Sunday, March 7, 2021
முகப்பு சமூகம் சினிமா டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

-

டிவிட்டரில் ரஜினியை வறுத்தெடுத்திருக்கிறார்கள், நம் மக்கள்! அவற்றிலிருந்து சில வறுவல்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

________________

புகழ்‏ @mekalapugazh

எங்கப்பா..கரு.பழனியப்பன்..ஆவலாகக் காத்திருக்கிறேன்..ஆன்மீக அரசியல் விளக்கத்துக்கு..சினிமாக்காரர் என்பதால் பம்முகிறாரா..ச்சும்மா உசுப்பேத்துவோம்.
_________________

RajasekarChem®‏ @RajasekarASho7

எந்த ஊரு??? மராட்டியம்ங்க… ஏ…தமிழ் நல்லா பேசுறியே… நாடக கம்பெனியில இருந்துருக்கன்ல… ஓ… அதான் டக்குன்னு (காவி) வேஷத்தை மாத்திட்ட… #ஆன்மீக_அரசியல்  ?
_______________

SubaVeerapandian‏ @Suba_Vee

பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல் வரப்போவதாக எண்ணி மகிழ்கிறார் ஹெச்.ராஜா. இவ்வளவு காலத்திற்குப் பிறகேனும் இது பெரியார் மண் என்பது அவருக்குப் புரிந்ததே என்பதை எண்ணி மகிழ்கிறோம் நாம்!
______________________

Srinivasan Rahul?‏ @Srinivtwtz

#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு ஆன்மீக அரசியல் என்றால் என்னன்னு கேட்டாங்க… வழக்கம்போல சாதி மத பேதமற்ற அரசியல்னு சொல்லிட்டு ராமகிருஷ்ணா மடத்துக்கு போய்ட்டு வந்தன் ??
______________________

T.A.Punithan‏ @punithanadv

சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி தொடங்குவாராம்! இராமகிருஷ்ண மடத்தில் லோகோவை உல்டா செய்து தன் லோகோவை அறிமுகம் செய்வாராம்! சாமியாரிடம் சென்று ஆசிவாங்கி, So called Secularism இல்லை என்று சிரிப்பார்களாம்! ஆன்மீக அரசியல் என்றால் மதச்சார்பற்றது என்று விளக்குவாராம்! யாரை ஏமாற்றுகிறீர் ரஜினி?
_______________________

ஏரியாக்கு வாடா ?‏ @Gopi007twitz

ரஜினி முதல்வர் ஆகிவிட்டால் நடப்பவை
தொண்டன் – தலைவரே நம் மக்களை கொசு கடிக்கிறது அதை மருந்தடித்து கொல்ல ஆனையிடுங்கள்
ரஜினி – தொண்டனே இது ஆன்மீக ஆட்சி இந்த ஆட்சியில் யாரையும் கொல்லவோ துன்புறுத்தவோ கூடாது
ஆன்மீக அரசியல்
__________________

எவனோ ஒருவன்  @EncmFfgtCkjyNHt Replying to @Mark2kali

இதே ஆன்மீக அரசியல் செய்யப்போகிறேன் என்று ஜோசப் விஜய்யோ அல்லது ஏஆர் ரஹ்மானோ அறிவித்திருந்தால் இன்றைய காட்சிகளே வேறு
______________

இடும்பாவனம் கார்த்தி‏ @idumbaikarthi

சென்னை வெள்ளத்திற்கு 10 இலட்சமும், இராகவேந்திரா கோயிலுக்கு 10 கோடியும் அளித்ததிலிருந்தே அவர் செய்யப்போவது மக்கள் நலன் அரசியல் இல்லை. அது வெறும் ஆன்மீக அரசியல்தான் எனப் புரிந்து கொள்ள வேண்டாமா.?
_________________

இடும்பாவனம் கார்த்தி‏ @idumbaikarthi

ஆன்மீக அரசியல் வேறு! மதவாத அரசியல் வேறு என விளக்கவுரை எழுதிய திருமாவளவன், தற்போது ரஜினிகாந்த் ஆட்சி அமைத்தால் அது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி என்கிறார். இதைத்தான் நாங்கள் முதல் நாளிலில் இருந்து சொல்றோம்.!
________________

வினோ‏ @vinodhkrs

தட்டுல காசு போடலீனா விபூதிய நம்ம கைல வீசுவாங்க
10 ரூவா போட்டா கைல அழுங்காம போடுவாங்க
50 ரூவா போட்டா நம்ம நெத்திலியே பூசி விடுவாங்க
இதுதான் எனக்கு தெரிஞ்ச ஆன்மீக அரசியல்
_____________

mathimaran‏ @mathimaran

‘ஆன்மீக அரசியல்’ 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விக்கிறது.
_________________

G Suryah‏Verified account @SuryahSG

Started his speech with Bhagawad Gita. Ends with “Jai Hind”. #ஆன்மீகஅரசியல் !
#SuperStarRajinikanth #PoliticianRajini
_____________________

புகழ்‏ @mekalapugazh

“தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் அமைக்கவில்லை..என்கிறாரே ஸ்டாலின்” இவர்களுக்கு இதே வேலைதான்..போராட்டம் ..கோரிக்கை.. இதல்ல நம் அரசியல்..கடவுள் நம்பிக்கை மூலம் நோயில்லாமல் வாழலாம் என்பதே ஆன்மீக அரசியல்.. மீறி நோய்வந்தால் சென்னைக்கு அருகே தானே..சிங்கப்பூரிருக்கு..ஹஹ்ஹா..ஹாஹா.
_______________

ஜானு‏ @Janu_Bhaskar

ரூ100 லஞ்சம் வாங்கினா ரூ 30 உண்டியலுக்கு. பள்ளிச்சீருடை காவி கலர். அதிகமா கோபப்படாத(?) பெண்களுக்கு சாத்வீகி விருது. லேட்டா வந்தா ஸ்ரீராமஜெயம் 100முறை எழுதணும். முதல்வரைப்பார்க்க நோ தர்ம தரிசனம்.ஒன்லி ஸ்பெஷல் தர்ஷன். சந்திராஷ்டமம், சங்கடஹரசதுர்த்திக்கு விடுப்பு உண்டு. #ஆன்மீகஅரசியல்
____________________

ஆல்தோட்டபூபதி‏ @thoatta

மிஸ்டு காலின் ஆன்மீக அரசியல் வெர்ஷன் தான் வெப்சைட்ல பதிவு பண்றது போல
_____________________

Balu Manimaran‏ @paalumani Replying to @HRajaBJP

‘ஆன்மீக அரசியல்’னா என்னன்னு வெளிநாட்டு நண்பர் ஒருவர் கேட்டார். “அது, ரஞ்சிதா போன்ற பிரபலமானவர்கள் பங்கு பெறும் அரசியல்”னு சொல்லி சமாளிச்சுட்டேன். தப்பா சார்?
____________________

சிந்தனைவாதி‏ @PARITHITAMIL

பெரியார் வழியில் மதசார்பற்ற ஆன்மீக அரசியல் என்று யார் எந்த ரூட்டில் வந்தாலும் இங்கே மதவாத அரசியல் காலூன்ற முடியாது # இதுதான்டா தமிழ்நாடு Description: ? ? ?

___________________

கிரியேட்டிவ் ЯΛJ ™‏ @CreativeTwitz

தாமரை பாஜகட்ட சுட்டது, அந்த பாம்பு சந்திரமுகி படத்துல சுட்டது, உண்மை உழைப்பு உயர்வு நம்ம அண்ணாச்சி கிட்ட சுட்டது அந்த ஆன்மீக அரசியல் நம்ம நித்தியானந்தாகிட்ட சுட்டது // ஆன்மீக ஆராய்ச்சி ?

_________________

நித்யா‏ @nithya_shre

பாபாவும் நான்தான்…  ?பாஜகவும் நான்தான்….  ?ரஜினி #ஆன்மீக_அரசியல்

______________

தோழர் Pauli ?‏ @paulitwitz

NEETக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க GAIL நெடுவாசல் திட்டத்துக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க ஹிந்தி திணிப்புக்கு எதிரா பேசுனயா? இல்லிங்க அட்லீஸ்ட் மதவாதம் டீமானிட்டைஷேஷனுக்கு எதிராவாது பேசுனயா? இல்லிங்க அப்பறம் என்ன மயித்துக்குடா அரசியல் அதுவும் ஆன்மீக அரசியல்?! ?

____________________

Ra Sindhan (சிந்தன்)‏ @sindhan

ஆன்மீக அரசியல் என்பதற்கு ராமகிருஷ்ண மடம் தரும் விளக்கம் ‘மதச்சார்பின்மை என்றழைக்கப்படுவது அல்ல’. மற்றும் களிப்போடு ஒரு புன்னகை.

_______________________

VIDUTHALAI EPAPER‏ @viduthalainews

ஆன்மீக அரசியல்

_________________

RamKumar‏ @ramk8059

ஆன்மீக அரசியல் என்றாலே BJP RSSக்கு மறைமுக ஆதரவு என்று இன்னும் சிலருக்கு புரியாமல் கம்பு சுத்திக்கொண்டு இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது?#Rajinikanthpoliticalentry

_____________________

KRS | கரச‏ @kryes

அறிஞர் அண்ணாவின் தொலைநோக்கு கண்வியக்கிறேன்! *வீர சிவாஜியோ *சிவாஜி ராவ் கேக்வாட் – ரஜினிகாந்தோ மிகத் தெளிவான, “பின்னணி பிராமணீயத்தின்” வரலாறு! — ரஜினி “ஆன்மீக அரசியல்” காலத்தில்.. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல்! http://www.annavinpadaippugal.info/nadagangal/chandramohan_1.htm … சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்!

_______________

Yousuf Riaz‏ @YousufRiaz1

ஆன்மீக அரசியல் என்றால் என்ன பாய்? ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொடுக்க துப்பு இருக்காது ஆனால் சாமி வேடம் போட்ட ஆசாமிகளை கோடிக்கணக்கில் செலவு செய்து ஊடக சமூகம் போற்றும்…. இது ஒரு உதாரணமே,

_____________________

KRS | கரச‏ @kryes

ஸ்ரீமான். ரஜினிகாந்த் அவர்களின் “ஆன்மீக அரசியல்” பித்தலாட்டம், தோலுரிக்கப் போகிறேன்! சினிமா ரசிகர்கள் விலகியே நிற்க! யார் இந்தச் சென்னை, கவுதமானந்தா? அவரை, ரஜினி சந்தித்து, “ஆசி” பெற்றது ஏன்? So Called Secularism உங்களால் ஒழிய வேண்டும்.. எ. அவர்கள், ரஜினியிடம் சிரிப்பது ஏன்?

______________

Surya Born To Win‏ @Surya_BornToWin

ரஜினி தொடங்கி இருப்பது ஆன்மீக அரசியல் ஆப் அல்ல. தமிழக மக்களுக்கு சொருகப் போகும் ஆப்பு!

______________________

Marina?‏ @Mark2kali

ரஜினியின் ஆன்மீக குரு சச்சினாந்த சுவாமி & Co பின்னனி அறிவோம்..  ?#RSS அரசியல்?

________________

உளவாளி‏ @withkaran

யோகி ஆதித்யநாத் பண்றதுதானே ஆன்மீக அரசியல்..
வடக்கே ஒரு வின் டீசல் தெற்கே ஒரு ரஜினி..டெட்லி காம்போ

_______________________

maniangopi‏ @maniangopi

My Fav picks of #Rajinikanthpoliticalentry Speech 1) பகவத் கீதை சொல்லி ஆரம்பித்தது 2) ஆன்மீக அரசியல் 3) இந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்றதுக்குலாம் மத்த கட்சிகள் இருக்கு 4) வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழ்மக்கள்,ஜெய் ஹிந்த் #Rajinikanth #RajiniFansMeet #rajninewyearparty

___________________

லாவோ‏ @Vidhushagan

இறுதியில் ‘ஜெய்ஹிந்த் “என்று சொன்னபோதே அது ஆன்மீக அரசியல் என்று புரிந்துகொண்டோம் தலைவா. ஜெய்ஹிந்த் ரஞ்சிதா படம். அப்ப ஆன்மீகம் அரசியலே தான்.

_______________

T.A.Punithan‏ @punithanadv

ஆன்மீக அரசியல் கோமியத்துக்கு மார்கெட்டிங் பசுவுக்கு ஆம்புலன்ஸ் கார்பரேட் சாமியார்களை வளர்ப்பது ரஜினி காலில் விழனும், பாலபிசேகம் செய்யனும், கோயில் கட்டனும் எதுவாயினும் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பணும் தரையில் உட்கார்ந்து பவ்யமாக பேசவேண்டும். யாரும் கேள்வி கேட்கக் கூடாது

____________________

கவி மைந்தன்✍✍?‏ @raadhai_kanna

அங்கே தெளிவாய் தெரிகிறது மதவாதிய அரசியல் என்று (மத்தியில்) இங்கே மறைமுகமாய் பிரதிபலிக்கிறது ஆன்மீக அரசியல் என.. #நாடு_எங்க_சார் போகுது

________________

KRS | கரச‏ @kryes

ஜாதிகள் நல்லதடி பாப்பா! – மனு தர்மம்(?) கொடுங்கோல் மனு.. வகுத்த ஜாதிகளைப் புகழ்ந்து ஆன்மீக அரசியல் எ. பேரில், பிராமணீய அரசியல்! இதோ ‘Swami’ Gautamananda “உண்மை முகம்”! ஆசி கேட்ட ரஜினியே.. ‘தில்’ இருந்தால் சொல்! மனு தர்மம்= தமிழ்நாட்டுக்கு நல்லதென்று சொல், பார்ப்போம்?

____________

KRS | கரச‏ @kryes

So Called Secularism – “Swami” Gautamananda! So Called ஆன்மீக அரசியல், RSS! RSS தலைவன் மோகன் பகவத் & கெளதமானந்தா.. கொஞ்சி மகிழும் திருக்காட்சி; இதுவா, ரஜினிகாந்த்.. உங்கள் ஆன்மீக அரசியல்? அவனிடம் “ஆசி வாங்க ஓடிய” நீங்கள்.. பெரியார்/ அண்ணா/ காமராசர் சமாதிக்கு ஓடுவீர்களா?:(

____________

KRS | கரச‏ @kryes

“ஆன்மீக” நித்தியின் மஹா குரு = கெளதமானந்தா! அவனிடம் தீக்ஷை பெற்ற “ஸ்வாமி” நித்யானந்தா! நித்தியே.. தன் வாயால் சொல்கிறான் பாருங்கள்! இதோ! = https://lifeisauspicious.com/2014/06/16/living-advaitha-vii/ … Thus spake Gautamananda – “So Called Secularism” இதுவா, ரஜினிகாந்த்.. உங்களின் ஆன்மீக அரசியல்? SHAME!:(

____________

செல்வி?‏ @aselviku

ரஜினியின் ஆன்மீக அரசியல், மத அரசியல் கிடையாது: தமிழருவி மணியன் விளக்கம்
//இவர் சொல்றது ஈயம் பூசின மாதிரியும் இருக்கு.. பூசாத மாதிரியும் இருக்கு..??

________________

களக்காடு புலி™‏ @mathanmohang Replying to @JananiP48541338

மதத்தைக் கொண்டு தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்க துடிக்கும் பாஜக-வையும்! பாஜக-வை பின்புலமாக வைத்துக் கொண்டு ஆன்மீக அரசியல் என்ற பெயரில் பாஜகவிற்கு ஆள் சேர்ப்பு கட்சி துவக்கி சினிமா மோகத்தில் மூழ்கி கிடக்கும் ரசிக அடிமைகளையும் துரத்தும் வரை தமிழகத்திற்கு விடிவு ஏற்பட போறதில்லை!

_______________

ஸ்வீட்டி‏ @SumiSumathi

‘ஆன்மீக அரசியல்’ ——————– மோடியின் குஜராத்தும், யோகியின் உத்திரப்பிரதேசமும், இப்போதைய இந்தியாவும் மிகச்சிறந்த உதாரணங்கள்….

_________________

குறிஞ்சி நிலத்தவன்?‏ @arumugamsony

கமல்: நான் நாத்திக அரசியல் பண்ண போரேன். ரஜினி: நான் ஆன்மீக அரசியல் பண்ண போரேன். மக்கள்: ஓரமா போய் விளையாடுங்கப்பா.

______________

Packiarajan.. சே..‏ @packiarajan

மதவாத அரசியலின் 2.0 தான் ஆன்மீக அரசியல்..

_____________

Newton‏ @twittornewton

ஆன்மீக அரசியல் is an oxymoron. ஆன்மீகம் தனி மனிதன் சம்பந்தப்பட்ட விஷயம். அரசியல் சமூகம் சார்ந்தது.

____________________

தமிழ் அமிழ்து‏ @tamilamildhu

இதுக்கு நீ நேராவே ஆன்மீக அரசியல் என்பதனை மத அரசியல் என்று கூறலாம்.!

________

பெருமகன்‏ @PeruMagan

மக்கள்: ஆன்மீக அரசியல் அப்புடினா என்னங்க?
ரஜினி: என் பேரு என்ன? மக்கள்: Super star Rajinikanth
ரஜினி: சுருக்கமாக சொன்னா?
மக்கள்: SSR
ரஜினி: திருப்பிபோட்டா?
மக்கள்: RSS
ரஜினி: இப்போ புரியுதா?

______________

Satheesh Kumar‏ @saysatheesh

தெற்கில் இருந்து ஒரு யோகி ஆதித்யனாத் #ஆன்மீகஅரசியல்

__________________

இராவணன்‏ @ravanaasuran

RSS என்று வந்தான் அடித்து ஓட விட்டோம் இந்து முன்னணி என்று வந்தான் எட்டி உதைத்து விரட்டினோம் இந்து மக்கள் கட்சி என்று வந்தான் இடுப்பை ஒடித்து அனுப்பினோம் இப்போது ஆன்மீக அரசியல் என்று வருகிறான் அல்லையிலே மிதித்து அலறவிடுவோம்

___________________

RATIONAL ?‏ @sarankaran_y

தமிழ்நாடு ஆன்மீக அரசியல் முன்னணி 2019 – அரசியல் மாநாடு

 


 

 1. ஆன்மீக அரசியல் ? ஆரம்பம் ஆயிடிச்சி .. கிடா வெட்டக்கூடாது …பீட்டா கடிதம் தலீவருக்கு … பதில் கூறாமல் ஆன்மீக அமைதியாக இருக்கிறார் … ஆனால் …

  பாவம் ரசிக சிகாமணிகள் … ! சும்மா இருந்தவனை கிடா ஆசைக்காட்டி சாெறிஞ்சிவுட்டுட்டார் இவர்… தலீவருக்கு கிடா எதுவும் இது வரை கிடைக்கல… அதனால ரசிகர்கள் நல்லி கடிக்க அவர்களே ஏறபாடு செய்ததற்கும் … ஆப்பு அடிச்சிடிச்சி பீட்டா … கிடா சாேறு கனவு விணா பாேச்சா … ! ! இவர் கிடாவெட்டி சாேறு பாேடலைன்னாலும் பீட்டாவுக்கு … ஒரு பன்ச் டயலாக்காவது அடிக்க கூடாதா …? என்று காத்துக்கிடக்கு அல்லக்கை கூட்டம் .. !!!

 2. இந்துமதத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் சிவப்பு தீவிரவாதிகள், சர்வதேச மதவெறிவாதிகள் , பிரிவினைவாதிகள் ஆகியோரின் சதிகளை தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் ரஜினி தலைமையில் தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்..

  • ஹிஹிஹிஹ் ரெங்கராசு மொதல்ல அந்த முதியவரை தான் பாட்டுக்கு கோயில் குளம்னு கடைசி காலத்தை நிம்மதியா கழிக்க விடுங்கபா…உங்க அலும்புக்கு அந்தாளு பலியாக போவது பத்திதான் செகப்பு தீவிரவாதிங்க நாங்க கவலை படுறோம்.

 3. தமிழ்மக்கள் முறியடிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.ஆனால் அது தமிழகத்தின் புதிய “சீக்கான” ரசினி என்பெதும் அந்தச் சீக்கை தூக்கிச்சுமக்கும் ரங்கராஜன் போன்றோர்களும்தான் என்பது பாவம் நம்ம வழக்கறிஞருக்கு தெரியவில்லை.

 4. இன்னும் சில மீமஸ் சேர்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 5. தமிழக முதல்வர் பொறுப்பை ரஜினி ஏற்றாலும் நாட்டுக்கு நல்லதே, மாற்றாக நீர் சுட்டுவது யாரை அலைகத்தை கும்பலையா அல்லது அடிமைபுரட்சி கும்பலையா அல்லது ரத்தருசி மூலம் இனத்தூய்மையை ஏடைபோட அஅலையும் நவீன இனவெறி வாதிகளையா அல்லது புரட்சியின் பெயரால் வன்முறைக்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் நம் நம் பையன்களையும் பெண்களையும் தூண்டும் சிவப்பு தீவிரவாதிகளையா?..

 6. மதிகெட்ட ரெங்கராசு,
  அலைகத்தை, அடிமைபுரட்சி, இனவாதநரிக் கும்பல்கள் என வகைப்படுத்தி வினவில் கிழித்து தொங்கவிடுவது தெரியாதா? இவர்களில் யாரையாவது என்றைக்காவது இவரிருதான் ரட்சகர் என சுட்டியுள்ளதா வினவு? இவர்களை விட்டால் வேறு கதியில்லை எனும் பொதுபுத்தி வெகுநாளாக தளம்பி வருகிறது, மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்கும் நாள் நெருங்கி வருவது இந்த அபான வாயு கமெண்டுகளை கிளறி விடுகிரதோய்?? மக்களை கொள்ளையடிக்கும் கும்பல்களை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது போலீஸ் மண்டை உடைத்தால் நாம் வன்முறையாளர்களா? சாதிவெறி மதவெறியை எதிர்த்து பிரசாரம் செய்யும் நாங்கள் ஒழுக்ககேடானவர்களா? எது எது ‘நம்’ பையன்களும் பெண்களுமா? ரொம்பதான் அக்கறை அடங்கோப்பா, உங்க விருபதுக்கு சாதி மத சுயநல வெறியர்களாக வளர நாம் இடைஞ்சல்?? அது தான் தீவிரவாதமேன்றால் நாங்க தீவிரவாதிகள் தான்.

  கிழட்டு, நடுத்தர, இளவயது என மூன்று தலைமுறைகளை சேர்ந்த சில கிறுக்கர்களை சேர்த்து வைத்திருக்கும் ரஜினிக்கு விஜயகாந்த் அளவுகூட மக்கள் மசியமாட்டர்கள், உண்மையில் ரஜினி எனும் முதியவர் இப்போது பலதலைக்கொள்ளி எறும்பாக உள்ளார் என்பதே பரிதாபம், பேசாம ஒன்னும் வேணாம் என்னைய நிம்மதியா விடுங்கப்பா என்று தான் உள்ள கிடக்கையை சொன்னால் ரசிகமன்ற தலைவர்களாலேயே கொல்லப்படும் அபாயத்தில் உள்ளவர் அந்த முதியவர். போட்ட கைக்காசை எடுக்காமல் விடுவார்களா?? பயலுங்க இதில தலிவரின் ‘ஆன்மிகம்’ எந்தளவு புனிதபடுத்த போகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம், அதுபோக உண்மையில்மக்களே மகேசன் என்ற உண்மையை உணர்வதே ஆன்மிகம், ஆனா இங்க ஆன்மிகத்தின் பெயராலே அந்த மகேசனின் தலையில் மிளகாய் அரைப்பதே எல்லா பயலுகளின் குறிக்கோள், ரசினி கேடி சாமிகளை சந்தித்ததே நல்ல சாட்சி. இவருக்கு தகுந்த பாடத்தை அந்த மகேசன்களே புகட்டுவார்கள். but, யார் கண்டது கழுதை தலிவரு ‘அதிசய பிறவி’ படத்துல ரிவர்ஸ் கியர்ல சண்டை போட்ட ஆளாச்சே, அதுவும் இன்னும் மூணு வருசம் இருக்கு அதுக்குள்ள என்ன பண்ணுவாரோ.

 7. வீட்டுத்தாலியைக்கூட அடகு வச்சு ரசினியோட “வியர்வை”க்கு தங்கக்காசு கொடுத்த ரசிகர்களுக்கு கறி சோறு போடக்கூட வக்கில்லாத தீண்டாமையைக் கடைபிடிக்கிற இந்த அறிவிக்கப்படாத rss “மன்னனை” ரெங்கராஜ”ன்” பாண்டேக்கள் இழுத்தூவருவது மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.எனக்குத்தெரிந்து டுடோரியல் காலேஜ்களில் “சட்டவகுப்புகள்” நடப்பதாய் தெரியவில்லை.ஏனெனில் “அட்வகேட்” அவர்களின் கம்யூனிச ஆய்வுகள் அப்படியான உயர் “தரத்தில்” உள்ளது.

  • ரஜினி நல்லவரோ, கெட்டவரோ, மக்கள் விரும்பினால் தேர்வு செய்யட்டுமே, உமக்கு ஏன் எரிச்சல்?..

 8. எல்லோரையும் நொள்ளை மட்டுமே சொல்லிவருவது , கேலிக்குரியது, எனக்கு கல்யாணம் பாணியில் தங்களை ஆட்சியமைக்க அனுமதி கோரி போராட்டம் செய்வார்களோ என மக்கள் கேலி பேசுகிறார்கள்..

 9. // ரத்தருசி மூலம் இனத்தூய்மையை ஏடைபோட அஅலையும் நவீன இனவெறி வாதிகளையா அல்லது புரட்சியின் பெயரால் வன்முறைக்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் நம் நம் பையன்களையும் பெண்களையும் தூண்டும் சிவப்பு தீவிரவாதிகளையா?..// என்று வக்கீல் கருத்து மழை பாெழியறார் …!

  இதே வரிகள் மாடு மற்றும் மாட்டுக்கறி பிரச்சனையில் மனித மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடிய கூட்டங்களுக்குதான் பாெருத்தமாக இருக்கும் … கடைசி வரியில் சிவப்பு தீவரவாதிகளையா? என்பதில் சிவப்பு எனபதை எடுத்துவிட்டு ” காவி ” என்று மாற்றினால் தற்பாேதைய நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் …!!!

  Reply

 10. ரஜினியை விமர்சிப்பவர்கள் முதலில் இங்குள்ள யோக்கியமான அரசியல் கட்சிகளின் பெயரை சொல்லவும். அதன் பிறகு ரஜினியை நிதானமாக வெச்சி செய்யலாம்

  ரஜினி தேர்தல் அரசியலில் பங்கு பெறுவது, பெறாதது முழுக்க முழுக்க சட்டப்படியானது தேர்தலில் போட்டியிடுவதாலேயே அவர் CM ஆகிவிடுவார் என்பதெல்லாம் கிடையாது. மக்கள் வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியம்

  ஆன்மீக அரசியலுக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார். எனக்கு தெரிந்த வரை அவர் இது வரை எந்த மதத்தினரையும் விமர்சிக்கவில்லை தி.க.வின் மிச்ச சொச்சமான ‘வினாவுக்கு’ அதுக்குள்ளாகவே அவசரம்.

  அவர் என்ன செய்தார் என்பதை கேட்பவர்கள், இது வரை இருந்த MLAக்கள், MPக்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டு இருப்பார்களா ? இல்லை இனிமேல் அவர்களுடைய MLAக்கள், MPக்களை கேட்பார்களா ?

  இதை எல்லாம் கேட்டல் நான் மதவாதி, காவி என்று ஒரு கூட்டம் கிளம்பும்.

  நன்றி

 11. Atleast rajani entered in to politics with true face of rss-hindutva. But truly impotent (COURTESY: screw moorthy who screws OPS and EPS behind) kamal entered in to politics with atheist face with hidden rss agenda. Be careful

 12. நேற்று வரை வங்கிக் கணக்கு கூட இல்லாத அரசியல்வாதி சாதியை வைத்து
  அரசியல் செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த சாதித்தலைவரும் உள்ள
  நாட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்களோடு உள்ள ரஜினி அரசியலுக்கு வருவதில்
  என்ன தவறு உள்ளது?? . பல நூறு ஆண்டுகளாக சாக்கடையாக உள்ள
  தமிழ்நாட்டை ஒரு சில மாதங்களில் திருத்த முடியாது………..திருத்த
  முயற்சிப்பவரை ஊக்கப்படுத்தினால் புதிய அரசியல் சாக்கடை முளைக்காது
  அதுவே தமிழக மக்களுக்கு கிடைக்கும் வெற்றி. வரட்டும் ரஜினி …வெற்றி
  பெறட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க