வழக்குரைஞர் நண்பா !
கெட்ட வார்த்தைகளின் மீதேறி
கல்லால் அடித்தார் கமிஷனர்
சட்டசபைலிருந்தபடி
சொல்லால் அடிக்கிறார் நிதியமைச்சர்.
இந்நாட்டு தொழிற்பேட்டைகளை இழுத்து மூடிவிட்டு
பன்னாட்டு கம்பெனிகளுக்கு பரிசம் போடும்
இந்த அரசியல் புரோக்கர்
போராடும் வக்கீல்களைப் புரோக்கர் என்கிறார்.
எந்தக் கல்லூரியில் இவர் பேராசிரியர் என்று
சட்டசபையில் ஜெயலலிதா காலால் சிரித்த போது
ஐம்பொறிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.சீல் வைத்தபடி
அடங்கிக் கிடந்தார்…. அக்காலம்.
இப்போது வழக்கறிஞர்களை ‘அவன், இவன்’ என்றபடி
அன்பழகனார்க்கு ….. என்ன ஒரு எக்காளம்?!
பார்ப்பனப் புரோக்கர் சுப்ரமணிய சுவாமிக்காகப்
படை நடத்தும் ‘இனமான’ திராவிட புரோக்கரின்
வரலாறு தெரியாதா நமக்கு.
அண்ணா சாலையில் ஒரு ரூபாய் கிடந்தால்
முக்கால் ரூபாய் கலைஞருக்கு
கால் ரூபாய் தனக்கென காலந்தள்ளும் முதலியார்வாளுக்கு
வழக்குறைஞர் போராட்டம் அபச்சாரம்! அபச்சாரம்!!
கருணாநிதியை போலீசு கையைப் பிடித்து இழுத்தபோது
“அய்யோ கொல்றாங்கப்பா, அய்யோ கொல்றாங்கப்பா” என்று
அப்போது மட்டும் எதற்குப் பிரச்சாரம்?
பார்ப்பான் கொலையே செய்தாலும்
அவனுக்கு மயிர்தான் போகும்
பார்ப்பானுக்கு ஒரு ஊறு விளைவித்தால்
உனக்கு உயிர் போகும் – இதுதான் மனுநீதி.
இதை நீதிமன்ற வாசலிலேயே
நிகழ்த்திக் காட்டிவிட்டார் கருணாநிதி
இதுதான் தமிழினத் தலைவரின் சமூகநீதி
வழக்குறை நண்பா! புரிந்து கொள் !
அரசு என்பது
ஆளும் வர்க்கத்தின் குண்டாந்தடி என்று
அன்றைக்கே லெனின் எச்சரித்தார்.
இன்னும் அது புரியாதவர்களுக்கு
மாண்புறு நீதியரசர் மண்டைக்கும் உரைக்கும்படி
இரத்தத்தால் எழுதிக்காட்டிவிட்டது போலீசின் லத்திக்கம்பு.
மாணவர்களைக் கடித்து… மகளிரைக் கடித்து…
தொழிலாளர்களைக் கடித்து… விவசாயிகளைக் கடித்து…
போராடியவர்களையெல்லாம் …கடித்துக் குதறிய
போலீசிடமே சட்டமா?
நாங்கள் சுவைக்காத ரத்தமா? என
கடைசியில் உயர்நீதிமன்றத்தையே கடிக்கையில்
நீதிதேவனுக்கு மயக்கம்!
அடிக்க அடிக்க போலீசுக்கோ பதக்கம்!
கடிப்பதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட நாய்களுக்கு
நடிப்பதெற்கு?
அடிப்பதை எத்தனை படம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்
எங்களைக் கிழிக்கவா முடியும் உனது சட்டத்தால் – என்று
புகைப்படச்சுருள் திணறும்படி போஸ் கொடுக்கிறான் போலீசு
இனியும் இங்கு இ.பி.கோவை நம்புறவன் லூசு!
உன்னையே காப்பாற்ற முடியாத சட்டத்தால்
உலகத்தைக் காப்பாற்றுவேன் என்று இனியும் சொல்வாயா நீ?
இப்போதாவது விழித்துக் கொள்…
சட்டத்தின் மாட்சி… அவன் தடியடிக்கு தூசி
உனது அரசியல் சட்டம்…போலீசின் பூட்சு மட்டம்.
நான்கு ஜனநாயகத் தூண்களில்
நாமும் ஒருவர் என்ற மாயை, மயக்கத்தை
நெற்றியில் வழிந்த உனது ரத்தம் தெளிவித்து விட்டது
சட்டம், போலீசு, நீதிமன்றம் இவைகள்
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகள் என்பதை
அனுபவத்தில் உணர்ந்த நீங்கள்
மக்களோடு இணைவதே போராட்ட விதி
போலீசோடு இணைவது ஆளும்வர்க்கச் சதி!
ஏடறிந்த காலந்தொட்டு வர்க்கப் போராட்டமே வரலாறு என
வரைந்து காட்டினார் கார்ல் மார்க்ஸ்.
கேசெடுத்த காலந்தொட்டு போலீசுடன் தகராறு என
போராடி, வெகுமக்கள் விரோதிகளை
வென்றவர்கள் நீங்கள் – அதனால்தான்
வாயில்லா நண்பனான உங்கள் வண்டிகள் மீதும்
வன்மத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.
நடந்த சம்பவங்களுக்கு வாதாடுவதே
வழக்குறைஞர் பணி எனும் நிலையை மாற்றி
புதிய சம்பவங்களை நடத்திக்காட்டு!
இனி… ஒடுக்குமுறையாளனோடு ஒன்றுபட முடியாது
உளுத்துப் போன இந்த அதிகாரவர்க்க அமைப்பையே
அடித்து நொறுக்காமல்
நம் உதிரம் காயாது
-துரை. சண்முகம்
ஒவ்வொரு வரியிலும் சிந்தனையை தூண்டி செயலுக்கு கூப்பிடும் கவிதை. வெகு அருமை.
அடப் போங்கய்யா!
வர வர வினவு தளத்தின் தரம் மோசமாகிக் கொண்டே போகிறது. சம்பந்தமே இல்லாமல் எழுதுவது, முரண்பாடுகள் அதிகரித்திரிக்கிறது. இல்லை இப்போதெலாம் ஜூனியர் உறுப்பினர்களை எழுத விடுகிறீர்களா?
இதில் ஒவ்வொரு பதிவுக்கும் ஆகா, அற்புதம், சபாஷ் என்று அதே பத்து பேர் மறுமொழி எழுத வேண்டியது, அதே இரண்டு பேர் எதிர் வினை செய்ய வேண்டியது, உடனே சிபிஎம் நாயே, பார்ப்பன பேயே என்று கருத்து பரிமாற்றங்கள்.
இப்போது கலைஞர் பாணி கவிதைகள் வேறு. இந்த “கவிதையை” எடுத்துக் கொள்வோம். அன்பழகன் வக்கீல்களை சட்ட சபையில் திட்டி விட்டார் போலிருக்கிறது. புரோக்கர் என்று சொல்லிவிட்டாராம். அன்பழகன் சொன்னது தவறு என்று சொல்வதற்கான வாதங்கள்:
1. மல்டிநேஷனல் கம்பெனிகளை வரவேற்கும் புரோக்கர் அன்பழகன்.
2. ஜெயலலிதா நீ எந்த கல்லூரியில் பேராசிரியர் என்று கேட்ட பொது அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
3. அவர் ஒரு முதலியார்
4. லஞ்சம் வாங்குகிறார்.
புரோக்கர் என்றால் என்ன இழிவு என்பதே எனக்கு தெரியவில்லை. இல்லை இப்போதெல்லாம் புரோக்கர் என்றால் “மாமா” வேலை ஒன்றுதானா? சரி என் அறியாமையை விட்டு விடுவோம். அது ஒரு இழி சொல்லாகவே இருந்துவிட்டு போகட்டும். அவர் சொன்னதற்கு எந்த எதிர்வாதமும் இல்லை, அவர் மீது அட்டாக் மட்டுமே இருக்கிறது. அவர் முதலியாராக இருந்தால் எனக்கென்ன, இல்லை அகோரியாக இருந்தால் உமக்கென்ன? ஜெ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் அதற்கு பிறகு அவர் வாயையே திறக்கக் கூடாதா? நீ செய்வது தவறு என்று யாராவது சொன்னால் அது தவறு இல்லை என்று சொல்லுங்கள், நீங்கள் செய்வது சரி என்று காட்டுங்கள், அதை விட்டு விட்டு நீ அன்றைக்கு குளிக்கவில்லை அதனால் நீ நான் செய்வது தவறு என்று சொல்லக் கூடாது என்று சொல்வது மடத்தனமான வாதம்.
சரி புரோக்கர் இழி சொல் என்று வைத்துக் கொள்வோம். அதில் என்ன பார்ப்பன புரோக்கர், சூத்திர புரோக்கர்? போகிற போக்கை பார்த்தால் பார்ப்பன ஃபாஸிஸ்த் முசோலினி என்று எழுதுவீர்கள் போலிருக்கிறது. அப்புறம் பார்ப்பான் கொலையே செய்தாலும் அவனுக்கு மயிர்தான் போகும் என்னும் மனு நீதியை கலைஞர் நீதி மன்ற வாயிலில் நிரைவேற்ரிவிட்டாரா? எப்படி? அப்புறம் இந்த ஜெயேந்திரர் எதற்காக கோர்ட் கேஸ் என்று அலைகிறார்? எந்த கோர்ட்டில் பார்ப்பான் கொலை செய்தால் முடியை வெட்டி விடுங்கள் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள்? கொஞ்சம் சொல்ல முடியுமா? அதுவும் அவாள்-சவால் கவிதை எழுதும் கலைஞரை பார்ப்பன ஆதரவாளர் என்று சொல்லுகிறீர்கள். என்னத்தை சொல்வது?
அப்புறம் இந்த “கவிதை” என்னதான் சொல்ல வருகிறது? வக்கீல்களே, லஞ்சம் வாங்கும் முதலியார் அன்பழகன் உங்களை புரோக்கர் என்று சொல்லிவிட்டார், போலீஸ் உங்களை அடித்து விட்டது, சட்டம் வெறும் பேப்பர்தான், வாருங்கள் நாமும் வன்முறையில் ஈடுபடுவோம், “புரட்சி” செய்வோம். அய்யா, சட்டம் வெறும் பேப்பர் புரட்சி செய்வோம் என்று சொல்லலாம். போலீஸ் அராஜகம் நடக்கிறது புரட்சி செய்வோம் என்று சொல்லலாம். அன்பழகன் உங்களை புரோக்கர் என்று சொல்லிவிட்டார், புரட்சி செய்ய வாருங்கள் என்று அழைப்பது ரொம்ப ஓவராக இல்லையா? கூடிய விரைவில் ஆர்வி இதெல்லாம் ரொம்ப முட்டாள்தனமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார், புரட்சி செய்ய வாருங்கள் என்ற அழைப்பை எதிர்பார்க்கிறேன்.
வக்கீல்கள் எல்லாம் புனிதர்களா? வக்கீல்கள் மேல் ஒரு தவறும் இல்லையா? “தற்செயலாக” முட்டை அடித்து விட்டார்களே? “தள்ளுமுள்ளு” என்று சொல்லி இருந்தீர்களே, அது என்ன? எங்களை கைது செய்வதற்கு முன் சாமியை கைது செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வில்லையா? நாளை உங்கள் லட்சிய ஆட்சியில் என்னை யாராவது கைது செய்ய வந்தால் நான் நிபந்தனை விதிக்க முடியுமா? இல்லை அதை கேட்டு போலீஸ் நடந்து கொள்ளுமா? உன்னத தலைவர்களான ஸ்டாலின், மாவோ ஆட்சியில் தள்ளுமுள்ளு நடந்தால் தள்ளியவர்கள், முள்ளியவர்கள் கதி என்ன ஆயிருக்கும்? என்கேவிடி தலைவரான பெரியாவிடம் நிபந்தனை விதிக்க வாயை திறந்தால் என்ன நடந்திருககும்? முடிந்தால் சொல்லுங்கள். குறைந்த பட்சம் இந்த ஒன்றையாவது வெளிப்படையாக சொல்லுங்கள் – வக்கீல்கள் மேல் ஒரு தவறும் இல்லையா?
என்ன சார்! தடுக்கி விழுந்து விட்டீர்களா! வினவு பக்கம் முகம் தெரிகிறதே!. விழுந்த வலியின் எரிச்சலுடன் பின்னூட்டம் இட்டுவிட்டீர்களோ!
//அன்பழகன் உங்களை புரோக்கர் என்று சொல்லிவிட்டார், புரட்சி செய்ய வாருங்கள் என்று அழைப்பது ரொம்ப ஓவராக இல்லையா? //
ஆர்வி க்கு பார்ப்பன புரோக்கர் என்று படித்தபின்னர் வேறெதுவும் படிக்க பிடிக்காத கோவம் போலிருக்கிறது…
//உன்னையே காப்பாற்ற முடியாத சட்டத்தால்
உலகத்தைக் காப்பாற்றுவேன் என்று இனியும் சொல்வாயா நீ?
இப்போதாவது விழித்துக் கொள்…
சட்டத்தின் மாட்சி… அவன் தடியடிக்கு தூசி
உனது அரசியல் சட்டம்…போலீசின் பூட்சு மட்டம்.//
இதன் அர்த்தம் என்ன என்று புரியவில்லையா?
//சட்டம், போலீசு, நீதிமன்றம் இவைகள்
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகள் என்பதை
அனுபவத்தில் உணர்ந்த நீங்கள்
மக்களோடு இணைவதே போராட்ட விதி
போலீசோடு இணைவது ஆளும்வர்க்கச் சதி!
//
இந்த வரி கண்களில் படவில்லையா
ஏன் இப்படி ஆர்வி…. நீங்களுமா?
நண்பர் ஆர்வி
அமைச்சரின் உரையை தான் புரட்ச்சிக்கான காரணியாக கவிதை முன்வைக்கிறதா? இந்தக்கவிதையின் பொருள் மெய்யாகவே உங்களுக்கு புறியவில்லையா?அல்லது அப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?
தோழமையுடன்
செங்கொடி
//அட போங்கய்யா//
அட போயா! நீ ஒரு திருந்தாத சவுண்டி
//***இந்நாட்டு தொழிற்பேட்டைகளை இழுத்து மூடிவிட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு பரிசம் போடும்***//
தோழர்களே, நீங்க அன்றாடம் பயன்படுத்தற பொருட்கள் இந்திய கம்பனியோடதா, இல்ல வெள்ளக்காரனோடதான்னாவது தெரியுமா?
//***எந்தக் கல்லூரியில் இவர் பேராசிரியர் என்று
சட்டசபையில் ஜெயலலிதா காலால் சிரித்த போது***//
ஜெயலலிதா கம்யூனிஷ்டிகளக்கூட இல்லை, கம்யூனிஷத்தப் பத்தியே கிண்டல் அடிக்கும் போது, நீங்க என்ன புரட்சியா பண்ணுனீங்க? இப்ப கம்யூனிஷமே தோட்டத்து வரிசையில இலல நிக்குது.
//***இரத்தத்தால் எழுதிக்காட்டிவிட்டது போலீசின் லத்திக்கம்பு.***//
வன்முறையை கையில் எடுக்கும் வக்கீல்களிடம் ரோசாப்பூவையா நீட்டிக் கொண்டிருப்பது? லத்திதான் பேசும்!
ஈழத்து இரத்தக் காட்சிகளெல்லாம் தீர்ந்துவிட்டதா? அல்லது வக்கீல்கள் வீசிய முட்டை போரை நிறுத்தி விட்டதா?
நீங்கள் என்ன சொல்லவரே
ஆர்வி: // இந்த “கவிதை” என்னதான் சொல்ல வருகிறது? வக்கீல்களே, லஞ்சம் வாங்கும் முதலியார் அன்பழகன் உங்களை புரோக்கர் என்று சொல்லிவிட்டார், போலீஸ் உங்களை அடித்து விட்டது, சட்டம் வெறும் பேப்பர்தான், வாருங்கள் நாமும் வன்முறையில் ஈடுபடுவோம், “புரட்சி” செய்வோம். //
குமார்: // ஆர்வி க்கு பார்ப்பன புரோக்கர் என்று படித்தபின்னர் வேறெதுவும் படிக்க பிடிக்காத கோவம் போலிருக்கிறது… //
குமார், அது என்ன பார்ப்பன புரோக்கர் என்ற கேள்வியை படித்த பிறகு கோபம் வந்து அதற்கு மேல் என்ன எழுதி இருக்கிறேன் என்று படிக்க வில்லையா?
செங்கொடி: // அமைச்சரின் உரையை தான் புரட்ச்சிக்கான காரணியாக கவிதை முன்வைக்கிறதா? //
அமைச்சரின் உரையை மட்டுமே காரணியாக முன் வைக்கவில்லை. ஆனால் அமைச்சரின் உரையை ஒரு காரணியாக முன் வைக்கவில்லையா?
ஆர்வி: // அதே இரண்டு பேர் எதிர் வினை செய்ய வேண்டியது, உடனே சிபிஎம் நாயே, பார்ப்பன பேயே என்று கருத்து பரிமாற்றங்கள். //
அட போயா! நீ ஒரு திருந்தாத சவுண்டி: // அட போயா! நீ ஒரு திருந்தாத சவுண்டி //
இன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் பெரும்பாலும் வழக்கறிஞர்களே இருப்பதாலும் இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் சு சாமீ வந்து விட்டதால் பார்ப்பன துவேஷம் போலீஸ் எதிர்ப்பு என்று தோழரின் பார்வை ஒரு தலை பட்சமாக மாறிவிட்டதோ என எண்ண வேண்டியுள்ளது. வக்கில்களில் பலர் கட்டைபஞ்சயத்து நடுவர்களாக மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் தரகர்களாக செயல்படுவதை அன்றாடம் பார்க்கிறோம். தயவுசெய்து நடுவு நிலைமை ப்ளீஸ் – சித்ர குப்தன்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கை!
http://kosukumaran.blogspot.com/2009/03/blog-post.html
வினவு உங்கள் விளக்கம் அருமை,
வக்கீல்கள் மட்டும் யோக்கியமா என்ற கருத்து எங்கும் இருக்கிறது, நான் கேட்பதெல்லாம் அவன் அயோக்கியனாக இருக்கிறான் என்பதா போலீசின் ரவுடித்தனத்துக்கு காரணம், வழக்கம் போல ஒரு கல்தானே, எப்போதும் போலீசு சொல்கிற இந்த உளுத்து போன காரணத்தை இன்னுமா நம்புவது, பாம்பாய் ஓட்டலில் தீவிரவாதி இருப்பது தெறிந்தும் படைகள் குவிய சில மணிநேரம் ஆனபோது, இங்குமட்டும் ஒரு கல் வந்த உடன் அத்தனை பேர் வந்த்தெப்படி, இதை ஏன் யவரும் சிந்திப்பதில்லை, போலீசுடன் வக்கீல்கள் வாக்குவாத்தஃதில் ஈடுபட்டபொழுது தள்ளுமுள்ளு நடந்த்து என்பதுதான் உண்மை, தள்ளியது போலீசுதானே தவிர வக்கீல் அல்ல இது அங்கே இருந்த அனைவருக்கும் தெறியும், நீதியரசர் மற்றும் வக்கீல்களுக்கே இந்த கதியென்றால் நாளை சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்று அல்லவா நாம் சிந்திக்க வேண்டும், அப்படியல்லாமல் ஏதோ வழுக்குறைஞர்கள் பேட்டை ரவுடிகள் போலவும் போலீசு அவர்களை அடித்து நொருக்கியதை ஒரு ஹிரோயிஸமாக போல ரசிப்பது கேவலமாக இல்லையா… நிராயுதபாணியான மக்கள் திரளை (மக்கள் திரளில் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான்) ஒரு முழுகவசம் அணிந்த ஆயுதப்படை தாக்குவது பாசிசமென்றால் அதை நியாயப்படுத்துவதும் பாசிசமே!
வழக்கறிஞர்கள் குற்றவாளியில்லையா? இந்தக் கேள்வியில் தொங்கி நிற்பது, பொலிசை பாதுகாக்கும் கண்ணோட்டமே. இங்கு சமூகத்தில் நிலவும் சமூக குற்றங்களை ஒழிப்பதல்ல இந்த கேள்வியின் நோக்கம்;.
மறுபக்கத்தில் நாம் வழக்கறிஞர்களுக்காக போராடுவது, அவர்கள் ஓடுக்கப்பட்டவர்கள் என்பதால்தான்;. குற்றத்துக்காக வழக்கறிஞர்கள் தாக்கப்படவில்லை. அப்படித் தாக்கவும் சட்டப்படி உரிமை கிடையாது. இந்த அரசு விரும்பாத வகையில் தொடர்ந்து போராடினார்கள் என்பதால், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர்.
ஓடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் குரல் கொடுப்பது, ஒடுக்கும் வர்க்கும் ஒடுக்குவதால் தான். பொலிஸ் ஒடுக்கும் வர்கத்திற்காக சேவை செய்யும் ஓரு கருவி. அது பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவே ஆயுதமேந்தியுள்ளது. குஜாரத்தில் மோடிக்காக இந்து பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. பம்பாயில் சிவசேனைக்காக முஸ்லிம்மைக் கொல்லுகின்றது… இப்படி பொலிஸ் அடங்குமுறை இயந்;திரம். ஆளும் வர்க்கத்தின் அருவடி. இதற்கு அப்பால் இதற்கென்று எந்த மனித முகமும் கிடையாது.
வினவு, உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.
நமது சட்டம் காவல்துறையினரை அப்படி நடந்து கொள்ளச் சொல்கிறது. முதலில் சட்டத்தை மாற்றச் சொல்லுங்கள். எல்லாம் சட்டப்படியாகவ நடக்கிறது என்று கேட்பீர்கள். வேறு வழி. நம்பிக்கை வேண்டுமல்லவா.
சரி, சாலையை மறிக்கும் கும்பலை என்ன சொல்லி கலைப்பீர்கள். கேட்கவில்லை என்றால் என்ன செய்ய இயலும் ? லத்தி சார்ஜைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது.
போலீஸாரை குறை சொல்வது நாமெல்லோருக்கும் வழக்கமான ஒன்று. அதே போல் தான் அரசியல்வாதிகளையும் குறை சொல்வோம். நிற்க நான் போலீஸோ அல்லது போலீஸ் குடும்பத்தையோ அல்லது அரசியல் கட்சியினையோ சார்ந்தவன் இல்லை.
எனக்கு ஒன்று மட்டும் தான் புரியாத மர்மம். இதே போலீஸ் எங்கெங்கோ அடி பட்டையக் கிளப்பி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பொங்கி எழாத மீடியாவும், பதிவர்களும் ஏன் வக்கீல்கள் அடி வாங்கியதற்காக பொங்கி எழுகிறார்கள்???????
வக்கீல்கள் ஒன்றும் மகாத்மாக்கள் இல்லை அல்லவா?
கடைசியில் ஒன்று : அரசியல்வாதி நல்லவர்கள் தான். அவர்களின் அடிப்பொடிகள் தான் தீயவர்கள். சினிமா பார்த்து இப்படிச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அனுபவங்கள் மிக அதிகம் எனக்கு.
//போலீசு எந்தக்காலத்திலும் மக்க்ள் பிரச்சினைக்காக போராடியதில்லை. அப்படி போராடும் மக்களை நொறுக்குவதுதான் அந்த எந்திரத்தின் பணி. உயர் நீதி மன்றத்திலும் அப்படித்தான் நடந்து கொண்டார்கள், இனி எதிர்காலத்திலும் அப்படித்தான் நடப்பார்கள். இன்று கூட எமது பு.மா.இ.மு வைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் கல்லூரியில் மாணவர் கூட்டம் நடத்தியதற்காக போலீசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். /////
உண்மைதான். மறுக்க முடியாது. இதெல்லாம் சரி, உங்க கனவுகள் மெய்யாகும் போது (அதாவது ஒரு புரட்சி அரசு அமைந்த பின்), உருவாகும் போலிஸ் எந்திரம் இதை விட பல நூறு மடங்கு கொடுமையாக அடக்குமுறைகள் புரியுமே. அதுதானே கடந்த கால வரலாறு தரும் பாடம். பெரியா (Beria, Cheif of NKVD during Stalin’s regime) என்ற ஒரு கருணாமூர்த்தி பற்றி ரஸ்ஸியாவில் இன்றும் பேசப்படுகிறதே. ஸ்டாலின் காலத்திலும் கே.ஜி.பி/ நெ.கெ.வி.டி அமைப்பு புரிந்த கொடுமைகள் பற்றி விரிவாக விவாதிக்கலாமே தோழர்.
தொழிலாள வர்க சர்வாதிகாரம் என்றாலும் கூட அது ஒரு சர்வாதிகாரம் தான். அதன் கருவிகள் அப்படி தான் உருப்பெரும். இது அடிப்படை விதி. யாராலும் மாற்ற முடியாது.
உங்களுக்கு ஒரு நியாயம், இந்திய போலிஸுக்கு ஒரு நியாயம் என்பதை நீங்க வேணும்னா சொல்லிக்கலாம்.