நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் !
தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.
ஏழைகளுக்கு எதற்கு எட்டாவது வரை படிப்பு ! – கவிதா சொர்ணவல்லி
பத்து வயதிலயே அந்தக் குழந்தையை "நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்" என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக் கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக் கடப்பார்கள் ?
வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன
டார்வினின் பரிணாமவியல் கோட்பாட்டைத் தடை செய்தது துருக்கி
மிக உயரமான மலைச்சிகரங்களில் உயிர்ப்பிழைத்திருப்பதற்கான பெருங்கூர்ப்பை (macroevolution) மூவாயிரம் ஆண்டுகால போராட்டத்தினால் திபெத்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது டார்வினின் இயற்கைத்தேர்வுக்கு மிகச்சிறந்த நிரூபணங்கள்
வேலை கிடைக்காத பொறியியல் படிப்புக்கு கட்டணம் உயர்கிறது !
பொறியியல் கட்டண உயர்வு தொடர்பான பல்வேறு இணையத் தளங்களில் அரசு நிர்ணயத்திருக்கின்ற கட்டணத்தை விட மிக அதிகம் பல கல்லூரிகளில் கேட்பதாக மாணவர்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள்.
கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! புதிய கலாச்சாரம் ஜூன் 2017
கட்டணக் கொள்ளை இல்லாத அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே சாகடிக்கப்படுகின்றன. இந்நிலையில் “நீட் தேர்வு” ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை நிரந்தரமாக புதைத்து விட்டது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு
ரூபாய் நோட்டுக்களில் கவர்னர் கையெழுத்து இல்லையென்றால், அது கள்ள நோட்டு. அதேபோல் படித்து வாங்கும் பட்டத்தில் துணைவேந்தர் கையெழுத்து இல்லையென்றால் அது போலியானது.
நீட் தேர்வு – அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !
பிழைப்புவாதமும் அடிமைத்தனமும் நமது மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்யும் போது தான் நாமும் இந்த ரூல்ஸ் ராமானுஜங்களை, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?, அவர்கள் தங்கள் கடமையைத் தானே செய்தார்கள்’ என்று அங்கீகரிக்கிறோம்.
ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!
இந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கையை, சிறு திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கோவில்பட்டி தரை டிக்கெட் கல்லூரியில் இருக்கைகள் வந்தது எப்படி ?
முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்துதான் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் கிடையாது. விளையாட்டுக் கென்று உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. கலை விழாக்கள் கிடையாது. கேண்டீன் கிடையாது.
நீட் தேர்வு – ஒரு சொந்த அனுபவம்
இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது.
சென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு !
நமது பல்கலைக்கழகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்குவதற்காக தான் தருண் விஜயை அழைத்து வருகிறது ABVP இவர்களை பல்கலைகழகத்தில் அனுமதிப்பது வரலாற்றுப் பிழையாகும்.
அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை
அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், எங்கள் வாழ்க்கையை சீரழிக்க கூடாது. இங்கே யாரால் வாழ முடியும்? இது ஒரு நரகம். அவர்கள் எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாமே? அப்படிச் செய்தால் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு நாங்கள் போய் விடுகிறோம்
கழிப்பறைய கட்டாம கையெழுத்து எதுக்கு ஆபிசர் ?
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லை. தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.
பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.