Wednesday, July 24, 2024
முகப்புஉலகம்ஈழம்கொலைகார காங்கிரசடி - குதம்பாய் கொலைகார காங்கிரசடி...

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

-

chidambaram shoe congressபடம் நன்றி : நான் 1084

ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே
சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் – ஆனா
சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி!

பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே
புறப்பட்டு வந்தடி குதம்பாய்….
அந்தச் செருப்புக்கு நன்றியடி!

சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட
சிதம்பரம் மூஞ்சிக்கு
சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் – காங்கிரசுக்கு
தேர்தல் ஒரு கேடாடி!

செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா
தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் – தமிழின துரோகி
தங்கபாலுதான் மிரட்டுறாண்டி!
இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு
பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து
செருப்பையும் சேத்துக்கடி!

ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம்
வந்த்து ஏதுக்கடி குதம்பாய் – அந்த
வரலாறை கூறுங்கடி!

பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே
இந்திராகாந்திதாண்டி குதம்பாய்….
இந்திராகாந்திதாண்டி – பின்னே பிந்த்தரன்வாலாவை
பயங்கரவாதின்னு பேயாட்டம் போட்டாளடி
குதம்பாய்…
பொற்கோயிலையே குருதியில் நனச்சாளடி!

சொந்த இனத்தும் பிணங்களைப் பார்த்து
இரத்தம் கொதிச்சானடி குதம்பாய் – அந்தச் சீக்கியன்
இந்திரா கதையை முடிச்சானடி!

இந்திரா கொலைக்கு பழிக்கு பழிவாங்க
பகையை வளர்த்தானடி குதம்பாய் – காங்கிரசு
பச்சைப் படுகொலை செய்தானடி!

ஆயிரக்கணக்குல சீக்கிய மக்களை
வெட்டிப் போட்டானடி குதம்பாய்… கொளுத்தி
வெறியாட்டம் போட்டானடி…
ஒத்தப் பொணத்துக்கு மொத்த இனமுன்னு
கத்தித் தீர்த்தானடி குதம்பாய்…. காங்கிரசு
கொலைகார கும்பலடி!

சீக்கியப் பெண்கள் ஆயிரக்கணக்கில்
விதவையர் ஆனாரடி குதம்பாய்….அவர்
வேதனை கொஞ்சமோடி!
பிஞ்சுக் குழந்தையும் தப்பவில்லை சொல்லவே
நெஞ்சு வேகுதடி குதம்பாய் – பலரை
டயரோடு சேர்த்து எரித்தானடி!

பெத்தவயிறு பத்தி எரியுதுன்னு பெண்கள் ராஜீவிடம்
நியாயம் கேட்டாரடி குதம்பாய் நியாயம் கேட்டாரடி!
”ஆலமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யுமென்னு”
ஆணவம் பேசினாண்டி குதம்பாய் – அந்தக் குரூரத்தை
யாரும் மறப்பாரோடி !

சஜ்ஜான் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் – இதை
முன்னின்று நடத்திய பாவியடி! குதம்பாய் – பயங்கரவாதிகளை பாதுகாப்பது காங்கிரசடி!
ப.சிதம்பரம் வாங்கிய செருப்படி – குதம்பாய்
உண்மையை ஊருக்கு சொல்லுதடி!

சொந்த நாட்டு மக்களையே கண்டம் துண்டமாக
வெட்டுனானே! குதம்பாய் – காங்கிரசு கையாலே
காசுமீரு, வடகிழக்கு மாநிலத்தில்
தினம் காணாப் பிணங்கள் எத்தனையோடி!

ஈழம் எரியுது, தமிழ் இனம் கருகுது
காரணம் இந்திய அரசுதாண்டி – குதம்பாய் இந்தக்
காங்கிரசு அரசுதாண்டி

உன்காலுக்கு ஒரு செருப்பு இல்லேன்னாலும்
கடன் வாங்கியாவது வீசுங்கடி குதம்பாய்
தமிழின சொரணையைக் காட்டுங்கடி!

– துரை.சண்முகம்.

 1. வடிவம் நேர்த்தியாக உள்ளது. அரசியல் உள்ளடக்கத்தில் இன்னமும் ஆழமும் கூர்மையும் தேவை என கருதுகிறேன்.

 2. இந்த காங்கிரஸ் ஒழியாம நம்ம நாடு உறுப்புடாது சார். கட்சியா சார் அது, ஒரு வியாதி சார் வியாதி!

 3. You mean to say in the world LTTE and their support only correct, remaining all is wrong, srilankan or Tamil Ezham people cannot entire in to Indian politics, if your people have guts to fight with your government and get the freedom, how may peoples are killed by LTTE they all are not human being, Padmanabha, Amirthalingam and other then LTTE leadred killed by this prabhakaran, still LTTE threatening Srilankan tamil and getting funds from them. How may leaders and How many public killed by LTTE this all the activites are correct if you say yes you all are culprates.

 4. மன்னிக்கவும். ஆனால் ஈழத்தில் எம் மக்களை அமைதிப் படை என்ற பெயரில் கொன்று குவித்தது பெரும்பாலும் சீக்கியர்கள் என்பதால், அவ்வினத்தில் மீது எந்த கரிசனமும் வருவதில்லை.

 5. இலங்கை அரசின் ,சிங்கள இராணுவத்தின் திவிரவாதம்.
  இலங்கை அர்சின் ,சிங்கள இராணுவ திவிரவாதிகள்,ஈழத்தில் தன் நாட்டு குடிமக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்று வருகிறது.குழந்தைகள் ,பெரியவர்கள் என்று பாராமல் ,அவர்கள் மீது விஷ வாயு குண்டுகளை வீசி கொன்று வருகிறனர்,சிங்கள இராணுவ தீவிரவாதிகள்.

  இலங்கை அரசே,தீவிரவாத்தை ஆதிரிக்கிறது.தீவிரவாத செயலில் ஈடுபடுகிறது.

  இத்தகைய ,இலங்கை அரசின் தீவிரவாதத்திற்கு ,ஆதரவாக இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வருகிறது.

  சிங்கள இராணுவ தீவிரவாதத்தை ஆதரிக்கும் ,இந்திய அரசின் செயல் கண்டிக்க தக்கது.மனித தன்மை அற்றது.

  அடித்து கொண்டிருப்பவன் (இலங்கை இராணூவம்) தீவிரவாதி அல்ல என்றும்,அடி வாங்குபவன்(ஈழதமிழன்) வலிபொருக்காமல் திருப்பி அடித்தால் அவன் தீவிரவாதி என்றும் ,இலங்கை அரசும்,இந்திய அரசும் விளக்கம் கூறுவது வேதனையாக உள்ளது.

  எதை தீவிரவாதம் என்கிறோம் பொதுமக்களை ,குழந்தைகளை ,முதியவர்களை கொல்பவர்களை தானே.அப்படி என்றால் இந்த செயலை எல்லாம் செய்யும் இலங்கை அர்சின் சிங்கள இராணுவம் தான் தீவிரவாத செயல் புரிகிறது.

  புலிகள் யாரும் குழந்தைகளை ,சிங்கள பொது மக்களை தாக்க வில்லை.அவர்கள் தங்களை தாக்க வரும் சிங்கள இராணுவ தீவிரவாதிகளை தாக்குகிறார்கள்.

  ஈழதமிழனும்,சிங்களவர்க்கு சமமாக நடத்தபட்டால் ,தமிழ்மக்கள் ,ஆயுத போராட்டத்தை விட்டுவிடுவார்கள்.அதை செய்யாத இலங்கை அரசு,ஈழதமிழ்ர்கள் மீது திவிரவாதத்தை கட்டவிழுத்து விட்டுள்ளது.

  இலங்கை இராணுவ தீவிரவாதமும்,அந்த தீவிரவாதத்திற்கு துணை போகும் இந்திய அரசும் மனம் மாறவேண்டும்.

  இலங்கை அரசும்,இந்திய அரசும், தீவிரவாத வழியை கைவிட்டும் அமைதி வழியில் ஈழதமிழர்க்கு சுய அதிகார உரிமையை வழங்கி அவர்கள் வாழ வகைசெய்யவேண்டும்.

 6. காங்கிரஸ் தடை செய்ய பட வேண்டும்
  இலங்கை அரசின்,சிங்கள இராணுவ தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் காங்கிரஸ் கட்சி செயபட வேண்டும்.அவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம்.

  மேலும் ,சிங்கள இராணூவ தீவிரவாதத்தை ஆதரிக்கும் பிராணப்முகர்ஜி,சோனியாகாந்தி,மன்மோகன் சிங் ,மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு போட வேண்டும்.

  பல குழந்தைகள்,பல்லாயிரம் பெண்கள் ,முதியவர்கள் கொல்லபட்டதற்கு துணை போனதற்காக அவர்கள் மீது வழக்கு போட வேண்டும்.

  இலங்கை அரசின் தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் காங்கிரஸ் தடை செய்யபட்ட இயக்கமாக அறிக்க வேண்டும்.

 7. கலைஞரின் உண்ணாவிரத நாடகம் நிறைவு

  இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

  கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

  இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

  உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

  from
  http://www.nankooram.com/kalaijar-hunger-strike

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க