Sunday, August 14, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?

ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?

-

டிரீம்-லைனர்
போயிங் டிரீம் லைனர் (படம் நன்றி www.thenhindu.com)

ர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.

27 விமானங்களை வாங்குவதற்காக ஏர் இந்தியா செலவழிக்கும் மொத்த தொகை $4 பில்லியன் (ரூ 22,000 கோடி). 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ்ஸூடனான போட்டியில் பின்தங்கியிருந்த அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்காக இந்திய அரசு பெரிய மனது வைத்து 27 விமானங்களுக்கான ஆர்டரை கொடுத்திருந்தது. நியாய விலையில் உணவு பொருட்கள் வினியோகித்தல், பெட்ரோல் மானியம் போன்ற பிற செலவுகள் ஆயிரம் பாமர மக்களுக்கு இருந்தாலும் மேன் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு விமானப் பயணம் செய்வதை வசதியானதாக்குவதற்காக தொலைநோக்குடன் அந்த முடிவை எடுத்திருந்தது இந்திய அரசாங்கம்.

போயிங் நிறுவனத்தின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்றபடி விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

செப்டம்பர் 2008-ல் வந்திருக்க வேண்டிய முதல் விமானம் வடிவமைப்பு, உற்பத்தி பிரச்சனைகளால் தாமதம் ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் தாமதமாக வந்து சேர்ந்திருக்கின்றது. போயிங் ஏற்கனவே தயாரித்து நிறுத்தியிருக்கும் இன்னும் இரண்டு விமானங்கள் அடுத்த சில வாரங்களில் வந்து சேரும். போயிங் நிறுவனத்தின் திட்டப்படி மார்ச் 2013க்குள் மொத்தம் 8 விமானங்கள் ஏர்இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விடும்.

இந்த விமானங்களால் ஏர் இந்தியாவுக்கு என்ன பலன் என்று தோன்றினால்,  ‘இந்த அழகான டிரீம்லைனர் விமானங்களின் மூலம் ஏர்இந்தியாவின் இமேஜ் மாறி விடும்’ என்கிறார் போயிங் நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பகுதி தலைவர் தினேஷ் கேஸ்கர். ஏர் இந்தியாவின் இமேஜ் டேமேஜாகியிருப்பதால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் மேட்டுக்குடியினருக்கு அது நிச்சயம் ஆறுதலை கொடுக்கும்.

போயிங், ஏர்பஸ் நிறுவனங்கள் உயிர் பிழைத்தலுக்கு இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு விமானம் விற்பதைத்தான் நம்பியிருக்கின்றன. ‘கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில்தான் விமான பயணத் துறை வேகமாக வளர்ந்திருக்கிறது’ என்கிறார் கேஸ்கர்.  உலக அளவில் இந்தியாவும் ஒரு பொருளாதார வல்லரசுதான் என்பதை நிலைநாட்ட போயிங், ஏர்பஸ் மட்டுமின்றி இன்னும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஆர்டர்கள் கொடுப்பதற்கு இந்திய அரசு அயராமல் உழைக்கிறது.

787 விமானத்தின் நவீன வசதிகளில் விமானத்துக்கு உள்ளே போடப்படும் வெளிச்சத்தை பயணிகளின் மூடுக்கு தகுந்தவாறு மாற்றும் தொழில் நுட்பம்,  பயணிகள் கண்டு களிக்க பெரிய எல்சிடி திரையுடனான தொலைக்காட்சி பெட்டிகளும் அடங்கும்.

இத்தகைய நவீன தொழில் நுட்பம் இந்தியாவுக்கு கிடைத்திருப்பதை நினைத்து யாருக்கு மகிழ்ச்சி?

ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் வந்து போகும் மக்கள், பீகாரிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன் பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் படை எடுக்கும் தொழிலாளர்கள் போன்றவர்களின் பயணங்கள் நரக வேதனையாக இருக்கும் போது ஏர் இந்தியா எனும் மேட்டுக்குடி இந்தியர்களுக்காக நட்டத்தில் நடத்தப்படும் நிறுனவத்துக்கு மக்கள் பணம் அள்ளி வீசப்படுகிறது.

இதையும் படிக்கலாம்

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. //ஏர் இந்தியா எனும் மேட்டுக்குடி இந்தியர்களுக்காக நட்டத்தில் நடத்தப்படும் நிறுனவத்துக்கு மக்கள் பணம் அள்ளி வீசப்படுகிறது.//

  ஏர் இந்தியா எனும் மேட்டுக்குடி இந்தியர்களுக்கான நிறுவனம் அல்ல… மேட்டுக்குடி இந்தியர்கள் யாரும் ஏர் இந்தியாவில் வெளினாடு போவதில்லை…அவ்ர்களின் விறுப்பம் கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் பிரிட்டீஸ் ஏர்வேஸ் என நீளும்….வளைகுடாநாடுகளுக்குச் சென்று படாதபாடுபடும் மேட்டுக்குடி அல்லாத மக்கள் தான் ஏர் இந்தியா எனும் மொக்கை விமானத்தில் பயனிகின்றனர்….மங்களூரில் உயிர் விட்டவர்கள் யாரும் மேட்டுக்குடியினர் அல்ல…

  • வினவப் பொருத்தவரை நல்ல சட்டை யார் போட்டாலும் மேட்டுக்குடிதான்…. கீழ்குடின்னு சொல்லணும்னா யாரும் சட்ட இல்லாமல் கீழ் உடுத்த சின்ன துண்டு இருக்கணும்.. குடியிருக்க பொறம்போக்குல ஒரு குடிச மட்டும் இருக்கணும்…குடிக்க கூழ் தவர எத குடிச்சாலும் அவங்களும் மேட்டுக்குடிக்கு வந்துருவாங்க.. நல்ல புரிஞ்சுங்க சாரே…

 2. விமானக் கம்பெனி நடத்துவது அரசின் வேலையே அல்ல. ஏர் இந்தியா- வை உடனே தனியாருக்கு விற்றுவிடவேண்டும். வருடா வருடம் பட்ஐட்டில் அதற்கு அழப்படுகிற 5000 கோடி ரூபாயாவது மிச்சமாகும்.

  ஆனால் இதையும் வினவு எதிர்க்கும் என்பதுதான் முரண்!!

 3. அரசு பணத்தில் விமானங்களை வாங்கிய பின், நட்டத்தில் ஒடிக்கொண்டு இருக்கும் ஏர் இந்தியாவை அடி மாட்டு விலைக்கு ஜெட் ஏர்வேஸுக்கோ, ஸ்பைஸ் ஜெட்நிறுவனத்துக்கோ, விற்றுவிட்டு, சைடில் பணம் பண்ணக்காத்திருக்கிறது சோனியாவின் காங்கிரஸ் அரசு.

 4. Why is Indian Government operating airlines? The Government should sell the Airlines and start top class schools and Universities. Also they should make all the hospitals Top class. The important function of the Government is to educate their citizens and take care of the health of their citizens. Why is Indian Government engaged in all other activities except Schools and hospitals

  • Why is Indian Government engaged in all other activities except Schools and hospitals//
   What we have is not people’s government. It is a Corporate government. People will make it happen what you asked, immediately after they take the political power.

 5. வினவின் தோழர்கள் விமானம் எல்லாம் ஏறுவதில்லை. அதனாலே யாரும் விமானங்களில் ஏறி மறுகாலனியாக்கத்திற்கும், ஏகாதிபத்தியங்களின் பொருளாதார சுரண்டல்களுக்கும், (இப்படியான இன்னும் சில சொற்களை சேர்த்துக்கொள்ளவும்), இடம்கொடுக்க வேண்டாம் என்று கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க