மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!
ஹிலாரி கிளின்டன் - ஜெ சந்திப்பில் நடந்தது இதுதான்... தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த 'மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்' என்று ஹிலாரி சொன்னதை ஜெ கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார்
வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா?
பிரச்சினை என்பது வருமான அளவுகோலைத் தீர்மானிப்பதல்ல. ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு விதமான மானியங்களைக் கூடுமான வரை வெட்டிச் சுருக்கிவிட வேண்டும் என்ற நோக்கம்தான் மையமானது.
ரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்!
உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டு திரியும் கொள்கைக் குன்றான மன்மோகன் சிங் அரசு உணவுப் பாதுகாப்பிற்கெனத் தனியொரு சட்டத்தைக் கொண்டு வரப் போகிறதென்றால்...? எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடாதே!
நோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்!
புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானிகளின் இலாப வெறி, அணு மின்நிலையங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு... போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன
இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது.
அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!
டபிள் டிப் நெருக்கடி உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டுமின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!
எல்லா வகை அபாயங்களோடும் வாழும் நமது நாடுகளில் விபத்து என்பது சமூக வகைப்பட்டதாக, நிறுவன ரீதியாக இருக்கிறது. அதை வெறுமனே மொக்கை உபதேசங்களோடு கடந்துவிடலாம் என்பது இயக்குநரது துணிபு.
மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!
1200 தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் என்பதல்ல விஷயம். இவர்களுக்காக மானேசர் தொழிற்பேட்டையிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!
தற்போது சோமாலியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருக்கம் மக்களுக்காக மேற்குலக ஊடகங்கள் மக்களிடம் காணிக்கை போடுமாறு கேட்டு வருகின்றன. இனி அந்த கோரிக்கை அமெரிக்க மக்களுக்காகவும் இருக்குமோ?
ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.
அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!
விபத்தில் காயமடைந்தவர்களை சுமந்து சென்றால் பணம் கிடைக்காது, வண்டியையும் கழுவ வேண்டும், பிற சவாரிகளையும் இழக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களை அப்படி செய்யச் சொன்னது எது? திருமண விருந்து வேலையை நிறுத்தி விட்டு சிதறிக்கிடக்கும் மனிதச்சதை கண்டு நிலை தவறாமல், காயம் பட்ட உயிர்களை அந்த சமையல் தொழிலாளிகள் காப்பாற்றியது எதனால்?
வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!
இந்திய உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை
வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !
அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும், மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும் வசதிகளும் இன்றி கொலை செய்யப்படுகின்றனர்
“ரிலையன்சோடு பாத்து நடந்துக்கங்க!” – பிரணாப் முகர்ஜி
ரிலையன்ஸ், சஹாரா உள்ளிட்ட கார்பப்ரேட் நிறுவனங்களின் முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் 'பார்த்து பக்குவமாக' நடந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் பிரணாப் அழுத்தம் கொடுத்துள்ளார்.