privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மோடி மீதான நம்பிக்கை வெறும் 730 பேர்களிடம் மட்டும்தான் !

மோடி மீதான நம்பிக்கை வெறும் 730 பேர்களிடம் மட்டும்தான் !

-

டந்த வாரத்தில் முதலாளித்துவ பத்திரிகைகளின் புல்லரிப்புகள் ஒரு புதிய உயரத்தை எட்டின. “நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் மேல் இந்தியர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் நன்மதிப்பும் உலகளவில் முதலிடத்தில்” உள்ளதாக கொடுத்த காசுக்கு மேல் கூவிய பத்திரிகைகள், அதற்கு ஆதாரமாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கருத்துக்கணிப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டின.

இது உண்மை தானா என்பதைப் புரிந்து கொள்ள மேற்படி கருத்துக்கணிப்பு என்ன, அது எப்படி எடுக்கப்பட்டது என்பதைப் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

2007ம் ஆண்டு 83 சதவீத இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த அரசு, 2017ல் 73 சதவீதத்திற்கு சரிந்துள்ளது

முதலாவதாக, “பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு” (OECD – Organization for Economic Co-operation and Development) என்பது முப்பத்தைந்து நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பொருளாதார அமைப்பு. போர்ப்ஸ் பத்திரிகை இந்த 35 உறுப்பு நாடுகளில் வெறும் பதினைந்து நாடுகளில் இருந்து கிடைந்த சர்வே முடிவுகளை கணக்கில் எடுத்துள்ளது.

இரண்டாவதாக, கல்லப் எனும் அமெரிக்க கருத்துக்கணிப்பு நிறுவனம் வருடந்தோறும் பல்வேறு தலைப்புகளின் கருத்துக்கணிப்புகள் எடுத்து வருகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரம் பேர்களைத் தெரிவு செய்து அவர்களிடம் தொலைபேசி மூலமோ (தொலைபேசி இணைப்பு பரவலாகாத நாடுகளில் நேரிடையாகவோ) பல்வேறு கேள்விகள் கேட்டு அதனடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடும். மேற்படி கருத்துக் கணிப்பில் வரும் ஒரு அம்சம் தான் ”அரசாங்கங்களின் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கை” குறித்த கேள்வி. பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் தனது உறுப்பு நாடுகளுடைய விவரங்களை மட்டும் OECD தனது ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் பார்த்தால், 73 சதவீத இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற இந்திய அரசாங்கம் மூன்றாவதாகவும், சுவிட்சர்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் 80 சதவீதத்துடன் முதல் இரண்டு இடங்களிலும் உள்ளன.

மேற்படி கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை மற்றும் அது எந்தளவுக்குத் துல்லியமானது என்கிற கேள்வியை ஒதுக்கி விட்டு மேற்படி அமைப்பு நடத்திய முந்தைய ஆண்டுகளின் கணிப்பு முடிவுகளைப் பார்த்தால், 2007-ம் ஆண்டு 83 சதவீத இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த அரசு, 2017-ல் 73 சதவீதத்திற்கு சரிந்துள்ளது.

வர்க்க, மொழி, இன, சாதி, மத ரீதியில் வேறுபட்ட மக்கள் தொகுதிகளையும் பல்வேறு வகைப்பட்ட கலாச்சாரங்களையும், நூற்று முப்பது கோடி மக்கள் தொகையையும் கொண்ட நாட்டைச் சேர்ந்த ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளை அந்த மொத்த நாட்டின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. உதாரணமாக, 2012-ம் ஆண்டு இதே அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின் படி மன்மோகன் சிங் அரசின் மேல் 55 சதவீத இந்தியர்களின் நம்பிக்கை தெரிவித்ததாக முடிவுகள் வெளியாகின. எனினும், அடுத்து வந்த தேர்தலில் காங்கிரசு கூட்டணி 55 சதவீத வாக்குகளைப் பெறவில்லை; மாறாக, வெறும் 44 இடங்களையே பெற்று படுதோல்வியடைந்தது.

மோடிக்கு ஜால்ரா அடிக்க வேண்டுமென்கிற அவசரத்தில் தரவுகளை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்கிற அடிப்படையான ஊடக அறத்தைக் கூட முதலாளித்துவ பத்திரிகைகள் காற்றில் பறக்க விட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்களித்தபடி தொழில் வளர்ச்சியையோ, வேலைவாய்ப்புகளையோ ஏற்படுத்துவதில் படுதோல்வியைச் சந்தித்துள்ள மோடி அரசு, பொருளாதாரத் துறையில் தனது தோல்விகளை மறைக்க மாட்டரசியல் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத வெறுப்பரசியலைத் தூண்டிவிட்டுள்ளது. கருப்புப் பணத்தை மீட்பதாக பீற்றிக் கொண்டதும் மண்ணைக் கவ்வியுள்ள நிலையில் அதை மறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட திட்டங்கள் பாரதிய ஜனதாவின் பாரம்பரிய வாக்கு வங்கியான சிறுவணிகர்களிடமே கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், மோடியின் அரசை பெருவாரியான மக்கள் நம்புவதாக ஒரு டுபாக்கூர் “கருத்துக்கணிப்பை” வெளியிட்டு முதலாளித்துவ ஊடகங்கள் செய்துள்ள பித்தலாட்டம் உண்மையில் இந்தப் பத்திரிகைகளின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கைகளையே தகர்த்துள்ளது.

_____________________________________

இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரலை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

_____________

செய்தி ஆதாரம்:

  1. “”””””””நூற்று முப்பது கோடி மக்கள் தொகையையும் கொண்ட நாட்டைச் சேர்ந்த ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளை அந்த மொத்த நாட்டின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது”””””” — ஏன்?? வினவு கருத்துக்கணிப்பு வெளியிடும் போது இந்த அறிவு எங்கே போச்சு…. அவனாவது ஆயிரம் பேர்கிட்டயாவது கேக்குறான்….. சும்மா ஏதாவது மொன்ன கட்டுரை எழுதி தொலைக்கூடாது……

    • பாஸ் , வினவு கருத்து கணிப்பு , எத்தனை பேரிடம் எடுக்கப்பட்டது என்கின்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையில் அந்த விவரங்களை வெளியிட்டு இருக்கலாமே 1000 பேரிடம் எடுக்கப்பட்டது என்று.

  2. வினவு கூட்டங்களின் ஆசைப்படி கருத்து கணிப்பு இல்லையென்றால் உடனே அது நம்புவதற்கு இல்லை என்று சொல்வார்கள்…

    ஒரு வேலை வினவு கூட்டங்கள் கலைஞர் கருணாநிதியிடம் அரசியல் டியூஷன் போய் இருப்பார்களோ ?

    • எவன் நாட்டுக்கோ போட்ட வேளிய நாங்கதான் போட்டோம்னு புளுகுற தேஷ பக்தாள் நீங்க சொன்னா கரீட்டா இருக்கும் இன்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க