privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்அப்துல் கலாமின் மௌனம் - கேலிச்சித்திரம்

அப்துல் கலாமின் மௌனம் – கேலிச்சித்திரம்

-

asaiya-udhatukalபடம் : ஓவியர் முகிலன்

 1. இருக்கும் பொழுது தான் வாழவிடல

  போன பிறகாவது கேலி செய்யாம இருங்களேன்

  நல்ல வேளை அவர் பார்ப்பனர் இல்லை

  • //போன பிறகாவது கேலி செய்யாம இருங்களேன்//

   இதனை கேலியாக நினைத்தால் உண்மை செத்து போகும்.

   கலாம் பிஜேபி தொடர்பினால் முஸ்லிமாகவும் வாழவில்லை,
   தமிழனாகவும் வாழவில்லை, ஏன் மனிதானக கூட வாழவில்லை என்பதே உண்மை.

   • அருமைள்ர்யாகச் சொன்னீர்கள். சில ஜென்மங்கள் சமூக வலைத் தளங்ளில் மனநிலை கெட்டு கலாம் பற்றி கண்டபடி பிதற்றுகின்றன.

  • அறிவியல் வழிகாட்டி, இளைஞர்களின் எழுச்சி நாயகர், சிறந்த மனித நேயர், அணுசக்தி விஞ்ஞானி, அக்னியின் அரசன் என்று அப்துல் கலாம் புகழ் பாடும் அன்பு நெஞ்சங்கள், வெகு நாட்களாக நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு விளக்கம் கூறுங்களேன் .. 1. கடந்த 2002ல் குஜராத் கலவரம் என்ற பெயரில் இஸ்லாமியப் படுகொலை நடந்து முடிந்த பின், தனது இஸ்லாமிய எதிர்ப்பு முகத்தை மறைக்க அப்துல் கலாமை ஜனாதிபதியாக பாஜக முன் வைத்த போது, இந்த மனித நேயர், கருவிலிருந்த சிசுவையும் கொன்ற அக்கொலைகாரர்கள் வழங்கிய பதவியை ஏற்றுக் கொண்டது ஏன் ?. 2. தமிழகத்தில் அனைவரும் ’டாஸ்மாக்’கிற்கு எதிராக குரல் கொடுத்த சமயத்தில், இந்த ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ வாய் திறக்க மறந்து எங்கு ராக்கெட் ஏவச் சென்றிருந்தார் ? 3. ராமேஸ்வரம் மீனவர்களின் வீட்டில் உண்டு வளர்ந்தவன் நான் என்று பெருமைக்கு பீற்றிய இந்த மனித நேயர், சிட்டுக் குருவிகளைப் போல் இந்திய மீனவர்களை இலங்கை இராணுவப்படை சுட்டுக் கொன்ற போது எந்தப் பொக்ரானில் இட்லி சுட்டுக் கொண்டிருந்தார் ?. 4. இலங்கையில் சிங்கள இனவெறி நாய்கள் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த போது வாய் மூடி மௌனியானதன் காரணம் என்ன ?. 5. மாணவர்கள தான் இந்தியாவின் எதிர்காலம் என்று உதார் விட்ட வாய்கள், தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக அசைய மறுத்தது ஏன்? 6. 120 கோடி பேருக்கும் வல்லரசுக் கனவு ஊட்டி குதூகலித்த அக்னியின் அரசன் அதற்கான செயல்திட்டமாக எதையேனும் வகுத்துக் கொடுத்தாரா ?. 7. கூடங்குளத்தில் மக்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சினையை முன் வைத்துப் போராடும் போது, உள் நுழைந்த 3 மணிநேரத்தில் அணு உலையை தட்டிப் பார்த்து விட்டு, அணு உலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை, பாதுகாப்பானது என்று அறிக்கை விட்ட வாய், இடையில் அணு உலை கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன் ?. 8. ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று ஐ.நா வில் தமிழை தூக்கிப் பிடித்த கைகள் அநியாயமாக 20 தமிழர்கள் ஆந்திர போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது எதைப் பிடுங்கிக் கொண்டிருந்தன ?. 9. பிராடு சாய்பாபா, சங்கராச்சாரி போன்ற காவி கிரிமினல்களோடு கொஞ்சி உறவாடியதன் மர்மம் என்ன ? 10. 2020இல் வல்லரசு படம் காட்டிய பயாஸ்கோப், பல இலட்சம் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி வாய் திறக்காததன் பின்னணி என்ன ?. 11. நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது ஜப்பான் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான திட்டம், என்பதும் அது மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தெரிந்தும், அது ஆபத்தற்றது என்று பிரச்சாரம் செய்ததன் பின்னணி என்ன ?. 12. ஒன்றுக்கும் ஆகாத தனியார் கல்லூரிகளிலும், தனியார் பள்ளிகளிலும் போய் மாணவர்களைச் சந்திக்கிறேன் என்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத அந்நிறுவனங்களை பிரபலமாக்கியதைத் தவிர அங்கு சாதித்தது என்ன ? அந்தக் கல்வி நிறுவனங்கள் இதனைக் காரணம் காட்டி, அதிகக் கட்டணத்தை வசூலித்துக் கொண்டன 13. இவர் காலகட்டங்களிலோ அல்லது அதற்குப் பின்னரோ கூட இந்திய விண்வெளித்துறையும், அணுசக்தித் துறையும் ஏதேனும் ஒரு புதிய தொழிநுட்ப கண்டுபிடிப்பைச் (technological innovation) செய்ததுண்டா? 14.இந்திய மக்களின் வாழ்வை சூறையாடக் கூடியதும் இந்தியாவை அமெரிக்காவின் நிரந்தர இராணுவ அடிமையாக்குவத்ற்குமான அணுசக்தி -’ 123’ ஒப்பந்தத்திற்கு வாய் கூசாமல் வல்லரசுக்கான தேவை என்று புளுகி தனது ஆதரவைத் தந்தது யோக்கியத்தனமா ? 15. அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிராக வாயைத் திறந்து பேசாததன் பின்னணி என்ன ? மக்களின் போராட்டங்கள் குறித்தோ, தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை குறித்தோ, மாணவர்களின் டாஸ்மாக் சீரழிவுக் கலாச்சாரம் குறித்தோ வாயைக் கூடத் திறக்காத இந்தப் புண்ணியவானுக்கு சரியாகத் தான் பெயர் வைத்திருக்கின்றனர் – மக்களின் ஜனாதிபதி என்று – கிரிமினல் ஜெயாவிற்கு பெயர் வைத்தார்களே மக்களின் முதல்வர் என்று – அதைப் போல .. தனது வாழ்க்கை முழுவதும் கார்ப்பரேட்களின் ஊழியங்களுக்கும், இந்துத்துவாக்களின் கரசேவைக்கும், தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அப்துல்கலாமிற்கு பொருத்தமான அடைமொழி ஒன்றே ஒன்று தான் “காவி, கார்ப்பரேட் கைக்கூலி” இங்கு சுட்டிக் காட்டப்படும் அனைத்து சம்பவங்களிலும் வாய் திறந்து கருத்து தெரிவிக்க வாய்ப்பு இருந்தும் கள்ள மவுனம் சாதித்ததால் தான் அப்துல் கலாம் ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு ஏற்கனவே மக்களின் மண்டையில் ஏற்றப் பட்டிருக்கிறார். மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையில் களத்தில் நிற்கும் போராளிகள் அப்பிரச்சினை குறித்து உண்மையாக நடந்துகொண்டதால் தான் இதே ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டனர். இப்படி மக்களின் பிரச்சினைகளுக்காக மயிரைக் கூட கழட்டாத இந்த ஜந்துவிற்காக, அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உழலும் நாம் ஏன் அழ வேண்டும்? அன்றாடம் பல நூறு இந்தியக் குழந்தைகள் ஊட்ட்டச் சத்துக் குறைவால் இறந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் வல்லரசுக் கனவைக் காட்டி மக்களை திசை திருப்பிய ஒரு ஐந்தாம் படைக்கு – பாம்பன் கடலில் சிலையும், ரூபாய் நோட்டில் முகரக் கட்டையும், பீச்சில் சமாதியும் தான் ஒரு கேடா ?. என்ன இருந்தாலும் அவர் தனி மனித ஒழுக்கம் பூண்டவர் என்று பதில் கூறுபவர்களுக்கும், அவர் இறந்த சூழலில் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கூறுபவர்களுக்கும் ஒரே ஒரு பதில் தான். ஹிட்லரும் தனி மனித ஒழுக்கம் பூண்டவர் தான், இறந்து விட்டார் தான் – ஏற்றுக் கொள்வீர்களா ஹிட்லரையும் நல்லவர் என்று ? வரலாற்றில் ஹிட்லர் இறந்த பிறகு அவரைப் பற்றி பேசும் போது நல்ல விசயங்களை மட்டுமே பேச வேண்டும் என்றால் இப்படியும் பேசலாம் – ஹிட்லர் உணவு விசயத்தில் எந்த உயிரையும் கொன்றது கிடையாது – அவ்வளவு நல்லவர் – சுத்த சைவம் என்று. அப்துல் கலாமை தலை மேல் வைத்துக் கொண்டாடும் அன்புடையீர், தயவு செய்து இக்கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன் !!!

 2. பிஜேபிக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்க்கு தேவையான வாக்குகள் இருந்திருக்குமானால் பைரோன்சிங் ஷெகாவத் தான் ஜனாதிபதி ஆகியிருப்பார்.

  கலாம் பிஜேபிக்கு கிடைத்த வாடகை முஸ்லிம்

 3. அப்துல் கலாமின் உதடுகள் பேச மறந்தவை ஏன்பதை திருத்தி பேச மறுத்தவை ஏன்று சொலதவது பொறுத்தமாக இருக்கும்.

 4. வினவுக்கு பிரபலமான யாரயும் பிடிக்காது.டாடா முதல் நேற்று பிறந்த முதலாளி வரை…அமெரிக்க முதல் அண்டார்டிக்கா வரை…அதில் அப்துல் கலாமும் ஒருவர்….இதில் வியப்பேதுமில்லை.கலாம் குடியரசு தலைவராக எல்லா கட்சிகளாலும் ஒருமித்து தேர்ந்துடுக்கபட்ட குடியரசு தலைவர்.அவர் அரசியல்வாதி அல்ல.கடைசி வரை அவர் சிந்தனைவாதியாக ஒரு பேராசிரியராக தான் வாழந்து மறைந்தரே அன்றி அங்கும் இங்கும் சென்று அரசியல் பேசி அரசியல் செய்து ஆள் பிடித்து தரகு வேலை பார்க்கவில்லை.தன் வாழ்நாள் முழுதும் கல்வி & கல்வி சார்ந்த அமைப்புகளில் உரையாற்றுவதையே லட்சியமாக, ஆவலாக, விருப்பமாக தான் கற்ற கல்வியை அடுத்தவருக்கு எடுத்து சொல்வதில் ஒரு தேர்ந்த ஆசிரியனாக இருந்தார் என்பதற்கு அவரது கடைசி கூட்டம் ஒரு உதாரணம்.ஜெயேந்திரர் காலில் உட்கார்ந்து இருப்பதும்,சேவாகர் சிலையை கும்பீட்டதும் அவருக்கு கொள்கை அல்லது அது ஒரு பெரிய விசயமாக அவருக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். இந்திய குடியரசு தலைவர் என்பது ஒரு பொம்மை பதவி என்று அனைவரும் அறிந்ததே.அந்த பொம்மை பதவியையும் எந்த காலத்திலும் அவர் தனக்காக கூட உபயோகிக்கவில்லை.தன் குடும்பத்தினர் கூட அந்த மாளிகையில் இருக்க அனுமதிக்கவில்லை என்பதை நாடே அறியும்.அப்படி வாழ்ந்த ஒரு தன்னலமற்ற ஒரு மனிதனை அவசியமில்லாமல் தூற்றுவது எழுதிய நண்பருக்கும் மதிப்பு இல்லை…அந்த எழுதுகோலுக்கும் இனி மதிப்பில்லை.

  • Super boss… Well said… Nowadays vinavu is doing too much atrocities… not genuine and truth… scolds everybody unnecessarily… nw i started to hate vinavu…

  • பொன்னுசாமி, பிரவீன்,

   டாடா முதல் அப்துல்கலாம் வரை, அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகள் குறித்து இப்படி குறைபட்டுக் கொள்கிறீர்களே! ஒரே ஒரு உதாரணம் மூலம் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் ..

   ஒரு நாகரீக காட்டுமிராண்டிக் கூட்டம் ஒரு பச்சிளம் குழந்தையைக் கொல்கிறது. அதனை முன் நின்று நடத்திய கிரிமினல் கூட்டத்தை மறு நாள் மற்ற அனைவரும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். அவர்களின் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அக்காட்டுமிராண்டிக் கூட்டம் இந்த விசாரணையிலிருந்து தப்பிக்க, தன்னை யோக்கியனாகக் காட்ட, அந்தக் குழந்தையின் உறவினர் ஒருவருக்கு பெரும் விருந்துக்கு அழைப்பு விடுத்து விருந்து வைக்கின்றனர். பின்னர், ”பார்த்தீர்களா, அந்த்க் குழந்தையின் சொந்தக்காரரே எங்கள் விருந்தில் பங்கேற்றுள்ளார், நாங்கள் எப்படி குழந்தையைக் கொன்றிருப்போம். குழந்தை தானாக எங்கள் கவனத்திற்கு அப்பாற்பட்டு இறந்து விட்டது”. என்று கூறுகின்றனர்.

   இதில் அந்த உறவினருக்கு அக்குழந்தையைக் கொன்றவர்கள் அக்காட்டு மிராண்டிகளே என்பது தெரியும். ஆனால் அவர்கள் கொடுத்த விருந்தில் கலந்து கொள்கிறார். இது ஏற்புடையதா ?.. அத்தகைய ஒரு மனிதனைக் காறி உமிழ மாட்டோமா ?.. கேவலம் ஒரு விருந்துக்காக அப்பாவிக் குழந்தையைக் கொன்ற கயவர் கூட்டத்தின் முகமூடியாய் நடந்து கொண்டானே, இவனெல்லாம் ஒரு மனிதனா என்று உமிழ்ந்திருக்க மாட்டோம் ?..

   இதை 2002 குஜராத் கலவரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டு, ஒரு நிறை மாதக் கர்ப்பிணியாய் இஸ்லாமியப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவில் இருக்கும் சிசுவை வெளியில் எடுத்து அதனை இரண்டாக வெட்டிக் கொன்ற சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு, தன் மீது விழுந்திருக்கும் இஸ்லாமிய விரோதி என்ற கறையை துடைப்பதற்காக அப்துல் கலாமை ஜனாதிபதியாக் முன்னிறுத்தினர்.
   நடந்த கொடுமைகள் எல்லாம் தெரிந்த பின்னும், அந்தக் கிரிமினல் கூட்டத்தின் முகத்திரையைக் காக்க அப்பதவியை அலங்கரித்தது மட்டுமல்லாமல், அதன் பின்னர் குஜராத்திற்கு சென்று மோடியின் நிவாரணப் பணிகளையும் பாராட்டி விட்டு வந்த கொடுமையை என்னவென்று சொல்வீர்கள்?

   இறந்த பின்னர் குற்றம் சொல்லக் கூடாது என்றால், வரலாற்றில் எவரைப் பற்றியுமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது போய்விடும் என்பதை உணர்ந்து தான் பேசுகிறீர்களா ?.. அஜ்மல் கசாப் இறந்த பிறகும் இதே ஒழுக்க நெறியை பின்பற்றினீர்களா ?.

 5. இப்ப புரியுது காந்தி, ஏசு,நபி,சிவன்,முருகன்,கருப்பன்,சுப்பன் எல்லாம் மக்கள் மனதில் எப்படி வந்தார்கள் என்று..

  இன்றைக்கு இன்னொரு brand உம் வந்து விட்டது. கலாம் என்கிற புது brand வந்துவிட்டது.இனி அவன் அவனும் விளம்பரம் செய்வான்.

 6. விளம்பரத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு,

  ஒபாமா வாரா ராம், வெள்ளை மாளிகை கொடி அரை கம்பத்தில் பறக்குதாம். இந்த அளவுக்கு கீழ் தரமான கூட்டம் வேறு எங்கு இருக்க முடியும்.

 7. கேலிச்சித்திரம் சொல்வது உண்மை ஆனால் சொன்ன நேரம் சரிதானா என்பதை வினவு புரிந்துக்கொள்ளவேண்டும் மற்றும் மக்களின் மனநிலையை புரிந்து செயல் பட வேண்டும், சொன்னது சரியாக இருப்பினும் சரியான நேரத்தில் கூறினால் தான் எடுபடும்.

 8. டாக்டர் கலாம் நல்லமனிதர், பி.ஜே.பி அவரை பயன்படித்தி கொஎண்டது.ஆனால் அவருக்கு சர்வதேச அளவில் கிடைக்க இருந்த இருதி மரியாதையை, பாதுகாப்பு என்ற பெயரில் முடக்கியது.யாகூப்புக்கு கொடுத்த தண்டனையும் மதம் சார்ந்த வெறிதான்

 9. பொதுவாக மறைந்த பிறகு ஒருவரை போற்றியே பேச வேண்டும் எனும் எழுதப்படாத நாட்டில் வாழ்கிறோம்.தன்னலம் இல்லாதவர் – நேர்மையாளர் – எளிமையானவர் – மிக சிறந்த அணு விஞ்ஞானி – எளிய குடும்பத்தில் இருந்து முன்னேறியவர் – ஜனாதிபதி மாளிகையின் தடைகளை தகர்த்தவர் இன்னும் பல பெருமைக்கும் சாதனைக்கும் உரியவர் அந்த மாமேதை என்பதில் பேதம் இல்லை …..

  01.ஆனாலும் 2020 ல் வல்லரசாக எந்த சாத்தியமான திட்டங்களை முன் வைத்தார்?
  02.வறுமையை விரட்ட என்ன முனைப்பை காட்டினார்?
  03.இன்றைய கல்வி முறை பணத்தை போட்டு பணம் பார்க்கும் வணிக முறையை மாற்ற என்ன துணை புரிந்தார்?
  04.ஒழுக்கம் பற்றிய சிந்தனையே இல்ல்லாமல் தொடரும் கல்வி முறையை பற்றிய அவர் கண்ட கவலைகள் என்ன?
  05.தன்னிறைவு பெற்ற கிராம பொருளாதாரம் உருவாக அவரது திட்டங்கள் என்ன?
  பல விடை தெரியாத வினாக்களோடு எல்லோரும் பாராட்டும் போது நாமும் சேர்ந்திடுவொம் என்ற நிலையில்தான் இந்த நிகழ்வுகள் சடங்குகளாகின்றன.

 10. இந்த நேரத்தில் இந்த விமர்சனம் தேவையா? இறந்து போன பிறகு ஒரு மனிதரை விமர்சிக்கலாமா? போன்ற கேள்விகளெல்லாம் அபத்தத்தின் உச்சம்.
  ஒருவர் வாழும் போது அவரின் செய்கைகளால்தான் மதிக்கப்படுகிறார். இறந்த பிறகும் அவற்றாலேயே மதிப்பிடப்படுகிறார். இதில் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?
  உயிருடன் இல்லை என்பதற்காக Hஇட்லரை புகழ்ந்து கொண்டாட முடியுமா என்ன?
  Hஇட்லருடன் கலாமை ஒப்பிடுகிறேன் என்று யாரேனும் இதற்கும் மறுமொழி இடக்கூடும்.
  அறிவிலிகளாகவே வாழ்வேன் என்போரை யாராலும் திருத்த முடியாது.

 11. அப்துல் கலாம் நல்லவரோ கெட்டவரோ ஆனா பாருங்க அவரு டப்பா காலேஜ் காசு புடுங்கி யுனிவர்சிட்டிகளுகெல்லாம் கான்பரன்ஸுக்கு போயி அவுக பிஸினசயெல்லாம் டெவலெப் பன்னி விட்டுட்டாறு, அட்லீஸ்ட் காசு புடுங்கி காலேஜ் ஸ்கூலுக்கெல்லாம் நான் வரமாட்டே என்ன வச்சு பிஸினச டெவலப் பண்னாதீங்க அப்பிடினாவது சொல்லி இருக்கலாம், அனா பாருங்க தமிழன் தாலியருத்து அமெரிக்கா டெக்னாலஜி வச்சி 6000 மெகாவாட் மின்சாரம் எடுக்குறதுக்கு மட்டும் நல்லா வாயத்திறந்தாருங்க ,இப்ப மொளன சாமியரு சொன்ன வினவுதான் அப்துல் கலாம் வாயிலிருந்து 6000 மெகாவாட் மின்சாரமுனு சொல்லிச்சி…

 12. வாழ்ந்தாலும் இறந்தாலும் மனிதர் மனிதர்தான். வாழும்போது அவர் எப்படி வாழ்ந்தார் என்று பார்க்க வேண்டும். கலாமை ஒரு முஸ்லீமாக பார்க்ககூடாது. அவரை ஒரு மனிதராக ஒரு இந்தியராகப் பார்க்கவேண்டும். இவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன!! இவர் எவ்வளவு கோடிகள் சம்பாதித்து வைத்துள்ளார் என்றெல்லாம் பார்க்கவேண்டும்!!! இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வாழ்ந்து நிர்வாகம் செய்து வந்தார். இவர் முஸ்லீம் என்பதற்காக இவருக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப்படவில்லை. இவரது அறிவு ஞாலம் நேர்மை மக்களை நேசிக்கும்தன்மை ஆகிவைகளை பார்த்துதான் இவருக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது.

  அடுத்து “வினாவுக்கு” ஜனாதிபதி பதவி கொடுத்து இந்திய மக்கள் அழகு பார்க்க வேண்டும். ஐ.எஸ். இயக்க படுபயங்கரவாதிகளை பிரதமராகவும் அமைச்சர்களாகவும் நியமிப்பார். இதற்கு மதசார்பின்மை சாயம் பூசுவார். வாழ்க இவர்களின் ஜனநாயகம்!!!!!!!!!!!!!!

  • திரு நாட்ராயன் அவர்களே தாங்கள் ஒருமுறை (கட்டுரைத் தலைப்பு:சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்காருக்குத் தடை!: 29.05.2015, இரவு 8.10)” பெரியாரும் தமிழர் அல்ல அம்பேத்கரும் தமிழரல்ல!! அப்படி இருக்கையில் ஏன் இந்த குடைச்சல்!!! தமிழர் அல்லாதவர்களுக்கு வக்காலத்து!!!!!! அதுசரி அம்பேத்கார் என்பவர் யார்?” என்று பின்னூட்டம் இட்டீர்கள். ஆனால் தற்பொழுது “கலாமை ஒரு முஸ்லீமாக பார்க்ககூடாது. அவரை ஒரு மனிதராக ஒரு இந்தியராகப் பார்க்கவேண்டும்” என்று கூறுகிறீர்கள்? இது என்ன முரண்பாடு? அவ்வாறாயின் அம்பேத்கர் பெரியார் ஆகியோரும் இந்தியர்தான் என்று தாங்கள் ஏன் கருதவில்லை? இந்தியராகிய அம்பேத்கர், பெரியார், அப்துல்கலாம் ஆகிய மூவரில் முதலிருவரை தமிழர் அல்ல என்று கூறி மறுக்கும் தாங்கள் பின்னவரை பெருந்தன்மையுடன் தமிழர் இசுலாமியர் என்ற அடையாளங்களைக் கடந்து மனிதர் இந்தியர் என்று பார்க்கிறீர்கள். என்னே தங்களின் பொதுமைக் கண்ணோட்டம்!!!. இங்கு தங்களின் ஒருசார்புத்தன்மை எவ்வளவு தெளிவாக வெளிப்படுகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு கருத்துத் திணிப்பாகவோ அல்லது காழ்ப்புணர்ச்சியாகவோ வடிவம் கொள்வது நலமுடையதல்ல. திரு அப்துல்கலாம் குறித்த தங்களின் கருத்தைப் படித்தவுடன் தாங்கள் முன்னர் இட்டப் பின்னூட்டம் நினைவில் எழுந்தது. அதனால்தான் இந்தப் பின்னூட்டம். நன்றி.

 13. என்னையா கலாம்,கலாம் நு ஒப்பாரி வைக்குறிங்க….
  இருந்தாரு,…போய்டாரு,…அவ்லோதான்..
  எவருக்கும் மனிதர் இறந்த செய்தி கேட்டால் வருத்தம் இருக்க தான் செய்யும்.
  என்னமோ இவர் மட்டும் தான் வாழ்ந்தார்,நல்லவர்,நேர்மையானவர்,எளிமையானவர்,ராக்கெட் விட்டவர் நு சொல்றத பார்தா இந்த நாட்டுல இருக்குற 120 கோடி மக்கள் அனைவரும் வேலை வெட்டி இல்லாத பொறுக்கி கூட்டம் நு தோனுது.

  இந்த நாட்டின் உண்மையான கதாநாயகர்கள் உழைப்பவர்கள் தான். உதாரணத்திற்கு ஒரு apartment இல் உள்ள toilet இல் ஒய்யாராமா உக்காந்த படியே குண்டி கலுவுறதுக்கு குறைந்தது 200 கோடி மக்களுடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆம் முதலில் கட்டடம் கட்ட குழி தோன்டனும். குழி வெட்டனும் நா jcb எந்திரம் வேணும். Jcb எந்திரம் வானத்தில் இருந்து வந்து விடாது. எந்திரத்தை வடிவமைக்க தொழிற்சாலை வேணும். அந்த தொழிற்சாலை அமைக்க பல கோடி மக்களின் மறைமுக உழைப்பு தேவைபடும்.இப்போ எந்திரத்தை வடிவமைக்க மூல பொருள் வேணும் steel,glass,plastic,rubber,copper,paint,etc…இந்த மூல பொருட்க்ளை உருவாக்க பல தொழிற்சாலை வேணும் இதற்கு பல கோடி மக்களின் உழைப்பு தேவைபடும். தொழிற்சாலையை இயக்க எரிசக்தி வேணும்.எரிசக்தி ய உருவாக்க power plant and oil&gas plant வேணும்.இதை வடிவமைக்க பல கோடி மக்களின் மறைமுக உழைப்பு தேவைபடும். மூலபொருள்,எரிசக்திய
  அந்த jcb எந்திர தொழிற்சாலை க்கு கொண்டு போக துறைமுகம்,சாலைகள் அமைக்க வேண்டும் இதனை அமைக்க பல கோடி மக்களின்
  மறைமுக உழைப்பு தேவைப்படும். இப்போ அந்த தொழிற்சாலைஇல் jcb எந்திரத்தை வடிவமைக்க 1000 தொழிலாளர்கள் வேணும்.
  இறுதியாக jcb ready.

  இப்போ குழி வெட்டியாச்சு அடுத்து concrete போடனும்.அதுக்கு cement,sand,aggregate,water வேணும். Cement தயாரிக்க
  தொழிற்சாலை வேணும்.அதுக்கு மூலபொருள் வேணும்.மூலப்பொருள்களை உருவாக்க தொழிற்சாலை வேணும்.இதுக்கு பல கோடி
  மக்களின் உழைப்பு தேவைப்படும்.இப்போ cement ready.இப்போ cement ஐ தொழிற்சாலை இல் இருந்து தகுந்த இடத்துக்கு கொண்டு
  செல்ல வாகனம் தேவை.வாகனத்தை உருவாக்க பல தொழிற்சாலைகள் வேணும்.இதுக்கு பல கோடி மக்களின் மறைமுக உழைப்பு
  தேவைப்படும்.இப்போ cement site க்கு வந்தாச்சு.அடுத்து sand வேணும்.மணல், குவாரி இலிருந்து கொண்டு வர வாகனம் தேவை.அந்த
  வாகனத்தை உருவாக்க பல கோடி மக்களின் உழைப்பு தேவை.இப்போ sand ready.அடுத்து ஜல்லி வேணும். அதுக்கு குவாரி
  வெட்டனும்.குவாரி தோண்ட வெடி வைக்கனும். வெடி தயாரிக்க அதுக்கு ஒரு தொழிற்சாலை வேணும்.பாறைகளை அல்ல pocline
  எந்திரம் வேணும்.அதை உருவாக்க பல தொழிற்சாலை வேணும்.அதுக்கு பல கோடி மக்களின் உழைப்பு தேவைப்படும்.ஜல்லி யை site
  க்கு கொண்டு வர வாகனம் தேவைப்படும்.அந்த வாகனத்தை உருவாக்க பல கோடி மக்களின் உழைப்பு தேவைப்படும்.அடுத்து water
  வேணும்.அதுக்கு bore well வேணும். அதற்க்குரிய எந்திரத்தை உருவாக்க பல கோடி மக்களின் உழைப்பு தேவைப்படும். Water அ pump
  பண்ண motor வேணும்.அதுக்கு தொழிற்சாலை வேணும்.திரும்ப பல கோடி மக்களின் உழைப்பு.

  இப்போ water ready.அடுத்து cement,sand,aggregate,watter எல்லாத்தையும் mix பண்ணி concrete போடனும். அதுக்கு மேல கம்பி
  கட்டி concrete போடனும். அந்த கம்பிய உருவாக்க திரும்ப steel plant வேணும்.அதை உருவாக்க பல கோடி மக்களின் உழைப்பு
  வேணும்.concrete shape அ வர centring&shuttering materials வேணும்.அதை உருவாக்க பல கோடி மக்களின் உழைப்பு தேவைப்படும்.
  இவை அனைத்தும் வைத்து கட்டடம் கட்ட சில நூறு தொழிலாளர் கள் தேவைப்படும்.இறுதி யாக finishing வேலை செய்ய
  tiles,bricks,paint,electric works,plumbing works,etc…இவை அனைத்தயும் உருவாக்க தொழிற்சாலை தேவைபடும்.இதற்கு பல கோடி
  மக்களின் உழைப்பு தேவைப்படும்.

  இத்தனை தொழிற்சாலைகள் அமைக்க கல்வி அறிவு தேவை.அதற்க்கு பல பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைகழகங்கல் தேவப்படும்.
  இதை உருவாக்க பல கோடி மக்களின் உழைப்பு தேவப்படும்.இத்தனை கோடி மக்கள் உழைப்புக்கு அவர்களுக்கு எரி சக்தி தேவைபடும்.அதற்கு உணவு வேணும்.அதற்காக பல கோடி மக்கள் விவசாயம் செய்ய வேண்டும்.அந்த மக்களின் உடல் நிலையை கவனிக்க பல hospital கட்ட வேண்டும்.அதுக்கு பல கோடி மக்கள் உழைப்பு தேவைப்படும்.
  இந்த கட்டமைப்பு நடக்கும் பொழுதே பல லட்சம் மக்கள் விபத்தில் ம் வறுமை லும் கடன் சுமையிலும் இறக்க நேரிடும்.
  இறுதியாக நாம் கட்டமைத்த கட்டிடத்தில் உள்ள toilet இல் EWC ய fit பண்ணி ஒய்யாரமா உக்காந்தபடி கழுவிக்கலாம்.

  ஆக தூண்டிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் இறைவன் னு சொல்றாங்க இது எவ்ளோ பெரிய மோசடி..இந்த உலகை இயக்கும் உழைக்கும் மக்களுக்கு தான் அத்தனை புகழும் பாராட்டுக்கலு ம்.
  உழைக்கும் மக்களுக்காக போராடும் communist கள் மத்தியில் நான் வாழ்வதை பெருமை யாக கருதுகிறேன்.
  காந்தி,கலாம் போன்றோர்கள் சோழக்காட்டு பொம்மைகள் தானே ஒழிய புகழுக்குரியவர்கள் அல்ல.அனைத்து புகழும் உழைக்கும் மக்களை சென்றடையட்டும்.

 14. ஓர் அரசியல்வாதியிடம் எதிர்பார்ப்பதை விஞ்ஞானியிடம் எதிர்பார்கிறீர்கள் . அவர் என்றும் தன்னை அரசியல் தலைவர் என்று கூறி கொள்ளவில்லை .

  ஒரு விஞ்ஞானியாக நாட்டிற்கு தனது பங்களிப்பை செய்துள்ளார். முடிந்தால் பாராட்டுங்கள் .

  நான் ஐந்து முறை தொளுறேன் , அவர் தொழவில்லை அதனால் கலாம் கிரேட் இல்லை என்று ஒரு மதவாதி கூறினால் எப்படி புறம் தள்ளுவோமோ , அது போல இந்த கார்டூனையும் …

  நாம் செய்வதை வைத்து , நமது செயல்களால் மட்டும் ஒருவரை அளக்க முயற்சிப்பது தவறு .

  • அவர் விஞ்ஞானியாக மட்டும் இருந்திருந்தால் இந்த கார்ட்டூன் வந்திருக்காது. அவர் ஜனாதிபதியாக இருந்தவர். அதன் பிறகு மக்கள் பார்வையில் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். அவர் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் தான் குஜராத் படுகொலைகள் நடந்தன. எனவே, அவர் அதை பற்றி ஏன் பேசவில்லை என்பது நியாயமான கேள்வி.

   எனினும், அவர் இறந்த பொழுது விமர்சனத்தோடு கூடவே, அவரை பற்றி பேச ஒரு நல்ல விஷயம் கூடவா வினவுக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வியில் நான் உடன்படுகிறேன். “குஜராத், இலங்கை படுகொலைகள் பற்றி பேசாதவர்” என கலாமை சுருக்கி விட முடியுமா? இவ்வளவு தானா கலாம்?

   • //இவ்வளவு தானா கலாம்?

    கார்ட்டூன் ஈழப் படுகொலையின் போதும் குஜராத் முசுலீம் மக்கள் படுகொலையின் போதும் வாய் மூடி மௌன சாமியாராட்டம் இருந்தார் என்று தான் கூறுகிறது.

    அவரது பிற சாதனைகள் காதுல ரத்தம் வர அளவிற்கு அவர் புகழ கேடியில் இருந்து ஒபாமா வரைக்கும் பாடுராங்களே. இதுக்கு மேலயும் நீங்க என்ன வினவுகிட்ட எதிர்பாக்குறீங்க?

   • \\“குஜராத், இலங்கை படுகொலைகள் பற்றி பேசாதவர்” என கலாமை சுருக்கி விட முடியுமா? இவ்வளவு தானா கலாம்?\\

    ஏன் இல்லை? நிறைய இருக்கிறது. செய்திகளில் இந்த மூன்று நாட்களாக ஓடிக்கொண்டிருப்பவை, எனது நினைவில் இருந்து சற்று தொகுக்கிறேன்.

    1. கலாமுக்கு பூரண போலி என்றால் கொள்ளை உயிர்.
    2 கலாம் சுத்த சைவம்.
    3. கலாமை கலாம் ஐயர் என்றே அழைப்போம். (திணமணி வைத்தி குஷி செய்தி!!!!)
    4. கலாம் கிரைண்டர் காசைத் திருப்பிக்கொடுத்தவர்!

    மேற்கொண்ட நான்கும் இறந்த மனிதனின் தகுதிகளாக பார்க்கப்பட வேண்டியவையா? ஏன் செய்தித்தாள்களுக்கு மனிதனைப்பற்றி வேறு விசயமே கிடைக்கவில்லை. அங்கு தான் மக்களை மொன்னையாக்குகிற ஊடகங்களின் அறம் முதன்மையாக வந்து நிற்கிறது. திரிசாவைப் பற்றியும் இப்படித்தான் எழுதுகிறார்கள். திரிசா வெண்ணைய் உணவுகளை விரும்பி உண்பார் என்பன போன்ற செய்திகள் தான் அனைத்திலும் நிரம்பியிருக்கின்றன.

    இதைத்தாண்டி கலாம், பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவை வல்லரசு பட்டியலில் சேர்த்தார் என்கிறார்கள். ஆனால் இது ஒரு வல்லமை என்று பத்திரிக்கைகள் கருதுமானால் அமெரிக்காவிற்கு எதிராக நார்த்கொரியாவும் ஈரானும் அணுகுண்டு சோதனை நடத்தினால் மட்டும் ஏன் புடுக்கறுந்த பன்றியாக கத்தவேண்டும்? அங்கே ஏன் அது வல்லரசு மாட்சிமையாகப் பார்க்கப்படவில்லை? இதை எப்படி புரிந்துகொள்வது?

    இதைதாண்டி மனிதன் அறஉணர்ச்சியை எப்படி மதிப்பிடுவது? பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து இவர்கள் எழுப்பும் குரல் தானே?! அவ்வளவு கூட வேண்டாம் சார். உண்மை உண்மைன்னு சொன்னா போதுமில்லையா?

    ஆனா அப்துல் கலாம் என்ன பண்ணாரு?

    1. 30 நிமிடங்களில் கூடங்குளம் அணு உலை சோதித்துவிட்டு பக்கா என்று புருடாவிட்டாரா இல்லையா? சரி அப்படியே புருடாவிட்டவர், போராடும் மக்களைச் சந்தித்து இரண்டு வார்த்தை பேசினாரா? இவய்ங்கெல்லாம் என்ன போராடுகிறார்கள் என்ற இளக்காரம் தான் அப்துல்கலாமிற்கு.

    2. கணவு காணுங்கள் என்று யாருக்கு சொன்னார்? இதுவரை கலாம் பங்காற்றிய நிகழ்ச்சிகள் அனைத்தும் தனியார் பல்கலைக்கழகங்கள், சாராய வியாபாரிகள் நடத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றில் தான் பங்கேற்றிருக்கிறார். ஆர் எஸ் எஸ் நடத்தும் ஆசிரம பள்ளிகளுக்கு போயிருக்கிறார். ஆனால் கல்வியில் நடக்கும் அப்பட்டமான கொள்ளைகளைக் கண்டித்து ஏதாவது பேசினாரா? இத்தனைக்கும் யாஷ்பால் கமிட்டி இந்திய உயர்கல்வி குறித்து தாக்கல் செய்த அறிக்கை மலம் துடைத்த காகிதமாக இருக்கிறது. எங்காவது இதைப்பற்றி கலாம் வாய்திறந்திருப்பாரா? எங்காவது அவர் கல்வியாளராக, இந்திய கல்வி நிலை குறித்து யோசித்து இருக்கிறாரா?

    3. மரம் நடச்சொன்னார். கோடிக்கணக்கில் ஒரு சில பேர் மரங்களை வெட்டிக்குவிக்கிற பொழுது அவர்களைப் பற்றிக் கண்டு கொள்ளாமல், மரம் நடச் சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா? இருபது தொழிலாளிகள் செம்மரம் வெட்டும் இடத்தில் போலி எண் கவுண்டருக்கு உள்ளாக்கப்பட்டார்களே அப்பொழுது அவர்களின் மனைவி மார்கள் குழந்தைகள் இரவில் பயங்கரக்கனவு கண்டு உளவியல் தொல்லைக்கு ஆளாகும் பொழுது கணவு காணுங்கள் என்று எதைச் சொல்கிறார்?

    4. நியுட்ரினோ ஆய்வகத்தைப் பொறுத்தவரை கலாம் பச்சையாக பொய்சொல்லியிருக்கிறார். மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை எதிர்த்துப் போராடும் பொழுது நியுட்ரினோ ஆய்வகம் தேசத்தின் பெருமை என்றார். நியுட்ரினோவை மக்கள் நியுட்ரான் என நினைத்துக்கொண்டு கதிர்வீச்சிற்கு பயப்படுவதாக பச்சையாகப் புளுகினார். ஆனால் நியுட்ரினோ ஆய்வகம் குண்டுகளை இயக்கத் தேவையான தொலைத்தொடர்புக்கு பயன்படுத்த முடியும். தொலைதொடர்பு குறித்த தகவல்கள் ஏகாதிபத்தியத்தின் கீழ் தான் இயங்குகிறது என்பது பச்சைப் புள்ளைக்குக் கூட தெரியும். ஆனால் கலாமிற்குத் தெரியாதா? நம் உடம்பில் இருந்து பில்லியன் கணக்கில் நியுட்ரினோக்கள் உமிழப்படும் பொழுது அதைத் தொலைத்தொடர்பிற்கு பயன்படுத்த முடியும் என்றால் நியுட்ரினோ எவ்வளவு பெரிய ஆயுதம்? இதையெல்லாம் பேசியிருக்க வேண்டுமா இல்லையா?

    இதுபோக வேறு ஏதாவது இருக்கிறதா? பகிருங்களேன்.

   • //அவர் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் தான் குஜராத் படுகொலைகள் நடந்தன//

    ஒரு ஜனாதிபதி தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எல்லா சூழ்நிலையிலும் செயல்பட முடியாது . அம்பேத்கர் அப்படிதான் அந்த பதவியை உருவாக்கினார் . ராணுவத்தின் அதிகார சமநிலையை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு பதவி. நீதித்துறை, பாராளுமன்றம் போன்றவையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே செயல்பட முடியும் .

    எது சரி தவறு , எந்த பிராஜச்டுகள் நாட்டுக்கு நல்லது என்று வினவு குழு முடுவி எடுத்து விஞ்ஞானிகளுக்கு சொல்வார்களாம் , அதை கலாம் போன்ற விஞ்ஞானிகள் ஏற்று கொள்ள வேனுட்மாம் . ..காலக் கொடுமை.

    தனியார் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் அரசியவாதியா அவர்? மாணவர்களை விஞ்ஞான முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்கின்ற வரையறைக்குள் இருக்கும் அறிவியல் வழிகாட்டி.

    காவல்துறை எண்ணிக்கை பத்தவில்லை ,உங்கள் மாநிலத்தில் இருந்து காவலர்களை அனுப்புங்கள் என்று குஜராத் முதல்வர் கேட்ட பொது , காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களில் இருந்து உடனே அனுப்பி உதவி இருந்து இருக்கலாமே ? பீ ஜி பி நேரடியாக மதவாதி என்றால் , மறைமுகமாக பலனை அன்பவிக்க மவுனம் காத்த காங்கிரஸ் , மசூதி இடித்த பொது மவுனம் காத காங்கிரஸ் தான் , எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை

    “குஜராத், இலங்கை படுகொலைகள் பற்றி பேசாதவர்”
    “CRI பம்ப் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்காதவர் ”
    “பேருந்து கட்டணத்தை எதிர்காதவர் ”
    “துப்புரவு தொழிலாளி அளவுக்கு கூட உழைக்காதவர் ”

    என்று அவர் அவர் தெரிந்த அளவில் அளக்கலாம்

    • ஏப்பா இராமா கூசாமல் பொய் சொல்றீயேப்ப? கொஞ்சமாவது ஈரம் வேணாமா? உமது பொய்யெல்லாம் எந்தளவுக்கு கீழ்மையானது கொஞ்சம் யோசிப்பா!

     1. சனாதிபதி பதவி இராணுவத்தின் அதிகார சமநிலையை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட பதவின்னு சொல்றீக. முப்படைகளின் தலைவர் சனாதிபதிதான். மணிப்பூரிலும் காஷ்மீரிலும் AFPSC சட்டத்தின் படி இராணுவம் வெறிநாயாக வேட்டையாடிக்கொண்டிருந்தது. மணிப்பூரின் தாய்மார்கள் அம்மணமாக நின்றுகொண்டு, இந்தியா இராணுவமே என்னை கற்பழி என்று சொன்ன பொழுதும் இன்றைக்கும் அங்கே போராட்டமும் துப்பாக்கிச்சூடும் விடிவதற்கு முன்னமே விடிகிற பொழுது நீர் சொல்ற இராணுவ அதிகார சமநிலை எங்கப்பா போச்சு? வெட்கமாயில்லை?

     2. “தனியார் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் அரசியவாதியா அவர்?”ன்னு கேட்கிறீர்க. யாஷ்மால் கமிட்டி அறிக்கையை ஒப்புதலுக்கு கொண்டு வருவது யாருடைய வேலை? இப்ப கடோட்கர் கமிட்டி அறிக்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறதே. ஏதாவது குரல் கொடுத்தாரா? ஏதாவது ஒருபார்வையில் இருந்து விளக்குங்க பாஸு!

     3. காவல் துறை எண்ணிக்கை பத்தலைன்னு மோடி கும்பல் சொல்லியதா? ஐஜி சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் கன்ட்ரோல் ரூமில் இருந்து கொண்டு கலவரத்தை மோடி கும்பல் எப்படி திட்டமிட்டு நடத்தியது என்பதை ஆதாரபூர்வமாக நிருபித்தது. வாஜ்பாய் அனுப்பிய இராணுவம் வேடிக்கைதான் பார்த்துச்சு. பொதுக்கூட்டத்தல மேடை போட்டு பேசுனா 144 தடை உத்தரவு போடுறீயே கலவரத்துல பல ஆயிரம் பேர் கொன்னியே என்ன ஆர்டர் போட்டாய்ங்க? சொல்ல முடியுமா?

     4. அப்துல் கலாம் அறிவியல் வழிகாட்டின்னு சொல்றீங்க. களவாணி சாய்பாபாவை கும்பிட்டுவர் அறிவியல் வழிகாட்டின்னு சொன்னா அடுக்குமா? பகவத் கீதையும் குரானையும் படின்னு சொல்றவர் ஒரு டெக்னாலஜிஸ்ட்டா இருக்கலாம்; ஆனால் அறிவியலாளான இருக்கமுடியாது.அறவியலுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.

     5. ஆம் அவர் அவர் தெரிந்த அளவில் தான் அளக்கிறார்கள். ஆனால் எளியவன் பால் நிற்பதுதான் அறம். கலாமிடம் அது இருக்கிறதா?

     • ஆரோவில்லின் பாக்சர் அவர்களே !

      உங்களுடைய பாமரத்தனமான பதில்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை .

      ராணுவ அதிகார சமநிலை எனபது Checks and Balances என்பதை குறிக்கிறது . கடை நிலை ஊழியர்களின் அதிகாரத்தை சமன் செய்வதற்கல்ல . அரசியலமைப்பை பற்றி ஒரு மண்ணும் தெரியவில்லை ஆனால் கமெண்டு சத்ஹம் தாங்க மடியவில்லை .

      //யாஷ்மால் கமிட்டி அறிக்கையை ஒப்புதலுக்கு கொண்டு வருவது யாருடைய வேலை? //
      எல்லாமே பாராளுமன்றத்தின் வேலைகள் . endorsement மட்டும்தான் ஜனாதிபதி .

      //3. காவல் துறை எண்ணிக்கை பத்தலைன்னு மோடி கும்பல் சொல்லியதா?//
      ஆம் . மற்ற மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பியது . அவர்கள் அனுப்பி இருந்தால் கிரவுண்ட் ரியாலிட்டி எளிதாக தெரிந்து இருக்கும். சும்மா குத்து மதிப்பாக உலர வேண்டாம்.

      // அப்துல் கலாம் அறிவியல் வழிகாட்டின்னு சொல்றீங்க//
      ந்யூட்டன் ஆயிளர் ராமனுஜம் எல்லாருமே கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்தான் .அதற்காக அவர்களுடைய அறிவியல் பொய் ஆகாது

      // களவாணி சாய்பாபாவை கும்பிட்டுவர் அறிவியல் வழிகாட்டின்னு சொன்னா அடுக்குமா? பகவத் கீதையும் குரானையும் படின்னு சொல்றவர் ஒரு டெக்னாலஜிஸ்ட்டா இருக்கலாம்; ஆனால் அறிவியலாளான இருக்கமுடியாது.அறவியலுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.//

      ஒரு நல்ல ஜனாதிபதியாக நாட்டின் மத நல்லிணக்கத்தை தான் பேச முடியும் . மாற்று மத தலைவர்கள் அவமதித்தால் , நாட்டில் தேவை இல்லாத பிரச்சினையை கிளப்பும் . ________போன்ற மதி இல்லாதவர்களுக்கு கிஞ்சித்தும் புரியாது.

      ரோட்டில் டீக்கடையில் பேசுவது போல ஜனாதிபதி பதவியில் இருந்தவர் பேச முடியாது .
      போப் கலாம் அவர்களை வைத்து கொண்டு , மத மாற்றம் பற்றி பேசியபோது அதை எதிக்க அவர் தவறவில்லை. ஒரு போப் மதமாற்றம் பற்றி பேசுவதில் தவரில்லி , ஆனால் ஜனாதிபதியை வைத்து கொண்டு பேசுவதை அவர் எதிர்த்தார் .

    • //தனியார் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் அரசியவாதியா அவர்? மாணவர்களை விஞ்ஞான முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்கின்ற வரையறைக்குள் இருக்கும் அறிவியல் வழிகாட்டி.//
     அவுக பிஸினச டெவலப் பன்றது யோக்கியன் செய்கிற செயலா என்று என்னை நானே கேட்டு பார்த்த போது அது தவறு என்றுதான் என் மனம் சொல்கிறது, சரி அப்பிடி என்ன மாணவர்களின் அறிவியல் அறிவை முன்னேற்ற புடுங்கினார் என்றால் ஒரு ஆணியயும் புடுங்கவில்லை என்பதுதான் என் சிற்றறிவுக்கு எட்டிய பதில்…

  • அறிவுக் குட்டி ..

   2002 குஜராத் கலவரத்தின் போது அவர் ஜனாதிபதி என்று யாரும் கூறவில்லை. சிந்தித்துப் பாருங்க. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டு, ஒரு நிறை மாதக் கர்ப்பிணியாய் இஸ்லாமியப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவில் இருக்கும் சிசுவை வெளியில் எடுத்து அதனை இரண்டாக வெட்டிக் கொன்ற சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு, தன் மீது விழுந்திருக்கும் இஸ்லாமிய விரோதி என்ற கறையை துடைப்பதற்காக அப்துல் கலாமை ஜனாதிபதியாக் முன்னிறுத்தினர்.
   நடந்த கொடுமைகள் எல்லாம் தெரிந்த பின்னும், அந்தக் கிரிமினல் கூட்டத்தின் முகத்திரையைக் காக்க அப்பதவியை அலங்கரித்தது மட்டுமல்லாமல், அதன் பின்னர் குஜராத்திற்கு சென்று மோடியின் நிவாரணப் பணிகளையும் பாராட்டி விட்டு வந்த கொடுமையை என்னவென்று சொல்வீர்கள்?

 15. அரசவைக் கோமாளி அப்துல் கலாம் ஐயர்.இந்து மத வெறி பாசிசத்தை தெரிந்தே நெய் ஊற்றி வளர்த்தவர் அந்த ஐயர்.சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்று ஒரு முதுமொழி உண்டு.உலக மகா கேடி கிரிமினல் மோடி,கலாம் ஐயர் பொணத்துக்குப் புறத்தாலேயே வந்தாமுன்னா பாத்துக்கோங்கோ.செத்தும் கொடுத்தான் சீதக்காதி.செத்தும் கெடுத்தார் கலாம் ஐயர்.குஜராத் படுகொலைகள் பிப்ரவரி 2002 ல் நடந்தது .அப்புறம் தான் ஐயா பதவி ஏற்றர்.இனப் படுகொலை நடத்தியவர்கள் யார் என்றே கலாமுக்குத் தெரியவே தெரியாது.சாகும் வரை தெரியாது.இது தான் வேண்டும் பார்ப்பன பாசிசத்திற்கு.மேமனைப் பற்றி சொன்ன ராமன்,பேரறிவாளனைப் பற்றி சொல்கிற ராஜசேகர் இவர்களுக்கு உறுத்தல் இருந்தது.கலாமுக்கு எல்லாம் மரத்துவிட்டது.குஜராத்தில் இப்போதும் முசுலீம்கள் அடிமைகள்.கிட்டத்தட்ட அவர்கள் ராணுவ முகாமுக்குள் வாழ்வதைப் போல்தான் வாழ்கிறார்கள்.புலால் சமைக்கக் கூடாது உட்பட எண்ணற்ற கட்டளைகள்.பல்வேறு இந்து ஞானிகள் தான் கலாமை வார்த்திருக்கிறார்கள்.அவர் சாவுக்கு மனமுருகியவர்கள் இந்து அமைப்பினரும் அரைவேக்காடுகளும்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நிறையச் சொல்லலாம்..வேஸ்ட்..

 16. //இதைத்தாண்டி கலாம், பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவை வல்லரசு பட்டியலில் சேர்த்தார் என்கிறார்கள். ஆனால் இது ஒரு வல்லமை என்று பத்திரிக்கைகள் கருதுமானால் அமெரிக்காவிற்கு எதிராக நார்த்கொரியாவும் ஈரானும் அணுகுண்டு சோதனை நடத்தினால் மட்டும் ஏன் …….. பன்றியாக கத்தவேண்டும்? அங்கே ஏன் அது வல்லரசு மாட்சிமையாகப் பார்க்கப்படவில்லை? இதை எப்படி புரிந்துகொள்வது?//

  நீங்கள் நார்த் கொரியாவிற்கு சென்று சில காலம் தங்கி மக்களோடு மக்களாக பழகி வந்தால் மட்டுமே புரியும்

  • இராமா, நீர் மட்டும் நார்த்கொரியாவில் தங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்துவிட்டு வந்தவரா? ஆனா அந்த வாய்ப்பு இந்தியாவுல பிறந்த உமக்கு இருந்துச்சு இல்லையா? எழுத்தறிவு, கல்வி, ஊட்டச்சத்துக்குறைபாடு, பொதுப்போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியாவோட நிலைமை வெட்கத்தலைகுனியும் படி இருக்கிறப்ப, பொக்ரானில் குண்டுபோட்டதுக்கு வல்லரசுன்னு வீம்பா சவுடால் வீட்டாய்ங்கல்ல! இதுதான் அளவுகோல் என்றால் இதே அளவுகோல் நார்த்கொரியாவிற்கு வைக்கணுமா இல்லையா? இப்ப மட்டும் யோக்கியருமானி, மக்களோடு நிலைமையப் பாத்துதான் வல்லரசுன்றத தீர்மானிக்குனும்னு கருத்துசொன்னா கேக்குறவன் கேனைப்பயன்னு நெனக்க மாட்டானா? வல்லரசுன்ற வாதமே வெறும் வேசைத்தனமா நிக்குமில்லையா?

   அப்புறம் இன்னொரு டவுட்டு! அது ஏம்லே சந்தடிசாக்கில ஈரான விட்டுப்புட்டீக! நார்த்கொரியான்னா கம்யுனிசம் என்று ஏதாவது பொறுக்கலாம் என்பதுதானே. சரி இருந்துட்டுப்போகுது. வல்லரசு என்பதற்கு எது அளவுகோல்? கனவில் இருந்து மீண்டுவருமாறு கோருகிறேன்.

   • அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்பார்கள் . கற்பனையில் இருக்கும் உங்களுக்கு உதை மட்டுமே நிஜ உலகை பபுரிய வைக்கும் . என்ன பதில் சொன்னாலும் புரியாது .

    • அடேங்கப்பா,இன்னாமா கோவம் வருது பாரு புள்ளைக்கு.அட்சுருவாராம்ல.

     ரொம்பத்தா கோவப்படாத கண்ணு.உடம்புக்கு ஆவாது.ஏற்கனவே பிரஷர் சுகர் எல்லாம் ஏறிப்போய் கெடக்கு.இதுல டென்சன் ஆனனன்னு வைய்யி,பொட்டுன்னு போயிடப்போற.உஷாரா இர்ந்துக்க கண்ணு.

     • நான் அடிப்பேன் என்கின்ற அர்த்தத்தில் எழுதவில்லை . நார்த் கோரிய சென்று அடி வாங்கினாள் தான் புரியும் என்கின்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது . அவுட் ஆஃப் காண்டெக்ஷ்ட படித்துவிட்டு தவறாக புரிந்து kolluthal , திரித்தல் தேவை இல்லாதது

 17. நான் ஒரு கலாம் விரும்பி ஆனால் இந்திய மக்களின் அடிப்படை தேவைகளுக்கோ,அடிப்படை உரிமைகளுக்கோ எப்போதும் பேசியதும் இல்லை.எனவே முடிவு செய்தேன் இனி இவர் மாதிரி கோமாளிக்கு விரும்பியாக இருக்க கூடாது என்றும்…

 18. எனது மனதில் உள்ளதை அப்படியே வெளியிட்டுள்ளீர்கள். பேசவேண்டியவர்கள் பேசவேண்டிய நிகழ்வுகளில் பேசித்தான் ஆகவேண்டும். மௌனமாக இருந்து உலகத்தின் பார்வையை திருப்ப வேண்டிய பொறுப்பு இருந்த ஒருவர் அதை செயல்படுத்தவில்லை என்றால் தமிழ் உணர்வு இருப்பதாக பாராட்டிக் கொள்வதை ஏற்றுக் கொள்ள இயலாது. இவரின் செயல்பாடுகள் அணைத்தும் விளம்பரத்தை அடிப்படையாக கொண்டதே! பாராட்டதக்க ஒரே நடிவடிக்கை தூக்கு தண்டனையில் தள்ளிப்போட்ட செயல் மட்டுமே. மற்றபடி இவர் ஒரு அதிகாரியாக மட்டுமே நடந்து கொண்டார் தமிழராக இருந்து தமிழின படுகொலையை கண்டும் காணாமல் போனது ஏன்? மதமா? பின்னர் எப்படி மதசார்பற்றவர்?

 19. அப்துல் கலாம் இந்தியாவின் ஆரம்பகால விஞ்ஞானி.
  சுதந்திர இந்தியாவின் முதற்கட்டமைப்பின் தலைவர்கள்,விஞ்ஞானிகள்.
  இவர்கள் அவர்கள் துறையின் தலைவர்களாக(Departmental Head,Project Directors etc)பொறுப்பாளர்களாக பதவியில் அமர்த்தப்பட்டனர்.
  இவர்களின் அப்போதைய தகுதி என்பது ஒரளவுக்கு இயற்பியல் சார்ந்த பட்டப்படிப்புடன் அப்போதைக்கு சீனீயர் என்ற முறையிலும்தான்.
  மற்றபடி இவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில்(Inventor or discoverer) வல்லவர் என்றோ நியமிக்கப்படவில்லை.
  இவர்களில் மிகுதியானவர்கள்(சத்திஷ்தாவன் போன்ற ஒரு சிலர் தவிர)
  அமெரிக்க உளவு மற்றும் விஞ்ஞாண,வின்வெளி நிறுவணங்களில் தொடர்பு ஏற்ப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட PROJECTS மற்றும் பனிகளை முடிந்தவரை நாசம்(FAILURE) அல்லது தாமதப்படுத்தீனார்கள்.
  திரு.அப்துல் கலாமும் இவர்களில் முக்கியமானவர் என்று இந்திய விஞ்ஞான உலகில் பரவலகா பேசப்பட்ட உண்மை.
  அதனாலயே அவரை ஜனாதிபதி பதவிக்கு முன்னெடுத்து செல்ல 1990 களில் எல்லா உயரிய பத்ம விருதுகளும் அளித்து தயார் செய்யப்பட்டார்.

  • தேச துரோகி பட்டமும் அமெரிக்க உளவாளி பட்டமும் தான் பாக்கி இருந்தது . அடையும் கொடுத்து விட்டீர்கள். பெரிய கம்யூண்ஸ்த்ு ஆபீசறாக வருவீர்கள்

   • இன்னா நைனா .. இப்புடி சலிச்சுக்கிறியளே ..

    123 அக்ரீமெண்ட் ங்குற பேருல ஒரு அடிமை சாசனத்தை இந்தியா வல்லரசு ஆவதற்கு மிக மிக அவசியம்னு சொன்னவன , அமெரிக்க உளவாளின்னு சொல்றதுல என்ன பிரச்சினை இருக்கு ?..

    சொந்த நாட்டின் மக்களைக் கொன்று குவித்த கிரிமினல் நாய்களின் இரத்தக் கறையை மறைக்க ஒரு ஆயுதமாக ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட ஒருவனை தேச துரோகி என்று தான் கூற முடியும் ..

 20. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் பற்றிய உண்மையை வெளியிடும் முன்னாள் சி பி ஐ அதிகாரி பெயர் தியாகராஜன்.

 21. Respected sir

  I know you are “Purampokku Engira Podhuvudamai”

  In that movie itself they told in end, whoever talk like that what happen now?

  You are spoiling entire india history, congrats keep it up……

  • “they are not purambokku enkira pothuvudamai” – they are Vinavu

   In that dubakkoor movie the end will be like that only.

   In this movie end will be the revolution.

   Yes, They are spoiling the entire ‘goyapalsed’ history of india and making the true History for India.

 22. I am seeing your history from 1995 onward, no change in your content.

  True history vinavu never will give. Vinavu people never accept the change, in that how they will give revolution.

  Everything will change, but vinavu never change.

  “First see the movie properly and talk”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க