ரஷ்யா: ஒரு நாளைக்குள் முடிந்த பிரிகோஜினின் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி’!
ரஷ்யா ராணுவ அதிகாரிகளுக்கும் பிரிகோஜினுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக, தனது எதிர்ப்பை ஒரு ராணுவக் கலகமாக வெளிப்படுத்தினான் பிரிகோஜின். இதை ஆட்சிக் கவிழ்ப்பு அளவிற்கு அகமகிழ்ந்து வரவேற்றன மேற்கத்திய-அமெரிக்க ஊடகங்கள்.
ஒடிசா ரயில் விபத்து: மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்!
தண்டவாளப் பராமரிப்பு ஊழியர்கள் 4 லட்சத்திலிருந்து 2 இலட்சமாகக் குறைந்துள்ளார்கள். ரயில்வே துறையில் 3.12 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது; இவற்றுள் பெரும்பாலானவை பாதுகாப்பு தொடர்பான பணிகளாகும்.
கழன்றது முகமூடி | பகுதி 1
‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை.
துருக்கி தேர்தல் முடிவு: தேவை, பாசிசத்திற்கு எதிரான மாற்று ஜனநாயகத் திட்டம்!
எர்டோகன் பிற்போக்கு பாசிஸ்ட் எனில், கிலிடாரோக்லு மிதவாத போர்வையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு பாசிச ஆதரவாளர். எர்டோகனின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிசவாதிகள் கிலிடாரோக்லுவை ஆதரிக்கின்றனர்.
அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!
கடந்த ஜனவரி மாதத்தில் அமுல் நிறுவனத்தில் கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்ற, பல ஆண்டுகளாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய ஆர்.எஸ்.சோதி தன் பதவியை ராஜினாமா செய்து அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்துள்ளார்.
நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!
பல லட்சம் ரூபாய் முதலீடுசெய்து நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களால், மருத்துவத்தை சேவையாக கருத முடியுமா? அவர்கள் மலைக்கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவார்களா?
புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் ஜூலை 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?
கர்நாடகாவில் இந்துத்துவா இன்னும் முதல் கட்டத்திலேயே - அதாவது குழந்தைப் பருவத்திலேயே உள்ளது” என்கிறார் மைசூர் பல்கலைக்கழக கலைத்துறையின் தலைவரான முசாபர் அசாதி. கடலோர கர்நாடகத்தைத் தவிர, ஒட்டுமொத்த கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால், முசாபர் அசாதி குறிப்பிடுவதுதான் உண்மையாகும்.
டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசிடம் இருந்து மோடி அரசால் சட்டப்பூர்வமாகவே பறிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எதிரான மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை ஆகும்.
கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!
இரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், முட்டாள்தனமான நடவடிக்கை என்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றனர். பாசிசக் கும்பலை குறைந்து மதிப்பிடுகின்றனர்.
புதிய ஜனநாயகம் – ஜூலை 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஜூலை 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, இரண்டாண்டுகளாக புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருவதும், மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையையே நடைமுறைப்படுத்த விழைவதும் தி.மு.க. அரசு மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும். கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகள், மறைமுகமாக காவிமயமாக்கத்திற்கு தான் வழிவகுக்கும்.
எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.
ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?
"தமிழ்நாடு அரசே, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று" என்பதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.
தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!
பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்னென்ன வகையில் புரோக்கர் வேலைகள் செய்ய முடியுமோ அவை எல்லாவற்றையும் திறம்படச் செய்துவருகிறது தி.மு.க. இதற்காகத்தான் கார்ப்பரேட்டுகளும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள்.




















