Tuesday, October 15, 2024
முகப்புஉலகம்ஈழம்நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!

நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!

-

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் பேயாட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா எனும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேசமயம் வழக்குரைஞர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கூறியிருந்தது.ஆனால் உயர்நீதிமன்றங்களின் எல்லா வழக்கறிஞர் சங்கங்களும் தடியடிக்கு காரணமான போலீசு அதிகாரிகளை வேலைநீக்கம் செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வாதக உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். அந்த உண்ணாவிரதத்தில் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். மேலும் தமிழகம் தழுவிய அளவில் வழக்குறைஞர் போரட்டமும் தொடர்கிறது. ஈழத்திற்காகவும், சு.சாமியைக் கண்டித்தும், போலீசின் தாக்குதலை எதிர்த்தும் இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன.

படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

chennai-police-lawer

 

  1. சென்னையில் போலீசார் குடும்பத்தினர் உண்ணாவிரதம்

    கடந்த 19ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் மோதல் நடந்தது.

    இதனால் ஐகோர்ட்டில் அத்துமீறிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மோதலின் போது ஐகோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி போலீசார் குடும்பத்தினர் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர்.

  2. நல்லாத்தான் படங்காட்றீங்க.

    இருந்தாலும் போலீஸ் தாக்கும் படங்களே இருக்கின்றன. வக்கீல்கள் போலீசை தாக்கியதாக சொல்லும் படங்கள் இல்லையா?

  3. vazhakkarigarkal meethana kodura thakkuthal vendumanal avargalukku puthiya visayamaga irukkalam thozhargale! Aanal kadantha kalangalil vivasayigal, nesavalargal, manavargal, meenavargal, kan parvaiyatra ilaingnargal, koole uyayrvu kettu poradum thozhilalargal, kudi thanneer kettu poradiyatharkaga mandai udaikka patta appavi nadutthara, eazhi makkal,sattam anumathikkum urimai kettu poradiya arasu oozhiya, aasiriyargal… enru neelum “rattha kavicchi” adikkum intha pattiyalil puthitahga inaikka pattirukkum oru ‘vargam’ than vazhakkuaraingargal enpatahai nam purinthu kollavendum. Oru vargam enra muraiyil vazhakkaringarkal ithai theliva purinthu kondu paranthu patta perumpanmai uzhaikkum makkal porattangalil thannai mun mathiriyaga inaitthukondu poradinal mattume veripiditthu alaiyum police rowdigalin kottathai sattapoorvamagavum, ‘athai thandiyum’ adkka mudiyum!

  4. இப்ப இலங்கைப் பிரச்சினை காணாமப் போச்சி. போலிப் புரட்சியாளர்களான வக்கீல்கள் தங்களோட சொந்தப் பிரச்சினைக்குப் போயிட்டாங்க. காவல் துறையுடனான் தங்கள் வன்மத்தைத் தீர்த்துக்கறாங்க. நல்லா பண்றாங்கய்யா புரட்சி.

  5. ராஜபக்க்ஷே போய் ராதாகிருஷ்ணன் வந்தாச்சி டும் டும் டும். இலங்கை இனவாத அரசு காணாமப் போய் தமிழக காவல் துறை வந்தாச்சி டும் டும் டும்.

  6. tamizachi, மேல் மார்ச் 2nd, 2009 இல் 16:54 சொன்னார்
    நல்லாத்தான் படங்காட்றீங்க.

    இருந்தாலும் போலீஸ் தாக்கும் படங்களே இருக்கின்றன. வக்கீல்கள் போலீசை தாக்கியதாக சொல்லும் படங்கள் இல்லையா?
    ———————————————————

    ஆயுதபாணிகள் தாக்குவதைத் தானே படம் பிடிக்கலாம். நிராயுதபாணிகள் எப்படி தாக்குவார்கள்? அதை எப்படி படம் பிடிப்பது? குழப்பாதீர்கள்.

  7. தோழர் ரதி, நான் தோழர் தமிழச்சி குழப்புவதாக கருதவில்லை, இன்று அனைத்து ஊடகங்களும் வழக்குறைஞர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன, அந்த செய்திகளின்பாதிப்புதான் இந்த கேள்வி.

  8. புரட்சி நாயகன் ஜேகே ரித்தீஷுக்கு வணக்கம்,
    உனக்கெல்லாம் பதில் எழுத கைகூசுது, என்ன செய்வது உன்னை ஒரு நாய் கூட சீண்டாது என்ற துணிவில் நீ பின்னூட்டமிடுகிறாய், உண்னை மலக்காகிதம் போல மற்றவர்கள் ‘மதித்து’ பதிலளிக்காமல் போகிறார்கள், என்னால் அப்படி முடியவில்லை, மலம்தான் என்றாலும் அது இருக்கவேண்டியது நடுக்கூடம் அல்லவே.

    இன்று தமிழ்நாட்டில் ஈழத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட அரசாங்க பிரிவு வழக்குறைஞர்கள், அவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்த போலீசு நடத்திய வேட்டைக்கு பின்னரும் வீரத்தோடு களத்தில் நிற்கும் அவர்கள் உண்மையிலேயே நாயகர்கள். போலீசுக்கு எதிரான அவர்களின் இந்த நடவடிக்கை ஈழப் பிரச்சனைக்கு மேலும் உரமூட்டக்கூடியதே, அது அவர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் புரட்சிகர சக்திகளுக்கும் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடியது என்பதை நீ உணர்ந்த்தன் விளைவாக ஏற்பட்ட அஜீரணம் எனும் வயிற்றெறிச்சலின் காரணமாகத்தான் ஏதோ போலீசுக்கும் வக்கீலுக்கும் பங்காளி சண்டை என நீ இங்கே வந்து வாந்தியெடுக்கிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் என்ன செய்ய உன்னுடைய அஜீரனத்துக்கு மூளையில் அல்லவா அறுவை சிகிச்சை செய்யவேண்டும்…உனக்குத்தான் மூளையே இல்லையே 🙁

  9. //ஆயுதபாணிகள் தாக்குவதைத் தானே படம் பிடிக்கலாம். நிராயுதபாணிகள் எப்படி தாக்குவார்கள்? அதை எப்படி படம் பிடிப்பது? குழப்பாதீர்கள்.//

    ரதி நான் எங்கே குழப்புகிறேன். வக்கீல்களுக்கு எதிராக போலீஸ் அப்படித்தான் கம்ப்ளைண்ட் செய்திருக்கு.

  10. //தோழர் ரதி, நான் தோழர் தமிழச்சி குழப்புவதாக கருதவில்லை, இன்று அனைத்து ஊடகங்களும் வழக்குறைஞர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன, அந்த செய்திகளின்பாதிப்புதான் இந்த கேள்வி.//

    தோழர் மா.சே நான் குழப்பத்தில் கேள்விகளை எழுப்பவில்லை. உண்மை நிலை தெரியும். பத்திரிக்கைகளில் இரட்டடிப்பு செய்து செய்தி போட வைத்த கதையும் தெரியும். நான் அப்படி சொன்னதற்கு “உள்குத்து” என்று சொல்வார்கள்.

  11. ஈழப் பிரச்சினையை ஓட்டரசியலாக மாற்றும் இயக்கம் குறித்த பதிவு. ஈழப் பிரச்சினை குறித்த இது போன்ற கருத்துக்களுக்கு வினவுவின் பதில் தேவைப்படுகிறது.

    http://changefortn.blogspot.com/2009/03/blog-post.html

    http://changefortn.blogspot.com/2009/03/election-boycott-political-change.html

  12. _மா.சே_ ம‌ற்றும் தழிழச்சி அவர்களே, இந்த வழக்குரைஞர்கள், காவல்துறையினர் மோதலில் வழக்குரைஞர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதில் உங்களுக்கும் எனக்கும் மாற்று கருத்து கிடையாது என்று நம்புகிறேன். தமிழச்சி குறிப்பிட்டது போல் “உள்குத்து” என்கின்ற தொனியில் தான் நானும் என் கருத்தை பதிவு செய்தேன். நிராயுதபாணிகளான வழகுரைஞர்கள் காவல்துறையினரை தாக்கினார்கள் என்பது தர்க்க ரீதியாகவேனும் ஒப்புக்கொள்ள கடினமாக உள்ள ஒரு விடயம்.

    இது தவிர, இவ்வறான ச‌ம்பங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஓரிரு நாட்கள் பாதிக்கப்படுவதால், அவர்கள் ஊடகங்கள், அதிகாரம் உள்ளவர்கள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்கள் வழக்குரைஞர்களுக்கு எதிராக புனையும் பொய்களை நம்பக்கூடும் என நினைக்கிறேன். ஏற்கனவே ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுகோரி நடக்கும் போராட்டங்களால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதாக ஒரு சாரார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இவற்றின் எதிரொலி தான் ஊடகங்கள் புனையும் பொய்களுக்கு வரும் ஆதரவான கருத்துக்கள். இதில் உண்மை எங்கோ தொலைவில் தொலைந்து போய்விடும் போலுள்ள‌து.

  13. //இந்த நடவடிக்கை ஈழப் பிரச்சனைக்கு மேலும் உரமூட்டக்கூடியதே, அது அவர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் புரட்சிகர சக்திகளுக்கும் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடியது //

    பகல் கனவு கேள்வி பட்டிருக்கீறா அது இதுதான். இந்த வினவு-மகஇக போலி நக்சலிசவாதிகள் பல இடங்களிலும் அலைந்து திரிந்தாலும் ஒன்றையும் கழட்ட முடியாமல் போனதால் ஈழப் பிரச்சனை – சு.சாமி-வக்கீல்-காவலர் சண்டை என இவைகளை வைத்து குளிர் காயலாம் என கணா கண்டு கொண்டுள்ளனர். என்னமோ இவர்களது போலி நக்சலிச புரட்சி அரசியலுக்கு பின்னால் எல்லா வக்கீலும் அணிதிரண்டு விட்டதுபோல ஒரே கமெடி பண்றாங்கப்ப. நேத்து நடத்துன மகஇக பாதுகாப்பு மையக்கூட்டத்துலக்கூட வெறும் 25 வக்கீல்கள்தான் கலந்து கொண்டனர். இதுல 20 பேர் பார்வையாளர்கள். அடங்கப்பபா மகஇக எப்படியாவது ஐடி மக்களை வலை வீச வினவு ஆரம்பித்து தாங்கள் நக்சலைட் கொள்கை பிடிப்புள்ளவர்கள் என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ளாமல் ஜனநாயக வேடமிட்டு இன்னானோமோ பேசியும் ஒன்றும் எடுபடல இப்ப என்னடான்னா கெடச்சத புடிச்சிக்கோ என்றபடி வக்கீல்களை பிடித்து தொங்க ஆரம்பித்துவிட்டனர் நீலச்சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது கடைய காலி பண்ணிட்டு – தேர்தல் புறக்கணிப்பு அது இதுன்னு ஏதாவது உளறுங்க புரட்சியாளர்களே. அப்படி எதுவும் இல்லண்ணா உங்களது நெருக்கிய கூட்டாளி இல. கணேசனை வைத்து ஏதாவது கூட்டு இயக்கம் நடத்துங்க.

  14. மாயவரத்தான் ! பதிவுக்கு சம்பந்தமில்லாமல் தாங்கள் வினவை திட்டுவதற்க்காகவே பின்னூட்டமிட்டுள்ளீர்கள். அதென்ன போலி நக்சல்வாதி? தாங்கல் அக்மார்க் ஒரிஜின்ல் நக்சல்வாதியா? தாங்கள் யார் என்பது தெளிவாக தெரிகிறது . ரமேஸ்பாபு (எ) போலி விடுதலை (எ) இளஞர் முழக்கம் (எ) சிபிஎம்காரன்.

    மேலே புரட்சி நாயகன் என்றா பெயரில் வாந்திருப்பதும் ரமேஸ்பாபு தான்

    ரமேஸ்பாபு பின்னூட்டம் என்ற பெயரில் வாந்தி எடுக்காதீர்.

  15. சீ.பீ.எம் – சந்திப்பு- செல்வபெருமாள் – ரமேஷ் பாபு – உவ்வே விடுதலை !
    ஏற்கனவே மாயவரத்தான் என்ற பெயரில் பதிவர் இருப்பதால் நீங்கள் செய்வது ஆள்மாறாட்ட வேலை. சரி உங்கள் புலம்பலுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மற்றபடி மக இகவும் வினவும் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றது. ஜெயலலிதாவிடம் பச்சை சட்டையனிந்து பிச்சையெடுக்கப்போன சி.பி.எம் கட்சியைத்தான் தமிழக மக்கள் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள். நான் குறிப்பிட்ட உங்கள் வயிற்றெறிச்சலையும், மூளையின்மையையும் நீங்களே மீண்டும் மீண்டும் நிரூபித்தது கொண்டிருப்பதற்கு நன்றி.

    பின் குறிப்பு ; புரட்சி நாயகன் ஜேகே ரித்தீஷ் / தாம்பிராஸ் இரண்டுமே உங்களுக்கு ரொம்ப பொருத்தமான பெயர்.

    எச்சரிக்கை 1: தினமும் காலையில் வினவு படித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு கொஞ்சமேனும் சூடும் சுரணையும் வந்துவிடும் பிறகு உங்களுக்கு சிபிஎம் கட்சியில் சீட்டு கிழிந்து பிளாக் எழுத பணம் கிடைக்காமல் சோத்துக்கு லாட்டரியடிக்க வேண்டியிருக்கும்.

    எச்சரிக்கை 2 : இல்லை சுரணையெல்லாம் வராது என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால் நிச்சயம் வயிற்றெறிச்சலும், உயர் ரத்த அழுத்தமும் ஏற்பட்டு , ஏதும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனச்சோர்வு அடைந்து , அதுவே மன பிறழ்வுக்கு காரணமாக அமையும். விளைவாக உலகில் மிக கேவலமான வேலையான சீபிஎம் கட்சியின் பொலிட் பீரோ மெம்பர்ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிடும்.

    ஏதோ நல்லென்னத்தில் சொல்கிறேன், அப்புறம் உங்கள் இஷ்டம்.

  16. என்ன மா.சே தோழர்

    “உள்குத்து”க்கு சிரிப்பான் போட்டிருக்கிறீர்கள்? சாதாரண உள்குத்து இல்ல. “இணைய உள்குத்து.”

    உங்களுக்கு “நக்கல்” நல்லா வருது!

  17. தாய் தமிழக உறவுகளே,

    கொதித்தெழுந்த தமிழகத்தை சுப்ரமணிய சுவாமி எனும் பார்ப்பான் எப்படி திசை திருப்பினான் என்று பாருங்கள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தமிழனை ஏமாளியாக்கி, பொன்சேகா போல் ஆரிய வெறியர்களுக்கு தமிழனை கோமாளியாக்கிய கொழுப்பெடுத்த பரப்பான தந்திரம் உங்களுடனே உங்களை மோத வைப்பது.

    விழிப்பாயிருங்கள். உங்களை மோத வைக்கும் அதே இடைவெளியில், ஈழத்தில் முழுத்தமிழனையுமே கொல்ல சுப்ரமணிய சாமி திட்டம் போட்டு கொடுத்திருப்பான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க