Tuesday, October 15, 2024
முகப்புசெய்தியேசுவே நீரும் இல்லை - அன்னை தெரசா !

யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !

-

பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன  தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன்  ஒருவேளை கடவுள் இருந்தால்   என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை  நோக்கி எழுப்ப முயல்கிறேன்  அங்கோ தண்டிக்கும் வெறுமை  அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன  தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள்  இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை  பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக  நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை  கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை  என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது  ஆன்மா இல்லையென்றால்  யேசுவே நீரும் உண்மையல்ல.”

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் ‘அன்னை’ தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த ‘அவிசுவாசத்தை’ எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி  வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.

இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் ‘நாத்திகர்களின் சதி’ என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.

“இக்கடிதங்களின் காரணமாகப் ‘புனிதர்’ பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்” என்று கூறுகிறது வாடிகன். “இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்….. தெரசாவிடம் நாம் காணும் ‘விசுவாசம் நிரம்பிய மன உறுதி’ என்பது ஒரு காப்பியச்  சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்” என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.

ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை.  தெரசாவிற்குள் ‘தேவன்’ இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.

பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல்  கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த ‘அற்புதம்’ நிகழ்ந்தது.

“இயேசு என்முன் தோன்றினார். ‘நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?’ என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா.  ‘ஒரு உண்மையான விசுவாசி’ கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.’

இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் ‘பொந்துக்குள்’ வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் ‘விசுவாசமின்மை’ துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

“பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?” என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி   இதுதான் 1949இன் தெரசா.

தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், ‘தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக’ அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு  உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது.  இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம்.  தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.

ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?

மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட ‘கடவுள்’ தோற்றுவிக்கும்  இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.

நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட “கடவுளே உனக்குக் கண்ணில்லையா” என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் ‘தேவன் இருக்கிறானா’ என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.

“ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்” என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், “ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்”.   வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, “சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்” என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை  தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து  உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.

இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல.  இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

தெரசாவை அம்பலப்படுத்தும் ‘நரகத்தின் தேவதை’ என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: “தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும்  அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட” என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.

ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை “அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்” என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் “இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்” என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம்  அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. “பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்” என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, “கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்” என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது “மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம்  மன்னிப்பே கிடையாது” என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை.  அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.

தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான ‘திருச்சபை’ உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய  தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.

தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.

ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.

கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், “விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்” என்கிறார் ஹிட்சென்ஸ்.

தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும்.  ஆனால் 1946இல் இருந்தது போல ‘திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்’ தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.

எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை  இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.

புதிய கலாச்சாரம், செப்டம்பர் 2007 ( அனுமதியுடன்)

  1. அருமையான கட்டுரை வினவு….

    //தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார்.. //

    இதில் தெரசாவுக்கு பதில் எந்த ஆன்மீக டுபாக்கூர்களின் பெயரையும் வாசிக்கலாம்!!!

  2. பொதுவாக இந்துத்வா வியாதிகள்தான் இதுபோன்ற cruel jokes எல்லாம் சொல்வார்கள். இப்போது நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா. நடக்கட்டும் உங்கள் திருப்பணி.

  3. நன்பா ராபின்…,
    வினவு தளத்தை விட இந்துத்துவ பயங்கரவாதத்தை எதிர்கின்ற தளம் இருந்தால் காட்டவும்…!!!
    உமது நம்பிக்கையில் கைவைத்தவுடன் இதுபோல அவதூறு எழுதினால் பின்பு உங்களுக்கும் இந்துத்துவா கூட்டத்திற்கும் என்ன வேறுபாடு…!!!
    கட்டுரையில் உங்களுக்குள்ள முரன்பாடுகளை வைத்து விவாதிக்கலாமே….!!!!

  4. வினவு,
    அகிலமே போற்றும் சாய்பாபாவாக இருந்தாலும் சரி உலகமே போற்றும் அன்னை தெரசாவாக இருந்தாலும் சரி பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் எதிர்க்கும் போது சூலாயுதம் மற்றும் சிலுவையின் கூர்மை பற்றி பயமின்றி துணிவாக இருக்கும் நீங்கள்..குல்லா போட்ட முல்லாக்கள் வலியுறுத்தும் பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் எதிர்த்து வாயே திறப்பது இல்லயே ஏன்..??
    ஆசனவாயில் வெடிகுண்டை சொருகிவிடுவார்களோ என்ற பயமா..?? அது சரி புரட்சி பற்றி வாய் கிழிய பேசுபவனும் மனிதன் தானே…

  5. சாதி எதிர்ப்பு கட்டுரையில உனக்கு சொருவுன அருவாளையே இன்னமும் உருவ முடியாத சாதி வெறி குமரா….வினவில் வெளிவந்துள்ள ஷகிலா கட்டுரையை நீ இன்னமும் படிக்க வில்லையா….??? எப்படி படிக்கமுடியும் உன்னுடைய கண் உன் பின்வாயிலல்வா உள்ளது…அங்கு சொருவப்பட்ட அருவாளை மெள்ள எடுத்து படித்து பாரு….

  6. குமரன்,

    உங்கள் அல்ப சந்தோசத்தை நீங்கள்தான் மெச்சிக்கொள்ளவேண்டும். வினவின் முந்தைய பதிவுகளையும் அவ்வப்போது பார்வையிடுங்கள். எந்த மதவாதத்தைக்கண்டும் அஞ்சும் ஈனம் வினவுக்கு இல்லை, எங்களுக்கில்லை. பொடி நடையாக செங்கொடி.வேர்ட்பிரஸ்.காம் பக்கம் வந்து பாருங்கள்.

    தோழமையுடன்
    செங்கொடி

    • என்னடா மாப்ள உன்னோட ப்ளாகு UAE யில் தடைசெய்யப்பட்டுவிட்டதே!!!

  7. இது மட்டுமல்ல. இண்டர்நெட்டில் சமீபத்தில் உலா வந்த ‘Teresa and her millions’ என்ற மெயிலும் படிக்கப்பட வேண்டியவை. படித்துப் பாருங்கள் அதை, எப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் கணக்கில்லாமலேயே அவர் மூலம் சர்ச்சுகளூக்குச் சென்றதென்று.

    வாடிகனுக்கு, கத்தோலிக்க சபைக்கும் சொல்லியா தர வேண்டும் பொய் சொல்வதற்கு? ஏதோ புத்தி வந்து தெரசாவின் கடிதங்களை வெளியிட்டு விட்டனர், அவ்வளவே.

    உண்மை என்பது வெளிவந்தே தீரும்.

  8. அன்னை தெரசாவின் நிலை இப்படியிருக்க…

    தமிழ்நாட்டில் மனிதாபிமானத்துக்கு ஒரு குறியீடாக அன்னை தெரசாவை பலமுறை தூக்கி கொண்டாடுகிறார்களே!

    சமீபத்தில் மானாட மயிலாடுவில் கூட அன்னை தெரசா போட்டோவை காண்பித்து பீலிங் காட்டினார்களே!

    சே! இனி எல்லாவற்றையும் ஆய்ந்து தான் ஏத்துக்கனும் போல இருக்கே!

  9. தெரசா அல்ல , “அன்னை” தெரசா என சிறு வயதில் இருந்தே ஒரு புனித பிம்பத்தை தன் மனதில் ஏற்றி வைத்து இருக்கும் பலருக்கு இந்த கட்டுரை பகுத்து அறிவின் திறவு கோலாக இருக்கும்…

    சுசன் என்ற கத்தோலிக்க “நன்” , கிட்ட தட்ட 10 வருடங்கள் தெரசாவுடன் பணியாற்றினார்.. பின்பு அங்கு நடக்கும் ஏமாற்று வேலைகளை கண்டு வெளியேறினார்… அவர் தான் கண்ட உண்மைகளை பற்றி எழுதிய கட்டுரைக்கான சுட்டி …

    http://www.secularhumanism.org/library/fi/shields_18_1.html

  10. “ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை “அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்” என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் “இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்” என்று உபதேசித்தார்”

    இதில் வியப்பேதும் இல்லை .கடவுள் மட்டுமல்ல,எனக்கு மட்டும் காட்சி கொடுத்தார் என சீன் காட்டும் தெரசா போன்றவர்கள் எப்போதும் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரியாகவே இருக்கின்றனர்.தெரசா என்று சொன்னாலே அன்னை என்று சொல்லுங்க என உபதேசிக்கும் கூட்டம் மக்களுக்காக சிந்தித்ததே இல்லை.நேற்றுவரை கடவுளின் இருப்பை சந்தேகம் செய்தவர்கள் துரோகி பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பர். இப்போதோ புதியதாய் விளக்கம் சொல்லப்படுகின்றது .யேசுவும் இப்படித்தான் சொன்னாரென்று.

    இக்கட்டுரை புதியகலாச்சாரத்தில் வந்து எப்படியும் 1 வருடமிருக்கும்.தெரசா போன்ற கிறித்துவ பழமைவாதிகளை அதே சமயம் கருணைகடலாகவும் டபுள் ஆக்டிங் ஐ எண்ணி புளங்காகிதம் செய்வோருக்கு சரியான முறையில் அவரின் முகத்திரையை கிழித்துக்காட்டியது

    கலகம்.

  11. இந்த குமரனை பற்றி ,

    காங்கிரஸ் பற்றி வந்த கட்டுரைக்கு வினவில் -வாழ்த்தியும் கலகத்தில் திட்டியும் மறு மொழியிட்டிருந்தார். திடீரென ஓட்டு பொறுக்கி என்பார்,அப்புறம் இந்திய சனனாயகம் என்பார்,பிரகாஷ் காரட் பார்ப்பான் என்பார் அடுத்த பதிவில் என்னுடன் கறிதின்னும் பிராமண நன்பனை செருப்பால் அடிக்க வேண்டுமாஎன்பார்.இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். என்பதை சூப்பர் லின்க்ஸ் அம்பலப்படுத்திய வுடனே நானும் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்க்கின்றேன் என்பார்.
    இந்த குமரன் தனது ஆபாச பின்னூட்டங்களை அனுப்பிவிட்டு அதை பதிப்பு செய்யாவிட்டால் வெற்றி வெற்றி என லூசு மாதிரி புலம்புவார்.
    இதுவரை கலகமோ,மற்ற தோழர்களோ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் விதன்டாவாதம் மட்டுமே செய்வார்.
    மற்றொரு வேண்டுகோள் வினவுக்கு இவருக்கும் ஆப்பு வைக்க வேண்டாம் இது மாதிரி கோமாளிகள் வந்தால் தான் களை கட்டுகின்றது

    கலகம்

  12. கலகம் காங்கிரஸ் கட்டுரையை குமரன் பாராட்டி எழுதவில்லை…
    அவுரு டெக்னிகலா சாதி வெறியை கொட்டியிருகார்…

  13. //பொதுவாக இந்துத்வா வியாதிகள்தான் இதுபோன்ற cruel jokes எல்லாம் சொல்வார்கள். இப்போது நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா. நடக்கட்டும் உங்கள் திருப்பணி.//

    ராபின்…ஒரு கடைந்தெடுத்த இந்துத்வா அரைடவுசரான சீராவின் பதிவில் ராமகோபாலனே நானும் அளவிற்கு இந்துத்வ வெறியோடு ஒரு பின்னுட்டம் இட்ட மறுமம் என்ன?

    http://veruvelai.blogspot.com/2008/12/blog-post_28.html

  14. ராபின்.

    வினவு தளத்தினருக்கு சொந்த புத்தி கிடையாது.

    அடுத்தவர்களின் கட்டுரைத்தான் காப்பி அடித்து இங்கு போடுவார்கள்

    அது குறித்து விவாதித்தால் பதிலளிக்காமல் உங்களை தாக்க ஆரம்பித்து விடுவார்கள்

    அவர்களிடம் கருத்து செறிவு கிடையாது. என்ன செய்வார்கள் பாவம்.

    அவர்கள் விளம்பர மோகத்தினால் தான் இது போன்ற அடுத்தவர்களின் கட்டுரைகளை போடுகிறார்கள் என்பதற்கு ப்ளாக்கர், வோர்ட்பிரஸ் என்று இரு தளங்கள் (விளம்பரத்திற்காகவே ப்ளாக்கர்) நடத்துவதே சாட்சி

  15. சொந்தமாக் எழுத முடிந்தால் எழுதுங்கள்

    அப்படி இயலவில்லை என்றாலும் குறைந்த பட்சம், நீங்கள் எழுதிய (அதாவது காப்பி அடித்த) பதிவில் இருக்கும் விஷயங்களை யாராவது சுட்டிக்காட்டினால் (ஆதாரத்துடன்) தவற்றை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்

    கம்யூனிஸ்டுகள் என்றால் சொல்புத்திதான் சுயபுத்தி கிடையாது என்று கேள்வி பட்டிருக்கிறேன்

    உங்கள் தளத்தில் அதை தெளிவாக நிருபித்து வருகிறீர்கள்

  16. //வினவு தளத்தினருக்கு சொந்த புத்தி கிடையாது.//

    ஏம்பா இதை ஏன் அனானியாய் வந்து சொல்லுற. டவுசர போட்டுகிட்டு வரவேண்டியதுதானே?

    //நீங்கள் எழுதிய (அதாவது காப்பி அடித்த) பதிவில் இருக்கும் விஷயங்களை யாராவது சுட்டிக்காட்டினால் (ஆதாரத்துடன்) தவற்றை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்//

    உனக்கு மட்டும் சலுகை…
    நீ டவுசர் போடாமயே அனானியா வந்து
    ஆதாரத்தோடு ஏதாவது ஒரு தவறை சுட்டு…

    உன் எழுத்தை படிக்கும் போது போன பதிவுல
    வடு வாங்குன வடுதலை மாதீறி கீதே…
    அவனா நீயி…!!!!

    வினவுவுவுவுவுவுவுவுவுவுவுவு பிளீஸ் கிலேரிபை!!!!!!!!!!!!!!!!!!!!!!

  17. அரை டிக்கெட்டு,
    நீர் குறிப்பிட்ட என்னுடைய பின்னூட்டத்திற்கும் இந்துத்வாவிற்கும் என்ன சம்பந்தம்? நான் எழுதிய கருத்து அந்த பதிவிற்கு மட்டுமே தவிர அந்த பதிவருக்கு அல்ல. என்னுடைய பின்னூட்டத்தில் என்ன தவறு உள்ளது? எந்த ஒரு நாட்டுப்பற்றுள்ள இந்தியனும் தன் நாட்டை அடுத்தவன் தாக்கும்போது இப்படித்தான் கோபப்படுவான். என்னை பற்றிய ஆராய்ச்சியிலும் தனிப்பட்ட தாக்குதலிலும் இறங்குவதை விட்டுவிட்டு முழு டிக்கெட்டாக மாற முயற்சி செய்யும்.

  18. மதம் என்பது அபின் என்றார் மாவோ
    மதம் என்ற அமைப்பில் பங்கு / நம்பிக்கை வகிக்கும் ஒவ்வொருவரும்
    ஏதாவது ஒரு விஷயத்தில் அயோக்கியர்களாகவும் , ஏமாற்றுபேர்வழிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாதது.
    —————————–

    புதிய வலை பூ தொடங்கி உள்ளோம்

    தோழர்கள் விமர்சிக்கவும்

    http://vitudhalai.wordpress.com/

  19. வினவு, கலகம், செங்கொடி..மற்றும் எல்லா நண்பர்களுக்கும் … எனக்கு ஜாதி வெறி, மத வெறி இல்லையென்று எத்தனை முறை தெளிவுபடுத்த முயன்றாலும் மறுபடியும் மறுபடியும் அந்தச்சூழலுக்கு உள்ளும், சுழலுக்கு உள்ளும் தள்ளவே விரும்புகிரீர்கள்…என்னுடைய எல்லா பின்னூட்டமும் ” பொதுவான தளத்தில் பயணிக்காமல் புரட்சிக்கான களத்தையும், சமுதாய மாற்றத்திற்கான வாய்ப்பையும், எல்லோரையும் பங்கு பெற அழைப்பதற்கான உரிமையையும் எவ்வாறு பெற இயலும் ” என்ற உள் நோக்கம் ( பொது ) கொண்டதாகவே இருக்கும். மற்றபடி யார் மீதும் கோவமோ, விரோதமோ கொண்டதாக எனது எந்தப்பின்னூட்டமும் இல்லை என்பது எனது கருத்து…இருப்பினும் தவறுகளை சரி செய்து
    தொடர்ந்து என்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறேன்…

  20. அருமையான கட்டுரை.அன்னை தெரசா – கடவுளின் இருப்பை சந்தேகித்தார் என்பது உலகம் அறிந்த உண்மை (இந்தியா மற்றும் தமிழ் ஊடகங்கள் தவிர). மதம் ஒரு அபின் போன்றது. எந்த மதமாக இருந்தாலும் பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்துவதே முற்போக்காளர்களின் கடமை. வினவு-இன் சமூக பணி தொடரட்டும்.

  21. ராபின்
    எத்தனை கட்டுரைகளை வினவு தளத்தில் காப்பி அடித்துள்ளார்கள்?
    என்று நிருபிக்க முடியுமா?

    மதம் பிடித்த யானையின் பிளிறல் தான் உமது பின்னூட்டமாக உள்ளது!

    மதவாதிகள் ஆத்திரப்படும் முட்டாள்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்
    அதை தாங்கள் தெளிவாக நிருபித்து உள்ளீர்கள்.
    —————————–

    ராபின்

    கடவுளை மற ! மனிதனை நினை
    —————————————–

    விடுதலை

  22. “Robin said…
    ஒவ்வொரு நாட்டு அரசுக்கும் தன்னுடைய குடிமக்களை பாதுகாக்கும் உரிமையும் கடமையும் உண்டு. அடுத்த நாட்டிருந்து எதிரிகள் தாக்கும்போது திருப்பி தாக்குவது என்பது தற்காப்புக்காகவே தவிர ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல. இஸ்ரேலியர்களை இந்த விஷயத்தில் பாராட்டியாகவேண்டும்; தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உலகத்திற்கே முன்னோடியாக திகழ்கின்றனர். இந்திய அரசியல்வாதிகள் மும்பையில் இத்தனை பேர் கொல்லப்பட்ட பிறகும் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களைகூட தாக்க துணிவில்லாமல் தெருநாய்களை போல குரைத்துவிட்டு அடங்கி கிடக்கின்றனர்.”

    இதை விட ஒரு மத வெறியனுக்கு அத்தாட்சி வேண்டுமா?

  23. விடுதலை,
    நீர் ஒரு போலி என்பது எனக்கு தெரியும். நாட்டுபற்றை மதவெறி என்று நினைத்தால் நான் தொடர்ந்து மத வெறியனாக இருக்கவே விரும்புகிறேன். நாத்திக வேடம் போட முயற்சிக்க வேண்டாம். உம்முடைய முக மூடியையை கழற்றி விட்டு வாரும்; அதன் பின்பு விவாதிக்கலாம். தேவையில்லாமல் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கவேண்டாம்..

  24. // ஊருக்குதான் உபதேசம் என்பது இவர்கள் பழிமொழி இவர்களது அமைப்பு நடத்தும் புதிய காற்று புத்தக நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கே சோம வள்ளியப்பனின் பங்கு மார்க்கெட் புத்தகம் கொடிகட்டி செம ஜோராக விற்பதை பார்க்கலாம். அதாவது இவர்களது தொண்டர்களுக்கு புரட்சியை சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதாவது பங்கு மார்க்கெட்டில் எப்படி சூதாடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.
    //

    மக இக குறித்த புரளி கட்டுரையில் சந்திப்பு விட்டுள்ள சமீபத்திய ரீல் மேலே உள்ளது. உண்மையை பேசுவதே இல்லை என்று CPM பாசிஸ்டுகள் முடிவு செய்துவிட்டார்கள் போல உள்ளது. புதிய காற்று என்று ம க இகவிற்கு எதுவும் புத்தக கம்பேனி இருக்கிறதா என்று தெரியவில்லை.

    இது தவிர்த்து பல்வேறு புரளிகள். படித்தால் அவர்களது வயிற்றெரிச்சல் நன்கு தெரிகிறது. ஒரு சாம்பிளுக்குத்தான் மேலே உள்ளதை கொடுத்துள்ளேன். இது போன்றவர்களை கண்டு கொள்ளாமல் கடமையாற்றுவதே சரி என்பது எனது கருத்து. காலம் இவர்களை உதிர்த்து அழித்து விடும்….

    முக்காலமும் உணர்ந்த முனிவன்

  25. பிரதர்ஸ், இந்த சுட்டியை பாருங்க
    http://thanthii.blogspot.com/2008/10/blog-post.html
    எப்படி ராபின் இந்துமதவெறியர்களுக்கு எதிராய் ஒத்தையாள நின்னு வாளை சுழட்டிஅடிக்கிறாருன்னு…நான் கூட அவர ஆதரிச்சு பின்னூட்டம் போட்டேன்…

    ஆனா இன்னிக்கு கிறுத்துவ மதம் பற்றிய விமர்சனம் வந்தவுடன் அவர் தடுமாறுகிறார்…
    சீரா தளத்தில் யூதர்களுக்காக வக்காளத்து வாங்குகிறார். அதை சுட்டிக் காட்டினால் கடுப்பாகிறார். இந்தக்கட்டுரையில் என்ன முரண்பாடு என்பதை சொல்லவும் மறுக்கிறார்.

    இப்படி ஒரு மதத்தின் சார்பாகவே வாதிடும் இந்தப் போக்குதான் இவரை ஒரு மதவாதி என கருத வைக்கிறது.


  26. மக இக குறித்த புரளி கட்டுரையில் சந்திப்பு விட்டுள்ள சமீபத்திய ரீல் மேலே உள்ளது. உண்மையை பேசுவதே இல்லை என்று CPM பாசிஸ்டுகள் முடிவு செய்துவிட்டார்கள் போல உள்ளது. புதிய காற்று என்று ம க இகவிற்கு எதுவும் புத்தக கம்பேனி இருக்கிறதா என்று தெரியவில்லை.
    இது தவிர்த்து பல்வேறு புரளிகள். படித்தால் அவர்களது வயிற்றெரிச்சல் நன்கு தெரிகிறது. ஒரு சாம்பிளுக்குத்தான் மேலே உள்ளதை கொடுத்துள்ளேன். இது போன்றவர்களை கண்டு கொள்ளாமல் கடமையாற்றுவதே சரி என்பது எனது கருத்து. காலம் இவர்களை உதிர்த்து அழித்து விடும்….
    முக்காலமும் உணர்ந்த முனிவன்

    முனிவரே! முனிவர் என்றாலே கற்பனாவாதிதான். அவர்கள் உண்மையைத் தேடுவதில்லை. அதனால்தான் மேற்கண்ட உளறல். அதனை திருத்தி கீழைக் காற்று என்று வாசிக்கவும். தவறினை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. உண்மையை உரசிப் பார்க்கவும். அது சரி மேற்கண்ட விசயத்திற்கு ஓடோடி பதில் சொன்ன போலி முனிவரே! எஸ்.ஓ.சி. கொள்கை பற்றி வாயையையும் …. மூடிக் கொண்டிருப்பது ஏனோ?

  27. ஏங்க வினவு,,,,
    இந்த சந்திப்பு மக இகவுல சேர இவ்வளவு ஆசைப்பட்டு உங்க கொள்கையெல்லாம் கேக்கறாறே அதை கொஞ்சம் அவருக்கு சொல்லக்கூடாதா….பாவம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  28. அரை டிக்கெட்டு,
    என்னை பற்றிய சரியான புரிதல் உங்களுக்கு இல்லை. தீவிரவாதத்தை எந்த மதத்தினர் பின்பற்றினாலும் அதை எதிர்ப்பவன் நான்: அது முஸ்லீம் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இந்து தீவிரவாதமாக இருந்தாலும் சரி. மேலும் ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று விஷமப் பிரச்சாரம் செய்யும் இந்துத்தவா வாதிகளை பல சமயங்களில் கண்டித்துள்ளேன், தீவிரமாக விவாதமும் செய்துள்ளேன். என்னை பொறுத்தவரை எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். என்னுடைய மதத்தினர் தவறு செய்தாலும் கண்டிப்பாக நான் ஆதரிக்கமாட்டேன்.

    தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது தீவிரவாதம் அல்ல. இதில் தான் நான் உங்களுடன் வேறுபடுகிறேன். இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை தீவிரவாதத்திற்கு எதிரான போராகவே நான் கருதுகிறேன். இந்தியாவும் தீவிரவாதிகள் விஷயத்தில் இன்னும் கடுமையான போக்கை கடை பிடிக்கவேண்டும் என்பதே என் கருத்து.

  29. நண்பர் ராபின் .. மும்பை தாக்குதலுக்கு இவ்வளவு கோபப் படும் உங்களுக்கு சில கேள்விகள்..

    1. இது வரை இந்த தாக்குதலை நடந்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதற்கு என்ன ஆதாரங்களை இந்திய அரசாங்கம் முறையாக வெளியிட்டு உள்ளது..?

    2. உயிர்களை கொள்ளும் நபர்களை தண்டிக்க வேண்டும் என்றால் குஜராத்தில் பட்டப் பகலில் முஸ்லீம் என்ற ஒரே காரணுத்துக்காக ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப் பட்டனர். அதற்கான குற்றவாளிகளை தெகல்க்கா போன்ற செய்தி நிறுவனங்கள் ஆதாரத்துடன் நிருபித்த பின்னரும்.. அந்த குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக உலவுவது ஏனோ…?

    3. ஒரிஸ்ஸாவில் சமீபத்தில் நடந்த கிறிஸ்துவர்களுக்கு எதிரான படுகொலைக்கு தண்டனையாக எவ்வளவு பேர் தண்டிக்க பட்டு உள்ளனர்..?

  30. பகத்,
    மும்பையில் படுகொலைகளை நடத்திய தீவிரவாதிகளில் மாட்டிக் கொண்ட ஒரு தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் என்பதற்கான ஆதாரங்களை அந்த நாட்டு ஊடகங்களே நேரில் அவனுடைய கிராமத்திற்கு சென்று வெளியிட்டிருக்கின்றன. நவாஸ் ஷெரிப் கூட முதலில் இதை ஒப்புக்கொண்டு பின்னர் பல்டியடித்தார். எனவே இதில் சந்தேகப்பட ஏதுமில்லை.

    என்னை பொறுத்தவரை மதக் கலவரங்களும் தீவிரவாதத்தின் ஒரு வடிவமே. தீவிரவாதத்திற்கு எதிராக என்ன சட்டத்தை பயன்படுத்துகிறோமோ அதே சட்டத்தை மத கலவரம் என்ற பெயரால் வெறியாட்டம் போடுபவர்களின் மீதும் பயன்படுத்தவேண்டும்.

    ஒரிசாவில் அரசாங்கம் பாரபட்சமாக நடந்தது என்பது தெரிந்த விஷயம். தற்போது கலவரம் சம்பந்தமான வழக்குகள் நடந்து வருகின்றன. பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

  31. ஒருவேளை மும்பை படுகொலைகளை நாட்டில் நடக்கும் கலவரங்களுடன் தொடர்பு படுத்தினால் நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். மும்பையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் மத கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி பொதுமக்களை கொன்று குவிப்பவர்களை கொஞ்சமும் அறிவற்ற காட்டுமிராண்டிகள் என்றுதான் சொல்வேன்.

  32. ராபின்

    இசுரேலை பொறுத்த வரை உங்கள் மதிப்பீடும்
    ஒரு ஆர்.எஸ்.எஸ் கார்ரின் மதிப்பீடும் ஒன்றாக இருக்கிறதே..அதைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்?

    இந்த பதிவை இந்துத்வ பதிவுக்கு இனை என்பதை சொன்ன நீங்கள் அது எப்படி என்பதை விளக்க முடியுமா?

    மும்பை தீவிரவாத்தஃதை வினவும் கண்டிக்கிறது ராமகோபாலனும் கண்டிக்கிறார்
    இரண்டுக்கும் பாரிய வேற்றுமை உண்டு.
    வினவில் மும்பை தாக்குதல் தொடர்பாக வந்துள்ள கட்டுரைகளை படிக்கவும்

    இந்துத்வா தீவிரவாதிகளை குறித்து வினவு எழுதியுள்ளதை படிக்கவும்

    பிறகு நாம் விவாதிக்கவும் விளக்கம்பெறவும் வசதியாக இருக்கும்

  33. இஸ்ரேலை பற்றிய என்னுடைய மதிப்பீடும் ஆர்எஸ்எஸ்காரரின் மதிப்பீடும் ஒன்றல்ல. RSS இஸ்ரேலை ஆதரிப்பதற்கு காரணம் இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் எதிரிகளாக இருப்பதால் மட்டுமே. அவர்களை பொறுத்தவரை இஸ்லாமியரும் இன்னும் இந்துத்வா கொள்கைகளை ஏற்று கொள்ளாத எல்லாரும் எதிரிகள் தான். எனக்கு இஸ்லாமிய மதத்தை பற்றி எதிர் கருத்துகள் உண்டு. ஆனால் இஸ்லாமியர்களை நான் எதிரிகளாக பார்க்க மாட்டேன்; அவர்களும் என்னை போல மனிதர்களே, அவர்களிலும் நல்லவர்களையும் பார்த்திருக்கிறேன் கெட்டவர்களையும் பார்த்திருக்கிறேன். நான் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு காரணம் அது தீவிரவாதிகளை ஒடுக்குவதில் காட்டும் தீவிரம். இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. ஒரு வேளை இஸ்ரேலை இந்து தீவிரவாதிகள் தாக்கினால் அப்போதும் நான் இஸ்ரேலின் எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பேன். என்னை பொறுத்தவரை தீவிரவாதம் தீவிரவாதம்தான்; அதை எந்த மதத்தினர் செய்தாலும் சரி.

  34. நண்பர் ராபின் அவ்ர்களே!

    விவாதம் என்பது அறிவு தெளிவு பெற .

    இங்கு யாரும் குதிக்கவில்லை.
    —————————————-
    முதலில் தோழர் அரைடிக்கட்டின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும்.
    —————————————————
    நான் போலி அல்ல. முடிந்தால் http://vitudhalai.wordpress.com/
    வந்து விமர்சிக்கவும்.

  35. robin

    palestin lost their motherland for formation of israel in 40’s. they fight for their own motherland. is it terrorism.? then what is ur view about bagath singh, rajaguru, sukdev..

  36. 1. இதுவரை இந்திய அரசாங்கம் ஒரு துண்டு சீட்டை கூட ஆதாரமாக பாகிஸ்தானுக்கு எதிராக கொடுக்க வில்லை… இப்படி எதெற்கெடுத்தாலும் இந்தியா பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்துவது என்பது புதிய விடயம் இல்லை ஆனால் மிக குறைவான் நேரங்களிலேயே அதற்கான ஆதாரங்களை இந்தியா அளித்து உள்ளது..

    2. குஜராத் கலவரம், கோவை கலவரம், என்று பல சமயங்களில் கடமை தவறிய இந்த சட்டம் எப்படி ஒரிசா கலவரத்தின் காரனா கர்த்தாவாகிய இந்து மத வெறியர்களை தண்டிக்கும்..?
    ஒரிஸ்ஸாவில் இந்து மத தலைவரை கொன்றது தாங்கள் தான் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்த பின்னரும்.. அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்கள் இன்றும் சுதந்திரமாக உலாவிக்கொண்டு இருக்கிறார்கள்.. இந்த அரசு அவர்களையும் தண்டிக்க வில்லை.. அவர்களின் இந்து மத வெறி குழுக்களான RSS, VHP, BJP..etc போன்றவர்களையும் தடை செய்ய வில்லை..

    3. நாட்டில் நடந்த கலவரங்களை நான் எப்படி மும்பை கலவரத்துடன் ஒப்பிடாமல் இருக்க முடியும்.. இதுவரை நடந்த அனைத்து கலவரங்களிலும் போலிசு, சாட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. பல முஸ்லீம்களை கைது செய்தது.. ஆனால் மிக தெளிவான சாட்சி இருந்தாலும் இந்து மத வெறியர்களை எதிர்த்து போலிசு நடுங்குகிறது.. உதாரணம் : பாபு பஜ்ரங்கி, குஜராத் கலவரத்தின் சூத்திரதாரி. இவன் இன்றும் விடுதலையாய் உலாவிக்கொண்டு இருக்கிறான்..
    இப்படி ஒரு சமூகத்துக்கு எதிராக நடக்கும் அநியாயம் மட்டும் புறக்கணிக்க படும் பொது… சமூகத்தில் எவ்வாறு அமைதி நிலவும்..?
    இதுவரை இந்தியாவில் இந்து மத வெறியர்களின் தாக்குதலுக்கு பதிலடியாகவே பெரும்பான்மையான இஸ்லாமிய கலவரங்கள் நடந்து உள்ளன…

    4. காஸ்மீரில் பல முறை இந்தியா இராணுவம் அப்பாவி இளைஞ்சர்களை கொன்று அவர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தியது.. பின்பு மக்களின் போராட்டத்தால் உண்மை வெளிவந்தது… இங்கு எங்கு சென்றது உங்களின் மனித நேயம்..?

    5. தற்பொழுது பாலஸ்தீனத்தில் ஐ.நா வின் அறிக்கை படி குறைந்த பட்சம் 62 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டு உள்ளனர்.. மொத்தம் 300 பேருக்கு மேல் கொலை செய்யப் பட்டு உள்ளனர்.. இஸ்ரேலின் இந்த வெறியை ஆதரிக்கும் நீங்கள் தான் முதலில் தீவிரவாதி…

  37. நண்பர் ராபின்,
    மும்பை கலவரத்தை பற்றிய அருந்ததி ராய் அவர்களின் கட்டுரைக்கான் சுட்டி..
    இந்த கட்டுரையாவது உங்களுக்கு கொஞ்சம் தெளிவு ஏற்படுத்தும் என்ற மிக சிறிய நம்பிக்கையுடன்…

    http://www.guardian.co.uk/world/2008/dec/12/mumbai-arundhati-roy

  38. சந்திப்பு உண்மையிலுமே.. வயிறு எரிந்து தான் உள்ளார்…
    //உங்களது அகில இந்திய தலைமை எது? இதுவரை தெரியாது? அது மட்டுமா? இவர்களது அரசியல் அபத்தம் “தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு” என்று அரசியல் முழக்கம் வைத்த ஓடுகாலிகள்தான் இந்த ம.க.இ.க.-வினர் என்பதை நாம் மறக்க கூடாது.//

    வினவின் இதற்க்கு முந்தைய பதிவை சந்திப்பு கொஞ்சம் சரக்கு அடிக்காமல் இருக்கும் போது படித்தால் நலம்.. அதில் வினவு ம.க.இ.க வின் தலைமையகத்தின் முகவரியை கொடுத்து உள்ளார்.. முடிந்தால் அங்கு சென்று விசாரித்து விட்டு வரவும்..

    “தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு” .. இந்த முழக்கம் எதற்காக வந்தது என்று தெரியுமா… இது தமிழில் மட்டுமே பாடு என்பதற்காக சொன்ன முழக்கம் அல்ல.. தமிழிலேயே பாடக்கூடாது என்று தமிழை கேவலமான மொழியாக நினைத்த ஒரு கும்பலுக்கு எதிராக முழங்கிய முழக்கம்.. இசைவிழாவில் தமிழில் பாடினால் தீட்டு கழித்த கும்பலுக்கு எதிராக எழுப்பிய இந்த முழக்கம் உங்களுக்கு அபத்தமாக இருந்தால்… நீங்கள் போயஸ் தோட்டத்தின் எச்சத்தை வெகு நாளாகவே உண்டு வருவது இப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகிறது..

    //அடுத்து, இவர்களது முதன்மையான எதிரி யார் தெரியுமா? சி.பி.எம்.தான்.//
    ஒரு சின்ன திருத்தம்.. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் ஒரு வேலை உங்களை எதிரியாக கருதி இருக்கலாம்.. தற்பொழுது உங்களின் அரசியல் தந்திரத்தால்… எங்கள் வேலையை எளிமை படுத்தி நீங்களே தெளிவாய் சொல்லிவிட்டீர்கள் நீங்கள் யார் பக்கம் என்று…. வாழ்க அம்மா நாமம்.. அது சரி தேர்தலில் வென்றால் அம்மாவிற்கு பாத பூசை செய்வதாக உங்களுக்கு வேண்டுதலாமே..?

  39. யார் உண்மையான விடுதலை,யார் இந்துத்துவ வாதிகள் என்று பின்னூட்டங்களை படிப்போருக்கு தெளிவாக புரியும்.அரடிக்கெட் சொன்னது போல ஒரு முறை இந்துத்துவ வாதிகளுக்கு எதிராக அவர் பேசியிருக்கலாம்.உண்மைஎன்னவெனில் தன்னை தாக்கும் போது தான் ஒரு மனிதனின் இயல் பான குனம் வெளியே வரும்.எடுத்துக்காட்டாக பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுகீடு பற்றி பேசும் போது பார்ப்பனர்களை விமர்சிக்க வேண்டிவரும் அப்போது குமரன் போன்றோர் கூட நம் கருத்துக்கு ஆதரவான தோற்றம் அளிக்கலாம்,ஆனால் ஒருவரி சாதி எதிர்ப்பை த்ன் சாதி ஆதிக்கத்திலிருந்து தொடங்குவதே சரி.அதை அப்படியே மதத்துக்கும் எடுத்துக் கொள்ளும் போது தான் ராபினிடம் பிரச்சினை வெடிக்கின்றது.
    ராபின் இன்னொன்றை தெரிந்து கொள்ளுங்கள் ஒரு கிறித்துவன் ஆர்.எஸ்.எஸ் காரனாக இருக்க முடியாது என்பதில்லை.முதலில் கிறித்துவத்திலேயே கூட பார்ப்பனீயம் புரையோடிப்போய் இருக்கின்றது அதனால் தான் சாதிய விழுமியங்களை கிரகித்ததால் தான் தன்னிருப்பை ஆதிக்க சாதி இருப்பை நீட்டிக்க முடிகின்றது.ஏன் நஜ்மா எப்துல்லா ,முக்தர் அப்பாஸ் நக்வி போன்றோர் கூட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தான் அந்த சிந்தனையை உடையவர்கள் தான் .
    அது தான் பார்ப்பனீயம் ஆர்வீ புரியாதது போல் கேட்கும் பார்ப்பனீயம் இத்தனை இடத்திலும் புகுந்துவிளையாடிக்கொண்டு இருக்கின்றது.

    இன்னொன்று தெரிந்து கொள்ளுங்கள் மதம் என்பதே ஏற்றத்தாழ்வுடைய மனிதர்கள் சுய உணர்ச்சி பெறக்கூடாது என்பதிலே மதமும் தெரசா போன்ற மதவாதிகளும் தான் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

    மாபெரும் ஆசான் மார்க்ஸ் சொன்னாரே ” மதம் ஒரு அபின் ”
    அது எத்துணை சிறப்பான வார்த்தை

    கலகம்

  40. நண்பர் ராபின் அருமையாக காமெடி பன்னுகிறார். தான் அனைத்து வகை தீவிரவாத்தையும் கண்டிப்பதாக கூறுகிறார். ஆனால் இஸ்ரேலின் அக்கிரமத்தையும் ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்தி தான் எந்தவகை மனநிலை உள்ளவன் என்று தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். முதலில் இஸ்ரேல் யாருக்கு சொந்தமான நிலம் யார் ஆக்ரமிப்பு செய்து அபகரித்து இருக்கிறார்கள், யாரேல்லாம் இந்த ஆக்கிரமிப்புக்கு உறுதுனையாக இருந்திருக்கிறார்கள் என்று வரலாறு பதிவு செய்து இருக்கிறது. இதில் யார் தீவிரவாதிகள் என்று வரலாற்று ஆதாரத்தோடு சொன்னால் நாமும் பாலஸ்தீன தீவிரவாதிகளை? கண்டிக்கலாம். இலங்கையில் போராடினால் புலிகள், பாலஸ்தீனத்தில் போரடினால் தீவிரவாதிகள். இதுதான் ராபின்களின் நடுநிலைவாதம்.

  41. அன்னை தெரசா குறித்து முற்றிலும் வேறுபட்ட பார்வை. அப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது காரணம் எனக்குள் இவர் குறித்து வடிவமைக்கப்பட்டிருப்பது என்னுமொரு விம்பமே. இதனால் எந்த வித சலனமும் இல்லை. படிக்க கிடைத்ததில் மகிழ்ச்சியே.

    கடவுள் இருப்பது இல்லாமைக்கு அப்பால் உருவகப்படுத்தப்படும் நம்பிக்கைகள் தான் இன்றய கடவுள். உண்மையில் கடவுள் இருந்தாலும் இந்த நம்பிக்கைகளை ஒன்றும் செய்ய முடியாது.

    யேசு குறித்து தெளிவில்லை ஆனால் திருச்சபை மீதான நம்பிக்கை தெளிவானது. ஒருவேளை யேசு நேரில் நாளை வந்தால் திருச்சபை அவரை ரகசியமாக போட்டுத்தள்ளலாம். இதுவே அல்லாவுக்கும் இலங்கையில் புத்தருக்கும் இந்தியாவில் இந்துக் கடவுள்களுக்கும் நடக்கும்.

  42. இங்கு பின்னூட்டமிட்டுள்ள பலரும் பதிவிட்ட கட்டுரையை விவாதப்பொருளாய் எடுக்காதது வருத்தமளிக்கிறது.
    பெயர் உச்சரிக்கப்படும் ஒவ்வொறு முறையும் அன்னை என்று மறவாமல் குறிப்பிடப்படும் ஒருவரின் பிம்பம் நொருக்கப்பட்டிருப்பது கண்டு யாருக்கும் அதிர்ச்சியில்லை. என்றால்
    ஏற்கனவே தெரிந்த பின்பும் தான் அந்த பிம்பத்தை நாங்கள் வழிமொழிகிறோம் என்று பொருள் கொள்வதா? அல்லது
    நாங்கள் ஆராதிக்கும் முதலாளித்துவ முதலைகளுக்குத்தானே அவர் ஆதரவாய் செயல்பட்டிருக்கிறார் அதனால் ஏற்கிறோம் என்று பொருள் கொள்வதா?
    இங்கு விவாதத்திற்கு வரும் நண்பர்கள் இடப்பட்டுள்ள கட்டுரை குறித்து மட்டும் விவாதித்தால் மேலதிக புரிதல்களுக்கும், தங்கள் சுயத்தை பரிசீலனை செய்வதற்கும் வசதியாய் இருக்கும்.
    செய்வார்கள் என நம்புகிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி


  43. வினவின் இதற்க்கு முந்தைய பதிவை சந்திப்பு கொஞ்சம் சரக்கு அடிக்காமல் இருக்கும் போது படித்தால் நலம்.. அதில் வினவு ம.க.இ.க வின் தலைமையகத்தின் முகவரியை கொடுத்து உள்ளார்.. முடிந்தால் அங்கு சென்று விசாரித்து விட்டு வரவும்..

    வினவு என்பது ஏதோ தனிநபர் போல சித்தரித்து தங்கள் முகமூடியை காப்பாற்ற வேண்டாம். வினவுவும் – ம.க.இ.க. சீர்குலைவுவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

    அது சரி, நேரடியா போய் கேட்டதான் சொல்லுவீங்களா? மறைமுக அஜண்டாதான்! போலிகள் ஜாக்கிரதை

  44. //
    இங்கு விவாதத்திற்கு வரும் நண்பர்கள் இடப்பட்டுள்ள கட்டுரை குறித்து மட்டும் விவாதித்தால் மேலதிக புரிதல்களுக்கும், தங்கள் சுயத்தை பரிசீலனை செய்வதற்கும் வசதியாய் இருக்கும்.
    செய்வார்கள் என நம்புகிறேன்.
    //
    முதலில் உங்க இணைய புரட்சியாளர்களை அதைச் செய்ய பணிக்கவும். மற்ற தளங்களில் சென்று சீர்குலைவு செய்வதையே ம.க.இ.க.வின் தினசரி கடமையாக கொண்டிருக்கும் புரட்டர்களுக்கு அதனைத் தெரிவிக்கவும்.

  45. நண்பர்களே,

    தெரசா கட்டுரையை ஒட்டி விவாதம் நடைபெற்றால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முந்தைய போலிக் கம்யூனிஸ்டுகள் பற்றிய கட்டுரைக்கான விவாதம் இங்கே நடைபெறுவது பொருத்தமற்றது என்பதை கணக்கில் கொள்க. அடுத்து சந்திப்பு என்ற சி.பி.எம் பதிவர், ம.க.இ.க மீது அவதூறு (அதே பழைய்ய்ய்ய்ய பல்லவி) அவர் பதிவில் பதிவொன்றை இட்டு அதைப் பார்ப்பதற்த்கு இதுவரை நான்கு பேர் மட்டும் வந்திருப்பதால் பப்ளிசிட்டிக்காக இங்கே வந்து சில்லறை சண்டை செய்கிறார். அதுவும் தோழர் கலகம் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து பின்னூட்டமிடுகிறார். இதை அவர் தொடரும் பட்சத்தில் அவரது பின்னூட்டம் இங்கே நீக்கப்படும்.

    வினவு.

  46. இப்பதான் இந்த போலிகளை பற்றிய கட்டுரையை எழுதி முடித்தேன். அதில் வரும்சம்பவம் உண்மையாக இப்படி மற்றவர் பேரை பயன் படுத்திய போலிகளை அம்பலப்படுத்தியது.

    ஏண்டா அம்பி,

    வந்துட்டியோன்னா ,யாரு ரமேஸ்பாபுவா தீட்சிதர் கிட்ட போய்ட்டு வந்துட்டியா.னேக்கு நேரமில்ல இன்னும் மூணு நாள் கழிச்சு கட்டுரையை போடலாம் நு நினச்சா நாளைக்கே போடவச்சுட்டீயே அங்க வாடி உனக்கு பூச ரெடியாயிருக்கு.டாடாவோட மூத்திரம்,சன்கரன் மூத்திரம் செயாவோட மூத்திரம் எல்லாத்தையும் கலந்து காக்டெயில் அடிச்சா இப்படித்தான் உன் பேரே மறந்துடும்.
    சரி அம்பி நாளைக்கு பார்க்கலாமா.

    கலகம்

  47. என்ன சந்திப்பு,

    கொஞ்சமாவது யோசனையிருக்கா ,கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாம பேச சொல்லி தான் CPM ல சொல்லிகொடுத்தாங்களா?

    உங்களுக்கு பேர் கிடைக்கவில்லையா.யோவ் உங்க செட்டுக்கெ(கோட்சில்ல,போலி விடுதலை,ரமேஸ்பாபு) அறிவில்லைய இப்படி அம்பலப்பட்டு போகிறீர்கள்.என்னமோ மறைமுகம்ன்னு பூச்சாண்டி காட்டினீர்கள்.நாங்கள் யாரும் உங்களை மாதிரி கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதில்லை.கருத்திலும் சரி களத்திலும் பொலிகளை
    நேரடியாகவே சந்திக்கிறோம்.

    நாங்கள் உங்களுக்கு சில பேர்களை சொல்கிறோம்

    போலிகள்
    பாசிஸ்டுகள்
    துரோகிகள்
    மாமாக்கள்(இது தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்)
    இந்த பேரு போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

    கலகம்

  48. காணவில்லை

    பெயர். திரு. ராபின்

    யாராவது பார்த்தால் விவாதத்திற்கான பதில்களை வாங்கி வரவும்

  49. சந்திப்பு.. வேர்ட்ப்ரஸ்ஸில் வேறு வேறு பெயரில் வந்தாலும் ஐ.பி காட்டிக் கொடுக்கும். – பின்னூட்டத்தோடு சேர்ந்து ஐ.பியும் வரும்..

    போலி கம்யூனிஸ்டுகள் போலி டோண்டு லெவலுக்கு கீழ இறங்கிட்டீகளே???

    வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க பாஸு

  50. One must read Navin Chawla’s biography of Mother Terasa to understand her without prejudice. I regret to find here, her decision to become a nun is also mocked which is far away from facts. The analysis is more subjective and overreach. Mary Terasa was not born in an agricultural family as mentioned but her parents were businessmen and put up at a town. She was greatly influenced by a jesuit priest and joined an organisation ‘Sodality of Blessed Virgin Mary’ which actually was responsible for the bedrock of spiritual formation in her mind. It would be a haste decision when she first made up her mind at the age of eleven to become a nun and she might have stumbled later in her life. But she led a life which was highly self-imposed discipline in it. Abondoned lepers, destitutes were her people and she was not condescend in her service. Needless to say Mother Terasa was not a communist but a service of hers would be a want for any form of society- be it socialism.

  51. போலி கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் யார்? C.P.M போலிகளின் உண்மை முகம் போலி கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் யார்? C.P.M போலிகளின் உண்மை முகம்

    சந்திப்பு அண்ணா ஏன்ணா நீங்களும் உங்கள் கட்சியும் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறீர்கள் ? இங்கே ஏன் விவாதத்திற்கு சம்பந்தமில்லாதவற்றை பேசுகிறீர்கள்.
    உங்க கட்சியை கம்யூனிஸ்ட் கட்சின்னு சொல்லச்சொல்றீங்களா ?
    ப‌ழைய‌ செருப்பு இருக்குல்ல‌ ப‌ழைய‌ செருப்பு அதாலையே ம‌க்க‌ள் ஒங்க‌ளை அடிச்சி வெளுப்பாங்க‌.

    வெட்க‌மில்ல‌ கொஞ்ச‌ம் கூட..

    பாசிச‌ ஜெய‌ல‌லிதா ஆட்சியில் சாலை ப‌ணியாள‌ர்க‌ள் வீதியில் வீசியெறிய‌ப்ப‌ட்ட‌ போது சிணிமா க‌ம்பெனி த‌.மு.எ.ச
    ( சாத்தூர் கிளை) சார்பாக‌ பிலிம் காட்டுனீங்க‌ளே..

    அந்த‌ தொழிலாளிக‌ள் இப்போது உங்க‌ளை பார்த்தால் பிஞ்சு போன‌ செருப்பால‌ அடிக‌மாட்டாங்க‌ளா ?

    நாங்கள் நடத்திய‌ தாமிர‌வ‌ருணி கோகோ கோலா போராட்ட‌த்தை உங்க‌ளுடைய‌தை போன்று அப்போது நீங்க‌ள் கூறிய‌ ந‌ப‌ர்களை நீங்கள் இப்போது சந்தித்தால் எதைக்கொண்டு அடிப்பார்க‌ள் ?

    கூடிய விரைவில் உங்களுக்கு அந்த விழாவினை மக்கள் நடத்துவார்கள்.

    ஜெய‌ல‌லிதாவுக்கு ஏற்கெனவே நல்ல ஒரு தோழி இருக்கிறாள் இப்போது ந‌ல்ல‌ தோழ‌ர்க‌ளும் கிடைத்துவிட்டார்க‌ள்.

    மான‌ங்கெட்ட‌ பொழ‌ப்பு பொழைக்கிற‌துக்கு சாக‌லாம்.

  52. Its very easy to speak rationalism. But very hard to serve a leper with love.

    Mother Teresa is an open holy book. She didn’t served as a Christian or Catholic ( bcoz she was secular minded).

    But now I can see that, How you people are close minded and not able to accept any good deeds done by a religious person.

  53. Its very easy to speak rationalism. But very hard to serve a leper with love.

    Mother Teresa is an open holy book. She didn’t served as a Christian or Catholic ( bcoz she was secular minded).

    But now I can see that, How you people are close minded and not able to accept any good deeds done by a religious person.

    Apart from this subject. I encourage your articles on EELAM issue. But I don’t agree with some of your views on Eelam genocide. Please don’t mix it with Communism. That is a struggle against Genocide, by tamilans, of tamilans and for tamilans.

  54. sir, all are known god is not there every where, but one famous proverb is there if u take knife u cannot leave as such, like that t

    they are taken and inbetween time its impossible to leave….because u know all the thing

  55. பல விஷயங்களில் எனக்கு மாற்று கோணத்தை அறிமுகப்படுத்திய போலவே இவ்விஷயத்திலும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.நன்றி.

  56. ரஜினி ஒரு படத்துல நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் ம்பாரு .இந்த உலகதுல கெட்டவனுக்குலயும் நல்லவன் நல்லவனுகுள்ளயும் கெட்டவன் போலருக்கு

  57. மக்களுக்கு சேவை செய்ய மத அடையாளம் எதற்கு?…மதத்தை முன்னிறுத்தி சேவை செய்பவர்களுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட மதத்தை வளர்க்க வேண்டும் என்கிற உள்நோக்கம் மட்டுமே பிரதானமாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க