மோகன்-சி-லாசரஸ்
மோகன் சி லாசரஸ்

 “ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார்.  அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்”

“ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும்” என்கிற சப்தம் வெளிப்பட்டது. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர். பிரியத்துக்குரிய பிள்ளைகளே… அது தான் உங்கள் பாவக் கணக்குப் புத்தகம். சீக்கிரமே வருவேன் என்று சொன்ன தேவன் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?”

வின்சென்ட்-செல்வகுமார்
”தீர்க்கதரிசி” வின்சென்ட் செல்வகுமார்

நண்பர்களே… குழம்பிப் போகாதீர்கள். நீங்கள் வினவு தளத்தினுள் தான் இருக்கிறீர்கள். இன்னும் இந்த சாத்தானின் தளத்தை ‘தேவ’ பிள்ளைகள் யாரும் ஹாக் செய்து விடவில்லை. மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமா கதைகள் எல்லாம் ‘தீர்க்கதரிசி’ என்று தமிழகக் கிருத்துவ வட்டாரத்தில் கொண்டாடப்படும் வின்சென்ட் செல்வகுமாரால் சொல்லப்பட்டவைகள் தான்.

‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா அக்கப்போர் சேனலை நடத்தி வருகிறார்கள். இந்த தொலைக்காட்சியில் இருபத்து நான்கு மணிநேரமும் மேலே சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற “பரஞ்சோதியும் பாயும் நாகமும்” பாணி தீர்க்கதரிசனங்களை அவ்விருவருமாக சேர்ந்து அவிழ்த்து ஆராதனை செய்து வருகிறார்கள்.

இவர்களது ‘தீர்க்கதரிசனங்கள்’ பெந்தெகோஸ்தெ வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள். அது மட்டுமல்ல, யாருடைய வாழ்வில் எப்போது ‘ஆவி’ குறுக்கிடும், அது என்ன விதமான ‘தரிசனங்களையும்’ ‘அபிஷேகங்களையும்’ அள்ளித்தரும் என்பது பற்றிய கன்சல்டேசனும் உண்டு.

இப்படி ஊர் உலகத்துக்கே குறி சொல்லும் தீர்க்கதரிசன வரத்தை வின்சென்ட் செல்வகுமாருக்கு அளித்த ‘ஆண்டவர்’ அவரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யாரிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் – அதற்கு முன் மேற்படி அம்புலிமாமா பற்றி நக்கீரனின் சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையின் விவரங்களைப் பார்த்து விடுவோம்.

வின்சென்ட் செல்வராஜ் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமாக் கதைகளை உற்பத்தி செய்யும் பாக்டரி ஒன்றை ராமநாதபுரம் அண்ணா நகரில் நடத்தி வருகிறார். அதன் பெயர் ‘தீர்க்கதரிசன மையம்’. முதலில் பத்து குடும்பங்களை சேர்த்துக் கொண்டு ஒரு ஜெப ஆலமாகத் தான் இந்த தீர்க்கதரிசன தொழிற்சாலை துவங்கப்பட்டது. காலப் போக்கில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் வின்சென்டின் கதைகளால் ஈர்க்கப்பட்டு வரத் துவங்கியுள்ளனர். காசும் குவியத் துவங்கியுள்ளது.

வாயில் வந்ததையெல்லாம் உளற ஒரு மேடை; அந்த உளறல்களைக் கேட்க ஒரு கூட்டம்; கேட்டு விட்டு கை நிறைய காசு கொடுக்க சில நூறு முட்டாள்கள் என்று ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார். கடந்த சில வருடங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துள்ளார். போதுமான அளவுக்கு நண்டு கொழுத்து விட்ட பின் ஊர்மேயத் துவங்கியிருக்கிறது.

சாது-சுந்தர்-செல்வராஜ்
சாது சுந்தர் செல்வராஜ்

அஸ்தரோத்தின் (விபச்சாரம் தொடர்பாக பைபிளில் வரும் பாத்திரம்)  ஆவி என்பது விபச்சாரத்துக்குரியது என்றும், அதை அழிக்கும் வரலாற்றுக் கடமையை தேவன் தன்னிடம் தந்திருக்கிறார் என்றும், இதற்காகவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாற்றி வருவதாகவும் நெருங்கியவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். அவசரப்பட்டு சிரித்து விடாதீர்கள் நண்பர்களே – காமெடியே இனிமேல் தான் ஆரம்பம். பெண்ணாக மாறி வரும் தனது உடலில் ஆண்டவர் கர்ப்பப் பையையும் உருவாக்கி வருவதாக அடித்து விட்டுள்ளார்.

பெண் குழந்தைகள் வைத்துள்ள விசுவாசிகளிடம் இந்தக் கதையைச் சொல்லி, அவர்கள் வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் அணியும் துவைக்காத உடைகளை வாங்கியிருக்கிறார். அவற்றைத் தனிமையில் இருக்கும் போது அணிந்து கொண்டு அலைந்திருக்கிறார். பெண்களை மடியில் அமர வைத்துக் கொள்வது, மேலே கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இந்தக் கூத்துக்களை ‘ஆண்டவராகிய யேசுக் கிருஸ்துவின் பெயரால்’ இராமநாதபுரம் விசுவாசிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பெண்களோடு பாலியல் ரீதியில் பொறுக்கித் தனமாக நடந்திருப்பதும், அதிலும் சின்னப் பிள்ளைகளிடமும் கூட அத்துமீறியிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் துவங்கியிருக்கிறது. பல பெண்களிடம் தான் ஆணில்லை பெண் என்று சொல்லியே உறவு வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த பத்து குடும்பங்கள் விலகத் துவங்கியிருக்கிறார்கள் – இதில் அவரது நெருக்கமான உறவினர்கள் குடும்பங்களும் அடக்கம். உச்சகட்டமாக, தேவ லீலைகளின் கவுச்சி நாத்தம் தாங்காமல் அவரது வளர்ப்பு மகனாக சொல்லப்படும் ஜாய்ஸ்டனே விலகியிருக்கிறார்.

விலகியவர்கள் வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு மொள்ளமாரியின் இதயத்தை இன்னொரு மொள்ளமாரியால் தானே புரிந்து கொள்ள முடியும்? மோகன் சி லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார். மட்டுமின்றி, கடந்த சில வருடங்களாகவே இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் எழுந்து வந்த நிலையில், மோகன் சி லாசரஸ் இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாகவே வின்சென்டோடு கூட்டணி வைத்து கொண்டு தனது பங்குக்கு அம்புலிமாமாவின் சுவிசேஷத்தை ஏஞ்சல் டீ.வியில் அளிக்கத் துவங்கியிருக்கிறார்.

டி.ஜி.எஸ் தினகரின் சீடரான மோகன் சி லாசரஸ், தனது குருவைப் போலவே கூசாமல் கட்டுக்கதைகளைத் தொடர்ந்து சொல்லும் திறன் கொண்டவர். உதாரணமாக, சமீபத்தில் அவர் விருதுநகரில் நடத்திய ஜெபக் கூட்டமொன்றில் “பெட்ரோல் விலை உயர்கிறது, அரிசி விலை உயர்கிறது, பருப்பு விலை உயர்கிறது; இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பலனைத் தாருங்கள் ஆண்டவரே” என்று மேடை போட்டு ‘ஜெபிக்கிறார்’ அதையும் அங்கே வந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிகள் எந்தக் கேள்வியுமின்றி கேட்டுக் கொண்டு மார்பில் அடித்து ஜெபிக்கிறார்கள்.  ஆனால், மோகனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவரிடம் சரியான ஊடகம் இல்லை.

தற்போது தனது நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார்’ கம்பெனியை விரிவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் மோகனுக்கு வின்சென்டிடம் இருக்கும் ஏஞ்சல் டி.வி ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு பிரதியுபகாரமாக வின்சென்டின் மேல் எழும் புகார்களை மறைக்க இவரும் அவருக்குத் துணை போயிருக்கிறார்.  இன்னொரு தீர்க்கதரிசியான சாது சுந்தர் செல்வராஜ் வின்சென்டின் நேரடிக் கூட்டாளி.

மோகன்-சி-லாசரஸ்
மோகன் சி லாசரஸ்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேன்சி ட்ரஸ் போட்டிக்கு வருவது போல் யேசு கிருஸ்துவைப் போல் வேடமிட்டு தோற்றமளிக்கும் சுந்தர், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஜீன்ஸிலும் டீசர்ட்டிலும் தான் கலக்குவாராம். இப்படித்தான் நித்தியானந்தாவும் அமெரிக்காவில் அலைந்ததாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருக்கின்றனர். ஏஞ்சல் டி.வியில் காம்பயரிங் செய்ய வரும் பெண்கள் மேல் கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களில் துவங்கி முழு பொறுக்கித்தனங்களையும் செய்யக் கூடியவர் தான் சாது சுந்தர் செல்வராஜ். இதில், இவர் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் குடியுரிமை வைத்திருக்கும் சர்வதேச பிரசிங்கியார்.

வின்சென்டின் வளர்ப்பு மகன் ஜாய்ஸ்டன், வின்சென்டிடம் இருந்து விலகிய போது ஏஞ்சல் டி.வியில் தீர்க்கதரிசனம் உரைத்த சாது, ‘ 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தக்காளியைப் பிழிஞ்சா எப்படி சிதறி கிடக்குமோ அந்த மாதிரி நீ உடல் சிதறி செத்துப் போவாய்’ என்று ஆண்டவரின் ‘விருப்பத்தை’ பகிரங்கமான தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். இன்றுவரை ஆண்டவரின் விருப்பத்தை மீறி நல்ல ஆரோக்கியமாக வாழும் ஜாய்ஸ்டன், மேற்படி விசயத்தையும் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அம்பலமாக்கியுள்ளார்.

எல்லா பிக்பாக்கெட்டுகளும் சொல்லி வைத்தது போல ஒரே டெக்னிக்கை பயன்படுத்துவது சாமியார்கள் மடாதிபதிகள் உள்ளிட்ட எல்லா மத ஆன்மீக குருக்களுக்கும் பொருந்தும். ஏறக்குறைய நித்தியானந்தா பயன்படுத்திய அதே டெக்னிக்கைத் தான் வின்சென்ட் செல்வக்குமாரும் பயன்படுத்தியிருக்கிறார். நித்தியின் ஆன்மீக செக்ஸ் காண்டிராக்ட் ஷரத்துகளின் படி, செக்ஸின் மூலமும் ஆன்மீக உச்சத்தை அடைய முடியுமாம். இதற்காக நித்தியைக் கிருஷ்ணனாகவும் பக்தைகள் தங்களை ராதையாகவும் பாவித்துக் கொண்டு ஆன்மீக ஆராய்ச்சியில் மூழ்க வேண்டியிருக்குமாம்.

தனது விசுவாசி ராஜ்குமார் என்பவரின் மனைவியின் மேல் தீர்க்கதரிசன வரம் இறங்கியிருப்பதாக ஒரு ஜெபக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் வின்சென்ட். பின்னர் தனியே அந்தப் பெண்ணை அழைத்த வின்சென்ட், மேற்படி தீர்க்க தரிசன வரம் முழுமையடைய வேண்டுமானால் தன்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணோ எதிரே இருப்பது தேவ ஆட்டுக்குட்டியல்ல – ஓநாய் என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயிருந்து தப்பிச் சென்று தனது கணவர் ராஜ்குமாரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராஜ்குமார் போலீசுக்குப் போயிருக்கிறார். சென்னையின் பாரம்பரிய பார்ப்பனக் குடும்பத்து பெண்ணான ஆர்த்தியும் இப்படித்தான் நித்தியானந்தாவிடம் ஏமாந்திருக்கிறார்.

அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தனியே சொல்ல வேண்டுமா நண்பர்களே? நீங்கள் நினைத்த அதே தான். போலீசு வழக்கம் போல் காசு வாங்கிக் கொண்டு பஞ்சாயத்துப் பேசி ராஜ்குமாரை மிரட்டி விரட்டியடித்து விட்டது.

லோக்கல் ரவுடியாக இருந்தாலும் சரி – ஆன்மீகக் கேடியாக இருந்தாலும் சரி; முதலில் ஓடிவந்து கிரிமினல்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் காக்கி கும்பல் தானே!

இதில் நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம் ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம்.

சாம் ஜேசுதாஸின் வார்த்தைகளை விட சிறந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேறு எவராலும் கொடுத்து விடமுடியாது. இரண்டாயிரம் வருடங்களாக ‘ இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.

இந்தக் கேடி கிரிமினல்களை இல்லாத ஆண்டவனால் ஒருநாளும் தண்டிக்க முடியாது. தங்கள் வாழ்வை நெருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்தக் கயவர்களை நாடும் மக்களின் லௌகீக அறியாமை விலகும் போது ஆன்மீக ஒளியின் பீஸ் பிடுங்கப்பட்டு விடும்.  நித்தியானந்தா துகிலுரிந்த போது மட்டும் கிருஷ்ணனா காப்பாற்ற ஓடிவந்தார்? மக்களிடம் அம்பலப்பட்டு அவர்களே காறித் துப்பிய பின் தானே ஆன்மீக பீடத்திலிருந்து ஒரு காமெடிப் பீஸாக கீழிறங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் மேல் மூடத்தனமான பக்தியும் முட்டாள்தனமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும், தங்கள் வாயிலிருந்து வழியும் உளறல்களையெல்லாம் தத்துவங்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நிலையும் தான் இந்த அயோக்கியர்களின் மூலதனம். அளவற்ற பணமும் அந்த பணம் தரும் அதிகார வர்க்க பரிச்சையமும், அந்த அதிகாரத் திமிர் தரும் மமதையும் தான் இவர்களை திமிரோடு தவறு செய்யத் தூண்டுகிறது.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள்  மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?

அப்படிச் செய்தால் அந்தச் செயலின் நியாயத்தை அந்திக் காலத்தில் தேவன் அங்கீகரிக்கிறாரோ இல்லையோ உங்கள் குடும்பத்தின் பெண் பிள்ளைகளாவது அங்கீகரிப்பார்கள்.

______________________________________

– சாத்தான் லூசிஃபர்

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________

__________________________________________

178 மறுமொழிகள்

 1. தம்பியாபிள்ள லூசிஃபர்,

  நக்கீரன்ல இதை படிக்கப்பயவே எழுதணும்னு நினைச்சேன் பாத்துக்கிடுங்க. ஆனா நீங்க சாத்தானா இருந்து அனுபவிச்சு எழுதன மாதிரி என்னால முடியாது. நல்லா எழுதியிருக்கீக, நல்லா வருவீக! என்ன அம்பி நித்தியானந்தா மேட்டரை இன்னும் கொஞ்சம் சேத்து எழுதியிருக்கலாம். எது எப்படியோ பொறுக்கி சாமியாருங்கன்னா அது நித்தியானந்தாதான்னு ஆகிப் போச்சு,

 2. ” இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.”

  Yes, கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்

  • shut up you dont know about jesus ok surely your going to face judgement you are critizising the 2 nd coming of jesus. be careful one day you have to answer….. jesus is the one true living god you dont know about him………………

   • . praise the lord only..not the pastors சொகுசு வாழ்க்கை வாழாத போதகர் யாராவது உண்டா? கிறிஸ்தவம் பாழாய் போனதற்க்கு காரணம் போதகர்களே..ஆண்டவர் எப்படி வாழ்ந்தார்? சொத்து சேர்த்தாரா? பைபிள் சொல்கிறது….சாத்தானையும் அந்திகிறிஸ்த்துவையும் எதிர்த்து நில்….ஆம் போதகர்களே அந்திகிறிஸ்த்து..போதகர்களே வேதாகம திரிப்பாளர்கள்..ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்க்கு அப்பாற்ப்பட்டு இருக்கவேண்டும்….ஏன் சந்தேக வலைக்குள் வருகிறீர்கள்….பேதுருவே உன் வலையை விட்டுவிட்டு வா என்றார்…நீங்கள் எல்லாரும் ஏதாவது ஒன்றை விட்டுஇருக்கிறீர்களா? அப்படி ஆண்டவர் சொன்னது போல …ஒரு துளீ அளவு…ஒரு சதவீதம் வாழும் போதகர் யாரேனும் இருந்தால்….அவர் முகவரி…செல் நம்பர் தாருங்கள்…நான் ஓராயிரம் போதகர்களீன் சொத்துகுவிப்பை தருகிறேன்.பைபிளில் உள்ளதை புரட்டி போட்டு ..போதகர் என்ற போர்வையில் ..உலா வரும் அந்தி கிறுஸ்த்துகளே….ஆண்டவர் இதோ வருகிறார்…போலிஸு சட்டம் வடிவில்….அவரிடம் உங்கள் வேதபுரட்டு பலிக்காது…அந்திகிறிஸ்தவ போதகர்களே…உங்கள் சொத்து கணக்கை நீங்களாக முன்வந்து சமர்ப்பிக்க தயாரா? அந்திகிறிஸ்தவ போதகர்களே..உங்களால் தான் கிறிஸ்தவம் எனும் மார்க்கம் பாழாய்போனது…பாவம் விசுவாசிகள்….உண்மை தெரியவில்லை…ஊழியரை தவராக பேசினால் சாபம் வரும் என்ற ஒரு தவறான போதகத்தை வைத்துக்கொண்டு..நீங்களேல்லாம் கும்மியடித்துக்கொண்டு இருக்கீறீர்கள்…..ஆனால் எனக்கு சாபம் வராது..ஏனென்றால் நான் ஊழியரை எதிர்க்கவில்லை….அந்திகிறிஸ்தவ போதகர்களையும்…வேத புரட்டர்களையுமே எதிர்க்கிறேன்….ஆண்டவரும் கூட தேவ ஆலயத்தில் வியாபாரம் செய்தவர்களை அடித்து விரட்டினார்….நான் அந்தி கிறிஸ்தவ போதகர்களை விரட்டுகிறேன்…அல்லேலுயா….aamen

    • இயேசு ஆண்டவரில்லை ஒரு சாதாரண மனிதர் தான் எதுக்கு தேவையில்லாத பில்டப்…
     ஒருவன் நாத்திகனாக இருந்தாலும் ஒருவர் பல அற்புதங்களை செய்தால் அவரை இறைவனாகவோ இல்லை ஏதோ ஒரு சக்தி கொண்டவராகவோ ஏற்றுக்கொண்டுத்தான் ஆகவேண்டும். அப்படியிருக்கும்போது கூடவே இருந்து அவரின் அற்புதத்தை பார்த்த யூதாஸ் வெறும் சொர்ப வெள்ளிகாசுகாக தேவக்குமாரனை காட்டிகொடுப்பானா? பைத்தியம்கூட இதைசெய்ய மாட்டான்.

     உண்மை: ஒருவேளை இயேசு என்பவர் ‘இருந்திருந்தால்’ ”நான்தான் தேவனின் மகன்” என்று பொய்சொல்லிருக்க வேண்டும்.

     மக்களை நம்பவைக்க அற்புதம் செய்தார் என்று கட்டுக்கதையை பரப்பியுள்ளனர். இவர் செத்தது உண்மை, திரும்பி பித்தார் என்பது பொய்! ஏனென்றால் இறந்தவனை கடவுள் என்று ஏத்துக்க மாட்டாங்கதானே? இது பத்தாதுனு திரும்ப வருவாருனு இன்னொரு பொய்!

     இந்த வசனம் இவருக்கு பொருந்தும்: இயேசு வருவாரு…
     ஆனா வரமாட்டாரு…..

     • அன்பு சகோதரி அவர்களே!
      ஒருநாள் அதை உண்மை என்று உணர்ந்து கொள்வேர்கள்

     • நாடு வெலங்காது. புலுகுனி பயலுக. மோகன்,செல்வம்,வின்சென்லட்,ஜபகுமார்,டினகரன் போல இன்னும் பல கேடிங்க மனுஷன கடவுலாக்கி வயிரு வலகானுக. ஏசுவும் மனுஷன் தான். அவரகாப்பாத்திக்க அவராலயே முடியல……..இந்த லட்சனத்துல இவனுக சொல்ரது அன்ட புலுகு.ஆகச புலுகு டோய்

    • well done!

     This society need we like people brother.I Knew the tears of many young girls those who affected by vincent selva kumar.When I Will keep quiet God “ll question me.

     Annie

    • அல்லேலூயா!

     திருவிவிலியம் சத்யவேதம் என்பது நம்மையும் பரிசுத்தரையும் இணைக்கும் பாலம் என்பதை ஒரு சுவிஷேசகனும் அல்லது பிரசங்கிக்கும் எவனும் சொல்லமாட்டான்.

     கர்த்தராகிய ஏசுவே வாரும் உமது பெயரை தவறாக உபயோகம் செய்யும் இந்த நயவஞ்சகரிடமிருந்து உமக்கு சொந்தமான ஆத்துமாக்களை இரட்சியும்.

     ஆமென் அல்லேலூயா!

   • Dear army of christ,

    இயற்கையின் விதிகளே கடவுள். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டவன் கடவுளை புரிந்து கொண்டவன் ஆகிறான். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு மீறாமல் ஒத்திசைந்து வாழ்பவன் கடவுளை வணங்குபவனகிரன்.

    அந்த வகையில் இயேசு என்பவரும் ஒரு முன் மாதிரியாக கடவுளை வணங்கியவர் அவ்வளவே. அவரை மதித்து போற்றுவதில் குறை ஏதும் இல்லை. (அந்த வகையில் நானும் கடவுளை வணங்குபவன்)

    இயற்கைக்கு எதிராக இயங்குபவர்கள் எல்லோரும் கடவுளை மிதிப்பவர்கள் அல்லது இழிப்பவர்கள் ஆகிறார்கள்.

    சமுக குற்றங்களில் ஈடுபடும் ஒருவன் முகமுடியாக அவரை (இயேசுவை) பயன்படுதிகொல்வதில் உங்களுக்கு சம்மதமா?

    இப்பொழுது சொல்லுங்கள் உங்களில் இருந்து நான் முரண் படுகிறேனா?

   • My dear friend in Christ. God will forgive everyone if they talk bad about Christ , but he will not firgive those who speak bad about his disciples. Sure Nakeeran are going to face bad time , not on the judgement day but very shortly

   • Oh my dear

    Jesus will never come back. Even one day he came back before your samugam, they will kill him and vanish his records. So that they can continue the as usual (???) activities.

  • God will Judge anyone who stand against His words and His peoples… Wait and see the doing of our Lord Jesus Christ…. He is coming soon….. Jesus Loves everyone of you

  • I fully agree and second the complaints that those pastors @ bastards are making business out of the religion…
   You can do the needful to get the people rid of those cheaters..
   But Vinavu or the author of this article can not doubt and comment about Christianity. I strongly disagree with this statement “கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்”

   First, let the author go and ask his father and mother for the proof and authenticity of them being his parents.
   Christians have belief in their religion; infact, every religion do so…. Its just the matter of believing…. like the same way how the author believes his mom that his father is his “actual” father…

   So, have control over your statements..

   • @vinavu:

    The above commentor’s words are highly objectionable… The question posted to the article’s author is cheap and appears in a bad taste…This is what such blind religious faith preaches them. Kindly remove the above post

    • நீங்க யேசுவ வணங்குறீன்களா? இல்ல வின்சென்ட் செல்வராஜ வணங்குறீன்களா?
     கட்டுரைக்கு எந்த பதிலும் சொல்லாம சும்மா objection , bad taste nu சொன்ன என்ன அர்த்தம்?

   • இயற்கையின் விதிகளே கடவுள். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டவன் கடவுளை புரிந்து கொண்டவன் ஆகிறான். இயற்கையின் விதிகளை புரிந்து கொண்டு மீறாமல் ஒத்திசைந்து வாழ்பவன் கடவுளை வணங்குபவனகிரன்.

    அந்த வகையில் இயேசு என்பவரும் ஒரு முன் மாதிரியாக கடவுளை வணங்கியவர் அவ்வளவே. அவரை மதித்து போற்றுவதில் குறை ஏதும் இல்லை. (அந்த வகையில் நானும் கடவுளை வணங்குபவன்)

    இயற்கைக்கு எதிராக இயங்குபவர்கள் எல்லோரும் கடவுளை மிதிப்பவர்கள் அல்லது இழிப்பவர்கள் ஆகிறார்கள்.

    சமுக குற்றங்களில் ஈடுபடும் ஒருவன் முகமுடியாக அவரை (இயேசுவை) பயன்படுதிகொல்வதில் உங்களுக்கு சம்மதமா?

    இப்பொழுது சொல்லுங்கள் யார் கடவுளை அவமதிபவர்கள்?

  • ஊருக்கு ஒரு சாமிய கும்புடுரவன் பேசுர பேச்சு இப்படி தான் இருகும்………….

 3. எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயராலே சொல்கிறேன்.. செம போஸ்ட்டு.. டாப்டக்கர்

 4. சாமி கண்ணை குத்தும்….
  (யார் கண்ணை?)
  போனது போகட்டும்…..
  உஙளுக்கு ஒரு பெரிய சைச் ஜீவ அப்பம் தருகிரோம்…..
  வாயில் அப்பிக்கோண்டு மெரினா பீஷ்ஷில் அடுத்த ஆராதனை கூட்டத்துக்கு கண்டிப்பா வரணும்…
  (மறக்காமல்,காசு எடுத்து வரவும்…..

 5. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர்.///வாவ்…லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸில் வரவேண்டிய அற்புதமான காட்சி.

 6. ரொம்ப நாளைக்கப்பறம் படு பயங்கர எள்ளடுடன் கிழித்துத் தோரணம் கட்டி எழுதப்பட்ட கட்டுரை… தமிழில் இது போன்று எழுதினால்தான் பலரை போய் அடையும்.. மனங்களைத் தொடும்… உண்மையான அம்பலப் படுத்தும் மார்கசீய கட்டுரை…பாராட்டுக்கள்

  • இத ….இத…இத….. எதிர்பார்த்துதானே இந்த மாதிரி கட்டுரைகள் எல்லாம் ‘மிகவும் கஷ்டப்பட்டு’ எழுதப்படுகிறது நண்பரே……….

   கடைய தொறக்குறதே உங்களுக்காகத்தான் ‘நண்பர்களே’

 7. this is verymuch need in current world. People are cheated and still afraid to raise their voice against truth. Being a christian, people dont afraid of God. But they afraid of these kind of preachers and their unwanted speach. Good one and hats off to the writings.

   • Ha Ha Ha. That is true article. All Paster are enjoying their life with 2 wife and many children’s. Jesus never come to earth because he already died he is a common man not god

     • யாரு…” தேவனே… தேவனே.. ஏன் என்னை கைவிட்டீர்”னு சிலுவை இருந்த தபா சொன்னாரே அவருங்களா…

     • அப்புடியே இந்த வின்சென்ட் வெளக்குமாறையும் சிலுவையில அறையுங்கள். எலியா வந்து காப்பாத்துறாரான்னு பாப்போம்.

 8. மோகன் சி லாசரஸ் 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு வரதட்சிணை வழக்கில் புகாருக்குள்ளானவர்தான்

  • கோர்ட்டு மன்னித்து மறந்தாளும்…
   மறக்காமல்…..ரொம்பத்தான் லோள்ளு…….

  • அதுக்கு என்ன குறைச்சல் இருக்க போகுது…பொறாமை, வன்மம், மதத்தை பரப்புகிறவர் என்கின்ற வெறுப்பு அப்படிப்பட்ட பொய் புகார்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே

 9. //கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள் மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?//

  U r expecting too much from us… Our skin is already have become skin of buffallo… We will still continue to follow these kind of people.. Give money to them and expect GOD to bless us…. Ellam thalai yeluthu…

 10. அருமை.மக்கள் தங்களின் பிரச்சனைக்குத் தீர்வு சாமியார்களிடமும் , சமய புரோக்கர்களிடமும் இல்லை என்று உணர வேண்டும்.பெண்களின் கற்பையும் வாழ்வையும் சூறையாட நினைக்கும் காமச் சாமியார்களைத் தோலுரிக்கும் கட்டுரை . வாழ்த்துக்கள்

 11. அர்ர்ர்ருமைய்யான
  உண்ண்ண்மையான
  உன்ன்ன்னதமான
  மகத்த்துவமான்ன
  கிர்ர்றங்ங்க வைக்க்கும்
  பதிவு!

  விருதுநகர்ல நடந்த அந்தக் கூட்டத்துக்கு எவ்ளோ கூட்டம்னு பார்த்தீங்க.. ஊருல இருக்கற அத்தனை கிருத்துவப் பயபுள்ளைகளும் அங்கதான் கும்மியடிச்சதுங்க. நாங்கூட ஏதாவது மீட்டிங்கு போலாமான்னு பார்க்கறேன்.

 12. அந்தி கிறிஸ்த்து என்பவர் ஒருவர் அல்ல….சாத்தான் ஒரு ஆள் அல்ல….அந்திகிறிஸ்த்தும் சாத்தானும் கிறிஸ்தவ போதகர்களே….எங்கள் ஊரில் அருள் பிரகாஸ் எனும் போதகர் பல கோடி மதிப்புள்ள நிலங்களை ஆண்டவரின் வருகைக்காக வாங்கி போட்டுள்ளார்…ஊர் ராஜபாளையம்…சபை.. AG சபை…மொகன் சி லாசரசின் வரதட்சனை பற்றி யாராவது சொல்லவும்.

 13. விலைவாசி போன்ற அரசியல் அதிகாரத்தால் கட்டுப்படுத்த வேண்டிய பிரசினைகளுக்கு ”மெய்யான” ஆண்டவரை நாடுகிர்ரர்கள்! விளைவாக ஆண்டவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட போதக பொறுக்கிகள் புகுந்து பெண்களின் உடலில் தங்களின் உண்மையுள்ள தேவ மகனை கண்டடைகிறார்கள்.ஆமென்!!!!!!!!!!!!

 14. உங்களுக்குள் பிசாசு ஒளிந்து கொண்டு இதைப்போல எழுதச்செய்கிறது.அமேரிக்காவிலேயே இப்படித்தான் ஊழியம் செய்பவர்களை நிந்திக்கிறார்களாம்…

  http://stalinwesley.blogspot.com/2011/03/blog-post.html

  • பிசாசு அல்லது சாத்தான், லூசிபர் எல்லாமே ஒண்ணுதானே, அந்த லூசிபர் கிட்ட அமெரிக்க உழியர்கள் அல்லது இந்திய உழியர்கள் என்கின்ற பாகுபாடெல்லாம் எங்கே இருக்க போகுது, அந்த பிசாசு என்கிற சாத்தான் லுசிபரிடம் ஜெகோவாவை பற்றியோ இயேசு கிறிஸ்த்துவை பற்றியோ எடுத்து சொல்லி திருத்த பார்க்கிறீங்களே, அது மனிதனால் இயலாத காரியம், அவனையும் அவனது குழுக்களையும் சர்வ சங்காரம் செய்வதற்கு இன்னும் காலம் அதிகமில்லை, விவிலியத்தில் சொல்லியிருக்கிறபடி, ‘அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும், இதோ எல்லாவற்றிற்கும் முடிவு மிகவும் சமீபமாய் இருக்கிறது’ என்ற கூற்றின்படி காலம் இன்னும் அதிகமில்லை சாத்தானை அடியோடு அழிப்பவர் இவற்றையெல்லாம் கவனித்து கொண்டிருக்கிறார்.

 15. வின்சென்ட் செல்வக்குமாரின் பாதிக்கப்பட்ட சொந்தக்காரணாகட்டும்,நித்தியால் பாதிக்கப்பட்ட ஆர்த்தி ராவ் ஆகட்டும் பாதிக்கப்பட்ட பிறகாவது மதம், கடவுள், கடவுளின் ஏஜன்ட்டா சொல்லிக்கிற இந்த பொம்பள பொறுக்கிங்க அனைத்தும் பித்தலாட்டம் என்று (சொல்லாமல்) திருந்தாமல். இது ஒரிஜினல் இல்லை ஒரிஜினலான மதகுருமார்களை தேடிப்போங்கள் என்கிறார்கள். கீழவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலங்கரது இதுதான்.

  • Hi Preety,

   If there is a God means these culprits, should have been already punished.
   What is there to mind our words to describe a cheap culprits like them?
   If you pupil will never change after knowing these things, then not only you,
   No one will protest against these culprits.

  • Pretty i really feel shame on you ! even after seeing the truth u still support those bad pastors it shows how deep u have been mesmerized…May the Real God bless you if exists…i hope God is always there but i dont think these humans as gods eg: jesus / budha / naabi /hindu saints etc…they are all humans, if they teach you good just respect them dont worship them…christianity is the ugly religion blackmail others and force them to convert in to their religion..other religions also convert but not as bad as chiritians.. i really hate to be in this kinda world…everywhere cheat…cheat…cheat… trying to cheat other or else cheat themselves…

 16. அந்தி கிறிஸ்த்து என்பவர் ஒருவர் அல்ல….சாத்தான் ஒரு ஆள் அல்ல….அந்திகிறிஸ்த்தும் சாத்தானும் கிறிஸ்தவ போதகர்களே….எங்கள் ஊரில் அருள் பிரகாஸ் எனும் போதகர் பல கோடி மதிப்புள்ள நிலங்களை ஆண்டவரின் வருகைக்காக வாங்கி போட்டுள்ளார்…ஊர் ராஜபாளையம்…சபை.. AG சபை…மொகன் சி லாசரசின் வரதட்சனை பற்றி யாராவது சொல்லவும்…..???

 17. நல்ல அருமையான கட்டுரை நாங்கள் எல்லாம் ஆண்டர் இயேசுவை நாங்கள் ஏற்றுக்கொண்டு இன்று வரைக்கு விசுவாசிக்கிறோம்.. ஏதோ ஆனால் நீங்கள் இந்த கட்டுரை எழுதிய எழுத்தாளர் ஏதோ சாத்தான் லூசிபேர் என்று எழுதி இருக்கிறீர்கள். விழுப்புணர்வு கட்டுiரின் எழுத்தாளர் சாத்தான் என்று பெயரா? தயவு செய்து பெயரை மாற்றுங்கள்.

  • டேவிட், லூசிஃபெர் என்று அவர் பெயர் வைத்துக் கொண்டதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

   யார் லூசிஃபெர்? இவன் முன்பு கர்த்தரின் முதன்மையான தேவதூதனாக இருந்தவனாம். லூசிஃபெர்