வீட்டுல நான் ஒரு பொம்பள வயசான அப்பா, முடியாத அண்ண, வெவரம் இல்லா தம்பி, அரியா வயசு கொழந்த எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு கல்யாணம் செஞ்சுக்க மனசு வரல!
சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகளின் ''பெட்ரோல் டெக்'' மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். எனக் கூவிக் கூவி அழைக்கிறார்.
பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள் ? அது தனியாக நடந்த நிகழ்வு அல்ல சமூகமாற்றத்தின் போக்கே. மனிதன் இயற்கையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தான் அப்போது எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தியதும் இல்லை.
கம்பெனிய எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி, வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியில் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர்.
பெப்சி கோக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக ‘பெப்சியின் தலைமை அதிகாரியாக தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் இந்திரா நூயி ’ இதுதான் மகளிரின் சிறப்பு என்று வாதிட்டால் என்ன செய்வீர்கள்?
மெரினா போராட்ட களத்தில் முகம் தெரியாத ஆணும் பெண்ணும் கைகோர்த்து நின்ற அந்த நிலையில் ஒரு ஆணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற அச்சமோ – ஒரு பெண்ணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற எண்ணமோ ஏற்படவில்லை. காரணம் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இதை சாத்தியப்படுத்திது.
பிராமின்ஸ் தான் சாதி பார்ப்பாங்க. இங்க வராதே, இத்த தொடாதேன்னு. அவங்க வீட்டுல ஒரே நாள்ல செஞ்ச வரைக்கும் போதுமின்னு அந்த நாள் சம்பளத்தை கொடுன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நமக்கு மரியாதை இல்லாத எடத்துல எப்படி...பா வேலை பாக்குறது?
அதுதான் மெரினா எழுச்சியிலும் நடந்தது. அந்த போராட்டத்தில் பெண்கள் சமத்துவமாக இருந்ததை உணர்ந்ததாக கூறினார்கள். அங்கு பாலியல் துன்புறுத்துல்களும் சீண்டல்களும் இல்லை போலீசும் இல்லை.
பிறப்புறுப்பை அறுக்கும் இந்து முன்னணி கயவர்களை இந்த ஊரில் வைத்துக்கொண்டே எனக்கும் மகளிர் தின வாழ்த்தா! கேட்கிறாள் அரியலூர் நந்தினி?
இந்த போராட்டத்தை தொடக்கத்திலே சிதைக்கும் விதமாக கல்லூரி நிர்வாகமும் உளவுத்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
பாராளுமன்றத் தேர்தலின் போது மோடியை ஆதரித்தவர் தற்போதுதான் பிரதமரே இது நியாயமா என்று கர்த்தரே ஏன் என்னை கைவிட்டு விட்டீர் என்று ஆதங்கப்படுகிறார். இல்லையென்றால் இதற்கு முன்னர் மோடியை ஆதரித்த தனது குற்றச் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பாரா?
"எங்க... இப்ப முன்ன மாதிரியெல்லாம்... தொழில் இல்ல... வேற வழியில்லாம செய்துட்டு இருக்கோம். எங்க தலைமுறையோட சேர்த்து தொழிலையும் புதைச்சிட வேண்டியதுதான்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 07-03.2017 அன்று சென்னை கவின் கலைக் கல்லூரி (சென்னை ஓவியக் கல்லூரி) மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
“நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து அப்பங்கிட்ட, பொறவு புருசங்கிட்ட வெள்ளாவி வெளுப்புதான் எம்பொழப்பு. மிச்சமுன்னு எதுவும் வேண்டாம் கடன் இல்லாம இருக்கவிடுன்னு இந்த படித்தொற அம்மாட்டதான் வேண்டிக்கிறேன்.”
காவல்துறை பேராசிரியர்களையும், நிர்வாகத்தையும் அழைத்து அவர்களின் மூலமாகவும் " இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க " என கூறியும் மிரட்டியுள்ளனர்.
























