Monday, January 13, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கதஞ்சையில் சமஸ்கிருத வாரம் அரசு சுற்றறிக்கை நகல் எரிப்பு

தஞ்சையில் சமஸ்கிருத வாரம் அரசு சுற்றறிக்கை நகல் எரிப்பு

-

மோடி அரசின் சமஸ்கிருத வார கொண்டாட்டம் – மனுதர்மத்தை நிலைநாட்டும் சதித் திட்டம்

என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த ஜூலை 25 அன்று காலை 10.30 மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சூத்திரன் படிப்பதை தடுப்பது மனுநீதி!

சமஸ்கிருதம் படிக்கச் சொல்லி அடிப்பது மோடிநீதி!

சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபு எனத் தொடரும் மோடிஅரசின் இந்து மதநெறி பண்பாட்டுத் தாக்குதலை முறியடிப்போம்!

என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கோரும் அரசு சுற்றறிக்கை எரிக்கப்பட்டது.

மகஇக  மாநில இணைச்செயலாளர் தோழர் காளியப்பன் தனது உரையில்,  “பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டு பேரும் தனியார் மய, தாராள மய, உலகமய கொள்கையை அமல்படுத்துகின்றனர். பா.ஜ.க அரசு வெளிப்படையாக இந்து மதவெறியை தூண்டி விட்டு பார்ப்பன பாசிசத்தை வளர்ப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சாவூர்
தொடர்புக்கு : 9443157641, 9443188285

  1. It’s the opinion from Cho of Thuglak…….try to understand the message and don’t look at the caste of the person who wrote it.
    ஸம்ஸ்க்ருதம் பாரதத்தின் தொன்று தொட்ட பழமையான மொழிகளில் ஒன்று. இரண்டு இதிஹாசங்கள், பல புராணங்கள், காளிதாஸன் போன்ற கவிஞர்களின் காவியங்கள், நாடகங்கள் மட்டுமில்லாமல், ஜோதிட சாஸ்திரம், ஆயுர்வேதம் என்ற மருத்துவ சாஸ்திரம் போன்றவையும் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன. ஆரியபட்டா, பாஸ்கராச்சாரியா போன்றவர்களின் விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளும், அதன் மூலமாக உலகிற்குக் கிட்டிய பாடங்களும் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன. கம்ப்யூட்டருக்குக் கூட மிகவும் உதவக் கூடிய மொழி இது என்று ஜெர்மானிய அறிஞர்கள் பாராட்டும் மொழியாகவும் ஸம்ஸ்க்ருதம் இருக்கிறது. இந்தியாவின் எல்லா மொழிகளுடனும் அதற்குத் தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் ஹிந்து பத்திரிகையில் வெளியான கடிதத்தில் ஒருவர், ‘மற்ற எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதைக் குறிப்பிட்ட மக்களுடனோ, நிலப் பரப்புடனோ பார்க்கக் கூடிய தன்மை இருக்கும். ஆனால் ஸம்ஸ்க்ருதத்திற்கு அம்மாதிரியான எல்லைகள் கிடையாது. ஏனென்றால், அது உலகளாவிய மொழி’ என்றிருக்கிறார். ஸம்ஸ்க்ருதம் என்றால் ஏதோ ஒரு இனத்திற்கோ, பூமியின் ஒரு பகுதிக்கோ சொந்தமானது என்று அர்த்தம் கிடையாது. ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம். இந்த மொழிக்கு ஒரு சிறப்புச் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு யாரோ ஸம்ஸ்க்ருத வாரம் கொண்டாடும் யோசனையை முன் வைத்திருக்கிறார்கள். அதை மத்திய அரசும் ஏற்றிருக்கிறது. இப்படி குறிப்பிட்ட வகையில் கொண்டாட்டம் நடத்தினால்தான் ஸம்ஸ்க்ருதத்திற்குப் பெருமை கிட்டும் என்றோ, அதனால் அம்மொழிக்குப் பலன் கிட்டும் என்றோ யாரும் சொல்ல முடியாது. கொண்டாடினாலும், கொண்டாடா விட்டாலும் அதன் அழியாத இலக்கியச் செல்வங்கள் அப்படியேதான் இருக்கப் போகின்றன. அதற்கு கொண்டாட்டம் என்பது எவ்வளவு தூரம் அவசியம் இல்லையோ, அதே மாதிரி கொண்டாட்ட எதிர்ப்பும் அவசியமில்லை. ஸம்ஸ்க்ருத வாரத்தைக் கொண்டாடினால் அதனால் வேறு எந்த மொழியும் பாதிக்கப்பட்டுவிடாது. தமிழ்நாட்டிலேயே கூட சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதத்திற்குப் பதிலாக பிரெஞ்ச் வாரம், ஜெர்மன் வாரம் என்று ஏதாவது மொழியின் வாரத்தைக் கொண்டாடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தால் அதற்கு எதிர்ப்பே இருந்திருக்காது. அயல்நாட்டு மொழிகளுக்குக் கொடுக்கும் மரியாதையை ஸம்ஸ்க்ருதத்திற்கு நம்மால் கொடுக்க முடியவில்லை என்றால், அதனால் ஏற்படக் கூடிய நஷ்டம் ஸம்ஸ்க்ருதத்திற்கு அல்ல.

    • //கம்ப்யூட்டருக்குக் கூட மிகவும் உதவக் கூடிய மொழி இது என்று ஜெர்மானிய அறிஞர்கள் பாராட்டும் மொழியாகவும் ஸம்ஸ்க்ருதம் இருக்கிறது.///

      இது விவாதத்துக்குரிய விடயமே தவிர எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. இது உண்மையானால் சமஸ்கிருதத்தை பொதுவான கம்ப்யூட்டர் மொழியாக பரீட்சார்த்தரீதியில் கூட எந்த நாடும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லையே, ஏன்? Research and Development க்கு அதிகளவு நிதியை ஒதுக்கும் ஜெர்மனி போன்ற மேலைநாடுகள் கூட, சமஸ்கிருதத்தை கம்ப்யூட்டர் பொது மொழியாக்க இன்னும் ஏன் முயற்சிக்கவில்லை? எந்த ஜெர்மானிய அறிஞர்கள் அப்படிக் கூறினார்கள் என்பதைக் கூற முடியுமா? உண்மையில் கம்ப்யூட்டருக்கு மிகவும் உதவக் கூடிய மொழி சமஸ்கிருதம் என்பது 1985 இல் Rick Briggs என்பவர் the Association for the Advancement of Artificial Intelligence titled Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence. என்ற கட்டுரையில் குறிப்பிட்டது தான். அதைத்தான் கருப்பு, கறுப்பாய் வாந்தி எடுத்தது எப்படிக் காகம், காகமாக வாந்தி எடுத்ததாக மாறியதோ அதே போன்று இந்தியாவில் சமக்கிருதவாதிகள் ஊதிப் பெருக்கி யாரோ ஜெர்மானிய அறிஞர்கள் பாராட்டுவதாகக் கதைகட்டி விட்டார்கள். இதைப் பற்றிய பல விவாதங்கள் இணையத்தளங்களில் நடைபெற்றன. அந்தக் கட்டுரையை எழுதியவர் நாசாவில் விஞ்ஞானியாக இருப்பவர் என்பதால் அவரது கருத்து, ஏதோ நிரூபிக்கப்பட்டு, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக எண்ணிக் கொண்டே இந்தியாவிலுள்ள சோ ராமசாமி போன்ற சமக்கிருதவாதிகள் Orgasm அடைந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை. அதன் அடிப்படையில் பல இந்தியர்கள் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டார்கள், அவ்வளவு தான்.

      //ஸம்ஸ்க்ருதம் பாரதத்தின் தொன்று தொட்ட பழமையான மொழிகளில் ஒன்று.///

      சமக்கிருதம் பழமையான மொழிகளில் ஒன்றே தவிர சமஸ்கிருதம் மட்டும் தான் பழமையான மொழி அல்ல. பல பழமையான மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று என சமக்கிருதவாதியான சோ ராமசாமியே ஒப்புக் கொள்கிறார். பின்னர், எதற்காக சமக்கிருத்ததுக்கு மட்டும் ஒரு சமஸ்கிருதவாரம் கொண்டாப்பட வேண்டும். அதனால் தான் தமிழர்கள் எதிர்க்கிறார்கள்.

      // இரண்டு இதிஹாசங்கள், பல புராணங்கள், காளிதாஸன் போன்ற கவிஞர்களின் காவியங்கள், நாடகங்கள் மட்டுமில்லாமல்,///

      தமிழிலும் ஒன்றல்ல, ஐந்து காப்பியங்களும், இலக்கியங்களும் எல்லாமும் உண்டு, இந்தியாவில் முதல் முதலாக உருவாகிய மதச்சார்பற்ற கவிதைகள் சங்கப் பாடல்கள்தான். சங்கப்பாடல்களும் பத்துப்பாட்டும், காளிதாசனுக்கு இருநூறு வருடங்களுக்கு முற்பட்டவை.

      // ஜோதிட சாஸ்திரம், ஆயுர்வேதம் என்ற மருத்துவ சாஸ்திரம் போன்றவையும் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன. ஆரியபட்டா, பாஸ்கராச்சாரியா போன்றவர்களின் விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளும், அதன் மூலமாக உலகிற்குக் கிட்டிய பாடங்களும் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன. ///

      தமிழிலிருந்த பல ஆராய்ச்சி நூல்களும், ஓலைச் சுவடிகளும் பார்ப்பனர்களால் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் தமிழிலிருந்த மூல ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டு விட்டன. தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியவை மீண்டும் தமிழுக்கு வடமொழியிலிருந்து பார்ப்பனர்களால் தமிழ்மண்ணுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிமுகப்படுத்தப்பட்டன. சமஸ்கிருதத்தைத் கற்பதற்கு சாதாரண மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த அறிவும் நூல்களும், கல்வி, அறிவு சம்பந்தமான தொழில்களும் பார்ப்பனர்களின் கைகளில் இருக்க வேண்டுமென்பதற்காகச் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல்கள் சதிகள் அவை..

      // இந்தியாவின் எல்லா மொழிகளுடனும் அதற்குத் தொடர்பு இருக்கிறது. ///

      செத்துப் போன மொழியால் எப்படி தனித்திருக்க முடியும் , அதனால் தான் எல்லா மொழியுடனும் சில, பல சொற்களாகக் கலந்து விட்டது.

      //சமீபத்தில் ஹிந்து பத்திரிகையில் வெளியான கடிதத்தில் ஒருவர், ‘மற்ற எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதைக் குறிப்பிட்ட மக்களுடனோ, நிலப் பரப்புடனோ பார்க்கக் கூடிய தன்மை இருக்கும். ஆனால் ஸம்ஸ்க்ருதத்திற்கு அம்மாதிரியான எல்லைகள் கிடையாது. ஏனென்றால், அது உலகளாவிய மொழி’ என்றிருக்கிறார். ///

      ஹிந்து பத்திரிகையில் எழுதுகிறவர் அல்லது ஹிந்து பத்திரிகை ஒருவரின் கடிதத்தை வெளியிடுகிறது என்றால் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடுநிலையான மொழி வல்லுனர்கள் மட்டும் தானா ஹிந்து பத்திரிகைக்கு கடிதம் எழுதுகிறார்கள்? தமிழெதிரிச் சமக்கிருதவாதிகள் தான் ஹிந்து பத்திரிகைக்கு எழுதுகிறார்கள்.

      //ஸம்ஸ்க்ருதம் என்றால் ஏதோ ஒரு இனத்திற்கோ, பூமியின் ஒரு பகுதிக்கோ சொந்தமானது என்று அர்த்தம் கிடையாது. ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம்.///

      அப்படியானால் இந்த நன்றாகச் செய்யப்பட்ட, தூய்மையான மொழி உருவாக்கப்பட முன்னர் பூமியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஊமையாக இருந்தார்களா அல்லது Sign language மூலம் பேசிக் கொண்டார்களா?

      //அதற்கு கொண்டாட்டம் என்பது எவ்வளவு தூரம் அவசியம் இல்லையோ, அதே மாதிரி கொண்டாட்ட எதிர்ப்பும் அவசியமில்லை.///

      எவன் வேண்டுமானாலும் கொண்டாடி விட்டுப் போகட்டும், எங்களுக்குத் தேவையில்லை நாங்கள் கொண்டாட மாட்டோம் என்கிறார்கள் தமிழர்கள். அதெல்லாம் அவசியமில்லை என்றால் சோ ராமசாமி எதற்காக இவ்வளவு பெரிய பதிலெழுதினார்?

      //அயல்நாட்டு மொழிகளுக்குக் கொடுக்கும் மரியாதையை ஸம்ஸ்க்ருதத்திற்கு நம்மால் கொடுக்க முடியவில்லை என்றால், அதனால் ஏற்படக் கூடிய நஷ்டம் ஸம்ஸ்க்ருதத்திற்கு அல்ல.///

      சமஸ்கிருதத்துக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் எதிர்ப்பதற்குக் காரணமே தமிழ்நாட்டிலுள்ள சோ ராமசாமி போன்ற பார்ப்பனச் சமக்கிருதவாதிகள் தான். அவர்கள் தமிழின் செலவில், தமிழை இழிவுபடுத்தி சமக்கிருதத்தை உயர்த்துவதால் தான் தமிழர்கள் சமக்கிருதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை பார்ப்பனர்கள் எதிர்க்காதிருந்தால், தமிழ்நாட்டில் சமக்கிருதம் மட்டுமல்ல, எந்த மொழியுமே தமிழுக்கு அடுத்தததாகத் தான் இருக்க முடியும் என்பதை சமக்கிருதவாதிகளும், தமிழெதிரிகளும் ஏற்றுக் கொள்ளும்வரை இந்த எதிர்ப்பு நீடிக்கும், நீடிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் மத்தியில் சமக்கிருத எதிர்ப்பு இல்லாமைக்குக் காரணம் அங்குள்ள பார்ப்பனர்கள் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதை ஒருபோதும் எதிர்த்ததில்லை என்பதால் தான்.

      • “தமிழ்நாட்டிலேயே கூட சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதத்திற்குப் பதிலாக பிரெஞ்ச் வாரம், ஜெர்மன் வாரம் என்று ஏதாவது மொழியின் வாரத்தைக் கொண்டாடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தால் அதற்கு எதிர்ப்பே இருந்திருக்காது.”

        உங்கள் விளக்கம் என்னவாக இருக்கும் என்று நான் மிகவும் எதிர்பார்த்த இந்தப் பகுதியை மட்டும் விட்டு விட்டீர்களே !

        • இதற்குக் கூட என்ன காரணம் என்பது யாரும் சொல்லித் தான் தெரிய வேண்டுமா? பிரெஞ்சுக் காரரோ அல்லது ஜெர்மன் காரரோ தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழை விட தங்களின் மொழி உயர்ந்தது, அல்லது ஜெர்மனும், பிரஞ்சும் தான் உலகின் மூத்த மொழிகள், அதிலிருந்து தான் தமிழ் வந்தது என்று கூறுவது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் எனும்போது அதை எதிர்த்தும் அல்லது தமிழ்நாட்டில் தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களிலேயே தமிழுக்கு இடமில்லை, ஜெர்மன் அல்லது பிரஞ்சு மொழயில் தான் பூசை செய்ய வேண்டும் என்று கூறுவார்களேயானால், தமிழர்கள் ஜெர்மன், பிரஞ்சு மொழிகளுக்கும் எதிராகப் போர்க் கோடி தூக்கியிருப்பார்கள். நான் முன்பு கூறியது போல் தமிழ்நாட்டுத் தமிழரக்ள் சமக்கிருதத்தை எதிர்ப்பதற்குக் காரணம் சமக்கிருத்தையும், தமிழையும் ஒப்பிட்டு தமிழைத் தாழ்த்தும் பார்ப்பன சமக்கிருதவாதிகள் தான். வடமொழியை வளர்த்து விட்டவர்கள் தமிழர்கள், ஆனால் எங்கிருந்தோ வந்து எங்கள் வீட்டுச் சோற்றைத் தின்று வளர்ந்த வேலைக்காரி, எங்களின் அம்மாவை விடத் தான் உயர்ந்தவள் என்றால் நாங்கள், அந்த வீட்டுப்பிள்ளைகள் பொறுத்துக் கொள்வோமா? அது தான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேலாவது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

  2. // தமிழிலிருந்த பல ஆராய்ச்சி நூல்களும், ஓலைச் சுவடிகளும் பார்ப்பனர்களால் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் தமிழிலிருந்த மூல ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டு விட்டன. தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கியவை மீண்டும் தமிழுக்கு வடமொழியிலிருந்து பார்ப்பனர்களால் தமிழ்மண்ணுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிமுகப்படுத்தப்பட்டன. சமஸ்கிருதத்தைத் கற்பதற்கு சாதாரண மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த அறிவும் நூல்களும், கல்வி, அறிவு சம்பந்தமான தொழில்களும் பார்ப்பனர்களின் கைகளில் இருக்க வேண்டுமென்பதற்காகச் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல்கள் சதிகள் அவை.. //

    அடேங்கப்பா ! படிக்கவே பயங்கரமா இருக்கே ! 🙂

    • தமிழெதிரிப் பார்ப்பன சமக்கிருதவாதிகள் உண்மையை மறைப்பதற்காக இப்படித்தான் “அடேங்கப்பா ! படிக்கவே பயங்கரமா இருக்கே” என்றெல்லாம் நடிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 🙂

      பார்ப்பனர்கள் தமிழிலிருந்து பல நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்து விட்டு தமிழிலிருந்த மூல நூல்களை அழித்து விட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழர்களின் சதிராட்டத்தை (பரதநாட்டியம்) தமிழரான மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடமிருந்து கற்று விட்டு, அதற்குப் பரதம் என்ற பெயரையுமிட்டு, அந்த பரதம் என்ற சொல்லுக்கு வேறு கருத்தும் கற்பித்து வடநாட்டு பரதமுனிவரையும் தொடர்பு படுத்தி தமிழர்களின் சதிராட்டத்தை அதாவது தமிழர்கள் வடக்கிலிருந்து இரவல் வாங்கியதாகவும் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம் தான் தமிழர்களின் நாட்டியத்துக்கு முன்னோடி என்று இக்காலத்தில் கலாசேத்திரப் பார்ப்பனர்களே கதை விடுகின்றனர் என்றால், அக்காலத்தில், தமிழர்கள் ஆட்சியும் அதிகாரமும் இழந்திருந்த காலத்தில், தமிழர்களுக்கு மனுதர்ம அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டிருந்த காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்குமென்பதை நினைத்துப் பார்க்கவும்.

      பரத முனிவரின் நாட்டிய சாத்திரம் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட நாட்டிய நன்னூலின் மொழிபெயர்ப்பு நூல். மூல நூல் அல்ல. தமிழில் நாட்டிய நன்னூலை வடமொழியில் நாட்டியசாஸ்திரம் என்ற பெயரில் மொழிபெயர்த்து விட்டு, தமிழர்களின் நாட்டிய நன்னூலை அழித்து விட்டனர் பார்ப்பனர்கள்.

      இது தான் தமிழிலிருந்த மூலாகமங்களுக்கும் நடந்தது. பார்ப்பனர்கள் வடமொழியில் அதை மொழி பெயர்த்து, தமக்குச் சாதகமான இடைச்செருகல்களை ஏற்படுத்தி விட்டு, தமிழிலிருந்த மூலாகமத்தை அழித்து விட்டார்கள். இப்பொழுது மாற்றம் செய்யப்பட்ட ஆகமங்களை ஆதாரம் காட்டித் தமிழில், தமிழர்கள் பூசை செய்வதைத் தடுக்கிறார்கள். ஆனால் நாயன்மார் காலத்தில் தமிழர்கள் சாதிவேறுபாடின்றி கருவறை புகுந்து பூசை செய்தார்கள் என்பதற்கு தேவாரங்களில் ஆதாரமுண்டு.

      • ஆம் நீங்கள் கூறுவது சரியே! நடிகை சொர்ணமால்யா[அலைபாயுதே,மொழி திரைபடங்கள்] அவர்கள் சதிராட்டத்தில் இருந்து தான் பரதநாட்டியம் வந்தது என்று நிருபித்து Madras university Phd பட்டம் பெற்று உள்ளார்.

        • @Dayana

          நீங்களே உங்களுக்கு புரட்சி தலைவன் அப்பின்னு பட்டம் கொடுத்துக்கலாம் . உங்க வீட்டுல எல்லாரும் ஏத்துக்கலாம் . ஆனா பக்கத்துக்கு வீட்டுக்காரன், ஊரார் என எல்லாரும் ஏற்று கொள்ள வேண்டும்

      • //தமிழர்கள் ஆட்சியும் அதிகாரமும் இழந்திருந்த காலத்தில், தமிழர்களுக்கு மனுதர்ம அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டிருந்த காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்குமென்பதை நினைத்துப் பார்க்கவும்.//

        இது எந்த காலகட்டம் என்று யாரவது விளக்க முடியுமா ? இதை பற்றிய அறிவு எனக்கு இல்லை என்று வருந்துகிறேன்.

        //தமிழர்களுக்கு மனு தர்ம அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது //

        இதன் அடிப்படையில் பார்த்தால், தமிழர்களுக்கு கல்வி அறிவு அறவே கிடையாது . அவர்கள் கல்வி அறிவிற்காக வேற்று மொழி பேசும் பார்பனர்களை நம்பி இருந்தார்கள் என்று அர்த்தம் ஆகிறது .

        அடுத்து கல்வி என்று எதை கூறுகின்றீர்கள் ? வேதம் படிப்பதையா ? புரோகிதம் செய்வதையா ? இல்லை பார்பனர்கள் வேறு விதமான அறிவயல் ,கணித பூகோளம் என்று கல்வி வைத்து இருந்தார்களா ?

        அவர்களிடம் இருந்த அந்த கல்வி அறிவை கொண்டு பொருளாதார ரீதியாக , நிலவுடமை சார்ந்த சமூகத்தில் என்ன விதமான தொழில்கள் தமிழர்கள் செய்து இருந்து இருக்கலாம் ?

        கல்வி மறுக்கப்பட்டது என்றால் , தால்தபட்டதாக கூறப்படும் மக்களுக்கு மட்டும் மறுத்தார்களா ? இல்லை தேவர் ,வெள்ளாளர் என்று ஒட்டு மொத தமிழர்களுக்கும் மறுத்தார்களா ?

        இந்த தேவர்களும் ,வெள்ளாளர்களும் நமக்கு போதுமான அளவு நிலம் இருக்கிறது படிப்பு எதற்கு என்று விட்டுவிட்டார்களா ? இல்லை படிக்க வேண்டும் என்று பார்பனர்களிடம் கெஞ்சியும் அவர்கள் மறுத்தார்களா ?

        • For all your questions,there are ample answers in this book-“Mother India” By Katherine Mayo.Katherine Mayo,an American lady toured entire India,stayed with the natives to understand the social standing of different people and then wrote this book in 1937.You can read this ebook free of cost from this link-gutenberg.net.au/ebooks03/0300811h.html.But you should have patience to read this book to understand the plight of underprivileged people.Best of luck Mr.Raman.Please give your feedback after reading this book.If you are impressed recommend this book to others also.

      • // தமிழிலிருந்து பல நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்து விட்டு தமிழிலிருந்த மூல நூல்களை அழித்து விட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு//

        அந்த உதாரணங்களை சொல்ல முடியுமா ? கம்ப ராமாயணத்தை காப்பி அடிதுவிட்டர்களா ?

        ஆகா அந்த காலகட்டத்தில் தமிழர்கள் புத்தகம் படித்துதான் கலையை வளர்துகொண்டார்கள் .
        பரம்பரை பரம்பரையாக கற்றுகொடுக்கபடவில்லை . அப்படி என்றால் தமிழகத்தில் பாடசாலைகள் மூலமாக அணைத்து சாதியினரும் கல்வி கற்றுக்கொண்டு இருந்து இருக்கிறார்கள் .

        ஒரு சமூகத்தின் கலையை யாரும் புத்தகத்தை எரித்து அழித்துவிட முடியாது .
        விவசாயம் செய்வது எப்படி என்கின்ற புத்தகத்தை எரித்துவிட்டால் , விவசாயம் செய்ய தெரியாமல் போய்விடுமா ?

        நாதஸ்வரம் வாசிப்பது எப்படி என்கின்ற புத்தகம் படித்துதான் தமிழன் வாசித்தானா ?

        நம் இனம் உயந்தது என்கின்ற மாயையை உருவாக்க , நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று தாழ்வு மனப்பான்மையை வேண்டுமானால் இது போன்று பேசி நீக்கி கொள்ளலாலாம் .

        ஞான திருஷ்டிதான் டிவி என்று சமஸ்கிருதவாதிகள் சொல்வது போலதான் இதுவும் .
        ஓரிரு ஒற்றுமையை வைத்துகொண்டு வியாக்கியானம் பேசுவது

        • //அந்த உதாரணங்களை சொல்ல முடியுமா ? கம்ப ராமாயணத்தை காப்பி அடிதுவிட்டர்களா ?//

          கம்பராமாயணம் சம்ஸ்கிருத வால்மீகி ராமாயணத்தின் தமிழாக்கம் என்பது கூட தெரியாத உங்களிடம் பேசி என்னையா பலன்? 🙂

          //ஆகா அந்த காலகட்டத்தில் தமிழர்கள் புத்தகம் படித்துதான் கலையை வளர்துகொண்டார்கள் .பரம்பரை பரம்பரையாக கற்றுகொடுக்கபடவில்லை . அப்படி என்றால் தமிழகத்தில் பாடசாலைகள் மூலமாக அணைத்து சாதியினரும் கல்வி கற்றுக்கொண்டு இருந்து இருக்கிறார்கள்.//

          திண்ணைப்பள்ளிக் கூடங்களில் எல்லா சாதியினருக்கும் கல்வி கற்றுக் கொடுத்தார்களா. அதிலும் வடமொழியை தாழ்த்தப்ட்டவர்களுக்கு பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அவர்களிடம் அதிகாரம் இருந்தது, அதிலும் குறிப்பாக தமிழரலாத விஜயநகர ஆடசியின் கீழ் தான் கூடுதலான, திரிபுகளும், கையாடல்களும் நடந்தன. அக்காலத்தில் தமிழை ஆதரிக்கும் ஆட்சியாளர்கள் இருக்கவில்லை, அந்த 400 ஆண்டுகால ஆட்சியில் எவ்வளவோ நடந்திருக்கும் அதனால் தான் பல பழந்தமிழ் நூல்கள் வழக்கில் இல்லை. இப்படிக் கூறியதும் உ.வே சாமிநாதையர் தமிழைக் காத்தார், என்று தொடங்கி விடுவார்கள். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரது காலம் பிற்காலம். சுவாமிநாதையருக்கு முன்பாகவே யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரும், சி.வை. தாமோதரம்பிள்ளையும் பழந் தமிழ் ஏட்டுச் சுவடிகளை தேடியெடுத்து அச்சுவாகனமேற்றும் பணியைத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அந்த ஈழத்தமிழர்கள் இருவரது புகழும், தமிழ்ப்பணியும் தமிழ்நாட்டில் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

          //ஒரு சமூகத்தின் கலையை யாரும் புத்தகத்தை எரித்து அழித்துவிட முடியாது .
          விவசாயம் செய்வது எப்படி என்கின்ற புத்தகத்தை எரித்துவிட்டால் , விவசாயம் செய்ய தெரியாமல் போய்விடுமா ?//

          உருப்படாத உதாரணம். மருத்துவ நூல்களை அழித்து விட்டு, பழைய ஞாபகத்தை வைத்து ஒருவருக்கு வைத்தியம் செய்யலாமா? வயதானதும் மறந்து போவது மனித இயல்பு, மறந்துபோகக் கூடாதென்று தான் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார்கள்.

          //நாதஸ்வரம் வாசிப்பது எப்படி என்கின்ற புத்தகம் படித்துதான் தமிழன் வாசித்தானா ?//

          அது பயிற்சியினால் வருவது. அதற்குக் கூட ஓலைச்சுவடிகள் இருந்திருக்கலாம். அல்லாது வழி வழியாகப் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்ததால் தான் இன்றும் நாதஸ்வரம் தமிழர்களிடம் உள்ளது. அல்லது அதுவும் பார்ப்பனர்களின் கைகளில் இருந்திருக்கும், யார் கண்டது. அதை விட உடலுழைப்பு தேவையான தொழில்களைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடம் விட்டு விட்டார்கள்.

          //நம் இனம் உயந்தது என்கின்ற மாயையை உருவாக்க , நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று தாழ்வு மனப்பான்மையை வேண்டுமானால் இது போன்று பேசி நீக்கி கொள்ளலாலாம்.///

          தமிழ் மொழி உலகிலுள்ள மொழிகளில் உயர்ந்த, பழமையான, வளமான மொழிகளில் ஒன்று என்பது மாயை அல்ல. பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட உண்மை. ஆனால் தமிழ்நாட்டுச் சமக்கிருதவாதிகளால் தான் அதைச் சீரணிக்க முடியவில்லை. எமது மொழியின், எமது பாரம்பரியத்தைப் பற்றி நாங்கள் பெருமைப்படாது விட்டால் யார் பெருமைப்படுவார்கள். Celebrate yourself and others will follow. 🙂

          • இதன் அடிப்படையில் பார்த்தால், தமிழர்களுக்கு கல்வி அறிவு அறவே கிடையாது . அவர்கள் கல்வி அறிவிற்காக வேற்று மொழி பேசும் பார்பனர்களை நம்பி இருந்தார்கள் என்று அர்த்தம் ஆகிறது .

            • ராம, ராமா!

              விடிய விடிய இராமர் கதை விடிஞ்சா பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை என்ற பழமொழி உங்களுக்குத் தான் நன்றாகப் பொருந்துகிறது. நாங்கள் இவ்வளவு நாளும் பேசிக் கொண்டிருப்பது என்னவென்றால், தமிழர்களிடம் கல்வி அறிவு மட்டுமல்ல, செல்வமும், நீர் வளமும், நிலவளமும் நிறைந்த மண்ணும் இருந்தது. அதனால் தால் இக்காலத்தில் எப்படி guest workers ஆக தமிழர்கள் மத்திய கிழக்குக்குப் போகிறார்களோ அதே போல, தமிழரசர்கள் கட்டிய பெருங்கற்றளிகளில் கழுவித்துடைக்க கங்கைக் கரைகளிலிருந்தும், துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து தெலுங்குப் பார்ப்பனர்களும் guest workers ஆக தமிழ்மண்ணுக்கு வந்தார்கள். அவர்கள் தமிழ் மன்னர்களின் கடவுள் நம்பிக்கையையும், தமிழர்களின் தாராள மனப்பான்மையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, சாதாரண தமிழர்களை விட அதிகாரத்தையும், தமிழர்களின் நிலங்களையும் தானமாகப் பெற்றுக் கொண்டார்கள். இதில் தமிழர்களின் legendary வெள்ளைத்தோலாசையும் பெரிய பங்கை வகித்தது என்பதையும் மறக்க முடியாது என்றும் சிலர் கருத்துக் கூறுகின்றனர். நிலமிழந்த தமிழர்கள் அதிகாரமிழந்து தமது சொந்த மண்ணிலேயே கூலிகளாக, மனுநீதியின் அடிப்படையில் தீண்டத்தகாதவர்களாக்கப்பட்டனர். அன்றிலிருந்து அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. கோயில்களில் வேலை செய்ய வந்த பிராமணர்கள் (பெரும்பாலானோர் தமிழர்களல்ல, தெலுங்கர்கள்) தமிழர்களின் கோயில்களின் நிர்வாகிகளாகினர். நாளடைவில் தமிழ் மொழியும் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டது.

              விஜயநகர் ஆட்சியின் கீழ் தெலுங்கு கன்னட பார்ப்பனர்கள் முன்பிருந்ததை விட அதிகளவில் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டனர். தமிழர்களின் கல்வி, கலை, நூலகங்கள், கோயில்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் அவர்களின் கரங்களைச் சென்றடைந்தது. பிறகு தான் இந்த திரிபுகளும், சமக்கிருதமாக்கலும், தமிழர்களின் கல்வி, கலை அனைத்துடனும் யாராவதொரு ஆரிய வடநாட்டானைத் தொடர்பு படுத்திக் கதை புனையும் சூக்குமங்களும், ஒவ்வொரு கோயிலையும் ஏதாவதொரு புராணப் புளுகுடன் இணைக்கும் புண்ணாக்குக் கதைகளும் உருவாக்கப்பட்டன. தமிழர்களின் பெரும்பாலானோருக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது. ஒரு சில பிராமணருக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத ஆதிக்க சாதியினர்கள் திண்ணைப்பள்ளிக் கூடங்களில் கல்வி கற்றாலும், கல்வி என்பது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இன்று கூட தமிழ்நாட்டுக் கிராமங்களுக்குப் போனால், அங்குள்ள தமிழர்களை விட ரெட்டிகளும், நாயுடுகளும், நாயக்கர்களும் நிலவுடைமைக் காரர்களாக இருப்பதற்குக் காரணமும் விஜயநகர் ஆட்சி தான் அவர்கள் தமிழர்களின் நிலங்களைப் பறித்து தெலுங்கு பார்ப்பனர்களுக்கும், ஏனைய தெலுங்கர்களுக்கும் கையளித்தனர். இப்பொழுதாவது உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.

              இந்தக் காணொளியிலும் என்ன நடந்தது என்பது பேசப்படுகிறது, எப்படி தமிழனாகிய தொல்காப்பியரின் தந்தை ஆரிய வடவனாக்கப்பட்டார் என்பதையும் அறிஞர்.திருச்செல்வனார் விளக்குகிறார்.

              • //தமிழர்களிடம் கல்வி அறிவு மட்டுமல்ல, செல்வமும், நீர் வளமும், நிலவளமும் நிறைந்த மண்ணும் இருந்தது. //

                ஓஹோ கங்கையை விட அதிகமாக இருந்திருகிறது ?

                //தமிழரசர்கள் கட்டிய பெருங்கற்றளிகளில் கழுவித்துடைக்க கங்கைக் கரைகளிலிருந்தும், துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து தெலுங்குப் பார்ப்பனர்களும் guest workers ஆக தமிழ்மண்ணுக்கு வந்தார்கள்//

                எப்பொழுது தமிழர்கள் கட்டினார்கள் ? கல்லணை தவிர , மற்ற அனைத்தும் பார்பனர்கள் வந்த பிறகு கட்டியவை தானே ? அவர்கள் வருவதற்கு முன்பு என்ன மாதிரியான பாட சாலை அமைப்பு இருந்தது ? மக்கள் எப்படி கல்வி கற்றார்கள் ?

                அந்த அமைப்பு முறை ஏன் தகர்ந்தது ? அந்த அமைப்பில் பாடம் படித்தவர்கள் என்ன ஆனார்கள் ?

                பிதாகோரஸ் நடத்திய பாடசாலையில் பயின்றவர்கள் பல நூறு ஆண்டுகள் ரகசியமாக கல்வியை மற்றவர்களுக்கு கொண்டு சென்றார்கள் . இது எல்லாமே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளன .

                அது போல தமிழக அரசர்கள் நடத்திய பாட சாலைகள் என்ன ஆனது , யார் தலைமையில் நடந்தது . யார் வந்த பிறகு அவை நிறுத்தப்பட்டன ?

                எதாவது வரலாற்று ஆதாரம் உண்டா ?

                // அவர்கள் தமிழ் மன்னர்களின் கடவுள் நம்பிக்கையையும், தமிழர்களின் தாராள மனப்பான்மையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு //

                இளங்கோவடிகள் சமண மதம் அல்லவா தேர்ந்து எடுத்தார் ?
                பல்லவர்கள் காலத்தில் புத்த விஹாரங்களும் இருந்தனவே ?

                மன்னர்களுக்கு மக்களை பிரித்தாள, சாதி அமைப்பு முறை உதவும் என்பதால் அவர்களாகவே விரும்பி ஏற்று இருப்பார்கள்

                //சாதாரண தமிழர்களை விட அதிகாரத்தையும், தமிழர்களின் நிலங்களையும் தானமாகப் பெற்றுக் கொண்டார்கள்//

                அப்படி என்றால் தமிழகத்தில் பார்பனர்கள் நிலா உடமை சமூகமாக இருக்க வேண்டும்.

                //நிலமிழந்த தமிழர்கள் அதிகாரமிழந்து தமது சொந்த மண்ணிலேயே கூலிகளாக, மனுநீதியின் அடிப்படையில் தீண்டத்தகாதவர்களாக்கப்பட்டனர்//

                அப்படி என்றால் நிலவுடைமை தமிழ் சாதிகள் இல்லை என்கிறீர்கள் ?

                //அன்றிலிருந்து அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது//

                என்றிலிருந்து ? யார் யாருக்கு மறுக்கப்பட்டது ? தேவர்கள் ,வெள்ளலர்களுக்கு மறுக்கப்பட்டதா ?
                அப்படி என்றால் பார்பனர்கள் நிலத்தையும் எடுத்துகொண்டு நில உடைமை மூலம் வரும் வருமானத்தில் வாழாமல் ஏன் கல்வியை கற்றார்கள் ?

                இல்லை பார்பனர்கள் நிலவுடைமை சாதியை சார்ந்து , கற்று கொடுத்து , புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்தினார்களா ?

                வெள்ள்ளல்ர்களும் தேவர்களும் கல்வி மறுக்கப்பட வில்லை என்றால் ஏன் வெள்ள்ளல்ர்களும் தேவர்களும் ஏன் தமலர்களின் உலகின் உயர்ந்த டெக்னாலஜிகளை முன்னெடுத்து செல்லவில்லை ?

                //கோயில்களில் வேலை செய்ய வந்த பிராமணர்கள் (பெரும்பாலானோர் தமிழர்களல்ல, தெலுங்கர்கள்) தமிழர்களின் கோயில்களின் நிர்வாகிகளாகினர். நாளடைவில் தமிழ் மொழியும் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டது//
                //விஜயநகர் ஆட்சியின் கீழ் , சமக்கிருதமாக்கலும், தமிழர்களின் கல்வி, கலை அனைத்துடனும் யாராவதொரு ஆரிய வடநாட்டானைத் தொடர்பு படுத்திக் கதை புனையும் சூக்குமங்களும், ஒவ்வொரு கோயிலையும் ஏதாவதொரு புராணப் புளுகுடன் இணைக்கும் புண்ணாக்குக் கதைகளும் உருவாக்கப்பட்டன //

                ஆக நானூறு வருடங்களில் உலகமகா தமிழர்களின் டேக்னாளிக்ய்கள் அழிக்கப்பட்டுவிட்டன ?

                //ஒரு சில பிராமணருக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத ஆதிக்க சாதியினர்கள் திண்ணைப்பள்ளிக் கூடங்களில் கல்வி கற்றாலும், கல்வி என்பது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது//

                அப்போ கல்வி கற்ற ஆதிக்க சாதியினர் ஏன் மற்றவர்களுக்கு கற்றுத்தரவில்லை ?
                கல்வி என்ன தங்கமா கட்டுபாட்டில் வைத்துகொள்ள ?

                வடநாட்டான் சமஸ்கிருதம் அல்லவா கற்றுகொடுத்து இருக்க வேண்டும் . ஆதிக்க சாதிகள் எல்லாம் இன்றைக்கு சமஸ்கிருதத்தில் புலமை பற்று இருந்து இருக்க வேண்டுமே ?

                //ங்குள்ள தமிழர்களை விட ரெட்டிகளும், நாயுடுகளும், நாயக்கர்களும் நிலவுடைமைக் காரர்களாக இருப்பதற்குக் காரணமும் விஜயநகர் ஆட்சி தான் அவர்கள் தமிழர்களின் நிலங்களைப் பறித்து தெலுங்கு பார்ப்பனர்களுக்கும், ஏனைய தெலுங்கர்களுக்கும் கையளித்தனர்//

                மறுபடியும் கேட்கிறேன் , தெலுங்கு பார்ப்பனர்களுக்கும் நில ம் கொடுத்து இருந்தால் தெலுங்கு பார்பன நிலவுடைமை சமுதாயம் இருக்க வேண்டும் .

                சும்மா சும்மா கற்பனை பண்ணி தமிழன் உலகமாகா டெக்னாலஜி காரன் என்று கற்பனை சுகம் காணுங்கள்

                • ராமா,

                  உங்களுக்கு அடிப்படையே தெரியாது, அதனால் உங்களின் முட்டாள்தனமும் குழந்தைத்தனமும் நிறைந்த உளறல்களுக்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்குமளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அப்படி பதிலளித்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

                  தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தமிழர்கள் இக்காலத்திலேயே தமது சொந்தமண்ணிலேயே ஏழைகளாக, பஞ்சைகளாக, பராரிகளாக வாழும் போது ஒருவழிப்பயணச் சீட்டுடன் கூத்தாடிப் பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக வாழ்வதையும், தமிழர்கள் அவர்களின் முன்னால் கைகட்டி நிற்கிறார்களே, அது ஏன் நடந்தது, அதைத் தமிழர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? . இக்காலத்தில் அதாவது தமிழ்நாட்டின் ஆறுகளை எல்லாம் மறித்து திராவிடர்கள் அணைகளைக் கட்டியதால் தமிழ்நாடு வரண்டு கிடந்தாலும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஏமாளித்தனம் கலந்த தாராள மனப்பான்மை இன்னும் வரண்டு போகவில்லை. தமிழர்களை விட தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்களும், வடவர்களும் வளமாக, வசதியாக வாழ்கிறார்கள். இக்காலத்திலேயே தமிழர்கள் இப்படியிருந்தால், அக்காலத்தில் தமிழ்நாடு செல்வச் செழிப்போடிருந்த காலத்தில் தமிழர்கள் எவ்வளவு தாராள மனப்பான்மையுள்ளவர்களாக இருந்திருப்பார்கள். அதை விட அரசர்களின் ஆதரவும் வந்தேறிகளுக்கிருந்தாது. தமிழ்நாட்டில் இன்றும் சாராசரி தமிழரகளை விட தமிழரல்லாதார் வசதியாக, வளமாக, காணி, பூமியுடன் வாழ்கிறார்கள், அது ஏன் என்ற கேள்வியைக் கேட்டு அந்த அடிப்படையில் ஆராய்ந்து கொண்டு போனீர்களேயானால். அதற்கான வரலாற்றுக் காரணங்களையும் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதையும் நீங்களே அறிந்து கொள்வீர்கள். நான் உங்களுக்கு விளக்குவதை விட நீங்களே அறிந்து கொண்டால், அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும். அதற்கு முதல்படியாக Sooriyan அவர்கள் சொன்ன அறிவுரையை ஏற்று முயற்சிக்கவும், நன்றி. வணக்கம்.

                • //தெலுங்கு பார்ப்பனர்களுக்கும் நில ம் கொடுத்து இருந்தால் தெலுங்கு பார்பன நிலவுடைமை சமுதாயம் இருக்க வேண்டும்.//

                  சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் கூட, காவிரிப்பாசனம் கொண்ட பல ஊர்களில் பார்ப்பனர்கள் பெரும்நிலச்சொந்தக்காரர்களாக இருந்து வந்துள்ளனர். இன்றும் பல பார்ப்பனர்களின் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தீண்டாமையின் அடிப்படையில் நந்தனார் காலம் தொடக்கம், தமிழர்களைக் கொத்தடிமைகளாக வைத்து வேலைவாங்கிய பல பார்ப்பன நிலவுடைமையாளர்கள் தமது நிலங்கைக் குத்தைக்கு விட்டு நரகங்களுக்கு பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆங்கிலேயர் காலத்தில் தான். ஆங்கிலேயர் காலத்தில் அரசாங்கள் உத்தியோகங்களின் மூலம் அவர்களால் விவசாயத்தை விடக் கூடுதலாக சம்பாதிக்க முடிந்தது. அதனால் தான் அவர்கள் நிலங்களை விற்று விட்டு, நகரங்களுக்குக் குடியேறினார்கள். ஆங்கிலேய ஆட்சியில் மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற தொழில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. அதனால் தான் விஜயநகர ஆட்சியில் அவரகள் பெற்ற தமிழர்களின் விளைநிலங்களை விற்றனர். ஆனால் ரெட்டிகளும், நாயுடுக்களும், நாயக்கர்களும் நிலவுடைமைக்காரர்களாகக் கிராமங்களில் தங்கி விட்டனர். இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இருக்க குடிசையே இல்லாத தமிழர்கள் உள்ளனர் ஆனால் சிறியதாக இருந்தாலும் பரம்பரைக் கல்வீடு இல்லாத பார்ப்பனர்கள் கிடையாது. நான் தமிழ்நாட்டுக் கிராமங்களில் நேரில் பார்த்து அறிந்தததைத் தான் எழுதுகிறேன்.

  3. திரு. வியாசன்…

    தங்களின் மேலான உதவிகள் எனக்கு தேவை. தமிழ்ஹிந்து இணையத்தில் சமற்கருத்ததிற்கு எதிராக ஒற்றையாக போராடி கொண்டிருக்கிறேன். தமிழுக்கு எதிராகவும் சமற்கருத்த வாரத்திற்கு ஆதரவாகவும் அவர்கள் கூறும் பார்ப்பன திமிர் பிடித்த கருத்துகளை முறியடிக்க தாங்கள் வரவேண்டும் என்று தங்களை அன்போடும், உரிமையோடும் அழைக்கிறேன்…

    http://www.tamilhindu.com/2014/07/sanskritcartoon/#CommentsSection

    • ‘தமிழ்ஹிந்து’ வை ஒவ்வொருநாளும் படிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. எப்பொழுதாவது ஒருநாள், எனக்குப் போரடித்தால் மட்டும் தான் அந்தப் பக்கம் போவது வழக்கம். ஆனால் வினவிலேயே என்னுடைய கருத்துக்கள் ‘மட்டுறுத்தல்’ என்ற பெயரில் சிதைக்கப்படும் போது, அவர்கள் மட்டும் அப்படியே வெளியிடுவார்களா என்பது சந்தேகம் தான். அதை விட நான் சமஸ்கிருதத்தை மட்டுமல்ல, எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, சமஸ்கிருதத்தை தமிழுடன் ஒப்பிட்டு, தமிழை இழிவுபடுத்தும் பார்ப்பனர்களையும், சமக்கிருதவாதிகளையும் தான் எதிர்க்கிறேன். ஆனால் பல திராவிட வீரர்களும், பெரியாரிஸ்டுகளும், சமஸ்கிருதத்தை எதிர்ப்பதற்குக் காரணம், தமிழ்ப்பற்றல்ல, வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டும் தான். உதாரணமாக, சமஸ்கிருதத்தை எதிர்க்கும் திராவிட வீரர்களும் பெரியாரிஸ்டுக்களும், தமிழையும், தமிழர்களையும் இழிவு படுத்தும் கன்னடர்களையும், மலையாளிகளையும் எதிர்க்க மாட்டார்கள்.

      • திரு. வியாசன்….

        நாம் யாரும் எந்த மொழிகளையும் வெறுக்க வேண்டாம். ஆனால் அது நம் மொழியை சீண்டி பார்க்காத வரை மட்டும் தான்.. எவ்வளவோ மொழிகள் இவ்வுலகில் உழன்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் செத்த வடமொழிக்கு இருக்கும் செருக்கு ஆங்கிலத்திற்கு கூட இருக்காது.. அனைத்திலும் ஊடுருவிக்கொண்டு எல்லாம் தனக்கே சொந்தம் என்று தெள்ளவாரி தனம் செய்வதில் இந்த கேடுகெட்ட கூட்டத்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது… பெரியாரிஸ்டுகளை பற்றி யோசிக்க வேண்டாம். தங்களின் பங்களிப்பு அதி உன்னதமானது. தங்களின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்…

        • திரு. தாயுமானவன்,

          நான் முன்பே சொன்னேனே பார்த்தீர்களா. அந்த ஆர் எஸ் எஸ் இணையத்தளம் நான் Sarang என்றவருக்கு நேற்று எழுதிய பதில்களை இதுவரை வெளியிடவேயில்லை. ஆனால் அவர் எனக்கு இன்று எழுதிய உளறல்கள் எல்லாவற்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இணையத்தளமும் அவர்களின் பிரச்சார நோக்கங்களுக்கு ஒத்துப் போகிறவர்களின் பின்னூட்டங்களைத் தான் வெளியிடுவார்கள்.

          • என்னுடைய பதில்களையும் ‘முழுமையாக’ வெளியிட்டிருக்கிறார்கள். 🙂

      • என்னடா , இந்த சைவ பூனை ரொம்ப வாசிக்குதேன்னு பார்த்தா “சமஸ்கிருதத்தை எதிர்க்கும் திராவிட வீரர்களும் பெரியாரிஸ்டுக்களும், தமிழையும், தமிழர்களையும் இழிவு படுத்தும் கன்னடர்களையும், மலையாளிகளையும் எதிர்க்க மாட்டார்கள்” என்று வாந்தி எடுக்கிறது. இவ்வளவு கதறும் இந்த காட்டு பூனை பார்ப்பன பல்லக்கு தூக்கி “ராச ராச சோழனை” மட்டும் வசதியாக மறந்து விடும் .

  4. திரு. ராமன் அவர்களே…..

    //அடேங்கப்பா ! படிக்கவே பயங்கரமா இருக்கே ! 🙂 //

    இதையே பயங்கரமாக இருக்கின்றது என்று சொன்னால் எப்படி. இதை விட பயங்கரம் எல்லாம் இருக்கின்றன… அதில் ஒரு பயங்கரம் கீழே இருக்கிறது பாருங்கள்..

    வினவு வாசகர்களே…. உங்களுக்கு அறிவான, கல்வி கேள்விகளில் சிறந்த நால் வேதத்தை ஆதியோடு அந்தம் கரைத்து குடித்த ஆர்.எஸ்.எஸ் நச்சுப் பாம்புகள் கலியுக புருஷனாக கொண்டாடும் சுவாமி விவேகானந்தர், மற்றும் அறிவியலார்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எடிசன் போன்ற மிக சிறந்த மேதா விலாசம் கொண்ட குழந்தை பிறக்க வேண்டுமா. இதோ இருக்கிறது அதற்க்கான வழி.

    அதற்க்கு கணவன், மனைவி இருவரும் மாட்டிறைச்சி(கோ மாம்சம்) உண்ண வேண்டும் . இருவரும் அதிகம் மாட்டிறைச்சி(கோ மாம்சம்) உண்டால் மிக சிறந்த அறிவான குழைந்தை பிறக்கும். இதை நான் கூறவில்லை, 108 உபநிஷதங்களில் மிக சிறந்ததாக கூறப்படும் பிருகதாரண்யக உபநிஷதம் கூறுகின்றது.. இதோ அதற்க்கான சான்று…

    “He who wishes that a son should be born to him who would be a reputed scholar, frequenting the assemblies and speaking delightful words, would study all the Vedas and attain a full term of life, should have rice cooked with the meat of a vigorous bull or one more advanced in years, and he and his wife should eat it with clarified butter. Then they would be able to produce such a son.(Brihadaranyka upanishad 6.4.18).

    இப்போது தெரிகிறதா என் பார்பனர்கள் மட்டும் ரொம்ப அறிவாக பிறக்கிறார்கள் என்று. முன்ன காலத்தில் வேதம் படிப்பது பார்பானுக்கு என்று மட்டுமே இருந்தது ஆக இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு மாட்டுக் கறியாய் அதக்கினார்கள் போல. பிருகதாரன்யக உபநிஷதில் மொத்தம் 6 அத்தியாயங்கள் இருக்கின்றன. இப்போது வரும் பதிப்புகளில் இந்த 6ஆம் அத்தியாயம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏன் என்று நான் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ராமகிருஷ்ண மடத்தின் பழைய வெளியீட்டில் இது இருக்கின்றது. அதில் இருந்து கொடுக்க பட்டதே இந்த ஆதாரம்.

  5. //அடேங்கப்பா ! படிக்கவே பயங்கரமா இருக்கே ! //

    PLAGIARISM BY SANSKRIT AUTHORS

    Sanskrit lovers of India always like to say that the Europeans abducted ancient Sanskrit texts and using the knowledge in the texts, they invented many things like airplanes, medicines, computers and even the internet. But you should not ask them that why they failed to invent these things when the texts were in their own custody for centuries, as they have no answer to this question. They know well that there is not any type of knowledge related to science and technology in these text.

    Sanskritists go one more step ahead and claim that Homer’s Iliad is based on Ramayan, Isop’s stories are based on Panchatantra and Arabian Nights are based on Kathasaritsagar. But the fact is that Sanskrit Ramayan, Panchatantra, Kathasaritsagar and many other literature itself are stolen from ancient books in Desi (also know as Prakrit) languages. This fact is less discussed, so let me share the truth here.

    A less known fact is that the oldest Indian epics, stories, dramas, poetry is in languages like Magadhi, Addhamagadhi, Shourseni andMarhatti. Sanskrit writers translated the literature from these Desi languages in this code language called Sanskrit, and later declared the stolen literature as being originally Sanskrit.

    Modern scholars of linguistics have concluded that Ramayan is nothing but expansion of Dashratha Jatak, a Jatak story in Buddhist literature.Mahabharat is collection of the stories traditionally told in non-aryan and non vedic communities in northern India. According to Shrikant Shetye, a scholar of ancient history, original Mahabharat was in Shourseni language. Somadev’sKathasaritsagar is based on Gunadhya’s Baddhakaha, a collection of stories in ancient Paishachi language. Mudrarakshas, the famous drama of 8th century is based on Mahanamthero, a Buddhist work.

    Dr. Shreedhar Vyankatesh Ketkar, a great scholar and writer of Marathi encyclopedia has written that Prakrit literature evolved independently, while Sanskrit literature was written by coding Prakrit literature.

    RENOWNED SCHOLAR OF INDUS VALLEY CIVILIZATION P.S. SADAR WRITES IN HIS BOOK SINDHU GHATI KI SABHYATA:

    Panini made rules for Vedic language and gave birth to Sanskrit language. Later this language was being known as classical Sanskrit. A flood of Sanskrit literature came in the age of classic Sanskrit, because the original Prakrit literature was in the custody of these classical Sanskrit writers.

    We need to think and research in this view about all the literature in Classical Sanskrit.
    -Mahavir Sanglikar

    • CONTND:

      RENOWNED SCHOLAR OF INDUS VALLEY CIVILIZATION P.S. SADAR WRITES IN HIS BOOK SINDHU GHATI KI SABHYATA:

      Panini made rules for Vedic language and gave birth to Sanskrit language. Later this language was being known as classical Sanskrit. A flood of Sanskrit literature came in the age of classic Sanskrit, because the original Prakrit literature was in the custody of these classical Sanskrit writers. All Prakrit books were translated in Sanskrit soon. Later the prairie books were DESTROYED by the Sanskritists.

      We need to think and research in this view about all the literature in Classical Sanskrit.
      -Mahavir Sanglikar

  6. சமஸ்கிர்தம்: சிறந்த, உன்னதனமான மொழி என்றால், நீங்கள் தனியாக தாய்மொழியைக் கொண்டாடுங்கள். அதை விடுத்து எங்கள் தாய்மொழியை ஒழித்து, தமிழர்களை அடிமையாக்க, மடையனாக்காததீர்கள். உங்கள் மொழியிலேயே விளம்பரம் செய்து கொண்டாடுங்கள். தமிழின் மீது சவ்வாரி செய்யாதீர்கள். எம்மொழியை கலப்படம் செய்து வியாபாரம் செய்யாதீர்கள்.
    தாராளமாக சமஸ்கிர்த பாஷையில் பத்திரிக்கைகள், தொலைகாட்சி நிலையங்கள், திரைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியாக இருங்கள். அயல்நாட்டவர்கள் இவைகளை படித்து, பார்த்து அண்டத்திற்கு கூட தொடர்பு கொள்ள உபயோகித்துக் கொள்வார்கள்.
    ஆனால் தமிழிலே மூக்கை நுழைக்காதீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க