பண்டைய இந்தியாவில் “பாரத் மாதா” இல்லை!

சரியாகச் சொன்னால் பண்டைய வரலாற்றில் “இந்தியா”வே இல்லை. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், மறைந்த வரலாற்றறிஞர் பிபன் சந்திரா நினைவு உரை நிகழ்ச்சியில் பிரபல வரலாற்றுத் துறை பேராசிரியர் இர்ஃபான் ஹபீஃப் கலந்து கொண்டு பேசினார். அதில் பண்டைய இந்தியா மற்றும் மத்தியகால இந்திய வரலாற்றில் பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கமே இல்லை, அது ஒரு ஐரோப்பிய இறக்குமதி, தந்தையர் நாடு, தாய் நாடு என்ற கருத்தாக்கங்கள் ஐரோப்பாவில் தோன்றியவை என்பதை அவர் விளக்கினார்.
மகாராட்டிர சட்டசபையில், மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பத்தான் சட்டசபையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். செய்த குற்றம் என்ன? பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை சொல்ல மறுத்தது. இதை குற்றம் என்று பா.ஜ.க வானரங்கள் மட்டும் சொல்லவில்லை. சிவசேனா என்ற அதன் பாங்காளி வானரமும், உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கூட வழிமொழிந்தார்கள். இதை வைத்து முஸ்லீம்கள் அனைவரும் தேச துரோகிகள் என்ற கருத்தை இந்துமதவெறியர்கள் பரப்பினர். கூடுதலாக தீவிரவாத கம்யூனிஸ்டுகள்தான் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கும் சித்தாங்கங்களை பரப்புகின்றனர் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

“பண்டைய இந்தியாவில் ‘பாரத்’ என்ற வார்த்தை புழங்கப்பட்டாலும் நாட்டை தாய், தந்தை என்று மனித உருவில் பார்க்கும் வழக்கம் பண்டைய மற்றும் மத்திய கால இந்திய வரலாற்றில் இல்லை” என்கிறார் பேராசிரியர் இர்ஃபான்.
ஐரோப்பாவில் முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சி அடைந்து ஒரு நாட்டையே சந்தையின் பெயரால் இணைக்க வேண்டிய தேவை வந்த போது உருவான கருத்தாக்கம்தான் தேசியம். ரசியாவிலும், பிரிட்டனிலும் இப்படி தோன்றிய தேசிய கருத்தாக்கங்களின் வழிதான் நாட்டை தாயாக, தந்தையாக பார்க்கும் பழக்கம் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு இது ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் பரவியதோடு அதன் பிறகு உலகமெங்கும் பரவியது.
ஆக “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கமே வெள்ளையர்கள் போட்ட பிச்சை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியாக ஐரோப்பிய காலனியாதிக்க மையவாத சிந்தனை முறைதான் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் எரிபொருள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாரத் மாதாவிற்கே இதுதான் கதி என்றால் தமிழ் அன்னைக்கும் அதுதான் கதி!

ஆங்கிலேய காலனியாதிக்க – ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து உருவான இயல்பான தேசபக்தி என்பதை வழிபாட்டு சடங்கு முறையாக மாற்றியது இந்துமதவெறியர்கள் மட்டுமே. அதனால்தான் அவர்கள் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாக இருந்தார்கள். தேச பக்தி என்பது ஆதிக்கத்திற்கு எதிராக தோன்றும் போது முற்போக்காகவும், ஆதிக்கம் செய்வதற்காக துருத்தும் போது பிற்போக்காவும்தான் இருக்கும்.
இந்தியாவின் ஜனகன மண எனும் தேசிய கீதம் ஆங்கிலேய மன்னனை வாழ்த்தி பாடப்பட்டது. வந்தே மாதரம் எனும் கீதம் முஸ்லீம் மன்னர்களை வீழ்த்தும் வங்க மாதாவிற்காக பாடப்பட்டது. ஆக இந்தியாவின் தேசப்பற்று அடையாளங்கள் எவையும் ஒரிஜனல் அல்ல!
எது எப்படியோ இனி பாரத் மாதா கி ஜெய் என்று ஒருவர் முழங்கினால் அது இந்து ஞான மரபின் கண்டுபிடிப்பு அல்ல, ஐரோப்பாவின் இரவல் சரக்கு என்பதை தெளிய வைப்போம்!
மேலும் படிக்க:
முதலில் பாரத் மாதாகீ ஜெய் என்ற முழக்கதுக்கு எத்தகைய அரசியல் சட்ட சாசன அங்கிகாரமும் கிடையாது.வினவில் பின்னுட்டம் இடும் தேசியவாத மப்பில் உளரும் சிலதுகள் வேண்டுமானால் பாராத் மாதாகீ ஜெய் என்று காது கிழிய முழங்கலாம். அந்த சொற்தொடருக்கு எந்த அரசியல் சாசன அங்கிகாரமும் கிடையாது. அரசியல் சட்ட சாசன அங்கிகாரம் இல்லாத ஒன்றுக்காக இந்த rss கும்பல் இவ்வளவு கண்டிப்புடன் உள்ளது எனில் அது தேசத்தை பிளக்கும் அதன் செயல் திட்டத்தின் வெளிப்பாடாக தான் இருக்க முடியும். தேசம் என்பதற்கு அதன் தேசிய கொடியும் , தேசிய கீதமும் குறியீடுகள் தானே தவிர அவையே தேசமாக முடியாது. தேசம் என்பது அதன் மக்களையும் , அவர்களின் நல்வாழ்வும், அரசியல் சுதந்திரத்தையும் , பொருளாதார சுதந்திரத்தையும் உள்ளடங்கியது. இத்தகைய மக்களுக்கான உண்மையான சுதந்திரத்தை கொச்சை படுத்தி அந்த சுதந்திரத்தை வெளிநாட்டுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு விற்கும் இன்றைய பிஜேபி ,நேற்றைய காங்கிரஸ் கும்பலின் நாட்டை அடகு வைக்கும் செயல் தான் வெக்கி தலைகுனிய வேண்டிய ஒன்றே தவிர பாரத் மாதாகீ ஜெய் என்ற கோஷாத்தினால் நாம் பெருமை பட ஒன்றுமே இல்லை.
Are you sick? What do you want? Are you not an Indian? What is your identity? You want us to act like Arabs? Because that’s what you sound like.
One more thing. I know you are scared of my comments. But let me ask you. Can you talk the same in an Islamic country? Then why this pretence?
தமிழில் கட்டுரை படிச்சிட்டு தமிழில் மறுமொழி போடாமல்,ஆங்கிலத்தில் போடுவது என்ன வகையில் சேர்த்தி?
Bharat Varsha is the country named after its pioneer ruler Bharat, son of Dushyant and Shakuntala. This is what we were taught by Hindu/Hindi scholars. How a male named country conveniently took female form for these bakths?
According to senior advocate Kamini Jaiswal, “the constitution nowhere requires people to say ‘Bharat mata ki jai, nowhere does it talk about it. [The BJP resolution] is a very wrong interpretation. The constitution just says ‘India. which is Bharat’. It doesn’t talk of Bharat mata. So, it is not a fundamental duty of every citizen of the nation to say such a slogan.”
The Constitution of India says: India, also known as Bharat, is a Union of States. It is a Sovereign Socialist Secular Democratic Republic with a parliamentary system of government.
இந்திய சுதந்திரத்துக்காக மக்கள் ஜெய் ஹிந்த் என்றும் பாராத் மாதக்கி ஜெய் என்றும் முழங்கி குரல் கொடுத்து போராடிய போது இந்த rss கும்பல் என்ன செய்து கொண்டு இருந்து? வெள்ளை காரனுக்கு கால்கழுவிக்கொண்டும் , அவனுக்கு துதி பாடிக்கொண்டும், விடுதலை வீரர்களை காட்டிகொடுத்துகொண்டும்(உதாரணம் வாஜ்பாய் நீதிபதிக்கு எழுதிய கடிதம்), வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொண்டும் தானே இருந்தது? தூ மானங்கெட் RSS தேச விரோதிகளா !
I love to say Jai Hind. It simply means “Hail India”, as explained by Yasir Khan, was coined by Maj. Abid Hasan, who was an officer in Subhas Chandra Bose’s Azad Hind Fauj. The Father of the slogan Jai Hind is Chembakaraman Pillai. He is a A Tamilian
Jai Hind Jai Hind Jai Hind
from http://www.tamilhindu.com/2016/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/#comment-204493
“பாரதமாதா என்று தேசத்தைத் தாயாக உருவகித்து வணங்கும் மரபு நாம் ஐரோப்பியர்களிடம் இருந்து கடன் வாங்கியது” என்று ஒரு கருத்தை வரலாற்றாசிரியர் என்ற பெயரில் உலாவும் இடதுசாரி இர்ஃபான் ஹபீப் தெரிவித்துள்ளார்.. “முன்பு பாரதம் என்ற நிலப்பகுதி பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் உண்டு. ஆனால் மனித உருவில் தாயாக, தந்தையாக அதை சித்தரிப்பது பழங்காலத்திலோ இடைக்காலத்திலோ இந்தியாவில் இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இது முற்றிலும் அபத்தமான, ஆதாரமற்ற கருத்து. பூமியை, நிலத்தை, மண்ணை, ராஜ்யத்தை, தேசத்தை பண்டைக்காலம் முதலே பெண்ணாக, தாயாக, திருமகளாக, அரசியாகத் தான் இந்துப் பண்பாடு கூறிவந்திருக்கிறது. ராஷ்ட்ரீ, ராஜ்யஸ்ரீ போன்ற பதங்கள் வேதத்திலேயே உண்டு. மேலும், சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்திலேயே பூமியையும், நதிகளையும் பெண்பாலில் தான் குறிப்பிடுவார்கள்.
“இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) – அதர்வ வேதம்.
“.. நிலமென்னும் நல்லாள் நகும்” – திருவள்ளுவர்.
“கடலை ஆடையாக உடுத்து, மலைகளை மார்பகங்களாக ஏந்தியவளே, விஷ்ணுபத்னி, உன்மீது கால்வைத்து நடக்கும் என்னைப் பொறுத்து அருள்வாய்” – பூமி ஸ்துதி.
“பெற்ற தாயும் பிறந்த நாடும் சொர்க்கத்தை விடவும் மேலானவை” (ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்க்காதபி கரீயஸி) – வால்மீகி ராமாயணத்தின் சில பிரதிகளில் ராமன் கூற்றாக வரும் சுலோகம்.
இந்த நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியின் விளைவாகத் தான், “வந்தே மாதரம்” என்ற அமர கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயரின் உள்ளத்தில் கவிதையாக எழுந்தது. தாய்ப் பாசத்தையும் தாய்நாட்டுப் பற்றையும் இணைக்கும் பண்பாட்டு இழை ஏற்கனவே இங்கு ஆழமாக வேரூன்றி இருப்பதால் தான், அந்தப் பாடலும் அது உருவாக்கிய உணர்வுகளும் தீச்சுடர் போல இந்தியா முழுவதும் பரவின. தாகூர் முதல் பாரதி வரை அனைத்து மொழிகளின் மகாகவிகளும் அந்த தேசிய நாதத்தை எதிரொலித்தனர்.
வங்க ஓவியர்கள் பாரதமாதாவை தேவி உருவில் படமாக வரைந்தது 1905க்குப் பிறகாக இருக்கலாம். “பிரித்தானியா” ஓவியம் அதற்கு முன் வரையப் பட்டிருந்திருக்கலாம். அதை வைத்து இந்தக் கருத்தாக்கமே ஐரோப்பியர்களிடமிருந்து பெற்றது என்று சொல்வது மிக மோசமான திரிபுவாதம்.
நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் அடிநாதமான இந்த விஷயத்தைக் கூட ஐரோப்பியாவிலிருந்து கடன் வாங்கியது என்று கூசாமல் பொய் சொல்கிறார் ஹபீப். ஒரு தீவிர நேருவிய மார்க்சியரிடம் இந்தக் கபடமும், தேசவிரோத உணர்வும், வரலாற்றை வெட்கமில்லாமல் திரிக்கும் போக்கும் இல்லாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம்.
பரத கண்டே பரத கண்டே என்று தான் பாரத மாதா ஆரியர்களால் அறிமுகபடுத்த பட்டாள் .
தென்னிந்தியர்கள் காசி செல்ல வைத்ததும் , வட இந்தியர்களை ராமேசுவரம் செல்ல வைத்தும் மக்களை மதத்தால் ஒருங்கிணைத்து இருந்தார்கள்.
கிரேக்கர்கள் இந்தியா செல்ல வேண்டும் என்று தான் விரும்பினார்களே ஒழிய மகதம் செல்ல வேண்டும் என்றோ பாண்டிய நாடு ( கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய நாடு ) செல்ல வேண்டும் என்றோ எழுதி வைக்க வில்லை .
மெகஸ்தனிஸ் தென் இந்தியா சென்றேன் என்று தான் எழுதினான் .
இந்தியாவின் உயரம் 100000 ஸ்டெடியா வருகிறது என்று கணக்கு போட்டார்கள்
ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்றுதான் பெயர் வைத்தார்கள் .
இந்தியா , பாரதம் போன்ற அடையாளங்கள் இந்தியா என்று அணைத்து சிறு நாடுகளும் ஒன்று இணைந்து கட்டமைக்கும் முன்னே உருவான கருத்து .
USSR போல இரும்புக்கரம் கொண்டு வெவேறு கலாசார பின்னனி கொண்டவர்களால் உருவாக்க பட்டது அல்ல
“பரத கண்டே பரத கண்டே என்று தான் பாரத மாதா ஆரியர்களால் அறிமுகபடுத்த பட்டாள்.” என்று இராமன் ஆர்.எஸ்.எஸ் காரர்களைப்போலவே கதைவிடுகிறார்.
ஆரியகுடிகளிடம் தாய்வழிச்சமூகமே கிடையாது! தந்தைவழிச்சமூகத்தை ஒட்டிக்கொண்டுவந்தததால் தான் விவசாயத்தையே இழிவானது என்று கருதியது ஆரிய பார்ப்பன பாசிசக் கூட்டம். இந்திய தொல்குடிகளின் விவசாய தெய்வங்களும் பெண்களாகவே இருந்த போது, இத்தெய்வங்களும் சேர்த்தே இழிவாகவே கருதப்பட்டனர். இதுதான் வரலாறு.
வேத காலத்திலிருந்து இன்றுவரை இந்து பார்ப்ப்னியம் பெண்ணை எப்படி பார்க்கிறது என்பதிலிருந்து பாரதமாதா குறித்த கழிசடை பிரச்சாரத்தை எவர் ஒருவரும் இனங்கண்டு அப்புற படுத்த முடியும்.
தென்னிந்தியாவில் தாய்வழிச்சமூகத்தின் எச்ச சொச்சங்கள் இன்றளவும் இருப்பதை வடவாரிய பார்ப்பன பாசிஸ்டுகள் எந்தளவு மூர்க்கமாக எதிர்க்கின்றனர் என்பதற்கு என்ன பதில்?
இங்கு தாய்மாமன் பெண்ணை திருமணம் செய்வது, அக்காள் மகளை மணமுடிப்பது திராவிடர்களிடம், பழங்குடியினரிடம், தாழ்த்தப்பட்டவர்களிடம் இன்றளவும் இருக்கிறது. இதை ஆரியக் கும்பல் இழிவாகத்தான் பார்க்கிறது. இதற்குக் காரணம் ஆரிய கும்பலின் சமுதாயம் இந்திய தொல்குடிகளைப் போன்று தாய்வழிச்சமூகமாக இருக்கவில்லை. தந்தை வழிச்சமூகமாக இருப்பதால் இத்தகைய திருமண முறைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
மரபணு பந்தத்திலேயே தாய்வழிச்சமூகம் வராமல் பார்த்துக்கொள்கிற இந்துபார்ப்பனீயம் இந்தியாவை பாரதமாதா என்று சொல்வது அவாள் பாசையின் படியே சொல்வதானால் சாமான்ய ஜாலமாகும்!
மனு எந்த பெண்ணாக இருந்தாலும் சூத்திரச்சி என்றே வரையறுக்கிறான். இதைத்தான் ‘நஸ்த்தீரி ஸூத்ர ஜாதினாம்’ என்று ஸ்மிருதி கூறுகிறது. வேசியின் மகன் என்று பெண்ணினத்தை வைத்து வர்ணத்தை வரையறுக்கும் இந்துபார்ப்ப்னியம் இந்தியாவை பாரதமாதா என்று சொல்கிறது என இராமன், ஜடாயு, அரவிந்த நீலகண்டன் போன்ற அரை டவுசர் கும்பல் கிளர்ந்தெழுவது இந்துத்துவ விறைப்பன்றி வேறல்ல!
இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் இந்துமகா சபையாக இருந்த போதும் கூட தாய்நாடு என்பதைப் போற்றவேயில்லை!
பாரதி தன் கவிதையில்
‘தந்தையர் நாடென்னும் போதினிலே
இன்ப சக்தி பிறக்குது மூச்சினிலே’
என்று ஆரிய, ஜெர்மன் நாஜிக்களின் கருத்தைத்தான் பிரதிபலித்தார். இந்துத்துவ கும்பலின் வரலாறு இது!
சர்வ தேசியத்தை வாயளவில் மட்டுமே பேசி கம்யுனிச உலக அகிலங்களை கலைத்துவிட்ட கம்யுனிஸ்டுகளுக்கு (தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கும்)
உலக வரலாற்றில் தேசிய இனங்கள் தனக்கு என்று நாட்டை கட்டமைத்துக்கொள்வதும் , தேசிய கொடி , தேசிய கீதம், தேசத்தை தாயாகவோ அல்லது தநதையாகவோ கற்பித்துக்கொள்வது என்பது முதலாளித்துவ-ஜனநாயக நடைமுறை தான்……ரஷியர்கள் தங்கள் தேசத்தை தந்தையர் தேசம் என்று கொண்டாடுவதும் வரலாற்றில் நிகழ்ந்த ஒன்றுதான்….ஆனால் இந்தியா என்பது ஒரு தேசமா? அல்லது பல்வேறு தேசிய இனங்களை உள்வாங்கிக்கொண்டு ( the term used in Indian constitution is Union of States) ? இந்தியா என்பது பல்வேறு தேசங்களை(states ) உள்ளடங்கிய குடியரசு எனில் (according to Indian constitution Bharat is a Union of States. It is a Sovereign Socialist Secular Democratic Republic) பாரத மாதாக்கு ஜெய் என்ற முழக்கம் இந்தியாவில் உள்ள எந்த தேசத்தை குறிக்கின்றது என்று இந்த முழக்கத்தை ஆதரிப்போர் தான் விளக்கி கூறவேண்டும்….
வினவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? குறைந்த அளவுக்காவது நமக்கு உள்ள தேசிய உரிமையான தமிழ் தாய் வாழ்த்தை கூட எதற்க்காக rssன் “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்துடன் சேர்த்து கிண்டல் அடிக்கவேண்டும்? தமிழ் தேசிய இனம் தம் மொழியை தம் நிலத்தை தமிழ் தாய் என்று குறிபிடுவது என்பது அந்த தேசிய இனத்தின் ஜனநாயக பூர்வமான உரிமை தானே தவிர “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கம் போன்ற போலியாக தேசிய-மத வெறியை ஏற்றுகின்ற முழக்கம் அல்ல அது….
தமிழ் நாட்டளவில் தமிழ் வாழ்க என்று முழங்குவதும் இந்திய அளவில் ஜெய் ஹிந்த் என்று முழங்குவதும் மட்டுமே சரியான முறையாக சுய சார்பு உள்ள ,சோசியலிச , மதசார்பற்ற இந்திய குடியரசுக்கு பொருத்தமானதாக இருக்கும்…….ஆனாலும் இந்தகைய முழக்கங்களுக்கு எத்தகைய அரசியல் சாசன அங்கிகாரமும் கிடையாது ஆகையால் நாம் யாரையும் அப்படி முழங்க வலியுறுத்த முடியாது.
//ஆக “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கமே வெள்ளையர்கள் போட்ட பிச்சை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியாக ஐரோப்பிய காலனியாதிக்க மையவாத சிந்தனை முறைதான் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் எரிபொருள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாரத் மாதாவிற்கே இதுதான் கதி என்றால் தமிழ் அன்னைக்கும் அதுதான் கதி!//
வினவுக்கு என் அறிவுரை : உங்கள் மொக்கையான கட்டுரையை தவிர்த்து என் பின்னுட்டத்தில் உள்ள கிழ் கண்ட விசயத்தை இன்னும் விரிவாக எழுதி rss வெறியர்களின் வாயை அடையுங்கள்
உலக வரலாற்றில் தேசிய இனங்கள் தனக்கு என்று நாட்டை கட்டமைத்துக்கொள்வதும் , தேசிய கொடி , தேசிய கீதம், தேசத்தை தாயாகவோ அல்லது தநதையாகவோ கற்பித்துக்கொள்வது என்பது முதலாளித்துவ-ஜனநாயக நடைமுறை தான்……ரஷியர்கள் தங்கள் தேசத்தை தந்தையர் தேசம் என்று கொண்டாடுவதும் வரலாற்றில் நிகழ்ந்த ஒன்றுதான்….ஆனால் இந்தியா என்பது ஒரு தேசமா? அல்லது பல்வேறு தேசிய இனங்களை உள்வாங்கிக்கொண்டு உள்ள கூட்டமைப்பா ?( the term used in Indian constitution is Union of States) ? இந்தியா என்பது பல்வேறு தேசங்களை(states ) உள்ளடங்கிய குடியரசு எனில் (according to Indian constitution Bharat is a Union of States. It is a Sovereign Socialist Secular Democratic Republic) பாரத மாதாக்கு ஜெய் என்ற முழக்கம் இந்தியாவில் உள்ள எந்த தேசத்தை-தேசிய இனத்தை குறிக்கின்றது என்று இந்த முழக்கத்தை ஆதரிப்போர் தான் விளக்கி கூறவேண்டும்…
மேலும் பாரத தாய் மற்றும் தமிழ் தாய் என்று இருவேறு தாய்கள் தமிழனுக்கு எப்படி சாத்தியம் ?
Union of States பற்றிய சிறிய விளக்கம் :
இந்தியா விடுதலை அடைந்த போது அதனை தொடர்ந்து எழுதப்பட்ட அரசியல் சாசன சட்டத்தில் Union of States என்ற சொற்பதம் பயன்படுத்த பட்டு உள்ளது… அன்றைய நிலையில் மாநிலங்கள் (States ) மொழி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை ….ஆனால் அதற்கு பின்னால் தான் மொழி அடிபடையில் மாநிலங்கள் பிரிக்கபட்ட பின்னால் ஒவொரு மாநிலமும் தமக்கு என்று தாய் மொழி வாழ்த்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது….எனவே தமிழ் நாட்டவனுக்கு தம்மை தமிழன் என்று உணர தமிழ் வாழ்க என்ற முழக்கமும், தமிழ் தாய் வாழ்த்தும்,,, ஒட்டு மொத்த இந்தியாவின் சுயசார்பை வெளிபடுத்த சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தேச விடுதலை குழுவினர் பயன்படுத்திய ஜெய் ஹிந்த் என்ற முழக்கமும் மட்டுமே போதுமானது….
இந்த RSS தேசத்துரோகிகள் கூறும் கூரச்சொல்லும் பார்த் மாதகி ஜெய் என்ற முழக்கம் யாருக்கானது என்றால் அது இந்திய விடுதலையை காட்டிக்கொடுத்த தேச துரோகிகளான @@@RSS பார்பனர்களை மட்டுமே இன்று அடையாளப்படுத்துகின்றது…..
@@@இந்திய சுதந்திரத்துக்காக மக்கள் ஜெய் ஹிந்த் என்றும் பாராத் மாதக்கி ஜெய் என்றும் முழங்கி குரல் கொடுத்து போராடிய போது இந்த rss கும்பல் என்ன செய்து கொண்டு இருந்து? வெள்ளை காரனுக்கு கால்கழுவிக்கொண்டும் , அவனுக்கு துதி பாடிக்கொண்டும், விடுதலை வீரர்களை காட்டிகொடுத்துகொண்டும்(உதாரணம் வாஜ்பாய் நீதிபதிக்கு எழுதிய கடிதம்), வெள்ளையனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொண்டும் தானே இருந்தது? தூ மானங்கெட் RSS பார்பன தேச விரோதிகளே !
//“இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) – அதர்வ வேதம்.
“.. நிலமென்னும் நல்லாள் நகும்” – திருவள்ளுவர்.
“கடலை ஆடையாக உடுத்து, மலைகளை மார்பகங்களாக ஏந்தியவளே, விஷ்ணுபத்னி, உன்மீது கால்வைத்து நடக்கும் என்னைப் பொறுத்து அருள்வாய்” – பூமி ஸ்துதி.
“பெற்ற தாயும் பிறந்த நாடும் சொர்க்கத்தை விடவும் மேலானவை” (ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்க்காதபி கரீயஸி) – வால்மீகி ராமாயணத்தின் சில பிரதிகளில் ராமன் கூற்றாக வரும் சுலோகம்.//
நிலத்தை, நாம் வாழும் இந்த பூமியை தாயாக நினைத்து போற்றி அன்பு செய்யும் பண்பு நமக்கு வெகு காலமாகவே இருந்து வரும் ஒன்றுத் தான் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஆதர்சமான வரிகள். அதனால் தானே நம் முன்னோர்கள் ஆறுகளுக்கு கங்கை, சரஸ்வதி, யமுனை. காவிரி என்று பெயர் சூட்டி பெண்ணாக பாவித்து மடித்து போற்றினார்கள். தமிழ் அன்னை என்றுக் கூறும் போது மனதில் இழையோடும் பாசமும் பூரிப்பும் கலந்து வரும் இன்பத்தை யார் தான் மறுக்க முடியும். எத்தனை இடங்களில் தமிழ் அன்னையை போற்றி பாடியிருக்கிறார் நமது புரட்சி கவி பாரதிதாசன்.
*மடித்து போற்றினார்கள்*
மதித்து என்று பாடம் கொள்க..
https://www.facebook.com/257518757698365/photos/a.257518851031689.57362.257518757698365/898828620234039/?type=3&theater
முகநூலில் கண்ட தகவல், கம்யுனிச சோவியத் ரஷ்யாவிலும் தங்கள் நாட்டை தாயாக மதித்து போற்றி இருக்கிறார்கள். இதெல்லாம் இர்பான் ஹபீபின் கண்களுக்கு தெரியாது போல. நாம் வாழும் நாட்டை பெண்ணாக,தாயாக பாவிப்பதில் பிழை இல்லை. அது ஒரு மென்மை வாய்ந்த அன்பான உணர்வு அது பாசிசமாக மாறக்கூடாதுஅவ்வளவே .
ஆர்.எஸ்.எஸ். அம்பி ஏன் கிறிஸ்தவ பெண் பெயரில் பதிவு செய்கின்றாய்?இதாண்டா உங்க வீரம்.காந்தியை சுடும் முன் இசுலாம் பெயரை பச்சை குத்திய கொலைகாரன் கோட்சேவின் வழி வரும் அம்பிகளே,என்று திருந்த போகின்றீர்கள்.