Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 782

கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி-பதில்!

16

கேள்வி 1:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு கனிமொழிக்கு ஆதரவாக இருக்குமா, எதிராக இருக்குமா? இதில் தி.மு.கவின் மற்ற அமைச்சர்கள் ஏன் இல்லை?

கேள்வி 2:
தேர்தலுக்கு பிந்தைய நாட்களில் அ.தி.மு.க, தே.மு.தி.க உறவு எப்படி இருக்கும்?

– சுப்ரமணி

__________________________________________

கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !அன்புள்ள சுப்ரமணி,

அலைக்கற்றை ஊழல் வழக்கு ஏன் இப்போது நடக்கிறது, அந்த ஒதுக்கீடு நடந்த வருடங்களில் ஏன் நடக்கவில்லை என்பதை பரிசீலித்துப் பார்த்தால் இது குறித்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். இந்த ஒதுக்கீடு குறித்த முடிவுகளில் ராசாவுக்கு மட்டுமல்ல, காங்கிரசு அரசுக்கும், ஏன் அதற்கு முன் இருந்த பா.ஜ.க அரசுக்கும் பங்குண்டு. இரண்டு கட்சிகளும் இதனால் ஆதாயம் அடைந்திருக்கின்றன. கூடவே நிறைய முதலாளிகளும். அதனால்தான் அப்போது இந்த ஊழல் குறித்து ஏதுவும் நடக்கவில்லை.

ஆனால் பின்னர் பொதுநல வழக்கு காரணமாக உச்சநீதிமன்றம் இதில் தற்செயலாக தலையிட்டதின் மூலமே தற்போதைய விசாரணை நடந்து வருகிறது. மன்மோகன் அரசு விரும்பும் வகையில் செயல்படும் சி.பி.ஐ வேறு வழியின்றி நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் ஏதாவது விசாரித்து காட்ட வேண்டியிருக்கிறது. மேலும் இதைத் தொடர்ந்து செய்யும் போது ஊழல் வழக்கு ஆழமும், அகலமும் கொண்டதாக விரிந்து செல்கிறது. இதுதான் ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்கு உள்ள பிரச்சினை.

டெக்னிக்கலாக ராசாதான் அவர் மட்டும்தான் இதைச் செய்தார் என்று காட்ட முயன்றாலும் அது அப்படி மட்டும் காட்டிவிட முடியாது. இப்படித்தான் சில நிறுவன அதிகாரிகள், மற்றும்  கனிமொழி வரைக்கும் கைதுகள் சென்றுள்ளது. ஆகவே இந்த குழி அவர்கள் விரும்பாமலேயே உருவாகிவிட்டது. முடிந்த வரைக்கும் ஒரு சிலரை மட்டும் தள்ளிவிட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகலாம் என்றுதான் அவர்கள் முயல்கிறார்கள்.

தற்போது தயாநிதிமாறனும் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் அரசியல்வாதிகள், தனியார் நிறுவன அதிகாரிகள் மட்டும் மாட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஒரு முதலாளியே மாட்டிக் கொண்டுள்ளார். மாறன் சகோதரர்கள் அரசியல் செல்வாக்கு காரணமாக டாடா, சிவசங்கரன் போன்ற முதலாளிகளோடு வணிக நலன் காரணமாக மோதியது வெளியே வந்திருக்கிறது.

இப்படி முதலாளிகளுக்கிடையே ஏற்படும் பகிரங்கமாக போட்டி, மோதல் காரணமாக மேலும் சில விவரங்கள், ஊழல்கள் வெளிவரலாம். இதவரை ராடியா டேப் உள்ளிட்டு பல விவரங்கள் வெளியே வருவதற்கே முதலாளிகளிடையே உள்ள முரண்பாடுதான்.

கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அடிபடும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம் மத்திய அமைச்சர் சரத்பவாருக்குச் சொந்தமானது என்பது மும்பையில் உள்ள அனைவருக்கும் தெரியுமென்று நீரா ராடியாவே கூறியிருக்கிறார். ஆனாலும் இதுவரை சரத்பவார் சி.பி.ஐ வளையத்தில் பிடிபடவில்லை. அப்படி சரத்பவார் மாட்டினால் வரிசையாக பெரிய தலைகள் காத்திருக்கின்றன.

அதே நேரம் ஒட்டுமொத்தமாக தனியார் மயத்திற்கு ஆதரவாக அலைக்கற்றை விவகாரம் இருப்பதால் முதலாளிகளும் இதை எந்த அளவுக்கு கொண்டு செல்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் தி.மு.க, காங்கிரசு உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகளுக்கு இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் விருப்பம். இல்லையேல் இந்த வழக்கு நேரடியாக முதலாளிகளை குறி வைத்து சென்றுவிடக் கூடும். பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று…

********

தே.மு.தி.க, அ.தி.மு.க உறவு குறித்து…..

கனிமொழி, தயாநிதி மாறன், விஜயகாந்த்….கேள்வி – பதில் !தேர்தலுக்கு பின் என்ன, தேர்தலுக்கு முன்பேயே இந்த இரு கட்சிகளுக்கும் நல்ல உறவு இருக்கவில்லை. அதற்கான வாய்ப்புமில்லை. தங்களது சொந்த இமேஜின் மூலமே தத்தமது கட்சிகள் நடப்பதாக எண்ணிக் கொண்ட இரு சுயநல யானைகள் எப்படி சேர்ந்து இயங்க முடியும்?

தி.மு.க அரசின் மீதான மக்கள் வெறுப்பை அறுவடை செய்வதற்காகத்தான் இருவரும் சந்தர்ப்பவாதமாக உறவு கொண்டார்கள். அதுவும் துக்ளக் சோ போன்ற அதிகாரத் தரகர்கள் இதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போதே இருவரும் தனித்தனியாகவே செயல்பட்டார்கள். கோவையில் நடந்த அ.தி.மு.க அணி கூட்டத்திற்கு கூட விஜயகாந்த் வரவில்லை. பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகும் அழைப்பு வந்தால் பதவியேற்பு விழாவிற்கு செல்வோமென பட்டும்படாமலும்தான் விஜயகாந்த் கூறினார்.

விஜயகாந்த் செல்வாக்கு அடைவதை ஜெயலலிதா விரும்பமாட்டார். அந்த வகையில் தேர்தலின் போது வடிவேலு செய்த பிரச்சாரத்தை கருணாநிதியைக் காட்டிலும் ஜெயாவே மிகவும் விரும்பியிருப்பார். அது போல விஜயகாந்தும் அ.தி.மு.க கூட மிகவும் நெருக்கமாக இருந்தால் தனது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று இடைவெளி விட்டுத்தான் செயல்படுவார். ஆனால் இவர் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் தே.மு.க.தி.க என்ற கட்சி ஆட்சியைப் பிடிக்குமளவு செல்வாக்கை அடையப்போவதில்லை. கூட்டணி பலத்தின் மூலமே அவர்களுக்கு இப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் தனிஆவர்த்தனம் செய்வது இனிமேலும் அர்த்தமுள்ளதாக இருக்காது. எனினும் விஜயகாந்தைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க காலியாகும், அ.தி.மு.கவிற்கு போட்டியாக தான் வந்துவிடலாம் என்று ஒரு கணக்கை நிச்சயம் போட்டிருப்பார். அப்படி நடந்தால் அடுத்த முதலமைச்சர் தான்தான் என்று கூட அவர் கனவு காணலாம்.

தற்செயலான சில அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு விபத்து போலத்தான் ஜெயாவும், விஜயகாந்தும் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.   இரண்டு கட்சிகளுமே ஊழல் பெருச்சாளிகள் நிறைந்தவைதான். இந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும்  கூட்டணி வைத்திருக்கவில்லை என்றால் இதுவே அவருக்கு மங்களம் பாடப்பட்ட கடைசி தேர்தலாக இருந்திருக்கும். கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டே கருணாநிதி அரசு எதிர்ப்பு அலை காரணமாக மூன்றாம் முறையாக முதலமைச்சாராகும் வாய்ப்பை பெற்றவர் ஜெயலலிதா.

குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் மக்களிடையே தோன்றுகின்ற அபிப்ராயங்களெல்லாம் வேறு வழியின்றி இத்தகைய கோமாளி பாசிஸ்ட்டுகளை பதவிக்கு கொண்டு வந்துவிடுகின்றன. எது எப்படியோ இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் எக்காலத்திலும் ஒருவருக்கொருவர் பணிந்து போகப்போவதில்லை. அரசியல் உலகில் உண்மையான மாற்று உருவாகாத நிலைமையில் நாமும் இத்தகைய அபத்தங்களை சகித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

கடைசியாக இந்த ‘கேப்டன்’ இதுவரை சரக்கு அடிக்காமலேயே சட்டமன்றம் சென்று வருவதை அவரது கட்சிக்காரர்களே வியப்பாக பார்க்கிறார்களாம். இதுதான் தே.மு.தி.கவின் தற்போதைய சாதனை!

நன்றி.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

76

மிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.

சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.

இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.

“அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால் அது தொடரட்டும். மற்றவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து 3 வாரத்தில் உயர்நீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெறட்டும். பிள்ளைகள் 3 வாரம் விடுமுறையை அனுபவிக்கட்டும்” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள்.

சட்டத்துக்கோ நீதிக்கோ இந்தத் தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.

என்ன எழவோ ஒரு பாடத்திட்டம். என்னிக்கி இஸ்கூலு தொறப்பான், அதச்சொல்லுஎன்று கேட்பவர்களுக்கு எமது விளக்கம் பின்வருமாறு:

இத் தீர்ப்பின்படி 1,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே உள்ள சமச்சீர் பாடம்தான் என்பதால் பள்ளிக் கூடத்தை திறந்து அவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தலாம்.

மற்ற வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பாடப்புத்தகத்துக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பதும் திறக்காததும் புரட்சித்தலைவியின் விருப்பம். அல்லது நீதிபதிகள் போகிறபோக்கில் குறிப்பிட்டதைப் போல எல்லோருக்கும் 3 வாரம் லீவு விடலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுவை தமிழக அரசு உடனே அமைத்துவிடும். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சில கல்வியாளர்களையும் கொண்டு இக்குழு அமைக்கப்படும். இந்த நியமனமே பிரச்சினைக்குரியதாக இருப்பின் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

“நீக்க விரும்பும் பாடங்களை அரசு நீக்கிக் கொள்ளலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், செம்மொழி வாழ்த்து, சென்னை சங்கமம் முதலான தனக்கு விருப்பமில்லாத பக்கங்கள் அனைத்தையும் கிழித்து விட்டு வெறும் அட்டையை மட்டும் கூட மாணவர்களுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் அப்பீலுக்குப் போய் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு தேடிப் பெற்றிருக்கிறது. இனி, பாடத்திட்டத்திலிருந்து மழித்தல், நீட்டல் எதைச்செய்தாலும் இறுதியாக அதற்கு உயர்நீதி மன்றத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றாக வேண்டும். ஆட்சேபங்கள் உயர்நீதி மன்றத்தில் குவிந்தால், வழக்கு முடிவதற்கு எத்தனை காலமாகும் என்று சொல்ல முடியாது.

பாபர் மசூதி வழக்கிலாவது புராணம், தொல்லியல், வரலாறு ஆகியவற்றுடன் பிரச்சினை முடிந்து விட்டது. இதில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் பிரச்சினை இருப்பதாக புரட்சித்தலைவியின் அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்குக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் போட்டு அன்றாடம் விசாரித்தாலும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி முடியும்வரை விசாரித்து முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு வேளை 3 வாரத்தில் கமிட்டி அறிக்கை கொடுத்து, ஒரு வாரத்தில் தடலடியாக நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டாலும், இறுதியாக்கப்படும் பாடங்களை அச்சிடுவதற்கு 4 மாதங்களாவது தேவை. மொத்தத்தில் நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கலாம். அல்லது வேறு ஏதாவது சதிகாரத் திட்டம் இந்த அரசின் மனதில் இருக்கக் கூடும்.

உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது யார்?

“பாடத்திட்டத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். 4 விதமான பாடத்திட்டங்கள் இனி கிடையாது. ஒரே பாடத்திட்டம்தான் என்று முடிவாகி விட்டதல்லவா? இது சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றிதானே!  அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குக் கிடைத்த வெற்றி தானே என்று கேட்டார் ஒரு நண்பர்.

இல்லை. இதனை வெற்றி என்று கருதுவது மயக்கம். சரியாகச் சொன்னால் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும், போராட்டத்தின் தேவையும் இப்போதுதான் முன்னைக்காட்டிலும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் பல இருப்பினும், அது ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார் அறிவு கொண்டவர்கள்.

தற்போது அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பவர்களில் பெரும்பான்மயினர் கல்வித்துறை அறிவோ அனுபவமோ இல்லாத அதிகார வர்க்கத்தினர். உயர் வர்க்கத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ முதலான மேட்டுக்குடிப் பள்ளிகளில் படிப்பவர்கள். எனவே அந்தப் பள்ளிகள் பின்பற்றும் பாடத்திட்டங்கள்தான் தரமானவை என்பதே இவர்களது கருத்தாக இருக்கும்.

சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், ஐ.ஏ.எஸ் முதலான அனைத்திந்தியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழக மாணவர்களுக்கு வளர்க்கும் விதத்திலும் நமது பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றார் கல்வி அமைச்சர்.

துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் காலம் காலமாகக் கூறி வருவது இதைத்தான். அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை ஈடு செய்யும் விதத்திலும், அவர்களுக்கு தரமான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கும் விதத்திலும் நமது கல்வி அமைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். “”பிரவுன் சாகிப்புகளை”” உருவாக்குவது பற்றி மெக்காலே கேவலமான மொழியில் அன்று பச்சையாக கூறியதை, “உலகமயத்தின் சவால்” என்று ஜம்பமாக கூறுகிறார் கல்வி அமைச்சர்.

“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வருபவர்கள் 7 இலட்சம் பேர். இவர்களில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளுக்கு செல்பவர்கள் மொத்தம் 1000 பேர். இந்த 1000 பேரின் தேவைக்கு ஏற்ப 7 இலட்சம் பேரின் கல்வியை மாற்றியமைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளரும் சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினருமான எஸ்.எஸ்.இராசகோபாலன்.

நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜெ வுக்கு அளித்திருக்கிறது. புதிய பாடநூல்கள் அச்சிடுவதற்கு தாமதமாகும் என்ற பெயரில், “இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்!

30
மார்க்சிஸ்ட்டுகளின் இரட்டை வேடம்
அதான் 'ஏற்கனவே' சொல்லியாச்சே

மார்க்சிஸ்டு’கள் மக்களை ஏமாற்றுவதென்பது பழைய விசயம். தொழிலாளி வர்க்கத்துக்கு அது பழகிப்போன விசயம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று அம்மாவையே கடிக்கத் துணிந்து விட்டார்கள் மார்க்சிஸ்டுகள் என்பதுதான் புது விசயம்.

சென்ற 8.6.2011 தினமணியை எடுத்துப் பாருங்கள்.

சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் என்ற பெயரில் அதனை ஒழிப்பதற்கு அம்மா கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், “சமச்சீர் கல்வி குறித்து ஆராய்ந்த முத்துக்குமரன் குழு 110 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளித்த்து. ஆனால் அதில 3,4 திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரைகுறைக் கல்வியாக சமச்சீர் கல்வித்திட்டத்தை நிறைவேற்றினார்கள்… இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித்திட்டத்துக்கான திருத்த மசோதாவை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ ஆறுமுகம், “இந்த சட்டமுன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவாகும்” என்று கூறி மசோதாவை ஆதரிக்கிறார். (தினமணி, 8.6.2011 பக்கம் 9)

அதே 8 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சியைச் சார்ந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் “சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி” சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். (தினமணி பக்கம் 6)

அதன் பின் 10 ஆம் தேதியன்று மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

உடனே 11 ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சி செயலர் இராமகிருஷ்ணன் ஒரு அறிக்கை விடுகிறார்.

“சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சியும் ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது. இதையே கல்வியாளர்களும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது”

இது எப்படி இருக்கு? அதாவது பொதுப்பாடத்திட்டத்தை நிறுத்துவதற்கும், அச்சிட்ட நூல்களை முடக்குவதற்கும் எதிராக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள கருத்தைத்தான் மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியிருந்ததாம். மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே வலியுறுத்தி வரும் இந்தக் கருத்தைத்தான் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துகிறார்களாம்.

ஏற்கெனவே என்றால் எந்த ஏற்கெனவே? 11 ஆம் தேதிக்கு முன்னால் உள்ள “ஏற்கெனவே” என்பது 7 ஆம் தேதி. அதற்கும் முந்தைய “ஏற்கெனவே” என்பது திமுக ஆட்சிக்காலம்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது சமச்சீர் கல்வி சட்டத்தை மார்க்சிஸ்டு கட்சி ஆதரித்தது உண்மை. இதுதான் “முதலாவது ஏற்கெனவே”.

இந்த மாதம் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வி ஒழிப்பு மசோதாவை “சமூக நீதிக்கான சட்டமுன்வடிவு” என்று கூறி ஆதரித்ததும் உண்மை. இது “இரண்டாவது ஏற்கெனவே”.

இதில் எந்த “ஏற்கெனவே” பற்றி குறிப்பிடுகிறது மார்க்சிஸ்டு கட்சி என்று நமக்குப் புரியவில்லை. ஆனால் வேறொரு விசயம் புரிகிறது. சமச்சீர் கல்வியை ஆதரிப்பவர்களும் சரி – எதிர்ப்பவர்களும் சரி, யாராயிருந்தாலும் மார்க்சிஸ்டு கட்சி “ஏற்கெனவே” வலியுறுத்திய கொள்கையைத்தான் பின்பற்றியாகவேண்டும்.

இராமகிருஷ்ணனின் கூற்றுப்படி, சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டுவந்த கருணாநிதியாகட்டும், அதனை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கும் புரட்சித்தலைவியாகட்டும், இரண்டு பேருமே மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கொள்கை முடிவைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள்.

மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக கருணாநிதியோ, ஜெயலலிதாவோ மேற்படி முடிவுகளை எடுத்திருக்கலாம். மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கை முடிவுகளை திருடி முன்தேதியிட்டு அறிவித்து விட்டார்கள் என்றுதான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமேயன்றி, நேற்று கருணாநிதிக்கும், இன்று ஜெயாவுக்கும் காவடி எடுப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஆகவே, “திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விச் சட்டதை ஆதரித்து அன்று மார்க்சிஸ்டு கட்சி எடுத்த முடிவும், பின்னர் 7 ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை ஒழிக்க ஜெ அரசு கொண்டு வந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த முடிவும், 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தற்போது எடுத்திருக்கும் முடிவும், நாளை உச்ச நீதிமன்றத்தீர்ப்புக்குப் பின் கட்சி எடுக்கவிருக்கும் முடிவும், மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவில் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முடிவுகளே” என்பதை மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்த முடிவுகள் எதையும் கருணாநிதி, ஜெயலலிதா அல்லது சிவபெருமான் உள்ளிட்ட யாரும் தோழர் இராமகிருஷ்ணனுக்கு மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கவில்லை என்பதையும் மாநில செயற்குழு அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறது.

மேலும், “பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு” என்று கூறும் சிவபெருமானின் கவிதையும், “இல்லை” என்று கூறும் நக்கீரனின் தீர்ப்பும் இது தொடர்பாக மார்க்சிஸ்டு கட்சி ஏற்கெனவே நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தையே வழிமொழிகின்றன என்பதையும் மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயற்குழுவினர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

டெய்ல் பீஸ்:

சட்டமன்றத்தில் மசோதாவை வரவேற்று விட்டு, வெளியே வந்து எதிர்ப்பதாகப் பேசும் மார்க்சிஸ்டுகளின் நாடகம் புரட்சித்தலைவிக்குப் புரியாமல் போனதெப்படி? இது பற்றி அம்மாவிடம் எடுத்துச்சொல்ல உளவுத்துறை தவறிவிட்டதா? கடமை தவறும் காவல்துறையை தினமணி கூட கவனிக்கவில்லையா?

புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற சுத்தி அரிவாள் சின்னத்தில் நின்று 9 சீட்டுகளை வென்று, இன்று அம்மாவின் முதுகிலேயே குத்தும் இந்த பச்சைத்துரோகத்தைப் பற்றி அன்பு சகோதரர் “தோழர் தா.பா புரட்சித்தலைவியிடம் உரிய முறையில் போட்டுக் கொடுத்தால், அடுத்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்டுகளைக் காட்டிலும் ஒரு தொகுதியாவது அதிகம் வாங்கலாமே! தா.பா கவனிப்பாரா?

பின்குறிப்பு: சமச்சீர் கல்வி ஒழிப்பை சட்டசபையில் ஆதரித்து வாக்களித்திருக்கும் சி.பி.எம்மின் பச்சைத் துரோகம் குறித்து பதிவுலகில் இருக்கும்  சி.பி.எம் தோழர்கள் பதில் சொல்ல வேண்டும். தங்கள் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.  செய்வார்களா?

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 

பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!

197

’’யாரு… காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட பாவத்துக்காக தன்னோட மாமனாராலயே ஆள் வச்சு சாவடிக்ப்பட்டிச்சே… அந்த பார்த்தசாரதியை பார்க்க வந்தீங்களா? ம்… என்னத்த சொல்ல… நானும் இந்த ஏரியாக்காரன்தான். அம்பது வருஷங்களா இங்கதான் இருக்கேன். ஒரு ஈ,எறும்பு அசைஞ்சா கூட எனக்கு தெரிஞ்சுடும். அப்படியிருக்கிறப்ப அந்தத் தம்பி இருபது வருஷங்களா இதே ஏரியாவுலதான் இருந்திச்சுன்னு பேப்பர்ல பாத்ததும் அப்படியே பகீர்னு ஆகிப்போச்சு. சத்தியமா சொல்றேன்… பேப்பர்ல பார்த்தசாரதியோட ஃபோட்டோவை பார்த்ததும் முன்னபின்ன பார்த்தா மாதிரியோ, பேசினா மாதிரியோ நினைவேயில்ல. அந்தளவுக்கு தானுண்டு… தன்வேலையுண்டுனு அந்தத் தம்பி இருந்திருக்கு. எனக்கு மட்டும் இப்படியொரு மாப்பிள்ளை கிடைச்சிருந்தா அப்படியே கோயில் கட்டி கும்பிட்டிருப்பேன். ஆனா, பணக்காரனுங்களுக்கு எங்க மனுஷனோட குணம் தெரியுது? ஒரு தும்மல் கூட எவ்வளவு விலை போகும்னுதான கணக்கு பார்க்கறாங்க? என்னவோ போங்க… முன்னாடியெல்லாம் தெற்குப் பக்கம்தான் சாதி, அந்தஸ்தை பார்த்து இப்படி கொலை செய்வாங்கனு படிச்சிருக்கேன்… இப்ப இந்தப் பழக்கம் சென்னைக்கும் வந்திருக்கு… இதெல்லாம் நல்லதுக்கில்ல… ஆமா…’’

என்றபடி அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட் சாலையில், மீன் மார்கெட்டுக்கு எதிர்புறமாக செல்லும் சாலையை அடையாளம் காட்டினார். அதுதான் அய்யாவு முதலி தெரு. பார்த்தசாரதியின் குடும்பம் அத்தெருவில்தான் வசிக்கிறது. சாலையின் தொடக்கத்தில் ‘சிந்தாதிரிப்பேட்டை உதவி காவல் மையம்: உபயம் சிந்தாதிரிப்பேட்டை வணிகர் பெருமக்கள்’ என்னும் பெயிண்ட் உதிர்ந்த போலீஸ் பூத், காவலர்கள் இன்றி காற்றாடிக் கொண்டிருந்தது. சாலையின் குறுக்கே ஓடையை போல் ஓடுகிறது கழிவு நீர். அதைத் தாண்டினால் சாலையின் இருபுறகும் கடைகள். பெரும்பாலும் சந்தன மாலை உட்பட செயற்கையான மாலைகளை விற்கும் கடைகள். இதனையடுத்து ஒரு சின்ன ஹார்டுவேர். பிறகு புரொவிஷன் ஸ்டோர். பெட்டிக் கடைகள். இக்கடைகளின் மாடிகளில் மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக துணிகள் வெயிலில் காய்ந்துக் கொண்டிருந்தன. பிறகு வருபவை அனைத்தும் குடியிருப்புகள்தான்.

வீடுகளோ, கடைகளோ இடைவெளியின்றி அடுத்தடுத்து இருக்கின்றன. ஒரு வீடு அல்லது கடையின் எல்லை அடுத்த வீடு அல்லது கடையின் ஆரம்பமாக இருக்கிறது. ஐம்பதடி தூரம் நடந்தால் இடது புறத்தில் சின்னதாக மசூதி. மேலும் ஐம்பதடி நடந்தால் வலப்புறம் ‘சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்’. இக்கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் வெள்ளை சுண்ணாம்படித்த வீட்டின் மாடியில்தான் பார்த்தசாரதியின் குடும்பம் வசித்து வருகிறது.

ஆங்காங்கே சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்களில், இடைவெளி விட்டு ஜன்னல்கள் முளைத்திருக்கின்றன. அனைத்துமே மர ஜன்னல்கள். எல்லாமே திறந்திருக்கின்றன. எந்த ஜன்னலுக்கும் கொக்கியும் இல்லை. அவை நேராக நிற்கவும் இல்லை. ஒரு புறமாக சாய்ந்த நிலையில் காணப்படும் அந்த ஜன்னல்களின் கம்பிகள் துருவேறி, எளிதில் வளைக்கக் கூடிய அல்லது பிடுங்கக் கூடிய நிலையில் இருக்கின்றன.

வாசலில் காலிங்பெல் இல்லை. வாசக் கதவும் மரக் கதவுதான். சாயம்போன பழுப்பு நிறம். இடுப்பு வரை வெறும் மரச்சட்டங்கள். அதன் பிறகு நீள வடிவ மரப் பலகையின் நடுவில் நான்கு, நான்கு கம்பிகள். அந்தக் கம்பியின் இடைவெளியில் கைவிட்டால் உட்புறமாக இருக்கும் தாழ்பாளை அணுகலாம். ஆனால், கவனமாக அந்தத் தாழ்பாளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வாயைப் பிளந்தபடி காட்சியளிக்கும் அந்த இரும்புத் தாழ்பாளின் முனைகள் கைகளை கிழித்துவிடும்.

தாழ்பாளை நீக்கியதும் கைகளை அழுத்தி கதவைத் திறந்தால்… கரகர ஒலியுடன் கதவு திறக்கிறது. அதுதான் காலிங் பெல் போலும். சரியாக மூன்றடி நீளமுள்ள தாழ்வாரம். அதன் பிறகு கீழ் வீட்டுக்கான கதவு. அக்கதவை ஒட்டினால் போல வலது புறத்தில் மாடிக்கு செல்லும் படிக்கெட்டுகள்.

கைகள் இல்லாத கறுப்பு பனியனை அணிந்திருந்த, சுமாராக எட்டு வயதுள்ள சிறுவன் கீழ் வீட்டின் கதவை திறந்தபடி வந்தான். ”நீங்க யாரு..? யாரைப் பார்க்கணும்..?” என்றெல்லாம் கேட்காமல், ”பார்த்தசாரதி வீடுதான? மேல போங்க. ஆனா, சத்தம் போடாம போங்க. என் தம்பி தூங்கிட்டு இருக்கான்…” என்றபடி மாடிப் படிக்கெட்டை சுட்டிக் காட்டினான்.

மாடிப்படியின் அகலம் இரண்டடி இருக்கும். நீளம் என்று என்று பார்த்தால் அதிகபட்சம் ஓரடித்தான். சற்றே தாட்டியான உடலுள்ளவர்கள் அப்படிகளில் நேராக ஏற முடியாது. படிக்கெட்டின் நடுவில் ஆங்காங்கே உடைந்திருப்பதால் கால்களை கவனமாக ஊன்ற வேண்டும். ஏழு படிக்கெட்டுகள் வரை ஏறியதும் சராசரி உயரமுள்ளவர்கள் கூட குனிவது நல்லது. இல்லாவிட்டால் தலை இடிக்கும். இதன் பிறகு குறுகலான இரண்டு படிக்கெட்டுகள். அதன் பிறகு இடப்புறமாக முன்பைப் போல் மூன்று படிக்கெட்டுகள்.

பார்த்தசாரதியின் வீடு திறந்தே இருக்கிறது. கீழே சிறுவன் பேசியது கேட்டிருக்க வேண்டும். எனவே கதவின் அருகில் காலடி சத்தம் கேட்டதுமே, ”உள்ள வாங்க…” என குரல் அழைக்கிறது.

செவ்வகமான ஹால். தரைத்தளம் சிமெண்டினால் பூசப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே விரிசலும், சில இடங்களில் சற்றே பெயர்ந்தும் காணப்படுகிறது. கூரையை மரச் சட்டங்கள் தாங்கியிருக்கின்றன. வாசக் கதவுக்கு எதிர்முனையில், மர ஈசி சேரில் பெரியவர் ஒருவர் சாய்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் சாயம் போன சாம்பல் நிற பிளாஸ்டிக் சேர் காலியாக இருக்கிறது. பெரியவருக்கு அந்தப் பக்கம், சுவற்றுடன் ஒட்டியபடி பழைய மர டேபிள். அதன் மீது புதியதாக ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க, பார்த்தசாரதியின் புகைப்படம், ரோஜா மாலையுடன் சுவற்றில் சாய்ந்தபடி வருபவர்களை வரவேற்கிறது.

அந்த மர டேபிள் ஆடாமல் இருப்பதற்காக, கால் பகுதியின் அடிப்பாகத்தில் சின்னதாக ஒரு கருங்கலை வைத்திருக்கிறார்கள். டேபிளுக்கு கீழே, புதியதாக ஒரு சின்ன எவசில்வர் குடமும், அதன் மீது மஞ்சள் தடவப்பட்ட தேங்காயும், தேங்காயை சுற்றிலும் மாவிலையும் இருக்கிறது.

”உட்காருங்க…” என தன் அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை அந்தப் பெரியவர் காட்டினார். அவரது உறவினர்கள் ஏழெட்டு பேர், சுவற்றுடன் ஓட்டியபடி நின்றிருந்தனர்.

”நீங்க பத்திரிகைக்காரங்கனு தெரியுது. ஆனா, எந்தப் பத்திரிகைனு நீங்க சொன்னாலும் என்னால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா, எனக்கு படிப்பறிவு கம்மி. அதனால நானே நடந்ததை சொல்ல ஆரம்பிச்சுடறேன்.

என் பேரு சந்திர மோகன். டைலர். இப்ப தொழில் செய்யறதில்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன். பையன்தான் கடைசி. என் பொண்டாட்டி ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டா. கொஞ்ச நாள் பிராட்வேல இருந்தோம். அப்புறம், இதோ இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தோம். சுமாரா ஒரு பதினேழு, பதினெட்டு வருஷங்களா இதே வீட்லதான் குடியிருக்கோம். நாங்க குடிவந்தப்ப இந்த வீட்டுக்கு வாடகை இருநூறு ரூபா. இப்ப இரண்டாயிரம் ரூபா வாடகை தர்றோம். பசங்களை கஷ்டப்பட்டு படிக்க வைச்சேன். பொண்ணுங்களை கட்டி கொடுத்ததும் தொழிலை விட்டுட்டேன்.

என் பையன் நல்லா படிப்பான். கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிச்சான். ப்ளஸ் 2 முடிச்சதும் இன்ஜினியரிங் படிக்கறேன்னு சொன்னான். அந்தளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. அதனால அவனாவே பேங்க்ல லோன் வாங்கி படிச்சான். படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை கிடைக்கலை. சின்னச் சின்ன வேலையாதான் கிடைச்சது. வீட்டு சூழ்நிலை புரிஞ்சு கிடைச்ச வேலைக்கு போனான். நைட் ஷிப்ட் வேலைதான் பெரும்பாலும் கிடைச்சது. அவனுக்கு கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ணத் தெரியும். அதனால பகல்ல அந்த வேலையை பார்த்தான். இந்த வருமானத்துலதான் படிப்புக்காக அவன் வாங்கின லோனையும் கட்டினான். குடும்பத்தையும் பார்த்துகிட்டான்.

இதுக்கு நடுவுல ஒரு பொண்ணை காதலிக்கறதா சொன்னான். அந்தப் பொண்ணு பேரு சரண்யா. நாங்க முதலியாருங்க. அவங்க நாயுடு. இதுபோக ஏணி வைச்சா கூட எட்ட முடியாத அளவுக்கு அவங்க பணக்காரங்க. அதனால இது சரிப்பட்டு வருமானு நான் யோசிச்சேன்.

ஆனா, சரண்யாவ பார்த்ததும் இப்படியொரு மருமக கிடைச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சேன். அந்தளவுக்கு பந்தா இல்லாம, பணக்கார திமிரு இல்லாம எங்கிட்டயும், என் பொண்ணுங்க கிட்டயும் அன்பா பழகினா.

இவங்க காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதும் சரண்யாவோட அப்பாவும், அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. எங்களையும் சரி, எங்க வீட்டையும் சரி, அவங்களுக்கு பிடிக்கலை. ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது. என் பொண்ணை மறந்துடு’னு என் பையன் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா, என் பையனும், சரண்யாவும் உறுதியா நின்னாங்க. அதனால அவங்க வீட்ல திரும்பவும் பேச நான் போனேன்.

அவங்க வீடு பங்களா. என்னை நிக்க வைச்சு பேசி ‘இந்தக் கல்யாணம் நடக்காது’னு சொல்லி அனுப்பிட்டாங்க…” என்று அவர் சொல்லும்போதே அவருக்கு இருமல் வந்தது.

”பார்த்துப்பா… பார்த்து…” என்றபடி அழுது வீங்கிய முகத்துடன் உள்ளறையிலிருந்து ஒரு பெண் வேகமாக வந்து அவரது மார்பை தடவி விட்டார். ”இவதான் சரண்யா… என் மருமக…” இருமலின் வழியே அந்தப் பெரியவர் அறிமுகப்படுத்தினார்.

சரண்யா
சரண்யா

”அதிகம் பேசினா இவருக்கு இருமல் வரும். அதுக்காக, பேசாமயும் இருக்க முடியாது. ஏன்னா, நடந்த கொடூரத்தை உங்கள மாதிரி பத்திரிகைகாரங்ககிட்ட இப்ப சொன்னாதான் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நம்பறோம். அதனாலதான் திரும்பத் திரும்ப எங்க துக்கத்தை சொல்லிகிட்டே இருக்கோம்…” என பெரியவரின் மார்பை தடவியபடியே சரண்யா பேச ஆரம்பித்தார்.

”கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெரம்பூர், பெரியார் நகர்ல எங்கப்பா அம்மா கூடதான் நான் இருந்தேன். எங்கப்பா நரசிம்மன். அவரு வில்லிவாக்கம் குடிநீர் வடிகால் வாரியத்துல உதவி செயற்பொறியாளரா இருக்காரு. அம்மா பேரு லதா, கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர். ஒரேயொரு அண்ணன். பேரு அரவிந்த். இன்ஜினியரிங் முடிச்சுட்டு வெளிநாடு போக டிரை பண்ணிட்டு இருக்கான். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்.

சின்ன வயசுலேந்தே எங்க வீட்டை எனக்கு பிடிக்காது. எங்கப்பாவும், அம்மாவும் கவர்மெண்ட் செர்வண்ட்ஸ்தான். ரெண்டு பேரோட சம்பளத்தையும் சேர்த்தா அதிகபட்சம் மாசம் முப்பதாயிரம் ரூபாதான் வரும். ஆனா, எங்களுக்கு சென்னைல மட்டுமே 5 வீடுகள் இருக்கு. இதுதவிர எங்க சொந்த ஊரான அரக்கோணத்துல சொத்துக்கள் இருக்கு. நிச்சயம் இதெல்லாம் அவங்க சம்பளத்துல வாங்கியிருக்க முடியாது. வேற வழியில சம்பாதிச்ச பணம்தான். ஒருமுறை லஞ்சம், ஊழல் தொடர்பா எங்கப்பா மேல விசாரணை கூட நடந்தது. ஆனா, எப்படியோ தப்பிச்சுட்டாரு.

வீட்ல எங்கப்பா சாது. அம்மா வைச்சதுதான் சட்டம். பண ரீதியா எல்லாத்தையும் எங்கம்மாதான் பார்த்துப்பாங்க. எல்லாத்தையும் பணத்தை வைச்சே மதிப்பிடுவாங்க. பணக்கார ஃப்ரெண்ட்ஸோட பழகினா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிப்பாங்க. அதுவே ஏழையாவோ அல்லது சுமாரான நிலைல இருக்கிற ஃப்ரெண்ட்ஸாவோ இருந்தா ‘அவங்க கூட எல்லாம் ஏன் பழகற’னு என்னை திட்டுவாங்க. இதெல்லாம் எனக்கு பிடிக்காது. அடிக்கடி அவங்களோட சண்டை போடுவேன். எங்கண்ணன் எப்பவும் அம்மா பக்கம்தான். அப்பா வாயே திறக்க மாட்டாரு. அதனால தனிமைப்பட்டு நின்னேன்.

இந்தநேரத்துலதான் ‘சாட்டிங்’ மூலமா 5 வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தசாரதி அறிமுகமானாரு. ஒருத்தரையொருத்தர் சந்திக்காமயும், ஃபோட்டோ கூட பரிமாறிக்காமயும் நட்பா பழகினோம். காஞ்சிபுரம் பக்கத்துல எம்.பி.பி.எஸ். படிக்க எனக்கு சீட் கிடைச்சது. உண்மையை சொல்லப் போனா பணம் கொடுத்து சீட் வாங்கினோம்னு சொல்லணும்.

மூணு வருஷங்களுக்கு முன்னாடி நானும் பார்த்தசாரதியும் நேருக்கு நேர் ஒரு பொது இடத்துல சந்திச்சோம். பணத்தை பெரிசா நினைக்காத பார்த்தசாரதியோட குணம் எனக்கு பிடிச்சிருந்தது. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடிதான் அவரோட நான் வெறும் நட்பா மட்டும் பழகலை… காதலிக்கவும் செய்யறேன்னு புரிஞ்சுது. ஏறக்குறைய பார்த்தசாரதியும் அதே மனநிலைதான் இருந்தாரு. அதனால பரஸ்பரம் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்.

நான் வீட்லேந்து தினமும் காலேஜுக்கு போயிட்டு வந்துட்டிருந்தேன். சீக்கிரமா காலேஜ் விட்டு வர்றப்ப அல்லது வார கடைசில நாங்க ரெண்டுபேரும் ஊர் சுத்துவோம். இதை யாரோ பார்த்துட்டு எங்க வீட்ல போட்டுக் கொடுத்துட்டாங்க.

எங்க காதலை பத்தி எங்கப்பா என்ன நினைச்சார்னு இன்னி வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனா, எங்கம்மாவும், அண்ணனும் இதை ஏத்துக்கலை. பலமா எதிர்த்தாங்க. பார்த்தசாரதியை நான் மறக்கணும்னு என்னை அடிச்சாங்க. ஆனா, நான் உறுதியா நின்னேன்.

அதனால ஃபைனல் இயர் படிக்கிற எனக்கு அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஒரு அமெரிக்க மாப்பிள்ளையோட கடந்த ஜனவரி 27-ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் நடத்தினாங்க. இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாதுனு காலேஜ் ஹாஸ்டல்ல தங்கினேன். ஆனா, வார கடைசில வீட்டுக்கு வர்றப்ப பார்த்தசாரதியை நான் சந்திக்கக் கூடாதுனு ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி செஞ்சாங்க. என்னுடைய செல்ஃபோனையும், லேப்டாப்பையும் பிடுங்கிட்டாங்க. ‘பார்த்தசாரதிய நீ எங்களுக்கு தெரியாம கட்டிகிட்டாலும் உன் தாலிய அறுத்து உனக்கு இரண்டாவது கல்யாணம் செஞ்சு வைப்போம்’னு சொன்னாங்க.

ரொம்ப அருவெறுப்பா ஆகிடுச்சு. கொஞ்சமா ஒட்டிட்டிருந்த பாசம் கூட விட்டுப் போயிடுச்சு. பணம் பணம்னு அலையற எங்கம்மாவையும், அண்ணனையும் பார்க்கவே எனக்கு பிடிக்கலை. பணத்தை பத்தி பெரிசா நினைக்காத, சின்ன வயசுலேந்து நான் தேடிக்கிட்டிருந்த அன்பை மட்டுமே முக்கியமா கருதற பார்த்தசாரதியோட குடும்பம் எனக்கு பெரிசா தெரிஞ்சது. எந்தக் காரணத்தை கொண்டும் இவங்களை இழந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.

நடுவுல எங்கண்ணன், பார்த்தசாரதியை கூப்பிட்டு மிரட்டினான். ஆனா, ‘சரண்யாவ உயிருக்கு உயிரா காதலிக்கறேன். அவளை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்’னு பிடிவாதமா நின்ன பார்த்தசாரதிய பார்க்க பிரமிப்பா இருந்தது. உண்மைய சொல்லணும்னா அந்தக் கணத்துலேந்துதான் நான் அதிகமா பார்த்தசாரதியை நேசிக்க ஆரம்பிச்சேன்னு சொல்லணும்.

உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரியலை. நீங்க சின்ன வயசுலேந்து எதை தேடிட்டு இருந்தீங்களோ… எது கிடைக்கவே கிடைக்காதுனு நம்பிட்டு இருந்தீங்களோ… அது உங்க முன்னாடி வந்து நின்னு ‘உனக்காகத்தான் நான் காத்திருக்கேன்’னு சொன்னா எப்படி இருக்கும்? அப்படியான மனநிலைதான் நான் இருந்தேன்.

அதனால கடந்த பிப்ரவரி மாசம் 10ம் தேதி நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம். பிப்ரவரி 23ம் தேதி சின்னதா ஒரு ரிசப்ஷனை வச்சோம். எங்க வீட்லேந்து யாருமே வரலை.

நான் வாழ்ந்த வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அது பல் விலக்கறதுலேந்து ஆரம்பிக்கிற வேறுபாடு. ஆனா, இந்த வீட்லதான், இந்த நாலு சுவத்துக்குள்ளதான் நான், நானா இருக்கேன். எந்தவிதமான மன சங்கடமும் இல்லாம சந்தோஷமா இருக்கேன். இருக்கிற சாப்பாட்டுல எனக்கும் ஒரு வாய் கொடுக்கிறாங்க. ஆனா, வயிறார நான் சாப்பிடறேன்.

எங்க கல்யாணத்துக்கு பிறகுதான் பார்த்தசாரதிக்கு ஒரு நல்ல வேலை டைடல் பார்க்குல கிடைச்சது. நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். வார கடைசில இங்க வந்துடுவேன்.

திருமணத்துக்கு பிறகு எங்கம்மாவும், அப்பாவும் அமைதியா ஆகிட்டாங்க. அண்ணன் கூட எந்த ரியாக்ஷனும் காட்டலை.  இது அவங்க வழக்கத்துக்கு மாறானது. அதனாலயே ஏதோ பெரிசா ப்ளான் பண்ணறாங்கனு என் மனசு கடந்து அடிச்சுகிட்டே இருந்துச்சு. பார்த்தசாரதிகிட்ட என் பயத்தை சொன்னா, ‘எதுக்கு வேண்டாததை போட்டு குழப்பிக்கற’னு என்னை டைவர்ட் பண்ணிடுவாரு. ஆனாலும் நான் சமாதானமாகலை.

தினமும் காலைலயும், மாலைலயும் நான் பார்த்தசாரதியோட பேசுவேன். அப்படித்தான் ஜூன் 2-ம் தேதி காலைலயும் அவரோட பேசினேன். ஆனா, கொஞ்ச நேரத்துலயே கால் கட்டாகிடுச்சு. திரும்பவும் கூப்பிட்டேன். அப்ப பார்த்தசாரதி யார் கூடவோ வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தாரு. ‘என்ன பிரச்னை? யாரோட சண்டை போடறீங்க’னு கேட்டேன். அவர் பதில் சொல்றதுக்குள்ள அவரோட செல்ஃபோன் கீழ விழுந்து, ஆஃப் ஆகிடுச்சு. அதுக்குப் பிறகு விடாம தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆஃப்னே வந்தது.

பயந்து போய், பார்த்தசாரதியோட அப்பாவுக்கு ஃபோன் பண்ணினேன். அவருக்கும் எந்த விவரமும் தெரியலை. பகல் பூரா பார்த்தசாரதியை தொடர்பு கொள்ளவே முடியலை. வீட்டுக்கும் அவர் வரலை. ஆபீசுக்கும் அவர் போகலை. அதனால அலறியடிச்சு சென்னைக்கு வந்தேன். நிச்சயம் இது எங்க அப்பா, அம்மாவோட வேலையாதான் இருக்கும்னு உறுதியா நம்பினேன்.

மாலையே சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்தோம். பார்த்தசாரதோட செல் நம்பரை வாங்கி, டிரேஸ் பண்றதா சொன்னாங்க. நான் தெளிவா எங்கப்பா, அம்மா, அண்ணனை விசாரிங்கனு சொன்னேன். எங்கப்பாவோட பெயரையும், வேலையையும் கேட்டவங்க சட்டுனு ஜர்க் ஆனாங்க. அதுக்குப் பிறகு அவங்க போக்கே மாறிடுச்சு.

‘பார்த்தசாரதிக்கு வேற அஃபேர் இருந்துச்சா… பணம் கேட்டு என்னை டார்ச்சர் பண்ணினாரா… கெட்டப் பழக்கங்கள் அவருக்கு இருக்கா’னு தேவையில்லாத கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாங்க. இந்த நிலைலதான் கடந்த 7-ம் தேதி ராத்திரி திண்டிவனம் பக்கத்துல ஓலக்கூர் பாலத்துக்கு கீழ எரிஞ்ச நிலைல ஒரு உடலை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சாங்க…”

துக்கத்தை கட்டுப்படுத்தி சரண்யா சொல்லிக் கொண்டிருக்கும்போது, பார்த்தசாரதியின் அப்பா வாய்விட்டு அழ ஆரம்பித்தார். ”அழாதீங்கப்பா… நான் இருக்கேன்… அக்கா, கொஞ்சம் இவரை உள்ள கூட்டிட்டு போங்க…” என்று சரண்யா சொன்னதையடுத்து பார்த்தசாரதியின் சகோதரிகள் அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, உடைந்த குரலில் சரண்யா தொடர்ந்தார். ”இந்தத் தகவல் எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் போச்சு. சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்காரங்க, அப்பாவை (சந்திரமோகனை) திண்டிவனம் கூட்டிட்டு போனாங்க. கேசியோ வாட்ச், சிவப்பு நிற உள்ளாடை, காப்பி கலர் பேண்ட்டை வச்சு அந்த உடல், பார்த்தசாரதியுடையதுதான்னு அடையாளம் காட்டினாரு…”

கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், ”டிஎன்ஏ ரிசல்ட்டும் அதை ஊர்ஜிதபடுத்திச்சு. எந்த பார்த்தசாரதியோட நான் வாழ்ந்தா சந்தோஷமா இருப்பேனோ, அந்த பார்த்தசாரதியை என்னை பெத்தவங்களே உயிரோட எரிச்சு கொன்னுட்டாங்க. உண்மைல அவங்களுக்கு நான் மகளாதான் பொறந்தேனா அல்லது என்னை எங்கேந்தாவது வாங்கினாங்களானு தெரியலை.

பார்த்தசாரதிக்கு 24 வயசாகுது. எனக்கு 23 வயசு. மூணு மாசங்கள் கூட நாங்க முழுசா சந்தோஷமா வாழலை. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு…”

பார்த்தசாரதி - சரண்யா
சரண்யா - பார்த்தசாரதி

துப்பட்டாவால் தன் முகத்தை மூடி அழுதார் சரண்யா. மெளனமாக நிமிடங்கள் கரைய சட்டென ஆவேசத்துடன் நிமிர்ந்தார். ”நான் புகார் கொடுத்தப்பவே எங்க வீட்டாரை கூப்பிட்டு விசாரிச்சிருந்தாங்கனா என் புருஷனை காப்பாத்தியிருக்கலாம். நான் ஏதோ, வேணும்னே எங்க அப்பா, அம்மா, அண்ணன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கிறதா நினைச்சுட்டாங்க. எங்கப்பாவோட வேலைய பார்த்து அடங்கிட்டாங்க. ஆனா, இப்ப என்ன ஆச்சு..?”

அருகிலிருந்த 12-ம் தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழின் 3ம் பக்கத்தை விரித்தார். ”எங்கப்பாவே நான்தான் கூலிப்படையை ஏவி கொன்னேன்னு சரணடைஞ்சிருக்காரு. இதுக்காக 5 லட்சம் ரூபாய கொடுத்தாராம். நூறு ரூபாய கூட எங்கம்மாவுக்கு தெரியாம எடுத்து எங்கப்பா செலவு செய்ய மாட்டாரு. அப்படியிருக்கிறப்ப இவ்வளவு பெரிய தொகைய எங்கம்மாவுக்கு தெரியாமயா கொடுத்திருப்பாரு? எங்கம்மாவையும், அண்ணனையும் காப்பாத்தறதுக்காக குற்றத்தை தானே செஞ்சதா வாக்குமூலம் கொடுத்திருக்காரு. போலீசும் அதை நம்புது. ஆனா, நான் சும்மா விட மாட்டேன். எங்கப்பாவ தூண்டிவிட்ட எங்கம்மாவும், எங்கண்ணணும் கைது செய்யப் படணும். மூணு பேருமே தண்டிக்கப்படணும்…”

மூச்சு வாங்க பேசிய சரண்யா, சற்று நிதானத்துக்கு வந்தார். ”என்னை ஐஏஎஸ் ஆக்கிப் பார்க்கணும்னு என் புருஷன் ஆசைப்பட்டாரு. அவரோட ஆசைய நான் நிறைவேத்தணும். அதுக்காகவே எம்.பி.பி.எஸ். ஃபைனல் இயர் முடிச்சதும், ஐஏஎஸ்-க்கு படிக்கப் போறேன். தன் படிப்புக்காக அவரு பேங்க்ல வாங்கின லோன் இன்னும் அடையலை. அதை நான் அடைப்பேன். அவரோட இடத்துல இருந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்துவேன்… நாசமா போற அந்தஸ்துக்காக பெத்தவங்களே இப்படியா கொடூரமா நடந்துப்பாங்க…” உதடு துடிக்க பேசிய சரண்யா, சட்டென எழுந்தார். ”ஐ’ம் சாரி… தப்பா நினைக்காதீங்க… நான்… நான்… உள்ள போறேன்…” என்றபடி உள்ளறைக்கு சென்றார்.

வெளியே வந்த பிறகும் சரண்யாவின் கேவல் கேட்டுக் கொண்டே இருந்தது.

______________________________________________________________________

வினவு செய்தியாளர், சென்னை – சிந்தாதரிப்பேட்டையிலிருந்து….
_______________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

38
பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
அது போன மாசம்.........

நுனி நாக்கை உள்நோக்கி வளைத்து சிறுநாக்கையும் அதைச் சுற்றி மேலண்ணத்தில் இருக்கும் நெகிழ்வான பகுதிகளையும் அழுத்துமாறு வைத்துக் கொண்டு மூச்சை சீராக இழுத்து விடுவதற்கு ஹட யோகத்தில் கேச்சரி முத்திரை என்று பெயர். இப்படிச் செய்வதால், ப்ராணன் இடது மற்றும் பிங்கள நாடியிலிருந்து அகன்று சுஷூம்னா நாடியில் நிலை கொள்ளுமாம். இதனால் ஒரு மனிதனுக்கு பசியே உண்டாகாமல் தடுத்து விட முடியுமாம். பதறாதீர்கள் நண்பர்களே. இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை – யோக சாஸ்திரம் தான் சொல்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் ஒரு நாட்டில் இது போன்ற  ஆன்மீக சரடுகளையெல்லாம் பெரும்பாலானோர் நம்பப் போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால்,

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் காமெடி கண்ணீர் கிளைமேக்ஸ்..!
உண்ணாவிரதத்தை முடித்து வைத்த ஸ்ரீஸ்ரீ

இதையெல்லாம் நம்மை நம்பச் சொன்னதோடு அதையே மூலதனமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ள ஒருவருவருக்கு மேற்படி யோக டெக்னிக் ஒர்க்அவுட் ஆகாமல் காலைவாரி விட்ட சோகக் கதையை இனி பார்ப்போம்.

ஜூன் நான்காம் தேதி பாபா ராம்தேவ் கருப்புப் பணத்தையும் ஊழலையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது எப்படியும் இந்தாளுக்கு இருக்கும் யோக பலத்தின் அடிப்படையில் ஒரு பத்து மாதத்திற்காவது இந்த டிராமாவை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார். இந்த இடத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறார் அல்லவா?

பல ஆண்டுகளாக ராம்தேவ் செய்து வந்த யோகாப்பியாசங்கள் வழங்கிய உடல் உறுதியைக் காட்டிலும் அந்தச் சாதாரணப் பெண்ணின் மனவுறுதி வலிமையானது என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. ஆக, போராட்ட உறுதியையும் கொள்கைப் பிடிப்பையும் உறுதி செய்வது வெறும் உடல் வன்மையல்ல – அது ஒருவன் ஏற்றுக் கொண்ட நேர்மையான அரசியலும் அதற்கு விசுவாசமாக  நிற்கும் மனத்தின்மையும் தான் என்பது இன்னுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த யோகப் போராளி தினமும் பாலும், தேனும் அடித்து விட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இருந்தும் ஒரு வாரத்திற்கு மேல் அண்ணாத்தேவின் உதார் விரதம் தாக்குப்பிடிக்கவில்லை.

போகட்டும். அண்ணா ஹசாரேவுக்கு மதிப்புக் கொடுத்த காங்கிரசும் அவரை ஒரு நாயகன் போல ஏற்றிப் போற்றிய முதலாளித்துவ ஊடகங்களும் பாபா ராம்தேவைக் கைவிட்டதன் தவிர்க்கவியலாத விளைவு தான் இப்போது அவரை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.

அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு நாடெங்கும் குறைந்த பட்சமாகத் திரண்ட நடுத்தரவர்க்க மக்கள் திரளின் பின்னே இருந்தது, வலுவானதொரு என்.ஜி.ஓ வலைப்பின்னல் மற்றும் ஊடகங்கள். என்.ஜி.ஓவின் ஆன்மாவே அதன் அரசியலற்ற தன்மையும் மக்களை அரசியல் ஓட்டாண்டிகளாக்கிக் காயடிக்கும் துரோகத்தனமான செயல்திட்டமும் தான். இதனால் கீழ்மட்ட அளவில் ஊடுறுவ முடிந்த காவி கும்பலால் மேல்மட்ட அளவில் ஊடுறுவி ஓரளவுக்கு மேல் ஆதாயம் அடைய முடியவில்லை. மோடியை ஆதரித்த அண்ணா ஹசாரே கூட ஒரு கட்டத்தில் அதைப் பற்றிய விமர்சனம் வந்த போது சுதாரித்துக் கொண்டார்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் புதிதாய் உருவெடுத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு லும்பன் பிரிவையே தனது பிரதானமான நுகர்வோராய்க் கொண்டிருக்கும் ஆங்கில ஊடகங்களுக்கும் அண்ணாவை மெனக்கெட்டு ஆதரிப்பதில் ஆதாயம் இருந்தது. வெளியாகும் ஊழல் முறைகேடுகளின் விளைவாய் அவர்களிடையே எழுந்திருந்த இயல்பான ஆத்திரத்திற்கும் ஆவேசத்திற்கும் ஒரு வடிகாலாய் அண்ணாவை முன்னிறுத்தி டி.ஆர்.பியை உயர்த்தி நன்றாகக் கல்லா கட்டிக் கொண்டார்கள்.

ஆனால், பாபா ராம்தேவின் கதையே வேறு. இவரைப் பின்னின்று இயக்கியது புகழ் போதையும் காவி கும்பலும் தான். இவரை ஆதரித்தால் தமது சந்தையான அரசியலற்ற மொக்கைக் கூட்டத்தில் பிளவு உண்டாகிவிடும் என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் அறிந்து இருந்ததாலேயே தெளிவாகக் கைகழுவி விட்டனர். ராம்தேவ் தில்லியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் டைம்ஸ் நௌவின் ‘நியூஸ் ஹவர்’ நிகழ்ச்சியைத் துவக்கிய அம்பி அர்னாப் கோஸ்வாமி, அந்நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார் – “அண்ணா ஹசாரேவை நாம் ஆதரித்தோம். ஏனெனில் அவர் அரசியல் சார்பற்றவராயிருந்தார். அவருக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கிறது”

அண்ணா ஹசாரே அரசியலற்ற மொக்கை என்பதால் தான் அவரால் ஊழலைப் பற்றி பேச முடிந்த அளவுக்கு அதன் அடிப்படையாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி பேசமுடியவில்லை. அவரது அரசியல் ஓட்டாண்டித்தனம் தான் ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே ஊழல் கறை படிந்து ‘பெய்டு நியூஸ்’ விவகாரத்தில் ஊரே காறித் துப்பிய டைம்ஸ் குழுமத்தோடும் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ பர்காதத்தின் என்.டி.டிவியோடும்  ஒட்டி உறவாட வைத்தது. இதோடு சேர்த்து, ஹரித்வாரில் இருந்து ராம்தேவை நேரடி ஒளிபரப்பு செய்வதெல்லாம் செலவு பிடிக்கும் காரியம். போட்ட துட்டுக்கும் வரும் டி.ஆர்.பி ரேட்டிங்குக்கும் எப்படி கட்டுபடியாகும்? எனவே அண்ணாவை ஏற்றிப் போற்றிய ஊடகங்கள் ராம்தேவை லூசில் விட்டுவிட்டார்கள்.

இந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொண்ட காங்கிரசு, முடிந்தவரை அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ராம்தேவை தில்லியிலிருந்து விரட்டியடித்த உடனேயே தனது ரத கஜ துரகாதிபதிகளை களமிறக்கிய காங்கிரசு, தொடர்ச்சியாக ராம்தேவை ஊடகங்களில் தாக்கி வந்தது. இதற்கிடையே ராம்தேவின் கும்பலை வேடிக்கை பார்க்கச் சென்ற பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் போட்ட தேசபக்தி குத்தாட்டத்தையும் காங்கிரசு சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் மெழுகுவர்த்திப் போராளிகள் ராம் லீலா மைதானத்தில் காங்கிரசு காட்டிய பூச்சாண்டிகளுக்குப் பயந்து மொத்தமாக பதுங்கிக் கொண்டனர். பாபா ராம்தேவ் வேறு சூழ்நிலை புரியாமல் போலீசை எதிர்த்து சண்டை போட 11,000 பேர் கொண்ட ஒரு ஆயுதப் படையை அமைக்கப் போவதாகவும் அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 20 பேர் பயிற்சி பெற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சும்மா ‘பே’ என்றாலே காலோடு மூத்திரம் போகும் தைரியசாலிகளான மெழுவர்த்தி வீரர்கள் முதல் வேலையாக வாங்கிய மெழுகுவர்த்தியை ஆழமாகக் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். பின்னே, போராட்டம் என்றால் பேஷன் பெரேடு  என்று நினைத்தவர்களிடம் போய் சண்டை, ஆயுதம் என்று பேசினால் வேறென்ன நடக்கும்?

ஒருவழியாக ராம்தேவைச் சுற்றி எல்லா கதவுகளும் அடைபட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவருக்குக் கைகொடுக்க டபுள் ஸ்ரீ முன்வந்தார். நேற்று ராம்தேவைச் சந்தித்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவைக் கேட்டுக் கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ராம்தேவ், தனது சத்தியாகிரகம் தொடரும் என்று அறிவித்துள்ளார். இத்தனைக்கும் கடந்த பத்துநாட்களாக அவர் நடத்திய டிராமாவை காங்கிரசு மதித்து எந்த உத்திரவாதத்தையும் அளிக்காத நிலையிலும் இனிமேலும் மேற்படி நாடகத்தைத் தொடர்ந்தால் தான் இத்தனை ஆண்டுகளாக மக்களின் தலையில் மிளகாய் அரைத்து சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டு அனுபவிக்காமல் போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அஞ்சியே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.

ராம்தேவ் தில்லி வந்தபோது அவரை வரவேற்க நான்கு அமைச்சர்களையும் பின்னர் விரட்டியடிக்க நானூறு போலீசையும் ஏவிவிட்ட காங்கிரசு கும்பல் அவரை இப்போது  எதிர்ப்பதற்கும் ஜனநாயக சக்திகள் ராம்தேவை எதிர்ப்பதற்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இவர்கள் ஊழலின் ஊற்று மூலத்தை ஆதரித்துக் கொண்டே ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் துரோகத்தனத்தையும், இந்த கும்பலின் பின்னேயுள்ள ஜனநாயகமற்ற தன்மையையும், அதன் நீட்சியாய் ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலின் புகலிடமாக இந்தப் போராட்டங்கள் மாறுவதையும் அடிப்படையாய்க் கொண்டே இந்தப் ‘போராட்டங்களை’ விமரிசிக்கிறோம்.

இனி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற அக்கறை உள்ள  மக்களுக்கு, ஊழலின் அடிப்படையாய் இருக்கும் அரசியலை எதிர்த்துப் போராடி முறியடிப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதற்கு இப்போது நடந்து வரும் கூத்துகளே துலக்கமான நிரூபணமாய் இருக்கிறது. இனிமேலும் இத்தகைய கைப்புள்ளகைகளின் பின்னே திரளும் காரியவாத அப்பாவிகள் திருந்தினால் அதுவே ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்குச் செய்யப்படும் பேருதவியாக இருக்கும்!

____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்!

மச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கல்வி அமைச்சர், துறைச் செயலர், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட புரட்சித் தலைவியின் போர்ப்பபடைத் தளபதிகள் அனைவரும் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் பாசறை அமைத்து போர்த்திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

வரலாறு காணாத வெற்றி பெற்ற புரட்சித்தலைவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க முதல் மசோதாவுக்கே இடைக்காலத் தடையா? முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ வா? அக்கா மூடு அவுட் என்பதை தங்கச்சி தெரிவித்திருப்பார். அம்மாவின் நெற்றிக்கண் திறப்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் கவனித்திருப்பார்கள். சமச்சீர் கல்வி நல்லதா கெட்டதா, குட்டையா நெட்டையா என்பதையெல்லாம் பேசுவதற்கு இனி நேரமில்லை. “உயர்நீதிமன்றத் தடையைத் தகர்த்தெறிய என்ன செய்ய வேண்டுமோ அதைச் வேண்டும்” என்பதுதான் தளபதிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

மலையாள மாந்திரீகம், பில்லி சூனியம், யாகம், சனீசுவரபகவானுக்கு அர்த்த ராத்திரி பூஜை போன்ற ஆன்மீக வழிமுறைகள் மூலம் இடைக்காலத் தடையைத் அகற்ற வாய்ப்பில்லை என்று ஜோசியர்கள் கைவிரித்து விட்டதால், லவுகீக முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது.

“கவிதையில் எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கேற்ப பரிசுத்தொகையைக் குறைத்துக் கொள்ளலாம்” என்று கூறி, சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள “பிழையான” பாடங்களை நீக்குவதற்கான அதிகாரத்தையும் அம்மாவின் அரசுக்கு வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு. எனினும் இத்தகைய சோளப்பொறிகளால் அம்மாவைத் திருப்திப் படுத்தி விட முடியுமா என்ன?

திமுக ஆட்சிக்கு எதிராக மக்களிடம் நிலவிய வெறுப்பின் காரணமாக தான் வெற்றி பெறவில்லையென்றும், 1991-96, 2001-2006 ஆகிய இரு காலகட்டங்களில் தாங்கள் அனுபவித்த பொற்கால ஆட்சியை எண்ணிப்பார்த்து, அந்தப் பொற்காலத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று தமிழக மக்களின் இதயத்திலிருந்து வெடித்துக் கொப்புளித்த வேட்கையின் விளைவுதான் இந்த இமாயலய வெற்றி என்றும் அம்மா ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மேற்படி பொற்காலம் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஒண்ணாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் ஆட்சியின் முதல் காட்சியை ஓபன் பண்ணும்போதே பழைய பொற்காலத்தின் “எஃபெக்ட்” தெரியவேண்டும் என்பதை உத்திரவாதப் படுத்தியிருக்கிறார் புரட்சித்தலைவி.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறந்திருக்க வேண்டும். அது ஜூன் 15 க்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்மாவின் அரசுக்கு சாதகமாக அமைந்துவிட்டால், செப்டம்பர் மாதம் முடியும்வரை மாணவர்களுக்கு விடுமுறைதான். இதுநாள்வரை வகுப்பறை இல்லாத பள்ளியையும், வாத்தியார் இல்லாத வகுப்பறையையும் மட்டுமே பார்த்திருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த முறை பாடப்புத்தகமே இல்லாத “கல்வி”யையும் காண்பார்கள்.

அக்டோபர் நவம்பரில் மழைக்காலம் தொடங்கும் வரை கோடைக்கால விடுமுறையை நீட்டிக்கும் ஆட்சி, பொற்கால ஆட்சியாகத்தானே இருக்கமுடியும்? இதை மாணவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டுமா என்ன? ஓபனிங் ஷாட்டிலேயே முழுப்படத்தின் கதையையும் நுணுக்கமாக கூறும் திறமை புரட்சித்தலைவியைத் தவிர வேறு யாருக்கு வரும்?

“பாடப்புத்தகத்துக்காக 4 மாத காலம் மாணவர்கள் காத்திருக்க வேண்டுமா?” என்று சிலர் குமுறக்கூடும். 2006 இலிருந்து 2011 வரை 5 ஆண்டு காலம் இந்தப் பொற்கால ஆட்சி தொடங்குவதற்காக 7 கோடி தமிழ்மக்கள் காத்திருக்கவில்லையா? ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக புரட்சித்தலைவியே கொடநாட்டில் 5 ஆண்டுகள் தவமிருக்கவில்லையா? அவ்வளவு ஏன், அம்மாவின் தரிசனத்துக்காக கூட்டணிக் கட்சிக்காரர்கள் போயசு தோட்டத்தின் வாயிலில் அன்றாடம் காத்திருக்கவில்லையா? பொற்காலம் வேண்டுவோர் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

எப்பாடு பட்டேனும் தமிழக மாணவர்களைப் பொற்காலத்துக்குள் தள்ளிவிடவேண்டும், இல்லையேல் தங்களது எதிர்காலம் இருண்டகாலமாகிவிடும் என்ற உண்மை புரிந்திருப்பதனால்தான் கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும், அட்வகேட் ஜெனரலும் சனிக்கிழமை காலை முதல் உச்ச நீதிமன்றத்தின் படிக்கட்டிலேயே படுத்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் இப்படி ஒரு பொற்காலத்துக்குள் மாணவர்கள் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கின்றனர் ம.க.இ.க சார்ந்த மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மற்றும் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் ஆகிய அமைப்புகள். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்துள்ள கோரிக்கை.

இன்று – 13.6.2011, திங்கட்கிழமை – காலை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் பி.பி.ராவ் ஆஜரானார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். வழக்கின் விவரங்களைப் படித்துவிட்டு வரவேண்டியிருப்பதால் விசாரணையை நாளைக்குத் – 14.6.2011. செவ்வாய்க் கிழமை – தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கவேண்டும் என்பது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை. விசாரணை நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. ஒரு வேளை மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாலும், கேவியட் மனு தாக்கல் செய்திருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வாதங்களைப் பரிசீலிக்காமல் இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்காது.

அம்மாவின் அரசு vs மனித உரிமைப் பாதுகாப்பு மையம்! இவ்வழக்கில் வெளிப்படையாகத் தெரியும் வாதி-பிரதிவாதிகள் இவர்கள். ஆனால் இந்த வாதப் பிரதிவாதங்களுக்குள்ளே “தனியார் கல்வி vs பொதுக்கல்வி”, “மனுநீதி vs சமநீதி” என்ற முரண்பாடு ஒளிந்திருக்கிறது. பொற்காலத்துக்குள் ஒளிந்திருக்கும் இருண்டகாலம் போல. இருளை அடையாளம் காட்டுவோம்!

_____________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!! தமிழகமெங்கும் ஆர்பாட்டம்

கனிமொழியை பிணையில் எடுப்பதற்காக ராம் ஜேத்மாலினி போன்ற காஸ்ட்லியான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்த தி.மு.க சமச்சீர் கல்விக்காக அத்தகைய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து போராடவில்லை என்பது மட்டுமல்ல பாசிச ஜெயா திமிருடன் சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும் அதைப்பற்றி காமா, சோமா என்று ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு அடங்கிப்போனார்கள் இந்த சூராதி சூரர்கள். மக்களிடம் அதைப்பற்றி விளக்கி அம்பலப்படுத்த வேண்டும் என்று கூட அவர்களுக்கு தோன்றவில்லை.

இந்நிலையில் தேர்தலை புறக்கணிக்கின்ற ம.க.இ.கவும் அதன் சார்பு அமைப்புகளான மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இரண்டும் தமிழகம் முழுவதும் பெற்றோர்களை அணிதிரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்தும் போராடி வருகிறது. விருதாசலத்தில் இலவச கல்வி உரிமைக்கான மாநாட்டை நடத்தியதோடு சென்னை முதல் மதுரை வரை பல ஊர்களில் ஆர்பாட்டங்களை நட்ந்திருக்கிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இரத்து செய்த அ.தி.மு.க அரசின் மசோதாவிற்கு இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகித்த ம.உ.பா.மை அடுத்து இந்த தடை உத்திரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்வதையும் எதிர் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது.

இப்படி மக்கள் களத்திலும், சட்ட முனையிலும் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது புரட்சிகர அமைப்புகள். இங்கே சில ஊர்களில் நடந்த போராட்டத்தை படங்களாக பதிவு செய்கிறோம்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

தூத்துக்குடி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

திருச்சி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

தருமபுரி

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

விருத்தாசலம்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

கோவை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

மதுரை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

சேத்தியாதோப்பு

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

திருவண்ணாமலை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

சென்னை

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துசமச்சீர் கல்வியை அமல்படுத்து! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து

_________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – ரிபோர்ட்!

சமச்சீர் கல்வி இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்களை அணிதிரட்டி விருத்தாசலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராடுகிறது. இந்த போராட்டம் தற்போது கடலூர் மாவட்டம், கோவை என்று பரவி வருகிறது. இதை ஒட்டி விருத்தாசலத்தில் பெற்றோர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட மாநாட்டில், அரசியல் சட்டப்படி கல்வி என்பது எப்படி நமது உரிமையாக உள்ளது, சமச்சீர் கல்வியின் அவசியம், தாய்மொழிக் கல்வியின் தேவை, தனியார் பள்ளிகள் நூதனக் கொள்ளை, பகிரங்க கொள்ளை, அரசின் பாராமுகம் என அனைத்து அம்சங்களும் விளக்கப் பட்டிருக்கிறது. சாரமாக தனியார் கல்வியின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று எழுதியிருக்கும் இந்த முக்கியமான கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்! நன்றி

இலவசக் கல்வி நமது உரிமை

விருத்தாசலம் நகரில் இலவச கல்வி உரிமை மாநாடு கடந்த மே மாதம் செவ்வாய் (24-05-2011) அன்று நடைபெற்றது.  மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் திரு .செந்தாமரைக்கந்தன் வரவேற்புரை வழங்கி கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் திரு வை வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அவரது பேச்சிலிருந்து:

மக்கான கல்வி உரிமை நாம் கேட்கின்றோம். எட்டாவது வரை இலவசக்கல்வி என்று கல்வி உரிமைக்கான சட்டதிருத்தம் செய்யப்பட்டது. அப்பொழுது எட்டாவது வரை கல்வியை இலவசமாகக்கொடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கெல்லாம் மத்திய அரசு அறிக்கை அனுப்பியது.ஆனால் இங்கே என்ன நடந்தது?  அரசுப்பள்ளிகளில் மட்டும் இலவசக்கல்வி – தரமற்றக் கல்வி, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் கொடுத்துதான் கல்வி என்ற நிலைமைதான் இன்னும் இருந்து வருகிறது. இலவசக்கல்வி இன்னும் வழங்கப்படவில்லை.”

“ஆனால், ஏழைகளுக்குப் பிச்சை போடுவதுபோல், ஒவ்வொரு பள்ளியிலும் 25%ஒதுக்கிவிட்டு அதில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக அவர்கள் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு வரை  ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டும். அந்தக்கட்டணத்தை அரசு செலுத்துவிடும் என்று ஒரு ஒப்பந்தம் வந்துள்ளது, நாம் இப்போது என்ன கேட்கிறோம் என்றால்இலவசக்கல்வி என்பது நமது உரிமை.அதாவது பன்னிரெண்டாவது வரை இலசவசக்கல்வியை அரசு கொடுக்க வேண்டும்.  ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லா பள்ளிகளிலும் இலவசக்கல்வியை வழங்கவேண்டும். அதாவது, மற்ற இலவசங்களை வழங்குகின்ற அரசு ஏன் இலவசக்கல்வியை தரக்கூடாது? என்று கேட்பது நமது உரிமை. அதைத்தான் நாம் நமது மாநாட்டிலே இப்போது வலியுறுத்திக் கூறுகிறோம்.”

“அடுத்ததாக, இந்த கல்வி கட்டணத்துகாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவிப்பு வந்தது. அதை தனியார் பள்ளிகள் செயல்படுத்தாமல்  அளவுக்கு மீறி பணம் வாங்கினார்கள். ஒன்றுக்கு மூன்று  பங்கு பணம் வாங்கினார்கள். அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பெற்றோர் சேர்ந்து போராட்டம் செய்தபிறகுதான் இந்தக்கட்ட்டணக் கொள்ளையை ஓரளவுக்கு தடுத்து நிறுத்த முடிந்தது, அதன்பிறகு, பெற்றோர்கள் ஒன்றுகூடி மனித உரிமை பாதுகாப்ப்பு மையத்தின் மூலம் கட்டணக்கொள்ளையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கட்டணங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி அதை பெற்றோர் பார்க்குமளவுக்கு ஆர்வம், ஈடுபாடு  ஏற்படுத்தினார்கள்.”

” அதன்பிறகு பெற்றோர்கள் தனித்தனியாக கூடுதல் கட்டணம் வாங்குகிறீர்களே என்று நிர்வாகத்தினரிடம் கேட்க ஆரம்பித்தார்கள். தனித்தனியாக கேட்க ஆரம்பித்தபின் நிர்வாகத்தினரிடம் ஏளனத்தையும் அலட்சியத்தையும் சந்திக்க நேரிட்டது. அதன்பின் பெற்றோர்கள் ஒன்றுகூடி சங்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்று வந்தார்கள். அதன்பிறகு, பல போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு முற்றுகை போராட்டம் கூட மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.”

“அப்பொழுது அந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் வந்து சில உறுதிமொழிகளை தந்தார்கள். அதாவது கூடுதல் கட்டணம் நீங்கள் கொடுக்க வேண்டாம்.  அரசு அறிவித்துள்ள கட்டணத்தை மட்டும்தான் செலுத்த வேண்டும், என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். மாணவர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்கள்.  பள்ளி தகவல் பலகையில் இந்த அறிவிப்பை விளம்பரப்படுத்த உத்தரவிடுகிறேன் என்று உத்தரவு வழங்கினார்கள்.”

“ஒரு சில பள்ளிகள் மட்டும் ஓரிரு நாட்கள் வைத்துவிட்டு எடுத்துவிட்டார்கள். அதன்பிறகு பெற்றோர் சங்கம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக என்னையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்தார்கள். பெற்றோர் சங்கம்  மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து அந்த கூடுதல் கட்டணம், கட்டணக் கொள்ளையை எப்படி தடுப்பது என்று சிந்தித்து செயல்பட்டு வருகின்றோம்.  சில பல போராட்டங்களை நடத்தினோம். இருந்தும் கூடுதல் கட்டணம் வாங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை.”

“கட்டணக்கொள்ளையை வைத்து வியாபாரம் செய்ய  ஆரம்பித்தார்கள். மாணவர்கள் கூப்பிட்டு மிரட்டுவது, பெற்றோரிடம் பணம் வாங்கிவரச் சொல்வது, அவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற தொல்லைகளை எல்லாம் கொடுத்தார்கள். இருந்தும் நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினோம். இதற்கும் பிறகும் கூட அவர்கள் திருந்தவில்லை.  தற்போது பள்ளி திறக்காத நிலையிலும் நீதியரசர் ரவிராஜ பாண்டியன் அறிக்கை வெளிவராத நிலையிலே அதிகமாக கட்ட வேண்டுமென்று சொல்லி வருகிறார்கள். பெற்றோருக்கும் நோட்டிசு அனுப்புகிறார்கள்.”

“இதற்கெல்லாம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், பல பெற்றோர் மனத் திடம் இல்லாமல், நமது குழந்தைகளை ஏதாவது செய்துவிடுவார்களோ இந்த பள்ளிகள் என்று பயப்பட்டு செலுத்திவிடுகிறார்கள். அந்த உணர்வை போக்கும் வகையிலே நாங்கள் போராடுகிறோம். இருந்தாலும் சரி செய்ய முடியவில்லை.  நீங்களெல்லாம் செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். கோயமுத்தூரில் சங்கீதா என்ற பெண் யூகேஜி படிக்கும் தனது மகனுக்கு தனியார் பள்ளி கேட்டகட்டணம் கட்டி படிக்க வைக்கமுடியவில்லை என்று மனமொடிந்து தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மரண வாக்குமூலத்தில் கூடுதல் பணம் கேட்டார்கள், என்னால் கட்டமுடியவில்லை அதனால் உயிரை மாய்த்துக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார். பெற்றோர்களை பொறுத்தவரை நீங்கள் உறுதியாக இருந்தால் நாம் நமக்குரிய உரிமைகளை பெற முடியும். ”

“அந்த அளவிலே, இலவசக்கல்வி என்பது நமது நீண்டகால கோரிக்கை அதற்கு இப்போதிருந்தே அடித்தளம் அமைத்து போராட வேண்டிய சூழ்நிலை. அதற்குள்ளே, தனியார் பள்ளிகளெல்லாம் கொள்ளைக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். அதை முறியடிக்க பெற்றோர்கள் ஒன்று கூடவேண்டும். கூடுதல் கட்டணம் கட்டமாட்டோமென்று உறுதியாகக்கூற வெண்டும். சென்ற ஆண்டு கூடுதல் கட்டண்ம் வசூலித்த பள்ளிகளுக்கெல்லாம் அதைக் கழித்துக் கொண்டு  இந்த ஆண்டு அறிவிப்பு வந்த பிறகு வசூலிக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கியிருக்கிறது மெட்ரிகுலேசன் ஆய்வாளர்கள் சங்கம்.”

“அதேபோல், இந்த பெற்றோர் சங்கத்தை வளர்க்க வேண்டுமென்று கடந்த ஒரு மாதகாலமாக ஒவ்வொரு பெற்றோர் வீட்டிற்கும் தெருத்தெருவாக சென்றும் நிலைமையை எடுத்துக்கூறி பயப்படவேண்டாம் அச்சப்படவேண்டாம் என்று கூறி உறுப்பினராக சேர்த்து வருகிறோம். ஏறக்குறைய ஆயிரம் பெற்றோர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் அந்தப்பணி தொடரும். போராட ஆரம்பித்தால்தான், உரிமைகளை கேட்க ஆரம்பித்தால்தான் பள்ளிகள் நிர்வாகம் கட்டுப்படும். எவ்வளவு கேட்டாலும் கட்டிவிடலாம், குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்தால் உரிமைகளைப் பெற முடியாது. நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும். அதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. நாம் பள்ளிகளிடம் போராடவில்லை. அரசு தரமான கல்வியைக் கொடு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி கல்வியைக் கொடுக்க வேண்டுமென்று நாம் கேட்கின்றோம். தனியார் கட்டணக் கொள்ளைக்கெதிராக அரசிடம் தான் நாம் போராடுகிறோம்.”

“அரசு கூடுதல் கட்டணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். சரியான நடவடிக்கை எடுத்தால்தான் தனியார் பள்ளிகள் அடங்கி ஒழுங்காக அரசுக் கட்டணத்தை வாங்குவார்கள். நாங்கள் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களோடு ஒன்றுபடுங்கள். போராடுங்கள். உங்கள் குழந்தைகளை பள்ளியில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அதற்கெல்லாம் கட்டாயக்கல்வி சட்டத்திலே உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. வாருங்கள், ஒன்று சேர்ந்து போராடுவோம். தனியார் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் என்றுக்கேட்டுக்கொள்கிறேன். “

________________________________________________________

அடுத்து கருத்துரை வழங்க வந்தார் சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினரான கல்வியாளர் திரு..சீ.ராஜகோபாலன் அவர்கள்.

கோவையைச் சேர்ந்த சங்கீதா, தன் குழந்தைக்கு கல்வி கொடுக்க முடியவில்லையே என்ற  ஏக்கத்திலே தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்,  இப்படி நமக்குத் தெரியாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிசம் மௌனமாக இருந்துவிட்டு பின்னர் பேசலாம் என்றார். அஞ்சலி செலுத்தப்பட்டபின் தன் கருத்துரையை தொடங்கினார். அவர் பேச்சிலிருந்து,

”1964-ஆம் ஆண்டு இலவசக் கல்வி, அனைவருக்கும் கல்வி தொடங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடு. ஆனால்  1978-ல் கட்டணக் கல்வியைக் கொண்டுவந்தார்கள். அப்போழுது ஒரு கட்டுரை நான் எழுதியிருந்தேன். அதை அரைப்பக்கமாக  வெளியிட்டிருந்தார்கள். நான் அதிலே எடுத்துச் சொன்னேன்.  நீங்கள் கட்டணக் கல்வியை அனுமதித்துவிட்ட காரணத்தாலே  இலவசக் கல்வி மறைந்து விடும். அதுமட்டுமல்ல, தமிழ் தமிழ்நாட்டைவிட்டு ஓடிவிடும்.  தமிழை முதன்மையாக எடுத்துப்படிப்பது கூட நின்றுவிடும் என்று எழுதியிருந்தேன்.”

“இன்றைக்கு ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட கழக பள்ளிகளிலோ அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ இலவசக்கல்வி கற்றவர்களாகத்தான் இருப்பார்கள். இன்று அவர்களின் பிள்ளைகளின் அனைவரும் ஆங்கில வழிக் கல்விக்கு கட்டணக் கல்விக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் நீங்கள் அனைவரும். இப்பொழுது அரசு அதிகாரிகளெல்லாம் மிகக் கெட்டிக்காரர்கள். எப்போதுமே திசை திருப்புவதிலேயே மகாக் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.”

“அந்த வகையிலேதான் இப்பொழுது என்ன செய்தார்களென்றால் சமச்சீர் கல்வி, அடுத்தது கட்டண நிர்ணயம் என்று சொன்னார்கள். இந்த இரண்டுமே திசை திருப்பும் முயற்சியே என்பதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். நாம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இலவசக் கல்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.ஆனால், இலவசக் கல்வி வேண்டாம்,அதற்கு பதிலாக சமச்சீர் கல்வி என்று நமது கோரிக்கையையே மாற்றி விட்டார்கள். இன்றைக்கு இலவசக் கல்வி பற்றி பேசவேயில்லை. இலவசக் கல்வி நமது உரிமை. இலவசக் கல்விக்கு பதில்  குறைந்த கட்டணம் கொடுத்தால் போதும் என்று நாம் அவல நிலைக்கு வந்திருக்கிறோமென்றால் இதை மாற்றிய அரசை என்னவென்று சொல்வது? நமது கோரிக்கையே அர்த்தமில்லாமல் எங்கேயோ திருக்கப்பட்டுவிட்டது.அரசு பள்ளிகளால் ஏன் தரமான கல்வியைத் தரமுடியவில்லை? ”

அதைத்தொடர்ந்து அவர் அரசு எவ்வாறு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை ஒழித்து விட்டு தனியார் பள்ளிகளை ஊக்குவித்தது  என்றும்,தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் பற்றியும் சமச்சீர்கல்வி பற்றியும்  விரிவாகப் பேசினார். இலவசக் கல்வியே நமது முடிவான கோரிக்கை, அதுவரை கட்டணக் கல்வி என்பது தற்காலிகமானது என்றும் அவர் பேச்சு தெளிவுப்படுத்தியது.  (அவரது கருத்துரையை தனி இடுகையாக வெளியிடுகிறோம்.)

_________________________________________________________________

டுத்து பேசிய  ராமனாதன், முன்னாள் எம்பி அவர்கள் பேச்சிலிருந்து,

“அந்த காலத்தில் எம்எல்ஏ  மகனும் சரி அவரின் வாகன ஓட்டியின் மகனும் சரி ஒரே பள்ளியில் ஒரே பாடத்தை தான் படித்தனர். அரசு, அரசு பள்ளிகளை மேம்படுத்த நிறைய முயற்ச்சிகள் எடுக்கும், நிறைய நிதி ஒதுக்கும்.அப்பொழுதெல்லாம் இவ்வளவு தனியார் பள்ளிகள் இல்லை. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.”

அவரைத்தொடர்ந்து பேசிய ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ “தனியார்மயக் கொள்ளைதான் – அரசாங்கத்தின் கொள்கை” என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சிலிருந்து,

ருணாநிதி ஆட்சியானாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியானாலும் சரி, எனக்கு இவ்ளோதான் கட்டணம். பில்லு போட்டு இவ்வளவு கட்டணம்,பில்லு போடாமல் இவ்ளோ கட்டணம,  கட்டவில்லையா, டிசியை வாங்கிட்டு போய்டு, மாணவர்களை நிற்க வைப்பது என்று பல அராஜகங்கள். விருத்தாசலம் மாவட்டத்தில் மட்டும் 30 தனியார் பள்ளிகள் உள்ளது. தினந்தோறும் இந்தப் பிரச்சினை இருந்துகிட்டே இருக்கு. தமிழக அரசு சட்டம் போட்டு நீதியரசரை நியமிச்சு கட்டணம் போட்டும் தனியார் பள்ளி முதலாளிகள் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறார்கள். சுப்ரீம் கோர்ட்  அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. தோத்துப்போய் விட்ட்டார்கள்.”

“அப்படியும் அவர்கள், அரசு சொல்வதைக் கேட்ட மாட்டோம் என்கிறார்களென்றால் அப்படியும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்றால் என்னவென்று சொல்லுவது. தனியார் முதலாளிகளின் கொள்கைதான் அரசின் கொள்கைகள். கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமையாக, வாழும் உரிமையாக அரசியல் சாசன ஷரத்து இருபத்தியொன்று ஏழு  கூறுகிறது. 16 வயது வரை கல்வி பெறும் உரிமை உள்ளது.  கருத்துரிமை, பேச்சுரிமை, தொழிற்சங்க உரிமை என்று எப்படி சொல்லுவோமோ அது போல கல்வி உரிமையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடலாம்.  இந்த சட்டம் என்னுடைய உரிமையை மீட்டுத் தரவில்லையென்றால் இந்த நீதிமன்றம் என்னுடைய உரிமையை நிலைநாட்டவில்லையென்றால் நாமேதான் களத்தில் இறங்கி போராடவேண்டும்.”

அதோடு, கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசு என்ன சொல்கிறது,  தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டுபாடியாகவில்லை என்று கட்டணம் நிர்ணயிக்கிறது. உலகில் 135 நாடுகளில் தாய்மொழிக்கல்விதான். அய்யா ராசகோபாலன் சொன்னது போல இன்றைய பல அறிஞர்கள் தாய்மொழியில் கல்வி கற்றவ்ர்கள்தான்.நமது தண்ணீரை ஒரு லிட்டருக்கு 12 காசு கொடுத்து வாங்கி விட்டு அதை  கொகோகோலா 18 ரூபாய்க்கு நம்மிடம் விற்கிறான். நம்முடைய இயற்கை வளம், இரும்புத்தாது தனியார் முதலாளிகளுக்கு 27 ரூபாய்க்கு விற்கிறான்.  நம்முடைய காடுகள், மலைகள், பாக்சைட் தாது அனைத்தையும் தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டான். இந்த வளங்கள் ஒருநாள் வற்றிவிடும். எண்ணெய் வளத்தை எடுத்தால் தீர்ந்துவிடும், கோலார் தங்கவயலில் தங்கம் தீர்ந்துபோகிறது.”

“ஆனால், இந்த கல்வி எனும் சுரங்கம் வற்றாது. 120 கோடி இந்திய மக்கள் தொகையில் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். எல்கேஜி போய் ப்ரிகேஜு அதற்கு 20000 ரூபாய். பிரிகேஜியில் என்ன செய்யும்? குழந்தை சாப்பிடும், தூங்கும், வீட்டுக்கு வந்துவிடும்?அதற்கு எதுக்கு இருபதாயிரம் ரூபாய்? மருத்துவக்கல்லூரிக்கு ஒரு மாணவனுக்கு எட்டாயிரம் பீஸ். எல்கேஜிக்கு 20000 ரூபாய்? இலவச டீவி தருகிறேன், வாசிங் மெஷின் தருகிறேன், லேப்டாப் தருகிறேன் என்று சொல்கிறவர்கள் ஏன் இலவசக் கல்வியை தருவதில்லை? எதிர்க்கட்சிகளும் ஏன் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள்? ஒரு எல்கேஜி சீட்ட்டுக்கு அநியாயக் கொள்ளையாக இருபதாயிரம் ரூபாய் வாங்குகிறார்களே? பெற்றோர்களும் எப்படியாவது படித்து தம்பிள்ளைகள் மேலே வந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்.”

ஒரு கடையில் கிரைண்டர் வாங்குகிறோம் மிக்சி வாங்குகிறோம். ஒரு கடையில் மூவாயிரம் சொல்கிறான். ஒரு கடையில் இரண்டாயிரத்து எண்ணூறு என்கிறான். உடனே அவனிடம் இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் கிரைண்டரை மூவாயிரம் என்கிறாயே என்று சண்டை போடுகிறோம். நுகர்வோர் கோர்ட்டுக்குப் போவோம் என்கிறோம். நான் பெரிய அதிகாரி என்கிறோம். ஆனால், இங்கிருக்கும் நந்தினி ஸ்கூலில் கோவிந்தராஜன் கமிட்டியில் போட்ட கட்டணத்தை தாண்டி அதிகமாக கேட்கிறார்கள்,  யூனிபார்முக்குத் தனியாக வாங்குகிறார்களே, எத்தனைப் பெற்றோர்கள் கட்டணத்துக்கு கூடுதலாக வாங்குகிறார்கள் என்று கேட்கிறார்கள்? ஏன் கேட்காமலிருக்கிறார்கள்?”

“நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். ஒன்றும் ஒளிவு மறைவு கிடையாது. பயம், தயக்கம், அறியாமை. அதைப் போக்குவதற்கு பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்., பல சுவரொட்டிகள், பல முழக்கங்கள். நமக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி உரிமை இருக்கிறது. அனைத்து மக்களும் வீதியில் இறங்கி கேட்க வேண்டும். கட்டணத்தை குறைக்குமாறு 15  ஊரில் போராட்டம் செய்தால் அடுத்த ஊரில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து கேட்பார்கள்.  இவையெல்லாம் பின்னிப் பிணைந்தது. ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு பள்ளியை முற்றுகையிட்டு கூடுதல் கட்டணம் வாங்குவதை தடுத்தி நிறுத்தினால் இதைப்பார்த்து மற்ற பள்ளிகளிலும் மக்கள் போராடுவார்கள். நாங்கள் போராடி வெற்று பெற்று ஆய்வாளர்  பேச்சுவார்த்தையில் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணத்தை நோட்டீஸ் போர்ட்டில் போட உத்தரவிட்டார்.”

“கூடுதலாக கட்டாவிட்டால் உங்கள் பிள்ளைகளை பெயிலாக்க முடியாது. தேர்வை நிறுத்தி வைக்க முடியாது. கோயமுத்தூரில் 15ஆயிரம் கட்டணத்தை கட்ட முடியாமல் தீக்குளித்து  தற்கொலை செய்துக்கொண்டதாக ஒரு தாய் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோயமுத்தூரிலுள்ள மனித உரிமை பாதுகாப்பு மையம், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யவும், தற்கொலைக்கு  தூண்டியதாக அந்த பள்ளி முதலாளி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். தனியார் முதலாளிகளுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.”

மேலும் வழக்குரைஞர் ராஜூ பேசும் போது வீடுவீடாகச் சென்று பெற்றோரைச் சந்தித்து பெற்றோர் சங்கத்தில் சேர்த்ததை பற்றியும் பேசினார். சிலரிடம்  இரண்டரை மணிநேரம் கூட பேசி ஆரம்பத்தில் 15 உறுப்பினர்களோடு ஆரம்பித்த சங்கம் இன்று ஆயிரம் பெற்றோர்களை கொண்டதாக வளர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

_________________________________________________

அவரைத்தொடர்ந்து வழக்குரைஞர் மீனாட்சி பேசினார். விருத்தாசலம் பகுதியில் இன்று எழுந்த தீப்பொறி நாடு முழுக்க பரவட்டும் என்ற வாழ்த்தோடு தனது உரையைத் தொடங்கினார்.

நமது அரசியலமைப்புப் பிரிவுகளின் படி கல்வி எப்படி நமது வாழ்வுரிமைகளின் கீழ் வருகிறது என்பதை தெளிவாக விளக்கினார். அவரது உரையிலிருந்து,

“ தமிழ்நாட்டின் அனைத்துப் பெற்றோரின் மனசிலும்  ஆழமாக பதிந்திருந்திருக்கும் பெயர் எதுவென்றால் ரவிராஜபாண்டியன். ஏனெனில், அவர்தான் நமது குழந்தைகளில் படிப்புக்கு பள்ளிக்கட்டணத்தை நியமிக்கப் போகிறவர். நமது ஆதங்கத்துக்கும், வெற்றிக்கும் ஒரே காரணமாக இருக்கப்போகிறவர் இப்போது அவர்தான். அனைவருக்கும் இலவசக் கல்வி சாத்தியமா? நமது ஊரில் எங்கும் சாத்தியமாக இல்லை. இந்தியாவைத் தவிர மக்கள் தொகை அதிகமாக கொண்டநாடுகளில் கூட கல்வி இலவசம். முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட கல்வி இலவச உரிமை.”

1947- இல் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுப்பினர். 1947-ல் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வருகிறது. அந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் ஷரத்து 26 என்ன சொல்கிறதென்றால், இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது உரிமையாகும். அதுவும் குறிப்பாக குறைந்த பட்சம் 6 முதல் 14 வயது அடிப்படை கல்வி உரிமையாக்கபட வேண்டும். அது கட்டாயமாகக் கொடுக்கப்படவேண்டும், அன்று  இந்தியா இட்ட கையெழுத்தில் நம் அனைவருக்கும் கல்வி என்பது இலவச உரிமையாக்கப்பட்டுள்ளது.”

“நமது அரசியலமைப்புச் சட்டம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான பிரிவுகள், பகுதி 3 மற்றும் பகுதி 4.  பகுதி 3 நமது அடிப்படை உரிமைகளை தருகிறது. அடிப்படை உரிமைகள். பகுதி நான்கில் வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளது. இன்று நமக்கெல்லாம் கல்வி இலவச உரிமையாக இருக்கிறதென்றால் அதற்கு ஒரு பெண் காரணம். அவருடைய பெயர் மோனிக் ஜெயின்.  அவர் கர்நாடகத்தின் மருத்துவக் கல்லூரியின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேருகிறார். அவரை 60000 ருபாய் கட்டச்சொல்கிறார்கள். அரசாங்கத்திலோ ஏழாயிரம் ரூபாய். ஆனால், மேனேஜ்மெண்ட்டில் 60000 ரூபாய்.  ”கல்வி எனது அடிப்படை உரிமை, ஷரத்து 21 எனக்கு அந்த வாக்குறுதியைத் தருகிறது.” அவர் கோர்ட்டுக்கு செல்கிறார். அதில் நான் சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய உரிமை அடங்கியிருக்கிறது.  அந்த ஷரத்துக்குள் எனது கல்வியுரிமை அடங்கியிருக்கிறது என்று வழக்குத் தொடுத்தார்.”

“வழக்கு அவருக்குச் சாதகமாக முடிகிறது. ஆனால், அதற்குள் அவர் படிக்கவேண்டிய காலம் முடிகிறது. படிக்கமுடியவில்லை. ஆனாலும் கூட ஒரு பெண் எழுப்பிய ஒரு குரல் நமக்கு அடிப்படை உரிமையை வழங்கியிருக்கிறது என்று சொன்னால் நாம் எல்லோரும் எழுப்பும் இந்த குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.”

“1973- இல் தனியார் கல்வி முதலாளிகள் ஐந்து பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். ஷரத்து 19 1 டி என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அது எனக்கு வியாபாரம் செய்யும் உரிமையை தருகிறது, அதனால் கல்விக்கு பணத்தைப் பெற்றுக் கொள்வோம். அதைத் தடுக்கலாமா என்று கேட்கிறார்கள். அதில் தனியார் கல்வி முதலாளிகளின் கோரிக்கை என்னவென்றால் “ நீங்கள் அனைவருக்கும் இலவசக் கல்வியை தரச் சொல்கிறீர்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதைப் பொறுத்துத் தீர்ப்பு வழங்கவேண்டும்” என்பதுதான். அப்போது ஷரத்து 45ஐ உச்சநீதிமன்றம் கவனிக்கிறது. இந்த ஷரத்துப்படி 6 வயதிலிருந்து 16 வயது வரை கல்வி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.  ஆக, முழுக்க முழுக்க கல்வி என்பது  நம்முடைய உரிமையில் கைவைக்க நீதிமன்றத்துக்கும் கிடையாது.”

” உலக வங்கியால்  நாடாளுமன்றங்களும்  கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதனுடைய தாக்கம் அரசுத்துறைகளிலும் நீதிமன்றங்களிலும் அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, தனியார் கல்வி நிறுவனங்களும் காசு பார்க்கட்டும் என்று சொல்கிறது. அதுதான் தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீதம் இலவசமாக கல்வியைக் கொடுத்தால் போதும், மீதி 75 சதவீதத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறது. தமிழ்நாட்டில் நான்கு வகையான பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்கள், நான்கு வகையான மார்க் என்று இருக்கிறது. இவையனைத்தையும் ஒன்றாக்கி பரிசீலித்து ஒரு பாடத்திட்டமாக்கி இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அதை தடுத்தி நிறுத்தியிருப்பதை நாம் எதிர்த்து போராட வேண்டும்.தடுத்து நிறுத்த வேண்டும். ”.

_____________________________________________________

டுத்துப் பேசியவர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் கணேசன் அவர்கள். பெற்றோர்கள் ஒன்று திரண்டு போரடவேண்டிய அவசியத்தை மிகவும் அருமையாக உணர்த்தினார். அவர் பேசியதிலிருந்து,

“இன்று அனைத்து பெற்றோர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பது என்னவென்றால் பள்ளியின் கட்டணம்தான்.ஒரு இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தனியார் பள்ளிகளைத் தேடிசெல்ல வேண்டியிருக்கும். இப்போது, புற்றீசல் போல பல்கிப் பெருகிக் கிடக்கின்றன்.  இந்த விருத்தாசலத்தின் சந்து பொந்துகளில் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. வாடகைக்குக் கூட இடங்களை எடுத்து பள்ளிகளை நடத்துக்கிறார்கள். பள்ளிகளுக்கென்று வரையறைகள் இருக்கின்றன. அதன் அடிப்படை வசதிகளைக்க்கூட கணக்கிலெடுக்காமல் இன்று பள்ளிகள் புற்றீசல் போல முளைத்துவிட்டன.”

“நான் கஞ்சி குடித்தாவது பத்து பாத்திரம் நடத்தியாவது என் பிள்ளையை படிக்க வைப்பேன். என்னைப்போல் என் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று நினைத்துதான் அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றன்ர். இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் என்ன நடந்ததென்றால், இந்த நியாயமான கோரிக்கை நம் உரிமையாகிய இலவசக் கல்வியை தனியார் பள்ளிகளின் சட்டையைப் பிடித்து ”என்பிள்ளைக்கு கல்வி கொடுறா  நாயே ” என்றுஉரிமையோடு கேட்பதற்கு பதிலாக அவர்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.”

” ஒரு விஷயத்தைச் சொன்னால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு குழந்தையை எல்கேஜியில் சேர்க்க பொதுவாக எவ்வளவு செலவாகும்? கிராமப்புறங்களாக இருந்தால் மூன்றாயிரம். ஓரளவு வசதியாக இருந்தால் ஆறாயிரம். ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு லட்சம்  செலவு ஆகிறது. வேலம்மாள் இண்டர்நேசனல் ஸ்கூல், சென்னை பப்ளிக் ஸ்கூல், எஸ்பிஓஏ இன்னும் நிறைய இருக்கிறது அங்கெல்லாம் இந்த நிலைமைதான். இந்த நாமக்கல், தருமபுரி மாவட்டங்கள் எல்லாம் வறண்ட மாவட்டங்கள். ஆனால், அங்கே போனால் ஒரே கார்களாகத்தான் நின்றுகொண்டிருக்கும், ஏனெனில் அங்கிருக்கும் பள்ளிகளில்தான் எல்லா ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளெல்லாம் படிக்கிறார்கள்.”

“அங்கெல்லாம் பிள்ளைகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள். படிக்க வைத்து அனுப்புவதில்லை. அங்கு எதைக்கேட்டாலும் விலையேறிப் போய்த்தான் கிடக்கிறது.  இன்னொரு செய்தி, ஒரு பள்ளிக்கூடத்தில் 5000 பிள்ளைகள். அவர்கள் அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள். ”என் பிள்ளை இந்த பள்ளிக்கூடத்தில்தான் படிக்கிறது” என்று பெற்றோர் எழுதுவது போல. ”கோவிந்தராசன் கமிட்டி ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளது, இந்த பள்ளிக்கூடத்தை ஐந்தாயிரம் கொடுத்து நடத்தமுடியாது. என் பிள்ளைக்கு நல்ல கல்வி கிடைக்காது. அதனால் தயவு செய்து கோவிந்தராஜன் கமிட்டி என் பிள்ளைக்கு பீசை கொஞ்சம் உயர்த்திக்கொடுக்கவும் “ என்று பிள்ளைகள் மூலம் ஃபார்ம் கொடுத்து அனுப்புகிறார்கள்.”

“எவ்வளவு நூதனமாகச் சிந்திக்கிறார்கள், பாருங்கள்,  நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா இப்படி? இந்த அயோக்கியப் பயலை நடுத்தெருவில் தூக்கிபோட்டு மிதிக்க நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?  எதுவும் முடியாமல் பெற்றோர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனைக் கமிட்டிப் போட்டாலும் எதுவும் தீரவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? தனியார் கல்வியை அனுமதித்தவர்கள்தானே! இதனால் எத்தனைப்பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம்? அனைவரும் ஒன்றாகத் திரண்டு போராட வேண்டும். ”.

___________________________________________________

தற்குப் பின்னர். மாநாட்டில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1: இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை குறைத்துக் கொள்ளவும், மேலும் கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2: அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு எல்கெஜி, யூகேஜி முதல் இலவசமாக வழங்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 3: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி  அடிப்படை உரிமையான 6 முதல் 16 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வியை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை மட்டுமே உத்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட நீதியரசர் ரவிராஜப்பாண்டியன் கமிட்டியை ரத்து செய்ய இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழ்நாடு அரசு இவ்வாண்டு சேர்க்கைக்காக  கோவை பிரேஸ் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து உயிரழந்த சங்கீதா மரணத்துக்கு காரணமான பள்ளி முதலாளியை கைது செய்து அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டுமென ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. மேலும் சங்கீதாவின் குடும்பத்துக்கு  உரிய இழப்பீடு வழங்கவும்,  யூகேஜி படிக்கும் அவரது மகனின் கல்வி கட்டணம் முழுவதையும்  தமிழக அரசே ஏற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: தமிழகத்தின் சமச்சீர் கல்வி கட்டணத்தை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக பாடத்திட்டத்தையே நிறுத்தி வைத்து முந்தைய பாடத்திட்டமே செல்லுமென சொல்லியிருப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்தவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7: சமூக சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மனிதாபிமானமும் உடைய தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கவும், ஆங்கில வழிக் கல்வியையும் தனியார்மய பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டுமென பெற்றோர்களை இம்மாநாடு ஒருமனதாகக்  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8: அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வியை  அரசு பொறுப்பில் இலவசமாக வழங்கத் தடையாக உள்ள தனியார் மயத்தை எதிர்த்து போராட பெற்றோர்களையும் மாணவர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதைத் தொடர்ந்து, ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு பெற்றோர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பெற்றோர்கள் ஏன் அரசுப்பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை

நாடுகிறார்களென்றும், தனியார் பள்ளிகளின் அராஜகத்தைப்பற்றியும்,  பெற்றோர் சங்கத்தில் சேர்ந்தபின்னர் மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மற்றும் முற்றுகையின் பலன்களை பற்றியும் தகவல்கள் தெரிவித்தனர். இறுதியில் பெற்றோர்கள் அனைவரும் தாம் ஒன்றாக இணைந்து போராடுவதில்தான் தமது பிள்ளைகளின்  கல்விக்கான தீர்வு இருக்கிறது என்பதையும் உணர்ந்துக்கொண்டதாக அந்த கலந்துரையாடல் இருந்தது.  இறுதியில் பெற்றோர் சங்கத்தின் பொருளாளர் க.வீரகாந்தி நன்றியுரை வழங்க கூட்டம் முடிவடைந்தது. தனியார் மய பள்ளிகளுக்கெதிராக விருத்தாசலத்தில் எழுந்த இந்த தீப்பொறி நாடெங்கும் பரவட்டும்.

_________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், விருத்தாசலத்திலிருந்து..

____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சமச்சீர் கல்வியை அமல்படுத்து! எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு!!

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை இரத்து செய்த பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம். இதன்படி பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,

சமச்சீர் கல்வி தரமில்லை என்று சாக்கிட்டு அதை இரத்து செய்து அமைச்சரவை மூலம் உத்தரவிட்டு சமீபத்தில் அதை சட்டமாக்கியும் முடித்துவிட்டார்கள். அமைச்சரவை உத்தரவு வந்த போதே மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் போராடியதோடு சட்டப் போராட்டத்தையும் கையிலெடுத்தது.

இதே நேரத்தில் சி.பி.எம் சார்ந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் சமச்சீர் கல்விக்காக தி.மு.க அரசு அச்சிட்ட நூல்களை அழிக்க கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். வெளியே சி.பி.எம் கட்சி ஜெயா வீட்டில் தனது எம்.எல்.ஏக்களோடு கூருப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அக்கட்சியின் மாநில செயலர் பாசிச ஜெயாவை மயிலிறகால் வருடிக் கொண்டிருந்தார். அதாவது அம்மா பாத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று பல்லவி பாடிக் கொண்டிருந்தார்.

ஜூன் 7 ஆம் தேதி சமச்சீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்துள்ளனர் அதே நாளில் தான் சி.பி.எம் இன் மாணவர் அமைப்பான SFI , இளைஞர் அமைப்பான DYFI யும் தமிழகம் முழுவதும் சமசீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என்று போராடினர்.சி. பி. எம் .இன் இரட்டை வேடத்திற்கு இது ஒரு சான்று

வழக்கறிஞர் சியாம் சுந்தர் என்பவரும், திமுகவின் முன்னாள் கூடுதல் அடிஷனல் அட்கவேட் ஜெனரல் வில்சன் ஒரு மனுதாரருக்கு ஆதரவாகவும் வாதாடினார்கள்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அது சார்ந்த கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம் சார்பில் ம.உ.பா.மையத்தின் இளம் வழக்கறிஞர்கள் விரிவான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். ம.உ.பா.மை சார்பாக வழக்கறிஞர்கள் காந்தி, புருஷோத்தமன், மோகன், தியாகு ஆஜராகினர். மேலும் ஒரு வழக்கறிஞர் படையே இதற்காக தீவிரமாக வேலை செய்து வந்தது.

இன்று நடந்த விவாதத்தில் நமது வழக்கறிஞர்கள் பாசிச ஜெயா அரசின் உள்நோக்கத்தை பட்டவர்த்தனமாக நிரூபித்தார்கள். முக்கியமாக 15ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும், அதற்குள் பழைய பாடத்திட்டம் அச்சடிக்கப்படும் என்ற அரசின் வாதத்தை பொய் என்று நிரூபித்தார்கள். அதன்படி பழைய பாடத்திட்டம் அச்சடிப்பதற்காக அரசு, அச்சக உரிமையாளர்களோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்கள். அதில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நூல்களை வழங்கினால் போதுமென்று அரசு கோரியிருந்ததை சுட்டிக்காட்டி வாதாடினார்கள்.

ஆக பதினைந்தாம் தேதி பள்ளி திறக்கப்படும், நூல்கள் கிடைக்கும் என்று பொய்யுரைப்பதை நிரூபித்தார்கள். மேலும் தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஏன் தரமல்ல என்பது குறித்து இதுவரை அரசு ஒரு விசயத்தை கூட சொல்லவில்லை, விளக்கமளிக்கவில்லை என்பதையும் வாதிட்டார்கள். 200 கோடி ரூபாய் செலவிட்டு அச்சிடப்பட்ட நூல்களையும், அந்த திட்டத்திற்கான பிரயத்தனத்தையும் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள். மேலும் இதில் ஜெயா அரசி காழ்ப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி வேறு காரணமில்லை என்றும் பேசினார்கள்.

இன்று இந்த வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது பெஞ்சில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னால் நடந்தது. இறுதியில் நீதிபதிகள் சமச்சீர் கல்வியை ரத்து செய்த புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும் 200கோடியை செலவழித்து விட்டு தற்போது அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த காரணமுமில்லை என்பதையும், அரசின் உள்நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வழக்கை ஒத்திவைத்தார்கள்.

தற்போது தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே ஆக வேண்டும். பாசிச ஜெயா அரசு இதற்காக உடனே உச்சநீதிமன்றம் சென்று இந்த இடைக்காலத் தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கும். அதற்கென்று பெரிய வழக்கறிஞர்களை  நியமித்து, பெரிய செலவில் வாதாடும். எனினும் இந்த இடைக்காலத் தடை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.

மேலும் ம.க.இ.க சார்பு அமைப்புகள் இதை வெறுமனே சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகவில்லை. தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறது. இதன் அங்கமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது. சமச்சீர் கல்வி வேண்டுமென பலர் வழக்குப் போட்டதை ஒன்றாக இணைத்தே உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. எனினும் ம.உ.பா.மை சார்ந்த மனுதான் விரிவாகவும், ஆதாரப் பூர்வாகமாகவும், ஆணித்தரமாகவும் இருந்தது. தற்போது அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் செல்லும் என்ற நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. மக்கள் அரங்கிலும் சரி, சட்ட அரங்கிலும் சரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ம.க.இ.க அமைப்புகள் தயாராகின்றன.

தி.மு.க போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில் ம.க.இ.க இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பாசிச ஜெயாவுக்கு நாங்கள்தான் உண்மையான எதிரிகள், அதனால் எங்களது போராட்டமும் தொடரும்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

21

ஜெயலலிதாமிழக சட்டசபையில் கடந்த புதன்கிழமையன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படியும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இணையத்திலும், தமிழ்தேசிய ஆர்வலர்கள் மத்தியிலும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதுவுமே நடக்காத நிலையில் இந்த அளவுக்காவது தீர்மானம் போட்டிருக்கும் ஜெயாவை பாராட்ட வேண்டும் என்பதுதான் அனைவரது கருத்தாகவும் உள்ளது.

தீர்மானத்தை ஆதரித்த திமுக கடைசியில் விஜயகாந்தின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்படாத காரணத்தால் வெளிநடப்பு செய்தது. மறுநாள் சட்டசபையில் கச்சத்தீவை மீட்பதற்காக தாம் நடத்தும் சட்டப் போராட்டத்தில் வருவாய்த்துறையையும் ஒரு வாதியாக சேர்க்க உச்சநீதி மன்றத்திடமும் கோரி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா.

வருவாய்த்துறையிடம் ஆதாரமாக உள்ள 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது என்றும், அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்றால் கச்சத்தீவை அது குறிக்கிறது என்றும் குறிப்பிட்டார் ஜெயா.

1974- இல் தமிழக முதல்வராக கருணாநிதி இருக்கும் போதுதான் தமிழர்களின் பாரம்பரிய உரிமை உள்ள கச்சத்தீவு மத்தியில் இருந்த காங்கிரசு அரசால் தாரை வார்க்கப்பட்டது. அப்போதே இதுபற்றிய கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லித் தப்பியவர்தான் கருணாநிதி எனக் குறிப்பிட்ட ஜெயலலிதா, அஞ்சலக அரசியல் நடத்தியதாக கருணாநிதியின் பிரதமருக்கான கடிதங்களை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. முல்லைப் பெரியாறு துவங்கி காவிரிப் பிரச்சினை வரை அனைத்தையுமே தீர்க்க‌ முந்தைய‌ திமுக‌ அர‌சு எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை என‌க் குற்ற‌ம் சாட்டினார் விஜ‌ய‌காந்த். தமிழ் சமூகத்தை அழித்த பெருமையும் திமுக விற்கே உண்டு என்றும் குற்றம்சாட்டிய அவர் கலைஞரின் 4 மணிநேர உண்ணாவிரதம் என்ற நாடகத்தையும் கிண்டல் செய்தார். இத‌னைய‌டுத்துதான் முதல் நாளில் திமுக சட்டசபையில் இருந்து வெளியேறிய‌து.

தில்லியில் சென்று முகாமிட்டு ம‌ற்ற‌ மாநில‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளைக் கூட்டி பேசி ம‌த்திய‌ அர‌சுக்கு அழுத்த‌ம் த‌ர‌ வேண்டும் என்கிறார் நெடுமாற‌ன். இல‌ங்கை மீதான‌ பொருளாதார‌த் த‌டைவிதிக்க‌ கோரி இந்திய‌ அர‌சை ஐ.நா.விட‌ம் வ‌லியுறுத்த‌க் கோரும் தீர்மான‌த்தையும், முள்வேலி முகாமிலிருக்கும் ம‌க்க‌ளுக்கு நிவார‌ண‌ம் அளிக்க‌ வ‌லியுறுத்தும் தீர்மான‌மும் ந‌ம்பிக்கை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என்கிறார் வைகோ. ச‌க‌ல‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் இதுபோல‌ பாலைவ‌ன‌த்துச் சோலையாக‌ இத்தீர்மான‌த்தை பார்க்கின்ற‌ன‌ர்.

மத்திய அரசை வலியுறுத்தும் இத்தீர்மானத்தில் கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசையும் மாநில அரசையும் 2008 இல் பிரதிவாதியாக அன்று வாதியாக இருந்த ஜெயா சேர்த்திருக்கிறார். இன்று அவர்தான் பிரதிவாதி, வாதியும் அவர்தான். இந்த கேலிக்கூத்துக்கு மத்தியிலும் வருவாய்த்துறையையும் வாதியாக சேர்க்கச் சொல்லவும் அவர் தயங்கவில்லை. இதற்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களை அல்லது ஒரு நாடு தனிநபருடன் போடும் பரஸ்பர ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் அறுபதுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் கூட வெற்றி கண்டிருக்காது. அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றிருந்தால் நாம் அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தைக் கூட ஒரு ரிட் போட்டு தூக்கி எறிந்திருக்கலேமே?

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்ட பிறகு குறிப்பாக 90 களுக்குப் பிறகு இதுபோன்ற வழக்குகள் வெற்றி பெற முடியாது என்பது நம்மை விட ஜெயாவுக்கு நன்றாகத் தெரியும். கச்சத்தீவு மீதான நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது சரியல்ல என்பதுதானே வாதம். அப்படியானால் நமது நாட்டில் இன்று அமுலாகிக் கொண்டிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் கூட நமது நாட்டுச் சட்டம் செல்லுபடியாகாதே அதற்கு எதிராக ஜெயாவோ கருணாநிதியோ பேச முன் வருவார்களா ? மாட்டார்கள். மாறாக, நான்தான் நோக்கியாவை கொண்டு வந்தேன், எனது ஆட்சிக் காலத்தில்தான் ஹூண்டாய் கம்பெனிக்கு நிலம் ஒதுக்கினோம் என்றெல்லாம் கூறி தாங்கள் நாட்டு மக்களது இறையாண்மையை விற்றதையே தொழில் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என்றெல்லாம் பீற்றித் திரிந்த்தை அனைவரும் அறிவார்கள்.

கச்சத்தீவை மீட்க மற்ற மாநில அரசியல்கட்சி தலைவர்களோடு பேசி மத்திய அரசுக்கு எதிராக போராடி அழுத்தம் தர ஜெயாவுக்கு ஐடியா கொடுக்கிறார் மாவீரன். யாருக்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தேவையாக இருக்கிறது என்பதை குறைந்தபட்சமாக பரிசீலித்தாலே இதனை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இத்தீவில் மீனவர்களுக்கான பயன்பாட்டைத் தாண்டி எதாவது பொருளாதார கனிம வளம் இருக்கிறதா ? இல்லை இந்த இடம் ஏதாவது ராணுவரீதியில் கேந்திரமான இடமா ? என்பதை பரிசீலித்தால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது. இதில் மீனவர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவதால்தானே அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஒருவேளை கச்சத்தீவில் மட்டும் எண்ணையும், இரும்புத் தாதும் அளப்பறிய அளவில் இருப்பதாக வைத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினை என்றோ ஃபைசல் செய்யப்பட்டிருக்கும். தமிழக மீனவர்கள் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் போது இதை ஒரு முக்கியப் பிரச்சினையாக கட்சிகளும், அரசும் ஏன் கருதப்போகிறது? கச்சத்தீவு மீட்கப்பட வேண்டுமென்றால் அது தமிழக மக்களை அணிதிரட்டி மத்திய அரசை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதன் மூலமே செய்ய முடியும். அதற்கு தயாரில்லாத கட்சிகள் இப்படி வெத்து சவடால் அடிப்பதையே ஈழ ஆதரவாளர்கள் கொண்டாடினால் அதை என்னவென்று சொல்ல?

பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரக் கப்பல்களில் பிடிக்கப்படும் மீனை நமது மீனவர்களுக்கு கிடைக்கச் செய்வதையா அரசு செய்கிறது? இல்லை. கடலின் மீதான மீனவர்களின் உரிமையாக இருக்கட்டும், நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் 90 களுக்குப் பிறகு அரசு வெளிப்படையாக வேறு மாதிரிதானே நடந்து கொள்கிறது. அதில் கருணாநிதி ஆட்சிக்கும் ஜெயா ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் வந்துவிட முடியும். இப்போது கூட காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கடித அரசியலைத்தானே ஜெயாவும் பின்பற்றி இருக்கிறார்.

ஆனால் இதே ஜெயாதான் கச்சத்தீவு பிரச்சினையில் ஸ்வரண்சிங் இடம் கருணாநிதி வருத்தம் மட்டும்தான் தெரிவித்தார், எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

சொந்த நாட்டு மக்கள் மீது பன்னாட்டு முதலாளிகளுக்காக மத்திய இந்தியாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் போர் நடத்தி அவர்களை உள்நாட்டில் அகதிகளாக ஓட விட்டிருக்கும் மன்மோகன்சிங் அரசு இலங்கை முள்வேலி முகாமை பற்றி அக்கறை கொள்ள வாய்ப்பில்லை. இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையில் தான் ஒன்றும் சொல்ல முடியாது என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்ல முடியும். மேலும் அரசின் கொள்கை முடிவு, அது உள்நாடாக இருந்தாலே தலையிடாத நீதிமன்றமா இன்று அயல்நாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் முடிவு செய்துவிடும்?

மேலும் ஜமீன்தாரி ஒழிப்புக்கு முன்னர் இருந்த வருவாய்த்துறையின் ஆவணங்களை முன்வைப்பது என்பதே இந்த வழக்கினை நீர்த்துப் போக வைப்பதற்கான வழிமுறைதான். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் பலவும் பின்னால் சட்டமாக வாய்ப்புள்ளதால் இதுபற்றி எதிரான தீர்ப்புதான் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தால் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரமில்லை என்பது  ஒருபுறமிருக்க உள்நாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் மீட்டு வரைமுறைப்படுத்த வேண்டிய போராட்டம் உள்நாட்டில் கிளம்ப வாய்ப்புள்ளதையும் அவர்களை அறிவார்கள். கருணாநிதியின் கடித அரசியலை மிஞ்சி இந்த சட்டமன்றத் தீர்மான அரசியலுக்கு எந்த பலனுமில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுத்தான் கச்சத்தீவை கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதமெல்லாம் எடுபடாது. 1994 ல் சொந்த நாட்டில் பொதுத்துறை நவரத்னாக்களை தனியாருக்கு விற்க வழிவகை செய்ய காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நரசிம்மராவ் அரசு பிறகுதான் அதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரிய போதும் அன்றைய நாடாளுமன்றம் வாக்கெடுப்பில்லாத விவாதங்களை மாத்திரம்தான் அனுமதித்தது. இதற்கு பிறகும் கச்சத்தீவை ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தில் பேசிக் கொடுத்திருக்க வேண்டும் என்ற வாதம் எடுபடாது.

_________________________________________________

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில் சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில் இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் தங்களது  பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த தீர்மானத்தால் என்ன பயன் ?

தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின் வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்து விடும்.

கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை. இந்தத் தீர்மானத்திற்கு எந்தவிதமான சட்ட ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ எந்த மதிப்புமில்லை. அதனால்தான் துணிந்து செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஏற்கனவே தமிழ் மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கருணாநிதி அரசின் தீர்மானத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுதான் இதற்கும்.

இன்று தமிழகத்தின் விடிவெள்ளி போல காட்சியளிக்கும் பாசிச ஜெயாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ அல்லது தமிழ்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளையும் தமது முந்தைய ஆட்சிகளில் ஒடுக்க அயராது பாடுபட்டவர் ஜெயா. இதில் நெடுமாறனும் வைகோவும் கூட தப்பவில்லை.

கடந்த 2001 – 06 ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிட தடை என இந்துபாசிச அமைப்புக்களின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிய ஜெயா, ஜெயேந்திரனை கைது செய்த ஒரே காரணத்துக்காக பார்ப்பன எதிர்ப்பு போராளி என நாம் வீரமணி போல கொண்டாட முடியுமா ? இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

ஆனால் இவர்களுத தீர்மானங்கள், கருத்துக்களால் வரலாறு நிர்ணயிக்கப்படுவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலில் போர் என்றால் மரணங்கள் சகஜம்தான் எனத் தெரிவித்த அம்மையார் உடனடியாக ஈழத்தாயாக அவதாரம் எடுத்து 16 சீட் கிடைத்தவுடன் கொடை நாடு போய் ஓய்வெடுக்கத் துவங்கினார். முள்ளிவாய்க்காலுக்காக இன்றுவரை கூட ஒரு அறிக்கை கூட எதிர்த்து வெளியிடாதவர்தான் ஜெயா. எல்லா ஜனநாயக இயக்கங்களுக்கும் எதிரான அவர் அன்று தனி ஈழத்தைக் கூட ஆதரித்தார். அவருக்காக பல தமிழ் தேசிய அமைப்புகளும் பிரச்சாரம் செய்தனர்.

அதன்பிறகு பிரச்சாரம் செய்யப் போனவர்கள் மாத்திரம் அவ்வப்போது போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அம்மையார் அறிக்கைப் போர் மாத்திரம் நடத்திக் கொண்டிருந்தார். ஆட்சியில் இல்லாது போன காலத்தில் வந்த அவரது அறிக்கையை விட சட்டசபைத் தீர்மானம் கடினமானது அல்ல என நன்றாகப் புரிந்த பிறகும் இதாவது நடக்கிறதே என்பது போராட முடியாமல் துவண்டு போகின்றவர்கள் மற்றும் போராட முடியாதவர்களின் வாதம்.

உத்தரவாதமான எதிர்காலத்தை தங்களது வாழ்க்கை நடைமுறையில் வர்க்க நலனில் இருந்து பெறுபவர்கள் முள்வேலி முகாமை அதற்குள் இருக்கும் மனிதர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு சட்டசபைத் தீர்மானமே பெரிய சாதனைதான். இதனை இணையத்திலும், செய்தித்தாளிலும் படிப்பதற்காக நேரம் ஒதுக்கியதே அவர்கள் செய்த மாபெரும் தியாகமாகத்தான் அவர்கள் கருதிக் கொண்டிருப்பார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு  இடைவிடாத போராட்டம் மூலமே வழி கிடைக்கும். சட்டப்பூர்வமாகப் போராடி பாசிசத்தை வெல்ல முடியாது. இது ஜெயா போன்ற பாசிஸ்டுகளுக்கு புரியுமென்பதால்தான் அவர்கள் இதுபோன்ற நடக்க முடியாத விசயங்களுக்காக போராடுவது போல போராடுகிறார்கள். சீமான், நெடுமாறன், வைகோ, ருத்ரகுமாரன் என நீளும் ஒரு தமிழ்தேசிய பட்டியலே தனக்குப் பின்னால் திரளும் எனத் தெரிந்துதான் ஈழத்தாய் இரண்டாம் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்களது சரணாகதி அரசியலுக்கு பொருத்தமாக அட்டைக்கத்தியை இடுப்பில் சொருகியபடி புரட்சித்தலைவி உலா வருகிறார். புறநானூற்று தாயை கண்ட திருப்தியில் புளங்காகிதம் அடைகிறது நடுத்தர வர்க்கம்.

________________________________

• வசந்தன்
________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
இந்துவாக பிறந்துவிட்டேன் ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று முடிவெடுத்து புத்த மதத்திற்கு மாறும் அம்பேத்கர்

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 3

அம்பேத்கர் ஏன் புத்த மதத்திற்கு மாறினார்?

அம்பேத்கர் மஹர்எனப்படும், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் பிறந்தார். மஹர்பிரிவு மக்களுக்குச் சிறந்த போர்க்குணங்கள் உண்டு. ஆனால், கல்வியறிவு கிடையாது. அதன் காரணமாகவே அவர்களால் சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து பெற முடியாமல் இருந்தது.

ஒரு தனிமனிதனின் குணங்கள் அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையிலும், அவனது உணவையும் பொறுத்தே இருக்கிறது என்பதையும் அம்பேத்கர் அறிவார். புலால் உணவை மறுப்பது ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் ஆராய்ந்தார். பஞ்சமா பாதகங்களைச் செய்யாதேஎன்று உபதேசித்தால், மக்கள் கேட்டுவிடப் போகிறார்களா என்ன? மாறாக அதைச் சொல்லாமல் அந்த நிலைக்கு அவர்களை இயற்கையாகவே இட்டுச் செல்ல வேண்டும். பஞ்சமா பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாதவை கிறிஸ்தவம், இசுலாம். அப்படியானால் அவர்களை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல புத்தமதத்தால்தான் இயலும்.

புத்த மதத்தில் சேர்ந்த பின்பு அதன் கொள்கைகளை நெறிப்படிக் கடைப்பிடிக்க வைப்பதன் மூம் அவர்களை நல்ல நிலைக்கு முன்னேற்றி, சிந்தித்துச் செயல்படும் திறன் உள்ளவர்களாக மாற்றி, சமுதாயத்தில் சம அந்தஸ்து உடையவர்களாக அவர்களை ஆக்கிவிட முடியும் என்று அவர் நம்பியதாலே இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் அவர் புத்த மதத்திற்கு மாறினார். அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கருக்கு சட்ட அமைப்பு 25-ன் விதிப்படி புத்தமதம் ஹிந்து மதத்துடனே ஒன்றாகவே கருதப்படுகிறது என்பது எப்படி நினைவற்றுப் போகும்? சட்டத்தைத் தொகுத்தது அவரல்லவா? எனவே அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறியதற்கு அதுவே காரணம்.

– ‘மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்
இந்து முன்னணி வெளியீடு, பக்கம் 32.

”தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவற்ற மூடர்களாக, அசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்தனர்; இறைச்சி உண்ணும் பழக்கங்கொண்ட அவர்கள் பொய், திருட்டு, பெண்டாளுதல் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யும் போக்கிரிகளாகவும் இருந்தனர்; இவற்றிலிருந்து அவர்களைத் திருத்த நினைத்த அம்பேத்கர் இசுலாம், கிறித்தவம் போன்ற அநாகரீக மதங்களைத் தவிர்த்துவிட்டு இந்து மதத்தின் உட்பிரிவான புத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு மதம் மாறினார்” என்பதே இதன் பொருள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் என்பது பார்ப்பன ‘மேல்’ சாதியினர் இன்று வரையிலும் கொண்டுள்ள வெறுப்புக் கலந்த திமிரான கருத்தாகும். இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறும் பொய்யல்ல; பார்ப்பனக் கொழுப்பும் நரித்தனமும் கலந்த பொய். காரணம், அவர்கள் பார்ப்பன இந்து மதத்தால் தண்டிக்கப்பட்ட வரலாற்று அடிமைகள். அவர்கள் அடிமைகள் என்று உணர்வதைக் கூட அனுமதிக்காத பார்ப்பன இந்துமதம்தான் அநாகரீகமானது என்றார் அம்பேத்கர்.

ஒரு மதம் என்பது பொதுவாக மானுடத்தின் அறவியல், மகிழ்ச்சி, விடுதலையைப் பேசுகின்ற கொள்கைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இந்து மதம் என்பது கொள்கைகளின் தொகுப்பா அல்லது தண்டனைகளைப் பட்டியலிடும் குற்றவியல் சட்ட விதிகளின் தொகுப்பா? சாதிப்படி நிலையில் சூத்திர – பஞ்சம மக்கள் எப்படி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும் என்பதையே விதிகளாய் வைத்திருக்கும் பார்ப்பனியத்தை ஒரு மதம் என்று அழைக்கமாட்டேன் என்றார் அம்பேத்கர். சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையைக் கிழித்துக் காட்டினார்.

‘இந்து’ என்ற பெயரே முகமதியர்கள் இட்ட பெயர்தான். அவர்கள் அப்படிப் பெயரிடவில்லை என்றாலும் பிரச்சினை ஏதும் வரப்போவதில்லை. காரணம் நாமெல்லாம் ஒரு நாட்டு மக்கள் என்ற சகோதர சமூக சிந்தனை பார்ப்பனியத்தின் சாதிய சமூகத்தில் இல்லாதபோது ஒரு பொதுவான பெயர் பற்றிய கேள்வியே எழுவதில்லை. இந்து – முசுலீம் சண்டையை தவிர்த்துப் பார்த்தால் இங்கே தனித்தனிச் சாதியாக வாழ்வதே முதலும் முடிவுமான குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் தங்களுக்குள் கலந்து உறவாடுவதாலேயே சமூகமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கே பிரிந்து வாழ்வதையே சட்டமாக வைத்திருக்கும் ஒரு நாட்டில் சமூகம் எங்கே இருக்கிறது என்று சீறியவர் அம்பேத்கர்.

சாதிய அமைப்பு என்பது தொழில்களை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் ஏற்றத்தாழ்வாக செயற்கையான தனித்தனித் தீவுகளாய்ப் பிரித்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாய் குலத்தொழில் செய்து வரும் ஒருவன் தன் தொழிலின் நலிவால் வாழ இயலாத போதும் பட்டினி கிடந்து சாவானே ஒழிய வேறு தொழில் செய்ய மாட்டான். அப்படிச் செய்வதை நினைத்தும் பார்க்க முடியாத வாழ்வைத்தான் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கிறது என்று வழக்காடினார் அம்பேத்கர்.

இப்படி வாழ்வையும் சிந்தனையையும் மட்டுமல்ல உடற்கூற்றையும் பார்ப்பன இந்துமதத்தின் சாதியம் தனது மீற முடியாத அகமண முறையால் எப்படி நலிவடைய வைத்திருக்கிறது என்றால், இந்திய மக்களில் 100-க்கு 90 பேர் ராணுவத்துக்கு (உடல், எடை, உயரம்) இலாயக்கில்லாதவர்களாக உருவாக்கியிருக்கிறது என்று கேலி செய்தார் அம்பேத்கர். அது மட்டுமா, ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட தனித்தனி உடை, உணவுப் பழக்கங்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வேடிக்கைப் பொருளாக, அருங்காட்சியகமாக இந்தியா இருப்பதை சினத்துடன் எடுத்துக் காட்டினர் அம்பேத்கர்.

கழுத்தில் கலயத்தையும், இடுப்பில் துடைப்பத்தையும் கட்டி தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்திய இந்துக்கள் தங்களைப் பற்றியும், அதேபோல தம் அருகே வாழும 130 லட்சம பழங்குடியினர் (அம்பேத்கர் காலத்தில்) எந்த நாகரீக வளர்ச்சியுமின்றி ‘குற்றப் பரம்பரையாக’ நீடிப்பது பற்றியும் வெட்கமோ, வேதனையோ அடைவதில்லை என்று காறி உமிழ்ந்தார் அம்பேத்கர். இம்மக்களுக்கு கிறித்தவ மிஷனரிகள் செய்யும் சேவையைப் போல் இந்துக்கள் ஒருக்காலும் செய்ய முடியாது என்றும், அத்தகைய சகோதரத்துவ எண்ணமே பார்ப்பனியத்தின் ஆன்மாவில் கிடையாது என்பதையும் விளக்கினார்.

ஆரிய சமாஜத்தின் ‘தாய் மதம்’ திருப்பும் மதமாற்றச் சடங்கை ஒரு மோசடி என நிரூபித்தவர் அம்பேத்கர். ஏனைய மக்கள் ‘தம் கொள்கையால் மட்டுமே விடுதலை பெற முடியும்’ என்று தம் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்து மதமோ அத்தகைய வாக்குறுதியைக் கொடுக்க முடியாததோடு, அப்படி ஒரு முயற்சியையும் செய்ய முடியாது. காரணம் இந்து மதத்தில் சேர்க்கப்படும் ஒரு புதியவரை எந்தச் சாதியில் வைப்பது என்ற பிரச்சினை உள்ளது. சாதித் தூய்மையில் இரத்தக் கலப்பை விரும்பாத இந்துச் சமூகம் நெடுங்காலமாய் மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்யாததற்கும் இதுவே காரணம் என்றார் அம்பேத்கர்.

”நாங்கள் சாதியை ஏற்கவில்லை, அவை இந்து மதத்தில் நுழைந்த இடைச் செருகல்கள், தொழில்முறை வேலைப் பிரிவினைக்காக ஏற்பட்ட வருண அமைப்பே இந்து மதத்தில் ஏற்படுத்தப்பட்டது” என வருண அமைப்புக்கு ஆதரவாக ஆரிய சமாஜத்தினர் வழக்காடினார்கள். அப்படி என்றால் ஒவ்வொரு தொழிலுக்கும் பிராமணன், சத்ரியன், வைசியன் என்று முத்திரை குத்துவது ஏன், பிறப்பின் அடிப்படையில் மட்டும் தொழில் தீர்மானிக்கப்படுவது ஏன், தொழில் மாறும் உரிமை கொடுக்க மறுப்பது ஏன், அப்படி மாறினால் கடும் தண்டனை வழங்கும் காப்பாளராக இந்து மதம் இருப்பது ஏன் என்று கேட்ட அம்பேத்கர், நான்கு வருணங்கள் –  நான்காயிரம் சாதிகள் எனப் பிரிந்திக்கிறதே ஒழிய தன்மையில் ஒன்றுதான் என்று அம்பலப்படுத்தினார்.

மேலை நாடுகளைப் போல இந்தியாவில் ஒரு சமூகப் புரட்சி ஏன் நடக்கவில்லை? ஐரோப்பாவில் உள்ள ஒரு தொழிலாளி இராணுவத்தில் சேரும் உரிமையிலிருந்து தனது பௌதீக ஆயுதத்தையும், போராடும் உரிமையிலிருந்து தனது அரசியல் ஆயுதத்தையும் கல்வி கற்கும் உரிமையிலிருந்து தனது தார்மீக ஆயுதத்தையும் பெற்றிருந்தான். அதனால் அங்கே புரட்சிகள் நடந்தன. இங்கே பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமையும், போராடும் உரிமையும், ஆயுதம் ஏந்தும் உரிமை கிடையாது. தனது கலப்பையோடு பிறந்து மாடு போல உழைத்துச் சாவதற்கு மட்டுமே உரிமை கொண்ட ஒரு சூத்திர – பஞ்சமன் தனது கலப்பைக் கொழுவை ஒருவாளாக மாற்ற அனுமதியில்லை. அதனால்தான் பல்வேறு கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ்ந்த உழைக்கும் மக்களிடமிருந்து எந்தப் புரட்சியும் தோன்றவில்லை. தோன்றவும் முடியாது என்றார் அம்பேத்கர்.

இத்தகைய சாதிய அமைப்பை ஒழிக்காமல் ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது, வெள்ளையர்களை விரட்டினாலும் தமது அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுதலை அடைய முடியாது என்றார் அம்பேத்கர். ”தீண்டாமைப் பிரச்சினையையும் – மத மாற்றத்தையும் – இந்து மதத்திற்குள்ளேயே பேசித் தீர்த்து விடலாம் – அதை அரசியல் அரங்கிற்குக் கொண்டு வராதீர்கள்” என காந்தி ஒவ்வொரு முறையும் நயவஞ்சமாக நாடகமாடினார். பேசுவதற்கு முன்னால் உங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெள்ளைக் குல்லாய் போட வேண்டும், கதராடை உடுத்த வேண்டும், என்று வைத்திருப்பதுபோல சாதி, தீண்டாமை பாராட்டுபவன் உறுப்பினராக முடியாது என்று விதி கொண்டு வர முடியுமா என காந்தியின் கழுத்தைப் பிடித்துக் கேட்டார் அம்பேத்கர்.

ஆங்கிலேயரின் கைக்கூலி, தேசத் துரோகி என்று காங்கிரசு கும்பலும், பத்திரிகைகளும் வசை பாடிய போதும் தனது போராட்டத்தை விட மறுத்தார் அம்பேத்கர்.

1927-ஆம் ஆண்டு மராட்டியத்தில் சவுதாகர் களப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைக்கெதிரான நீரெடுக்கும் போராட்டத்தினைத் துவக்கினார் அம்பேத்கர். அடுத்த நாளே ‘இந்துக்கள்’ 108 பானைகளில் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் கொட்டி பார்ப்பனர்களின் யாகத்தோடு குளத்திற்குத் தீட்டு கழித்தார்கள். 1930-ஆம் ஆண்டு அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் துவக்கிய நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் 1935-ஆம் ஆண்டில்தான் வெற்றியடைந்தது.

அம்பேத்கரின் இத்தகைய போராட்டங்கள் வன்முறையற்ற அமைதியான போராட்டங்கள்தான் என்றாலும் இந்துக்கள் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தார்கள், தாக்கவும் செய்தார்கள். இதனால் இந்த நாட்டில் சாதி – தீண்டாமையை ஒழித்து ஒரு சமூக எழுச்சியைக் கொண்டு வரும் தனது முயற்சியில் இந்துக்களைத் திருத்த முடியவில்லையே என்று வேதனைப்பட்ட அம்பேத்கர் 1935 யேவா மாநாட்டில் ”நான் பிறப்பால் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால், நிச்சயம் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்” என்று முடிவெடுத்தார்.

இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் 1956-ஆம் ஆண்டு 2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதம் மாறினார்.

அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
2 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பௌத்தத்திற்கு மதம் மாறிய அம்பேத்கர்

அத்பேத்கர் புத்த மதம் மாறியதன் காரணம் என்ன?

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், விகாரமான சடங்குகளுக்கு எதிராகவும், 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது புத்த மதம். இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல பௌத்தம்  இந்து மதத்தின் உட்பிரிவு அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரே, புத்த மதம் செல்வாக்குடன் இருந்த வடமேற்கு – வடகிழக்குப் பகுதிகளில் வருண – சாதிய அமைப்பு சீர் குலைந்ததாகவும், அதனாலேயே முசுலீம், கிறித்தவ மதமாற்றமும் படையெடுப்பும் நடந்ததாகக் கூறி பௌத்தத்தை அருவெறுப்புடன் பார்க்கிறார். கணிசமான காலம் பார்ப்பனியத்திற்கு மாற்றாக விளங்கிய புத்தமதம் செல்வாக்குடன் திகழ்ந்ததற்கு அசோகர் உள்ளிட்ட மௌரிய மன்னர்கள் அளித்த ஆதரவும் முக்கியக் காரணமாகும்.

கடவுள், சடங்கு, நிரந்தர உலகக் கொள்கையை நிராகரித்த புத்தர், அனுபவ ஆய்வையும்  – அறிவையும் மட்டுமே நம்ப வேண்டுமென்றார். மேலும் அகத்தூய்மை, போதுமென்ற மனம், ஆசையை விட்டொழித்தல், பற்றுக்களை உதறுதல் ஆகியவற்றின் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார். அவர் அமைத்த பிக்குகள், பிக்குணிகள் அடங்கிய சங்கம் எளிமைக்கும், சகோதரத்துவத்திற்கும், சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்கியது. இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராகக் கிளம்பிய பௌத்தம் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் தோல்வியைத் தழுவி, இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது.

புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூக நோக்கமும் அம்பேத்கருக்கு மிகவும் பிடித்திருந்தன. மேலும் மனிதனின் அறவியல் விழுமியங்கள் தோன்றி நீடிப்பதற்கு மதம் அவசியம்  என்பதும் அவரது கருத்தாக இருந்தது. அவரைப் பொறுத்தவரை ஒரு நல்ல சமூகம் நிலவ வேண்டுமானால் சமூக நீதிகளைக் கொண்ட சட்டத்தை வைத்து மக்களை ஆளும் ஒரு நல்ல அரசு புறநிலையாகவும், மனிதனின் ஆன்மீக மேன்மையை வளர்க்கும் ஒரு மதம் அகநிலையாகவும் தேவை எனக் கருதினார்.

அதேசமயம் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தைய புத்த மதம் அந்தக் காலத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற ஒரு மதமே தவிர இன்றைய பிரச்சினைகளுக்கு அது தீர்வாகாது. அதாவது புத்தரின் ‘நிர்வாணநிலை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போராடும் தேவையை மறுத்து, போதுமென்ற மனநிலையை அளிக்கிறது. இவையெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியாதா, என்ற கேள்விக்கு அவரது கடைசிக் காலத் தோல்விகளும், மதம் பற்றிய அவரது கருத்தும், சாதி ஒழிப்பிற்கான வழி முறை பற்றிய அவரது சித்தாந்தமும் பதிலாகின்றன.

அடுத்து முசுலீம் – கிறித்தவ மதங்களுக்க அவர் ஏன் மதம் மாறவில்லை? இந்து மதவெறியர் கூறுவது போல அவை ‘அநாகரீகமான மதங்கள்’ என்பதால் அல்ல. முதலில் அவை பார்ப்பனியத்தை எதிர்த்துப் பிறந்த மதங்கள் அல்ல; இரண்டாவது, இந்த மதங்களும் பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.

மேலும் இசுலாமும், கிறித்தவமும் தமது மதக் கொள்கைகளைவிட வலுவான நிறுவன ரீதியான வலைப்பின்னலாலும், அரசு போன்ற கண்காணிப்பு செய்யும் சமூக நெறிப்படுத்தலாலும்தான் நீடிக்கிறது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பௌத்தம் மட்டுமே தனிமனிதனிடம் அறவியல் நல்லொழுக்கங்களை சுதந்திரமான முறையில் வளர்த்தெடுக்கின்றது என்பது அவர் கருத்து. ஆனால், இன்றும் புத்த சமயம் செல்வாக்குடன் வாழும் நாடுகளில் கூட அது நிறுவன ரீதியான மதமாகத்தான் இருக்கின்றது. மேலும் அம்பேத்கரின் புத்தமத மாற்றம் என்பது பார்ப்பன இந்து மதத்தை அசைத்துப் பார்க்கும் அளவு வெற்றியடையவில்லை.

இன்றைய தேவை கருதி அம்பேத்கரைத் திரித்துப் புரட்டும் இந்து மதவெறியர்கள் இன்று வரையிலும் அவரை வன்மத்துடன்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரும் அவரது மசோதாவை ஆத்திரம கொண்டு எதிர்த்தனர், கலவரம் செய்தனர். சில வருடங்களுக்கு முன் ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற அவரது நூலைத் தடை செய்யக் கோரியும், மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ். சிவசேனைக் கும்பல் வெறியாட்டம் நடத்தியது; பல தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்; பல சேரிப்பகுதிகள் தீக்கிரையாகின; அம்பேத்கர் கைப்படச் சேகரித்த நூலகம் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. அதன்பின் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டு வங்கியைக் கவரவும், தனது ‘மேல்சாதி’த் தன்மையை மறைக்கவம் அம்பேத்கரைப் புகழ்பாடும் இந்து மத வெறியர்கள் அப்போதுகூட, ‘ஆம் எங்கள் மதத்தின் அழுக்குகளை அநாகரீகங்களைக் களைய முயன்றார் அம்பேத்கர்’ என்று கூறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமாக வாழ்வதற்கு முயன்றார் என்று கூசாமல் கூறுகின்றனர். கன்சிராம், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், திருமாவளவன், கிருஷ்ணசாமி இவர்களையெல்லாம் வென்றெடுத்துவிட்ட நிலையில் இந்து மத வெறியர்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் அம்பேத்கர் இந்துமத மகான்களில் ஒருவர் என்று கூடக் கூறமுடியும்.

அரசியல் சட்டத்தின் 25வது பிரிவில் முசுலீம், கிறித்தவர்கள் தவிர்த்த புத்த மதத்தினர், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்துக்கள் என்று கூறப்பட்டிருப்பது உண்மைதான். தான் எதிர்த்த காங்கிரசின் மந்திரி சபையில், அம்பேத்கர் சட்ட மந்திரியாக இருந்தது, அரசியல் சட்ட முன் வரைவுக் குழுத் தலைவராகப் பணியாற்றியது – இவையெல்லாம் அரசு என்ற நிறுவனத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குறைந்தபட்ச உத்திரவாதமும், சலுகைகளும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான். இவை சாதி ஒழிப்பின் சிக்கல்கள் நிறைந்த பாதை அம்பேத்கரிடம் ஏற்படுத்திய சமரசங்கள். அதேசமயம் இத்தகைய முயற்சிகளால் அவர் திருப்தியடையவில்லை; அவை தவறு என உணர்ந்தபோது தூக்கி எறியவும் செய்தார்.

”என் விருப்பத்திற்கெதிராக எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்யுமாறு பணிக்கப்பட்டேன், அரசியல் சட்டம் எழுத அவர்களுக்குக் கிடைத்த ஒரு சவாரிக் குதிரைதான் நான்” என்று கூறிய அம்பேத்கர் பின்னாளில் ”அரசியல் சட்டத்தை எழுதிய நானே அதை எரிப்பதிலும் முதல் நபராய் இருப்பேன்” என்றார். இந்துப் பெண்களுக்கான சமச் சொத்துரிமை தொடர்பான மசோதாவைத் திருத்தவும், தள்ளி வைக்கவும் முயன்ற நேரு அரசாங்கத்திற்கு எதிராக தன் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அம்பேத்கர். இவை சமரசத்தின் மூலம் அம்பேத்கர் முடங்க மாட்டார் என்பதைக் காட்டுகின்றன.

சமீபத்தில் சீக்கிய மதம் இந்து மதத்தின் உட்பிரிவதான் என்ற கூறிய ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக சீக்கியர்கள் போராடினார்கள். அதனால் ஆர்.எஸ்.எஸ் தலைமை சீக்கிய மதம் தனியான மதம்தான் என்று மன்னிப்பு கேட்டு ஒப்புக் கொண்டது. ஆனால், தலித் பிழைப்புவாதிகள் பாரதீய ஜனதா கட்சியில் சங்கமமாயிருக்கும் இக்காலத்தில் பௌத்தத்தையும் அம்பேத்கரையும் இந்துமத வெறியர்கள் மற்றும் தலித் பிழைப்புவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் கடமை சாதிய ஒழிப்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

– தொடரும்

பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?

பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?

சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!

கேள்வி :

சமச்சீர் கல்வியை பற்றி தங்கள் கருத்தென்ன? சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்? தங்கள் தளத்தில் கல்வி சார்ந்த கட்டுரைகள் வருவது மிக குறைவாக உள்ளதேன்?

– சீனிவாசன்

கேள்வி :
ஐயா, சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

– பாலச்சந்தர்

அன்புள்ள சீனிவாசன், பாலச்சந்தர்,

சமச்சீர் கல்வி குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை ஒரு தொகுப்பான பார்வையை அளிக்குமென்பதால் அதையே எமது பதிலாக அளிக்கிறோம். வினவில் கல்வி குறித்து அதிகம் கட்டுரைகள் வரவில்லை என்பது உண்மைதான். எதிர்காலத்தில் அதைக் களைந்து கொண்டு போதிய கட்டுரைகள் வெளியிடுகிறோம். நன்றி

– வினவு

__________________________________________________

மச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் முகமாக, கடந்த கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அதற்கான பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டு, பாட நூல்களும் அச்சாகி விநியோகிக்கத் தயாராக உள்ள நிலையில், புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டங்களே பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.

200 கோடி ரூபா செலவில் ஏற்கெனவே அச்சாகியுள்ள பொதுப் பாடத்திட்டத்திற்கான பாடநூல்களைக் குப்பையைப் போல ஒதுக்கிவிட்ட அ.தி.முக. அரசு, பழைய பாடத்திட்டத்தின்படி இனிதான் பாடநூல்களை அச்சிடப் போகிறது. இதற்கு 100 கோடி ரூபாக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ஜெயா, அதிரடியாகச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவிட்டதால், ஒருபுறம் 200 கோடி ரூபாக்கும் மேலான மக்களின் வரிப்பணம் பாழாகிவிட்டது. இன்னொருபுறமோ, பள்ளி தொடங்கும்பொழுதே  மாணவர்கள் பாடநூல்கள் கிடைக்காமல் திண்டாடப் போகிறார்கள். எப்பேர்பட்ட நிர்வாகத் திறன்!

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தனியார் பள்ளிக் கொள்ளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கிறார்கள். “சமச்சீர் கல்வி என்ற சொற்றொடரைக் கேட்டவுடன், தமிழகம் கல்வியில் இருண்டு விடுமோ என்ற அச்சம் எங்களை வாட்டிய வேளையில், வாராது வந்த மாமணிபோல் இறைவனால் அனுப்பப்பட்ட விடிவெள்ளி தாங்களே!” என அக்கும்பல் ஜெயாவைப் பாராட்டி விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறது.

“பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து சிறந்த பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்விமுறை, கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனத் தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்விக்கு எதிராக வைத்து வரும் வாதங்களையே அரசின் நிலைப்பாடாக உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் அறிவித்திருக்கிறார்.

சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியை மறுபடியும் நடைமுறை படுத்தக்கோரி மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய மறியல் போராட்டம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிக்கல்வியில், அரசு பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ-இந்தியன் பாடத்திட்டம்  என நான்கு வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவ்வேறுபட்ட பாடத்திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருவதால், ஒரே சீரான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்ததைத்தான், நாட்டின் ஆகப்பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து வருவதைப் போன்ற பொதுப் பாடத்திட்ட முறையைத்தான் கடந்த தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வந்தது.

2006-இல் தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், “சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வரலாமா, வேண்டாமா?” என்பது குறித்து ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில், கல்வியாளர்கள் எஸ்.எஸ். ராஜகோபாலன், ஜார்ஜ் ஆகியோரையும் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இக்குழு தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பல்வேறு பாடத்திட்டங்களையும், கர்நாடகம், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்துவரும் பாடத்திட்டங்களையும் ஆராந்து, சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக 109 பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.

இப்பரிந்துரைகள் அனைத்தையும் தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, முத்துக்குமரன் அறிக்கையின்படி பொது பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் முனையவில்லை. மாறாக, இதனை நடைமுறைப்படுத்துவதை இழுத்தடிக்கும் முகமாக விஜயகுமார் கமிட்டியை அமைத்தது. மேலும், தனது கட்சியையும்  கூட்டணி கட்சியான காங்கிரசையும் சேர்ந்த பலரும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளாக இருந்துவருவதாலும் இப்பொதுப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட பல சமரசங்களைச் செய்து கொண்டு, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்திரவிட்டது, தி.மு.க. அரசு.

முத்துக்குமரன் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி, தமிழகப் பள்ளிகளில் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுக் கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் பொது பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறுஆவுக் குழு ஆகிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டம் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் நிறை, குறை பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் குறைகள் நீக்கப்பட்டு, புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், அதனை பொதுக்கல்வி வாரியம் அங்கீகரித்த பிறகே பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், இப்பொதுப் பாடத்திட்டத்தை ஆதரிக்கும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இப்பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, இச்சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து தோற்றுப் போனார்கள். அவ்விரு நீதிமன்றங்களும் இது மாநில அரசின் உரிமை என்று இச்சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன.  அப்போதெல்லாம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் முடங்கிக் கிடந்தது, ஜெயா கும்பல். இப்பொழுதோ, மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அ.தி.மு.க. அரசும் இதனையெல்லாம் மறைத்துவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் உருவாக்கி நடைமுறைப்படுத்திவிட்டனர் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி, இது தரம் குறைந்த பாடத்திட்டம் என்ற அவதூறைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

இப்பொது பாடத்திட்டத்தில் குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை ஒரு சுற்றறிக்கையின் மூலம் நீக்கிவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை இந்தக் கல்வியாண்டு முதலே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு முடிய நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்றுதான் கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்பொதுப் பாடத்திட்டம் தரம் குறைவாக இருப்பதாகக் கூச்சல் போடும் அ.தி.மு.க. கும்பலோ, “கருணாநிதி இயற்றிய செம்மொழி தமிழ் பற்றிய பாடலும், அவரைப் பற்றிய குறிப்புகளும் இப்பொதுப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை‘‘த் தவிர, வேறெந்த குறைகளையோ, பிழைகளையோ இதுவரை சுட்டிக் காட்டவில்லை.

இப்பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்திருப்பதைத்தான், தரத்தைக் குறைத்துவிட்டதாக மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பாடச் சுமையை அதிகரித்தால்தான் தரம் அதிகரிக்கும் என்பது முட்டாள்தனமான, அறிவியலுக்குப் புறம்பான வாதம்.

பொதுப் பாடத்திட்டத்தைத் தரம் குறைவானதெனக் குற்றஞ் சுமத்தும் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அரசு பாடத்திட்டத்தைதான் பின்பற்றுகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் அரசு பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறார்களேயொழிய, ‘தரம்’ அதிகமுள்ள வேறு பாடத்திட்டங்களுக்கு மாறிச் சேல்லவில்லை. +1 மற்றும் +2 அளவில் பொதுப் பாடத்திட்டம் வெகுகாலமாகவே நடைமுறையில் இருக்கும்பொழுது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரம் குறைந்துபோகும் என்பதற்கு எந்த அடிப்படையும் இருக்க முடியாது.

புதிய தலைமைச் செயலகம், சட்ட மேலவை போல சமச்சீர் கல்வித் திட்டமும் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதால்தான், இத்திட்டத்தை ஜெயா நிறுத்தி வைத்துவிட்டார் என இப்பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. சனாதன தர்மத்தையும், தனியார்மயம் – தாராளமயத்தையும் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிற்குச் சமத்துவம் என்ற சொல் கூட அறவே பிடிக்காது; அவர் சமச்சீர் கல்வித் திட்டத்தை காலவரையற்று நிறுத்தி வைத்துவிட்டதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அவர் பள்ளிக் கல்வி தொடர்பாக விடுத்துள்ள இன்னொரு அறிவிப்பு இதனை உறுதி செய்கிறது.

சமச்சீர் கல்வி
கோவையில் ஒரு தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை கண்டித்து பெற்றோர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் (மே 2011)

தனியார் ஆங்கிலப் பள்ளிக் கல்வி முதலாளிகள் அடிக்கும் கட்டணக் கொள்ளை அரசால் கட்டுப்படுத்தப்படுமா எனப் பெற்றோர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், “தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாகச் சம்பந்தப்படவில்லை; கட்டண நிர்ணயக் குழுவுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனப் பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்” என அறிவித்திருக்கிறார், ஜெயா. வாராது வந்த மாமணி என ஜெயாவைத் தனியார் பள்ளி முதலாளிகள் புகழுவதற்கு இதைவிட வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?

மைய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைக்கான சட்டத்தை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக உத்தரவிட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் நிர்வாகம், “இச்சட்டப்படி ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், பள்ளியின் ஒழுக்கமே கெட்டுவிடும்; எனவே, பெற்றோர்கள் இச்சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, தமது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத் தனிப்பட்ட பள்ளியொன்றின் கருத்தாகப் பார்க்க முடியாது. ஏழைகளின் கல்வியுரிமை குறித்த தனியார் பள்ளி முதலாளிகளின் பொதுக்கருத்து இதுதான். தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் “தரம், ஒழுக்கம்” எனக் கூச்சல் போடுவதன் பின்னே, ஏழை மக்களுக்கு எதிரான வெறுப்புதான் மறைந்திருக்கிறது.

“சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை” என அறிவித்து, அக்கல்வித் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்திவிடும் முயற்சியில் ஜெயா இறங்கியிருக்க, சி.பி.எம்., “சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தம்மிடம் உறுதியளித்ததாக” அறிக்கைவிட்டு, ஜெயாவின் சதித்தனத்தை மூடிமறைத்துவிட முயலுகிறது. ஏழைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவதைவிட, ஜெயாவிற்கு விசுவாசமாக இருப்பதில்தான் சி.பி.எம்.-க்கு எவ்வளவு அக்கறை! சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து கருத்தரங்குகளிலும் ஊடகங்களிலும் வலியுறுத்தி வந்த பிரபல கல்வியாளர்களும் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் இப்போது பாசிச ஜெயாவின் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டதோடு முடங்கிப் போய்விட்டனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்திய ராமதாசும் போலி கம்யூனிஸ்டுகளும் எவ்விதப் போராட்டமுமின்றி வாய்மூடிக் கிடக்கின்றனர்.

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நிறுத்தப்படுவதால், வாதங்களையும் எதிர்வாதங்களையும் மக்கள் புரிந்து கொண்டு போராட கையில் கிடைத்த ஆயுதமாக இக்கல்வித் திட்டம் மாறிவிட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே உழைக்கும் மக்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் போராடத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டத்தை பார்ப்பன-பாசிச ஜெயா கும்பலுக்கும் தனியார்மயம்-தாராளமயத்துக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை.

______________________________________

– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011
______________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்!

133
சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
மொதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்
சிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்
முதல்ல இந்தாளை தூக்கி உள்ள போடனும்

சென்னை தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்புகையில் வெளியே சாலையில் டிராபிக் ஜாம்! ஜாம் என்றால் வாகனங்கள் என்று நினைத்துவிடாதீர்கள்! இது மனிதர்கள் நீண்ட க்யூ வரிசையில் நிற்பதால் ஏற்பட்ட ஜாம். வாகனங்கள் செல்வதற்கு உரிய சாலையை அடைத்துவிட்டு வெள்ளையும் சொள்ளையுமாக நீண்ட வரிசையில் சீமான்களும், சீமாட்டிகளும் திவ்யமாக நிற்பதற்கு என்ன காரணம்? எட்டிப் பார்த்தால் திருப்பதி தேவஸ்தான கோவிலின் சென்னை பிரான்ஞ்ச் முன்னால்தான் இந்த கூட்டம். திருப்பதியைத்தான் கெடுத்தார்கள் என்று பார்த்தால் இப்போது சென்னையிலுமா?

ஜெயாவின் நகர உலாவுக்காக நிறுத்தப்படும் டிராபிக்கை வைத்து ஹிந்து பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதும் மிஸ்டர் கோபக்கார அம்பிகள் இதை கண்டு கொள்ளாமல் போகும் மர்மம் என்ன? மிஸ்டர் வெங்கடாசலபதியின் பவரும், பந்தாவும் அந்த அளவுக்கு பக்தகோடிகளை கட்டிப் போட்டிருக்கிறதோ?

தமிழகத்தில் இருக்கும் பெரிய கோவில்களில் ஒரு ஐம்பது சதவீதம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும். பல ஏக்கர் பரப்பளவில் மலைக்குன்று போல ஆக்கிரமித்திருக்கும் அந்த சிவன் கோவில்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். கற்பாறையோ, மலையோ இல்லாத தஞ்சை மாவட்டத்தில் தொலைவிலிருந்து சிகரங்களை கொண்டு வந்து கோவில் கட்டி எத்தனை பேர் குடியை அழித்தார்களோ தெரியவில்லை. ஆனால் இப்படி மனித உழைப்பை, இரத்தத்தை உறிஞ்சி வீற்றிருக்கும் இந்தக் கோவில்களில் மக்கள் கூட்டத்தை என்றுமே பார்க்க இயலாது. வௌவால்களும், காணிக்கைக்கு வழியில்லாமல் சிவனே என்று காலத்தை ஓட்டும் டுபாக்கூர் ஐயர்களையும் தவிர ஒரு காக்கா குஞ்சைக் கூட அங்கே காண இயலாது.

இப்படி இந்தியாவில் பல கோவில்களும், கடவுளர்களும் கஞ்சி குடிப்பதற்கே காய்ஞ்சி போயிருக்கையில், வெங்கி மட்டும் ஒய்யாரமாக ஸ்காட்சு குடித்து வருகிறார். பக்தர்களில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை கடவுள் ஏன் படைத்தான் என்று நாத்திகர்கள் இனியும் கேட்க முடியாது போலும். கடவுளர்களிலேயே இப்படி அப்பட்டமான கார்ப்பரேட் முதலாளிகள், ஏதுமில்லாத அனாதைகள் என்று வந்துவிட்ட போது நாம் எப்படிப் பிரச்சாரம் செய்வது?

இந்தியாவின் கருப்புப் பணம் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பது இருக்கட்டும். இங்கேயே அந்தக் கருப்புப் பணம் திருட்டு முதலாளி பக்தர்களால் திருப்பதிக்கு வாரி வழங்கப்படுவதை யாரும் கண்டு கொள்ளவில்லையே? திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம் போடுபவன் பரலோகம் போவான் என்று சும்மானாச்சும் எழதிக்கூட வைக்க வில்லையே? அல்லது திருப்பதிக்கு பணம் தருபவன் அதை கணக்கு காண்பிக்க வேண்டும் என்று சொன்னால் அடுத்த கணமே மிஸ்டர் வெங்கட் லிபர்டி தியேட்டர் வாசலில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது உறுதி.

சாலையோரம் இருக்கும் தொந்திப் பிள்ளையாரையெல்லாம் போகிற போக்கில் விஷ் பண்ணிவிட்டு கன்னத்தில் ரெண்டு போட்டுக் கொள்ளும் காரியவாத பக்தர்கள் திருப்பதியில் மட்டும் கால்கடுக்க நிற்கிறார்கள். வார இறுதி நாட்களில் சராசரிரியாக ஒரு இலட்சம் பக்தர்கள் வந்து சேவித்து விட்டு செல்கிறார்களாம். அதிலும் மிஸ்டர் வெங்கட்டை பார்ப்பதற்கு பணத்திற்கேற்ற தரிசன முறை வைத்திருக்கிறார்கள். இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். ரூ.300 கட்டணத்தில் கும்பிட விரும்புவர்கள் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். திவ்ய தரிசனம் செய்பவர்கள் ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டுமாம்.

இப்படி வேலை வெட்டி இல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் சும்மா நின்று பொழுதை விரயமாக்கும் விசயம் உலகில் எங்காவது உண்டா? இந்த பக்தர்கள் இதே நேரத்தில் ராஜஸ்தானில் புல் வளர்க்கும் திட்டத்தில் உழைப்பைச் செலவிட்டால் தார் பாலைவனம் சோலைவனம் ஆகுமே? இதில் கைக்குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் வரிசையில் நிற்கும் போது தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையாம். அதற்காக இனி அந்த வரிசை கம்பார்ட்மெண்டுகளில் தாய்ப்பாலுக்கென்று தனியறை கட்டப் போகிறார்களாம். ஒரு வேளை அந்ந கியூ வரிசை நெரிசலில் யாராவது மண்டையை போட்டுவிட்டால் வைகுண்டத்துக்கு ஷார்ட் கட்டாக அங்கேயே சுடுகாட்டையும் ஏற்பாடு செய்வார்களோ? இதையெல்லாம் சுருக்கென்று தட்டிக் கேட்க பெரியாரில்லையே?

சரி, இனி தலைப்பில் உள்ள கொடூரமான சம்பவத்திற்கு வருவோம்.

மாலை முரசில் வந்த செய்தி இது. ஆந்திரா, பிரகாசம் மாவட்டம் பெஸ்டவாரிபேட்டையைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படிப்பவள், பெற்றோரோடு ஏதோ சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். பேருந்து நிலையம் வந்தவள் அங்கு இருந்த திருப்பதி பஸ்ஸில் ஏறி வெங்கட் வசிக்கும் ஊருக்கு வந்துவிட்டாள்.

திருப்பதியில் தகவல்மையம் அருகே என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை, திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர் டில்லி பாபு என்ற ஐம்பது வயதுக்காரன் அழைத்துச் செல்கிறான். வீட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் அவளது நிராதாரவான நிலையை புரிந்து கொண்டு ஒரு ஓட்டலில் டிபன் வாங்கிக் கொடுக்கிறான்.  பின்பு தேவஸ்தான செக்யூரிட்டிகள் ஓய்வு எடுக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்து அதாவது கொடூரமாக கற்பழித்து விடுகிறான்.

பின்பு அந்தச் சிறுமி அங்கிருந்து எப்படியோ தப்பித்து வெளியே வருகிறாள். அங்கு ஒரு ஏட்டு விசாரித்து என்ன நடந்திருக்கிறது என்பதை அறிகிறார். பிறகு அந்தச் சிறுமி போலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பெற்றோரும் அழைக்கப்பட்டு ஒப்படைக்கப்படுகிறாள். போலிசாரும் வழக்கு பதிவு செய்து  மிஸ்டர் வெங்கட்டின் செக்யூரிட்டி டில்லி பாபுவை கைது செய்கிறார்கள். அவனது வேலையும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.

இதனால் மிஸ்டர் வெங்கட்டின் இமேஜூக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்று தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக இரண்டு இலட்சம் ரூபாயை அந்த சிறுமிக்கு வழங்குகிறார்கள். மேலும் அவளது பெற்றோருக்கு திருப்பதி கோவிலில் ஒரு கடையை ஒதுக்கி வியாபாரம் செய்வதற்காக கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்

திருப்பதியில் கற்பழிக்ப்பட்டால் இவ்வளவு சன்மானம் கிடைக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது. என்ன இருந்தாலும் பணக்காரக் கடவுள் இல்லையா?

டில்லி பாபு யார்? லார்டு லபக்தாஸ் பெயரால் அவரது சொத்துக்களையும், கும்பிட வரும் பக்தர்களையும் பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்ட ஒரு செக்யூரிட்டி. வழிதவறி வந்த ஒரு பச்சப்புள்ளயை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டிய ஒரு பாதுகாவலன் கொடூரமாக கற்பழித்திருக்கிறான் என்றால்? அந்த கற்பழிப்பை தடுத்து நிறுத்த வக்கில்லாத மிஸ்டர் வெங்கட் அந்த நேரத்தில் என்ன மயிரா பிடுங்கிக் கொண்டிருந்தார்? இதில் உலகளந்த பெருமாள், உக்காந்து முழுங்குன திருமால் என்ற பில்டப் வேறு.

ஒருவேளை மிஸ்டர் வெங்கட் தனது ஒன்னுவிட்ட மைனர் அவதாரம் புகழ் கிருஷ்ணன், கோகுலத்தில் செய்த லீலையாக நினைத்து மகிழ்ந்திருப்பாரோ? பிட்டுப் படம் பார்ப்பவனெல்லாம் எப்படியைய்யா கடவுளாக இருக்க முடியும்? ஆக்கல், காத்தல், அழித்தல் என்று மூன்று வத்தல் வெங்காயங்களில் முக்கியமான காத்தலை டூட்டியாகக் கொண்டிருக்கும் இந்த வெங்கட்டின் கோவிலிலேயே இப்படி கொடுமைகள் நடக்கிறது என்றால் இந்த பரம்பொருள்தான் உலகைக் காத்து இரட்சிப்பாரோ?

ஒன்று கடவுள் பவர் உள்ளவர் என்றால் இந்த கொடுமையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளே தள்ளப்பட வேண்டும். ஏனெனில் இங்கே குற்றமிழைத்திருப்பது மிஸ்டர் வெங்கட்டின் பாடிகார்டுகளில் ஒருவன். சீதையை தொட்டுக்கூட துன்புறுத்தாத இராவணனுக்காக இலங்கையையே எரித்த ராமன், திரௌபதி கூந்தலையும், சேலையையும் இழந்தாள் என்பதற்கு கௌரவர்களது நாட்டை பூண்டோடு அழித்த கிருஷ்ணன் இன்னபிற அவதார அம்பிகளெல்லாம் இப்போது எங்கே போனார்கள்?

அந்த 14 வயதுச் சிறுமி ஒரு ஏழை என்பதால் கண்டுகொள்ளவில்லையா? இல்லை தேவநாதன் போன்ற மன்மதன்களெல்லாம் காமபூஜை செய்யும் நாட்டில் ஒரு செக்யூரிட்டி கற்பழிப்பையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது என்ற சங்கோஜமா? என்ன எழவாக இருந்தாலும் மிஸ்டர் வெங்கட் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் குற்ற வழக்கில் உள்ளே போகவேண்டும்.

டில்லிபாபுவை சஸ்பெண்ட் செய்தும் இரண்டு இலட்சம் ரூபாயை வீசியும் வாயை அடைக்க முயன்ற தேவஸ்தான அதிகாரிகள் முதலில் திருப்பதி வெங்கட்டை கைது செய்திருக்க வேண்டும். “நானே கடவுள், நானே மனிதன், நானே டில்லி பாபு, நானே செக்யூரிட்டி, நானே கற்பழிப்பு” என்ற கீதை லாஜிக்படியும் அந்த ஆளை கைது செய்திருக்க வேண்டும். சோத்தில் உப்பைப் போட்டு சாப்பிடும் சுரணையுள்ள பக்தர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களது பக்தி என்பது காலணாவுக்குக்கூட அருகதை இல்லாத வெத்து வேட்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இனிமேல் வீட்டில் சண்டையிட்டுவிட்டு பஸ்ஸேரும் பிள்ளைகள் யாரும் திருப்பதிக்கு சென்று விடாதீர்கள். ஏதாவது கோவில் இல்லாத ஊருக்குச் சென்று விடுங்கள். குறைந்தபட்சம் மானமாவது மிஞ்சும்.

சென்னை ஹூண்டாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

7

ந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக கார்களை உற்பத்தி செய்யும் ஹூண்டாய் நிறுவனம் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு பிரபலமானது. ஏற்கனவே தொழிற்சங்கம் ஆரம்பித்ததற்காக சி.பி.எம் சார்ந்த சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்த பன்னாட்டு நிறுவனத்திற்காக தமிழக வளங்கள் நிலம், மின்சாரம், குடிநீர், அனைத்தும் மலிவான விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய மூலதனத்தில் லாபத்தை எடுத்துச் செல்லும் ஹூண்டாய் நிறுவனம் தொழிலாளர்களை சுரண்டுவதில் எப்போதும் கண் கொத்திப் பாம்பாய் இருக்கும்.

ஹூண்டாய் நிறுவனத்திற்குத் தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலும் தென்கொரியாவைச் சேர்ந்த முதலாளிகளே அதிகம். அங்கேயும் தொழிலாளர் ஒடுக்குமுறை அப்படியே பின்பற்றப்படுகிறது.

மேலும் ஹூண்டாய் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு நிரந்த தொழிலாளிகளுக்கு இருக்கும் சம்பளமோ, இதர உரிமைகளோ இருக்காது. இவர்களின்றி உற்பத்தி இல்லை எனுமளவுக்கு எண்ணிக்கை அதிகம்.

அதில் டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 1,800 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். உற்பத்தியின் முக்கியமான பிரிவுகளில் இவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் நான்கைந்து ஆண்டுகளாய் வேலை பார்த்தாலும் சம்பளம் என்பது நான்காயிரத்து எண்ணூறு மட்டும்தான். அதில் பல்வேறு பிடித்தங்கள் போக நான்காயிரம் மட்டுமே கிடைக்கும். ஐந்து இலட்சத்திற்கு காரை விற்கும் ஒரு நிறுவனம் ஒரு தொழிலாளிக்கு நான்காயிரம் ரூபாயை மட்டும் கொடுக்கிறது என்றால் இதன் சுரண்டல் அளவை விவரிக்கத் தேவையில்லை. இந்த சம்பளத்தை வைத்து இன்றைய விலைவாசியில் எப்படி குடும்பம் நடத்த இயலும்?

மேலும் இந்த தொழிலாளிகளுக்கு உணவு கூட நிர்வாகம் கொடுப்பதில்லை. சில போராட்டங்களுக்கு பிறகுதான் மதிய உணவு மட்டும் வழங்குகிறார்கள். அதற்கும் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்கள். தீபாவளி போனஸ் இவர்களுக்கு இல்லை. அதுவும் மே மாத இறுதியில் ஒரு மாத சம்பளத்தை மட்டும் முன்பணமாக கொடுத்து விட்டு பின்பு சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள்.

5,6 வருடம் வேலை பார்த்தாலும் இன்க்ரிமெண்ட் என்பது ரூ.250 அல்லது ரூ.300 மட்டும்தான். இவையும் கூட தொழிலாளர்கள் ஓரிரு முறை வேலை நிறுத்தம் செய்த பிறகே அளித்திருக்கிறார்கள். ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து டி.வி.எஸ் நிறுவனம் ஒரு தொழிலாளிக்கு என்று எவ்வளவு பணம் வாங்குகிறது என்பது தொழிலாளிகள் அனைவருக்கும் தெரியாத இரகசியமாகும்.

ஹூண்டாய் ஆலையில் ஒரு ஷிப்ட்டிற்கு 250 முதல் 350 கார்கள் உற்பத்தியாகின்றன. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள். வருடத்திற்கு நான்கு இலட்சத்திற்கு அதிகமான கார்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தையைக் கொண்டிருக்கும் ஹூண்டாய் நிறுவனம் எவ்வளவு இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதை வாசகர்கள் கணித்துக் கொள்ளலாம்.

ஆனால் இங்கு அந்த காரை உற்பத்தி செய்ய தனது உடலுழைப்பை அளிக்கும் தொழிலாளிக்கு உணவு இல்லை, மருத்துவ வசதி இல்லை, பண்டிகை நாட்களில் போனஸ் இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை. இந்த ஒப்பந்த தொழிலாளிகளில் முப்பது சதவீதம்பேர் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்தும், ஏனையோர் தமிழகம் முழுவதும் இருந்து வந்து வேலை செய்கிறார்கள். இவர்களில் பிளஸ் 2, டிகிரி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், முதுகலை படித்தவர்கள் உண்டு.

இத்தனை நாளும் இந்தக் கோரிக்கைகளுக்காக ஓரிரு முறை போராடினாலும் நிர்வாகம் அதை தட்டிக் கழித்து வந்தது. அதன் விளைவாக இன்று ஜூன் 8 புதன்கிழமை அன்று தொழிலாளிகள் அனைவரும் திரண்டு வந்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஹூண்டாய் ஆலை முன்புறம் அனைவரும் காலை முதல் தண்ணீர் பாக்கெட்டுகள் தவிர வேறு எதுவுமின்றி போராடி வருகிறார்கள். டி.வி.எஸ் முதலாளிகள் காலையில் வந்து பார்த்து விட்டு “ஆகட்டும் பாக்கலாம், ஒரு மூன்று மாதம் டைம் கொடுங்கள்” என்று இழுத்தடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

தொழிலாளிகளது வேலை நிறுத்தத்தினால் லைன் நின்று அதாவது உற்பத்தி முடங்கி விட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சுரண்டும் ஹூண்டாய் நிறுவனம் தற்போது கையைப் பிசைந்து வருகிறது. தொழிலாளிகளது கோரிக்கை சம்பளம் ரூ,10,000, உணவக வசதி, எட்டு சதவீத போனஸ் ஆகியவையாகும். இந்த முறை இதை அடையும் வரை போராடுவதாக சொல்லுகிறார்கள். ஆனாலும் இவர்கள் தற்போது எந்த சங்கத்திலும் அணிதிரண்டு போராடவில்லை. தன்னிச்சையாகவே போராடுகிறார்கள். இவர்களது எண்ணிக்கைதான் இவர்களது பலம். அதைக் கண்டுதான் நிர்வாகம் பயப்படுகிறது.

ஆலையில் இருக்கும் சி.பி.எம் சார்ந்த சி.ஐ.டி.யு சங்கமும் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் போராடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையே என்று சட்டவாதம் பேசுகிறது. தொழிலாளர் போராட்டத்தை நிறுத்துவதற்கு இவர்களும் முயல்வதாக தொழிலாளிகள் கூறுகிறார்கள். ஏற்கனவே ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் சிறை, கைது என்று சென்றிருந்த படியால் நிரந்தரத் தொழிலாளிகள் யாரும் இந்த போராட்டத்தில் பங்கு பெறவில்லை. இதுதான் சி.பி.எம் உருவாக்கியிருக்கும் தொழிற்சங்கவாதம்.

பாசிச ஜெயா ஆட்சிக்கு வந்திருக்கும் நேரம் இந்த அப்பாவித் தொழிலாளிகளது போராட்டம் மிருகத்தனமாக ஒடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாமரம் வீசும் வேலையில் தி.மு.க, அ.தி.மு.க என்று வேறுபாடு இல்லை.

ஆயினும் இத்தகைய பாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் இனியும் அடங்க மாட்டோம் என்று உறுதியாயிருக்கும் தொழிலாளிகள் இன்றில்லை என்றாலும் என்றாவது தங்களது கோரிக்கைகளை வென்றெடுப்பார்கள்.

தற்போது இரு ஷிப்டுகள் முடங்கிய நிலையில் மூன்றாவது ஷிப்ட்டுக்கு தொழிலாளிகள் செல்வார்கள் என்று தெரிகிறது. நிர்வாகம் இந்தக் கோரிக்கை குறித்து வரும் 13-ம் தேதி பேசுவதாக வாக்களித்திருக்கிறதாம். மேலும் போராடிய தொழிலாளிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், அதே நேரம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகளுக்கு சம்பளப் பிடித்தம் உண்டு என்றும் கூறியிருக்கிறது. இதையெல்லாம் எழுத்துப்பூர்வமாக தொழிலாளிகள் பெற்றிருக்கிறார்கள்.

சுமார் 2000 தொழிலாளிகள் வேலை நிறுத்தம் என்பதால் அஞ்சிய நிர்வாகம் தற்போது ஆசுவாசப்பட்டிருக்கும். தொழிலாளிகள் ஒரு அரசியல் சக்தியாக எழாதவரை முதலாளிகள் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனினும் தங்களது பலத்தினால் உற்பத்தியை முடக்கும் வல்லமையை அவர்கள் உணரும் பட்சத்தில் இந்த கோரிக்கைகளை அவர்கள் வென்று காட்டுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

போராடும் தொழிலாளிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

_____________________________________________________________

– வினவு செய்தியாளர், ஹூண்டாய் ஆலையிலிருந்து
_______________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!

23
ஹசாரேவா, ராம்தேவா - யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!
பாபா ராம்தேவ் - அண்ணா ஹசாரே (படம் thehindu.com)

ண்ணா ஹசாரேவின் பின் திரண்டுள்ள மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்குப் போராட்டம் என்பதெல்லம் வெறும் நேரப்போக்கிற்காக மெழுகுவர்த்தியோடு நடத்தப்படும் பேஷன் பெரேடு தான் என்று முன்பு சொன்ன போது நம்பாதவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?

ராம்லீலா மைதானத்தில் கருப்புப்பண விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த கார்பொரேட் பரதேசி ராம்தேவின் பக்தர்களை போலீசு அப்புறப்படுத்தியதைக் கண்டித்து அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவினர் நேற்று (6/6/2011) நடந்த ஜன்லோக்பால் முன்வரைவுக் கமிட்டிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த முன்வரைவை ஒழுங்கு செய்வதற்காகக் கூடும் கமிட்டிக் கூட்டங்களை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அப்படிச் செய்யாவிட்டால் எதிர்வரும் கூட்டங்களையும் கூட புறக்கணிப்போம் என்றும் அண்ணாவின் குழுவிலிருக்கும் சாந்தி பூஷன் அறிவித்துள்ளார்.

முதலில் ராம்தேவ் விவகாரம் கருப்புப் பணம் சம்பந்தப்பட்டது – இவர்கள் செல்வதோ ஊழல் எதிர்ப்புக்கான ஒரு சட்ட முன்வரைவை ஒழுங்கு செய்யும் கூட்டம். அதற்காக இதைப் புறக்கணிக்க வேண்டிய தேவை எங்கேயிருந்து எழுந்தது? நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு கோரிக்கையை முன்வைத்து அந்த அலோசனைக் கூட்டத்தை இவர்கள் தவிர்க்கிறார்கள் என்றால் அதன் மேல் இவர்களுக்கே இருக்கும் உண்மையான அக்கறை குறித்து மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், இவர்களின் புறக்கணிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கபில் சிபல், அண்ணாவின் குழுவில் இருப்பவர்கள் தங்களை திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதாகவும், இது போன்ற வரைமுறை மீறிய பேச்சுகள் குழுவின் நடவடிக்கைகள் சுமூகமாக நடக்க ஏதுவானதல்ல என்றும் தெரிவித்துள்ளார். மட்டுமல்லாமல், அண்ணாவின் குழுவினர் வராமல் போனாலும் கூட தாங்களே ஜூன் 30-க்குள் இந்த சட்ட முன்வரைவை இறுதி செய்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.

இது போன்ற கூத்துகளுக்கு அடிப்படையாய் இருப்பது இவர்களுக்குள் நிலவும் ஜனநாயகமற்ற தன்மையும் என்.ஜி.ஓ அரசியலின் ஆன்மாவாக இருக்கும் துரோகத்தனமும் கைக்கூலித்தனமும் தான். அண்ணாவோடு மேடையிலிருந்த ராம்தேவ், தன்னையும் ஜன்லோக்பால் வரைவுக் கமிட்டியில் இணைத்துக் கொள்ளாததை அப்போதே எதிர்த்திருந்தார். மேலும் அவரே சாந்தி பூஷனை சேர்த்துக் கொண்டதைப் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தார். அப்போது ஊடகங்களில் அண்ணாவுக்குக் கிடைத்திருந்த ஸ்டார் அந்தஸ்தையும் நடுத்தர வர்க்கத்து மக்களிடையே அவருக்கு ஊடகங்களால் ஏற்பட்டிருந்த நற்பெயரையும் கணக்கில் கொண்டு உடனேயே தனது விமரிசனத்தை வாபஸ் பெற்றிருந்தார்.

அப்போது ராம்தேவுக்கு உண்டான பொறாமையும் காய்ச்சலும் தான் அவரைத் தன்னிச்சையாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் அமரச் செய்தது. எங்கே இந்தப் பய குறுக்கே புகுந்து தான் ஐந்து நாட்கள் சோறு தண்ணியில்லாமல் டிராமா போட்டு சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரை அபேஸ் பண்ணி விடுவானோ என்று அஞ்சியதாலேயே அண்ணா ஹசாரே ராம்தேவை ஆதரித்திருந்தார். இவர்களுக்கு யார் பெரியவர் என்கிற குத்துபிடி சண்டை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் ஊடக ஒளியில் கனஜோராக நடந்து வந்தது.

அரசை விமரிசிப்பதில் தான் பின்தங்கி விட்டால் எங்கே தனக்குப் பெயர் கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சிய அர்விந்த் கேஜ்ரிவால், தொலைக்காட்சி சேனல்களில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். சாந்தி பூஷனும் தன் பங்குக்கு எந்தக் குறையும் வைக்காமல் இதே போன்ற நாடகத்தை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடத்திக் கொண்டிருக்க, இக்குழுவின் இன்னொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே ‘எனக்கு அழுவாச்சியா வருது.. விடுங்க நான் வூட்டுக்குப் போறேன்’ என்று போன மாதம் தனி டிராக்கில் இன்னொரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

இது தான் இவர்கள் மக்களுக்காக போராடிய லட்சணம். இதே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு குழுவாக இருந்திந்தால் அவர்களுக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டுமே என்கிற குறைந்தபட்ச பயமாவது இருந்திருக்கும். ஆனால், இவர்களோ தன்னிச்சையாக தங்களைத் தாங்களே சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். தங்களை நியமித்துக் கொண்டதிலோ, தமது குழுவிற்குள்ளோ மருந்துக்குக் கூட ஜனநாயகத்தை அனுமதிக்காதவர்கள். அண்ணா ஹசாரே தனது குழுவினரை நியமித்துக் கொண்டதும் ஒரு ஆண்டி மடத்தில் சீனியர் ஆண்டி தனக்கு ஜூனியர்களை நியமித்துக் கொள்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடே இல்லை.

அடுத்து என்.ஜி.ஓ அரசியலுக்கென்றே இருக்கும் ஒரு குணாம்சமான மக்களை அரசியலற்ற மொக்கைகளாகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆக்கும் துரோகத்தனமும் இதில் துலக்கமாக வெளிப்படுகிறது. சமீப வருடங்களாக மக்களை அடுத்தத்த ஊழல் செய்திகள் ஒரு சுனாமி போல தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், அவற்றுக்கெல்லாம் ஊற்றுமூலமாய் இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி மக்களின் ஆத்திரமும் கோபமும் திரும்பி விடாமல் போராட்டம் என்பதையே பிக்னிக் சென்று வருவது போன்ற ஒரு இன்பமான நிகழ்வாக மாற்றியமைத்துள்ளது, அண்ணாவின் பின்னேயிருந்து இவை மொத்தத்தையும் இயக்கும் என்.ஜி.ஓ கும்பல்.

இது மக்களின் ஆத்திரத்தையும் இயல்பாகவே மாற்றத்தை விரும்பும் அவர்களின் அபிலாஷைகளையும் அவர்கள் மொழியிலேயே பேசி கூட இருந்தே கருவறுக்கும் செயலாகும். இப்போது ஜன்லோக்பால் கமிட்டியினுள் அரசாங்க உறுப்பினர்களுக்கும் அண்ணாவின் குழுவினருக்கும் இடையே எழுந்திருக்கும் முரண்பாடுகளை ஏதோ மக்களுக்கே நடந்து விட்ட துரோகம் போலச் சித்தரித்து ஒட்டுமொத்தமாக இந்தச் சட்டம் ஏற்படாமலே போக வைக்கும் வேலையைத் தான் அவர்கள் கவனமாகச் செய்து வருகிறார்கள்.

ஊழலே சட்டபூர்வமாகிவிட்ட ஒரு சூழலில் ஜன்லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை ஒழித்து விடக்கூடிய தீர்வு என்று யாராவது கருதமுடியுமா? ஊழல் என்பது மறுகாலனியாக்கத்தில் கருக்கொண்டிருக்கிறது – ஆனால் இவர்களோ வெறும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் மட்டுமே கடல் அலைகளைக் கைகளால் தடுத்து விட முடியும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால், எதார்த்தத்தில் இவர்களின் ஆன்மாவாக இருக்கும் என்.ஜி.ஓ அரசியலோ அதைக் கூட உருப்படியாய் நிறைவேறாமல்  தடுக்கும் வேலையைச் செய்கிறது. அதைத் தான் இவர்களுக்குள் நடக்கும் குத்துபிடி சண்டைகளும் ஈகோ மோதல்களும் மெய்பித்துக் காட்டுகின்றது.

இவர்களுடைய ஓட்டாண்டித்தனங்களை முன்பே வினவில் அம்பலப்படுத்தி எழுதிய போது அறவுணர்ச்சி பொங்க கூத்தாடிய நண்பர்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? ஊழல் முறைகேடுகளை எதிர்க்கும் உங்களின் நியாயமான கோபத்தையும் உணர்ச்சியையும் இவர்களிடம் தானா நீங்கள் அடகுவைக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்; உண்மையாகப் போராடும் உலகமும் போராட்டக் களங்களும் இவர்களுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் அத்தகைய களங்களுக்குள் வரவேண்டும். மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணிக்க வேண்டும்.

_________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: