Tuesday, May 11, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் உழைக்கும் மகளிர் தினம் - சர்வதேச கருத்துப் படங்கள்

உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்

-

எமிலியோ ஆக்ரா, வெனிசுவேலா
“ஒரு பெண், ஆண் வரைந்த ஓவியம் அல்ல. ஒரு பெண் என்பவள்… ஒரு பெண். என் மூன்று மகள்களுக்கும், ஐந்து பேத்திகளுக்கும் சமர்ப்பணம்” – எமிலியோ ஆக்ரா, வெனிசுவேலா

சாத் முர்தாதா, இராக்
“அப்பா, நீங்க ஏன் எந்த வேலையும் செய்யல” “ஏன்னா, நான் சிங்கம்” – சாத் முர்தாதா, இராக்

ஜோ மோர், அமெரிக்கா
அரபு வசந்தமும் பெண்கள் தினமும் – மதவாதிகள் பெண்களை பொந்துக்குள்ளே அடைத்து வைக்கிறார்கள். – ஜோ மோர், அமெரிக்கா

பெண்கள் தினம் - செர்ஜி டூனின், ரசியா
உழைக்கும் பெண்கள் தினம் – செர்ஜி டூனின், ரசியா

அதான் இக்லேசியஸ் டொலேடோ, கியூபா
உலகைப் படைக்கும் கரங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம் – அதான் இக்லேசியஸ் டொலேடோ, கியூபா

செர்ஜி டூனின், ரசியா
சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – செர்ஜி டூனின், ரசியா

எலெனா ஒஸ்பினா, கொலம்பியா
அனைவருக்கும் உரிமை வேண்டும் – எலெனா ஒஸ்பினா, கொலம்பியா

படங்கள் : நன்றி http://www.cartoonmovement.com

  1. //மகளிர் தினத்தின் சேதி என்ன என்பதை சுருக்கிச் சொன்னால் குடி, பாலியல் வன்முறை, பயந்து வாழும் பெண்கள் எனலாம். என்ன செய்யலாம்?//ஆர் எஸ் எஸ் பத்திரிகையான குமுதம் படிக்கலாம். பெண்களுக்கும், அவர்களை எப்படி கையாளுவது என்று ஆண்களுக்கும் என கை நிறைய… கருத்து வித்தைகள்…

    உதாரணத்திற்கு சினிமா பெண்ணுரிமைப் போராளி பாக்யராஜின் அனுபவக் கட்டுரை அதில், தனது வகுப்பில் படித்த திமிர் பிடித்த, அறிவான, அவரது வார்த்தையில் சொல்வதென்றால் ‘நல்ல பெர்சானாலிட்டியான’ பெண்ணை எப்படி மாணவர்களிடம் சவால் விட்டு நடுப் பள்ளிக் கூடத்தில் கட்டி பிடித்த உருணடார் என்ற அனுபவப் பகிர்வு உள்ளது.

    அவர் போதாது என்று, தமிழின் ஒரே எழுத்தாளர் வைரமுத்து பெண்களை திருமண நிச்சயம் அல்லது பரிசம் போடும் போது நாத்தார்னார்காரி புதுப் பொண்ணை எப்படி பரிசோதிப்பார்கள்? வைரமுத்துவின் வரிகளே பேசட்டும், ‘மாட்டுக்கே பல்லு புடிச்சுப் பாக்குறமே வீட்டுக்கு வாரவளுக்குச் சரியா இருக்க வேணாமா?’, ‘புதுப் பொண்ணு வெக்கப்பட்டு, உளளிங்கப்பட்டு, கையிரண்டையும் வச்சு ‘அத’ ‘இத’ மறச்சாக்கூட பொம்பளைக்குப் பொம்பள என்னடின்னு சொல்லி முழுசையும் பாத்துதான் ஒரு முடிவுக்கு வருவாகளாம். சில கெட்டசாதிச் சிறுக்கிக வெரலிடுக்கில வெங்காயத்த ஒளிச்சு வாரதும் உண்டுமாம். சரசரன்னு உள்பாவாடை இழுக்குற சாக்குல ‘அந்த’ எடத்துல வெங்காயத்தக் கசக்கிவிட்டு வாடை காமிப்பாளுகளாம். ‘அங்க’ வேண்டாத வியாதியோ தோல்புண்ணோ இருந்தா அது எரிக்கிற எரிச்சல்ல ‘யாத்தே யப்பே’ன்னு அலறிக் குமிச்சிருவாளாம் புதுப் பொன்னு. ‘முருங்ககாய வளச்சுப்பாத்து வாங்கனும்; வெண்டைக்காயக் கிள்ளிப்பாத்து வாங்கணும்; தேங்காயச் சுரண்டிப்பாத்து வாங்கணுங்கிறோமே, வம்சவிருத்திக்கு வாரவளச் சலிச்சு எடுக்கனுமா இல்லையா’.

    இப்போ சந்தேகம் என்னவென்றால் இந்த வரிகளை படிச்ச எனக்கே கோவம் வருதே. பெண்கள் வெக்கமில்லாம இத வாங்கி எப்படி படிக்கிறார்க்ள்?

    இன்னும் முடியல – ‘

  2. இது போக எடுப்பான மார்பகங்களை அது உண்மையிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் காட்டிக் கொடுக்கும் அற்புத உள்ளாடை விவரங்களுக்கு முன் அட்டை உள்பக்கம். கொடுமைப்படுத்தி தீ வைத்து கொளுத்திய கணவனை சிறீய மகனுக்காக மன்னித்துவிடும் அழுத்தம் நிறைந்த பத்தின் தெய்வத்தின் ஒரு பக்கக் கதை. – குமுதம் 16 – மார்ச் 2013

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க