Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 497

திருப்பூர் தண்ணீர் பஞ்சத்திற்கு யார் காரணம் ? நேரடி ரிப்போர்ட்

2

திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 3

நொய்யல், நல்லாறு, அமராவதி, பாலாறு, சின்னாறு ஆகியவையே திருப்பூர் மாவட்ட எல்லைகளுக்குள் ஓடும் ஆறுகள்; இவையே திருப்பூரின் முக்கியமான நீராதாரங்கள். இதில் நொய்யலாறு திருப்பூர் நகர எல்லைகளுக்குள்ளாக ஓடுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகும் நொய்யல், கோவை நகரின் குறுக்காக ஓடி, அவினாசி தாலுக்காவைக் கடந்து திருப்பூருக்குள் நுழைந்து பின்னர் ஒரத்தபாளையம் அணையைக் கடந்து கரூரில் காவரியாற்றில் கலக்கின்றது.

சோழர்களின் காலத்தில் நொய்யலாற்றை மையமாக வைத்து சுமார் 32 தடுப்பணைகளும், குளங்களும், இணைப்புக் கால்வாய்களும் வெட்டி விரிவான நீர் மேலாண்மை ஏற்பாடுகள் செய்திருந்தனர். மங்கலம் தடுப்பணை, ஆண்டிபாளையம் குளம், பெரியபாளையம் குளம் போன்றவை முக்கியமான குளங்கள். திருப்பூர் நகர நிர்வாகம் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து சி.பி.ஐ கட்சியின் முன்னாள் உறுப்பினரும், தொட்டிபாளையம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவருமான தோழர் மோகனிடம் பேசினோம்.

“திருப்பூரில் முன்பு இயற்கையான மழை பொழிவை நம்பி பல்வேறு குளம் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காவிரி கடைமடைப் பகுதிகளைப் போல் குளம் குட்டைகளுக்கு இடையே விரிவான இணைப்புக் கால்வாய் வலைப்பின்னல் இல்லையென்றாலும், பெய்யும் மழை சிறு சிறு குட்டைகளிலும், பின் அங்கிருந்து குளங்களுக்கும் பின்னர் நொய்யல் ஆற்றுக்கும் சென்ரு கலந்து விடுவதைப் போன்ற ஏற்பாடு இருந்தது” என்றார் தோழர் மோகன்.

தோழர் மோகன்

முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன், அதாவது பின்னலாடை ஏற்றுமதி விறுவிறுப்பான தொழிலாக மாறும் முன் இங்கே விவசாயம் நடந்ததா?

“நடந்தது. கால்வாய் பாசனம் நடக்கவில்லை. ஆனால், இங்கே இருந்த நீர் மேலாண்மை ஏற்பாடுகளின் காரணமாக நிலத்தடி நீர் வளம் மிகுந்து இருந்தது. ஐம்பது அறுபது அடிகளிலேயே நல்ல தண்ணீர் கிடைக்கும். எனவே இங்கே கிணற்றுப் பாசன முறை நடைமுறையில் இருந்தது. புகையிலை, கரும்பு போன்ற பணப்பயிர்களும், நெல்லும் விளைந்தது” என்றார்.

திருப்பூர் இன்றைக்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு பனியன் கம்பெனிகளே காரணம் என்று புரிந்து கொள்ளலாமா?

“அப்படிச் சொல்ல முடியாது. திருப்பூரின் நீராதாரங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் முதலைகளால் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் சீரழிக்கப்பட்டன. பல இடங்களில் விவசாயம் நடந்தபட்ட நிலத்துக்கு மத்தியிலேயே கூட ஒன்றிரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள குட்டைகள் இருக்கும். பின்னாடி ரியல் எஸ்டேட் காரர்கள் நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக்கிய போது மொத்தமாக குட்டைகளை மூடி விட்டனர். இது ஒருபக்கம் என்றால், புறம்போக்கு நிலங்களில் இருக்கும் பெரிய குளங்களையும் ஆக்கிரமித்தனர். இதையெல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டு விட்டது. அரசே போட்ட சாலைகளுக்காக கூட குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன..” எனத் தொடர்ந்தார் தோழர் மோகன்.

ஆக்கிரமிக்கப்படும் நல்லாத்துப் பாளையம் குளம்

ஒருபக்கம் திருப்பூரின் நீராதாரங்களும், நீர் வழித்தடங்களும் அரசின் ஆசீர்வாதத்தோடு நாசமாக்கப்பட்டன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பலநூறு அடிகளுக்கும் கீழ் இறங்கி பின் மறைந்தே போனது. சாயப்பட்டறைகள் பல லட்சம் செலவு செய்து அமைத்த ஆழ்துளைக் கிணறுகள் பூமிக்கடியில் நீரோட்டமில்லாத வெற்றுப் பகுதியில் முடிந்து வெறும் காற்றையே மேலே அனுப்பின. வேறு வழியில்லாமல் அதே ஆழ்துளாய்க் கிணற்றின் குழாய்களின் வழியே சாயக் கழிவுகளை பூமிக்குக் கீழ் அனுப்பி தங்கள் பங்குக்கு நிலத்தடி நீரை நஞ்சாக்கும் வேலையைச் சாயப்பட்டறைகள் செய்த போதும் அரசு முறைப்படுத்த முன்வரவில்லை.

இதற்கிடையே என்பதுகளில் இருந்தே திருப்பூர் நகரத்திற்குள் இடம்பெயர் தொழிலாளிகள் வந்து குவியத் துவங்கினர். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ற நகர அபிவிருத்தி திட்டங்களையும் அரசு புறக்கணித்ததோடு, முறையான கழிவு நீர் வடிவால் வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. திருப்பூர் நகரின் மொத்த கழிவுகளும் நொய்யலில் கலந்து இன்றைய நிலையில் நொய்யல் ஒரு சாக்கடை ஆறாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் குலோத்துங்கனைக் காண நொய்யல் ஆற்றின் கரையோரமாகவே பயணித்துச் சென்றோம். நல்லாத்தம்பாளையத்தைக் கடந்த போது அங்கிருந்த மிகப் பெரிய குளம் ஒன்று படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்கூடாகவே காண முடிந்தது, சில பத்தாண்டுகளுக்கு முன் மிகப் பெரிதாக இருந்த நல்லாத்தம்பாளையம் குளத்தில் இப்போது சில பத்து சதுர அடிகளுக்கு சாக்கடைச் சகதி மட்டுமே தேங்கி நிற்கிறது.

நல்லாத்தம்பாளைய குளத்திற்கு சுற்றுவட்டாரத்திலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்கள் அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தன. தேங்கி நின்ற சாக்கடைச் சகதியினுள் மீனைத் தேடி எங்கிருந்தோ வந்த நாரைக் கூட்டம் ஒன்று வந்திருந்தது. அந்த நாரைகள் விடாமுயற்சியோடு தமது அலகால் கிளறிக் கிளறி மீனைத் தேடி ஏமாந்து கொண்டிருந்த காட்சி நமது இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதை தெளிவுபடுத்தியது.

நால்லாத்தம்பாளைய குளத்தை ஒட்டிச் சென்ற தார் சாலைக்கு மறுபுறம் இன்னொரு சிறிய குட்டை ஒன்று இருந்தது; அதனுள் கரும்பச்சை நிறத்தில் தேங்கி நின்ற இடுப்பளவு தண்ணீருக்குள் சிறுவர்கள் சிலர் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இதுவும் சாக்கடைச் சகதிகளால் நிரம்பி விடும்.

திரூப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும் மூன்று கட்ட குடிநீர் திட்டங்கள் குறித்து தோழர் மோகனிடம் கேட்டோம்

“முதல் மற்றும் இரண்டாம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக மேட்டுப்பாளையம் பில்லூர் அனையில் இருந்து நீர் எடுக்கப்படுகின்றது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் அதிகபட்சம் 60 எம்.எல்.டி (1 எம்.எல்.டி = ஒரு கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும். ஆனால், தற்போது இவ்விரண்டு திட்டங்களின் மூலமும் சுமார் 25 எம்.எல்.டி தண்ணீர் தான் திருப்பூர் மாநகராட்சி பெற்றுக் கொண்டுள்ளது. புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிகபட்சம் 185 எம்.எல்.டி தண்ணீர் எடுக்க முடியும்; என்றாலும், வறட்சியின் காரணமாக சராசரியாக நூறு எம்.எல்.டி தண்ணீருக்கும் குறைவாகவே கிடைத்து வருகின்றது. கடந்த மாதங்களில் அதுவும் கூட இல்லாமல் சுத்தமாக வறண்டு விட்டது”

மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை எல் & டி தண்ணீர் என்று மக்கள் அழைக்கின்றார்களே?

“புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்தில் அரசுக்கு பத்து சதவீத பங்குகள் உள்ளது – மற்றபடி அதில் தணியார் முதலீட்டார்களின் பங்குகள் தான் அதிகம். புதிய பொருளாதார கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின், திருப்பூரின் குடிநீர் வழங்கலை முழுக்க தனியாருக்கு அளித்த விட வேண்டும் என்று முடிவெடுத்து 1995-ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகத்துக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. குடிநீர் திட்டத்தை அமல்படுத்தும் வேலையை செய்தது எல் & டி நிறுவனம் – ஆனால், தற்போது அதன் பராமரிப்பு முழுவதும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்திடம் தான் உள்ளது. மக்கள் ஒரு பழக்கத்தின் காரணமாக எல் & டி தண்ணீர் என்று சொல்வார்கள்” என்றார்.

மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் எல்&டி நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட்டது தற்போது மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தால் நடத்தப்படுகிறது

தண்ணீரை ஒரு சந்தைப் பொருளாக மாற்றி விலை வைத்து விற்பது என்பது இன்றைக்கும் கூட கேட்பதற்கே ஆத்திரமூட்டுவதாக உள்ளது. ஆனால், இருபது வருடங்களுக்கு முன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது மக்களிடையே எந்த எதிர்ப்பும் எழவில்லை. இவ்வாறு எதிர்ப்புகள் இன்றி தனியார்மய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அரசு தரப்பில் சில ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தனர்.

முதலாவதாக, மாநகராட்சி சார்பாக முதல் இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அதற்கான அடிக்கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை. பில்லூரில் இருந்து ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்ட வழித்தடத்திலேயே இன்னும் அகலமான குழாய்கள் அமைத்திருந்தால், மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கே தேவையில்லாமல் போயிருக்கும். இரண்டாவதாக, பவானியில் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை உபரியாக செல்லும் நீரைத் திருப்பி திருப்பூரின் குளம் குட்டைகளை நிறைத்து இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க வகை செய்யும் அவனாசி அத்திக்கடவு திட்டமும் பல பத்தாண்டுகளாக வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றது. இதன் காரணமாக திருப்பூர் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையிலேயே வைக்கப்பட்டிருந்தது. எப்படியாவது தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு மக்களையும் தொழில் நிறுவனங்களையும் ஒரு சூழலுக்குள் நெட்டித் தள்ளி விட்ட பின் தான் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்படுகிறது. அந்த சூழலில் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மக்கள் வரப்பிரசாதமாகவே பார்த்துள்ளனர்.

காவிரியும் பவானியும் இணையும் ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கள் பகுதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர் உறிஞ்சு மையம் ஒன்றை அமைத்துள்ளது புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம். தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து நின்று போன நிலையில் பவானியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் பல்லாயிரம் அடி ஆழத்திலிருந்து உறிஞ்சப்படும் சொற்ப நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருமையான நிறத்திலேயே வருகின்றது. இந்தாண்டு மழை பொழிவும் இல்லாமல், காவிரிநீரும் இல்லாமல் போனால், திருப்பூர் தாகத்தால் மரணிக்கும் நிலை தான் ஏற்படும்.

வினவு செய்தியாளர்கள் மக்களைச் சந்தித்த போது பலரும் இந்த தண்ணீர் பஞ்சத்துக்கு வானத்தையே நோக்கியே விரல் சுட்டினர். “மழையில்லை, கர்நாடகா காரன் தண்ணி விடலை…” என்றே மக்களில் பலரும் விரக்தியாக பேசினர். ஆனால், திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கையையோ ‘கடவுளையோ’ கர்நாடகாவையோ முழுவதுமாக பழி சொல்வதற்கில்லை. திருப்பூரின் தொண்டைக் குழியைத் தாகத்தில் தவிக்க விட்ட குற்றவாளி அரசு தான்.

நகர விரிவாக்கத்தை கண்டு கொள்ளாமல் ரியல் எஸ்டேட் முதலைகளின் சூறையாடலுக்கு வழி விட்டது, இயற்கையான நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதை அனுமதித்தது, நிலத்தடி நீரைச் செறிவூட்ட, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்தது, திருப்பூரின் ஆறுகளும் கால்வாய்களும் சாக்கடைகளானதை தடுக்கத் தவறியது, இன்றும் அவை சாக்கடைகளாகவே ஓடிக் கொண்டிருப்பதைத் தடுக்காமல் அனுமதிப்பது, பனியன் தொழிலுக்காக இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுவதை முறைப்படுத்த தவறியது என அரசின் குற்றப்பட்டியல் மிக நீண்டது.

நீர் மேலாண்மை, நகர்புற மேம்பாடு என ஒரு சிவில் சமூகத்தில் அரசும் அதன் உறுப்புகளும் செய்திருக்க வேண்டிய மிகக் குறைந்தபட்சமான அரசாளுகை தொடர்பான கடமைகளைக் கூட நிறைவேற்றாததுடன், சூழல் சீர்கேட்டுக்கும், தண்ணீர் பஞ்சத்துக்கும் திருப்பூரைத் தள்ளிவிட்டது அரசும் அதன் இயந்திரங்களும் தான்.

தற்போது நிலைமை மிகத் தீவிரமான திசையில் செல்லத் துவங்கிய பின், நடந்து வரும் மக்கள் போராட்டங்களின் இலக்காக தற்காலிக தீர்வுகளே உள்ளன; இந்நிலை மாறி, அரசு கட்டமைப்பின் தோல்வியையும் அது எதிர்நிலை சக்தியாக மாறி தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்திய குற்றவாளியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அரசே தங்களது எதிரியாக இருப்பதை மக்கள் உணர்ந்து போராட்டங்களை அந்த திசையில் செலுத்தினால் தான் திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்.

முற்றும்

– நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளார்கள்

டாஸ்மாக்கை மூடு – மணப்பாறை வீரப்பூர் பெண்கள் போர்க்கோலம் !

1

டந்த மே, 9 2017 அன்று காலை முதல் மணப்பாறை பகுதி வீரப்பூர் பெண்கள் சுமார் 100-பேர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வந்தனர். மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய இப்போராட்ட செய்தி அறிந்து அப்பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் அங்கு சென்று கலந்து கொண்டனர்.

அதன் பின் மக்களிடம் டாஸ்மாக் போராட்ட அனுபவங்கள் பற்றியும், மக்களின் விடாப்பிடியான போராட்டங்களே டாஸ்மாக் கடைகளை மூடும் என்று விளக்கியதை மக்கள் சொந்த அனுபவத்திலேயே புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆதலால் டாஸ்மாக்கை மூடும் அதிகாரம் நம்மிடம்தான் உள்ளது என மக்கள் புரிந்து கொண்டனர். அவர்களின் முழக்கமும் அப்படியாக மாறிவிட்டது.

இதையறிந்த போலீசு அப்பகுதி குடிகாரர்களின் துணையுடன் மக்களைக் கலைக்க முயற்சி செய்து வந்தது. அவற்றைத் தாண்டி பெண்கள் விடாப்பிடியாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக ஊர்சபை கூடி டாஸ்மாக்கை அகற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மணப்பாறை.

_____

விவசாயிகளை வாழவிடு ! மக்கள் அதிகாரம் மாநாடு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மணப்பாறை.

 

சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்

12

மாட்டுக்கறிக்குத் தடை! மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!

கண்டனக் கூட்டம்

இடம்  : நேருபார்க் (சங்கம் தியேட்டர் அருகில்)
நாள்    : மே 31, 2017.
நேரம் : காலை 9 மணி,

பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவ
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்
கையிலெடுத்திருக்கும் பண்பாட்டு ஆயுதம்தான்
மாட்டை விற்க தடை!

‘மிருகவதை’ தடுப்பு என்ற பெயரில்
மனிதவதை செய்கிறது பார்ப்பன பாசிச மோடி அரசு!

சைவ உணவு பழக்கமே மேலானது,
இதுதான் இந்து பண்பாடு என்று நிலைநாட்ட
அசைவ உணவுப் பழக்கத்தை அசிங்கம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மாட்டின் மூத்திரத்தை குடிக்கும் ஆர்.எஸ்.எஸ் –பி.ஜே.பி கும்பல்
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறது.
மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும்
பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை
செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!

மாட்டுக்கறி பிரியாணி, பீப்ரைஸ், சில்லி பீஃப்,
ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பீஃப் பக்கோடா உண்ணும் பிரியர்கள்
அனைவரும் இங்கே கொண்டு வாருங்கள் உண்போம்!
பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி வகுப்போம்!

மாட்டுக்கறி……… நம் உணவு….. நம் உரிமை….!
மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

சென்னை. தொடர்புக்கு – 95518 69588, 94451 12675.

ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்

0

உழவன் வேதனை கவர்மெண்டுக்குத் தெரியுமா? கலகம் செய்யாமல் விவசாயிகளுக்கு கௌரவம் கிடைக்குமா? ஊர் உலகை திரட்டுவோம்! ஏர்கலகம் செய்வோம்! – என்ற முழக்கத்தின் கீழ் மதுரை மாவட்டம், திருப்பறங்குன்றம் தாலுகா, செக்கானூரணியில் முருகவிலாஸ் மகாலில் கடந்த 14.05.2017 அன்று மாலை 5:00 மணியளவில். விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

வி.வி.மு தோழர் ஆசை   தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பாளர் தோழர் மோகன், 58 கால்வாய் கிராம விவசாய சங்க செயலர் பச்சைத்துண்டு பெருமாள், கூட்டுறவு வீட்டு வசதி பணியாளர் சங்கம் எம்.பி.லட்சுமணன், விவிமு உசிலை வட்ட செயலாளர் தோழர் போஸ், விவிமு திருமங்கலம் அமைப்பாளர் தோழர் வீரணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

இந்த கருத்தரங்கத்திற்கு செக்கானூரணியைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய நேசர்கள், மாணவர்கள்,  இளைஞர்கள் என அனைவரும் திரண்டு வந்திருந்தனர்.

தோழர் ஆசை தனது தலைமை உரையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை இந்த அரசு உதாசீனப்படுத்தும் நிலையில் விவசாயிகள் தம்மை இழிவு படுத்திக் கொண்டும், வருத்திக்கொண்டும் போராடும் முறையை மாற்றிக் கொண்டு மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர்களை இணைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று அரசின் தோளில் துண்டைப் போட்டு இழக்கும் போராட்டமாக முன்னெடுக்க  வேண்டும் என்று பேசினார்.

எம்.பி.லட்சுமணன் தனது சிறப்புரையில் விவசாயிகளின் அனைத்து தேசிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மல்லையாவுக்கும் அம்பானிக்கும் வழங்கும் தள்ளுபடியை,விவசாயிகளுக்கு ஏன் செய்யச்கூடாது என்று மத்திய, மாநில அரசை சாடினார். மேலும் விவசாய சங்கங்களை அனைத்து கிராமங்களிலும் கட்டுவதன் வாயிலாகத்தான் விவசயிகள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறினார்.

அய்யா பச்சைத்துண்டு பெருமாள் தனது சிறப்புரையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த 58 கிராம மக்கள்  பயன்படுத்தும் தொட்டி பாலத்தை நிறைவேற்ற 28 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு அது இல்லை இது இல்லை என்று காரணம் சொல்லி இழுத்து கொண்டே  இருக்கிறது, கேட்பதற்கு நாதியில்லா நிலையில் விவசாயிகளின் மீது உண்மையான அக்கறையுடன் இது போன்ற கருத்தரங்கு நடவடிக்கைளை விவசாசாயிகள்  விடுதலை முன்னணி செயல்படுத்தும் போது நம்பிக்கை வந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

தோழர் மோகன் தனது சிறப்புரையில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறிக்காகவிவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு மிச்சமான ஆயுத மூலப்பொருட்களைக் கொண்டு வந்து உரமாக நம்ம மண்னில் இறக்கி எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றவர்கள் மூலமாக விவசாயம் அழிக்கப்பட்டது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகம் உயரமாக இருந்தது. அந்தப் பயிர் அடியில் மண்ணுக்கும், மேல்பகுதி மாட்டுக்கும், நுனிப் பகுதி மனிதர்களுக்கும் என்ற விவசாயமுறை அழிந்து,  மாட்டுக்கு தீவனமும் குறைந்து போனது. இதுதான் மாடு வளர்க்க முடியாமல் போனதற்கு காரணம். ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் விவசாயத்தின் அழிவுக்கு காரணமான பன்னாட்டு கம்பெனிகளை எதிர்த்து விவசாயிகள் பேராடவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

கருத்தரங்ககு முடிந்து விவசாயிகள் கலைந்து செல்லும் போது இந்த கருத்தரங்கை பொதுக்கூட்டமாக நடத்தியிருந்தால்  இன்னும் நிறைய விவசாயிகள் வந்திருப்பார்கள். இந்த விசயங்களையெல்லாம் அறிந்திருப்பார்கள் என்று கூறினார்கள். விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.

மேலும் கூட்டத்திற்கு வராத விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தோம். என்ன தீர்மானம் போட்டீர்கள் என்று ஆர்வமாக விசாரித்தனர். விவசாயிகளின் குரலை அலட்சியப்படுத்தி நிர்வாணமாக்கும் அரசுக்கு எப்படி தெரியும் நமது உள்ளக் குமுறல். அதை கேளாத அந்த செவிகளை கேட்க வைக்கப் போராடுவோம் என இப்பகுதி விவசாயிகளிடம் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது, விவசாயிகள் விடுதலை முன்னணி.

-புதிய ஜனநாயகம் செய்தியாளர், உசிலை.

ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

1

சூர் சூளகிரி அருகே சப்படி மற்றும் காமன் தொட்டி பகுதிகளில் செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகாரத்தோடு இணைந்து கிராம மக்கள் பெண்கள் உள்ளிட்ட பலரும் திரளாக திரண்டு மூட வைத்தனர்.

இதுவரை ஒட்டுக் கட்சிகளுக்கு கூட்டம் காட்ட பயன்படுத்தி வந்த ஏழைப் பெண்கள் தங்கள் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கிற்கு மூடு விழா நடத்தியுள்ளனர். சப்படியில்  செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். மேலும்  கலெக்டருக்கும் மனு கொடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் தோழர்களை நாடினர் சப்படி கிராம மக்கள். வட்டாட்சியரிடம் சென்று மனு கொடுத்தால் எனக்கு அதிகாரம் இல்லை என்பார். கலெக்டரிடம் சென்றால் மனுவை பரிசீலிக்கிறேன் என்பார். காரணம் டாஸ்மாக் டெவலப்மெண்ட் ஆபீசரு கலெக்டர் தான், தாசில்தார் – வி.ஏ.ஒ அவருக்கு கீழே வேலை செய்பவர்கள். இதனால், மனு கொடுத்து பயனில்லை என விளக்கினார்கள் தோழர்கள்.

மக்கள் அதிகாரம் சொன்ன விளக்கத்தை நடைமுறையில் புரியவைத்த தாசில்தார்.

“இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்” என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம்  தோழர்கள்  சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ”எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்” என்று தாசில்தார் சொல்லி மக்களுக்கு இந்த அரசுக்கட்டமைப்பின் யோக்கியதையைப் புரிய வைத்தார்.

இதன் பின்னர் கிராமத்தில் கூட்டம் போட்டனர். 24 வயது கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கட்டிடத் தொழிலாளி  குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பெண்களின் போராட்டங்களையும் எடுத்து விளக்கப்பட்டது. இதன் பின்னர் மக்கள் வீரத்துடன் களமிறங்கினர்.

200 -க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள்           22.05.2017 திங்கள்கிழமை அன்று டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து அதன்படி அன்று காலை 10:00 மணிக்கே திரண்டனர். 12:00 மணிக்கு வழக்கமாக கடையை திறக்க வரும் டாஸ்மாக் ஊழியர்கள் யாரும் மக்கள் சக்தியைக் கண்டு கடையை திறக்க முன் வரவில்லை. மாறாக, வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் ஓடோடி வந்து கூடியிருந்த மக்களிடம் நைச்சியமாகப் பேசி போராட்டத்தை கைவிடச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்.

மக்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை காது கொடுத்து கேட்கத் தயாரில்லை. அதிகாரிகளையும், போலீசையும் திட்டிக் கொண்டே கடையின் பூட்டை இரும்பு ராடு மற்றும் பெரிய அளவிலான கருங்கற்களை கொண்டு அடித்து உடைத்தனர். பதறிப்போன டாஸ்மாக் ஊழியர்கள் ஓடிவந்து மக்களிடம் மன்றாடினர். உடனே கடையை காலிசெய்து விடுகிறோம் என்று வாக்களித்து அதன்படியே கடையில் இருந்த மதுபானங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாது என அதிகாரிகள் உறுதியளித்தபிறகே, மக்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

உணவுப் பொட்டலங்கலை வரவழைத்து அங்கேயா உணவருந்தும் மக்கள்

கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் போராடிய மக்களுக்கு உணவுப் பொட்டலம் வரவழைக்கப்பட்டு அங்கே தங்களின் மதிய உணவை முடித்துக் கொண்டனர். மீண்டும் அனைவரும் கூடி தங்களுக்குள்ளே பேசிக் கொண்டு 3 கி.மீ. தொலைவில் உள்ள காமன்தொட்டியில் உள்ள டாஸ்மாக் கடையையும் இவ்வாறே அகற்றவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அங்கிருத்து சுமார் 3 கி.மீ தூரம் ஊர்வலமாக சென்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக போலீசு அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு வளையம் போட்டு பாதுகாத்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் தடையை உடைத்துக்கொண்டு போலீசின் பயமுறுத்தல்கள் அனைத்தையும் அலட்சியப்படுத்திக்கொண்டே கடையின் பூட்டு மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு முன்னேறினர். செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மக்களின் போர்க்குணத்திற்கு அடிபணிந்து கடையில் இருந்த ரூ22 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு கடையை நிரந்திரமாக பூட்டினர்.

மக்கள் போராட்டத்தால் போலீசார் பாதுகாப்புடன் கடையை காலி செய்து ஓடும் டாஸ்மாக் நிவாகம்.

அடுத்ததாக, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு மதுக்கடை இயங்கி வந்த நிலையில் தற்போது இரண்டாவது கடையை அதே பகுதியில் திறந்துள்ளதை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்காவிடில் இதேபோன்று போராட்டம் நடத்தி அகற்றப்படும் என திரண்டிருந்த மக்கள் ஆவேசமாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

புக்கசாதம் – உத்தனப்பள்ளி — சூளகிரி சாலை, சின்னாறு தேசிய நெடுஞ்சாலை, சூளகிரி கீழ் தெரு ஆகிய பகுதிகளிலிருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை புதிய இடங்களில் அமைப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-பு.ஜ செய்தியாளர், ஒசூர்.

சென்ற வார கருத்துக் கணிப்பு முடிவுகள் !

0

ரஜினி – ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன?

கேள்விகள் :

  1. எந்திரன் 2 படத்திற்கான விளம்பரம்
  2. பாஜகவில் சேருவதற்கான முன்னோட்டம்.
  3. RSS குருமூர்த்தி-களின் சதித்திட்டம்.

பதிவான வாக்குகள் :

மொத்த வாக்குகள் : 842

  1. 46 % (391 வாக்குகள்) : எந்திரன் 2 படத்திற்கான விளம்பரம்.
    2. 26%  (219 வாக்குகள்) : பாஜகவில் சேருவதற்கான முன்னோட்டம்.
  2. 28%  (232 வாக்குகள்) : RSS குருமூர்த்தி-களின் சதித்திட்டம்.

மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது?

கேள்விகள் :

  1. இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு.
  2. பணமதிப்பிழப்பால் நடந்த துயரங்கள்.
  3. மாட்டுக்கறியை முன் வைத்து நடக்கும் கொலைகள்.
  4. அம்பானி, அதானி, மல்லையாக்களுக்கு செய்யும் உதவி.
  5. மோடியின் செல்ஃபி, விளம்பரம், உரைகள்.

பதிவான வாக்குகள் :

மொத்த வாக்குகள் : 525

  1. 15.43% (81 வாக்குகள்)     : இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு.
  2. : பணமதிப்பிழப்பால் நடந்த துயரங்கள்.
  3. 40.57% (213 வாக்குகள்) : மாட்டுக்கறியை முன் வைத்து நடக்கும் கொலைகள்.
  4. 18.29% (96 வாக்குகள்)     : அம்பானி, அதானி, மல்லையாக்களுக்கு செய்யும் உதவி.
  5. 8.38%  (44 வாக்குகள்)       : மோடியின் செல்ஃபி, விளம்பரம், உரைகள்.

மோடியை விமரிசிக்க மறுக்கும் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது?

கேள்விகள் :

  1. தந்தி டிவி.
  2. புதிய தலைமுறை.
  3. நியூஸ் 18 தமிழ்நாடு.
  4. நியூஸ் 7 தமிழ்.

பதிவான வாக்குகள் :

மொத்த வாக்குகள் : 740

182.3% (609 வாக்குகள்) : தந்தி டிவி.
2. 12.3% (91 வாக்குகள்)    : புதிய தலைமுறை.
3. 3.11%  (23 வாக்குகள்)      : நியூஸ் 18 தமிழ்நாடு.
4. 2.29% (17 வாக்குகள்0      : நியூஸ் 7 தமிழ்


ரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?

கேள்விகள் :

  1. மார்க்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா.

பதிவான வாக்குகள் :

மொத்த வாக்குகள் : 486

  1. 17.9% (87 வாக்குகள்)      :
  2. 25.93% (126 வாக்குகள்)  : மார்கெட் இல்லாத மோடி
  3. 56.17% (273 வாக்குகள்) : மார்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா.

தந்தி டிவியில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு ?

கேள்விகள் :

  1. சீமானுக்கு.
  2. பாஜக-வுக்கு.
  3. ரஜினிக்கு.
  4. தமிழருக்கு.

பதிவான வாக்குகள் :

மொத்த வாக்குகள் : 900

  1. 37.89% (341 வாக்குகள்)   : சீமானுக்கு.
  2. 29.33% (264 வாக்குகள்)  : பாஜக-வுக்கு.
  3. : ரஜினிக்கு.
  4. 8.67%   (78 வாக்குகள்)     : தமிழருக்கு.

ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

கேள்விகள் :

  1. ஆம்.
  2. இல்லை.
  3. தெரியாது.

பதிவான வாக்குகள் :

மொத்த வாக்குகள் : 484

  1. 65.91% (319 வாக்குகள்) : ஆம்.
  2. 18.18% (88 வாக்குகள்)   : இல்லை.
  3. 15.91% (77 வாக்குகள்)    : தெரியாது.

வினவு டிவிட்டர் தளத்தில் நடந்த கருத்துக் கணிப்பு முடிவுகள்

தருமபுரி டாஸ்மாக் போராட்டம் – வங்கி திருட்டு – களச் செய்திகள்

0

தருமபுரி  பாலக்கோடு  அருகே  அண்ணாமலைஅள்ளி   டாஸ்மாக்  கடையை  அடித்து நொறுக்கிய அப்பகுதி பெண்களின்  போராட்ட அனுபவம் !

ப்பகுதியில்  கடந்த  ஓருமாதகாலமாக  டாஸ்மாக்  இருக்கிறது என்கிறீர்கள்  இதனால்  என்ன மாதிரியான  பாதிப்புகளை  அனுபவித்துவந்தீர்கள்?

பஸ்டாப்பை ஒட்டியே  டாஸ்மாக் கடை, இங்கு எந்த நேரமும் கூட்டம் கூட்டமாக குடிச்சிட்டுதான் இருப்பாங்க. கெட்ட கெட்ட வார்த்தையால  பேசுவானுங்க. பொம்பளங்க  யாராவது வந்தா வெறிச்சி பாத்துக்கிட்டே  இருப்பானுங்க.அதுமட்டுமா?  10,15, வயசு  பசங்க குடிக்குறாங்க,10 வயசு  பொண்ணுங்க கூட  பள்ளிக்கூடத்துக்கு  போகமுடியல.

பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )

நாங்க சங்கத்துல இருக்கிறோம்,வாரம்வாரம்  பணத்தை  பேங்கல  போடனும்  அந்த வழியா வந்தா  பயமா? இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு  போற  பொண்ணுங்களுக்கு  பலாத்தாரம் ஏதாவது  நடந்திருமோ? என்கிற  பயம்  அதிகமா  இருந்துச்சு. எங்கள்ல  பலபேரு வீட்டுக்காரங்க  குடிக்கிறதில்ல, ஆனா  பொதுவா இவ்வளவு  பிரச்சினைகள்  இருக்கிறதால  இந்த கடை  இருக்க  கூடாதுங்கிற  கோபமும்  ஆத்திரமும்   எங்களுக்குள்ள  இருந்துச்சு.

இந்த கடையை   மூடுவதற்கு  என்ன  மாதிரியான  முயற்சியை  மேற்கொண்டிங்க?

2 முறை  200 பெண்கள்  சேர்ந்து  கலெக்கடர்  அலுவலகத்தில்  மனுக்கொடுத்தோம்.  அப்போது  15 நாள்   அவகாசம்  கொடுத்து  அதுக்குள்ள  எடுத்துடுறோம்   என்று  சொன்னாங்க. 15 நாளுக்கு  அப்புறம்  கடையை  எடுக்காம, சாராய  லோடை கொண்டுவந்து  இறக்கினாங்க. அப்பதான் எங்களுக்கு  புரிஞ்சிச்சு  எங்கள  ஏமாத்துறாங்கனு; அதுக்கப்புறம்  என்ன செய்யறதுனு  புரியாம  இருந்தோம் .

பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )

அப்பதான்  மக்கள்  அதிகாரத்துக்கார  அண்ணனுங்க  இரண்டுபேர்  வந்து  எங்ககிட்ட  பேசினாங்க,  நீங்களும்  இரண்டு  முறை  மனுக் கொடுத்துட்டீங்க  கலெக்டர்  கண்டுக்கவே இல்லை  சாராயத்தை  விற்க சொல்லறதே  கலக்டருதான். அவருக்கிட்ட  மனுக் கொடுத்தா சாராய கடையை மூடமுடியாது. அதனால  உடைப்பதுதான்   தீர்வுனு  சொன்னாங்க, அதுக்கப்புறம்தான்  எங்களுக்கு  ஒரு நம்பிக்கை  வந்துச்சு,நாங்களும்  உறுதியா யாருக்கும்  பயப்படாம  எறங்கி  உடைச்சோம்.

இந்தமாதிரி  சாராயக் கடையை  உடைச்சா  இது அரசாங்கத்தோட  பொதுசொத்து  அதனை  சேதபடுத்திட்டாங்க  என்று  குற்றம்  சுமத்துகிறார்களே?

அராசாங்க  பொது சொத்துனு சொன்னா? மளிகைகடைய  வச்சி கம்மி விலையில  அரிசி, பருப்ப  கொடுத்தா  மக்களுக்கு   உபயோகமா   இருக்கும். அதவுட்டுட்டு  டாஸ்மாக்கை  வைச்சதால  படிக்கிற  பசங்க குடிக்கிதுங்க. போற வழியில  பொண்ணுங்களுக்கு  ஏதாவது  ஆயிடுமோனு  பயந்து  சாகறதா இருக்குது. பல பெண்களின்  பூவையும்,பொட்டையும் இழந்து நிற்கிறோம்.

இரண்டு  நாளுக்கு  முன்னாடிதான்  இந்த சாராயத்தை  குடிச்சிட்டு  இங்க ஒருத்தன்  செத்துபோனான். அவனோட  குடும்பம், குழந்தைங்க  நடுத்தெருவுல  நிக்குது. பல பெண்களோட  வாழ்க்கை  இப்படிதான்  இருக்குது. இதுவா  பொதுசொத்து ?

பாலக்கோடு பகுதி மக்கள் போராட்டம் ( கோப்புப் படம் )

இப்போராட்டத்தின்  மூலமாக  தமிழ்நாட்டு  பெண்களுக்கு  என்ன சொல்ல வருகிறீர்கள்  ?

அவங்க   அவங்க ஊர்ல  வரக்கூடிய  டாஸ்மாக்கை விரட்ட மனுக்கொடுக்கிறத  விட்டுட்டு, அடிச்சி  விரட்டுங்க.  ஊருக்கள்  விடக்கூடாது. அப்போதுதான்  எங்கள  மாதிரி  நிம்மதியா  நடமாட முடியும்,வாழ முடியும்.

-பு.ஜ செய்தியாளர்.


வங்கியில்  சேமிக்கப்பட்ட   பணத்தை  பறிக்கொடுத்து   ஏமாந்த   தருமபுரி   அரசு ஊழியர்கள் !

தார்   இந்திய  குடிமகனின்  அடையாளம்,  பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு  என்றெல்லாம்  நியாயப்படுத்தி  அதனை  கட்டாயமாக்கியது  மோடி கும்பல்.  இதன் விளைவாக  இந்திய  குடிமகனின்   தனிமனித  சுதந்திரம்  பறிக்கப்பட்ட கையோடு, அவர்களின்  வாழ்வாதாரத்தை   பறிக்கும்  வகையில்  ரேசன்  மானியம் , சிலிண்டர்  மானியத்தை    வெட்டி வருகிறார்கள். வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சுவது  போல  சிறுக சிறுக   வங்கில் சேமித்து  வைத்திருக்கும்  பணத்திற்கும்   பாதுகாப்பு  இல்லாத  நிலை ஏற்பட்டுள்ளது.

படிப்பறிவில்லாத  பல கோடி மக்கள் வசிக்கும்   இந்தியாவில்  பணப்பரிவர்த்தணை, டிஜிட்டல் முறையை  கொண்டு வந்து  ஒட்டுமொத்த மக்களையும்  கழுத்தை  பிடித்து  நெட்டி  தள்ளி வரும் வேளையில் படித்த  அறிவுஜீவிகளே  பணத்தை  பறிக்கொடுக்கும்   சம்பவம்   நாடு முழுவதும்  அரங்கேறிவருகிறது.அதுதான்  தருமபுரியில்  சென்ற மாதம்  நடந்தது.

தருமபுரி   மாவட்டம் பென்னாகரத்தில்  அரசு மருத்துவ  மனையில் உதவியாளராக  பணிபுரிந்து ஒய்வு  பெற்றவர்  ஜெயமணி .  அவர் கூறுகையில்,  என்னுடைய  செல்லுக்கு   போன் வந்தது, அப்போது  உங்க பெயர்   ஜெயமணிதானே  என்று  கேட்டனர்.  அதற்கு  நானும்  ஆமாம் என்றேன்.  பிறகு  நான்  எஸ்.பி.ஐ -யில்  இருந்து  பேசுகிறேன். உங்களுடைய   வங்கி கணக்கு   காலாவதியாகிவிட்டது.   அதனை  ஆதார்  எண்ணுடன்  இணைத்து  புதுப்பிக்க வேண்டும்  அதனால்  உங்களுடைய  ஏடிஎம்  நெம்பரும்,ஆதார் நெம்பரும்  சொல்லுங்கள்  என்றதும்  நானும்  சொல்லிவிட்டேன்.

பிறகு  5  நிமிடத்தில்   என்னுடைய   வங்கிகணக்கில்  இருந்து  ரூ.1,000  எடுத்ததாக  என்னுடைய  செல்லுக்கு  தகவல் வந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.  பிறகு  அருகில் இருக்கும் எஸ்.பி.ஐ  கிளையில்   விசாரிக்கும்  போது  அந்த தொகை  மும்பையில்  எடுத்தாக  வங்கி மேளாலர் கூறினார். பிறகு  அந்த  மேளாலரை  கேட்கும்  போது  நீங்கதான்  எச்சரிக்கையாக  இருக்கனும்னு செல்லி, இந்த அக்கவுண்டை  மூடிவிட்டு  புதியதாக  அக்கவுண்டை   வைத்து  இனிமேல் எச்சரிக்கையாக  இருங்கள் என்று  கூறி அனுப்பினாங்க, புதியதாக  வங்கிகணக்கை  தொடங்கிய  அவர்  பணத்துக்கே  பாதுகாப்பு இல்லை அதனால   இனிமேல்  500 ரூபாய்க்கு  மேல  நான்  பணத்த வைச்சிக்கே மாட்டேன் என்று கூறி என்ன  நாடோ? என்ன  கவர்மண்டோ?  என்று  பதறினார்.

சீரியம்பட்டியை  சார்ந்த  அண்ணாமலை என்பவர்  அரசு போக்குவரத்து கழகத்தில்  நடத்துனராக  வேலைபார்த்து  வருபவர்.  அவர் கூறுகையில், என்னுடைய  மகள்  திருமணம்  கடந்த  9 ஆம் தேதி  நடக்க இருந்தது.  இந்நிலையில் தான்  ஒருத்தன்    என்னை   தொடர்பு கொண்டான்.   உங்கள்  பேர்  அண்ணாமலையா?  என்று  கேட்ட உடனே  நானும் ஆமாம் என்றேன்.  உங்கள்  கணக்கு  குளறுபடியாக  இருக்கிறது.  அதை சரிபார்க்க  வேண்டும் அதனால்  உங்களுடைய  ஏடிஎம்  நெம்பர் மற்றும் ஆதார்   நெம்பரை  கூறுங்கள்  என்று  கேட்டான். உடனே  நானும்   சொல்லிவிட்டேன். அடுத்த  நிமிடமே   என்னுடைய   வங்கி  கணக்கில்  ரூ. 3,000  எடுத்தாக  என்னுடைய   செல்லுக்கு  தகவல்  வந்ததை  பார்த்து  என்ன  செய்றதுன்னு  தெரியாம    திகைச்சி போய்ட்டேன். என்று  அழாத குறையாக  வெளிபடுத்தினார். இப்படி  பரவலாக  பலரும்  ஏமாற்றமடைவதை  பார்க்க முடிகிறது.

இந்த திருட்டு ஒரு மோசடி என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே பல வங்கிகள் தொலைபேசியில் ஏடிஎம் பின் எண்ணை சொல்லாதீர்கள் என்றெல்லாம் விளம்பரம் கொடுக்கிறார்கள். பிரச்சினை அதுவல்ல. மும்பையில் இருந்து தருமபுரி மக்களிடமிருந்து பணத்தை எடுத்த திருட்டு கும்பல் தனது அடையாளம் அல்லது ஆதார் எண்ணை மறைத்து விட்டு எப்படி எடுக்க முடிகிறது? ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று மிரட்டும் அரசு இத்தகைய திருட்டுக் கும்பலை பிடிக்க முடியாமல் இருக்கிறதே ஏன்?

எதற்கெடுத்தாலும் ஆதாரைக் கொடு என்று கேட்கிறார்கள். அதன் விளைவாகத்தான் இத்தகைய திருட்டுக் கும்பல்கள் நாடு முழுவதும் அப்பாவி மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கின்றன.

அரசாங்கமே  டாஸ்மாக்கை  தெருத்தெருவுக்கு  திறந்துவிட்டு   குடி நாட்டுக்கும் வீட்டுக்கும்  உயிருக்கும் கேடு என்று கூறி   குடிப்பவர்கள்  திருந்த வேண்டும்  என்று  அறிவுரை கூறுவது  போல, ஆதாரை  பலநாடுகளில்  சாத்தியமில்லை  என்று அறிந்தும்  ஆதார்  மூலம்  ஊழலை ஒழிக்க போகிறேன் என்று சவடால்  அடித்த  மோடியால்  இதுபோன்ற  மோசடியை  தடுக்க முடியுமா?   பறி கொடுத்த   பணத்தைதான்  மீட்டுக்கொடுப்பாரா?  மாறாக  ஏமாறக்கூடிய  மக்களை  பார்த்து  ;  மக்கள் ஏமாறாமல்  இருக்க  மக்கள்  விழிப்புணர்வாக  இருக்க வேண்டும். என்று அரசு  அறிவுரை கூறுவதை  வேடிக்கை    பார்த்து    ஏமாறுவதை  கைவிட்டுவிட்டு   வெகுண்டெழுந்து  போராடுவது, அரசை  கேள்விக்குள்ளாக்குவது என்று  செய்தால்தான்  நம்முடைய  பணத்திற்கு, நம்முடைய  சேமிப்பிற்கும்  பாதுகாப்பு  இருக்கும். அதற்கு  அணைவரும் ஒண்றினைவதுதான்  தீர்வு.

-புதிய ஜனநாயகம் செய்தியாளர்

தருமபுரி.
24.05.2017

கபாலி டிக்கெட் 2000 ரூபாய் காலா டிக்கெட் 5000 ரூபாய்

18

அண்ணன் வர்றாரு

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்…

கொள்ளையடிப்பதற்கான மணல்
இன்னும் மிச்சமிருக்கிறது ஆற்றில்,

திருடி விற்பதற்கான நீர்
இன்னும் மிச்சமிருக்கிறது நிலத்தடியில்,

ஒருமுறை சொன்னால் நூறுமுறை வெட்டி எடுக்க
இன்னும் மிச்சமிருக்கிறது கிரானைட்,

பச்சைத்தமிழன் குடிக்கவேண்டிய சாராயம்
இன்னும் மிச்சமிருக்கிறது டாஸ்மாக்கில்…

கால் கழுவ தண்ணீர் இல்லாவிட்டால் என்ன
பால் அபிசேகம் செய்ய கட்அவுட் இருக்கிறது

காவிரியில் தண்ணீர் ஓடாவிட்டால் என்ன
திரையரங்கில் காலா ஓடப் போகிறது

கபாலி டிக்கெட் இரண்டாயிரம்
காலா டிக்கெட் அய்யாயிரம்
தமிழனை முன்னேற்ற
தலைவர் வழி தனி வழி!

அவரை விட்டால்
இதெல்லாம் யாரால் முடியும்?

நாட்டை மிச்சம் வைக்காமல்
உச்சம் தொடுவதில்
மோடி என்னடா மோடி,

சூப்பர் ஸ்டார்
மோடிக்கெல்லாம் டாடி!

சிஸ்டம் சரியில்லை!
கஷ்டப்படுபவர்களே
இதோ… ரஜினி வருகிறார்
இனி  உங்களுக்கு என்ன கவலை?
கவலையே ரஜினியாக வரும்போது!

– துரை. சண்முகம்

விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!

1

விவசாயியை வாழ விடு! – கருத்தரங்கம் – மாநாடு

நாள் : ஆகஸ்ட் – 5, 2017. சனி ,
இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே!

வாழ்வதா சாவதா என்று தத்தளிக்கிறார்கள், டெல்டா விவசாயிகள். பிற பகுதி விவசாயிகளும்  அதேநிலைக்கு வேகமாகத் தள்ளப்படுகிறார்கள். இதைக் கண்டும் காணாமல் யாரும் இருந்துவிடமுடியுமா? விவசாயத்தின் அழிவு, மொத்த சமூகத்தின் பேரழிவு. இதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த அழிவை, இனியும் நாம் சகித்துக்கொள்ளலாமா?

விவசாயியின் சாவுக்கும் விவசாயத்தின் அழிவுக்கும் அவர்களின் தலைவிதியின் மீதோ, அறியாமையின் மீதோ,  இயற்கையின் மீதோ சிலர் பழிபோடுவது கொஞ்சமும் நியாயமில்லை. விவசாயியின் கோவணத்தையும் உருவிக்கொண்டு, உயிரையும் பறிப்பதற்கு வரிசைகட்டி நிற்கும் எதிரிகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள். விவசாயிகளின் எதிரிகள் அனைத்து மக்களின் எதிரிகளாக நிற்கிறார்கள்.

காவிரியில், முல்லைப்பெரியாறில் நமது உரிமையை மறுப்பவர்கள்; நமது ஆறுகளின் மணலைக் கொள்ளையடித்தும், கழிவுகளைக்கொட்டியும், ஏரி-குளம்-கண்மாய்ளை ஆக்கிரமித்தும் காடுகளை அழித்தும் நீர்நிலைகளை நாசமடையச் செய்தவர்கள். நமது உரிமைகளையும் இயற்கை வளங்களையும் காத்திடத்  தவறியதோடு, அவற்றை காத்திடப் போராடும் மக்களை மத்திய-மாநில அரசியல்வாதிகள் முதல் பொதுப் பணித்துறை, பாசனத்துறை, வனத்துறை நிர்வாக அதிகாரிகள், எல்லா மட்டப் போலீஸ் – நீதிமன்றங்கள் என அனைத்தும் ஒடுக்குகிறது.

அரசுடைமை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் முதல் கந்துவட்டிக்காரர்கள் வரை எல்லோருமே ஏதோ பிழைத்துப்போகட்டும் என்று விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து உதவி செய்யவில்லை. ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் ஒருபோதும் அழுவதில்லை. டிராக்டர்கள் முதல் விதை, உரம், பூச்சி மருந்து அறுவடை இயந்திரங்கள் வரை வியாபாரமாகவும் வட்டியாகவும், விளைபொருளாகவும் கொள்ளையடிக்கவே கூவிக்கூவிக் கடன் கொடுக்கிறார்கள். அந்திய நாட்டுப் மூலதனத்தை அதிகவட்டிக்குக் கொடுத்து முழுமையாக வசூலிக்கமுடியாமல் போனால்கூட அவர்களுக்கு நட்டமில்லை. வியாபார இலாபத்தோடு வட்டிகிடைக்கும்வரை ஆதாயம்தான். ஆகவே கடன்காரர்கள் யாரானாலும் விவசாயிகளுக்கு எமனாக நிற்கிறார்கள்.

என்ன பயிரிட வேண்டும்? எப்படி பயிரிட வேண்டும்? என்று வேளாண் பல்கலை முதல் வேளாண் துறை அதிகாரிகள் வரை சொன்ன அறிவுரைகளைத்தான்  விவசாயிகள் அமுல்படுத்தினார்கள் பசுமைபுரட்சி அதிக விளைச்சல் தரும் என்று ரசாயண உரம் போட்டு மண்ணை நாசமாக்கினார்கள். பாராம்பரிய விதைகளை அழித்தார்கள். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் நீர்நிலைகளை பராமரித்து தூர்வாராமல் சீர்குலைத்தார்கள். விளை நிலங்களை ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றினார்கள். வரன்முறையற்று ஆற்று மணலை கொள்ளையடித்தார்கள். நிலத்தடி நீரை உறிஞ்சும் மரங்களைப் பயிரிடச் சொன்னார்கள். இவ்வாறு விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன்  சாக வேண்டும்?

மோடி அரசு காவிரி நீர் உரிமையை மறுத்ததுடன் டெல்டா விவிசாயிகளை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன்,ஷேல் கேஸ் என அழிவுத்திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வருகிறது. வாழவிடு என விவசாயிகள் போராடினால் தேச துரோகி, பிரிவினைவாதி. நக்சலைட் என அவதூறு பேசுகிறது. போராடுபவர்களை கண்காணிக்கிறது, கைது செய் ஒடுக்குகிறது தமிழகப் போலீசு. கார்ப்பரேட் வளர்ச்சிக்கு தமிழர்களை தியாகம் செய்ய சொல்கிறது பி.ஜே.பி. அரசு.

120 கோடி இந்திய மக்களுக்கு எவ்வளவு உணவு தேவை. அதை எவ்வாறு உற்பத்தி செய்வது? என்ன விலை கொடுத்தால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும், என்ன விலைக்கு விற்றால் மக்கள் வாங்குவார்கள் என்ற மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமும், கொள்கையும், அக்கறையும், மத்திய – மாநில அரசுகளிடம் இல்லை.

விவசாயிகளுக்கு தீர்வாக மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மூங்கில், பருத்தி பயிரிடுதல், எலுமிச்சையை ஊறுகாயாக மாற்றுதல், மாம்பழத்தை பழச்சாறாக்கிசந்தையில் போய் விற்பனை செய்தல் என புண்ணுக்கு புணுகு தடவும் ஆலோசனைகள்தான் முன் வைக்கப்படுகிறது.

இடு பொருள் மான்யம் ரத்து. விளைபொருளுக்கு ஆதார விலை இல்லை. தப்பிக்க வழி தெரியாமல், அரசும் கைவிட்ட நிலையில் விவசாயிகள் தற்கொலைக்கு செல்கின்றனர். ஊரில் இருந்தால் சிக்கி கொள்வோம் என இளைய தலைமுறை கிராமத்தை விட்டு ஓடுகிறது. நாடு முழுவதும் கடந்த 16 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் 47 விவசாயிகள் சாகிறார்கள். விவசாயிகளை சாகடிக்காதே என டெல்லியில் தமிழக விவசாயிகள் கதறினார்கள். நாடே பதறியது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என வாக்குறுதி கொடுத்த மோடிக்கு அவர்களைப் பார்க்கவும் மனமில்லை. அவரது கட்சியோ விவசாயிகள் போராட்டத்தை கொச்சைபடுத்தியது. மத்திய, மாநில அரசுகளோ நா கூசாமல் புளுகுகின்றன.

அம்பானி அதானிகளுக்கு, மல்லையாவுக்கு ஏழு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மத்திய அரசு. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மொத்த வாராக்கடனில் விவசாயிகள் வாங்கிய கடன் 1% மட்டுமே. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடன் சுமார் 70%. பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் தொகை வெறும் மூன்று சதவீதம்தான். அதிலும் 75 சதவீதம் வேளான் துறை நிறுவனங்களுக்குதான் செல்கிறது. விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் 2025ஆம் ஆண்டுக்குள் தமிழகம் என்ற அறிக்கையில் நாட்டை 75% நகரமயமாக்க வேண்டும்; கிராமபுற மக்களை அதிவேகமாக வெளியேற்ற வேண்டும் என கூறுகிறது. அப்போதுதான் அடிமாட்டு கூலிக்கு ஆள் கிடைப்பார்கள். மலிவு விலையில் நிலம் கிடைக்கும்.

குஜராத்தில் தேசாய் பார்தி என்ற நிறுவனம் 7000 ஏக்கரில் மாம்பழம் வாழை சாகுபடி செய்கிறது. மெக்னொல்ட் என்ற நிறுவனம் பல ஆயிரம் ஏக்கரில் உருளை கிழங்கு பயிரிடுகிறது. ஏ.சி.ஐ.எல். பருத்தி பயிரிடுகிறது. ஜெயின் என்ற சொட்டு நீர்பாசன நிறுவனம், வெங்காய உற்பத்தி செய்கிறது. இவ்வாறு ஒற்றை பயிர் சாகுபடியால் மண்வளம் சூறையாடபட்டு, நீர்வளம் அழிந்து போகும். இதேபோல் நாடு முழுவதும் உலக வங்கி உத்திரவை, காட் ஒப்பந்தத்தை அமல் படுத்துவதுதான் மத்திய அரசின் விவசாயக்கொள்கை. ரேசன் கடை, இலவச கல்வி, அரசு மருத்துவமனை, விவசாயம் ஆகியவற்றிற்கு ஒதுக்கும் மான்யத்தை ரத்து செய்து மொத்த மக்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சந்தையில் தள்ளி நம்மை பணைய கைதியாக மாற்றியிருக்கிறது மத்திய அரசின் கொள்கை.

விவசாயம் என்பது இயற்கை பொருளாதாரம், சுய தேவைக்கான உற்பத்தி என விவசாயிகள் தனக்குள் சுருங்கி பார்க்க கூடாது. மழை பெய்தால், கடன் தள்ளுபடி கிடைத்தால் தீர்வு கிடைக்கும் என்ற சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். விவசாயம், தொழில் என அனைத்தையும் அரசே கட்டுப்படுத்தும் வகையில், கார்ப்பரேட் நலன்களுக்காகவே யோசிக்கும் அரசியல் பொருளாதாரமாக விவசாய பொருளாதாரத்தை மாற்றிவிட்டது, அரசு.

‘மக்கள் நல அரசு’ என்பது கைவிடப்பட்டதுடன், மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வளிக்க முடியாமல் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் ஊழலுடன் கிரிமினல்மயமாக மாறி நிற்கிறது. மக்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்ளட்டும் அவர்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தை வங்கியில் போட வைத்து வட்டி, வரி வசூலிக்கலாம் என்ற காலனிய கொள்கைதான் இன்று அமல்படுத்த படுகிறது. அனைவருக்கும் வேலை என்பதை கேள்விகுறியாக்கி தீர்வு காணமுடியாத அரசு, தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க என்ன அருகதை இருக்கிறது?

விவசாயிகள் சிலந்தி வலையில் ஈ -யாக சிக்கித் தவிக்கிறார்கள். சிலந்தியிடமே கோரிக்கை வைக்க முடியுமா? அதன் பிடியிலிருந்து அறுத்த கொண்டு வெளியேறினால்தான் விடிவு பிறக்கும். விவசாயிகள் செத்தால் என்ன நட்டம்? என்பதுதான் மோடி அரசின் கொள்கை.

இரக்கமற்ற பேயாக மாறிய இந்த அரசிடம் வாழவிடு என கெஞ்சி பயினில்லை. விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என ஆள்பவர்களை எச்சரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல. போராடும் அனைத்து பிரிவு மக்களுக்கும் இதுதான் தீர்வு.

விவசாயிகள் மற்றும் நாட்டுமக்களின் நலன்களுக்கானதாக விவசாய உற்பத்தியை விரிந்த பார்வையுடன் அணுக வேண்டும். உணவு உற்பத்தியில் சுயசார்பு. தன்னிறைவு. அனைவருக்கும் வேலை உத்திரவாதம். சுற்று சூழல் பாதுகாப்பு, இறையாண்மை உடைய விவசாயம் என்ற மாற்று தீர்வை உருவாக்க வேண்டும். அதற்கு மக்களுக்கே அதிகாரம் வேண்டும்.

விவசாயத்தின் அழிவு, மொத்த சமூகத்தின் பேரழிவு. அனைத்து மக்களும் ஒன்று திரளுவோம் . விவசாயியை வாழ விடு… என்ற குரல் ஓங்கட்டும்,

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம் – 91768 01656.

திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

1

திருப்பூர் ரிப்போர்ட் – பகுதி 2

உள்நாட்டுக்கான பனியன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திருப்பூர், எழுபதுகளின் இறுதியில் இருந்து மெல்ல மெல்ல ஏற்றுமதிக்கான உற்பத்தியைத் துவங்கியது. இந்தியச் சந்தைக்கான உள்ளாடை உற்பத்தி எனும் அளவில் இருந்த காலத்தில் சலவைப் பட்டறைகள் பின்னர் ஏற்றுமதிக்கான உற்பத்தி விறுவிறுப்படைந்த காலகட்டத்தில் சாயப்பட்டறைகளாக உருமாறின. இன்றைக்கு சுமார் 451 சாய பட்டறைகள் திருப்பூரைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

சாக்கடையாக ஓடும் நொய்யலின் கிளை

பின்னலாடை உற்பத்திச் சங்கிலியில் சாயபட்டறை, பிரிண்டிங் பட்டறை மற்றும் வாசிங் ஆகிய கட்டங்களில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப் படுகின்றது. திருப்பூரின் சூழல் சீர்கேடுகள் அனைத்துக்கும் பனியன் கம்பெனிகளை நோக்கியே விரல் நீட்டுகின்றன பல்வேறு என்.ஜி.ஓ அமைப்புகள். குறிப்பாக நிலத்தடி நீரை மாசுபடுத்தியதற்கு முழுமுதற் காரணமாக திருப்பூரின் சாயப்பட்டறைகளை குறிப்பிடுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

இதில் உள்ள உண்மைத் தன்மையை பரிசீலிப்பதற்கு முன், திருப்பூரின் தொழிற் பட்டறைகள் தண்ணீர் பஞ்சத்தால் படும் சிரமங்களை பார்த்து விடுவோம். ஏனெனில், திருப்பூரின் தொழிற்பட்டறைகள் வரம் கொடுக்கும் தேவதை இல்லாவிடினும், பிழைக்க வழியற்றவர்களுக்குச் சோறு போட்டுக் காப்பாற்றும் சூனியக்காரி அல்லவா?

”கடந்த ஒரு வருசமா யாரும் புதிய சாயபட்டறைகள் திறக்கலை. இருக்கிற சாயப்பட்டறைகளும் வரிசையா மூடிட்டு வர்றாங்க… அனேகமா நான் ஒருத்தன் தான் சமீப காலத்துல புதுசா சாயபட்டறை திறக்கிறவனா இருப்பேன்னு நினைக்கிறேன்” எனச் சொல்லி சிரிக்கிறார் சந்திரசேகர். சுமார் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ’ஸ்ரீ வாரி கலர்ஸ்’ எனும் பெயரில் திறக்கப்படவுள்ள தனது சாயப்பட்டறையில் சில நாட்களுக்கு முன் நிறுவப்பட்ட புதிய இயந்திரங்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

ஸ்ரீ வாரி கலர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேகர். பின்னிருப்பது ஒரு கோடி முதலீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாய இயந்திரம்.

“அப்படி என்ன நம்பிக்கை?”

“நம்பிக்கை எல்லாம் ஏதுமில்லை.. இருபத்தைந்து வருசமா வேற கம்பெனியில கலர் மாஸ்டராவே வேலை பார்த்திருக்கேன். இதைத் தவிற வேற தொழில் எதுவும் தெரியாது. எப்படியாவது முட்டி மோதி மேல வந்திரலாம்னு ஒரு நம்பிக்கை தான்” என்றார்.

”உங்களோட பட்டறையின் உற்பத்தித் திறன் பற்றி கொஞ்சம் சொல்லுங்க”

”எங்களோட இயந்திரம் தினசரி அதிகபட்சமா 2600 கிலோ துணிக்கு சாயம் போடும் அளவுக்கு செயல் திறன் கொண்டது. இதுவே ரொம்ப சின்ன யுனிட் தான். பெருந்துறை சிப்காட்டில் இருக்கும் ரோகினி மாதிரி பெரிய யூனிட்டுகள்னா 30 ஆயிரத்திலேர்ந்து 50 ஆயிரம் கிலோ வரைக்கும் கையாளும் திறன் கொண்ட இயந்திரங்கள் வைத்திருப்பார்கள்..”

”சாயப்பட்டறைக்கு தண்ணீர் தான் முக்கியம். இப்போ திருப்பூர்ல மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலைமைல உங்களுக்கு தொழில் செய்ய மட்டும் எப்படி தண்ணீர் கிடைக்கும்?

”சிரமம் தான்.. எப்படியாவது மழை பெய்து இந்த வருசமாவது நிலைமை சரியாகிடும்னு நம்பறோம்”

”உங்களுடைய இந்த பட்டறையை இயக்க தேவைப்படும் தண்ணீருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்?”

”மறு சுழற்சி மையத்துக்கு மாதா மாதம் ஐந்து லட்சம் கட்டணமா செலுத்தனும். அது போக ஒவ்வொரு நாளும் எல் & டி கிட்டேர்ந்து 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்கனும்.. எல் & டி தண்ணீர் லிட்டருக்கு 8.50 பைசா. எல்லாம் சேர்த்துக் கணக்குப் பார்த்தா எப்படியும் மாசம் ஆறு லட்சம் வரைக்கும் தண்ணீருக்காக செலவழிக்கனும்” என்றார்.

கங்கா நகரில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு பொது மையத்தின் வெளிப்புற தோற்றம். சுமார் 40-50 சாயபட்டறைகளின் கழிவு நீர் இங்கே சுத்திகரிக்கப்படுகின்றது.

“தண்ணீருக்கே ஆறு லட்சமா?”

“சார், அப்படியாவது குடுத்தா பரவாயில்லைங்க. வாரத்துக்கு ரெண்டு நாள் தான் தண்ணீர் தர்றான். மற்ற நாட்கள்லே மறுசுழற்சி மையத்திலேர்ந்து குறைவா தர்ற தண்ணீரை வச்சி சமாளிச்சாகனும். சனி ஞாயிறு பட்டறையை இயக்க கூடாது. அப்படிப் பார்த்தா, வாரத்துல மூனு நாளைக்குக்கூட முழு உற்பத்தித் திறனோட பட்டறையை இயக்க முடியாதுங்க”

”இந்த நிலைமையில உங்களால பட்டறையை லாபகரமா இயக்க முடியுமா?”

”ஏற்கனவே போட்ட முதலீடெல்லாம் கடன் வாங்கிப் போட்டது தான். நல்லா மழை வந்து, தண்ணீர் பிரச்சினை தீர்ந்து எல்லாம் சரியா போச்சின்னா எப்படியும் நாலு அல்லது ஐந்து வருடத்துல நிமிர்ந்துடுவேன். ஆனாலும், பெரிய லாபம் ஏதும் பார்க்க முடியாதுங்க. கைய கடிக்காம ஓட்டிக்கலாம். அவ்வளவு தான்” என்ற சந்திரசேகர், ஏற்கனவே நாற்பதுகளின் மத்தியில் இருந்தார்.

கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து உபரியான கழிவு நீர் குடியிருப்பு பகுதி நோக்கி திறந்து விடப்படுகின்றது.

”மறுசுழற்சி மையங்கள் பற்றிச் சொன்னீங்க. இந்த இடத்துல ஒரு கேள்வி, திருப்பூரோட நிலத்தடி நீரை நாசமாக்கினதே சாயபட்டறைகள் தான்னு சொல்றாங்களே, அதைப் பத்தி என்ன சொல்றீங்க?”

”ஒரு பத்து வருசத்துக்கு முன்னே நீங்க சொல்றது உண்மை தான்” என சங்கடமான தொனியில் சொன்னவர், மேலும் தொடர்ந்தார் “இப்போ விதிமுறைகள் கடுமையாக்கியிருக்காங்க. பத்து வருசத்துக்கு முன்னே நடந்த கோர்ட் கேசுக்கு அப்புறமா நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்காங்க. பத்து வருசமாவே நாங்க கழிவு நீரை நேரடியா சாக்கடைலையோ, நிலத்துக்கு கீழேயோ விடறதில்லே. திருப்பூரைச் சுற்றி 16 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைச்சிருக்காங்க. இதுக்கு அரசு 200 கோடி ரூபாய் மானியம் கொடுத்தது – மிச்சத்தை சாயப்பட்டறை முதலாளிகள் சங்கம் போட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களோட நிர்வாகம் தனியார் கையில தான் இருக்கு. எங்களோட கழிவு நீரெல்லாம் இந்த மையங்களுக்குப் போகும், அதில் 70 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு எங்களுக்கே திரும்பி வந்துடும்” என்றார்.

சுத்திகரிப்பு மையத்தில் இருந்து வெளியேறு அமிலக் காற்றால் அக்கம் பக்கத்தில் பாதிக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மற்றும் பெயிண்ட்டையும் மீறி உள்ளுக்குள் துருவேறிய இரும்பு கேட்

திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் நஞ்சாகிப் போக சாயப்பட்டறைகள் ஒரு காரணம் என்றாலும், அவைகளே முழு காரணம் அல்ல. தொன்னூறுகளில் ஏற்றுமதிக்கான உற்பத்தி உச்சகட்டமாக நடந்து வந்த நிலையில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தங்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி எவ்வாறு நடக்கின்றது, அப்பொருட்களின் உற்பத்தி நடைமுறைகளில் சூழலியல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனரா என்பன போன்ற கண்காணிப்புகள் இல்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு உற்பத்தி செய்வதற்குத் தேவையான சுரண்டல் பின்னிலமாகவே திருப்பூரைப் பாவித்து வந்த காலம் அது. தொன்னூறுகளின் இறுதியில் மேற்குலக நாடுகளின் மக்களிடையே சூழலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளில் உள்ள ஏற்றுமதிக்கான உற்பத்தி அலகுகளுக்கு பெயரளவிலான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன.

25 தொழிலாளிகள் பணிபுரியும் ஒரு சிறிய யுனிட்

தொழில் வளர்ச்சியை குறிப்பிட்ட பிராந்தியத்தில் திட்டமிட்டு ஏற்படுத்துவது இயல்பாக ஒரு பிரதேசத்தில் உருவாகி வரும் தொழில்களுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உத்திரவாதப்படுத்திக் கொடுப்பது, அந்தத் தொழிலின் விளைவாக சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடிக்கு ஏற்பாடுகள் செய்வது, தொழில்களுக்குத் தேவையான உள்ளீட்டுப் பொருட்களும் கச்சாப் பொருட்களும் எளிதில் கிடைக்க வகை செய்வது ஒரு அரசின் கடமை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இதே வசதிகளை காலில் விழுந்து செய்து கொடுக்கும் அரசு, திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்நாட்டு முதலாளிகளின் சொந்த முயற்சியில் வளர்ந்த தொழில்களுக்கு செய்து கொடுப்பதில்லை என்பதோடு நெருக்கடி முற்றும் சமயங்களில் புதிய கட்டுப்பாடுகளை திணிக்கவும் செய்கின்றது.

மறுபுறம், தொடர்ந்து கொள்முதல் விலையைக் குறைத்துக் கொண்டே வரும் பன்னாட்டு இறக்குமதியாளர்களின் நெருக்கடியையும் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே,  பனியன் கம்பெனிகளும் அதனுடன் தொடர்புடைய சாயபட்டறைகள் உள்ளிட்ட பிற தொழிற்பட்டறைகளும் இரண்டாயிரங்களின் மத்திய பகுதி வரை பெயரளவில் இருந்த சூழலியல் சார்ந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டன. நொய்யலாற்றிலும் நல்லாற்றிலும் சாயக் கழிவுகளைக் கலந்தது போக,  பல சாயபட்டறைகள் கழிவுகளை ஆழ்துளைக் கிணறுகளுக்குள் இறக்கி நிலத்தடி நீரை நஞ்சாக்கின. நிலைமை கைமீறிச் செல்லும் வரை அரசு நிர்வாகம் இவையெதையும் கண்டு கொள்ளாமலே இருந்துள்ளது.

”அரசாங்கமே தண்ணீர் விநியோகம் செய்யலாம் சார். காசுக்குக் கூட தரட்டுமே? பரவாயில்லை. அதில் கிடைக்கிற வருமானத்தை வச்சி மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம், இல்லேன்னா கம்பெனிகளுக்கு தண்ணீரை காசுக்கு விற்று விட்டு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம். நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு புதிய திட்டங்கள் போட்டு அதில் முதலீடு செய்யலாம். அதே போல மறுசுழற்சி மையங்களைக் கூட முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அரசாங்கமே துவங்கி அதைப் பயன்படுத்த பட்டறைகளிடம் கட்டணம் வசூலிச்சிருக்கலாம். ஆனா, திருப்பூரோட தொழில் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடலை. எல்லாத்தையும் தனியார்ட்ட ஒப்படைச்சி அவன் தான் கோடி கோடியா லாபத்தை அள்ளிட்டுப் போறான். அதுவும் நிலைமை கைமிஞ்சிப் போன பின்னாடி தான் செய்தாங்க” என்கிறார் சி.கே ரோட்டரி பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் குலோத்துங்கன்.

சி.கே பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் உள்தோற்றம்.

”தனியார் கிட்டே இருந்தா தான் எல்லாம் தரமா இருக்கும்னு சொல்றாங்களே?” என்றோம்.

”கிழிச்சாங்க. எல் & டி தண்ணீரோட பி.பி.எம் அளவு 800 வரை இருக்கு. எங்களுக்கு 300க்கு உள்ளே பி.பி.எம் அளவு இருந்தா தான் பிரிண்டிங் தரமா இருக்கும். அதை ஈடுகட்ட நாங்க கலர் மையை அதிகம் பயன்படுத்துரோம். இது உற்பத்திக்கான செலவை அதிகரிக்குது. அது மட்டுமில்லாம, தண்ணிக்காக மட்டும் தினசரி 1500 ரூபா வரைக்கு செலவு செய்ய வேண்டியிருக்கு. அப்படியும் தினசரி தண்ணி கிடைக்க மாட்டேங்குது. வாரத்துல ரெண்டு நாள் கிடைச்சா அதிர்ஸ்டம். எங்களுக்கே சொந்தமா நீர் சுத்திகரிப்பு மையம் இருக்கு – ஆனால், அதில் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு லிட்டருக்கு 25 பைசா ஆகும். தண்ணீர் இல்லாம ஒரு நாள் மிசினை நிறுத்தினா நாற்பதாயிரம் நட்டமாகும். இந்த நட்டத்தை தவிர்க்கவாவது மிசினை ஓட்டியாக வேண்டியிருக்கு. இது புலிவாலை பிடிச்ச கதை சார். விடவும் முடியாது, பிடிச்சிகிட்டே ஓடறதும் ஆபத்து…” என்கிறார் குலோத்துங்கன்.

குலோத்துங்கனின் நிறுவனம் தினசரி நான்கு டன் துணிகளுக்கு பிரிண்ட் அடிக்கும் உற்பத்தித் திறன் கொண்டது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான நாட்கள் முழு உற்பத்தித் திறனோடு இயக்குவதில்லை. கடந்த இருபதாண்டுகளில் இந்த நிறுவனத்தில் லாபம் சுமார் 70 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 100 தொழிலாளிகள் வேலை செய்யும்  இந்நிறுவனத்தை இழுத்து மூடி விட்டால் நூறு குடும்பங்களின் நிலை கேள்விக்குள்ளாகி விடும் என்கிற கவலை குலோத்துங்கனிடம் வெளிப்பட்டது.

சி.கே பிரிண்ட்ஸ் நிறுவனத்தின் பணிபுரியும் தொழிலாளர்கள்

ஒருபக்கம் உற்பத்திக்கான மூலதன உள்ளீடு அதிகரித்துக் கொண்டே செல்ல, இன்னொரு புறம் துணிகளை இறக்குமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்முதல் விலையைப் படிப்படியாக குறைத்து வருகின்றன. அரசோ தண்ணீர் போன்ற அத்தியாவசிய வசதிகளையும் கூட செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றது.

இதை விடச் சிறிய நிறுவனங்களின் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. நாங்கள் ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் திரு கண்ணனைச் சந்தித்தோம். சாயமேற்றி, பிரிண்ட் செய்த பின் துணிகளைத் தைப்பதற்கு முன் துவைத்துக் கொடுக்கும் நிறுவனம். 12 தொழிலாளிகள் இரண்டு சிப்டாக பணிபுரிகின்றனர். சொந்தமாக நீர் சுழற்சி மையம் ஒன்றை அமைத்துள்ளார்.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவன முதலாளி கண்ணன்.

”தண்ணிக்காக மட்டும் மாசம் நாற்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகுது சார். பதினெட்டு லட்சம் செலவுல ஆர்.ஓ பிளாண்ட் ஒன்னு போட்டிருக்கோம். இதை நடத்தவே மாசம் ஐம்பதாயிரம் செலவாகும்.. எல் & டி காரன் கிட்டே தண்ணீர் இணைப்பு கேட்டா மெயின் ரோட்டிலேர்ந்து பைப் இழுக்கிற செலவை நீயே பார்த்துக்கன்னு சொல்லிட்டான். அதுக்கு எப்படியும் ஏழு லட்சம் செலவாகும். அவ்வளவு செலவு செய்தாலும், முறையா தண்ணீர் தரமாட்டான்” என்கிறார் கண்ணன்.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவனம் (துணியை சலவை செய்யும் நிறுவனம்) இங்கே துணியை வெளுக்க நீராவியை உற்பத்தி செய்யும் கொதிகலன். பழைய பாணியில் விரகு வைத்து எரிக்கிறார்கள்.

தொடர்ந்து குறைந்து வரும் கொள்முதல் விலையால் குறைந்து கொண்டே செல்லும் லாபம், தண்ணீர் பற்றாக்குறை என முதலாளிகளின் கழுத்தைச் சுற்றிலும் கத்தி இருந்தாலும், நிலைமையைச் சீர்செய்வதற்கு உறுதியான கோரிக்கைகளோ போராட்டங்களோ எழவில்லை. மாறாக, மூலதன உள்ளீட்டையும் லாபத்தையும் ஈடுகட்ட தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிகின்றன. இன்றைய நிலையில் திருப்பூரில் ஒரு சிப்ட் வேலை என்பது குறைந்தபட்சம் 12 மணி நேரமாக உள்ளது. வடமாநிலத் தொழிலாளிகள் பீஸ் ரேட் அடிப்படையில் வேலை செய்வதால், குறிப்பிட்ட உற்பத்தி இலக்கை அடைவதற்காக நேரம் காலமின்றி வேலை செய்கின்றனர்.

நீராவி இயந்திரத்திலிருந்து செல்லும் சூடான ஆவி துணியைத் துவைத்த பின் அதிலிருந்து நிறக் கழிவுகள் மற்றும் பிசிருகளை பிரித்து கழிவாகச் செல்கிறது.

தண்ணீர் பஞ்சத்தால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி இருந்தாலும், திருப்பூர் தொழிலாளிகளின் அசுரத்தனமான உழைப்பு ஒன்று மட்டுமே இன்றைய தேதியில் அந்நகரைக் காப்பாற்றி நிலை நிறுத்தியுள்ளது. நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட நேரமின்றி வேலையின் பின்னே மக்கள் ஓடுவதாலேயே அரசு நிர்வாகம் திருப்பூரின் தண்ணீர் பற்றாக்குறையை இடக்கரத்தால் அலட்சியமாக கையாள்கின்றது – ஏனெனில், தாகத்தில் மரணிக்கும் நிலை வரும் வரை புரட்சி வெடிக்கப் போவதில்லை என்பதை அரசு உணர்ந்தே இருக்கிறது.

ஸ்மார்ட் நிட் பினிசர்ஸ் நிறுவனம் அமைத்துள்ள மறுசுழற்சி மையம்.

தண்ணீர் பஞ்சமும், அரசின் துரோகத்தனமும், முதலாளிகளின் பாராமுகமும், இடம்பெயர்ந்த  தொழிலாளிகளின் கொல்லும் மௌனமும் திருப்பூரைக் விசக் கொடுக்குகளாக சுற்றி வளைத்துள்ளன. இந்தத் தேக்க நிலையை ஒரு மாபெரும் மக்கள் போராட்டமே உடைத்தெறிய முடியும். தண்ணீர் பிரச்சினை எல்லை மீறிச் சென்று விட்ட நிலையில், தற்போது ஆங்காங்கே சிறு அளவில் மக்கள் போராட்டங்களும் பரவலாக முணுமுணுப்புகளும் கேட்கத் துவங்கியுள்ளன – இது தீர்மானகரமான வடிவங்களை எடுப்பது ஒன்றே திருப்பூருக்கு விடிவு காலத்தைக் கொண்டு வரும்.

திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதா, உருவாக்கப்பட்டதா? மூன்று கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் நிலை என்ன?

திருப்பூர் பலைவனமாக்கப்பட்ட வரலாறு…

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்

திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !

மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

0
"எங்கே போனது எங்கள் சம்பளப் பணம்?" என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகர தூய்மைப் பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

பா.ஜ.க.வின் அரியானா முதலமைச்சர் கட்டார், மே நாளை இனி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப் போவதில்லை என்றும் விசுவகர்மா தினத்தைத்தான் இனி கொண்டாடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது. மே தினத்தைத் தடுத்தால் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் செயலற்றுப் போய்விடாது.

வேலை நீக்கம், பொய்வழக்குகள், சிறை ஆகியவற்றை மீறி, கடந்த 4 மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு தருகிறோம்.

ஊதியத்தைத் தரமறுத்து வந்த மோதிஹரி பிர்லா சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்துத் தீக்குளித்து இறந்து போன சங்கத் தலைவர் நரேஷ் சிறீவத்ஸவாவின் (படத்தில்) மனைவி பூர்ணிமா தேவி.

பீகாரில் போராடிய தொழிலாளர்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு!

பீகாரின் மோட்டிஹரி நகரில் உள்ள பிர்லாவுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 2002–2005 காலகட்டத்தில் அங்கு வேலை பார்த்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளமும், கரும்பு சப்ளை செய்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குக் கரும்புக்கான பணமும் கொடுக்காமல் 2005-ஆம் ஆண்டு மூடப்பட்டது அந்த ஆலை. இது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிர்லா நிறுவனம் பணத்தைக் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், அவர்களுக்குத் தர வேண்டிய பணத்தை பிர்லா நிறுவனம் தரவில்லை.

இது குறித்து மனு கொடுத்தும், பல்வேறு போரட்டங்கள் நடத்தியும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 11 அன்று ஆலை வாயிலில் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கினர். அரசின் அலட்சியத்தையும், பிர்லா நிறுவனத்தின் இரக்கமற்ற போக்கையும் கண்டித்து இரண்டு தொழிலாளர்கள் தீக்குளித்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்த செய்தியறிந்ததும், தொழிலாளர்களும் விவசாயிகளும் கற்களைக் கொண்டு ஆலையைத் தாக்கினர். அத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 24 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இருப்பினும் அரசின் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல், போராட்டம் தொடரும் என விவசாயிகளும் தொழிலாளர்களும் அறிவித்துள்ளனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் கட்டியமைத்திருக்கும் இந்த ஒற்றுமை முன்னுதாரணமானது.

அரியான அரசின் புதிய போக்குவரத்துக் கொள்கை நகலை எரித்து, பதேஹாபாத் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அம்மாநில போக்குவரத்துத் தொழிலாளர்கள்.

அரியானா அரசைப் பணிய வைத்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!

அரியானா மாநிலப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரியானா அரசின் புதிய போக்குவரத்துக் கொள்கைக்கு எதிராக கடந்த ஏப்ரல்-9 முதல் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முதல் 3 நாட்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்திய அரியானா அரசு, பிறகு தொழிலாளர்களை மிரட்டும் விதமாக 120 பேரை இடைநீக்கம் செய்தது. தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதை அடுத்து, புதிய போக்குவரத்துக் கொள்கையைக் கைவிடுவதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் அரியானா அரசு ஒப்புக் கொள்ள நேர்ந்தது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துப் பத்தாயிரத்துக்கும் அதிகமான கர்நாடக மாநில சத்துணவுப் பணியாளர்கள் பெங்களூரு நகர சுதந்திர பூங்காவில் 48 மணி நேரம் நடத்திய முழக்கப் போராட்டம். பெங்களூரு நகரில் நடந்த மிகப் பெரிய, நீண்டதொரு போராட்டமாகும் இது.

அரசைப் பணிய வைத்த பெங்களூரு அங்கன்வாடித் தொழிலாளர்களின் போராட்டம்!

கடந்த மார்ச் மாதம் அங்கன்வாடியில் வேலை பார்க்கும் ஊழியர்களும், அங்கன்வாடி உதவியாளர்களும் ஊதிய உயர்வு வேண்டி பெங்களூருவின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 22-இல் தொடங்கி 20 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தின் உறுதியால் கர்நாடக காங்கிரசு அரசு பணிந்து போனது. இப்போராட்டத்தின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.6,000-லிருந்து  ரூ.8,000-மாகவும், உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதியம் ரூ.3,500-லிருந்து ரூ.4,500-ஆகவும் உயர்த்தப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்களின் இடைவிடாத போர்க்குணமிக்க போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.

ராஜஸ்தான்: ஒப்பந்தத் தொழிலாளிகளுக்காகப் போராடிய நிரந்தரத் தொழிலாளர்கள் பணிநீக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் தாருஹெராவில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலை, ஹீரோ, ஹோண்டா, யமஹா போன்ற நிறுவனங்களுக்கு ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கிறது.  கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 388 ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது ஓமாக்ஸ் நிறுவனம். பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் அந்நிறுவனத்தில் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை வேலை பார்த்தவர்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட அஜய் பாண்டே என்ற 35 வயது இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அவர் மனநோயாளி என்றும் அவதூறு செய்தது நிர்வாகம். வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், பாண்டேயின் குடும்பத்தாருக்கு நட்டஈடு தர வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஓமாக்ஸ் நிறுவனத்தின் வாயிலில் அஜய் பாண்டேயின் சடலத்தைக் கிடத்தி போராடத் தொடங்கினர். ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து நிரந்தரத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். ரிக்கோ ஆட்டோ பிட், டாய்கின் போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொள்ளவே நிர்வாகம் பணிய வேண்டியதாயிற்று.

அஜய் பாண்டே குடும்பத்தினருக்கு 5.5 லட்சம் ரூபாய் நட்டஈடு கொடுப்பதற்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வது குறித்து தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னர் போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்ட 34 நிரந்தரத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து பழி வாங்கியிருக்கிறது, ஓமேக்ஸ் நிர்வாகம்.

“எங்கே போனது எங்கள் சம்பளப் பணம்?” என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகர தூய்மைப் பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

டில்லி அரசின் மெத்தனத்தைக் கலைத்த துப்புரவுத் தொழிலாளர்கள்!

டில்லி மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் 17,000 தொழிலாளர்கள் உட்பட சுமார் 25,000 மாநகராட்சித் தொழிலாளர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்த டில்லி மாநகராட்சியைக் கண்டித்து, கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர், துப்புரவுத் தொழிலாளர்கள். வேலை நிறுத்தம் தொடங்கிய ஐந்தே நாட்களில் டில்லி நகரமே குப்பைக் காடானது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிட்டு டில்லி அரசையும், மத்திய அரசையும் இப்பிரச்சினைக்கு உடனடியாக எப்படியேனும் தீர்வு காணும்படி வலியுறுத்தியது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த டில்லி அரசு,  தொழிலாளர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்கியதோடு, இனி சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படாது என உறுதியளித்தது. சுமார் 11 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின் தாக்கம் துப்புரவுப் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் ,அவர்களது வாழ்வின் அவலத்தையும் டில்லி நகரவாசிகளுக்கு உணர்த்துவதாக அமைந்தது.

ஜார்க்கண்ட் : பா.ஜ.க. அரசில் துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளாகச் சம்பளமில்லை!

சுரங்கப் பகுதி வளர்ச்சிக் குழுமம் என்ற அமைப்பு சுரங்கப் பகுதிகளின் குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகளைப் பராமரிக்கின்ற சுமார் 1,150 ஊழியர்களைக் கொண்ட அரசுத்துறை. இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக முறையாக மாதச் சம்பளமே தரப்படவில்லை. இதன் காரணமாக, இரண்டு ஊழியர்கள் பட்டினியால் இறந்திருக்கின்றனர். கனிம வளம் நிறைந்த அந்த மாநிலத்தில் காசுக்கு என்ன பஞ்சம்? மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கும் பழங்குடி மக்களைக் காட்டை விட்டு விரட்டுவதற்கும் பணத்தைக் கொட்டுகின்ற பா.ஜ.க. அரசாங்கத்திடம் துப்புரவுத் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையாம். இதுதான் மோடியின் சுவச் பாரத்.

குஜராத்தில் தொழிலாளிகள் நடந்து போனால், முதலாளிக்கு பயமாம்!

குஜராத்தில் சனந்த் நகரில் உள்ள டாடாவின் நானோ கார் தொழிற்சாலையில் தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க மறுத்து வருகிறது டாடா நிர்வாகம். அலுவலக ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கும் நிர்வாகம், தொழிலாளிகளுடைய ஊதிய உயர்வு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மட்டும் இரண்டு ஆண்டுகளாக மறுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கம்பெனி பஸ்ஸில் ஏறமாட்டோம், நடந்தே வீடு செல்கிறோம் என்று அறிவித்தார்கள் தொழிலாளர்கள். பேருந்து செலவு மிச்சம் என்று மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையடைந்திருக்கிறது டாடா நிர்வாகம். கூட்டமாக நடந்து போகக்கூடாது என்று தொழிலாளிகளுக்கு 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசின் மாவட்ட நிர்வாகம். தொழிலாளிகள் கூட்டமாகச் சேர்வது பற்றி அவ்வளவு பயம், முதலாளி வர்க்கத்துக்கு! தொழிலாளிகளுக்கும் ஐ.டி. ஊழியர்களுக்கும் “பிக் அப் – டிராப்” வசதிகளை நிர்வாகம் செய்து கொடுப்பதற்கான காரணம் என்னவென்பது, 144 போடும் போதல்லவா புரிகிறது!

தொழிற்தகராறு சட்டத்தையே ஒழிக்க பா.ஜ.க. வின் சதித்திட்டம்!

தொழிற்தகராறு சட்டம் என்று அழைக்கப்படும் சட்டத்தின்கீழ், தொழிற்சாலை, தொழிலாளி என்ற சொற்களுக்கான விளக்கத்தைக் கடந்த 1978-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வரையறுத்திருக்கிறது.  அந்த அடிப்படையில் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் மருத்துவமனை ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் வரையிலான சேவைத்துறைகள்  சார்ந்தவர்களும் தொழிற்தகராறு சட்டத்தின்கீழ் வருவதால், குறைந்தபட்ச ஊதியம், பணி உத்திரவாதம் உள்ளிட்ட உரிமைகளைப் பெறுகின்றனர். சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனம் நடத்திய ஆட்குறைப்பின்போது, ஐ.டி. ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமை கிடையாது என்று அந்நிறுவனங்கள் கூறியதை எதிர்த்து வழக்கு தொடுத்து, ஐ.டி. நிறுவனங்களும் தொழிற்தகராறு சட்டத்தின் கீழ்தான் வருகின்றன என்றும் அந்த ஊழியர்களுக்கும் தொழிற்சங்க உரிமை உண்டு என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

“தொழில்” என்பதற்கான பொருளை மறு வரையறை செய்வதன் மூலம், 1978 தீர்ப்பு தொழிலாளிகளுக்கு அளிக்கும் உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் நேரடியாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால், தொழிலாளி வர்க்கம் தன்னை எதிரி என்று அடையாளம் கண்டுவிடும் என்ற காரணத்தினால், அந்த வேலையை நீதிமன்றத்தின் மூலம் சாதித்துக் கொள்வதற்குச் சதித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலை தவிர, மற்ற அனைத்தையும் இச்சட்டத்தின் வரையறையிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அதன் பொருட்டு 1978 தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான அரியானா, குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளன. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் தவிர, மற்ற எல்லாத் தொழில்களையும் அமைப்பு சார்ந்த தொழில்கள் என்ற வரையறையிலிருந்தே நீக்குவதுதான் இவர்களது நோக்கம்.

-கதிர்
புதிய ஜனநாயகம், மே 2017

நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

3
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடை இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளைக் காட்டி சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்ததைக் கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நாயைக் கொல்வதென்றாலும் சட்டப்படிதான் கொல்வாம் என ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்கள் தமது நேர்மைக்குத் தாமே சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டது போல, நீட் தேர்வை நியாயப்படுத்த தரம், தகுதி, தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என வாதங்கள் அடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் மோடி அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், உச்ச மற்றும் உயர்நீதி மன்றங்கள் ஆகியவை எல்லாம் தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்த அப்பழுக்கற்றவர்கள் போலவும், நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தரம், தகுதிக்கு எதிரான ஊழல் பேர்வழிகள் போன்றும் ஒரு சித்திரத்தைக் கட்டமைக்கின்றன.

ம.பி. பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் (இடது)ஆட்சியில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தைத் தொட்டது. தரமற்ற, மோசடியான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி, கோடிக்கணக்கில் ஊழல் பணத்தோடு சி.பி.ஐ.யால் பிடிக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய். (கோப்புப் படம்)

இந்தியாவிலேயே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய முறைகேடு வியாபம் ஊழல்தான். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த ஊழலின் சூத்திரதாரிகள் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். யோக்கியசிகாமணிகள். அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவரது மனைவி என இந்த ஊழலில் கைநனைத்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் பட்டியல் நீளமானது. இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர்கள், முக்கிய சாட்சிகள் எனப் பலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, இந்த ஊழலின் தடயங்களை மறைக்க நடந்த முயற்சிகள் தனியொரு கிரிமினல் வரலாறாக நீள்கிறது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் யோக்கியதை என்ன? தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை மாநில அரசிடம் ஒப்படைத்து, அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டும்தான் அந்த இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிறது, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதி. இந்த விதியை கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசும் பின்பற்றவில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்த முறைகேட்டைக் கண்டு கொள்ளவில்லை. இந்த முறைகேட்டுக்காக சென்னை உயர்நீதி மன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவும், இந்த இழிநிலைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் காரணம் என்றே குற்றம் சாட்டியிருக்கிறது. போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து பல நூறு கோடி லஞ்சம் வாங்கிய இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய், 2010-இல் சி.பி.ஐ.யால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். டாக்டர் தொழில் செய்வதற்கான உரிமம் பறிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேசாயை மீண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நியமித்தது குஜராத் பல்கலைக்கழகம்.

ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்கு முன்பே தீர்ப்புக் கூறுவது ஊழலுக்கு நிகரான முறைகேடு. நீட் தேர்வு வழக்கில் இம்முறைகேட்டினைத் துணிந்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். நீட் தேர்வு தேவையா என்பது குறித்து நடந்த வழக்கை விசாரித்த அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, இத்தேர்வு தேவையில்லை எனப் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மைய அரசு வழக்கு போட்டது. உச்ச நீதிமன்றம் அதனை இன்னும் விசாரிக்கவே இல்லை. இருப்பினும் அதற்குள் நீட் தேர்வை அமல்படுத்துவது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முடிவு அமல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வு சரியா, தவறா என்பது இனிமேல்தான் விசாரிக்கப்படும்.

வியாபம் ஊழல் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, மர்மமான முறையில் இறந்துபோன ஜபல்பூர்-நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் அருண் ஷர்மா (இடது), வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்திவந்த ஆஜ் தக் தொலைக்காட்சி நிருபர் அக்சய் சிங் (நடுவில்) மற்றும் மருத்துவ மாணவி நர்மதா. (கோப்புப் படங்கள்)

புரியும்படி சொல்வதென்றால் இப்படியும் கூறலாம். தற்போது சசிகலா போட்டுள்ள சீராய்வு மனு விவகாரத்தில் சசிகலாவை விடுதலை செய்து விட்டு, அதன் பிறகு, அவரை விடுவித்தது சரியா, தவறா என்று பொறுமையாக விசாரித்துத் தீர்ப்பு கூறினால், அது எத்தகைய கேலிக்கூத்தாக இருக்குமோ அதைவிடப் பெரிய கேலிக்கூத்து இது.

தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்தாக வேண்டும் என்ற தார்மீக ஆவேசம் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றம் அவ்வளவு அவசரப்பட்டது என்பதை அறிவோம். கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்தபின், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் தலையிட மைய அரசு மறுத்துவிட்டது. இதனால் வழக்கம் போல கொள்ளை நடந்தது. இதன் மீது உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அடுத்த ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள்தான் நடத்த வேண்டும் என உத்தரவு போட்டு நழுவிக் கொண்டது. இன்னொருபுறம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்த அனுமதிக்குமாறு அரசிடம் மனு போட்டுவிட்டன.

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நீட் தேர்வுக்கான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாதென விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வு பயிற்சிக்கு 40,000, 50,000 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத்தத்தில், நீட் தேர்வு கல்விக் கொள்ளையை ஒழிக்கவில்லை, மாறாக, அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதோடு, கொள்ளைக்குப் புதிய வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு பத்தாம்பசலித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்க்கப்படுவது போலக் கற்பிதம் செய்துகொண்டு, தமிழக மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களை முறையாக நடத்தினால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஊதித் தள்ளிவிடுவார்கள், தமிழகப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.-க்கு இணையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றெல்லாம் நீட் தேர்விற்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நீட் தேர்வை எதிர்ப்பதற்குத் தமிழக மாணவர்களின் திறமையோ, தமிழகப் பாடத் திட்டத்தின் தரமோ முதன்மையான காரணமல்ல. நீட் தேர்வு, தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையைத் தமிழக அரசிடமிருந்து தட்டிப் பறிக்கிறது என்பதுதான் மையமானது. இந்த அநீதியை மிகவும் நைச்சியமான வழியில் மைய அரசும், நீதிமன்றங்களும் செய்கின்றன.

மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது, மாநில அரசு நடத்தும் தேர்வுகள் தரமற்றவை; மைய பாடத்திட்டம், தேசியத் தேர்வுகள் என்றால் தரமானது; மாநில அரசு நிர்வாகம் ஊழல்மயமானது, சி.பி.ஐ. போன்ற மைய அரசின் அமைப்புகள் அப்பழுக்கற்றவை; மாநிலக் கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் ஊழலும், முறைகேடுகளும் நிரம்பியவை, தேசியக் கட்சிகள் நேர்மையானவை என்றவாறு ஒரு பொய்யை தமிழகப் பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதன் நீட்சிதான் நீட் தேர்வுத் திணிப்பு.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடை இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளைக் காட்டி சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்ததைக் கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பறித்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த இட ஒதுக்கீடை இனி யார் அனுபவிப்பார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. நீட் தேர்விற்கு முன்னதாகவே, அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு பறிபோய்விட்டது. கடந்த பத்தாண்டுகளில் வெறும் இருநூற்று சொச்சம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவலத்தை நீட் தேர்வின் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தும். குறிப்பாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், 40,000, 50,000 கொடுத்து தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் சேர வாய்ப்புள்ள நல்ல வசதி படைத்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இனி தமிழகத்தில் மருத்துவராக முடியும்.

மேலும், வட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கக் கூடும். தமிழகத்திலுள்ள ரயில்வே அலுவலகங்களிலும், மைய அரசின் அலுவலகங்களிலும் வட இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை பெருத்துள்ளதைப் போன்ற நிலையைக் கூடிய விரைவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தமிழக மக்கள் காணக் கூடும்.

நீட் தேர்வும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின், சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, ஏழை நோயாளிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் நிலையை உருவாக்கும். தரமான, தகுதியான மருத்துவர்கள் என்பது இறுதியில் ஏழை மாணவர்களுக்கும் ஏழை நோயாளிகளுக்கும் எதிரானதாக அமைகிறது.

நீட் தேர்வானது, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனியுரிமையாக்குகிறது. பணக்கார மாணவர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு என்ற புதிய சமூக நீதியை மருத்துவக் கல்வியில் புகுத்துகிறது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதாக கூறிக்கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு அதற்கு நேர் எதிரான விளைவையே அளித்திருக்கிறது. இந்த பணக்கார வாரிசுகளும், பார்ப்பன – ஆதிக்க சாதி மேட்டுக்குடியினரும் மருத்துவர்களாகி அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து ஏழைகளுக்குச் சேவை செய்யப்போவதில்லை. அமெரிக்காவுக்குப் பறப்பது எப்படி என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கும்.

மருத்துவக் கல்வியின் தரத்தையும் மருத்துவ சேவையின் தரத்தையும் மருத்துவர் தொழிலின் மாண்பையும் காப்பாற்றுவதற்குத்தான் அரும்பாடுபடுவதாக மோடி அரசும் உச்ச நீதிமன்றமும் கூறிக் கொள்கின்றன. அந்தக் கனவு நிறைவேறுமா?

2016 –17ஆம் ஆண்டுக்கான உலக மருத்துவக் கழகத் தலைவராக கேதன் தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது சி.பி.ஐ. போட்டிருக்கும் கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாகப் பொய் சொல்லி, தேசாயை இந்தப் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். இந்த அசிங்கமான உண்மையை ராய்ட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராய்ட்டர் புலனாய்வு தேவைப்படாத வேறொரு உண்மையும் இருக்கிறது. 2013-இல் கேதன் தேசாய்க்கு குஜராத்தில் மறுவாழ்வு தரப்பட்டபோது, அங்கே முதல்வராக இருந்தவர் திருவாளர் மோடி. தேசாய்க்கு சர்வதேச கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், பிரதமராக இருப்பவரும் திருவாளர் மோடிதான்.

தகுதி வாழ்க, திறமை வாழ்க, நல்லொழுக்கம் வாழ்க, நீட் வாழ்க! பாரத் மாதா கி ஜெய்!

-அழகு
புதிய ஜனநாயகம், மே 2017

தண்ணீர் இல்லாமல் துவைக்கிறார்கள் நெருப்பு மேடு மக்கள்

1

“சொர்க்கம் – நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார்” – என்றார் 75 வயது மதிக்கத்தக்க பெரியவர்.

சென்னை – சைதாப்பேட்டை ஐந்துவிளக்குப் பகுதியில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள எளிய மக்கள் வாழும் நெருக்கமான குடியிருப்புப் பகுதி நெருப்புமேடு. மாலை 5 மணி இருக்கும். பத்து பதினைந்து குழந்தைகள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அரைத் துணியோடும் அம்மனக்குண்டியோடும் ஓடித்திரியும் அந்த அழகைப் பார்க்கும்போது பலருக்கும் சொந்த கிராமத்தை நினைவூட்டுவது உறுதி.

வயதான ஒரு பெரியம்மா வாசலில் உட்கார்ந்து துணி துவைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர். அதுவும் கண்ணங்கரேலென நிறத்தில். சுற்றிலும் அழுக்கு துணி மூட்டை சிதறிக் கிடக்கிறது. அவரது எண்ணமும் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த்து போலும்! “என்னம்மா இது… தண்ணியே இல்லாம துணி தொவைச்சிகிட்டிருக்கீங்க?” – என்றதும் திடுக்கிட்டு திரும்பினார்.

நிதானத்துடன் “என்னப்பா செய்யிறது? வீட்டுக்கார்ரு செத்து நாளாச்சு. ஒரே ஒரு பொண்ணு. அத கட்டிக் கொடுத்தாச்சு. காசி தியேட்டருக்கு பக்கத்துல திடீர் நகருலதான் குடியிருக்காங்க. எப்பவாவது வந்தா உதவியா இருக்கும். இப்ப நான் தனியாத்தான் இருக்கேன். ஓட்டல்ல பாத்திரம் தேச்சி வயித்த கழுவிக்கிட்டிருக்கேன். வீட்டுக்கு வந்ததும் தண்ணிப்பாடு பெரும்பாடா இருக்கு. வயசான காலத்துல க்யூவுல நின்னு தண்ணி புடிக்க முடியல. ஏதோ என்னால முடிஞ்சளவுக்கு நாலு கொடம் தண்ணி புடிச்சி அதுலதான் நாள கடத்திகிட்டிருக்கேன்” – என்றார் சோகத்துடன்.

  • “சார், எங்க வீட்டுல 6 பேர் இருக்கோம். கொறஞ்சது எங்க வீட்டுக்கு 20 கொடம் தண்ணி தேவைப்படுது. மெட்ரோ வாட்டர் தண்ணி ஒரு நாள் விட்டு ஒரு நாள் லாரில கொண்டுவந்து விடுறாங்க. ஒரு குடும்பத்துக்கு 6 கொடம்தான். அதையும் குடிக்க முடியாது. இங்கே பாருங்க சார் – என்று டிரம்மிலுள்ள சேறு போன்ற தண்ணீரை காட்டுகிறார்.

எங்களால என்ன செய்ய முடியும் சொல்லுங்க? குடிக்க கேன் தண்ணிதான் வாங்கிக்கிறோம். பொழங்குறதுக்கு இந்த 6 கொடமும் போதாது, அதனால் சைக்கிள்ல கொடத்த எடுத்துகிட்டு கிண்டிக்கு போயிடுவோம். ஏன்னா கெவர்னர் மாளிகைக்கு தண்ணி போர ரூட்டு. அந்த லைன்ல பெரிய பெரிய அதிகாரிங்க இருக்குறதுனால அங்கே எப்போதுமே தண்ணி வரும். எங்களுக்கும் வீட்டுக்கு வீடு பம்ப் இருக்கு. தண்ணி வரி கட்டுறோம். ஆனா தண்ணி மட்டும் வராது என வெதும்புகிறார், தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் விஜயகுமார்.

  • கருகிய ஆட்டுக்கால்கள் குவிந்து கிடந்தன. பெரியவர், மனைவி, மகள், பேரக்குழந்தைகளுடன் – குடும்பமே ஆட்டுக்கால்களை பொசுக்கி, அவற்றை தண்ணீரில் அமிழ்த்தி தோலை நீக்கிக்கொண்டிருந்தனர்.

“அய்யா… நீங்க சூப் கடை வச்சிருக்கீங்களா?” – என்றதும், இல்ல சார். வெளி ஊருங்கலேர்ந்து கால்களை வாங்கி வந்து காண்ட்ராக்ட்காரங்க கொடுப்பாங்க. அத பொசுக்கி, தோலை எடுத்துட்டு திரும்ப அவங்களுக்கே கொடுப்போம். கூலி தருவாங்க. அதுதான் சார் எங்க வேலை. எங்கள மாதிரி பல குடும்பங்கள் இத செய்யிறாங்க – என்றார்.

“இத வச்சி குடும்பத்த ஓட்ட முடியுதா?”

“நான் கசாயி (கசாப்பு கடை) வேலை செய்யிறேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், ஆட்டுக்கால் பொசுக்கும் வேலையை செய்வோம். எங்கே சார் இப்ப அதுக்கும் நேரமே கெடக்கலே. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் பொண்ணும் கொடத்து எடுத்துகிட்டு கௌம்பிடுவாங்க. தண்ணிக்கா அலையவேண்டியதாயிருக்கு. சொர்க்கம் – நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார். ஒரு குடும்பத்துக்கு 6 கொடம் விடுறாங்க. அத வெச்சிகிட்டு என்ன செய்ய முடியும்?  இன்னும் சொச்ச நாளைக்கு என்ன செய்யப்போறோமுன்னே தெரியல.” – என்றார்.

  • மாலை மங்கியது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் – பெண்கள் என அனைவரும் பரபரப்பாகக் காணப்பட்டார்கள். வீட்டிற்குள் செல்வதும், வெளியில் வருவதும், பொருள்களை ஒழுங்குபடுத்துவதுமாய் இருந்தார்கள். துவைத்த துணிமணிகளை அலசி சுவற்றில் குவிக்கிறார்கள். ஆட்டுக்காலை பொசுக்கிக் அதன் தோலை நீவிக்கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களது வேலைகளை வேகமாக முடித்துக்கொண்டிருக்கிறார்கள். வேலைக்குச் சென்ற பெண்கள், இளைஞர்கள் வேகமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“டேய் முத்து… ஏ… ராமய்யா….” – என்று வெளியில் திரியும் தங்களது பிள்ளைகளை அழைக்கிறார்கள். பதினைந்து இருபது நிமிடத்திற்குள் எல்லோர் வீட்டு முன்பும், அண்டா குண்டாவிலிருந்து சிறிய பாத்திரங்கள் வரை வாசலில் குவிந்துவிட்டன. ஒரு போருக்கான சூழல் அங்கு நிலவியது. ஆம், தண்ணீர் லாரி வரப்போகிறது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் வரலாம்; இரண்டு நாட்கள்கூட ஆகலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

  • வினவு செய்தியாளர்கள்

மோடி – அதானியை அம்பலப்படுத்தும் ஆஸ்திரேலிய விவசாயி

4
எதிர்ப்பு தெரிவிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்.

‘வளர்ச்சியின்’ நாயகன் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட தமது முதல் பயணத்தின்போது, இந்தியப் பெருமுதலாளிகளில் ஒருவரும், தன்னைப் பிரதமராக்கியவருமான கவுதம் அதானியை உடன் அழைத்துச் சென்றார். சரியாகச் சொல்வதென்றால், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கலீலி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்களில் ஒன்றான சார்மிக்கேல் சுரங்கத்தைப் பேரம் பேசி முடித்துக் கொடுப்பதுதான் அப்பயணத்தின் பிரதான நோக்கம்.

அந்தச் சுரங்கத்தின் நிலக்கரி தரம் குறைந்தது என்றும், அதனை எரிப்பதால் கடுமையான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சர்வதேசத் தரத்திற்கு உகந்ததல்ல என்பதனால் விற்பனை செய்ய முடியாது என்றும் கூறி, அதானியின் இத்திட்டதிற்கு கடன் கொடுக்க எந்தத் தனியார் வங்கியும் முன்வரவில்லை. அதைவிட முக்கிய காரணம், அதானி குழுமம்  ஏற்கெனவே பல்வேறு வங்கிகளில் சுமார் 72,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறது. ஆகையால், ஆஸ்திரேலிய பயணத்தின் போது பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவையும் கையோடு அழைத்துச் சென்று, அதானிக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் கடன் தருவதற்கும் ஏற்பாடு செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார் மோடி.

பிரதமரா, புரோக்கரா? – அதானிக்கு ஆஸ்திரேலிய சுரங்கத்தை முடித்துக் கொடுப்பது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நரேந்திர மோடி. (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியாவில் அதானியின் நிலக்கரிச் சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த  மக்கள் இச்சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலக்கரிச் சுரங்கத்தால் அருகில் உள்ள பவளப்பாறைகளுக்கும், நிலத்தடி நீருக்கும், சுற்றுச்சூழலுக்கும், அருகில் உள்ள விவசாயப் பகுதிகளுக்கும் ஏற்படவிருக்கும் பாதிப்பைக் கணக்கில் கொண்டு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எதிர்ப்புகளையெல்லாம் மீறி இச்சுரங்கத்தைத் தொடங்கிவிடத் துடிக்கிறார் அதானி.

ஆஸ்திரேலிய அரசின் மீது அதானி செலுத்துகின்ற செல்வாக்கைப் பார்த்து அதிர்ச்சியுற்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், சுரங்கம் வரவிருக்கும் பகுதியைச் சேர்ந்த கால்நடை விவசாயியுமான ப்ரூஸ் க்யூரி என்பவர், நாம் எதிர்கொண்டிருப்பது என்ன மாதிரியான கம்பெனி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், அதானிக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவைதானா என்று தெரிந்து கொள்வதற்காகவும் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இங்கு குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் துறைமுகம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள முந்த்ரா, ஹசீரா ஆகிய கிராமங்களைப் பார்வையிட்டு அங்குள்ள உள்ளூர் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துமிருக்கிறார்.

நான் கண்ட காட்சிகள், என் முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தன. முந்த்ராவிலும் ஹசீராவிலும் உள்ள சிறு கிராமங்களுக்குச் சென்றேன். விவசாயிகளையும் மீனவர்களையும் சந்தித்தேன். எல்லாம் எங்கள் கதையைப் போலவே இருந்தது. வேலை தருகிறோம், உள்ளூர்ப் பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, பெரிய நிறுவனங்கள் உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்ற வழக்கமான கதைதான். கடைசியில் உள்ளூர் மக்களின் அழிவுதான் மிச்சமாக இருக்கும்.

  • நிலத்தடி நீரை மாசுபடுத்தியது, சட்டவிரோதமாக நிலத்தைப் பறித்துக் கொண்டது, சதுப்புநிலக் காடுகளை அழித்தது என அதானியின் அட்டூழியங்களால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அதானி குழுமம் துறைமுகம் கட்டத்தொடங்கியதிலிருந்து அப்பகுதியில் கிடைக்கும் மீன்களின் அளவு 90% வரைக் குறைந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கிடைக்கும் மீன்களும் துர்நாற்றம் அடிப்பவையாகவும், மோசமான சுவை கொண்டவையாக இருப்பதாகவும் மீனவர்கள் கூறிகின்றனர்.
  • முந்த்ரா பகுதியில் அதானியின் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வரும் கரித்துகள்களால் அப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழக்கமாகப் பயிரிடும் ஆமணக்கு, பருத்தி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருக்கும் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் தங்களது வாழ்வாதாரமான நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதையும், நீர்நிலைகள் தடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • அதானியின் நிலக்கரி திட்டப் பகுதியின் அருகாமையில் வசித்தவர்கள் அத்திட்டத்தால் இழந்ததே அதிகம். பலரும் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றனர். சிலர் நான் ஆஸ்திரேலியாவில் செய்து கொண்டிருப்பதைப் போல, இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று அதானிக்கு எதிராக சட்டரீதியாகப் போராடியிருக்கிறார்கள். எனினும், சிறிய அளவு நட்டஈடே கிடைத்திருக்கிறது, இன்னும் சிலரோ அப்பகுதிகளில் இருந்து வலிந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

அதானியின் இந்திய ஆக்கிரமிப்பையும், அதன் மூலமான சீரழிவையும் பார்க்கும் போது அதானியின் நிலக்கரிச் சுரங்கத்தால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஏற்படவிருக்கும் விதிமீறல்களையும், நிலத்தடி நீர் அழிவையும் எதிர்பார்த்து தாம் அஞ்சுவதாகக் குறிப்பிடுகிறார் ப்ரூஸ் க்யூரி.

“நிலக்கிரச் சுரங்கம் தேவையில்லை, பவளப் பாறைகள் வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியத் தரகு முதலாளி அதானி ஆஸ்திரேலியாவில் திறக்க முயலும் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பிரிஸ்பேனில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

ப்ரூஸ் க்யூரியைப் போன்றே, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களான கிரெக் சாப்பல், ஐயன் சேப்பல் சகோதரர்களும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக அதானிக்கு எழுதியுள்ள திறந்த மடலில், ’லான்செட்’ எனப்படும் முன்னணி மருத்துவ இதழ் தனது அறிக்கையில் அதானியின் சார்மிக்கேல் சுரங்கத்தால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் என எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய மக்களின் விருப்பத்தை மீறி அரசின் துணையோடு அங்கு நிலக்கரிச் சுரங்கத்தை நிர்மாணித்தால், அது ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பைக் குலைப்பதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்ச்சிக்கு கிரிக்கெட் ஒரு காரணமாக இருப்பதால், இந்த முதலீட்டைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தாங்கள் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடுகிறார்கள் சாப்பல் சகோதரர்கள்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத, புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் முதலீடு செய்யுமாறும் அதானிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் சாப்பல் சகோதரர்கள். இராமநாதபுரம் சூரியஒளி மின் திட்டத்தில் அதானி முதலீடு செய்திருப்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதானி அத்தகையதொரு முதலீடு செய்ய வேண்டுமானால், ஜெயலலிதாவைப் போல ஒன்றுக்கு இரண்டு விலை தரக்கூடிய ஒரு முதல்வரோ, அல்லக்கை வேலை பார்க்கின்ற ஒரு பிரதமரோ அங்கே இருப்பது அவசியம்.

-அழகு

புதிய ஜனநாயகம், மே 2017

பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

0

மார்க்ஸ் பிறந்தார் – 4

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

வினவு குறிப்பு:

இந்த அத்தியாயம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் செய்திகளை வரலாறாய் முன்வைக்கின்றது. கார்ல் மார்க்சின் பள்ளிப் பருவத்தை விரிவாக சித்தரிக்கிறார் நூல் ஆசிரியர். உருப்போட்டு படிக்கும் இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் அதே மாதிரிதான் மார்க்சின் அந்தக் கால பிரஷ்யாவிலும் (ஜெர்மனி) இருந்துள்ளது. அந்தக் கல்வியில் சுமாரான மதிப்பெண்களையே வாங்குகிறார் மார்க்ஸ். பள்ளியாண்டின் இறுதியில் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என்று அனைத்து மாணவர்களும் கட்டுரை எழுதுகின்றனர். மார்க்ஸ் அதில் எதை தெரிவு செய்கிறார்? படித்துப் பாருங்கள்!

மார்க்சின் தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால் அரசியல் ரீதியான வழக்குகள், கருத்துக்கள் மார்க்சுக்கு அறிமுகமாகின்றன. குடும்ப நண்பர் ஒருவர் ஷேக்ஸ்பியர், ஹோமர் போன்றோரின் இலக்கியங்களை மார்க்சுக்கு படித்துக் காட்டுகிறார். சுதந்திரத்தை நேசிக்க கற்றுக் கொடுக்கும் கலைத்துறை அவருக்கு இளம் வயதிலேயே அறிமுகமாகிறது.  அதனால்தான் அவர் சுயநலம் பெற்றெடுத்த அற்பவாதத்தை அடியோடு வெறுக்கிறார். மார்க்சுடன் படித்த மாணவர்களிடமிருந்து கத்தோலிக்க மதகுருமார்களும், வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் உருவாகும் போது மார்க்ஸ் மட்டும் மனித குலத்திற்கு தொண்டாற்றும் தத்துவப் பணியை மேற்கொள்ளுகிறார். அந்த தெரிவின் சுவடுகளை இளம் மார்க்சின் பள்ளி நாட்களில் பார்க்கிறோம்.

“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”- என்று பள்ளி இறுதி ஆண்டு கட்டுரையில் மார்க்ஸ் குறிப்பிடுமளவு அவரது இளம் பருவ வரலாற்றுச் சூழல் எப்படி பங்காற்றியது? படித்துப் பாருங்கள். கார்ல் மார்க்சின் வரலாற்றைப் பின் தொடர்ந்தும் நீங்கள் மார்க்சியத்தை கற்க முயலலாம். தொடர்ந்து படியுங்கள்!

2. வாழ்க்கைத் தொழிலைத் தேடல்

மகிழ்ச்சியைப் பற்றி உங்களுடைய கருத்து?
போராட்டம்

-கார்ல் மார்க்ஸ்

சந்தகாலத்தில் சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்த ஒரு பகற்பொழுதில் வாட்டசாட்டமான உடல், கறுப்புத் தலைமுடி சகிதம் ஒரு நபர் முகத்தில் புன்சிரிப்புடன் கைகளில் அணையாடைகள் சுற்றப்பட்டிருந்த குழந்தையைத் தாங்கி டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்துக்கு வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் அதிகாரிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அந்த அதிகாரி இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் தான் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளைக் கேட்டார். பிறகு தன்னுடைய இறகுப் பேனாவை எடுத்துக் காகிதத்தில் எழுதினார்

“டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்தில் ஜனன, திருமண, மரணப் பதிவாளராகிய எனக்கு முன்னால் 1818-ம் வருடம் மே மாதம் 7-ம்  தேதியன்று பிற்பகல் 4 மணிக்கு டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்ஸ் (வயது 37, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழில்) ஆஜராகி ஒரு ஆண் குழந்தையைக் காட்டினார். அந்தக் குழந்தை வழக்குரைஞராகத் தொழில் செய்கின்ற டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்சுக்கும் அவருடைய மனைவி ஹென் ரியேட்டா பிரெஸ்பார்க்குக்கும் மே மாதம் 5ந் தேதியன்று அதிகாலையில் 2 மணிக்கு டிரியரில் பிறந்ததாகத் தெரிவித்தார். தங்களுடைய குழந்தைக்குக் கார்ல் என்று பெயர் சூட்ட விரும்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள்”.(1)

அதிகாரி பிறப்புச் சான்றிதழில் கையொப்பமிட்டு அதைத் தகப்பனாரிடம் கொடுத்தார். அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய ஆவணம், பெரியவரானதும் சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கின்ற ஒருவர் மற்ற எவரையும் காட்டிலும் அந்த நாட்டுக்கு அதிகமான புகழைக் கொண்டு வரப் போகின்றவர் பிறந்திருப்பதை அறிவிக்கின்ற சான்றிதழ் என்பது அந்த அதிகாரிக்குத் தெரியாது. மகிழ்ச்சியில் திளைத்த தகப்பனாரும் அப்படி நினைக்கவில்லை.

மார்க்ஸ் பிறந்த வீடு இருந்த இடம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது

அவர் தன் குடும்பத்தை நோக்கி, புரூக்கென் ஹாஸேயில் 664ம் எண்ணுடைய சிறிய, இரண்டு மாடி வீட்டை நோக்கி நடந்தார்; எதிரில் வந்தவர்கள் அவருக்குப் பணிவோடு வணக்கமும் வாழ்த்தும் கூறினார்கள்; அவரோ ஆனந்தத்தில் தன்னை மறந்திருந்தபடியால் எப்படியோ ஒரு வழியாக அவர்களுக்குப் பதில் வணக்கம் கூறினார்.

அந்த நகரத்தில் ஹென்ரிஹ் மார்க்சை எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அவருடைய உயர்ந்த கல்வித் தகுதிகளை, குறை காண முடியாத ஒழுக்கத்தை, பரோபகார உணர்ச்சியை – குற்றமற்ற நபர் ஆபத்தில் சிக்கிவிட்டால் தன்னுடைய சட்டத் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி அவருக்கு உதவியளிக்க அவர் எப்பொழுதுமே தயாராக உள்ளவர் – அவர்கள் மிகவும் மதித்தார்கள்.

யூத மத குருக்களின் குடும்பத்தில் பிறந்த ஹென்ரிஹ் மார்க்ஸ் யூத சமயத்தைக் கைவிட்டு லூதரன் சமயத்தை ஏற்றுக் கொண்டார்.

மார்க்ஸ் தம்பதிகளின் இல்லத்தில் கிறிஸ்துவப் புனிதர்கள் வணங்கப்பட்ட போதிலும் வொல்தேர், ஷில்லர், ராளபீன், ரூஸோ, லேஸ்ஸிங், ஸ்பினோஸா, கான்ட் ஆகியோர் இன்னும் அதிகமாகவே மதிக்கப்பட்டார்கள். ஹென்ரிஹ் மார்க்ஸ் ஐரோப்பியப் பண்பாட்டின் செழுமையான பாரம்பரியத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டதுடன் தன் அன்புக்குரிய மகன் கார்லிடம் அதை ஒப்படைக்கவும் செய்தார். ஆகவே கார்லின் “தொட்டிலில் கலைத் தேவதைகள் வைத்த” (மேரிங்) பலவிதமான திறமைகளும் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைவதற்கு முழு வாய்ப்புக் கிடைத்தது.

மார்க்சின் குடும்பம் பிரிவி கவுன்சிலர் பேரன் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தது இளைஞரான மார்க்சின் நற்பேறு என்றே குறிப்பிட வேண்டும். வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கப் போகிறார்கள்; முதலாவதாக, அக்குடும்பத்தின் தலைவர் – அவர் மார்க்சுக்கு இரண்டாவது தகப்பனாரானார். இரண்டாவதாக, அவருடைய கடைசி மகன் ஏட்கர்- மார்க்சின் குழந்தைப் பருவ நண்பர், பள்ளி நாட்களில் அவருடைய விளையாட்டுத் தோழர் (1840-களின் இறுதியில் அவர் ஒரு சமயத்தில் கம்யூனிஸ்டு சங்கத்துக்கு நெருக்கமாக வந்தார்); கடைசியாக, ஏட்கரின் சகோதரி ஜென்னி. மார்க்சின் எதிர்கால மனைவி வாழ்க்கை முழுவதும் அவருடைய நம்பிக்கைக்குரிய கூட்டாளி.(2)

லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன்

லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் ஒரு கவர்ச்சிகரமான பிரமுகர். அவர் ஸ்காட்லாந்து மற்றும் ஜெர்மானிய உயர்குடியில் பிறந்தவர். அவர் அக்காலத்தில் மிகவும் அதிகமாகப் படித்தவர்களில் ஒருவர், கவிதைப் பிரியர். கார்லின் தகப்பனார் வொல்தேரையும் ராளனேயும் அவருக்கு அறிமுகப்படுத்தினார் என்றால் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் தான் மனப்பாடமாக அறிந்திருந்த ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கார்லிடம் (ஜென்னியும் ஏட்கரும் உடனிருக்க) படித்துக் காட்டினார். முதியவரான வெஸ்ட் ஃபாலன் மார்க்சிடம் கவிதை ரசனையைத் தூண்டி அவருடைய அழகியல் ஈடுபாடுகளை வளர்த்தார். சான்-சிமோனைப் பற்றி மார்க்சிடம் முதலில் எடுத்துக் கூறியவர் அவரே.

மார்க்சினுடைய அறிவைச் சமூக விஷயங்களில் திருப்பி அன்றைய சமூக அமைப்பைப் பற்றி விமர்சன ரீதியான அணுகுமுறையை முதலில் தூண்டியவர் ஒருவேளை வெஸ்ட்ஃபாலனாக இருக்கலாம். மார்க்ஸ் விஞ்ஞானத் துறையில் தன்னுடைய முதல் ஆராய்ச்சியை – டாக்டர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை – என்னுடைய அன்புமிக்க, தந்தையைப் போன்ற நண்பருக்குச் சமர்ப்பித்தது தற்செயலானதல்ல. அவர் தன்னுடைய சமர்ப்பணத்தில் வெஸ்ட்ஃபாலனை “காலம் முன்னோக்கி எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியையும் உண்மையின் உற்சாகத்துடனும் கவனத்துடனும் வாழ்த்துபவர்” என்றும் “பின்னோக்கி இழுக்கும் ஆவிகளுடைய இருண்ட நிழல்களுக்கு முன்னால் ஒருபோதும் பின்வாங்காதவர்”(3) என்றும் வர்ணித்தார். இளம் மார்க்சுக்குத் தன்னுடைய சொந்தக் குடும்பத்தில் அல்லது பள்ளிக்கூடத்தில் கிடைத்ததைப் போன்ற வளமான ஆன்மிக உணவு வெஸ்ட்ஃபாலனுடைய பழைய இல்லத்தில் கிடைத்தது என்பதில் ஐயமில்லை.

அந்த உயர்நிலைப் பள்ளியில் மார்க்சின் ஆன்மிக வளர்ச்சிக்கு அதிகமான உணவு கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் பள்ளிக் கூடக் கல்வி முறை உருப்போடுதல், ஒப்பித்தல் என்ற ‘பழைய மரபுகளுக்கு’ ஏற்பவே நடத்தப்பட்டது. மதப் பாடங்கள், வரலாற்று விவரங்கள், கணிதப் பாடத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதிலே மனப்பாடம் செய்வது, அதைத் துல்லியமாக ஒப்பிப்பது-மாணவர்களிடம் இந்தத் திறமையையே ஆசிரியர்கள் மிகவும் மதித்தார்கள். கற்பிக்கப்பட்டவற்றைத் தடங்கல் இல்லாமல் ஒப்பிக்கக் கூடிய, “புனித நூலில்’ அடங்கியிருக்கும் அழிவில்லாத உண்மைகளைத் திருத்தமான கையெழுத்தில் எழுதக் கூடியவனே அவர்களுடைய கருத்தின்படி சிறந்த மாணவன். சுதந்திரமான அபிப்பிராயம், துணிகரமான கற்பனைப் பாய்ச்சல், பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் தற்சிந்தனையான அணுகுமுறை இவை அனைத்தும் சிறப்புத்தகுதிச் சின்னங்களல்ல, குறைகள் என்றே அதிகமாகக் கருதப்பட்டன.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முறை மாணவனின் ஆளுமையை வளர்ப்பதைக் காட்டிலும் அதை ஒடுக்கவே செய்தது. அது விஞ்ஞானங்களைப் படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டவில்லை, அலுப்பூட்டுகின்ற கோட்பாடுகளின் தொகுதி என்ற முறையில் வெறுப்பையே அதிகமாக ஏற்படுத்தியது. கற்பிக்கப்பட்ட பாடங்களை மறுக்க முடியாது, அவை முடிவானவை, கண்டிப்பான தன்மையைக் கொண்டவை. இவை மாணவர்களுடைய மனங்களைக் கெடுத்தன. முயற்சியற்ற, அடுத்தவரை நம்பி வாழ்கின்ற சிந்தனையை, அடுத்தவர்களுடைய கருத்துக்களைத் திருப்பிக் கூறுகின்ற, “அங்கீகரிக்கப்பட்டவற்றுக்கு” வணக்கம் செலுத்துகின்ற பழக்கத்தை வளர்த்தன. ஆகவே பள்ளிக்கூடம் மாணவர்களுடைய கருத்தில் விஞ்ஞானத்தின் வன்மையை அரித்தழித்தது, ஏனென்றால் அது எதேச்சாதிகார சிந்தனை முறையை, விதிகளைக் கொண்டு சிந்திக்கின்ற முறையை வளர்த்தது. உண்மையைப் போற்றுவதற்குப் பதிலாக அது மெய்மைகள் அழியாதவை என்ற நம்பிக்கையை வளர்த்தது; சுதந்திரமான முடிவுகளைத் தேடுகின்ற ‘சிந்தனை விசாரத்துக்குப்’ பதிலாக அது அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உருப்போடுகின்ற சித்திரவதையை ஏற்படுத்தியது.

மார்க்ஸ் கல்வி பயின்ற டிரியர் பள்ளி அத்தகைய கல்வி நிலையங்களில் மிகவும் சிறப்பானவற்றில் ஒன்று எனலாம்; ஏனென்றால் அங்கே அநேகமாக ஒரு மிதவாத உணர்ச்சி நிலவியது. மார்க்சின் ஆசிரியர்களில் சிலர் தங்கள் துறையில் பிரபலமானவர்களாக இருந்தார்கள்: உதாரணமாக, யோஹன் ஹீகோ விட்டென்பாஹ் (தலைமை ஆசிரியர்) பிரெஞ்சு அறிவியக்கத்தின் கருத்துக்களை ஆதரித்தார், டிரியர் நகரத்தின் வரலாற்றாசிரியரான அவர் கேதேயுடன் தனிப்பட்ட பழக்கம் உடையவராக இருந்தார். முன்னேற்றத்திலும் மனிதனுடைய மேம்பாட்டிலும் தன்னுடைய மாணவர்கள் புனிதமான நம்பிக்கை வைக்கும்படி அவர் அரும்பாடுபட்டார். கணிதம் மற்றும் பெளதிகவியல் ஆசிரியரான யோஹன் ஷ்தேய்னின்கர் போலீசுத் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தார்.

ஆனால் இந்த ஆசிரியர்கள் கல்வி போதனையின் தன்மை, நோக்கங்கள் மற்றும் முறைகளில் கணிசமான எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது உண்மையே. ஆசிரியர்கள், மாணவர்களுடைய சிந்தனை சரியான வழியில் செல்வதை உறுதிப்படுத்துவதற்கென்று பிரஷ்ய அரசாங்கம் அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அந்த நோக்கத்துடன் அரசாங்கம் விஸ்டுஸ் லியோர்ஸ் என்பவரைப் பள்ளிக்கூடத்தின் இனண இயக்குநராக நியமித்திருந்தது. அவருடைய பிற்போக்குக் கருத்துக்கள் பிரசித்தமானவை. அரசருக்கும் நாட்டுக்கும் அரணாகவிருந்த படித்த அற்பவாதிகளே அந்த உயர்நிலைப் பள்ளி தயாரிக்க வேண்டும். அதைத்தான் அது செய்தது.

மார்க்ஸ் அந்தப் பள்ளியிலிருந்து விலகிய சமயத்தில் அவருடைய வகுப்பில் 32 மாணவர்கள் இருந்தார்கள் அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வயது பத்தொன்பதிலிருந்து இருபத்தேழு வரை இருந்தது. அதாவது அவர்கள் பள்ளியில் படிக்கின்ற வயதைக் காட்டிலும் அதிக வயதானவர்கள். அந்த மாணவர்கள் சுறுசுறுப்பில்லாதவர்கள், அநேகமாக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் தங்கிப் படித்தவர்கள். இவர்களில் பதின்மூன்று மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தார்கள்.

மார்க்சுடன் படித்த மாணவர்களில் பலர் குட்டி முதலாளி வர்க்க, விவசாயக் குடும்பங்களேச் சேர்ந்தவர்கள். அவர்கள் குருட்டுத்தனமான மதப்பற்றில் மூழ்கியிருந்தார்கள். மதகுருவின் வேலையே எதிர்காலத்தைப் பற்றி அவர்களுடைய கனவுகளின் சிகரம். அந்த வகுப்பைச் சேர்ந்த 25 கத்தோலிக்க மாணவர்கள் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரைகளை ஆராயும் பொழுது அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இறைப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருந்தார்கள் என்பது தெரிகிறது.

அவர்களுடைய கனவுகள் நனவாயின. 1835-ம் வருடத்தில் டிரியர் பள்ளியிலிருந்து பள்ளி இறுதித் தேர்வை முடித்து வெளியேறிய மாணவர்களில் பிரஷ்யாவுக்கு 13 கத்தோலிக்க மத குருக்களும் 7 வழக்குரைஞர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகளும் 2 டாக்டர்களும் கிடைத்தனர். அந்த வருடப் பள்ளியிறுதி வகுப்பு கோஷ்டி உலகத்துக்கு ஒரு கார்ல் மார்க்சைக் கொடுக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்புடைய மாணவர் என்று யாரும் கருதவில்லை. அவர் எல்லாப் பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றார்; எதிர்காலத்தில் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் படைக்கப் போகின்ற மாணவர் வரலாற்றுத் தேர்வு எழுதிய பொழுது மற்ற பாடங்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களைத் தான் ஆசிரியர்கள் கொடுத்தனர்.

இதைப் பற்றி ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை. அந்த ஆசிரியர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்கள் – மார்க்சுக்கு அவை பொருந்தவில்லை. அவருடைய சிந்தனைகளின் தற்சிந்தனை அவர்களைப் பயமுறுத்தியது. ஒரு பிரச்சினையின் மூலவேர்களை அறிவதற்கு ஒவ்வொரு பாடத்தையும் விரிவாக அறிந்து கொள்வதற்கு, தன்னுடைய சிந்தனைகளை – சிறுதரமாக, இன்றி – தத்ரூபமாக வர்ணிப்பதற்கு அவர் செய்த முயற்சியை அவர்கள் கண்டித்தார்கள். அவை ‘மிகையான அலங்கார நடை’, “அதிகமான பளுவை அவசியமில்லாமற் சுமத்துதல்”, “சலிப்பூட்டும் சொற்குவியல்” என்று அவர்கள் கூறினார்கள். மார்க்சின் கையெழுத்து அழகாக இல்லாததும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. “வெறும் கிறுக்கல்” என்று இலத்தீன மொழி ஆசிரியர் புகார் செய்தார். அதை மற்ற ஆசிரியர்களும் ஒத்துக் கொண்டார்கள்.

இளைஞர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஏட்டுப்புலமை மார்க்சுக்கு அருவருப்பைக் கொடுத்தது. அது பிந்திய வருடங்களிலும் அவரிடம் நிலைத்திருந்தது. அவர் 1862இல் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஏட்டுப் படிப்பாளிகளில் ஒருவரை வர்ணித்தார். இந்த ஆசிரியர் வெளித்தோற்றத்தில் கெளரவமான மனிதர், தன் புலமையைப் பற்றி அகந்தைமிக்கவர், ஆனால் படிப்பது மற்றும் கற்பிப்பதில் உருப்போடுகின்ற முறைக்கு அப்பால் அவர் ஒருக்காலும் போவதில்லை. அவருடைய புலமை ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதில்களைத் தேடி எடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் கணிதப்பாடங்கள் எல்லாவற்றையும் படித்தவர், ஆனால் கணிதவியலை அறியார். இந்த ஏட்டுப்படிப்பாளி நேர்மையானவராக இருந்தால் அவர் தன்னுடைய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும். அவர் போலித் தந்திரங்களில் ஈடுபடாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்: இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. சிலர் இப்படிச் சொல்கிறார்கள், மற்றவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்குச் சொந்த அபிப்பிராயம் இல்லை, நீங்களே சிந்தியுங்கள், இப்பிரச்சினையின் அடிமட்டத்துக்குப் போக முடியுமா என்று பாருங்கள்! “இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் ஒரு பக்கத்தில் மாணவர்களுக்குச் சில விவரங்கள் கிடைக்கும், மறு பக்கத்தில் அவர்களைத் தாமே உழைக்கும்படி உற்சாகப்படுத்தியதாகவும் இருக்கும்.”(4) ஆனால் ஏட்டுப்படிப்பாளியின் இயல்புக்கு மாறான ஒரு நிபந்தனையை நான் குறிப்பிடுகிறேன் என்று மார்க்ஸ் உடனடியாகக் குறிப்பிட்டார்.

மார்க்ஸ் படித்த உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு இந்தச் சித்திரத்தை ஒத்திருந்தார்கள் என்று சொல்வது கடினம். தனிப்பட்ட முறையில் அவர்கள் ஏட்டுப்படிப்பாளிகளாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு நபரின் தனிப்பட்ட உளவியல் அமைப்பு இங்கே முக்கியமல்ல, அந்த அமைப்பே முக்கியம். அது உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் ஏட்டுப்படிப்பையும் கடுவேதனையான சலிப்பையும் தவிர்க்க முடியாத முறையில் வளர்த்தது. கார்ல் மார்க்சின் ஆன்மிக உலகம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முறையினால் உருவாக்கப் பட்டதல்ல; அதற்கு மாறாக, சுதந்திரமான, மிகவும் தீவிரமான அறிவு உழைப்பில் அது உருவாயிற்று, நல்ல கவிதையையும் நகைச்சுவையையும் ரசிக்கின்ற சில நண்பர்களடங்கிய சிறு குழுவில், வெஸ்ட்ஃபாலன் குடும்பம் மற்றும் அவருடைய தகப்பனாரைக் கொண்ட குழுவில் அது உருவாயிற்று.

டிரியர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் பதவி காரணமாக அரசியல் தன்மையைக் கொண்ட வழக்குகளில் பங்கெடுப்பது அவசியமாக இருந்தது. எனவே சமூக அநீதிகளைப் பற்றிய பயங்கரமான உண்மைகள் அவருக்குத் தெரியும். அவர் தன் மகனிடம் அவற்றைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

கார்ல் மார்க்ஸ் 1843இல் Rhenische Zeitung-இல் (ரைன் பத்திரிகை) எழுதிய கட்டுரையிலிருந்து இந்த உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மோஸெல் நிருபர் நியாயப்படுத்துகிறார் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் மோஸெல் பிரதேசத்தில் வசித்த மக்கள் தம்முடைய அபிப்பிராயத்தை ஒளிவு மறைவில்லாமலும் பகிரங்கமாகவும் தெரிவிக்க முடியவில்லை என்று நிரூபிக்க முயற்சிக்கிறார். 1830க்களில், அதாவது அவருடைய இளமைப் பருவத்தில் நடைபெற்ற சில நீதிமன்ற வழக்குகளை வர்ணிக்கிறார், “நல்ல குணத்தின் காரணமாக எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு குடிமகன் மாவட்டத் தலைவருடைய வேலைக்காரியிடம் பேசும் பொழுது” உன் எசமானர் நேற்று போதையில் இருந்தார் என்று கூறினார் (அந்த மாவட்டத் தலைவர் முந்திய நாள் மாலையில் அரசருடைய பிறந்த நாளைக் கொண்டாடிய பொழுது மகிழ்ச்சி நிரம்பிய நண்பர்கள் மத்தியில் அதிகமாகக் குடித்தார்). இந்தச் சாதாரண வார்த்தைக்காக அவர் டிரியர் போலீஸ் நீதிமன்றத்தில் பகிரங்கமாக விசாரணை செய்யப்பட்டார். ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல அவர் விடுதலை செய்யப்பட்டார்.”(5)

இந்த வழக்கில் மார்க்சின் தகப்பனார் வழக்குரைஞராகப் பங்கெடுத்தபடியால் அது மார்க்சின் நினைவில் பசுமையாக இருந்திருக்கலாம். அவருடைய “குறை சொல்ல முடியாத நேர்மை” மற்றும் “சட்டத் திறமைகளின்” விளைவாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை அடைந்தார்.

டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் தங்கள் சட்டமன்றப் பிரதிநிதியின் மூலம் இளவரசருக்கு ஒரு மனுவைக் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். அந்தப் பிரதிநிதியின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. “சில வருடங்களுக்கு முன்பு அரசு நிர்வாகம் மற்றும் பொருளியல் (cameralistics) பேராசியரான திரு. கெளஃப்மன்” ஒரு ரைன் பத்திரிகையில் “மோஸெல் பிரதேசத்தில் திராட்சைக் கொடி பயிரிடுபவர்களுடைய பரிதாபகரமான நிலையைப் பற்றி என்ற ஒரு கட்டுரையை எழுதினார். அரசாங்கம் அதைத் தடை செய்தது”.(6)

” இளம் மார்க்சைச் சூழ்ந்திருந்த அரசியல் நிலைமையை இந்த விவரங்கள் விளக்குகின்றன. 1830-களில் டிரியர் நகரத்தின் அறிவுஜீவிகளிடத்தில் பிரஷ்ய அரசாங்கத்துக்கு மிதவாத எதிர்ப்புத் தோன்றியது; அதில் கார்ல் மார்க்சின் தகப்பனார் சுறுசுறுப்பாகப் பங்கெடுத்தார். 1834ம் வருடத்தின் ஆரம்பத்தில் மிதவாதிகளின் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன, மர்ஸேல் கீதம் (பிரெஞ்சுப் புரட்சியின் கீதம்) பாடப்பட்டது. அங்கே செய்யப்பட்ட சொற்பொழிவுகளில் பிரெஞ்சுப் புரட்சியின் எதிரொலியைப் போலீஸ்காரர்களின் கூர்மையான காதுகள் கண்டுபிடித்தன. ஹென்ரிஹ் மார்க்சும் “ஆபத்தான” பாடல்களைப் பாடினார், சொற்பொழிவாற்றினார், அவை அதிகமாக மிதவாதத் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இதுவே போதுமானதாக இருந்தது.

கார்ல் மார்க்ஸ் தன் தகப்பனார் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார். அவரைப் பற்றி இனிய நினைவுகள் மகனின் முதிர்ச்சிக் காலத்திலும் நிலைத்திருந்தன. அவர் எப்பொழுதும் தன் தகப்பனாருடைய புகைப்படத்தைத் தன்னோடு வைத்திருந்தார். மரணப் படுக்கையிலும் அந்தப் புகைப்படம் அவரிடமிருந்தது. ஆனால் ஹென்ரிஹ் மார்க்ஸ் மத அரசியல் துறைகளில் மிதவாதியாக இருந்தாலும் கடைசி வரையிலும் பிரஷ்ய தேசபக்தராகவும் மதப்பற்றுடைய கிறிஸ்துவராகவுமே இருந்தார். அவர் ஷீல்லரை மிகவும் போற்றினார். அவர் ஷீல்லரின் கதாநாயகர்களில் ஒருவரான நல்லவரும் உணர்ச்சிக் கனிவுடையவருமான மோரை ஒத்திருந்தார். அந்த மோர் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளின் சுகத்தில் முழு மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய அன்புக்குரிய மகனின் மேதாவிலாசமான திறமையை அவரால் இனங்காண முடிந்தது; ஆனால் கார்ல் தன்னுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார், அடக்கமான, ஆனால் ”மேன்மையான” தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார், அதன் மூலம் கௌரவமான மனிதர்களுக்கு மத்தியில் “தகுதிமிக்க இடத்தைப் பெறுவார், முன்னுதாரணமான குடும்பத் தலைவராக விளங்குவார் என்று அவர் எதிர் பார்த்தார்.

இந்த விஷயத்தில் இளம் மார்க்ஸ் தன்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் குறைவான உற்சாகத்தையே கொண்டிருந்தார். அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தை- அதன் அறிவுமிக்க நயமான வடிவத்தில் கூட- தீவிரமாக வெறுப்பதற்குத் தொடங்கியிருந்தார்.

இதன் முதல் நிரூபணத்தை மார்க்ஸ் தன்னுடைய 17-ம் வயதில் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரையில் நாம் பார்க்கின்றோம். வேலையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள் என்ற தலைப்பில் மார்க்ஸ் அக்கட்டுரையை எழுதினார்.

“எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறேன்” என்ற சொந்த விருப்பங்களை விவாதிப்பதற்கு இந்தத் தலைப்பு வாய்ப்புத் தருவதாகவே மார்க்சின் வகுப்பிலிருந்த சக மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதினார்கள். ஆனால் மார்க்ஸ் அப்படி நினைக்கவில்லை என்பது சுவாரசியமானதாகும். ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள புறநிலையான மற்றும் அகநிலையான நிபந்தனைகளைப் பற்றியும் வேலைக்கும் தனிப்பட்ட திறமைகளுக்கும் இடையிலுள்ள பொருத்தத்தைப் பற்றியும் விரிவான சமூக விவாதத்துக்கு இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதினார், மார்க்ஸ் தன்னுடைய முதிர்ச்சிக் காலத்தில் முழுமையாகவும் சிறப்பான முறையிலும் வளர்த்த கருத்துக்கள் ஏற்கெனவே இளம் மார்க்சிடம் “கோடைக்காலத்தின் மின்னல் வீச்சைப் போலப் பளிச்சென்று ஒளி வீசின” (மேரிங்) என்பதை இங்கே பார்க்கிறோம்.

“நாம் செய்ய வேண்டியவை என்று நாம் நம்புகின்ற நிலைமையை நாம் எப்பொழுதுமே அடைய முடியாது; சமூகத்துடன் நம்முடைய உறவுகளே நாம் நிர்ணயிக்கக் கூடிய நிலைமையை அடைவதற்கு முன்னரே அவை ஏற்கெனவே நிறுவப்பட்டு விடுகின்றன.”(7)

அவருடைய வகுப்பு மாணவர்கள் வர்த்தகத்தைக் காட்டிலும் இராணுவ வேலையின் சாதகங்களை அல்லது இறைப்பணி மற்றும் மதகுரு வேலையில் ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி ஆர்ப்பாட்டமாக விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் மார்க்ஸ் ஆணவத்தைத் தூண்டி பதவி ஆசை என்ற பேயை எழுப்புகின்ற வேலைகளின் போலியான பளபளப்பைப் பற்றியும் எதிர்கால வேலையைக் கற்பனையில் பிரகாசிக்கச் செய்கின்ற “பிரமைகளைப்’ பற்றியும் எழுதினார். நம்முடைய திறமைகளைப் பற்றிய சுய ஏமாற்றுதல்களுக்கு இதுவே காரணம் என்பது அவருடைய கருத்தாகும். “இத்தவறு நம்மை நாமே பழிவாங்கிக் கொள்ளச் செய்கிறது”, “அது வெளியுலகத்தின் கண்டனத்தைச் சந்திக்காவிட்டாலும் அத்தகைய கண்டனத்தில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக பயங்கரமான வேதனையை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறது, அத்தவறில் ஏற்படுகின்ற தன்னிகழ்ச்சி ஒருவருடைய இதயத்தை எப்பொழுதுமே அரிக்கிறது. இதயத்திலிருந்து ஜீவரத்தத்தை உறிஞ்சி மனித இன வெறுப்பு மற்றும் மன முறிவு என்ற நஞ்சுடன் கலக்கிறது”. (8)

” ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கின்ற பொழுது அந்தத் தேர்வு போலிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் “சுய ஏமாற்றுதலுக்கு’’ இரையாவது சுலபமே. உறுதியான கோட்பாடுகளே, வன்மையான, அசைக்க முடியாத நம்பிக்கைகளை இன்னும் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்ளாமலிருக்கும் இளைஞனைப் பொறுத்தமட்டில் மிகவும் ஆபத்தான வேலைகள். “வாழ்க்கையில் அதிகமான சம்பந்தமில்லாமல் சூக்குமமான உண்மைகளோடு சம்பந்தப்பட்டிருப்பவையே’’.(9)

இந்தச் சுவாரசியமான அறிவிப்பு இந்தக் கட்டத்தில் மார்க்சின் ஆன்மிக உலகத்தை நமக்கு விளக்குகிறது. ஏட்டுப்படிப்பு விஞ்ஞானத்தைப் பற்றி அவரிடம் ஏற்பட்டிருந்த அதிருப்திக்கும் ‘சூக்குமமான உண்மைகளை’ “வாழ்க்கை ஈடுபாட்டுடன்” இணைப்பதற்கு அவர் மேன்மேலும் விரும்பியதற்கும் இது ஒரு வேளை சான்றாக இருக்கக் கூடும்.

தனிப்பட்ட மனநிறைவு என்ற அற்பவாத இலட்சியத்தை மார்க்ஸ் பின்வரும் சொற்களில் மறுக்கிறார்: “ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”(10)

ஆம். மனிதன் சுய பரிபூரணமடைவது நோக்கம், அதற்கு ஒவ்வொரு வேலையும் ஒரு சாதனம் என்பது உண்மையே. ஆனால் மனிதன் தன்னுடைய சக மனிதர்களின் பரிபூரணத்துவத்துக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமாக மட்டுமே தன்னுடைய சுய பரிபூரண நிலையை அடைய முடியும். நாம் வேலையைத் தேர்ந்தெடுப்பதில் மனிதகுலத்தின் நன்மை (ஆகவே நம்முடைய பரிபூரணத்துவமும்) நமக்கு “முக்கியமான வழிகாட்டியாக” இருக்க வேண்டும்.

வரலாற்றில் பொது நலத்துக்காகப் பாடுபட்டுப் புகழீட்டிய மாபெரும் மனிதர்களுடைய உதாரணத்தை மார்க்ஸ் தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக எடுத்துக் காட்டுகிறார், “மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவதே மிகவும் அதிகமான மகிழ்ச்சியைப் பெறுகிறார் என்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.”(11)

தன்னுடைய சுயேச்சையான பாதையின் தொடக்கத்தில் மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் பின்பற்றப் போகின்ற குறிக்கோளை வகுத்தளிக்கிறார்; “மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடு!’’ இது மலர்கள் தூவிய பாதையல்ல, முட்கள் நிறைந்த பாதை என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார்; ஆனால் அது அவருக்குக் கவலையளிக்கவில்லை. தான் தேர்ந்தெடுத்திருக்கின்ற வேலையின் “பெரும் பொறுப்பின்” முழுச் சுமையையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

ஆனால் அவர் தன்னுடைய எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். “மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்.” இங்கே மார்க்ஸ் மறுபடியும் அற்பவாத வாழ்க்கையின் “அற்பமான, வரையறைக்குட்பட்ட சுயநல மகிழ்ச்சியை” “பல கோடிக்கணக்கானவர்களுக்குச் சொந்தமான ஒன்றின்”(12) மகிழ்ச்சியுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார்.

இந்தக் கட்டுரை பெரிய அளவுக்கு இன்னும் ஒரு பள்ளி மாணவனுடைய கட்டுரைதான் என்பது உண்மையே. இங்கே மார்க்சினுடைய முந்திய ஆன்மிக வளர்ச்சி முழுவதையும் ஒன்று திரட்டப்பட்ட வடிவத்தில் நாம் பார்க்கிறோம், கான்ட் மற்றும் பிரெஞ்சு அறிவியக்கத்தின் தாக்கத்தை உணர முடியும்; அதில் இன்னும் உணர்ச்சிக் கனிவான, புனைந்துரையான குறிகள் இருக்கின்றன, “ஒரு பொதுவான நோக்கத்தைத்” தருகின்ற ‘பரம்பொருளைப்” பற்றிய குறிப்புகளும் “பரம்பொருளின் அறைகூவல்களும்” அதில் இருக்கின்றன. ஆனால் அந்தக் கட்டுரை முழுவதிலும் ஆசிரியரின் முத்திரை ஏற்கெனவே விழுந்திருக்கிறது, மார்க்சின் குணாம்சத்தில் மகிழ்ச்சி நிரம்பிய அம்சங்களான தற்சிந்தனையான வலிமையும் உணர்ச்சிக் குறியும் நடையிலும் உள்ளடக்கத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த இளைஞனுடைய கட்டுரை வாழ்க்கை முழுவதற்கும் வேலைத்திட்டத்தைக் (பொதுவான வடிவத்தில் என்ற போதிலும்) கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னுடைய இதயத் “துடிப்புக்குத்” தக்கவாறு தன்னுடைய எதிர்காலத்தைக் கணிக்கிறார்.

மார்க்சிடம் அரசியல் ஆர்வங்கள் கிளர்ந்தெழுந்திருப்பதாக இக்கட்டுரையில் இன்னும் எந்த அறிகுறியும் இல்லை. ஆனல் அவர் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்ததை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெறுப்பை மார்க்ஸ் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக் கொண்டார்.

மிக முந்திய காலமான 1833-இல் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், அரசியல் கவிதைகள் ஆகியவை டிரியர் உயர்நிலைப் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டன, மாணவர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார் என்று அறிகிறோம். இது மாணவர்கள் மத்தியில் அறிவுக் கிளர்ச்சியை ஏற்படுத்தி வாழ்க்கையைப் பற்றி மார்க்சினுடைய அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மார்க்ஸ் பள்ளியிறுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு பான் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காகச் சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்ட பொழுது பள்ளிக்கூடத்தின் இணை இயக்குநரான விஸ்டுஸ் லியோர்சைச் சந்தித்து விடை பெறுவதற்கு உறுதியாக மறுத்தார். பள்ளி மாணவர்களை அரசியல் ரீதியான கண்காணிப்பில் வைக்கும் விசேஷக் கடமையை அவர் நிறைவேற்றியது தெரிந்ததே. மார்க்ஸ் அவரைச் சந்திக்க மறுத்தது அவருடைய மன உறுதியைக் காட்டுகிறது. அதனால் அவருக்கும் தகப்பனாருக்கும் மோதல் கூட ஏற்பட்டிருக்கலாம்.

ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுக்கு எழுதிய ஆரம்ப காலக் கடிதங்களில் ஒன்றில் இந்தச் செயலுக்காக மகனைக் கண்டிக்கிறார், கார்லுடன் உயர்நிலைப் பள்ளியின் மற்றொரு மாணவனான ஹென்ரிஹ் கிலெமென்சும் லியோர்சிடம் நேரில் விடைபெற்றுக் கொள்ள மறுத்ததை இக்கடிதத்திலிருந்து அறிகிறோம். கார்லின் “குற்றத்தைப்” பற்றி ஆத்திரமடைந்த லியோர்சை சமாதானப்படுத்துவதற்காக ஹென்ரிஹ் மார்க்ஸ் ஒரு ‘பச்சைப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது. “அவன் அப்பொழுது வீட்டில் இல்லை”(13) என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் வாழ்க்கையுடனும் அறிவுலகத்துடனும் மார்க்சின் உண்மையான மோதல் வருவதற்கு இன்னும் சற்றுக் காலமாயிற்று.

குறிப்புகள் :

(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 635.
(2)ஜென்னியின் மூத்த சகோதரரான ஃபெர்டிகுண்டு 1850க்களில் பிற்போக்கான பிரஷ்ய அரசாங்கத்தில் உள்நாட்டு அமைச்சர் பதவி வகித்த பொழுது மார்க்சின் தீவிரமான அரசியல் எதிரியாக இருந்தார்.
(3)Marx, Engels, Collected Works, Vol. 1, P. 28
(4) Marx, Engels, Werke, Bd. 30, Berlin, 1964, S. 628.
(5) Marx, Engels, Collected Works, Vol. 1, P. 355.
(6) Ibid., p. 357.
(7)Ibid., p. 4.
(8)Ibid., p. 7.
(9Ibid., p. 8.
(10)Ibid.
(11)Ibid.
(12) Ibid.
(13) Ibid., p. 647.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?