உழைக்கும் மக்களின் பறையாட்டத்தை ‘குத்தாட்டம்’ என்று எழுதிய தினமலர் குப்பையை குவித்துவைத்து தீயிட்டு கொளுத்தி, அந்த நெருப்பில் பறையை காய்ச்சி எடுத்துக்கொண்டு போராட்டத்தை துவங்கினர்.
திருமாவளவனோ இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!
பட்ஜெட்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அம்மக்களுக்காகப் பயன்படுத்தாமல், வெவ்வேறு இனங்களுக்குக் கடத்திக் கொண்டு போவதும், நிதியைச் செலவழிக்காமல் கிடப்பில் போடுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
வங்கி சென்று புதிய நோட்டு பெறமுடியாமல் தனது சகோதரன் திரும்பியதைக் கண்டு மனமுடைந்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த 20 வயது ஷாபனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000.
ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அரசுதானே அறிவிச்சுச்சு அவங்களுதுதானே கேஸ் கம்பெனி, ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன், பஸ்சு இங்கல்லாம். அங்க 500 1000 ரூபாய வாங்கலாமில்ல!
குறிப்பாக ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு பெண்களின் உடலமைப்பு இருப்பதால் விரதம் தடைபடுகிறது என்று குமரவேல் சொன்ன பொழுது சீனிவாச சாஸ்திரிகள் ஸ்திரிகளுக்குத்தான் காமம் அதிகம் என்று குமரவேலின் கருத்தை மறுத்தார்!
happytobleed“இது நம்பிக்கை சார்ந்த விசயம். இதை அரசோ, நீதிமன்றமோ திணிக்க முடியாது” என்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ஆளுர் ஷாநவாஸ். அதை தானும் ஏற்பதாக பா.ஜ.கவின் கே.டி. ராகவனும் கூறுகிறார்.
விவாதங்களில் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் பிறர் தம் கருத்துக்களைச் சொல்லவிடாமல், தடுத்தும், நாகரிகமின்றியும், அடாவடித்தனமாகவும், மிரட்டல் தொனியிலும், விவாதத்தை திசை திருப்பும் போக்கில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை முன் வைத்தும் பேசி வருகின்றனர்.
“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.
கன்டெயினர்களே மாயமாக மறைந்து போகும் அம்மாவின் அண்ட சாசர அரசியல் காலத்தில், கவுன்சிலர் கடிகளைப் போட்டு நமத்துப்போன வெத்துவேட்டாய் வந்திருக்கிறது இந்தக் கொடி!
நம்மூரில் கும்பகோணம் டிகிரி காஃபியின் பிரபலத்தைப் போன்று ஐரோப்பாவிலும் இத்தகைய பாலுறவு காஃபி கிளப் பிரபலமடையலாம்.
தீபாவளி முடிந்த பிறகுதான் இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைக்கும் என்கிறார். காரணம் அப்போது மழைக்காலம் என்பதாலும் உற்பத்தியை நிறுத்தி வைப்பார்கள். மீதி பத்து மாதங்களில் அதிக வெயில் இருக்குமென்பதால் உற்பத்தியும் அசுரவேகத்தில் இருக்கும்.
ஆரிய, பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட வரலாற்றை எப்படிப் போலி மார்க்சிஸ்டுகள் திரித்துப் புரட்டுகிறார்கள் அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுடன் எப்படி ஒன்றுபடுகிறார்கள் என்பதை இந்தப்பகுதியில் பார்ப்போம்.
முதுமையின் காரணமாய் சமூக புறக்கணிப்பு, முதுமைக்கும் இளமைக்கும் உள்ள முரண்பாட்டால் கட்சித் தோழர்களிடம் புறக்கணிப்பு, பொதுஉடைமை இயக்கத் தொடர்பால் குடும்ப புறக்கணிப்பு என்ற நிலையிலும் கலங்காத திடமான மனதைக் கொண்டிருந்தார்.

























