தடியடியும், பொய் வழக்கும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெரினாவை கட்டியமைப்போம். தொடர்ந்து முன்னேறுவோம்.
அறுவடை செய்ய வேண்டுமானால் தினமும் சில பத்து தொழிலாளர்ளுக்கு ரொக்கமாக சம்பளம் தர வேண்டும்,மோடியின் கற்பனை தேசத்தில் இருக்கும் ஸ்விப்பிங் மெஷின் கொண்ட பிச்சைகாரர்களோ, மோடி பக்கதர்கள் சினிமா காட்டுவதைப்போல வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் ஃபோன் ,பான் கார்டு,டெபிட்கார்டு, கிரடிட் கார்டு சகிதம் இருக்கும் விவசாயியோ அந்த பிராந்தியத்திலேயே இல்லை.
நந்தினி - தலித் சிறுமியை குதறிய இந்து முன்னணி - கேலிச்சித்திரம்
கானாங்கெளுத்தியும், வவ்வாலும் மீனில் மட்டுமா பார்த்தீர்கள்! எங்கள் ஊனிலும் பார்த்தீர்கள். காரப்பொடியும், ஓட்டாம்பாறையும் எங்கள் உடம்பில் தின்றீர்கள்! வஞ்சிரத்தை எம் மீனவப் பெண்களின் நெஞ்சுரத்தில் பார்த்து பயந்தீர்கள்.
மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு வீட்டில் குடும்பத்தோடு தாக்கி "ஆண்களுக்கு பெண்கள் இருக்கும் இடத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளாயே நீ என்ன பெண்களை வைத்து வியாபாரம் பார்க்கிறாயா" என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
மக்கள் போராட்டமாக மாறிய இப்போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமில்லை ஒட்டுமொத்தமாக இது நாள்வரையில் தான் சகித்துவந்த காவிரி பிரச்சினை, சமஸ்கிருத திணிப்பும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் தாக்கத்தினால் வெகுண்டு எழுந்த போராட்டம்.
2002 குஜராத் இனப்படுகொலையின்போது கவுசர் பீ என்ற இசுலாமியப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அதே கொடுமையைத்தான் நந்தினி என்ற “இந்து” பெண்ணுக்கும் இழைத்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள்.
போலீசை கண்டு அஞ்சி போராட்டம் ஓயாது. அது நெருப்பை பொட்டலம் கட்டுவதைப் போல கொள்கைக்காக போராடுபவர்களை கூலிக்காக அடிப்பவர்களால் ஒடுக்க முடியாது.
இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.
ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள்.
மாணவர்களின் மண்டையை உடைத்தும், கடுமையாக தாக்கியது. மோடி அரசும்,ஓபிஎஸ் பொம்மை அரசும் தான் காரணம். குஜராத்தில் 2000 முஸ்லீம்களை கொன்று குவித்தது மோடி அரசு. காவிரியில் தண்ணீரை கொடுக்க மறுத்தது மோடி அரசு . “மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மாட்டை அடக்க முடியுமா?”
தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்துக்கொண்டிருக்கின்றனர்.
காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
மோடியின் கொம்பைப் பிடி ! அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !

























