மக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் ?
மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனக் கூறும் பொன்னார், அந்த அமைப்பை கருவருக்க வேண்டும் என கொக்கரிப்பது ஏன்? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு !
மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன ?
*மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன?
*வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ?
இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ
யார் சமூக விரோதி ?
* போராட்டங்களை ஒடுக்கி வருகிறது அரசு. நாம் தோற்றுவிட்டோமா?
* யார் சமூக விரோதி?
- இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் ? அரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்? – கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ
மீனவர்களே போலீசின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள் – வழக்கறிஞர் மில்டன் !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அரிராகவன் ஆகியோர் மீது வைக்கப்படும் மீனவ பிரதிநிதிகள் புகார் மனுவுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மில்டன் !
வன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா ? உரை | வீடியோ
மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்களின் வீடியோ மூன்று பாகங்களாய்...!
எத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் ! ஆரியப்பட்டி செல்வி !
”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம்.” என்று உறுதியோடு கூறுகிறார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர் கோட்டையனின் மனைவி செல்வி.
NSA -வில் தோழர் வேல்முருகன் கைது ! இரண்டு குழந்தைகளோடு தீக்குளிக்கவா ? அமுதாவின் கேள்வி !
மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆலங்குளம் பகுதி தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளை விவரிக்கிறார் வேல்முருகனின் மனைவி அமுதா!
NSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது ! சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேட்டியளிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?
சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற ? | ராஜு
வானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது? சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற? சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை?
வேதாந்தா முதலாளிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் | ஆழி.செந்தில்நாதன் | ஆதவன் தீட்சண்யா | நவீன் | ஓவியா
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் சமூக செயற்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் நவீன், சமூக செயற்பாட்டாளர் ஓவியா.
தூத்துக்குடி படுகொலை : கண்டிக்காமல் இருப்பது பெருங்குற்றம் | அதிஷா | ஆடம்தாசன் | சல்மா | சுந்தர்ராஜன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் பத்திரிகையாளர் அதிஷா, திரைப்பட இயக்குநர் ஆடம்தாசன், கவிஞர் சல்மா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா.
தூத்துக்குடி | யார் பயங்கரவாதி ? யார் சமூகவிரோதி | எழிலன் | கரன் கார்க்கி...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் மருத்துவர் எழிலன், எழுத்தாளர் கரன் கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், காரல் மார்க்ஸ்.
எங்கே போனார் எடப்பாடி ? கேட்கிறார் தூத்துக்குடி போராளி | வீடியோ
துப்பாக்கிச் சூடு நடந்து ஏழு நாளாகியும் எங்களை எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி எங்கேப் போனார்...? கேள்வியெழுப்புகிறார்கள்., தூத்துக்குடி மக்கள்.
ஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு !
போலீசின் குண்டுக்குத் தானும் இரையாகநேரிடும் என்ற நிலையிலும், தூத்துக்குடி இளைஞர்களும், தூத்துக்குடி களத்திலிருந்த எமது செய்தியாளரும் அனுப்பியிருந்த வீடியோக்களை இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்.!