Sunday, January 17, 2021
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்

-

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 3

கேட்ஸ் ஃபவுண்டேஷன்உதவியா? நான்காவது தொழிற்புரட்சியின் வெற்றிக்காக உலகப் பெரும்பணக்காரர்கள் நடத்தும் மனிதத் தன்மையற்ற நிறவெறிப்படுகொலையா?

பில் மெலிண்டா கேட்ஸ் ஜோடி மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து நடத்தும் அனைத்து மானுடவிரோத மனிதத்தன்மையற்ற குற்றங்களுக்குப் பின்னாலும் வெறும் வணிக நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தான் இதுவரை புரிந்து கொள்ளப்பட்டிருகிறது.  ஆனால் ஃபிலந்த்ரோபி (Philanthropy) என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளில் இவர்கள் நடத்தும் வெறியாட்டம் வணிக இலாபங்களைத் தாண்டிய நோக்கங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வெள்ளிடை மலையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.
4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை.

தாராளமயம், தனியார்மயம், உலகமயத்தின் இறுதி இலக்கான ”உலக பேரரசை ஆளம் தகுதி யாருக்கு?” என்பது தான் 2017 ஜனவரியில் சுவிட்சர்லாண்ட் டாவோஸில் உலக பொருளாதார நிறுவனத்தின் நிகழ்ச்சிநிரல்.  உலகெங்கும் ஊழல்மயப்பட்ட, ஆளத்தகுதியிழந்த, எதிர்நிலை சக்தியாக மாறியுள்ள அரசியல் நிறுவனங்களின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக பறைசாற்றும் டாவோஸ் பணக்காரர்கள், மாற்றுத் தலைமையை முன்வைக்கிறார்கள்.  ஏன் மாற்றுத் தலைமை தேவை? யார் அந்த மாற்று?

உலகின் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு போவதாக குறைபடும் உலக மீப்பெரு பணக்காரர்கள், இதனால் ஏற்படப் போகும் காலநிலை மாற்றத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள்.  காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் அதற்கு காரணமான நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என TED மாநாட்டில் 2010-ல் பில்கேட்ஸ் கூறுகிறார்.  இதற்கு அவர் கண்டுபிடித்த வாய்ப்பாடு CO2 =P * S * E * C.  P என்றால் மக்கட்த் தொகை.

2010-இல் 700 கோடியாக இருந்தது 2050-இல் 900 கோடியாகும் என கணக்கிடுகிறார். S என்றால் ஒரு நபருக்கான சேவைகள். அதாவது உணவு, நீர், காற்று, இருப்பிடம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், இணையம் போன்றவை அனைத்தும். E என்றால் ஒருசேவைக்கு தேவைப்படும் ஆற்றல்/ மின்சாரம்.  C என்றால் மின்சாரம் தயாரிக்கும் போது வெளிப்படும் கரியமில வாயு.  பூமியின் காலநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயுவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டுமென்றால் சேவைகளையோ, மின்சாரத்தையோ குறைப்பதன் வழி செய்ய முடியாது.  ஏனென்றால் நான்காவது தொழிற்புரட்சியை  உலக மீப்பெரு பணக்காரர்கள் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார்கள். நான்காவது தொழிற்புரட்சியின் அடிப்படையே மின்சாரம் தான். செயற்கை நுண்ணறிவு (AI); ஐஓடி (IoT) எனப்படும் டிஜிட்டல் உலகம்-பருப்பொருள் உலகம்- உயிரியல் உலகம் ஆகியவற்றின் இணையம்; டிசைனர் பீயிங்ஸ் (Designer beings) எனப்படும் ஆய்வகங்களில் வடிவமைக்கப்பட்ட மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள், நுண்கிருமிகள்; 3டி பிரிண்டிங்; ரோபோர்டிக்ஸ் ஆகியவை தான் நான்காவது தொழிற்புரட்சியின் முக்கியமான கூறுகள். இவற்றை மின்சாரமில்லாமல் நிறைவேற்ற முடியாது.

கூடவே 4-வது தொழிற்புரட்சியின் மிகப் பெரிய விளைவோ வேலையின்மை. அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் கொண்டுவரப்பட்டால் உழைக்க மனிதர்கள் தேவையில்லை.  இயந்திரங்களே உற்பத்தியை பார்த்துக் கொள்ளும். இதில் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டும் தான் ஆப்பு என நடுத்தர வர்க்கம் நினைக்கலாம். ஏனென்றால் இரண்டாவது தொழிற்புரட்சி என முதலாளித்துவ உலகம் கொண்டாடும் 1910-இல் உற்பத்தியில் கன்வேயர் பெல்ட் புகுத்திய கார் தொழிற்சாலைகள், கூடவே ஊட்டி வளர்க்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தையும் உருவாக்கியது. அதைப் போலன்றி 4 –வது தொழிற்புரட்சி விவசாயிகளையும், தொழிலாளர்களையும், முறைசாராத் தொழிலாளர்களையும், முதலாளிகளின் ஒரு பகுதியனரை மட்டுமன்றி, டாக்டர், வக்கீல், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஐடி தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்  என அனைவரின் வேலைகளையும் பறித்து ஏதிலியாக்குமென நான்காவது தொழிற்புரட்சியின் தந்தை கிளாஸ் ஷ்வாப் எச்ச்சரிக்கிறார்.

காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P
காலநிலை மாற்றத்தால் பூமி அழியாமல் பாதுகாக்க நான்கு முக்கிய காரணிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் முன் வைக்கும் வாய்ப்பாடு CO2 =P * S * E * C. P

உலகின் வெறும் 5% பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு. ஏதிலிகளாக மாறப்போகும் மிச்ச 95% பேருக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்க 4-வது தொழிற்புரட்சியின் சிற்பிகள் தயாராக இல்லை.  மாற்றாக எதை முன்வைக்கிறார்கள் தெரியுமா? அடிப்படை வருமானம் (Basic Income) எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டம்.  வேலையிழந்தவர்கள் புரட்சி செய்ய வாய்ப்பிருகிறதல்லவா? அதைத் தடுப்பதற்குத் தான் ஆதார் மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு.  ஆனால் அது போதாது. இங்கு தான் பில் கேட்சின் சூத்திரத்திற்கு வேலை.

பருவநிலை மாற்றத்திற்கும் கரியமில வாயு வெளியேற்றத்துக்குமான உறவில் முக்கிய பங்கு வகிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்திலிருந்து மட்டுமல்ல, ஏகபோகங்களின் மீப்பெரு வளர்ச்சியை தொடங்கி வைத்திருக்கும் 4-வது தொழிற்புரட்சியின் முக்கிய சவாலான வேலையற்ற 95% உலக மக்களை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதற்கான உத்தியும் ஒளிந்துள்ளது.   உலக மக்கட்தொகையைக் 10-15% ஆகக் குறைக்க சிறந்த வழி தடுப்பூசிகள், இனப்பெருக்கக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார பாதுகாப்பு என்கிறார் பில்கேட்ஸ்.  மூன்று வழியில் இதை செய்ய முடியும்.

(அ) எயிட்ஸ், எபோலா போன்ற சிதைவு நோய்க்கிருமிகளை ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களிலும் பரவச் செய்வது; (ஆ) கருத்தரிப்பு தடுப்பூசிகளை மூன்றாமுலக நாடுகளின் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போடுவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் குழந்தைபெறும் வயதையெட்டும் ஒவ்வொரு மனிதனையும் மலடாக்குவது; (இ) டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற பெரும் பரவலாக தொற்றும் நோய்க்கிருமிகளை வெடித்துப் பரவ செய்வது போன்ற முறைகள் வழி உலகின் மக்கட்த் தொகையை வெறும் 10-15 % ஆகக் குறைக்கலாம்.  இது மாபெரும் நிறவெறிப் படுகொலையல்லவா?

இத்திட்டத்தை நம் நாட்டு அரசையே செய்ய வைக்க முடியுமா? ஆம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கவி வாக்ஸின் அலையன்ஸ்.  இதில் ஐநாவின் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலகவங்கி, ஐஎம்எஃப், மற்றும் ஏகாதிபத்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் ஆகியவை கேட்ஸ் ஜோடியின் தலைமையில் செயல்படுகின்றன. நமது அரசு இவர்களின் கைப்பாவை. ஏகாதிபத்தியத்தின் அடுத்த கட்ட நகர்விற்காக, நான்காவது தொழிற்புரட்சியின் சிற்பிகள், கவி வாக்ஸின் அலையன்ஸ் போலவே ஒவ்வொரு துறையிலும் உலகெங்கும் உள்ள நாடுகளை கட்டுப்படுத்த அரசு-தனியார் கூட்டு என்ற போர்வையில் ஆட்சிக் கூட்டணிகளை (governance alliance) உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு இறையாண்மையுள்ள நாட்டின் அரசையும் தனது கைப்பாவையாக்கி தனது போர்தந்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இதே கேட்ஸ் ஜோடி தலைமையில் இயங்கும் பெட்டர் தான் காஷ் அலயன்ஸ் (better than cash alliance) எனும் கூட்டணியின் பங்களிப்பு பத்திரிகைகளில் அம்பலப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.  இவர்களைத் தான் இன்று அரசியல் மாற்றாக இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தக் கூட்டணிகளெல்லாம் வெறும் தரகர்கள் தான். இவர்கள் பின்னாலிருந்து ஆட்டுவிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில உலகப் பெரும் பணக்காரர்களும், ஒட்டுமொத்த உலகையும் தனியே கபளீகரம் செய்யத்துடிக்கும் அவர்களின் பேராசை பிடித்த போர்தந்திரத் திட்டங்களும் தான்.

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பை செலுத்தும். 2009-இல் கனடாவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட போது டெட்டனஸ் தடுப்பூசி பரந்த அளவில் போடப்பட்டதால் 65% பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.   தமிழ்நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நேரத்தில் பாரிய அளவிலான தடுப்பூசி இயக்கம், பெரும்பான்மையான குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.  இதனால் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகமாக ஏற்பட்டு மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது போல இதுவரை சந்தைப்படுத்தப்படாத தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியில் hCG போன்ற கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன்கள் கலக்கப்படவில்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியுள்ளது.  ஏனென்றால் கென்யாவிலும் இந்தியாவிலும் உலகின் பல்வேறு ஏழை நாடுகளிலும் கேட்ஸ்-கவி கும்பல் இதற்குமுன் இழைத்திருக்கும் மானுட விரோத மனிதத் தன்மையற்ற குற்றங்களின் அனுபவங்கள் நம் முன்னே நிற்கின்றன.

01-03-2017 அன்று பெற்றோரின் அனுமதியின்றி ரூபெல்லா தடுப்பூசியைப் போடப் போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காலடியில் போட்டு நசுக்கி, 15 வயதிற்குள்ளான பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிராக ஒரு மீப்பெரு குற்றத்தை செய்யும் இதே அரசு, நெடுவாசலுக்கு ஆதரவாகப் போராடச் செல்லும் கல்லூரி மாணவர்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற்று தான் வரவேண்டும் என்ற வினோத சட்டத்தைக் கூறி போலீசை வைத்து விரட்டியடிக்கிறது.  பாங்க் வாசல், வாடி வாசல், நெடுவாசல், பள்ளிவாசல் எனத் தனித்தனியான போராட்டங்கள் தீர்வைத் தராது. தமிழினத்தை அழிக்கத் துடிக்கும் இக்குற்றக்கும்பலை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்காவிட்டால் நம் தமிழினமே அழிந்து போகும் அபாயம் தொலைதூரத்திலில்லை.

– முற்றும்.

கட்டுரை ஆக்கம்: ஆழிமதி

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1
நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 2

செய்தி ஆதாரம்:
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East

 1. வினவு இதனை பற்றி அடுத்த பாகத்தில் எழுதும் என்பதால் நான் என்னுடைய பின்னுட்டத்தில் இதனை விரிவாக எழுதாமல் இருந்தேன். விரிவாக எழுதியமைக்கு மிக்க நன்றி.. மற்றும் ஒரு விஷயம் வினவு கட்டுரையில் விடுபட்டு உள்ளது. பாத் தன்னார்வ அமைப்புக்கும் பில் பவுண்டேசனுக்கும் , மற்றும் பில் கேட்ஸ் கணிசமான ஷர்களை வாங்கிவைத்து உள்ள Merck & Co. நிறுவனத்துக்கும் உள்ள தொடர்புகளை பற்றி ஒரு பாகம் கட்டுரையாக எழுதலாமே வினவு… Merck & Co. மருத்துவ நிறுவனத்தின் தடுப்பூசிகள் தான் உலகம் முழுவதும் பில் பவுண்டேசனின் விளம்பரம் மூலம் விற்பனையாகின்றது என்ற உண்மையை விரிவாக எழுதலாமே வினவு!

  //தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்//

 2. இந்த கட்டுரை சுட்டும் விசயங்கள் ஒருவேளை படிப்பவர்களுக்கு அதிகபடியானதாக கூட தெரியலாம்… ஏன் வினவின் கற்பனையாக கூட தெரியலாம். ஆனால் இதில் குரிபிடப்ட்டு உள்ள விசயங்கள் எத்துணையும் உண்மை… இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து கியூபாவை போல சீனாவை போல பிற நாட்டு மக்களையும் விடுவிக்க வேண்டிய கடமை அந்த அந்த நாட்டு கம்யுனிஸ்டுகலுக்கு உள்ளதனை யாருமே மறுக்க முடியாது. தேர்தல் முலமாகவோ அல்லது தேர்தலுக்கு அப்பாற்பட்டே ஆட்சி அதிகாரத்தை உலக அளவில் கம்யுனிஸ்டுகள் கைப்பற்றுவதன் மூலமே மானுடத்துக்கான விடியல் சாத்தியம் ஆகும்…

  (சீனாவும் , கியூபாவும் இந்த தடுப்பூசி விசயத்தில் எந்த அளவுக்கு மிகவும் எச்சரிக்கையாக தன் நாட்டு மக்களின் நலன்களை பேணிகாத்துகொண்டு இருகின்றன என்பதனை என்னுடைய பின்னுட்டத்தில் (கட்டுரை பாகம் 2 ) விளக்கி இருந்தேன்…)

 3. வினவு, இதுவென்ன முற்றும் போடவேண்டிய கட்டுரையா? இன்னும் இன்னும் பல்வேறு விசயங்களை இந்த தடுப்பூசிகள் விசயத்தில் மக்களிடம் நாம் அம்பலபடுத்த வேண்டியுள்ளது…. பாத் ,பில் போவுண்டடன், அந்த அந்த நாடுகளில் உள்ள அரசுடன் இவர்கள் செய்து கொண்டு உள்ள ஒப்பந்தங்கள் என்று நாம் தினம் தினம் உன்னிப்பாக கவனிக்கவேண்டியுள்ளது… அந்த விசயங்களை தினம் தினம் நாம் மக்களுடன் கொண்டு சேர்க்கவேண்டியுள்ளது… மக்களின் நலனை கருதி “””…..தொடரும்…..”””” என்று இறுதியில் மாற்றுங்கள்!

 4. மனித குலத்துக்கு எதிரான பில் கேட்ஸ்சின் நாசகார சதி வேலைகள் :
  ——————————————————————-

  இந்த கட்டுரையின் பின் இணைப்பாக மேலும் சில விசயங்களையும் கூறவிரும்புகிறேன். நாம் வாங்கும் ஒவ்வொரு மைக்ரோசாப்ட் கணினி மென்பொருட்கள் மூலமாகவும் நாசகார Merck & Co என்ற மருத்துவ நிறுவனத்தின் மருந்து பொருட்களின் விற்பனையையும் நாம் ஆதரிக்கின்றோம். உலக அளவில் கணினி மென்பொருள் விற்பனையை கட்டுப்படுதிக்கொண்டு (monopoly) இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்பொது மருந்து பொருட்களை விற்பனை செய்யும் விசயத்திலும் புறவாசல் வழியாக நுழைந்து உள்ளது.

  அது எப்படி சாத்தியம் ஆயிற்று? 2009 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நான் மும்பே குறிப்பிட்டு உள்ள Merck & Co ( the world’s largest maker of vaccines) என்ற மருத்துவ நிறுவனத்திடம் இருந்து ஒரு உயர் கணினி மென்பொருள் தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கியுள்ளது. அந்த தொழில் நுட்பத்தின் மூலமாக இயுகனிஸ் நோய் தடுப்பு மருந்துகளை ( eugenics vaccines) உற்பத்தி செய்யமுடியும். இந்த நோய் தடுப்பு மருந்துகளின் நோக்கமே ஒரு குறிப்பிட்ட நாட்டின் இனத்தின் மக்கள் தொகையை இந்த நோய் தடுப்பு மருந்துகள் மூலமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும்… பில் கேட்ஸ் வெளிப்படையாக ஒத்துக்கொண்ட கருத்து என்னவென்றால் இந்த நோய் தடுப்பு மருந்துகள் மூலமாக உலக மக்கள் தொகையை 10% முதல் 15%வரையில் குறைக்கமுடியும் என்பது தான்.

  இந்த தொழில் நுட்பம் எப்படி பட்டது என்றால் இவை மனித மரபணுக்களை நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கும் மருந்துகளை (gene-targeting vaccine) செய்யும் திறமைகளை தன்னகத்தே கொண்டது. மரபணுக்களின் மீது செயல்பட்டும் இந்த தொழில்நுட்பம் மரபணுக்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன என்றும் செல்களில் நிகழும் வளர்ச்சிதைமாற்றத்தையும்( metabolites) ஆய்வு செய்யும் திறன் படைத்தது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மேலும் மரபணுக்கள் எப்படி வளர்ச்சிதைமாற்றத்தின் மூலம் புரோடின்களை உற்பத்தி செய்கின்றன (gene expression process) என்பதனையும் ஆராய முடியும்.

  இந்த மனித குல நாசகர தொழில் நுட்பத்துக்கு Merck & Co நிறுவனம் உள்ளீடுகளை (bio informatics input data) வழங்க ஒப்பந்தம் செய்யபட்டு உள்ளது. இந்த விசயத்தில் Merck & Co ஆய்வு நிறுவனத்தின் துணை தலைவர் ருபர்ட் வெஸ்லியின் வாக்குமூலம் என்னவென்றால் “இந்த ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனம் இனி மருந்து தயாரிப்பிலும் ஈடுபடும்” என்பதாகும். மேலும் அவர் கூறும் விஷத்தை (ஆம் விசயம் அல்ல விஷம் தான் ) அவர் கூறும் விசயத்தில் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியது என்னவென்றால் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மரபணுக்கள் மீது செயல்படும் பயோஇன்போர்மடிக்ஸ்- உயிர் தகவலியல் சார்ந்த (Bioinformatics) மருந்து கண்டுபிடிப்புகளை உற்பத்திகளை செய்யமுடியும் என்பது தான். பயோஇன்போர்மடிக்ஸ் என்பது மரபணுக்களின் தகவல்களை கணினியில் சேமித்து வைத்து ஆராயும் அறிவியல் துறை ஆகும். அப்படி பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரிக்க போகும் மருந்துக்கள் மரபணுக்கள் மீது ஆளுமை செய்யும் மருந்துகளாகத்தானே இருக்க முடியும்? (gene-targeting drugs and vaccines”)

  இந்த தகவல்கள் அடிப்டையில் இப்பொது பில் கேட்ஸ் கொடுத்து உள்ள வெளிப்படையான வாக்குமூலத்தை ஆய்வு செய்தால் கிடைக்கும் விடை என்னவாக இருக்கும் என்று பார்க்கலாமா? உலக மக்கள் தொகையை இந்த தடுப்பூசி மருந்துகள் மூலம் 10% முதல் 15% வரையில் குறைக்கமுடியும் என்று ஆணித்தரமாக கூறுகின்றார். மனித குலத்தின் பரம்பரை நோய்களான சக்கரை வியாதி, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மரபணு அளவில் மருந்துகளை கண்டுபிடித்து தயாரிக்க கிடைத்த அறிவியலை பில் கேட்ஸ் மனித குலத்த்தின் மக்கள் தொகையை குறைக்க தடுப்பூசிகளில் பயன்படுத்த முனைகின்றார் என்பதே எனக்கு விடையாக கிடைகின்றது.

  Ref:
  http://www.naturalnews.com/034848_Microsoft_Merck_eugenics.html

 5. பில் கேட்ஸ்சின் நாசகார சதி வேலைகள் : (con….)
  ——————————————————————————–
  மேலே குறிப்பிட்ட விசயங்கள் TED conference பேச்சின் போது பில்கேட்ஸ் ஒப்புகொண்ட நிகழ்ச்சி நிரளுடன் மிகவும் பொருந்திப் போகின்றன.. அந்த உரையாடலின் போது அவர் கூறிய விசயம் என்னவென்றால் இந்த மருந்துகள், தடுப்பூசிகள் மூலமாக உலக மக்கள் தொகையை 10% முதல் 15% வரையில் குறைக்கமுடியும் என்பதாகும்… அது எப்படி சாத்தியம் என்கின்றீர்களா? ஆம் உங்களால் நினைத்துப்பார்க்க இயலாத நாசகார சதிகள் மூலமாக இது சாத்தியம் ஆகும் என்கின்றார் பில் கேட்ஸ்… நீங்கள் எளிய இதயம் உடையவர் என்றால் இந்த பின்னுட்டத்தை படிப்பதனை இத்துடன் நிறுத்திக்கொண்டு தயவு செய்து வெளியேறுங்கள் என்று கோருகின்றேன்… ஆம் அத்தகைய கொடுரமான சதி திட்டம் அவருடையது. 10% முதல் 15% வரையில் மக்கள் தொகையை குறைக்கவேண்டும் என்றால் வேறு என்னவழி? மக்களை கொன்று குவிப்பதனை தவிர வேறு என்ன வழி இருக்கிறது.. 70 கோடி முதல் 105 கோடி வரையிலான உலக மக்களை கொன்று குவிக்க பில்கேட்ஸ் அந்த TED conference உரையாடலின் போது வழிகளை விவரிகின்றார்… அதனை பற்றிய செய்திகள் இந்த வினவு கட்டுரையில் இடம் பெற்று உள்ளதால் அதனை பற்றி இங்கு எழுத தேவை இல்லை என்று நினைகின்றேன்.

  மற்றும் ஒரு கொடுர முறைகளை பயன்படுத்தி உலக மக்கள் தொகையை குறைக்க பில் கேட்ஸ் திட்டங்களை தீட்டி அதற்கு பண உதவியும் செய்து கொண்டு உள்ளார். மனித விந்தனுகளில் உள்ள உயிரணுக்களை கொன்று மனிதர்களை நிரந்தர மலடாக அவர் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் முயற்சிக்கின்றார்.. அந்த தொழில் நுட்பத்துக்கான ஆராய்ச்சி நிதி உதவிகளை University of North Carolina (UNC) என்ற அமெரிக்க பல்கலைகழக்த்துக்கு அவரின் Bill & Melinda Gates Foundation மூலமாக வழங்கிக்கொண்டு உள்ளார் பில் கேட்ஸ்.

  அந்த பல்கலை கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் எலிகள் மீது செலுத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட்ஒலிகள் அவற்றின் விந்து எண்ணிக்கை மற்றும் விந்து ஒருங்கினைப்பையும் (sperm counts and sperm integrity) கணிசமான அளவுக்கு குறைத்து அவற்றை மலட்டு தன்மையுடைய நிலைக்கு மாறியுள்ளன.. ஆனால் அந்த ஆய்வின் அறிக்கைகள் கூறும் விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வு மலட்டு தன்மையை பற்றியது அல்ல ஆனால் கருத்தடை பற்றியது மட்டுமே என்று சப்பைக்கட்டு கட்டுகின்றது…. இந்த ஆய்வை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்…. மேலும் எலிகளுக்கு இரண்டு நாடுகளுக்கு கொடுக்கபடும் அல்ட்ராசவுண்ட்ஒலிகள் மூலம் அவைகள் ஆறு மாதங்களுக்கு மலட்டு தன்மையை அடைகின்றன என்ற அறிக்கைகள் அந்த ஆய்வின் முடிவுகளாக வெளிவந்து உள்ளன.. (மனிதர்களிடம் நிரந்தர மலட்டு தன்மையை எதிர்பார்க்கும் பில் கேட்ஸ் இந்த ஆய்வு முடிவுகளை கண்டு திருப்தி அடைவாரா என்ன?) எனவே ஏழை நாடுகளில் குறைந்த செலவில் பயன்பாட்டுக்கு வரும் நிரந்தர மலட்டுத்தன்மையாக்கும் மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதனை நோக்கி மேலும் மேலும் நிதி உதவிகளை அளித்துக்கொண்டு உள்ளது பில் பவுண்டேசன்!

  கேட்ஸ் அறக்கட்டளை 78 வெவ்வேறு ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் $100,000 அளவுக்கு நிதி உதவியை “உலக சுகாதார திட்ட பெரும் சவால்கள்” (“Grand Challenges in Global Health Program.” ) என்ற நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் வழங்கிக்கொண்டு உள்ளது. இதில் பத்து ஆய்வுகள் மனிதர்களை மலடாகும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன…டைம் நாளிதழின் செய்தியின் அடிபடையில் பேசுவோம் என்றால் இவற்றில் ஒரு ஆய்வு ஒரு மாத்திரியில்(pill) மனிதர்களை எப்படி காய்யடிப்பது என்பது பற்றியது ஆகும்.. (ஒரு மத்திரையில் மனிதர்களின் விந்து வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை எப்படி நிரந்தரமாக தடுப்பது பற்றியது ஆகும்….) மற்றும் ஒரு ஆய்வு விந்தணுக்கள் கருமுட்டையை சென்று அடையாமல் தடுக்க வேதிப் பொருட்களை கண்டுபிடிப்பது பற்றியது ஆகும்….

 6. பில் கேட்ஸ்சின் நாசகார சதி வேலைகள் : (con….)

  பில் கேட்சின் மக்கள் தொகை குறைப்பு திட்டம் (agenda of human depopulation) எதனை போன்று உள்ளது என்றால் இனவெறியுடன் தன் அதிகாரத்தால் மக்களை கொன்று குவித்த அடோல்ப் ஹிட்லர் (Adolf Hitler) மற்றும் அமெரிக்க Food and Drug Administrationவின் உயர் அதிகாரிகளின் திட்டங்களை போன்று தான் உள்ளது. மக்களை முட்டாள் ஆக்குங்கள் , எளிய மக்களை கொள்ளுங்கள் , அதிகாரத்தில் உள்ளவர்களை மட்டுமே வாழ விடுங்கள் என்ற அவர்களின் நோக்கத்தின் அடிப்படையில் தான் பில் கேட்சின் மக்கள் தொகை குறைப்பு திட்டமும் உள்ளாந்த,ரகசிய நோக்கத்துடன் இன்று செயல்பாட்டில் உள்ளது. மனிதர்களை கொன்று ஒழித்துவிட்டால் உலகம் பசுமையாகிவிடும் என்ற நோக்கத்துடன் பில் கேட்ஸ் சுயபிரதியெடுப்பு, மரபணு இலக்கு உயிரியல் ஆயுதங்களை (self-replicating, gene-targeted bioweapon) இன்று உற்பத்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் தன்னுடைய பில் பவுண்டேசன் மூலமாக பாத் என்ற தன்னார்வ அமைப்புக்கு நிதி உதவி அளித்து Merck & Co நிறுவனத்தின் மருந்துகளை உலகளாவிய நிலையில் விற்பனை செய்வதன் மூலம் நடை முறை படுத்திகொண்டு உள்ளார்…

  பில் கேட்ஸ் பவுன்ட்டேன்சனிடம் இருந்து நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ வர்த்தக லாபம் அடையும் எந்த ஒரு மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளுமே(Merck & Co நிறுவன தயாரிப்புகள் போன்று) இன்று சந்தேகத்துக்கு உரியவை தான். எந்த நோய் தடுப்பு மருந்தில் என்ன வேதிப்பொருள் மனித விந்துவில் உள்ள உயிர் அணுக்களை கொன்று ஒழிக்கவும் , மனித மரபணுக்களை சிதைக்கவும் நமக்கே தெரியாமல் பயன் படுத்தப்படுகின்றதோ !( எந்த புற்றில் என்ன பாம்பு இருக்குமோ?) மேலும் மனிதர்களின் செல்களில் உள்ள செக்ஸ் குரோமோசோம்களில் (பெண்XX மற்றும் ஆண்XY) கூட இவர்கள் இங்களது சித்து வேலையை காட்டலாம் அல்லவா?

  மனித குலத்தை அழிக்க இவர்கள் எந்த எந்த வழிமுறைகளை பயன்படுத்துகின்றார்கள் என்றும் பார்கலாம்.. ஒரு மருந்தோ அல்லது ஒரு நோய் தடுப்பு மருந்தோ விரைவில் பல கோடி மக்களை குறுகிய காலத்தில் அழிக்கும் என்றால் அது மக்களின் எதிர்ப்பின் காரணமாக மருந்து வணிக சந்தையில் இருந்து உடனடியாக விலக்கிக்கொள்ளபடும் அல்லவா? எனவே இந்த பில் கேட்ஸ் கும்பல் கீழ்கண்ட வேறு மூன்று மாற்று வழிமுறைகளை கையாண்டு மக்களிடம் பேரழிவை உருவாக முயல்கின்றது…

  [1] நமது கவனத்துக்கு வராமல் மனிதர்களை பத்து முதல் முப்பது ஆண்டுகளுக்குள் உடல் பாகங்களை சிதைத்து மெல்ல மெல்ல கொல்லும் நோய்களை (degenerative diseases) தடுப்பூசிகள் மூலம் பரப்புதல். (They might kill people slowly in a way that’s unnoticeable, taking effect over perhaps 10 – 30 years by accelerating degenerative diseases.)

  [2] தடுப்பூசிகள் மூலம் மனிதர்களிடம் மலட்டு தன்மையை உருவாகி அதன் மூலம் பிறப்பு விகிதத்தை குறைத்து மக்கள் தொகையை குறைத்தல்…(They might reduce fertility and therefore dramatically lower birth rates around the world, thereby reducing the world population over successive generations.)

  [3] இறப்பு விகிதத்தை தோற்று நோய்கள் மூலம் அதிகப்டுத்துதல்…தடுப்பூசிகள் மூலம் சக்தி வாய்ந்த ஃப்ளு வைரஸ்களை பரப்புதல். உயிரியல் ஆயுதமாக (bioweapon) செயல்படும் இந்த தடுப்பூசிகள் மனித உடலில் எதிர்ப்பு சக்தியை குறைத்து தொற்று நோய்கள் பரவ இடம் அளிக்கும்..(They might increase the death rate from a future pandemic. Theoretically, widespread vaccination efforts could be followed by a deliberate release of a highly virulent flu strain with a high fatality rate. This “bioweapon” approach could kill millions of people whose immune systems have been weakened by previous vaccine injections.)

  Ref:
  http://www.naturalnews.com/029911_vaccines_Bill_Gates.html

  • https://youtu.be/JaF-fq2Zn7I

   இந்த விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது நீங்கள் பில் கேட்ஸ் பேசிய ஒரு பகுதியை மட்டும் வைத்து கொண்டு அவரை பற்றி தவறாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், மேலே நான் கொடுத்து இருக்கும் youtube லிங்கை பார்க்கவும் பில் கேட்ஸ் சரியாகவே பேசியிருக்கிறார் மக்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது அவர்களுக்கு பிறகும் குழந்தைகளும் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழும் அதனால் மக்கள் மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே அவர் சொல்ல வரும் கருத்து.

   நம் நாட்டில் இதற்கு சிறந்த உதாரணம் கேரளா, அந்த மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி என்பது நின்றே விட்டது, ஒரு தம்பதிக்கு 1.8 குழந்தைகள் தான் பிறக்கிறது ஆனால் பீகார் உத்தரபிரதேஷ் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி எப்படி இருக்கிறது பாருங்கள், இன்றும் கூட மிக வேகமாக மக்கள் தொகை அந்த மாநிலங்களில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. கேரளவிற்கும் பிஹாருக்கும் என்ன வித்தியாசம் ?

   பில் கேட்ஸ் சொல்ல வருவது பிஹரை கேரளாவை போல் மாற்ற வேண்டும் என்பது தான் மக்களை மலடாக்க வேண்டும் என்பது அல்ல

 7. வினவுக்கும் மற்றும் திரு. செந்தில்குமரன் போன்ற அறிவு ஜீவிகளுக்கும் கூற விழைவது,

  முதலில் இணையத்தில் இருக்கும் பிதற்றல்களை செய்தி என பதிவதை நிறுத்தவும். aids பரப்பை தடுக்க condom உதவாது என பேசும் கத்தோலிக்க மருத்தவ அமைப்பில் ஒரு மருத்துவர் சொன்னதை வைத்து, அதை செய்தி என பதிவு செய்து, அதற்க்கு எந்த அடிப்படை ஆதாரம், ஆய்வு இல்லாமல் கண் காது, மூக்கு வைத்து உலகை அழிக்க என்னமோ சதி என்பதெல்லாம் பேசுவது, அப்பட்டமான பிதற்றல்.

  gene targetting, bioinformatics என்றெல்லாம் ரெண்டு வார்த்தையை போட்டு விட்டு, ஒரு மிக சிறந்த ஆய்வு அறிவியலை இப்படி பிதற்றுவது கவலை தருகிறது. இன்று புற்றுநோய் மருந்து என ஒரு விஷயம் கண்டுபிடிக்க இருக்கும் மிக, மிக அடிப்படை சிக்கல் இந்த gene targetting சம்பந்தமானது. எல்லா நோய்க்கும் அருமருந்து, புற்று நோயை குணமாக்க வல்லது என்று கூவி, கூவி விற்கும் எல்லா ஏமாற்று பேர்வழியும் மறைக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எல்லா புற்றுநோயும் ஒன்று அல்ல. எல்லா புற்றுநோய்க்கும் ஒரு மருந்து இல்லாமைக்கும் காரணம் புற்றுநோய் என்பது மரபணு மாற்றத்தால் வருவது. உடம்பில் இது தினமும் நிகழ்வது தான். இன்று உலகில் உயிரினினங்கள் இருக்க காரணம் மரபணு மாற்றம் தான். போன தலைமுறை போல அச்சு பிழறாமல் அடுத்த தலைமுறை இருந்தால் உயிரனங்கள் பல்கி பெருக முடியாது.

  சேரி இதுக்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம்? இப்படி ஒரு செல் அடுத்த தலைமுறை என பிரியும் போது சில பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி பிழையுள்ள செல் கட்டுக்கு அடங்காமல், பல பிழைகள் அடைந்து, நம் நோய் எதிர்ப்பு அமைப்பை ஏமாற்றி பல்கி, பெருகி வருவதே புற்றுநோய் ஆரம்பம். இதனால் தான் அதற்க்கு ஒரு மருந்து, ஒரு mechanism of treatment என்பது இல்லை. ஒரே மனிதரின் உடலில் இரு வேறு இடங்களில் இருக்கும் புற்றுநோய் கட்டி வெவ்வேறு தன்மை கொண்டதாக இருக்கலாம். இரு வேறு மனிதர் ஒரே வித புற்றுநோய் கொண்டிருந்தாலும் அவர்களின் புற்றுநோய் செல்களின் தன்மைகள் வெவ்வேறு. ஒரு பாக்டீரியா போல ஒரே கிருமி இந்த நோய்களை உருவாக்குவது இல்லை. அதே போல புற்றுநோய் உருவாக காரணங்களும் பல்வேறு. உதாரணமாக HPV எனும் வைரஸ் பெண்களின் கர்பப்பை வாய் புற்றுநோய் உருவாவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதை தடுக்க நம்மிடம் அதற்க்கு தடுப்பூசி உண்டு. இதே போல பல நோய்கள் (hepatitis b, c போன்றவை)புற்றுநோய் உருவாக்கும். இவைகளை தடுப்பூசி கொண்டு ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால் புற்றுநோய்க்கு நூறு சதவிதம் பாதுகாப்பான மருத்துவம் வேண்டும் என்றால் அதற்க்கு gene targetting தான் மிக சிறந்த வழி. நம் செல் மாறுவதை, பிழைகள் பெறுவதை தடுக்க முடியாது. ஆனால் அந்த பிழையை கண்டுபிடித்து, சரி செய்வது சாத்தியம். இதற்கே இந்த gene targettting, bio informatics ஆய்வு.

  அடுத்து, ஆண் குடும்ப கட்டுப்பாடு ஆய்வை எல்லாம் உலகை மலட்டு தன்மை ஆக்க செய்யும் ஆய்வு என்பது கேலி கூத்து. பெண்களுக்கு அறுவை சிகிச்சை, implants, morning after pill என குடும்ப கட்டுப்பாடு விசயத்தில் உதவ பல உள்ளன. ஆண்களுக்கு condom தவிர தற்காலிக குடும்ப கட்டுப்பாடு என எதுவும் இல்லை. அறுவை சிகிச்சை (vasectomoy) நிரந்தரனமானது. நம்ம ஊர்ல அரிசி, காசு குடுத்து பண்ண அதே அறுவை சிகிச்சை தான். எல்லா இடத்திலும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. எனவே பெண்களுக்கு இருப்பது போலவே ஆண்களுக்கும் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு சேவை இருப்பது நல்லதே. அதற்கான ஆய்வு பல வழிகளில் நடைபெற்று வருகிறது.அதை எல்லாம் கொண்டு போய் என்னமோ மூன்றாம் உலகை அழிக்க நடக்கும் சதி என Natural News போன்ற conspiracy தளங்கள் எழுதுகின்றன. அதை மேல்நாட்டின் மீது இருக்கும் காழ்புணர்ச்சியின் காரணமாக நாம் உண்மை என நம்பி எழுதினால், நமக்கு அறிவு எப்படி?

  இணையத்தில் இருப்பதால் அனைத்தும் உண்மை அல்ல. முதலில் நம் confirmation bias நம்மை அறிவிலி ஆக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். Natural news போன்ற தளங்கள் எல்லாம் வெறும் குப்பை. அதை நம்பி, அதை செய்தி , உலக சதி என எழுதுவது அறிவுக்கு உகந்த காரியம் அல்ல.இந்த கட்டுரையில் இருக்கும் அப்பட்டமான selection bias மற்றும் quote mining, எந்த அடிப்படையும் இல்லாமல் வதந்கிகளை செய்தி என எழுதுவது போன்றவை வினவில் அதிகரித்து வருகிறது. இதை தயவு செய்து கொஞ்சம் கவனத்துடன் பார்த்து இப்போதே திருத்திக்கொள்ள வினவை வேண்டுகிறேன்.

  • இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டபடும் விசயத்துக்கும் , எனது பின்னுட்டங்களுக்கும் தொடர்பற்ற வியசங்க்களை பேசிக்கொண்டு எங்களை குறை கூறுகின்றீர்கள்சிந்தனை செய்…!. gene targeting medicine, bioinformatics ஆகிய அறிவியல் துறைகள் எல்லாம் மனிதர்களின் மரபணு தொடர்பான நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்க உதவும் என்ற விசயத்தை என்னுடைய பின்னுட்டத்தில் நான் விளக்கியுள்ளேன். ஆனால் பில் கேட்ஸ் அந்த அறிவியல் துரைகளை நாசகரமாக மானுட குலத்தை அழிக்க பயன்படுத்துகின்றார் என்ற உண்மையை அவரின் வாக்கு மூலத்தில் இருந்தும் (TED conference speeach) அவர் இன்று நிதி உதவி செய்து கொண்டு உள்ள ஆய்வுகளின் அடிபடையிலும் விளக்கி இருந்தேன்… அவற்றை பற்றிய எந்த விதமான மாற்றுக்கருத்துகளையும் கொடுக்க இயலாத சிந்தனை செய் அவர்கள் பில் கேட்ஸ் பவுண்டேசனின் பிரதிநிதி போன்றே பேசிக்கொண்டு உள்ளார். உங்களால் முடிந்தால் இந்த கட்டுரையில் உள்ள விசயங்களையும் என்னுடைய பின்னுட்ட கருத்துகளையும் ஆதாரபூர்வமாக ,தர்க்க ரீதியாக தவறு என்று நிருபியுங்கள் ஐயா!

  • சிந்தனை செய் அவர்களே , இந்த கட்டுரையை மற்றும் ,எனது பின்னுட்டத்தை பொறுத்தவரையில் பில் கேட்ஸ் மீது வைக்கபடும் மைய்ய குற்றசாட்டே மரபணு நோய்களான கண்பார்வை கோளாறு , சக்கரை நோய்கள் போன்றவற்றுக்கு மருந்துகள் தயாரிக்க bioinformatics (உயிரிதகவலியல்) மூலம் மனித மரபணுக்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் gene targeting medicine (மரபணுகளை நோக்கிய மருந்துகளை செய்யதல்) என்ற விசயத்தை பில் கேட்ஸ் அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி மக்கள் தொகையை குறைக்க தடுப்பூசிகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளார் என்பதாகும். அந்த குற்றசாட்டுக்கு பதில் அளிக்க இயலாத நீங்கள் வினவையும் என்னையும் லாஜிக் மற்றும் எந்த அடிபடை ஆதாரமும் இல்லாமல் குற்றம் காண்கின்றீர்கள்!

   • இந்த மாதிரி காமெடி பண்றதுக்கு முன்னாடி முதல்ல நீங்க ஆதாரத்தை வைங்க சார். உங்கள் பதிவை முதலில் அலசுவோம். அதில் உங்கள் கூற்றுகளை கொஞ்சம் பார்போம். எனக்கு கொஞ்சம் அறிவு கம்மி, எனவே சில கேள்விகள் கொஞ்சம் அடிபடையாக இருக்கும். தயவு செய்து விளக்கவும்.

    //உலக அளவில் கணினி மென்பொருள் விற்பனையை கட்டுப்படுதிக்கொண்டு (monopoly) இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்பொது மருந்து பொருட்களை விற்பனை செய்யும் விசயத்திலும் புறவாசல் வழியாக நுழைந்து உள்ளது. அது எப்படி சாத்தியம் ஆயிற்று? 2009 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் நான் மும்பே குறிப்பிட்டு உள்ள Merck & Co ( the world’s largest maker of vaccines) என்ற மருத்துவ நிறுவனத்திடம் இருந்து ஒரு உயர் கணினி மென்பொருள் தொழில் நுட்பத்தை விலைகொடுத்து வாங்கியுள்ளது//

    ஆகா மென்பொருள் வாங்கி இருக்கிறதா? அதை கொண்டு eugenics மருந்துகள் செய்ய முடியுமா? அப்படி என்ன எல்லாம் வல்ல மென்பொருள் அது? Rosetta Biosoftware எனும் கிளை நிறுவனத்தின் மென்பொருளின் சில பகுதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கி உள்ளது (Source: http://old.seattletimes.com/html/microsoft/2009288622_rosetta020.html). அந்த மென்பொருளை தன்னுடைய Amalga Life Sciences எனப்படும் மென்பொருளில் ஒரு பகுதியாக இணைத்துள்ளது. மூல கரு பிடித்தாகி விட்டது. இப்போது நிரூபிக்க வேண்டியது எல்லாம் இந்த Amalga மென்பொருள் நீங்கள் கூறி உள்ளது போல,

    //அந்த தொழில் நுட்பத்தின் மூலமாக இயுகனிஸ் நோய் தடுப்பு மருந்துகளை ( eugenics vaccines) உற்பத்தி செய்யமுடியும்//

    அந்த மருந்துகளை உற்பத்தி செய்ய முடியுமா என்பது தான். சரி இந்த மென்பொருள் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதை கொஞ்சம் இணையத்தில் பார்ப்போம். விக்கிப்பீடியா பக்கத்தின் முதல் வரி:

    Microsoft Amalga Unified Intelligence System (formerly known as Azyxxi) was a unified health enterprise platform designed to retrieve and display patient information from many sources, including scanned documents, electrocardiograms, X-rays, MRI scans and other medical imaging procedures, lab results, dictated reports of surgery, as well as patient demographics and contact information.

    (https://en.wikipedia.org/wiki/Microsoft_Amalga)

    ஆகா. ஒரு நபரின் அனைத்து மருத்துவ விசயத்தையும் சேமித்து, வேண்டும்போது தர வல்ல என்ன ஒரு நாசக்கார மென்பொருள்!!! databaseஇல் தட்டி கொண்டு இல்லாமல் மருத்துவ பணியை சுலபமாக்கும் மென்பொருள், கண்டிப்பாக eugenics மருந்துகளை தயாரிக்க வல்லது தான். இது இப்போதும் பில் கேட்ஸ் கையில் இருப்பது என்ன பெரிய ஆபத்து! சரி அந்த மென்பொருளுக்கு என்ன ஆனது? அதே விக்கிபீடியா பக்கத்தில் இருப்பது.

    As of February 2013, Microsoft Amalga was part of a number of health-related products spun-off into a joint-venture with GE Healthcare called Caradigm.[1] Shortly thereafter, Caradigm announced the “Caradigm Intelligence Platform” as the new brand for Microsoft Amalga,[7] ending the use of the name. In early 2016, it was reported that Microsoft had sold its stake in Caradigm to GE.[2]

    அடடா. சரி போகட்டும். அவர் வேண்டியதை செய்திருப்பார். எனவே அதை விற்று விட்டார் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. மருத்துவ பதிவேடுகள் கையாளும் மென்பொருள் நீங்கள் கூறியது போல எவ்வாறு eugenics மருந்துகளை உருவாக்க வல்லது என விளக்க முடியுமா திரு.செந்தில்குமரன்? அதை கொண்டு எத்தனை மருந்துகள் உருவாக்க பட்டு உள்ளன. அவை எங்கெல்லாம் பயன்படுத்த பட்டு உள்ளன போன்ற ஏதேனும் லாஜிக் உதைக்காத, அடிப்படை ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?

    அடுத்து, உலக மக்கள் தொகையில் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் மக்களை குறைக்க வேண்டும் என கூறி இருப்பதாக இருக்கும் காணொளி. அதை அடிபடையாக கொண்டு தான் மற்ற எல்லா விசயமும் உங்கள் பதிவில் உள்ளது. சரி அந்த காணொளியில் அவர் கூறியதை வார்த்தை மாறாமல் பார்ப்போமா?

    //The world today has 6.8 billion people. That’s heading up to about nine billion. Now if we do a really great job on new vaccines, health care, reproductive health services, we could lower that by perhaps 10 or 15 percent.//

    அதாவது சிறந்த மருத்துவ வசதி, குடும்ப கட்டுப்பாடு சேவை மற்றும் கல்வி போன்றவற்றின் துணை கொண்டு மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க முடியும் என்கிறார். இதை தானே நாமும் சிவப்பு முக்கோணம், நாம் இருவர், நமக்கு இருவர் என முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்தோம்? இங்க செஞ்சா தேச நலன். அதையே பில் கேட்ஸ் மிக வரிய நாடுகளில் செய்ய வேண்டும் என சொன்னால் அவர் மக்களை கொன்று குவிக்க திட்டம்? வறுமையை ஒழிக்க முதற்படி பெண்கல்வி, குடும்ப கட்டுப்பாடு என்பது மிக தெளிவாக உள்ள விஷயம். இதை பில் கேட்ஸ் சொன்னால் அதெப்படி அவர் மக்களை கொள்ள திட்டம் போடுகிறார் என்பதாகும்? இதில் உள்ள லாஜிக் விளக்கவும்.

    அடுத்து, Grand Challenges in Global Health Program எனும் initiative மூலமாக மனிதர்களை மலடாக ஆக்கும் ஆய்வு எனும் உங்கள் பதிவு. மிக எளிதாக கேட்கிறேன் சார். ஒரு கடைகோடி கிராமத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை எப்படி செய்வது? சுத்தமான, கிருமி இல்லாத, தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லாத இடத்தில தானே அறுவை சிகிச்சை செய்ய முடியும்? இன்றைய நிலையில் இருக்கும் கருத்தடை முறைகள் ஏற்கனவே மேல ஏன் பதிவில் உள்ளன. இதில் அறுவை சிகிச்சை இல்லாமல் இருக்கும் வழி முறை இரண்டே இரண்டு. பெண்களுக்கு morning after pill, ஆண்களுக்கு condom. எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் உலகெங்கும் ஆய்வுகள் நடை பெற்று தான் வருகின்றன. இதில் பல பல்கலைகழகம், அரசாங்கம், தனியார் ஆய்வுகளும் அடக்கம். இதில் பில் கேட்ஸ் ஏதோ பத்து ஆய்வுக்கு $100,000 கொடுத்து உள்ளார். அதுவும் மக்களை அழிக்கும் முயற்சி என்பது என்ன லாஜிக்? அப்போ அரசாங்கம் அதே ஆய்வுக்கு பணம் கொடுத்தது? மக்கள் பல்கலைகழகம் கொடுத்த பணம் எல்லாம்?

    இதே முயற்சியில் இது வரை 2035 grants அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 24 மட்டுமே குடும்ப கட்டுப்பாடு ஆய்வுக்கு அளிக்கப்பட்டது (http://grandchallenges.org/#/list?challenge=Contraceptive%20Technologies). மொத்த க்ராண்டில் ஒரு சதவீதம் கூட இல்லை. இதே முயற்சியில் மற்ற எந்த துறைகளில் எத்தனை கிராண்ட் என பார்போமே.

    குழந்தை மற்றும் கருத்தரிப்பில் மூளை வளர்ச்சி ஆபத்துகள் பற்றிய ஆய்வு – 41
    (http://grandchallenges.org/#/list?challenge=Brain%20Function~2FGestational%20Age)

    நோய் கண்டறியும் முறைகள் பற்றிய ஆய்வுகள் – 40
    (http://grandchallenges.org/#/list?challenge=Diagnostics)

    கைப்பேசி பயன்பாடுகள் – 24
    (http://grandchallenges.org/#/list?challenge=Cell%20Phone%20Applications)

    நோய் எதிர்ப்பு – 36
    (http://grandchallenges.org/#/list?challenge=Drug%20Resistance)

    உலக சுகாதார தீர்வுகள் – 79
    (http://grandchallenges.org/#/list?challenge=Drug%20Resistance )

    புறக்கணிக்க பட்ட வெப்பமண்டல நோய்கள் – 40
    (http://grandchallenges.org/#/list?challenge=Neglected%20Tropical%20Diseases)

    தொற்று நோய்கள் – 126
    (http://grandchallenges.org/#/list?challenge=Infectious%20Diseases)

    இதை போல பல தரப்பட்ட பல பிரச்சனைகளுக்கு grants அளிக்கும் அமைப்பு, குடும்ப கட்டுபாட்டில் அளித்ததற்கும் என்ன ஆச்சர்யம்? உலக மக்களை கொன்று குவிப்பது தான் நோக்கம் என்றால் குடும்ப கட்டுபாட்டை விட பல மடங்கு grants அதே மக்களுக்கு நேரடியாக பயன்படும் மருத்துவ, சுகாதார, உணவு மற்றும் ஊட்டசத்து முயற்சிகளில் தரப்பட்டது ஏன்? இடிக்கிதே சார். கொஞ்சம் ஆதார பூர்வமாக விளக்க முடியுமா?

    பி.கு: இந்த natural news எனப்படும் தளம் குப்பை என நான் முன்பே கூறி இருந்தேன். ஏன் தெரியமா? இது பொய் செய்திகள், conspiracy theory, கட்டுக்கதை போன்றவற்றை பதிவு செய்து மக்களிடம் பயமுறுத்தி “இதில் இருந்து பாதுகாப்பு வேண்டுமா? எங்கள் இந்த தயாரிப்பை வாங்குங்கள்” என கூவி விற்கும் மோசடி இணையத்தளம். அவர்கள் தளத்தின் மேலே இருக்கும் Store என்னும் இணைப்பை சொடுக்கு பார்க்கவும். Health Ranger store எனப்படும் அவர்கள் கடைக்கு செல்லும். அதில் உள்ள தயாரிப்புகள், அவற்றின் கூற்றுகள் ஆகியவற்றை பார்க்கவும். கண்ணாடி இல்லாமல் பார்க்க இந்த pinhole glasses, கதிவீச்சில் இருந்து பாதுகாத்து கொள்ள மாத்திரைகள்,ஹிமாலய கல் உப்பு என கன ஜோராக வியாபாரம் பறக்கும். இப்படி பொய் புளுகி, மக்களை ஏமாற்றி லாபம் அடிக்கும் ஒரு snake oil salesman fraud சொன்னதை தான் உண்மை என நம்பி நீங்கலும், வினவும் எழுதி தள்ளி இருகிறீர்கள். மீண்டும் கூறுகிறேன். confirmation bias இல்லாமல் ஆதாரம் கொண்டு மட்டும் விசயங்களை பார்க்கவும். Source of a news is as important as the source itself.

    • [2] சிந்தனை செய் அவர்களே ,
     அடுத்த விஷயம் மைக்ரோசாப்ட் நிறுவனமும், merck மருத்துவ நிறுவனமும் ஒன்றுடன் ஒன்று வர்த்தக தொடர்புடையவை என்ற நிலையில் மனித மக்கள் தொகையை குறைகின்றேன் என்ற பெயரில் மனித குலத்தை அழிக்க இந்த eugenics vaccines களை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு உதாரணமாக பலவேறு செயல்களை மூன்றாம் உலக நாடுகளில் – ஏழை நாடுகளில் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்… இந்தியாவில் அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?

     பாத் (PATH) என்னும் தொண்டு நிறுவனம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியின் மூலம் இந்த கொடும் செயலை செய்து உள்ளது. இதில் மக்களின் மீது ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் GSK பர்மாவின் Cervarix என்ற மருந்தும், Merck நிறுவனத்தின் Gardasil மற்றும் Gardasil 9 ஆகிய மருந்துகள் ஆகும். இந்த மருந்துகளை Drugs Controller of India இந்தியாவில் அனுமதி (license) அளிப்பதற்கு முன்பே ICMR- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் PATH உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு (MoU) இந்திய மக்களுக்கு அதுவும் பழங்குடி மக்கள் மீது இந்த மருந்துகளை செலுத்தி சோதனை செய்து உள்ளது. 2009-10 ஆண்டுகளில் இந்தியாவில் Drugs Controller of India வால் அங்கிக்ரிக்கப்படாத இந்த மருந்துகளை இந்திய மக்களின் மீது செலுத்தி சோதிப்பது என்பது கிரிமினல் குற்றம் என்று தெரிந்தும் அன்றைய காங்கிரஸ் அரசு இந்த கொடும் செயலை செய்து உள்ளது. இந்த கொடும் செயலை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று இன்றைய பிஜேபி அரசும் கிரிமினல் குற்றத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தவிர்த்து வேறு ஏதாவது நிறுவனம் இத்தகைய வல்லாண்மை பெற்று உலக ஏழை நாடுகளை சிதைக்க முடியுமா?

     • உங்களின் இந்த கூற்று தான் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு. அதற்க்கு ஆதாரமாக நீங்கள் சொல்வது தான் கீழே உள்ளது.

      // மனித மக்கள் தொகையை குறைகின்றேன் என்ற பெயரில் மனித குலத்தை அழிக்க இந்த eugenics vaccines களை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு உதாரணமாக பலவேறு செயல்களை மூன்றாம் உலக நாடுகளில் – ஏழை நாடுகளில் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்… இந்தியாவில் அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா//

      நீங்கள் கூறிய உதாரணத்தை மட்டும் எடுத்து கொள்வோம். முதலில் இந்த தடுப்பு மருந்து புதிய மருந்து அல்ல. UK, USA, Australia, Germany, canada உள்ளிட்ட பல நாடுகளில் வழங்கப்படும் கட்டாய தடுப்பூசி தான். இதில் சில சமயம் ஆண்களும் அடக்கம். ஆனால் பெண்களுக்கு இந்த கிருமி Cervical கான்செர் உருவாக்கும் என்பதால் 9 முதல் 25 வயது உள்ள பெண்களுக்கு கட்டாயம் என பரிந்துரைக்க படுகிறது. இந்தியாவில் எல்லா மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி கிடைக்கும். என்ன அரசாங்கம் இலவசமாக போடும் திட்டத்தில் இது கிடையாது. அவ்வளவே. சரி அதனால் என்ன? அதான் அரசாங்கம் கட்டாயம் இல்லைன்னு சொல்லிடுச்சே, பின்ன ஏன் இத தரணும்? இந்தயாவில் மட்டும் ஆண்டுக்கு இந்த நோய்க்கு பலியாகும் எண்ணிக்கை 75,000. உலகில் இந்த நோய் பதிப்பில் இறப்பவரின் மூன்றில் ஒரு பங்கு இது. இது இறக்கும் தொகை மட்டுமே என்பதை நினைவில் கொள்க.

      பழங்குடி மக்கள் மீது சோதனை எல்லாம் இல்லை இது. முப்பதாயிரம் பெண்களுக்கு தரப்பட்ட இந்த தடுப்பூசி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இதை தரும் போது பின்பற்ற பட வேண்டிய முறைகள் சரியாக பின்பற்ற படவில்லை என்பதே. இதில் ஏழு பெண்கள் இறந்தன என்பதை இது போன்ற தடுப்பூசி எதிர்ப்பு அமைப்புகள் அவர்கள் இறப்புக்கு காரணம் இந்த தடுப்பூசி என்கிறது. இதை ஆய்வு செய்த microbiologist சொல்வது:

      Five were evidently unrelated to the vaccine: One girl drowned in a quarry; another died from a snake bite; two committed suicide by ingesting pesticides; and one died from complications of malaria. The causes of death for the other two girls were less certain: one possibly from pyrexia, or high fever, and a second from a suspected cerebral hemorrhage. Government investigators concluded that pyrexia was “very unlikely” to be related to the vaccine, and likewise they considered a link between stroke and the vaccine as “unlikely.” ICMR’s director general, microbiologist Vishwa Mohan Katoch, categorically rejects a connection: “Based on the enquiry, it is certain that causality of the seven deaths was not at all related to the HPV vaccine,” he insists. Other experts say that in the absence of autopsies, it is impossible to pinpoint the actual cause of death.

      இதையும் விடாமல் இந்த தடுப்பூசி போட்ட வலி தாங்காமல் தான் தற்கொலை செய்து கொண்டார்கள் என பகுற்றச்சாட்டு கூட்டம் இருக்கிறது. நீங்கள் கூறியது போல இது eugenics vaccine என்றால் எண்ணிக்கை உதைக்குதே சார். ஆண்டுக்கு நம்ம நாட்டில் 132,000 புதிய நோயாளிகள், அதில் 75,000 மரணம். கிட்ட தட்ட பாதி. உலக மக்கள் தொகையை கொல்லனும்னா எதுவுமே செய்யாமல் விட்டாலே போதுமே? ஒரு வேலை இந்த ஏழு இறப்புமே இந்த தடுப்பூசி காரணம் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. பாதிக்கு பாதி இறப்பு எங்கே, 0.023 சதவிகித இறப்பு எங்கே? கணக்கே தெரியாம மக்கள் இறப்பை குறைக்கும் வழியை வைத்து மக்கள் தொகையை குறைக்க முயல்கிறார். பாவம் அவர் அறிவு அவளோ தான்.

      நீங்க குடுத்த உதாரணத்தில் அதிக பட்சம் norms not followed என ஒத்துகொள்ள முடியுமே தவிர, மக்களை கொன்று குவிக்கும் திட்டம் என்றெல்லாம் கூற சுண்டைக்காய் அளவுக்கு கூட ஆதாரம் இல்லை. norms பின்பற்ற படவில்லை என நிரூபணம் ஆனால் தாராளமாக என்ன தண்டனை சரியோ அதை வழங்கலாம். ஆனால் ஏழு மரணத்துக்கும் காரணம் இந்த தடுப்பூசி எனும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஒதுக்கி வைக்கவும். இப்போதைக்கு அதற்க்கு ஆதாரம் ஒரு சிலரின் கூவல் மட்டுமே. அவர்கள் சொல்வது மட்டும் ஆதாரம் என போதும் என்றால் அப்புறம் அறிவியல், நீதிமன்றம், உண்மை அறியும் முறைகள் எல்லாம் எதற்கு? We can just go back to worshiping Zeus and conducting festivals for the Rain gods.

      Sources:

      http://www.sciencemag.org/news/2013/09/indian-parliament-comes-down-hard-cervical-cancer-trial

      https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3385284/

      • இங்கு நான் குறிப்பிட்டு உள்ள முக்கியமான விசயம் என்னவென்றால் Drugs Controller of India வால் அங்கிகரிக்கப்படாத நிலையிலேயே அந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது தான். மேலும் அந்த தடுப்பூசியை அன்றைய காங்கிரஸ் அரசு அனுமதிக்க அதனை இன்று நீதி மன்றத்தில் பிஜேபி அரசும் “தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை” என்று கூறி குற்றவாளிகளை விடுவித்து உள்ளது. அது எப்படி இறையாண்மை உள்ள இந்திய நாட்டில் அதன் Drugs Controller of India வின் அனுமதி இன்றி பில் பவுண்டேசன் அந்த தடுப்பூசிகளை ஆந்திராவிலும் , குஜராத்திலும் உள்ள பழங்குடி இன சிறுமிகள் மீது செலுத்துவது சாத்தியம் ஆயிற்று? இந்த கிரிமினல் குற்றத்தில் இருந்து அவர்கள் தப்புவதும் எப்படி சாத்தியம் ஆயிற்று?

        • தாராளமாக சார். முதலில் நீங்கள் சொல்லி இருப்பது:

         //Drugs Controller of India வால் அங்கிகரிக்கப்படாத நிலையிலேயே அந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது தான்.//

         இது தவறான தகவல். நடத்தப்பட்டது Phase 5 முயற்சி. Phase 3இல் மருந்து approval or rejection முடிந்து விடும். எனவே இது நீங்கள் கூறியது போல மக்களை சோதனை எலிகளாக எல்லாம் இல்லை. பிறகு, இந்த மருந்துகள் ஏற்கனவே அங்கீகரிக்க பட்டவை. தனியார் மருத்துவமனைகளில் கிடைத்து வந்தவை. ஆனால் காஸ்ட்லி. இந்தியாவில் அவற்றை தயாரிக்க அல்லது மார்க்கெட்டிங் செய்ய license 2008 வரை இல்லை. அவ்வளவே. Marketing or manufacturing licence வேறு, approval வேறு.இம்போர்ட் செய்து, distribute செய்யலாம். advertisment, மார்க்கெட்டிங் எதுவும் செய்ய கூடாது. அவ்வளவே.

         இந்த ஆய்வு எந்த முறை இந்த தடுப்பூசி தர சிறந்த முறை, இரண்டு டோஸ் போதுமா அல்லது மற்ற எல்லா நாடுகளில் உள்ளது போல மூன்று டோஸ் வேண்டுமா எனும் கேள்விகளுக்கே பதில் தேடியது. மருந்தகளை approve செய்யலாமா எனப்படும் ஆய்வுகள் இல்லை இவை. ஏற்கனவே அனுமதிக்க பட்ட மருந்துகள் பரவலாக சேர எது சிறந்த வழி என ஆராயும் முயற்சி.

         //The two HPV vaccination projects were approved by all required agencies. One is for
         operational feasibility of school-based and community-based vaccination, in Khammam district (Andhra Pradesh, Gardasil) and Vadodara (Gujarat, Cervarix), conducted by the State Governments in collaboration with Indian Council of Medical Research (ICMR) and PATH (a US based not-forprofit non-governmental organization). No biological outcome is measured; hence it is not a clinical trial. The second is a multi-centric clinical trial to
         investigate immunogenic efficacy of 2 doses (6 months apart) compared to conventional 3 doses (at 0-2-6 months) of Gardasil. If successful, it will lead to 33% cost-reduction. //

         எல்லா அரசாங்க நிறுவனங்கள், மற்றும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகே முயற்சி நடந்துள்ளது. இதை விசாரித்த பாராளுமன்ற நியமித்த மூவர் கமிட்டி கூட, இந்த இறப்புகளுக்கும், தடுபூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவே தெரிவிக்கிறது.

         //After reviewing all seven deaths (five deaths from AP in the Gardasil group and two deaths in Gujarat from Cervarix group), it has been observed that there is no common pattern to the deaths that would suggest they were caused by the vaccine. In cases where there was an autopsy, death certificate, or medical records, the cause of death could be explained by factors other than the vaccine. The background death rates among girls 10-14 years of age in both Barodara and Khammam districts did not show any increase rate. In fact in Badodara district the death rate has significantly decreased in 2009 compared to the past years //

         அவர்கள் இந்த study இரண்டே இரண்டு சிறு குறைகள் தவிர மற்றபடி மிக சிறப்பான ஆய்வு என தான் கூறுகின்றனர்.

         //Comments on study protocol:

         The study has been designed very well except for the following shortcomings:

         1. The primary end point of the study was to find out number of girls having serious and
         non serious adverse events following vaccination through routine UIP system. In this
         regard first of all routine system of reporting should have been verified in both the
         districts before designing the study. There is no dairy card based information record for
         assessing minor or major AEFI in the study protocol which seems unusual with such a
         large observational study.

         2. There should have been some mechanism of insurance cover for the treatment of the
         vaccinated girls irrespective of their illness for a designated period of time. PATH has
         mentioned that there is an insurance cover for the organization but none was done for
         the girls in the study group.//

         இந்த விசயத்தில் பல குறைகள் இருக்க தான் செய்கிறது. மறுக்க வில்லை. உதாரணமாக மேலே உள்ளது போல post study monitoring இல்லை, approval process கொஞ்சம் அவசர கதியில் தான் நடந்து உள்ளது, சுமார் 3000 பெண்கள் hostel warden அனுமதி மட்டுமே பெற பட்டு உள்ளது, பெற்றோரின் அனுமதி இல்லை. இவை எல்லாம் நடந்தவை தான். ஆனால் இது என்னமோ இந்திய மக்களை குறி வைத்து, அவர்களை சோதனை எலிகளாக, மேல் நாடுகளில் approve செய்ய படாத மருந்துகளை சோதனை செய்ய பயன்படுத்தியது போல பில்ட் அப் எல்லாம் வேண்டாம். மிஞ்சி மிஞ்சி போனால், negligence அண்ட் lack of following guidelines என தான் சொல்ல முடியும். இது கிரிமினல் குற்றம் எல்லாம் இல்லை.

         sources:

         http://icmr.nic.in/final/HPV%20PATH%20final%20report.pdf

         http://www.who.int/biologicals/Clinical_guidelines_27_January_2016.pdf

         https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3385284/

         http://www.indianpediatrics.net/aug2010/724.pdf

         https://en.wikipedia.org/wiki/HPV_vaccines

         http://www.thehindu.com/news/national/government-warns-path/article3817639.ece

         • இந்த மருந்துகள் Drugs Controller of India வால் அங்கிகரிகபடுவதக்கு முன்பே அந்த பெண் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது என்பதனை என்னுடைய குற்றசாட்டாக வைத்து உள்ளேன்… manufacturing licence மற்றும் approval இரண்டையுமே அவர்கள் Drugs Controller of India விடம் இருந்து இந்த தடுப்பூசிக்கு அன்று பெற்று இருக்கவில்லை.. என்பது தான் பிரதான குற்றசாட்டு. அடுத்ததாக இந்த பெண் குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய உரிய அனுமதியையும் அவர்கள் பெறவில்லை என்பது அடுத்த குற்ற சாட்டு….

        • உங்கள் கேள்விக்கு அமைதி காக்காமல், மழுப்பாமல் ஆதாரங்கள், அரசாங்க அறிக்கை, ஆய்வு கட்டுரைகள் கொண்டு பதில் அளிதாகி விட்டது. நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எப்போதோ? நீங்கள் கேள்வி கேட்க, நான் பதில் சொல்ல, நீங்கள் மீண்டும் moving the goal எனவே போய் கொண்டு இருக்கிறதே சார்.

      • @ சிந்தனை செய்
       //ஒரு வேளை இந்த ஏழு இறப்புமே இந்த தடுப்பூசி காரணம் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. பாதிக்கு பாதி இறப்பு எங்கே, 0.023 சதவிகித இறப்பு எங்கே?////இப்போதைக்கு அதற்க்கு ஆதாரம் ஒரு சிலரின் கூவல் மட்டுமே. அவர்கள் சொல்வது மட்டும் ஆதாரம் என போதும் என்றால் அப்புறம் அறிவியல், நீதிமன்றம், உண்மை அறியும் முறைகள் எல்லாம் எதற்கு? We can just go back to worshiping Zeus and conducting festivals for the Rain gods.// இது போன்றதொரு ஸ்டேட்மெண்ட்டுக்கு ஒரு சான்று . ஐஐடியில் 2012-இல் ஆதிக்க சாதி பேராசிரியர்களின் சித்திரவதை தாங்காமல் தொடர்ச்சியாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அது பெரிய போராட்டத்திற்கு இட்டு சென்ற போது, அன்றைய டீன் “3 out of 5000 is numerically negligible” என்று கூறினார். இது போன்ற தங்கள் கருத்துக்கள் மக்களின் உயிரை நீங்கள் கிள்ளுக்கீரை அளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கான உதாரணங்கள். நீங்கள் ஒரு அறிவியலாளரா? எது அறிவியல்? எது நீதி? சட்டங்கள் கொள்கைகள் யாருக்கானவை? எதெற்கெடுத்தாலும் அறிவியல்தளங்களையே சைட் செய்யும் உங்களுக்கு ஆராய்ச்சி என்றால் என்னவென்று தெரியுமா? அதை நடத்த வேண்டுமென்றால் எவென்வன் காலில் விழ வேண்டுமென்று தெரியுமா?

       உலகம் முழுவதும் நடக்கும் உயிர்தொழிற்நுட்ப ஆய்வுகளில் 95% வீதத்திற்கு மேல் நிதியுதவி அளிப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமெ தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த ஆய்வுகள் யாருக்கான்வை என்ரு தெரியுமா? இந்த ஆய்வுகளின் அறிவுசார் சொத்துடமைக்கு என்ன நேர்கிறது என்று தெரியுமா? நிதி மூலதனத்தை விட அதிகமான இலாபம் கொழிக்கும் துறையாக அறிவுசார் சொத்துடமை மாறியுள்ள நிலையில் அறிவை ‘அறிவுப் பொருளாதாரம்’ (knowledge economy) என்றும் மனிதனை ‘மனித மூலதனம்’ (human capital) எனவும் reduce செய்யும் குரூரமான இலாபவெறியர்களுக்கு சொம்படிக்கும் நீங்கள், இவர்களுக்கு ஆதரவாக எந்த வித அறிவியல் கண்ணோட்டமோ, மனிதநேயமோ இன்றி இம்மானுட விரோத கும்பலின் குற்றங்களை மறைப்பதற்காகவே அவர்களால் நடத்தப்படும் ஜேனல்களின் அவர்களின் பிரதிநிதிகளால் எழுதப்பட்ட்ட கட்டுரைகளை மட்டும் உதவியாக வைத்து அதையே அறிவியல் என்று வாதிடும் உங்களிடம் என்ன விதமான மனசாட்சி அல்லது உளவியல் செயல்படுகிறது என்பதை விளக்க முடியுமா?

       ‘எனக்கு சமூகம் முக்கியமில்லை; அறிவியல் என்று கூறி எதைக் கழிந்து வைத்தாலும் அதை எல்லாம் அமிர்தமென்பேன்; அதை இயக்கும் மானுட விரோத சக்திகளை விமர்சிக்காமல் விமர்சிப்பவர்களைப் பார்த்து போலி அறிவியல்வாதி எனக்குற்றம் சாட்டுவது மட்டும் தான் எனது வரம்புக்குட்பட்டது என்றால்’, உங்களைப் போன்றவர்களிடம் வெறும் லிங்கை மட்டும் வைத்துப் பேசினால் விளங்காது. ஏனென்றால் நீங்கள் ஞயாயப்படுத்த வேண்டும் என்று முடிவு பண்ணிக் கொண்டு விவாதத்துக்கு வருகிறீர்களே தவிர, ஞயாயம் எது என்ற தேடலிலிருந்து விவாதிக்க வரவில்லை. பார்ப்பான் கூட பார்ப்பனியத்தை ஞாயப்படுத்த சாதி அமைப்பு முறையை ஞாயப்படுத்த ஆதாரங்களை வைத்துள்ளான். உடனே அந்த ஆதாரத்தை வைத்து பார்ப்பனியத்தை, சாதிய அமைப்பு முறையை சரி என வாதிடுவீர்களோ?

       கட்டுரையில் தெளிவாகவே icmr, dcii மற்றும் கவி வாக்சின் அலையன்ஸ் போன்றவர்களின் போர்குற்றங்களுக்கு இணையான குற்றங்களை அம்பலப்படுத்தியும் அதற்கான ஆதாரங்களை பாராளுமன்றக் கமிற்றி வெளியிட்டும் கூட, ’பாதிக்கு பாதி செத்தார்களா என்ன? 0.023 சதவிகித இறப்பு எங்கே?’ எனக் கேட்டு அதற்கு கூட்டுக் குற்றவாளிகளான ஐசிஎம்ஆர் அறிக்கையையே ஆதாரமாகக் கொடுக்கும் உங்களின் ஆய்வு நேர்மை புல்லரிக்க வைக்கிறது. அறிவியலை வெறும் கடவுள் நம்பிக்கையைப் போல தரம்குறைக்கும் உங்களுக்கு medical ethics என்று ஒன்றுள்ளது பற்றி குறைந்த பட்ச அறிவாவது உண்டா? ethical clearance certificate ஐ ஆய் துடைப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் ஆய்வாளர்கள், இவர்களின் புரவலர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், பத்திரிகைகள், அறிவுஜீவிகள் போன்ற எண்ணிலடங்கா மானுட விரோத சக்திகளின் வலைபின்னல் தான் இன்றைய ஆய்வுலகம் என்பது ஒரு பாமரனுக்குக் கூட விளங்கும் போது, அரைகுறையாக விஷயங்களைப் புரிந்து கொண்டு அறிவியலை வெறும் கடவுளாக்கி வழிபடும் உங்களைப் பார்க்க உண்மையிலேயே சற்றுப் பரிதாபமாகக் கூட இருக்கிறது. நான்காவது தொழிற்புரட்சியின் நாயகர்கள் தயாரித்து வைத்திருக்கும் டிஸ்டோபியாவில் சைக்கிள் மிதிக்கும் வேலை உங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

    • [1]சிந்தனை செய் அவர்களே !, மைக்ரோசாப்ட் நிறுவனம் Rosetta Biosoftware என்ற மென்பொருளை தனது Microsoft Amalga Life Sciences platform உடன் இணைக்கும் போது அது பெரும் புதிய அம்சங்களை அழகாக நீங்கள் வினவு வாசகர்களிடம் இருந்து மறைக்கும் மர்மம் என்ன ? மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறும் வாக்குமூலம் என்ன சொல்கிறது என்று அவர்கள் வார்த்தைகளிலேயே பார்க்கலாமா?

     மரபணு, ஜீனோமெடிக், metabolomic மற்றும் proteomics தகவல்களை இந்த Rosetta Biosoftware மென்பொருள் மூலம் நிர்வகிக்கும் திறமையை மைக்ரோசாப்ட் பெறுவார்கள் என்பதாகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்திகளே அந்த மென்பொருள் மூலம் மனித மரபணுக்கள் உடன் இந்த மென்பொருள் உறவாட முடியும் என்ற நிலையில் அதனை நீங்கள் சாதாரண hospital management system அளவுக்கு சிறுமை படுத்தி பேசுவது ஏன்?

     Microsoft Corp. on June 1, 2009 announced that it has signed an agreement with Merck & Co. Inc. to acquire certain assets of Rosetta Biosoftware, a business unit of Rosetta Inpharmatics LLC, a wholly owned subsidiary of Merck & Co. Inc. The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics data management software into the Microsoft Amalga Life Sciences platform for enhanced translational research capabilities. In addition, Microsoft will establish a strategic relationship with Merck to enhance the Amalga Life Sciences platform to meet emerging pharmaceutical research needs.

     //அடடா. சரி போகட்டும். அவர் வேண்டியதை செய்திருப்பார். எனவே அதை விற்று விட்டார் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோமே. மருத்துவ பதிவேடுகள் கையாளும் மென்பொருள் நீங்கள் கூறியது போல எவ்வாறு eugenics மருந்துகளை உருவாக்க வல்லது என விளக்க முடியுமா திரு.செந்தில்குமரன்?//

     • திரு. செந்தில்குமரன்,

      எந்த செய்தியையும் நான் மறைக்கவில்லை. நீங்கள் தான் முதலில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தர வேண்டும்.

      genomic, metabolic and proteomics data management incorporation செய்ய முடியும் என்று தான் கூறப்பட்டு உள்ளது. gene எடிட்டிங், metabolism changes என்றெல்லாம் எங்கும் இல்லை. CT ஸ்கேன், ரத்த சோதனை, எக்ஸ் ரே, MRI போன்ற பரிசோதனை ரிப்போர்ட் போல, இந்த மாதிரி சோதனை அறிக்கைகளும் இப்போது இந்த மென்பொருளால் கையாள முடியும் என்பது தானே இங்கு புரிகிறது?

      இந்த மென்பொருளை வாங்கி இணைத்த உடன் எப்படி ஒரு record keeping software, நீங்கள் கூறும் எல்லாதையும் செய்யும் திறன் பெற்று விட்டது என்று முதலில் நீங்கள் ஆதாரம் கொண்டு நிரூபிக்கவும். அதற்கு பிறகு அடுத்த படிக்கு செல்வோம்.

      • சிந்தனை செய் அவர்களே, மீண்டும் பாதி உண்மையை உங்களின் புத்திசாலி தனத்தை கொண்டு மறைத்துவிட்டு உங்கள் அறிவை மைக்ரோசாப்ட்க்கு குத்தகைக்கு கொடுத்து உள்ளீர்கள்! தங்களின் மேலான கவனத்திற்கு….. “data management software” என்றாலே அதில் gene எடிட்டிங், metabolism changes ஆகியவைகளும் உள்ளடக்கம் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்… மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தியை மீண்டும் கவனத்துடன் படியுங்கள் நண்பரே….

       // The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics “data management software’’ into the Microsoft Amalga Life Sciences platform//

       மீண்டும் அந்த மென்பொருளை hospital management software அளவுக்கு சிறுமை படுத்தியுள்ளீர்கள்!

    • [3] சிந்தனை செய் அவர்களே ,

     உலக மக்கள் தொகையை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரையில் குறைக்க முடியும் என்று கூறும் பில் கேட்ஸ் அவர்களை நீங்கள் தான் ஆதரிகிண்றீர்கள்! 700 கோடி மக்கள் தொகையை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரையில் குறைக்க வேண்டும் என்றால் 70 முதல் 105 கோடிகள் வரையில் குறைக்கவேண்டும்? அது எப்படி new vaccines, health care, reproductive health services மூலம் சாத்தியமாகும் என்று விளக்குங்கள்…! குறிப்பாக new vaccines மூலம் அது எப்படி சாத்தியம் ஆகும் என்று விளக்குங்கள்…

     இன்றைய நிலையில் உலகின் பிறப்பு இறப்பு விகிதம் என்னவென்றால்….
     Birth Rate : 131.4 million births per year
     Death Rate: 55.13 million people death per year

     உலக மக்கள் தொகையை உங்கள் பில் கேட்ஸ் கூறுவது போன்று குறைக்கவேண்டும் என்றால் என்ன செய்யப்போகின்றீர்கள்! ? மக்களை கொன்று இறப்பு விகிதத்தை அதிகரிக்கப்போகின்றீர்களா? அல்லது ஏழை நாடுகளில் மக்களை உங்கள் தடுப்பூசி மருந்துகள் மூலம் மக்களை நிரந்தர மலடாகப் போகின்றீர்களா? அதன் மூலம் பிறப்பு விகிதத்தை குறைக்கபோகின்றீர்களா? எப்படி என்று விளக்கலாமே நீங்கள் ! இறப்பை விட பிறப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது… என்ற நிலையில் 70 முதல் 105 கோடி மக்களை (10% to 15%) உலகில் இருந்து நீக்க உங்கள் பில் கேட்ஸ் என்ன திட்டங்களை வைத்து உள்ளார் என்று விளக்குங்கள் !

     • [5] சிந்தனை செய் அவர்களே ,

      உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் எல்லாம்(குடும்ப கட்டுபாடு திட்டத்தை தவிர்த்து) மக்கள் தொகையை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர பில் கேட்ஸ் கூறுவது போன்று மக்கள் தொகையை 15% அளவுக்கு குறைக்க எப்படி முடியும்? குடும்ப கட்டுபாடு திட்டம் கூட மக்கள் தொகையை குறைக்காது…, ஆனால் மக்கள் தொகை பொருக்கத்தை கட்டுக்குள் தான் வைத்து இருக்கும்! உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் மற்றும் தடுப்பூசிகள் மக்கள் இறப்பு விகிதத்தை குறைக்க தானே செய்யும்? அப்படி எனில் மக்கள் தொகை அதிகரிக்க தானே செய்யும்? ஆனால் இவற்றின் மூலம் மக்கள் தொகையை குறைக்க முடியும் என்று பில் கேட்ஸ் கூறுவதின் கொலை வெறி( தொழில் நுட்ப ) உள்நோக்கத்தை நான் விளக்கியுள்ளேன். அதனை நீங்கள் ஏற்காவிட்டால் பில் அவர்களின் உள்நோக்கம் தான் என்ன?

      • Sources தர மறந்து விட்டேன். அவை இங்கே:

       https://web.archive.org/web/20091221114019/http://www.searo.who.int/LinkFiles/Family_Planning_Fact_Sheets_india.pdf

       https://scholarspace.manoa.hawaii.edu/bitstream/10125/3471/1/NFHSsubjrpt002.pdf

       http://serendip.brynmawr.edu/local/scisoc/environment/seniorsem03/Overpopulation_in_India.pdf

       From Population Control to Reproductive Health: Malthusian Arithmetic by Mohan Rao. Published by Sage Publications. இந்த நூலில் ராவ் மார்சிய கண்ண்நோடத்தில் இந்தியாவின் குடும்ப கட்டுப்பாடு முயற்சி பற்றி பார்க்கிறார். அதில் இருந்து ஒரு வாகியம் மட்டும்: “Issues of health have not received the central attention they ought to have. Not only has the health of the population not been of central concern, but also the vision of health has been severely diminished by a sort of technological hubris. The result is that the entire public health
       infrastructure, neglected, starved of funds, almost dysfunctional, has been suborned for family planning” (p 14-15)

       அதாவது குடும்ப கட்டுப்பாடு மட்டும் போதாது, உடல் நலம் பற்றிய நோக்கமும் வேண்டும் என்கிறார். இது பெரும்பாலும் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும்,acedemic circle களில் படிக்க வேண்டிய ஒரு நூல் என பரிந்துரைக்கபட்டு உள்ளது.

       • சிந்தனை செய் அவர்களே, என்னுடைய கேள்வி என்ன? ஆனால் நீங்கள் எதனை பற்றி பேசிக்கொண்டு உள்ளீர்கள்? மீண்டும் யோசித்து பதில் அளியுங்கள்….. உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் எல்லாம்(குடும்ப கட்டுபாடு திட்டத்தை தவிர்த்து) மக்கள் தொகையை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர பில் கேட்ஸ் கூறுவது போன்று மக்கள் தொகையை 15% அளவுக்கு குறைக்க எப்படி முடியும்? குடும்ப கட்டுபாடு திட்டம் கூட மக்கள் தொகையை குறைக்காது…, ஆனால் மக்கள் தொகை பொருக்கத்தை கட்டுக்குள் தான் வைத்து இருக்கும்! உண்மையில் மக்கள் நல சுகாதார திட்டங்கள் மற்றும் தடுப்பூசிகள் மக்கள் இறப்பு விகிதத்தை குறைக்க தானே செய்யும்? அப்படி எனில் மக்கள் தொகை அதிகரிக்க தானே செய்யும்?

        • //குடும்ப கட்டுபாடு திட்டம் கூட மக்கள் தொகையை குறைக்காது…, //

         என்ன ஒரு கண்டுபிடிப்பு!!! தற்போதய மக்கள் தொகையை குறைக்காது. சரி தான். பிறப்பு விகிதத்தை குறைப்பது தானே இங்க நோக்கமே. முதலில் பில் கேட்ஸ் மக்கள் தொகையை 15% குறைக்க வேண்டும் என்று கூறுகிறார் என்னும் பிதற்றலை நிறுத்தவும். மீண்டும் வேண்டுமானால் quote செய்கிறேன்:

         //The world today has 6.8 billion people. That’s heading up to about nine billion. Now if we do a really great job on new vaccines, health care, reproductive health services, we could lower that by perhaps 10 or 15 percent.//

         அதாவது ஆறு புள்ளி ஐந்து பில்லியன் என்பது ஒன்பது பில்லியன் என ஆக போகும் கணக்கில், உள்ள 2.2 பில்லியன் எண்ணிகையில் 15% குறைக்க முடியும் என்கிறார். பெருக இருக்கும் மக்கள் தொகையை தான் குறைக்க முடியும் என்று சொல்கிறாரே தவிர இருக்கும் மக்கள் தொகையை அல்ல. தயவு செய்து இந்த misinterpretation செய்வதை நிறுத்தவும். என்னை தான் நம்ப வேண்டும் என்பது இல்லை. ஆங்கிலம் தெரிந்த எவரிடமும் இதற்க்கு அர்த்தம் என்ன நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

         • உங்களிடம் தனிபட்ட விதத்தில் பில் கேட்ஸ் அவர்கள் 9-6.2= 2.2 பில்லியனில் (220 கோடிகளில்) பத்து முதல் பதினைந்து சதவிதம் மக்கள் தொகையை குறைக்கமுடியும் என்று கூறினார் என்றால் எனக்கு மகிழ்ச்சி தான்!

          ஆனால் பாருங்கள் 2.2 பில்லியன் என்று எங்கே அந்த TED conferenceல் கூறினார் என்று விளக்கவும்…

          • பக்கத்துல விவேகானந்தா எதாவது இருந்தா போய் அர்த்தம் கேட்டுட்டு வாங்க. உங்களுக்கு வசதியா வாக்கியம் மேலயே இருக்கு.

           இன்னும் இல்லாவிட்டால் grammar பாடம் தருகிறேன். ஒரு வாக்கியத்தை subject எது என்பதை முதலில் பார்க்கவும்.

           We had three people in our group. We added two more. One of them is John.

           இதில் ஜான் இரண்டாவதாக வந்த இருவரில் ஒருவர் என்பது தெளிவாக தெரிகிறது. இதே தான் பில் கேட்ஸ் சொன்ன வாக்கியமும். நீங்கள் எதிர்பார்க்கும் அர்த்தம் வர வேண்டும் என்றால் வேறு மாதிரி சொல்லி இருக்க வேண்டும்.

           E.G:

           The world today has 6.8 billion people. Thats heading upto 9 billion. Now if we do a great job, we can reduce the original population by 15%.

           முதலில் கூறி உள்ள எண்ணிகையை பற்றி பேச போகிறேன் என்னும் போது subject திரும்பவும் மாற வேண்டும். ஏனென்றால் heading upto 9 billion என்ன சொன்ன போது, subject of his speech மாறி விட்டது. அந்த ஏறும் எண்ணிக்கை தான் அடுத்த வாக்கியத்தின் subject. இதை தனியாக விளக்க வேண்டியது எல்லாம் இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு போதுமானது.

          • விவேகானதாவில் சரியாக படியுங்கள் சிந்தனை செய் சாமி! We added two more! க்கும் Thats heading upto 9 billion. என்பதுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது என்பதாவது புரிகின்றதா? முடிந்தால் பில் அவர்களின் வாக்கியத்தை அப்பிடியே நேரடியாக மொழி பெயர்க்க முயற்சிக்கவும்….உங்களிடம் அவர் தனிபட்ட முறையில் கூறியதனை தவிர்த்து அவர் பொதுவாக அனைவரிடமும் கூறும் விசயத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துகொள்ளவும்!

           “”இன்று உலகம் 6.8 பில்லியன் மக்களை கொண்டு உள்ளது. அது 9 பில்லியன் அளவுக்கு செல்லக்கூடும். இப்போது நாம் புதிய தடுப்பு மருந்து, சுகாதார, இனப்பெருக்க சுகாதார சேவைகள் மீது ஒரு நல்ல வேலை செய்தால், நாம் ஒருவேளை 10 அல்லது 15 சதவீதம் அதனை குறைக்க முடியும்.””” இது தான் அவர் கூறிய விஷயம்….

           இதில் எங்கு 2.2 பில்லியனில் பத்து முதல் பதினைந்து சதவிதம் என்று அவர் கூறுகின்றார் அறிவு முற்றிய நண்பரே?

     • //உலக மக்கள் தொகையை உங்கள் பில் கேட்ஸ் கூறுவது போன்று குறைக்கவேண்டும் என்றால் என்ன செய்யப்போகின்றீர்கள்! ? //

      முதலில் உங்கள் பிதற்றல்களை நிறுத்துங்கள். எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு என்று கிடையாது. மக்கள் தொகை பெருக நிறைய காரணங்கள் உண்டு. சரியான மருத்துவ வசதி இல்லாததால் குழந்தைகள் நலமாக இருக்குமா என தெரியாததால், வறுமை குறைய வேலைக்கு போக வேண்டும், ஆண் வாரிசு வேண்டும் என பல காரணங்களால் பல குழந்தைகள் பெறுவது எங்கும் நடப்பதே. இந்தியாவின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை கொஞ்சம் புரட்டி பார்க்கவும். நாம் இருவர், நமக்கு இருவர் என்பதை மட்டுமே சொல்ல வில்லை. பெண்கள் நாட்டின் கண்கள், எனவும் தானே வந்தது? பெரியாரும் இதை தானே ஆதரித்தார்? அவர் என்ன குடும்ப கட்டுப்பாடு மட்டும் போதும் என சொன்னாரா? இல்லை பெண் கல்வி முக்கியம், அவசியம் என சொன்னாரா? குடும்ப கட்டுப்பாடு முதல் படி. பிறகு பெண்களுக்கு சுய சார்பு, கல்வியறிவு போன்றவை அத்துடன் தேவை. இது எல்லாம் இருந்தாலும் பிறக்கும் குழந்தைக்கு எப்போது, என்ன ஆகும் எனும் அச்சம் இருந்து கொண்டே இருந்தால் பிறப்பு விகிதம் ஏறிக்கொண்டே தான் போகும்.

      நம் நாட்டில் கிட்ட தட்ட அனைத்து பெண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு பற்றி தெரியும். ஆனால் தங்களுக்கு வேண்டிய வழிமுறைகள் கிடைக்காமல் சுமார் 76% பெண்கள் உள்ளனர். இது கிடைக்க வேண்டும். ஆனால் இன்றும் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு, அறுவை சிகிச்சை இல்லாமல் வேண்டும் என்றால் morning after pill தான். வேறு ஏதும் இல்லை. எனவே எளிய, எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியும், non-invasive குடும்ப கட்டுப்பாடு முறைகள் அவசியம்.

      சரி இதில் தடுப்பூசி, மருத்துவ சேவைக்கு என்ன வேலை? ஏதோ nefarious intent என்று நீங்கள் கூறலாம். முதலில் இரு வேறு சம்பந்தமில்லாத நோக்கத்துக்கு ஒரே pipeline பயன்படுத்தலாம். எளிதாக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். என்ன தான் நாம குடும்ப கட்டுப்பாடு அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தாலும், அதை எப்படி உபயோகிப்பது, ஏன் உபயோகிக்க வேண்டும், ஏன் இரண்டு குழந்தையுடன் நிறுத்து கொள்வது நல்லது, வறுமையில் இருக்கும் மக்களுக்கு எப்படி வருமானம் பெறுவது, அவர்கள் வாழ்கை தரத்தை உயர்த்துவது, குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசாய தேவைகள் கிடைக்க செய்வது, தடுக்க கூடிய நோய்கள் மூலமாக அடுத்த தலைமுறை பாதிப்பு அடையாமல் இருப்பது, போன்ற அனைத்தும் செய்ய வேண்டும். இந்தியாவில் இதுவரை இருந்த முறை vertical approach. அதாவது குடும்ப கட்டுப்பாடு பற்றி மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது. இந்த முறை முதல் கட்டத்துக்கு ஒத்துவரும். ஆனால் நீண்ட கால தீர்வு அல்ல. பல காரணங்களால் பல குழந்தைகள் பெற்று கொள்வார்கள் என்றால், அதற்க்கு பல முகப்பட்ட தீர்வு தேவை.

      Population control எனும் வழிமுறை ஒத்து வராது. Reproductive health மீது focus வேண்டும். இது வரை எண்ணிக்கை குறைத்தல் மீது நம் குடும்ப கட்டுப்பாடு முறை அக்கறை செலுத்தி வந்தது. இப்போது இந்த குறைந்த எண்ணிகையை, சிறந்த மக்களை உருவாக்குவதில் முயற்சி வேண்டும். அதவாது நாம் பிறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் குறைத்தாலும், நோய்கள் மூலம் பாதிப்பு, அதிக குழந்தை இருந்தால் குடும்பத்துக்கு நல்லது, குழந்தை தொழிலாளர், பெண் கல்வி போன்றவை இல்லாமல் ஜனத்தொகை குறையாது. இதில் மருத்துவ நலம் எவ்வளவு முக்கியம் என நான் விளக்க வேண்டியது இல்லை. எனவே தடுக்க கூடிய நோய்களுக்கு தடுப்பூசி இருக்கும் போது அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறை இன்னும் சிறப்பாக இருக்கும். We can reduce the number of children being born. But we need to focus on improving the quality of their life too. போலியோ, அம்மை, மலேரியா, காலரா மற்றும் தொற்று நோய்கள் மூலம் இறந்த குழந்தைகள் விகிதம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அதில் தடுப்பூசி பங்கு எவ்வளவு முக்கியம் என்பது உலகம் அறிந்த விஷயம். என் அப்பா, தாத்தா தலைமுறையில் போலியோ தொற்று சாதாரணம். இன்று போலியோ இந்தியாவில் ஒழிக்க பட்டு விட்டது. எந்த குழந்தையும் காலம் முழுக்க கால் சூம்பி, பாதி உடல் பாதித்து இருக்க வேண்டியது இல்லை. இதற்க்கு தான் தடுப்பூசிகள் தேவை. Quality of life முன்னேற்றுவதில் அவற்றுக்கு பெரும் பங்கு உண்டு.

      • சிந்தனை செய் அவர்களே, ஆமாம் இந்த வினவு கட்டுரையோ அல்லது நானோ தடுப்பூசிகளை முற்றிலுமாக புறகணித்து குறை கூறியதாக ஏன் நினைகிண்றீகள்? அங்கே அப்படி பட்ட செய்திகள் வந்து உள்ளன…? பிசச்ச்னைக்குரிய தடுப்பூசிகளை தானே ஆதாரதுடன் அம்பல படுத்தி யுள்ளோம்! குறிப்பாக பில் பவுண்டேசன் மற்றும் merck நிறுவன வர்த்தக நலன்களுடன் வெளிவந்து உள்ள தடுப்பூசிகளை தானே ஆதாரதுடன் அம்பல படுத்தி யுள்ளோம்!

       உங்களின் நீண்டநெடிய விளக்கத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பயன் படும் என்ற சங்கதியும் , குழந்தைகளின் இறப்பை தடுக்க தடுப்பூசிகளும் பயன்படும் என்ற விஷயம் தான்முன் நிற்கின்றதே தவிர பில் கேட்சின் வாக்குமுலம் படி மக்கள் தொகையை எப்படி 70 கோடி முதல் 105 கோடி குறைக்க போகின்றீர்கள் என்ற விசயத்துக்கு எந்த விளக்கமும் இல்லை….

       • நீங்க ஒரு ஆணியும் புடுங்கல. உண்மையை திரித்து கன ஜோராக clickbait எழுதுகிறீர்கள். அவ்வளவு தான். உங்க முதல் accusationகு நான் கேட்ட கேள்வியே பதில் இல்லாம நிக்குது. இதுல என்னத்த நிரூபிசீங்க?

        மீண்டும் வேண்டுமானால் கேட்கிறேன். ஒரு record keeping மென்பொருள், மற்ற அனைத்து மருத்துவ அறிக்கையை போல genomics data கையாளும் வசதி பெற வேறு ஒரு நிறுவனத்தின் மென்பொருளின் சில பகுதிகள் வாங்கி இணைக்க பட்டன. அதனால் அது எப்படி eugenics vaccine உருவாக்கும் திறன் பெற்றது? குறைந்த பட்சம் அந்த மென்பொருளால் இதை செய்ய முடியும் என்பதற்கு ஒரு வீடியோ டெமோ அல்லது screenshot இருக்கிறதா? இல்லாவிட்டால் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எப்படி அதை உண்மை என கூறுகிறீர்கள்?

        • இதற்கான பதிலை தான் முன்பே கூறியுள்ளேனே! படிக்கவில்லையா? சிந்தனை செய் அவர்களே, மீண்டும் பாதி உண்மையை உங்களின் புத்திசாலி தனத்தை கொண்டு மறைத்துவிட்டு உங்கள் அறிவை மைக்ரோசாப்ட்க்கு குத்தகைக்கு கொடுத்து உள்ளீர்கள்! தங்களின் மேலான கவனத்திற்கு….. “data management software” என்றாலே அதில் gene எடிட்டிங், metabolism changes ஆகியவைகளும் உள்ளடக்கம் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்… மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தியை மீண்டும் கவனத்துடன் படியுங்கள் நண்பரே….

         // The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics “data management software’’ into the Microsoft Amalga Life Sciences platform//

         மீண்டும் அந்த மென்பொருளை hospital management software அளவுக்கு சிறுமை படுத்தியுள்ளீர்கள்!

         • அய்யா அறிவு ஜீவி,

          //data management software” என்றாலே அதில் gene எடிட்டிங், metabolism changes ஆகியவைகளும் உள்ளடக்கம் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்//

          மென்பொருள் பற்றி தெரியா விட்டால் பேசாமல் இருந்து விடுங்கள். Data management software என்பது பல தர பட்ட dataவை ஒரு இடத்தில (database, cloud, etc.) வைத்து, பின்பு அதை வேண்டும் போது காட்ட வல்லது. அவ்வளோ தான். திரும்பவும் என்னை நம்ப வேண்டாம், இணையதிலயே பாருங்கள். இல்லாவிட்டால் data management செய்யும் யாரையாவது கேளுங்கள்.

          //Data management software (DMS) is software that takes in data and converts various kinds of data into a single storage container, or aggregates diverse data into a consistent resource, such as a database. //

          உதாரணமாக ஒரு excel ஷீட் அல்லது database, வினவுக்கு ஒரு நாளைக்கு எந்த தேசத்தில் இருந்து எவ்வளவு ஹிட்ஸ் வருகிறது எனும் data வைத்து கொள்ள முடியும். அந்த மென்பொருள் ஒரு தேசத்தில் இருந்து அதிக ஹிட் வரும் படி எல்லாம் செய்ய முடியாது. அதே போல தான் ஒரு மெடிக்கல் data management மென்பொருளும். உதாரணமாக ஒரு கால் x-ray சேமித்து வைத்து, தேவை படும்போது டிஸ்ப்ளே செய்ய முடியுமே தவிர அதை கொண்டு புது கால் எல்லாம் அந்த மென்பொருளால் உருவாக்க முடியாது.

          திரும்பவும் கேட்கிறேன். நீங்கள் கூறியது எல்லாம் அந்த மென்பொருளால் செய்ய முடியும் என நிரூபிக்கவும். ஒரு காணொளி, demo அல்லது screenshot ஒண்ணு கூட இல்லை. data management மென்பொருள் என்னமோ எல்லாம் வல்ல சக்தி கொண்டது மாதிரி பேசினால் மட்டும் அதற்க்கு அந்த சக்தி வந்து விடாது.

          அப்புறம், நான் ஒண்ணும் சிறுமை படுத்தி எல்லாம் பேசவில்லை. அந்த மென்பொருளை பற்றி குறைந்த பட்சம் விக்கிபீடியா பக்கத்தை பார்த்து இருந்தாலே இது தெரிந்து இருக்கும்.

          //Microsoft Amalga Unified Intelligence System (formerly known as Azyxxi) was a unified health enterprise platform designed to retrieve and display patient information from many sources, including scanned documents, electrocardiograms, X-rays, MRI scans and other medical imaging procedures, lab results, dictated reports of surgery, as well as patient demographics and contact information//

          இது hospital management software தான் சார். இன்னும் சொல்ல போனால் இது patient record management software. நீங்க தான் இல்லாததை கற்பனை பண்ணி குழப்பிகறீங்க.

          sources:

          https://en.wikipedia.org/wiki/Microsoft_Amalga

          https://www.techopedia.com/definition/11363/data-management-software-dms

          • ஐயா அறிவு முற்றிய ஜீவியே…, ஆற அமர உங்கள் ஆசனத்தில் அமர்ந்து சிந்தியுங்கள்! எந்த Data management software ஆக இருந்தாலும் அதில் விவரங்களை மாறுதல்edit ,அழித்தல்delete ஆகிய வசதிகள் இல்லாமல் இருக்காது என்பதனை நினைவில் கொள்ளவும்… சும்மா வினவின் இணைய தகவல் கிடங்கை (வெப்சர்வர்ஸ்பெஸ்) உங்கள் கிறுக்கல்கள் மூலமாக குப்பையாக மாற்ற முனையாதிர்கள்….ஒருவேலை இது நீங்கள் கூறுவது போன்று hospital management software ஆக இருந்தாலும் கூட அதில் விவரங்களை மாறுதல்edit ,அழித்தல்delete ஆகிய வசதிகள் இல்லாமல் இருக்காது என்பதனை நினைவில் கொள்ளவும்… ஆனால் அது அப்படி பட்ட எளிய மென்பொருள் அல்ல என்பது மைக்ரோசாப்ட் நியூஸ் முலம் புலனாகின்றது…
           // The deal allows Microsoft to incorporate genetic, genomic, metabolomic and proteomics “data management software’’ into the Microsoft Amalga Life Sciences platform//

    • [4] சிந்தனை செய் அவர்களே, உங்களுக்கு கருத்தடை சாதனங்களை உற்பத்தி செய்வதற்கும் மக்களை மலடாக Grand Challenges in Global Health Program மூலமாக பத்து ஆய்வுகளை கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவி அளித்து செய்து கொண்டு உள்ளதமைக்கும் இடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லை என்று நினைகின்றேன்.. கருத்தடை சாதனங்கள் பொதுவில் தற்காலிகமானவை… ஆனால் கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவியுடன் University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகள் மனிதர்களை நிரந்தரமாக மலடாக்கும் நோக்கம் கொண்டவை… என்னுடைய பின்னுட்டம் 5 ல் இதனை பற்றி விரிவாக விளக்கியுள்ளேன்… மனிதர்களை நிரந்தரமாக மலாடாகும் ஆய்வுகளுக்கு மைக்ரோசாப்ட் பவுன்டேசன் நிதி உதவிகளை கொடுப்பதன் நோக்கத்தை நீங்கள் தான் விளக்கவேண்டும் விரிவாக …!

     • // உங்களுக்கு கருத்தடை சாதனங்களை உற்பத்தி செய்வதற்கும் மக்களை மலடாக Grand Challenges in Global Health Program மூலமாக பத்து ஆய்வுகளை கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவி அளித்து செய்து கொண்டு உள்ளதமைக்கும் இடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியவில்லை என்று நினைகின்றேன்.//

      நீங்கள் தான் விளக்குங்களேன். அந்த UNC ஆய்வாளர் கூறி இருப்பது என்ன என பார்த்து விடுவோமே:

      //“Our long-term goal is to use ultrasound from therapeutic instruments that are commonly found in sports medicine or physical therapy clinics as an inexpensive, long-term, reversible male contraceptive suitable for use in developing to first world countries,” said Tsuruta. We think this could provide men with up to six months of reliable, low-cost, non-hormonal contraception from a single round of treatment,” Tsuruta said. //

      அதாவது, நிரந்தர மலட்டு தன்மை அல்ல. தற்காலிகம். பருப்பு வேகல செந்தில்குமரன். அவருடைய அராய்ச்சி கட்டுரையும் இதே தான் சொல்கிறது. அதுவும் கீழே உங்கள் பார்வைக்கு உள்ளது. இது தற்காலிகம் தான் என ஆய்வாளரே கூறுகிறார். ஆய்வு செய்யும் அவருக்கு என்ன தெரியும் பாவம். இந்த ஆய்வு எப்படி நீங்கள் கூறியது போல

      //கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவியுடன் University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகள் மனிதர்களை நிரந்தரமாக மலடாக்கும் நோக்கம் கொண்டவை//

      என தான் நிரூபியுங்களேன். பிறகு கருத்தடை சாதனங்கள் பொதுவில் தற்காலிகம் என பிதற்றல்… சார் இன்று வரை condom தவிர்த்து ஆண்களுக்கு இருக்கும் ஒரே கருத்தடை முறை vasectomy. அது நிரந்தரம். குறைந்த பட்சம் விக்கிபீடியா பக்கம் பார்த்து இருக்கலாம். அதன் முதல் வரி:

      //Vasectomy is a surgical procedure for male sterilization or permanent contraception//

      பெண்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல் வேண்டும் என்றால் இருப்பது இரண்டு முறைகள் தான். Birth control pills or morning after pill மற்றும் female condoms. திரும்பவும் சொல்றேன். கொறஞ்ச பட்சம் விக்கிபீடியா பக்கத்த படிச்சுட்டு வந்து பேசுங்க (உங்களுக்கு கஷ்டம் வைக்காம அதுவும் sourcesல இருக்கு). வடை நூல் நூலா வருது. மொதல்ல நீங்க உங்க logic jumpsகு விளக்கம் சொல்லுங்க. உங்கள் பதிவில் இருப்பது:

      // மேலும் எலிகளுக்கு இரண்டு நாடுகளுக்கு கொடுக்கபடும் அல்ட்ராசவுண்ட்ஒலிகள் மூலம் அவைகள் ஆறு மாதங்களுக்கு மலட்டு தன்மையை அடைகின்றன என்ற அறிக்கைகள் அந்த ஆய்வின் முடிவுகளாக வெளிவந்து உள்ளன.. (மனிதர்களிடம் நிரந்தர மலட்டு தன்மையை எதிர்பார்க்கும் பில் கேட்ஸ் இந்த ஆய்வு முடிவுகளை கண்டு திருப்தி அடைவாரா என்ன?) எனவே ஏழை நாடுகளில் குறைந்த செலவில் பயன்பாட்டுக்கு வரும் நிரந்தர மலட்டுத்தன்மையாக்கும் மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதனை நோக்கி மேலும் மேலும் நிதி உதவிகளை அளித்துக்கொண்டு உள்ளது பில் பவுண்டேசன்!//

      எப்படி சார் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு ஆய்வுக்கு நிதி அளித்தது, அவர் மக்களை மலடாக்கும் முயற்சி தான் என ஆணி தரமாக பேசுறீங்க? இந்த ஆய்வை கொண்டு மக்களை நிரந்தர மலடாக்க முடியும் என ஏதேனும் ஆய்வு முடிவுகள் உள்ளதா? இல்லை அந்த ஆய்வாளர் “எங்களுக்கு தற்காலிகம் பத்தாது. எங்கள் நோக்கம் நிரந்தரம்” என்று சொல்லி இருக்கிறாரா? இல்லையே. இந்த ஆய்வு கேட்ஸ் அமைப்பு நிதி அளித்தால் நிரந்தர மலட்டு தன்மை ஆய்வு தான் என நீங்கள் தான் எந்த அடிப்படையும் இல்லாமல் கூறுகிறீர்கள். பத்து முதல் பதினைந்து சதவீதம் குறைக்க முடியும் என கூறிய ஒரே வரி தான் அடிப்படை என்றால் மீண்டும் முதல் கேள்விக்கு செல்கிறோம். இந்த ஆய்வு தற்காலிகம் என்றே ஆய்வாளர், ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது நிரந்தரம் என்று எந்த அடிபடையும், ஆய்வும் இல்லாமல் எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?

      நீங்கள் செய்வதற்கு பெயர் circular reasoning. செந்தில் வாழைபழ காமெடி மாதிரி. இது தற்காலிகம் அல்ல, நிரந்தரம்? அதற்க்கு ஆதாரம்? பில் கேட்ஸ் கூறிய ஒரு வாக்கியம். சரி அவர் நிரந்தர மலட்டு தன்மை செய்ய முயல்கிறார் என்பதற்கு ஆதாரம்? இதோ இந்த ஆய்வுக்கு காசு கொடுத்து இருக்கிறார்! ஆனால் இது தற்காலிகம் என்று தானே அறிவியல் சொல்கிறது? இல்லை இது நிரந்தரம். ஆதாரம்? அவர் சொன்ன ஒரு வாக்கியம். அறிவியல் ஆய்வறிக்கை, ஆராய்ச்சி கட்டுரைலாம் எதுவும் இல்லை. நல்ல அறிவியல் approach சார்.

      Sources:

      https://rbej.biomedcentral.com/articles/10.1186/1477-7827-10-7

      http://www.med.unc.edu/www/newsarchive/2010/may/unc-researchers-receive-100-000-grand-challenges-exploration-grant-to-develop-male-contraceptive

      https://en.wikipedia.org/wiki/Birth_control

      https://en.wikipedia.org/wiki/Vasectomy

      • சிந்தனை செய் அவர்களே,University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்…. மேலும் எலிகளுக்கு இரண்டு நாடுகளுக்கு கொடுக்கபடும் அல்ட்ராசவுண்ட்ஒலிகள் மூலம் அவைகள் ஆறு மாதங்களுக்கு மலட்டு தன்மையை அடைகின்றன என்ற அறிக்கைகள் அந்த ஆய்வின் முடிவுகளாக வெளிவந்து உள்ளன.. (மனிதர்களிடம் நிரந்தர மலட்டு தன்மையை எதிர்பார்க்கும் பில் கேட்ஸ் இந்த ஆய்வு முடிவுகளை கண்டு திருப்தி அடைவாரா என்ன?) எனவே ஏழை நாடுகளில் குறைந்த செலவில் பயன்பாட்டுக்கு வரும் நிரந்தர மலட்டுத்தன்மையாக்கும் மருத்துவ முறைகளை ஆய்வு செய்வதனை நோக்கி மேலும் மேலும் நிதி உதவிகளை அளித்துக்கொண்டு உள்ளது பில் பவுண்டேசன்!

       • திரு. செந்தில்குமரன், நான் கூறியதற்கு ஆதாரமாக அவர் பேட்டியே கொடுத்து உள்ளேன். மீண்டும் வேண்டுமானால் இங்கே:

        //“Our long-term goal is to use ultrasound from therapeutic instruments that are commonly found in sports medicine or physical therapy clinics as an inexpensive, long-term, reversible male contraceptive suitable for use in developing to first world countries,” said Tsuruta. We think this could provide men with up to six months of reliable, low-cost, non-hormonal contraception from a single round of treatment,” Tsuruta said. //

        அவர் இந்த ஆய்வின் மூலம் என்ன செய்ய முயல்கிறார் என தெளிவாகவே சொல்லி விட்டார். இனிமேல் நீங்கள் தான் உங்களின் கீழ் உள்ள கூற்றுக்கு, ஆதாரம் தர வேண்டும்.

        //University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்….//

        அடுத்து, மொதல்ல ஆய்வை ஒழுங்கா படிச்சு தொலைங்க. எலிகளில் அதிக பட்சம் இரண்டு வாரம் வரை மட்டுமே இது தாக்கு பிடிகிறது. நீங்கள் சொன்ன மாதிரி ஆறு மாசம் எல்லாம் இல்லை.

        //In conclusion, our results demonstrate that a short exposure to therapeutic ultrasound is an effective method for depleting testes of spermatogenic cells and reducing epididymal sperm reserves within two weeks of treatment. //

        நான் சொன்னதற்கு ஆதார பூர்வமாக quote மற்றும் ஆய்வு அறிக்கை கொடுத்து இருக்கிறேன் சார். உங்கள் சைடு ஆதாரம் எப்ப? எத்தனை நாள் வேணும்னாலும் எடுத்துகோங்க. ஆனா தயவு செய்து அடுத்த பதிவில் ஆதாரம் சமர்பிக்க வேண்டுகிறேன். உங்க natural news குப்பை இல்லை. Reputed அண்ட் verifiable sources தரவும். இந்த குப்பை எப்போதோ debunk செய்யப்பட்டு விட்டது. அதற்க்கு மேல திரு. பொன்னம்பலம் மற்றும் திரு.கிருஷ் தரவுகள் தந்து உள்ளனர். அதையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

        • இந்த ஆய்வில் தலைமை ஏற்ற Dr. James Tsuruta அவர்களின் வாக்குமுலம் நீங்கள் கூறுவதற்கு எதிராக உள்ளதே நண்பரே!

         During the sessions, the testes were placed in a cup of saline to provide conduction between the ultrasound transducer and skin. The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return. But they knew it was effective: microscopic examination showed dramatic changes after just two weeks. Normally, testes are full of many layers of cells developing into sperm, but now the tubes of the testes were almost empty. “Sperm production is very robust; this ensures the survival of a species. It’s really difficult to find a way to turn off the production of sperm, but ultrasound seems to do the trick,” Dr. Tsuruta continues. “There is something special about heating with ultrasound – it caused 10 times lower sperm counts than just applying heat.”

         See this…. “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.””

         https://srxawordonhealth.com/tag/dr-james-tsuruta/

         • Dr. James Tsuruta அவர்களின் வாக்குமுலத்தை மிக சரியாகத்தான் மொழி பெயர்ப்பு செய்து உள்ளேன்…
          “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.””

          “University of North Carolina (UNC) ல் நடத்தபடும் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப ஆய்வுகளை முன்னின்று நத்திய Dr. James Tsuruta அவர்கள் பத்திரிகைகளுக்கு கொடுத்த செய்தி என்னவென்றால் இந்த ஆய்வு மூலம் ஏற்படும் மலட்டு தன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று இப்போது அறுதியிட்டு கூற இயலாது…மேலும் ஆய்வுகள் தேவை படுகின்றது என்பதாகும்”

          • இதை தான் உண்மையை திரிப்பது என்று சொல்கிறேன். ஆய்வு முடிவு inconclusive என்றால் அதை தானே கூற வேண்டும். பிறகு எப்படி மலட்டு தன்மை தான் என கூற முடியும். இது தற்காலிக மருத்துவ முறையாக தான் பார்க்கிறோம் என Dr. Tsuruta கூறி உள்ள போது, எந்த ஆதாரம் இல்லாமல், நீங்கள் உண்மையை திரிப்பது ஏன் சார்?

           அப்புறம் நீங்க லிங்க் செய்த கட்டுரையிலயே இந்த செய்தி இருக்கிறது.

           //The method worked well – so well that he continued using it for nearly 12 years.
           But Dr. Jenks knew that being a pioneer, there might be surprises. In 2010 he discontinued the heating, wondering how his system was doing. By two months later the sperm numbers seemed to be climbing back up, and he thought he was regaining fertility as in the 2-year studies.//

           அறிவியல் ஆய்வு முடிவை உள்ளது உள்ள படி தானே பேச வேண்டும். ஒரு ஆய்வாளர் சொல்லவே இல்லாத முடிவை, அவர் எங்கள் ஆய்வின் நோக்கம் இதற்க்கு நேர் எதிரானது என கூறும் போதும் நீங்கள் புடிச்ச முயலுக்கு மூணு கால் என நிற்பது ஏனோ?

           மீண்டும் கேட்கிறேன். இது நிரந்தரம், இதை நிரந்தர மலட்டு தன்மை உருவாக்க தான் முயல்கிறோம் என அந்த ஆய்வோ, அல்லது ஆய்வாளரோ எங்கேனும் கூறி இருக்கிறாரா? இல்லை பில் கேட்ஸ் பணம் அளித்த போது இதை நிரந்தரம் ஆக்குங்கள் என கூறி இருக்கிறாரா? ஏதேனும் ஆதாரம் தரவும்.

           கடைசியாக, பில் கேட்ஸ் அளித்த இந்த நிதி ஆய்வின் மிக சிறிய பங்கு எண்ணும் விஷயம் தரவில் இருந்தும், அதை பற்றி மூச்சு விடாதது ஏனோ?

           //Tsuruta notes that the initial idea to re-examine the effects of ultrasound on sperm production came from another private foundation. “The financial support of the Parsemus Foundation was instrumental in forming a team to study ultrasound’s effect on the testis. Our pilot studies would not have been possible without the support of Elaine Lissner (Parsemus), David Sokal (Family Health International), Michael Streicker (Integrated Laboratory Systems) and Michael O’Rand (UNC-CH)//

           இப்படி ஆய்வில் ஒரு மிக சிறிய பங்கு தான் பில் கேட்ஸ் வழங்கிய நிதி என்னும் உண்மையை மறைத்த காரணம் என்ன சார்? இந்த ஆய்வு பில் கேட்ஸ் இல்லாவிட்டாலும் நடந்து இருக்கும் என இருக்கும் போது என்னமோ உலகை அழிக்க திட்டத்தின் ஒரு பகுதி என புருடா விடுவது ஏனோ?

           Source:

           http://www.med.unc.edu/www/newsarchive/2010/may/unc-researchers-receive-100-000-grand-challenges-exploration-grant-to-develop-male-contraceptive

          • சிந்தனை செய்…, சரியான மொழி பெயர்ப்பு என்று தெரிந்தும் தேவையில்லாத பதில் மொக்கைகளை வினவில் எழுதிக்கொண்டு உள்ளீர்கள் நண்பரே…! கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்பதனை மலட்டுதன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று மொழி பெயர்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாமா? மலட்டு தன்மை வந்தமையால் தானே கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.!

      • இந்த அல்ட்ரா சவுண்டு கருத்தடை முறை தற்காலிகம் என்று அந்த ஆய்வின் தலைவர் ஆய்வுகள் மூலம் நிருபிக்காத வரையில் அது எப்படி தற்காலிக கருத்தடை முறை என்று நீங்கள் அறுதியிட்டு கூறுகின்றீர்கள் நண்பரே? Dr James Tsuruta said : “Further studies are required to determine how long the contraceptive effect lasts and if it is safe to use multiple times” அப்புறம் எப்படி நீங்கள் இந்த முறையை தற்காலிகம் என்று கூறுகின்றீர்கள்?

       //இது தற்காலிகம் என்று தானே அறிவியல் சொல்கிறது? //

 8. Completely agreed with “சிந்தனை செய்” comments, I have respect on vinavu for its unflinching political criticisms but vinavu’s articles on vaccination, scientific medicines are baseless conspiracy theories. Too sad vinavu’s has fallen for it, it makes me critically examine you political articles too.!

 9. https://www.nytimes.com/2016/06/14/world/what-in-the-world/chinas-call-to-young-men-your-nation-needs-your-sperm.html

  சென்ற வருடம் சீனா அரசு ஒரு விளம்பரம் கொடுத்தார்கள், சீன இளைஞர்கள் விந்து தானம் செய்ய வேண்டும் என்று, அதற்காக 1000 டாலர் பணம் ஐபோன் என்று சமூகவலைதளத்தில் சலுகைகளை அறிவித்தார்கள் இதை பார்த்து வந்த இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் தரமற்ற விந்து மற்றும் நோய் இருந்ததால் அவர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

  இத்தனைக்கும் விந்து தானமும் ரத்த தனமும் ஒன்றே என்று வேறு சீன அரசு விளம்பரம் செய்து இருக்கிறது.

  என் கேள்வி எல்லாம் சீன அரசு பில் கேட்ஸ் எல்லாம் உள்ளே விடவில்லை என்று சொல்லிக்கொள்கிறீர்கள் பிறகு எப்படி சீன இளைஞர்கள் மலடாக மாறினார்கள் அதற்கு காரணம் என்ன என்பதை வெளிப்படையாக வினவால் பேச முடியும்மா ?

 10. @சிந்தனை செய், உங்களின் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை!? வரவேற்கிறேன். ஆனால் கட்டுரையின் மைய விவாதப் பொருளான ’நான்காவது தொழிற்புரட்சி’ பற்றி தொடாமலே நீங்கள் அள்ளி வீசும் அறிவியல் சிந்தனைகள் ஒரு விதத்தில் உங்களின் பாமரத்தனத்தை பறைசாற்றுகிறது. இது போன்ற அறிவியல் சிந்தனைகளை இதற்கு முன் பலமுறை கேட்டிருக்கிறேன்.
  1. கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது சிபிஎம் கட்சியின் நிலைபாடு – அணுவுலை அறிவியல் பூர்வமானது. இதை எதிர்ப்பவர்கள் அறிவியலுக்கு – அறிவுக்கு எதிரானவர்கள். நாமும் அணுவுலை அறிவியலின் கொடை என்பதை ஒன்றும் மறுக்கவில்லை. ஆனால் சோத்துக்கு இலாட்டரி அடிக்கும் இந்தியாவில் முக்குக்கு முக்கு வைக்கப்படும் அணுவுலைகள், மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதோடன்றி நாட்டை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக்குகிறது என்பதால் தான் நாம் அதை எதிர்க்கிறோம். இது இந்த (போலிக்) கம்யூனிச விஞ்ஞானிகளுக்குத் தெரியாததல்ல. ஆனால் உலகமயகாலகட்டத்தில் குட்டிமுதலாளித்துவக் கட்சியாக சீரழிந்துள்ள சிபிஎம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
  2. மீத்தேன் எடுப்பதற்கு எதிராக தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டிருந்த போது ஒ,என்,ஜி,சி நிறுவனத்திற்கு ஆதரவாக சி,ஐ,டி,யு. மற்றும் எ,ஐ,டி,யு,சி கூட்டுக்குழுவினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கீழ்வேளூர் முன்னாள் எம்,எல்,ஏ மாலி, நாகை முன்னாள் எம்,எல்,ஏ மாரிமுத்து. நாகை முன்னாள் எம்,பி செல்வராஜ் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். அங்கு பேசிய முன்னாள் எம்,எல்,ஏ மாலியோ, ‘’35 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஒ,என்,சி,சி நிறுவனத்தில் கச்சா என்னை மட்டுமே எடுக்கப்படுகிறது, இதை வேண்டுமென்றே அம்பாணி, அதானி குடும்பங்களிடம் கையூட்டு வாங்கிகொண்டு மீத்தேன் ,ஷேல் கேஸ் எடுப்பதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசி முடித்தார். பிறகு பேசிய மாரிமுத்துவோ, என்னை துரப்பன பணிகளை தடுத்ததன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதாப நிலைக்கு போயிருக்கின்றனர். பணிகளை முடக்குபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஒரே போடாக போட்டு முடித்தார். இறுதியாக பேசிய முன்னாள் எம்,பி செல்வராஜோ, ஒ,என்,ஜி,சி என்கிற பொதுத்துறை நிறுவனம் 35 ஆண்டுகளாக தங்களது துரப்பண பணிகளை செய்துவருகிறது எங்கும் நிலத்தடி நீர் குறைந்ததாக தெரியல, மீத்தேனை எதிர்ப்பவர்கள் விளைநிலங்களை தோண்டி ரால் குட்டைகள் அமைத்திருக்கின்றார்களே அவர்களை ஏன் எதிர்க்கவில்லை. இரால் குட்டைகளால் நிலத்தடி நீர் உப்பாக மாறிவருவது அவர்களுக்கு தெரியாதா? மீத்தேன் எதிர்ப்பாளர்கள் என்கிற பெயரில் ரிலையன்ஸ் போன்ற தனியார் கார்பரேட் கம்பனிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல் படுகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்று பேசி முடித்துவைத்தார் (http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=175016).
  இது போல நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். டாஸ்மாக்கை எதிர்த்தால் தனிமனிதனுக்கு குடிக்க சுதந்திரமில்லையா எனக் கேட்பது; கல்வித்துறையில் உடாசிட்டி, கான் அக்காடமி, எடெக்ஸ் போன்ற ஏகபோக நிறுவனங்கள் மீப்பெரு இணையவழி திறந்தவெளி படிப்புகள் (MOOCs) மூலம் கல்வித்துறையே அடித்து நொறுக்கி கபளீகரம் செய்ய வருகிறது எனக் கூறினால், உடனே MOOCs கல்வித்துறைக்கான ஒரு வரப்பிரசாதம் என சொம்படிப்பது; நியூட்டிரினோவை ஆதரித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழி பிரசாரம்; ஆதார் வழங்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துவது… என சிபிஎம் பாணி அறிவியல் இயக்கங்களையும், செயல்பாடுகளையும் சிந்தனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
  இப்போது தங்களின் தடுப்பூசி குறித்த அறிவியல்(!??!) சிந்தனைகளுக்கு வருவோம்.
  முதலில் யதார்த்தம் எப்படி உள்ளது என்பதை பற்றி நீங்கள் கிஞ்சித்தும் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை. ஏதோ, நாட்டில் சோஷலிச ஆட்சி நடப்பது போலவும், இந்த அரசு மக்களின் நலனுக்காக இராப்பகலாக சிந்தித்து செயல்படுவது போலவும் கருதிக் கொண்டு அறிவியலை?! விவாதிக்கிறீர்கள். ஆனால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக இந்தியாவின் அரசியல் பொருளாதார நிலையையோ அல்லது அது ஏகாதிபத்தியங்களின், பன்னாட்டு நிறுவங்களின், தேசங்கடந்த தொழிற்கழகங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளதையோ பார்க்க மறுக்கிறீர்கள். இதற்கு காரணம் அரசியலற்ற அறிவியல் பார்வை தான்.
  நான்காவது தொழிற்புரட்சியின் வெற்றிக்காக இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் மண்ணும் மக்களும் எவ்வாறு சோதனை சாலை எலிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதற்கு, ஃபிலிப்பைன்ஸில் கோல்டன் ரைஸ் எனப்படும் மரபீனி மாற்றம் செய்யப்பட அரசியின் ஃபீல்ட் ட்ரயல் ஒரு மிகச் சிறந்த உதாரணம். க்ரீன் பீஸ் இதை எதிர்த்த போது நோபல் பரிசு பெற்ற 110 விஞ்ஞானிகள், ரிக் ரோட்ரிக் என்ற ஏகாதிபத்திய கைக்கூலியின் தலைமையில் உலகத்தின் அரசாங்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட கோல்டன் ரைஸை எதிர்ப்பவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சாகும் ஆப்ரிக்க ஆசியக் குழந்தைகளுக்கு எதிரானவர்கள் என்றும் அதனால் இவ்வெதிர்ப்பாளர்களை இரும்புக் கரத்தால் ஒடுக்க வேண்டுமென்றும் அறைகூவியிருந்தனர். கார்கில், மான்சாண்டோ, பேயர் போன்ற தேசாங்கடந்த ஏகபோக நிறுவங்களிடம் ஆய்விற்கு பரிசில் பெற்ற இவ்விஞ்ஞானிகளின் conflict of interest என்ன எனக் கேட்டு உலகம் முழுவதுமுள்ள அறிவுஜீவிகளால் இவர்கள் கண்டனத்துக்குள்ளாயினர். இது போல இந்திய குழந்தை நல மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள்க் கூட்டத்தில் டிசம்பர் மாதம் நடந்த அடிதடியும் சில உண்மைகளை வெளிக் கொணர்ந்தது. வருடாந்தர தடுப்பூசி காலண்டரில் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளான சில குழந்தை நல மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் ’வாக்சின் ஆஃப் குட் குவாலிட்டி’ சான்றிதழ் பெறாத தடுப்பூசிகளை திணித்தனர். இதை எதிர்த்துக் கேட்ட விபின் வசிஷ்டா என்ற குழந்தை நல மருத்துவரை பச்சையாக உதைத்தனர். அவர் கேட்டதெல்லாம் இவர்களின் conflict of interest தான்.
  நான்காவது தொழிற்புரட்சியின் ஆரம்ப கட்டமான இன்று நானோ மற்றும் உயிர் தொழில்நுட்பத்தின் exponential ஆன வளர்ச்சி மற்றும் அறிவியல் உலகத்தில் அறிவுசார் சொத்துக்களின் மீது ஏற்பட்டுள்ள ஏகபோகத்தால், ஐஐடி பேராசிரியர்களால் கூட ஒரு மருந்தையோ அறிவியல் தொழில்நுட்பத்தையோ cross verify செய்யக் கூட முடியாத சூழல் தான் நிலவுகிறது. ஒரு ஆர்கானிக் மாலிக்கூலை சும்மா பார்த்தால் சாதாரணமானதாகத் தான் தெரியும். ஆனால் அது உடலில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை பற்றிய அறிவு, ஒரு குறுகிய வட்டத்திற்குள் – அதைப் பற்றி குறிப்பிட்ட ஆய்வுகளை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் போது என்பதால் அறிவியல் விளக்கங்கள் மட்டுமே விஷயங்களைத் தெளிவுபடுத்தாது. ஏனென்றால் ஹிட்லர் கூட புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு நிறைய செலவிட்டார். concentration camp கள் கூட அறிவியல் ஆய்வுக்கூடங்களாகத் தான் செயல்பட்டன. அதனால் அறிவியல் தொழிற்நுட்பமானால் கூட அது யாரால், யாருடைய நலனுக்காக உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு வர்க்கக் கண்ணோட்டம் தேவை. அதற்கு வெறுமனே சிந்தனை செய்தால் மட்டும் போதாது.. கூடவே வினவவும் வேண்டும்.. வினை செய்யவும் வேண்டும்.. அது தான் அறிவியல் ஆய்வுமுறை..

  • அறிவியல் ஆய்வு முறை பற்றிய உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியதை நானும் ஒத்து கொள்கிறேன். அறிவியல் ஒரு கருவி மட்டுமே. உங்களிடம் சில கேள்விகள் எனக்கு உள்ளன. பதில் அளிக்க முடியுமா?

   1. கோல்டன் ரைஸ் field trialகு ஆதரவாக பேசிய ஆய்வாளர் மீது நீங்கள் வைக்கும் அதே குற்றச்சாட்டு எதிர் தரப்பின் மீது ஏன் வைக்கவில்லை? GMO எதிர்பால் பணம் பார்க்கும் கும்பல் GMO எதிர்க்கும் போது அங்கு conflict of interest இல்லையா? உதாரணமாக GMO எதிர்ப்பு கும்பல் பணம் தந்து, GMO கெடுதல் எனப்படும் ஆய்வு அறிக்கை அல்லது அதற்க்கு வாதாடும் ஆய்வாளர் conflict of interest இல்லையா? இல்லை இது அறிவியல் பூர்வமான எதிர்ப்பு என்றால் அதற்க்கு supporting research எங்கே? ஒரு ஆய்வு, அதன் முடிவுகள் பற்றி பேசும்போது அந்த ஆய்வு, அதன் data, analysis method மீது தானே முதல் கவனம் இருக்க வேண்டும்? ஒரு முடிவுக்கு வேண்டி ஆய்வுகள் செய்தால் அல்லது methodology, data ஆகியவற்றை fudge செய்திருந்தால் அதை மிக, மிக எளிதாக நிரூபிக்க முடியுமே? முதலில் அதில் இருந்து தானே தொடங்கவேண்டும்? funding அல்லது ஆய்வு யார் செய்தால் என்ன? ஆய்வு, ஆய்வு முறை, data, ஆய்வு முடிவுகள் சரியாக இருந்தால் ஒத்து கொள்ளத்தானே வேண்டும்? இல்லை creationist கூறுவது போல, “இவன் evolutionஇல் PHD பெற்றவன், எனவே evolution பற்றி இவன் செய்யும் ஆய்வுகளை ஒத்து கொள்ள முடியாது” என கூறுகிறீர்களா?

   2. இன்று உலகில் மிக பண பலம் பெற்றவை எண்ணை நிறுவங்கள். அவற்றால் கூட புவி வெப்பமயமாதல் என்னும் அறிவியல் உண்மையை விலை கொடுத்து வாங்க முடியவில்லை, ஆய்வுகளை பொய் என நிரூபிக்கவும் முடியவில்லை. இதே நிலை தான் முன்பு புகையிலை நிறுவனங்களுக்கும். அப்படி இருக்க, ஒரு organic உணவு விற்கும் நிறுவனமான Whole Foods விட revenue கம்மியாக இருக்கும் மொன்சாண்டோ நிறுவனத்தை இப்படி அறிவியல் அடக்கும் சக்தி உள்ளதாக சித்தரிப்பது சரியா? (மொன்சாண்டோ Sales/Revenue 13.5 பில்லியன், whole foods 15.72 பில்லியன் டாலர்கள். organic சந்தையின் மதிப்பு அமெரிக்காவில் மட்டும் 65.8 பில்லியன் டாலர்கள்). இதையே தடுப்பூசி விசயத்துக்கும் பொருத்தி பார்போமே. உலகின் மொத்த மருத்துவ சந்தை மதிப்பு 1072 பில்லியன் டாலர்கள். இது top 3 எண்ணை நிறுவங்களின் கூட்டு வருமானத்தை விட கம்மி (sinopec – 433.3, ஷெல் – 385.6, Exxonmobil – 364.8 பில்லியன் டாலர்கள் முறையே).

   ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அறிவியல் வேறு, அரசியல் வேறு. தடுப்பூசி யார் கொடுத்தாலும், யாருக்கு போட்டாலும் ஒரே செயல்பாடு தான். நோக்கங்கள் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால், நோக்கம் சரி இல்லை எனவே அறிவியலை, தடுப்பூசியை நம்ப மாட்டேன் என்பது சரியான வாதம் அல்ல. உங்களுக்கு இருப்பது அரசியல், சமூக பொருளாதார குறைகள். அதற்க்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கம்யூனிஸ்ட் ஆராய்ச்சி செய்தாலும், பன்னாட்டு நிறுவனம் ஆராய்ச்சி செய்தாலும் அறிவியல் ஒன்று தான். இல்லை அறிவியல் என்பது அரசியல் சம்பந்த பட்டே இருக்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு Lysenkoism தான் வரும். அதை விட கேடு வேறு இருக்க முடியாது. அறிவியலை பற்றி பேசும் போது, எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் வேண்டாம். அறிவியல் மட்டும் பேசுவோம். வர்த்தகம், நோக்கம் போன்றவற்றால் அறிவியல் தவறு என கூறினால் மட்டும் போதாது. அதை அறிவியல் முறை படி நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் conspiracy குப்பையில் தான் அது இருக்கும். You are literally using the same argument used by global warming deniers, flat earthers and moon landing deniers. அறிவியல் பற்றிய பயன்பாடு, பயன்படுத்துபவர் பொருத்து மாறுபடலாம். ஆனால் ஆதாரம் இல்லாமல் அறிவியல் தவறு என சொல்லவேண்டாம்.

   அரசியலை, வர்த்தகத்தை பற்றி பேச வினவுங்கள். ஆனால் சிந்தனை செய்ய அறிவியல் வழிமுறை தான் வேண்டும். உங்களுக்கு பிரச்சனை அறிவு சார் தொழில்நுட்பத்தின் ஏக போகம் என்றால் அதற்க்கு அறிவியல் பாவம் என்ன செய்யும்? சட்டத்தை மாற்ற வேண்டும். அதை விட்டு விட்டு, இது காப்புரிமை பெற்றது எனவே இதை அறிவியல் என ஒத்துகொள்ள மாட்டேன் என்று சொல்ல போகிறீர்களா? பிறகு நீங்கள் கூறியது போல cross verify செய்ய முடியாத சுழல் என்பது எல்லாம் சும்மா கட்டு கதை. copyright சட்டமே பல இடங்களில் அனுமதி இல்லாமல் கண்டுபிடிப்பை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. கல்வி, ஆய்வு, criticism, scholarship, news reporting போன்றவை Fair Use அடியில் அடக்கம். நீங்கள் தாராளமாக இந்த செயல்களுக்கு copyrighted material பயன்படுத்தலாம்.

   sources:

   http://www.marketwatch.com/investing/stock/mon/financials

   http://www.marketwatch.com/investing/stock/wfm/financials

   https://www.statista.com/topics/1764/global-pharmaceutical-industry/

   https://www.statista.com/statistics/272710/top-10-oil-and-gas-companies-worldwide-based-on-revenue/

   https://en.wikipedia.org/wiki/Lysenkoism

   http://guides.lib.umich.edu/copyrightbasics/faq

 11. @சிந்தனை செய்
  // நீங்கள் கூறியதை நானும் ஒத்து கொள்கிறேன். அறிவியல் ஒரு கருவி மட்டுமே// என முதல் பாராவில் கூறி விட்டு //ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அறிவியல் வேறு, அரசியல் வேறு// என அடுத்த பாராவில் பல்டி அடிக்கிறீர்களே.. இதிலுள்ள முரண்பாடு உங்களுக்கே உறுத்தவில்லையா? கட்டுரை வைக்கும் வாதம், பின்னூட்டம் ஆகியவற்றின் content க்கு உள்ளேயே செல்லாமல் விவாதத்தை கொண்டுபோகிறீர்கள். மான்சோண்டோவின் மானுட விரோத நடவடிக்கைகளை விவரித்தால் ஹோல்ஃபுட்ஸின் பங்குச்சந்தை நிலவர புள்ளிவிவரங்களை அடுக்குவது; மரபீனி விதைகளால் இயற்கையை, மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்தை அழிக்கத்துடிக்கும் ஏகாதிபத்திய அரசியலைப் பேசினால் க்ரீன் பீஸ் என் ஜி ஓ பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி என சப்பைக் கட்டு கட்டுவது; ஜெ-சசி கும்பலின் மக்கள் விரோத சமூக விரோத நடவடிக்கைகளை விமர்சித்தால் கருணாநிதி யோக்கியமா என்பது; ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பலின் இந்துத்துவவெறி ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை விமர்சித்தால் காங்கிரஸ் யோக்கியமா என்பது போன்ற பாணியிலான விவாதம் ’’தடுக்கில் பாயச்சொன்னால் கோலத்தில் பாய்வது” போலுள்ளது.

  நேற்று திருவான்மியூர் அரசு பள்ளிக் கூடத்தில் பதினைந்து பேர் கொண்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியரையோ, ஆசிரியர்களையோ மதிக்காமல் வகுப்பிற்குள் புகுந்து அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். பெற்றோர்கள் கேட்டால் பதில் சொல்ல முடியாது எனக் கூறித் தடுத்த வகுப்பாசிரியர்களிடம் ”அரசாங்கத்தின் ஸ்டாண்டிங் ஆர்டர் உள்ளதால் நீங்கள் தடுக்க முடியாது. பெற்றோர்கள் வந்து கேட்டால் திருவான்மியூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரச் சொல்லுங்கள் நாங்கள் பதில் சொல்லிக் கொள்கிறோம்” என தெனாவட்டாக கூறிவிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் ஊசியைக் குத்திவிட்டு சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுக்க இதே பாணியில் அடாவடியாக குழந்தைகளின் மேல் – சொல்லப் போனால் தமிழினத்தின் மேல் பார்ப்பன பாசிச ஏகாதிபத்திய கைக்கூலி அதிமுக அரசு மீப்பெரு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. 50% மக்கள் கூட தடுப்பூசி போட முன்வராத நிலையில் விஜய பாஸ்கர் பெற்றோர்களின் சம்மதமின்றி தடுப்பூசி போடுவோம் எனத் தெனாவட்டாக அறிவித்த மறுநாளே கையில் ஊசியுடன் சந்தையில் கூட கிடைக்காத ஒரு மருந்தை பிஞ்சு குழந்தைகளின் உடலுக்குள் குத்தி இறக்குகின்றனர். இந்த அடாவடியை இதுவரை ஒரு மீடியா ரிப்போர்ட் பண்ணவில்லை. அறிவியலை விடுங்கள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுத் தான் ஆக வேண்டும் என்று எந்த சட்டம் சொல்கிறது? பெற்றோரின் சம்மதமின்றி குழந்தைகளின் மீது கைவைக்க இவர்கள் யார் உரிமை கொடுத்தது? எந்த சட்டத்தின் அடிப்படையில் இதை செய்கிறார்கள்? ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே கடத்தி சென்று 75 நாட்கள் மர்மமாக மறைத்து வைத்திருந்ததற்கு முழுக்க துணை புரிந்து பாதுகாப்புக் கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் வாயிலிருந்து வருவதெல்லாம் சட்டமாகுமா? ஆராய்ச்சியாளனை விடுங்கள், ஒரு சாதாரண கூலித்தொழிலாளியைக் கேளுங்கள் – அரசு இயந்திரத்தின் இத்தகைய அடாவடி நடவடிக்கைகளே இத் தடுப்பூசித் திட்டத்தின் பின்னாலுள்ள நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகக் கூறுவார்.

  // உங்களுக்கு பிரச்சனை அறிவு சார் தொழில்நுட்பத்தின் ஏக போகம் என்றால் அதற்கு அறிவியல் பாவம் என்ன செய்யும்? சட்டத்தை மாற்ற வேண்டும். அதை விட்டு விட்டு, இது காப்புரிமை பெற்றது எனவே இதை அறிவியல் என ஒத்துகொள்ள மாட்டேன் என்று சொல்ல போகிறீர்களா?// பிரச்சனை அறிவியலென்று கூறியது போன்ற விவாதம் வர்க்கப் பார்வையற்ற அரசியலற்ற உங்களின் கண்ணோட்டத்தைத் தான் வெளிப்படுத்துகிறது. திரும்பவும் சொல்கிறேன், ஏதோ, நாட்டில் சோஷலிச ஆட்சி நடப்பது போலவும், இந்த அரசு மக்களின் நலனுக்காக இராப்பகலாக சிந்தித்து செயல்படுவது போலவும் கருதிக் கொண்டு அறிவியலை?! விவாதிக்கிறீர்கள். சட்டத்தை யார் மற்றுவது? விஜயபாஸ்கரா? மோடியா? நீங்களா? நானா?
  // உங்களுக்கு இருப்பது அரசியல், சமூக பொருளாதார குறைகள்// தெரிகிறதல்லவா? அதைப் பற்றி விவாதிப்பதை விடுத்து தூய அறிவியல் வாதம் பேசுகிறீர்கள்? இது ”கலையை கலையாகப் பார்க்க வேண்டும்” எனும் கருத்தை ஒத்தது. ”அதிகமான மக்கள் மந்தைகள்; அது மலிவான கலாச்சாரத்தையே விரும்புகிறது; குறைந்த அளவு மக்கள் மட்டுமே புத்திசாலிகள், அவர்கள் மட்டுமே தரத்தை விரும்புகிறார்கள்” என்ற வாதத்தை அந்தப் புனித, சுத்த இலக்கியவாதிகள் வைக்கிறார்கள். அது போன்றது தான் உங்கள் அறிவியல் பார்வையும். ஆனால் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பது போல அறிவியலும் தொழிற்நுட்பவும் கூட கண்டிப்பாக மக்களுக்கானது தான். ஆனால் நான்காவது தொழிற்புரட்சியின் தளகர்த்தர்களான உலக பொருளாதார நிறுவனத்தின் உறுப்பினர்கள் மானுட சமூகத்தின், இயற்கையின் இயல்பையே அழித்துவிட்டு சோதனை சாலைகளில் உருவாக்கப்படும் தாவரங்கள், நுண்ணுயிரிகள், இயந்திர மனிதர்களைக் கொண்டும், அடுத்த தலைமுறை ஜீன் எடிட் செய்யப்பட்ட டிசைனர் பீயிங்சைக் கொண்டும் உலகை காலநிலை மாற்றத்திலிருந்து உய்விக்கலாம் என திட்டம் போடுகின்றனர். அது யாருக்கான உலகமாக இருக்கும்? அத்தகையதொரு உலகத்தில் சிந்தனை செய்பவனுக்கு வேலை இருக்குமா? இதைத் தான் கட்டுரை விவாதிக்கிறது.

  இப்பொழுது புரிந்திருக்கும் என்று கருதுகிறேன் அறிவியல் ஒரு கருவி மட்டுமே என்றும், அரசியல் வேறு அறிவியல் வேறு அல்ல என்றும், அரசியல்-சமூக பொருளாதார குறைகளை நிவர்த்தி செய்தால் தான் – பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் மட்டும் தான் அறிவியலும் தொழிற்நுட்பமும் ஆகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், இம்மண்ணுலகிலேயே அவர்களுக்கான சொர்க்கத்தை படைக்கவும் உதவும். மாறாக ஏகபோகங்களின் இலாபவெறியின் கீழ் மனிதனும், தாவரங்களும், நுண்ணுயிரிகளும் ஏன் ஒட்டு மொத்த இயற்கையும் தன் இயல்பை இழந்து வெறும் பிண்டங்களாக reduce ஆகும் அபாயம் உள்ளது. இதை முறியடிக்க அறிவியல் கண்ணோட்டத்தோடு அரசியல் கண்ணோட்டமும் வர்க்கக் கண்ணோட்டமும் தேவை.. அறிவியல் ரீதியாக சிந்தனை செய்யும்போது இக்கண்ணோட்டங்களையும் கூடவே வளர்த்துக் கொண்டீர்களென்றால் மட்டும் தான் நீங்கள் விரும்புவது போல //சட்டத்தை மாற்ற// முடியும்; //அரசியல்-சமூக பொருளாதார குறைகளை நிவர்த்தி//செய்ய முடியும்.

 12. //மான்சோண்டோவின் மானுட விரோத நடவடிக்கைகளை விவரித்தால் ஹோல்ஃபுட்ஸின் பங்குச்சந்தை நிலவர புள்ளிவிவரங்களை அடுக்குவது; மரபீனி விதைகளால் இயற்கையை, மூன்றாமுலக நாடுகளின் விவசாயத்தை அழிக்கத்துடிக்கும் ஏகாதிபத்திய அரசியலைப் பேசினால் க்ரீன் பீஸ் என் ஜி ஓ பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி என சப்பைக் கட்டு கட்டுவது;//

  நல்லா ஓட்டுறீங்க மா. மரபீனி விதைகள் மொன்சாண்டோ செய்வதால் விவசாயத்தை அழிக்கும் என நீங்கள் பேசினால், நான் பேசுவது மரபீனி விதைகளின் அறிவியல் மட்டுமே. அவற்றின் நன்மை, shortcomings மட்டுமே. உங்க ஏகாதிபத்திய அரசியலுக்கே நான் வரவில்லை. மரபீனி விதைகள் அரசாங்கங்கள், தேசிய ஆய்வு மையங்கள், பல்கலைகழங்கள் கூட உருவாக்குகின்றன. நான் பேசுவது மரபீனி விதைகள் பற்றி மட்டுமே. நீங்கள் மொன்சாண்டோ அதிக விலை வைக்கிறது, விவசாயத்தை அழிக்க முயல்கிறது என context வைக்கலாம். எனக்கு துளி பிரச்சனை இல்லை. ஆனால் மொன்சாண்டோ உருவாக்குவதால் மரபீனி விதைகளே தவறு என பேசினால் தான் உள்ள வருவேன். மொன்சாண்டோ எனும் நிறுவனத்தின் மீது உள்ள வெறுப்பு, விமர்சனத்தை மரபீனி விதைகள் எனும் அறிவியலின் மீது வைப்பது தவறு. இதை சுட்டி காட்டவே கிரீன் பீஸ் ஒரு உதாரணமாக தந்தேன். மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால் Monsanto’s business practices should not and does not affect the science behind GMO crops. whole foods வருமான கணக்கு கொடுத்ததும் இதன் ஒரு அங்கமே. ஒரு supermarket அளவுக்கே வருமானம் இருக்கும் நிறுவனம் அறிவியலை விலை கொடுத்து வாங்கி விட்டது எனும் கூற்று எவ்வளவு அபத்தம் என காட்டவே அது. அதை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த எண்ணை நிறுவனங்களால் அரசியல்வாதிகளை
  விலைக்கு வாங்க முடிகிறது, செய்தி நிறுவனங்களை, அரசியல் கட்சிகள், எல்லாத்தையும் விலைக்கு வாங்க முடிகிறது. ஆனால் புவி வெப்பமயமாவது இந்த எண்ணை மற்றும் கரி பயன்பட்டால் தான் என கூறும் அறிவியலை விலைக்கு வாங்க முடியவில்லை. அறிவியல் நிதர்சனம் இப்படி இருக்க, மொன்சாண்டோ விஞ்ஞானிகளை விலைக்கு வாங்கி விட்டதாக நீங்கள் கூறி இருப்பது உண்மைக்கு எவ்வளவு மாறானது என காட்டவே அந்த பாயிண்ட்.

  கட்டாய தடுப்பூசி பற்றிய உங்கள் கருத்து மிக சரி. அதில் எனக்கு மாற்று கருத்து எதுவும் இல்லை. அரசாங்கம் கட்டாய படுத்த கூடாது. அடாவடி செய்ய கூடாது. இதில் எந்த மாற்று கருதும்எ இல்லை. என் வழிமுறை வேறாக இருந்து இருக்கும். அறிவியலை எடுத்துக்கூறிபயத்தை போக்கி தடுப்பூசி பற்றிய awareness உருவாக்குவதில் தான் என் முயற்சி இருக்கும்.

  ஆனால் இந்த அடாவடி காரணமாக தடுப்பூசி பற்றி சந்தேகம் எழுப்புவது தவறு. தடுப்பூசி, அதன் efficacy, அவசியம் பற்றி பேசுவது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். எவனோ ஒருத்தன் குடுசைய கொளுத்தினான் என்பதற்காக நெருப்பே மக்களை ஒடுக்கும் கருவி என ஆகி விடாது. நெருப்பு ஒரு கருவி. கொல்லன் கையில் அது ஆக்கும், சாதி வெறியன் அதை ஊரை எரிக்க பயன்படுத்துவான். “சாதி வெறியால் ஊரை கொளுத்திவிட்டான். எனவே நெருப்பு பற்றி பேசும் போது அரசியல் கண்ணோட்டம் தேவை” என்பது சரியா? செய்கையை பற்றி பேசும்போது மட்டுமே அரசியல், பொருளாதார, சமூக கண்ணோட்டம் அவசியம். கருவியை பற்றி பேசும்போது அறிவியல் மட்டுமே போதுமானது.

  திரும்பவும் சொல்கிறேன்.அறிவியலை பற்றி பேசும்போது அறிவியல் மட்டும் பேசினால் போதும். அதன் மூலம் வரும் impacts பற்றி பேசும் பொது அரசியல், பொருளாதாரம், எல்லாம் உள்ளே வரலாம். அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும். அந்த அறிவியலை பயன்படுத்தி, அதனால் வரும் impacts மாறுபடும். அது அறிவியலின் பிரச்சனை அல்ல. உபயோகிப்பவரின் பிரச்சனை. நீங்கள் விரும்பும் மாற்றங்கள் செய்ய அரசியல், சமூக மாற்றங்கள் போதுமானது. அரசியலுக்கு ஏற்ற மாதிரி அறிவியல் மாற வேண்டும் என்றால் பிறகு Lysenkoism நினைவு இருக்கிறதா? அந்த மாதிரி ஆப்பு தான் விழும்.

  • //செய்கையை பற்றி பேசும்போது மட்டுமே அரசியல், பொருளாதார, சமூக கண்ணோட்டம் அவசியம். கருவியை பற்றி பேசும்போது அறிவியல் மட்டுமே போதுமானது.திரும்பவும் சொல்கிறேன்.அறிவியலை பற்றி பேசும்போது அறிவியல் மட்டும் பேசினால் போதும். அதன் மூலம் வரும் impacts பற்றி பேசும் பொது அரசியல், பொருளாதாரம், எல்லாம் உள்ளே வரலாம். அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும்.செய்கையை பற்றி பேசும்போது மட்டுமே அரசியல், பொருளாதார, சமூக கண்ணோட்டம் அவசியம். கருவியை பற்றி பேசும்போது அறிவியல் மட்டுமே போதுமானது// கருவியில்லாத செய்கையா? வினவு அறிவியல் கட்டுரை எனக் கூறி வெளியிட்டது போல திரும்பத் திரும்ப விவாதிக்கிறீர்களே? திரும்பவும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் – கட்டுரை விவாதிக்கும் நான்காவது தொழிற்புரட்சி பற்றிய விவாதத்திற்கே நீங்கள் வரமறுக்கிறீர்கள். லைசன்கோயிசம் பற்றி பேசும் நீங்கள் உலக பெரும்பணக்காரர்களின் ஃபிலந்திரோஃபிசம் பற்றி வாய் துறக்க மறுக்கிறீர்களே? வரலாற்றை இதற்கு முன்னும் பின்னும் சற்று தள்ளிப் பாருங்கள். //அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும்// என்ற உங்களின் பாமரத்தனத்தனத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அறிவியலின் வரலாறு என்பதை விட வரலாற்றில் அறிவியல் என்பது தான் சரியான பார்வையாக இருக்கும். ஏனென்றால் மத்தியகாலத்தில் நிலப்பிரபுத்துவம் மற்றும் கிருஸ்தவ திருச்சபை ஆதிக்கத்தின் கீழ் இதே அறிவியலின் நிலை என்னவாக இருந்தது? புரூனோவை எரித்துக் கொன்றது நீங்கள் சொன்ன தூய அறிவியல் ’நெருப்பு’த் தானே? சாகும் வரையிலும் திருச்சபைக்கு பயந்து தனது கண்டுபிடிப்புகளை வெளியிட பயந்த கலிலியோவின் வரலாறு மறந்து போனதா? டார்வினின் புல்டாக் என அறியப்பட்ட ஹக்ஸ்லி மட்டும் இல்லையென்றால், திருசபையின் முந்தானைக்குளிருந்து பரிணாமக் கொள்கையை தான் மீட்டிருக்க முடியுமா? இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் வேண்டும்? தூய அறிவியல்வாதிகள் நிரம்பிவழியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் 1925 இல் கூட பரிணாமக் கொள்கையை வகுப்பில் கற்பித்தற்காக ஸ்கோபஸ் எனும் ஆசிரியர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதே? மனிதனைப் போலவே அறிவியலும் கூட நிம்மதியாக மூச்சுவிட வேண்டுமென்றால் அது சார்ந்திருக்கும் அரசியல் பொருளாதார கட்டமைப்பு தான் தீர்மானிக்கும். நிலப்பிரபுத்துவக் காலத்திலும் முதலாளித்துவ காலகட்டத்திலும், சோஷலிச காலகட்டத்திலும் அறிவியல் சுத்த சுயம்புவாக இருக்கும் என வாதிடுவதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய அறியாமையே காரணம். ஒரு சமூகத்தில் அறிவியலின் நிலைகூட அதன் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பால் தான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே கட்டுரையின் மைய விவாதப் பொருளான நான்காவது தொழிற்புரட்சி பற்றிய விவாதத்திற்குள் வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

   • //அறிவியலின் வரலாறு என்பதை விட வரலாற்றில் அறிவியல் என்பது தான் சரியான பார்வையாக இருக்கும். ஏனென்றால் மத்தியகாலத்தில் நிலப்பிரபுத்துவம் மற்றும் கிருஸ்தவ திருச்சபை ஆதிக்கத்தின் கீழ் இதே அறிவியலின் நிலை என்னவாக இருந்தது?//

    திருசபைக்கு பயந்ததால் அறிவியல் உண்மை மாறிவிட்டதா? ப்ருனோ, காலிலியோ அறிவியலுக்கு எதிராக பேசினார்கள் என குற்றம் சாட்ட பட்டனரா அல்லது கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்த பட்டதா? ப்ருனோ மீது சுமத்த பட்ட குற்றச்சாட்டுகள் கீழே:

    Luigi Firpo lists these charges made against Bruno by the Roman Inquisition:[31]

    holding opinions contrary to the Catholic faith and speaking against it and its ministers;
    holding opinions contrary to the Catholic faith about the Trinity, divinity of Christ, and Incarnation;
    holding opinions contrary to the Catholic faith pertaining to Jesus as Christ;
    holding opinions contrary to the Catholic faith regarding the virginity of Mary, mother of Jesus;
    holding opinions contrary to the Catholic faith about both Transubstantiation and Mass;
    claiming the existence of a plurality of worlds and their eternity;
    believing in metempsychosis and in the transmigration of the human soul into brutes;
    dealing in magics and divination.

    அடுத்து காலிலியோ.

    The sentence of the Inquisition was delivered on 22 June. It was in three essential parts:

    Galileo was found “vehemently suspect of heresy”, namely of having held the opinions that the Sun lies motionless at the centre of the universe, that the Earth is not at its centre and moves, and that one may hold and defend an opinion as probable after it has been declared contrary to Holy Scripture. He was required to “abjure, curse and detest” those opinions.[84]
    He was sentenced to formal imprisonment at the pleasure of the Inquisition.[85] On the following day this was commuted to house arrest, which he remained under for the rest of his life.
    His offending Dialogue was banned; and in an action not announced at the trial, publication of any of his works was forbidden, including any he might write in the future.

    இதில் அறிவியல் எங்குமே வரவில்லையே? இரண்டிலும் helio centric மாடல் கதோலிக்க மத நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்பது தானே குற்றச்சாட்டு? அரசியல் பண்ணுபவர்கள் அறிவியலை துணைக்கு அழைக்கலாம். ஆனால் அறிவியல் என்ன கூறுகிறது என பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் காலிலியோவின் ஒரு சில கண்டுபிடிப்புகள் ஏற்க படவில்லை என்பது சரி. ஆனால் சாகும் வரை திருசபைக்கு பயந்து கண்டுபிடிப்புகளை வெளியிடவில்லை என்பது எல்லாம் கப்சா. அவர் tides பற்றி விளக்குவதற்கே Copernican மாடல் தான் பயன்படுத்தினார். அவர் வெளியிட்ட Dialogue Concerning the Two Chief World Systems எனும் நூல் கூட Geo-centric மாடல், அவற்றில் உள்ள பிரச்சனைகள், ஏன் அது சரி இல்லை என்பது பற்றி தான் பேசுகிறது.

    ஹக்ஸ்லி எல்லாம் பேசும் நீங்கள்,

    //மனிதனைப் போலவே அறிவியலும் கூட நிம்மதியாக மூச்சுவிட வேண்டுமென்றால் அது சார்ந்திருக்கும் அரசியல் பொருளாதார கட்டமைப்பு தான் தீர்மானிக்கும்.//

    என கூறுவது ஏன்? திருசபை எதிர்த்ததால் பரிணாம கொள்கை தவறு என்று அறிவியல் கூறியதா? இல்லை காலிலியோ அறிவியல் முடிவுகள் தவறு என கூறியதா? அறிவியல் கூறியது மதத்துக்கு ஒத்து வரவில்லை என மத அமைப்புகள் முயற்சி செய்தது என்னவோ சரி தான். ஹக்ஸ்லி இல்லாவிட்டால் இன்னொருவர். காலிலியோ இல்லாவிட்டால் kepler. அறிவியல் உண்மைகள் ஒரு அமைப்பை சார்ந்து உருவாகாது. இங்கு நாம் பேசிய காலிலியோ கூட keplerஇன் Laws of motionஐ ஏற்கவில்லை. ஆனால் அது அறிவியல் முறையால் சரி பார்க்க பட்ட பிறகு, அவை அறிவியலில் நிதர்சனமாக இன்று வரை இருக்கிறது, என்றும் இருக்கும்.

    நீங்கள் சொன்ன எல்லா உதாரணமும் சமூகம் அல்லது மதம், அரசியல் கட்டமைப்புகள் எவ்வாறு தங்கள் சுய லாபத்துக்காக அறிவியல் உண்மையை புறம்தள்ள அல்லது திரிக்க முயன்று தோல்வி கண்டன என்பதற்கு உதாரணங்கள். எனவே நான் //அரசாங்கம் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் முதலாளித்துவமாக இருந்தாலும் இல்லை அரசாட்சியாக இருந்தாலும் அறிவியல் ஒன்றாக தான் இருக்கும்// என கூறியது சரி தானே? இதில் பாமர தனம் என்ன?

    நான்காவது தொழிற்புரட்சியில் வேலை இழக்கும் மக்களை கொள்ள அறிவியல், முக்கியமாக தடுப்பூசி பயன்படுத்த விழைகிறார் என்பதே இங்க மைய குற்றச்சாட்டு. நீங்கள் இதை பேச வேண்டும் என்றால் முதலில் அந்த தடுப்பூசிகள் நீங்கள் கூறும் செயல்களை செய்ய வல்லவை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். சும்மா assumption அல்லது இப்படி இதால் முடியும், எனவே அதற்க்கு தான் இதை பயன்படுத்துகிறார்கள் எனும் வேற்று குற்றச்சாட்டு எல்லாம் செல்லாது. தடுப்பூசியால் மக்களை கொள்ள முயற்சி என்கிறீர்களா. முதலில் அந்த தடுப்பூசியால் மக்களை கொள்ள முடியும் என நிரூபிக்க வேண்டும். பிறகு அரசியல், motivation லாம் வரலாம். இங்க அஸ்திவாரமே இல்லையே. பின்ன எங்கே அடுத்த கட்டத்துக்கு செல்வது?

    உதாரணமாக, //தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பை செலுத்தும்// என வினவு சொல்லும்போது அந்த தடுப்பூசி அதை செய்ய வல்ல திறன் படைத்து என அறிவியல் ஆதாரம் வைக்க வேண்டும். சும்மா ஏதோ கான்ஸ்பிரசி தளத்தில் எவனோ கெளப்பி விட்ட வதந்தி எல்லாம் ஆதாரம் இல்லை. உதாரணமாக இந்த Hcg hormone கலப்படம் என்று குற்றம் சாட்டும் கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு, அவர்கள் அந்த சோதனையை கூட ஒழுங்காக செய்யவில்லை, சோதனை முடிவுகளையும் வெளியிடவில்லை. இதை முதலில் இவர்கள் வெளியிடவில்லை. statement முதலில் வந்தது காதொலிக்க மத குருமார் அமைப்பில் இருந்து. இந்த technique கூட புதுசு இல்லை. இதை பற்றி நீண்ட விளக்கம் எழுத நேரம் இல்லை. எனவே இதை முழுதாக அலசும் கட்டுரை உங்கள் பார்வைக்கு:

    http://www.snopes.com/medical/disease/tetanus.asp

    நீங்கள் நான்காவது தொழில்புரட்சி பற்றி பேசுவது எல்லாம் சரிதான். முதலில் வைக்கும் குற்றச்சாட்டு i.e. தடுப்பூசியால் மக்களை கொள்ளும் முயற்சி என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். பிறகு தொழில்புரட்சி பற்றி பேசலாம்.

   • //நான்காவது தொழிற்புரட்சி பற்றிய விவாதத்திற்குள் வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.//

    நான்காவது தொழிற்புரட்சி என்பது மக்களுக்கு எதிரான சதித்திட்டம் என்பது தான் கட்டுரையின் மையப் பொருள். Automation தொழில்நுட்பம், Bio, Nano Technology, மரபணு சார் ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவையா? அல்லது அவை தொழிற்படுத்தப்படும், நடைமுறைப்படுத்தப்படுவது மக்களுக்கு எதிராக உள்ளதா?

    நடைமுறைப்படுத்தப்படுவது தான் மக்களுக்கு எதிராக உள்ளது எனில் தொழிற்புரட்சியின் அவசியத்தை வழியுறுத்தும் அதேவேளை, அது எப்படி மக்கள் விரோதிகளின் பிடியில் உள்ளது என்பதாக தானே கட்டுரை சென்றிருக்க வேண்டும்.

    கட்டுரை எழுதப்படும் போது எதிர், மாற்று கருத்துக்களையும் படித்து அவற்றுக்கு Counter arguments வுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே Natural News போன்ற தளங்களை மட்டும் ஆதாரமாக கொண்டால், முன்முடிவுடன் biased ஆக எழுதியதாக தான் படிப்பவர்கள் சொல்வார்கள்.

    Article is Shocking but not Convincing!

 13. மேலே பதில் கூற இடம் இல்லை. எனவே பதில் இங்க செந்தில்குமரன்.

  //சிந்தனை செய்…, சரியான மொழி பெயர்ப்பு என்று தெரிந்தும் தேவையில்லாத பதில் மொக்கைகளை வினவில் எழுதிக்கொண்டு உள்ளீர்கள் நண்பரே…! கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்பதனை மலட்டுதன்மை நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்று மொழி பெயர்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாமா? மலட்டு தன்மை வந்தமையால் தானே கருவுறுதல்(fertility) நிலை திரும்புமா இல்லையா என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.!//

  உங்களுக்கு இரண்டு வேறு வார்த்தைகளால் வந்த குழப்பம் அது. மலட்டு தன்மை என்பது infertility or impotency. கருத்தடை என்பது contraceptive. இரண்டிலும் குழந்தை பிறக்காது என்பது சரி தான். இரண்டிலும் குழந்தை பிறக்காது என்பது சரி தான். ஆனால் ஒன்றுக்கு வைத்தியம், மருத்துவம் உண்டு. மலட்டு தன்மையை சரி செய்ய மிகவும் கடினம். குழந்தை பிறக்க வாய்ப்புகள் மிக, மிக குறைவு. கிட்ட தட்ட பூஜியம். ஆனால் கருத்தடையில் இருப்பவர் குழந்தை பெற வேண்டும் என்றால் கருத்தடை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் போதும். இன்னும் சொல்ல போனால் கருத்தடை நூறு சதவீதம் வெற்றி பெறாது. கருதடையில் இருக்கும் போது கூட கரு தரிக்க வாய்புகள் உண்டு.

  இதனால் தான் திரும்ப, திரும்ப கீழே இருப்பதை quote செய்கிறேன். அவர் சொல்வதை பாருங்கள். contraceptive என்கிறாரே தவிர Inferitility or impotency என சொல்லவில்லை. அவர் permanent male contraceptive என கூறி இருந்தால் கூட நீங்கள் சொல்வதை ஏதோ ஒரு possibility இருப்பதாக கொள்ளலாம். அவரோ தெளிவாக reversible male contraceptive என்கிறார். மலட்டு தன்மைக்கு exact opposite அது.

  //“Our long-term goal is to use ultrasound from therapeutic instruments that are commonly found in sports medicine or physical therapy clinics as an inexpensive, long-term, reversible male contraceptive suitable for use in developing to first world countries,” said Tsuruta. We think this could provide men with up to six months of reliable, low-cost, non-hormonal contraception from a single round of treatment,” Tsuruta said. //

  • சிந்தனை செய்..,In his text Dr Dr. James Tsuruta used the word “fertility” ! not about “contraceptive”! He have a doubt about the returning of “fertility” ! So it is your confusion about the translation! Not mine!

   what is the meaning of his statement ” “The researchers were not able to continue their study for long enough to see when, or whether, fertility would return.”?

   Rethink about the words he used in his text “when, or whether ””fertility””’ would return”

   • திரும்பவும் கேட்கறேன். மொதல்ல ஆய்வு அறிக்கைய படிசீங்களா, இல்லையா? அவர் ஆய்வை பற்றி அவர் பேசுவது எல்லாம் contraceptive, sperm count பற்றி தான். fertility பற்றி அவர் பேச காரணம், fahim எனப்படும் ஆய்வாளர் முன்பு வெளியிட்ட ஒரு ஆய்வு. அதை அடிப்படயாக கொண்டு தான் இவர் இந்த ஆய்வு முயற்சியை தொடங்கினார்.

    //Background

    Studies published in the 1970s by Mostafa S. Fahim and colleagues showed that a short treatment with ultrasound caused the depletion of germ cells and infertility. The goal of the current study was to determine if a commercially available therapeutic ultrasound generator and transducer could be used as the basis for a male contraceptive.//

    இவர் ஆய்வின் நோக்கம் contraceptive தான். அதை தெளிவாகவே கூறி இருக்கிறார். ஏற்கனவே fahim என்னும் ஆய்வாளர் வெளியிட்ட ஆய்வு fertility குறைந்ததாக சொல்கிறது. அதனால் எங்கள் ஆய்வில் ultrasound தொழில்நுட்பம் கருத்தடை முறையாக பயன்படுத்த முடியுமா என பார்பதே எங்கள் நோக்கம் என்கிறார். இவரின் நோக்கம் loss of fertility என்று எங்குமே சொல்லவில்லை என்பதை காண்க. fahim ஆய்வு தான் loss of fertility பற்றி. அந்த ஆய்வை பற்றி பேசும்போது தான் அது உள்ளே வருகிறது.

    சரி இவரின் ஆய்வு முடிவுகள் என்ன என்று பார்த்தல் பின்வருவதை சொல்கிறார்:

    //Our results clearly show that therapeutic ultrasound treatment depleted developing germ cells from the testis and subsequently decreased the size of sperm reserves in the epididymis when rats were treated with two consecutive ultrasound treatments separated by two days [Table 4 Figure 6]. This differs from reports in the 1970s by Fahim et al. [3, 4], which reported that a single treatment of 1 MHz ultrasound was sufficient to induce a contraceptive effect of approximately six months duration. //

    முந்தைய fahim ஆய்வுகள் ஆறு மாதத்துக்கு கருத்தடை செய்ய வல்லது , loss of fertility இருக்கிறது என சொன்ன போதும், எங்கள் ஆய்வு முடிவுகள் அதற்க்கு மாறுபட்டு இருக்கின்றன. sperm count, sperm reserves குறைகிறது.ஆனால் fertility இல் குறிப்பிடத