பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்
துயரம் அழுத்தும் வேளைதான், எனினும் எம் தோழனின் சாவை அழுது தீர்க்க முடியாது, போராடித்தான் தீர்க்க வேண்டும்.
காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்... அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு? மேலத் தெருகாரனெல்லாம் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க..
கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்... அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?
கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியவில்லை. அவனை பணியிலமர்த்தியிருக்கும் நாகரீக உலகே வில்லனாகத் தெரியவரும் போது 007 குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்?
எதன் பொருட்டு இந்தக் கதையை சொல்ல வந்தானோ அதை மறுத்தே கதையின் முடிவு இருக்கிறது. இதை கண்டு பிடிக்க முடியுமென்றால் ஜெயமோகன் போன்றவர்களையும் புரிந்து கொள்ளும் சக்தியை வரித்துக் கொண்டவராவீர்கள். முயன்று பாருங்களேன்!
சட்லெஜ் நதியில் கரைந்த சாம்பல் முல்லைப் பெரியாறில் முழங்கும்போது, லாகூர் சிறையில் முழங்கிய குரல்கள் இடிந்தகரையில் எதிரொலிக்கும்போது, அவர்கள் இல்லையென்று எப்படிச் சொல்வது?
பகத்சிங், காங்கிரசின் துரோகத்தால் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி.
அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?
இன்றைக்காவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற உமாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. கணவனின் பார்வையில் நொடிக்கு நொடி கடுகடுப்பு ஏறிக்கொண்டிருந்தது.
அவ்வளவு கூட்டத்திலும் கூட பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர்.
ஆம்பிளை' சிங்கங்களே ! சொந்த வர்க்கத்தை மனைவியாய் மகளாய் சகோதரியாய் வேலைக்காரியாய் சுரண்டி சுகம் கண்டது போதும்....
"மாங்கா.... மாங்கா...'' , மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ''மாங்கா... மாங்கா... ருசியான மாங்கா''
சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேசத் துரோக இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்வதை அம்பலப்படுத்தும் பாடல்