Saturday, August 13, 2022
முகப்பு செய்தி மோடியை விரட்டுவோம் - சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் !

மோடியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் !

-

சென்னை

பத்திரிக்கைச் செய்தி

”இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞ்ர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் ஒரு பகுதியாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர்.ஜெயராமன் தலைமை தாங்கினார்.பு.மா.இமு-வின் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் தோழர்.சேட்டு கண்டன உரையாற்றினார். 10 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

திருச்சி

மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருச்சி வேர்ஹவுஸ் பாலத்தின் அருகில் காலை 11.30 மணியளவில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் தலைமையில் 19 பெண்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். அனைத்து தோழமை அரங்கின் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று நோட்டீஸ்களை வாங்கிப் படித்தனர்.

அ சரவணன்
மாவட்டச் செயலர்,
ம.க.இ.க
திருச்சி மாவட்டம்
அலை பேசி : 73732 17822

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

திருச்சி – மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் திருச்சி மாவட்டத் தலைவர் ஆதிநாராயண மூர்த்தி, மதுரை மாவட்டத் தலைவர் லயனல் அந்தோணி ராஜ், கடலூர் மாவட்டத் தலைவர் குணசேகரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் தோழர்களும் கருப்புக் கொடி ஏந்தி திருச்சி நீதிமன்றத்தின் வாசலில் காலை 10 மணி அளவில் நரேந்திர மோடி உருவப் படத்தை எரித்து கைதானார்கள்.

சட்டவிரோதமாக மோடிக்கு ஃபிளக்ஸ் வைத்து விளம்பரம் செய்ய அனுமதித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஃபிளக்ஸ் பேனர்களை தாங்களாகவே கிழித்து விட்டு முஸ்லீம்களும் ம.க.இ.க.-வினரும் கிழித்து விட்டார்கள் என்று முஜாபர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வதந்திகளை பரப்பி கலவரங்களை நடத்தியது போல திருச்சியிலும் தூண்ட முயற்சித்த பாஜக-வினரை அம்பலப்படுத்தியும், மதக் கலவரத்தைத் தூண்டி விட்டு பதவி சுகம் அனுபவிக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
பேச : 94432 60164

 1. அது என்ன ஆ ஊன்னா அப்பாவி முஸ்லிம்கள் என்று எழுதுகிறீர்கள் ? அப்போ இந்த உலகத்துல கெட்ட முஸ்லிம்களே இல்லையா ? சிறுபான்மை இனத்தவர்கள் எல்லோரும் அப்பாவிகள் பெரும்பான்மை ஹிந்துக்கள் பாவிகள் எனும் உங்கள் புரிதலுக்கு ஒரு கும்பிடு.

  • ஆஹா என்னே ஒரு கண்டுப்பிடிப்பு, என்ன அறிவு உங்களுடைய அறிவு…. நீங்க நல்லா வருவீங்க தம்பி….

  • 1, 2 மற்றும் 3 – க்கான பதில்.

   எல்லாம் மரத்துப் போனவனுக்கு ஒரு இத்துப் போனவன் சப்போர்ட்டு. அந்த இரண்டு பேருக்கும் ஒரு செத்துப் போனவன் சப்போர்ட்டு. விளங்கிடும்யா கொய்யாலே

 2. முஸ்லீம்கள் மட்டுமல்ல பெரும்பான்மை ஹிந்துக்களும் அப்பாவிகள் தான், அதுவும் படு அப்பாவிகள். ஏனென்றால் கேடுகெட்ட ஹிந்து மதத்தை பற்றி தெரியாதால் தாங்களும் ஹிந்துக்கள் என்று பார்பன கேடுகெட்ட ஹிந்து மதத்தை நம்பி தங்களையே ஏமாற்றி கொள்கின்றனர்.

  • உன் பெயரை கூட வெளியிட துணிவு இல்லை நீயெல்லாம் இந்து மதத்தை பற்றி பேசுகிறாய்

 3. அத்வானி மசூதிய இடிச்சாரு.. அவரு ஒரு முற்பட்ட சாதி…அவர எதுத்து போராடுங்க.. பின்லேடன் அமெரிக்க டவுர தூள் ஆக்கி 3000 பேர் காலி (அதுல ஒண்ணும் முதலாளிகள் சாவுல.. நம்மூருகாரங்க வேலைக்குப் போனத போல பல ஊர் காரங்க வேலைக்கு போனங்க.. போன எடத்துல காலி) அப்ப முசுலிம் தீவிரவாதத்த எதிர்த்து போராடுங்க.. அமெரிக்கா எண்ணைக்காக இராக்ல பல பேர கொன்னங்க, அவுங்க எதிர்த்துப் போராடுங்க.. மோடி ஒரு பிற்படுத்தப் பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு தலைவர் அவர எதிர்க்க கரடியா கத்துறிங்களே.. நீங்க ஏன் ஒரு பிற்படுத்தப் பட்ட ஆள் பிஎம்மா வரக்கூடாதுன்னு இவ்வளவு வெறியா இருக்கிங்க…

  • இது என்ன புது ரூட்டா இருக்கு. சரி உங்க வாதப்படியே அத்வானி மசூதியை இடித்தார்னு ஒத்துக்கிட்டீங்க. (அந்த ஆளு வழக்கில் இருந்து தப்பித்தாலும் உங்கள் மனசாட்சி ஒத்துக்கிச்சிப் பாருங்க). அப்புறம் இந்தப் பின்னாலப் போற ஆளு, அந்த முன்னால போற ஆளை கால்லில் விழுந்து கும்புடுறான். அந்த முன்னால போற ஆளு முகத்தை திருப்பிக்கிறான். இதுல சப்போர்ட்டுக்கு வர்ரீங்க சாதீயை சொல்லி. வெட்கமா இல்லை. இன்னொன்னு – இது எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க தான். அது காய்ந்து போன சாணி, இது கொஞ்சம் ஈரமான சாணி. (அட அதையும் புனிதம்னு சொல்லி வாயில வச்சிராதீங்க. மலம்னு பின்னால வருத்தப்படுவீங்க)

   • தமிழ் உம் பேர இங்கலீசு இல்ல பிரஞ்சுன்னு மாத்துப்பா.. நா அடிச்சு சொல்றேன்.. ஒரு பிற்பட்ட சமூக ஆள் பிஎம்னு வயித்தெறிச்சல்ல இருக்கிறது அத்வானி பார்ப்பன ஊடகங்கள் ஆதிக்க சக்திகள் வேலை செய்யுது.. அதன் வலையில வினவு விழுந்துருச்சுன்னு வருத்தப்படறேன்…

 4. சந்தைக்கென வந்தவன் நாட்டையே ஆதிக்கம் செய்ய முற்பட்டதால், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று அன்று முழங்கியதற்கு… ‘இந்தியாவை விட்டே வெளியேறு’ என்ற அர்த்தம் மிகப் பொறுத்தமாய் அமைந்தது. ஆதலால் வென்றோம்!

  மதத் துவேஷத்தைத் தூண்டிவிட்டு, பல்லாயிர மக்களின் சொத்துக்கள் மற்றும் கற்புக்களை சூறையாடி, கொலைகளும் செய்திட்ட மோடியை… (இவை அனைத்துமே உண்மையென உணர்ந்ததால்) தனது நாட்டுக்குள் நுழைய அமெரிக்காவே அனுமதிக்கவில்லை!

  இவனது மதத்துவேஷத்திற்கு தமிழக அரியணையில் இருப்பவர் ஆதரவு மட்டும் அளிக்கவில்லை. ஊக்கமும் அரவணைப்பும் தருகிறார் என்பது ஏற்கனவே நிரூபனமான ஒன்று! இன்னிலையில் ‘மோடியே தமிழகத்தைவிட்டு வெளியேறு’ என்ற கூச்சலும் அலைச்சலும் அவசியம்தானா?

  எரிவதை புடுங்கினால் மட்டுமே… கொதிப்பது அடங்கும்!

  தேர்தலின்போது… இலவசங்களுக்கு கை விரித்து, வாய் பிளந்து நிற்கும் கூட்டங்கள் சிந்திக்க வேண்டிய எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று.

  – கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க