Tuesday, June 28, 2022
முகப்பு செய்தி ஆபாச நடிகை நக்மா நடத்திய 'அல்லேலூயா' மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி

ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி

-

பெரியாரின் தொண்டர் தோழர் நாத்திகம் இராமசாமி நினைவாக நாத்திகம் இதழில் வந்த இக்கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

nagma

இந்தியாவில் கிறிஸ்து மார்க்கம் பரவக் காரணமாக இருந்தது, மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களின் தொண்டூழியமும், அன்பும், தாழ்மையும், பண்பும், சகோதரத்துவமும், இரக்கச் சிந்தையும்தான்.

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” என்பது கிறிஸ்துவ வேதவாக்கியம்.

இந்த வேதவசனத்தை நடைமுறைப்படுத்தும் நல்லோர்களாக அவர்கள் இருந்ததால், இந்தியப் பார்ப்பனர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, தீண்டத்தகாத சூத்திர அடிமைகளாக வாழ்ந்த இந்திய மக்கள் குடும்பம் குடும்பமாக, ஊர் ஊராகக் கிறிஸ்துவ மார்க்கத்தை தஞ்சமடைந்தார்கள்.

அன்னை தெரசா போன்ற சமூக ஊழியர்களையும், கலைக்டர் பக்கிள் துரை போன்ற அரசு நிர்வாகிகளையும் கண்ட இந்திய மக்கள், கிறிஸ்து மார்க்கவாதிகளின் “உன்னைப் போல் பிறனையும் நேசி” என்ற இயேசு மார்க்கத்தை விரும்பித்தழுவினார்கள்.

ஆனால், இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!

ஏழைகளுக்கு இரங்கச் சொன்ன இயேசு வழியை விட்டுவிட்டு, ஏழை எளியோரை ஏமாற்றிக் காணிக்கை பெற்று, கோடிஸ்வரன்களாகும் ‘திருட்டுத் தினகரன்’ வழியில் போய்விட்டார்கள், கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொள்கிறவர்கள்.

கிறிஸ்துவ ஊழியம் என்பதே இந்திய ஏழைப் பாமரக் கிறிஸ்துவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும், கூடும் கூட்டத்தைப் படம் எடுத்து மேல்நாட்டுப் பணக்காரக் கிறிஸ்துவர்களிடம் காட்டிப் பணக் கொள்ளை நடத்துவதும்தான் என்றாகிவிட்டது!

“இலவசமாய் பெற்றீர்கள்; இலவசமாய் கொடுங்கள்” என்று இயேசு தமது போதகர்களுக்குச் சொல்கிறார். ஆனால், இன்றைய ‘கிறிஸ்துமத வியாபாரிகளோ’ எதையும் கொடுத்துப் பழகியவர்களாக இல்லை; வாங்கிக் குவிப்பவர்களாகவே வாழ்கிறார்கள்!

“ஒரே ஒரு இயேசு பிறந்தான்; அவனும் சிலுவையில் அறையப்பட்டு மாண்டான்” என்று சொல்லிப் புலம்பவேண்டிய நிலையிலேயே கிறிஸ்துவ மதத்தின் இன்றைய நிலை ஆகிவிட்டது!

இந்த நிலைக்கு, இந்தியாவில் மூலதாரமாக – முன் உதாரணமாக வழிகாட்டிய அயோக்யன் திருட்டுத் தினகரன்தான்!

ஏழை – எளிய மக்களுக்குத் தொண்டு செய்து, இயேசுவின் நாமத்தைக் கனம் செய்ய வேண்டிய ஊழியக்காரன், அந்த மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, காசுபறித்துக் குடும்பத்தையே உலகப் பணக்காரர் வரிசைக்குக் கொண்டு சென்றான் என்பது, ‘ஊழியம்’ என்ற பெயரால் கொள்ளையடிக்க வருவதற்கு முன் வழிகாட்டியாகிவிட்டது.

எல்லோரையும் நோய்களிலிருந்து விடுவித்து ‘அற்புத சுகம்’ கொடுப்பதாக ஏமாற்றி – மோசடி செய்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் குடும்பத்தாரை வாழவைத்தத் திருட்டுத் தினகரன், பல நோய்கள் பீடிக்கப்பட்டு சாவுநாள் வருவதற்கு முன்பே ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கிறிஸ்துவ வாக்கியத்துக்கு ஏற்ப செத்துப் போனான்!

அந்தப் பாவி அற்ப ஆயுளில் செத்தபின்பு, அவனது வழியில் மற்றொரு திருடன் ‘புகழ்’ பெற்றுக் கொண்டிருக்கிறான்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை அடுத்துள்ளது நாலுமாவடி என்ற சிற்றூர். இந்தச் சிற்றூரில் மிகச் சாதாரண ஏழை மனிதனாக – ‘கோயில் குட்டி’ பணி செய்து கொண்டிருந்தவர், சி.லாரன்ஸ் என்பவர். இவர் திருடன் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய் வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று!

திருட்டுத் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் எமாற்றியதுபோல, நாலமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் திருட்டுத் தொழிலை ஆரம்பித்தார்! தன் பெயரையும் கவர்ச்சியாக மோகன் சி.லாசரஸ் என்று வைத்துக் கொண்டார்.

உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதக்காரர்கள்தான்! இந்த மோகன், கோடி கோடியான கொள்ளை வருமானத்திற்காக ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவனைப்போல நடிக்கிறார்.

இவரது நடிப்பாற்றல் மூலம் மிக் கறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!

தூத்துக்குடி என். பெரியசாமி குடும்பம்தான் தென் மாவட்டங்களிலேயே, ஒரு தொழிலும் செய்யாமல் முதல் பணக்காரர்களான குடும்பம்! இன்று பெரியசாமியைத் தோற்கடிக்கும் மாபெரும் பணக்காரனாகிவிட்டார், “இயேசு விடுவிக்கிறார்” அதிபர் மோகன்-சி.லாசரஸ்!

நாலுமாவடி கிராமத்தையே விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்!

“என்னைப் பின்பற்றி வருகிறவன் எல்லாவற்றையும் விட்டு விட்டு வரக்கடவன்” – என்றார், இயேசு.

ஆனால், இந்த நாலுமாவடி இயேசுவோ “எல்லாக் கிறிஸ்துவனும் என்னிடம் தந்து விட்டு போங்கள்” என்று ஊழியம்(?) செய்கிறார்.

நோய் இல்லாத மனிதன் எவனும் பூமியில் இல்லை! திருட்டுத் தினகரனும் நோயால்தான் செத்தான்! மோகன்-சி.லாசரஸ்சுக்கும் நோய்களுண்டு.

இந்த நோயாளி லாசரஸ்தான் மற்றவர்களுக்கு சுகம் அளிப்பதாகச் சொல்லி, காசடித்துக் கொண்டிருக்கிறார்! பாமரக் கிறிஸ்துவர்களும் கோடி கோடியாகக் காணிக்கை தந்து கொண்டிருக்கிறார்கள்! மோகன் உல்லாச வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கூடும் கூட்டத்தை வீடியோ படம் எடுத்து, வெளிநாடுகளில் கொண்டு போய் கிறிஸ்துமதப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி, அங்கிருந்தும் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார், மோகன் சி.லாசரஸ்!

இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.

நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!

அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!

நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை  கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.

எல்லா வியாபார விளம்பரங்களுக்கும் ஆபாசப் பெண்களின் அரை நிர்வாணம் தேவைப்படும் காலம் இது! கிரிக்கெட் ஆட்டத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த அம்மணப் பெண்களை இடையிடையே ஆட்ட விடுகிறார்கள்! ரசிகர்களும் விசிலடித்து ரசிக்கிறார்கள்!

எனவே, ஏமாற்றுத் தொழில் செய்யும் மோகன் சி.லாசரஸ் தன் தொழில் பிரபலத்துக்கு ‘குலுக்காட்ட’ நடிகை நக்மாவைக் கொண்டு வந்து, கூட்டத்தைக்கூட்டி, கூடிய கூட்டத்தை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி ‘காணிக்கை வியாபாரம்’ செய்து கொண்டிருக்கிறார்!

“ஊசியின் காதுக்குள் ஒட்டகத்தைப் புகுத்தினாலும், பணக்காரன் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்” – என்பதெல்லாம் பெத்தலேகமில் பிறந்த பழைய இயேசுவின் வழி!

இந்தியாவில் தோன்றியுள்ள தினகரன், லாசரஸ் போன்ற புதிய அப்போஸ்தலர்களோ, ‘கோடிஸ்வரன் வாழ்க்கையே பரலோக இன்பம்’ என்ற இழிவு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள்!

பழைய இயேசுவோ, “பாவப்பட்ட எல்லா மக்களும் என்னிடத்தில் வாருங்கள்” என்றார்! இந்தப் பொய் வியாபாரிகளோ, “காணிக்கை செலுத்தப்பணம் உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்கிறார்கள்!

வியாபாரக் கவர்ச்சிக்கு நக்மாக்களைக் கொண்டுவந்து “அல்லேலூயா” போடச்சொல்லுகிறார்கள்!

பார்ப்பனர்களின் இந்து மதத்தால் சூத்திர நாலாஞ்சாதியாக்கப்பட்டு, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட தனித்தகரக் குவளையில் தந்து, செத்த பிணத்தைக் கூட தனிச்சுடுகாட்டில் போடு என்று வருண தருமம் அனுபவித்து மீண்ட மக்கள், ஏழை பங்களான் இயேசுவைத் தேடி வந்தால் இடையிலே இப்படிப் பணப் பேய்களாக தினகரன் – லாசரஸ் போன்ற திருடர்கள் நிற்கிறார்கள்!

தெரு ஓரத்திலே மோடி வித்தை காட்டும் ஏமாற்றுத் தொழில்காரர்களைப் போல, வித்தை காட்டி மக்களை மோசம் செய்யும் இந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து மக்கள் மீண்டும் வரவேண்டும்.

நாட்டை ஆட்சி செய்பவர்களும் லாசரஸ் போன்ற மோசடிக்காரர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேறு பல மாநிலங்களில் இந்த அற்புதச் சுகக்கூட்டங்களை அரசு தடை செய்திருப்பதைப் போலத் தமிழ்நாட்டிலும் அரசு தடை போடவேண்டும். தமிழக அரசுக்கு மானமும் அறிவும் வரவேண்டும்.

இயேசு பிரசிங்கித்தார் என்றால் அவர் இந்தத் திருடர்களைப்போல் காணிக்கை வாங்கி, குடும்ப டிரஸ்ட்டுகள் அமைத்து கோடிஸ்வரனாகவில்லை என்பதை கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களாக!

–          நன்றி. நாத்திகம், 18.07.2008 இதழ்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் தோழர் ‘நாத்திகம்’ இராமசாமி மறைவு !!

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!

 1. நாத்திகம் ராமசாமியை பற்றி நீங்கள் ஆஹா ஓஹோ என்று புகழந்ததை வைத்து அவரது கட்டுரையை ஆவலோபு படித்தேன். என்னவோ ஸ்கூல் மாணவன் தரத்தில் எழுதி இருக்கிறார். இதுதான் அவர் எழுதியதில் சிறந்தது என்றால் அவர் எழுதியதை எல்லாம் படிக்க வேண்டியதே இல்லை. மேலும் அந்த கால கிருஸ்துவ மிஷனரிகள் எல்லாரும் சேவை ஒன்றே நோக்கமாக கொண்டவர்கள் என்று எழுதியது சரியும் இல்லை. அடப் போங்க சார்!

  அப்புறம் நீங்களும் என்ன குமுதம் விகடன் மாதிரி சான்ஸ் கிடைத்தால் நடிகை படத்தை போட்டுவிட்டீர்கள்?

  • ஆர்.வி,

   பெரியாரின் எழுத்துக்களும் அவரது இயக்கத் தொண்டர்களது எழுத்துக்களும் வலிமையான தர்க்க பூர்வமாகவும், எளிமையாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக எழுதப்பட்டவை. அவர்கள் அறிவுஜீவிகளுக்காக எழுதுவதில்லை.( உடனே உங்களை ஒப்பிட்டதாக நினைக்க வேண்டாம்) இங்கே மோகன் சி.லாசரஸ் எனும் ஏமாற்றுப் பேர்வழி இயேசு விடுவிக்கிறார் என்று மோசடி செய்து கோடிஸ்வரனாக மாறியதை மக்களிடம் அம்பலப்படுத்துகிறார். கிறித்தவத்தில் நம்பிக்கை கொண்டவர்களைக்கூட சிந்திக்கும் விதத்தில் அணுகியுள்ளார். இத்தகைய விசயங்கள் பலருக்கு தெரியாத நிலையில் இவற்றை விளக்குவதே சரியானதாக இருக்கும். கிறிஸ்தவ மிஷனரிகள் ஏகாதிபத்தியங்களின் நோக்கங்களுக்காக பயன்பட்டார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு பார்ப்பனியத்தால் கஷ்டப்பட்ட மக்கள் கிறித்துவ மதத்தில் இணைந்ததும் உண்மை. இதற்கு கேரளாவும், குமரி மாவட்டமும் சில எடுத்துக்காட்டுகள். நடிகை நக்மா அல்லேலூயா பிரச்சாரம் செய்த படத்தைத்தான் வெளியிட்டிருக்கிறோம்.

   • //அப்புறம் நீங்களும் என்ன குமுதம் விகடன் மாதிரி சான்ஸ் கிடைத்தால் நடிகை படத்தை போட்டுவிட்டீர்கள்?
    //

    கட்டுரைய பிரசுரிக்க இவ்வளவு சிரமம் எடுத்துகிட்டவங்க, நக்மாவோட “நல்ல” படம் ஒன்னை தேடி பிடிக்க சிரமம் எடுக்காதது ஏன்? இந்த மாதிரி சான்ஸ எவனாது மிஸ் பண்ணுவானா? நீங்கல்லாம் திருந்தவே மாட்டிங்களா? தொடர்ந்து இதே மாதிரி பண்ணிங்கன்னா குமுதம்,ஆனந்த விகடன் மாதிரி என்னைக்கும் வளரவே முடியாது, மனசுல வைச்சுக்கோங்க. நண்பா RV , உங்களுக்கும் சேர்த்து நானே கேட்டுட்டேன். அமைதியா இருங்க. உய்ய்ய்ய்ய்…உய்ய்ய்ய்….(விசில் சத்தம்). சீக்கிரம் படத்த போடுங்கப்பா.

    • ” உய்ய்ய்ய்ய்…உய்ய்ய்ய்….(விசில் சத்தம்). சீக்கிரம் படத்த போடுங்கப்பா” hahahahaha….. 🙂 🙂 you are grt man – good humor sense…

   • பெண்னியம் எல்லாம் பேசுகிறவர்கள் நடிகை நக்மாவை இப்படி இழிவு செய்யலாமா ? எனக்கென்னவோ அவர் உண்மையிலேயே கிருஸ்துவத்தை நம்பி ஊழியம் செய்கிறார் என்று படுகிறது. வாழ்க்கையில் பல கொடுமைகளை அனுபவித்தால் ஒரு ஆபாச நடிகை இப்படி மாற கூடாதா ? அவரும் மனிதர் தாம். ஆனால் லஸரஸ் பிராடாக் இருக்கலாம். அது வேறு..

  • அவரது உறுதியான தெளிவான கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறீர்களா என்பது தான் கேள்வி. அதை பற்றிய விவாதம் தான் இங்கு தேவையானது முதன்மையானதும் கூட.

  • அந்த கால கிறித்துவ மிசினரிகளுக்கு மதம் பிரச்சாரம் செய்வதே பிரதான குறிகோளாக இருந்தாலும், பார்ப்பனீயத்தின் அடியில் படிப்பறிவு, மனித உரிமைகள் கிடைக்காத இருந்த பெரும்பாலான கேரள, தென் தமிழக மக்களுக்கு பயன்பட்டது உண்மையே. அப்படி மதப் பிரச்சாரம் செய்த நிறைய பாதிரிமார்கள் தமிழாராய்ச்சி, அகராதி தொகுப்பு என தமிழ் தொண்டிலும் பலவாறு ஈடுபட்டிருந்தனர்.

   மிசினரிகளில் அப்போது மனிதம் ஓங்கியிருந்தது, ஆனால் இப்போது கோடீசுவரர்களும், ஏமாற்று பேர்வழிகளும் நிறைந்துள்ளனர்.

  • ஆர்.வி,

   இந்த கட்டுரையில் பார்ப்பனீயம் மற்றும் அல்லேலூயா கும்பலை ஒரே அலைவரிசையில் தோலுரிக்கிறார் நாத்திகம் ராமசாமி.

   நாத்திகம் ராமசாமி மட்டுமல்ல பெரியார் ஈ.வெ.ராமசாமியின் எழுத்தும், பேச்சும் எளிமையாகவே இருக்கும். கலைஞர், அண்ணா போன்று எதுகை மோனைகளும், மொழி அலங்காரங்களும் இருக்காது.

   பெரியாரின் கருத்துக்கும், நேர்மைக்கும், எளிமைக்கும், போர்குணத்துக்கும் தான் பெரியாரை எனக்கு பிடிக்கும். பார்ப்பனீயர்களுக்கு வேண்டுமானால் எளிமையான நாத்திக கட்டுரைகள் பிடிக்காமல் இருக்கலாம். என்ன செய்ய?

   >>பெரியார் தொண்டனுக்கே உரிய மொழி நடையை அவர் பெற்றிருந்தார். வெறும் எட்டு பக்கங்களே கொண்ட, லேஅவுட், அழகியல் போன்ற ஏதுமின்றி எழுத்துக்களாலும் நிறைந்த அந்த பத்திரிகையை, படி படி என்று நம்மை தூண்டியது அவரது எழுத்து மட்டும்தான் என்றால் அது மிகையல்ல.

  • RV வர வர நீங்க வினவு குழு உங்கள கண்டுகொள்ளவில்லை என்ற காண்டில் எழுதுவது நல்லா தெரியுது. அப்புறம் சப்ப மேட்டர் இந்த விஷயம் அத இப்படி தான் எழுத முடியும் மோகன் சி. லாசரஸ் போன்ற பேமானிகள் பத்தி என்ன ‘paper presentation’ செய்ய முடியும்.
   நல்ல வேலை நீங்க இனிமேல் நாத்திகம் ராமசாமி கட்டுரை படிக்கமாட்டேன்னு சொன்னது நாங்க தப்பிச்சோம்.

   • வினவு, பென், சூனா பானா மற்றும் விட்டுப்போனவர்களுக்கு:

    நாத்திகம் ராமசாமியின் சிறந்த கட்டுரை என்றோ, அவர் எழுதியவற்றின் பிரதிநிதி என்றோ வெளியிட்டிருப்பதில் உள்ள செய்தி, சிந்தனை என்ன?
    1. அன்றைய மிஷனரிகள் அனைவரும் சேவை நோக்கத்தோடு செயல்பட்டவர்கள்.
    2. இன்று கிருஸ்துவம் ஒரு பிசினெஸ், ஏமாற்று வேலையாகிவிட்டது.
    3. தினகரன் ஒரு ஏமாற்றுக்காரர்.
    4. மோகன் சி. லாசரஸ் இன்னொரு ஏமாற்றுக்காரர்.
    5. முன்னாள் “ஆபாச” நடிகை நக்மாவும் இதில் பங்கு இருக்கிறது.

    இதில் சிந்தனை எதுவும் இல்லை. முதல் பாயின்ட் தவறு. அடுத்த நான்கு பாயின்ட்களும் ஜூனியர் விகடன் ஸ்டைல், நக்கீரன் ஸ்டைல் குற்றச்சாட்டுகள். அவர்கள் ஆதாரங்கள் என்று நாலு பேரிடம் பேசியது என்று எதையாவது சொல்வார்கள், இங்கே அதுவும் கிடையாது. நாத்திகம் ராமசாமி சொல்லிவிட்டார், Due process எதுவும் வேண்டாம், ஆதாரம் எதுவும் கேட்க வேண்டாம்.

    இதுதான் அவர் எழுதியதில் சிறந்தது என்றால்; ஜூவி ஸ்டைலில், ஆனால் அந்த தரம் கூட இல்லாமல் எழுதப்பட்டதுதான் அவர் எழுத்துகளின் பிரதிநிதி என்றால்; இதை எல்லாம் எதற்காக படிக்க வேண்டும்? அவர் கிருஸ்துவம் என்ற holy cow-ஐ பற்றி எழுதும் தைரியம் உள்ளவர் என்ற ஒரே ஒரு நல்ல பாயின்ட் மட்டுமே இங்கே இருக்கிறது. ஆனால் அதை ஜூவி, குமுதம் ரிபோர்ட்டர், நக்கீரன் எல்லாரும் செய்கிறார்கள். இவரை மட்டும் குறித்து புகழ என்ன இருக்கிறது?

    அப்புறம் ஏன் நக்மா படம் போட்டிருக்கிறோம் என்று விளக்கி இருக்கிறீர்கள். இந்த பதிவில் பெரிதும் சொல்லப்படுவது மோகன் சி. லாசரஸ்; இரண்டாவதாக தினகரன்; மூன்றாவதாக நக்மா; ஏன் நக்மா படத்தை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்? நக்மா என்று தலைப்பு கொடுத்தால்தான் நிறைய பேர் படிப்பார்கள் என்பதெல்லாம் குமுதம் டெக்னிக்குங்க!

    சுனா பானா, பேச்சு எளிமை, அலங்காரம் இல்லாதது என்பது ப்ளஸ் பாயின்ட். மைனஸ் பாயின்ட் இல்லை! ஆனால் என்ன கருத்து இங்கே இருக்கிறது?

    பென், இது சப்பை மேட்டர், இதை இப்படித்தான் எழுத முடியும் என்கிறீர்கள். ஆதாரம் என்ன என்று சொல்லாமல் வெறும் குற்றச்சாட்டை சொல்லக்கூடாது என்பது என் உறுதியான கருத்து. மேலும் அன்றைய மிஷனரிகளை பற்றி அவர் சொல்வது தவறு. நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டாலும், இது வினவு குழுவினரின் தவறு. நாத்திகம் ராமசாமி எழுதிய எல்லாவற்றையும் இங்கே பதிக்கப் போவதில்லை. ஒன்று, இல்லை இரண்டுதான். சப்பை மேட்டரை தேர்ந்தெடுத்தது எதற்கோ?

    அப்புறம் என் காண்டை பற்றி: இது வரை இரண்டு விஷயங்களில் வினவு குழுவினர் பதில் சொல்லவில்லை. ஒன்று அஹ்மதியா பதிவில் என் மீது கடுமையான குற்றச்சாட்டை சொன்னார்கள்; அவர்கள் சொல்வது தவறு என்று நிறுவிய பிறகு, அதைப் பற்றி மூன்று நான்கு முறை நினைவுபடுத்திய பிறகும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. உன்னைப் போல் ஒருவன் பதிவில் அவர்கள் அணுகுமுறையில் இருக்கும் தவறுகள் என்று எனக்குத் தோன்றுவதை எழுதி இருந்தேன். அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நான் சொன்ன இந்த இரண்டு விஷயங்களும் முக்கியமானவை என்பதிலோ அவர்கள் பதில் சொல்லாதது தவறு என்பதிலோ எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் காண்டு என்பது கொஞ்சம் அதிகப்படி. எல்லாருக்கும் வேலைப்பளு இருக்கத்தானே செய்கிறது? என் தளத்தில் கூட மறுமொழிகளுக்கு நான் பதில் சொல்லி ரொம்ப நாளாகிறது.

    • ஆர்.வி,
     இந்தக்கட்டுரையின் தலைப்பு தோழர் நாத்திகம் ராமசாமி வைத்ததுதான். மற்றபடி தினகரனது மோசடிகளைப்பற்றி அவர் தனி நூலே வெளியிட்டுள்ளார். அதில் ஊழலின் மூலம் அவர் கோடிஸ்வரனானது விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

     உன்னைப்போல ஒருவனது விமரிசனத்தை அவசரமாக படித்துவிட்டு நாங்கள் என்ன கருதுகிறோம் என்று மேலோட்டமாக எழுதியிருந்தீர்கள். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு கட்டுரையிலேயே பதில் உள்ளது. அதைத்தாண்டி புதிய விளக்கங்கள் எம்மிடமில்லை. மேலும் இந்த விவாதத்தில் பல தோழர்கள் பல கோணங்களில் இந்துத்வாவை விளக்கியிருக்கிறார்கள். அவற்றிலும் உங்கள் விமரிசனங்களுக்கான பதில் உள்ளது. எனவே தனிச்சிறப்பாக உங்களுக்கு பதிலளிக்கவில்லை.

     அஹமதியா கட்டுரையில் நாங்கள் முன்வைத்த விமரிசனங்களுக்கு நீங்கள் பதில் சொல்லி வெறுபட்டிருக்கீறீர்கள். அதைக் கருத்து வேறுபாடு என்று கொண்டதால் மேற்கொண்டு விவாதிக்கவில்லை. சொத்துரிமையின் பெயரிலேயே பார்ப்பனிய இந்து மதம் தனது மேல்சாதி அடக்குமுறையை நிறுவுகிறது என்பதே நாங்கள் முன்வைத்த விமர்சனம். முதலாளித்துவமும் தனது இருப்பை சுரண்டலை சொத்துரிமையின் பெயரில்தான் நியாயப்படுத்துகிறது. இதைத்தான் எமது விமரிசனத்தில் தெரிவித்தோம். நீங்கள் மறுத்தீர்கள். அவ்வளவுதான். மற்றபடி பார்ப்பனியம், இந்து மதவெறி என்று சொன்னால் உங்களுக்கு கோபமோ, எரிச்சலோ வருகிறது என்பதை அவதானிக்கிறோம். இதனால் உங்களை மதவெறியர் என்று சொல்லவில்லை. ஆனால் ஒருவகையான மதவாதம் உங்களிடம் இருப்பதாக கருதுகிறோம். எங்களது கருத்து தவறு என்றால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவோம். இந்து மதவெறி என்று எழுதுவது போல துலுக்கன் என்று எழுதுவீர்களா என்றெல்லாம் கேட்கும் அளவு உங்களிடம் மதம் ஒரு இருப்பைக்கொண்டுள்ளது. அதை மாற்றிக் கொண்டால் வரவேற்போம். இல்லையென்றால் தொடர்ந்து விவாதிப்போம்.

     • Just for everything you are answering seriously and elaborately to RV for so many times. But, in the same way I have also caught you, Vinavu. Then why do you overlook me? Because, muslims are “eduppaar kaippillai” , ok?

   • RV சார், நாத்திகம் இரமாசாமி ஐயா நக்மா பேரு வச்சு கட்டுரை எழுதுனதுக்கு வினவு தோழர்களை கேள்வி கேட்கறது எனக்கு விதண்டாவாதமா தோணுது, தவிர நக்மா படம் போட்டுதான் 4 பேரு வருணுமின்னா கொஞ்சம் பழைய கவர்ச்சிப்படமா எடுத்து போட்டிருக்கலாம்! ஒரு வேள அப்படி போடலேன்னு உங்களுக்கு வருத்தமா?

   • RV நான் மாங்க மடையனாக(கிறிஸ்தவனாக இருந்த பொழுது) இவர்கள் கூட்டத்திற்கு சென்று இருக்கிறேன். இப்பொழுது யோசித்து பார்கையில் எப்படி எளிமை, தியாகம், சிலுவை என்று இவர்கள் மக்களை ஏமாற்றினார்கள் என்று உணர்கிறேன். இந்த பதிவு கிறிஸ்தவர்கள் படித்தார்கள் என்றால் குறைந்த பட்ச சிந்தனை ஏற்படும். ஆதாரம் ஆதாரம் என்று எதற்கெடுத்தாலும் கேட்கும் நீங்கள் இதில் அவர்கள் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று எழுதி இருக்கே அது என்ன ஆதாரம் இல்லையா. ஆதாரத்த தேடறவன் எங்கும் போ வேண்டாம் தொலைகாட்சி அல்லது இவர்கள் கூட்டங்களை பார்த்தாலே போதும். எப்பொழுதும் புதிய கோட் சூட், சபாரி சூட் , கட் அவுட், சுவரொட்டி, மேடை அலங்காரம், இவர்களின் வகானங்கள், விளம்பரம் போன்றவை அதற்கு சான்று . ஆங்கிலத்தில் சொல்வார்களே ‘teaser’ என்று அது போல இந்த கட்டுரை ஒரு அறிமுகம் அவ்வளவு தான். அதை ஒரு ‘innate prejudice’ யோடு பார்க்காமல் மக்களை சுரண்டி மக்கு முண்டன்களாக்கும் பால் தினகரன், மோகன் சி.லாசரஸ், ‘இன்னொரு’ மோகன், சாம் சுந்தரம் போன்றவர்களை அம்பல படுத்தும் முயற்சி என்று பாராட்டிவிட்டு போங்களேன்.

   • நண்பா RV உங்கள் இடம் ஒரு கேள்வி நீக்க இந்த கட்டுரைய முழுதும் படிதின்களா??
    நீங்க முழுசா படிச்சு இருந்த அவரோட எழுத்து தான் காரணம் !!

    1. அன்றைய மிஷனரிகள் அனைவரும் சேவை நோக்கத்தோடு செயல்பட்டவர்கள் உண்மைனு சொல்ல என்னகு பல உதாரணம் இருக்கு !!
    அன்னை தெரசா , தோமா ,அன்திரையா ! இப்படி பல உதாரணம் இருக்கு ஆன நீங்க சொன்னதுக்கு (இல்ல மறுப்பதுக்கு ஏதாவது காரணம் or உதாரணம் )
    ௨.ஆதாரம் இல்லமா ஒன்றும் இல்லை நானே ஆதாரம் தான் என்னுடைய நகரில் தினகரன் கூட்டத்திற்கு ஒழுங்கு படுதுத்தியது என்னுடைய சபை அவரும் வந்தார் ,தங்க 5 Star Hotel. கடைசி நேரத்தில் 3 லச்சம் பணம் இல்லை நு சொல்லி கூட்டத்தை நடத்தாமல் போனவர் அவர் !!

    இனும் சொல்லனும் ந அவர் நடத்தும் கல்லூரியில் படித்த மாணவன் பணம் காட்டாத மாணவர்களை கல்லுரியை விடு வெளிய அனுப்பியவர்கள் அவர்கள் !!

   • திராவிடன்,

    // ண்பா RV உங்கள் இடம் ஒரு கேள்வி நீக்க இந்த கட்டுரைய முழுதும் படிதின்களா??//
    ஆமாம். அப்படி நான் படிக்கவில்லை என்று என் நினைக்கிறீர்கள் என்று நீங்கள்தான் விளக்க வேண்டும்.

    // நீங்க முழுசா படிச்சு இருந்த அவரோட எழுத்து தான் காரணம் !!//
    ஒன்றும் புரியவில்லையே?

    // அன்றைய மிஷனரிகள் அனைவரும் சேவை நோக்கத்தோடு செயல்பட்டவர்கள் உண்மைனு சொல்ல என்னகு பல உதாரணம் இருக்கு !!
    அன்னை தெரசா , தோமா ,அன்திரையா ! இப்படி பல உதாரணம் இருக்கு ஆன நீங்க சொன்னதுக்கு (இல்ல மறுப்பதுக்கு ஏதாவது காரணம் or உதாரணம் ) //
    “புனித” ஃப்ராந்சிஸ் சேவியர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Inquisition பற்றி? இந்தியாவுக்கு கத்தோலிக்க மதம் மட்டுமல்ல, Inquisition-ஐயும் கொண்டு வந்தவர் இவர்தான். இவர் கிருஸ்துவ மதத்தை பரப்பினார் என்று வேண்டுமானால் சொல்லலாம், என்ன சேவை செய்தார்? ரோபர்ட் டி நொபிலி? தோமா என்று நீங்கள் சொல்வது அபோச்தளர்களில் ஒருவரான, இந்தியாவுக்கு வந்ததாக சொல்லப்படும் “புனித” தாமஸ் என்று நினைக்கிறேன். இவர் கிருஸ்துவ மதத்தை பரப்பினார் என்று வேண்டுமானால் சொல்லலாம், என்ன சேவை செய்தார்? அன்திரியா யார் என்று தெரியவில்லை. கிருஸ்துவராக பிறந்து இப்போது மத நம்பிக்கை இல்லாதவரான பென் என்னை விட அதிகமாக சொல்லக்கூடியவர் என்று நினைக்கிறேன்.
    மிஷனரிகள் செய்த சேவைகள் நிறைய உண்டு. நாட்டில் கல்வி பரவியதில் அவர்கள் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிரதான நோக்கம் மத மாற்றமே. மத மாற்றம் எப்படி மக்கள் சேவை ஆகும்? அப்புறம் தினகரனும் லாசரசும் கூட மத மாற்றம் செய்து வைத்திருக்கிறார்களே!

    // ஆதாரம் இல்லமா ஒன்றும் இல்லை நானே ஆதாரம் தான்… //
    இவ்வளவுதாங்க நான் கேட்ட ஆதாரம்! சட்டப்படியாக செல்லக்கூடிய ஆதாரங்களை கேட்கவில்லை. Anecdotal, unofficial, இவர் இப்படி சொன்னார், அவர் அப்படி சொன்னார், போன்ற ஆதாரங்கள் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. அதைத்தான் ஜூவி போன்ற பத்திரிகைகள் செய்கின்றன. பெரியவர் பொத்தாம்பொதுவில் சொல்கிறார். நீங்கள் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு தினகரன் யாரென்றே தெரியாத ஒரு பிஹாரியிடம் காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். (அட எனக்கும் லாசரஸ் யாரென்றே தெரியாது. தினகரன் என்று ஒரு பேரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன்.) அவர் இதை எதற்காக நம்பவேண்டும்? பெரியவர் சொல்வது பொய், தவறான விவரம் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. ஆனால் நான் இந்த கட்டுரை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புவது இது வினவு தளத்தில் பதிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தில்தானே! எனக்கு வினவு தளம் தவறனா தகவல்களை தராது (தவறான கருத்து வேறு. :-)) என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நாத்திகம் ராமசாமியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தளத்தில் ஒரு கட்டுரை வருகிறது. எனக்கு பொதுவாக இந்த மத மாற்றக்காரர்கள் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. எனக்கு இது போதும் பொதுவாக நாத்திகம் ராமசாமியை நம்ப. திராவிடன்,

    // ண்பா RV உங்கள் இடம் ஒரு கேள்வி நீக்க இந்த கட்டுரைய முழுதும் படிதின்களா??//
    ஆமாம். அப்படி நான் படிக்கவில்லை என்று என் நினைக்கிறீர்கள் என்று நீங்கள்தான் விளக்க வேண்டும்.

    // நீங்க முழுசா படிச்சு இருந்த அவரோட எழுத்து தான் காரணம் !!//
    ஒன்றும் புரியவில்லையே?

    // அன்றைய மிஷனரிகள் அனைவரும் சேவை நோக்கத்தோடு செயல்பட்டவர்கள் உண்மைனு சொல்ல என்னகு பல உதாரணம் இருக்கு !!
    அன்னை தெரசா , தோமா ,அன்திரையா ! இப்படி பல உதாரணம் இருக்கு ஆன நீங்க சொன்னதுக்கு (இல்ல மறுப்பதுக்கு ஏதாவது காரணம் or உதாரணம் ) //
    “புனித” ஃப்ராந்சிஸ் சேவியர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Inquisition பற்றி? இந்தியாவுக்கு கத்தோலிக்க மதம் மட்டுமல்ல, Inquisition-ஐயும் கொண்டு வந்தவர் இவர்தான். இவர் கிருஸ்துவ மதத்தை பரப்பினார் என்று வேண்டுமானால் சொல்லலாம், என்ன சேவை செய்தார்? ரோபர்ட் டி நொபிலி? தோமா என்று நீங்கள் சொல்வது அபோச்தளர்களில் ஒருவரான, இந்தியாவுக்கு வந்ததாக சொல்லப்படும் “புனித” தாமஸ் என்று நினைக்கிறேன். இவர் கிருஸ்துவ மதத்தை பரப்பினார் என்று வேண்டுமானால் சொல்லலாம், என்ன சேவை செய்தார்? அன்திரியா யார் என்று தெரியவில்லை. கிருஸ்துவராக பிறந்து இப்போது மத நம்பிக்கை இல்லாதவரான பென் என்னை விட அதிகமாக சொல்லக்கூடியவர் என்று நினைக்கிறேன்.
    மிஷனரிகள் செய்த சேவைகள் நிறைய உண்டு. நாட்டில் கல்வி பரவியதில் அவர்கள் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிரதான நோக்கம் மத மாற்றமே. மத மாற்றம் எப்படி மக்கள் சேவை ஆகும்? அப்புறம் தினகரனும் லாசரசும் கூட மத மாற்றம் செய்து வைத்திருக்கிறார்களே!

    // ஆதாரம் இல்லமா ஒன்றும் இல்லை நானே ஆதாரம் தான்… //
    இவ்வளவுதாங்க நான் கேட்ட ஆதாரம்! சட்டப்படியாக செல்லக்கூடிய ஆதாரங்களை கேட்கவில்லை. Anecdotal, unofficial, இவர் இப்படி சொன்னார், அவர் அப்படி சொன்னார், போன்ற ஆதாரங்கள் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. அதைத்தான் ஜூவி போன்ற பத்திரிகைகள் செய்கின்றன. பெரியவர் பொத்தாம்பொதுவில் சொல்கிறார். நீங்கள் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு தினகரன் யாரென்றே தெரியாத ஒரு பிஹாரியிடம் காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். (அட எனக்கும் லாசரஸ் யாரென்றே தெரியாது. தினகரன் என்று ஒரு பேரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன்.) அவர் இதை எதற்காக நம்பவேண்டும்? பெரியவர் சொல்வது பொய், தவறான விவரம் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. ஆனால் நான் இந்த கட்டுரை உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புவது இது வினவு தளத்தில் பதிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்தில்தானே! எனக்கு வினவு தளம் தவறனா தகவல்களை தராது (தவறான கருத்து வேறு. :-)) என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நாத்திகம் ராமசாமியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தளத்தில் ஒரு கட்டுரை வருகிறது. எனக்கு பொதுவாக இந்த மத மாற்றக்காரர்கள் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. எனக்கு இது போதும் பொதுவாக நாத்திகம் ராமசாமியை நம்ப. ஆனால் இந்த கட்டுரை per se எத்தனை நம்பகத்தன்மை உடையது?

    இது புதிய insight எதையும் தரவில்லை. செய்திக் கட்டுரை மட்டுமே. நம்பகத்தன்மையும் குறைவு. அப்படிப்பட்ட ஒன்று பெரியவரின் சிறந்த கட்டுரை, பிரதிநிதிக் கட்டுரை என்று நம் முன் வைக்கப்படுகிறது. அதை எப்படி ஆஹா ஓஹோ என்று புகழ முடியும்?

   • ஆர்.வி, பார்ப்பனீய கொடுமைகளை அறியாதவர்களுக்கும், சத்திரிய சாதி என பெருமை பேசும் சாதி வெறியர்களுக்கும்,

    பார்ப்பனீயத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுள் சில,

    1) நாடார், சாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதிலிருந்து இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டனர்.

    2) புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

    3) ‘பார்த்தால் தீட்டு’ என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது “எட்டிப்போ” என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.

    4) நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.

    5) ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.

    6) ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.

    7) பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).

    8) பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.

    9) திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.

    10) குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.

    11) தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.

    12) செருப்பு அணியக்கூடாது.

    13) படிக்கக்கூடாது.

    14) பொது குளத்தில் குளிக்கக்கூடாது.

    15) இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.

    நன்றி: ஆலமரம் கட்டுரைகள்
    http://aalamaram.blogspot.com/

    மேற்கூறிய பார்ப்பனீய கொடுமைகள் எதாவது மேஜிக் செய்ததும் காணாமல் போனதா? மிசனரிகள் சேவை பயனளிக்கவில்லை என நிறுவ முடியுமா? வேறு ஏதாவது காரணம் இருந்தால் கூறவும்.

    அந்தகால கிறித்துவ மிசனரிகளின் வருகையால் தென் தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு ஓரளவுக்கு கல்வியும், மனித உரிமைகளும் கிடைத்தன. அந்த கால மிசனரிகளின் நோக்கம் மதம் பரப்புதலும், காலனியாட்சிக்கு வலு சேர்ப்பதாக இருந்தாலும், இந்த மண்ணில் சில சீர்திருத்தத்திற்கு உதவினார்கள் என்பது உண்மையே. அந்த கால ஐரோப்பிய மிசனரிகள் மதம் குறித்து பிற்போக்கு கருத்துடையவர்களாக இருந்தாலும், அவர்களின் கல்வி, சமூக சேவையில் பயன்பெற்றது ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களும் தான்.

    (அதியமானை கேட்டால் நாடார்கள் “உழைப்பினால்” மட்டுமே முன்னேறினார்கள் என கதைப்பார். “உழைப்பினால்” முன்னேறிய சமுதாயம் தோள்சீலை போடவே பயங்கரமான போராட்டம் செய்ய வேண்டியிருந்தது.)

    மேலும் விவரங்களுக்கும், ஆதாரங்களுக்கும் “இரத்த சாட்சிகள்” என்ற குறும் படத்தை பார்க்கவும்.

  • எங்க சனம் எல்லாம் தினத்தந்தி படிச்சு தான், எழுத்துக்கூட்டி படிக்க கத்துகிட்டது.

   ஆய்ந்து, ஆழமாக எழுதுவது எல்லாம் எங்களை வந்து சேரவே சேராது.

   தெருமுனையில் அல்லேலுயாவோ, நாத்திகம் ராமசாமி அவர்களோ எழுதுவதோ தான் எங்களை சேருகிறது.

   ஆர்.வி..

   நாத்திகம் ஸ்கூல் மாணவன் மாதிரி எழுதுகிறார் என பேசுவது இந்திய சமூகத்தை மறந்து, மேட்டிமையில் பேசுவது.

   எங்களால், இந்திய மக்களுக்கு 8ம் வகுப்பு வரை கூட அடிப்படை கல்வி கொடுக்கமுடியவில்லை என பேசிய இந்திய அரசை தான், ஆர்.வி. கோவித்து கொள்ள வேண்டும்.

  • ஆர்.வி,

   பார்ப்பனீயத்தையும், மதங்களையும் மக்களிடையே அம்பலபடுத்த 8 பக்கம் கொண்ட எளிமையான பத்திரிக்கையை நாத்திகம் ராமசாமி அரை நூற்றாண்டு காலமாக நடத்தி வந்துள்ளார். (மெத்த படித்த அறிஞர்களும், அறிவாளிகளும் நமக்கேன் வம்பு என தன் வீடு, தன் குடும்பம் என சுயநலமிகளாய் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.)

   நீங்கள் சொல்வது போல் ஆதாரங்களுடன் ஆராய்ச்சி கட்டுரையாக எழுதினால் ஒரு கட்டுரையே 8 பக்கங்களை தாண்டி விடாதா? மேலும் குருத்து சொல்வது போல் இன்றும் தமிழக வாசகர்களான நாங்கள் எளிமையான நடையையே படிக்க கூடிய நிலையில் உள்ளோம். மேலும் ஆதாரங்கள், விவரங்கள் என நீளமான கட்டுரைகள் கொண்ட பத்திரிக்கைகள் வெகுஜனங்களை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன் (அதற்காக ஆராய்ச்சி கட்டுரைகள் தேவை இல்லை என கூறவில்லை). அப்படி நிலைமை இருக்கையில் மக்களிடையே தன் பத்திரிக்கையில் எளிமையாக எழுதியிருப்பது தவறில்லை தானே.

   கட்டுரையின் கருத்து என்ன என்று வினவியுள்ளீர்கள். கிறித்துவ மத போதகர்களின் கொள்ளையை பட்டியலிட்டுள்ளாரே. இது கருத்து இல்லையா? அல்லது அத்தனையும் பொய்யா?

   திருவிளையாடலில் நாகேஷ் கொண்டு சென்ற பாடலில் பொருள் குற்றம் கண்டுபிடித்தார் நக்கீரன். ஆனால் தாங்களோ சொல்குற்றம் (ஆதாரம், duepprocess) கண்டுபிடித்துள்ளீர்கள்.

 2. hi athiest
  christians r not christians bcs they became christians simply by seeing others life [theresha,etc].it is jesus who changed their lives personally and by seeing his life they became christians.anyone who confess his own personal and public sin ONLY THEN he/she will be accepted as child of jesus.[whosoever hides his sin will not forgiven].without confession, there is no forgiveness of sin.nahma is confessing her mistakes and ask forgoveness from jesus.she is forgived and received as child of god -there is no doubt.amog 12 deciples of jesus christ there was a thief[judas ischariot] .love of money tempted him to betroy jesus.go to any department there r good and bad people.there r many people for money but blame people like mohan .c. lozurus.oh athiest it is terrile for u in the day of jesus christ.repent and believe jesus.

   • todaY’s joke will come to pass one day then there will be no way for u to escape….remember sunami howmany escaped when that day came ..do u think it is joke…nobady cxpected that day too.

    • Nobody expected that day too.Is cristians expected sunaami that day Don’t forget among the deads there are christians too why don’t your so called saviour jesus christ doesn’t save those christians so do you accept that”christ has no power”

   • அடப்பாவி, நீ என்ன ஆர்.எஸ்.எஸ். காரனா? சுனாமி வந்து செத்ததுல வேளாங்கன்னி கோவிலுக்கு போனவன்தானேடா அதிகம்பேரு? எதுக்கு எத எழுதறதுங்கற விவஸ்தவேணாம்…லூசு

    • வேளாங்கண்ணி கோயிலுக்கோ பக்கத்துல இருக்கிற அம்மன் இந்து கோயிலுக்கோ, திருட்டுத்தனமா இலவசமா பொம்பளைய தொட்டு பாக்கிற காதல் என்கின்ற பெயரில் அலையும் அப்’பாவிகள்’ கூட்டமோ மொத்தமா சுருட்டி வாரிக்கிட்டு போயிடுச்சி சுனாமி அது போல எத்தனை சுனாமி வந்தாலும் அங்கே போற ‘அந்த’ அப்’பாவி’ கூட்டம் குறையாது. அப்’பாவிகளும்’ குறையப்போவதில்லை.

  • //anyone who confess his own personal and public sin ONLY THEN he/she will be accepted as child of jesus.[whosoever hides his sin will not forgiven].without confession, there is no forgiveness of sin.nahma is confessing her mistakes and ask forgoveness from jesus.she is forgived and received as child of god -there is no doubt.//

   அப்படின்னா நாட்டுல கொலை செய்றவன், கொள்ளை அடிக்கிறவன், கற்பழிக்கிறவன், குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்றவன் இவனுகளெல்லாம் தங்களால் முடிந்தவரை அந்த தப்புகளை செய்துவிட்டு சர்ச்சுக்கு சென்று நான் தான் அந்த செயல்களை செய்தேன் என்னை மன்னியுங்கள் என்று பாவமன்னிப்பு வாங்கிவிட்டு உத்தமர்களாக மாறிவிடலாமா? கொஞ்சம் யதார்த்தமாக யோசியுங்கள். இக்கட்டுரை ஏசுநாதரை தூற்றி எதுவுமே கூறவில்லையே மாறாக கிறிஸ்துவ மதத்தின் பெயரில் நடக்கும் தப்புகளைத் தானே சொல்கிறது. பின்னர் ஏன் ஆத்திரம் உங்கள் கண்ணை மறைக்கிறது?

   • ஒரு நடிகை, ஆன்மிக்த்தில் ஈடுபடுவது பெரிய வியப்பான செய்தி. அவர் இப்போது எப்படியிருக்கிறார்? இப்போது அப்போது போல்வேஇருக்கிறாரா?

    இயேசுவைப்பற்றி மிகச்சிறப்பாக புகழ்கிறார். ஏன், கிறுத்துவ மதத்தில் சேர்ந்து இன்னும் பார்க்கலாமே? அல்லது, தனியாக விவிலியத்தைப்புரட்டிபுரட்டி கிறுத்தவனாகலாமே? இயேசு பிடிக்குமென்றால், ‘நாத்திகன்’ என்று தன்னை அழைத்துக்கொண்டு, ஈ.வெ.ராவின் சீடர் எனபது எப்படி?

    தினகரனைப்போன்றோர் தாங்கள் பணம்பெருக்க ஒரு குறிப்பிட்ட மதத்தை துர்பிரயோகம் பண்ணுகிறார்கள் என்றால் சரி. அதை ஆதாரத்தோடு காட்டவேண்டும். அவர்கள் பணம் ப்றித்தார்கள் என்றால், பாதிக்கப்பட்டோரில் ஆயிரத்தில் ஒருவனாவது நீத்மன்றத்திற்கோ, அல்லது, போலீசுக்கோ போயிருப்பார்கள்? உண்டா?.THESE PEOPLE DIDNT COMMIT SUH A MISTAKE WHAT U MENTIONED ABOVE.

   • ஒருவன் தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பைக் கோருவானேயாகில், நிச்சயம் அவன் மன்னிப்பைப் பெறுகிறான். அவ்வாறு உண்மையில் மனம் மாறுவானேயாகில் அவன் மறுபடியும் தவறு செய்வதில்லை. உங்கள் பிள்ளை தவறு செய்துவிட்டு மனம் வருந்தினால் நீங்கள் அதனை மன்னிப்பதில்லையா? மறுபடியும் அவன் தவறு செய்தால் உங்களின் நிலை என்ன? கடவுளின் மனோனிலையும் இது போன்றது தான். கிறிஸ்தவம் போதிக்கும் தேவன் மன்னிக்கின்ற தேவன். மன்னிப்பது மட்டுமே மன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை. 

  • Mr. selvadurai & Mr. ss for christ

   நடிகைகளையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து விவாதம் செய்யத் தேவையில்லை. அதை விட்டுவிடுங்கள் (ஆனால் இந்த கட்டுரைக்கு இந்த தலைப்பு சரியில்லை). மன்னிப்பதால் மட்டுமே மன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதெல்லாம் சரிதாங்க. அதையே தாங்க நான் கேட்கிறேன், ஒரு பயங்கரவாதி, கொள்ளைக்காரன் போன்றோர் தான் செய்த தப்பை உணர்ந்து கடவுளிடம் (அந்த கடவுள் யார்??? அவரும் நம்மை போல் உயிர் உள்ள மனிதரா??? அப்படி அவர் நடமாடும் மனிதரென்றால் அவர் தன் வாழ்நாளில் தவறே செய்யாதவராக வாழ்பவரா???) மன்னிப்பு கேட்டுவிட்டு அதன் பிறகு அவன் ஒரு தப்பும் செய்யாமல் வாழ்ந்தால் அவன் யோக்கியனா? பத்து பேரை கொன்றுவிட்டு பின்னர் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தொண்டு செய்துவிட்டால் (உதாரணமாக மும்பை குண்டு வழக்கில் சிறை சென்று வந்த சஞ்சய்தத்) அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் ஆகிவிடுவார்களோ? அதற்கு நீங்கள் அவர்கள் எவ்வளவோ கொள்ளை அடித்தார்கள் ஆனால் தினகரன் போன்றோர்களோ அந்தளவுக்கு இல்லை என்று அரசியல்வாதிகள் பேசுவது போல் அவர்களுக்கு பரிந்து பேசுகிறீர்கள்.

   குற்றத்தில் என்னங்க பெரிய குற்றம் சின்ன குற்றம்??? ஒருவன் தன் வறுமையால் பிக்பாக்கெட் அடித்தால் அது பெரிய குற்றம், ஆனால் ஒருவன் தன் வாழ்க்கையில் வசதியடைய மதத்தின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தால் அது சின்ன குற்றமா? அதற்கு பிக்பாக்கெட் அடிப்பவன் எவ்வளோ பரவாயில்லையே! கேட்டால் இந்த நாட்டின் சட்ட திட்டங்களில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி தப்பிப்பதைப்போல் ஆதாரம், கண்ணால் பார்த்த சாட்சி வேண்டும் என்கிறீர்கள்.

   காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சே பார்ப்பான் தனது படுகொலைக்கு ஆதரவாக கிருஷ்ணனின் கீதை உபதேசத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டினான். கோட்சே செயலுக்கும் நீங்கள் சொல்வதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

 3. ‘நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!

  அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!’

  இப்படி கிசுகிசு பாணியில் எழுதுவதுதான் பெரியார் கொள்கையை பிரச்சாரம் செய்வதா?. மோகன் லாசரஸ் கிறித்துவத்தின் பெயரால் ஏமாற்றுகிறார் என்றால்
  அரசு தடை செய்ய வேண்டும்
  என்கிறார். மதமாற்றத்தை ஊக்குவிப்பதை தடை செய்யக் கோரியிருக்கிறாரா? சர்ச்சுகள், கோயில்கள்,மசூதிகளின் சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறாரே. அந்தக் காலத்தில் இதே நாத்திகம் ராமசாமிதிரைப்படம் (2?) எடுத்தார். அதற்கு என்ன பெயர் வைத்தார். அதில்
  எத்தகைய காட்சிகள் இருந்தன.
  அதையெல்லாம் எழுதுவீர்களா?.

  • தோழரே…இது மறைந்த தோழர் நாத்திகம் இராமசாமியால் எழுதப்பட்டது என்ற வகையில் வினவு மட்டுமல்ல நாம் அனைவருமே ‘ஆபாசம்’ என்றால் என்ன என்பதை விளக்கலாம்.. தவிர சினிமாவாகட்டும் அல்லேலூயா ஆவி எழுப்புதலாகட்டும்.. இரண்டுமே ஆபாசம்தான் இதில் இராமசாமி, நக்மா உடலைகாட்டி நடிப்பதை ஆபாசம் என்று குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன், நீங்கள் அது ஆபாசம் இல்லையென்று நினைக்கிறீர்களா?

   • அடப்பாவி, நீ என்ன ஆர்.எஸ்.எஸ். காரனா? சுனாமி வந்து செத்ததுல வேளாங்கன்னி கோவிலுக்கு போனவன்தானேடா அதிகம்பேரு? எதுக்கு எத எழுதறதுங்கற விவஸ்தவேணாம்…லூசு.loosupayala dont u know wt has to be answerd for what.read the passage clearly and answer me otherwise dont write anything or comment anything

    dont misunderstand about what i have written here.i was emphasizing the word DAY in order to answer sangu’s joke[see above].i was not justifying or explaining about sunamy..ok …EDAM ARINTHU PORUL VIZHAKKAVUM…..

    ITS NOT A TRUE STORY…ITS THE GREAT STUPID COWARD FAKE STORY

    http://www.youtube.com/watch?v=nLrvZZ4cttQ&feature=player_embedded
    look at thi s cliff s there any true report of this article

    follow the link and tell me what is the wrong with the reporter….dont believe ths kind of stupid reports http://www.youtube.com/watch?v=V2H-C0lYoC8&feature=related

 4. தலைப்பே தவறு. ‘ஆபாச’ நடிகை!

  நா.இரா. நடிகைகள் உடலைக்காட்டி நடிப்பதை ஆபாசம் எனச்சொல்கிறார் என வினவு சொல்கிறார்.

  பின்னர் உடலை மறைத்தா நடிப்பார்கள்? முழுக்கமுழுக்க மூடியா? எதுவரை திறந்திருந்தால் ஆபாசமில்லை?

  நடிப்பு ஒரு தொழில். சம்பளத்திற்காக செய்கிறார்கள். உலகில் எல்லாமே எப்படியெல்லாமே நடக்கிறது. நடிகைகள மட்டும் பிடிக்கிறார் இவர். நடிகனையும் சொல்ல வேண்டியதுதானே?

  நண்பரே,,,இதற்கும் தலிபானுக்கும் வெகு தூரமில்லை. ஏனென்றால், நீங்கள் கடைசியில் குடும்பபெண்களையும் பிடிப்பீர்கள்!

  ஒட்டு மொத்தமாக, நதியாவின் உடலைக்காட்டி மதம் வளர்க்கிறார்கள் என்று எழுதிவிட்டார். நதியாவின் முன்வாழ்க்கையை நேரில் பார்த்தமாதிரியும் எழுதிவிட்டார்.

  ஒரு நடிகை, ஆன்மிக்த்தில் ஈடுபடுவது பெரிய வியப்பான செய்தி. அவர் இப்போது எப்படியிருக்கிறார்? இப்போது அப்போது போல்வேஇருக்கிறாரா?

  இயேசுவைப்பற்றி மிகச்சிறப்பாக புகழ்கிறார். ஏன், கிறுத்துவ மதத்தில் சேர்ந்து இன்னும் பார்க்கலாமே? அல்லது, தனியாக விவிலியத்தைப்புரட்டிபுரட்டி கிறுத்தவனாகலாமே? இயேசு பிடிக்குமென்றால், ‘நாத்திகன்’ என்று தன்னை அழைத்துக்கொண்டு, ஈ.வெ.ராவின் சீடர் எனபது எப்படி?

  தினகரனைப்போன்றோர் தாங்கள் பணம்பெருக்க ஒரு குறிப்பிட்ட மதத்தை துர்பிரயோகம் பண்ணுகிறார்கள் என்றால் சரி. அதை ஆதாரத்தோடு காட்டவேண்டும். அவர்கள் பணம் ப்றித்தார்கள் என்றால், பாதிக்கப்பட்டோரில் ஆயிரத்தில் ஒருவனாவது நீத்மன்றத்திற்கோ, அல்லது, போலீசுக்கோ போயிருப்பார்கள்? உண்டா?

  அவர்களைப்பற்றி மட்டுமே எழுதவேண்டும். நதியா என்ன செய்தார்? ஆபாச நடிகை என்று சொல்லி இவர் தன்னை ஆபாச எழுத்தர் என்றல்லவா காட்டிவிட்டார்.

  சிறுபிள்ளைத்தனமான எழுத்துகள் என்று சொல்வதுகூட தவறு. சிறுபிள்ளைகளுக்கும் சிலசமயங்களில் பொறுப்புணர்ச்சியுண்டு.

  • /தலைப்பே தவறு. ‘ஆபாச’ நடிகை!

   நா.இரா. நடிகைகள் உடலைக்காட்டி நடிப்பதை ஆபாசம் எனச்சொல்கிறார் என வினவு சொல்கிறார்.

   பின்னர் உடலை மறைத்தா நடிப்பார்கள்? முழுக்கமுழுக்க மூடியா? எதுவரை திறந்திருந்தால் ஆபாசமில்லை?//

   களப்பிரர் தன் வீட்டு பெண்களுக்கு இதையே வழி மொழிவார் என்று நம்புகிறேன்.

   • கண்டிப்பாக. வளர்ந்த பெண்கள் உடல் ஒழுக்கம் பெண்களச் சார்ந்தது. அதை கட்டி ஆட்டி வைக்க எனக்கு உரிமையில்லை.

    சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
    நிறைக்காக்கும் கற்பே தலை.

 5. கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி இதெல்லாம் ஏமாற்று வேலை, பெண்ணை அடிமைப்படுத்தும் தத்துவம் என்று சொன்னவர் பெரியார். ஆகவே நக்மா மீதான குற்ற்சாட்டுகள் அவை உண்மையாக இருந்தாலும் பெரியார் கோட்பாட்டிற்கு எதிரானவை அல்ல என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 6. Hii,
  Ecept Vinavu nobody has the guts to make comments like this on Dinakaran,..I think the name Dinakaran is loaded with corruption,..NAGMA was flirting with SRI SRI RAVI SHANKAR(420!) swamiji and when she couldn’t find anything from him she turned to lasarus,..(What a name These people choose!) .In the name of minority vote banks jaya and karuna don’t think of bothering these people,..

  ONCE AGAIN A BIG APPLAUSE FOR VINAVU FOR PUBLISHING SUCH A TRUE REPORT..

 7. வினவு…..வினவு……அய்யாஆஆஆ……….வினவூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ…! வந்துட்டீங்களாயா? ( எனக்கெல்லாமா செவி சாய்ப்பீர்கள்? நான் என்ன RV- யா அல்லது பாப்பானா அல்லது ‘தோழரா’ ? )

  நாத்திகம் ராமசாமி எப்படி எழுதி உள்ளார் கவனித்ததீராயா? அவர் தினகரனையும் லாசரசையும் பிடி பிடி என பிடித்து உலுக்கி இருந்தாலும், உம்மைப்போல் அறிவீனராய், தனி மனித தவறுக்காக “எதற்கு இந்த கிருஸ்துவ மதம் வெங்காயம்” என்று உம்மைப்போல் விஷத்தை கக்கவில்லை.  

  எனவே நீர் “அஹ்மதியா…” வில் யாரோ  ஒரு அரைவேக்காட்டு இமாம் காஜி இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்றை தான்தோன்றித்தனமாய் செய்த குற்றத்திற்கு அந்தாளை மட்டும் சாடிவிட்டு போகாமல், இஸ்லாத்தை பழித்தாயே. அநியாமாய்  உம்மால் துப்பப்பட்ட இஸ்லாமிய துவேஷத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இப்போதாவது புரிகிறதா?

  ( உமக்கெங்கே புரியப்போகுது? நாத்திகர்கள் யாருக்கு பயப்பட போகிறீர்கள்? மனசாட்சியாவது…. மண்ணாங்கட்டியாவது. தவறை தவறு என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டால் மன்னிப்பு கேட்டு மனம் மாறுவது என்பது சான்றோர் குணம். அதெல்லாம் உம்மிடத்தில் ……ம்ஹூம்! )

 8. பதிவுக்கேன் இப்படி ஒரு தலைப்பு…?அது என்ன ஆபாச நடிகை நக்மா…?

  • நக்மா ஆபாச நடிகை தானே தலைப்பை சரியாதானே போட்டிருக்கிறார்.அவர் நடித்த எல்லா படங்களிலும் ஆபாசமாதானே நடித்திருந்தார்.இல்லையென்று யாராவது மறுத்தால் நிச்சயம் அவர் குருடனாத்தான் இருக்கமுடியும்.

 9. //அநியாமாய் உம்மால் துப்பப்பட்ட இஸ்லாமிய துவேஷத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இப்போதாவது புரிகிறதா? //

  கட்டுரைக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் ?

 10. பட்டாசு மற்றும் வினவு,

  தலைப்பும் ராமசாமியே வைத்திருக்கக்கூடும் என்று எனக்கு தோன்றாமல் போய்விட்டது. அதை வினவு குழுவினர் வைத்ததாக எண்ணியதும் எழுதியதும் என் தவறுதான். பெரியவர் தலைப்பும் ஜூவி ஸ்டைலிலேயே வைத்திருக்கிறார்!

  பட்டாசு, நக்மா படம் கவர்ச்சியாக இல்லை என்ற சொந்தக் கதையை எல்லாம் எதுக்கு கிளறறீங்க? 🙂

  வினவு, என்ன குழப்பறீங்க? உன்னைப் போல் ஒருவன் பதிவு விமர்சனத்துக்கு பதில் பதிவிலேயே இருக்கிறதா?என் முக்கியமான விமர்சனம் கற்பனைக் கதையில், லாபம் மட்டுமே பிரதானமாக கருதி எடுக்கப்பட்ட சினிமாவில், due process இல்லை என்பதை வலிமையான வாதங்கள் மூலம் முன் வைக்கும் நீங்கள் சு. சாமி விஷயத்தில் due process மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று வாதடியத்தில் உள்ள முரண்பாடுதான். இதற்கு பதிவில் பதில் இல்லை. மீண்டும் அழுத்தி சொல்கிறேன் – இதற்கு பதிவில் எந்த பதிலும் இல்லை. சு. சாமி விஷயத்திலும் due process முக்கியம் என்றுதான் நினைத்தோம் என்று நீங்களே கூட சொல்ல மாட்டேர்கள். பதிவில் எங்கே சு. சாமி விஷயத்தில் நாங்கள் நடந்துகொண்டதை இங்கே இப்படி பொருத்தி பார்க்க வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள்? இப்படி நீங்கள் எழுதுவது நான் எழுதியதை படித்தீர்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  ஏன் இரண்டாவது முக்கியமான விமர்சனம் உங்கள் கருத்து படத்தை பற்றி. தொப்பி போட்டால் தீவிரவாதி என்று நினைப்பது தவறு என்று சொல்லும் நீங்கள் உங்கள் கருத்து படத்தில் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? நாமம், குடுமி, பூணூல், பஞ்சகச்சம் இருந்தால் முஸ்லிம்கள் மீது வெறுப்பு கொண்டவர், இந்துத்துவவாதி என்று சொல்லவில்லையா? இதற்கு பதிவில் பதில் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் என்னை ஏமாற்றவில்லை, உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.

  உண்மையில் என் மறுமொழியை படித்தீர்களா?

  // இதனால் உங்களை மதவெறியர் என்று சொல்லவில்லை. ஆனால் ஒருவகையான மதவாதம் உங்களிடம் இருப்பதாக கருதுகிறோம். எங்களது கருத்து தவறு என்றால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவோம். //

  neengaL அஹ்மதியா பதிவில் எழுதிய, தவறான மறுமொழி கீழே:
  // பார்ப்பனியம், முதலாளித்துவம் என்றால் என்ன என்பதற்கு ஆர்.வி அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார். என் தெருவில், வீட்டில், சுடுகாட்டில், தெருக்குழாயில், கோவிலில் என் சாதி மட்டும்தான் இருக்கும் என்பது பார்ப்பனியம். இதில் மற்றவர்கள் பிறப்பில் தாழத்தப்பட்டவர்கள் வந்தால் எனக்கு அவை அசுத்தமாகிறது. இதை தீண்டாமை என்ற பெயரில் நீங்கள் வாதிட்டால் இவை என் சொத்து நான் மட்டுமே பயன்படுத்தும் உரிமை உள்ளது என வாதிடுவேன். ஆக பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டையும் இணைத்தமைக்கு நன்றி ஆர்.வி //
  வீடு தனி உடமை, வீதி பொது உடமை என்று விளக்கி இருந்தேன். இதை மறுக்கிறீர்களா என்ன? வீட்டுக்குள் யாரை அனுமதிப்பது, என் பூஜை அறைக்குள் யார் போகலாம், என் கழிப்பறைக்குள் யார் போகலாம் என் தீர்மானிப்பது என் உரிமை, வீதிக்குள், சுடுகாட்டில், தெருக்குழாயில், கோவிலில் சமூக, சட்ட, அரசு கட்டுப்பாடு என்று விளக்கி இருந்தேன். உங்களுக்கு இந்த கருத்தில் வேறுபாடா?

  // பார்ப்பன இந்து மதம் மட்டுமல்ல, கிறித்தவ, இசுலாம் மதங்களும் இதே வாதத்தைத்தான் வைக்கின்றன. ஆர்.வி பார்ப்பனியத்தைக் காப்பாற்றுவதற்காக இசுலாமிய வெறியர்களை காப்பாற்ற நினைக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சித்தாந்தம் அவ்வளவாக நல்லது இல்லை ஆர்.வி. பரிசீலியுங்கள். மதம் என்று வந்து விட்டால் அனைத்துமதவாதிகளும் ஒன்று சேர்வது வியப்பல்ல. ஒரு வேளை இத்தகைய மதவாதிகள் ஆட்சிக்கு வந்தால் நாத்திகர்களான கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை? //
  “பார்ப்பனீயத்தை” காப்பாற்ற நினைக்கிறேன், “மதவாதி” ஆகியவை ஆட்சேபிக்கிறேன். இதற்கு நீங்கள் பதில் சொல்வது எனக்கு முக்கியம் என்று பல தடவை சொல்லி இருந்தேன். அது கொஞ்சம் courteous ஆகவாவது இருந்துரிக்கும். நீங்கள் அப்துல் கலாம் பார்ப்பனர் என்று பழக்கத்தில் இருக்கும் வார்த்தைக்கு புது அர்த்தம் சொல்வது போல மதவாதி என்றால் ஏதாவது ஒரு புது அர்த்தமாவது சொல்லி இருக்கலாம். கருத்துரிமை காவலன் என்று இங்கே பல முறை கேலி பேசப்படும் “என் போன்ற மதவாதிகள்” ஆட்சிக்கு வந்தால் நாத்திகர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்கிறீர்கள். இது என் மேல் சொல்லப்படும் அவதூறு மட்டுமே. அவதூறுகளை கண்டு சோர்வடையும் யாரும் வினவு தளத்தில் மாற்று கருத்துகளை எழுத முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்தவன். ஆனால் அவதூறுகளை சொல்லிவிட்டு பிறகு அது சரி இல்லை தவறு என்று பல remainderகளுக்கு பிறகும் , எனக்கு ungaL பதில் முக்கியம் என்று பல தடவை சொல்லிய பிறகும் ஒன்றும் சொல்லாமல் வினவு குழுவினர் இருப்பது வியப்பளிக்கிறது. வேலைப்பளு என்று நினைத்தேன், வேண்டுமென்றேதான் பதில் சொல்லவில்லை என்கிறீர்கள்.

  // இந்து மதவெறி என்று எழுதுவது போல துலுக்கன் என்று எழுதுவீர்களா என்றெல்லாம் கேட்கும் அளவு உங்களிடம் மதம் ஒரு இருப்பைக்கொண்டுள்ளது. //
  தவறான விவரம். இந்து மத வெறி இல்லை – கொழுப்பெடுத்த அய்யங்கார் பார்ப்பான் என்று எழுதியது போல கொழுப்பெடுத்த துலுக்கன் என்று எழுதாதது மகிழ்ச்சி தருகிறது என்று சொல்லி இருந்தேன். இந்து மத வெறிக்கு சமமான இஸ்லாமிய மத வெறி என்று நீங்கள் பல முறை எழுதி இருக்கிறீர்கள். இரண்டு equivalent phrase -க்கும் நான் ஆட்சேபனை தெரிவித்ததில்லை. ஆனால் கொழுப்பெடுத்த அய்யாங்கார் பார்ப்பான் என்ற phrase -க்கு ஈடாக சொல்லக் கூடிய எந்த phrase -ஐயிம் நீங்கள் பிராமணர் தவிர வேறு எந்த ஜாதி, மதத்தை சேர்ந்த தவறு செய்பவர்களை பற்றி எழுதி இது வரை நான் பார்த்ததில்லை. ஏன், ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஜீயர் மடம், மற்றும் கேரளா கிருஸ்துவ அமைப்புகளில் நடக்கும் பாலியல் தவறுகளை பற்றி எழுதி இருந்தீர்கள். ஜீயர் மடத்தில் கொழுப்பெடுத்த அய்யங்கார் பார்ப்பான்கள் உங்கள் கண்களில் தென்பட்டார்கள். அதே நேரத்தில் பாலியல் குற்றங்களை செய்ததாக ஒத்துக்கொண்ட பிறகும் எந்த பாத்திரியைய்ம் நீங்கள் கொழுப்பெடுத்த சிலுவைக்காரனாக நீங்கள் characterize செய்யவில்லை. இப்படி நான் அவதானிப்பதில் ஏதேனும் தகவல் பிழை இருக்கிறதா?

  இதையேதான் உ.போ.ஒ. கருத்துப் படத்திலும் செய்கிறீர்கள். தொப்பி போட்டால் தீவிரவாதி என்று நினைப்பது பெரும் தவறு என்று புரிந்த உங்களுக்கு பூணூல் போட்டிருந்தால் ஹிந்துத்துவ ஃபாசிஸ்ட் என்று கருத்துப்படம் வரைவது சிறு தவறாக கூட தெரியவில்லை. இப்படி நான் அவதானிப்பதில் ஏதேனும் தகவல் பிழை இருக்கிறதா?

  இப்போதும் கம்மென்று இருந்துவிடாதீர்கள்! நீங்கள் நான் “பார்ப்பனீயத்தை” காப்பாற்ற நினைக்கிறேன் என்ற அவதூறுக்கு பதில் அளிக்காவிட்டால் பெரிய பிரச்சினை இல்லை. அது என் ஒருவன் பற்றிய விஷயம். ஆனால் வழக்கு, வாய்தா, கேஸ், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மற்றும் சு. சாமிகளின் உரிமைகள் பற்றிய என் விமர்சனத்துக்கு நீங்கள் பதில் அளிப்பது அவசியம். இது உங்கள் கருத்தியல் முரண்பாடு. இதற்கெல்லாம் உ.போ.ஒ. பதிவில் எந்த பதிலும் இல்லை.

  • RV உன்னை போல் ஒருவன் பற்றி அது ‘vigilante’ படம் என்று சொல்கீறீர்கள் சரி ஆனால் கமல்ஜி ‘system’ வெளியே செயல்படும் ஒரு நபர் இல்லியே அந்த படத்தில். அவர் மக்கள் வோட்டு போடா வில்லை என்று போலம்புகிறார் , மக்கள் மும்பையில் கூண்டு வெடித்தால் சமத்தாக இல்லை என்கிறார் , அவருடைய கோபம் எல்லாம் அமைப்புக்கு உள்ளயே உள்ளது. ஒரு ‘vigilante’ கருத்தோடு அப்படத்தை பார்க்கும் நீங்கள் வினவு எழுதிய சு.சாமி கட்டுரையையும் அதே பாணியில் பார்க்கலாமே. மேலும் அப்படித்தின் படியே ரெண்டு பேர் அதாவது கமல்ஜி மற்றும் தீவரவாதி என்று சொல்லப்படும் நபருக்கும் ஒரே விதமான ‘grievance’ தான்.
   //தொப்பி போட்டால் தீவிரவாதி என்று நினைப்பது பெரும் தவறு என்று புரிந்த உங்களுக்கு பூணூல் போட்டிருந்தால் ஹிந்துத்துவ ஃபாசிஸ்ட் என்று கருத்துப்படம் வரைவது சிறு தவறாக கூட தெரியவில்லை//
   முஸ்லிமா இருக்கிற எவன்வென தொப்பி போடலாம் ஆனா ஹிந்து மதத்தில் அப்படி இல்லை என்பது தெரிந்தும் இதை கேட்கறீர்கள். எல்லாம் தெளிவா ஒரு கொழப்பத்தை செய்ய தான் போலும்.

   • பென்,

    கொஞ்சூண்டு அவசரப்படுகிறீர்கள். ஒரு குற்றச்சாட்டை சொன்னால் அதற்கு ஆதாரம் சொல்வது அழகு. சட்டத்தின் முன் செல்லும் ஆதாரங்கள் வேண்டாம், circumstantial evidence , supporting evidence ஏதாவது இருக்க வேண்டாமா? இவர் பொத்தாம்பொதுவாக எழுதி இருக்கிறார். இதை ஏன் நல்ல எழுத்து என்று கொண்டாட வேண்டும்? அவர் நல்ல மனிதராக, போராடும் குணம் உடையவராக, நல்ல கருத்துகளுக்காக போராடியவராக இருக்கலாம். ஆனால் இந்த ஒரு கட்டுரையை மட்டும் வைத்து அவர் எழுத்துத் திறன், சிந்தனைத் திறன் எதையும் கொண்டாடுவதற்கில்லை. இதை ஒத்துக்கொள்ள என்ன தயக்கம்? நாத்திகம் ராமசாமி என்ன உங்களுக்கு holy cow-ஆ?

    // ரு ‘vigilante’ கருத்தோடு அப்படத்தை பார்க்கும் நீங்கள் வினவு எழுதிய சு.சாமி கட்டுரையையும் அதே பாணியில் பார்க்கலாமே. //
    சு. சாமி கட்டுரையை பார்த்த அதே விதத்தில்தான் நான் இந்த படத்தையும் பார்க்கிறேன். சு. சாமி விஷயத்தில் சட்டத்தை தன கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னேன். இங்கேயும் அதேதான். அங்கே எழுதியதை மீண்டும் தருகிறேன். // ஆனால் அதற்காக due process-ஐ விட்டுவிட்டால், // வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும் // என்ற நிலை எடுக்கப்படுவது பெரும் அநீதி என்று வினவு சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு. // Due process சு. சாமி விஷயத்திலும் வேண்டும், இங்கும் வேண்டும் என்பது ஏன் நிலைப்பாடு. Due process சாமி விஷயத்தில் வேண்டாம், ஆனால் ஒரு கற்பனைக் கதையில் வேண்டும் என்பது வினவின் நிலைப்பாடு. நீங்களும் நான் எழுதியதை படிக்கவில்லையோ? கற்பனைக் கதையில் due process -ஐ மதிக்காதவர்கள் ஃபாசிச்ட்கள், நிஜ வாழ்க்கையில் மதிக்காதவர்கள் ?? வினவு தன்னைத் தானே ஃபா சிஸ்ட் என்று நினைக்கிறாரா? இல்லை அவர் சாமி விஷயத்தில் எடுத்த நிலை மாறிவிட்டதா? இந்த கேள்விக்கு பதிவில் பதில் இருக்கிறது என்று அவர் சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது.

    கருத்துப் படத்தை பற்றி உங்கள் நிலை பூணூல் போட்டவர்கள் ஹிந்துத்துவ ஃபாசிச்ட்கள் என்று சொல்வது சரி என்பது போல இருக்கிறது. ஆனால் என் புரிதல் தவறாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதை clarify செய்யுங்களேன்! தவறான புரிதலாக இருந்துவிட்டால் வெட்டி விவாதம் செய்ய வேண்டாமே?

   • RV
    * முன்பே சொன்னது போல் இது ஒரு ‘teaser’. ஒரு அறிமுகம் என்று எடுத்து கொள்ளுங்கள். மேலும் அவர் எழுதுகின்ற எழுத்து அல்லது பாணியை விட எழுதிய விஷயம் தானே முக்கியம். நாத்திகம் ராமசாமியை ஒரு எழுத்தாளர் என்று நான் பார்க்கவில்லை அவருடைய சமூக அக்கறை தான் என்னகு முக்கியம். நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்லி கொண்டு பலர் உண்டு ஆனால் அதனால் என்ன பயன் சாகித்ய அகாடமி விருதை தவிர.
    * due process என்று சொல்கிறீர்கள் அது எல்லாருக்கும் அளிக்க படுமா குறிப்பாக சு.சாமி போன்றவர்கள் அமைப்பின் காவலர்கள் ஆகிவிட்ட நிலையில். இதை நாம் முன்பே பேசியுள்ளோம் சு.சாமி போன்றவர்கள் தான் வன்முறை கொண்ட சுழலளுக்கு மக்களை தள்ளுகிறார்கள். சு.சாமி தாக்கப்பட்டது தப்பு என்றல் அதற்கு முழு முதல் காரணம் இந்த அமைப்பும் அரசும். அதே போல தான் கமல்ஜி அல்லது நசருடின் ஷா அத்திரபடுகிறார்கள் என்றால் அதற்கு காரண கர்த்தாகளான ஹிந்து மத வெறி கும்பலை போட்டு தள்ளட்டும் . அப்பாவி மாத்ரி சிதம்பரம் என்ற பீட சொல்லுதே நக்சலைட் மீது போர் கிடையாதாம் அவர்களும் நம் நாட்டவர் தானம். எல்லாத்தையும் செஞ்சிட்டு என் இப்படி வன்முறை கையால்ராங்கான்னு தெரியலையாம் அந்த பிராணிக்கு.
    * பூணூல் போட்டவர்கள் ஹிந்துத்வா பாசிச்ட்களா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ அவர்கள் ஹிந்துத்வா பாசிச்ட்களுக்கு துணை போகிறார்கள் என்பது என்னோட எண்ணம்.

   • பென்,

    நாத்திகம் ராமசாமி விஷயத்தில் இருவரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறோமோ? இது ஒரு teaser, ட்ரெய்லர் என்கிறீர்கள். ட்ரெய்லர் சுவாரசியமாக இல்லை என்பதைத்தான் நான் ரொம்ப நேரமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். எழுதுகிற கருத்துதான் எனக்கும் முக்கியம். யாரோ சொன்னது போல அண்ணாதுரை மாதிரி அலங்கார வார்த்தைகள் இல்லாவிட்டால் அது எனக்கு ப்ளஸ் பாயின்ட்டாகத்தான் தெரியும். இந்த கட்டுரை ஒரு செய்திக் கட்டுரை. இது புதிய சிந்தனைகள் கொண்டது இல்லை என்பதையாவது ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இந்த தரத்திலோ இதை விட கொஞ்சம் பெட்டராகவோ செய்திக் கட்டுரைகளை ஜூவி, கு. ரிபோர்ட்டர், நக்கீரன் போன்ற பத்திரிகைகள் வெளியிடுகின்றன என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. இதை விட்டுவிட்டு வேறு பேசுவோமா?

    Due process எல்லாருக்கும் அளிக்கப்படுமா, சாமி போன்றவர்கள் விஷயத்தில் இது வேலை செய்யவில்லையே என்று கேட்டிருந்தீர்கள். சரியான கேள்விகள். கேட்கப்பட வேண்டிய கேள்விகள். சிந்தனையை தூண்டும் கேள்விகள். ஆனால் நான் அவ்வளவு தூரம் எல்லாம் போகவில்லை. Due process கற்பனைக் கதையிலும் தேவை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு – அவர்கள் தங்கள் குற்றங்களை தங்கள் வாயாலேயே ஒத்துக்கொள்வதாக ஹிந்திப் படத்தில் ஒரு காட்சி உண்டு – உள்ள உரிமைகள் பறிக்கப்படக்கூடாது, அப்படி பறிப்பவர்கள் ஃபாசிச்டுகள் என்பது வினவு முன் வைக்கும் வலிமையான வாதம். எனக்கு இந்த வாதத்தில் முழு உடன்பாடு. Due process நிஜத்திலும் தேவை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு – அவர்கள் சாமி போன்ற ஆட்களாக இருந்தாலும் சரி – உள்ள உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பது நீண்ட நாட்களாக என் வாதம். அப்படி நான் சொல்லும்போது நடைமுறையில் சாமி போன்றவர்கள் தண்டிக்கப்படுவதில்லை, அதனால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சரி என்று சொல்லும் வினவு ஒரு “காமன் மான்” அதே வாதத்தை சொன்னால் அவரை ஒரு ஃபாஸிஸ்த் என்று அழைக்கிறார். இந்த முரண்பாட்டை விளக்க வேண்டியது அவசியம் இல்லையா? வினவு மட்டும்தான் Due process-இன் ஓட்டைகளை கண்டு சினம் கொள்வாரா? யார் யார் எந்தெந்த விதத்தில் சினம் கொள்ள வேண்டும் என்பதை இவர் நிர்ணயிப்பாரா? கமல் கற்பனைக் கதையிலும், வெறும் லாப நோக்கத்தில் எடுக்கப்பட்ட சினிமாவிலும் மதிக்க வேண்டும் என்று இவர் சொல்லும் விழுமியங்களை இவர் நிஜ வாழ்க்கையில் மதிக்க வேண்டியது அவசியம் இல்லையா? ஒன்று சாமி விஷயத்தில் இவர் எடுத்த நிலை தவறு, இப்போது என் மனம் மாறிவிட்டது என்று சொல்லட்டும். இல்லை காமன் மானுக்கு ஏற்படக்கூடிய frustration புரிந்துகொள்ளக்கூடியதே என்று சொல்லட்டும். இவரது அடிப்படை நிலைதான் என்ன?

    சரி அவரை விடுங்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சு. சாமி விஷயத்தில் எடுக்கப்பட்ட நிலைக்கும் உ.போ.ஒ. விஷயத்தில் எடுக்கப்பட்ட நிலைக்கும் உங்களுக்கு ஏதாவது முரண்பாடு தெரிகிறதா இல்லையா? நீங்கள் இரண்டு விஷயத்திலும் due process மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இல்லை இரண்டு விஷயத்திலும் மதிக்கப்பட வேண்டியதில்லையா? இல்லை சாமி விஷயத்தில் தேவை இல்லை, ஆனால் கற்பனைக் கதையில் கட்டாயமாக தேவையா? இந்த கேள்விக்கெல்லாம் வினவு சொல்வதைப் போல அவர் பதிவில் பதில் ஏற்கனவே இருக்கிறதா?

    // ூணூல் போட்டவர்கள் ஹிந்துத்வா பாசிச்ட்களா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ அவர்கள் ஹிந்துத்வா பாசிச்ட்களுக்கு துணை போகிறார்கள் // என்பதற்கும் தொப்பி போட்டவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா என்று எனக்கு தெரியாது ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு துணை போகிறார்கள் என்று ஹிந்து மதத்தை தூக்கி இஸ்லாமை தாழ்த்தி பேசும் தளங்களில் பேசப்படுவதற்கும் வித்தியாசமே இல்லை. இரண்டும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை.

   • //இந்த தரத்திலோ இதை விட கொஞ்சம் பெட்டராகவோ செய்திக் கட்டுரைகளை ஜூவி, கு. ரிபோர்ட்டர், நக்கீரன் போன்ற பத்திரிகைகள் வெளியிடுகின்றன என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை.//
    சுவாரசியம் மற்றும் விறு விருப்ப இருந்தால் போதும் என்றால் உங்கள் வாதம் மிக சரி.

    //சாமி போன்றவர்கள் விஷயத்தில் இது வேலை செய்யவில்லையே என்று கேட்டிருந்தீர்கள். சரியான கேள்விகள்…//
    உங்கள் புரிதலே தவறு. என்னை பொறுத்த வரையில் வன்முறை தவிர்க்க படவேண்டயது தான் ஆனால் அது திணிக்க படும் பொழுது என்ன செய்வது. எதிர் விளைவை தடுப்பது கடினம்(இதனால் நான் வன்முறைக்கு ஆதரவானவன் என்று பொருள் இல்லை). வினவின் கருத்தியல் நிலவும் அமைப்பை முழுவதும் எதிர்க்கும் ஒன்று. அப்பார்வையில் அவர்கள் எழுத்தில் எந்த முரண்படும் இல்லை.

    //என்பதற்கும் தொப்பி போட்டவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா என்று எனக்கு தெரியாது ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு துணை போகிறார்கள் என்று ஹிந்து மதத்தை தூக்கி இஸ்லாமை தாழ்த்தி பேசும் தளங்களில் பேசப்படுவதற்கும் வித்தியாசமே இல்லை. இரண்டும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை.//

    என்ன பொறுத்த வரையில் எந்த மதமாக இருக்கட்டுமே எதோ எவனோ எப்போவோ சொன்னத நம்பறவன் கொறஞ்ச பட்சம் ஒரு முட்டாள் இல்லன ஒரு சுயநலவாதி. இதுல கண்டிக்க ஒன்னும் இல்லை. அறிவியல் எங்கேயோ போகுது உண்ணும் உங்கள மாதிரி நபர்கள் இத கேவலம் சொன்ன அதையும் கேவளும்ன்னு சொல்லணும் என்றால் என்ன சொல்றது புரியல.
    ‘innate prejudice’ எல்லோருக்கும் இருப்பதாக சொன்னீர்கள் அது பலம் அல்ல பலவீனம். அதை தெரிந்த பின்பும் எனக்கு அது இருக்கு என்று சொல்வதில் என்ன பெருமை என்று எனக்கு புரியவில்லை.

   • பென்,

    // என்னை பொறுத்த வரையில் வன்முறை தவிர்க்க படவேண்டயது தான் ஆனால் அது திணிக்க படும் பொழுது என்ன செய்வது. //
    சரிதான். ஆனால் இது என் கேள்விக்கு பதில் இல்லையே? வினவு சு. சாமி மற்றும் உ.போ.ஒ. விஷயத்தில் இரட்டை நிலை எடுத்திருக்கிறாரா இல்லையா? கற்பனைக் கதைகளிலும் due process தேவை என்றால் நிஜ வாழ்க்கையில் தேவை இல்லையா? நம்மையும் மீறி அப்படி due procees -ஐ தாண்டி போகும் போது நிறைய provocation இருந்தது, due process-இன் அவசியத்தை நாங்கள் உணர்ந்தவர்கள்தான், ஆனால் எங்களால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை, இது தவறுதான் என்று ஒத்துக்கொள்ளும் நேர்மை எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை பறி்ப்பவர்கள் ஃபா சிச்டுகள் என்றால் சு. சாமிகளின் உரிமைகளை பறி்பவர்கல்?

    // என்ன பொறுத்த வரையில் எந்த மதமாக இருக்கட்டுமே…/
    சரியாக புரியவில்லை. அதனால் நான் இப்போது எழுதுவது தவறாக இருக்கலாம். இதை கேவலம் என்று சொன்னால்தான் அதையும் கேவலம் என்று சொன்னேன் என்று நீங்கள் நினைப்பது போல தெரிகிறது. இல்லை. இரண்டு equivalent statements -இல் ஒன்றை (தொப்பிக்காரன்) தவறு என்று சொல்வீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னொன்றை நீங்களே சொல்கிறீர்கள். இரண்டுக்கும் வித்தியாம் இல்லை. என் கண்ணில் இரண்டுமே கண்டிக்கப்பட வேண்டியவை. தொப்பிக்காரன் தீவிரவாதி, இல்லை தீவிரவாதிக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்பவன் என்பது தவறான அணுகுமுறை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி தெரிந்த நீங்களே என்ன சொல்கிறீர்கள்? பூணூல் இருந்தால் அவன் ஃபா சிச்ச்ட், இல்லை பா சிச்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்பவன். தொப்பிக்கு பதிலாக பூணூல்; தீவிரவாதிக்கு பதிலாக ஃபா சிஸ்ட். ஒன்று நீங்கள் சொல்லும் கருத்து, இன்னொன்று உங்கள் கருத்தில் தவறு. எப்படி உங்களால் இதை நியாயப்படுத்த முடிகிறது?

   • வினவு’s old comment. RV forgot to answer this comment:

    நண்பர்கள் ஆர்.வி,புவனேஷ்,

    தென்மாவட்டக்கலவரங்களின் போது தேவர் சாதி வெறி என்றே கண்டித்தோம். இதுபோல வன்னிய சாதி வெறி, கவுண்டர் சாதி வெறி, கொங்கு வேளாளர் சாதி வெறி என எங்கெல்லாம் தாழ்த்தப்ப்ட்ட மக்கள் ஆதிக்க சாதி வெறியர்களால் தாக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் இப்படி பெயர் சொல்லித்தான் கண்டித்திருக்கிறோம். இதற்கு ஆதாரமாய் எமது புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களைக் காட்ட முடியும். பார்ப்பனியம் என்பது வருணாசிரம ஏற்றத்தாழ்வு, சாதி ரீதியிலான உயர்வு தாழ்வு, அதற்கு தோதாய் எழுதப்பட்ட புராணங்கள், சாத்திரங்கள், வேதங்கள், இதனை இன்னமும் கட்டிக்காத்துவரும் சங்கராச்சாரி முதலான மடங்கள், ஆதினங்கள், இத்தகைய அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் மரபையே அரசியல் ரீதியாக கைப்பற்றத் துடிக்கும் சங்க பரிவார இயக்கங்கள் இவற்றின் தொகுப்பையே பார்ப்பனியம் என்று அழைக்கிறோம். ஆனால் பார்ப்பனியத்தின் இந்த அடிமைத்தனத்தை எதிர்த்து வந்த புத்தர், மஹாவீர்ர, சாருவாகம், சாங்கியம், மீமாம்சம், சித்தர்கள் முதலான மரபிலிருந்து சமீபத்திய அம்பேத்கர், பெரியார் வரை உள்ள சுயமரியாதையைக் கற்றுக் கொடுத்த மரபைத்தான் நாம் போற்ற வேண்டும். பார்ப்பனியத்தின் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டேன் என ஒருவன் நினைக்கும்போது அவன் பிறப்பால் பார்ப்பன்னாக இருந்தாலும் பார்ப்பனியம் என்று விளித்தால் வருத்தப்படமாட்டான். சொல்லப்போனால் தான் வெளியேறியதைப் போல பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்றும் வேலையைச் செய்வான். இத்தகைய அணுகுமுறை இருந்தால் பார்ப்பான் அல்லது பாரப்பனியம் என்று விளிக்கும்போது வருத்தம் வராது, மாறாக மக்களை பார்ப்பனியத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோபம் கலந்த கடமை உணர்வு வரும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து விரிவாக கேள்வி பதில் வடிவில் எழுதுகிறோம்.

    நட்புடன்
    வினவு.

    தொப்பி வைச்சவனை பயங்கரவாதி என்று சொல்வதற்கும், பூனூலை சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது

   • தொங்கதுரை,

    வினவின் இந்த கமெண்டை பற்றி அப்போதும் எழுதி இருக்கிறேன். அதே பதிவில் தேடினால் கிடைக்கும். வினவு தளத்தில் மறுமொழிகள் ஏறுக்கு மாறாக அவ்வப்போது மாறிவிடுகின்றன. அதனால் நீங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம்.

    சுருக்கமாக: ப ஜாதீய ஏற்றத்தாழ்வு பெரும் அநீதி. ஆனால் – பார்ப்பான் என்ற சொல்லுக்கு நடைமுறையில் ஒரு பொருள் இருக்கிறது. நாங்கள் இந்த சொல்லை அந்த நடைமுறை பொருளில் பயன்படுத்தவில்லை, நீ நாங்கள் எந்த பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பது கேனத்தனம். வினவு குழுவினரின் தலைமை அகம் சென்னையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வினவு குழுவினர் சென்னையில் இருக்கிறார்கள், சென்னை தலைநகரம் (காபிடல்), அதனால் வினவை நான் காபிடளிச்ட் என்று சொல்வேன், நீங்கள்தான் அதற்கு என்ன பொருள், நான் அதை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வது எத்தனை பைத்தியக்காரத்தனமோ, அத்தனை பைத்தியாக்காரத்தனம். பார்ப்பனீயம் என்ற சொல் ஒரு ஐம்பது வருஷமாக புழக்கத்தில் இருக்கிறது. For obvious reasons, பார்ப்பனீயம் is an offensive word. வார்த்தை. பார்ப்பனீயமும் பார்ப்பானும் தொடர்புள்ள சொற்கள் என்று புரிந்துகொள்ள மொழிப் புலமை வேண்டியதில்லை. இதை ஜாதீயம் என்று சொன்னால் புரியாமல் போகாது. இரண்டாயிரம் வருஷமாக புழக்கத்தில் இருக்கும் பறையன் என்ற வார்த்தையை யாரும் சொல்வதில்லை. நூறு வருஷமாக இருக்கும் ஹரிஜன் என்ற வார்த்தையை விட்டுவிட்டோம். ஏனென்றால் இவை ஒரு குழுவினருக்கு offensive ஆக இருக்கின்றன என்பதால். ஆனால் ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் வந்த வார்த்தையை விடமாட்டோம். சாதித் என்பவர் எழுதி இருந்தார் – ஜாதி வெறி பிடித்து ஜாதி பின்னால் அலையும் ஜாதீய்வாதிகளை பார்ப்பனீயவாதிகள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று. 🙂 வெறி ஜாதி வெறி; அலைவது ஜாதி பின்னால்; அவர்கள் ஜதீயவாதிகள் என்று அவரே சொல்கிறார். ஆனால் அவருக்கு அவர்களை பார்ப்பநீயவாதி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று தெரியவில்லை!

    கவனிக்கவும்: பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனக்கு வினவு குழுவினர் மேல் இருக்கும் மரியாதைக்கு இதை அவர்கள் எதிர்ப்பதும் ஒரு காரணம். ஆனால் அதற்காக அவர்கள் பயன்படத்தும் சொற்களை நான் எதிர்க்கிறேன். இதே கருத்துகளை வேறு சொற்களில் சொல்லலாம், இப்போது பயன்படுத்தும் சொற்கள் reverse casteism பரவ உதவி செய்கின்றன.

    // தொப்பி வைச்சவனை பயங்கரவாதி என்று சொல்வதற்கும், பூனூலை சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது //
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? தொப்பி வைத்தவன் பயங்கரவாதி இல்லை, ஆனால் பூணூல் போட்டவன் பயங்கரவாதி என்றா? அப்படித்தான் தோன்றுகிறது, ஆனால் அதை உறுதி செய்யுஉங்கள். என் புரிதல் தவறாக இருந்தால் வெட்டியாக விவாதம் செய்வானேன்?

   • RV,

    //பார்ப்பான் என்ற சொல்லுக்கு நடைமுறையில் ஒரு பொருள் இருக்கிறது. நாங்கள் இந்த சொல்லை அந்த நடைமுறை பொருளில் பயன்படுத்தவில்லை, நீ நாங்கள் எந்த பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பது கேனத்தனம்.//

    for this கேனத்தனம், vinavu has given answer in that comment itself.
    (கேனத்தனம் என்ற வார்த்தையே ஜாதிய அர்த்தம் உள்ளது-தர்மபுரி பக்கம். அது தெரியாமலேயே பல தோழர்களும், நண்பர்களும் பயன்படுத்துகிறார்கள்.)

    For your reference RV.
    வினவு சொன்னது:
    “”
    பார்ப்பனியத்தின் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டேன் என ஒருவன் நினைக்கும்போது அவன் பிறப்பால் பார்ப்பன்னாக இருந்தாலும் பார்ப்பனியம் என்று விளித்தால் வருத்தப்படமாட்டான். சொல்லப்போனால் தான் வெளியேறியதைப் போல பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்றும் வேலையைச் செய்வான். இத்தகைய அணுகுமுறை இருந்தால் பார்ப்பான் அல்லது பாரப்பனியம் என்று விளிக்கும்போது வருத்தம் வராது, மாறாக மக்களை பார்ப்பனியத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோபம் கலந்த கடமை உணர்வு வரும்.
    “”

    //வினவு குழுவினரின் தலைமை அகம் சென்னையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வினவு குழுவினர் சென்னையில் இருக்கிறார்கள், சென்னை தலைநகரம் (காபிடல்), அதனால் வினவை நான் காபிடளிச்ட் என்று சொல்வேன், நீங்கள்தான் அதற்கு என்ன பொருள், நான் அதை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வது எத்தனை பைத்தியக்காரத்தனமோ, அத்தனை பைத்தியாக்காரத்தனம்//

    வினவு குழுவினர் ஒரு கேப்பிடலிஸ்ட் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், மேலும் வினவு குழுவினரின் பெற்றோர் அனைவரும் பரம்பரையாக முதலாளிகள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் கேப்பிடலிஸ்ட் சிந்தனை, கேப்பிடலிஸ்ட் கட்டமைப்பை, கேப்பிடலிஸ கலாச்சாரத்தை-சுரண்டலை கேப்பிடலிஸம் என்று குறிப்பிட்டு விமர்சிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம், வினவுக்கு ஆத்திரம் வந்தால் அது தவறு. மாறாக, அந்த விமர்சனம் எதை நோக்கிச் செய்யப்படுகிறது, அதன் அடிப்படை காரணம் என்னவென்று புரிந்து வினவு ஆதரித்தால் அது சரி.

    ஆர் வி இது போல இருக்க வேண்டும் என்று வினவு விரும்புவதைத்தான் வினவினுடைய அந்த பின்னூட்டம் காட்டுகிறது.

    //பார்ப்பனீயம் என்ற சொல் ஒரு ஐம்பது வருஷமாக புழக்கத்தில் இருக்கிறது//

    பார்ப்பனியம் என்ற கருத்தாக்கமும், அதனை எதிர்ப்பதும் குறைந்தது 2000 முதல் 3000 வருட பாரம்பரியம் கொண்டது(சாருவாகர்கள்).

    //பார்ப்பனீயமும் பார்ப்பானும் தொடர்புள்ள சொற்கள் என்று புரிந்துகொள்ள மொழிப் புலமை வேண்டியதில்லை.//
    இருந்துவிட்டுப் போகிறது. தேவர் சாதி வெறியை தேவர் சாதி வெறி என்று பேசுவதும், தேவர் என்று குறிப்பிட்டு திட்டுவதும போன்றான நடவடிக்கைகளை, ‘சாதிவெறி எனக்கு இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தேவரின் மனதை பாதிக்கும் என்பதால நிறுத்தி விட முடியாது. தேவர் என்று அடையாளத்திலிருந்து அந்த குறிப்பிட்ட நபர் வெளிவருவதுதான் சரி, அது போலவே பார்ப்பான என்ற அடையாளத்திலிருந்து வெளிவந்த ஒருவனுக்கு அந்த சொல்லை குறிப்பிட்டு விமர்சிப்பது பாதிக்காது. அப்படி வெளிவராத ஒருவனுக்கு அந்த விமர்சனம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து எமக்கு சந்தோசமே.

    //இதை ஜாதீயம் என்று சொன்னால் புரியாமல் போகாது//

    ஜாதீயம் என்று சொன்னால் இந்தியாவின் படிநிலை வடிவ ஜாதீய கட்டுமானத்தை எளிமைப்படுத்தி பேசுவதாகிவிடும். ஏனேனில், ஒடுக்கப்பட்ட, தலித்து மக்களும் சாதியம் பார்க்கிறார்கள். ஆயினும் அவர்களை தலித் என்றே குறிப்பிடுகிறோம். சாதியம் அதன் ஒவ்வொரு படிநிலை கட்டத்திலும் விமர்சிக்கப்பட வேண்டியது. இந்த படிநிலை என்பது நான்கு வர்ணத்தின் விரிவாக்கமே. இதன் தலைமையாக, சித்தாந்தமாக பார்ப்பனியம் உள்ளது. இதன் நேரடி பொருளாதார வடிவமாக சாதிவெறி உள்ளது. சித்தாந்த தளத்தில் பார்ப்பனியமே பிரதானமாக எதிர்க்கப்பட வேண்டியுள்ளது.

    //ரண்டாயிரம் வருஷமாக புழக்கத்தில் இருக்கும் பறையன் என்ற வார்த்தையை யாரும் சொல்வதில்லை. நூறு வருஷமாக இருக்கும் ஹரிஜன் என்ற வார்த்தையை விட்டுவிட்டோம்.//

    பறையன், ஹரிஜன் என்ற சொல்லாட்ல்களுக்கு பின்னால் உள்ள மக்களின் பல்லாயிர வருட வாழ்க்கை அனுபவம் பெருமிதத்திற்குரியது அல்ல. அப்படி பெருமிதம் கொண்டு அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்ளும் சூழலும் இங்கு இல்லை(பசு மாமிசம் சாப்பிடுவது உள்ளிட்ட தலித்திய அடையாளங்களை பெருமிதத்துடன் இன்றைக்கு மேல்தட்டு வர்க்கம் சார்ந்த இடங்களில் வெளிக்காட்ட இயலுமா? பறையடிப்பது போன்றவை இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறது). ஆனால், பார்ப்பனியம் ஒரு பண்பாடாக, சித்தாந்தமாக( மாமிசம் சாப்பிடுவது, கடவுள் வ்ழிபாடு, ஆன்மா குறித்த கோட்பாடு, வர்ண பிரிவினை குறித்த கோட்பாடு) தனது பெருமிதமான அடையாளங்களை எங்கும் எப்போதும் வெட்கமின்றி(தனது பல்லாயிரம் வருட சுரண்டலை மறைத்துக் கொண்டு.) காட்டி வருகிறது. எனவே அதனை அவமானப்படுத்தி, அந்த பண்பாட்டு அடையாளங்களை கடைபிடிப்பது வெட்கப்படவேண்டியது என்று சுட்டும் வகையிலான புரட்சிப் பண்பாட்டு நடவடிக்கைக்கள் தேவைப்படுகின்றன. அத்தகையதே பார்ப்பனியம் என்ற சொல்லாடால். இதே போன்றதொரு நடவடிக்கைதான் தேவர் சாதி வெறி போன்ற சொல்லாடல்களும்.

    //ஏனென்றால் இவை ஒரு குழுவினருக்கு offensive ஆக இருக்கின்றன என்பதால்.//
    அந்த குழுவினரின் அடையாளம் என்ன? எந்த பண்பாட்டு, பொருளாதார அடையாளத்தின் அடிப்படையில் அவர்கள் ஒரு குழுவாக கருதிக் கொள்கிறார்கள்? அத்தகையதொரு அடையாளம் பேணக் கூடிய, ஆதரிக்கக் கூடிய ஒன்றா?

    ஒரு முதலாளிகூட எம்மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை வைக்க இயலும், ஒரு தேவர் சாதி வெறியனும் அவ்வாறெ வைக்க இயலும். அவை குறித்து அக்கறை கொள்பவன் சமூக மாற்றத்திற்கு செயல்படுவது இயலாமல் போய்விடும்.

    //கவனிக்கவும்: பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். //
    அப்படியெனில் அப்படிப்பட்ட ஏற்ற்த்தாழ்வு இந்த ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கியுள்ள பண்பாட்டு, காலாச்சார, பொருளாதார வடிவங்கள் அனைத்தையும் ச்மரசமின்றி எதிர்க்க வேண்டும். உடைத்தெறிய வேண்டும்.

    //ஆனால் அதற்காக அவர்கள் பயன்படத்தும் சொற்களை நான் எதிர்க்கிறேன்.//

    சொற்கள் வெகு நுட்பமானவை அவற்றில்தான் ஆக அதிகப்படியான அரசியலும், வரலாறும், வர்க்கமும், சாதியும் பொதிந்துள்ளது. எனவே இந்தியச் சூழலில் பார்ப்பனியம் என்ற சொல்லாடல், நிலவுகின்ற பார்ப்பனிய கருத்து வன்முறைக்கு எதிர்வினையே. எனவே அது நியாயமானதே.

    //// // தொப்பி வைச்சவனை பயங்கரவாதி என்று சொல்வதற்கும், பூனூலை சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது //
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? தொப்பி வைத்தவன் பயங்கரவாதி இல்லை, ஆனால் பூணூல் போட்டவன் பயங்கரவாதி என்றா? ///

    இல்லை. தொப்பி வைச்சவன் எல்லாம் பயங்கரவாதி என்று சொல்வதற்கு அடிப்படையாக எந்த உண்மையும் இல்லை. ஆனால் பூணூல் போட்டவனை பார்ப்பனியவாதி என்று சொல்வதற்கு வரலாற்று, சாதிய, பொருளாதார அடிப்படை உள்ளது.

   • தொங்கதுரை,

    உங்களுக்கு புரிய வைக்கும் சக்தி எனக்கில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் ஜாதீய சிந்தனையை, ஒரு ஜாதியில் பிறந்தவர்களுக்கு மட்டும் உரிமையாக நினைக்கிறீர்கள் என்றுதான் நீங்கள் பயன்படத்தும் வார்த்தைகள் சொல்கிரணன். அது தவிர பழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை நாங்கள் புதிய அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம், அந்த புதிய அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் அது உங்கள் தவறு என்பது பரம முட்டாள்தனம் என்ற என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. வார்த்தைகளுக்கு நாங்கள் புது அர்த்தம் கொடுக்கிறோம், அப்துல் கலாம் எங்கள் கண்ணில் ஒரு பார்ப்பனர் என்றால் எப்படி விவாதிக்க முடியும்? நீங்கள் சொல்வது அடுத்தவர்களுக்கு எப்படி புரியும்?

    எதோ பிறப்பால் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற புள்ளியிலாவது இசைவு இருப்பது பற்றி சந்தோசம்.

    // ஆனால் பூணூல் போட்டவனை பார்ப்பனியவாதி என்று சொல்வதற்கு வரலாற்று, சாதிய, பொருளாதார அடிப்படை உள்ளது. //
    இங்கே என்ன வார்த்தைக்கு என்னென்ன புது அர்த்தங்கள் உங்கள் அகராதியில் உள்ளன என்று தெரியவில்லை. பூணூல் போட்டவர்கள் ஜாதி பார்ப்பவர்கள், தாங்கள் உயர்ந்தவர்கள், அடுத்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் என்று சொல்ல வருகிறீர்கள் போல. குல்லா போட்டவர்கள் குல்லா போடாத காஃபிர்களை எப்படி நினைக்கிறார்கள், ஜிஹாத் யார் மேல் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று ஏதாவது கருத்து உண்டா? அதற்கான வரலாற்று, ஜாதீய, பொருளாதார, இன்றைக்கும் நடைபெறுகிற விஷயங்களின் அடிப்படை உள்ளதா? எப்படி நீங்கள் கேனத்தனமாக – சரி முட்டாள்தனமாக – பூணூல் போட்டவன் ஜாதி பார்க்கிறான் என்று நினைக்கிறீர்களோ அதே போலத்தான் பிறரும் காஃபிர், ஜிஹாத் போன்ற கருத்துகள் இஸ்லாமில் இருக்கின்றன, அதனால் குல்லா போட்டவன் தீவிரவாதி என்று முட்டாள்தனமாக நினைக்கிறார்கள். இரண்டுமே முட்டாள்தனம்தான். (கேனத்தனம் என்பதற்கு என்ன ஜாதி context? எனக்கு தெரியவில்லையே, கொஞ்சம் சொல்லுங்களேன்!)

    சரி இப்படி வைத்துக்கொள்ளுங்கள். ஷா பானோ தீர்ப்பை மாற்றி அமைக்க சட்டம் கொண்டு வந்த ராஜீவ் காந்தி ஒரு பிற்போக்குவாதி, ஆணாதிக்கவாதி என்று தலைப்பு கொடுத்துவிட்டு, ராஜீவின் மோசமான அணுகுமுறை என்று அவரை கடுமையாக தாக்கிவிட்டு, ராஜீவ் கண்ணாடியில் பார்த்தால் இஸ்லாம் மத அடையாளங்களுடன் – சரி ஒரு குல்லாவுடன் – இருப்பதாக கருத்துப்படம் வரைந்தால் அது உங்களுக்கு இசைவானதாக இருக்குமா? அப்படி உள்ள கருத்துப்படம் குல்லா போட்டவர்கள் எல்லாரும் ஆணாதிக்கவாதிகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தாதா? அது சரியான பிம்பம்தானா?

    கடைசியாக ஒன்று – கேனத்தனம் என்ற வார்த்தை தருமபுரி பக்கம் ஜாதி இழிவு அடிப்படை உள்ளதாக இருக்கிறது, அப்படி இருந்தும் அதை எல்லாரும் தெரியாமல் பயன்படுத்துகிறார்கள் என்று அலுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் பார்ப்பனீயம் என்ற வார்த்தை ஒரு ஜாதியை இழிவு செய்கிறது என்று தமிழ் கூறும் நல்லுலகு எல்லாம் தெரிந்தும் அதைத்தான் பயன்படுத்துவேன், ஐம்பது வருஷங்களாக மட்டுமே இந்த வார்த்தை இருந்தாலும் அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறீர்கள். என்ன லாஜிக்கோ!

   • //உங்களுக்கு புரிய வைக்கும் சக்தி எனக்கில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் ஜாதீய சிந்தனையை, ஒரு ஜாதியில் பிறந்தவர்களுக்கு மட்டும் உரிமையாக நினைக்கிறீர்கள் என்றுதான் நீங்கள் பயன்படத்தும் வார்த்தைகள் சொல்கிரணன். //

    அப்படி எங்குமே சொல்லவில்லையே? எனது பின்னூட்டத்தை நிதானமாக படிக்கவும்

    //
    அது தவிர பழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை நாங்கள் புதிய அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம், அந்த புதிய அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் அது உங்கள் தவறு என்பது பரம முட்டாள்தனம் என்ற என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. //

    புழக்கத்தில் உள்ள வார்த்தை புதியதும் அல்ல, அதன் அர்த்தம் புதியதும் அல்ல என்பதற்குத்தான் வெகு தெளிவாக 2000, 3000 வருடம் முன்பே பார்ப்பனர்களை குத்தி கிழித்த சாருவார்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

    for your kind attention, அந்த சாருவாகர்களும் பிறப்பால் பார்ப்பனர்கள்தான்.

    //
    வார்த்தைகளுக்கு நாங்கள் புது அர்த்தம் கொடுக்கிறோம், அப்துல் கலாம் எங்கள் கண்ணில் ஒரு பார்ப்பனர் என்றால் எப்படி விவாதிக்க முடியும்? நீங்கள் சொல்வது அடுத்தவர்களுக்கு எப்படி புரியும்?//

    அது எங்களது பார்வை. அதற்கு வாதங்கள் முன்வைக்கிறோம். அது சரியா தவறா என்று வாதிப்பதே சரி. அதை விட்டு விட்டு புதுசா ஏதாவது வார்த்தை சொல்கிறார்கள் என்று மறுப்பது உங்கள் வார்த்தைகளில் முட்டாள்தனம்.

    //எதோ பிறப்பால் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற புள்ளியிலாவது இசைவு இருப்பது பற்றி சந்தோசம்.//

    இதை யாருமே கருத்தளவில் மறுப்பதில்லை. நடவடிக்கை? அதுதான் உரைகல்.

    //
    // ஆனால் பூணூல் போட்டவனை பார்ப்பனியவாதி என்று சொல்வதற்கு வரலாற்று, சாதிய, பொருளாதார அடிப்படை உள்ளது. //
    இங்கே என்ன வார்த்தைக்கு என்னென்ன புது அர்த்தங்கள் உங்கள் அகராதியில் உள்ளன என்று தெரியவில்லை.///

    இது புது அர்த்தம் அல்ல. உங்களுக்கு புதிது என்று சொல்லிவிட்டு போங்கள்.

    //
    பூணூல் போட்டவர்கள் ஜாதி பார்ப்பவர்கள், தாங்கள் உயர்ந்தவர்கள், அடுத்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள் என்று சொல்ல வருகிறீர்கள் போல.///
    பூணூல் போட்டும் வெகு இயல்பாக பழகும் பலரையும் எனக்குத் தெரியும். வெகு இயல்பாக பழகிக் கொண்டே குறிப்பான பிரச்சினைகளில் பார்ப்பனிய விசத்தை கக்குபவர்களையும் பார்த்திருக்கிறேன். பூணூல் போடாமலேயே பார்ப்பனியத்தை வெகு நுட்பமாக, வீரியமாக நடைமுறைப்படுத்துபவர்களை பார்த்திருக்கிறேன். பிரச்சினை இதுவல்ல.

    ஆனால்,
    பூணூல் என்ற அடையாளம் சாதியை நிலை நிறுத்தும் ஒரு பண்பாட்டு நடவடிக்கைதானேயன்றி வேறல்ல. ஏனேனில் பூணூல் உயர் சாதியினரின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டது கடுமையான ஒடுக்குமுறையின் மூலம்தான்(ஆசாரி, சைவப் பிள்ளை, கர்நாடாகவின் லிங்காயத்கள்).

    குறிப்பிட்ட சாதியினர் பூணூல் அணியலாம் என்பதன் எதிர்வடிவம்தான் உழைக்கும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வீட்டுப் பெண்கள் தோல் சீலை அணியக் கூடாது என்பது, அதன் எதிர் வடிவம்தான் கருவறையில் பூணூல் போடும் தகுதியுள்ள பார்ப்பான் போக வேண்டும் என்பது, இன்னொரு எதிர் வடிவம்தான் சிதம்பரத்தில் தமிழில் பூசை கூடாது – நான் சிவனின் வாரிசு என்பது, சைவாள் ஒன்லி என்ற வீட்டு வாடகை விளம்பரங்கள், ஆச்சாரம், அனுஸ்டானம் இதர இத்யாதி இழவுகள் எல்லாம். இப்படி பூணூல் என்பது பெரும்பான்மை மக்களை பல்லாயிரம் வருடம் மற்றும் இன்றும் சுரண்டியதன் அடையாளம் எனும் போது. அப்படிப்பட்ட சுரண்டலின் பலனால் இன்று மேன்மையடைந்திருக்கும் சில குறிப்பிட்ட சாதியினர் அந்த சித்தாந்தத்தின் தலைமை பீடமாக அறியப்படும் சாதியினர், அந்த சித்தாந்த்தின் கடைசி, உயர்வான பலன்களின் உரிமைதாரர்களான அந்த குறிப்பிட்ட சாதியினர் – கொஞ்சமும் கூச்ச நாச்ச மின்றி பூணூல் அணிவார்கள் எனில் அது எம்மை அவமதிப்பது ஆகும். அது எம்மீதான வன்முறை ஆகும்.

    அதை சுட்டிக் காட்டினால் திருத்தி கொள்வதே நியாயவான் என்று சொல்லிக் கொள்பவனின் நடவடிக்கையாக இருக்க முடியும்.

    சரி, இவ்வளவு பிரச்சினையுள்ள ஒரு அடையாளம் நமக்கெதற்கு என்று விட்டுச் செல்லலாமே? ஏன் முடியவில்லை?

    அப்படி பூணூலை பெரும் பாரமாக பார்ப்பன சாதியினர் தூக்கி சும்ப்பது ஏன்?

    ஆக, ஒரு பக்கம் பார்ப்பன பண்பாட்டு மேன்மை மேல்தட்டு, உயர் நடுத்தர வர்க்கத்தினரால உயர்வாக மதிக்கப்படுவதும், இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பண்பாட்டு அடையாளங்கள் காட்டுமிராண்டித்தனம், அசிங்கமானது, இழிவானது என்றும் கருதப்படுவதுமான சூழலில், பூணூலின் அரசியல் மிக நுட்பமானது.

    பூணூல் என்ற பார்ப்பனிய பண்பாட்டு அடையாளத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றை மறுக்கிறீர்களா RV? குல்லாவிற்கு அப்படி ஏதேனும் ஒன்று இருந்து அது இன்றும் தொடர்கிறதா? பூணூலின் ஒடுக்குமுறை வரலாறு உண்மை எனில் அதன் தொடர்ச்சியாக இன்றைக்கும் ஒடுக்குமுறை செலுத்துவதை அடையாளப்படுத்தும் வடிவமே அது ஆகும். அப்படி வன்முறைக்கு தார்மீக பலம் கொடுப்பதும்தான் இந்த பூணூல்.

    முஸ்லீம் எல்லாம் குல்லா போடலாம். இந்து எல்லாம் பூணூல் போடலாமா?

    அலுவலகங்களில் பாசத்துடன் மேலே கை போட்டு பூணூலை தடவிப் பார்த்து சாதி கண்டுபிடிப்பவர்களை எனக்கு நன்கு தெரியும்

    //
    கடைசியாக ஒன்று – கேனத்தனம் என்ற வார்த்தை தருமபுரி பக்கம் ஜாதி இழிவு அடிப்படை உள்ளதாக இருக்கிறது, அப்படி இருந்தும் அதை எல்லாரும் தெரியாமல் பயன்படுத்துகிறார்கள் என்று அலுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் பார்ப்பனீயம் என்ற வார்த்தை ஒரு ஜாதியை இழிவு செய்கிறது என்று தமிழ் கூறும் நல்லுலகு எல்லாம் தெரிந்தும் அதைத்தான் பயன்படுத்துவேன், ஐம்பது வருஷங்களாக மட்டுமே இந்த வார்த்தை இருந்தாலும் அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறீர்கள். என்ன லாஜிக்கோ!//

    ஆம், அது ஜாதீய தத்துவமாம் பார்ப்பனியத்தின் உச்சானிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும். எல்லா சாதிகளிலும் உயர்ந்தவனான பார்ப்பன சாதியை தாங்கிப் பிடிப்பவனை உதாசினம் செய்கிறது.

    கேனத்தனம் என்ற வார்த்தை ஜாதி இழிவு அடிப்படை உள்ளது என்று சொன்னேன் எனில் காரணம் அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவன் தான் நினைத்தால் கூட தனது ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தை விட இயலாது. தான் விரும்பினால் தனது கேனைச் சாதியை பெருமையாக விளம்பரப்படுத்த முடியாது. ஆனால், பார்ப்பனனுக்கு?

   • தொங்கதுரை,

    // நீங்கள் ஜாதீய சிந்தனையை, ஒரு ஜாதியில் பிறந்தவர்களுக்கு மட்டும் உரிமையாக நினைக்கிறீர்கள் என்றுதான் நீங்கள் பயன்படத்தும் வார்த்தைகள் சொல்கிரணன். //
    அப்படி எங்குமே சொல்லவில்லையே? //
    விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனா என்று கேட்டானாம். பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதை பார்ப்பனீயம் என்று சொல்வது ஜாதீய சிந்தனையை ஒரு ஜாதியில் பிறந்தவர்களுக்காக ஆக்குவது என்று பொருள் கொள்ளப்படும் என்றுதான் நான் பல நாட்களாக இங்கே கத்திக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஜாதி வெறியை பார்ப்பனீயம் என்றுதான் சொல்லுவேன் என்கிறீர்கள்; பார்ப்பனீயம் என்பது பார்ப்பனன் என்ற ஒரு ஜாதிக்கு மட்டுமே தொடர்புடைய வார்த்தை என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்; ஆனால் உங்கள் சொற்கள் ஜாதீய சிந்தனையை ஓர் ஜாதிக்கு மட்டும் உரிமை ஆக்குகின்றன என்று பொருள்படவில்லை என்கிறீர்கள். அதை கேட்பவர்கள் பார்ப்பனீயம் என்று தொங்கதுரை சொல்வது ஜாதி வெறி, ஆனால் அது எல்லா ஜாதி மக்களுக்கும் apply ஆகும் சொல், அது பார்ப்பன சாதியோடு மட்டுமே சம்பந்தப்பட்ட சொல்லாக இருந்தாலும் அதை மற்ற ஜாதிகளுக்கு apply செய்ய வேண்டியதுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். நான் பயன்படுத்தும் சொல் ஒரே ஒரு சாதியோடு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் நீங்கள் அதை எல்லா சாதிக்கும் extend பண்ண வேண்டும் என்கிறீர்கள். அடப் போங்க சார்! நீங்களும் உங்க லாஜிக்கும்!

    // ுழக்கத்தில் உள்ள வார்த்தை புதியதும் அல்ல, அதன் அர்த்தம் புதியதும் அல்ல என்பதற்குத்தான் வெகு தெளிவாக 2000, 3000 வருடம் முன்பே பார்ப்பனர்களை குத்தி கிழித்த சாருவார்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். //
    அதன் அர்த்தம் 2000 வருஷம் முன்னால் வந்ததா? ரொம்ப சரி. அதைப் பற்றி நான் ஏதாவது பிரச்சினையை கிளப்புகிறேனா என்ன? 2000 வருஷம் முன்னால் பார்ப்பனீயம் என்று வார்த்தை பிரயோகத்தை காட்டுங்கள் சார்! என்ன பிரச்சினை, என்ன எழுதுகிறேன் என்று படிக்க முயற்சியாவது செய்யுங்கள்! பிரச்சினை கருத்து இல்லையே, அதை விவரிக்க பயன்படும் வார்த்தை மட்டும்தானே? இது கூட புரியாமலா இத்தனை நாள் நான் எழுதியதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை வர வர நான் என்ன எழுதுகிறேன் என்று படிக்காமலே கத்தும் கும்பல் பெருகி வருகிறதா? ஒன்று சார்வாகனின் எழுத்தில் பார்ப்பனீயம், பிராமணீயம் என்ற வார்த்தைகள் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தி இருப்பதை காட்டுங்கள்; இல்லை அடுத்த முறையிலிருந்தாவது நான் என்ன எழுதுகிறேன் என்று ஒரு முறைக்கு இரு முறையாக படியுங்கள்!

    திரும்பவும் சார்வாகன் வேதங்களை தாக்கினார், வேதங்கள் உருவாகிய பார்ப்பனர்களைத் தாக்கினார் என்று quote கொடுக்காதீர்கள். பார்ப்பனீயம் இல்லை அதற்கு சமமான வார்த்தை எங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது? அது பிறப்பினால் ஏற்றத்தாழ்வு என்ற அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அதை காண்பியுங்கள்.

    விவாதங்களை நாம் வார்த்தைகளின் மூலமாகவே முன் வைக்கிறோம். Clearly, an implicit agreement on the meaning of the words used is a prerequisite for such a discussion. வார்த்தைகளின் அர்த்தங்களை பற்றி இசைவு இல்லை என்றால் நாம் விவாதிப்பதை விட வெங்காயம் உரிக்கலாம். ஏற்கனவே மறுமொழிகள் மூலம் விவாதிப்பதில் தட்டச்சு பிழைகள், விட்டுப்போகும் வார்த்தைகள், நேரக் குறைவு ஆகியவற்றால் குழப்பங்களை ஏற்படுகின்றன. நீங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தையும் புதிதாக வரையறுப்போம், இந்த வாக்கியத்தில் பார்ப்பான் என்று சொன்னது பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் இல்லை, நாங்கள் சொல்வது ஒரு மாதிரி uber-பார்ப்பான், நாங்கள்தான் ஏற்கனவே அப்துல் கலாமை அப்படி ஒரு பார்ப்பான் என்று சொன்னோமே சொல்வது பரம முட்டாள்தனம். இது இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நடப்பது இல்லை. டாக்டர் ருத்ரன் genotype என்றால் வளர்ப்பு முறை என்று புதிய வரையறை வகுத்தார்; அதற்க்கு வினவு சப்பைக்கட்டு கட்டினார்; யாரோ ஒருவர் fact என்றால் என்ன என்று கேட்டார். வெறுமே வார்த்தை விளையாட்டு விளையாடிக்கொண்டிருப்பது பெரும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

    // //எதோ பிறப்பால் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்ற புள்ளியிலாவது இசைவு இருப்பது பற்றி சந்தோசம்.//
    இதை யாருமே கருத்தளவில் மறுப்பதில்லை. நடவடிக்கை? அதுதான் உரைகல். //
    இதில் ஏதாவது sub-text வைத்திருக்கிறீர்களா?

    // பூணூல் என்ற அடையாளம் சாதியை நிலை நிறுத்தும் ஒரு பண்பாட்டு நடவடிக்கைதானேயன்றி வேறல்ல….//
    சார், எழுதியதை படிக்க முயற்சியாவது செய்யுங்கள். இதே விஷயத்தை குல்லா பற்றியும் சொல்லலாம். அதை மதத்தை நிலைநிறுத்தும் ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகவும் பார்க்கலாம், ஒரு தனி மனிதனின் உடை சுதந்திரம், ஒரு harmless குழு அடையாளம் என்றும் பார்க்கலாம். குல்லா சுட்டும் மதம் போர் நடத்தி அடுத்த மதத்தினரை ஒழித்திருக்கிறது. அவர்கள் கோவில்களை தகர்த்திருக்கிறது. காஃபிர்களை இரண்டாம் தர குடிமகன்களாக பார்த்திருக்கிறது, பார்க்கிறது. இவை அத்தனைக்கும் வரலாற்று, சமூக பொருளாதார அடையாளங்கள் இருக்கின்றது. ஜிசியா வரி, கஜினி முகமது, மாலிக் கஃபூரின் படையெடுப்புகள், இஸ்லாமிய சட்டம் உள்ள நாடுகளில் முஸ்லிம்கள் அற்றவர்களை இரண்டாம் தர குடிமகன்களாக இன்றும் நடத்துவது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி வரலாற்று, சமூக, பொருளாதார கூறுகள் இருப்பதால் குல்லா போட்டவன் எல்லாம் தீவிரவாதி, ஆணாதிக்க வாதி, மற்ற மதத்தினரை இழிவாக, இரண்டாம் தர மனிதனாக நினைப்பவன்/நடத்துபவன் என்று பொருள் கொள்வது தவறு. குல்லாவை தனி மனிதனின் உடை சுதந்திரம் என்றும் ஒரு harmless குழு அடையாளம் என்றும் கொள்வதுதான் சரி. அதே போலத்தான் பூணூலும். அது ஒரு ritual அடையாளம், ஒரு harmless குழு அடையாளம் என்றுதான் கொள்ள வேண்டும். அமேரிக்காவில் என் வீட்டு வாசலில் நான் ஸ்வஸ்திகா கோலம் போட்டால் அடுத்த வீட்டுக்காரன் என்னை நாஜி ஆதரவாளனோ என்று சந்தேகமாத்தான் பார்ப்பான். அதற்காக எனக்கு அப்படி கோலம் போட உரிமை இல்லையா என்ன? (சந்தேகப்பட வேண்டாம், எனக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது.) என் உடலில் நான் என்ன செய்துகொள்கிறேன் என்பதில் அடுத்தவர் தலையிடலாம் என்பதுதான் ஃபாஸிஸம். அப்புறம் “I am the boss!” என்று நான் ஒரு டி-ஷர்ட் அணிவேன். நீங்கள் நீ பாஸ் என்றால் நான் என்ன வேலைக்காரனா, அந்த மாதிரி டி-ஷர்ட்டே வரக்கூடாது என்பீர்கள். // அது எம்மை அவமதிப்பது ஆகும். அது எம்மீதான வன்முறை ஆகும். // என்று சொன்னால் அதையும் கேட்டுக்கொள்ள வேண்டுமா? என் உணவு, என் உடை, என் வீடு மாதிர் விஷயங்களை உங்கள் sensibilities-படிதான் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் நாடார் வீட்டு பெண்கள் ரவிக்கை போடக்கூடாது என்று சொன்னதற்கும் என்ன வித்தியாசம்? என் நகைகள், என் பூணூல், என் அரைஞான் கயிறு, என் குடுமி, என் கிராப்ப், என் மொட்டைத்தலை ஆகியவற்றில் neengaL என்னென்ன அர்த்தம் கண்டுபிடிக்கிறீர்கள் என்பது என்னை எப்படி கட்டுப்படுத்த முடியும்?

    // சரி, இவ்வளவு பிரச்சினையுள்ள ஒரு அடையாளம் நமக்கெதற்கு என்று விட்டுச் செல்லலாமே? ஏன் முடியவில்லை? //
    அது அவர்கள் சொந்த விஷயம். அதை அவர்கள் உங்கள் கழுத்தில் போட்டு இழுக்காத வரைக்கும் அதைப் பற்றி கேட்க நீங்கள் யார்? இவ்வளவு பிரச்சினையுள்ள, ஒரு ஜாதியில் பிறந்தவர்களை இழிவுபடுத்துகிற பார்ப்பனீயம் என்ற வார்த்தை நமக்கெதற்கு என்று விட்டு செல்லலாமே? இத்தனைக்கும் இது உங்கள் சொந்த விஷயம் மட்டும் இல்லை, இது பொது விஷயம். மற்றவர்களோடு பேச பயன்படுத்தும் சொல். உங்கள் மனதுக்குள்ளேயே ஒலிக்கும் சொல் இல்லையே!

    // ஆக, ஒரு பக்கம் பார்ப்பன பண்பாட்டு மேன்மை மேல்தட்டு, உயர் நடுத்தர வர்க்கத்தினரால உயர்வாக மதிக்கப்படுவதும், இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பண்பாட்டு அடையாளங்கள் காட்டுமிராண்டித்தனம், அசிங்கமானது, இழிவானது என்றும் கருதப்படுவதுமான சூழலில், பூணூலின் அரசியல் மிக நுட்பமானது. //
    தாழ்த்தப்பட்ட சாதியினரின் பண்பாட்டு அடையாளங்கள் காட்டுமிராண்டித்தனம், அசிங்கமானது, இழிவானது? இதை நான் சொன்னேனா? இங்கே இது வரையில் யாராவது சொன்னார்களா? எனக்கு தெரிந்து இந்த தளத்திலேயே இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டதில்லை. நான் இங்கே வரும் மறுமொழிகளில் பாதியாவது படித்திருப்பேன். எதோ வாய்க்கு வந்தபடி பேசுவதா? ஒன்று நான் சொன்னேன் என்பதை காட்டுங்கள்; இல்லை இதை இங்கே ஏன் எனக்கு சொல்கிறீர்கள் என்பதை விளக்குங்கள். சும்மா ஏதாவது உளறிக்கிட்டு!

    // ூணூல் என்ற பார்ப்பனிய பண்பாட்டு அடையாளத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றை மறுக்கிறீர்களா RV? //
    இல்லை, நிச்சயமாக இல்லை. ஆனால் அது இன்று வெறும் ritual, harmless அடையாளம் மட்டுமே என்று சொல்கிறேன்.

    // குல்லாவிற்கு அப்படி ஏதேனும் ஒன்று இருந்து அது இன்றும் தொடர்கிறதா? //
    இருந்தது, நிச்சயமாக இருந்தது. இன்னும் இஸ்லாமிய அரசியல் சட்டம் உள்ள நாடுகளில் தொடரவும் செய்கிறது. ஜிசியா வரி கட்டியவர்கள் குல்லா போட்டவர்களா? இப்போதும் இருக்கிறது – பாகிஸ்தான், அரேபியா போன்ற இஸ்லாமிய அரசியல் சட்டம் உள்ள நாடுகளில். அதைத்தான் போன மறுமொழியில் எழுதி இருந்தேன். ராஜீவ் காந்தி ஷா பானோ விஷயத்துக்கு கருத்துப் படம் எப்படி வரைய வேண்டும் என்றும் கேட்டிருந்தேன். என்ன எழுதப்படுகிறது என்று படிக்காமலே பேசுகிரார்போல இருக்கிறது!

    // பூணூலின் ஒடுக்குமுறை வரலாறு உண்மை எனில் அதன் தொடர்ச்சியாக இன்றைக்கும் ஒடுக்குமுறை செலுத்துவதை அடையாளப்படுத்தும் வடிவமே அது ஆகும். அப்படி வன்முறைக்கு தார்மீக பலம் கொடுப்பதும்தான் இந்த பூணூல். //
    இது உங்கள் கருத்து. பூணூலை பற்றிய உங்கள் பார்வை. இன்றைய ஜாதீய வன்முறைக்கு பூணூல் தார்மீக பலம் கொடுப்பதாக நினைக்கிறீர்கள். இந்த பார்வைக்கு பின்னால் இருக்கும் தார்மீக கோபத்தை நான் மதிக்கிறேன். ஆனால் பூணூல் இன்றைக்கும் ஒடுக்குமுறை செலுத்துவதாக சொல்வதை மட்டும் வெறும் வெட்டி வாதம். பார்பனர்களில ஜாதி பார்ப்பவர்கள் எக்கச்சக்கம் உண்டு – எல்லா சாதியினரையும் போல. கவுண்டர்களில் 1% ஜாதி பார்க்கிறார்கள், தேவர்களில் 2%, பார்ப்பனர்களில் மட்டும் 50% என்ற நிலை நிச்சயமாக இல்லை. ஜாதி உணர்வு பூணூலை தாண்டிப் போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. அது இன்றைய இந்தியர்களிடம் எல்லா சாதியினரையும் பாத்திருக்கிறது. கோசாம்பி போன்றவர்கள் இந்தியாவில் பரவலாக ஏற்கனவே இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வுகள் classical ஹிந்து மதம் எல்லா இடங்களிலும் பரவியபோது அதற்குள் assimilate ஆகிவிட்டது என்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஜாதி உணர்வுகளுக்கு பார்ப்பனர்களை மட்டும் பொறுப்பாளி ஆக்குவது – அதுவும் இன்றைய பார்ப்பனர்களை பொறுப்பாளி ஆக்குவது பெரும் அநீதி. புரிந்து கொள்ளக்கூடிய அநீதி – இத்தனை காலம் நடந்த அநியாயங்களுக்கு யார் பொறுப்பு என்று கேள்வி கேட்பது அவசியமே – ஆனால் அநீதியே! அதுவும் அவர்களில் பலர் இன்றைக்கும் அணியும் பூணூலை பொறுப்பாளி ஆக்குவது பெரியார் சிலையை உடைப்பது, முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு செருப்பு மாலை போடுவது போன்ற symbolic சிறுபிள்ளைத்தனம் மட்டுமே.

    // ஆம், அது ஜாதீய தத்துவமாம் பார்ப்பனியத்தின் உச்சானிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும்…//
    இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்? கேனத்தனம் என்பது கேனை என்ற ஜாதியை இழிவுபடுத்துகிறது என்கிறீர்கள். (இப்படி ஒரு ஜாதி இருக்கிறதா? இது வரை தெரியாது. நீங்கள் confirm செய்தால் கேனத்தனம் என்ற வார்த்தையை விட்டுவிட வேண்டியதுதான்.) பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதை பார்ப்பனீயம் என்ற சொல்லால் சுட்டுவது பார்ப்பன ஜாதியை இழிவுபடுத்துகிறதே, அதை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி. கேட்ட கேள்வியை விட்டுவிட்டு என்னென்னமோ பேசுகிறீர்கள்! சரி பரவாயில்லை, இப்போதாவது பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்களை இழிவுபடுத்தும் சொல்லை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று சொல்லுங்கள்!

   • thanks to thongathurai for this clear explanation for the people who are learning communism like me.try to write an like this issues in communism class (vinavu said)so that we can get more knowledge.at same time my sincere thanks to rv not accepting the thoughts which has been explained by thingadurai….

  • RV,

   //பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதை பார்ப்பனீயம் என்று சொல்வது ஜாதீய சிந்தனையை ஒரு ஜாதியில் பிறந்தவர்களுக்காக ஆக்குவது என்று பொருள் கொள்ளப்படும் என்றுதான் நான் பல நாட்களாக இங்கே கத்திக் கொண்டிருக்கிறேன்.//

   //பார்ப்பனீயம் இல்லை அதற்கு சமமான வார்த்தை எங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது? அது பிறப்பினால் ஏற்றத்தாழ்வு என்ற அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அதை காண்பியுங்கள்.//

   நீங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை வெறுப்பவர். சரிதானே? பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பது வெறும் கருத்தளவில் கணிக்கப்படுவதல்ல. அது நடவடிக்கைகளின் மூலம் தான் அறியப்படுகிறது. தலையிலிருந்து பாதம் வரை என்று பிறப்பால் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது பார்ப்பனீய அடிப்படையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த முறை எப்படி உருவானது? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த சாதி வழக்கம் இன்றும் தொடர்வதற்கு யார் காரணம்?

   பின்வருவனவற்றை நோக்கவும்:

   George L. Hart (http://en.wikipedia.org/wiki/George_L._Hart), a professor of Tamil language at the University of California, Berkeley published a paper named ‘Early Evidence for Caste in South India’.

   In that he said “As important as the Brahmins and the Brahmanical religion were, they were not the creators of the caste system in South India. They influenced the system profoundly, no doubt, but caste is found in most of its manifestations before the Brahmins became prominent.”

   And also he stated that “The modern form of the caste system seems to have been the result of changes introduced by the Brahmins and by kings who fostered the Hindu system. These changes included the creation of a group at the opposite pole from the untouchables — the Brahmins — and the endowing of the Brahmins and their gods with auspicious power that had hitherto been reserved for the king. The effect of this was to accentuate differences between the various caste groups (differences that had probably been pronounced originally only among the low castes) and to make a much more elaborate hierarchy of the whole system. The untouchables seem to have become lower than they had been before, and to have been surrounded with more restrictions — no doubt as a result of the fact that king was no longer so dependent upon them (as he now had the Brahmins and their Vedic rites), and that the small king was no longer as important as he once was, having been replaced by the newer gods with their Brahmin attendants. In other words, the function of the untouchables no longer included serving kings — a function that must have enhanced their low status — but was limited to such mundane and undignified tasks as cutting hair, washing clothes, and catching fish.”

   (If you wants to read George Hart’s paper please read at: http://www.tamilnation.org/caste/hart.pdf)

   டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கூற்று:

   “தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பனியத் தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஓர் பக்கம் நிறுத்தி மற்றொருபக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போல்தான் தோன்றுவர்”. (‘காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?’ என்ற நூலிலிருந்து – பக்கம் 215).

   டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூறும் பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் ஐந்து – (1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள், (2) சூத்திரர்கள், தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை, (3) சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை, (4) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் உயர்நிலையோ ஆற்றலோ பெறுவதற்குத் தடை, (5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொருள் சேர்ப்பதற்குத் தடை, பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது.

   பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை வெறுக்கும் ஆனால் பார்ப்பனம் சார்ந்திருக்கும் உங்களைப் போன்றோர்களுக்கு இழிவாக உள்ளதாக உணர்கிறீர்கள், அந்தச் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள். அப்படித்தானே? ஆனால் இப்படி பிறப்பால் ஏற்றத்தாழ்விற்கு அது இந்நாள் வரை தொடர்வதற்கும் பார்ப்பனீய தத்துவமே காரணமாக இருக்கும் பொழுது பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பதற்கு ‘பார்ப்பனீயம்’ என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல?

   • லெனின்,

    ungaL மறுமொழி வார்த்தைகளின் முக்கியத்துவத்தை எனக்கு நன்றாக உணர்த்துகிறது.உங்கள் கேள்வி இதுதானே? //பிறப்பால் ஏற்றத்தாழ்விற்கு அது இந்நாள் வரை தொடர்வதற்கும் பார்ப்பனீய தத்துவமே காரணமாக இருக்கும் பொழுது பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பதற்கு ‘பார்ப்பனீயம்’ என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல? //
    இது உங்களுக்கு ஒரு closed loop மாதிரி தெரியவில்லையா? நீங்கள் பார்ப்பனீய தத்துவம்தான் காரணம் என்று ஆரம்பிக்கிறீர்கள்; பிறகு அந்த தத்துவத்தை பார்ப்பனீயம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது என்று கேட்கிறீர்கள்! உங்களுக்கு பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கோட்பாடு பார்ப்பனீயம் என்றுதான் அழைக்கப்படவேண்டும் என்ற முன்முடிவு இருக்கிறது. அப்புறம் இந்த கோட்பாடு பார்ப்பநீயம்தானே, அதை வேறு எப்படி அழைப்பது என்று கேட்கிறீர்கள்!

    சரி முடிந்தால் இந்த இரண்டைப் பற்றி யோசியுங்கள்.
    1. பார்ப்பனீயம் என்ற சொல் கடந்த 50 வருஷமாகத்தான் புழக்கத்தில் இருக்கிறது. அதற்கு முன் பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கோட்பாட்டை எப்படி அழைத்தார்கள்?
    2. நாளைக்கு வினவு தளத்தில் global search and replace செய்து பார்ப்பனீயம் என்ற சொல்லை ஜாதீயம் என்று மாற்றி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள், இல்லை இங்கே புதிதாக வரும் யாராவது வினவு என்ன சொல்கிறார், இந்த ஜாதீயம் என்றால் என்ன, ஒன்றும் புரியவில்லையே என்று குழ்ம்புவார்களா?

    மற்றபடி ஜார்ஜ் ஹார்ட்டின் கட்டுரை சுட்டிக்கு நன்றி! அதை இன்னும் படிக்கவில்லை…

   • ///திரும்பவும் சார்வாகன் வேதங்களை தாக்கினார், வேதங்கள் உருவாகிய பார்ப்பனர்களைத் தாக்கினார் என்று quote கொடுக்காதீர்கள். பார்ப்பனீயம் இல்லை அதற்கு சமமான வார்த்தை எங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது? அது பிறப்பினால் ஏற்றத்தாழ்வு என்ற அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அதை காண்பியுங்கள்.//

    // Hence it is only as a means of livelihood that Brahmans have established here
    all these ceremonies for the dead, — there is no other fruit anywhere.
    The three authors of the Vedas were buffoons, knaves, and demons.
    All the well-known formulae of the pandits, jarphari, turphari, etc.
    and all the obscene rites for the queen commanded in Aswamedha,
    these were invented by buffoons, and so all the various kinds of presents to the priests,
    while the eating of flesh was similarly commanded by night-prowling demons.///

    // There is no heaven, no final liberation,
    nor any soul in another world,
    Nor do the actions of the four castes,
    orders, or priesthoods produce any real effect..//

    //Whereas most systems of Hindu philosphy advocated caste system, the Carvakas denounced the caste-system calling it artificial, unreal and hence unacceptable. “What is this senseless humbug about the castes and the high and low among them when the organs like the mouth, etc in the human body are the same?” (Prabodhachandrodaya, 2.18)//

    இங்கு சார்வாகர்கள் பிராமன் என்று சொல்லுவதைத்தான் நாங்கள் பார்ப்பனியம் என்று சொல்கிறோம். பிராமனிசம் என்று சொல்லலாமா ஆர்வி?

    வெகுதெளிவாக இங்கு குறிப்பிடப்படுவது அன்றைக்கு இருந்த மத சடங்கு, சம்பிரதாய, சட்டங்கள் எல்லாம் பார்ப்பனனுடைய வாழ்வை மேன்மையடையச் செய்யவே என்பது ஆகும். இதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம்.

    சாதிய அடுக்கில் பார்ப்பனனே யாருக்கும் தான் அடிமையில்லை என்கிற நிலையில் இருக்கிறான். பார்ப்பனனுக்க்கும் பிறருக்கும் உள்ள வேறுபாட்டையும் குறிப்பிட்ட பிற்பாடும் விடிய விடிய என்று பழமொழி பேசுகிறீர்கள். உண்மையில் அது உங்களுக்குத்தான் பொருந்தும்.

    தொங்கதுரை.

   • தொங்கதுரை,

    // //திரும்பவும் சார்வாகன் வேதங்களை தாக்கினார், வேதங்கள் உருவாகிய பார்ப்பனர்களைத் தாக்கினார் என்று quote கொடுக்காதீர்கள். பார்ப்பனீயம் இல்லை அதற்கு சமமான வார்த்தை எங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது? அது பிறப்பினால் ஏற்றத்தாழ்வு என்ற அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? அதை காண்பியுங்கள்.//

    சார்வாகன் பிராமணர்கலை தாக்கினார் என்று மேற்கோள் கொடுக்கிறீர்கள். அதை கொடுஉத்தால் போதாது, சார்வாகன் பார்ப்பனீயம் என்ற சொல்லை எங்கே பயன்படுத்தி இருக்கிறார் என்று காட்டுங்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறேன். நான் சொன்னகை மேற்கோளும் காட்டி இருக்கிறீர்கள். ஆனாl நீங்கள் காட்டிய சார்வாகன் மேற்கோளில் பார்ப்பனீயம் என்ற சொல், இல்லை அதற்கு இணையான சொல் எங்கே இருக்கிறது? சார்வாகன் பிராமணர்கள் என்று குறிப்பிடுகிறார். வேதங்கள், etc.வை கடுமையாக தாக்குகிறார். ஆனால் பார்ப்பனீயம் என்ற சொல் எங்கே? உங்களுக்கே தெரிகிறது, அவர் பார்ப்பனீயம் என்று சொல்லவில்லை என்று. ஆனாலும் பிராமணர்களை தாக்குகிறார், அதனால் இந்த கருத்துகளை பார்ப்பனீயம் என்று சொல்லலாமா என்று கேட்கிறீர்கள்!

    தொங்கதுரை, அடுத்தவர் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்க முயற்சியாவது செய்யுங்கள். எதை செய்தால் போதாது என்று குறிப்பிட்டேனோ அதையே செய்துவிட்டு போதுமா என்று கேட்கிறீர்கள். ஏன் என் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? இனி மேல் நீங்கள் பார்ப்பனீயம் என்ற சொல் எப்படி பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது, அதே சொல்லை இன்றும் பயன்படுத்த வேண்டியது ஏன் அவசியம் என்று விளக்கினால் பேசுகிறேன். இல்லை என்றால் ஆளை விடுங்கள். ஒரே விஷயத்தை சொல்லி சொல்லி அலுத்துபோகிறது.

   • //சார்வாகன் பார்ப்பனீயம் என்ற சொல்லை எங்கே பயன்படுத்தி இருக்கிறார் என்று காட்டுங்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறேன். நான் சொன்னகை மேற்கோளும் காட்டி இருக்கிறீர்கள்///

    நான் கொடுத்த பின்னூட்டத்தை முழுமையாக படித்து எதிர்வினை செய்யலாம்ஆர்வி.

    //இங்கு சார்வாகர்கள் பிராமன் என்று சொல்லுவதைத்தான் நாங்கள் பார்ப்பனியம் என்று சொல்கிறோம். பிராமனிசம் என்று சொல்லலாமா ஆர்வி? //

    பிராமனிசம் என்று சொல்லலாமா ஆர்வி?

    சார்வாகர்கள் வெகு தெளிவாக பார்ப்பனர்களையே குற்றம் சாட்டுகிறார்கள். அதனை பார்ப்பனிசம் அல்லது பிராமனிசம் என்று அழைக்காமல் வேறு பெயரிட்டு அழைப்பேன் என்பது நேர்மையானது அல்ல.

    பிராமனிசம் என்று ஏன் அழைக்கக் கூடாது என்பது அடுத்த கட்ட வாதம்.

  • நண்பர் RV,

   நாளை (11-10-2009) கிட்டத்தட்ட சுமார் 300000 ஈழத் தமிழர்களை முகாம்களிலிருந்து விடுவிக்கக் கோரியும், அவர்களின் துயர் துடைக்க ஐ. நா வே பொறுப்பேற்க வேண்டும் எனவும், தமிழீழத்தில் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்திடவும், தமிழீழ மக்கள் அவர்களின் அரசியல் வருங்காலத்தை முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் எனவும் இந்திய அரசை வலியுறுத்தி கட்சத்தீவை தமிழர்களுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி நாளை சென்னையில் நடக்கவிருக்கும் பேரணியில் கலந்து கொள்ளவிருப்பாதால் நாளை இரவு நான் உங்கள் கேள்விகளுக்கும் எனது சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறேன்.

   தோழமையுடன்,

   லெனின்

   • வெறி இல்லை, வெற்றி! வர வர இந்த கூகிள் தளம் செய்யும் ரவுசு தாங்க முடியவில்லை. Due process என்று அடித்தால் பே ஃப்ரோ செச்ஸ் என்று வருகிறது, வெற்றி என்றால் வெறி என்று வருகிறது! யாரோ தமிழ் தெரிந்த குறும்புக்காரர் அங்கே வேலை செய்கிறார் என்று நினைக்கிறேன். 🙂