காவிரி : எந்தப் போராட்டம் வெற்றியடையும் ? கருத்துக் கணிப்பு

3

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோமென உறுதியாக இருக்கும் மத்திய அரசை எதிர்த்து தமிழகமெங்கும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க நிலைய வித்வான்கள் தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து கொஞ்சம் கூட பயப்படுவதில்லை. முப்பதாண்டு வழக்கில் காவிரி உரிமை பறிபோனதற்கு காரணம் தாங்களல்ல, மற்ற கட்சிகள் என்று திசைதிருப்புவதிலேயே கவனமாக இருக்கின்றனர்.

உச்சநீதிமன்றமோ மோடி அரசின் சட்ட விளையாட்டிற்கு மனப்பூர்வமாக ஆதரவளித்து சேவைகள் பல செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் எப்படி நடக்கவேண்டும், எது தீர்வைக் கொண்டு வருமெனக் கருதுகிறீர்கள்? வாக்களியுங்கள்!

காவிரிக்கான தமிழக மக்கள் போராட்டம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்)

  • மத்திய அரசின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது எனும் நிலையை உருவாக்குதல்.
  • பாரதிய ஜனதாக் கட்சி தமிழக மக்களால் தடை செய்யப்பட வேண்டும்.
  • எடப்பாடி அரசு, எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் பதவி விலகச் செய்தல்.
  • மேலாண்மை வாரியம் அமையாத வரை உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்க மறுக்க வேண்டும்.
  • கமல், ரஜினி போன்ற கோழைகளை போராட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

3 மறுமொழிகள்

  1. //கமல், ரஜினி போன்ற கோழைகளை போராட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
    பாரதிய ஜனதாக் கட்சி தமிழக மக்களால் தடை செய்யப்பட வேண்டும்//
    Yes, these can be possible.

    //மத்திய அரசின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது எனும் நிலையை உருவாக்குதல்..
    எடப்பாடி அரசு, எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் பதவி விலகச் செய்தல்.
    மேலாண்மை வாரியம் அமையாத வரை உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்க மறுக்க வேண்டும்.//
    But how these can be done?
    CIVIL WAR Against INDIA!

  2. இந்த போராட்டத்தில் வெல்ல முடியாது.
    கொஞ்சம் புத்திசாலிதனமாக யோசிக்க வேண்டும்.நாம் BJP அல்லது காங்கிரஸ் கட்சிகளூக்கு வோட்டு போடாமல் இதனை பெற முடியாது.
    அவர்களூக்கும் பதவி ஆசையை கொடுதால்தான் வெல்ல முடியும்.

    அது வரையில்நாம் வெல்ல போவது இல்லை. போராடி மக்கள் அலுத்து பிறகு யோசிப்பார்கள்.

    3ஆவது அணீயை வைத்து ஒண்ணூம் பண்ண முடியாது.

  3. எவ்விதப் போராட்டத்தையும் மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை என்னும் நிலை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. புதியதொரு போராட்ட வடிவம் தேவை. என்ன செய்வது என்று தெரியாத குருடனின் நிலையில்தான் இருக்கிறோம். நீங்களாவது அறிவுரை நல்கினால் நலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க