பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியை மிரட்டி கடந்த நான்காண்டுகளாகப் பாலியல் வன்முறையை ஏவி வந்த, திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வராகவும் பாதிரியாராகவும் உள்ள ராஜரத்தினத்தின் பாலியல் அட்டூழியம் அண்மையில் வெளிவந்து தமிழகமெங்கும் நாறத் தொடங்கியுள்ளது.
பாதிரியின் இப்பாலியல் அட்டூழியம் பற்றி அறிந்ததும், திருச்சி நகர ம.க.இ.க. தோழர்கள், தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணியுடன் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு கடந்த 13.10.2010 அன்று காலை ஜோசப் கல்லூரி வாயிலை மூடி பூட்டுப் போடும் போராட்டத்தைத் திடீரென நடத்தினர். ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் ராஜா தலைமையில் காமவெறியன் பாதிரி ராஜரத்தினத்தைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், சிறுபான்மை மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி – கல்லூரிகளை அரசே கையகப்படுத்த வேண்டும் என்றும் விண்ணதிரும் முழக்கங்களுடன் கல்லூரி வாயிலருகே ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள், கல்லூரிக்குள் நுழைந்து அதன் வாயிலுக்குப் பூட்டுபோட முயன்றபோது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
“ஜோசப் கல்லூரி கல்விக்கூடமா, காமவெறியர் கூடாரமா?” என்ற தலைப்பிட்டு திருச்சி நகரமெங்கும் மேற்கொள்ளப்பட்ட சுவரொட்டிப் பிரச்சாரம் திருச்சபைகளின் யோக்கியதையைச் சந்தி சிரிக்க வைத்தது.
இந்தத் திடீர் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர்தான் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் இப்பாதிரி மீது கொலைமிரட்டல், கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு ஆகிய மூன்று வழக்குகளைப் போட்டுள்ளது. ராஜரத்தினமோ அதிகார வர்க்கத்தின் துணையுடன் தலைமறைவாக உள்ளார்.
பணபலமும் அதிகாரபலமும் ஆணாதிக்கத் திமிரும் கொண்டு பாலியல் வன்முறையை ஏவியுள்ள அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால், “இது நம்ம ஆளு!” என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன. இப்பாதிரியார் தலித் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்பட்டுள்ளார் என்றும், சேசுசபையிலுள்ள சாதிவெறியர்களின் தூண்டுதலின் காரணமாகவே வன்னியரான பிளாரன்ஸ் மேரி மூலம் இப்படியொரு கதை சோடிக்கப்பட்டுள்ளது என்றும் இக்கட்சிகள் கூசாமல் புளுகுகின்றன.
ராஜரத்தினத்துக்கு ஆதரவாக நின்று பாதிக்கப்பட்ட பெண்ணை சேசுசபையிலிருந்தே விரட்டியுள்ள நிலையில், அந்தச் சபை ராஜரத்தினத்துக்கு எதிராக நிற்பதாகக் காட்டுவது யாரை ஏமாற்ற? ராஜரத்தினத்துக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரி தேவதாஸ், பாதிரி சேவியர் வேதம் ஆகிய உயர் சாதியினரும் குற்றவாளி பட்டியலில் உள்ளபோது, எந்த சாதிவெறியர்களின் தூண்டுதலால் ராஜரத்தினம் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது – என எழுந்துள்ள கேள்விகளால் இக்கட்சிகள் மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுப் போயுள்ளன. மக்களிடம் உண்மையை விளக்கி பாதிரியின் பாலியல் அட்டூழியத்துக்கு எதிராக ம.க.இ.க. அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.
________________________________
– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
- பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
- ‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
- ” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்
- யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
- ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி
- சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
- பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!
இதற்கு மேலும் தலித்துகளின் உயிர்களை பலியிட விரும்பவில்லை…தேர்தல் அரசியல் மூலம் விடுதலை அடைவோம் என்று கூறி……..சாக்கடை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்குச் சென்ற வி.சி….இன்னும் முடை நாற்றமெடுத்து அம்பலப்பட்டு வருகிறது…
ஒட்டுமொத்த தலித்துகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டிருக்கிற விடுதலைச்சிறுத்தைகளின் யோக்கியதை இதுதான் போல……திருமாவிற்கோ அல்லது சிந்தனைக்கோ இது தெரியுமா????
அது சரி கட்டப்பஞ்சாயத்து வரை சென்றும்… ரசிகர் மன்றக் கூட்டமாக மாறியுள்ள கட்சித் தொண்டர்களை ஒன்றும் செய்யாத வி.சி தலைமை இதற்கு மட்டும் என்ன செய்துவிடப் போகிறது…..இதுவும் கட்டப்பஞ்சாயத்தின் ஒரு வடிவம் தான்…..
வருத்தமும் கண்டனங்களும்…
[…] This post was mentioned on Twitter by வினவு and karthick, karthick. karthick said: https://www.vinavu.com/2010/11/12/st-josephs-trichy-2/ […]
தவறு செய்யும் பலர் மாட்டிக்கொள்ளும்போது ‘நான் உங்கள் சாதி, அதனால் எதிர்சாதிக்காரங்க இப்படி பண்ணறாங்க’ன்னு சொல்லி சேர்ந்துக்கிறது பல இடத்தில் பாத்தாச்சு. இப்பொ இன்னொன்னு.
இதுபோன்ற பல சாதி அமைப்புகள் ஒருவன் என்ன தவறு செய்திருந்தாலும் தன் சாதி என்பதால் காப்பாற்ற முனைகின்றன. இதில் விடுதலை சிறுத்தைகளும் விதிவிலக்கல்ல என நிரூபித்திருக்கின்றனர்.
A women come out for getting justice in sexual violation case is rare, because of our male dominated society. In feature the nun suffer all walks of life. I congradulate ma.ka.e.ka getting justice for nun.
Vinavu tholargalukku enathu vaalthhukkal… thodarattum ungal makkal sevai……
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் காமவெறி பாதிரி ராஜரத்தினம் !! | வினவு!…
அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால், இது நம்ம ஆளு! என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன…
கோவை குழந்தைகள் கொலை வழக்கில் என்கௌன்ட்டர் செய்யப்பட்ட மோகன கிருஷ்ணனுக்கு வக்காலத்து வாங்கிய வினவு, அந்த பாதிரியார் குற்றம் சாட்ட பட்டு நிரூபிக்க படாத நிலையில் அவருக்கு எதிராக மகஇக படைகளை இறக்கி விட்டு ஆர்பாட்டம் செய்வது எந்த வகையில் நியாயம்,
ஏன் இந்த இரட்டை நிலை. ஏன் இந்த போலி வேஷம். தாங்கள் நினைத்தது மட்டும் தான் சரி என்ற நிலையை உங்களுக்கு யார் கொடுத்தது.
வினவு மோகன் ராஜுக்கு வக்காலத்து வாங்கவில்லை. எந்த விசாரணைக்கும் முன்னால் சுட்டு கொல்லத்துடிக்கும் மனநிலைக்கு மக்களை இழுத்துச் சென்ற பத்திரிகை-போலீஸ் கூட்டுச் வேலையைத் தான் வினவு சாடியது. கூடவே ஆளும் கட்சியின் சதியையும். முதலில் கொஞ்சம் தெளிவாக படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
சரி…. சதாம் உஸேனை கொல்லும் அதிகாரத்தை அமெரிக்க எடுத்துக்கொண்டது சரியா?
Dear Mr.கார்பன் கூட்டாளி
Before publish any comment, please read article fully and than publish your comments. Please don’t give wrong information.
ஆம் எதற்கெடுத்தாலும் ஜாதியின் பெயரை சொல்லித் தப்பிக்கும் வழியை குற்றவாளிகள் பயன்படுத்துகிறார்கள். .பாவிகளுக்கு ஜாதி ஏது?இதில் கூடவா இட ஒதுக்கீடு?இப்போதுக்கூட வீரமணி கருணாநிதி போன்றவர்கள் அ.ராசா 2 G விவகாரத்தில் ஜாதி அஸ்த்திரத்தை எடுக்கிறார்கள்.ஊழல் புரிபவர்களில் என்ன பாகுபாடு.யார் தவறு செய்கிறார்களோ சட்டத்தின் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.ஜாதியைக் கேடயமாக பயன் படுத்தக் கூடாது .
Unmai veli verah poradum unkaluku valthukal
ஜாதி என்று குறிப்பிடவும். ஜாதி என்பது தமிழ் கிடையாது. அப்படி ஒரு சொல் தமிழில் கிடையாது. சாதி என்று சொல்வதனால் அது ஏதோ தமிழ் சொல் மாதிரி ஆகி விடுகிறது. தயவு செய்து தவிர்க்கவும்
dear corbon kuuttaly,
read and understand the essays
காம வெறிபிடித்த கயவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டியது அரசின் கடமை!
இதில் ஜாதி வெறிபிடித்தவர்கள் நுழைந்து அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது கொடுமை!!
என்னவாயிற்று உங்களுக்கு? கேவலம். உங்களை ஒரு நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா? சாதி ஒரு பக்கம் என்றாலும், அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலா இத்தனை நிகழ்வுகள் நடந்திருக்க முடியும்? நீங்களே யோசித்துப் பாருங்கள். அவர்கள் எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் அப்பெண்ணின் அனுமதியில்லாமலா அழைத்துச் சென்றிருக்க முடியும்? முதல் முறையே அப்பெண்ணை அவர் தவறாகப் பயன்படுத்திய பொழுதே அப்பெண் ஏன் அதைப் பற்றி வாய்திறக்கவில்லை? இரு தரப்பிலும் குற்றங்கள் இருக்கும் பொழுது ஒரு தரப்பினரை மட்டும் நீங்கள் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்பெண்ணுக்கு இது முதல்முறை என்றால், உங்கள் போராட்டத்தில் நியாயம் இருக்கும். இதற்கு மேல் உங்களுக்கு என்னத்த சொல்ல… சும்மா சிவப்பு சட்டையை போட்டுகிட்டு, கொடிய புடுச்சுட்டா மட்டும் போதாது…
நான்கு வருடமாக அந்த பெண்ணின் அனுமதியோடு (ஏறக்குறைய நித்யானந்தா கேசு மாதிரிதான் ) நடந்த முடிந்த பிறகு பணம் வேன்டும் பதவி வேன்டும் இல்லையென்றால் கேவலப்படுதிவிடுவேன் என்று மிரட்டுவது அந்த பாதிரியார் தாழ்த்த ஜாதியில் இருந்து இந்த நிலைக்கு வந்ததால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ அவர்களின் மறைமுக சதியகவும் இருக்க வாய்ப்பு உள்ளது .மத அடையாளங்களை தவிர்த்து பார்த்தால் இது இந்த சமுதாயத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகளில் ஓன்று .மற்றபடி இதற்கு ம.க.இ .க இந்த அளவு முக்கியம் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை .
Ungaludaiya Kootrin padi antha pen Panam parikkum Nookkathirkaagave ippadi Seikiraar endre Kooda Vaiththukkolvoom.
aanaal,
Paathiri Yookkiyanaa Enbathu Thaan Kelvi Athai Patri Pesungal.
_
Antha Porukkikku aatharavaaga Nirpathu Sariyaa Thavaraa Endru sollungal ?
ஏங்க பாதிரியாருன்ன உணர்ச்சி இருக்காதா?இவனுங்க மட்டுமல்ல கோயில் பூசாரி ,முஸ்லிம் மத பூசாரி இவனுங்க எல்லாருக்குமே பாலுணர்ச்சி கொஞ்சம் நம்ம மாதிரி ஆளுங்களை விட அதிகம்.ஏன்? எல்லாம் திங்கற உட்டம் அப்புடி .அதிலும் பாதிரியாருகளுக்கு சொல்லவே வேண்டாம் .பாதிரியாருங்கற வேஷத்துல செய்ததுதான் தப்பு ,அந்த கன்னியாஸ்திரி (இனிமேல் அப்புடி சொல்லமுடியாது ) அதுக்கு ஒத்துழைத்த விதமும் தப்புதான் .நாலு வருசமா இந்த தப்பை பாதிரியார் செய்வதற்கு அனுமதித்தது (இது அவர் சார்ந்த சபைக்கு தெரிந்துதான் நடந்ததா?)எல்லா சாமியார் மயி….ரா…ன்களும் இப்புடி காம வெறி புடிச்சிதன் அலையுறானுகப்பா !கண்டிப்பாக தண்டிக்க படவேண்டியவர்தான் இந்த பாதிரியார் வேஷம் போட்ட ஆசாமி .
ஒரு பெண்ணை அவளின் சம்மதம் இல்லாமல்
கற்பழிக்கவோ அல்லது உறவு கொள்ளவோ முடியாது என்பது மருத்துவ கூற்று (சுய நினைவுடன் இருக்கும் நிலையில் ) நான்கு வருடமாக மயக்க நிலையிலேயே இருந்து இப்பொழுதுதான் நினைவு திரும்பியதா ?இதைதான் இனமான பெரியார்,” கடவுளை கற்பித்தவன் முட்டாள் வணங்குபவன் காட்டுமிராண்டி “(இது அனைத்து மத கடவுளுக்கும் பொருந்தும் )என்று எந்த காலத்திற்கும் பொருந்தும் கருத்தை உதிர்த்தார் .பாதிரியார் கடவுளின் பிரதிநிதி என்பதால் இதையெல்லாம் சொள்ளவேண்டியிருக்குது .
பாவிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கும் பாதிரி பாவச்செயல்கள் செய்யலாமோ!
பாவமன்னிப்பு நம்பிக்கை உள்ள நீங்கள் கிறித்துவத்துக்கு ஆதரவாக பேசுவதில் வியப்பில்லை
@Rajasekar,
unga nookkam thaan Enna ?
R.s.s kumbalil veriyargal irukkiraargal aanaa ungalaip paarththaal appadi theriyavillai..
பாதிரி தவறான எண்ணத்தோடு அணுகும் போதே தவிர்த்திருக்கலாம் அல்லது தன்னுடைய மடத்தின் தலைவியிடம் தெரிவித்து இருக்கலாம், அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சபையின் (mother Superior ) தலைவியிடமோ, உறவுக்கரரிடம் சொல்லியிருக்கலாம் (அ) ஊரில் உள்ள பங்கு பேரவை போன்ற அமைப்புகளிடம் முறையிட்டு இருக்கலாம், ஏனென்றால் 4 வருடம் ஒருவர் துன்புறுத்துவதை சகித்துக்கொண்டு இருக்கவேண்டிய அவசியமென்ன? அந்த பாதரி உண்மையில் தவறு செய்திருந்தால் கடுமையாக தண்டிக்க பட வேண்டும். இதில் சாதியை நுழைத்து குற்றவாளியை தப்பவிடகூடாது.
can you pls advise the link between this case & Periyar diravida kazhagam?
வினவு, நான் நேத்து கேட்ட கேள்விக்கு இந்தப் பதிவுல பதில் கிடைச்ச மாதிரி தான் இருக்குது. சாதி எதுவானாலும், தப்பு தப்பு தான். வன்புணர்வு குற்றம் தான். நன்றி. உங்க போராட்டத்துக்கும் வாழ்த்துக்கள்.
எங்காவது சாதி வெறியர்கள் தலித்கள் மீது நடத்திய வல்லுறவு மற்றும் கொலைகளில் தலையிட்டு இருக்கிறீரா?நாலு வருஷமா ஒரு டிஎஸ்பி கற்பழித்துகொண்டு இருக்கிறான் என்று மதுரையில் ஒரு பெண் நேற்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார் அதை போய் கவனியுங்கள் வினவு. போலீஸ்காரனும் சாமியாரும் தானே எளிய வாய்ப்புகள்?
Athaium veliye kondu Varuvoom sir, athukku munnaal Unga unmaiyaana perail comment Poodunga.
Unga Ooraiyum peraiyum Sollunga DSP ai Naama Sernthe Pooi Ambalappaduththuvoom,
Athukku Munnaadi
Paathiri Visayathil yaar Seithathu Sarinu Sollunga ?
Saathiyai Vaiththu Kaappaatra Muyalvathu Sariyaa Allathu Evanaaga irunthaalum Ambalappaduththuvathu
sariyaa ?
சரியாக படிக்க முடியவில்லை ,தமிழிலே நேரடியாக எழுதலாமே ?!
some days back one religious head request the IRAQUE government to stop the death penalty of the Hard Core criminal who is resposible for lahks of innocent people murder.
because he belonged his region. God save us, he never thinks or sorry ,about the mass murder of the innocent children , woman and people.
now here caste enter to save this person.
there is no end for this,
we must try to unite the people by Inter-caste, Inter-religious marriage.
amaippu enbathu ungal peyaraa aatharavaalan enbathu neengal vaangiya pattamaa?panam ullavan paathiriyaai irunthaalum indha maadhiri pengal vida maattaargal
Paathirikitta panam irukku illai ippa athuvaa inga pechu ?
_
paathiri vedaththil oru porukki antha porukkikku aatharavaaga
rendu ‘murpookku’ amaippugal kalam irangiyirukkiraargal antha yookkiyargalai patri pesungal.
_
அபாண்டமாய் அந்த பெண்ணின் மீது பழி சுமர்த்தாதீர்கள். அந்த பாதிரியின் யோக்கியதையைப் பற்றி பேசுங்கள்.
[…] […]
En peyar suresh,
naan ma.ka.e.ka amaippukku aatharavaalan.
–
r.s.s paarppana kumbal,
saathi veriyargal,
muthalaaligal,
oottupporukkigal
matrumulla pirpookku sakthigal thaan engal Amaippukku Ethirigal.
_
neengal entha vagaiyai sernthavar ?
Saathi veri kumbalaa allathu oottupporukkiyaa ?
_
oru pompalai porukkikku vakkaalaththu vaanga ungalukku vetkamaa illaiyaa ?
அன்புள்ள சுரேஷ், நீங்கள் இந்த மென்பொருட்களை பயன்படுத்தி தமிழில் பின்னூட்டம் எழுதலாம்
http://tamileditor.org/
http://www.google.com/transliterate/
ஆங்கிலத்தில் தமிழை வாசிப்பது மிகுந்த சிரமாக உள்ளது
பரிசீலியுங்கள் தோழரே
Thozare,
vinavai naan mobileil thaan paarkkiren, computeril paarkkum vasathi illai.
_
tamileditoril try panni paarthen mobileil type panni past panna mudiyavillai thozare.
“அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால், “இது நம்ம ஆளு!” என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன.”
விடுதலை சிறுத்தைகள் இவ்வாறு செய்யக்கூடிய அமைப்புதான் என்பதற்கு முன் உதாரணங்கள் உள்ளன. ஆனால் பெரியார் தி.க. ஏன் இவ்வாறு செய்கிறது? புரிய முடியவில்லை. பெரியார் திகவினர் விளக்கினால் சரியாக இருக்கும்.
வணக்கம், கன்னித்துறவி மேரி மற்றும் துறவுத்தந்தை ராசரத்தினம் தொடர்பான பாலியல் குற்றம் பற்றிய சில மறுக்க முடியாத உண்மைகள். கன்னித்துறவி தனது ஆகஸ்டு 25 நாளிட்டு புனித அன்னாள் மடத்தலைமைக்கு எழுதிய கடிதத்தில் தான் துறவுத்தந்தையோடு மனமொப்பிய பாலுறவு கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் செப்டம்பர் 23 நாளிட்ட கடிதத்தில் யேசு மறையகத்திற்கு அது ஒரு வன்புணர்ச்சி என்று கூறியுள்ளார். இடையில் என்ன நடந்தது? தான் யேசு சபையிலிருந்து நிக்கப்பட்டதற்குப் பின்பே காவல்நிலையத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். ஏன்? யார் இவரை நகர்த்துவது? கன்னித்துறவி ஏழ்மையான குடும்பப்பின்னணியுடையவர் என்றால் அவருடைய சகோதரர் இலண்டனில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாரே, யார் உபயம்? யேசு சபையிடம் பணம் கேட்டு வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒரு தாதா மூலம் கன்னித்துறவி மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஏன் விசாரிக்கவில்லை? அது என்ன மனமொப்பிய பாலுறவுக்கான கூலியா? 2006ஆம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டுவரும் இவர்களின் சுமூகமான உறவு கன்னித்துறவி யேசு சபையிலிருந்து விலக்கப்பட்டபின் அரங்கேற்றப்பட்டிருப்பதன் காரணம் என்ன? துறவு என்பது ஒரு தவறான மத நம்பிக்கை. பிழைப்பிற்காக கிறித்துவ மதம் மாறி அதில் துறவும் பூண்டு தமது இயல்பான பாலியல் உணர்வுகளை திரைமறைவில் அரங்கேற்றிக்கொண்ட இவ்விரு துறவிகளும் ‘மதத்துறவின்’ பலிகடாக்கள். இது போன்ற எண்ணற்ற துறவிகள் எல்லா மதங்களிலும் இக்குற்றாச்சாட்டிற்கு உள்ளாவது தெரிந்ததே. பார்ப்பன சங்கராச்சாரி இருவரின் திரைமறைவு வாழ்க்கை அம்பலத்திற்கு வரவில்லையா? பார்ப்பனரல்லாத பிரேமானந்தா வகையறாக்கள் இத்தகு குற்றங்களுக்கு ஆளாகவில்லையா? ஆனால் யார் மாட்டிக்கொள்கிறார்கள், யார் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சமூகக் கேள்வி? இவ்வகையில் திருச்சியைச் சேர்ந்த கிறித்துவ வன்னிய துறவுத்தந்தைகள் தலித் கிறித்துவ ராசரத்தினத்தினத்திற்கு எதிராக பணியாற்றிய மர்ம முடிச்சுக்கள் ஏன் அவிழ்க்கப்படவில்லை? வேறு ஏதோ வகையில் ஜோசப் கல்லூரி, அதன் நிருவாகம், ராசரத்தினம் செய்த தவறுகள், குற்றங்களை நேரடியாக மட்டுமே எதிர்க்க வேண்டும். துறவு ஒழுக்கத்திற்கு பலியான வகையில் ராசரத்தினம் செய்த மதக்குற்றத்தை காரணமாக வைத்துப் பழிவாங்குவதும் மிரட்டலே. இது பார்ப்பானின் ராசதந்திரம். இது ம.க.இ.கவிற்கு தேவையற்றதே. உண்மையில் இந்தப் பாலுறவுக் குற்றச்சாட்டின் பின்னணியில் இருக்கும் சமூக கோளாறு என்ன என்பதை ஆராயத் தவறிவிட்டது ம.க.இ.க. ஏனென்றால் இதன் பின் பார்ப்பன மூலை இருப்பது தான். வேறொரு வகையில் ராசரத்தினமும் ஜோசப் கல்லூரி நிருவாகமும் குற்றவாளிகள். ஆனால் அக்குற்றங்களுக்கு அவர்களை தண்டிக்க முடியவில்லையே என்று ‘சரிதான் இது தான் சாக்கு’ என்று இந்தப் பாலியல் குற்றச்சாட்டை ஆயுதமாக ஏந்திய ம.க.இ.க.வின் சமூக யோக்கியதை என்ன? துறவிகள் பலர் மீது பாலியல் குற்றங்கள் உள்ளன. அது வன்புணர்வா அல்லது மனமொப்பிய புணர்வா என்பது ஆராயப்படவேண்டும். அது மனமொப்பிய புணர்வு என்றால் அதில் மதக்குற்றம் இருக்க முடியுமே ஒழிய சமூகக் குற்றம் இருக்க முடியாது.மதக்குற்றம் என்றால் அது ஒரு பெரிய பிரச்சனையில்லை. அதனை நாம் ஆதரிக்கின்றோம். வன்புணர்வேயில்லை என்று கன்னித்துறவி மேரி வாக்குமூலம் கொடுத்துவிட்டு பின் வன் புணர்ச்சி என்று மாற்றிப்பேசவேண்டிய அவசியத்தின் பின்னணியை ஏன் ஆராயவில்லை. ஒரு குற்றச்சாட்டு என்பதை சமூக ஆய்வின் அடிப்படையில் தான் ஆராய வேண்டும். சொந்த காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் அணுகமுடியாது. மேசை நாற்காலியும், காகிதமும் பேனாவும் கிடைத்தால் எத்தனை சமூகவியல் கட்டுரைகளும் எழுதமுடியுமா? அப்படி எழுதினாலும் அதனை ஒப்புக்கொள்வோர் யார்? உண்மை வரவேண்டும். அதற்கான உள்ளுணர்வு சுடர்விட்டு எரியவேண்டும். அதுவே எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காணும் வழி. ஏதோ ஒரு வகையில் இருக்கும் காழ்ப்புணர்வால், மதக்குற்றம் புரிந்த ராசரத்தினத்தின் மீது இதுதான் சாக்கு குற்றம் சாட்டலால் சில சமூக எதார்த்தங்கள் மறைக்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கின்றது. அந்த ஒரு நிகழ்வின் பின்புலம், சமூக ஆய்வு என்ன என்பது தான் இங்கே முக்கியம். ம.க.இ.க இதைச் செய்யத்தவறிவிட்டதனால் அது தனது சமூக ஆய்வுப் பார்வை என்ற மார்க்சிய மெய்ஞானத்திலிருந்து தவறிவிடுகிறது. இந்து மதத்தின் பாதிப்பால் இந்திய கிறித்துவ மதத்திருச்சபைகளிலும் கிறித்துவ வன்னியர், வெள்ளாளர் போன்ற உயர் சாதி இந்துக்கள் தலித் கிறித்துவர்களை ஒடுக்க எத்தனிக்கும் போக்கு தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது. அவ்வகையில் கிறித்துவ வன்னியரான மேரிக்குப் பின்னால் இருக்கும் வன்னியர் தாதா ஒருவரும், கிறித்துவ வன்னிய துறவுத்தந்தைகளும் மேரியை வைத்து ஆடும் நாடகங்கள் எவ்வகைப்பட்டவை? ஒரு பெண் வன்புணர்ச்சி குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒரு ஆண் குற்றவாளியாகிவிடமுடியுமா? பெண்ணியம் என்ற பொய்ப்போர்வையில் தலித்தை பலிகொடுக்கும் ம.க.இ.கவின் முக்கிய நோக்கம் என்ன? மேலும் இந்நிகழ்வில் பணம் பறிக்கும் நோக்கம் அடிப்பட்டையாக மய்யம் கொண்டுள்ளதா? என்றும் ஆராய வேண்டும். யார் குற்றவாளி? ம.க.இ.கவே பதில் சொல். இது தான் சாக்கு என்று வரிந்து கட்டும் ம.க.இ.க ஒரு ‘பிளாக் மெயில்’ பேரிவழியா!
சிங்காரம்,
பாலியல் வன்முறைக்குள்ளாகும் எல்லாப் பெண்களைப் பற்றியும் இப்படித்தான் பல்வேறு கதைகளும் கட்டியெழுப்பப்படுகின்றன. அதற்கு பிளாரன்ஸ் மேரியும் விதிவிலக்கல்ல. அதிகாரத்தில் இருக்கும் ராஜரத்தினமும், அதிகாரம் ஏதுமற்ற கன்னித்துறவியும் மனமொப்பி உறவு கொள்ள முடியுமா என்பதை கொஞ்சம் நடைமுறை அறிவு இருந்தாலே புரிந்து கொள்ளலாம். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தியே தமக்கு கீழ் இருக்கும் பெண்களை வன்புணர்ச்சி செய்கிறார்கள். இது ராஜரத்தினத்திற்கும் பொருந்தும். அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதை பயன்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறார். அப்படி ஒரு தலித் சிந்தனை இருக்கும்பட்சத்தில் இவர் இத்தனை நாட்கள் திருச்சபையில் உள்ள தீண்டாமை கொடுமைகளை – திருச்சி கல்லறை மயானத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவர் – எப்படி சகித்துக் கொண்டார்? தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் வரை அவருக்கு புகார்கள் இல்லை. பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்ததும் தீடீரென்று தலித் ஆகிவிட்டார். சகிக்க முடியாத நாடகம், சலித்துப்போன வசனங்கள், தேவன் உங்களை மன்னிக்கட்டும்.
@
Singaram,
–
Neengal V.C.K, PE.D.K iruvarum Seithathu,
Sari Endru Solla Varugireergalaa, athaavathu Dalit Enbathaal Oru Porukkiyai Kaappaatra Munaivathai Sari Endru Solgireergalaa ?
_
aam Endraal Velippadiyaaga aamaam Atharku Thaan Muyalgiroom Endru Thunivudan Sollungal.
_
illai Avargal Seivathu Thavaru Endraal Thavaru Endru Sollungal.
_
Athai Viduththu Oru Ayookkiyanai Kaappaatra Muyalum irandu Yookkiya Sigaamani Amaippugalai Kaappaatruvatharkaaga
Neengal Ma.Ka.E.Ka Meethu Paaivathu Kandanaththirkuriyathu.
_
innum Thelivaaga Solla Vendum Endraal intha Visayaththil
Ma.Ka.E.Ka Seithathu Sariyaa ?
V.C.K-PE.D.K Seithathu Sariyaa Enbathai Udaiththu Sollungal.
[…] This post was mentioned on Twitter by ஏழர, மணி. மணி said: https://www.vinavu.com/2010/11/12/st-josephs-trichy-2/#comment-33036 தலித் முகமூடியுடன் ஆணாதிக்க அறைகூவல் comment […]
“பாலியல் வன்முறைக்குள்ளாகும் எல்லாப் பெண்களைப் பற்றியும் இப்படித்தான் பல்வேறு கதைகளும் கட்டியெழுப்பப்படுகின்றன. அதற்கு பிளாரன்ஸ் மேரியும் விதிவிலக்கல்ல. அதிகாரத்தில் இருக்கும் ராஜரத்தினமும், அதிகாரம் ஏதுமற்ற கன்னித்துறவியும் மனமொப்பி உறவு கொள்ள முடியுமா என்பதை கொஞ்சம் நடைமுறை அறிவு இருந்தாலே புரிந்து கொள்ளலாம். அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தியே தமக்கு கீழ் இருக்கும் பெண்களை வன்புணர்ச்சி செய்கிறார்கள்”—————————- சரி, இது உங்களுடைய அனுமானம் அல்லது பல்வேறு நிகழ்வுகளில் காணக்கிடைக்கும் அனுபவம் என்று வைத்துக்கொள்ளலாம். அதுவே எல்லா நிகழ்வுகளுக்கும் பொதுவான முடிவாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு எழுதி விட முடியுமா? உங்களுடைய இது குறித்த கள ஆய்வினை வெளியிடுங்கள். அப்படி ஏதேனும் கள ஆய்வு செய்தீர்களா? கன்னித்துறவியாரின் ஆகஸ்டு 25 ஆம் நாளிட்ட புனித அன்னம்மாள் மடத்தலைமைக்கு எழுதப்பட்ட கடிதத்தைப் பற்றி கன்னித்துறவியிடம் ஏதாவது கேள்வி கேட்டீர்களா இல்லையா? அது பற்றிய கன்னித்துறவியின் பதில் என்ன? கன்னித்துறவி ஏன் யேசு சபையிலிருந்து நீக்கப்பட்டபின் தான் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் நீக்கப்படாவிட்டால் அவ்வாறு புகார் கொடுக்காமலேயே இருந்திருப்பாரா? ஆகஸ்டு 25 ஆம் நாளிட்ட கடித்ததில் தான் மனமொப்பிய பாலுறவு கொண்டதாக ஏன் சொன்னார்? என எத்தனையோ அவிழ்க்கப்படாத முடிச்சுகளை ஏன் அவிழ்த்துப்பார்க்க யோசிக்கின்றது ம.க.இ.க. அல்லது அவிழ்க்க மனமில்லையா? சிக்குனாண்ட சாமியார் என்று மொட்டையாக களத்தில் இறங்கிவிட்டதா ம.க.இ.க. எனக்கு சான்றுகள் வேண்டும். விளக்கங்கள் வேண்டும். சம்பந்தப்பட்ட நிகழ்வில் என்ன நடந்தது என்ற தெளிவான பதில் வேண்டும். பறப்பது எல்லாம் பறவை எனவே ஏரோப்பிளேனும் பறவை என்றால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். எந்திரன் படத்தில் சொன்னது போல, “படைத்தவன் தான் கடவுள் என்றால் என்னைப் படைத்தவன் வசீகரன், வசீகரன் இருக்கிறான் எனவே கடவுள் இருக்கிறது” என்று சுஜாதா வசனம் தேவையில்லை. எல்லாம் வல்ல பரலோக பரமபிதாவான மார்க்சின் அங்கீகரிக்கப்பட்ட அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கம்யூனிச தேவதூதன் என்று களமிறங்கியிருக்கும் ம.க.இ.கவே நீங்கள் போட்டது தான் ரோடு மற்றது எல்லாம் கோடு என்ற உங்கள் ரோடுரோலரில் இருந்து இறங்கி இந்த உலகத்திற்கு வாருங்கள். வந்து விவாதியுங்கள். உங்களுடைய பொதுமைவாதம் எமக்குத் தேவையில்லை. களத்தில் என்ன உண்மை? நன்றியுடன் முரசு.
திருச்சபையினுள் இருக்கும்போது அது தனது அதிகாரத்தை கன்னிகளிடம் எப்படி எல்லாம் ஏவும் என்பதும் அதன் கொடுங்கரத்தின் கீழே அதனை எதிர்க்கமுடியாது என்பதும் புதிதல்ல. சபையை விட்டு நீக்கும் முகாந்திரத்தோடு மிரட்டி எழுதிவாங்கப்பட்ட காகிதத்தின்பேரில் விவாதம் சிங்காரம் விவாதம் நடத்துவதும், கைதானவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தையே சாட்சியமாக்கிடும் தடா சட்டநடைமுறைகளும் வெவ்வேறல்ல. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலத்தை அலசிப்போடும் சிங்காரம் (சிங்காரத்தின் கல்லாப்பெட்டி தரும் வெள்ளிக்காசுக்களின் எண்ணிக்கை யாமறியோம்),
//அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதை பயன்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறார். அப்படி ஒரு தலித் சிந்தனை இருக்கும்பட்சத்தில் இவர் இத்தனை நாட்கள் திருச்சபையில் உள்ள தீண்டாமை கொடுமைகளை – திருச்சி கல்லறை மயானத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவர் – எப்படி சகித்துக் கொண்டார்? தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் வரை அவருக்கு புகார்கள் இல்லை. பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்ததும் தீடீரென்று தலித் ஆகிவிட்டார். சகிக்க முடியாத நாடகம், சலித்துப்போன வசனங்கள், தேவன் உங்களை மன்னிக்கட்டும்.//
இதற்கென்ன சொல்வார்?
திராவிட இயக்கத்தின் புளித்துப்போன தர்க்கம்தான் இவை எல்லாம். எல்லா முடிச்சுமாறித்தனமும் பண்ணுறது. மாட்டிக்கிட்டா ‘நான் சூத்திரன்..அதனாலதான் இப்படி எல்லாம் தண்டிக்கிறான்’ன்னு புலம்புறது.
வீரமணி: களவாணிப்பயலுகளான ராமசாமிக்கும் தினகரனுக்கும் இதே ஆயுதத்த எடுத்தார் (களவாணிகளை நாகரிகமாக நீதிபதின்னும் சொல்வர், மக்கள்)
இப்போ ஊழல் ராசாவுக்கு பக்கம் பக்கமா இதே லாஜிக்கிலே அட்டைக்கத்தி வீரன்கள் வீரமணியும் கோபாலபுரமும் ‘பார்ப்புக்கொரு நீதி..சூத்திரனுக்கு ஒரு நீதியான்னு’ கிளம்பீருக்கு..
பாதிரியா இருந்துக்கிட்டு இப்படி பெண்ணைச் சுரண்டுவதை தலித் எனும் பேரால் ஆதரிக்கும் பாதிரியின் கல்லாப்பெட்டி சிங்காரமே..
ப்ளாரன்ஸ் மேரி ஒருக்கால் தலித்தாக இருந்திருப்பின்..என்ன செய்திருப்பாய்? அப்போது..தலித் நிலங்களையே ஆட்டையப் போட்ட தலித் தினகரனுக்கு வக்காலத்து வாங்கும் சில திராவிடக் கொழுந்துகளாட்டம் பேசி இருப்பியோ! ராஜரத்தினத்தின் வெள்ளிக்காசுகளின் மகிமையே மகிமை.
“இது ராஜரத்தினத்திற்கும் பொருந்தும். அவர் பிறப்பால் ஒரு தலித் என்பதை பயன்படுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறார். அப்படி ஒரு தலித் சிந்தனை இருக்கும்பட்சத்தில் இவர் இத்தனை நாட்கள் திருச்சபையில் உள்ள தீண்டாமை கொடுமைகளை – திருச்சி கல்லறை மயானத்தில் இருக்கும் தீண்டாமைச் சுவர் – எப்படி சகித்துக் கொண்டார்? தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் வரை அவருக்கு புகார்கள் இல்லை. பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்ததும் தீடீரென்று தலித் ஆகிவிட்டார்.”————————– சரி, இது பழைய கேள்வி. பணம் பதவி பட்டம் என்று கிடைத்துவிட்டால் பலர் தங்கள் இனத்தையே மறந்து விடுகிறார்கள். இளையராஜா ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவர் தனது இன மக்களுக்கு என்ன செய்தார்? அல்லது நாட்டுப்புற பாடலைக் காப்பியடித்துத்தான் கர்நாடக சங்கீதம் உருவானது என்று என்றைக்கேனும் சொல்லியிருக்கிறாரா. இன்னும் தியாக பிரமத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டுதானே இருக்கிறார். அதற்காக, அவரை இழிவு படுத்தும் பார்ப்பன மேதைகளை நாம் கண்டிக்கவில்லையா, கர்நாடக சங்கீதத்தின் தோலை உரிக்கவில்லையா? அவர் தலித் என்பது பிறப்பு, வாய்ப்பும் வசதியும் வந்தபின் அதை மறந்துவிட்டது அவரது சமூக அவலம். அதற்காக தலித் என்பதாலேயே அவரை மட்டப்படுத்தும் பார்ப்பன முகங்களில் நாம் எச்சில் துப்பவில்லையா? அப்படி பார்ப்பனர்கள் மட்டப்படுத்தும் போது, அட இளையராஜா தலித்துகளுக்கு என்ன செய்தார், அவரைப் போய் ஏன் நாம் ஏற்றுக்கொண்டு பேச வேண்டும்? என்று நாம் ஒதுங்கியது கிடையாதே. —– என்னத்தையாவது நீங்கள் பதில் சொன்னால் அதற்கு ஆமாம்சாமி போடுவதற்கு நான் ஒன்றும் பு.ஜா வாசகன் கிடையாது. கேள்வி கேள், சந்தேகி அதோ அங்கே சே குவேரா வழிகாட்டுகிறார்.
aaga,
Ungalukku Pirachinai Ma.Ka.E.Ka Mattumalla Marxiame Periya
Pirachanaiyaaga irukkirathu Enbathu Purigirathu.
_
oottuppoorukkikku, Mannikkavum
MLA vukku ivaiyellaam Kudaichalaaga iruppathu Viyappukkuriyathalla!-
Pinnoottam En 22.2kku Eppa Sir Pathil Solluveenga ?
–
Kaazppunarvu Kannai Maraikkum,
irunthaalum Konjam Kannai Thiranthu Ketta Kelvigalukku Ozunga Pathilai Sollittu Poonga Sir.
aaga,
Thappu Seithavan Dalit Endraal Avanai Kaappaatruveergal, Atharkaaga Matravargalai Thavaraanavargal Endru Niroobikka Muyaluveergal appadi thaane Mr. Singaram ?
Pennaadam Bharathum Dalit Thaane ?
–
Antha Siruvanukkaaga Kalaththil Nindrathu Ma.Ka.E.Ka Vaa
Viduthalai Chiruththaigalaa ?
–
Ange een Bharathai Kai Vitteergal ?
Avanukku aatharavaaga Nirkaathathu Mattumalla ethiraaga Nindreergale athu
een ?
Bharath enna Vanniya Saathiyaa,
illai Dalit thaane ?
–
Appadiyaanaal inge Seyalpaduvathu Saathiyaa Vargamaa ?
Che guveravaa Ungalukku ippadi thaan Vazi Kaattinaa ?
–
Panamulla
paathirikku
aatharavaagavum,
eezai Bharathukku
Ethiraagavum Nirkavaa Vazikaattinaar ?
–
Ungalukku ippadi Vazi kaattiyathu Che vaa allathu Che Poolave Mackup Poottukkondu Suvargalil Bose Kodukkum Annan THIRUMA vaa ?
நான் அமைப்பு சாராதவன். நாம் தெரிய வரும் செய்திகளை விமர்சிக்கின்றோம். அது ம.க.இ.க வாக இருந்தாலும், விடுதலை சிறுத்தைகளாக இருந்தாலும், பெ.தி.கவாக இருந்தாலும் அல்லது பிற மார்க்சிய மற்றும் தமிழ்தேசியவாத அமைப்புக்களாக இருந்தாலும் நமக்குக் கவலையில்லை. விசயம் என்ன என்பதிலிருந்து தான் விமர்சனம் பிறக்கின்றது. இந்த அமைப்பா அந்த அமைப்பா என்று நாம் பிரித்துப் பார்த்தது கிடையாது. அதனால் உங்களைப்போல ஒரு அமைப்புக்காக கட்டாயம் காவடி தூக்கியே ஆகவேண்டிய கட்டாயம் இல்லை. நான் சுதேச்சையான சுதந்திரமான சிந்தனையாளன். ம.க.இ.க எந்தக் கள ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதியது என்பதை வெளியிடவேண்டும். இல்லையேல் இந்த முரசு விரைவில் இந்நிகழ்வு தொடர்பாக ஒரு கள ஆய்வு செய்து உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளியிடுவான். அப்பொழுது உண்மைக்குப் புறம்பான உங்கள் செய்தியை திருத்திக்கொள்ளுங்கள். மேலும் இனிமேலும் சொந்த காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் ஒரு விசயத்தை அணுகும் போக்கை கைவிடுங்கள். கள ஆய்வு நடத்தி எந்தச் செய்தியையும் அந்தத் தரவுகளின் அடிப்படையில் வெளிவிடுங்கள். இது சொன்னா குத்தமா. ஏன் கொந்தளிக்கிறீர்கள். கேள்வியே கேட்காமல் இருப்பதற்கு இது என்ன காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்தா? நன்றி.
சிங்காரம்,
நீங்கள் எந்த அமைப்பையும் சாராமல் இருப்பது ஏன்?
உங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அமைப்புகள் எதுவும் இந்த உலகத்திலேயே இல்லையா?
நான் மார்க்சியம் தான் சரி என்கிறேன் எனவே அதை தமிழகத்தில் உயிர்ப்புடன் பிரயோகிக்கும் ம.க.இ.கவில் இருக்கிறேன்.
இது உங்களுக்கு காவடி தூக்குவதாக தெரிகிறதா? ஒரு கொள்கைக்காக, பெரும்பான்மை மக்களின் விடுதலைக்காக ஒரு அமைப்பில் இயங்குவதை காவடி தூக்குகிறேன் என்று சொல்கிற, நீங்கள் யார்?
தமிழக மக்களை சுரண்டிக்கொழுக்கும் ஓட்டுப்பொறுக்கி கருணாநிதியன் குடும்ப ஆட்சிக்கு காவடி தூக்கும் இரண்டு கட்சிகளுக்கு (வி.சி, பெ.தி.க) எந்த அமைப்பையும் சாராமல் இருப்பதாக கூறிக்கொண்டு காவடி தூக்கும் நீங்கள் என்னை பார்த்து காவடி தூக்குகிறேன் என்கிறீர்கள்.
மக்களை கொள்ளையடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு காவடி தூக்க, சொம்பு அடிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
///உண்மைக்குப் புறம்பான உங்கள் செய்தியை திருத்திக்கொள்ளுங்கள்.///
எது கல்லாபெட்டி(!) உண்மைக்கு புறம்பானது?
பாதிரியார் பொம்பளை பொறுக்கி என்பது உண்மைக்கு புறம்பானதா? அல்லது வி.சி, பெ.தி.க இருவரும் அந்த பொறுக்கிக்கு வக்காலத்து வாங்குவது உண்மைக்கு புறம்பானதா? எது உண்மைக்கு புறம்பானது?
///இனிமேலும் சொந்த காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் ஒரு விசயத்தை அணுகும் போக்கை கைவிடுங்கள்.///
எங்களுக்கு யார் மீது காழ்ப்புணர்ச்சி, சிங்காரம்?
உங்கள் மீதா? அல்லது நீங்கள் சொம்படிக்கும் சொம்பைகள் மீதா? ஓட்டு பொறுக்கிகளையும் ஓட்டு பொறுக்கிகளுக்கு சொம்படிக்கும் சொம்பைகளையும், மக்கள் மத்தியில் வைத்து டவுசரைக் கழட்டவேண்டும் என்கிற ஆசையை தவிர எங்களுக்கு வேறு எந்த ஆசையும் இல்லை.
எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் காமெடி பண்ண முடியுது?
///கேள்வியே கேட்காமல் இருப்பதற்கு இது என்ன காம்ரேட் ஸ்டாலினின் சோவியத்தா? நன்றி.///
ஸ்டாலின் ஆட்சியை கண்டு குலை நடுங்குபவர்கள், மக்களை சுரண்டும் ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளிகளும் தான். நீங்களும் மக்களை சுரண்டுகிறீர்களோ?
சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!
கேள்வி கேள், கேலி செய். கேள்வி கேட்டால் குற்றமா? நீங்கள் எந்தக் கள ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்தச் செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்? அந்தத் தரவுகளை வெளியிடுங்கள். ஒரு சமூக நிகழ்வை அணுகும் முறை கள ஆய்வு முறையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட அணுகுமுறை உங்களுக்கு இருக்கின்றதா? அப்படியிருந்தால் அந்தத் தரவுகளை வெளியிடுங்கள். இந்தக் கேள்வி தவறா? எது தடா, எது பொடா? என்ன ஆதாரம்? ஏன் யேசு சபையை விட்டு விலக்கப்பட்ட பின் இப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது? இதன் பின்னணி என்ன? பதில் சொல் ம.க.இ.க அல்லது வினவு.
சிங்காரம்,
மக இகவா பெதிக வாங்கிறது அப்புறம் இருக்கட்டும்.
விசயத்தை அதன் தர்மநியாயத்தின் பேரில் அணுகுவோம்.
எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக இருக்கட்டும் என சம்பவம் நடந்த இடம் கலெக்டர் ஆபீஸ்னு வச்சுக்குவோம். ப்ளாரன்ஸ் மேரி லோயர் டிவிசன் கிளார்க்.. பாதர்தான் கலெக்டர். கலெக்டர் தனது வாய்ப்பு,அதிகார தோரணை மூலமாக மிரட்டியோ, காசு / சலுகை மூலம் பணியவைத்தோ கிளார்க்கை பாலியல் சுரண்டல் செய்கிறார். இது சில ஆண்டுகள் நீடிக்கிறது. கலெக்டர் இப்போது கழற்றிவிட முடிவு செய்கிறார். இங்கே முரண்பாடு முற்றுகிறது. கலெக்டர் மீது நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கிளார்க் புகார் கொடுக்கிறார். கலெக்டர் நான் யோக்கியமானவன் எனப் புலம்புகிறார். சில ஆதாரங்களை கிளார்க் முன்வைத்தபின்னர் அங்கே கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. தாங்கள் சொல்லியபடி எழுதிக் கொடுங்கள் என்று பேரமும் மிரட்டலும் கலந்த அந்தப்பஞ்சாயத்தில் ‘இருவரும் மனம் ஒத்து இதைச் செய்தோம்’னு அந்தப் பெண்ணிடம் எழுதி வாங்கப்படுகிறது. அதே காகிதத்தை ஆதாரம் காட்டி பெண் மீது ஒழுங்கு நடவடிக்கையும்..கலெக்டர் மீது நடவடிக்கை ஏதும் இன்றியும் விசயம் முடித்து வைக்கப்படுகிறது. இதுதான் 99 சதம் நடக்க சாத்தியமுள்ளது- ஆணாதிக்க, அதிகாரவர்க்க நிறுவனங்கள் அனைத்திலும். இப்போது வேலை நீக்கம் செய்யப்பட்ட பெண் – குமுறாமல் என்ன செய்வாள்? தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுரண்டுவதும், பின்னர் தன்னை மட்டும் ஒழுக்கம் கெட்டவள் என்று வீசி எறிவதும் மகா அநீதி என உணர்ந்து போராடமாட்டாளா? அவளிடம் நீ அன்னிக்கு அப்படி எழுதிக்கொடுத்தவதானே..என்று வக்கிரமாகக் கேக்கும் சிங்காரமே பதில் சொல்..இதில் பாதிரி குற்றமற்றவனா? அவன் மட்டும் ஏன் தண்டிக்கப்படவில்லை? சபையை விட்டு ஏன் துரத்தப்படவில்லை? அவனை போலீசு நடவடிக்கையின் கீழ்க் கொண்டுவருவதுதானே நியாயம்? இதில் கத்தோலிக்கம், சாதி எல்லாத்தையும் விட்டுவிட்டுப் பார்த்தாலும் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தனது காமவெறியை கையறுநிலையில் உள்ள பெண்ணிடம் தீர்த்துக்கொண்டு அவளையே தண்டிக்கும் மிருகமாகத்தானே உள்ளான் – பாதிரி? அவன் எந்தச்சாதியாய் இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவனே? இதுக்கெல்லாம் சாதி முகமூடி போட ஆரம்பித்தால் என்னாகும்? தலித்தாகப் பிறந்த காரணத்தைக் காட்டியே ஒருவன் “எக்ஸ் க்யூஸ் மீ..நான் ஒரு ரேப் பண்ணிக்கிறேன்..நான் தலித்..எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க” “வி.சி. / பெதிக..ரெடியா இருந்துக்கோங்க..எனக்காகக் குரல் கொடுங்க” என்று சொல்ல வெகுநாளாகாது. கள ஆய்வுன்னா என்ன ஓய்..பாதிரியார் வீசி எறியும் எலும்புகளைக் களத்தில் முகர்ந்து ஆய்வதா? உன்னை ஏவி விட்டவர்கள் சந்தடி சாக்கில் ஸ்டாலினையும் கடித்துவா என்றுள்ளனர்..