Friday, July 10, 2020
முகப்பு அரசியல் ஊடகம் யாருக்கு மூடு ஜாஸ்தி ? - இந்து ஆன்மீக சொற்பொழிவு !

யாருக்கு மூடு ஜாஸ்தி ? – இந்து ஆன்மீக சொற்பொழிவு !

-

பரிமலை கோயிலுக்குள் 10 வயதிலிருந்து – 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என கேரள அரசு 07-11-2016 அன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகால பார்ப்பனிய அடிமைத்தனத்தில் ஆட்பட்டிருக்கும் பக்த கோடிகள் இதை சுயமரியாதை தன்மானம் தொடர்பான விவகாரமாக பார்க்கவில்லை. கோயிலுக்குள் நுழைந்தால் தெய்வக் குத்தம் ஆகிவிடும் எனும் மக்களை மிரட்டிப் பணிய வைக்கும் பார்ப்பனியத்தின் பொதுபுத்தி மக்களின் இத்தகைய உணர்வு நிலைக்கு பிரதானமான காரணமாக இருக்கிறது.

sun-news-vivatha-medaiஆனால் பொதுசிவில் சட்டம் தொடர்பாக இதுவரை பம்மாத்து காட்டி வந்த இந்துத்துவக் கும்பலோ கோயிலுக்குள் இந்துப் பெண்கள் ஏன் நுழையக்கூடாது என்பதில் புதுக் காரணம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

07-11-2016 அன்று சன் செய்தி விவாத மேடையில் சாஸ்திர விரோதமா? சம(ய) உரிமையா? எனும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என்று சீனிவாச சாஸ்திரிகள், குமரவேல் எனும் இருபார்ப்பனர்கள் வழங்கிய அருளுரை பார்ப்பனியம் பெண்களை எப்படி பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டியது.

நெறியாளர் தமிழ்நாட்டில் மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோயிலைக் காட்டி, பெண்கள் கருவறைக்குள்ளேயே பூசை செய்கின்றனரே! ஏன் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சீனிவாச சாஸ்திரிகள் நச்சென்று ஒரு பதிலைச் சொன்னார். சாஸ்திரிகளின் கருத்துப்படி மேல்மருவத்தூர் இந்துதர்மத்தின்படி நடக்கும் கோயில் கிடையாதாம். காஞ்சி சங்கராச்சாரிக்கு இணையில்லை என்றாலும் ஓரளவு ரவுடியாக அம்மா பராசக்தி இருந்தாலும் அவர் ஆகமவிதியின் கீழ் வராத சூத்திரர் என்கிறார் சீனிவாச சாஸ்திரிகள்! ஆகமவிதிப்படி நடக்காத மேல்மருவத்தூர் கோயில் இந்து கோயில் அல்ல; பக்தர்களும் இந்துக்கள் அல்லர் என்பது சாஸ்திரிகளின் நிலைப்பாடு!

மற்றொரு ஆன்மீக சொற்பொழிவாளர் குமரவேல் சபரிமலைக்கு பெண்கள் செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது என்கிறார். ஆண்களின் உடலமைப்பைப் பார்த்து பெண்களுக்கு அவ்வளவு எளிதில் காமம் கிளம்பாதாம். ஆனால் பெண்களின் உடலமைப்பு அப்படிபட்டதல்ல என்கிறார். பார்த்தவுடனேயே ஆண்களுக்கு பற்றிக்கொள்ளுமாம்; மேலும் அவ்வாறு காமம் பற்றிக்கொள்வதை ஆண்களின் உடலைமப்பு காட்டிக்கொடுக்கும் என்கிறார். அதாவது விறைத்துவிடும் என்கிறார். இந்த காரணத்தினால் ஆண்களின் விரதம் தடைபடுகிறது. ஆகையால் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்றார்.

இதை மறுத்து பேசப்புகுந்த சியாமளா என்பவர் ஆண்களுக்கு அத்துணை எளிதில் டெம்ட் (‘அவர் கூறியபடியே’) ஆகிறது என்றால் ஆண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் யோக்கியம் என்ன? என்று மறுகேள்வி கேட்டார். இவ்விதம் சாஸ்திர விரோதமா? சம(ய) உரிமையா? எனும் விவாத நிகழ்ச்சியை ஆன்மீக சொற்பொழிவாளர்கள் யாருக்கு மூடு ஜாஸ்தி? என்பதை நிறுவுவதிலேயே பொழுதைக் கழித்தனர்!

குறிப்பாக ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு பெண்களின் உடலமைப்பு இருப்பதால் விரதம் தடைபடுகிறது என்று குமரவேல் சொன்ன பொழுது சீனிவாச சாஸ்திரிகள் ஸ்திரிகளுக்குத்தான் காமம் அதிகம் என்று குமரவேலின் கருத்தை மறுத்தார்! மேலும் இது கலியுகம் என்பதால் காமம் மிகுதியாக இருக்கும்; வேறு யுகத்தில் கூட பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதைப் பற்றி பேசலாம்; ஆனால் கலியுகத்தில் கூடவே கூடாது என்றார்!

கிட்டத்தட்ட இதையேதான் முசுலீம் மதவாதிகளும் கூறுகின்றனர். பெண்கள் புர்கா போடவேண்டியதின் காரணமே ஆண்களின் காமப் பார்வையிலிருந்து தப்புவதோடு, ஆண்களை அவ்விதம் உணர்ச்சிவசப்படாமல் காப்பாற்றும் பொருட்டே என்கின்றனர். அய்யா ஜைனுலாபுதீனிடம் இது குறித்து கேட்டால் அவர் சாஸ்திரிகளின் பேச்சையே குர் ஆன் சொல்லும் உண்மை என  வலியுறுத்துவார். பெண்ணினத்திற்கு எதிராக கடவுளோடு இவர்கள் வைத்த கூட்டணியில் மதபேதம் கிடையாது.

விவாதத்தில் பங்கேற்ற ஸ்ருதி சுரஷ் என்ற மாணவி இந்த அயோக்கியர்களின் விவாதத்தைக் கேட்டுவிட்டு பதில் சொல்ல முடியாமல் ‘தவறாக பேசுகின்றனர்’ என்று வெட்கினார்.

சியாமளா எந்த வேத சாஸ்திரம் சபரி மலைக்குள் பெண்கள் செல்வதைத் தடுக்கிறது? என்பதற்கு ஆதாரம் கேட்டார். சீனிவாச சாஸ்திரிகளும், குமரவேலும் சாஸ்திரத்திற்கு ஆதாரம் கேட்டவுடன் சாஸ்திரம் அல்ல; ஐதீகம் காரணமாக போகக் கூடாது என்று அந்தர்பல்டி அடித்தனர். சீனிவாச சாஸ்திரிகள், ஐயப்பனின் பதினெட்டு படிகளும் புருஷ லட்சணத்திற்கு உரியது என்று அடுத்த பொய்யை அவிழ்த்துவிட்டார். இதன் படி ஒவ்வொரு படியும் ஒவ்வொரு புராணங்களைக் குறிப்பதாகவும் பதினெட்டு புரணாங்களின் குறியீடாக பதினெட்டு படிகள் இருப்பதாகவும் புருஷ இலட்சணம் படி ஆண்கள் தான் செல்ல வேண்டுமென அடித்துவிட்டார்! புருஷ இலட்சண இலக்கணத்தின்படி பெண் கணவனுக்கு பத்தினியாக பதிவிரதையாக இருப்பது அவசியம் என்றார்.

ready-to-wait
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது கூடாது என்பதை பெண்களே ஏற்கிறார்கள் என்று காட்டுவதற்கு “Ready to wait” என்ற ஹேஷ்டெக்குடன் இந்துமதவெறியர்கள் செய்யும் பிரச்சாரம்!

இங்கு மறுக்கப் புகுந்த சியாமளா, ‘பத்தினி ஒழுக்கம் பெண் படி தாண்டக் கூடாது என்று சொல்கிறது; இன்றைக்கு எந்த பெண் படிதாண்டாமல் இருக்கிறார்? வேலைக்கு பெண்கள் செல்லாமல் குடும்பத்தை நடத்த முடிவதில்லை’ என்று கூறினார். இவ்வளவிற்குப் பிறகும் பத்தினி விரதம் முக்கியம் என்று சாஸ்திரி உடும்பு பிடியாக நின்றார்.

சாஸ்திரியின் பதிலைப் பார்த்தபிறகுதான் வேலைக்குச் செல்லும் பெண்கள் மோசமானவர்கள் என்று காஞ்சி பெரியவா ஏன் சொல்கிறார் என்று புரிந்தது! படி தாண்டி பத்தினி விரதத்தை மீறுபவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்று இந்துதர்மமே சொல்வதை காஞ்சிப் பெரியவா முதல் சீனிவாச சாஸ்திரிகள் வரை வலியுறுத்துவதை தெரிந்து கொள்ள முடிந்தது!

மேலும் விவாதத்தில் சீனிவாச சாஸ்திரிகள் கணவனை வணங்கி காலில் விழுந்தால் அது ஐயப்பனையே வணங்கியதற்கு சமம் என்று ஒரு பெண் கணவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். தடாலடியாக இந்துமதத்தில் ஒரு பெண்ணுக்கு பாவமும் கிடையாது; புண்ணியமும் கிடையாது என்று மனு ஸ்மிருதியை எடுத்துக்காட்டி பெண்கள் சபரிமலைக்குப் போனாலும் புண்ணியம் ஏதும் கிடைக்காது; ஆகையால் சபரிமலைக்கு பெண்கள் போவதில் பிரயோசனம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்!

இங்கு சியாமளா என்பவர் ஆண்கள் ஒரு நாள் மட்டுமே விரதம் இருந்து மாலையணிந்து போகிறார்களே அவர்களுக்கு மட்டும் புண்ணியம் கிடைக்குமா என்று கேட்டார். அதற்கு சாஸ்திரிகள் ‘இதென்ன பிரமாதம்? தைமாதம் போனால் சபரிமலையில் மலக்குவியல்களாக இருப்பதால் பெரும்பாலான பக்தர்கள் விரத மண்டலத்தை ஒருமாதம் முன்கூட்டியே சிப்ட் செய்துபோகின்றனர்’ என்று ஆண்களுக்கான அட்ஜெஸ்ட்மெண்ட் சரிதான் என்று பேசினார்.

சாஸ்திரியின் இந்தக் கருத்துக்கு ஆமோதித்தால் இந்துத்துவக் குட்டு உடைந்துவிடும் என்று நினைத்த குமரவேல் இதை மறுத்து சபரிமலையில் மந்திரம் ஓதி தகடுபொருத்தி சக்தி வரவழைக்கப்படுகிறது. இதை மீறி விரதத்தை முன்தள்ளுவது அல்லது முறையாக செய்யாமல் இருந்தால் தகடின் பாசிட்டிவ் பவர் ஆண்களுக்கு கிடைக்காது என்றும் விரதத்தில் குறைவைக்கும் ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று சியாமளாவை மிரட்டி சமாதானப்படுத்தினார்!

மேலும் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை ஏன் தெரியுமா என்று குமரவேல் கேட்டார். காயத்ரி மந்திரத்தின் வீரியத்தை பெண்களால் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு பெண்களுக்கு வலுவில்லை என்பதால் மந்திரம் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றார்! (ஆனால் மனுஸ்மிருதியில் மனு, பெண்கள் அனைவரும் சூத்திரர்களாகவே கருதப்பட வேண்டும் என்பதால் மந்திரங்களும் வேதங்களும் பெண்களிடம் இருந்து விலக்கப்பட வேண்டும் என்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது).

மக்கள் தெய்வக் குத்தம் வந்துவிடுமோ என்று சபரிமலைக்குச் செல்ல பயப்படும் பொழுது, சாஸ்திரியும் குமரவேலும்

 • பெண்கள் அடிப்படையிலேயே இழிவானவர்கள்,
 • காமம் மிகுந்தவர்கள்,
 • பத்தினி விரதம் இருக்க வேண்டும்,
 • பெண்ணுக்கு பாவம் புண்ணியம் கிடையாது,
 • மந்திரங்கள், வேதம் ஓத அனுமதியில்லை

என்று காரணம் சொல்கிறார்கள். இந்த இந்துதர்மத்தின் படி பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்கிறார்கள். இதுதான் காரணம் என்பது மக்களுக்குத் தெரியாது. அப்படி மக்களுக்குத் தெரிந்தால் தன்னை இழிவுபடுத்தும் பார்ப்பனிய இந்து மதத்திற்கு கண்டிப்பாக செருப்படி நிச்சயம் என்பது இவர்களின் வாக்குமூலத்திலிருந்து புரிந்தது!

– தமிழ்வேல்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 41 நாள் விரதம் இருந்து கடவுளை நினைத்து வழிபாட்டு, வெறும் காலில் நடந்து போக வேண்டும், அந்த காலத்தில் சபரிமலை கோவில் இருக்கும் இடம் கல்லும் முள்ளும் மலைகளும் நிறைந்த அடர்ந்த காடு, பெண்கள் அங்கே போவது சிரமம்… மேலும் காட்டு மிருகங்கள் நடமாட்டம் அதிகம் இருந்த இடம், அப்படிப்பட்ட இடத்தில் பெண்கள் வந்தால் அவர்களால் காட்டு மிருகங்களை சமாளிக்க முடியாது, பலர் காட்டு மிருகங்களுக்கு பலியாகி இருக்கலாம், அதனால் பெரியவர்கள் பெண்கள் யாரும் சபரிமலை கோவிலுக்கு வர வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் (இதை நான் யூகத்தின் அடிப்படையில் தான் சொல்கிறேன்)…

  அடுத்தது ஐயப்ப சாமி, சபரிமலைக்கு கன்னிசாமிகள் வருவது நிற்கும் வரையில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பேன், அதுவரையில் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருப்பேன் என்று சொன்னார். கன்னிசாமிகள் வருவது எப்போது நிற்கிறதோ அப்போது மாளிகைபுரதம்மாவை திருமணம் செய்வதாக ஐயப்பன் வாக்கு கொடுத்து இருக்கிறார்… மாளிகைபுரதம்மாவின் கோவில் ஐயப்பன் கோவிலுக்கு அருகில் இருக்கிறது… ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற மாளிகைபுரதம்மாவின் தவத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும், ஐயப்பனின் விரதத்திற்கு பங்கம் வராமல் இருக்கவும் பெண்கள் சபரிமலைக்கு போவதில்லை.

  அந்த காலத்தில் சபரிமலைக்கு பெண்கள் போகாமல் இருந்ததற்கு காரணங்கள் இருந்தன ஆனால் இன்று நல்ல சாலைவசதிகள் வந்த பிறகு, மக்கள் நடமாட்டமும் அதிகம் ஆன பிறகு சபரிமலைக்கு பெண்கள் போனால் என்ன என்ற கேள்வி வரும்.

  இன்றும் ஹிந்து பெண்கள் மத்தியில் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்ற concept உள்ளது அதனால் அவர்கள் தொடர்ந்து 41 நாள் விரதம் இருக்க முடியாது, அந்த நிலையில் அவர்கள் சபரிமலைக்கு போக முடியாது. காரணம் சபரிமலை கோவில் திறந்து இருக்கும் காலம்… வருடத்தில் 2 மாதங்கள் தான் மற்ற கோவிலை போல் வருடம் முழுவதும் திறந்து இருக்காது (அந்த 2 மாதங்களில் கூட இடையில் சில நாட்கள் மூடிவிடுவார்கள்)

  எப்படி பார்த்தாலும் பெண்களால் தொடர்ந்து 41 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்ற நிலை இருப்பதால் கோவில் திறந்து இருக்கும் 2 மாதங்களுக்குள் பெண்களால் சபரிமலைக்கு போக முடியாது (என்னுடைய இந்த கருத்தை வைத்து எல்லோரும் என்னை பெண்களுக்கு எதிரான மத அடிப்படைவாதி என்று சொல்வார்களோ !!!) I am just giving logical reasons nothing else.

  இந்த நிலையில் பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கலாமா என்பதை ஹிந்து மத பெரியவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், நிச்சயம் கடவுள் நம்பிக்கையில்லாத இடதுசாரிகள் எல்லாம் இந்த விஷயத்தில் தலையிட தேவையில்லை.

  சபரிமலைக்கு யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன இடதுசாரிகளுக்கு தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே பிறகு ஏன் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிடுகிறார்கள் ?

  • அய்யா புளுகுமூட்டை மனிகன்டரே,
   //பெண்கள் வந்தால் அவர்களால் காட்டு மிருகங்களை சமாளிக்க முடியாது//
   சிங்கமோ,புலியோ உம்முடைய முன்னாள் வந்தால் நீர் சமாளிப்பீரோ….

   //பலர் காட்டு மிருகங்களுக்கு பலியாகி இருக்கலாம்,
   இதில் பெண்கள் மட்டும்தான் பலியாகி இருப்பார்களா? ஆண்கள் என்றால் புலி சிங்கம் விட்டு விடுமா?

   கண்ணிசாமிகளுக்கும் பெண்களுக்கும் ஐயப்பன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் என்னையா சம்மந்தம். உளறாதீர். திருமனம் செய்து கொண்டால் அருள்பாலிக்க மாட்டார் என்றால் திருமால் சிவன் முருகன் என பல பொண்டாட்டிகள் பல இருக்கும் சாமிகள் அருள்பாளிப்பதில்லியா? உங்களுக்கு அறிவு நாணயம் கொஞ்ச கூட இருப்பதில்லையே.

   தீட்டுனு சொல்வதே மூடத்தனமானது மற்றும் அது ஆண்களால பெண்கள் மேல் திணிக்கப்பட்டது. அறிவியல்பூர்வமாக யோசிக்க தெரியாத ஆணாதிக்க மத வெறியர்களால் பெண்கள் மேல் திணிக்கப்பட்டது.

   இடதுசாரிகளுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை. அதனால் இந்த விசியத்தில் எல்லாம் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள் . நாம் ஆட்டம் போடலாம் என்று தானே நினைத்தீர்கள். அதெல்லாம் முடியாது.

  • மணிகண்டன் போன்ற மொக்கைகளுக்கு ஒரு மசிரும் புரியமாட்டேன் என்கின்றது. மணி….இதில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து பேசியது எல்லாம் இந்து மதத்தின் ஆட்கள் தான் மணி.. நாத்திக மார்சிய வினவு அல்ல….முடிந்தால் அந்த ஹிந்து ஆட்களுக்கு பதில் அளியுங்கள்….(எதுக்கு ரொம்ப கஷ்டபடுறீங்க வினவு அவிங்க வசனத்தை வசனமாகவே போட்டு விட்டு அதன் பின் உங்க கருத்துகளை சொல்லியிருந்த இந்த மணிகண்டன் மாதிரியான ஹிந்துத்துவா மொக்கைகளுக்கு முழுசா புரிந்து இருக்கும் இல்லையா?) சரி நான் மாத்திக்கொடுகின்றேன்..

   ஆன்மீக சொற்பொழிவாளர் குமரவேல் : ஆண்களின் உடலமைப்பைப் பார்த்து பெண்களுக்கு அவ்வளவு எளிதில் காமம் கிளம்பாது. ஆனால் பெண்களின் உடலமைப்பு அப்படிபட்டதல்ல பார்த்தவுடனேயே ஆண்களுக்கு பற்றிக்கொள்ளும்; மேலும் அவ்வாறு காமம் பற்றிக்கொள்வதை ஆண்களின் உடலைமப்பு காட்டிக்கொடுக்கும் அதாவது விறைத்துவிடும் இந்த காரணத்தினால் ஆண்களின் விரதம் தடைபடுகிறது. ஆகையால் பெண்களை அனுமதிக்கக் கூடாது

   சியாமளா : ஆண்களுக்கு அத்துணை எளிதில் டெம்ட் (‘அவர் கூறியபடியே’) ஆகிறது என்றால் ஆண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் யோக்கியம் என்ன?

   சீனிவாச சாஸ்திரி : புருஷ இலட்சண இலக்கணத்தின்படி பெண் கணவனுக்கு பத்தினியாக பதிவிரதையாக இருப்பது அவசியம்

   சியாமளா : பத்தினி ஒழுக்கம் பெண் படி தாண்டக் கூடாது என்று சொல்கிறது; இன்றைக்கு எந்த பெண் படிதாண்டாமல் இருக்கிறார்? வேலைக்கு பெண்கள் செல்லாமல் குடும்பத்தை நடத்த முடிவதில்லை….

   pls answer to them maniiiiiiiiiiiiiiiiiiii……

  • வாழ்த்துக்கள் மணி keep it up…! well done…!
   என்ன சொல்றிங்க மணிகண்டன்…. கம்யுனிஸ்டுகள் ஹிந்து மதத்தில் உள்ள பெண்களின் அவலங்களை பற்றி பேசக்கூடாதா? சரி உங்க கருத்துப்படியே சிந்தித்தாலும் லாஜிக் இடிக்குதே…. ஹிந்துவாகிய நீங்கள் வினவில் பல்வேறு விவாதங்களிலும் முஸ்லிம்களை பற்றி பேசியது ஏன் ? இன்னும் மேலே போய் (வரைபடத்தில் தான்) சீன முஸ்லிம்களை பற்றியும் சீன அரசு ரம்ஜானை தடை செய்கின்றது என்றும் பேசியது ஏன் மணி மை டியர் ஸ்வீட் மணி? அப்ப ஹிந்துவாகிய நீங்க மற்ற மதத்தவர்களை பற்றி எல்லாம் பேசலாம் ஆனால் அதே ஹிந்துமதத்தில் பிறந்த நாங்க அதே ஹிந்து மதத்தில் உள்ள அவலங்களை பற்றி குறிப்பாக பெண்கள் சபரிமலையில் தடை செய்யபடும் அவலத்தை பற்றி பேசக்கூடாதா மணி? உங்கள் கண்களை மூடிக்கொண்டும் முளையை செயல் இழக்க செய்துகொண்டும் தான் காட்சிகளை காண்பீரோ.., சிதிப்பீரோ ?

   வாழ்த்துக்கள் மணி keep it up…! well done…!

   //சபரிமலைக்கு யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன இடதுசாரிகளுக்கு தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே பிறகு ஏன் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிடுகிறார்கள் ?//

   • Senthil முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளும் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், நான் சீனாவை பற்றி என்ன சொன்னேன் என்று இதுவரையில் உங்களுக்கு புரியவில்லை மேலும் உங்கள் தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்… உங்கள் வார்த்தைகளில் தெளிவு இல்லை, திரைக்கதை எழுத உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.

    • மணிகண்டன்…, உங்களுக்கு இருந்த சிறு மூளையும் வெற்றிடமாகிவிட்டதா உங்களுக்கு? அல்லது என்ன மோடியின் நடிப்பை நீங்களும் பின்பற்றுகின்றீர்களா? உங்கள் தர்க்கப்படி கம்யுனிஸ்டுகள் ஹிந்துகளை பற்றி பேசக்கூடாது என்றால் ஹிந்துவாகிய நீங்கள் இங்கு நிகழ்த்தும் பல்வேறு விவாதங்களில் முஸ்லீம்களை பற்றி எதற்கு பேசிக்கொண்டு இருகின்றீர்கள்?

    • என்னா மணி உங்க முரண்பட்ட பேச்சுகளை அதுக்குள்ள மறந்துட முடியுங்களா ? சீனாவில் ரம்ஜானுக்கு வினவு ஆதரவு தெரிவிக்கனும்…, சென்னையில் ரம்ஜானுக்கு வினவு எதிர்ப்பு தெரிவிக்கனும் என்று என்ன அழவ கருதா பேசிநீங்க போன வாரம்…! அதனை மறந்துவிட்டால் எனக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்பது ஆகிவிடுமே!

     • சீனாவில் ரம்ஜான் பண்டிகையை almost ban செய்து இருக்கிறார்கள், வினவு ஏன் சீனாவின் இந்த செயலை எதிர்க்கவில்லை என்பது ஏன் கேள்வி. இந்தியாவில் யாரும் ரம்ஜானை எதிர்க்கவில்லை, இஸ்லாமியருக்கு மற்ற மத சிறுபான்மையினருக்கு இந்தியாவில் (பெரும்பான்மை மக்களை விட) அதிக உரிமைகள் சலுகைகள் இருக்கும் போது ஏன் இந்தியாவை பற்றி பொய்யாக வினவு பேசி இந்தியாவின் மீது அவதூறு பரப்பி கொண்டு இருக்கிறது என்பதே ஏன் கேள்வி. சீனாவின் இந்த செயலை வினவு மட்டும் அல்ல அவர்களின் கூட்டாளிகளான பாகிஸ்தானும் எதிர்க்கவில்லை உங்களுக்கு ஆதாரம் வேண்டும் என்றால் இதோ ஆதாரம் http://www.aljazeera.com/news/2015/06/china-bans-ramadan-fasting-muslim-region-150618070016245.html

      இந்த சிறிய விஷயத்தை கூட உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே நீங்கள் சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களை புரிந்து கொண்டு திரைக்கதை எழுத போறிங்களா… விளங்கிடும்

      சிவகாமி பாவம் விட்டுவிடுங்கள்

      • புரிதலை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கு மணிகண்டன்…. ? ரம்ஜானை தடை செய்தகாக சீனாவுக்கு வினவு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று முன்பு நீங்கள் கூறிய விசயத்துக்கு மட்டுமே விளக்கம் கொடுத்து உள்ளீர்களே தவிர தமிழ் நாட்டில் ரம்ஜானை வினவு எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும் என்று நீங்கள் கூறிய விசத்துக்கு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை… உங்கள் கருத்தில் உள்ள முரண்பாடுகள் அப்படியே தான் தொக்கி நிற்கின்றன. அதனை முதலில் விளக்குங்கள் பாப்போம்……..

      • நாறு நாறாய் கிழித்து தொங்க போட்டாலும் இந்த நாறிப்போன மணிகண்டனுக்கு நாணம் வெட் க்கமே வராதா!? மண்டையில் துறுவேறிப்போன மணிகண்டனே யாருக்கு யார் சலுகையும் உரிமையும் கொடுப்பது?இருக்க இடம் கொடுக்க இன்று ஒய்யாரமாய் படுத்துக்கொண்டு இங்குள்ள பூர்வீக மக்களுக்கு உரிமையும் சலுகையும் நீ கொடுக்கிறாயோ?உனக்கு இப்படியெல்லாம் சொல்லித்தந்து பாரதமாதா பாரதமாதா பாரதமாதா என்று பஜனைபாடிக்கொண்டிருந்தால் நாடு நமக்கு சொந்தம் அதன் பிறகு இங்கு இருப்பவன் களை நமக்கு அடிமையாக்கி நாம் அவன் களுக்கு உரிமை சலுகை என்று பிச்சை போடுவது மாதிரி அவர்களையே நம்பவைத்து கொட்டமடிக்கலாம் என்பதை உனக்கு சொல்லித்தந்தான் பார்த்தாயே அவனை அடிக்கிற அடியில் நீ இப்படி பேசுவதை நிறுத்துவாய்.சிறுபான்மையிலும் சிறுபான்மையாய் இருந்து கொண்டு உன்னைப்போல ஒன்றிரண்டு அடிமைகளை விலைக்கு வாங்கி கொண்டு எங்களுக்கு சலுகையும் உரிமையும் தருகிறான் களாமா?எடு விளக்குமாத்து கட்டைய!..

       • மீரான், ஒருமையில் பேசுவதை தவிர்க்கவும். கருத்து வேறுபாடுகளை கருத்தால் சந்திப்பதே பயனளிக்கும். நன்றி

        • கருத்தை கருத்தால் சந்திப்பதையே விரும்புகிறேன்.கருத்துக்கு வக்கற்று வெறுப்பு பேசுவதையே வேலையாக கொண்டு உளறும்போது உணர்ச்சி மேலிடுகிறது. வருந்துகிறேன்.

  • /இந்த நிலையில் பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கலாமா என்பதை ஹிந்து மத பெரியவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,/

   இந்து மத பெரியவர்களா? யாரு அவங்க. எங்கள் தலை எழுத்தை இந்து மத பெரியவர்கள் தீர்மானிப்பதைவிட எங்களை கொன்றுவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.

   Age of Consent Act, 1891, 12 வயதுக்கு குறைந்த பெண்களுடன் அவர்களது கணவர்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு பெண்ணின் சம்மதம் தேவை. சம்மதமில்லாமல் குழந்தையுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தது ஆங்கில அரசு. இதை கடுமையாக எதிர்த்தவர் இந்து மத பெரியவர் திலகர்.

   1929-ல் குழந்தை திருமணத்திற்கான வயதை 12 லிருந்து 14 ஆக ஆங்கில அரசு உயர்த்தியது.அதற்கு எதிராக வெகுண்டு எழுந்து எதிர்த்தவர்கள் இந்து மத பெரியவர்கள்.மூஞ்சே,மாளவியா போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழக பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த ஆச்சார்யா பின்வருமாறு கூறி வயது உயர்த்தப்படுவதை எதிர்த்தார்.

   “ஆச்சாரியார் “பால்ய விவாகமில்லா விட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை”, “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும்”, என்றும் குழந்தைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் கைது செய்யப்படும்படி சட்டவிதி இருப்பதை காட்டி “புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும். பாலிய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்” என்றும் பேசியிருக்கிறார். ”

   இந்து மத பெருசுகளை அடிச்சி உக்காரவெச்சிட்டுதான் எல்லா உரிமைகளும் எங்களுக்கு கிடைச்சது. இந்த பெருசுகளை எதிர்த்து பெரியார் குடியரசில் தொடர்ந்து கட்டுரைகள், பிரச்சாரங்கள் செய்து முறியடித்திருக்கிறார். அத படிக்கும் போது பெரியார் மீது மதிப்பு கூடுகிறது.

   இந்து மத பெருசுக பேச்ச கேட்டுதான் முடிவெடுக்கனும்னா போங்கடா நீங்களும் உங்க மதமும்-னு சொல்லி அம்பேத்கர் வழியில் மதம் மாற வேண்டியதுதான்.

   • சபரிமலை கோவிலுக்கு பெண்கள் போக முடியாது என்ற என் வாதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    உங்களை போன்றவர்கள் ஏதோ ஒரு மொக்க காரணத்தை சொல்லி ஹிந்து மதத்தில் இருப்பவர்களை மதமாற்றம் செய்ய தான் பார்ப்பீர்கள், ஆங்கிலேய அடிமைகளிடம் என்ன பேச முடியும்.

    • 12 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுடன் கணவர் உடலுறவு கொள்வதற்கு அக்குழந்தையின் சம்மதம் தேவையில்லை என்று இந்து மத பெரியர்வர்கள் கூறியதும், குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும் ”மொக்கை” காரணமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் வக்கிரபுத்திகாரனுக்கு தான் தெரியும்.
     இந்து மத வக்கிரபுத்தி பெருசுகளிடம் பெண்களின் உரிமைகளை தீர்மானிக்கும் உரிமையை ஏன் கொடுக்க கூடாது என்பதற்கு மணிகண்டனின் பதில் தான் சான்று.

     கணவனால் ரேப் செய்யப்படாமலிருக்கும் உரிமை முதல் சொத்து உரிமை வரை இந்து மத பெருசுகளை எதிர்த்து போராடி தந்த மத நம்பிக்கையில்லாத, மதச்சார்பற்ற தலைவர்களுக்கு, பெண்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

     அம்பேத்கரை ஆங்கில அடிமை என்று ஆர்.எஸ்.எஸ்-காரகள் பழிப்பது புதிதல்ல. அருண்சோரி காலத்திலிருந்து ஊனா வரை தாழ்த்தப்பட்ட மக்களையும் அம்பேத்கரையும் இழிவுபடுத்துவதற்கு ஒரு நாள் சேர்த்து அனுபவிப்பீர்கள் ஆர்.எஸ்.எஸ் அடிமைகளே.

      • அவரிடம் பதில் இருதால் தானே மணிகண்டனால் பேசமுடியும்…! ஹிந்துத்துவா வெறியுடன் வீம்புக்கு வாக்குவாதம் செய்யும் அவரிடம் விவாதத்தில் அடாவடித்தனத்தை மட்டுமே நாம் எதிர்பார்கலாம்… பதிலை அல்ல….

    • நீர் எப்படி உம்முடைய மூளைப் பிதுங்கிய வாதத்தில் வழுக்கினாலும் நிற்கின்ரீர்களோ அதுபோல தான் நாங்களும் எங்களது கருத்தில் செயல்பாட்டினில் உறுதியாய் நிற்கின்றோம்.

     அதனால் ஒரு காட்டுமிராண்டித்தனமான பார்பனிய அடிவருடியின் கருத்து என்பது பொதுவான அனைத்து மக்களுடைய கருத்தாக அங்கீகரிக்க முடியாது. உம்முடைய தாய்,மனைவி, பெண் குழந்தைகளை கூட சபரி மலைக்கு செல்வதை (பிற்போக்குத்தனமாக இருந்தாலும்) தடுக்க உமக்கு உரிமையில்லை.

 2. மணிகண்டன் room போட்டு யோசிப்பார் போல.என்ன கதைச் சொன்னாலும், எல்லோரும் நம்பி விடுவார்கள் என்று நினைத்தார் போல.சாமி கும்படறதற்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம். தீட்டு என்பது பெண்களுக்கு மாத மாதம் ஏற்படும் ஒரு சுழற்சி.ஹிந்து பெண்கள் இந்த தீட்டு எனப்படும் மூடப்பழக்கம் எப்படா ஒழியும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 3. நம்ம மணிகண்டன் சார் இல்லைன்னா, விவாதமே நல்லா இருக்க மாட்டேங்கிது. எவ்வளவு சீரியசா விவாதிக்கிறார் பாருங்கோ.

 4. கோவிலுக்கு போற பாதயில
  இனிமேல் அம்பிகள் ரதி மன்மத சிந்தாமணி லேகியம்
  விக்கப் போறா…
  நன்னா பிசினஸ் ஆகும்..
  மேக் இன் இந்தியா இன் டெக்னிகல்
  கோ ஆபரேசன் வித் காஞ்சி சங்கர மடம்..

 5. / ‘பத்தினி ஒழுக்கம் பெண் படி தாண்டக் கூடாது என்று சொல்கிறது; இன்றைக்கு எந்த பெண் படிதாண்டாமல் இருக்கிறார்? வேலைக்கு பெண்கள் செல்லாமல் குடும்பத்தை நடத்த முடிவதில்லை’ என்று கூறினார்….//

  மிகவும் பக்குவமற்ற பேச்சு. பெண் படி தாண்ட கூடாது என்றால், தவறான செயல்கள் எதற்காகவும், ஒழுக்கத்தை பாதிக்க கூடிய எந்த ஒரு விஷயத்திற்காகவும் படி தாண்டி செல்லக் கூடாது என்கிற பொருளில் தான் அவ்வாறு கூறினார்களே ஒழிய வீட்டுக்குள்ளேயே அடங்கி முடங்கி கிடக்க வேண்டும் என்கிற கட்டுப்பெட்டி தனத்திற்காக அல்ல. பெண்கள் எந்த காலத்திலும் படிதாண்டாமல் இருந்ததில்லை. வீட்டு விசேஷங்கள், குடும்ப சுப நிகழ்ச்சிகள், திருமணம், உறவினரை சென்று பார்த்து வருவது போன்றவை அனைத்திற்கும் சென்று தான் வந்தார்கள். மேலும் நாற்று நடவு, கலை எடுத்தல் போன்ற உழவு வேலைகளையும் பெண்கள் படி தாண்டி சென்று தான் செய்தார்கள். எந்த காலத்திலும் யாரும் அவர்களின் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்தியது கிடையாது.

  மேலும், மின்சார வசதி, தகவல் தொடர்பு வசதி ஆகியவை வளர்ந்து பெருகி இருக்கும் இந்த 2016 ஆம் ஆண்டில் கணினிக்கு முன்னாடி உட்கார்ந்துக் கொண்டு, இந்த வசதிகளில் எதுமே இல்லாத 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக கூறப்பட்ட விஷயத்தை பற்றி பேசி எள்ளி நகையாடுவது மிகவும் முட்டாள் தனமான ஒரு செயல்.

  • இதோடா ..

   பவுசு பச்ச மொளகா ..

   நீ ரெபேக்கா மேரியோ .. இல்லை சீதையோ .. ஒண்ணு சொல்லுறேன் கேளுக்கா ..

   பாப்பாத்திகள வூட்டுக்குள்ள தான் அடக்கி வச்சிருந்தானுங்க பாப்பானுங்கள்ளாம்.. சாதாரண உழைக்கும் மக்கள் தான் ஆண் பெண் இருவரும் உழைப்பில் ஈடுபட்டனர், அந்தக் காலத்தில்.

   பாப்பான் பெண்களை சூத்திரர்களாகத் தான் கடைசி வரைக்கும் வச்சிருக்கான்.. இப்பவும் அப்படித் தான்..

   அதனால தான், இதனை அம்பலப்படுத்துன் அம்பேத்கரை பூசை அறையில வச்சி கொண்டாடுனாங்க பார்ப்பன குலப் பெண்கள்.

   கொஞ்சம் கேப் விட்டா ஓவரா சீனப் போடுறியாக்கா ..

   போயி வேரெங்கயாவது இந்தப் பருப்பையெல்லாம் வேக வைக்கா ..நல்லா வேகும் .. இங்க கத நடக்காது மாப்ளேய்..

  • அக்கா,
   //000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக கூறப்பட்ட விஷயத்தை ///

   இந்த வரியும்

   //வீட்டுக்குள்ளேயே அடங்கி முடங்கி கிடக்க வேண்டும் என்கிற கட்டுப்பெட்டி தனத்திற்காக அல்ல//

   இந்த வரியும் ஒன்றுகொன்று முரன்படுகின்றனவே.ஐயோ, சேம் சைடு கோல் போடுறீங்களே அக்கா.

   ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் பெண்களின் பாதுகாப்பிற்காக கூறப்பட்ட விசியம் என்றீர்களே. அப்போ ராஜராஜ சோழன் ஆட்சி தானே நடந்தது. அப்போ ராஜராஜன் சபல புத்திக்காரன் என்று சொல்றீங்களா? அதனால நம்ம பெரியவங்க அப்படி சொல்லியிருப்பாங்களோ? ஹ்ம்ம் இருக்கலாம்.

  • உங்களுக்கு நாங்கள் பட்ட/படும் கஷ்டங்கள் தெரியவாய்ப்பில்லை. மார்பை மறைக்கு உடை உடுத்தக்கூட பல ஆண்டுகள் எங்கள் முன்னோர்கள் போராடினார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கள் மதம் அப்படியானது. என் பாட்டியும், பூட்டியும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.உங்களுக்கு என்ன? அழகாக கவுன் உடுத்திக்கொள்வீர்கள். தேசியவாதம்/

   பொட்டுகட்டு விடுவார்கள் என்று அஞ்சிக்கொண்டு வாழ்ந்தவர்கள் என் பாட்டிகள். உங்கள் மதத்தில் நீங்கள் வேறு பிரச்சணைகளை எதிர்கொண்டிருக்கலாம். அதைவிட கொடூரங்கள் எதிர்கொண்டு வந்திருக்கிறோம்.

   முத்துலெட்சுமி என்பவர் சட்டசபையில் பொட்டுகட்டுதலுக்கு சட்டங்களை கொண்டு வந்த போது எங்கள் மத ஆண்கள் அதை கடுமையாக எதிர்த்தார்கள்.

   உடலைமறைக்க கூட போராட வேண்டிய நிலையில் நாங்கள் இருந்திருக்கிறோம்.கேட்டால் உள்ளேயே மதத்திற்குள் விவாதம் நடத்துகிறோம் என்று பல்லாயிரம் வருசம் எங்களை எய்த்துவந்தார்கள்.

   செத்த புருசனுடன் எரிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? சாதி குறித்து அம்பேத்கரின் கருத்தக்களை படித்து பாருங்கள். அம்பேத்கர் முட்டாள் கிடையாது. நீங்கள் கிணற்றிலிருந்து வெளியே வந்து அம்பேத்கர் புத்தகங்களை படியுங்கள்.

   • மகேஷ்வேரி மேடம் .., நீங்கள் யாருடன் பேசிக்கொண்டு உள்ளீர்கள் என்றாவது தெரிகின்றதா? தமிழ் தென் கோடியில் ஒடுக்கப்பட்ட மக்களான தமிழ் குடிகளை (அன்றைய நாடார் சமுகத்து மக்களையும் சேர்த்து தான் கூறுகின்றேன்) மார்பக உடையணியக்கூட அனுமதிக்காத, தாய்களின் முலைகளுக்கு வரிகட்டச்சென்ன நம்பூதிரிகளின் — கூட்டாளிகளான திருநெல்வேலி சைவ வெள்ளாள பரம்பரையில் வந்த ஒரு திருஷ்டியிடம் தான் பேசிக்கொண்டு உள்ளீர்கள்… கிருஷ்துவ மதம் மாறினால் என்ன சாதிவெறி போய்விடுமா அவர்களுக்கு? மாறாத சாதிவெறியின் வெளிப்பாடு தான் மேல் உள்ள அவரின் பின்னுட்டம்…

   • @ மஹேஸ்வரி …..

    //உங்களுக்கு நாங்கள் பட்ட/படும் கஷ்டங்கள் தெரியவாய்ப்பில்லை…….//

    நீங்கள் கூறும் கொடுங்கோன்மைகளை நான் அறியாமல் ஒன்றுமில்லை. இவை அனைத்தும் பார்ப்பன அட்டுழியங்களே. இவைகள் அனைத்தும் நிச்சயமாக ஒழிக்க படவேண்டும் தான். ஒழிந்தும் போகும். அதற்காக, மனுதர்மத்தோடு எவ்வவகையிலும் சம்மந்தப் படாத எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை ஏன் புறந்தள்ள வேண்டும் என்பது தான் என் கேள்வி.

    மேலும், இந்து மதத்தால் இது வரை நான் எந்த பாதிப்பும் அடைந்தது கிடையாது. எனது குடும்பம் திருநெல்வேலியை மையமாக கொண்ட கட்டுக்கோப்பான ஆதிக்க சாதியை சேர்ந்த ஒன்று. ஒரு வேளை, இதனால்தானோ என்னவோ எனக்கு தங்களின் வலியும் வேதனையும் புரியாமல் போனதோ என்று நினைக்கிறன். உங்களின் துன்பங்களை புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

    எனக்கிருக்கும் நண்பர்களில் 90 சதம் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் தான். நான் கல்லூரியில் படித்த நாட்களில் எனது தோழிகள், நான் தேர்வில் நல்ல படியாக தேர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு கோவிலில் எனக்காக பிரார்த்தனை செய்து பிரார்த்தனை கயிறு ஒன்றையும் என் கையில் கட்டி விடுவார்கள். அவர்களின் அந்த மேலான அன்பிற்காகவும் தான் இந்து மதத்தை நேசித்தது.

    எங்கள் வீட்டிலும் இந்து மதம் சார்ந்த சில நூல்கள் இருக்கின்றன நேரம் கிடைக்கும்போது இந்து மத தத்துவங்களை வாசிப்பது வழக்கம். நான் இந்து மதத்தை விவேகானந்தர், காந்தி, அன்னி பெசன்ட் போன்றோர்களின் பார்வையில் இருந்து தான் புரிந்து கொண்டேனே ஒழிய, சாவர்க்கர், கோல்வால்க்கர் போன்ற அடிப்படைவாதிகளின் பார்வையில் இருந்து அல்ல.

    என்னிடம் இந்து மத நூல்களும் உண்டு,அதே போன்று இந்து மத எதிர்ப்பு நூல்களும் இருக்கிறது. அதே போன்று கம்யூனிச நூல்களும் இருக்கிறது, கம்யூனிச எதிர்ப்பு நூல்களும் இருக்கிறது. இதிலிருந்து நான் வந்தடைந்த முடிவு, “எதையும் முற்று முழுவதுமாக வெறுத்து கடாசக் கூடாது” என்பது தான். அப்படி செய்வதால் மேற்படி இலக்கியங்களுக்கு எந்த நஷ்டமுமில்லை. இழப்பு நமக்கு தான்.

    //சாதி குறித்து அம்பேத்கரின் கருத்தக்களை படித்து பாருங்கள். அம்பேத்கர் முட்டாள் கிடையாது. நீங்கள் கிணற்றிலிருந்து வெளியே வந்து அம்பேத்கர் புத்தகங்களை படியுங்கள்….//

    அம்பேத்கரின் கருத்துக்களால் ஒரு அளவு பரிச்சயம் உண்டு. இருந்தாலும் இதை முழு அளவில் நிச்சயம் பரிசீலிக்கிறேன்… நன்றி

    • /இவை அனைத்தும் பார்ப்பன அட்டுழியங்களே. இவைகள் அனைத்தும் நிச்சயமாக ஒழிக்க படவேண்டும் தான். ஒழிந்தும் போகும்/

     பார்ப்பன அட்டூழியங்களே! சரியாகச் சொன்னீர்கள். எங்கள் மத தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. எங்களை காலமெல்லாம் ஒடுக்கிய சித்தாந்தத்தை நல்லது என்று போற்றி திரிகிறார்கள். இக்கொடுமைகள் தானாக ஒழியாது. ஒழிக்கப்பட வேண்டும். பெரியாரும் அவரது இயக்கத்தினரும் பெண்களின் உரிமைகளுக்கு போராடியதைப் போல போராடவேண்டும்.

     /மனுதர்மத்தோடு எவ்வவகையிலும் சம்மந்தப் படாத எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை ஏன் புறந்தள்ள வேண்டும் என்பது தான் என் கேள்வி./

     நிச்சயமாக பார்ப்பன மனுதர்மத்திற்கு சம்பந்தப்படாமல் ஆடு, கோழி வெட்டி பூஜை செய்து வந்தால் அதையும் தடுக்கிறார்கள். எங்கள் கோவில்களில் சம்ஸ்கிருதத்தை நுழைத்துவிட்டார்கள் பார்ப்பன பாவிகள். மாட்டை தின்றால் கொலை செய்கிறார்கள் பாதகர்கள். ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எங்கள் மத தலைமை என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் கலாச்சாரத்தை புறந்தள்ள எங்களை நிர்பந்திக்கிறார்கள். இஸ்லாமிய மதவாதிகளாவது எங்கள் பண்பாடு தவறானது என்று பிரச்சாரம் தான் செய்கிறார்கள்.எங்கள் இந்துமத அமைப்பினர் உனா போன்று அடித்து உதைக்கிறார்கள். மனுதர்மத்திற்கு மாறான எங்கள் பண்பாட்டை நாங்கள் கடைபிடிக்கவே பார்ப்பன வெறியர்களை எதிர்த்து போராட வேண்டிய நிலை இங்கு இருக்கிறது.

     /எங்கள் வீட்டிலும் இந்து மதம் சார்ந்த சில நூல்கள் இருக்கின்றன நேரம் கிடைக்கும்போது இந்து மத தத்துவங்களை வாசிப்பது வழக்கம். நான் இந்து மதத்தை விவேகானந்தர், காந்தி, அன்னி பெசன்ட் போன்றோர்களின் பார்வையில் இருந்து தான் புரிந்து கொண்டேனே ஒழிய, சாவர்க்கர், கோல்வால்க்கர் போன்ற அடிப்படைவாதிகளின் பார்வையில் இருந்து அல்ல/

     எந்த பார்வையிலிருந்து புரிந்து கொண்டு என்ன பிரயோஜனம் ரெபேக்க மேரி.பெண்களை படு கேவலமாக நடத்திய, அதைப் பற்றி பெருமிதமாக பொதுவெளியில் பேசித்திரியும் டொனால்ட் டிரம்ப் என்ற பொறுக்கியின் வெற்றியை கொண்டாடும் அளவிற்கு நீங்களும் இருக்கிறீர்கள். குடும்ப தலைவனாக இருக்க கூட தகுதியில்லாத பொருக்கியை நாட்டுக்கு தலைவனாக்கியிருப்பதை கொண்டாடும் உங்கள் அடிமைத்தனத்தை பரிசீலியுங்கள்.

     /இதிலிருந்து நான் வந்தடைந்த முடிவு, “எதையும் முற்று முழுவதுமாக வெறுத்து கடாசக் கூடாது” என்பது தான். /

     மெக்சிகன்கள் மீதும், முஸ்லீம்கள் உமிழப்படும் டிரம்பின் வெறுப்பு தான் தவறு. மாறாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட ஒரு காஷ்மீரத்து பெண்ணோ, சத்திஸ்கர் பெண்ணோ போலீஸ்காரர்கள்மீது வெறுப்பு கொள்வது தவறாகாது. உடை உடுத்த அனுமதி மறுத்த மதத்தின் மீது ஒரு பெண் வெறுப்பு கொள்ளத்தான் வேண்டும். அது சுயமரியாதையின் வெளிப்பாடு.

     • @ மஹேஸ்வரி…

      முதலில் இந்த கட்டுரைக்கு தொடர்பில்லை என்றாலும் பலரும் என் மீது விமர்சனம் வைப்பதால் ட்ரம்ப் தொடர்பான தங்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளித்து விடுகிறேன்.

      முதலில், ட்ரம்ப் தொடர்பாக நான் கூற வந்த கருத்தினை யாரும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறன். நான் ட்ரம்ப்பை ஆதரிக்கிறேன் என்றால், அந்த மனிதரை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல, ட்ரம்ப் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எனக்கு பிடித்திருந்தது. அவருடைய தேர்தல் அறிக்கையில் வெளியுறவு மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளை தான் ஆதரித்தேனே தவிர மற்றபடி ட்ரம்ப் என்கிற தனி மனிதரை அல்ல.

      ஒரு வேளை, இதே அறிவிருப்புகளை ஹில்லாரி அறிவித்து இருந்தால் நான் இந்நேரம் ஹில்லாரியை ஆதரித்து கருத்துகளை பதிவு செய்ந்திருப்பேன். விஷயம் அவ்வளவுதான். ஆக, இங்கு ஆதரவு என்பது கொள்கைகளுக்காக தானே தவிர, தனிப்பட்ட மனிதர்களுக்காக அல்லவே அல்ல. அதனால் தான் நடந்து முடிந்த தேர்தலில் அதிக மாநில ஓட்டுக்களை ட்ரம்ப்பால் பெற முடிந்தது. இன்று வெளியாகி இருக்கும் தமிழ் இந்து பத்திரிக்கையில் பி.ஏ கிருஷ்ணன் அவர்களின் வல்லரசின் ஜனநாயகம் என்கிற தொடர் கட்டுரையை படிக்கவும். கட்டுரையில் கூறப்பட்டதை போன்று உண்மையில் ட்ரம்பின் வெற்றி என்பது உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவாகத் தான் உலகம் பார்க்கிறது. இதை தான் ட்ரம்ப் தொடர்பான முந்தைய வினவு கட்டுரைகளில் பிரெக்ஸிட்டிற்கு அடுத்த படியாக உலகமயமாக்கலுக்கு கிடைத்த பேரிடி என்று கூறியிருந்தேன்.

      மேலும், நீங்கள் ட்ரம்ப்பை பெண் பித்தர் என்று கூறியுள்ளீர்கள். நன்று தான், அனால் இதை பற்றி அமெரிக்க பெண்களே கவலை படவில்லையே. .அதே பி.ஏ கிருஷ்ணன் தனது தொடரில் இவ்வாறு கூறுகிறார்.

      //அமெரிக்கப் பெண் முக்கியமான தகவல் ஒன்றைச் சொன்னார். ட்ரம்ப் பெண்களுக்கு எதிரி என்பதையெல்லாம் வெள்ளைக்காரப் பெண்கள் நம்பவில்லை. மொத்தம் 42% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்களில் வெள்ளை இனத்தவர்களை மட்டும் பிரித்தால் 50% மேல் ட்ரம்புக்கு வாக்களித்திருக்கின்றனர். பட்டதாரியில்லாத அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர், வேலைகள் கிடைக்கும், வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கையில்.//

      மேலும் தொடரை படிக்க http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/article9347661.ece .

      பி.ஏ கிருஷ்ணன் கூறியதை முன்பே நான் கூறி இருக்கலாம் ஆனால், அப்படி நான் கூறி இருந்தால் உடனே செல்வம் போன்ற அதிமேதாவிகள் எல்லாம் பெண்களுக்கு எதிராக நான் பேசுவதாக முத்திரை குத்தி, இவர் ஒரு பெண்ணே அல்ல பாருங்கள் அமெரிக்க பெண்களுக்கு எதிராக பேசுவதை என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி கூறுவதால் எனக்கு கவலை ஒன்றுமில்லை. ஆனால் சொல்லவந்த உண்மையும் கருத்தையும் யாரும் உள்வாங்க மாட்டார்கள்.

      ஆக, ட்ரம்பின் வெற்றி என்பது அமெரிக்க மக்கள் தங்களுடைய வாழ்க்கை தரம் மேம்ப்படும், வேலை வாய்ப்புகள் உருவாகும் என்கிற நம்பிக்கையில் கொடுத்த வெற்றி தானே தவிர, கள்ள ஓட்டுகள் மூலமாகவும் குடும்பத்தில் தலைக்கு 500 டாலர்கள் என்றும் ஓட்டுக்களை விலைக்கு வாங்கி பெற்ற வெற்றி கிடையாது.

      ஆக, இது தேசியவாதத்திற்கு கிடைத்த வெற்றி எனும் பொழுது, இதனை இந்திய நிலைமைகளுக்கு எவ்வாறு பொருத்தி பார்ப்பது. இந்திய தேசியம் என்கிற ஒரு தேசியமே கிடையாது. இந்தியா என்பதாலா பல்வேறு தேசிய இனங்களின் கூடாரமாக இருக்கிறது. இங்கிருக்கும் மாநில மக்கள் தான் தங்களுக்கான வாழக்கை நிலைகளை மேம்ப்படுத்தும் அனைத்து உரிமைகளையும், வென்றெடுக்க வேண்டும்.வேலை வாய்ப்புகள் அனைத்தும் அந்தந்த மாநில மக்களுக்கே கிடைக்க முன்னுரிமை இருக்க வேண்டும். மேலும் இங்கிருக்கும் மார்வாடி பனியா கும்பல்களை அப்புறபடுத்திவிட்டு தமிழகத்தை சார்ந்த தலித் மக்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் இதை தான் நான் கூற வந்தது. இங்கிருக்கு தலித் சமூகத்தை சார்ந்தவர்களை மிக பெரிய வணிக வர்க்கமாக மாற்ற வேண்டும். இதை தான் நான் கூற வந்தது. நன்றி.. உங்களின் மற்ற கேள்விகளுக்கு அடுத்து பதில் அளிக்கிறேன்.

      பி.கு:- மேற்கண்ட மறுமொழி மஹேஸ்வரி அவர்களின் மறுமொழிக்காகவும் பலரும் இதை தொடர்பாக என்னை விமர்சிப்பதாலும் ஒரு கட்டாயத்தில் இதனை நான் பிரசுரித்துள்ளேன். மேலும் இது தொடர்பாக மேற்கொண்டு எந்த விவாதமும் தொடரப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, ட்ரம்ப் விடயத்தை யாரும் இந்த கட்டுரையில் விவாத பொருளாக்க வேண்டாம். மீறி விவாதிக்க நேர்ந்தால் மன்னிக்கவும், எந்த பதிலும் தரப்பட மாட்டாது நன்றி ..

      • //இந்தியா என்பதாலா பல்வேறு தேசிய இனங்களின் கூடாரமாக இருக்கிறது..//

       “இந்தியா என்பதோ பல்வேறு தேசிய இனங்களின் கூடாரமாக” என்று புரிந்துக் கொள்ளவும்

 6. //பாப்பாத்திகள வூட்டுக்குள்ள தான் அடக்கி வச்சிருந்தானுங்க பாப்பானுங்கள்ளாம்.. சாதாரண உழைக்கும் மக்கள் தான் ஆண் பெண் இருவரும் உழைப்பில் ஈடுபட்டனர், அந்தக் காலத்தில்.

  பாப்பான் பெண்களை சூத்திரர்களாகத் தான் கடைசி வரைக்கும் வச்சிருக்கான்.. இப்பவும் அப்படித் தான்..//

  பார்ப்பனர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்றால் அதையே ஒட்டுமொத்த பண்பாடாக, வரலாறாக எடுத்துக் கொள்ள முடியாதே ஐயனே. பெண்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள் என்பதற்கு ஸ்ருதிகள் எனப்படும் பண்டைய வேதங்களிலோ, உபநிடதங்களிலோ எந்த ஆதாரமும் காண படவில்லையே. கூறப் போனால் ஏராளமான பெண்கள் வேதத்தில் பல பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள். வேதத்தில் அவர்களின் பங்களிப்புகள் நிறைவே இருக்கிறது.

  இன்னும் கூற போனால் எவ்வளவோ பெண்கள் இங்கே அரசாண்டதில்லையா பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்ததில் பெண்களின் பங்கு ஏதும் இல்லையா. புராணங்களில் அசுரர்களை வதம் செய்ததில் கூட பெண் தெய்வங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன. பெண்களை மதிக்காத ஒரு சமூகம் கதைக்காக கூட ஒரு பெண்ணை நாயக(கி) வழிப்பாடு என்கிற அளவில் உயர்த்தி பிடிப்பார்களா என்பது சந்தேகமே. இதற்க்கு மேல் இந்து மதத்திற்காக வக்காலத்து வாங்குவது என்னுடைய வேலை அல்ல.

  மேலும் படி தாண்டாதவள் பத்தினி என்று தமிழர்கள் கூறியது தவறான விடயத்திற்காக, ஒழுக்கத்தை தன்மானத்தை கீழிறக்குவதற்காக இருக்க கூடாது என்பதற்காக தானே தவிர பார்ப்பனீயம் புஸ்வானம் என்பதற்காக எல்லாம் கிடையாது.

  மேலும், அடுத்த முறை விவாத நாகரிகாதோடு உங்களிடம் இருந்து பதில் வந்தால் என் தரப்பு பதிலை நான் முன் வைப்பேன். இப்பொழுது பேசியத்தைப் போன்று ஒரு மூன்றாம் தரமாக, லும்பனை போல் பேசினால் …. பேசினால்… பேசினால் ஒன்றுமில்லை .. வீதியில் நடந்து போகும் யானையை பார்த்தவுடன் குப்பை தொட்டியில் படுத்து கிடைக்கும் நாய் உடனே எழுந்து நின்று, அந்த யானை வீதியை கடந்து போகும் வரை விடாமல் குரைக்குமாம். யானையோ அந்த குரைப்பை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக எந்த சலனமுமில்லாமல் அதன் இருப்பிடமான கோவிலுக்கு சென்று விடும். அதை போன்று மீண்டும் இதே தொனியில் பேசினால் தங்களை குப்பை தொட்டி நாயாக கணக்கில் எடுத்துக் கொண்டு அதனை கண்டுகொள்ளாமல் போவது மட்டுமே நான் செய்வதாக இருக்கும். ஆக்க பூர்வமாக விவாதியுங்கள் நன்றி.

  • /ஸ்ருதிகள் எனப்படும் பண்டைய வேதங்களிலோ, உபநிடதங்களிலோ எந்த ஆதாரமும் காண படவில்லையே/
   ஐயோ நீங்க ரெபேக்கா மேரி ஐ.டி ல லாகின் ஆகியிருக்கீங்க. நம்ப ஆளுங்க சில சமயம் இப்படிதான் மறந்துபோயிறோம்.

 7. அதென்னமோ நான் இந்து மதத்தை பற்றியும், முதலாளித்துவத்தையும் கடுமையாக விமர்சனம் செய்த பொழுது என்னை பற்றி வராத சந்தேகங்கள் கொஞ்சம் இந்து மதத்திற்கு ஆதரவாக பேசி விட்டால் போதும் என் அடையாளத்தை கேள்விக்குள்ளாக்கும் அனைத்து மேதாவி தனங்களும் எங்கிருந்தெல்லாமோ வருகின்றது. நான் கிறித்துவ மதத்தை சேர்ந்தவள் என்பதை நிரூபிக்க மேற்படி முற்போக்குகளோடு சேர்ந்து “இது தாண்டா சாக்கு” என்று இந்து மதத்தையும் அவர்களின் பண்பாட்டையும் உடனே திட்டி தீர்க்க வேண்டும். நக்கலும் நையாண்டியும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் உடனே ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என்று முத்திரை குத்தி விட வேண்டும். ஆனால், நிச்சயம் அவ்வாறெல்லாம் நான் செய்ய மாட்டேன். என்னை பற்றி யார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. என் மனதிற்கு தவறு என்று பட்டால் அதை நான் விமர்சனம் செய்வேன். அவ்வளவே. நன்றி.

 8. ஒன்னும் தப்பில்ல. நம்ம ஆளுங்க வழக்கமா பண்றதுதான். இந்திரன் கூட அப்படி முகத்த மாத்திட்டுதான் அகலிகையை அடைஞ்சான். பாரத பண்பாட்டை நாம தான உயர்த்தி பிடிக்கனும்.

 9. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பொம்பளைப் பொறுக்கி டிரம்புக்கு தேசிய வாதம் என்ற பெயரில் ஆதரவு…, அதே நேரத்தில் இரு ஆயிரத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் பாலியல் ரீதியாக அவமரியாதை செய்தா””ன்”” என்பதற்க்காக ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டும் தோழர்களையும் (டிரைவர்களையும்) திட்டித் தீர்பது……. என்று இன்னும் கூறிக்கொண்டே செல்லலாம் இவரின் (மேரியின்) முரண்பாடுகளை அல்லது உள் நோக்கங்களை …. திருந்துவார் என்றால் கூறலாம்… திருந்தா ஜென்மத்துக்கு என்னத்துக்கு என்று நிறுத்திக் கொள்கிறேன்….

 10. மேலும், கட்டுரையின் பேசு பொருள் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை பற்றி தான். என்னுடைய கருத்து அனுமதிக்கலாம் என்பதே. பெண்கள் பயணிக்கும் வகையில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டு தாராளமாக அனுமதிக்கலாம்.

  ஆனால், இதை முடிவு செய்ய வேண்டியது, நீதிமன்றங்களோ, ஆர்.எஸ்.எஸ் அடிப்படை வாதிகளோ, கம்யூனிச நாத்திகர்களோ, பெரியாரிவாதிகளோ அல்ல. இன்னும் சொல்ல போனால் ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு கூட அந்த உரிமை இல்லை. வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது இந்து மதத்தில் உண்மையான பக்தியும் நம்பிக்கையம் கொண்ட அம்மதத்தை சார்ந்த பெண்கள் மட்டுமே அந்த முடிவினை எடுக்க வேண்டும். மற்றவர்கள் இந்த விடயத்தில் இருந்தது ஒதுங்கி இருக்க வேண்டும். வேண்டுமானால், வெளியில் இருந்து ஆலோசனைகள் வழங்கலாம். நன்றி.

  • சரி அக்கா,

   நீங்க சூப்பரா கமெண்ட் போட்டு இருக்கீங்க. வினவும் பெண்கள் சபரி மலைக்கு போவதை எதிர்ப்பதாக தெரியவில்லை. நீங்களும் எதிர்க்கவில்லை. அப்புறம் அதை தீர்மானிப்பது பக்திமயமான பெண்கள் தான் என்கின்றீர்களே? அது எப்படின்னு சொல்லுங்க? ஓட்டெடுப்பு நடத்தலாமா?

   ஓட்டெடுப்பு நீங்களும் நாங்களும் நடத்த முடியுமா? அப்போ அதை தீர்மானிப்பது மோடி அரசு தானே அல்லது உச்ச நீதிமன்றம் தானே? அல்லது மேட்டுக்குடி சீம்மாட்டிகள் நூறு பேர் தான் அதை தீர்மானிப்பார்கள்.

   இதெல்லாம் தெரிந்திருந்தும் சும்மா நானும் ரவுடி தான்னு சாமியாடுறீங்கலே அக்கா. நீங்க இந்து மதத்தினால் பாதிக்கப்படவில்லை சுபிட்சமாக இருக்கிறீர்கள் என்றால் எல்லோருமே சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா?

   பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு பொய் விடுமா என்னா?

   • வெளியில் இருந்து ஆலோசனை என்றால் என்ன அக்கா?

    அமெரிக்கா வெளியில் இருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறதே அது மாதிரியா? உங்களை மாதிரி நல்லா படிச்சவங்க நாலு விசியம் தெரிஞ்சவங்க கொஞ்சம் புரிய வெச்சா நல்ல இருக்கும்.

   • //ஆனால், இதை முடிவு செய்ய வேண்டியது, நீதிமன்றங்களோ, ஆர்.எஸ்.எஸ் அடிப்படை வாதிகளோ, கம்யூனிச நாத்திகர்களோ, பெரியாரிவாதிகளோ அல்ல. இன்னும் சொல்ல போனால் ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு கூட அந்த உரிமை இல்லை. //

    உங்கள நெனச்சா காமடியா இருக்கு. உண்மையிலேயே நீங்க ஒரு லேடியானே டவுட் வருது.

    நீங்க ஆர்.எஸ்.எஸ்,நீதிமன்றம்,ஐயப்பன் தேவஸ்தானம் கோஸ்டில கம்யுனிஸ்டுகளையும், பெரியாரையும் சேர்த்தது கூட தப்பில்லை.

    ஆனா பெண்கள் தாம் அதை முடிவு செய்ய வேண்டியவார்கள் என்று அடிச்சு வுடிரீங்கலேக்கா… வீட்டில ஒரு புள்ளைய பெக்கனுமா வேண்டாமா என்று கூட பெண்களால் தெரிவு செய்ய முடியாத பொது எப்படிக்கா நீங்க இப்படி பேசுறீங்களே?

    உண்மையிலேயே இதையெல்லாம் யாரு முடிவு செய்யறாங்கன்னு தெரிஞ்சும் சும்மா உலகளந்த பெருமாள் மாதிரி அளக்கரீங்களே அக்கா. அதனால் நீங்க ஒரு உலகளந்த பெருமாளா தான் இருக்கணும். ஒரு பொம்மனாட்டியா இருக்க வாய்ப்பே இல்லை.

    இப்படி சொல்வதற்கு என்னை மன்னிசிருங்கக்கா.

 11. @ செல்வம் ….

  //ஓட்டெடுப்பு நீங்களும் நாங்களும் நடத்த முடியுமா? அப்போ அதை தீர்மானிப்பது மோடி அரசு தானே அல்லது உச்ச நீதிமன்றம் தானே? அல்லது மேட்டுக்குடி சீம்மாட்டிகள் நூறு பேர் தான் அதை தீர்மானிப்பார்கள்………..//

  மேட்டுக் குடி சீமாட்டிகள் தான் என்றில்லை,இந்து மதத்தின் பால் உண்மையான பக்தியுடைய யாரும் எந்த வர்க்கத்தை சேர்ந்த பெண்களும் அதை தீர்மானிக்கலாம். வாக்கெடுப்பு,கருத்துக்கணிப்பு போன்றவைகளை இங்கிருக்கும் காட்சி ஊடகங்களும் பத்திரிக்கைகளும் செவ்வனே செய்யலாம். மேலும் சபரிமலை ஐயப்பன் பெயரிலேயே தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடங்கி இந்த பணியினை மேற்கொள்ளலாம். அல்லது, ம.க.இ.க. மக்கள் அதிகாரம் போன்ற மக்கள் அமைப்புகளும் இது குறித்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யலாம்.

  வரும் தேர்தலில் தி.மு.க வா அல்லது அ.தி.மு.க வா? உங்கள் ஆதரவு யாருக்கு என்று குப்பைக்கு பெறாத கருத்துக் கணிப்புகளை மக்களிடம் சென்று நடத்துவதை விட, இது போன்ற அவசியமான சமூக பிரச்சனைகளுக்காக கருத்துக்கணிப்புகளை நடத்தி மக்கள் மத்தியில் இது குறித்து பொதுவான கருத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனை ஆவணமாக்கி அரசுக்கும், தேவை பட்டால் வழக்கு தொடர்ந்து நீதிமன்றங்களில் சமர்ப்பித்து அதன் அடிப்படையில் வாதாடலாம். இதில் ஓரளவு தீர்வு கிடைக்கலாம். ஏனென்றால் மக்களுக்காக தான் மதமே தவிர; மதத்திற்காக மக்கள் கிடையாது.

  என்னை கேட்டால் கம்யூனிஸ்ட் அல்லது நாத்திக அமைப்புகள் செய்வதை விட இந்து மதம் சார்ந்த அமைப்புகள்(ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்றவைகள் அல்ல) இந்த பிரச்சனையை கையில் எடுத்து போராடுவதுதான் நல்லது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், மாற்றம் என்பது உள்ளிருந்து தான் வரவேண்டும். இதற்க்கு தேர்ந்த உதாரணம் ராமானுஜர்,நாராயணகுரு, தயானந்த சரஸ்வதி,வைகுண்டர், வள்ளலார்,மகாத்மா காந்தி போன்றோர்கள். ஆகவே, நீங்கள் பொது கருத்தினை மட்டும் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டு விலகி கொள்ளுங்கள் போதும். இதற்க்கு மேல் நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கு பயன் தராது.

  //ஆனா பெண்கள் தாம் அதை முடிவு செய்ய வேண்டியவார்கள் என்று அடிச்சு வுடிரீங்கலேக்கா… வீட்டில ஒரு புள்ளைய பெக்கனுமா வேண்டாமா என்று கூட பெண்களால் தெரிவு செய்ய முடியாத பொது எப்படிக்கா நீங்க இப்படி பேசுறீங்களே?……//

  இப்போதும் சொல்கிறேன், நீங்கள் குறிப்பிடும் மாற்றம் என்பது இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட, இந்து சமயத்தை உண்மையாக நேசிக்கின்ற மக்களால் (இந்த சபரி மலை விஷயத்தில் பெண்களால்) மட்டுமே முடியும். இது மட்டுமல்லாமல் இந்து சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் இதுவே தேர்ந்த முடிவே. அது இல்லாமல் போனதால் தான் சிதம்பரம் கோவில் வழக்கு, அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவது, கௌரவ கொலைகளை ஒழிப்பது போன்ற அனைத்து நல்ல விஷயங்களும் கடைசியில் பிசு பிசுத்து போயின.

  என் யோசனை எதுவோ அதை தான் என்னால் கூற முடியும். விருப்பப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம், விருப்பம் இல்லையா ஏற்று கொள்ளாமல் உதறி விட்டும் போகலாம். அது அவரவரின் இஷ்டம். உங்களை போன்று நக்சல்பாரி எழுச்சியோடெல்லாம் என்னால் கருத்து கூற முடியாது. கம்யுனிஸ்டுகளாகிய நீங்கள் எந்த ஒரு விடயத்தையும் உங்களின் மார்க்சிய தத்துவமான பொருள் முதல் வாத அடிப்படையில் அணுகுகிறீர்களோ இல்லையோ, ஆனால் வெறுப்பு முதல்வாதத்தை வைத்து நன்றாக அனைவரின் மீதும் மிளகாய் தேய்க்க்கிறீர்கள். வெறுப்பு முதல்வாதம் உங்களிடம் மூட்டை மூட்டையாக மண்டி கிடக்கிறது. அதனை அப்புற படுத்திவிட்டு எந்த ஒரு விஷயத்தையும் அணுகுங்கள். பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க