நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது !
தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று உச்சநீதி மன்றம் உருவாக்கிய தோற்றம், வெறும் வார்த்தை ஜாலமென்றும் மோசடியென்றும் அம்பலமாகிவிட்டது.
மக்களாட்சியா மர்ம ஆட்சியா ?
ஞான தேசிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடைநீக்கமும், டி.ஜி.பி அசோக்குமாரின் திடீர் ஓய்வும் போயசு தோட்டமானது அலிபாபா குகை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
இந்தக் கூற்று உங்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இன்னொருபுறம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனால், உச்சநீதி மன்றம் 2005-ல் அளித்த மிர்சாபூர் தீர்ப்பு இவ்வாறான முட்டாள்தனமான, மோசடியான வாதங்களை முன்வைத்துதான் பசு வதையையும், மாட்டுக்கறி உணவையும் தடை செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்
கட்டப்பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட் புரோக்கர் சசிக்குமார் கொலைக்காக முசுலீம் கடைகள் சூறையாடல்! அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு! குஜராத் மாடலில் வன்முறையைத் தூண்டி உள்ளாட்சி பதவிகளை தமிழகத்தில் கைப்பற்றவே காவி படைகளின் வெறியாட்டம்!
இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
கேவலம், சில நூறு ரூபாய்களுக்காக எவனாவது குண்டடிபடுவானா? உண்மையைச் சொன்னால், எங்களைக் கொல்வதற்காக கூலி வாங்குபவர்கள் இந்தியப் படையினர்தான்.
கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !
இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது! திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது! மதவெறி, இனவெறி, சாதிவெறி - ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!
காவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து !
மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் தமிழகத்தின் மீது செலுத்திவரும் ஒருதலைப்பட்சமான அதிகாரத்துக்குத் தமிழகம் கட்டுப்பட மறுக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து விட்டதை காவிரி விவகாரம் உணர்த்துகிறது.
ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு
தனிப்படை வேலை தொடர்பாக கோவைக்கு வந்த போதே இப்படி இரண்டு கோடி ரூபாய் திருடியிருக்கிறார்கள் என்றால் இவர்கள் சாதாப் படையாக கரூரில் என்னவெல்லாம் தின்று தீர்த்திருப்பார்கள்?
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, அடிபணிய மறுக்கும் அம்மக்களின் வீரத்தைபுரிந்து கொள்ளும் அறிவோ, அங்கீகரிக்கும் பக்குவமோ, குற்றவுணர்வு கொள்ளும் இதயமோ இல்லாமல், இந்த அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள்.
தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்
மத்திய பி.ஜே.பி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் தமிழக அரசு பேசியது ஒரு நாடகம்தான். ஜெயலலிதா அரசு பெருவாரியான ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய மனுநீதியான புதிய கல்விக் கொள்கை விசயத்திலும் பி.ஜே.பி க்கு ஆதரவாக நிற்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம்.
சிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் !
கள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.
மணற்கொள்ளைக்கு எதிராக வேலூர் எசையனூர் மக்கள் போராட்டம்
ஹிட்டாச்சி இயந்திரங்களை மீட்டு மணல் திருடனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ‘கடமை’ உணர்வோடு காத்திருந்த டி.எஸ்.பி மதிவாணன் இரவு ஆனதும் இயந்திரத்தை எடுத்து சென்று ஆற்றை கடந்து மணல் திருடன் கரிகாலனிடமே ஒப்படைத்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.
ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக காங்கிரசு, பி.ஜே.பி அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள்.
காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்
பாலைவனம் ஆகுது தமிழகம்! செயலற்று முடங்கி விட்டது ஜெயா அரசு! சாராய போதை, போலீசு பயம், சினிமா மயகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமூகமே, விழித்தெழு, வீறுகொண்டு போராடு!
பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு
கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
























