Wednesday, February 1, 2023
முகப்புசமூகம்சாதி – மதம்சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !

சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !

-

சோடாபுட்டி ஜீயர் புராணம் !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழுவினர் வழங்கும் சோடாபுட்டி ஜீயர் புராணம் !

ஆண்டாளை தேவதாசி என வைரமுத்து இழிவுபடுத்தியதாக எச். ராஜா ஒரு அவதூறு பிரச்சாரத்தை துவக்கினார். அதை வைத்து இந்துமதவெறியை  ஊட்டும் வேலையை இந்துமதவெறி அமைப்புக்கள் செய்தனர். தினமணி வைத்தியநாதய்யரை காலில் விழ வைத்த ஜீயர் பிறகு வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் என அறிவித்தார். பின்னர் திடீரென்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு வைரமுத்து மன்னிப்புக்கு பிப்ரவரி 3ம் தேதி வரை கெடு வைத்தார்.

அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மதவெறி பிக்கப் ஆகாத அதே நேரத்தில், பாஜக மீதான தமிழக மக்களின் வெறுப்பை இந்த விவகாரம் அதிகப்படுத்தியது. கொசுறாக சின்ன சங்கரனின் தமிழ்த்தாய் அவமதிப்பு இதற்கு பெரும் உதவியையும் செய்தது. ஆண்டாளை வைத்து அவாள் நடத்திய இந்த நாடகத்தை நகைச்சுவையாக உணர்த்துகிறது இந்த சோடாபுட்டி ஜீயர் புராணம். பாருங்கள், பகிருங்கள்!

பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

 1. Super ?இதற்க்கு மேல் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தமுடியாது. பிரைமரி எவிடன்ஸ் சிறப்பு. ஆம் ஆண்டாள் என்ற ‘பெண்குழந்தையை’ என்ன செய்திருப்பார்கள் என்பதை உங்கள் பாணியில் விளக்கிய பின் ஆண்டாளின் பக்த்தர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆண்டாளின் கதி பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். சிதம்பரம் ஆறுமுகசாமிக்காக அம்பலம் ஏறினீர்கள் இன்று அனாதை ஆண்டாளுக்காக…

  • பச்சையான மத காழ்ப்புணர்ச்சி! ஆதாரமற்ற அவதூறு உன் வீட்டில் உலை பொங்க வேறேன்ன செய்வீர்! எம்மை போன்ற சாராரரி இந்துக்களை இந்துத்துவம் நோக்கி தள்ளாதீர்..

   • ஒரு ‘சராசரி இந்து’ பார்ப்பனியத்தை அம்பலபடுத்துவது கண்டு ‘இந்துத்துவம்’ நோக்கி போய்விடுவேன் என ப்ளக்மெயில் பண்ணுவானாகில் அவன் ‘ஏற்கனவே’ பச்சை இந்துத்துவா அட்வோகேட் அவர்களே. என்னத்தை சட்டம், லாஜிக் எல்லாம் படிச்சிங்களோ!

    வினாவில் உலவும்,
    ‘சராசரி இந்து’ ‘பெரியாரிஸ்ட் முஸ்லிம்’ ‘பள்ளர்சாதி-சாதி எதிர்ப்பாளி’ ‘குரான் சயின்டிஸ்ட்’
    இதெல்லாம் என்னன்னுதான் எனக்கு இன்னும் புரியல.

   • //ஆதாரமற்ற அவதூறு//
    தங்க புத்தர் சிலையை திருடி கோவில் சுவர் கட்டியது, கட்டிய தொழிலாளர்களை கொன்றது எல்லாம் நீங்களே கொடுத்த primary evidence தானே!
    மற்றபடி, சங்கராச்சாரி அனுராதா ரமணனை பாலியல் துன்புறுத்தல் செய்தது, இதை தட்டிக்கேட்ட சங்கரராமனை போட்டுத்தள்ளியது, இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

 2. பொட்டுல அடிச்சாப்புல கேள்வி, பொலம்பக்கூட முடியாது; பொத்திக்கிட்டுதான் குலுக்கணும்.
  அறுமை. பாராட்டுக்கள்.
  தொழில் நுட்ப ரீதியாக – ஆடியோ கிளாரிட்டி இன்னும் கொஞசம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்; கொஞ்சம் டைமிங்க் மிஸ் ஆகுது; வீடியோ கவரேஜில் தாளவாத்தியக் காரரை கவர் பண்ணவில்லை.
  மொத்தத்தில் அருமையான நிகழ்ச்சி. நிகழ்ச்சியும் கூட கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு.
  ஆனாலும் இந்த கேள்வி கொடிபிடிச்ச மாமியையும் உலுக்கும்.

 3. அதாகப்பட்டது கடந்த ஒருவாரமாக நான் BP மாத்திரைகளை சாப்பிடுவதில்லை (எடுப்பது என்பது தற்போதய தமிளர்கள் மரபாகிவிட்டது) என்பதாலும்;
  தங்களது கதாட்சேபத்தைப் பார்த்துத் தனியாக சிரித்துக்கொண்டிருப்பதாலும் தங்கள் மேல் ஆத்திரப்பட்ட என் ஆத்துக்காரி தாங்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சித்து தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக தகவல் வருவதாலும் ;
  கோவணான்டிகளுக்காக எழுதப்பட்ட ஐபிகோ பிரிவு களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றார் வழக்காட.
  என் உடல்நலன் கருதி தாங்கள் சின்னவா பெயரிலும் கதாட்சேபம் ஒன்று பாடி அருளுமாறு வேண்டுகோள் வைக்கின்றேன் தண்டனிட்டு.
  தொடரும்…

 4. கம்யூனிஸ்டுகள் கடுங்கோட்பாட்டுவாதிகள்,
  இரசனையற்ற ஆட்டுமந்தைகள், எனத்தூற்றும் படைப்பாளிப் பண்டிதர்கட்கு இக்கதைப்பாட்டு எனும் கலைவடிவம் அச்சத்தையூட்டும் பேச்சையும் எழுத்தையும் விஞ்சிநிற்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க