மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளும் பாசிச மோடி அரசு, தன்னை விமர்சிப்பவற்களை கைது, சிறை, சித்திரவதை என்று கடுமையாக ஒடுக்குகிறது.

0
குஜராத் மாநிலத்தின் வட்கம் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் பலன்பூரியில் கடந்த ஏப்ரல் 20 அன்று இரவு 11.30 மணிக்கு அசாம் போலீசுத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மேவானி பின் அங்கிருந்து கவுகாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நரேந்திர மோடியை, காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் என்று கூறிய ட்விட்களுக்காக மேவானி கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்சேவைக் கடவுளாகக் கருதும் மோடியிடம் குஜராத்தில் நடக்கும் வகுப்புவாத மோதல்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று மேவானி கூறியிருந்தார்.
மேவானியை கைதுசெய்யும் போது போலீசு எஃப்.ஐ.ஆர் நகலை காண்பிக்கவில்லை. அவரை நாங்கள் ஏன் கைது செய்கிறோம் என்று கூற தயாராக இல்லை என்று போலீசு கூறியதாக அவரின் உதவியாளர் கூறினார்.
படிக்க :
♦ காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !
♦ ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
அகமதாபாத் விமான நிலையத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதுதான் கைதுக்கான காரணங்கள் தெரியவந்தது. அப்போது போலீசு காட்டிய ஆவணத்தில், அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பாபானிபூரில் வசிக்கும் அனுப் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், 120 B (குற்றச்சதி), பிரிவு 153(A) 153(B) இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை தூண்டுதல், 295 (A) அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தளங்களை சேதப்படுத்துதல், 504 அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல், 506 மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேவானியின் ட்விட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோட்சேவை கடவுளாக வணங்குகிறார் என்றும், ஏப்ரல் 20-ம் தேதி குஜராத்துக்கு சென்ற பிரதமர் மோடியிடம் மக்கள் கலவரங்கள் நடந்த இடங்களில் அமைதிக்காக வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் மேவானி ட்விட் செய்திருந்ததாக டேயின் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட் “பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே நல்லிணக்கதை சீர்குலைக்கும் என்றும் புகார்தாரர் குற்றம் சாட்டினார்.
மேவானியின் இரண்டு ட்வீட்களை தற்போது ட்விட்டரில் காணமுடியவில்லை. புகாரின் அடிப்படையில் ட்விட்டர் அந்த பதிவுகளை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
000
காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவிக்கும்பல் கடவுளாக வணக்குகிறோம் என்று வெளிப்படையாகவே பேசும்போது, கோட்சேவின் பிறந்தநாளில் அவர் சிலைக்கு மோடி மாலை அணிவித்து மறியாதை செலுத்தும்போது, கோட்சேவை புனிதராக மாற்ற பல்கலைக்கழக பாடபுத்தகங்களில் சேர்க்க காவிக்கும்பல் முயற்சிக்கும் போது, மோடி கோட்சேவை கடவுளாக வணங்குகிறார் என்று மேவானி கூறியதில் என்ன தவறு இருக்கிறது.
குஜராத்தில் ராம நவமியை வைத்து பல்வேறு இடங்களில் கலவரத்தை நடத்திய காவிக் கும்பலில் நடவடிக்கைகளை நிறுத்த, மதநல்லிணக்கத்தை பாதுகாக்க குஜராத் மக்களை மோடியிடம் கேட்க சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.
இப்படி பிச்சினையே இல்லாத கருத்துக்களைக் கூட பொருத்துக்கொள்ள முடியாத மோடி அரசு மேவானியை கைதுசெய்துள்ளது என்பது ஓர் பாசிச நடவடிக்கை.
படிக்க :
♦ பொய்வழக்கில் காஷ்மீர் பத்திரிகையாளர் மீண்டும் மீண்டும் கைது !
♦ சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொ­ய் வழக்கில் கைது செய்த போலீசு!
மோடியை விமர்சித்ததற்காக ஒரு எம்.எல்.ஏ கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை யோசித்து பாருங்கள். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளும் பாசிச மோடி அரசு, தன்னை விமர்சிப்பவர்களை கைது, சிறை, சித்திரவதை என்று கடுமையாக ஒடுக்குகிறது. ஸ்டான் சுவாமி போன்ற சமூக செயல்பாட்டாளர்க்ளை பொய்வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து வருகிறது. தபோல்கர் கல்புர்கி, கௌரிலங்கேஷ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களை தன் கொலைவெறி அமைப்பின் மூலம் படுகொலை செய்து வருகிறது.
எதிர்த்து கேள்விக்கேட்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் இல்லாமல் ஒழிக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்காவிட்டால் ஜனநாயத்திற்கு கல்லரை எழுப்பப்படும்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க