ரிலீசுக்கு முன்னதாகவே லிங்கா வசூலித்த தொகை 200 கோடி! இத்தனை கோடி குவியும் போது அரசியலில் ரஜினி என்று அளப்பது லிங்கா விளம்பரத்திற்கா? தமிழனின் துயர் துடைக்கவா?
ரெட் ஹேக் குழுவினரோ அரசின் குண்டாந்தடிகள் தம்மைத் தேடியலைவதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி யானையின் காதில் புகுந்த செவ்வெறும்பைப் போல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?
வல்லரசு கனவெல்லாம் பல்லிளிக்குது, தூய்மை இந்தியா திட்டமெல்லாம் துர்நாற்றம் வீசுது. தனியார் மருத்துவக் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை கீழே தள்ளிப் புதைக்காமல் வாழ்க்கையில்லை
சென்னை அரசு மாணவர் விடுதியில் கூரை இடிந்து விழுந்து 2 மாணவியர் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்ததை அடுத்து புமாஇமு எடுத்த நேரடி நடவடிக்கை - விரிவான அறிக்கை - படங்கள் - மாணவிகள், மக்கள் கருத்து
மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே?
பத்துமாத சிறை உதைத்து ரத்தவலை தானறுத்து மொத்தவலி தானுடைத்து உள்ளே இருந்த குழந்தை போராடியதால் உயிரோடு வெளியே வந்தது! வெளியேஇருப்பவர்களின் போராட்டமின்மையால் குழந்தைகள் பிணமானது.
கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், ஆயிஷா நடராஜன் எனும் இந்த மாணவப் போராளி முதல்வர்.
ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது.
மீனவர் தூக்கை கண்டித்து நெஞ்சை உயர்த்தியும், பால்விலை உயர்வுக்கு கொஞ்சம் பம்மியும், விமலாதேவி கொலைக்கு சாதிவெறி விசத்தைக் கக்கியும் ரெட்காசி மற்றும் கதிரவன் ஆகியோர் பேசினர்.
புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
புராணங்கள் என்பவை பழங்காலக் கதைகள், வரலாறு என்பது என்ன நடந்திருக்கும் என்று நம்பப்படுவது, அறிவியல் வரலாற்றின் ஒரு பகுதி. பிந்தையதன் இடத்தில் முந்தையதை வைப்பது முட்டாள்தனமின்றி வேறென்ன?
விளைநிலத்தின் நாளத்திற்குள் ஓடும் நீரை அத்துமீறி உறிஞ்சிடும் கோக்கையும் பெப்சியையும் கண்டு கொதிக்காத கௌரவம்
காதலின் தவிப்புக்கு ‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது. - தோழர் கோவன் கவிதை
காலையில ஒன்பதரைக்கு கொண்டு வந்து விடணும். மதியம் பன்னிரெண்டரைக்குக் கூட்டிட்டு போயிடணும். ஸ்னாக்ஸ் மட்டும் கொடுத்துவிடணும். கூடுதலா விடற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாதத்துக்கு முன்னூறு ரூபா கட்டணம்.
செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு 'தமிழ் கிளிப்பிங்ஸ்' வரவு! ரஜினி வீட்டில் 'டீ', கமலுக்கு 'குப்பை', வைரமுத்துவுக்கு 'தமிழ்' என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.
























