privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉலகச் செய்திகள் - படங்களும் பாடங்களும்

உலகச் செய்திகள் – படங்களும் பாடங்களும்

-

வரலாறு காணாத ஊழலில் இனி கால்பந்தும் உண்டு. உலகக் கோப்பை போட்டி நடத்துவதற்கு ஒரு நாட்டிற்கு தேவைப்படுவது வாக்குகள் அல்ல பணமே என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஃபிபாவின் தலைவர் பெப் ஃப்ளாட்டர் பதவி விலகலை அறிவிக்கிறார்.
வரலாறு காணாத ஊழலில் இனி கால்பந்தும் உண்டு. உலகக் கோப்பை போட்டி நடத்த ஒரு நாட்டிற்கு தேவைப்படுவது வாக்குகள் அல்ல பணமே என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஃபிபாவின் தலைவர் பெப் ஃப்ளாட்டர் பதவி விலகலை அறிவிக்கிறார். ஆகவே இது மறக்க முடியாத ஒரு சேம் மற்றும் ஷேம் சைடு கோல்!
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் வறுமையினால் மட்டுமல்ல, மேற்குலகிற்கு செல்லும் கடலிலும் சாகிறார்கள். இத்தாலி துறைமுகம் அகஸ்டியாவில் கடலில் கொல்லப்பட்ட 17 அகதிகளுக்காக காத்திருக்கும் பிணப்பெட்டிகள்.
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் வறுமையினால் மட்டுமல்ல, மேற்குலகிற்கு செல்லும் கடலிலும் சாகிறார்கள். இத்தாலி துறைமுகம் அகஸ்டியாவில் கடலில் கொல்லப்பட்ட 17 அகதிகளுக்காக காத்திருக்கும் பிணப்பெட்டிகள். வழக்கம் போல யாரும் ‘அறியாமலே’ அகதிகள் படகு கடலில் மூழ்கியிருந்தால் இத்தாலிக்கு செலவு மிச்சம்!
அமெரிக்காவின் பால்டிமோர் நகரம்: பால்டிமோர் கொலைக்கா நீதி கேட்டு போராடும் மக்கள்!
அமெரிக்காவின் பால்டிமோர் நகரம்: போலிசால் கொலை செய்யப்பட்ட கருப்பின இளைஞர் ஃபெரடி கிரேவுக்கு நீதி கேட்டு போராடும் மக்கள்! அமெரிக்காவின் நிறவெறிக்கு முடிவு எப்போது?
மே 13, 2015. துருக்கி நகரின் சோமா சுரங்கத்தில் கொல்லப்பட்ட 301 தொழிலாளிகளின் முதலாமாண்டு நினைவஞ்சலி.
மே 13, 2015. துருக்கி நகரின் சோமா சுரங்கத்தில் கொல்லப்பட்ட 301 தொழிலாளிகளின் முதலாமாண்டு நினைவஞ்சலியில் ஒரு சிறுமி.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடலில் எண்ணெய் கசிவு. 9 கடல் மைல் தூரத்திற்கு எண்ணெய் மிதக்கிறது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடலில் எண்ணெய் கசிவு. 9 கடல் மைல் தூரத்திற்கு எண்ணெய் மிதக்கிறது. அமெரிக்காவின் முதலாளிகள் கார்களுக்காக பெட்ரோலை எரித்து மட்டும்ல்ல, கடலில் சிந்தியும் இயற்கையை நாசமாக்குகிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் மாணவர்களிடம் மூக்குடைபட்ட ஸ்ம்ருதி ராணி, அஸ்ஸாம் கௌகாத்தி ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தேற்றிக் கொள்கிறார்.
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் மாணவர்களிடம் மூக்குடைபட்ட மனிதவளத்துறை அமைச்சர் ஸ்ம்ருதி ராணி, அஸ்ஸாம் கௌகாத்தி ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் வலிக்காதது போல சிரிக்கிறார்.
நியூயார்க் நகரின் போலிஸ் அதிகாரி பிரையன் மூர் கொல்லப்பட்டதற்கு இதர போலீஸ்காரர்களின் அஞ்சலி!
நியூயார்க் நகரின் போலிஸ் அதிகாரி பிரையன் மூர் கொல்லப்பட்டதற்கு இதர போலீஸ்காரர்களின் அஞ்சலி! கருப்பின இளைஞர்கள் கொல்லப்படும் போது இதர கருப்பின மற்றும் ஜனநாயக சக்திகள் அஞ்சலி செலுத்தினால் அது வன்முறை!
மியான்மார் - ரோங்கியா முசுலீம் அகதிகள் மழைத்தண்ணீரை பிடிக்கிறார்கள். தப்பிக்க முயன்ற போது கடல் அவர்களை ஏமாற்றிவிட்டது.
மியான்மார் அகதி முகாமில் ரோங்கியா முசுலீம் அகதிகள் மழைத்தண்ணீரை பிடிக்கிறார்கள். கடலில் மட்டுமல்ல, மண்ணிலும் வாழ்க்கை நிம்மதியாக இல்லை.
நடுக்கடலில் தத்தளிக்கும் ரோங்கியா அகதிகளுக்கு வான் வழியாக வந்த உணவு பொட்டலங்கள்
வான் வழியாக வீசப்பட்ட உணவு பொட்டலங்களை சேகரிக்கும் ரோங்கியா அகதிகள் – நடுக்கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை!
தைவான் நகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம் - அதிபர் மாளிகை முன்பு கலவரம்
தைவான் நகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம் – அதிபர் மாளிகை முன்பு கலவரம். அமெரிக்காவின் அரவணைப்பில் இருக்கும் தைபே நாட்டில் தொழிலாளர் போராட்டம் இல்லை என்று யார் சொன்னது?
மும்பை: குப்பை கிடங்கே  கிரிக்கெட் மைதானம்
மும்பை: குப்பை கிடங்கே கிரிக்கெட் மைதானம். சச்சினுக்காக நினைக்கப்படும் மும்பையின் உண்மையான கிரிக்கெட் களம் இதுதான்!
மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் இரண்டாம் உலகப்போரின் வெற்றியை நினைவு கூறும் பேரணி
மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் இரண்டாம் உலகப்போரின் வெற்றியை நினைவு கூறும் ரசிய ராணுவப் பேரணி. முதலாளித்துவம் வந்தாலும் கம்யூனிசத்தின் வெற்றியை மறைக்க முடியாது!
உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஸ்பெயின் நாடு திண்டாடுகிறது. தலைநகர் மாட்ரிட்டில் அப்பார்ட்மெண்டை விட்டு குடியிருப்போரை விரட்டும் போலீசு, எதிர்க்கும் மக்கள்
உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஸ்பெயின் நாடு திண்டாடுகிறது. தலைநகர் மாட்ரிட்டில் அப்பார்ட்மெண்டில் குடியிருப்போரை விரட்டும் போலீசு, எதிர்க்கும் மக்கள்.
சிட்னி நகரில் மூக்கை கிள்ளும் தாலாய் லாமா.
சிட்னி நகரில் மூக்கை கிள்ளும் தாலாய் லாமா. அமெரிக்கா புரவலராக இருக்கும் வரை தாலாய் லாமாவின் கொஞ்சல் புகைப்படங்களுக்கு குறைவில்லை!
புது தில்லி: வெப்பத்தின் கொடுமையில் மொட்டை மாடியில் தூங்கும் மக்கள். இந்த ஆண்டு இந்தியாவில் வெயிலுக்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300க்கும் மேல்
புது தில்லி: வெப்பத்தின் கொடுமையில் மொட்டை மாடியில் தூங்கும் மக்கள். இந்த ஆண்டு  வெயிலுக்கு மட்டும் இந்தியாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300க்கும் மேல்.
கொலம்பியா மே தினப் பேரணியில் போலீசின் தடியடி. வீழ்ந்த கரம் எழும் போது ஓங்கிய கரம் விழாதா என்ன?
மே மாதம் 13-ம் தேதி மீண்டும் நேபாளத்தை தாக்கியது நிலநடுக்கம்.
மே மாதம் 13-ம் தேதி மீண்டும் நேபாளத்தை தாக்கியது நிலநடுக்கம். இந்த முறை மோடி விளம்பர கம்பெனிகள் போகவில்லையா?
செர்னோபில் அணுவுலை விபத்தில் இறந்து போன தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி
ரசியாவின் செர்னோபில் அணுவுலை விபத்தில் இறந்து போன தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி. கூடங்குளத்தில் ரசியா உதவியுடன் இந்தியா இயக்கும் அணுவுலையை மூடாவிட்டால் நமக்கும் சமாதிதான்!
கங்கையை சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை கைமாற்றும் விழாயவில் உமாபாரதி
கங்கையை சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை கைமாற்றும் விழாவில் உமாபாரதி. காவிக் கறையும், கங்கை அசுத்தமும் அத்தனை சீக்கிரத்தில் போகுமா என்ன?
வரலாறு காணாத முறையில் 5ம் முறை முதல்வராம்.பாலாபிஷேகம்.
வரலாறு காணாத முறையில் 5ம் முறை முதல்வராம். ஆவின் பால் ஊழல் புகழ் ‘அம்மாவிற்கு’ பாலோடு சேர்த்து பீராபிஷேகமும் செய்திருக்கலாமே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க