முகப்புஉலகம்ஈழம்ஈழம்: "அம்மாவும்'' பக்தர்களும் ! கருத்துப்படம் !!

ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!

-

jaya

ஈழத்தில் போர் தொடருகின்றது. முல்லைத்தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கமும் இறுதியாய் வெளியேறிவிட்டது. இனி செத்து விழும் மக்களைக் கணக்கு காட்டுவதற்குக் கூட அங்கு நாதியில்லை. கேள்வி கேட்பாரின்றி ராஜபக்க்ஷே அரசு புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையையே கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் மக்களெல்லாம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை அரசியலற்ற மனிதாபிமானப் பிரச்சினையாக மாற்றி யார் கிழித்தார்கள் என்பதில் போட்டி போடுகிறார்கள். தனது வாரிசுகளுக்கு கட்சியையும் ஆட்சியையும் எழுதிவைத்து விட்டு பாகப்பிரிவினை வேலைகளை மட்டும் முக்கியமாக செய்து வரும் கருணாநிதி இடைக்கிடையே ஈழம் என்று உருகுகிறார். இந்த உருகுதலில் ஈழப்பிரச்சினையை அப்படியே நீர்த்துப் போகவைக்கும் தந்திரத்தை கடைபிடிக்கிறார். இனி என்ன செய்ய முடியும், மத்திய அரசு சொல்லியும் நடக்கவில்லையே, தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை என்றெல்லாம் அவர் நடத்தும் நாடகம் ஒருபுறம்.

மறுபுறத்தில் ஜெயலலிதா “கொள்கை” ரீதியாகவே சிங்கள இனவெறி அரசின் போரை ஆதரிக்கிறார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டுமென கட்டளையிடுகிறார். போர் என்றால் பொதுமக்கள் சாகத்தானே செய்வார்கள் என ராஜபக்க்ஷேவுக்கு வக்காலத்து வாங்குகிறார். மற்றபடி ஈழத்து மக்கள் அதிகம் சாகும் செய்திகள் வந்த வண்ணம் இருப்பதால் எதுவும் பேசாமல் தந்திரமாக மவுனம் காட்டுகிறார். தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென நாடகம் நடத்துகிறார். அம்மாவின் கூட்டணிக்காக க்யூ வரிசையில் நிற்கும் பக்தர்களும் கருணாநிதியைக் துரோகியென கிழிக்கிறார்களேயன்றி மறந்தும் அம்மாவைப் பற்றி பேசுவதில்லை. தனது மகனின் இரண்டு மாத மத்திய மந்திரிப் பதவியைக் கூட துறக்கத் தயாரில்லாத ராமதாஸூ, ஈழத்திற்கு சாகசப்பயணம் மேற்கொள்வேனென உதார் காட்டும் வைகோ, சிங்கள அரசின் போரை கொள்கைரீதியாகவே ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, தீடிரென தூக்கத்திலிருந்து விழிப்புற்று ஈழத்திற்காக குரல் கொடுக்கும் வலது கம்யூனிஸ்ட் கட்சி இவர்களெல்லாம் கருணாநிதியை மட்டும் விமரிசனம் செய்துவிட்டு ஜெயலலிலதாவைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. ராஜபக்க்ஷேவை பிளந்து கட்டும் இந்தத் தலைவர்கள் அந்த ஆளின் தோஸ்த்தான ஜெயலலிதாவை மட்டும் உரசிக்கூடப் பார்ப்பதில்லை. போருக்கு கருவிகளும், ஆளும் கொடுத்து உதவும் இந்திய அரசிடம் மாங்கு மாங்கென ஈழம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள் போயஸ் தோட்டம் சென்று அம்மாவுக்கும் மட்டும் வகுப்பு எடுப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா கட்சியிடம் அணி சேரப்போகிறவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். அம்மாவும் கூட்டணிக்கு வந்துவிட்ட வரப்போகின்ற இந்த பக்தர்களைப் பற்றி எதுவும் பேசாமல் கருணாநிதி புலி ஆதரவாளர் என பூச்சாண்டி காட்டுகிறார். ஈழத் தமிழர்களை கருணாநிதி காப்பாற்ற முடியாது என பிலாக்கணம் வைக்கிறார். ஜெயலலிதாவின் மனம் நோகாமல் இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற நினைக்கும் ‘மாவீரன்’ நெடுமாறனை என்னவென்று சொல்ல? இத்தகைய பிதாமகர்களின் கையில்தான் ஈழத் தமிழரின் பாதுகாப்பு உள்ளதாக எவரும் கருதினால் அதை விட ஏமாளித்தனம் எதுவுமில்லை.

கருணாநிதியின் துரோகம் இப்போது மக்கள் அனைவரும் அறிந்து விட்ட யதார்த்தம். ஆனால் ஈழத்தமிழருக்கு ஜெயலலிதா எதிரி என்பதை அவரது பக்தர்கள் மறைக்கிறார்கள். இந்த மாயத்தடுப்பைக் கிழித்தெறிவதும் ஈழத்திற்காக குரல் கொடுப்பதும் வேறுவேறல்ல. ஜெயலலிதா ஈழத்திற்காக விட்ட அறிக்கையைத்தான் செராக்ஸ் காப்பி எடுத்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நாடாளுமன்ற உரையில் பேசியிருக்கிறார். புலிகள் ஆயுதத்தைத் துறந்து சரணைடையவேண்டுமெனவும் அதன் பிறகு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் ராஜபக்க்ஷேவின் கொள்கையை மறு ஒளிபரப்பு செய்திருக்கிறார். இலங்கை அரசின் உற்ற பங்களாயாய் இந்தியா செயல்படுகிறது என்பதற்கு இதைத் தவிர சான்று தேவையில்லை. பிரதிபா பாட்டீலீன் உரை தங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக கருணாநிதியும், ராமதாஸூம் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை விடுகின்றனர். மத்திய அமைச்சர்கள் எனும் எலும்புத்துண்டை கவ்விப் பிடித்திருப்பதற்கு விசுவாசமாக வேறு என்ன பேச முடியும்?

புரட்சித் தலைவி அம்மாவும் சரி குடியரசுத் தலைவர் அம்மாவும் சரி ராஜபக்க்ஷேவின் குரலாய் கூவிக் கொண்டிருக்கும் போது ஈழத்தின் முல்லைத்தீவுகளில் மக்கள் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் துயரை விட தமிழ்நாட்டில் அட்டைக் கத்திகளாய் சுழன்று கொண்டிருக்கும் ஓட்டுக்கட்சி பிரமுகர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பது முக்கியமானது. அப்போதுதான் ஈழத்தின் துயரை அதற்குரிய பொருளில் மக்களிடம் பேச முடியும். அதுதான் பயன்தரத்தக்க விளைவுகளையும் தரமுடியும்.

 1. இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை ?
  மனித அலவங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கையில் எதனை தலையங்கமாக வைத்து தொடங்குவது எனத் தெரியிவில்லை. பலகொடுமைகள்நடந்து கொண்டிருக்கின்றன.
  தற்காலத்தில் இராணுவ நடவடிக்ககையின் காலத்திலும் பின்னரான காலத்திலும் கவனிக்கபட வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.

  சிறிலங்கா அரசு..
  இன்று மூர்க்கத்தனமாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசம் மீதான தாக்குதல். அரசே அறிவித்திருக்கின்றது சில நூற்றுக்கணக்கான போராளிகள் தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து போராடுவதாக அப்படியாயின் அரசின் இலக்கானது எவ்வகை விலை கொடுத்தாவது இடத்தைக் கைப்பற்றுவதாகும். இதன்காரணமாக மனிதாபிமானம் என்பதற்கே இடமில்லாதவாறு அரச படைகள் செய்ற்படுகின்றன.
  அரசிடம் வந்து சரணடைபவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு
  வடிகட்டி கைது செய்யப்படல்
  காயப்பட்டவர்களையும் உறவினரையும் பிரித்து வைத்தல்
  காயப்பட்டவர்களை கவனிப்பதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறை
  காணாமல் போதல்
  குண்டு போட்டுக் கொல்லப்படுபவர்கள் அவர்கள் தங்கியிருந்து பதுங்குமுழிகளே அவர்களின் புதைகுழிகளாக மாறியிருக்கின்ற நிலமை. இதனால் தமது உறவுகளின் முகத்தைக் இறுதியாகக் கூட பார்க்க முடியாத அலவம். என அவலங்கள் தொடர்கின்றன. இவைகள் வெறும் ஊடகச் செய்திகள் அல்ல மாறாக எமது உறவுகளிடம் இருந்து நேரிடையாகப் பெறப்பட்ட கள தகவல்களாகும். பாசீட்டுக்களுக்குள்ளாக உளவியல் நிலையினை சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது.

  இன்றையப் பொழுதில் அனைவரும் புலிகள் அழியவேண்டும் எனக் கொள்கின்றனர். ஆனால் அழியப்படுவது அடிமட்டப் போராளிகளும் மக்களுமாவர்.
  புலிகளின் தலைமையானது ஆயுதங்களையும் தமது குடும்பத்தையும் தம்மையும் பல போராளிகள் புடைசூழ பாதுகாப்பாக வாழ்கின்றனர். இதனை அறியாதவர்களாக அனைவரும் நடந்து கொள்கின்றனர்.
  யுத்தநிறுத்தத்தை கொண்டுவரமாட்டேன் என்றுகூறுகின்ற பாசீச அரச தலைமை
  புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரக்கூடியவர்களும் வெளியே வர முடியாது இருக்கும் மக்களுக்கும் பற்பல காரணங்கள் இருக்கின்றனர். இவர்கள் விரும்பியோ விரும்பாமலே புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து விட்டார்கள். இதனால் அனைவரும் அழிக்கப்படுவதற்கு துணை போக வேண்டுமா? அப்படி அரசிடம் சரணடைந்தால் அவர்களை புனருத்தாரனம் செய்யும் வகையில் வெளிப்படையாக ஒரு நிர்வாக அலகு இருக்கின்றதா? சுதந்திரமானதும் ஜனநாயக விழுமியங்களுக்கும் அமைய கட்டமைக்கப்பட்ட நிர்வாக அலகு இல்லாது வந்து சரணடையுங்கள் எனக் கூறுவதில் எவ்விதமான நேர்மையாக செயல்முறை அங்கு இல்லை. இது ஓரு பாசீசக் கட்டமைப்பு சுதந்திரமான கட்டமைப்பைக் கொண்டிருக்காது.
  சுதந்திரமான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற ஒரு அலகை உருவாக்கப் கோருவது அவசியமாகும்.

  புலியெதிர்ப்பாளர்கள்.. ….
  நேரிடையாகவே அரசுடன் சேர்ந்தியங்கும் டக்கிளஸ்/கருணா/ பிள்ளையான் /சிறிரொலோ எனவும்
  புளொட்/இபிஆர்எல்எவ நாபா/ ஈரோஸ்/ சங்கரி எனவும் இவர்களின் மூலம் தமிழ் மக்களுக்காக உரிமையை பெற்றுக் கொடுக்க முடியுமா?
  இன்று புலியெதிர்ப்பாளர்கள் பக்கத்தை எடுத்துக் கொண்டால் கிழக்கின் விடிவெள்ளிகள் தங்களுக்கிடையே ஆப்புவைத்து யார்யாரை முதலில் போடுவது எனப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கருணா தேசிய நீரோட்டத்தில் இணையப் போகின்றாராம். ஏனெனில் அவரை தலைவர் என ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
  பிள்ளையானோ 13 சட்டதிருத்தத்திற்கு அமைய அதிகாரம் இல்லை எனக்கூறுகின்றார்.
  இதில் இவர்களின் மூத்த அண்ணா டக்கிளஸ் வடக்கிலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார். இதில் சங்கரிக்கு பெரிய இடைஞ்சலாக டக்கிளஸ் இருக்கின்றார். வடக்கினதும் கிழக்கினதும் நிர்வாகிகள் தமிழ் மக்களுக்கு புலிகளே பிரச்சனை என்பதை மறக்காது அரசவிசுவாசமாக நடந்து கொள்கின்றனர்.
  மற்றைய ஜ.த.தே.கூட்டமைப்பினர் சங்கரியை வைத்துக் கொண்டு ஆங்காங்கே தமது குரலை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலையானது அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்பதாகும்.

  புலம்பெயர்நாடுகளின் உள்ள மக்களை திரட்டுவது..
  புலம்பெயர்நாடுகளின் உள்ள மக்களை திரட்டுவது என்பது இலகுவான விடயம் அல்ல. மக்களைத் திரட்டுவது என்பது அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கூப்பிட்டு தமது ஊர்வலங்களில் அல்லது கூட்டங்களின் பேசவைப்பது என மாத்திரம் என்று தான் விளங்கிக் கொள்கின்றனர். இதன் காரணத்தினால் அரசியல் கட்சி உறுப்பினர்களை தமது கூட்டங்களில் பேசவைப்பதில் திருப்பி அடைகின்றனர்.
  மக்களின் ஆதரவிற்கு சிறந்த உதாரணமாக பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் நடைபெறும் போராட்டத்தையே உதாரணமாக கொள்ள முடியும். பலஸ்தீனர்களுக்கு கிடைக்கின்ற ஆதரவிற்கு இணையாக வேண்டாம் ஒரு சிறி அளவில் தன்னும் அந்தந்த நாட்டுமக்கள் குரல்கொடுக்க ஏன் முன்வரவில்லை என்பதை புலிகளின் ஆதரவாளர்கள் தமக்குத் தாமே கேள்வி கேட்கவேண்டும்.
  ஏன் அவ்வாறு நடைபெறவில்லை என நாம் காரணம் கூறுகின்ற போது அவை புலயெதிர்ப்பாளர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள்என்ற கருத்தியலுக்குள் கொண்டுபோய் விடும்.
  புலிகள் மக்களை அனாதரவாக விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என புலிகளின் விசுவாசிகள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
  இன்று புலிகளைப் பொறுத்தவரையில் மக்களுடைய இழப்புக் மூலமாக தமது குறிக்கோளை அடைய முடியும் என தமது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
  அதாவது இழப்புக்கள் மூலமாக சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர்.
  புலம்பெயர் மக்கள் போராட்டம் மற்றும் தமிழக மக்களிடையே ஏற்றபட்ட எழுச்சி மூலமாக தமக்கு சாதகமான நிலை உருவாகும் என நம்புகின்றனர்.
  மக்களின் இழப்பைக் கொண்டு பணம் சேகரிக்க முடியும்.
  புலம்பெயர்ந்த மக்களிடையே இழப்பினால் ஏற்படும் அனுதாப அலையென்பது கசப்பான நினைவுகளை மறப்போம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தமது போராட்ட முறையில் ஏற்பட்ட தவறுகளுக்கு விமர்சனம் செய்ய இவர்களால் முடிவில்லை. இழப்பினால் பெறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் குறுகிய காலத்தில் தமது தேவையை அடைந்து விடலாம் என்பதே புலிகள் மாறாத யுக்தியாக இருக்கின்றது.
  ஆனால் இன்றைய நிலையில் புலிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பது என்பது முடியாத நிலையாகும். அப்படி அங்கீகாரம் கிடைக்கவேண்டுமெனில் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய வல்லரசுகளிடையே எதிர்பாராத பகைமுரண்பாடு ஏற்பட்டால் தவிர வேறு சந்தர்ப்பமே இல்லை.
  மக்களை அணிதிரட்டவதானது புலம்பெயர் மக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தவருடன் ஒன்றிணைவதாககும். புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களை திரட்டுவது என்பது 1984களில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பி மாத்திரமே அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பெரும் கட்சிகளை மையப்படுத்தியே அரசியல் வேலைகள்இடம் பெற்றன. அவ்வாறில்லாது. உழைக்கும் மக்களை அடிஅத்திவாராமாக கொண்டு ஆதரவுத்தளமானது உருவாக்கப்பட வேண்டும்.
  சிவாஜிலிங்கம் கூறுவது போல இந்துக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்காக சிறுபான்மையினரின் உரிமையை ஒடுக்கும் பா.ஜ.க என்ற இந்துத்துவவாத பாசீசக் கட்சியை நோக்கி செல்ல முடியாது.
  மற்றையது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையாது சிவாஜிலிங்கத்தின் பேட்டியை அவதானித்தபின்னர் அவர்களிடையே ஒற்றுமையான கருத்து இல்லை என்பதை அறிய முடிகின்றது. இவர்கள் ஒன்றாகச் செயற்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றார். சிவாஜிலிங்கத்தின் கருத்தென்பது இன்றும் சுயாதீனமாக இயங்கவல்ல கருத்துக்கள் அவரிடம் இல்லை. தற்காலச் சூழலை மையமாக் கொண்டு ஒரு போராட்டத்தை செயற்படுத்த முடியாத நிலையைத் தான் சிவாஜிலிங்கத்தின் பேட்டியின் மூலம் அறிய முடிகின்றது. இன்றைக்கு மக்கள் புலி என்ற எல்லைக்குள் மாத்திரம் நின்று சிந்திக்கின்றார்களோ அவ்வாறே க.தே.கூட்டமைப்பினர் கருத்து ரீதியாக வளராது மலடாகிப் போய்யுள்ளனர்.

  தீக்குளிப்பது முதலான அரசியல் நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ் மக்களை புலிப்பாசீசம் தமக்கு புத்துயிர்ப்புக் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்துகின்றனர். ஆழமான அரசியல் உள்ளடக்கம் இல்லாத போராட்ட வடிவங்களும் பணம் திரட்டுவதை மையமாகக் கொண்ட கோரிக்கைகளையுமே புலிகள் திரைமறைவில் செயற்படுகின்றனர்.

  இடதுசாரிகள் மீதுள்ள பெரும்கடமை தான் என்ன?
  புலிகளின் ஆதரவு தொலைக்காட்சிகள் தற்கொலையை தூண்டுவதிலும் இனவாதத்தை விதைப்பதிலும் பணம் பிடுங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவற்றை தடுப்பது என்பது மக்களுக்காக கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களை இடதுசாரிகள் இணைந்து போராட்டம் நடத்தவதன் மூலமே ஒரு காத்திரமாக தாக்கத்தை கொடுக்க முடியாது.
  இன்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் பல பிரிவுகளாகவும் உதிரிகளாகவும் பிரிந்திருக்கின்றனர். இவர்கள் வெறும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் இன்றும் இன்றும் பாசீசம் தொடர்ச்சியாக தனது வேரை ஆழ ஊன்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்துவிட முடியாது.
  இடதுசாரிகள் நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கு தகுத்தாற்போன்றதான அரசியல் செயல்வடிவங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் இனப்பிரச்சனையில் ஆரம்பகாலத்தில் விட்ட தவறுபோல இந்தக்க காலத்திலும் விடக் கூடாது.

  பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது பல தளங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எமக்கான கோரிக்கைகள் உடனடித் தேவை எனவும் நீண்டகாலத் தேவை என திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது மக்களுக்காக தேவையை எந்தவிதமான பாசீச சக்திகளை ஆதரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும். பாசீச எதிர்ப்பு என்ற அடித்தளத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்கான தேவை என்பதை நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும். எவ்வாறு எதிர்காலத்தை வழிநடத்தப் போகின்றோம் என்பதைப் பொறுத்தே இலங்கையில் உழைக்கும் மக்களுக்கான விடிவைக் கொடுக்கும் போராட்டத்தை மாத்திரம் அல்ல. அனைத்து இனமக்களின் சுயநிர்ணயஉரிமையை பெற்றக் கொள்ளக் கூடிய ஒரு போராட்ட கட்டமைப்பை தொடர்ச்சியாக கொண்டு செல்லமுடியும். அதாவது புலிகளுடனோ அல்லது புலியெதிர்ப்பு அணியினரின் துரோத்தனத்தினால் தமிழ் மக்களுக்காக போராட்டம் முற்றுப் புள்ளபெற்றதாக இருகக்கூடாது. சிறிலங்கா பாசீச அரசோ அல்லது ஏகாதிப்பத்தியங்களோ எமது மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் ரீதியாக வளர்ச்சியடையாது மலடாகிப் போன ஒரு சமூகத்தை போராட்ட ரீதியாக தொடர்ந்தும் வளர்த்தெடுப்பது என்பது பரந்து பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகும்.

 2. கார்ட்டூன் நன்றாக இருக்கிறது. உதயனுடையதைப் போன்று அழுத்தமான கோடுகள்… தெளிவான உருவமைப்பு… வாசகங்கள் சற்று மேம்பட வேண்டும்.

 3. அருமையான கேலிச்சித்திரம், வாழ்த்துக்கள் ரவி. போராட்டம் டி என் கருத்தை நான் ஏற்கிறேன். வாசகங்கள் மேம்படலாம்.

  பிறகு இன்று இந்த சுட்டியை பார்த்தேன்
  http://binaryday.com/2009/01/10/a-detailed-study-of-250-indian-blogs-pagerank-alexa-backlinks-technorati-and-delicious-details/
  இதில் இந்திய அளவில் வினவு தளம் 65ம் இடத்தில் இருப்பதாக வந்துள்ளது. மற்ற துறை சார்ந்த, சினிமா, மொக்கை பதிவுகளுக்கு மத்தியில் வினவு இந்த இடத்தை பிடித்த்து ஆச்சரியமே! வாழ்த்துக்கள் வினவு

 4. ரவி நல்லா இருக்கு உங்க கார்டூன். இப்படியே எல்லா அரசியல்வாதிங்கலையும் போட்டு தாக்குங்க. எங்கலுக்காக ராமதாசு அன்புமணியக் கொஞ்சம் போடுங்க.
  நன்றி

 5. /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
  தமிழனால் வளர்க்கப்படும் மற்றுமொரு தமிழின துரோகி

  இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கக் கோரி, கடந்த 4-ம் தேதி தமிழகம் முழுக்க ஹர்த்தால் நடைபெற்றது. இலங்கையிலோ அன்றைக்கு ‘குடியரசு தினம்’ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

  அதே நாளில் கொழும்பு நகரிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா- இலங்கைக்கான கிரிக்கெட் போட்டியும் விறுவிறுப் பாக நடந்தது. இங்கே தமிழர்களின் ரத்தம் கொதித் துக்கொண்டிருக்க… அங்கே ஆனந்தமாக கிரிக்கெட் மேட்ச்சை ரசித்து மகிழ்ந்தார்கள் சிங்களர்கள்.

  அவர்கள் ரசித்ததைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், ஒரு பிரபல தமிழ் நடிகர் அன்று இலங்கை சென்று கிரிக்கெட் போட்டியை ரசித்தார் என்றால்… அந்த அநியாயத்தை என்னெவென்று சொல்வது?

  அவர் வேறு யாருமல்ல… நடிகர் பரத்! அவர் கிரிக்கெட்டை ரசித்துப் பார்த்த காட்சியை டி.வி-யில் பார்த்த தமிழர்கள் பலர் கொதித்துப் போனார்கள்!

  இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன் நம்மிடம்

  கொந்தளிப்போடு, ”பொதுமக்க ளின் காசில் தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் சில தமிழக ஹீரோக்கள், தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. முன்பெல்லாம் வெளி நாட்டில் தமிழ் சினிமாவுக்கு அதிகமாக பிசினஸ் கிடையாது. ஈழத் தமிழர்கள் பெருமளவில் உலக நாடுகள் பலவற்றிலும் குடியேற ஆரம்பித்த பிறகுதான் எஃப்.எம்.எஸ். என்கிற ஃபாரின், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் தமிழ் சினிமாவின் பிசினஸ் கொடி உயரப் பறக்க ஆரம்பித்தது. லட்சங்களில் சம்பளம் வாங்கிவந்த தமிழ் ஹீரோக்கள் எல்லாம், கோடிகளில் சம்பளத்தைப் பார்த்ததே ஈழத் தமிழர்கள் போட்ட பிச்சைதான். அப்படிப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்த ஹீரோக்கள் என்ன செய்து கிழித்தார்கள்? சினிமாவில் சம்பாதிக்கிற பணம் போதாதென்று அவ்வப்போது அமெரிக்கா, கனடா, லண்டன், ஃபிரான்ஸ் நாடுகளில் நட்சத்திர இரவுகள் நடத்தி, அங்கிருக்கும் ஈழத்தமிழர்களின் காசையும்

  சுரண்டி… கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை!

  தமிழகமே ஈழத்தமிழருக்காக ரத்தக்கண்ணீர் சிந்தியபடி போன 4-ம் தேதி முழு கடையடைப்பு நடத்தியது. ஆனால், நடிகர் பரத் கொழும்பில் ஸ்டார் ஹோட்டலில் நடந்த விழாவில் சிங்களத்தானுடன் நடனம் ஆடியிருக்கிறார். இது தமிழனுக்குச் செய்யும் பச்சை துரோகமில்லையா? ஐயா, சினிமாக்காரங்களே… பரத், இனிமேல் தமிழ்ப் படங்களில் நடிக்கவே கூடாது என்று ‘ரெட் கார்டு’ போடுங்கள்.! ஈழத்தமிழர்கள் தங்கள் நாடு, நகரம், வீடு, உறவுளை இழந்து முல்லைத்தீவில் குண்டுகளுக்கு இரையாகி அழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கொழும்பில் சிங்கள வெறியர்கள் இந்தியர்களோடு விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை கைதட்டி ரசித்துப் பார்க்கும் நடிகர் பரத், எங்களைப் பொறுத்த வரையில் ஒரு தமிழின துரோகி

  http://thamilar.blogspot.com/2009/02/blog-post_418.html

  !////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  ஈழ்த்தமிழ் மக்களை பற்றி பேச இந்து மக்கள் கட்சிக்காரனுக்கு என்ன யோக்கியதை இருகிறது? காங்கிரஸ் வெறி நாய்களுடன் எலும்புகளை பங்கிட்டுகொள்ளும் சொறி நாய் தான் இந்த இந்து மக்கள் கட்சியும்.
  அது மட்டுமில்லாமல் இந்த கும்பல் அடிப்படையிலேயே தமிழ் இனவிரோத பார்ப்பன அடிவருடி கும்பல்,எனவே இந்து என்று சொல்லிக்கொண்டு வருகிற எவனுக்கும் ஈழ்த்தமிழனைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
  வை.கோ, திருமா,ராமதாஸ் போன்ற‌வர்கள் ஈழம் தொடர்பான போராட்டங்களில் தமிழின விரோத‌ பார்ப்பன பயங்கரவாத கட்சியான பா.ஜ.க வையும் கூட்டமைப்பில்‌ வைத்துக்கொண்டு மக்களை ஏய்க்கிறார்கள். இதன் மூலம் பா.ஜ.க என்கிற பார்ப்பன கும்பலின் கட்சியும் ஈழப்பிரச்சனைக்காக போராடுவதை போன்ற ஒரு பொய் தோற்றத்தை இவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள்.எனவே எமது ஈழச்சொந்தங்களே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் வாயிலிருந்து ஈழம் என்கிற வார்த்தை வருமானால் அது ஈழத்தை விழுங்கி ஜீரனிப்பதற்கே அன்றி காப்பதற்காக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள், அந்த கொலைகார‌ கும்பலை நம்பாதீர்கள்.
  விரைவில் இது தொடர்பாக ஒரு பதிவிடவுள்ளேன்.

 6. இன்றைய ஈழத்தமிழர்கள் வாழ்வா சாவா என்ற பரிதாபமான நிலையில் உள்ளபோது, பல்வேறு காரணங்களால் இந்தியாவின் கருணைப்பார்வை கிட்டாத நிலையில், சுயநல தமிழக அரசியல்வாதிகளின் போலித்தனமான வெற்று அறிக்கைகள் மட்டும் எந்த பலனையும் தரப்போவதில்லை. அதே நேரம் தமிழக பொதுமக்கள் தங்கள் மனதுக்குள் குமைந்து ஆற்றாமையோடு கையறு நிலையில் உள்ளனர்.

  ஏதாவது செய்யணும் பாஸ்…

  அறவழியில் அண்ணல் காந்திய வழியில் நாம் போராடலாம். உண்ணாநோன்பு, ஊர்வலம், கடையடைப்பு, தீக்குளிப்பு இதெல்லாம் வேண்டாம்.

  அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு என்கிற வழிதான் நமது போராட்ட ஆயுதமாக இருக்க வேண்டும்.

  இலங்கையில் தமது கிளைகளை கொண்ட இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை, சேவைகளை தமிழக மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும். இலங்கை நிறுவனத் தயாரிப்புகளை தமிழர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

  நுகர்வுக்கலாச்சாரம் ஆணிவேராகக் கொண்டே இன்றைய உலகம் அனைத்து நிலைகளையும் எடுக்கின்றது. இதுதான் இலங்கையை பணிய வைக்கும். இந்தியாவின் அதிகாரமிக்க பணமுதலைகளின் நிறுவனங்கள் இந்திய அரசுக்கு நெருக்கடி தந்து நல்ல முடிவை எடுக்க வைக்கும்.

  குறந்தபட்சம் ஈழத்தில் தமிழர்கள் உயிரோடு வாழ வழி வகுக்கும்.
  27.

 7. அதிமுக ஏன் திமுகவில் இணைய வேண்டும் இரண்டு கட்சிக்கும் என்ன வித்தியாசம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. படம் நன்றாக இருந்த்து!

 8. அவனவன் கெடச்சுது சான்சுன்னு கலைஞர போட்டு கிழச்சானுங்க ஆனா எவனும் இந்த ம்மமி கண்டுகல்ல நீங்களும் என்னடா இந்த அம்மாவ விட்டுடீங்களேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன், வச்சீங்கில்ல ஆப்பு. நண்பா ரவி உன் கையில் உள்ள திறமையை காசுக்கு விக்காமல் மக்கள் விழிப்படைய செய்யுற பாரு. யூ ஆர் கிரேட். ரியலி கிரேட்

 9. நல்ல கார்ட்டூன்… அதில் வரும் கமெண்டு கொஞ்சம் ஷார்ப்பாய் – கிண்டலாய் இருந்தால் இன்னும் கூட அருமையாய் இருக்கும்..

  வாழ்த்துக்கள்

 10. இந்திய தொழிலதிபர் மகிந்தவின் ஆலோசகர் ஆகின்றார்: தொழில்நுட்ப வட்டாரங்களில் பேரதிர்ச்சி அலை
  [ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009, 07:46 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]
  இந்திய தொழிலதிபரான என்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச் செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது.
  இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய “இன்ஃபோசிஸ்” நிறுவனத்தின் தலைவர் என்.ஆர்.நாரயணமூர்த்தி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயற்படுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

  நாராயணமூர்த்தி உருவாக்கிய “இன்ஃபோசிஸ்” நிறுவனம் இன்று அனைத்துலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும், தொடர்ந்தும் இயக்குநர் குழுவில் ஒருவராக அவர் விளங்குகின்றார்

  கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு நாராயணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் நாராயணமூர்த்தியின் ஒத்துழைப்பைப் பெற்று முன்னேற சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது என அறிவித்தார்.

  “இது விவகாரமான நிறுவனப் பங்களிப்புக்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், சிறிலங்கா அரசு – “இன்ஃபோசிஸ்” நிறுவன வர்த்தக உடன்படிக்கையே” இது என கொழும்பு ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

  தமிழினப் படுகொலைப் போரின் அதிகரித்த செலவீனம் மற்றும் தவறான கையாடல்கள் காரணமாக சிறிலங்கா அந்நிய செலவாணி பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் வேளையில் – இவ்வாறாக மனித நேயங்களை புறக்கணித்து, இந்திய தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் சிறிலங்காவில் முதலீடு செய்து வருவது விசனத்திற்குரியது என தமிழக தொழில்நுட்பவியல் வட்டாரங்களைச் சேர்ந்த ஒருவர் புதினத்தின் சென்னை செய்தியாளரிடம் சுட்டிக்காட்டினார்.

  முக்கியமாக, பொதுமக்களை பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனமாகிய “இன்ஃபோசிஸ்” (நியூயோர்க் பங்கு சந்தை குறியீடு INFY) அதன் இயக்குனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியுடன் கூட்டிணைந்து, தமிழின அழிப்பில் ஈடுபடும் சிறிலங்கா அரசுடன் கை கோர்த்து நிற்பதனை உலகு எங்கும் வாழும் பங்குதாரர்கள் நல்ல விதமாகப் பார்க்கமாட்டார்கள் என வர்த்தக-நிதித்துறை வட்டாரங்கள் சில கருத்து வெளியிட்டன.

  இது தொடர்பாக “புதினம்” செய்தியாளரிடம் நியூயோர்க்கில் கருத்து வெளியிட்ட அரசியல் அவதானி ஒருவர், சூடான் இனப்படுகொலை விவகாரத்தை சுட்டிக்காட்டினார்.

  சூடான், டாஃபூர் இனப் படுகொலையினை, கனடா, கல்கரியில் உள்ள பங்குதாரர்களைக்கொண்ட கனடிய நிறுவனமாகிய “ரலிஸ்மன் எனெர்ஜி”யின் (Talisman Energy: NYSE TLM) முதலீடுகள் ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி – கனடாவிலும், உலகு எங்கும் இருக்கும் அதன் பங்குதாரர்கள் தொடர் எதிர்ப்பு காட்டியதால், அந்த நிறுவனம் சூடானில் இருந்து சில வருடங்களுக்கு முன்பாக விலகிக்கொள்ள நேர்ந்தது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.

  “இன்ஃபோசிஸ்” நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்படுள்ள அதன் கோட்பாடுகளுக்கு அமைய நடப்பதாயின், மகிந்த ராஜபக்ச போன்றவர்களின் அரசுடன் நாரயணமூர்த்தி எந்தவொரு தொடர்பினையும் கொண்டிருக்கக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

  “தமிழினப் படுகொலை புரியும் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை நாரயணமூர்த்தி நிராகரிக்க வேண்டும்” எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

  Puthinam.com

 11. Karunanithi’s role in Elam Tamils issue is well understood that his agitations are mere eye wash aiming at to deceive the world Tamil community. The symbolic protests of DMK would serve no purpose other than to show an account of its long back and continuous involvement in Elam cause. Our modern day Aleannder Pope -a political satirist[Thanks :Times of India] should understand one thing. It is disgusting to see congress men accompaniyig DMK cadres in the rally. If it continues so the DMK can’t avoid the danger of Karunanithi being equated with the ‘sacrifice’ of murderous Rajiv Gandhi.
  Vaiko, the former and possible future agent of RSS is playing spoilsport in ‘Elam Tamil cause’ by inviting BJP men to the meetings of ‘Srilanka Tamils’ Protection Movement.’ The student community which espouses to the cause of Elam struggle after getting inspired by the martyrdom of Muthukumaran should realise the treacherous web of Vaiko who actually helps to lodge the poisonous fangs of saffron snake in the new stream of blood.

 12. மக்களே, தமிழக உறவுகளே, உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒரு குழந்தையின் பிறப்பு எவ்வளவு வேதனையுடன் வந்தாலும் அது பிறந்தபின்னர் குடும்பத்தில் அமைதியும் சந்தோசமும் நிலவும், அதே இங்கு கலைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது… அது மட்டுமல்ல 150 க்கும் மேற்பட்ட பெண்கள் சிங்கள இராணுவச்சிப்பாய்களால் கைதுசெய்யப்பட்டு பலவந்தமாக தமது காம வெறியினைத்தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்துகின்றார்கள்… ஐ.நா அனுப்பிய அமைதிப்படையிலேயே தம் காம வெறியைக்காட்டி அவமானத்தினை வாங்கிக்கட்டிய தெருநாய்களே, எம் கற்பைக்காக்கும் பெண்களை மானபங்கப் படுத்துவதை இனியும் புலம்பெயர் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா??? பெண் என்றால் தெய்வமென்று மதிக்கும் எம் நாட்டில் கேவலப்படுத்தப்படுவதனை இனியும் பார்க்க முடியாது, சர்வதேசம் என்ன சர்வதேசம்? ஐ.நா என்ன ஐ.நா, களமாடப்புலிகளிருக்கின்றார்கள். அவர்களுக்கு பலமாக தமிழர்கள் இருக்கின்றார்கள்.. இலங்கையில் எத்தனை சிங்களவன் இருக்கின்றான்? உலகம் பூராவும் எத்தனை தமிழன் இருக்கின்றான்?? கொலைவெறியோடு அலைபவனை அடக்கவேண்டுமானால் நாம் அணியாகத்திரண்டு போராடினால் போதும்… இந்தியாவிலிருந்து அணியாக முல்லைத்தீவு நோக்கி படையெடுப்போம், தோளோடு தோள் கொடுப்போம், தமிழ்நாட்டுக்காவற்துறையினரும் தமிழர்கள் தானே??? அவர்களுக்கு மட்டும் என்ன தமிழ் உணர்ச்சிகள் இல்லையா??? சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள் அது தப்பே அல்ல, ஆனாலும் மத்திய அரசினால் மதிக்கப்படாத அதே காவற்துறை உத்தியோகத்தர்கள் இனியும் மத்திய அரசிற்கு வாலாட்டுவார்கள் என எண்ணவில்லை, சுயமானமுள்ள ஒவ்வொரு தமிழக காவற்துறையினரும் மத்திய அரசிற்கு தந்தி அனுப்பினாலே போதும், பெயர் விபரங்கள் தேவையில்லை, அனுப்புங்கள், நாம் எம் உறவுகள் இலங்கையில் அழிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதராவாக குரல் கொடுப்பவர்களை கைது செய்யவோ, விசாரணைக்குட்படுத்தவோ மனது இடம் கொடுக்கின்றதில்லை, ஆதாலால் இனி நான் தமிழகத்தில் ஒரு தமிழன் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பானானால் நான் கைதுசெய்யவோ அல்லது அவனைத் தொடவோ தாக்குதல் நடாத்தவோ மாட்டேன் என திட்ட வட்டமாக கூறுங்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும் உணர்ச்சிகள் புரிந்துகொள்ளக் கூடியவை, சட்டம் நீதி நியாயம் பார்த்து அங்கே கொலைகள் நடக்கவில்லை, இனவெறிப்போர், ஒருமித்து அனைவரும் சொல்லும்போது மத்திய அரசு என்ன செய்யப்போகின்றது?? தமிழரை ஆள வடக்கிலிருந்து அடக்குமுறையைப் பிரயோகிக்கப்போகின்றதா??? அதையும் பார்க்து கைகட்டி இருக்க வேண்டுமா??? ஒவ்வொரு மானமுள்ள காவற்துறை அதிகாரி மட்டுமல்ல அனைத்து அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் மத்திய அரசிற்கு தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துங்கள், கொந்தளிக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல தமிழீழத்திலும் ஓர் அமைதி நிலவ உங்கள் ஒவ்வொருவராலும் ஆனதை செய்வீர்கள் என கைகளை உயர்க்தி ஆதரவுக்கரம் நீட்டுகின்றேன், இலங்கைத் தமிழர்கள் முற்றாக அழிக்கப்பட முன்னர் நாம் விழித்தெழவேண்டும், இலங்கை முடிந்ததும் அதே காங்கிரஸ் அதே மகிந்தவைப் பாவித்து தமிழ்நாட்டுத்தமிழரை ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் என்பது உண்மை, நடக்கும் காலம் தொலைவில் இல்லை. உதவிக்கான பிரதியுபகாரமாக அழிவு… மொத்ததில் அழியப்போவது தமிழினம்… கண்களை இனியாவது திறவுங்கள்….

 13. India is becoming like America.
  It’s involvement in srilanka’s war is shocking lot of people.whereas europe shows the kinder face of capitalism,america has been showing the ugly face of capitalism,america is paying the price of uncontrolled capitalism and probanly there might be some change in it’s attitude in the future,lets hope it.
  But India is becoming more capitalist than America and more brutal in it’s attitude and policies.
  india’s indifference towards eelam tamil’s suffering and the way indian multinational companies are developing cosy relationship with sinhala government shows a very disturbing picture.

  There was an article published in a south african paper which condemns the role of India in Srilanka’s war against Tamils.
  India in duplicitous, murderous collaboration with genocidal regime – SA Post
  [TamilNet, Sunday, 15 February 2009, 15:00 GMT]
  Noting that the “shelling of safe areas, the genocide massacre of the elderly, innocent women, and children,” are war crimes “on a par with the worst of Nazism,” an article in South Africa’s popular daily, The Post, accuses India that it “has revealed a duplicitous and murderous collaboration with the genocidal regime in power in Colombo. Not only deaf to the pleas and cries of its own Tamil population to intervene in this murderous onslaught, it actively assists the regime in the supply of military hardware, the training of strike-aircraft pilots, the supply of military expertise, and the provision of military advisors on the ground.”

  Full text of the article follows:

  Disunited in Diversity

  Disunited in Diversity: The Post, South Africa
  Recently, there was much fanfare over the Republic Day celebrations of India and reports and protests on the ongoing atrocities in Sri Lanka. Writers sang the praises of India, referred to Gandhi, and with the pride to India becoming a super power.

  Modern India is really a hotch-potch of different kingdoms, principalities, princely states, often with very little in common. Like Sri Lanka, the British welded these disparate entities into one state under one flag. In keeping with the dream of being superpower, India is now quickly learning how to throw its weight around and support a genocidal cause that flies in the face of its stated claim to human rights, its pioneering of non-violence; in short its boast of unity in diversity is little more than just that.

  In the Sri Lankan genocide currently underway, India has revealed a duplicitous and murderous collaboration with the genocidal regime in power in Colombo. Not only deaf to the pleas and cries of its own Tamil population to intervene in this murderous onslaught, it actively assists the regime in the supply of military hardware, the training of strike-aircraft pilots, the supply of military expertise, and the provision of military advisors on the ground. With an almost unprecedented black out of news by Colombo, and a rather surprisingly tolerant acceptance of this restriction by international media, it would come as no surprise if India’s role is discovered to be more than what has been outlined.

  The close cultural and ancestral heritage shared by the Sri Lankan Tamils with the Tamil population of India is of no consequence to India. In fact, it appears as if the Indian government is encouraging Colombo to wipe out the Tamils; media reports indicate that aid has been promised by this budding superpower to Sri Lanka to rebuild the North the dust has been settled (read after its devastation), and, by implication, the wiping out of Tamils.

  Recently, the Foreign Affairs Minister, one Mr Pranab Muckerjhee, on an unscheduled visit to Colombo, stated with much aplomb that a military victory should precede a political solution. His visit appeared designed to reassure Colombo that it could do as it pleased, and came immediately after widespread protests in Tamil Nadu, and pressure on New Delhi. Perhaps, he was reaffirming Delhi’s ethnic alliance with the Sinhalese and Delhi’s contempt for Tamils. Incidentally, the Sri Lankans, who follow a perverted form of Buddhism, are reported to regard the Tamils, original inhabitants of India, as sub-humans.

  Sadly, though, a country forever boasting it gave the world Gandhi, bears little resemblance in its deeds to the vision of the great humanist. This modern India is intent on playing a dangerous in the South, and, by its alliance with murderous regime in Colombo, might come to rue its role in the ethnic cleaning. Perhaps India, following a certain other superpower in whose camp (and clutches) it is now firmly in, has adopted that declining super power’s overriding motto: might is right.

  The shelling of safe areas, the genocide massacre of the elderly, innocent women, and children, then wanton murder of Tamil youths simply because they are Tamils, is akin to war crimes on a par with the worst of Nazism, and perhaps, when these atrocities are ended, a more just world will bring to book all responsible for ethnic cleansing, as well as others, including India, who have overtly and/or covertly supported this annihilation of the Tamil people.

  Therefore, the celebrations are somewhat out of place – India is a house divided!!!!

  Author, Abbey Naidoo is a Durban-based attorney

 14. ஈழத்தில் அழுகையொலி கலைஞரின் சிரிப்பொலி

  ஈழ்த்தின் எல்லா தமிழ்ர்களும் விரைவில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படும். இன்னும் சில வாரங்களுக்கு பிறகு ஈழ்த்தில் தமிழர் மீதான போர் முடிந்துவிடும் ஒருவரும் மீதம் இல்லாததால். நாம் எல்லோரும் கலைகரின் சிரிப்பொலி தொலைக்காட்சி கண்டு மகிழ்வோடு இருப்போம்.

 15. “அம்மா”வை எவ‌னும் க‌ண்டுகொள்ள‌வில்லை என்று அர்த்த‌ம். உளிப‌டவும் த‌யாராக‌ க‌லைஞ‌ர் இருப்ப‌தால்தான் விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் ஏற்றுக்கொள்கிறார். அம்மாவை ம‌க்க‌ள் திட்டாத‌த‌ற்குக் கார‌ண‌ம் ஜெயாவை த‌ன்னின‌த்தைச் சார்ந்த‌வ‌ராக‌வே எவ‌னும் ம‌திக்க‌வில்லையென்ப‌தால்தான். வ‌ருகிற‌ தேர்த‌லில் வ‌ர‌லாறு காணாத‌ அள‌வில் கேவ‌ல‌மான‌ ஓட்டு விழ‌ப்போகிற‌து என்ப‌து இப்பொழுதே தெரிந்துவிட்ட‌து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க