச சக்திகளுக்கு உள்ளது. அதைவிட்டுவிட்டு கருந்திணையைக் கோபித்துக்கொண்டு பிரயோசனம் இல்லை. கம்யூனிஸ்டுகளே சுயவிமர்சனம் செய்துகொள்ளுங்கள். இல்லையேல் முட்டுச்சந்து எதிரில் நிற்கிறது, எ.கா.கங்கைகொண்டானும், பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் எரிப்புப் போராட்டம் போல.
    ஸ்டாலின், சுபாஷ் சந்திர போசு வரலாறு முக்கியமானது. கம்யீனிசத்தால் விரட்டிவிடப்பட்டவர் தான் போசு. அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று பல முறை சொல்லியிருக்கிறார். அது உண்மை. ஸ்டாலின் இந்தியாவிற்குச் செய்தது பச்சைத் துரோகம். இந்தியாவிற்கு மட்டுமல்ல கம்யூனிசத்திற்கே. இந்தியா, சோவியத் ரஷ்யா, சீன, வியட்நாம், வடகொரியா இந்த நாடுகள் போதுமே ஆசியாவை கம்யூனிச ஆசியாவாக்க. எதையுமே மோலோட்டமாக, கம்யூனிசத்தின் மீதும் ஸ்டாலின் மீதுமுள்ள வழிபாட்டின் அடிப்படையில் யோசிக்காதீர்கள். கருந்திணையின் நிதர்சனத்தை யாரும் மறுக்க முடியாது.
    மேலும் தேசிய இன விடுதலை என்பது மற்ற இனங்களை அடிமையாக்கும் தன்மையது அல்ல. ஏனெனில், கியூப விடுதலை என்பது தமது நாட்டின் விடுதலையேயன்றி மற்ற நாடுகளை அடிமைப்படுத்தவில்லை, படுத்தாது. ஒரு தேசிய இனம் விடுதலைக்காகப் போராடும் போது மீட்சியைப் பற்றியும், அடிமை எதிர்ப்பைப் பற்றியும் தான் எழுகின்றது. அதுதான் அதன் எதார்த்தம். அதன் அரசியல். கம்யூனிசம் மட்டுமே அரசியல் அல்ல(அப்படி கனவு கண்டுகொண்டிருக்காதீர்கள்). பிரஞ்சுப் புரட்சியில் விளைந்தது தான் சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் என்பவை. பிரஞ்சுப் புரட்சி கம்யூனிசப் புரட்சியல்ல. இன்னும் சொல்லப்போனால் மார்க்சின் தத்துவத்திற்கு இந்த மூன்று தத்துவங்கள் முதுகெழும்பு. இன விடுதலையில் நாம் பார்க்க மறுக்கும் யதார்த்தமான தத்துவ அரசியல் இருக்கின்றது. ஆனால் நாம் எப்போதுமே கம்யூனிசக் கண்ணாடியையே நம்பி குருடர்களாக இருக்கின்றோம்.
    நிறைய விவாதிக்க வேண்டியது இருக்கின்றது. ஜான் பொலீட்சரை மறந்து விடாதீர்கள். ஒரு சித்தாந்தமும், அதன் அரசியலும் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும். தில்லையில் பெரியாரில் நின்றது போல. இது வரலாறு. நாம் எவ்வளவுதான் அழுதாழும், புலம்பினாலும் கருந்திணை சொன்னது போல பார்ப்பன பாசிசத்தையும், சமஸ்கிருத ஆதிக்கப்பண்பாட்டை எதிர்த்து வீழ்த்த அக்ரகாரத்திலிருந்து புரட்சிக்குக் கூட்டம் கூட்ட முடியாது.
    கம்யூனிச முகமூடியைப் போட்டாது பெரியாரியலைத்தான் அங்கே பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.
    திருவரங்கக் கருவறைப் போராட்டம் ம.க.இ.கவிற்கு பெரியாரியலிச் சொல்லித்தந்த போராட்டம். அது ம.க.இ.கவிற்கு ஆரம்ப கால பெரியாரியல் பரிசோதனை. இந்த சமுதாயத்தில் பார்ப்பானை எதிர்க்க பெரியாரியல் தான் தேவை என்பதை உணர்த்திய போராட்டம் அது. ஆனால் பார்ப்பன பயங்கரவாத மாநாடு தஞ்சையில் நடந்தபோது பெரியார் அநாதையாக நின்றிருந்தார். கம்யூனிச மூலவர்கள்தான் எங்கு பார்த்தாலும். ஆனால், ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் நடந்தது. பெரியார் தாசனின் மிக முக்கியமான, இந்துத் தத்துவ இயலா, இந்தியத் தத்துவ இயலா என்ற சிறந்த உரை வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை ம.க.இ.கவின் பெரியாரியல் கிளையின் கொ.ப.சே.வாக அவர் அமர்த்தப்பட்டுவிட்டார். ஏனென்றால், சமூகத்தின் தேவை. அந்த மரியாதையை பெரியாருக்கும் கொடுங்கள். அவ்வளவுதான் கருந்திணை கேட்கிறது. மார்க்சு, எங்கல்ஸ், பெரியார், லெனின், ஸ்டாலின், மாவோ என்று உங்கள் மேடை அலங்கரித்தால் மகிழ்ச்சி. ஏனென்றால் பார்ப்பானையும் அவனது ஆதிக்கப்பண்பாட்டையும் எதிர்த்து நாம் போராடும் தத்துவ மரபு பெரியாரும், திராவிட இயக்கமும் ஏற்படுத்தியது. அது இந்திய அரசியலில் தேசிய இன விடுதலைக்குச் சமமானது மட்டுமன்றி தேவையானது. பெரியார் தேசிய இன விடுதலையை ஆதரித்தவர் அல்லர். அவருக்கு தேசியம், இனம், மொழி என்ற பற்றே கிடையாது. ஆனால் பார்ப்பன இந்தியாவிலிருந்து பிரிந்த தனிநாடு வேண்டியவர். அதன் யதார்த்தம் இன்றும் பொருந்தும். தேசிய இன விடுதலை என்ற பார்வை தவிர்த்தாலும் அது உண்மைதான். ஆனால் எந்த உணர்வை எந்த அரசியலை முன்னிறுத்துவது? பெரியாரிஸ்டுகளிடமே விட்டுவிடுவோம் விடைசொல்ல.

    தில்லைப் போராட்ட முதல் வெற்றிவிழா மேடையில் முழங்கிய வார்த்தைகள், வேறு யாரோ அல்ல, தோழர் மருதையனும், தோழர் ராஜாவும் பேசியவை. இதைக் கேட்டால் திரு. வேல்முருகம் சட்ட மன்ற உறுப்பினர் இந்தப் போராட்டத்தில் எவ்வளவு முக்கியப் பங்காற்றி உள்ளார் என்று தோழர்களுக்குப் புரியும். “இந்த மேடையிலே உரையாற்றிய அனைவரும் இந்தப் போராட்டத்தில் உண்மையாகவே பங்களித்திரு அமர்ந்திருப்போர் அனைவரும் உண்மையிலே இந்தப் போராட்டத்தில் பங்களித்திருக்கிறார்கள் அதன் காரணமாகவே விவராங்களுடன், ஈடுபாட்டுடன் பேசினார்கள் . . . . மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு . . . பல்வேறு பா.ம.க., தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரோடு இணைந்து இறுதிவரை விரிசலின்றி ஒற்றுமையாகப் போராட்டி வெற்றி கண்டுள்ளோம் . . . . . போராட்டம் பல நடத்தியிருந்தாலும் இது வெற்றிகள் அரிதான காலம் . . . இந்தப் போராட்டத்திற்கு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி, ஆதரவு தெரிவித்த முதல் அரசியல் தலைவர் திரு வேல்முருகன் . . . சிற்றம்பல மேடையில் தமிழ் பாட சட்டம் இயற்றப்படுவதற்கு பல சதிகள் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த போது அதைத் தகர்த்து உரிய நேரத்தில் அந்தச் சட்டம் நம் கையில் பெற காரணமாக இருந்தவர் திரு.வேல்முருகன் அவர்கள் . . . மீண்டும் மீண்டும் திரு வேல்முருகனின் கேள்விகள் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டு பெரிய பிரச்சனையை உண்டாக்குகின்றது என்பதால் போலீசை அனுப்பித் தமிழ்பாடுவதற்கு அரசு ஏற்பாடு செய்தது என்பது உண்மை . . . இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் . . . .போராட்டத்திகான நிதி செலவை நானே செய்கிறேன் என்று சொல்லி, ரூ.10,000 உடனே கையில் கொடுத்தவர், திரு.வேல்முருகன் அவர்கள், . . . அவரை இந்தப் போராட்டத்திலே வெற்றிவிழாவிலே பதிவு செய்யவேண்டும் . . . அவருக்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பிலும் போராட்டக்குழுவின் சார்பிலும் நமது நன்றியை கரவொலி எழுப்பிப் பாராட்ட அன்போடு வேண்டுகிறேன்” ஆதாரத்தோடு நான் பேசுகிறேன். இதே ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் தயவுபற்றி ம.க.இ.கவின் மதிப்புரை இது.
    மேலும் ஒரு விசயம். தொல்.திருமாவளவன் தில்லைக் கோயிலுக்குப் போனவுடன் தீட்சிதர்கள் கொடுத்த மரியாதையையும் அதை அவர் ஏற்றுக்கொண்டதையும் புகைப்படம் போட்டு கேவலப்படுத்திய புதிய ஜனநாயகமும், புதிய கலாச்சாரமும், ம.க.இ.க தோழர்கள் தில்லைப் போரில் எதிர்க்க வேண்டும் என்றுத் தெரிந்தே கோவிலுக்குள் போய் தீட்சிதர்களின் மரியாதையை ஏற்று கை கூப்பி நின்றதை எந்த வகையில் விமர்சனம் செய்கிறது. குறந்த பட்சம் அந்த மரியாதையை உடனடியாக கழற்றியாவது போட்டிருக்கவேண்டும் தோழர்கள். ஆனால் அதை ஏற்றுக்கொண்டு மெய்மறந்து நின்றது எந்த அளவுகோலால் அளக்கப்படவேண்டியது? இதில் ஒரே ஒரு மாவீரன் ஆறுமுகசாமி அடிகள்தான். தீட்சிதர் மரியாதையை வேண்டாம் என்று புறக்கணித்து நின்றாரே. போராட்ட நாயகன் அல்லவா அவர்.
    ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து ஆராய வேண்டிய காலகட்டத்தில் எல்லோரும் இருக்கின்றோம். விமர்சனத்தை ஏற்றுக்கோள்ள வேண்டும். கோவப்பட்டு என்னப்பா ஆகப்போகிறது.
    எதைப் படித்தாலும், கேட்டாலும், பார்த்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆய்வு செய்து சிந்திப்போம், விவாதிப்போம். சமூகத்திற்கானதுதான் சித்தாந்தம் சித்தாந்தத்திற்காக அல்ல சமுதாயம், அப்படி எந்தச் சமுதாயமும் காத்துக்கொண்டு இருக்க முடியாது. இதைத் தான் பெரியாரும் சொன்னார், பெரியாரியலும் சொல்கிறது.
    நன்றி தோழமையுடன்
    சிங்காரம்.

  23. நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தியுள்ளது:
    எறிவதை இழுத்தால் கொதிப்பதி நிற்கும்!

  24. அய்யா கல்லபட்டி ஸிங்காரம் பிளேடை தின்னுபோட்டு செரிக்க முடியாம உளாறாதீர்

    //சம்பந்தமே இல்லாத மார்க்சு, எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ //

    ஆமா ! மத , மூட நம்பிக்கைகளை பற்றி மார்க்சிய ஆசான்களின் கருத்தை
    படித்துள்ளீரா? பார்ப்பனர்கள் பற்றி மார்க்சின் கருத்தை படித்துள்ளீரா?

    ஒரு கம்யூனிச அமைப்பு நடத்திய மாபெரும் போராட்டம் தில்லை போராட்டம். மார்க்சியத்தின் மூலம் படிப்பினைகளை கற்ற ஒரு அமைப்பு, மார்க்சிய-லெனினிய பார்வையில் உலகை பார்க்கும் ஒரு அமைப்பு நடத்தும் போராட்டத்தில் மார்க்சிய ஆசான்களின் படங்கள் வைப்பதுதான் சரி !

    சிறி ரங்கம், தில்லை போராட்டத்தை கொச்சை படுத்தும் ஸிங்கார காக்கையே ஏன் தில்லை போராட்டத்தை நீங்கள் நடத்தவில்லை? யார் தடுத்தது? அப்படி ஒரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்று தந்தை பெரியார் படத்தை மட்டும் வைத்து (புரோக்கர் மாமா வீரமணீ படம் போடாமல்) ஒரு கூட்டம் நட்த்தியிருக்கலாமே? ஆறுமுகசாமியை வீரன் என்று சொல்வது சரியானதே!
    ஆனால் தீட்சித நாய்களால் தாக்கபட்டு தனியா நின்று கொண்டிருந்தாரே அப்போ எங்கு போனிர்கள் (செயா வீட்டு நாய்க்கு கால் கழுவவா?)

    பெரியாரியல் சொல்லி கொண்டிருந்த பாடத்தை கருப்பு வாய்சொல் வீரர்கள் ஏன் செய்யவில்லை?

    //சீனக்கொடியை ம.க.இ.கவால் எரிக்க முடியாது. அது கம்யூனிசக் கள்ளக்காதல். தமிழனாவது புடலங்காயாவது என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.//

    பயங்கர அறிவுயா உனக்கு !!!!!!!

    வீரமணியின் டீ.கா தந்தை பெரியார் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துகொண்டிருக்கிறது
    தீ.க. கொடியை எரிக்க தயாரா?

    உஙளுக்கு யாருடன் கள்ளக் காதல்?

    //தொல்.திருமாவளவன் தில்லைக் கோயிலுக்குப் போனவுடன் தீட்சிதர்கள் கொடுத்த மரியாதையையும் அதை அவர் ஏற்றுக்கொண்டதையும் புகைப்படம் போட்டு கேவலப்படுத்திய //

    கேவலபடுத்தீட்டாங்களா ! அந்தாளே அவரா கேவலப்படுதிகிட்டா அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்? அப்புறம் திருமாமலவன் கோயிலுக்கு போனதும் தோழர்கள் போனதுக்கும் வித்தியாசம் புரியலையா?தூங்கற மாதிறி நடிக்கறவுங்கள
    ஒன்னும் பண்ண முடியாது

  25. அய்யா கல்லபட்டி ஸிங்காரம் பிளேடை தின்னுபோட்டு செரிக்க முடியாம உளாறாதீர்

    //சம்பந்தமே இல்லாத மார்க்சு, எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ //

    ஆமா ! மத , மூட நம்பிக்கைகளை பற்றி மார்க்சிய ஆசான்களின் கருத்தை
    படித்துள்ளீரா? பார்ப்பனர்கள் பற்றி மார்க்சின் கருத்தை படித்துள்ளீரா?

    ஒரு கம்யூனிச அமைப்பு நடத்திய மாபெரும் போராட்டம் தில்லை போராட்டம். மார்க்சியத்தின் மூலம் படிப்பினைகளை கற்ற ஒரு அமைப்பு, மார்க்சிய-லெனினிய பார்வையில் உலகை பார்க்கும் ஒரு அமைப்பு நடத்தும் போராட்டத்தில் மார்க்சிய ஆசான்களின் படங்கள் வைப்பதுதான் சரி !

    சிறி ரங்கம், தில்லை போராட்டத்தை கொச்சை படுத்தும் ஸிங்கார காக்கையே ஏன் தில்லை போராட்டத்தை நீங்கள் நடத்தவில்லை? யார் தடுத்தது? அப்படி ஒரு போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்று தந்தை பெரியார் படத்தை மட்டும் வைத்து (புரோக்கர் மாமா வீரமணீ படம் போடாமல்) ஒரு கூட்டம் நட்த்தியிருக்கலாமே? ஆறுமுகசாமியை வீரன் என்று சொல்வது சரியானதே!
    ஆனால் தீட்சித நாய்களால் தாக்கபட்டு தனியா நின்று கொண்டிருந்தாரே அப்போ எங்கு போனிர்கள் (செயா வீட்டு நாய்க்கு கால் கழுவவா?)

    பெரியாரியல் சொல்லி கொண்டிருந்த பாடத்தை கருப்பு வாய்சொல் வீரர்கள் ஏன் செய்யவில்லை?

    //சீனக்கொடியை ம.க.இ.கவால் எரிக்க முடியாது. அது கம்யூனிசக் கள்ளக்காதல். தமிழனாவது புடலங்காயாவது என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.//

    பயங்கர அறிவுயா உனக்கு !!!!!!!

    வீரமணியின் டீ.கா தந்தை பெரியார் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துகொண்டிருக்கிறது
    தீ.க. கொடியை எரிக்க தயாரா?

    உஙளுக்கு யாருடன் கள்ளக் காதல்?

    //தொல்.திருமாவளவன் தில்லைக் கோயிலுக்குப் போனவுடன் தீட்சிதர்கள் கொடுத்த மரியாதையையும் அதை அவர் ஏற்றுக்கொண்டதையும் புகைப்படம் போட்டு கேவலப்படுத்திய //

    கேவலபடுத்தீட்டாங்களா ! அந்தாளே அவரா கேவலப்படுதிகிட்டா அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்? அப்புறம் திருமாமலவன் கோயிலுக்கு போனதும் தோழர்கள் போனதுக்கும் வித்தியாசம் புரியலையா?தூங்கற மாதிறி நடிக்கறவுங்கள
    ஒன்னும் பண்ண முடியாது

  26. அதியமான்,
    நான் போன மறு மொழியிலே குறிப்பால் உண்ர்த்தினேன்( 1991 வருட வெங்காயம் என்று).
    1991 பிரச்சினையை பேசுகிறீர்கள்.

    உங்களுடைய மிகப்பெரிய பொய், 1991 IMF ருந்து இந்தியா கடன் வாங்கவில்லை என்பது. கீழ்க்காணூம் சுட்டிகளை படிக்கவும். வரலாற்றை திருப்பாதீர்கள். இந்த சுட்டிகளில், தெளிவாக சொல்லியிருப்பது என்னவென்றால், IMF யிடம் கடன் வாங்குவதற்கு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியா கதவை திறந்துவிட்டது. 45 டன் தங்கம் அடகு வைத்தது வேறு கதை. (இதுவும் நடந்தது)

    http://www.blonnet.com/2009/03/22/stories/2009032251230200.htm

    http://www.nytimes.com/1991/07/30/business/india-in-talks-with-imf.html

    “உத்த‌மர்” என்ற ப‌ட்ட‌ம் உங்க‌ளுக்கு ச‌ரியாக பொருந்தும்.

    இன்றளவில், எந்த நாட்டுக்கும் IMF, Condition இல்லாமல் Structural LOan கொடுத்ததில்லை. 1991ல் 4 பில்லியன் டாலர் லோன் கொடுத்தபோது, உலக அளவில் எல்லோருக்கும் ஆச்சிரியமாக இருந்தது . இதற்குப்பின்னால்தான், அமெரிக்க சூழ்ச்சி இருக்கிறது. அதற்கு, இந்தியாவும் வலுக்கட்டாயமாக உடன்பட நிர்பந்திக்கப்பட்டது.அதாவது, இந்தியா தன்னுடைய கதவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கதவை திறக்கவேண்டும். அதுதானே நடந்தது.அதற்கு பிறகுதானே எல்லா அவலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோமே?

    I.M.F. கொடுப்பது Structural loan அதாவது ஒவொரு உள் நாட்டின் பண்வீக்கம், பன்னாட்டு வர்த்தகத்தில் டாலர் Fluctuation சரிகட்டுவுது etc…… உலக வங்கி, கொடுப்பது Long term Loan, அதாவது ரோடு, பாலம் கட்டுவதற்கு. W.T.O ,வர்த்தகம் சம்பந்தப்பட்டது. அதாவது, எந்த பொருளை எங்கு,எப்படி,எப்போது விற்ப்பது. Patent etc…. இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று பின்னியிருப்பவை. இவை அவ்வபோது, சேர்ந்தோ, அல்லது தனியாகவோ மூன்றாம் உலக நாடுகளை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறது.

    IMF ல் ஓட்ட‌ளிக்கும் உரிமை (Veto Power) அமெரிக்காவுக்கு ம‌ட்டும் தான் உண்டு.( UN ல் 5 நாட்டுக்கு உண்டு). 1980ன் முன்ப‌குதியில் ரீக‌னும்,மார்கெர‌ட் தாட்ச‌ரும் இந்த IMF யை, மூன்றாம் உலக நாடுகளில் தார‌ளம‌ய‌வாக்க‌த்தை ப‌ர‌ப்புவ‌த‌ற்கு ஊதுகுழ‌லாக‌வும்,மிர‌ட்டியும் செய்தார்க‌ள். இன்று வரையில்,IMF ல் த‌லைமை ப‌த‌விக்கு ஒரு அய்ரோப்பிய‌ர், world bank ல் ஒரு அமெரிக்க‌ர் தான் வ‌ர‌முடியும்.

    1980லிருந்து, இன்று வ‌ரையில் IMF பல நாடுக‌ளை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிற‌து. உதார‌ணமாக bolivia,thailand,indonesia,argentina,africa,ethopia,kenya etc…..( தாய்லாந்தில் ஏன் AIDS யை குறைக்க‌முடிய‌வில்லை? IMF இன் “திருப்ப‌ணி” தான். அதாவ‌து லோன் கொடுத்து, Health மான்ய‌த்தை நிறுத்த சொன்ன‌து)
    இந்த IMF க‌ட‌னை சாதுர்ய‌மாக சில நாடுக‌ள் ம‌றுத்துள்ளது. உதார‌ணமாக, சீனா, தென் கொரியா, ம‌லேசியா…( இவ‌ர்க‌ளுக்கு எந்த அமெரிக்க மிர‌ட்ட‌லும் ப‌லிக்க‌வில்லை).

    IMF ஒவ்வொருவ‌ருட‌மும், எல்லா நாட்டு பொருளாதார‌த்தை ப‌ற்றியும் அறிக்கை வெளியிடும்( Article 4). இதில் த‌ன‌க்கு வேண்டாத/ மிரட்டலுக்கு பணியாத நாடுக‌ளைப்ப‌ற்றி ந‌ச்சுக்க‌ருத்துக‌ளை உமிழ்ந்துகொண்டிருக்கிற‌து. IMF க‌ட‌ன் கொடுப்ப‌த‌ற்கு, நாட்டின் மேல் போடும் பல condition களை ( அதிக வ‌ரி, விவ‌சாய மான்ய‌த்தை நிறுத்துவ‌து)நாம் தெரிந்துகொள்ள‌வே முடியாது. 1966ல் அமெரிக்காவில் வ்ந்த த‌க‌வ‌ல் உரிமை ச‌ட்ட‌ப்ப‌டியும், பல அமெரிக்க‌ர்க‌ளுக்கே இந்த IMF அல்வா கொடுத்துக்கொண்டிருக்கிற‌து.

    ஆகையால் 1991ல் இந்தியாவுக்கு வ‌ந்த பிர‌ச்சினையை, 1980லிருந்துதான் பார்க்க‌வேண்டும். மிக த‌ந்திர‌மாக கட‌னை வாங்குவ‌த‌ற்கு எல்லாவித நெருக்க‌டிக‌ளையும் உருவாக்கி, பல condition ளோடு (பன்னாட்டு கம்பெனிகளுக்கு கதவை திறந்தது) கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

    இப்ப‌டித்தான், எல்லா மூன்றாம் உலக நாடுக‌ள் பெரிய இடியாப்ப சிக்க‌லில் மாட்டிக்கொண்டுள்ளது. இதிலிருந்து விடுப‌டுவ‌த‌ற்கு, அவ‌ர‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய உத்திக‌ளை சொல்கிறார்க‌ள்.

    போன மறுமொழியில் நான் எழுப்பிய பல அறம் (Ethics) சார்ந்த கேள்விகளுக்கு, எள்ளவும் உள்வாங்கி ஆராயாமல், உங்கள் புறங்கையால் ஒதுக்கித்தள்ளி, பொருளாதாரத்தை வேதியிலோடும்,இயற்பியலோடும் ஒப்பிட்டு கேணத்தனமான வறட்டு சித்தாந்தம் பேசுகிறீர்கள்.

    தயவு செய்து, அருண் ஷோரி, குருமூர்த்தி குப்பைகளை படித்துவிட்டு அரைவேக்காடு பொருளாதாரம் பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  27. மண்ணுக்கேற்ற மார்க்சியம் பெரியாரியலா என்ற கேள்வி எல்லாம் அப்பறம் இருக்கட்டும். முதலில் மார்க்சியமே பார்ப்பன எதிர்ப்பிற்கான நடைமுறை சித்தாந்தம் கிடையாது என்கிற போது மண்ணுக்கேற்ற மார்க்சியம் எது என்கிற கேள்வியே இல்லையே. பார்ப்பானை எதிர்க்கின்ற வகையில் இந்த மண்ணுக்கே மார்க்சியம் ஏற்றது இல்லை என்கிற போது எங்கே அந்தக் கேள்வி எழுகிறது. உணர்ச்சிவசப்பட்டு கோவப்பட வேண்டாம். வேண்டுமென்றால், கம்யூனிச சித்தாந்தத்தின் பல்வேறு பள்ளிச் சிந்தனைகளையும் ஆராய்ந்துவிட்டு அதைக்கொண்டு போய் அக்ரகாரங்களில் அவா இவா கிட்டேயெல்லாம் நன்றாக விளக்கிவிட்டு ‘வாங்கோ மாமா, பார்ப்பன பாசிசத்தையும், சமஸ்கிருத பண்பாட்டு ஆதிக்கத்தையும் எதிர்த்து வீழ்த்துவோம்’ என்று சொல்லி ஒரு கூட்டத்தைக் கூட்டி வாருங்கள். நடைமுறைப்பட்டு வருகிறதா என்று பார்ப்போம். நடைமுறையில் செய்யமுடிகிறதா என்று பாருங்கள். எனவே நடைமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது கம்யூனிஸ்டுகள் தான். தில்லைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டு ஓட்டுக்கட்சிகள் யாரும் உங்களோடு சேர்ந்து இருக்க மாட்டார்களே! ஏனென்றால் அவர்கள் பார்ப்பான் என்றச் சொல்லைக்கூட உச்சரிக்க மாட்டார்கள். இது தானே எதார்த்தம். கம்யூனிசம் எழுந்த சமூகம் அப்படிப்பட்டது. “சதிக்கென்றே ஒரு சாதி இந்தியாலதான்” என்கிறார் பெரியார்.
    பார்ப்பனச் சாதியே அப்படிப்பட்ட சாதி தான். அம்பேத்கார் சொல்கிறார், “தனது புத்திசாலித்தனத்தைப் பிற சமூக மக்களை அடிமைப்படுத்துவதற்கென்றே விபச்சாரத்திற்கு விட்ட ஒரே சாதி பார்ப்பன சாதி தான்”. இதை எந்தக் கம்யூனிச சித்தாந்தந்தால் விளக்க முடியும்? விளக்குவது எல்லாம் காகிதத்தில்.
    பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை எரிப்பது என்பது ஒரு போராட்ட வடிவம் தான். ஏற்றுக்கொள்கிறேன். அது எதை முன்னிறுத்துகிறது? எந்த அரசியலை முன்னிறுத்துகிறது? எந்த சித்தாந்தத்தை முன்னிறுத்துகிறது? வர்க்க அரசியல். கம்யூனிச சித்தாந்தம். ஆக ஒரு போராட்டடம் எப்பொழுது மக்களிடையே அங்கீகாரம் பெறும்? அந்த சித்தாந்தம் அங்கீகாரம் பெற்றிருந்தால் தான், அந்த அரசியல் எடுபடும். அப்பொழுது தான் அந்தப் போராட்டம் வெற்றிபெறும். ஆக விளைவு என்னானது. பல தோழர்களே இதை ஏற்றுக்கொள்ளும் இயங்கையல் எதார்த்தத்தில் இல்லை. மக்கள்? பெரியாரியல் போராட்டத்தின் போக்கு தில்லையில் எப்படியிருக்கிறது என்பதை இதனோடு ஒத்துப்பாருங்கள். அந்தப் போராட்டத்தில் பெரியாரிலும் அதன் ஆதரவுக் காரணிகளும் தான் முன்னின்றன. விளைவு? கம்யூனிச சித்தாந்தவாதி ஜார்ஜ் பொலிட்சர் சொல்வது போல எந்த சித்தாந்தமும் நடைமுறைக்கு ஒத்துவரவேண்டும். பெரியாரியல் கம்யூனிசத்திலிருந்து வேறுபடுகிற முக்கியமான இடம் இந்த நடைமுறைச் சிக்கல்தான். ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் இருக்கும் சித்தாந்தமும் அரசியலும் மக்களிடையே எடுபடவில்லையென்றால் அந்தச் செயல் வெற்றிபெறாது. இதுவும் ஜார்ஜ் பொலிட்சர் சொன்னது தான்.
    பார்ப்பன எதிர்ப்பிற்கு நீண்ட மரபு இருக்கின்றது. ஆனால் அதன் உக்கிரமான வடிவம் பெரியார். அதுவும் தமிழ்நாட்டில் பெரியார் தானே இருக்கிறாரு. அதனால் தான் பெரியாரை உங்கள் அடையாளக் குறியீடாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறேன். பெரியாரை படிக்காமல் கம்யூனிசத்தை இந்தியாவில் புரிந்துகொள்ள முடியாது. பெரியாரியல் போராட்டத்தைக் கையில் எடுத்த ம.க.இ.கவைப் பாராட்டுகிறோம். அதில் இருவேறு கருத்து இல்லை. ஆனால் அவர்கள் அதனை கம்யூனிச முகமூடியில் செய்வது தான் எதார்த்தமாக இல்லை. இந்தப் போராட்டங்கள் அது தொடர்பான வெற்றி மேடைகள் அவற்றில் கம்யூனிச மூலவர்கள் சம்பிரதாயத்திற்காக உட்கார்ந்திருப்பது பொருத்தமாக இல்லை. பார்ப்பன சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக நீங்கள் பயன்படுத்திய கருவிகள் எதுவுமே மேடையிலே இல்லையே. பெரியார்தாசன் வந்து பேசும்போது பெரியார் படம், அம்பேத்கார் படம் இருந்தால் என்ன தப்பு? தமிழ்நாட்டிலே அவர்களைவிட்டால் வேற யாரு படத்தை வைக்கிறது? ஜோதிபா பூலே படத்தை வைக்கலாம். நமது மரபை மறப்பது தவறு. திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவது எந்த வகையில் நாகரீகமானது? நீங்களே அந்த வகைப் போராட்டத்தை தானே முன்னெடுத்தீர்கள், அந்தச் சமூகக் காரணிகளைத் தானே பயன்படுத்தினீர்கள்.
    மம்தா பானர்ஜீயின் ‘நந்திகிராம்’ போராட்டத்திற்கு மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி அடித்தளம் தான் உதவியிருக்கின்றது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. மம்தாபானர்ஜீயை நக்சல்பாரியென்று சொல்லப்படவில்லையே. கவனமாக விமர்சனம் செய்யுங்கள்.
    மேற்கு வங்கத்தில் நக்சல்பாரிகளாக இருந்து அதில் ஒரு சாரார் தேர்தல் அரசியலுக்கு வந்து பின்பு ஆட்சியையும் பிடித்து அதே நக்சல்பாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சாரு மஜூம்தாரையே கொன்றார்களே, இது எதன் குற்றம். கம்யூனிச சித்தாந்தத்தின் குற்றமா அல்லது நக்சல்பாரி போராட்ட முறையின் குற்றமா அல்லது ஓட்டுக்கட்சி தேர்தல் அரசியலின் குற்றமா? அப்படித்தான் ஓட்டுக்கட்சி அரசியலுக்குப்போன தி.மு.கவின் நிலையானது. இந்த வகையில் பெரியாரியலை ‘ஆளையே மயக்குகின்ற’ ஆனந்த விகடனில் குறை சொல்ல தோழர் மருதையனுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?
    அடுத்தது, சுபாஷ் சந்திரர் பிரச்சனை. மேற்குலக முதலாளித்துவ நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் உதவி கேட்டதன் பேரில், தனது நாட்டை, நாசி இட்லர் அடுத்ததாகக் குறி வைப்பான், தாக்குகிறான் என்பது தான் இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுடனான கூட்டுக்கு முக்கிய முகாந்திரம். சுபாஷ் சந்திரரின் முதல் தெரிவு சோவியத் தான். எனவே சுபாஷ் மிகச் சரியான திட்டம் தான் போட்டிருக்கிறார். “தனது கூட்டாளியான பிரிட்டனை எதிர்க்கும் போராளியாக சோவியத்திற்குள் வரக்கூடாது” என்று சுபஷ் சந்திரருக்கு விசா மறுத்தது சோவியத் ரசியாய். ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் ஏன், விடுதலைப் போரின் வீரமரபிற்காக எடுத்த தஞ்சை விழாவில் வெளியிடவில்லை. ஏனிந்த மௌனம். இந்த மவுனத்தின் சதி என்ன? இந்திய நாட்டின் விடுதலைப் போருக்கான உதவி மறுத்த ஸ்டாலினின் சோவியத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். நிலைமை இப்படியிருக்க ஏன் ஸ்டாலினின் உருவப்படத்தை இந்திய விடுதலை மரபைக் கொண்டாடும் போது மேடையில் வைக்க வேண்டும்? ஆனால் ஸ்டாலின் அரசு கைவிரித்த நிலையில் உலகமே இரண்டு துருவங்களாகப் பிரிந்த நிலையில் தனது நாட்டின் விடுதலையை முன்வைத்து ஜெர்மனி ஜப்பானை இராணுவ உதவி கேட்டது என்பது நாசிகளின் கொள்கையோடு சுபாஷ் சமரசம் கொண்டுவிட்டார் என்றல்ல. ஸ்டாலின் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டா இங்கிலாந்துடனும் அமெரிக்காவுடனும் கூட்டு சேர்ந்தார்? இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கா ஏகாதிபத்திய அமெரிக்காவாக உருவெடுத்தது. அதற்கு சரியோ தவறோ ஸ்டாலினின் கூட்டு உதவிகரமாக இருந்தது. இது எதார்த்தம். உலக வரலாற்றுச் சூழலில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் தலையெடுத்தது. இரண்டாம் உலகப் போரில் வீழ்த்தப் பட்ட நாடுகளையெல்லாம் சுடுகாட்டில் பேய்கள் பிணங்களைப் பங்குபோட்டதைப் போல அய்ரோப்பிய முதலாளித்துவ நாடுகள் பங்குபோட்ட நிகழ்வில் ‘வார்சா’ என்ற வடிவில் சோவியத்தும் கலந்துகொண்டது. ஜெர்மனி கிழக்கு ஜெர்மனியாக வார்சாவின் பிடிக்குள் வந்தது. உண்மையில் ஜெர்மனியின் மிகவும் நுட்பமான பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் களவாடப்பட்டன. சோவியத்தும் அதில் கலந்துகொண்டது என்பது வரலாறு. ராக்கெட் தொழில் நுட்பம் ஜெர்மனியிலிருந்து தான் களவாடப்பட்டது. அதைப் பயன்படுத்திப் பின்னாட்களில், அமெரிக்காவும் ரசியாவும் விண்வெளியில் வலம்வந்து வல்லரசாகளாகக் காட்சியளித்தன. கிழக்கு ஜெர்மனி மிகவும் கேவலப்பட்டதொரு நிலைக்குத் தள்ளப்பட்டது. நேடோவின் பிடியிலிருந்த மேற்கு ஜெர்மனி பொருளாதார வல்லரசாக முன்னேறியது. இரண்டு ஜெர்மனிகளும் இணைந்த பின் தான் கிழக்கு ஜெர்மனி தப்பித்தது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அத்தனை ஆண்டுகளும் தங்கள் உறவுகளை அண்டமுடியாமல் இரண்டு ஜெர்மனிகளாக அமெரிக்கத் தலைமையிலான நேடோவும், சோவியத் தலைமையிலான வார்சாவாலும் பிரிக்கப்பட்டதால் ஜெர்மானியர் நொந்தனர். உண்மையில் ஒரு கம்யூனிச அகிலம் அமைக்க வேண்டுமென்ற ஆவலை விட ஸ்டாலினுக்கு சோவியத்தை சர்வவல்லமை படைத்த வல்லரசாக மாற்றவேண்டுமென்ற ஆசையே மேலோங்கியிருந்தது. இரண்டாம் உலகப்போரில் ரசியாவைத் தாக்கிய ஜெர்மனியை வீழ்த்திய ஸ்டாலின், பிற கூட்டணி ஏகாதிபத்தியங்களோடு சேர்ந்துகொண்டு ஜெர்மனியின் அறிவியல் தொழில் நுட்பங்களை எங்ஙனம் பங்குபோடுவது என்பதில் தான் கவனம் செலுத்தினார். அதற்கு அவர்களின் கூட்டணியும் தேவைப்பட்டது. ஏனெனில் அதைப் பயன்படுத்தி பிற ஏகாதிபத்தியங்கள் தம்மைவிட சர்வவல்லமை படைத்ததாக ஆகிவிடக்கூடாது என்ற கவனம் அவரிடம் இருந்தது.

  28. சிங்காரம் சார்

    இந்ந சிதம்பரத்துல தெற்குவாசல் அடைபட்டு கிடக்குறது பெரியார் காலத்துலயே இருக்குன்னு நினைக்கிறேன். பெரியாரியல் அது இதுன்னு சொன்னீங்க•.. எனக்கு தெரிய பெரியார் இதப்பத்தி ஏதாவது பேசின மாதிரியும்
    போராடுன மாதிரியுமே தெரியல•..
    அதுனால என்ன சொல்றேன்னா… பெரியாரே பாப்பான எதிர்க்க வழியில்லாம தன்னோட பின்பற்றுற சிலருக்கு மாத்திரம் பாப்பான்ட சேராதன்னு அறிவுரை சொன்ன மாதிரி படுதே… அப்புறம் எப்படி மத்தவங்கள கணக்குல சேக்குறதுன்னே எனக்கு தெரியல‌

  29. // வேறு எப்படி இருக்க முடியும் என்பதை சித்திரம் போட படம் வரைந்து காட்ட முடியாது. எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மக்கள் போராடி அதை பெற வேண்டும். அதுதான் தீர்வு. //

    இது எப்படி இருக்கு தெரியுமா? நம்ம இந்த இடத்திலிருந்து கிளம்புணும், ஆனால் எங்கே போக வேண்டும் என்று தெரியாது. எல்லாரும் பஸ்ஸில் ஏறுங்கள் என்று சொல்லும் டிரைவருக்கு சமமானது.

    வேறு எப்படி இருக்க வேண்டும் என்று சித்திரம் போடத் தேவையில்லை. ஆனால் வரையறுத்துக் காட்ட முடியும். அவ்வாறு வரையறுத்துக் காட்டி அதை சாதித்தும் காட்டக் கூடியவர்களின் பின்னால்தான் மக்கள் ஒன்று திரள முடியும்.

    இல்லாவிட்டால் இது ஏமாற்று வேலையாகத்தான் முடியும்.

  30. //உரிமைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வாக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பெயர்தான் ஜனநாயகமா..?//

    உரிமைகள் மறுக்கப்பட முடியாத ஜனநாயகத்தை வரையறுத்துக் காட்டுங்கள்.

  31. //இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தி போராடுவதன் வழியாகத்தான் மாற்றை நாம் கண்டறிய முடியும். //

    அம்பலப்படுத்திப் போராடுங்கள், அதில் தப்பே இல்லை. ஆனால் மாற்று ஒன்றை ஏற்பாடு செய்து விட்டு அது பற்றி பேசலாம்.

    புதிய வீட்டை தயார் செய்யாமல் ஏற்கனவே இருக்கின்ற வீட்டை இடிக்க தயாராக வேண்டாம்.

  32. //விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் அவர்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்கங்கள், சாதிகள் தங்களை பிரதிநிதித்துவப் படுத்தும்போது மட்டும்தான் அங்கு ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்படும்//

    அதேபோல மற்ற பிரிவுகள், சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் தரவேண்டும் அல்லவா? அல்லது அவர்களுக்கு எந்தவித பிரதிநிதித்துவமும் வேண்டாமா?

  33. // அதில் ஆலைகள் அனைத்தும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும், தொழிலாளர்களாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.//

    இதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே? அரசாங்கத்தின் வசமுள்ள ஆலைகள் என்ன லட்சனத்தில் செயல்படுகின்றன என்று.

  34. // சட்டம் இயற்றுவது சட்டமன்றம், சட்டத்தை அமுல்படுத்துவது அதிகார வர்க்கம்.//

    முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. சட்டத்தை இயற்றுவது சட்டமன்றம். அதனை அமல்படுத்துவது சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்த அரசியல் தலைவர் மற்றும் அவரால் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் தலைமையிலான அரசாங்கம்.

  35. // கோர்ட் உள்பட அனைத்துமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக, மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதாக, அவர்களுக்கு பதில் அளிக்க கடமைப் பட்டதாக இருக்க வேண்டும்.//

    இது அராஜக நிலை ஏற்பட வழி வகுக்கும். நீதித்துறை நிர்வாகிகளை நீதித்துறை சார்ந்தவர்களே தேர்ந்தெடுக்க வழி செய்யலாம். அல்லது அவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கலாம். அப்படி தேர்ந்தெடுத்தால் மக்கள் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. நீதித்துறையே அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக இருக்க வேண்டும்.

  36. //அப்படி ஒரு மாற்றுதான் ஏற்கெனவே கம்யூனிச நாடுகள் என பொதுவாக அழைக்கப்படும் ரஷ்யாவிலும், சீனாவிலும் அமுலில் இருந்தது.//

    இவைதான் தோற்றுப் போய்விட்டனவே, அரசியல் சுதந்திரமே இல்லாத நாடுகளில் எப்படி ஜனநாயகம் இருந்திருக்க முடியும்? ஏன் இந்த நாடுகளால் அரசியல் சுதந்திரம் தர முடியவில்லை.

    இதிலிருந்து இவர் ஒரு கம்யூனிஸ்ட் ஜால்ரா என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

  37. //ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது கம்யூனிசத்துக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவு மிகச் சாதாரண விஷயம்.//

    இது சாதரண விஷயமெல்லாம் கிடையாது. இந்த கருத்தே தவறானது என்பதை நிரூபிக்கும் விஷயம். இது பின்னடைவும் கிடையாது நிரந்தர சமாதிதான்.

  38. // ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து, இனி தோற்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை செய்ய வேண்டும். ‘அதான் தோத்துடுச்சே, தோத்துடுச்சே’ன்னா நேபாளத்தில் எப்படி வென்றது?//

    கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் ஏன் தோத்துப் போச்சு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க