‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
நீதிபதியின் மனதில் மறைந்திருக்கும் அரசியல் கருத்துக்கள், ஒருதலைப்பட்சமான அவரின் சோந்த விருப்பு-வெறுப்புகள், கேள்வி கேட்கமுடியாத அவரது சிறப்பு அதிகாரம் ஆகியவையும் குற்றவாளியைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.
ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!
ஈழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் பற்றிய விபரங்கள்.
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!
பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.
பரதேசி: வதையின் வரலாறா, வரலாற்றின் வதையா?
பாலாவின் பரதேசி குறித்த வினவின் விமரிசனம். வரலாறு, கலை, குறியீடுகள், சமூக இயக்கம், உரையாடல், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை, காலனிய சுரண்டல், இன்னபிறவற்றை திரைப்படத்தோடு ஒப்பிட்டு புரிய முயற்சி செய்யும் ஒரு ஆய்வு!
மாணவர் முன்னணி – போராட்ட வீடீயோக்கள்!
பன்னாட்டு விமான நிலையம் முற்றுகை, இராணுவ முகாம் முற்றுகை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் தொடர்பான வீடியோக்கள்.
ஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!
இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிகளுக்குத்தான் 'இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும்' என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது.
கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!
தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!
தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி வரும் ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தவிருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்.
மாலி ஆக்கிரமிப்பு: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!
இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆப்பிரிக்கக் கண்டத்தில் வளர்த்துவிட்டுப் பயன்படுத்திக் கொண்டதும் இப்போது இஸ்லாமியத் தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் மாலியின் கனிம வளங்களைச் சூறையாடப் போர் தொடுப்பதும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான்.
ஈழம் : ரங்கநாதன் தெருவில் பெண்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!
அதிரடியாகவும் முன் அனுமதி பெறாமலும் பெ.வி.மு. தோழர்கள் நடத்திய இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தால், அரசியல் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து அங்குதான் நடத்திக்கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கும் போலீசின் முகம், கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது!
சாஸ்திரி பவன் முற்றுகை – படங்கள்!
ஈழ இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசை எதிர்த்து ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரிபவனை முற்றுகையிடும் போராட்டம்.
பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
நோக்கியாவின் பலே திருட்டு!
நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்து அதை பின்லாந்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
சாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.