சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.
இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.
நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்.
இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம். அல்லது ஈழப்பிரச்சினையைக் காட்டி ஓட்டுக் கட்சிப் பச்சோந்திகள் நடத்திவரும் பித்தலாட்டத்துக்குப் பலியான ஏமாளிகள் ஆவோம்.
“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்.
இந்தப் போலி ஜனநாயகம் நமது நாட்டின் பெயரளவு இறையாண்மையையும் காவு கொடுத்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் ஆணைக்கிணங்க தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி, மறுகாலனியாக்க அடிமைத்தனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சாதி மதவெறியை ஒழிக்கவோ, அத்தகைய வெறியர்களைத் தண்டிக்கவோ இந்தப் போலி ஜனநாயகத்தால் முடிந்ததே இல்லை. மாறாக, இந்து மதவெறி பாசிஸ்டு கொலைகாரர்களை ஆட்சியில் அமர்த்தி மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைத்திருக்கிறது. எனவேதான், “இந்த மோசடி ஜனநாயகத்துக்கு மயங்காதீர்கள்” என்று மக்களை எச்சரிக்கிறோம்.
இந்திய மக்களின் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் பயன்பட்டதில்லை. அவ்வாறு தீர்க்கப் போவதாகச் சவடால் அடித்து மக்களை ஏய்க்கவும், பதவிக்கு வந்து கொள்ளையடிக்கவும் ஓட்டுக் கட்சிகளுக்குத்தான் இந்தத் தேர்தல் பயன்பட்டு வருகிறது. அதோடு, இந்தத் தேர்தலில் ஈழப்பிரச்சினை இவர்களுடைய பதவி வேட்டைக்கு அதிருஷ்டப் பரிசாக அகப்பட்டிருக்கிறது.
எண்ணிப்பார்க்கவே மனம் கூசுகிறது. பீரங்கித் தாக்குதலுக்கும், விமானக் குண்டு வீச்சுக்கும் இரையாகி, அன்றாடம் நாடோடியாய் ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் பரிதவிப்பை, கூச்சமே இல்லாமல் தங்களுடைய பதவி பேரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.
“ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நிறுத்து! சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்து!” என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மக்கள் போராடத் தொடங்கியவுடனேயே ஓட்டுப் பொறுக்கிகளுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது.
மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், இராணுவப் பயிற்சி நிலையங்கள் முன் மறியல், மாணவர் போராட்டம், வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, தமிழகம் தழுவிய கதவடைப்பு, முத்துக்குமரன் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்புகள்..! கடந்த 6 மாதங்களாக தம்மால் இயன்ற எல்லா வடிவங்களிலும் தமிழக மக்கள் போராடினார்கள். ஆனால் தனது ஒரு மயிரைக் கூட அசைக்கவில்லை இந்திய அரசு.
தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது, இந்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பியது. சிங்கள இராணுவத்துக்கு சென்னையிலேயே பயிற்சியும் அளித்தது. “இந்தப் போரை வழிநடத்திக் கொண்டிருப்பது இந்திய இராணுவம்தான்; ஈழத்தமிழ் மக்களையும் புலிகளையும் துடைத்தொழிப்பதென்பது, ராஜபக்ஷே அரசின் கொள்கையாக மட்டும் இல்லை. இந்திய அரசின் கொள்கையும் அதுதான்” என்பது அம்பலமானது.
தமிழகமெங்கும் சோனியா, மன்மோகன் கொடும்பாவிகள் எரிந்தன. காங்கிரசார் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடனே, சொக்கத்தங்கம் சோனியாவின் அண்ணன் கருணாநிதிஜி வெறி கொண்டு பாய்ந்தார். பேசினால் ராஜத்துரோகம், படத்தை எரித்தால் தேசியப் பாதுகாப்பு சட்டம் என்று போலீசு இராச்சியத்தைக் கட்டவிழ்த்து விட்டார். அதன் உச்சகட்டமாக அரங்கேறியது சென்னை உயர்நீதி மன்ற போலீசு கொலைவெறியாட்டம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா? 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வோமென அன்று சவடால் அடித்தார்கள் தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள். செய்தார்களா? சவடால்களையெல்லாம் இன்று கமுக்கமாக மறைத்து விட்டார்கள். ஈழத்தில் சண்டை ஓயவில்லை. ஆனால் இங்கே நாற்காலிகளுக்கான நாய்ச்சண்டை தொடங்கிவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிணம் இவர்களது பதவிச் சூதாட்டத்தின் பகடைக்காயாகிவிட்டது.
தனது வாரிசுகளின் தொழில் சாம்ராச்சியத்தையும் அவர்களது அரசியல் எதிர்காலத்தையும் உத்திரவாதப்படுத்திக் கொள்வதற்காக ஆட்சியையும் காங்கிரசுடனான கூட்டணியையும் இறுகப் பற்றிக் கொண்டு ஈழத்தின் இன அழிப்புப் போருக்கு விசுவாசம் காட்டுகிறார் கருணாநிதி. பதவிதான் அவரது உயிர் மூச்சு. “அமைதி வழியில் ஈழம் அமைந்தால் நான் அகமகிழ்வேன்” என்ற அறிக்கையெல்லாம் வெறும் பேச்சு. இதைவிட நயவஞ்சகமான பேச்சை நீங்கள் கேட்டதுண்டா?
போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக அன்புமணியைப் பதவி விலகச் சொன்னால் கடைசி இரண்டு மாதக் கல்லாப் பணத்தை அநாவசியமாகத் “தியாகம்” செய்ய நேரிடும் என்பதால், அன்புச் சகோதரியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பின் கனத்த இதயத்துடனும் சூட்கேஸுடனும் மன்மோகன்சிங்கிடமிருந்து விடை பெற்றிருக்கிறார் மருத்துவர் அய்யா. “இனி நான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தால் அது தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம்” என்று முன்னர் அறிவித்த இந்த அய்யா, இன்று கூச்சமே இல்லாமல் அம்மாவுடன் நின்று பல்லிளிக்கிறாரே, இவரைவிட இழிந்த பிழைப்புவாதியை உங்களால் காட்ட முடியுமா?
“போரென்றால் மக்கள் சாவது சகஜம்தான்” என்று கூறி ராஜ பக்ஷேவுக்கு ஜெயா வக்காலத்து வாங்கியபோது துடிக்காத வைகோவின் மீசை, நாற்காலி எண்ணிக்கையை ஜெ குறைத்தவுடன் துடிக்கின்றதே, இந்த “ஈன”மான உணர்வுக்கு எந்த அகராதியிலாவது விளக்கம் இருக்கிறதா?
இனப்படுகொலைக்குத் துணைநிற்கும் காங்கிரசை எதிர்த்து திருமாவளவன் திமிறி எழவில்லை, திருப்பி அடிக்கவில்லை, அத்துமீறவுமில்லை. இரண்டு நாற்காலிகள் கிடைத்தவுடன் தங்கபாலுவை சந்தித்து வருத்தம் தெரிவித்து அடங்கிவிட்டார் இந்த “தமிழ்நாட்டுப் பிரபாகரன்”! இவரது அடக்கத்தை விஞ்சவும் இங்கே ஆள் இருக்கிறதா?
யு.சி.பி.ஐ என்ற காங்கிரசு எடுபிடிக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராஜீவின் இலங்கை ஆக்கிரமிப்புக்குக் கூஜா தூக்கிய தாவன்னா. பாண்டியன், போயஸ் தோட்டத்துக்குத் தாவினாரே, அவரது ஈழ ஆதரவு அவதாரத்தின் நோக்கமே இதுதான் என்று ஆறுமாதங்களுக்கு முன் நீங்கள் ஊகிக்க முடிந்ததா?
பல கட்சிகள் கொள்கைகளைத் துறந்தோடிய போதிலும், மார்க்சிஸ்டுகள் மட்டும்தான் ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதாவுடன் “கொள்கைபூர்வமான” கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குக் கசக்கிறதா, இனிக்கிறதா?
மாமி ஜெயலலிதா, ஈழப்போரைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக முன்னர் கருணாநிதியைச் சாடியதும், பின்னர் போரை ஆதரித்ததும், காங்கிரசுக்குத் தூது விட்டு பேரம் படியாதென்று தெரிந்தபின் கூட்டணிக் கூஜாக்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதக் காட்சியில் நடித்ததும்… இந்தக் கேலிக்கூத்தெல்லாம் வேறெந்த நாட்டிலேனும் நடக்கக்கூடுமா?
ஈழத்தமிழர்க்கு ஆதரவாக அத்வானியை அறிக்கை விடவைக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் பாரதிய ஜனதாவும் உறுப்பினராம்! தமிழ் விரோத பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு தமிழ்மக்கள் மத்தியிலேயே அங்கீகாரம் தேடித்தரும் பணியை யாரேனும் இதைவிட எளிதாக்க முடியுமா?
“முடியும்” என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். “ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்று கூறிக்கொண்டு, அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில ஈழ ஆதரவாளர்கள்.
ஈழப்பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க., அ.தி.மு.க.வின் கொள்கை. இது உலகத்துக்கே தெரியும். இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும்! வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, “யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்காவிட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்” என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க அரசு. “அதே பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாளை ராஜபக்சேவை மிரட்டும்” என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள். ராஜபக்ஷேவை மிரட்டுவது இருக்கட்டும், “காவிரித் தீர்ப்புக்குக் கட்டுப்படுமாறு” கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அத்வானி கொஞ்சம் மிரட்டிக் காட்டுவாரா?
ஈழம், சேதுக்கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியார், மீனவர் படுகொலை.. என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான், காங்கிர”, பா.ஜனதா மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணை போவதுதான் பிற கட்சிகளின் நிலை. தீர்மானமான முடிவில் இவர்கள் ஒருபோதும் நின்றதில்லை.
ராஜ பக்ஷேவுக்கு துணை நிற்கும் காங்கிரசுடன் ராமதா”க்கும் திருமாவளவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம்! வைக்கோவுக்கோ, ராஜ பக்ஷேயின் அக்கா ஜெயலலிதாவுடன் பிரச்சினையே இல்லை. ஆனால் இவர்கள் மூவரும்தான் ஈழத் தமிழர்களின் “காவல் தெய்வங்களாம்”! வெட்கக்கேடு!!
இந்தத் தேர்தல் முடியட்டும். இதில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், காங்கிரசு அல்லது பா.ஜ.க. அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு இவர்கள் சோரம் போவார்கள். ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவும் துணை நிற்பார்கள். இதுவரை நடந்து வருவதும் இனி நடக்கப் போவதும் இதுதான்.
இருந்தாலும் என்ன? டில்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் காவடி எடுத்து கருணை மனுக் கொடுப்பதன் மூலம் ஈழப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று நம்புகிறார்கள், ஈழ ஆதரவாளர்கள். டில்லி மனது வைத்தால் ஈழம் அமைந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.
தமிழகமே எதிர்த்தபோதும் இன்று சிங்கள அரசுக்கு இந்தியா துணை நிற்பது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருப்பதுதான் இந்திய அரசின் நோக்கம். உலகமயமாக்கத்தின் ஆதாயங்களால் முன்னிலும் பன்மடங்கு கொழுத்துவிட்ட அம்பானி, டாடா, பிர்லா, மித்தல், மகிந்திரா போன்ற தரகு முதலாளிகள் இலங்கையின் சந்தை முழுவதையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். தெற்காசியா முழுவதற்கும் ரூபாயை நாணயமாக்கி தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவது போராளிகளும் போராட்டங்களும் இல்லாத அமைதியான இலங்கை. அந்த சுடுகாட்டு அமைதியை நிலைநாட்டத்தான் ராஜபக்ஷேவுக்குத் துணை நிற்கிறது இந்திய அரசு.
இந்திய ஆளும்வர்க்கம் விரும்பாத எதையும் எந்தக் கட்சியின் ஆட்சியும் செய்யப்போவதில்லை. இந்திய மண்ணை பன்னாட்டு முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளா, ஈழத்தமிழர்களின் உரிமைக்காக இந்தியத் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுப்பார்கள்?
தெற்காசியப் பகுதியில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆயுதமும் நிதிஉதவியும் அளித்து வரும் இன்றைய சூழலில், ராஜபக்சேவை அரவணைக்காமல், ஈழத்தமிழ் மக்களை அத்வானி ஆதரிப்பார் என்று நம்புவது முட்டாள்தனமில்லையா?
“ஒரே இந்தியா ஒரே சந்தை” என்று பார்ப்பன இந்து தேசியத்தால் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்கிவரும் இந்திய அரசு, காஷ்மீர் வடகிழக்கிந்திய மக்களைப் பல பத்தாண்டுகளாய் துப்பாக்கி முனையில் நசுக்கி வரும் இந்திய அரசு, ஈழப் போராளிகள் மீது கருணை காட்டும் என்று மக்களை நம்பவைப்பது அயோக்கியத்தனமில்லையா?
காங்கிரசு தோற்றாலென்ன, எத்தகைய தோல்வியும் காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது. “ஆட்சியை இழந்தாலும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு சமீபத்தில்தான் பாடம் புகட்டினார் மன்மோகன் சிங். ஈழ ஆதரவாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்! எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்டபாரத வெறி பிடித்த அத்வானியையும் ஈழ ஆதரவாளராக உருமாற்றிவிடாது.
இலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கத்தின் பிடி அகல வேண்டுமானால், அதன் காலடி நிலம் சரிய வேண்டும். இலங்கைக்கு ஆசைப்பட்டால், தமிழகத்தை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். இந்து இந்தி இந்தியா என்ற பார்ப்பன தேசியம் உடைத்தெறியப்பட வேண்டும். தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் வீழ்த்தப்படவேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தப் போராட்டத்தின் ஒரு படி. ஈழமக்களுக்காகத் தமிழகம் விடுத்த ஒருமனதான கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசை, நிராகரிக்கிறார்கள் தமிழ் மக்கள் என்று உணர்த்தும் ஒரு அடி.
இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாம் கொடுக்கக் கூடிய முடிவான பதிலடி!
இந்த கட்டுரையை பரவலாக அனைத்து பிரிவினரிடத்திலும் கொண்டு சேர்க்குமாரு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பிரசுரத்தின் PDF கோப்புக்கு இங்கே சொடுக்கவும்
ஈழத்தின் மீதான இந்தியாவின்
மேலாதிக்கப் போருக்கு
பதிலடி கொடுப்போம்!
தேர்தலைப் புறக்கணிப்போம்!
ஈழத்தமிழ் மக்களின்
குலையறுக்கும் காங்கிரசு தி.மு.க…
தலையறுக்கும் பா.ஜ.க. அ.தி.மு.க…
ஈழத்தமிழர் பிணத்தைக் காட்டி
பதவி வேட்டையாடும்
பச்சோந்திகளுக்குப்
பாடம் புகட்டுவோம்!
மே 1, 2009
பேரணி
பொதுக்கூட்டம்
திருவள்ளுவர் திடல், தஞ்சை
மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.
மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506
ஏழைக்கு அடிப்படை வாழ்க்கையே சிந்தனை. பணக்காரர்களுக்கு இப்போதுள்ள நிலமையே பொற்காலம்தான். மத்தியதர மக்களுக்கோ தன் குடும்பத்தயும், சினிமாவையும், கிரிக்கெட்டையும் தவிர வேறு எந்த கவலையும் இருப்பதாய்த்தெரியவில்லை. தெரியவைக்க முயன்றால் கலகம் என்று விலக்குகிறார்கள் அல்லது விலகுகிறார்கள். ஏட்டுக்கல்வி விழிப்புணர்வூட்டுவதற்கு பதிலாய் விழிகளையே மூடிக்கொள்ளவே வழிசெய்கிறது.
தேர்தல் மீதான நம்பிக்கை நம் மக்களைப்போன்றே எனக்கும் அற்றுப்போய்விட்டது. ஆனால் வாக்குப்போடும் ‘கடமையை’ நம் விழிப்புணர்வற்ற மக்கள் விடுவார்களா என்று தோன்றவில்லை.
வினவு சொன்னால் போய்சேருவது கடினம் ஆனால் விஜய் சொன்னால் நன்றாகவே போய்ச்சேரும். தமிழனுக்கு நாடுமில்லை நாதியுமில்லை என்பது சரியாகத்தானிருக்கிறது.
ஆனாலும் நம் கடமையை நாம் செய்தவண்ணம் இருப்போம். நாம் நம் பங்கைச்செய்தே தீருவோம். இது வெறும் தொடக்கமே. புரட்சி வந்தே தீரும். தமிழகமும் ஒரு நாள் நீதி பெறும். ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் என்கிற தளைகள் அறும்.
தேர்தலை புறக்கணிப்பதும் ஜனநாயக உரிமைகளில் ஒன்று என்பதை ஜனநாயக ஆர்வலர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்
ஈழத்தை ஊடகங்கள் கைகழுவி விட்டுவிட்டன… வட இந்தியாவில் தமிழ்நாட்டை பற்றியே தெரியாது… விவரமரிந்த நடுத்தர வர்க்கம் ஈழத்துக்காக வாக்களிக்க போவதில்லை… இந்தியாவின் 50% பேர் 20-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் – இவர்களிள் பெரும்பான்மை வாக்களிக்க மாட்டார்கள்… பணக்காரர்கள் வாக்களிக்க வரமாட்டார்கள்… பெண்கள், ஏழை மக்கள் சுய உதவி குழுக்கள் மற்றும் கரன்ஸிகளின் பிடியில்.. ஈழ ஆதரவு பதிவர்கள் பலர் வெளிநாட்டில் அல்லது இந்திய குடிமகன் அல்லர்.. தேர்தலை புறக்கணிக்கிறோமே இல்லையோ ஈழத்துக்கும் தேர்தலின் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கப்போவதில்லை.. அந்த ஒரு வெறுப்பினாலேயே நான் வாக்களிக்கப் போவதில்லை…
http://www.srilankaguardian.org/2009/04/catholic-church-ally-of-tamil-tiger.html
இந்த தேர்தலை புறக்கணிப்பதையே நான் நம் அவசியக்கடமையாய் குறிப்பிட்டுள்ளேன். புரிதலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு மன்னிக்கவும்.
நண்பர்களே, இந்த தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு உங்களுக்கு நீங்களே வைக்கும் ஆப்பு…
மனித நேயம், தன்மானம் உள்ள யாரும் தற்போதைய சமூக அமைப்பில் ஓட்டு போட மாட்டார்கள்.. ஒட்டு கட்சிகள் பசுந்தோல் போர்த்திய புலிகள், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தனது தேர்தல் கூட்டணி என்ற கள்ள உறவில் சமூகத்தை சீரழிக்கும் கயவர்கள்… இவர்களின் முகத்திரையை கிழித்தெறிவோம்…
This is not a good idea. If u r not cast ur vote who will get benifit. In the election system, if they get 2 vote out of 3, they will win. So, if you are opposing Congress then cast ur vote againt them not boycott the election. ..I think u will understant what i’m trying to say….
பெரும்பாலான தென்னாசிய நாடுகளில் ஜனநாயகம் என்பது வெறும் பெயருக்கு மட்டும்தான்.இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இந்தப் போலி ஜனநாயகம் என்பது எப்படிப்பட்டது என்று நன்கு தெளிவாகவே தெரிகிறது.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எப்படி என்றாலும் ,தமிழ் நாட்டு மக்கள் ஈழத்தமிழர்களின் துயர் கண்டு துடிக்கிறார்கள் ,ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் உலகின் ‘மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ‘இருந்துகொண்டு அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல்தான் இருக்கிறது.அவர்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் ஒன்றுமே பலன் தரவில்லை என்பதில் இருந்தே இந்தியாவில் ஜனநாயகத்துக்கு இருக்கும் மதிப்பு புரிகிறது.
இங்கு இப்போதும் ஒருவகையான மன்னர் ஆட்சிதான் நடக்கிறது என்பதற்கு நேரு ,காந்தி குடும்பங்களின் ஆதிக்கமே சாட்சி சொல்கிறது.மோதிலால் காந்தியில் ஆரம்பித்து, இன்று ராகுல் காந்தி அடுத்த பிரதமர் என்று சொல்ல வைக்கிறது.-fifth generation is still ruling India
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சொல்ல வரவில்லை,உண்மையில் கொள்கை,கோட்பாடு என்று பிடிப்பும் சமூகப் பிரக்ஞையும் இருந்தால் யாரும் அரசியலுக்கு வரலாம் ,ஆனால் இங்கே வாரிசு என்ற காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டல்லவா அரசியலுக்கு வருகிறார்கள்,அது மக்கள் நலனில் உள்ள அக்கறையில் இல்லாமல் ,தமது சொத்து , தொழில் ஆதிக்கம் என்ற நலனில் உள்ள அக்கறையால் அரசியலுக்கு வருகிறார்கள்.
நேரு குடும்பத்தினர் தமது குடும்பம் இந்தியாவில் கொண்டிருக்கும் ஆதிக்கத்தையும் குடும்பப்பெருமையைக் காப்பாற்றுவதற்காகவும் அரசியல் செய்கிறார்கள்.
தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் தமது ‘நிதியைக்’ காப்பாற்றுவதற்காக அரசியல் செய்கிறார்கள்.
கலைஞர் கருணாநிதிக்கு இள வயதில் தமிழ் மீது பற்று இருந்திருக்கல்லாம் ,அது அந்தக் காலம் .ஆனால் அவரின் வாரிசுகளுக்கு தமிழ் நாடு ,தமிழ் மொழி,தமிழ் இனம் என்று ஒரு பற்றும் கிடையாது ,ஒரு மண்ணும் கிடையாது.யாரோ உதயநிதியின் மனைவியாம் ,அவருக்கு தமிழ் சரியாகத் தெரியாதாம் அதனால் பள்ளியில் தமிழை ஒரு பாடமாய் எடுக்காமல் இந்தியை எடுத்தாராம் ,எங்கோ பேட்டியில் வாசித்த ஞாபகம் வருகிறது.தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழை ஒரு பாடமாய் எடுக்காதவர்களின் குடும்பம்தான் தமிழை வைத்து இவ்வளவு சொத்துக்களை குவித்திருக்கிறார்கள்.இதுதான் இங்கு ஜனநாயகம்.
-வானதி
இந்த தேர்தலில் ஓட்டுப் போடும் வாக்காளர்களை பரிதாபமான நிலைக்குத் தள்ளி விட்டார்கள் தமிழக அரசியல்வாதிகள்.ஈழம் குறித்த அக்கறை உள்ளவர்கள் கூட தங்கள் ஆதங்கங்களை தெரிவிக்க முடியாதபடியான நிலை.வீட்டில் உட்காருவதை விட 49-0 க்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறார் பழமை.
http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_8596.html
நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தியுள்ளது:
எறிவதை இழுத்தால் கொதிப்பதி நிற்கும்!
ஈழத்தில் போர் முடியப் போவதாக தகவல்கள் வருகின்றன. எத்தனை தூரம் உண்மையென்று தெரியவில்லை.
http://www.asiantribune.com/
asiatribune is govt site. this is a main probaganda site. read tamilwin.com tamilnet.com puthinam.com and pathivu.com news.tamilcanadian.com
ஜனநாயகம் அப்படி என்றால் என்னப்பா???
உலகத்தில் எங்கயப்பா இருக்குது???
தமிழை வைத்து தமிழரை பேக்காட்டி
சொத்துக்களை குவித்தவர்தான் கருணாநிதி,
கருணாநிதியின் குடும்பத்தினர்.
தமிழ் நாட்டில் மக்கள் எல்லாம் மந்தைகள்.
மொழிப்பற்று மண்பற்று இல்லாமல் உள்ளனர்
குடும்ப அரசியலை ஏன் எதிற்கிறார்களில்லை
நாம் வாக்களிக்காமல் இருந்தால் அது காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற வசதியாக போய்விடுமே. இவ்வாறு வாக்களிகாதவர்களின் எண்ணிக்கை பணத்துக்காகவும் பொருளுக்காகவும் வாக்களிக்கும் மக்களைவிட மிகவும் குறைவாகவே இருக்கும். மேலும் மற்ற அரசியல் கட்சிகள் பதவிக்காக அலைபவர்களாக இருந்தாலும் காங்கிரஸ் அளவிற்கு துரோகிகள் இல்லை. அதனால் காங்கிரஸ்க்கு எதிராக அனைவரும் வாக்களிப்பதே தற்போதைக்கு நல்லது.
I accept what ever written in this post but I would like to add one more point “49 – O” I hope many of u dont know this since No body in this facist Democracy never want u to learn this since it revert back them. As u all plan to boycott the election to send a big warning to this facist govenment ruled by capitalistics understand this. in election only on an average 40 to 55% only polling takes place.. in that those who get 21% will win the election where as the voice of the majority 40% who never went to polling booth has been silenced. This 40% includes majority of selfish high class people and lazy middle class youths, these people never care anything since they have whatever they want so these people never cares whether Congress or BJP won the election for those it is a just news n a GK so that they can answer “Who is our current Prime minister?” so it is proven that, in this country already majority rejected this stupid election gamble and facist democracy… My point over his our moto is “Boycotting elections” so lets make it OFFICIAL by polling our Vote for “49 O”. According to our IP code if a voter polls his/her vote against “49 O” then that means “he/she officially Boycotting this election saying that he/she never wish to VOTE ANYONE of the canditates” now consider our case, Neither DMK allaince nor ADMK allaince would make a difference, they r same so lets poll our vote against all these b*****d Politicians by polling “49 O”. just imagine, sun TV is announcing M.K.Allagiri lost the election by only 1 vote diffrence since total vote filed for him is 700 where as ADMK got 701 and NMDk got 304 but to the surprise all the other votes r filed for “49 O” and this is the stattus of all locations. ” Think about this friend will the politicians announance this as a victory ? they got y? We officially splited in their faces and officially Boycotted Elections.. I believe this is the right way to Boycott the elections since we ve no difference in Boycotting elections. Let Boycott the elections through “49 O”.
Votu Podu – “49 O” ku Votu Podu…
எப்படி ஏமாற்றினாலும், எப்படி வேடமிட்டாலும், எவ்வளவு துரோகமிழைத்தாலும், என்ன செய்தாலும் நம்மில் யாருக்காவது ஓட்டுப்போட்டுவிடுவார்கள் மக்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது ஓட்டுக்கட்சிகளிடம். ஓட்டுப்போடுவது நாம் ஏமாளி என நமக்கு நாமே சான்றிதழ் அளித்துக்கொள்ள்வதற்கு ஒப்பானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேய்ந்து போன துடைப்பங்களையும், பிய்ந்து போன செருப்புகளையும் உபயோகம் இல்லாதவை என்று வீசிவிடாதீர்கள். அருமையான மிகப்பொருத்தமான பயன்பாடு ஒன்று உண்டு அவைகளுக்கு
தோழமையுடன்
செங்கொடி
நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது
நடக்கும் எல்லா தேர்தல் கூத்துக்களையும், பதவிக்காக அடித்துக்கொள்வதையும் கவனித்தாலும், வாக்களிக்காமல் இருப்பதை சிந்திக்க முடியவில்லை.
கை அரிக்கிறது என்பார்களே! இது தானோ?!
தமிழகத்தில் தி.மு.க அரசு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் அறிவித்து துவங்கி வைத்தது.. இந்தியா
முழுவதும் இன்றைக்கு எதிரொலித்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு ரூபாய் அரிசியை சில நாள்களுக்கு முன்பு வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ‘ தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே’ என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.
இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.
இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை சீராட்டி, பாராட்டி வளர்த்து, சிறு தொழில்களை அழித்ததின் மூலம் பல கோடி மக்களை பிச்சைகாரர்களாக மாற்றிவிட்டது இந்த அரசு.
1ரூ அரிசி என்பது, கருணாநிதி என்னும் மன்னன் தன் குடிமக்களின் வறிய நிலை கருதி, போட்ட பிச்சையாக இருந்தது. இதே நிலை தான் இந்தியா முழுவதும் என்றால், கவலையாக தான் இருக்கிறது.
Ella visayahtayum nalla pesureenga.. unga Saathi kuritha paarvai, egathipathiyam kuritha paarvai ellam enakku udanpaadu thaan..Athellam sari Vinavu ayyya !! Eezha prachanaiya paathi pesum pothu oru visayatha theliva solla matengreengaley.. Neenga Puligalai aatharikareengala. illa ethirkareengala.. Neenga Puli ethirkiravar thana .. appuram ethukku Muthukumar oorvalathula vanthu parai adichu atharavu thericheenga.. avaru marxiya sinthanai ullavar apadingara pechu ellam irukatum.. unga kolgaila theliva irunga.. Eezha makkal theliva irukanga.. Makkal than Pulikal. Pulikal thaan Makkal.. Puligal Fascistugal appadingrathu unga karuthu (ithula ungalukkum Jaya ammayarukkum ore karuthu).. itha thaan neenga 20 varushathukku mela solittu vareenga.. apapadina angey irunga.. en eezha poratathula senthu kuttaya kulapureenga. Puligal pathi unga palaya katuraigala ippa xerox eduthu poda vendiya avasyam enna ?? Adutha Marxist katchiya makkal kitta irunthu thanimai ayidatheenga.. unga kuzhuvula intha prachanaiya pathi pesi oru nalla mudivukku vanga..
முத்து செல்வன் அண்ணை நீங்க சொல்வது விளங்கலை! 1000 புலிகள் உயிரை விட 1லட்சம் மக்கள் உயிர் பெரிசில்லையா அண்ணை? அந்த மக்களுக்காக யாருமே பேசக்கூடாதா அண்ணை? மக்களுக்காகத் தானே அண்ணை புலிகளின் போராட்டம், அத ஆதரிக்கும் நீங்க மக்களுக்கு போராடும் மத்தவங்களை ஏன் தடுக்கிறீங்க…. ம.க.இ.க எடுத்து வரும் சரியான நிலைப்பாட்டினால் ஈழப் பிணங்களை வைத்து உங்களால் பொறுக்கிதிங்க முடியவில்லை என்பதாலா?
தமிழனுக்கு நீங்க என காப்பிரைட் வாங்கி வச்சுரிக்கீங்களா? ம.க.இ.கவினர் ஈழப்பிரச்சனையில் இந்திய சதியை அம்பலப்படுத்தி இதுவரை தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளனர்… உங்கள் அரசியில் எதிர்காலங்கை அந்த போராட்டங்கள் கேள்விக்குள்ளாக்கி விட்டதனால் பொறாமைப்படவேண்டாம்,,, களத்திலி இறங்கி வேலை செய்யுங்கள்… தமிழ்மக்கள் நன்றியோடு இருப்போம்….அப்படியே ஜெயலலிதா காலடியில் விழுந்திருக்கும் பழ நெடுமாறன் அங்களை நலம் விசாரித்ததாக சொல்லவும்,,,, சரியா அண்ணை!
Boycott voting is not good i think. I will against Congress instead.
ஈழப் பிரச்சினையில் காங்கிரஸை தோற்கடிப்போம் என்று இந்திய அரசுக்கு புனித வட்டம் கட்டும் தமிழ் தேசிய கழிசடைகளும், சமூக நீதி காவாளிகளும் கீழே உள்ள செய்திக்கு பதில் சொல்ல வேண்டும்.
ஈழப் போராட்டத்தில் எல்லா கட்சிகளின் துரோகமும் வரலாற்றில் தகுந்த விதத்தில் பலி தீர்க்கப்படும்.
//
இலங்கை ராணுவத்தின் 2 படைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள்-பிரான்ஸ் மீடியா
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2009, 14:20 [IST]
RSS Twitter இலவச நியூஸ் லெட்டர் பெற thatsTamil Bookmarks மக்களவைத் தேர்தல்-2009
கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.
இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ..
இலங்கையின் 58வது ராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் வடக்கு இலங்கையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் பேர் இந்திய வீரர்களே.
இதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய ராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை ராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.
சமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.
மேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
மேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை ராணுவத்தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
//
http://thatstamil.oneindia.in/news/2009/04/07/lanka-indian-soldiers-engage-in-sl-army-french.html
சிங்கள இராணூவத்தின் திவிரவாதத்தை ஆதிர்க்கும் ,இந்திய அரசினை எதிர்க்கிறோம்.அதை ஆளும்காங்கிரஸை ,தோற்கடிக்க வேண்டும்.
உண்மையான மனித உணர்வுகளை,சுதந்திர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்,ஈழதமிழரை அழிப்பது கண்டிக்கதக்கது.
அவர்கள் வாழும் பூமி அவர்களுடையது,அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் வாழும் நிலபரப்பில் உரிமை பெற்று சுதந்திரமாக வாழ உரிமையை பறிப்பது தான் சனநாயகமா?
கல்வி,வேலை வாய்ப்பு மற்றும் அதிகாரம் ஈழதமிழர்க்கு வழங்குங்கள்,அவர்கள் அவர்கள் வேண்டுவது அது தான்.
அவர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தாமல் இருங்கள்,அவர்கள் ஆயுதங்களை கீழே போடுவார்கள்.
சிங்கள் வெறி நாய்கள்,ஈழதமிழ் பெண்களை கடித்து குதறுவது திவிரவாத அல்ல என்று நினைக்கிறதா இந்திய மத்தியில் ஆளும் ஆளும் கட்சி.
இலங்கை அரசின் இன படுகொலையை அதரிப்போரை தூக்கில் போட வேண்டும்
இலங்கை அரசின் ,சிங்கள இராணுவத்தின் திவிரவாதம்.
இலங்கை அர்சின் ,சிங்கள இராணுவ திவிரவாதிகள்,ஈழத்தில் தன் நாட்டு குடிமக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்று வருகிறது.குழந்தைகள் ,பெரியவர்கள் என்று பாராமல் ,அவர்கள் மீது விஷ வாயு குண்டுகளை வீசி கொன்று வருகிறனர்,சிங்கள இராணுவ தீவிரவாதிகள்.
இலங்கை அரசே,தீவிரவாத்தை ஆதிரிக்கிறது.தீவிரவாத செயலில் ஈடுபடுகிறது.
இத்தகைய ,இலங்கை அரசின் தீவிரவாதத்திற்கு ,ஆதரவாக இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வருகிறது.
சிங்கள இராணுவ தீவிரவாதத்தை ஆதரிக்கும் ,இந்திய அரசின் செயல் கண்டிக்க தக்கது.மனித தன்மை அற்றது.
அடித்து கொண்டிருப்பவன் (இலங்கை இராணூவம்) தீவிரவாதி அல்ல என்றும்,அடி வாங்குபவன்(ஈழதமிழன்) வலிபொருக்காமல் திருப்பி அடித்தால் அவன் தீவிரவாதி என்றும் ,இலங்கை அரசும்,இந்திய அரசும் விளக்கம் கூறுவது வேதனையாக உள்ளது.
எதை தீவிரவாதம் என்கிறோம் பொதுமக்களை ,குழந்தைகளை ,முதியவர்களை கொல்பவர்களை தானே.அப்படி என்றால் இந்த செயலை எல்லாம் செய்யும் இலங்கை அர்சின் சிங்கள இராணுவம் தான் தீவிரவாத செயல் புரிகிறது.
புலிகள் யாரும் குழந்தைகளை ,சிங்கள பொது மக்களை தாக்க வில்லை.அவர்கள் தங்களை தாக்க வரும் சிங்கள இராணுவ தீவிரவாதிகளை தாக்குகிறார்கள்.
ஈழதமிழனும்,சிங்களவர்க்கு சமமாக நடத்தபட்டால் ,தமிழ்மக்கள் ,ஆயுத போராட்டத்தை விட்டுவிடுவார்கள்.அதை செய்யாத இலங்கை அரசு,ஈழதமிழ்ர்கள் மீது திவிரவாதத்தை கட்டவிழுத்து விட்டுள்ளது.
இலங்கை இராணுவ தீவிரவாதமும்,அந்த தீவிரவாதத்திற்கு துணை போகும் இந்திய அரசும் மனம் மாறவேண்டும்.
இலங்கை அரசும்,இந்திய அரசும், தீவிரவாத வழியை கைவிட்டும் அமைதி வழியில் ஈழதமிழர்க்கு சுய அதிகார உரிமையை வழங்கி அவர்கள் வாழ வகைசெய்யவேண்டும்.