பிரச்சாரம் செய்த ‘குற்றத்திற்காக’ தருமபுரி புமாஇமு தோழர்கள் கைது !

1
32

ருமபுரி அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியில் பு. மா. இ.மு. தோழர்கள், கடந்த 04/10/2017 அன்று மாலை 3.00 மணியளவில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரச்சாரமும், பு.மா.இ.மு. உறுப்பினர் சேர்க்கையும் செய்து கொண்டிருந்தனர். தோழர்கள் சத்தியநாதன், அன்பு, மலர்கொடி ஆகியோரை தருமபுரி கியூ பிரிவு போலீசு வலுக்கட்டாயமாக  கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தோழர்களை B1 காவல் நிலையத்தில் அடைத்துவைத்தனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள்

கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்க்க வழக்கறிஞர்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர். இது சட்டவிரோதமானது எனக் கூறிய போது, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர்  ”யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ, நான் அப்படி தான்” என சர்வசக்தி படைத்தவர் போல் பேசியிருக்கிறார்.

பின்னர் தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இது புதிதல்ல இதற்கு முன்னால் தமிழகமே நீட் எதிர்ப்புப் போரட்டத்தில் இருந்தபோது இந்த அரசுக்கு எதிராக இதே கல்லூரியை சார்ந்த மாணவர்களை போராட தூண்டியதாக அதியமான்கோட்டை போலீசரால் ஒரு முறையும், பென்னாகரம் அரசு ஆண்கள் (ம) பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகளிடம் நீட் தேர்வையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வியக்கியானம் செய்ததாகக் கூறி கியூ பிரிவு தூண்டுதலின் விளைவாக பென்னாகரம் டவுன் போலீசரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தற்போது மூன்றாவது முறையாக கைது நடவடிக்கை, இவர்கள் மீது நடந்துள்ளது. அரசின் அயோக்கியதனத்தை யாராவது தோலுரித்து காட்டினால் அவர்களைக் கைது செய்வது, குண்டாஸ் போடுவது என இது போன்ற நடவடிக்கைகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. கைதுக்கும், சிறைக்கும் அஞ்சுபவர்கள் மாணவர்களாகிய நாங்கள் அல்ல.

இனி வருகின்ற ஒவ்வொரு நாளும் இந்த அரசையும், அதிகாரத் திமிரையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வீதியில் ஓடவிடுவதே மாணவர்களாகிய எங்களின் முதல் கடமை.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
தருமபுரி .

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா

1 மறுமொழி

  1. மக்கள் மத்தியில் நேர்மையாகவும் நாட்டுப்பற்றோடும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யும் இந்த உள்ளங்கை நெல்லிக்கனிகளை கைது செய்ய உளவுத்துறையாம்.”என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்”புலிகேசியின் உளவுப்பிரிவை விட ரொம்பக் கேவலமாக இருக்கிறது.நான் என்னவோ க்யூ பிரிவென்றால் மத சாதி கலவரம் செய்பவன்கள்,நாட்டை விற்கும் தரகன்கள் போன்ற ஏராளமான கிரிமினல் கும்பல்களை தங்கள் உயிரை பணயம் வைத்து கண்டுபிடித்து மேற்படி ஆபத்துகளிலிருந்து மக்களை காப்பாற்றுபவர்கள் என நம்பித்தொலைத்து விட்டேன்.மக்களின் வரிப்பணத்தைத் திருடித்திண்ணும் இந்த மக்கள் விரோத கியூ பிராஞ்ச்சுகள்தான் உண்யாண “க்ரைம் பிராஞ்ச்சுகள்”.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க