Friday, October 18, 2019
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை பெண்ணுக்கு தைரியமளிப்பது புனித நூலா, சண்டைக் கலையா ?

பெண்ணுக்கு தைரியமளிப்பது புனித நூலா, சண்டைக் கலையா ?

-

பெண்களை அடிமைப்படுத்துவதற்கு ஆண்களும் கடவுள்களும் சேர்ந்து அமைத்த கூட்டணிக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண் எப்படி அடிமையாக ஆயுள்கைதியாக வாழவேண்டும் என்று பார்ப்பனியம் மட்டுமல்ல, அல்லாவைத் தொழும் முசுலீம் மதமும் வரையறுத்து வைத்திருக்கிறது. ஆனால் உலகெங்கிலும் முசுலீம் பெண்கள் அப்படித்தான் வாழ்வதாக வகாபிய வெறியர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து தத்தமது நாட்டின் பெண்களை அடக்கி வருகிறார்கள்.

அது உண்மையல்ல என்பதற்கு இந்த புகைப்படக் கட்டுரை ஒரு சான்று. மதமோ, மார்க்கமோ, புனித நூலோ தராத ஒரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஒரு சண்டைக் கலை தந்ததாக மகிழ்கிறார்கள் இந்த பெண்கள். உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி இந்த இளம் பெண்கள் கூறும் செய்தியை நினைவிலிருத்துவோம்.

She Fighter ஷி ஃபைட்டர்– ஜோர்டான் நாட்டில் 2012-ம் ஆண்டில் முதன் முதலாக நிறுவப்பட்ட பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி நிலையமாகும்.

இதன் நிறுவனர் லீனா கலீப் கூறுகையில் பாரம்பரிய தற்காப்பு நுட்பங்களோடு ஒரு பெண்ணின் சுய பாதுகாப்பு மற்றும் சுய பலத்தை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிறார். பெண்களின் உரிமைக்காக 10 மாநாடுகளை நடத்துவதை காட்டிலும் SheFighter அவர்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறார்

ஒரு வருடத்திற்கு முன்பு அவருடைய சக ஊழியர் ஒருவர் சொந்த சகோதரனால் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளானார். அதுவே லீனா இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. தலைநகரம் அம்மானில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி முடித்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் இங்கு இளம் பெண்களுக்கு சுவராசியமான முறையில் தற்காப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சியில் முடிவில் “ அவள் கோபமானவள், அவள் அடிப்பாள்” என்று முழக்கமிடுகிறார்கள் இந்த பெண்கள்.

லீனா_கலீப்_நிறுவனர்
லீனா காலிஃப் – She Fighter சண்டை பயிற்சி நிலையத்தின் நிறுவனர். 15 வயதிலிருந்தே சண்டைக் கலையில் பயிற்சி பெற்றவர்.

13வயது_யாரா
ஒரு வருடமாக பயிற்சி பெற்றுவரும் 13 வயது யாரா தன்னுடைய பள்ளி வகுப்பில் ஆண் மாணவர்களை இப்போதெல்லாம் அனாயசமாக சமாளிப்பதாக கூறுகிறாள்.

இளம்பெண்கள்
பல இளம் பெண்கள் இந்த பயிற்சி மையம்தான் தங்களின் பாதுகாப்பு வெளி என்று கூறுகிறார்கள்.

இறுதிநாட்களில்_பிஸியாக_இருக்கும்_பெண்கள்
பயிற்சி செய்யும் ஒரு இளம்பெண். பின்னணியில் “ இனி நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என்ற வாசகம்.

சாரா_பயிற்சியாளர்
27 வயது சாரா இங்கு பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இதற்கு முன் வெளியே செல்லும் போது ஆண்கள் கும்பலை பார்த்தால் ஒதுங்கி செல்லும் அவர் தற்போது அவர்கள் முன் கம்பீரமாக கடக்கிறார். சண்டைக் கலை மூலம் அவரது உடல் மொழி, நடை, சிந்தனை அனைத்தும் மாறியிருக்கிறது என்கிறார் சாரா.

சிறப்பு_வகுப்புகள்
சிறப்பு வகுப்புக்களில் ஆறு வயது சிறுமிகளும் உண்டு. பின்னணியில் ஒரு பாலஸ்தீன் ஓவியரின் படம் வரையப்பட்டுள்ளது.

பயிற்சியில்_ஈடுபடும்_பெண்கள்
பயிற்சிக்கு தாமதமாக வரும் பெண்கள் “பார்பி பொம்மை” என்று கிண்டல் செய்யப்படுவார்கள். ஆம் “SheFihter”-க்கு அந்த அலங்கார பொம்மைப் பெண் பிடிக்காது.

பிரெஞ்சு_நாட்டை_சேர்ந்த_இளைஞி
அம்மானில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி பயிற்சி வகுப்புக்கு தயாராகிறாள்.

பெண்களின்_அதிகாரம்_அவசியம்
“ ஒரு குத்தின் பலம் என்பது உடல் பலத்தை விட உள்ளத்தின் வலிமையையே அதிகம் சார்ந்திருக்கிறது என்கிறார் சாரா.

பயிற்சியாளர்2
பயிற்சி மையம் தொடங்கும்போது இந்தப் பகுதி ஆண்களிடமிருந்து மிரட்டல்கள் இருந்த போதிலும் தொடர்ந்து இதை வெற்றிகரமாக நடத்திவருகிறேன் என்கிறார் லீனா காலிஃப்!

செய்தி – புகைப்படங்கள்: நன்றி அல் ஜசிரா

 1. அடடா இசுலாத்துல பெண்ணடிமைத்தனமுனு சொல்லிருக்கிக ஆனா உசாராத்தான் தலைப்ப டேக் டைவர்சன் மாறி போட்டுறிக்க போல இருக்கே பேஸா இருக்கு இல்லனா முசலமான்கள் இன்னொறு பஞ்சாயத்த ஆரம்பிச்சிருப்பாக எத்தனயோ பஞ்சாயத்த பேசி முடிச்சு பைசல் பண்ண உங்களுக்கு இது சாதாரணம் இல்லயா ,இல்ல 500 பின்னூட்டம் எடிட் பன்னி எடிட் பன்னியே தாவு தீர்ந்துடுமுனுநினைச்சுட்டாகலோ என்னமோ சரி விடுங்க அது உங்க இசுட்டம் புர்க்கா போட்ட முஸிலிமாக்கள் சண்டை கத்துக்கிறது எதுக்கு தற்க்காப்புக்கா இருக்கும் ____________________…

  • அது கிடக்கட்டும் தலிவா நீயும் ரொம்ப உசாரா சோசப்புனி பேர மாத்திகினு வந்துருக்கே…..படா சூப்பரு

  • //// புர்க்கா போட்ட முஸிலிமாக்கள் சண்டை கத்துக்கிறது எதுக்கு தற்க்காப்புக்கா இருக்கும் ____________________… ////

   கரீட்டா கேட்ட பா .. முஸிலிமாக்கள் சண்டை கத்துக்குறது வேணும்னா தற்காப்புக்கா இருக்கலாம் .. ஆனா அண்ணம் ஜோசப் மாமா இன்னா சொல்லவர்றாருன்னா சண்ட கத்துக்குறது தற்காப்புக்கு மட்டுமில்லாம குதர்க்கமா பேசுற ____வெட்டி எறிய கத்துக்குட்டாங்கண்ணா நல்லா இருக்கும்னு சொல்ல வர்றாரு .. என்ன ஜோசப்பு .. சரிதான நாஞ்சொல்லுறது? ..

   • Dear Anonion,

    Don’t you understand? Joseph is saying that, the women who is still wearing the burka – a symbol of oppression of women, can not get liberated just by learning a martial art. Which is the worse for women, not knowing martial art or wearing a burka?

   • அனானி நான் உமது சகோதரியின் கணவனோ தாயின் சகோதரனாகவோ இல்லாதபோது நான் உமக்கு எப்பிடிய்யா மாமா ஆவேன் முஸ்லீம் பெண்கள் சண்டை கத்துக்கிறது கணவனை திருப்பி அடிக்கவா என்ற பொருளில் கேட்டுருந்தேன் அதாவது இசுலாமில் மனைவியை கணவன் அடிக்கலாம் என்று குரான் சொல்லுது அதத்தான் கேட்டேன் வழக்கம் போல வினவு சைத்தானின் சொல்லை நீக்கி விட்டது விலக்கபட்ட சைத்தானின் வாசங்களை முகமது நீக்கியது போல போதுமா…

 2. //பெண்களை அடிமைப்படுத்துவதற்கு ஆண்களும் கடவுள்களும் சேர்ந்து அமைத்த கூட்டணிக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல//ஆரம்பமே அமர்க்களம் இசுலாத்துல நிறைய விதி விலக்கு இருக்குதா இல்ல மார்க்கீஸத்துல இசுலாத்துக்கு மட்டும் தனி விதி விலக்கு இருக்குதா ஒன்னிம் பிரியல…

 3. பெண்களை அடிமைப்படுத்துவதற்கு ஆண்களும் கடவுள்களும் சேர்ந்து அமைத்த கூட்டணிக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல என்று எழுதிய கட்டுரை ஆசிரியர் எப்படி எல்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று எந்த விளக்கமமும் கொடுக்கவில்லை. விளக்கம் கொடுக்க மறந்து விட்டரா? அல்லது விளக்கம் கொடுக்க எதவும் இல்லையா? ஆசிரியருக்கே வெளிச்சம்.

  லீனா கலீப் தற்காப்பு பயிற்ச் நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணம் கூட ஒரு வருடத்திற்கு முன்பு அவருடைய சக ஊழியர் ஒருவர் சொந்த சகோதரனால் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளானார் என்ற காரணமே தவிர, ஆண்களும் கடவுள்களும் சேர்ந்து அமைத்த கூட்டணிக்கு இசுலாம் என்று சொல்லவில்லை.
  என்னுடைய பார்வையில் வினவின் பல தரமான கட்டுரைக்கு மத்தியில் இந்த கட்டுரை வினவின் தரத்தை குறைத்துவிட்டது. வரும்காலத்தில் இது போன்ற கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுக்காது என்று நம்பும் வினவின் வாசகன்.

  • இக்பால் பாய்!!

   இந்து வானரங்களின் தோலை உரித்தால் முற்போக்கு, இஸ்லாமிய வானரங்களின் தோலை உரித்தால் தரக் குறைவா?

   கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க பாய் …இசுலாம் பெண்களின் உரிமையைப் பறிக்கவில்லைனு கூச்சப்படாம சவுண்டு கட்டுறீங்களே பாய் ..

   ஏப்ரல் மாசத்துல அடிக்கிற வெயிலுல கறுப்புத்துணிய உங்க உடம்பு பூரா போர்த்தி விட்டு வெயில்ல நடக்கவிட்டா தெரியும். குரான் பெண்களை இரண்டாம் குடிமக்களாகத்தான் கருதுகிறது. பெண்கள் வீட்டிற்கு வேறு ஆண்கள் வரும் போது உள்ளே சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். அடிமைகளாக விற்கப்படலாம். ஆண்களுக்கு சலிப்பு தட்டிவிட்டால் எளிமையாக ஒதுக்கி வைத்துவிடலாம் , இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் பாய் ..

   போய் நல்லா குரான படிச்சுட்டு வாங்க பாய். பேசலாம்..

   • ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும்
    கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதேசுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

    உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

    http://www.onlinepj.com/pengal/hijab_en/#.VuZrqeYX50I

    • நீர் இக்குபால் பாயின்னு பாத்தா .. மக்குபால் பாயா இருக்கீங்க பாய் ..

     சொந்தமா சிந்திச்சு இங்க எழுதுனாலே பத்து பதினஞ்சு பய வந்து அடிப்பானுங்க .. இதுல அந்தக் _________ பீஜே போட்ட பதிவயெல்லாம் வாதாடக் கொண்டு வந்தா ’தொப்பி’ .. ‘தொப்பி’ நெலம தான் ஏற்படும் பாய்.

     மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க பாய் .. ////ஏப்ரல் மாசத்துல அடிக்கிற வெயிலுல கறுப்புத்துணிய உங்க உடம்பு பூரா போர்த்தி விட்டு வெயில்ல நடக்கவிட்டா தெரியும். குரான் பெண்களை இரண்டாம் குடிமக்களாகத்தான் கருதுகிறது. பெண்கள் வீட்டிற்கு வேறு ஆண்கள் வரும் போது உள்ளே சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். அடிமைகளாக விற்கப்படலாம். ஆண்களுக்கு சலிப்பு தட்டிவிட்டால் எளிமையாக ஒதுக்கி வைத்துவிடலாம் /////

     இதெல்லாம் பெண் அடிமைத்தனம் இல்லையா பாய் .. பாய் …

     இதுக்கு பதில் சொல்லிட்டு நம்ம சூப்பர் சுப்பராயன் பீஜேவின் அறிவார்ந்த வியாக்கியானத்துக்குள்ள போகலாம் ..

    • // அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை. ////

     மொதல்ல ஆடை எப்போதிருந்து எதற்காக வந்ததுன்னு நம்ம பீஜே பாய தெரிஞ்சிக்கிட்டு வந்து பேசச் சொல்லுங்க.. ஆடை என்ன அல்லா அங்க இருந்து சொயிங்குனு மந்திரம் விட்டு மக்களுக்கு போர்த்திக்க கொடுத்த அயிட்டமா ?.
     ஆடை என்பது கடுமையான பனியிலிருந்தும் கடுமையான வெயிலிலிருந்தும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகள் துரத்தும் போது கீழே விழுந்து புரண்டு ஓடும் போதும், தனது உடல் உறுப்புகளைப் பாதுகாக்க ஆதிமனிதனால் உருவாக்கப்பட்டு காலப் போக்கில் நாகரீக வளர்ச்சியின் அடிப்படையில் அந்த அந்த காலகட்டத்தைப் பொருத்து, பகுதிகளைப் பொறுத்து , மக்களின் வேலை நிலைமைகளைப் பொறுத்து மாறி ஆடைகள் பலவகையாக இருந்திருக்கிறது. ஆடை என்பது உடலில் முக்கியமாக தமது சமூகத்தைப் பெறுக்க அவசியமான இனப்பெருக்க உறுப்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் இருந்து தான் ஆண் பெண் இருபாலராலும் தமக்குத் தாமே அவசியப்படுத்திக் கொள்ள (கட்டாயப்படுத்திக் கொள்ள) வேண்டியது இருந்தது. ஆணுக்கு பிறப்புறுப்பு மட்டும் அவசியமாக பாதுகாக்கப்படவேண்டிய சூழலும், பெண்ணுக்கு கூடுதலாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொருட்டு மார்பகங்களையும் பாதுகாக்கும் அவசியம் இருந்த சூழலும் தான் ஆண் பெண் உடையை பகுதி சீதோசன நிலைமைக்கு ஏற்றவாறு தீர்மானித்தன. ஆடைகள் ஒன்றும் அல்லா பொழுது போகாமல் ஒக்காந்து ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் டிசைன் டிசைனா உருவாக்கிக் கொடுத்தது அல்ல என்பதை முதலில் நினைவு கொள்ளவும்.
     மேற்கத்திய நாடுகளில் எந்த விவசாயியும், உழைப்பாளியும் மேல்சட்டை இல்லாமல் வேலை பார்ப்பது இல்லை. அங்கிருக்கும் சீதோசன நிலை உருவாக்குவது தான் உடை கலாச்சாரம். வெயில் காலத்தில் ஆண்களும் பெண்களும் உடலில் சூரிய ஒளி படவேண்டியதன் அவசியத்தை ஒட்டி தங்களது ஆடை வழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள். (உடனே ’சன் பாத்’து டாபிக்க திசை திருப்பலாம்னு நினைக்காதீர் ஓய் .. அதுக்கு அப்புறம் தனியா ஒரு கட்டுர எழுத முடியாது)

     – தொடரும்

    • தொடர்ச்சி –

     இந்தியாவில் அடிக்கிற வெயிலில் களத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயி, அதற்குத் தகுந்தாற் போன்ற உடைகளைத் தான் அணிகிறான். இங்கு இருக்கும் வேலைப் பிரிவினை தான் அவர்களது உடையைத் தீர்மானிக்கிறது. ஆண்கள் அதிக நேரம் களத்தில் நின்று நீர் பாய்ச்சுவது, ஏர் ஓட்டுவது போன்ற பல்வேறு வேலைகள், அதிக உடல் உழைப்பு அவசியமான வேலைகளில் ஈடுபடும் போது வியர்வையின் நசநசப்பைத் தவிர்க்க சட்டையின்றியும், பல்வேறு இடங்களில் வேட்டியின்றியும் வெறும் கோமணத்தோடும் வேலை பார்க்கிறார்கள். பெண்கள் களத்தில் வேலை செய்யும் பொழுது உடல் உழைப்பில் ஒப்பீட்டளவில் குறைவான பளு உள்ள வேலைகளில் ஈடுபடுகிறார்கள். வேலை வசதிக்காக முட்டி அளவிற்கு சேலை பாவாடையை உயர்த்திக் கொண்டு தான் வேலை செய்கிறார்கள். கேரளத்தில் உழைப்பில் நேரடியாக ஈடுபடும் பெரும்பான்மைப் பெண்கள் மாராப்பிற்கு வெறும் துண்டை மட்டுமே போட்டுக் கொண்டு வேலைபார்த்திருக்கிறார்கள். இவையெல்லாம் அவர்களது வேலைப் பிரிவினைகளையும், வேலைச் சூழல்களையும், சீதோஷன நிலைமைகளையும் பொறுத்து மாறுகின்றன..
     இவ்வாறு உழைப்பின் தன்மை மற்றும் சூழல் காரணமாக உடையின் தன்மை அமையும் சூழலில் வியர்வையின் வாசனை கூட அறியாத 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூளையை இன்னமும் மண்டைக்குள் வைத்து அல்லாவை ஈன்றெடுக்க அடைகாக்கும் ______ கூட்டத்திற்கு (கண்டிப்பாக களத்தில் இறங்கி வேலை பார்க்கும் ஒரு இஸ்லாமிய விவசாயியோ, தொழிலாளியோ இந்த வக்கிரக் கேள்வியை சிந்திக்க மாட்டான். அவன் வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்தே அனைத்தையும் அணுகுகிறான்) இப்படித்தான் குதர்க்கமாகக் கேள்வி கேட்கத் தோன்றும்.
     உடை என்பது அடக்குமுறையின் சின்னமாக இந்து மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் தான் இருந்து வருகிறதே ஒழிய உழைக்கும் வர்க்கத்தில் அது முழுக்க முழுக்க உழைப்பின் அடிப்படையை ஒட்டியே அமைகிறது.
     (கொசுறு: குடுமிகள் இந்து மதத்தில் என்ன உடை அடக்குமுறைன்னு கொதிச்சு பொங்கலாம், அதுக்கு இன்னோறு பதிவு போட வேண்டி வரக்கூடாதுன்னு தான் இந்தக் கொசுறு. இவன் கடவுளை திருச்செந்தூரிலும், குருவாயூரிலும் போய்ப் பாக்கனும்னா சட்ட போடாம போனுமாம்!.. ஆம்பளைகள வெத்து நெஞ்சா பாத்தாத் தான் சாமிக்கு கண்ணு குளிருமாம். இல்லைனா ஆண்டவனுக்கு மெட்ராஸ் ஐ வந்திரும் போல. அது மட்டுமா, சாதியின் பேரால திருவிதாங்கூர் சமஸ்தானத்துல இந்து நாடார் வீட்டுப் பெண்கள் ரவிக்கை போடக்கூடாதுன்னும், மீறிப் போட்டா முலை வரி போடனும் கட்ட முடியாட்ட மார்புக் காம்பை வெட்டனும்னு ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும், பெண்களுக்கும் எதிராக வக்கிரத்தைக் கொட்டிய மதமும் இந்து மதம் தான். பெண்கள் மீதான இஸ்லாமிய அடக்குமுறைன்னு கூவிக்கிட்டிருந்த புனித இந்துக்கள் இதுக்கும் பதில் சொல்லிட்டு, சமீபத்துல கோவிலுக்குள்ள சேலயும் தாவணியும் மட்டும் தான் கட்டணும்னு போடப்பட்ட உத்தரவப் பத்தியும் சேத்துக் கூவனும்னு பணிவென்புடன் கேட்டுக் கொள்ளும் உங்கள் அன்பு அனானியன்)

   • பலதார மணம் பெண்களுக்கில்லை:

    இந்த வித்தியாசங்களையும், நியாயமான காரணங்களையும் முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டு ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும். பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை. மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீதங்களும், கேடுகளும் தான் ஏற்படும்.

    http://www.onlinepj.com/katturaikal/palatharamanam/#.Vuak0uYX50I

    • ஆண்கள் பலதார மணம் புரிவதனால் என்னென்ன நன்மைகள் இருக்கு இக்கு பாய் ?.

     இஸ்லாம் ஏண் பெண்களுக்கு அனுமதிக்கவில்லைனு நான் கேட்கல .. ஆண்களுக்கு ஏன் அனுமதிச்சிருக்குன்னு தான் கேட்குறேன் .. கொஞ்சம் வெளக்குனா நல்லா இருக்கும் பாய் .. பாய்..

 4. இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா அல்லது கண்ணியப்படுத்துகிறதா என்பதை அறிந்துகொள்ள கிழே குறிப்பிடப்பட்ட வரலாற்று நிகழ்வு போதுமானது.

  பெண்களுக்கு முகம்மது நபி (ஸல்) சொத்துரிமை வழங்கினார். அன்றைய காலகட்டம் பெண்களை மிகவும் இழிவாகக் கருதிவந்தது. பெண் குழந்தை பிறப்பதை அவமானமாகக் கருதிய காலம் அது. பெண்குழந்தையை உயிருடன் மணலில்போட்டுப் புதைக்கும் அறியமைக்காலம் அது. பெண்கள் வெறும் போகப்பொருளாவே கருதப்பட்டார்கள். இந்தக் காலப் பின்னணியில்தான் நபிகளார் இஸ்லாத்தை அந்த மண்ணில் விதைத்து பெண்களுக்குச் சொத்தில் உரிமை உண்டு என்று முழங்கினார். இதனைக்கேட்ட நிராகரிப்பாளர்கள் திகைத்துப் போனார்கள். மக்கத்து நிராகரிப்பாளர் ஒருவர் நபித்தோழர் ஒருவரிடம் என்ன உங்கள் முகம்மது நபி பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்குகிறாரே, மிருகங்களுக்கும் அவர் உரிமை வழங்குவாரா? என்று எள்ளலாக வினவியபோது நபித்தோழர் அமைதியாக ஆம்…! மிருகங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உரிமை வழங்கிவிட்டர்களே…! மிருகங்களுக்கு அதன் சக்த்திக்கு மீறி அதன்மீது பாரத்தை ஏற்றாதே! அவைகளைத் துன்புறுத்தாதே! என்று பதிலளித்தார்.

  இந்தியாவை 200 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய நாடு இங்கிலாந்து. அந்த நாட்டில் 1881 ஆம் ஆண்டு தான் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டது.the married act என்ற சட்டத்தின் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டில்தான் பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டமாக்கப்பட்டது. தந்தை பெரியார் 1929 ஆம் ஆண்டு செங்கல்ப்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கவேண்டும் என்று தீர்மானம் போட்டார். ஆனால் முகம்மது நபி (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அந்த அறியாமை சமூகத்தில் பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்ற இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் என்பதை வரலாறு குறித்துவைத்திருக்கிறது.

  • பெண்களுக்கு சொத்துரிமை முகமது வழங்கினார் என்பதே தவறானாது எனென்றால் சொத்துரிமை உடைய கதிஜா என்ற பெண்ணைத்தான் அவர் முதல் திருமணமே செய்கிறார் ஆறு வயதுள்ள அயிசா வை திருமணம் செய்து கொண்டதுதான் அவரின் பெண்ணுரிமையின் லச்சணம்…

   • பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமறைக் குர்ஆன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்ணுரிமையைப் பேணினார்கள். பெண்களின் கண்ணியத்தை உயர்த்தினார்கள்.
    அத்தகைய திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றைக் கீழே தந்துள்ளேன்,

    (1) ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன:

    பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

    அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (திருக்குர்ஆன் 2:187)

    மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

    (2) பொருள் திரட்டும் உரிமை:

    சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

    http://www.onlinepj.com/books/islam-penkalin-urimayai/#.VuYnD-YX50I

    • நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

     நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (5133))

     நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்த சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் படியே நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்தக் கூடியவர்களாக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாய்கம் ஸல் அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.

     அது போல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

     பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

     திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.

     திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.
     பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

     தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாக பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.

     நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 4:19)

     கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, “கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அவளது மௌனமே அவளது சம்மதமாகும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6971, 6964, 5137)

     என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். (அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி), நூல்: புகாரி 5139, 6945, 6969)

     அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள். (அல்குர்ஆன்4:21)

     இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.
     மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.

     திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாத காலத்தில் நடந்த திருமணம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    • அப்புடின்னா 1700 வருசத்துக்கு முன்னாடியே ஔவையாருன்னு ஒரு பாட்டி சொலோ பெர்ஃபாமன்ஸா பல நாட்டு மன்னர்களுக்கும் அம்பாசிடரா(அதாம்பா தூதுவரா) இங்க தமிழ்நாட்டுல இருந்துச்சே (குறிப்பு: ஔவையை இந்துக் கிழவின்னு சொல்ற அறிவு ஜீவிகள் – ஔவை களப்பிரர் காலகட்டத்துல இருந்த கிழவி என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு பேசவும். இந்து சமூகம் தான் சொல்லீருக்கு.. களப்பிரர் காலம் இந்து சமூகத்தின் இருண்ட காலம்னு. சோ கீப் டிஸ்டன்ஸ் பட்டீஸ்..)

     அந்த தமிழ்க் கலாச்சாரத்தை விட உங்க அல்லாவும், நபியும் கொஞ்சம் லேட்டா பொறந்துட்டாங்களோ .. 300 வருசம் தான் ஜஸ்ட் மிஸ்ஸா …

     பெண்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளையும் இங்கு பார்ப்பனீய இந்து மதம் வந்து தான் பறித்தது
     இஸ்லாம் என்னும் காட்டுமிராண்டிகளை சரி செய்ய உருவாக்கப்பட்ட மார்க்கமோ பெண்களைப் பாதுக்காக்கிறேன் என்று அடிமைத்தளையில் தள்ளியது. 600 நூற்றாண்டுகளாக மூளையை அடுப்பிலிருந்து எடுத்து மண்டைக்குள் வைக்க மறந்த கூட்டம் , இன்னமும் ___ மார்க்கத்தை சரி என சப்பைக் கட்டு கட்டி இருக்குறவன் நேரத்தைத் திங்கிதுங்க..

   • சொத்துரிமை உடைய கதிஜா என்ற பெண்ணைத்தான் அவர் முதல் திருமணமே செய்கிறார். (உங்களுடைய கேள்வி பணத்திற்காக தான் திருமணமே செய்கிறார் என்று இருந்தால் ) பதில் கிழே கொடுத்துள்ளேன்.

    வரலாற்றுச் சுருக்கம்

    இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

    http://www.onlinepj.com/books/mamanithar/#.VuZrV-YX50I

  • அப்புடியே பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு போட்ட கதையையும் புள்ளி விவரத்தோட எறக்கி விட்டீங்கன்னா வசதியா இருக்கும் பாய் .

 5. (Dont moderate vinavu folks,pls publish no abusvie)When religion spreads from its place of origin it carries the social cultural life of those religious people. When Christianity was spread by british sponsored program it gave education institution and hosptials equal treatment of everyone, of course the europeans dont take eveything in their holy book literally they promote science unlike the nitwit islamist who prevent students from learning darwin theroy… Look at islam it brought violence, women enslavement, sowing hatred on non-muslims. It all based on Oil, it may take some centuries before the oil wells of gulf go empty. After that you will see what happens to this barbaric religion

 6. One word argument to any muslim who say Islam gives high rights to women and to show how islam or men who create sharia laws based on islam illtreat women is…

  Shah Bano Begum

  Standing proof saying how islam works on women. insha allah..

 7. தலாக்

  ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளதை நாம் காண்கிறோம்.

  ஆணும், பெண்ணும் இல்லற இன்பத்தை அனுபவித்து, இரண்டறக் கலந்து விட்டுத் திடீரென ஆண்கள் தம் மனைவியை விவாகரத்துச் செய்து விடும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கண்கூடு. கன்னிப் பெண்களுக்கே மண வாழ்வு கிடைக்காத நிலையில் விவாக விலக்குச் செய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிடைக்கும்? அதிலும் அவள் சில குழந்தைகளைப் பெற்று அழகையும் இளமையையும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை.

  இது தான் தலாக் சட்டத்தை விமர்சனம் செய்வதற்குக் காரணம்.

  தலாக் கூறுவதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியானால் ஏன் இதை அனுமதிக்க வேண்டும் அனுமதிக்காமலேயே இருக்கலாமே? என்ற கேள்விகள் நியாயமானவையே. அதை விட அதற்கான விடைகள் நேர்மையானவை.

  முழுமையாக படிக்க கிழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

  http://www.onlinepj.com/books/islam-penkalin-urimayai/#.VuaA1flDRj1

  • //கன்னிப் பெண்களுக்கே மண வாழ்வு கிடைக்காத நிலையில் விவாக விலக்குச் செய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிடைக்கும்? அதிலும் அவள் சில குழந்தைகளைப் பெற்று அழகையும் இளமையையும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை.//

   Dear Iqbal,

   From your comment, your mindset and your religion’s mindset is exposed well. You see women as product or commodity. Like they have a market and beauty, virginity(?!?) etc are the attributes that fasten the sales of women. It exactly matches with your religion’s practice of giving money to woman’s family while marrying. If she is beautiful or virgin, more money is given. This clearly shows how you all treat women. You can give as much reasons to convince yourself about this. But nobody with some common sense will accept it. Your argument is rationalizing the issue instead of approaching the issue rationally.

  • //. அதை விட அதற்கான விடைகள் நேர்மையானவை.

   முழுமையாக படிக்க கிழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

   http://www.onlinepj.com/books/islam-penkalin-urimayai/#.VuaA1flDRj1///

   லிங்க்பால் பாய் – பிளீஸ் அந்தக் கொடுமைக்கு மட்டும் லிங்க் கொடுக்காதீங்க..

   தலாக் சொல்றதுல என்னயா நேர்மை இருக்க முடியும் ?. என்னய்ய இப்படிப் பண்ணுறீங்களே யா ?..

   5 வருசமோ, 10 வருசமோ ஆம்பள கழட்டிப் போடுற துணில இருந்து, கடிச்சுப் போடுற எலும்பு வரைக்கும் எல்லாத்தையும் சுத்தம் பண்ணி, போதாக்குறைக்கு வெளிய போகக் கூடாது, யாரு கூடயும் பேசக் கூடாது, பழக் கூடாதுன்னு ஆயிரம் அடிமைத்தனத்தை தலையில கட்டி வெளியுலகம் தெரியாம வீட்டுக்குள்ளயே வச்சி கொஞ்சம் அந்தப் பொண்ணு உடல் தளர்ந்ததும் தலாக் சொல்லிட்டு வேற சின்ன வயசுப் பொண்ணு வாழ்க்கைய அழிக்க புறப்படுறதுல என்னையா நேர்மைய பாத்தீங்க ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க