மாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

4
39
செப்-2, கண்டன ஆர்ப்பாட்டம்

ரியலூர் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால்,  நீட் தேர்வு எழுதினார். அதில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.

மோடி – எடப்பாடி குற்றவாளிகள்

இதனால் அவருடைய மருத்துவ வாய்ப்பு பறிபோய், இறுதியில் தற்போது தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.  இது தற்கொலையல்ல – படுகொலையே!  ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்த போதும், நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துவிட்டன மோடி – எடப்பாடி கும்பல். இவர்கள் தான் அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்.

இந்தக் குற்றவாளிகளை உழைக்கும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டவும், தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களே! இளைஞர்களே! தொழிலாளர்களே! ஜனநாயக சக்திகளே! கொதித்தெழுந்து வாருங்கள்!

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை,
செப்டம்பர் – 2, காலை 11 .30 மணி

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9445112675
——————————————

விருதாச்சலத்தில் இன்று (செப்டெம்பர்-1) மாலை, ”நீட்: மாணவி அனிதா ’படுகொலை’, மோடியும் எடப்பாடியும் தான் குற்றவாளிகள்” என்ற முழகத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மோடியும் எடப்பாடியும் தான் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-1
விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-2

இதில் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த புமாஇமு தோழர்கள் பங்கேற்றனர்.

————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா

4 மறுமொழிகள்

  1. மோடி எந்தக்காலத்திலும் இந்தியா வின் நலம் வி௫ம்பாதவன் ,அதிலும் தமிழக நலன் குறித்து கடுகளவும் கறிசனம் இல்லாதவன். இவன் இனியும் பிரதமறாக தொடர்வது இந்தயாவுக்கு பேராபத்து.மேலும் தன்மானம் உள்ள தமிழகத்தில் மானங்கெட்ட, மக்களின் மானம் காக்கத்தவரிய கூன்பாண்டிகள் ஆட்சியில் தொடர்வது அகற்றப்படவேண்டடும். உன்மையான மக்களாட்சி அமைய பாடுபடுவோம். சவுக்கும் தன்மானம் உள்ளவன்தான்.

  2. முடியாது. வாழ முடியாது,

    நீ
    இனி
    போராடாமல்
    வாழ முடியாது.

    இன்று,நாளை,
    நாளை மறுநாள்……
    என்றாவது,
    இனி நீ போராடாமல்
    வாழமுடியாது.

    உன்
    காலடி மண்,
    பறிக்கப்படுகிறது.
    உன்
    சுயசார்பு,
    அழிக்கப்படுகிறது.
    இனி நீ போராடாமல்
    வாழமுடியாது!.

    தண்ணீர்,காற்று,ஓளி
    அனைத்தும்
    தனிச்சொத்துடமையாகிறது.

    கல்வி,மருத்துவம்
    விவசாயம் மீதான
    நம் உரிமைகள்,
    பறிக்கப்பட்டுள்ளது
    இனி நீ போராடாமல்
    வாழமுடியாது.!

    கழுவுற மீனில் நழுவுறமீனாய்,
    பெருவெள்ளமென்றால்
    உயிர்பிழைக்கும்
    நாணலாய்,
    வாழ்ந்து மடிய
    நினைக்காதே!
    இதனால்,
    உன் தலைமுறையே
    அழியும்.

    இயற்கையை அழித்து,
    உரிமையை இழந்து
    பெறுகின்ற,பெறப்பட்ட
    சொத்து,செல்வம்,
    நம் குழந்தைகளுக்கு
    நாமே வெட்டிய
    சவக்குழி இல்லாமல்
    வேறென்ன?.

    எதை திணித்தாலும்
    ஏற்றுக்கொள்வது,
    அடிமைத்தனமின்றி
    வேறென்ன?

    புழுவும், துடித்தெழுந்து எதிர்க்கும் போது,
    மனிதன் நாம்?
    வெட்க கேடு.

    செவ்வாய்,வியாழன் கிரகங்கள்
    செல்கிறார்களாம்
    பூமியை அழித்துவிட்டு.

    நடந்தால் வரி,
    குனிந்தால் வரி,
    வரிகுதிரையா?நாம்.

    உணவுக்கு தடை,
    படிப்புக்கு தடை,
    பேச,எழுத,உட்கார
    சிந்திக்க தடை.
    எதற்கும் தடையென்றால் ,
    இதற்கு பெயர்
    சுதந்திரமா?

    மண்,மரம்,தாது என எல்லாமும்,
    அழிக்கப்படுகிறது,
    வேக வேகமாய்…

    விழித்திடு!
    இத்தனைக்கும் காரணமான
    முதலாளித்துவத்தை வீழ்த்தப் போராடு!

    உன்னை
    முடக்கிவைக்கும்,
    ஜாதிவெறி,மதவெறி,
    இன, மொழி,நிற
    வெறிகளை
    களைந்துக் கொள்.
    போராட்ட குணத்தை
    அணிந்துக் கொள்.!
    உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணை.

    போராடு!
    ஏனென்றால்?
    இனி
    நீ…
    போராடாமல்
    வாழ முடியாது.?
    ________________

    மன்னன்.

  3. போராட்டங்களை அரசாங்கம் இரும்புக்கரங்களால் அடக்கிவருகிறது. மெரீனாவில் யாரும் கூடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. மக்களைப் பொதுவாகவே கூட அனுமதிக்காத ஓர் அரசாங்கத்தை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதற்கான வழிமுறைகளை இனிமேல்தான் சிந்திக்கவேண்டும். வெறும் வலைத்தளங்களின் வாய் வீச்சுகளே போராட்டத்தை நடத்திவிட முடியாது அல்லவா?

    • எதிர்க்கப்படாத ஆதிக்கம்,பாசிசமாக மாறும்.இன்றுவரை நீங்கள் அனுபவித்துகொண்டிருக்கும் ஓரளவுக்கான உரிமைகள் போராடி பெற்றவைத்தான்.போராடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க