privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதமிழை பயிற்று மொழியாக்கு ! விழுப்புரம் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

தமிழை பயிற்று மொழியாக்கு ! விழுப்புரம் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

-

“பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு!
அரசு வேலைவாய்ப்பில்  தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு!
அலுவல் மொழியாக ,நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!
தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !”

விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 27.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாணவர்கள் ,இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் புமாஇமு அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மனோகரன் தலைமை தாங்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், இன்றைக்கு மாணவர்கள் ஆகிய  நாம் படித்துவிட்டோம், வேலைக்கு போய்விட்டோம் என்றால்  வாழ்க்கை இப்படியே சுமுகமாக இருக்குமா என சிறிது யோசிக்க வேண்டும். மோடி அரசு நீட் தேர்வை திணிப்பது, காவேரி தீர்ப்பு, விவசாயத்தை அழிக்க ஹட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், சாகர்மாலா திட்டம் போன்ற பேரழிவு திட்டத்தை திணிப்பது, கல்வி நிலையங்களில் சம்ஸ்கிருத திணிப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கேரளா,மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தனது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கின்றன என்று முடித்தார்.

கானை வட்டார மக்கள் அதிகாரம் அமைப்பாளர், தோழர் இளவேந்தன் பேசுகையில், மக்கள் பிரச்னைக்கு நாம் போராடினால் அரசும் ,போலீசும் ஒடுக்குகிறது . அது மட்டும் இல்லாமல் ஜனநாயகப்பூர்வமாக ஒரு ஆர்பாட்டம் நடத்தக் கூட அனுமதி மறுக்கும் இந்த அரசை நாம் நம்பலாமா? ஓநாய் கிட்ட போய் ஆடு நீதி கேட்டால் என்ன நடக்கும்? ஆட்டையே சாகடிக்கும். ஆகவே இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக போய்விட்டது.இதற்கு தீர்வு மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதுதான் என்று பேசி முடித்தார்.

விழுப்புரம் புமாஇமு-வின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் திலீபன் பேசுகையில், இந்த ஒட்டுமொத்த அரசும் மக்களை நாயினும் கீழாய் நடத்துகிறது. மாணவர்கள்,இளைஞர்கள் இதை எதிர்த்து நாம் ஒரு புரட்சிகர அமைப்பாக ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று கூறினார்.

தோழர் இரவி கார்த்திக் பேசுகையில்,  ஒரு மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம். ஒரு மொழியின் மூலமாகதான் நாம் தகவலையும், நம்மை சுற்றி நடக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் பேச முடியும். அப்பொழுது அவர்கள் கலாச்சாரம், பண்பாடு மேம்படும். ஆனால் ஒரு மொழி அழிந்தால்  ஒரு இனம் அழியும், கலாச்சாரம் அழியும். அதை நோக்கிதான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஆண்டாள் பிரச்சினையை தமிழகத்தில் கிளப்பி இதன் மூலம் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி எடுத்தது. இந்த அபாயத்தை உணர்த்து நாம் போராட வேண்டும் என்று முடித்தார்.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் பேசுகையில், இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பலுடைய இந்த விரோதம் என்பது நீண்ட நாள் பகை, குறிப்பாக இந்தி எதிர்ப்பில் தமிழகத்திடம் அடிவாங்கிய இந்த ஆர்.எஸ்.எஸ்., நச்சுப் பாம்பை அன்றைக்கே நசுக்கி இருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு விட்டதன்,விளைவாக அடிவாங்கிய பாம்பு மீண்டும் படமெடுத்தது வருகிறது. காவேரி தீர்ப்பில் மட்டும் தமிழகத்தை வஞ்சிக்கவில்லை, தமிழ் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை, சென்னை IIT- யில் நடந்த நிகழ்சிகளில் தமிழ் அவமதிப்பு, தமிழகத்தில் விவசாய நிலங்களை நாசமாக்கும் அழிவுத் திட்டம் திணிப்பு, என அனைத்திலும் வஞ்சித்து வருகிறது. ஆண்டாள் விவகாரத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பார்ப்பன கும்பலை தாண்டி யாரும் பங்கேற்க வில்லை. இருந்தாலும் அதைவைத்து இந்துமதவெறியை கிளப்பி இந்துகளை திரட்ட முயற்சி செய்தது. இதை நாம்   அனுமதிக்கலாமா ? இதை முறியடிக்க ஒரு புரட்சிகர அமைப்பாக திரளவேண்டும் என்று முடித்தார்.

இறுதியாக விழுப்புரம் பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் ஞானவேல் பேசுகையில், அந்த காலத்தில் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர் தொடுக்கும் போது இரண்டு விதமாக மனிதர்களைப் பார்க்கலாம். ஒன்று தனது நாட்டைக் காக்கவும், தனது பண்பாடு கலாச்சாரத்தை  காக்கவும், வளங்களை காக்கவும் எதிரி நாட்டு படையோடு போரிடுவது, மற்றொன்று அவனிடம் அடிபணிந்து அவன் கொடுக்கும் பதவிக்கும் ,பொருளுக்கும் விலைபோவது. இன்றைக்கு தமிழகத்தின் மீது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பல் ஒரு போரை தொடுத்து இருக்கிறது. இந்த போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றால்,நமது பண்பாடு,கலாச்சாரம்,மொழி,இயற்கை வளம் எல்லாம்  அழியும். நாம் என்ன செய்ய போகிறோம்?  எதிர்த்து போரிடப் போகிறோமா? அல்லது இணங்கிப் போகப் போகிறோம். மாணவர்கள் இளைஞர்கள் எதிர்த்துப் போராட வேண்டும். புரட்சிகர அமைப்புகளில் இணைந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க