சென்னை – திருச்சி – திருவாரூர் : நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் !
                    மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு அரசு அஞ்சுகிறது. தமிழகத்தில் மோடியின் அடக்கு முறை சட்டங்கள் ஒருபோதும் செல்லுபடியாகாது என்பதை இந்த போராட்டங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.                
                
            நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !
                    “திங்கக் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”                
                
            நீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் ! கூண்டிலேறத் தயார் !
                    அநீதியான உங்கள் தீர்ப்புக்கு அடிபணிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தையின் நடவடிக்கைதான் எங்கள் அனைவரின் நடவடிக்கையைக் காட்டிலும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு.                
                
            ஓசூர் – தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினாவாக்குவோம் !
                    படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - அடிமை அதிமுக - உச்சிக்குடுமி நீதிமன்றம் - இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!                
                
            அனிதா – நீட் : நீதி கேட்டுத் தொடரும் மாணவர் போராட்டங்கள் !
                    அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி தமிழகம் போர்க்களமாக மாறிவருகிறது. பல்வேறு இடங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.                 
                
            தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாகத் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! !
                    தமிழகத்தில் தொடர்ந்து 7 -வது நாளாக இன்றும் (07.09.2017) பல்வேறு இடங்களில் அனிதாவின் படுகொலைக்கு காரணமான மோடி - எடப்பாடி கும்பலைக் கண்டித்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.                
                
            மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !
                    மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.                
                
            அனிதா : தமிழகத்தைப் பற்ற வைத்த நெருப்புத் துண்டு ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !
                    இன்றும் தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டங்கள் கனலாக தகித்துக் கொண்டிருக்கின்றன. அனிதா தொடங்கிய போரை இன்று மாணவர்கள் கைகளில் ஏந்தியுள்ளனர். கடலூர், கும்பகோணம், தர்மபுரி என விரியும் போராட்ட களத்தின் காட்சிகளில் சில.                
                
            நீட்: ”அடிபணியாதே” – அனிதா சொல்லிச் சென்ற செய்தி !
                    ’நீட்’-டின் பின்னணி குறித்தும், ’நீட்’டை ஆதரிப்பவர்கள் கூறும் ’தரம்’ குறித்தும், தரத்தைப் பற்றிப் பேசுபவர்களின் தகுதியைக் குறித்தும் தோலுறித்திருக்கிறார் தோழர் மருதையன்.                 
                
            அனிதா படுகொலை : சென்னை, கோவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
                    சென்னை நந்தனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மதுரவாயல் அரசுப் பள்ளி மாணவர்கள், மற்றும் கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் அனிதா படுகொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் போராடி வருகின்றனர்.                
                
            நீட்டை ரத்து செய் – தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர் போராட்டங்கள் !
                    மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடத்துவங்கியுள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு டெல்லிக்கட்டை நடத்திவருகிறது!                
                
            கும்பகோணம் – திருச்சியில் – தொடரும் மாணவர் போராட்டம் !
                    மாணவி அனிதாவின் படுகொலையைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மானவர்கள் இன்று (05.09.2017) மீண்டும் தங்களது போராட்டங்களைத் துவக்கியுள்ளனர்.                
                
            அண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் !
                    அண்ணாமலை பல்கலையில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த போராட்டத்தின் முன்னணியாளர்கள் 6 பேரைக் கைது செய்து போராட்டத்தைக் கலைக்க முயல்கிறது போலீசு. தர்மபுரியில் புமாஇமு தோழர்களான மலர்கொடி மற்றும் அன்பு ஆகியோரைக் கல்லூரி வாயிலில் பிரச்சாரம் செய்ததற்காகக் கைது செய்தது.                 
                
            தோழர் மருதையன் உரை : நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா !
                    உச்சீநீதிமன்றத்தின் ‘தரம்’, மருத்துவக் கவுன்சிலின் ‘தரம்’, பாஜகவின் மூன்றாண்டு ஆட்சியின் ‘தரம்’ என இந்த தரங்கெட்டவர்களின் இரட்டை நாக்குகளை, சதிகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை!                
                
            அனிதா படுகொலை – நெல்லை, கும்பகோணம் மாணவர்கள் போராட்டம் !
                    அனிதாவுக்கு நீதி கேட்டு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி, திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் - படங்கள்!                
                
            






















