மறைந்த பெரியாரியக்கத் தொண்டர் நாத்திகம் இராமசாமி அவர்களின் நினைவாக அவர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.
– வினவு
__________________________
பேய் பிடிப்பது – பேய் ஓட்டுவது, மந்திரம் போடுவது – செய்வினை வைப்பது – செய்வினை எடுப்பது, தகடு ஓதி வைப்பது – தாயத்து ஓதிக் கட்டுவது, சோதிடம் சொல்லுவது – வாஸ்து பார்ப்பது, பாம்பு கடி – தேள் கடி – பூரான் கடி போன்றவைகளுக்கும், வைசூரி – காலரா – முடக்குவாதம் – சிக்கன் குனியா போன்ற கொடிய நோய்களுக்கும் வேப்பிலை அடித்து, மந்திரம் ஓதித் தண்ணீர் குடிப்பதும் பார்ப்பன இந்து மதத்தின் நீண்ட காலப் பழக்கம் – ஜதீகம் என்று சொல்லி, நடத்திக் கொண்டிருக்கிறார்கள.
இவைகள் எல்லாமே பொய் – மோசடி – ஏமாற்று என்று பச்சையாகத் தெரிந்திருந்தும் கூட, ‘பழக்க வாசனை’ யால் ‘மூளைச்சலவை’ செய்யப் பட்டவர்கள், மனநோயாளிகளாகி, கைப்பணம் இழந்து, தங்கள் எதிர்காலத்தையும் இழந்து வருகிறார்கள்.
அது போன்ற மாபெரும் மோசடியாகக் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான், மலடி பிள்ளை பெறுவாள்…” என்று ஏராளமான பொய்களைச் சொல்லி, கிறிஸ்துவ மக்களின் மூளையைக் கெடுத்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் கோடிக் கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள்!
இந்தக் கொள்ளைக்காரர்களில் தமிழ்நாட்டில் பிரபலமான கொள்ளையர்களாக இருந்து, பல்லாயிரம் கோடிப் பணம் சம்பாதித்து, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர்கள் டி.ஜி.எஸ். தினகரன், அவர் மகன் பால் தினகரன், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி மோகன்–சி. லாசரஸ், சாம் ஜெபத்துரை, பெருங்குடி மோகன் என பலரும் இருக்கின்றனர்.
ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் செய்யாமல் ”அற்புதசுகக்” கூட்டங்கள், ”ஆசீர்வாதக்” கூட்டங்கள்…. என்று நடத்தி, லட்சக்கணக்கான கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி – மூளைச்சலவை செய்து, மூட மன நோயாளிகளாக்கியே பல கோடிகளைச் சம்பாதித்து, சுகபோக பணக் காரர்களாகி விட்டார்கள், இவர்கள்!
இவர்களின் திருட்டை, பொய்-மோசடியை, ஏமாற்றை, மடமை பரப்பி, மக்களை மன நோயாளிகளாக்கி ஏமாற்றுவதைத் தடுத்து, மக்களை இந்த மோசடிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நாட்டை ஆளும் அரசுக்கே உண்டு!
கள்ளநோட்டு அடிப்பவன், பித்தளையைத் தங்கம் என்று ஏமாற்றுபவன், ரூபாய் நோட்டை இரட்டித்துத் தருவதாக ஏமாற்றுகிறவன், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பவன், திருட்டு வி.சி.டி. எடுத்து விற்பவன், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றுகிறவன்…. என்று மக்கள் சமூகத்தை ஏமாற்றும் மோசடிக் கொள்ளளைக்காரர்கள் போன்றவர்கள் தான், இந்தக் கள்ளப்பிரசங்கிகளும்.
ஆனால், அந்த மோசக்காரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதைப் போல இந்தக் கள்ளப்பிரசங்கிகள் – ஏமாற்றி மோசடி செய்யும் மோசடிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை!
இதற்கு மத்திய அரசைக் கூட குறை சொல்ல முடியாது; மாநில அரசுகளே சட்டப்படி நடவடிக்கை எடுத்து இவர்களின் மோசடியைத் தடுக்கலாம். தண்டனை வாங்கித் தரலாம். அதற்கான சட்ட அதிகாரம் எப்போதும் மாநில அரசுகளுக்கு இருக்கிறது!
அந்த அதிகாரப்படியே வட மாநிலங்கள் சிலவற்றில் பேய் ஓட்டுவது, மாந்தரீகம் – செய்வினை – பேயாட்டம்…. போன்ற மூடத்தனங்களைத் தடை செய்திருப்பதோடு, கிறிஸ்துவ கள்ளப் பிரசங்கிகள் நடத்தும் ‘அற்புதசுகம்’ ‘ஆத்மசுகம்’ – ‘ஆசீர்வாதக் கூட்டம்’ போன்ற விஞ்ஞான விரோத செயல்பாடுகளுக்கும் தடை போட்டுள்ளன! உத்திரப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஒரிசா போன்ற மாநிலங்களில் இந்தக் கள்ளப் பிரசங்கிகள், இவர்களின் மோசடிக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை உள்ளது. (இது உண்மையல்ல. இந்தி பேசும் வட மாநிலங்களில் தமிழகத்தை விட பல்வேறு மூடநம்பிக்கைகள் பார்ப்பன இந்து மதத்தின் பெயரில் கடைபிடிக்கப்படுகின்றன. பல்வேறு கட்சிகளும், அரசும் அதை அனுமதித்தே வருகின்றன. அதே போல பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்துத்துவத்தின் செயல் திட்டம் காரணமாக கிறித்தவர்களின் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. மற்றபடி இது மதசார்பின்மையால் அல்ல- வினவு)
ஆனால் தமிழகத்தில் அரசியல் அரங்கில் அவர்களது அடிமைகள் நிறைய இருக்கின்றனர். அதனால் தான் புதிது புதிதாகக் கிருஸ்துவ கள்ளப் பிரசங்கிகளும், சாயிபாபா, சிவசங்கர் பாபா, கல்கி பகவான்கள் இருவர், பாம்பு பகவான், கண்கட்டிச் சாமியார்…. என்று நாள்தோறும் பத்திரிகைச் செய்திகள் வருகின்றன!
கிறிஸ்துவ கள்ளப் பிரசங்கிகளின் மூளைச்சலவை – முட்டாள் மோசடிப் பிரசாரம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவ சமூகத்தைப் பாதித்துள்ளது. என்பதற்கு, அண்மையில் கோவை மாநகரத்திலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தியே சான்று!
இது செய்தி:
திருச்சியை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 43), மத போதகர். இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையம் அன்னை இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது தம்பி செல்வக்குமார் மன அமைதியற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் செல்வக்குமாரை உயிர்ப்பிப்பதாகக் கூறி, அவரது பிணத்தை வைத்து சார்லஸ் 53 நாட்களாக ஜெபம் செய்து வந்தார்.
இரண்டு மாத காலம் பிணம் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்ததால் அழுகி – புழுப்புழுத்து நாற்றமெடுத்தது. இந்த நாற்றம் அந்த வட்டாரமெல்லாம் பரவ, அப்பகுதி மக்கள் திரண்டார்கள்.
பிணத்தை உயிர்ப்பிக்க 2 மாதமாக ஜெபம் நடக்கிறது என்கிற உண்மையை அறிந்ததும், மக்கள் ஆத்திரமடைந்து பிரசங்கி சார்லஸ் வீட்டு மீது கல் வீசித் தாக்கினார்கள்.
கல் வீச்சால் வீட்டுக்கதவு – ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்க, பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது பற்றிய தகவல்கள் போலீசாருக்குத் தெரிந்ததும், அவர்கள் சென்று செத்துப்போன செல்வக்குமாரின் பிணத்தைக் கைப்பற்றி, மத போதகர் சார்லசை அழைத்துப் போய் விசாரணை செய்தார்கள்.
செல்வக்குமாரின் பிணம் இருந்த அறைக்கதவை ராஜேந்திரன் என்பவரும் மற்றவர்களும் உடைத்துத் திறந்தபோது, ஆட்கள் வருவது கூட தெரியாமல் சார்லசும், மனைவி குழந்தைகளும் ஜெபம் செய்து கொண்டு இருந்தனர்.
கதவைத் திறந்தவுடன் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. அங்கு மரக்கட்டிலில் செல்வக்குமாரின் பிணம் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. இறந்து 53 நாட்கள் ஆனதால் பிரேதம் அழுகிப்போய் இருந்தது. அறையின் தரையிலும், சுவரிலும் புழுக்கள் ஓடின. சார்லஸ் குடும்பத்தினர் இந்த அறையில் தினமும் 10 மணி நேரம் முழு இரவு ஜெபம் என்று விடிய விடிய ”உயிர்ப்பித்தல் பிரார்த்தனை” செய்து வந்துள்ளனர்.
சார்லஸ் மூடநம்பிக்கை கொண்டு மனநோயாளியாகி இது போல் செயல்பட்டுள்ளார். இதற்கு உதவியாக மனைவி மற்றும் குழந்தைகளையும் பயன்படுத்தி உள்ளார். சைகோ போல் சார்லஸ் நடந்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் மனநோயாளி சார்லஸ் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:
என்னுடைய ஜெபத்தின் மகிமையால் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளேன். குருடர்களுக்கு பார்வை கிடைத்துள்ளது. முடமானவர்களை நடக்க வைத்துள்ளேன். புற்றுநோயில் இருந்தும் பலரைக் குணப்படுத்தி உள்ளேன்.
எதற்கெடுத்தாலும் பயப்படும் என்னுடைய தம்பியை ஜெபத்தில் குணப்படுத்த கோவையில் எனது வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்தோம்.
கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தம்பி செல்வக்குமார், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக என்னுடைய மனைவி சாந்தி போனில் கூறினார். அப்போது நான் நாகர்கோவிலில் இருந்தேன். இது பற்றி யாரிடமும் சொல்லாதே, ஜெபம் செய்து மீண்டும் தம்பிக்கு உயிரூட்டலாம் என்று என்னுடைய மனைவியிடம் கூறினேன்.
அது போல் அவளும் யாரிடமும் கூறாமல் அறையைப் பூட்டி வைத்தாள். கீழ் வீட்டில் இருக்கும வின்சென்ட் குடும்பத்தினருக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். இறந்த என்னுடைய தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம்.
90 நாட்களில் தம்பியை உயிர்ப்பிக்க முடியும் என்று நம்பினோம். தம்பி மீண்டும் உயிர்த்தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில் போலீசாரும், பொது மக்களும் கெடுத்து விட்டனர்.
தம்பியின் ஆவியுடன் பேசினேன். அவனுடைய கை, கால்களில் அசைவு தெரிய தொடங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்து விட்டனர்.
– இவ்வாறு போலீசாரிடம் சார்லஸ் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இது பத்திரகைச் செய்தி; கள்ளப் பிரசங்கிகளின் மூளைச் சலவைப் பிரச்சாரம், எப்படி மனிதர்களை மனநோயாளிகளாக்கியுள்ளது என்பதைப் பார்க்கிறோம்!
இப்படி மனநோயாளிகளிடம் ”அற்புதசுகம்” – ”ஆசீர்வாதக் கூட்டம்” என்ற பெயரால் மோசடிப் பிரசங்கம் செய்து ‘காணிக்கை’ என்ற பெயரால் கோடிக் கோடியாகக் கொள்ளையடிக்கிறார்கள்! தமிழக அரசு கண்டு கொள்வதில்லை!
இப்படிக் கொள்ளையடித்தே கள்ளப் பிரசங்கி – டி.ஜி.எஸ். தினகரனும், மனைவி, மகன், மருமகள், பேரன் – பேத்திகள் மொத்தப் பேரும் இந்தியப் பணக்காரக் குடும்பங்களில் ஒரு குடும்பமாகி விட்டார்கள்!
இந்தக் கள்ளப் பணக்காரக் குடும்பம் அண்மையில் சென்னை – துறைமுகவாசலுக்கு எதிரே, பெரிய தொழில் நிறுவனங்களும், பெரும் பணக்காரர்களின் கட்டங்களும் உள்ள பகுதியில், விலை மதிப்பே சொல்ல முடியாத இடத்தில், எல்,ஐ.சி. கட்டடம் போல ஒரு பிரமாண்டமான பல அடுக்கு மாடிக் கட்டடம் கட்டி, முதலமைச்சர் மகனும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரும், திமு.க.வினரால் ”வருங்காலத் தமிழகம்” என்று போற்றப்படுபவருமான மு.க.ஸ்டாலினைக் கொண்டு திறப்புவிழா செய்திருக்கிறார்கள்!
”ஜே.சி. ஹவுஸ்” என்ற பெயரால் திறக்கப்பட்டுள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கட்டடத்தைக் கட்ட இவர்களுக்குப் பணம் ஏது? காருண்யா பல்கலைக் கல்லூரிகள் வருமானம் இத்தனை நூறு கோடி சேருமா?
எதையும், ஏன் என்று கேட்க முடியாத நிலையில் உள்ள கோபாலபுரம் ஊழல் குடும்பம், ஒரு பகல் கொள்ளைக்காரர்களின் மோசடித் தொழிலுக்கும் உடந்தையாக உள்ளது!
கள்ளப்பிரசங்கம் – ஏமாற்று ஜெபம் செய்தே ஒரு பிரமாண்டமான பல்கலைக் கழகத்தையும், இப்படிப் பல ”எல்.ஐ.சி. பில்டிங்”களையும் சொந்த உடைமையாக்கிக் கொண்டு, டாடா – பிர்லா டால்மியா வாழ்க்கை வாழும் இந்தத் திருடர்களை ஒழிக்க இப்போதைய அரசு முன்வராது. மக்கள் தான் அறிவும், தெளிவும் பெற்று சமுதாயத்தைக் காக்க முன் வர வேண்டும்.
_________________________________________________________
– நாத்திகம் இராமசாமி, நாத்திகம் – 13.07.2007 இதழில்
___________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
__________________________________________
- வின்சென்ட் செல்வக்குமார்: அல்லேலுயாவில் ஒரு நித்தியானந்தா!
- யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
- அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
- ” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்
- ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி
- அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை!
__________________________________________
- பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
- ‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
- பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!
- திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
- செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம்
__________________________________________
இந்த வரிசையில் இப்போது உமாசங்கரும் சேர்ந்து உள்ளான்…
அரசை தகர்க்காமல் ஆன்மீகம் ஆபாசம் போதைவஸ்த்துக்கள் இவைகளை முழுமையாக ஒழிக்க முடியாது இம்மூன்றும் அரசின் செல்லப்பிள்ளைகள்.
படித்த முட்டாள்களே! திருட்டு தனம் செய்யுமபோது, படிக்காத சனங்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. உழைக்கும் மக்கள் அரசு அமைகிற வரைக்கும் இந்த கொடுமை தீராது…….. உழுதுகிட்டே அழ வேண்டும்.அழுதுகிட்டே உழவேண்டும் என்ற
கதைதான்.
வேப்பிலை அடிப்பது போன்றவை நாட்டார் பழக்க வழக்கங்கள்.. நீங்கள் பழகிய எழுத்தினால் பார்ப்பன இந்து என்று அதையும் பார்ப்பன மத மாக்கிவிட்டீர்… அவர்கள்தான் என்றால் நீங்களுமா…?
குத்துங்க எசமான் குத்துங்க…. இவங்க எப்பவுமே இப்படி தான்.
🙂
He is an criminal
நித்தியானந்தாவும் தான் ரஞ்சிதாவுக்கு அற்புத சுகம் அளித்துள்ளார். இந்த கள்ளனுங்களுக்கு மைனர் குஞ்சுல சூடு வைக்கணும்.
அற்புத சுகம்…
அது என்ன சின்னபுத்தி, நித்யானந்தாவுக்கு மட்டும்..
அம்பிகளுக்கு கிடையாதா?
மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்து லாபம் காண்பவர்கள் இருப்பது வரை இது போன்ற ‘போதகர்’களின் கூட்டமும் குறையப் போவதில்லை. உழைக்கும் மக்களின் மூளையை மயங்கச் செய்து சீக்கிரம் இறந்து விட டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் அரசு இவற்றை தடுக்க எதையும் செய்து விடப் போவதில்லை.
மனிதனின் கற்பனைகளிலேயே மிக பெரிய கற்பனை “கடவுள்” அது மனிதனுடைய பயத்தை பயன்படுத்தி பிரபல படுத்தப்பட்டது. இப்போது எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் இதை பயன்படுத்தி பணம் சேர்க்கின்றனர்… எல்லோருடைய நோய்களையும் இறைவனிடம் வேண்டி குணபடித்திய இந்த கடவுள் தூதர் வேண்டுமானால் ப்ரோக்கர் என்றும் வைத்து கொள்ளலாம் தன் சொத்தைப் பல்லை பிடுங்க நாடு ராத்திரியில் முக்காடு போட்டுகொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடியது ஏன்? இவரது கடவுள் டென்டல்(dental) படிக்கவில்லையோ?
இவனுங்களை திருத்தவே முடியாது
வாங்க வினவு சார்.. தலைவா இந்த காருன்யா காலேஜ்லத்தான் படிக்கிறேன்.. இங்க காலேஜ் படிக்க கொடுத்தவச்சிருக்கனும்.கம்மியான கட்டணம்.. நல்ல கல்வி..நாங்க நல்லாத்தான் இருக்கோம்.
mental disorder மக்கள் செய்யும் தவறால் பிணம் உயிர்ப்பது நிகழ்ச்சி..தவிர ஓட்டுமெத்த தரப்பை குறை கூறவேண்டாம்..மெட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு வேண்டாம்.
கல், கம்மியான கட்டணம், நல்ல கல்வி, நல்லா இருக்கீங்க.. ரொம்ப சந்தோசம்..
ஆனா கம்மியான கட்டணத்தில எப்படி சென்னையில் LIC மாதிரி பில்டிங் கட்றாங்க..
உங்களுக்கு கம்மியான கட்டணத்துல படிப்பு கிடைச்சா அவன் என்ன பண்ணாலும் ஏற்று கொள்வீர்களா?
கட்டுரை கரெக்டா தான் இருக்கு… சுயநலவாதியா இருக்காதீங்க.
காருன்யா ஓர் non-profit கல்வி நிறுவனம். நான் அங்கு படிக்கும் மாணவன். காருன்யா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதை யாருக்கும் யார் பெயரிலும் விற்கவோ அனுபவிக்கவோ உரிமை இல்லை.
அதவது இந்த நிறுவனத்தில் இலாபத்தை எடுக்க இயலாது. வரும் வருமானத்தை அதன் கட்டிடங்களுக்கே மற்றும் அதில் வேலை செய்யும் எல்லா ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கே மற்றும் மணவர்களுக்கே செலவிட வேண்டும்.
உண்மையிலேயே நீங்க மாணவர்தானா கல்நெஞ்சம். என்ன படிப்பு படிக்கிறீர்கள். உங்களுடைய பதிவு எண்(Register Number) என்ன?
B.E 05AE009 (05-09)
M.E PR11EI2007 (11-13)
கடவுள் இருக்கிறது என்று ஒருவன் நினைத்தால் அவன் ஒரு முட்டாள்,
கடவுள் இருக்கிறது என்று மற்றவரிடம் பிரச்சாரம் செய்பவன் கேடு கெட்டவன்…
இவனுங்க செய்யும் திருட்டுதனத்தை மறைப்பதற்கு கல்வி, மருத்துவம் என்று சேவை செய்வது போல் ஏமாற்றுவார்கள், இல்லையென்றால் உங்களை போன்றோர்களை ஏமாற்ற முடியாதே?
(மதம், இறைவன் போன்றையெல்லாம் மனிதனை சிந்திக்க விடாமல் செய்துவிடுகிறது)
எக்கா திவ்யா…
சேவை செய்தால் உங்களுக்கும் தெரசா,ஜடா ஸ்கடரும் வேசியின் மகள்கள்தானே.. தீக்குளித்தால் செங்கொடியும் வேங்கைதானே…
கட்டுக்கதை கம்யுனிசத்தை வைத்து பிழைப்பு நடத்தும். உழைக்கும் மக்களைக் ஏமாற்றி புரட்டு புரட்சி செய்யும் நீங்கள் கம்யுனிசம் வெற்று பெற்ற நாட்டை காட்டுங்கள்.
(போலி கம்யுனிசம் நக்கல்பாரி போன்றையெல்லாம் மனிதனை சிந்திக்க விடாமல் செய்துவிடுகிறது)
வாயால வாடா சுடாத கண்ணு! நீ வினவுக்கு புதுசு போல இருக்கு, இது CPI கட்சி வலைத்தளம் இல்ல அப்பு. பத்தாம் வகுப்பு படிக்கற பையன மாநில அளவில் மதிப்பெண் வாங்க வைக்குற ஜெபம்னு சொல்லி 20000 ரூபா கட்டணம் வாங்கின பக்கி தான் உங்க நிறுவனரு பால் தினகரன், அப்படி சொரண்டிதான் ஜீசுஸ் கால்சு, பெதஸ்த, அப்பறம் ப்ரேயர் டவர் எல்லாம் கட்டுனான், உங்க தல இப்போ ரியல் எஸ்டேட்டு மற்றும் வெளி மாநில வெளிநாடு பிசினேசு எல்லாத்திலேயும் கலக்குறான். இப்படி வக்காலத்து வாங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் உண்மை என்னான்னு யோசிச்சு பார்க்கணும்.
well said brother.. ivanuva thirunthavey maatanuva.. aduthavanayum thiruntha vida matanuva..
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மக்களிடம் பல லட்சம் ஏமாற்றி வாங்கிகொண்டு தலை மறைவானவர்கள் தொடங்கி இன்றைய ஈமு கோழி நாட்டு கோழி, பகலில் கொள்ளை கொலை, வங்கியிலிருந்து பணம் கொள்ளை போன்ற எத்தனையோ ஏமாற்றங்களை அடைந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்து தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர கோரிக்கை வைக்கின்றனர், ஆனால் DGS அல்லது அவரைப் போன்ற கிறிஸ்த்துவ மத போதகர்களுக்கு நன்கொடை கொடுப்பவர்களிடம் எந்த போதகரும் [போலிகள் தவிர] பணம் பறித்து கொள்ளையடித்து ஏமாற்றுவது இல்லை, அவ்வாறு ஏமாற்றப்பட்டு இருந்தால் பணத்தை இழந்தவர்கள் போலீசுக்கு சென்று புகார் அளித்திருப்பார்கள்; அவ்வாறு புகார் அளிக்கப்பட ஒருவரைத்தான் குற்றவாளி என்றோ பொதுமக்களை ஏமாற்றி பணம் திருடியவர் என்றோ சொல்ல முடியும்.
சிலருக்கு அடுத்தவரை குறை சொன்னால்தான் நிம்மதியாக இருக்க முடியும் போலிருக்கிறது. குறைகளை சொல்லும்போது அதற்கானா சட்ட பூர்வமான ஆதாரங்களும் தேவைப்படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையாவது எழுதி அதை ரசிக்கின்ற அல்லது அதை படித்து திருப்திபடுகின்ற ஒரு குறிப்பிட்ட கும்பலுக்காக எழுதும்போது அதை பார்த்து மலத்தை அல்லது கழிவு நீரை கண்டு விலகி நடப்பது போல ஒதுங்கி போக வேண்டும். இவர்களின் அரிப்பு தீராத அரிப்பு அதற்க்கு எந்த பதிலும் சரியாக தெரியாது.
கடவுளின் பெயரை சொல்லி செய்கின்ற எந்த குற்றத்திற்கும் அதற்க்கான தண்டனையை அடையாமல் போக மாட்டோம் என்று வேதாகமத்தை படிக்கின்ற, போதிக்கின்ற DGS அல்லது பால் தினகரன் போன்ற எல்லா மத போதகர்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை குறை சொல்பவர்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். கடவுளைப்பற்றிய பயம் இல்லாத நாத்திகன் வேண்டுமானால் அவ்வாறான குற்றங்களை செய்வதற்கு முடியும். கடவுளின் மீது உண்மையான நம்பிக்கை வைத்து வேதத்தை படித்து அதன்படி நடக்கின்றவர்களுக்கு குற்றங்கள் செய்வது எளிதான (உங்களைப்போன்றே) காரியம் என்று நினைத்துவிட வேண்டாம்.
திரு ரத்னா,
உங்களது மறுமொழியே உங்களுக்கு பதில் இருக்கிறது,நீங்கள் சொல்லும் அனைத்து மோசடிகளும் பேராசையால் வந்தது.ஆனால் இவர்களை போன்றவர்கள் தலைமுறைகளாக கடவுளின் பெயரால் மக்களை முளை சலவை செய்கிறார்கள்..
இங்கு நாத்திகம் எதுவும் பேசவில்லை.. கடவுளின் தூதராக கட்டிக்கொண்டு எமற்றுபவர்களை பற்றி தான் கூறுகிறோம்…கிறிஸ்துவம் இந்திய வந்த வரலாறு படியுங்கள்… அது புனிதபயணம் அல்ல..
உங்களது பதிலும் வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது.. யோசியுங்கள் … கேள்வி கேளுங்கள்.. எதையும் ஆராயுங்கள்.. உங்களுக்கு பல விஷயங்கள் புலப்படும்..
திரு கல் நெஞ்சமே,,
நீங்கள் இப்பொது படிப்பதால் உங்கள் வயது 23குள்ளாகதான் இருக்கும்.என் வயது 35.நன் பள்ளி படிக்கும் காலத்தில்தான் காருண்யா ப்ரொஜெக்ட் ஆரம்பித்தார்கள்.. அப்போது அவர் கொண்டுவந்த Scheme இளம் பங்காளர் திட்டம்.. இதில் சேர்ந்தால் உங்களுக்கு இலவச கல்வி கொடுக்கப்படும் என்றார்… அதற்கு சந்தா ரூ 1000-1500 ஒரு குடும்பத்தில் எத்தனை சந்தா வேண்டுமனல்லும் எடுத்துகொள்ளலாம்.. இதில் சேர்ந்த பணத்தில் கட்டப்பட்டதுதான் இந்த காருண்யா.. இந்த திட்டத்தில் சேர்ந்த எத்தனை பேர்க்கு அங்கு கல்வி கொடுக்கபட்டிருக்கு.. ஏன் இந்த திட்டம் தொடரப்படவில்லை..எவ்வளவு நிதி திரண்டது.. உங்களால் தகவல் கொடுக்க முடியுமா…நானும் கிறிஸ்துவன் தான்… ஆனால் தயவுசெய்து யாரையும் கண்முடித்தனமாக நம்பாமல்.. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டுவிட்டு பிறகு முடிவு செய்யுங்கள்…
இப்பொது முன்றாம் தலைமுறை தினகரன் குடும்பத்திடம் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.. அது என்ன தெய்வ குடும்பம்மா… அவர்கள் அணியும் உடையீன் விலை எவ்வள்வு யாரேனும் கேட்டதுண்ட…
கடவுள் உங்களை முட்டாளாக படைக்கவில்லை… சிறு வயது முதலே பாதரிமார்களை கேள்வி கேட்க கூடாதென்று முளை சலவை செய்யபட்டிருகிர்ரிர்கள்…
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே
சரியாகச் சொன்னீர்கள் திமோத்தி.
அதாவது நீங்கள் 1990ம் வருடம் இந்த திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது என கூறிக்கொள்ளும் நீங்கள். அந்த காலத்தில் 1500 ரூபாயை நிச்சயமாக என் அப்பாவால் செலுத்தியிருக்க முடியாது.
அந்த திட்டம் காருண்யாவுக்கத்தான் விளம்பரம் செய்யவில்லை. அந்த நோக்கமும் அதற்கு இல்லை. அப்படியெரு திட்டம் காருன்யாவில் கிடையாது. jesuscalls.org ல் young partner scheme இதுவரை காருன்யாவுக்கு விளம்பரம் செய்யவில்லை.கண்முடித்தனமாக நம்பாமல்.. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டுவிட்டு பிறகு முடிவு செய்யுங்கள்.
தம்பி எத்தன வருசமா காருன்யால இருக்குற? அங்க இப்போ எதனால அமைதி நிலவுதுன்னு தெரியாம பேசாத. பெதஸ்தா எப்படி வந்துச்சு, தினகரனுக்கு சிறுவாணி வரையிலும் , இந்த பக்கம் பேரூர் வரையிலும் எப்படி அந்த அளவு சொத்து வந்துச்சு , அதெல்லாம் தெரிஞ்சுக்கோ. பாத்து சூதானமா இரு அப்பு!
கல்நெஞ்சம், ஸ்கூல் பையன்னு காட்டிட்டப்புல.. வேற ஒன்ணும் இல்லை..
http://www.karunya.edu/infrastructure/land.pdf
இந்த கோப்பில் யார் யாரிடம் இருந்து நிலம் வாங்கப்பட்டுள்ளது என்ற விவரம் உள்ளது. மொத்த நிலம் 700 ஏக்கர். சதீஸ் கணக்கு படிங்க…
சதீஸ் அங்கிள் காருன்யா 15 km ன்னு போருர்ல போர்டு வைச்சா..அந்த ஏரியா காருன்யாக்கு சொந்தமா? எ
கல் நெஞ்சம் ….. தெனாலிராமனை போல கேள்வி கேட்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே
Why brother Paul Dinakaran is conducting conventions in the famous cities. Why they are Christianizing the Christians? Why did not they go to north India where there are no christians, who does not know anything about Jesus. Why did not they go to Africa for doing ministry. My room mate had studied in Karunya. What he told was very very negative on Karunya.
poi sonnalum poruntha solu.. yarkita katha vidura nee.. karunyavula kasu vangama padam nadathurangala?? anda pulugu pulugatha pa.. panakaranuku matum than anga seat.. i know everything about karunya.. am also a christian.
எனது M.tech படிப்பிற்கு இரண்டு வருடக் கட்டணம் 2,40,000 ரூபாய்.இதில் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம், மாதாந்திர உணவுக்கட்டணம் அத்தனையும் இதில் அடக்கம்.
முதல் செமஸ்டர் 80,000 2nd sem 40,000 3rd sem 80,000 4th sem 40,000
இன்னும் நம்பிக்கை இல்லையெனில் எனது காருன்யா லாகினைத்த தருகிறேன். நான் இதுவரை செலுத்திய தொகையை அறியலாம். எல்லாத் தொகையையும் வங்கி மூலமே செலுத்த வேண்டும். நேரடி பணம் செலுத்தமுடியாது. i know about karunya because i studying here. i am proud of it.
நீங்க கிரேட்
ஒரு முறை பால் தினகரனின் கூட்டத்துக்கு போய் இருந்தேன் முதலில் மேடை ஏறி சில நிமிடம் ஜெபம் பின் சில பெயர்களை சொல்லி அவர்களுக்கு இன்ன நோய்கள் பிரச்னைகள் இருக்கு என்று சொன்னார் பல நூறு பேர்கள் இருக்கும் இடத்தில் ஒவொருவருக்கும் எதாவது ஒரு பிரசனை இருக்கவே செய்யும் பெரும் பாலும் வழக்கத்தில் இருக்கும் பெயர்களையே இவர்கள் பயன் படுத்துவார்கள் தப்பி தவறி பெயரும் சொன்ன பிரச்னையும் ஒத்து போனால் இவர்களுக்கு மூளை சலவை செய்ய ஒரு ஆள் கிடைத்து விடுவார் எல்லா சாமியார்களுக்கும் பயன் படுத்தும் தந்திரம் ஒன்று தான் இவர்களிடம் வரும் பல பேர்களில் சில பேருக்கு வேண்டியது எதோ ஒரு வழியில் கிடைத்து விடுகிறது உடனே அது சாமியார்களின் சக்தியால் என்று நம்ப வைக்க படுகிறது வேண்டியது கிடைத்தால் அதை தங்களுக்கு சாதக மாக்கவும் இந்த சாமி யார்கள் தவறுவது இல்லை என்னையும் நூறு கும்புட்டால் அதில் ஒரு ஐந்து பேருக்காவது பிரச்னையில் தீர்வு வரமல போகும் முதலில் சாமியார்கள் ஏழைகள் படிக்காதவர்கள் இடத்தில் உருவாக்கு கிறார்கள் பின் நடுத்தர வர்க்கம் தேடி ஓடிவருகிறது சாமியார் வளந்தவுடன் பணக்காரர்கள் வழி நடத்து கிறார்கள்
பிரேமா ….. ஒருவழியா ஆராய்ச்சிகள் செய்து இதையெல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிட்டு சும்மா வினவுல வந்து கமமென்ட் போடறதுக்கு பதிலா, தீசிஸ் தயாரிச்சு ஏதாவது ஒரு பல்கலை கழகத்துல கொண்டு சமர்பிச்சீங்கன்னா உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும், வாய்ப்பை விட்டுவிட வேண்டாம்.
அரசியல்வாதிகள் நீதிபதிகள் அதிகாரிகள் சொத்துக்கணக்கை வெளியிடுவதுபோல கள்ளதீர்க்கதரிசிகளும் அந்திகிறிஸ்தவபோதகர்களும் நல்ல போதகர்களும் அவர்கள் பெயரிலும், சபை பெயரிலும் உள்ள சொத்துக்கனக்கை வெளியிடவேண்டும்.சபைகளின் சொத்துக்கள் விசுவாசிகளின் கூட்டு சொத்தாக வாங்கபட பதிவுசெய்யப்பட வேண்டும். அதேபோல மற்ற மதங்களிலும் செய்யப்படவேண்டும்.
காருன்யாவின் எல்லா சொத்துக்களும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தகவல் அறியும் சட்டம் முலம் அறியலாம்..அல்லது
எங்கள் இணையதளத்தில் pdfs படிக்கவும்.. முக்கிய இந்த வினவு அவர்கள் படிக்ககுமாறு வினவுகிறோன்.
Internal Quality Assurance Cell – IQAC Reports
http://www.karunya.edu/aboutus/iqac.html
ஆண்டு அறிக்கை
http://www.karunya.edu/downloads/Annual_report.pdf
தகவல் அறியும் சட்டத்திற்கு.
http://www.karunya.edu/downloads/RTI.pdf
//சபைகளின் சொத்துக்கள் விசுவாசிகளின் கூட்டு சொத்தாக வாங்கபட பதிவுசெய்யப்பட வேண்டும்.//
http://www.karunya.edu/infrastructure/land.pdf
இந்த கோப்பில் 22ம் பக்கத்தில் owned by karunya univerisity என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
சொத்து கணக்கு தினகரன் பெயரிலே அல்லது பினாமிகளின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை..அதை யாருக்கு விற்கவோ அல்லது அனுபவிக்கவோ முடியாது.மேலும் விவரங்களுக்கு சார் பதிவாளாரை அணுகவும்.
//இந்த கோப்பில் 22ம் பக்கத்தில் owned by karunya univerisity என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
சொத்து கணக்கு தினகரன் பெயரிலே அல்லது பினாமிகளின் பெயரில் பதிவு செய்யப்படவில்லை..அதை யாருக்கு விற்கவோ அல்லது அனுபவிக்கவோ முடியாது.மேலும் விவரங்களுக்கு சார் பதிவாளாரை அணுகவும்.//
Then who owns karunya university ?? Who does the management in karunya ??
//Then who owns karunya university ?? Who does the management in karunya ??//
பதிலை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறியலாம்.
தகவல் அறியும் சட்டத்திற்கு.
http://www.karunya.edu/downloads/RTI.pdf
இது போல் மூளை சலவை மனநோயாளிகளை ஒழிக்க கடுமையான சட்டங்கள் தேவை .
இல்லாவிட்டால் ஓர் சமூகமே பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது .
Laws cannot control religious issues…Because creating law law for every kind of nonsense will only increase complexity…. The only way is to create SCIENTIFIC awareness among the people ..
எதற்கு கல்விநிலையங்களுக்குச் செல்லவேண்டும், அதையும் பிராத்தனையிலேயே வாங்கிவிடமுடியாதா? யாராவது சொல்லுங்க…
Excellent, கல்நெஞ்சம், can you reply to this?
என்ன லாஜிக் இது.. ஊக்காந்து யோசிப்பிங்களோ…
மனதை பலப்படுத்த தான் பிரத்தனை.. படிக்க கலோஜ்தான் போகனும்.
Good, until you make it strong no issues but looks like you made it as a stone. Not me your name tells this.
Do you see logic every where? most of the questions they raised in vinavu articles are asked with logic, you are not considering those, But someone ask some questions in little note (those might have asked that question with heavier note) you people jump on that and ask for logic in that.
D.G.S ungle died on 20-02-2007. but this article published on july 2007. what logic is in there to link with uncle and some mentally ill people.
Our God is not a bad God who will reward those who cheat. He is a good God who always rewards the one who really deserves it. Likewise our God will reward students who study well and then pray. Not those who only pray and use bits in exam. But please be informed, prayer is the most powerful communication tool. Just try praying once and then comment. Jesus bless you.
And I never support those who *only* need miracles like rising from death. We must accept what God’s will is and proceed with our lives. Instead relying solely on miracle is not an idealistic Christian approach.
–Bible–
*********
David pleaded with God for the child. He fasted and spent the nights lying in sackcloth on the ground. The elders of his household stood beside him to get him up from the ground, but he refused, and he would not eat any food with them.
On the seventh day the child died. David’s attendants were afraid to tell him that the child was dead, for they thought, “While the child was still living, he wouldn’t listen to us when we spoke to him. How can we now tell him the child is dead? He may do something desperate.”
David noticed that his attendants were whispering among themselves, and he realized the child was dead. “Is the child dead?” he asked.
“Yes,” they replied, “he is dead.”
Then David got up from the ground. After he had washed, put on lotions and changed his clothes, he went into the house of the Lord and worshiped. Then he went to his own house, and at his request they served him food, and he ate.
His attendants asked him, “Why are you acting this way? While the child was alive, you fasted and wept, but now that the child is dead, you get up and eat!”
He answered, “While the child was still alive, I fasted and wept. I thought, ‘Who knows? The Lord may be gracious to me and let the child live.’ 23 But now that he is dead, why should I go on fasting? Can I bring him back again? I will go to him, but he will not return to me.”
-2 Samuel 12:16-22
\\ Likewise our God will reward students who study well and then pray. Not those who only pray and use bits in exam //
ஒழுங்காவும் படிக்காம பிட்டும் அடிக்காம கொஞ்சமா மார்க் எடுத்த பணக்கார ஊட்டு புள்ளைங்க அம்பது அறுவது லட்சம் கொடுத்து தனியார் மருத்துவ கல்லூரில சேர்ராங்களே அதுவும் உங்க God reward தானா.
Jesus had already warned against all such evils of money. He will judge the rich and greedy and uplift the poor and needy on the day og Judgement.
மனதை பலபடுத்தி போருக்கு அனுப்ப போறானுங்களா? எத தின்னா பித்தம் தெளியும்னு யோசிச்சு இந்த லூசுத்தனமான ஜெபகூட்டம் , ஆசிர்வாதம்னு போயி போதையில் உழலும் கிறுக்கர்களை ஒன்னும் செய்ய முடியாது. கூட்டத்திலும் டிவிலயும் பேசும்போது கண்ண சிமிட்டி கண்ணீர் விட்டு வாய கோணலாக்கி பேசும் புதிய ஸ்டையிலை பாபுலர் ஆக்கினது தினகரன் தானே? அவன் மண்டைய போட்டதும் மத்தவனுங்க அவன மாதிரி பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க.
MATHAM MANITHANAI YETHAYUME NAMBA SOLLUGIRATHU.(muda palakka valakkangal)
aanaal ariviyal anaithiyume santhegikka solukirathu.(materialism)
இந்த டி ஜி எஸ் தினகரன் அண்ட் கோ 1999 ஆம் வருடம் தொடக்கம் அல்லது 1998 ஆம் வருடம் என்று எண்ணுகிறேன், கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் இன்னும் ஒரு ஆண்டுதான் இந்த உலகம் இருக்கும் ௨௦௦௦ ஆம் ஆண்டு உலகம் அழிந்து விடும் , பின்பு தேவ ஆட்சிதான் என்று பிரசங்கம் செய்த வேளையில், காருண்யாவில் சேர ஐந்தாண்டு படிப்புக்கு விளக்க அறிக்கை வெளியிட்ட கொடுமையும் நடந்தது…
ஒரு மாணவரிடம் வருடத்திற்கு சுமார் 2 லட்சம் ருபாய் வரை பீஸ் வசூலிக்கும் காருண்யாவில் குறைந்த கட்டணம் என்று தோழர் கல்நெஞ்சம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. காருண்யாவில் வருமானம் மிக அதிகமாக உள்ள நிலையில் அதை விற்க வேண்டிய அவசியம் இல்லை.
எனது M.tech படிப்பிற்கு இரண்டு வருடக் கட்டணம் 2,40,000 ரூபாய்
முதல் செமஸ்டர் 80,000
2nd sem 40,000
3rd sem 80,000
4th sem 40,000
இதில் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம், மாதாந்திர உணவுக்கட்டணம் அத்தனையும் இதில் அடக்கம்.
means we dont need to pay for food, hostel service every month..no extra charges..
for b.tech per year 2 lakh.. is it too low??? r they following govt norms?
கல் நெஞ்சம் வினவு தளத்தை காருண்யா விளம்பரத்துக்கு பயன்படுத்துறார்….
இது புரியலையா……
இங்க கேள்வி மதத்தின் பெயாரில் ஏமாற்று வேலை நடக்குதா இல்லையாங்கிறது தானே தவிர எம் டெக் படிப்புக்கு எங்கு குறைவான கட்டணம் என்பது அல்ல..
பைபிளை படிச்சீங்கன்னா… சுவிஷேசத்தை ஏசு .. உள்ளதை விற்று தரித்திரருக்கு கொடுத்து .. தன் சிலுவையை எடுத்துகொண்டு எடுத்துகொண்டு என்னை பின் தொடரட்டும்னு சொன்னார்.
அப்போஸ்தலனாகிய பவுல் சுவிஷேசத்தை அறிவிச்சார்.. ஆனா தன் செலவுகளை தன் கூடைமுடையும் வேலையில் இருந்தே செய்தார்.
ஆவிக்குறிய வரங்களை பெற்ற டிஜிஎஸ் அங்கிளின் நிலை உங்களுக்கே தெரியும்.
அங்கிளின் பொண்ணு ஏங்சல் கார் விபத்தில் இறந்ததும் தெரிந்திருக்கும்…
ஆவிக்குறிய வரங்கள்ங்கிற டிஜி எஸ் அங்கிளின் புத்தகத்தில் டிஜிஸ் எழுதுறார்….
அப்போ நான் ஒரூ அம்பாசிடர் காரை வைத்து இருந்தேன்…ஆண்டவர் பென்ஸ் காரை வாங்கும்படி உணர்த்தினார்… ஆனா நான் ஆண்டவரின் வாக்குக்கு செவிகொடாமால் அம்பாசிடர் காரை வைத்து இருந்ததால் ஆகிசிடென்டில் மகளை பறி கொடுத்தேன்…
ஆண்டவர் சொன்னபடி பென்ஸ் கார் வைத்து இருந்தால் விபத்தில் மகள் இறந்திருக்க மாட்டள் என்று எழுதி இருக்கார்…
இந்த டிஜிஎஸ் பற்றி கேட்டா அதுக்கு பதில் இல்லாம எம் டெக் கட்டண விகிதம் பற்றி சொல்லுறார் கல்னெஞ்சம்.. கல்நெஞ்சம் காருண்யாவை பற்றி விளம்பரம் பண்ணியத்துக்கு விளம்பர கட்டணம் வாங்குக… இல்லைனா அவரின் விளம்பர கமெண்டை நீக்குங்க…
These people will not change … SOme months back i got into an argument with my parents on this topic.. Finally they cornered me saying “Because of ur imature behavior our family will get the punishment from God”… From then i stopped arguing with them… These people have already created a fear of GOD among people and using that as sheild…
//ஒரு மாணவரிடம் வருடத்திற்கு சுமார் 2 லட்சம் ருபாய் வரை பீஸ் வசூலிக்கும் காருண்யாவில் குறைந்த கட்டணம் என்று தோழர் கல்நெஞ்சம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது//
என்று கேட்ட ஓரு புண்ணியவனுக்கு கல்நெஞ்சம் அளித்த பதில்… பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
well said brother.. in karunya fees is very high.. he is telling lie
//for b.tech per year 2 lakh.//
தலைவா.. பி.டெக் படிப்பிற்கு (எட்டு செமஸ்டர் அல்லது நான்கு வருடங்கள்)
First year 1,61,000
Second Year 1,41,000
Third Year 1,41,000
Forth Year 1,41,000
இதில் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம், மாதாந்திர உணவுக்கட்டணம் அத்தனையும் இதில் அடக்கம்.means we dont need to pay for food, hostel service every month..no extra charges..எல்லாத் தொகையையும் வங்கி மூலமே செலுத்த வேண்டும். நேரடி பணம் செலுத்தமுடியாது
மேலும் விவரங்களுக்கும்.
http://www.karunya.edu/academics/ug_fees.pdf
http://www.karunya.edu/academics/pg_fees.pdf
//பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து//
பூக்கடைக்கு மட்டுமில்லை, சாக்கடைக்கும் விளம்பரம் தேவையில்லைதான், கடவுளின் செய்தியை அறிவிக்க ஒரு நற்செய்தியாளர் தேவையா? ஏன் அதை ஒரு மனிதன் பெரும் பொருட்செலவில்தான் அறிவிக்க வேண்டுமா? 2 லட்ச ரூபாய் என்பது குறைந்த பணமா? தாங்கள் எந்த வர்க்க கண்ணோட்டத்தில் இருந்துகொண்டு பார்க்கிறீர்…
///2 லட்ச ரூபாய் என்பது குறைந்த பணமா? தாங்கள் எந்த வர்க்க கண்ணோட்டத்தில் இருந்துகொண்டு//
மற்ற கல்லுரிகளை விட இங்கு மிகவும் குறைவு..
டிஜிஎஸ் பற்றி கேட்டா அதுக்கு பதில் இல்லாம எம் டெக் கட்டண விகிதம் பற்றி சொல்லுறார் கல்னெஞ்சம்.. கல்நெஞ்சம் காருண்யாவை பற்றி விளம்பரம் பண்ணியத்துக்கு விளம்பர கட்டணம் வாங்குக… இல்லைனா அவரின் விளம்பர கமெண்ட்ட ….
கல் நெஞ்சம்… ரொம்ப சாமார்த்தியமா கேட்ட கேள்விக்கு பதில் இல்லம விளம்பரம் மட்டும் பண்ணரே பாரு…
வறுமைக்கோட்டைத் தாண்டி ரூ.30.00க்கு மேல் சம்பாதிக்கும் எத்தனை சாதாரண குடிமக்கள் இந்த குறைந்த கட்டணத்தில் படிக்க இயலும், இந்த குறைந்த கட்டணத்தில் இந்த கல்லூரியில் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
இந்தியாவில் பிறந்த பாதிப்பேர் கட்டாயமாக ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் பயிலாமல் படிப்பை முடிக்க முடியாது. அப்படி இருக்கும் பொது, அந்நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்வதானால் தற்போது இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கிறிஸ்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.கிருத்தவ மிசனரிகள் மற்றும் பள்ளிகள் மதம் மாற்றுகின்றார்கள் எனக் கூறுவது பொய்.. அப்படியானால் இன்று இந்தியாவின் பாதிப் பேர் கிரித்தவர்களாகவே இருக்க வேண்டும்
நன்றி இக்பால் செல்வன்.
Will Paul Dinakaran stop getting offerings from the people when he conducts conventions. If you read the YESU AZAIKIRAR magazine, you will see requsts for “nankodais”.
Will vinavu stop getting offergs from people. if u read vinvu.com you will see request for nankodai tharunkal 🙂
அட பாவிகளா ஜெபத்தை இப்படி கூருபோட்டு விக்கரனுகளே… இதுக்கு பேரு சேவையா… இவிங்க கோட்ட மாட்டிகிட்டு அப்பா பொண்டாட்டி புள்ள எல்லாரும் சேர்ந்து கண்ணு சிமிட்டி சிமிட்டி அக்ட் குடுபன்களா அதுக்கு நாங்க நன்கொடை குடுகணுமா…. அட போங்க போகத்த பயலுகளா
நீங்கல்லாம் பட்டாலும் திருந்தமாட்டிங்க…கடவுள் வரரோ இல்லையா இவங்க வீட்டு மேல இடி விழ… அதுவும் எல்லாரும் இருக்கும்போது… ஏன்னா.. பல பெற காப்பாற்றுவதற்கு..கொஞ்சம் பேர் இல்லாம இருந்ததான் சரி..
அட கல் நெஞ்சம்கிட டுபாக்குரே….
உனக்கு காருண்யாவுக்கு விளம்பரம் பண்ணுரத தவிர எதுவும் செய்ய முடியாதா..
http://thoppithoppi.blogspot.in/2011/01/jesus-calls.html
இதுக்கு என்ன பதில் சொல்ல போற..
விளம்பரம் ஓண்ணும் பண்ணவில்லையோ..உங்கள் கேள்விகளுக்கு நான் ஆதாரங்களுடன் அளித்த பதில்களே.. நாங்க குறைந்த செலவில் படிச்சி முன்னோறி கொண்டே இருப்போம். காருண்யா CLIMATE யை என்ஜாய் பண்ணிக்கொண்டே இருப்போம்..
நீங்க திட்டிக்கொண்டே இருங்க..இன்னும் நல்லாத்திட்டுங்க..வாய்தான் வலிக்கும..
மகல்நெஞம்
comparde the m.tech fee of gct and karunya
கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15:19
கிறிஸ்தவ பிரசங்கிகளில் அநேகர் சுகமளிக்கும் ஊழியம் என்ற பெயரில் அநேக ஊழியங்களை சரீர நலன்களை இம்மைக்குறிய நன்மைகளுக்காக செய்து, இன்றைய நாட்களில் தங்கள் பிரசங்கங்களில் கவர்ச்சியாக மனவியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனைக் குறித்து சிந்திக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவர்கள் கிறிஸ்துவின் நிமித்தம், ஏழ்மையில் ஆரம்பித்து கிறிஸ்துவின் நாமத்தில் குபேரனாகும் (வேதாகமத்துக்கு மாறுபாடான) போக்கில் வாழ்கிறார்கள். இதனைக் கண்டு சிந்திக்கிற ஒவ்வொருவனும் இவர்களது போதகத்தை குறித்து எச்சரிப்பை அடைவானாக.
யேசுவோ அப்போஸ்தலர்களோ சரீர சுகமளிக்கும் அற்புதங்களை செய்தபோதிலும்,
சுகமளித்தலையே ஊழியமாக ஒருபோதும் செய்ததில்லை. அவர்களால் நிகழ்ந்த அற்புதங்களை பிரகடனப்படுத்தவில்லை; அதுவே அவர்களது பிரசங்கமாக இருக்கவில்லை; வியாதியஸ்தர்களை சுகம் பெறும்படி தங்களிடம் கொண்டு வரும்படி அறைகூவல் விடுக்கவில்லை. அவர்களிடம் அப்படிப்பட்ட வல்லமையிருந்தும் அதை விளம்பரப் படுத்தவில்லை.
அவர்கள் வானிலும் பூமியிலும் ஸ்தாபிக்கப்பட இருக்கும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து, (மத் 6:10,33; எபே 3:14; எபி 9:23; வெளி 21:3,4; ) குறிப்பாக பரலோக ராஜ்யத்தையும் அதன் அழைப்பையும் குறித்து பிரசங்கம் செய்தனர் (மாற்கு 1:15; மத் 10:7 ). இந்த ராஜ்யத்தின் சுவிஷேசத்தை குறித்தே பிரசங்கம் செய்து வந்தனர். அந்த அழைப்புகள் வந்தவர்கள் அவர்களது பிரதிஷ்டையில் இடுக்கமான வழியில் தேவனுக்குள் ஆவியின் கனிகளில் வளரும்படி போதித்தனர். அவரவரது பலியின் ஜீவியத்தில் தேவ கிருபையிலும் சத்தியத்திலும் விருத்தியடைய அவர்களது ஆவிக்குரிய சுகநலன்களுக்காகவே உபதேசங்களைக் கொடுத்தனர்.
உங்களுடைய போதகத்தை பார்த்தால் தான் கள்ளப்போதகமாக தெரிகிறது வினவு