Friday, August 19, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

-

நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது  மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

நித்தியானந்தா-1
ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா

இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா.  மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்?  மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு சாதாரண பக்தர்களைவிட, மற்ற பிற ஆதீனங்களும், மடங்களும், இந்து மதத்தின் காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் வானரப் படைகளும்தான் அதிர்ந்து நிற்கின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவை,  தனிப்பட்ட ஓட்டுக்கட்சிகள், அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடாகக் குறுக்கிக்காட்டி, ‘ஆயினும் ஜனநாயகம் புனிதமானதே’ என்று முதலாளித்துவக் கும்பல் மக்களை ஏய்த்து வருவதைப் போலவே, ஆன்மீகச் சீரழிவான நித்தியானந்தா விவகாரத்தை, மதுரை ஆதீனத்தின் புத்தி சுவாதீனமற்ற செயலாகக் காட்டுவதன் மூலம் இந்து மதத்தின் புனிதத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் இந்து மதக் காவலர்கள்.  ஆனால், தற்போதைய மதுரை ஆதீனமான அருணகிரி, “தான் நித்தியானந்தாவைத் தேர்ந்தெடுத்தது சிவபெருமானின் ஆணை” எனக் கூறி, சிவபெருமானையும்சாட்சிக் கையெழுத்துப் போட வைக்கிறார்.

பெங்களூருக்கு அருகேயுள்ள பிடதி கிராமத்தில் தனி மடம் நடத்திவரும் நித்தியானந்தா சித்தர் மரபைப் பின்பற்றுபவர்; அவருக்குச் சைவ மரபுகள் ஒத்து வராது என மென்மையான கண்டனம் தொடங்கி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை மதுரை ஆதீனமாகப் பட்டம் சூட்டக் கூடாது என்பதுவரை நித்தியானந்தாவின் தேர்வுக்கு எதிராகப் பல்வேறுவிதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.  இவற்றுக்கு நடுவே, ‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்திருப்பதாகக் கூறிக் கொண்டு திரியும் இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாகத் தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.

‘‘இந்த நியமனம் தவறு என்று நாம் ஆரம்பித்தோமானால், ஒரு மடத்தின் ஒரு நியமனம் பற்றிப் பேசுவதோடு நாம் நின்றுவிடுவோமா?  அல்லது ஒவ்வொரு மடத்திலும் எப்படிபட்ட ஆதீனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்களுக்குள்ள தகுதிகள் என்ன என்றெல்லாம் ஆராயத் தொடங்குவோமா? அதன் பிறகு மடங்கள், முனிசிபாலிட்டிகள் மாதிரி விமர்சனத்துக்கு உள்ளாகுமே தவிர, மத ரீதியான அமைப்புகளாக மதிக்கப்படாது” எனக் கூறி, நித்தியானந்தா விவகாரத்தை ஜீரணித்துக் கொள்ள வேண்டுமென பக்தர்களுக்கும், பிற ஆதீனங்களுக்கும் அறிவுரை வழங்குகிறார், துக்ளக் சோ.

தன்னையும் நித்தியானந்தாவையும் இணைத்துப் பேசிய காஞ்சி மட சங்கரனை ஏற்கெனவே கோர்ட்டுக்கு இழுத்துவிட்டார், நடிகை ரஞ்சிதா.  தண்டத்தை மடத்திலேயே போட்டுவிட்டு, ஒரு பெண்ணுடன் தலைக்காவிரிக்கு ஓடிப்போன ஓடுகாலி சங்கராச்சாரிக்கு ஒரு நீதி, நித்தியானந்தாவுக்கு ஒரு நீதியா என்றெல்லாம் எதிர்க்கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.  நித்தியானந்தாவை வம்புக்கு இழுத்தால், பார்ப்பன மடங்களின் யோக்கியதையும் சந்திக்கு வந்து விடும்; அதற்கும் மேலாக இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கமே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதால்தான் இவ்விவாகாரத்தில் இந்து முன்னணிக் கும்பல் அடக்கி வாசிக்கிறது.

அதேசமயம், திருவாடுதுறை, தருமபுரம், குன்னக்குடி உள்ளிட்ட பிற ஆதீனங்கள், காங்கிரசு பெருச்சாளியான நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சி, தேவர் தேசியப் பேரவை உள்ளிட்ட கும்பல் அமைத்துள்ள மதுரை ஆதீன மீட்புக் குழு நித்தியானந்தாவின் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.  மதுரை ஆதீன மடத்தில் ஏற்பட்டுவிட்ட ஒழுக்கக்கேட்டை எதிர்ப்பது போல இவர்கள் காட்டிக் கொண்டாலும், இக்கும்பலின் எதிர்ப்பின் பின்னே சைவ வேளாள சாதி வெறியும், சொத்து கைநழுவிப் போகிறதே என்ற ஆத்திரமும்தான் உண்மையில் அடங்கியுள்ளது.

மதுரை ஆதீன மடம் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது; 1,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்று கூறப்படுவதற்கெல்லாம் வரலாற்று ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, அம்மடத்தின் வசம் ஏறத்தாழ 1,500 ஏக்கர் அளவிற்கு வளமான விளைநிலங்கள் உள்ளன; மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் மடத்திற்குச் சொந்தமான 80 கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.  கடை வாடகை, நிலம், மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில் வருமானம் என ஆதீனத்தின் சொத்துக் கணக்கு 1,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன.

ஆதீனத்தின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தி அனுபவித்து வரும் ஒரு ஏழு பேரிடமிருந்து அச்சொத்துக்களை மீட்கப் போவதாக நித்தியானந்தா சவால் விட்டிருப்பது; அவரது பட்டமேற்புக்குப் பிறகு மடத்திற்குள் எழுந்துள்ள பூசல்கள்; மடத்திற்குள் நடந்த வருமான வரிச் சோதனை; ஆதீனத்திற்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துக்களைக் கையாளவோ, அவைகளில் தலையிடவோ நித்தியானந்தாவிற்குத் தடை விதித்து அளிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு  என இவை அனைத்தும் ஆதீனம் அருணகிரிக்கு நெருக்கமாக இருந்த பழைய கும்பலுக்கும் புதிதாக மடத்திற்குள் புகுந்துள்ள நித்தியானந்தா கும்பலுக்கும் இடையே சொத்துத் தகராறு தொடங்கிவிட்டதையே காட்டுகின்றன.

ஆலயத்திற்குள் சாதி  தீண்டாமை பாராட்டக் கூடாது; அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துவரும் 21ஆம் நூற்றாண்டில், தருமபுரம், திருவாடுதுறை உள்ளிட்ட ஆதீனங்களும், சைவப் பிள்ளைமார் சாதி வெறியர்களும், குறிப்பாக அச்சாதியைச் சேர்ந்த பிற்போக்கு நில உடைமைக் கும்பலும், “சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13 சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான் ஆதீனமாக வரமுடியும்; நித்தியானந்தா முதலியார் சாதியைச் சேர்ந்தவர். அதனால் அவரை ஆதீனமாக ஏற்க முடியாது” என வெளிப்படையாகவே சாதிவெறியைக் கக்குகிறார்கள்.  இச்சாதிவெறியை மரபு என்று கூறி நியாயப்படுத்துகிறார்கள்.  சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்வதற்காகவே இந்த ஆதீன மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகப் பீற்றி, இச்சாதி ஆதிக்கத்திற்கு அங்கீகாரம் தேடிக் கொள்ள முயலுகிறார்கள்.

பீற்றிக் கொள்ளப்படும் சைவ மரபு என்பது பார்ப்பனியத்துக்கு வால்பிடிப்பது தவிர வேறென்ன?  தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது; பார்ப்பானைத் தவிர, வேறு சாதியைச் சேர்ந்த எவனும் மணியாட்ட மட்டுமல்ல, மடப்பள்ளிக்குள்ளும் வரக்கூடாது; கருவறைக்குள் தமிழ் நுழையக் கூடாது என்ற ஆகம விதிகள் அனைத்தும் நித்தியானந்தாவின் லீலைகளுக்கு இணையாக அருவெறுக்கத்தக்கவை.

சிதம்பரத்தின் சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிக்க வேண்டும் எனக் கோரி சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவோடு போராடிக் கொண்டிருந்தபொழுது, இந்த ஆதீனங்களுள் ஒருவர்கூடத் தமிழுக்காகக் குரல் கொடுக்கவில்லை. சிதம்பரம் கோயில் சொத்துக்களைத் தீட்சிதர் கும்பல் சுரண்டிக் கொள்ளையடித்து வந்ததைத் தட்டிக் கேட்க இந்த ஆதீனங்களோ, சைவப் பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளோ துணிந்ததில்லை.  மாறாக,  இவர்கள் சைவத்தின் பெயராலும் தமிழின் பெயராலும் பிழைப்பு நடத்தி வந்தார்கள்;  திருட்டு தீட்சிதர் கும்பலுடன் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.

சைவ மடங்களின் பெயரில் இருந்து வரும் பொதுச்சொத்துக்களைத் காலம்காலமாகத் தின்று கொழுத்து வரும் இந்தக் கூட்டத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். நித்தியானந்தா மக்கள் முன் அம்பலப்பட்டுப் போன கயவன், அவரது நியமனத்தை எதிர்க்கும் மற்ற ஆதீனங்களும், ஆதீனங்களுக்கு நெருக்கமான சைவப் பிள்ளைமார் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும் அம்பலமாகாத கயவர்கள்!  ஆதீன மடங்களுக்குள் நுழைய முடியாமல் வீடியோ காமெராக்களை தடுத்து நிறுத்தியிருப்பதனால்தான், இந்த உருத்திராட்சப் பூனைகளின் புனிதம் இதுவரை பாதுகாப்பாக இருந்து வருகிறது.

காஞ்சி சங்கர மடம், மதுரை ஆதீனம் போன்ற பழைய மடங்களோ, நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்ற நவீன குருமார்கள் உருவாக்கியுள்ள புதிய கார்ப்பரேட் மடங்களோ எதுவும் அவர்களே கூறிக்கொள்ளும் ஆன்மீக நெறியை வளர்ப்பதற்காக நடத்தப்படவில்லை.  இவர்கள் பக்தி, ஆன்மீகம் போன்றவற்றை மூலதனமாக்கி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல வியாபாரங்களை நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள்.  சாய்பாபா மடத்தில் நடந்த கொலைகள், சங்கராச்சாரிகள் மீதான பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு, நித்தியானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு, திருவாடுதுறை ஆதீனத்தில் நடந்த கொலை முயற்சி என ஆன்மீக மடங்கள் இந்தியாவெங்கும் கிரிமினல் கூடாரங்களாகச் சந்தி சிரிக்கின்றன.

கொலைக் குற்றவாளியான சங்கராச்சாரி இன்றும் லோக குருவாக வலம் வருகிறார்; நித்தியானந்தா மதுரை ஆதீனமாக முடி சூட்டப்படுகிறார்.  ஊடகங்களுக்கு இது ஒரு விற்பனைச் சரக்கு. மதுரை ஆதீன மட விவகாரத்தில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி, கஸ்தூரி ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதை வைத்து, இந்த விவகாரத்தை ஒரு கிளுகிளுப்பான செய்தியாகத்தான் பத்திரிகைகள் தந்துள்ளன.

மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்

தாங்கள் போற்றிக் கொண்டாடும் மரபு, புனிதம் ஆகியவை புழுத்து நாறியபோதும், இந்நிகழ்வுகளை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஜடங்களாகவே பக்தர்கள் நடந்து கொள்கின்றனர்.  பக்தி என்பதே ஆண்டவனுடன் நடத்தும் பேரமாகவும், மதம் என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு சொல்லும் ஆன்மீக கன்சல்டன்சியாகவும் மாறியுள்ள சூழ்நிலையில், இப்படிப்பட்ட அசிங்கங்களோடு சமாதான சகவாழ்வு நடத்துவதை பக்தர்கள் அறம் சார்ந்த பிரச்சினையாகவே  கருதுவதில்லை போலும்.

அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தக் கூத்துகளைப் பற்றித் தமிழக அரசோ அறநிலையத்துறை அமைச்சரோ வாய்திறக்கவில்லை. தனக்கு அம்மாவின் ஆசி இருப்பதாக நித்தியானந்தா கூறியிருப்பதை வெறும் வாய்ச்சவடால் என்று ஒதுக்கவும் முடியவில்லை. மத உரிமை, மத நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை ஆகிய அரசியல் சட்ட உரிமைகளின் கீழ் தங்களுடைய சொத்துக்களின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை மடங்களும் ஆதீனங்களும் பெற்றிருக்கின்றன.    இத்தகைய அதிகாரத்தின் காரணமாகத்தான் தில்லைச் சிற்றம்பலத்தில்  தமிழ் ஏறுவதற்கும், தீட்சிதர்களின் இடுப்பிலிருந்து கோவில் சாவியை இறக்குவதற்கும்  கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, இந்து மத உரிமையின் பெயரால்தான் அனைத்து சாதியினரும் அரச்சகராகும் உரிமை இதுவரையிலும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

நல்லொழுக்கத்தின் நாட்டாமைகளாக ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் இந்த மதபீடங்கள், தமது சொந்த நடவடிக்கைகள் மூலமாகத் தாமே அம்பலப்பட்டு நாறிய பின்னரும் ஆளும் வர்க்கங்கள் இவர்களைக் கைவிடுவதில்லை.  தங்கள் கைவசம் இருக்கும் பல்லாயிரம் கோடி சொத்துகள் மூலமும், ஆளும் வர்க்கங்கள் மற்றும் சாதி ஆதிக்க சக்திகளுடன் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணியின் மூலமும் தங்களுடைய இழந்த செல்வாக்கை இவர்கள் மீட்டுக் கொள்கின்றனர். சங்கராச்சாரி காலையில் கொலை கேஸ் வாய்தாவுக்குப் போய்விட்டு வந்து மாலையில் அருளாசி வழங்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேபோல நித்தியானந்தாவைப் பொருத்தவரை நேற்று படுக்கையறைக் காட்சி! இன்று பட்டாபிஷேகம்!

இந்நிலை நீடிக்க அனுமதிக்கக் கூடாது. மத உரிமை என்ற பெயிரில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும். மன்னர்களால் இந்த மடாதிபதிகளுக்குப் பிடுங்கித் தரப்பட்ட மக்கள் சொத்துகளான நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் உடைமையாக்கப்படவேண்டும். மடாதிபதிகள் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் சாதி சார்ந்த மரபுகள் கிரிமினல் குற்றமாக்கப்பட்டுத் தடை செய்யப்படவேண்டும். நித்தியானந்தா, சங்கராச்சாரி, ஆதீனங்கள் உள்ளிட்ட  கும்பல்கள் ஒழிக்கப்பட்டால்தான் சமூகத்தின் ஒழுக்கம் மேம்படும் என்பதை நாம் மக்களுக்குப் புரியவைக்கவேண்டும்

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  • VINAVU SHOULD EQUALYY QUESTION PROPERTIES HELD BY JAMATHS WHO RECIEVE MONEY FROM SAUDI ARABIA, EVANGELIST MISSIONARIES WHO ARE FUNDED BY WESTERN COUNTRIES AND
   PERIYAR MADAM AT VEPERI HEADED BY HIS HOLINESS VERAMANI

 1. இந்து முன்னணியும் சோ வும் எதிர்த்திருந்தால் அவாள் நித்தி பிராமணன் இல்லை என்பதால் எதிர்க்கிறார்கள் என்று ஒரு பதிவு தேத்தியிருக்கும் வினவு. எப்டியோ உங்க புழைப்பு ஓடுது சாமி…

  • முதல்ல உங்க “காமாலைக்கு” நல்ல டாக்டரா போய் பாருங்க….. என்ன செய்ய என்னதான் நீங்க முட்டுகுடுத்து நிறுத்தினாலும் முடியலையே, மேட்டர் ரொம்ப நாறிடுத்து……

 2. // இவற்றுக்கு நடுவே, ‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்திருப்பதாகக் கூறிக் கொண்டு திரியும் இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாகத் தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள். //

  வாங்கடா வாங்க.. என்று நித்தி வரிந்து கட்டிக் கொண்டு வூடு கட்டுவதைப் பார்த்து, குறைந்தபட்ச சேதாரத்துடன் தப்பிக்கலாம் என்று ’இந்து மத நலனுக்கு’ என்று ஜகா வாங்கிட்டார் சோ வாத்தியார்.. ஆசிரமத்துக்கு சீல் வைத்த கர்நாடக அரசைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

  // நித்தியானந்தாவை வம்புக்கு இழுத்தால், பார்ப்பன மடங்களின் யோக்கியதையும் சந்திக்கு வந்து விடும்; அதற்கும் மேலாக இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கமே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதால்தான் இவ்விவாகாரத்தில் இந்து முன்னணிக் கும்பல் அடக்கி வாசிக்கிறது. //

  வீதியிலும், வீடுகளிலும் இந்துக்கள் இந்தக் கோமாளிகளை சீரியல்களில் வரும் டுபாக்கூர் கதாபாத்திரங்களாகத்தான் நினைக்கிறார்கள் என்று வினவுக்குத் தெரியாதா ? இந்து மதமே இடிந்து விழுந்து கொண்டிருப்பதைப் போல பில்டப் கொடுப்பது சரியா..??

  இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கம் என்பது மடாதிபதிகளாலோ, ஆதீனங்களாலோ, இந்து மத அமைப்புகளாலோ, சோ போன்றவர்களாலோ பாதுகாக்கப்படும் வஸ்துகளில் ஒன்று இல்லை என்று பெருவாரி இந்துக்களுக்குத் தெரியும்..

  • நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை, அதிலும் //போன்றவர்களாலோ பாதுகாக்கப்படும் வஸ்துகளில் ஒன்று இல்லை என்று பெருவாரி இந்துக்களுக்குத் தெரியும்//.

   துக்ளக்கில் சோ கூறியது: “நித்யானந்தா செய்தது குற்றம், அவரை ஆதீனமாக நியமித்தது இன்னொரு பின்னணி உள்ள ஒருவர். இவர்கள் அடிக்கும் கூத்தில் நடுவே நாம் புலம்பிநாலோ அல்லது இவர்களை தூக்கி உள்ளே போட்டாலோ, ஏற்கனவே தமிழ்நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் சைவ நெறி காப்பற்றபடவா போகிறது”. இது நியாயமான வார்த்தை தான். ஆனாலும் இதே கேள்வியை அவர் ஜெயேந்திரரை பார்த்து கேட்கவில்லை.

  • அம்பி,

   மதங்களில் கடவுளைத் தேடமுடியாது என முன்பு நான் சொன்னது எவ்வளவு சரியாக இருக்கிறது பார்த்தீர்களா? மதங்களில் புனிதம் என்று ஒன்றும் இல்லை. மதங்கள் அனைத்தும் டுபாக்கூர். சாமியார் என்பது ஒரு தொழில். அந்த தொழிலிற்கு கடவுள்தான் மூலதனம். இந்த சாமியார்கள் பலமுறை அம்பலப்பட்டும், அசிங்கப்பட்டும் மக்கள் அவர்கள் பின்னே செல்வது மக்களுக்கு கடவுள் ஒரு போதைப் பொருளாக ஏற்றப்பட்டிருக்கிறார்.

   • சந்தானம்,

    // மதங்களில் கடவுளைத் தேடமுடியாது என முன்பு நான் சொன்னது எவ்வளவு சரியாக இருக்கிறது பார்த்தீர்களா? //

    எங்கே தேட விடுகிறார்கள்..?!

   • எல்லா விஷயத்துலயும் உண்மை போலி எல்லாம் இருக்கு, பொதுவா எந்த கருத்தையும் சொல்ல முடியாது.

    கஞ்சி மடத்தோட பலம் பல முதலாளிகளின் பணத்தை கை இருப்பாக வைத்து கொண்டு அதைய சீராக முதலீடு செய்வது தான்.

    சங்கர் நெதரலய என்ற நிறுவனத்தால் பயன் அடைந்தவர் எதனை பேர்.

  • ////இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கம் என்பது மடாதிபதிகளாலோ, ஆதீனங்களாலோ, இந்து மத அமைப்புகளாலோ, சோ போன்றவர்களாலோ பாதுகாக்கப்படும் வஸ்துகளில் ஒன்று இல்லை என்று பெருவாரி இந்துக்களுக்குத் தெரியும்..////

   நீங்கள் தான் அம்பி இப்படி சொல்கிறீர்கள் மோடியிலிருந்து ஜெயலலிதா, தினமணி வைத்தியநாதன் வரை எல்லோரும் சோவை மிகப்பெரிய இந்து அறிவாளியாக மதிக்கிறார்கள், உண்மையா இல்லையா ? இந்து மதத்திற்குள் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் உடனே அதை ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கை போல செயல்படுவது யார் ? சங்கராச்சாரிகளை எல்லாம் முந்திக்கொண்டு அந்த வேலையை செய்பவர் சோ தான் எனவே சோவை அப்படி எளிதாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது அம்பி.

   • அம்பேத்,
    இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கம் எந்த தனிமனிதரையோ, நிறுவனத்தையோ சார்ந்திருக்கவில்லை என்ற பொருளில் கூற வந்தேன்.. இந்துத்துவ சிந்தனை, செயல்பாடுகளில் சோ வின் பங்கை குறைவாக மதிப்பிடும் எண்ணத்தில் அல்ல..

 3. The alleged actions of Nithyanandha, Jayendra Saraswathi etc are to be condemned….
  But the Saiva Sidhantham, Hindu Dhrmam etc. are vey old …SANATHANAM…and there is no connection between these
  and to the actions of Nithi/ Sankacharya…
  The article unnecessarily included the message that Matts run Brahmins will also be involved if Nithi is crisised…
  Those who eat salt will hav to drink water…whether it is Nithi or Jayendra saraswathi…What vinavu has to say?

 4. Vinavu should know the fact that Saiva Siddhantham, Sanathana Hindu Dharma etc are very old and not related to a particular community for ex. Brahmin….
  Nithi/ Jayendra shall reap what they had sowed….

 5. நான் ஒரு பிராமணன். ஹிந்து மதத்தின் உயர்வுகளை மதிப்பவன். சக மனிதன் படும் துன்பத்தை பார்த்து வருந்துபவன். சாதி கொடுமைகளை பார்த்து என் முன்னோர்கள் செய்த செயல்களை அறிந்து வெட்கபடுபவன் (பிற சாதிகளையும் மதத்தையும் பற்றி நான் பேச வரவில்லை) . இந்த பதிவில் உள்ள அதனை வார்த்தையும் உண்மை, கசக்கத்தான் செய்யும். நாள்பட, எல்லோரும் உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்.

 6. According to arunagiri of Madurai adheenam, he anointed Nithyananda as his junior due to the dictates of shiva peruman. For arguement sake, if siva really come to this world and give a press interview informing the people that he never said anything to Madurai adheenam, these mutt/religious heads, cho etc., would demand proof from him as to his authenticity as real siva. Infact I have the gut feeling that these traditional samiyars and corporate samiyars are practical atheists. While the real atheists use philosophical arguements to reject the existence of god, these samiyars indulge in all unethical actions unbecoming of these saviours of hindu gods and hindu dharma ( It applies to heads of other religious systems too) They are aware that no god would come from heaven to punish them. So they want to enjoy all worldly pleasures under saffron robes clearly knowing that there is no heaven or hell. For the believers religion is a sigh of the oppressed . But for these agents of god religion, can be given as opium to the vulnerable followers to keep them as their captives. Pardon me MARX for quoting your prophetic statement-K.S.Sundaram

 7. எப்பபார்த்தாலும் நித்தியாநந்தனை திட்டிகிட்டே இருக்காங்களே,

  நித்தியாநந்தா என்ன தப்பு செய்தான்?

  முருகன் என்ற கடவுள் தன் மனைவி இருக்கும்போதே இன்னொருபெண்ணை திருமணம் செய்த மகா மட்டமானவன், விநாயகர் + மனைவியின் கதையை வெளிய சொல்லக்கூட முடியாத அளவுக்கு கொச்சையானது,
  கிருஷ்ண பரமாத்மா இருக்கானே…. து….
  பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்தவன், பெண்களின் ஆடைகளை ஒழித்துவைத்துக் கொள்ளுவது, திருடுவது தான் பொழுதுபோக்கு,
  சிவன் தன்மனைவியை விரட்டி விரட்டு கற்பழித்த கயவன்,
  இன்னும் எத்தனை இழிவான செயல்களில் கடவுள்களே இருக்கும்போது அதைவணங்கும் பக்தன் எப்படி இருப்பான்? பார்க்கப்போனால் அந்த கடவுள்களைவிட நித்தி எவ்வளவோ நல்லவன்….

  • திவா, ஹிந்து மதம் இது போன்ற பல கதைகளை கொண்டது. ஹிந்து மதத்தின் உட்கருத்து வேறு. ஒளி ரூபமாகக்கூட கடவுளை வழிபடலாம். நாம் இன்று பார்ப்பது, கேட்பது பல நடுவில் புகுத்தப்பட்டது. உங்கள் அர்த்தத்தில் தவறொன்றுமில்லை, ஆனாலும் இதனால் நித்தியை உத்தமன் என்று கூற முடியாது.

  • என்ன திவாகரா உம்முடைய 7 ஆம் அறிவை வைத்து உலகில் உள்ள அனைத்து மதத்தையும் விமர்சனம் செய்யலாமே? ஏன் சிறுவட்டத்துக்குள் சுற்றுகிறீர்…ஏன் பயமா???

   • பொய்யை உண்மைனு சொல்லுவதற்குதான் பயப்படனும் பொய்யை பொய்யுனு சொல்ல ஏன் பயப்படனும். சரி அதவிடுங்க இந்த முருகன் சிவன் ராமன் இந்திரன் பிரம்மன் etc இதையெல்லாம் உங்களால் நம்பமுடியுதா?

    பலர் ஏதோ பயம், அறியாமை காரணமாக இல்லாத கடவுளை இருக்குனு நம்பிக்குட்டு அலையுராங்க ஆனா அந்த கடவுள் எல்லாம் இப்படி ஆபாசமா எழுதி வச்சுருக்காங்களே அதைவிடவா நான் கேவலப்படுத்திட்டேன்?

    கடவுள் இருக்குனு சொல்லுர எல்லா மதமும் பொய்தான் ஆனால் மற்ற மதங்களில் ஓரளுவுக்காவது நேர்மையிருக்குது ஆனால் இந்து மதம் சாதி என்று மனிதர்களை அடிமைப்படுத்தவே தோன்றியது

    • //ஆனால் மற்ற மதங்களில் ஓரளுவுக்காவது நேர்மையிருக்குது//

     னிறக்குருடு போல் இதைத்தான் மதக்குருடு என்பர்…உம்மைச்சொல்லி குற்றமில்லை, இது இன்றுனேற்றல்ல பழங்காலமுதலே தம்மை முற்போக்கு வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் அனைவருக்கும் உள்ள வியாதிதான்….பெரியார், வீரமணி, கருனானிதி, வினவு, ……………இவர்களின் சொந்த வாழ்க்கையை எடுத்துப்பார்த்தால் தான் உண்மை தெரியும் (னாறீடும்) இந்த போலீ முற்போக்குவாதிகளுக்கு போலி சாமியாரே மேல்..

     • பையா அவர்களே….பல ‘முற்போக்குவாதிகள்’ தங்கள் இயக்கங்களை மடம் போன்றே நடத்துகிறார்கள்…

      ஆனால் உங்கள் பட்டியலில் வினவை எடுத்துவிடுங்கள்…புதிய கலாச்சாரம், ஜனநாயகம் கிடைத்தால் படியுங்கள்…

      படிக்க படிக்க உங்கள் கண் திறக்கும்…

 8. ஒரு வகையில் எல்லா மத சாமியார்களும் வெவ்வேறு வகையான வர்க்க பேதங்களை நிலைத்திருக்க உதவுகிறார்கள்…

  அரசியல்வியாதிகளும், வியாபாரிகளும் இவர்கள் காலில் விழும் ரகசியம் இது தான்….

  தீர்க்கதரிசியின் வார்த்தைகள் கீழ்வருமாறு:

  Marx from Wikipedia:
  “Die Religion … ist das Opium des Volkes” ==> religion is the opiate of the masses…

 9. தமிழனாதலால் இதையும் சொல்லியாகவேண்டியுள்ளது….
  பெரும்பாலான தமிழரை ஆட்டிப்படைக்கும் போதைகள் இரண்டு:
  1) மதம் 2) ‘பகுத்தறிவு’ என்ற பெயரில் கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்பு…

  என் ஜாதியை அறிந்த என் நண்பன் திடீரென்று ஒரு நாள் கூறினான் (அவன் முன்பு என் சாதி அறிந்திருக்கவில்லை..இன்னொருவர் மூலம் அறிந்தான்):
  நண்: டேய்..உன் தாத்தா போன்றவர்களினால் என் முன்னோர்களால் படிக்க முடியவில்லை…
  நான்: டீ குடிக்கும்போது இந்த கதையா…சரி உன் சாதி என்ன?
  நண்: …(ஒரு சாதி)
  நான்: உன் தாத்தா என்ன தொழில் செய்தார்?
  நண்: பள்ளிக்கூட வாத்தியார்…தலைமை ஆசிரியர்…
  நான்: படிப்பறிவில்லாத ஆசிரியரா?
  நண்: இல்லை…அவர் பட்டப் படிப்பு முடித்தவர்…
  நான்: அப்போ என் தாத்தா எப்படி தடுத்தார் என்கிறாய்?
  நான்: என் தாத்தாவிடத்தில் பிரச்சினை என்றால் எம லோகத்தில் சென்று கேட்டுக்கொள்… என்னிடம் என்றால் சொல்…
  இன்று வரைநாங்கள்நண்பர்களாய் உள்ளோம்…சாதி இதற்க்குப் பிறகு எங்கள் விவாதங்களில் வந்ததில்லை…

 10. உங்கள் முன்னோர்கள் செய்த பாதகத்தின் விளைவுகள் இன்றும் தொடர்கிறதே. இதற்கு என்ன பரிகாரம் செய்திருக்கிறீர்கள்?

  • தனி மனிதனாக ஒவ்வொருவரும் அவர் அவர் செயலுக்குப்பொறுப்பு…
   என்னால் எந்த பரிகாரமும் செய்ய முடியாது…
   நடந்து முடிந்தவைக்கு செத்தவர்களைத்தான் கேட்க வேண்டும்…
   ஒப்பாரி வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை…
   நடந்தவை நன்றாக இல்லை என்றால் அதை மாற்ற யாராலும் இயலாது…

   நான் என்னளவில் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்கிறேன்…
   எந்த மடத்தையும் சார்ந்தவனில்லை…அதே நேரத்தில் சாதியை வளர்த்தது பிராமனர்கள் மட்டும் என்று நீங்கள் வாதிட்டால் மற்ற சாதி (நாடண்ட என்று கூறிக்கொள்ளும்) மக்கள் கை சூப்பிகளா?

 11. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியப்படையெடுப்பில் வந்தவர்கள் எனக்கூறிக்கொள்ளும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நீங்களும் நானும் கூடத்தான் வந்தோரிகள் என்பதை நீனைவூட்டுகிறேன்.

  இதிகாசக கதைக்களைக் கொண்டு பிரமணர்களை ஆபாசமாய் சித்தரிப்பதை தவிர்ககவும். அக்காலத்தில் அது ஆபாசம் இல்லை வேண்டுமானல் தமிழகத்தின் 15 நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்கள் ஓவியங்கள் கதைகள் அத்தனையும் இக்காலத்தின் படி ஆபாசம்.

  • சரிப்பா கல்லு, பிறகு ஏன் அந்த கருமாந்தரத்தையெல்லாம் கட்டிட்டு அழறீங்க?

   • நாங்க எங்க அழுகிறோம்… நீங்கதான் சாதிக்குள்ள சாதி வைத்து எங்க கழுத்தை அறுக்கிறிங்க….. இரட்டை குவளை வைத்து நீங்கதான் பிரிச்சு வைக்கிறிங்க உசிலம்பட்டி… கொட்டகாந்தில் தலைவர்களை அவமானப்படுத்திரிங்க

    எல்லா கெட்ட செயல்களை நீங்க பண்ணிட்டு பழியை பிராமணன் மீது சுமத்துவதனே உங்கள் வழக்கம்

    • இந்த மாதிரி எல்லாம் பேசுறதுக்கு ஒரு கல்நெஞ்சம்தான் வேண்டும் கல்நெஞ்சம். “இரட்டை குவளை வைத்து நீங்கதான் பிரிச்சு வைக்கிறிங்க” இதுதானே பார்ப்பனீயம். உங்க வீட்டுக்குள்ளார வந்தாமட்டும் சரிசமமா உட்கார வச்சு டீ ஆத்துவீயாக்கும். போயா போய் உன் முதுகப் பாருய்யா.

     • தீண்டாமை வெறியுள்ள எல்லாரும் நாதாரிப்பயல்கள் தான்…
      பார்ப்பனர்கள் செய்தவை ஊரரிந்த விசயம்…
      ஆனால் பார்ப்பனரல்லாத பல நாதாரிகளும் இத்தகைய கொடும் செயல் செய்து சமத்துவ வேசம் போடுகிறார்கள்….
      அத்தகைய நாதாரிகள் செய்வதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த்ததில் தோழர்கள் பங்கு மிக அதிகம்…
      தலித்கள் தவிர மற்ற பல சாதிகளின் லட்ச்சினம் இது தான்…இது தான் உண்மை…

     • //உங்க வீட்டுக்குள்ளார வந்தாமட்டும் சரிசமமா உட்கார வச்சு டீ ஆத்துவீயாக்கும். போயா போய் உன் முதுகப் பாருய்யா.//

      சந்தானம் நான் ஓன்றும் பிரமணன் அல்ல.. சாதியை பற்றி நான் பேச விரும்பது இல்லை.. இந்திய சட்டப்படி ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன்.. பிராமண நண்பர்களுடன் பழகியவன்.. இதர தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்னை நிந்தித்தை விட அதிகம் நேசித்தவர்கள் {பாசத்துடன் மற்றும் டீ காபியுடன்}.

     • சமுதாயத்துல ஏதோ ஒரு பார்பனனை விட நீங்கள் அதிகம் மதிப்பு உள்ளவர் அனால்,உங்களுக்கு தான் டீ,காபி மத்தவருக்கு அல்ல .

      • தலைவா கம்யுனிச ஆட்டோ ஓட்டுநர் சங்கம் வைத்து.. அவர் கடையில் இரட்டைக் குவளை காபியை குடிப்பதை விட…. பாசத்துடன் இவர்கள் தரும் ஓரே குவளை காபி எனக்கு சிறப்பானதே..

 12. It is women/young girls who run after samiyars. The gullible/vulnerable people from middle class don’t learn from the activities of Premananda and jayendra saraswathi. If people want to communicate with god, let them go to temples in tamilnadu which are in worst conditions. Seek god in temples and not in saffron robed vulgar godmen i am an atheist. But as a student of psychology i know that rationalism does not provide solutions to psyche of humans-srinivasan sundaram

  • If a criticism/ attack on christianit, Sikhs, Muslims is done..violance will errupt and the situation turns violent..
   But if attack on Hindus/Brahmins is done, they will be arguing on the issue…that is their nature…violance will b their lst resort…The main thing is to educate the innocent people especially women, from blindly following the bogud Godmen…
   and to go their Asrams to get out of tension/ depression etc..
   I appreecite Vinavu for bringing out such articles, which will bring out the truth …and open the eyes of the innocent woemen.

 13. If a criticism/ attack on christianit, Sikhs, Muslims is done..violance will errupt and the situation turns violent..
  But if attack on Hindus/Brahmins is done, they will be arguing on the issue…that is their nature…violance will b their lst resort…The main thing is to educate the innocent people especially women, from blindly following the bogud Godmen…
  and to go their Asrams to get out of tension/ depression etc..
  I appreecite Vinavu for bringing out such articles, which will bring out the truth …and open the eyes of the innocent woemen.

 14. இங்கு தெவர் பெரவைமுருகன் ஜி ஒரு ரெவ்டி, இவனுக்கும் தெவர் பெரவை எந்த தொடர்பு இல்லை.இவன் ப்ரமனபொன்னைன திருமனம் செஇதூல்லிஅன்

  • அது தான் ரவுடின்னு சொல்லிட்டீங்கல்ல… அப்புறம் என்ன ‘ஜி’ வேண்டி கிடக்கு…
   ஓ.. மோடிஜி, அத்வானிஜி மாதிரி முருகன்ஜி… பலே..!!!

 15. The FCRA ( Foreign Contributions Regulations Act ) must be tightened so that various Mutts/ NGOs receiving hug amount of Foreign Contributions can be checked by the Home Ministry…In our country the Home Ministry gives permission to many Trusts/ Mutts and not following the rules…the Union Home Ministry is not bothered to call for the Annual Statements of Receipts and Payments certified a Chartered Accountnat…the wors part is that many trusts/NGOs are functioning without proper registration and the govt. is botered to know how they function..from where the fnds come, how they are being utilised etc.
  The vigilance Wings are there in the name sake, but action wise innocent people will be charged and the Police will show their no. of cases filed….the court will also adjourn the cases and will prolong the cases years together…that is the fate of
  Judiciary…it will appear and it is a fact that Administration is more powerful than Judiciary..

 16. அசிங்கத்தில் உச்சத்தில் நிற்ப்பது அவனை நம்பும் நமது மக்கள் சிலரின் முட்டாள்தனம் …..இதில் யாரையும் குறை கூறி என்ன செய்வது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க