ஒருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று நன்கு அறிந்தே நான் உள் செல்ல, கதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது. பாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள் மேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;
மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட.
தேனி ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.
நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.
காத்திருந்த காற்றின் சுகம் சொல் ஒன்றால் விளங்கிடுமா? கூட்டுழைப்பின் விளைசுகம்தான்-பிறர் கூறக்கேட்டு உணர்ந்திடுமா! தானே ஒருவன் அனுபவிக்காமல் மனம் புரட்சியைத்தான் துய்த்திடுமா!
பசி, நீர் ஒடுக்கி சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’
புடைசூழ வாருங்கள் பொய்யர்களே... உங்களிடம் நாளேடு உள்ளது.. டி.வி. உள்ளது... பணம் உள்ளது.... படை உள்ளது.... ஆனால் உண்மையும், நீதியும் எங்களிடம் மட்டுமே!
தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து....
பூக்களை சும்மா புகழ்ந்து தள்ளாதீர்கள் ரெண்டுவேளை பாடுக்காய் மணிக்கணக்கில் பூ கட்டி நகக்கணுக்கள் வலியெடுக்க அதைவிட பயங்கர ஆயுதம் அப்போது வேறேதுமில்லை.
முற்றுகை சட்டவிரோதமாம், தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க வீணாய் பிறந்த விஜய் எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது எங்கே போனது உனது சட்டம் - ஒழுங்கு?
பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் லீனா மணிமேகலையின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.
துயரம் அழுத்தும் வேளைதான், எனினும் எம் தோழனின் சாவை அழுது தீர்க்க முடியாது, போராடித்தான் தீர்க்க வேண்டும்.
கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்... அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?
சட்லெஜ் நதியில் கரைந்த சாம்பல் முல்லைப் பெரியாறில் முழங்கும்போது, லாகூர் சிறையில் முழங்கிய குரல்கள் இடிந்தகரையில் எதிரொலிக்கும்போது, அவர்கள் இல்லையென்று எப்படிச் சொல்வது?
ஆம்பிளை' சிங்கங்களே ! சொந்த வர்க்கத்தை மனைவியாய் மகளாய் சகோதரியாய் வேலைக்காரியாய் சுரண்டி சுகம் கண்டது போதும்....












