கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாலைப் பொழுது அது. மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. கமல் பத்ராவின் சகோதரர்களும், மகனும் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தனர். போலீசு வழக்கம் போலவே, இதையும் தற்கொலை என்றுதான் கூறியது.
இக்கோரச் சாவுகள் தொடர்கதையாகிப் போன அந்தக் கிராமத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன கேளிக்கை நகரம் உள்ளது. வார இறுதியில் இருள்கவியத் தொடங்கிவிட்டால், அவ்விடத்தின் அமைதியைக் கிழிக்கும் வகையில் காதைப் பிளக்கும் மேற்கத்திய இசையும், கட்டவிழ்த்து விடப்படும் கேளிக்கைகளும், மேல்தட்டு விபச்சாரமும் அங்கே அரங்கேறத் தொடங்கி விடுகின்றன. அருகிலுள்ள பெருநகரத்து மேட்டுக்குடி இளசுகள், கப்பல் போன்ற நவீனரகக் கார்களில் வந்து குவிகிறார்கள். இந்தக் கேளிக்கை நகரம் அந்தக் கிராம மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உருவாக்கப்பட்டது.
குடியும் கூத்துமான அத்தகைய முன்னிரவுப் பொழுதில், வெறுப்பின் உச்சத்திலிருந்த அந்தக் கிராம மக்கள் அங்கே ஊடுருவித் தாக்க ஆரம்பிக்கின்றனர். கேளிக்கை விடுதி குண்டர்படைக்கும், கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நாசம் செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ராஜர்காட் எனும் கிராமப் பகுதியில்தான் இவை அனைத்தும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்தன.
மேற்கு வங்கத்தைத் தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றுவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் புத்ததேவ் பாணியில், அடித்து உதைத்து நிலங்களைப் பறித்தெடுக்காமல், ராஜர்காட் பகுதியில் ‘அமைதியான முறையில்’ நிலம் கையகப்படுத்தப்பட்டதாம். இதுதான் மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பாணி!
இந்தப் பகுதியில் “ராஜர்காட் புது நகரம்” என்ற திட்டத்தின் பெயரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிகளும், பூங்காக்களும், மேல்தட்டு விபச்சார விடுதிகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட கேளிக்கை பூங்காக்களில் ஒன்றுதான் “வேதிக் வில்லேஜ்’’.
கிராம மக்களும், குண்டர்களும் வேதிக் வில்லேஜ் என்ற கேளிக்கைப் பூங்காவில் மோதிக் கொண்ட பிறகுதான், அம்மக்களிடம் நிலங்களைப் பறித்த அரசுக்கும் மாபியா கும்பலுக்குமிடையிலான வலைப்பின்னல்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கைநனைத்த மோசடிகளும், சி.பி.எம். கட்சியினர் இம்மோசடியில் முங்கிக் குளித்ததும் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கின.
வேதிக் கிராம நிர்வாக அமைப்பின் துணை மேலாளரான பிப்லவ் பிஸ்வாஸ், குண்டர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கிராம மக்கள் மீது தாக்குதலை ஏவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு, வேதிக் கிராம ஓய்வு விடுதி கம்பெனி (VRC)யின் நிர்வாக இயக்குனரான ராஜ்மோடி மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமினல் குண்டர்கள் துணையுடன் நிலமோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளைப் பெரும்பான்மையாக கொண்ட ராஜர்காட் பகுதி, மேற்கு வங்கத்திலேயே மண்வளமிக்க பகுதிகளில் ஒன்று. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு போகம் வரை விளையக்கூடிய அளவுக்கு மண்வளமும், நீர்வளமும் அபரிமிதமாக உள்ளது. அனைத்து பயிர் வகைகளும், தானியங்களும், காகனிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவையில் 20 முதல் 25% இந்தப் பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் நீர்பாசனத்திற்கு மட்டும் ஐந்து கால்வாகள் உள்ளன. இந்த கால்வாகளையும், பிற செயற்கை மீன்பிடிக் குட்டைகளையும் நம்பி மீன்பிடித் தொழிலும் வளமாக உள்ளது. பால் உற்பத்தியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் வளமிக்க அந்த மண்ணை நம்பித்தான் உள்ளன.
இந்தப் பகுதியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகளும் அது சார்ந்த பிற உள்கட்டுமானங்கள், கேளிக்கை விடுதிகள், வீட்டுவசதிகள் போன்றவற்றை நிர்மாணிப்பது என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வியாபாரமும் 1999-க்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. டி.எல்.எப், கெப்பெல் லாண்ட், யுனிடெக் குரூப், சிங்கப்பூரைச் சேர்ந்த அஸென்டாஸ், வேதிக் ரியால்டி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கின. 2005-இல் டி.எல்.எப்.-பின் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இவற்றுக்குத் தேவையான நிலங்களைத்தான் மிகக் கொடூரமான, விரிவான சதித் திட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பறித்துள்ளது சி.பி.எம். அரசு. 1995-லேயே இந்தப் பகுதி நிலங்களும், நீர்நிலைகளும் “ராஜர்காட் நகர்ப்புறக் குடியிருப்பு” என்ற திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்தது. இதையொட்டி சுமார் 7000 ஹெக்டேர் அளவிலான நிலமும், நீர்நிலைகளும் கையகப்படுத்தப்படுவது 1999-லிருந்து தொடங்கியது. இத்திட்டம் வரும் முன்னரே, காங்கிரசு கட்சியால் பாதுகாக்கப்பட்ட ரவுடியான ருதஸ் மண்டலை சுவீகரித்துக் கொண்ட சி.பி.எம். கட்சி, 1993-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அவனைக் களமிறக்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் செய்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இவனை வெற்றியடையச் செய்தது சி.பி.எம். இவனைப் போன்ற ஒரு ரவுடியை அதிகாரத்தில் வைப்பதன் மூலம் மக்களை மிரட்டி நிலங்களை அபகரிக்க முடியும் என்ற திட்டத்துடன்தான் சி.பி.எம். அரசு இதனைச் செய்தது.
ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னரே மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய நில விற்பனைத் தரகு மாபியாவும், சி.பி.எம். கட்சியின் நெருங்கிய நண்பனுமான, கமல் காந்தியும் அவனது மார்வாரி நண்பர்களும் இந்தப் பகுதியில் நிலங்களை வாங்கிப் போடத் தொடங்கினர். சி.பி.எம். கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் ராஜர்காட் பகுதியில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்தான், கமல் காந்தி. நிலங்களைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் இவனால் கடுமையாக மிரட்டப்பட்டனர். சில கொலைகளும் விழுந்தன. நிலங்களை கைமாற்றியதில் சி.பி.எம். பிரமுகர்கள் பலரும் நேரடியாக லாபம் அடைந்தனர். போலீசு-சி.பி.எம்.கட்சி-ரவுடிகள் கூட்டணியுடன் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கத் தொடங்கினான் கமல் காந்தி. வாங்கிய நிலங்களில் ஒரு பெரும் பகுதி சி.பி.எம். கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரும், கமல் காந்தியின் உறவினருமான சரளா மகேஸ்வரிக்குச் சொந்தமாக்கப்பட்டது. இதன் காரணமாக சி.பி.ஐ. (மார்வாரி) கட்சி என்ற பெயரும் சி.பி.எம்.-முக்குக் கிடைத்தது.
1999-இல் அரசு நிர்ணய விலையே ஒரு காதா (மேற்கு வங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நில அளவை)விற்கு ரூபா 40,000 லிருந்து 50,000 வரையாகும். ஆனால் ராஜர்காட் நிலங்களுக்கு அரசு தந்ததோ வெறும் 4000 முதல் 5000 ரூபா வரை மட்டுமே. இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அநியாயத்துக்குத் துணை போகுமாறு உள்ளூர் சி.பி.எம். கமிட்டிகளே கூட செயலிழக்கச் செய்யப்பட்டன. இவற்றைத் துணிச்சலோடு எதிர்த்தவர்கள் காணாமல் போயினர்; அல்லது கொடூரமாகக் கொல்லப்பட்டு, தற்கொலை என சோடிக்கும் வகையில் மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இது போலக் கொல்லப்பட்டவர்கள் 50 பேருக்கும் மேல் இருக்கும்.
சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நில அபகரிப்பை எதிர்ப்பதில் ஈடுபாடு காட்டினால், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டனர். முன்னணியில் நின்று செயல்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர். நந்திகிராம் பாணியில், சிகப்பு நிற நெற்றிப் பட்டையைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான சி.பி.எம். குண்டர்கள் கிராமங்களில் வலம் வந்து மக்களை மிரட்டினர். இந்நிலையில், நில அபகரிப்பை எதிர்த்த விவசாயிகள் ஒரு இயக்கம் கட்டினர். அதே போல, விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதால் வேலை இழந்தோர் இன்னொரு இயக்கம் கட்டினர். இவ்விரண்டு இயக்கங்களின் தலைவர்களும் தனியே அழைத்து வரப்பட்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான ராபின் மண்டல் முன்னிலையில், சி.பி.எம். குண்டர் படையினராலும் போலீசு குண்டர் படையினராலும் மிரட்டப்பட்டனர். குனி, ஜட்ராகச்சி மற்றும் சுலன்குரி போன்ற பகுதிகளில் மக்களின் போராட்டங்கள் சி.பி.எம். குண்டர் படையாலும், போலீசாலும் ஒடுக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான போலீசு படை, இப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
இன்னொரு பக்கம், மக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் வலுத்து வந்த நிலையில், ராஜர்காட்டில் சி.பி.எம்.மிலிருந்து வெளியேறிய கமல் பத்ரா என்பவர் தலைமையில் ஒரு இயக்கம் உருவானது. சி.பி.எம். குண்டர் படை இவரைக் கடத்திச் சென்று கொன்று பிணத்தை மரத்திலே தொங்கவிட்டது. இவரது படுகொலை, ராஜர்காட் பகுதியின் எதிர்ப்பியக்கங்களுக்கு பேரிடியாக அமைந்தது. எதிர்ப்பியக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தன.
ராஜர்காட்டில் நடந்த இந்த நிலப்பறிப்பு மோசடிகள் அனைத்திலும் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும், ரவுடிகளும் நேரடியாக லாபம் அடைந்தனர். எனவேதான், நந்திகிராமிலும் சிங்கூரிலும் விவசாயிகளுக்காகப் போராடுவதாக நாடகமாடிய மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு, ராஜர்காட் மோசடிக்கெதிராக ஒப்புக்குக் கூட பேசவில்லை. ஒருபடி மேலே சென்று, விவசாயிகளை நம்ப வைத்து அக்கட்சி கழுத்தறுத்தது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பை எதிர்த்து விவசாயிகளின் இயக்கம் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. திரிணாமுல் காங்கிரசும் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்நிலையில், “நாங்களே வழக்கு நடத்துகிறோம், எங்களால்தான் வழக்குக்கான பொருளாதாரச் சுமைகளை சமாளிக்க இயலும்” என்று கூறி விவசாயிகளின் வழக்கை அக்கட்சி வாபஸ் பெற வைத்தது. அதைத்தொடர்ந்து, உடனே திரிணாமுல் காங்கிரசும் வழக்கைத் திரும்பப் பெற்று கழுத்தறுத்தது.
அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தான்மே மண்டல், ராஜர்காட்டில் எஞ்சியுள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு அபகரித்து, அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளான். எஞ்சியுள்ள நிலம் குறித்த விவரங்களை சி.பி.எம். கட்சிக்காரர்களின் உதவியுடன் ஹிட்கோ (HIDCO) அரசு அலுவலகத்தில் இருந்து இவன் பெற்றுள்ளான். இந்த சி.பி.எம். திரிணாமுல் காங்கிரசு கூட்டணி ஒரு காதாவிற்கு ரூபா பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே கொடுத்துவிட்டு, அதனை ரூபா 5 முதல் 6 லட்சம் வரை விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது.
எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்ட நிலையில், ராஜர்காட்டின் வளமிக்க குளம், குட்டைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் நிரவப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சி.பி.எம்., காங்கிரசு, திரிணாமுல் கட்சியினர் இவற்றில் முதலீடு செய்து கொழுத்த லாபமடைந்தனர். மாநகராட்சி விதிமுறைகளில் தில்லுமுல்லுகள் செய்து பல கோடிகள் சுருட்டப்பட்டன. புற்றீசல் போல கேளிக்கை பூங்காக்கள் பெருகின. விபச்சாரமும், குடியும் கூத்தும் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட கேளிக்கை விடுதிகளில் ஒன்று, சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு வீராங்கனையுமான ஜோயிதிர்மயி சிக்தரின் கணவருக்குச் சொந்தமானதாகும். வேதிக் வில்லேஜ் கேளிக்கை விடுதியே சி.பி.எம்.மின் கூட்டாளியான மார்வாரி கமல் காந்தியின் நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜர்காட்டில் இப்பொழுது மீதமிருக்கும் விவசாய நிலங்களையும் அபகரிப்பதற்காக இன்னொரு திட்டம் அங்கு செயல்படுத்தப்பட உள்ளது. பாங்கோட் ராஜர்காட் பகுதி மேம்பாட்டு நிறுவனம் (BRADA-Bhangot Rajargat Area Development Authority) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் செயலாளராக இருப்பவர் சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினரான ராபின் மண்டல். இந்தத் திட்டத்திற்காக ஒரு காதாவிற்கு ரூபா எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கொடுத்து வாங்கியுள்ள ராபின் மண்டல் கும்பல், அதனை ரூபா 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்றுக் கொள்ளை லாபம் அடைந்துள்ளது.
சி.பி.எம்.-மின் நில மோசடி சந்தி சிரிக்கத் தொடங்கியவுடன், அந்தக் கட்சியின் மாநிலக் குழு தலையிட்டு ராஜர்காட் திட்டத்தைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறியுள்ளது. சி.பி.எம். அரசோ தேனெடுத்த கையால் புறங்கையை நக்கிப் பழகிவிட்டது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடத் தயங்கியது. சி.பி.எம். கட்சியின் நிலம் மற்றும் நிலச் சீரமைப்புத் துறை அமைச்சரான அப்துர் ரெசாக் மொல்லா பின்வருமாறு திமிராக கூறினார்: “பொழுதுபோக்கு மையத்திற்கும், கேளிக்கை விடுதிக்கும் நிலம் கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்று. அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் உள்ள சீத்தாரம் யெச்சூரியோ “விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ராஜர்காட்டில் நிலம் ஒதுக்குவதை நிறுத்தக் கூடாது” என்கிறார்.
மம்தா பானர்ஜி ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சினையில் ஆழ்ந்த மௌனம் சாதித்தார். பின்னர் விவசாயிகளின் அதிருப்தியைத் தொடர்ந்து, எதிர்ப்பது போலப் பாசாங்கு செய்தார். இப்பொழுது சி.பி.எம். அரசே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு பின்வாங்கும் நிலையில், நிலங்களை மீண்டும் கைப்பற்றி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகளிடம் சவடால் அடிக்கிறார். ஆனால், விவசாயிகளால் மீண்டும் விவசாயம் செய்ய இயலாது. ஒருவனைக் குடிபோதையில் தள்ளிவிட்டு மீண்டும் குடிக்காதே என்று சொல்லுவது போல, நவீன நகரத்தை உருவாக்கி விவசாயிகளை உதிரிப் பாட்டாளிகளாக மாற்றிவிட்டு, அத்தகைய கலாச்சாரத்தில் தள்ளிவிட்டு, இப்பொழுது மீண்டும் விவசாயம் செய்யச் சொன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பழைய வாழ்க்கைக்கும், புதிய வாழ்க்கைக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர்.
சி.பி.எம். தலைவர்கள் நேரடியாகவே ராஜர்காட் நில மோசடியில் ஈடுபட்டு அம்பலமாகியுள்ளனர். கட்சியோ இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்குத் தயாராக இல்லை. ஊழல் பெருச்சாளிகளான உள்ளூர் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மே.வங்கத்தில் சி.பி.எம். கட்சியே காணாமல் போய்விடும். எனவேதான், விசாரணை ஏதுமின்றி திட்டத்தைக் கைவிடச் சொல்லி சாமர்த்தியமாக களவாணித்தனத்தை மறைப்பதற்குக் கற்றுத் தருகிறது. இந்த ஞானோதயம் கூட சி.பி.எம். கட்சிக்கு நேர்மையின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தோன்றவில்லை. ஏற்கெனவே நகர்ப்புறங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகள், தொழிலாளி வர்க்கம் போன்றவை, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைக் கைகழுவி விட்டன. அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் விவசாயி வர்க்கமும் கைகழுவி விட்டதென்றால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் எனும் அச்சத்தின் காரணமாகவே இந்த ஞானோதயமும் வந்துள்ளது.
சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம். ஊழலையும் மோசடியையும் எதிர்த்துப் போராட உறுதி கொண்டவர்களும், புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும் ராஜர்கட் பகுதிக்குப் போய்ப் பாருங்கள். அல்லது, சி.பி.எம். தலைவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது, உள்ளூர் தலைவர்களின் ஊழல் சந்தி சிரித்த பின்னரும் விசாரணை நடத்தாதது ஏன் என்ற கேள்விகளைக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பாருங்கள். எச்சரிக்கை! கமல்பத்ராவுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படலாம்.
-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
……………………………..
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்
////சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம்.///
இதென்ன வெத்து பில்டு அப்… இதே குற்றச்சாட்ட உங்க இயக்கத்து மேல வெச்சா வெத்தல பாக்கு வெச்சு அழைப்பு குடுப்பீங்களா… பாத்துக்கிட்டே இருங்க… இப்ப நான் எழுதிருக்குற படிச்சுட்டு எப்படிலாம் குதிக்கப்போறாங்கன்னு…
கணேசு,
இந்த பதிவைப் பத்தி என்னங்க உங்க கருத்து? பில்டப் அது இதுன்னு ஏன் ஓடனும்?
சத்ரதார் மஹதோ ஒரிசாவுல வாங்கிருக்குற பங்களா பத்தி எழுதலாமே??
5 வங்கியில் கணக்கு..மற்றும் 1 கோடிக்கு காப்பீடு … இதல்லாம் சேர்த்து எழுத சொல்லுங்க …ம.க.இ.க வின் சொத்து கணக்கை காட்டுங்க பார்க்கலாம்.. புதுசு புதுசா போஸ்டர் .. எப்படி இதல்லாம் வந்தது.. ஓ ஓ புரியுது புரியுது…எல்லாம் உன் எஜமானின் டாலர்ஸ்…சுப்பர் அப்பு…
‘எல்லாம் உன் எஜமானின் டாலர்ஸ்…’ அப்படின்னா என்னதுங்க..டாலருன்னா…நம்ம சகாவு பினராயி லாவுலீன் கிட்ட வாங்குனாகளே அதுங்களா? அது யு.எஸ்.டாலரா இல்ல.கனடியன் டாலரா?
அவர்கள் கைகழுவி விட்டார்கள்… இவர்கள் கைகழுவி விட்டார்கள்ன்னு புளகாங்கிதமடயுறீங்களே… உங்களுக்குதான் இந்த ஜனநாயக நடைமுறைல நம்பிக்கையில்லையே…
நண்பர்களே எனக்கு காந்தி(ஜி???) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி
//நண்பர்களே எனக்கு காந்தி(ஜி???) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி//
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3579:2008-09-05-14-18-43&catid=184:2008-09-04-19-45-07&Itemid=109
கை கொடுத்துக் காலை வாரிய காந்தி –
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3563:2008-09-05-13-46-33&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59
காந்தியவாதி என்று தன்னை சொல்லிக் கொள்ளும் மா சிவக்குமாருடன் ஒரு விவாதம்:
http://masivakumar.blogspot.com/2006/06/14.html
காந்தி நல்லவரா? கெட்டவரா? –
http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html
‘ஹே ராம்’ விமர்சனமும், காந்தி வாங்கிக் கொடுத்த தந்திரமும் –
http://poar-parai.blogspot.com/2006/11/blog-post_116376736736683523.html
அஹிம்ஸை – ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே! –
http://poar-parai.blogspot.com/2006/11/blog-post_116376560179341003.html
பகத்சிங் -ஒரு அறிமுகம் –
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5441:2009-03-15-14-12-58&catid=285:2009-02-14-20-24-11
தோழமையுடன்,
அசுரன்
அசுரன், காந்தி தொடர்பில் தகவல்களை தந்தமைக்கு மிக மிக நன்றி.
அன்புடன் ஜீவா
ஜீவா,
இவைகளையும் பாருங்களேன் :
http://jeyamohan.in/?p=4103
காந்தியும் சாதியும்
மக்களிடம் போனவர்கள் எல்லாம் மகாத்மாவா…
மேநாட்டு மோஸ்தருக்கு அடிமையாக இருந்த்தை அவரே தமது சுயசரிதையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
சாதி என்பது பேரரரசுகளுக்கு எதிரானது என்றால் நம்ப முடிகிறதா.. அப்படியானால் அந்நிய படையெடுஃப்பை தடுப்பதற்கு சாதி உதவியது என ஒரு இடத்தில் சொல்வது இக்கருத்தோடு முரண்படுகறதே…
சாதியை பார்ப்பனர்கள் உருவாக்கவில்லை என்றாலும், ஆண்டைகள் கண்டறிந்த முறையாகத்தானே இருக்க முடியும்.. அல்லது தொழிலாளிகளே சேர்ந்து முடிவெடுத்து இருப்பார்களா இனிமேல் செருப்பு தைப்பது மட்டும்தான் நமது குடும்பத் தொழில் என்று…
நுகத்தடி என்பது மாட்டும் வரைக்குத்தான் மாடுக்கு கடினம். அதற்கு பிறகு அதுதான் அதனது அடையாளம்.சாதியும் அப்படித்தான்.
சாதியாக இடம்பெயர்ந்த்து இந்தியாவில் நடக்கவில்லை. ஆந்திரத்தின் நிலவுடமை நலிந்தபோது நிலக்கிழார் மாத்திரமா வெளியேறுவார். பண்ணையடிமை அவருடன் வெளியேற மாட்டானா…
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நியாயப்படுத்த முடியாது. உதாரணமாக நீங்கள் ஒரு ஊருக்கு களப்பணி ஆற்றப் போகின்றீர்கள். மக்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை. அதற்காக திரும்பி விடுவீர்களா..
வர்க்கம் தனிநபர்களாக்கினாலும், தனிநபர்கள் அறிவியல் பூர்வமாக சிந்தித்து தங்களை அமைப்பாக்குகின்றனர். நாகரிகமடைந்த மனிதன் எனும் விலங்கு செய்வது இது. ஆனால் இயற்கை உந்துதலைப் போல, சிந்திக்க அவசியமே இல்லாமல் சேர்வது சாதி. அதற்கு சமூக இயல்பு இருப்பதாக சொன்னால், பாலியல் உறவுகளில் விபச்சாரம் கூடத்தான் சமூக மயமானது.. அதுக்காக ஆதரிக்கவா செய்கின்றீர்கள்…தனித்து விட்ப்படும் சாதிய சமூகம் குல்த்திற்குள் தூய குலவாதத்தை முன்வைத்து தமக்குள் மேலும் குறுங்குலங்களை உண்டு பண்ணும்.
அறிவு ஒரு வயதுக்கு பிறகு கெட்டிப்படும் ரசிகர்களுக்கு அவர் ஒரு மகாத்மாதான்.
உயர்சாதியினர் தாழ்த்தப்பட்வர்களை மணம்முடிப்பதை ஆதரித்தாரே காந்தி, தாழ்த்தப்பட்டவர்கள் உயர்சாதியினரை மாத்திரமே மணம் முடிக் வேண்டும் என ஏன் சொல்லவில்லை. தனது மகன்களுக்கு கூட அய்யங்கார் பொண்ணுதானே கல்யாணம் செய்து வைஃதார்.
மற்றபடி வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையை ரத்து செய்ய வைக்க, உண்ணாவிரதம் இருந்து இந்து மத்த்தின் அடிமைகளாக தலித்துகளை மாற்றிவிட்டு நாற்பதுகளில் திருந்தி விட்டாராம்… அந்த வரலாற்று தவறுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காத தா… ளி அவனெல்லாம ஃமகாத்தமாவாம்…
http://jeyamohan.in/?p=2773
காந்தியின் துரோகம்
http://jeyamohan.in/?p=4311
காந்தியும் தலித் அரசியலும் 2
http://jeyamohan.in/?p=4307
http://jeyamohan.in/?p=4327
http://jeyamohan.in/?p=4335
கொள்கை என்பது வேறு வழிமுறை என்பது வேறு. நடைமுறைப்படுத்துகையில் இரண்டும் ஒன்றாக இருப்பதால் இரண்டும் மற்றொன்றை இட்டு நிரப்பி விடாது. காந்தியம் ஒரு கொள்கை என்ற ஜெயமோகனின் புரிதல் பாமரத்தனமானது. நிற்க
சுபாஷ் சந்திர போஸ் மீது எனக்கும் விமர்சனம் உண்டு. பின்னர் அவர் தவறிவிடுவார் என்பதை முன்ன்றிந்துதான் காந்தி அத்தகைய மாபெரும் ஜனநாய விரோத முடிவை எடுத்தாரா.. மக்களிடம் தனது தரப்பின் நியாயத்தை எடுத்துவைக்காமல் விலகுவது சுத்த கோழைத்தனம். அன்றைக்கு காங்கிரசு கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த பனியா கும்பலின் நிர்ப்பந்தம்தான் காந்தியை வெற்றிபெற வைத்த்து. மக்களது விருப்பத்தை பிர்லாக்களின் விருப்பத்திற்கு அகிம்சை முறையில் உட்படுத்தினால் என்ன ஆயுத வழியில் உட்படுத்தினால் என்ன•…..
அப்புறம் ஜெயமோகனுக்கு உரிய வரலாற்று அறிவின்மையால் எழுதப்பட்ட சில வரிகளும் உண்டு. வங்கத்திற்கு எதிராக தேச ஒற்றுமையை கணக்கில் கொண்டு பட்டாபியை தேர்வு செய்தார் என்று. பட்டாபி தோற்க வேலை செய்த கும்பல் தமிழகத்தை சேர்ந்த்து. அவர்களில் பலர் ஆந்திர மாநில கமிட்டியிலும் இருந்தனர். உண்மையில் பின்னர் தனது காரோட்டிக்கு அமைச்சர் பதவி தந்தால் பெருந்தன்மையானவன் என்ற பெயருடன் நல்ல அடிமையும் கிடைப்பான்
என்ற பின்னர் நிகழ்ந்த தமிழக நிகழ்வுகளுக்கு முன்னோடி தான் தனது உதவியாளரான பட்டாபியை காந்தி நிறுத்தியது. ஜனநாயகத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.
பகத் சிங் கிற்கு வரலாற்று அறிவில்லை என்பது அபத்தமானது. காந்தியை விட நேர்மையான ஆழமான தூரப்பார்வையுடன் கூடிய வரலாற்று அறிவு உள்ளது என்பதை இருவரது எழுத்துக்களிலுமிருந்தே புரிந்து கொள்ள முடியும். அதற்கு பகத் எழுதிய கடிதங்களை, பிரசுரங்களை படிக்க வேண்டும். கேள்விப்பட்டதை வைத்து எழுதக்கூடாது. கராச்சி காங்கிரசுக்கு முன் தூக்கிலிடுங்கள் என கூறியது ஆவணங்களில் பதிவாகி உள்ளது. காந்தி தப்பிக்க முடியாது. பிரட்டிஷ் சாம்ராஜ்யம் அழிவதை எனக்கு வைஸ்ராய் விளக்கினார். நான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் என நிருபர்களிடம் சொன்னது உலக அளவில் பதிவாகி உள்ளது.
மக்களது ஆதரவு பகத் திற்கு இருந்த்து என்பதற்கு ஆதாரம் காந்திக்கு நாடு முழுவதும் காட்டப்பட்ட கருப்புக் கொடிகள். வரலாற்றின் எளிய மாணவர்கள் என்று தன்னடக்கத்துடனும், இந்தப் போர் எங்களோடு முடியவில்லை என்பதை அறிவிப்பதற்கும் ஒரு 20 வயது இளைஞனுக்கு முடிகின்றதென்றால் அந்த ஆளுமையை சிறுமைப்படுத்த ஜெயமோகன் போன்ற அற்ப பிராணிகளால்தான் முடியும்.
இந்த பிர்லா வீட்டு நாய்க்குட்டியான காந்தியிடமிருந்து இதனைத்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் அம்பேத்காரிடம் இரட்டை வாக்குரிமையைப் பறிக்க அவர் நடத்திய உண்ணாவிரதம் 2000 ஆண்டுகளாக சாதி அடிமைத்தனத்தில் வைத்திருந்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பாதங்களை ந்க்கிய செயல் இல்லையா.. அவர்களின் தலையெழுத்தை இன்னமும் நாசமாக்க ஒரு உண்ணாவிரத்த்தை பயன்படுத்தினான் காந்தி. அந்த காந்தியை அவனது இத்தகைய இழுவான செயல்முறை ஐ தனது ஜனநாயகத்திற்கான உண்ணாவிரத்த்தின் மூலம் கடந்த பத்தாண்டுகளாக கேள்விக்குள்ளாக்கி வருகிறாள் ஐரோம் சர்மிளா. அந்த இளம்பெண்ணின் உண்ணாவிரதம் வடகிழக்கின் ஜனநாயகத்திற்காக டெல்லியில் தொடந்து நடக்கிறது.
மைய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் தலித்துகள் என்பது அவர்களது சேவையை இலவசமாகவே இந்த நூற்றாண்டிரும் பெறத் துடிக்கும் மேல்சாதிக் கும்பலின் வேட்கை. அப்படித்தான் வடகிழக்கையும் அப்பெண்களையும் பெண்டாள்கிறது இந்திய ராணுவம். காந்தி பிறந்த தேசத்தில் பிறந்த்தற்காக அவமானப்படுகிறேன்.
ஐரோம் ஷர்மிளா என்ற அந்தப் போராளி பிறந்த காலத்தில் நானும் பிறந்து வாழ்ந்து வருவதற்காக பெருமைப்படுகிறேன்
என்னடா.. ரொம்ப நாளா ஒரிஜினலு இடமிருந்து பீலா எதுவும் இல்லாம இருக்கே என்று நினைத்தேன்.. பெரிய கண்டுபிடிப்பு செய்து மூலை அறிப்புக்கு ஒரு பின்னூட்டம் இடப்பட்டுள்ளது.. சி பி எம் பத்தி எழுதலனா மருதையன் ஆத்துல ஃப்ராப்ளம் வந்து தொண்டர்கள் எல்லாம் கட்சி திட்டம் பற்றி கேட்டு விட்டால் என்ன செய்வது… கட்சி பேர் கூட சொல்லம எவ்வளவு நாளைக்கு நல்லவன் மாதிரி நடிப்பது… கேட்டா நாங்க நாளைக்கு காலையில புரட்சி பண்ணப் போரோம்..கும்மிடிபூண்டி தாண்டி புரட்சி வந்துவிட்டது…இப்படியே எவ்வளவு நாளைக்கு வலிக்காத மாதிரி நடிப்பது… சீ ..இதல்லாம் ஒரு பொழப்பு… போய் வேலைய பாரு.. கப்பி தனமா பேசிட்டு இருக்க..
அசுரன், காந்தி தொடர்பில் தகவல்களை தந்தமைக்கு மிக மிக நன்றி.
அன்புடன் ஜீவா
கார்ட்டூன் அருமையாக இருக்கிறது. யார் வரைந்தது?
சிபிஎம் – தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதை இங்குள்ள சிபிஎம்காரர்கள் பெருமையாக சொல்லித்திரிகிறார்கள். இன்று இப்படி பட்ட ஊழல்களை மூடி மூடி மறைக்கிறார்கள். எவ்வளவு காலத்திற்கு தான் தாங்குவார்கள் என பார்க்கலாம்.
நொந்தகுமாரா… உன் கட்சி பேர் கூட சொல்ல மாட்டாங்க… கார்டூன் வரைந்தவர் பேர சொல்லுவாங்களா? ஒரு வேல நீ கூட இத வரைந்து விட்டு உன் பேர போடாததால இப் படி கேட்கிறாயா?
டேய்..’உங்க கச்சிப் பேரச் சொல்லு’ இப்படின்னு சந்துக்கு சந்துக்கு நின்னு கேக்கறதே..ஒரு கொள்கையாடா.. என்னாவது பேரு இருந்துப் போவுது..அவங்களுக்கு (ம.க.இ.க.) பேரே கெடையலன்னாலும் கம்யூனிஸ்டா நடந்துக்கிறாங்க..ஆனால் உன் யோக்கியதை என்னடா…போர்ஜரி, நிலமோசடி, மக்கள் மேல துப்பாக்கிச்சூடு..இதை எல்லாம் பண்ணிப்புட்டு மா.கம்யூனிஸ்ட்டுன்னு பேரு வச்சிருகியே…வெக்கமாய்யில்ல.. கொஞ்சம் மண்டைக்குள்ள இருக்கிற சதைப்பிண்டத்துக்கு வேலை கொடுத்து அது தரும் பலனை எமக்குக் காட்டு..’ஆத்தா வையும்..சந்தைக்குப் போகனும்..காசக்குடு’ங்கறா மாறி..’உன் கச்சிப் பேரச் சொல்லு’…ன்னு கேக்கறதே ஏதோ வர்க்கப்போராட்டம் மாதிரி நெனச்சுக்கிறது..
போலி, எப்பவும் வரைஞ்சவங்க பேரு சொல்வாங்களே! அதுதான் கேட்டேன். கட்சி பேரு எல்லாம் சொல்லிட்டாங்க! திட்டத்த குடுத்து படிக்க சொல்லியிருக்காங்க! படிச்சுட்டு இருக்கேன். போலி கம்யூனிஸ்ட் கட்சியில அரசியலே சொல்லித்தர மாட்டாங்களாமே அப்படியா? அதனால் தான், பதிவுக்கு நேர்மையாக அரசியல் ரீதியாக பதில் சொல்லாமல், என்ன பேரு? என்ன பேரு? புலம்புறீங்க!
வாங்க வீணா போன சூனா பாணா… எந்த வகையில் ம.க.இ.க. கம்யுனிஸ்ட் கட்சி? வர்க்க எதிரி யார்? திட்டம் என்ன? அமைப்பு சட்டம் என்ன? இது எதாவது அவர்களுக்கு இருக்கா? அப்படி இருந்தா இந்த வலையில் அதன் பதிவு போட சொல்லு… கருனானிதி மாதிரி ம.க.இ.க வும் ஒரு கம்யுனிஸ்ட் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஒரு குறுங்குழுவாத கூட்டம்.. ஸோவியத் வீழ்ச்சிக்கு பின் கம்யுனிஸ்ட்கட்சி என்று சொல்ல மறுத்து கட்சி பேரை மாற்றி விட்டனர்..அதுப்போல் ம.க.இ.க. உம் தன் கட்சி பேர்சொல்ல் மறுக்கிறார்கள்..இதை மறுத்து , நான் என்னவோ , உன் பேர் கேட்ட மாதிரி குதிக்கிற? தைரியம் இருந்தா, உன் கட்சி பேரும், திட்டதை சொல்லு… தரம் தாழ்ந்த பதில் தான் உன்னிடம் வரும் என்று அறியாதவன் நாங்கள் அல்ல… தோழர்.பினராயி பற்றி பேசும் முன், அது சம்பந்தமான முழு விவரம் தெரிந்து பேசு… சும்மா தினகரனையும், தினமலரையும், இத்துப் போன புதிய ஜன நாயக்கத்தை படித்து விட்டு மூலை அரிப்போடு எழுதாதே.தோழர் லெனினின்.இடது சாரி கம்யுனிசம் இளம்பருவக்கோளறு புத்தகத்தை படித்து விட்டு வௌன் விமர்சனத்தை வை..
யோவ் வெண்ணெ வெட்டி, நீ சந்திப்பா ரமேசு பாபுவோ இல்ல வேறு எந்த சிபிஎம் நாதாரியோ.. எத்தன வாட்டி எத்தன பேர்லடா வந்து ஒரே கேள்வியை கேட்பீங்க? அதுக்கும் எத்தன தடவ இவங்க பதில் சொல்லுவாங்க?
இதெல்லாம் பெரிய கேள்வின்னு தூக்கிட்டு வந்துட்டான் வெண்ணெ.
ஒங்க மேல ஒரு விமர்சணம் வெச்சா அதுக்கு பதில் சொல்ல வக்கிருந்தா பதில் சொல்லு.. இல்லன்னா பொத்திட்டு ஒக்காரு. ஜெயலலிதா வூட்டு கக்கூஸு அடச்சிருக்காம் க்ளீன் பண்ண ஒங்களத்தான் தேடிட்டு இருக்காங்க போய் பொழப்பப் பாருய்யா… அடுத்த எலீக்சன்ல ரண்டு சீட்டு எக்ஸ்ட்ராவா தூக்கிப் போடுங்கல்ல?
//கருனானிதி மாதிரி ம.க.இ.க வும் ஒரு கம்யுனிஸ்ட் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஒரு குறுங்குழுவாத கூட்டம்.. ././
ம க இ க கம்யுனிஸ்டு இல்லனு வைச்சிக்கலாம். நீ கம்யுனிஸ்டா? அதத்தான இந்த பதிவு கேட்டுறுக்கு. அதுக்கு பதில் சொல்லுடா கொய்யால…
தோழர்களே,
இப்ப இந்த ஆளுக்கு என்னா வேணுமாம், கட்சி பேரு தானே வேணும். பாசிச போலிக்கம்யூனிஸ்ட்டே இதுல என்னாடா பெரிய ரகசியம் இருக்கு. நல்லா குறிச்சிக்க எங்க கட்சி பேரு இந்திய பொதுவுடைமை கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மாநில அமைப்பு கமிட்டி)
கட்சி பேர சொல்லியாச்சு சரி அடுத்து என்ன பன்னனும்னும் சொல்லு.
இதன் மூலம்,அதாவது இந்த கேள்விக்கு இந்த ஆள் சொல்லப்போகும் பதிலின் மூலம் பாசிஸ்டுகளாகி விட்ட இந்த போலிக்கம்யூனிஸ்டுகளின் கைக்கூலித்தம் இப்போது நன்றாக வெளிப்படும் அனைவரும் வேடிக்கை பாருங்கள்.
கேட்ட கேள்விக்கு பதில தரமுடியல ….ஆரோக்கியமான விவாததுக்கு வர திராணி இல்லத ம.க.இ.க திருட்டு கும்பல் ..கம்யுனிஸ்ட் கட்சி என்று சொல்லி ஊரை ஏய்து பிழைக்கும் ஒரு கொள்கை இல்லாத கூட்டம்..கணீனி முன் அமர்ந்து புரட்சி பற்றி அளப்பரை அடிக்கும் வெத்து வேட்டு..எங்களை பார்த்து பாசிச கும்பல் என்று சொல்ல அருகதை அற்ற ஒரு பிண்டகங்கள்..30 வருடமாக அமைப்பு கமிட்டி என்று சொல்லியே உன் கூட்டம் நாய் கையில் கிடைத்த தேங்காய் போல் அலையும் உனக்கு, வேறு வேறு பெயரில் வந்து பின்ணூட்டம் இடுவது உன் தொழில் …எங்களுக்கு இல்லை… வேண்டும் என்ரால் ஐ.பி எண் பார்த்து நான் உன்னைப் போல் பேடி இல்லை என்ரு தெரிந்து கொள்… தோழர் ரமேஸ்பாபு விற்கு கட்சி வேலைகள் உண்டு..உன் அரிப்புக்கு பதில் அளிப்பது அவர் வேலை இல்லை..உன் திருட்டுதனத்தை அவர் பதிவில் கொண்டு வந்த பிறகு, எதெர்கெடுதாலும் அவர் தான் உனக்கு பதில் சொல்கிறார் என்று சொல்வதே உனக்கு ஒரு பொழப்பு..து..தூ..
உன் திட்டதை மக்களிடம் சென்று சொல் செருப்படி கிடைகும்.. ஈழ்ப் போர் உந்தன் போர் என்றாய், முத்துக் குமாரின் மரனத்தில் உன் அரிப்புக்கு ஆள் தேடினாய்,.. ஒரு காலத்தில் இட ஓதுக்கீடா கூடாது என்ரு பொலம்பினாய்..பிறகு அதை மாற்றி கொண்டாய்.. பச்சோந்தி தனமாய் இருக்கும் உனக்கு அரசியல் விவாதம் பற்றி விவாதிக்க முடியாது..ஏன் என்ரால் உனக்கு நிலையான அரசியல் கிடயாது..சி.பி.எம் மின் எல்லா போராட்டதிலும் வந்து..உன் கழிவரை பத்திரிக்கையை விற்று பிழைக்கும் பன்றிக் கூட்டம்…மம்தாவின் கழிவரை கழுவிய அனுபவம் உனக்கு உண்டு..அது போல் நாங்கள் இல்லை.. சோசலிசம் ஒன்றே எங்கள் லட்சியம்.
ஏய்..ஏய் எதுக்குய்யா இப்ப இப்படி பதறுற ?
நல்லாத்தானே போய்கிட்ருக்கு, திடீர்னு ஏன் இப்படி வார்த்தைய ஊடுற ?
நீ கேட்ட கேள்விக்கு நாங்க பதில் சொல்லியாச்சு உடனே நேரா அடுத்த விசயத்துக்கு வருவியா அதவிட்டுட்டு தன்னியடிச்சிட்டு ரோட்ல நின்னு சலம்புற குடிகார பய மாதிரி சலம்பு சலம்புன்னு சலம்பிட்ருக்க.
மேட்ருக்கு வாய்யா ‘போலிக்கம்யுனிஸ்ட்’
இந்த போலிக்கு முன்பு வந்த பாராளுமன்ற ஓட்டுப்பொறுக்கி போலிகளின் கோமணத்தை அவுத்து ஓடவிட்ட லிங்க் கீழே.
https://www.vinavu.com/2008/12/24/cpim3/
http://cpmtataistfascist.wordpress.com/
நான் பதறுவது இருக்கட்டும், முதலில் நான் கேட்டதற்கு அனைத்துக்கும் பதில் சொல்லு.. முதலில் நீ தான் விவதாத்தை விட்டு வெளியில் சென்று விட்டாய்..உன் ஏமாற்று வித்தையை தொடராதே..
நீ என்ன பெரிய கேள்விய கேட்டுட்ட அதுக்கு நாங்க பதில் சொல்லாம ஓடிட்டோம். உன்னோட வாழ்க்கையிலேயே நீ மிகப்பெரிய கேள்வி என்று நினைத்துக்கொன்டிருந்த ‘உன் கட்சி பேரு என்ன, கட்சி பேரு என்னன்னு’ தமிழக மக்களிடமிருந்து மாபெரும் ரகசியத்தை நாங்கள் மறைத்து வைத்துள்ளதை போல பீதியூட்டிய உன்னுடைய அந்த மாபெரும் கேள்விக்கே பதில் சொல்லிவிட்டோம், அப்புறம் என்ன தான் கைப்புள்ள ஒன்னோட கேள்வி ? வெளங்களையே, கேள்விய கொஞ்சம் கேளுப்பு..
பின்நவீனத்துவ பொறுக்கி ஆதவன் தீட்சன்யா இந்திய தேசபக்த குஞ்சு ச.தமிழ்செலவன்
இந்த போலிக்கம்யூனிஸ்ட் ஓட்டுப்பொறுக்கிகளை பற்றி நாம் மட்டும் தான் பேசுகிறோமாம் குறைபட்டுக்கொள்கிறார்கள், என்ன ஒரு பொய்! இதோ சாம்பிளுக்கு சில லிங்குகள். இந்த போலிகளின் பெரிய தலைகளான ச.தமிழ்செல்வன், பின்நவீனத்துவ பொறுக்கி ஆதவன் தீட்சன்யா போன்றவர்களின் இந்திய கைக்கூலித்தனத்தை அம்பலமாக்கும் விவாதம் கீழ் உள்ள இனிஒரு லிங்கில் நடந்துள்ளது இவர்களும் இவர்களுடைய கட்சியும் அம்மணமாக்கப்பட்டதை அங்கே போய் பாருங்கள்.
இதோ இணைப்பு
http://inioru.com/?p=6337
http://inioru.com/?p=6163
கீழ் உள்ளது மதிபாலா மற்றும் மருதன் எழுதிய பதிவுகள், இது போல பலரும் இந்த போலிக்கம்யூனிஸ்ட் பாசிஸ்டுகளை பற்றி எழுதியுள்ளார்கள் அனைத்தையும் தேடி எடுக்க நேரம் இல்லை என்பதால் இவற்றை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.
http://marudhang.blogspot.com/2009/05/blog-post.html
http://marudhang.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D
http://cpmtataistfascist.wordpress.com/2008/12/31/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/
தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள் http://textbooksonline.tn.nic.in/
திரு பொந்திப்பு அவர்களே… மேலே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை அவதூறுகள் அல்ல, மெயின்ஸ்டிரீம் மீடியாவிலேயே வந்து நாறியவை. அதைப்பற்றி இன்னமும் நீங்கள் நாலு வார்த்தை கூட பேசவில்லை என்பதை பணிவோடு நினைவூட்டுகிறேன்.
அந்த விவாதத்தை முடித்தபின் உங்கள் கேள்விகளுக்கு புர்ச்சிதலைவிபோல 2 நிமிடங்கள் ஒதுக்காமல், நிதானமாகவே பதிலளித்து உங்களைப்போன்ற கூலிக்கு பிளாக்கடிப்பவர்களையும் கௌரவப்படுத்த நான் அல்ல நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இப்படிக்கு உங்களுடைய போலி விடுதலை எனப்படும் கார்க்கி விசயின் பரம ரசிகன் ஆஃப் டிக்கெட்டு.
தோழர் அரைடிக்கெட்டு,
எப்படி இவிங்களை அவன் தான் இவன்னு , இவன் தான் அவன்னு கரெக்ட்டா வலைவீசி பிடிக்கிறீங்க ?
மானங்கெட்ட பயலுக, எத்தனை முறை தான் அடி வாங்குவாங்க அப்படி எத்தனை முறை நம்மிடமும் மற்றவர்களிடமும் உதை வாங்கினாலும் புத்தி மட்டும் வரவே மாட்டேங்குது. எவ்வளவு சொன்னாலும் மரமண்டைக்கு ஏறுவனாங்குது..
யாரும் இவிங்கள நல்லவன்னு சொல்லல, அப்புறம் எப்படி மீண்டும் மீண்டும் வந்து தைரியமா அடிவாங்குறாங்க
செங்கொடி
//சோசலிசம் ஒன்றே எங்கள் லட்சியம்.//
அப்படியா.. அப்புறம் எதுக்கு உங்க கட்சி பெயருல கம்யூனிஸ்டு அப்படின்னு இருக்கு…
//ஈழ்ப் போர் உந்தன் போர் என்றாய்//
அப்படி சொன்னதாக ஆதாரம் தர முடியுமா..
//ஒரு காலத்தில் இட ஓதுக்கீடா கூடாது என்ரு பொலம்பினாய்..பிறகு அதை மாற்றி கொண்டாய்.//
இதற்காக வெளியீடு கூட தனியாக வந்துள்ளது. அதையும் மீறி ஆதாரம் இருந்தால் தரவும். ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது.
//உன் அரிப்புக்கு பதில் அளிப்பது அவர் வேலை இல்லை……முத்துக் குமாரின் மரனத்தில் உன் அரிப்புக்கு ஆள் தேடினாய்//
அரிப்பு என்ற சொல்லை இருவிதமாக பயன்படுத்தி உள்ளீர்கள். விமர்சனம் என எடுத்துக் கொள்ளலாம் அல்லது மக்களிடம் செல்லுதல் எனப் புரிந்து கொள்கிறேன். வேறு சரியாக புரிய வழியில்லை.. போயஸ் தோட்டத்திற்கு பச்சை சட்டை போட்டுக் கொண்டு போக உங்கள் தலைமைக்குழு தோழருக்கு உடம்பில் எந்த இடத்தில் அரிப்பு எடுத்த்து.
//பச்சோந்தி தனமாய் இருக்கும் உனக்கு அரசியல் விவாதம் பற்றி விவாதிக்க முடியாது//
நல்லது. அரசு ஒரு ஒடுக்குமுறைக்கருவி என்பதை உங்களது தமிழக தோழர்களும், மேற்குவங்க தோழர்களும் ஒரே மாதிரி புரிந்து நடைமுறைப்படுத்துகின்றார்களா… அந்த பச்சோந்தித்தனத்திறிகு வேறு ஏதாவது பெயிர் வைத்துள்ளீர்களா..
//கம்யுனிஸ்ட் கட்சி என்று சொல்லி ஊரை ஏய்து பிழைக்கும் ஒரு கொள்கை இல்லாத கூட்டம்//
இதனை மக்களும், அறிவுஜீவிகளும், மனித உரிமை அமைப்புகளும் உங்களைப் பார்த்து மேற்கு வங்கத்தில் சொல்ல ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது.
//30 வருடமாக அமைப்பு கமிட்டி என்று சொல்லியே உன் கூட்டம் நாய் கையில் கிடைத்த தேங்காய் போல் அலையும் உனக்கு, //
உங்கள விடுங்க பாமக கூடத்தான் தம் பேருல கம்யூனிசத்த வச்சிருக்கு.. அதுனாலயே அவங்க புரட்சியாளரா ஆயிடுவாங்களா என்ன•..
//உன் திருட்டுதனத்தை அவர் பதிவில் கொண்டு வந்த பிறகு, //
அப்படி என்ன கண்டுபிடிச்சாருன்னு நீங்க சொன்னா புரிஞ்சுக்குவோமில்லா….
மேற்கு வங்கத்தில் ஜோதிபாசுவின் சமகாலத்தவரும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் “இடது முன்னணி’ யின் முதல் அமைச்சரவையில் (1977–80) நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மித்ரா. அவர் சிபிஎம்ன் கேடு கெட்ட நிலையை விவரித்து எழுதி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் வீக்லியில் வந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4829:2009-01-21-19-59-40&catid=278:2009
சி.பி.எம்.அணிகளே, உங்கள் மனசாட்சியையும் பேச விடுங்கள்!
Written by புதிய ஜனநாயகம் Wednesday, 21 January 2009 20:53 புதிய ஜனநாயகம் 2009
E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க – சிறுப்பிக்க)
பெருப்பிக்கசிறுப்பிக்க
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் “இடது முன்னணி’ யின் முதல் அமைச்சரவையில் (1977–80) நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மித்ரா. மைய அரசில் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியுள்ள இவர், “எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி” போன்ற ஆங்கில
ஏடுகளில் கட்டுரைகள் எழுதி வருபவர். சி.பி.எம். கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் அசோக்மித்ரா, நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சியின் குண்டர்படையும் போலீசும் நடத்திய கொடூரத் தாக்குதலையடுத்து “ஆனந்தபசார்’ பத்திரிக்கையில் (கடந்த 2008 ஏப்ரலில்) எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தைக் கீழே தருகிறோம். நந்திகிராமம் பற்றி காழ்ப்புணர்வோடு நாம் எழுதுவதாக சி.பி.எம். அணியினர் கருதி வரும் வேளையில், அவர்களின் முகாமில் இருந்தே மனசாட்சி உள்ள ஒருவரின் உள்ளக் குமுறல் இது!
கடந்த இரண்டு வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் நடந்தவை பற்றி நான் ஏதும் சொல்லாமல் இருந்தேன் என்றால், அது நான் சாகும் வரை எனது மனதைப் பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கும்; வேதனையால் துடித்துக் கொண்டு இருந்திருப்பேன். ஒரு காலத்தில் எனது தோழர்களாக இருந்தவர்களுக்கு எதிராக இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் கட்சியும் அதன் தலைமையும்தான் கடந்த 60 ஆண்டுகளாக எனது ஆதர்சமாகவும் இலட்சியக் கனவின் மையமாகவும் இருந்தன.
ஆளுநர் விவகாரத்தில் இருந்து இக்கட்டுரையைத் தொடங்குவோம். ஆனந்த் பிரசாத் சர்மாவையோ, ராஜேஷ் வரையோ (அப்போது பிற மாநிலங்களில் ஆளுநர்களாக இருந்தவர்கள்) ஒப்பிட்டுப் பார்க்கும் எவருமே, எளிமையும் நேர்மையும் அறிவும்மிக்க கோபாலகிருஷ்ண காந்தியை ஆளுநராகப் பெற்றிருக்கும் மேற்கு வங்கம், கொடுத்துவைத்த மாநிலம்தான் என்பதை நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள்.
ஆளும் கட்சியின், அதன் மையத்தலைமையின் அனுமதியின்பேரில்தான் கோபால கிருஷ்ண காந்தி அப்பதவிக்கு வந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால், கட்சியால் எதிரி என வரையறுக்கப்படும் அளவிற்கு அவர் செய்த மிகப் பெரிய தவறு என்ன?
நந்திகிராமத்தில் இருந்து கட்டாயமாகத் துரத்தப்பட்டு கெஜூரி முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள், வீடுகளுக்குத் திரும்பி வந்ததை சட்டவிரோதம் என்றும், மன்னிக்க முடியாததென்றும் ஆளுநர் கண்டித்த தாகச் சொன்னார்கள். ஆனால், அவர் அவ்வாறு சொல்லவில்லை. உண்மையில், அம்மக்கள் திரும்ப வரவழைக்கப்பட்ட விதத்தைத்தான் அவர் கண்டித்தார். அதனையும் கண்டன வார்த்தைகளால் குறிப்பட்டு அவர் கண்டிக்கவில்லை. இப்போதோ, அம்மக்கள் திரும்ப அழைக்கப்பட்டதன் பின்னணி அனைத்தும் ஊருலகுக் கெல்லாம் தெரியும்.
துரத்தப்பட்ட மக்களை அவர்களின் சொந்த வீடுகளில் குடியமர்த்தி அமைதிப்படுத்துவதற்கு கடந்த 11 மாதங்களில் அரசியல் தூதுசமரசம், நிர்வாக ஏற்பாடு போன்ற எண்ணற்ற வாய்ப்புகள் அரசுக்கு இருக்கத்தான் செய்தன. ஆனால், அவற்றை எல்லாம் விட்டுவிட்டுத் தொடர் மிரட்டல்கள், போலீசு நடவடிக்கை, துப்பாக்கிச் சூடு போன்றவற்றைச் செய்ததால் பரிதாபகரமான முடிவுதான் ஏற்பட்டது.
இருந்தபோதும், முயற்சித்துப் பார்க்க அரசுக்கு வேறுவழிகளும் இருந்தன. மூர்க்கத்தனமான துப்பாக்கிச் சூடு நடந்ததும், இறந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் அரசு நிவா ரணத் தொகையை உடனேவழங்கியிருக்க முடியும். வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்ட போலீசு துறை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியாவது கொடுத்திருக்க முடியும். நாட்கள் பல கடந்தும் அரசு எதையுமே செய்ய வில்லை.
ஆனால், அரசின் அறிவிப்புகளோ, “உஷ்! விசாரணை நடந்து கொண்டிருக்கிறது!” (மராத்தி நாடகக் கலைஞர் விஜய் டெண்டுல்கரின் நாடகத் தலைப்பு) எனும் பாணியில்தான் இருந்தது. மம்தா பானர்ஜியை அழைத்து இந்தப் பிரச்சினையில் அவர் முன்வைக்கும் நிபந்தனைகளை விவாதிக்க, மிகவும் மூத்த அரசியல் தலைவர்தான் (ஜோதிபாசு) முன்முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின் பேரில் மேற்கொண்டு அரசு எதையும் செய்யவில்லை.
பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கோஷ் முயற்சியால் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. ஆளும் கட்சியின் மறைமுக நிர்ப்பந்தங்கள் மிரட்டல்களால் அதுவும் முடக்கப்பட்டது. இதற்கிடையில், நந்திகிராமத்தில் நிலவிய நிச்சயமற்ற சூழலை எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தன. பல்வேறு வர்க்கங்களும், அமைப்புகளும் பலவண்ணக் கூட்டணி கட்டி அங்கே இயங்கி, பதற்றத் தீயைக் கொழுந்துவிட்டு எரிய வைத்துக்கொண்டிருந்தன. பதினோரு மாதங்களாக வீடிழந்த மக்களின், சொல்லொணா சோகத்துக்கெல்லாம் அரசுதான் நேரடிப் பொறுப்பாளி.
நாம் சற்றுப் பின்நோக்கிப் பார்ப் போம். மே.வங்கத்தில் நந்திகிராமம் சம்பவத்துக்கு முன்பே சிங்கூரில் ரத்தவெள்ளம் ஓடியது. இடது கூட்டணி அரசு நாட்டுடைமையாக்கப்பட்ட தொழில்துறையை விரும்புவது கிடை யாது. அவர்கள் இம்மாநிலத்தில் தனி யார் தொழிற்துறையை நிறுவ மட்டும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகவேதான் தேசிய, சர்வதேசிய முதலாளிகளுக்காக நிலம் பறித்துத் தர உறுதிமொழிகள் தந்துள்ளனர்.
அவர்களின் தேர்தல் அறிக்கையி லேயே இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், தேர்தலில் 235 தொகுதிகளை வென்றி ருப்பதாலும், இதற்கெனத் தனியாக தயாரிப்புகள் எதனையும் செய்ய வேண்டி இருக்கவில்லை. திடீரென விவசாயிகளிடம், “”நிலத்தை விட்டு வெளியேறுங்கள்; எஜமானர்கள் அங்கே தொழிற்சாலைகளை நிறுவப் போகிறார்கள்” என்று சொல்லப்பட்டது. சிங்கூரில் எழுந்த எதிர்ப்பு, மோதல்கள், அதன் விளைவாகச் சிந்திய இரத்தம் ஆகியவற்றில் இருந்து குறைந்தபட்சப் பாடம் கற்றிருந்தால்கூட, அரசால் நந்திகிராமத்தில் கவனமாகச் செயல் பட்டிருக்க முடியும். ஆனால் அதுதான் கிடையாதே! எப்போதும் போல அரசு திமிராகத்தான் நடந்து கொண்டது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள்கூட நந்திகிராமத்தில் எதிர்க்கட்சிகளே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிர்க்கட்சியினர் அப்பகுதியில் வளர்வதற்கு அரசே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆளும் கட்சியின் மீது விசுவாசமாக இருந்த தொண்டர்கள், அரசின் முடிவை எதிர்த்துக் குரல் கொடுத்தவுடன் கட்சியை விட்டுத் துரத்தப்பட்டனர்.
பதினோரு மாதங்களாக அரசியல், நிர்வாகரீதியான மாற்றுக்களைப் பற்றி ஆராயாமலும் செயல்படாமலும் வாயை மூடிக் கொண்டது அரசு. சதித்திட்டம் ஒன்று புதிதாய்த் தீட்டப்பட்டது. போலீசு துறை அப்பகுதியில் செயல்படாமல் இருக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் மீண்டும் மீண்டும் கூறிவந்தார். ஆனால், மாநிலம் முழுவதி லுமிருந்து கூலிப்படை திரட்டப்பட்டது. எல்லாத் திசைகளிலி ருந்தும் ஆளும் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் நந்திகிராமத்தை முற்றுகையிட்டனர். பறவைகள், ஈ காக்கைகள் உள்ளிட்டு, பத்திரிக்கையாளர்கள் எவரும் அம்முற்றுகையைத் தாண்டி அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து, ஆளும்கட்சியின் ஆயுதப் படை பொறுப்பேற்றுக் கொண்டு நந்திகிராமம் பகுதியில் நுழைந்து அப்பகுதிக்குத் திரும்ப வந்து குடியேறி யவர்களை எல்லாம் அடித்து நொறுக் கியது. வீடுகளைக் கொளுத்தியது. ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கும் வெறியில் நந்திகிராமத்திற்குள் இருந்த வர்களை எல்லாம் வெட்டித் தள்ளியது. அகதிகளாக மீண்டும் வெளியேறுபவர்களின் ஓலம் நந்திகிராமைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் எதிரொ லித்தது.
அரசுத்துறை செயலாளர்கள் மூலமாக ஆளுநருக்கு நடந்தவை எல்லாம் சொல்லப்பட்டிருக்கக் கூடும். அவரும் அமைச்சரவையைக் கட்டுப் படுத்தும் நாயகரிடம் அமைதியை நிலைநாட்டக் கோரியிருக்கக்கூடும். ஆனாலும் பயன் ஏதும் இல்லை. தொடரும் வன்செயல்களால் இரத்த ஆறு இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர், இச்சம்பவத்தைக் கண்டித்துப் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். அவர் அதில் என்ன சொல்லியிருந்தார் என்பதோ, அவ்வாறு அறிக்கை விடுவது அரசியல் சாசனத்தின் வரையறைக்கு உட்பட்டதா என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால், மனிதத் தன்மையின் வரையறையை ஏற்றுக் கொண்ட எவருக்கும், இவ்வாறு அறிக்கை வெளியிட்டதில் வேறு கருத்து ஏதும் இருக்க முடியாது.
உள்ளபடியே இப்போதைய பிரச்சினை சிங்கூரும் நந்திகிராமும் மட்டுமல்ல. அது இன்னும் ஆழமானது. மிகவும் அபாயகரமானதும் கூட. தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப் படுகின்றன. ஒரு கணம் எண்ணிப்பாருங் கள். பெரும்பான்மை பலத்துடன் இடது முன்னணி வெற்றி பெற்று ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன. இக்குறு கிய கால இடைவெளியில்தான் எத்தனை மூர்க்கமான, முட்டாள்தனமான நடவடிக்கைகள்!
மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் நம்மிடம் இருக்கலாம். கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்கூட நமது கட்ட ளைக்கேற்பத் தேர்ந்தெடுக்கப்படலாம். நமது வேட்பாளர் தோல்வியடையும் போதெல்லாம், “தீய சக்தியின் வெற்றி” என்றும் “தீய சக்தியை விரட்டி அடிப்போம்” என்றும் சொல்வோம்.
ஆனால், சாதாரண மக்கள் மட்டுமல்ல; பொருளாதார சிந்தனையாளர்கள் கூட நந்திகிராமம், சிங்கூர் நிலப்பறி குறித்து வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். “”அவ்வாறு கருத்துரைப்பவர்களுக் கெல்லாம் அரசை நடத்துவது பற்றி என்ன தெரியும்? வெறும் புத்தகப் புழுக்கள்!” குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணரும், கட்சித் தோழருமான பிரபாத் பட்நாயக்கின் ஆளுமையையும் இதே மாதிரிதான் அவமானப்படுத்தினர். நாம்தான் எல்லாம் தெரிந்த அரசாங்கம் ஆயிற்றே! கிரிக்கெட், கவிதை, நாடகம், சினிமா, நிலப்பறி மாயாஜாலம் என அனைத்தும் தெரிந்த அரசாங்கம், நம்முடையது! 235 சீட்டுகள் வென்ற நமக்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் நன்மை தீமைகளைப் பற்றி எவரும் விளக்கவுரை நடத்த வேண்டுமா, என்ன? 1987இல் ஜோதிபாசு தற்போதைய சட்டமன்ற வெற்றியைவிட அதிக இடங்களுடன் வெற்றி பெற்றிருந்தார். ஆனாலும் அவரிடமிருந்து இவ்வளவு திமிர் வெளிப்பட்டதில்லை.
இப்போது, திமிரோடு அரைவேக்காட்டுத்தனமும் சேர்ந்துள்ளது. பல பத்தாண்டுகள் கடந்த பின்னரும் மே.வங்கம் கல்வியில் பல மாநிலங்களைவிடப் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. மைய அரசின் வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கான நிதி தடையின்றி வருகிறது. ஆனால், இங்கு நிர்வாக ரீதியான முன்முயற்சி ஏதுமில்லாததால் வேலையில்லாத் திண்டாட்டமும், பட்டினியும் அப்படியே இருக்கின்றன. மைய அரசு கோதுமையும் அரிசியும் வழங்கிட ஏற்பாடுகள் செய்திருந்தும், மாநில அரசு அவற்றைப் பெற்றுக் கொள்ளாததால், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ரேசனில் இவற்றை விநியோகிக்க முடியவில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்போரின் பட்டியலில் கூட ஏகப்பட்ட குளறுபடிகளும் விடுபடல்களும் மலிந்துள்ளன. சிறுபான்மையினரின் முன்னேற் றத்திற்காக இம்மாநில அரசு எதையும் செய்யாமல் இருப்பதனை சச்சார் கமிட்டி அறிக்கையே பட்டியலிட்டுள்ளது.
மர்மமான முறையில் மாண்டு போன ரிஸ்வானூர் ரகுமான் விவகாரத் தையே எடுத்துக் கொள்வோம். போலீசு துறைத் தலைவரும் அவரது கூட்டாளி களும் உடனடியாக (பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த அன்றே) நீக்கப்பட்டிருந் தாலோ, அல்லது சி.பி.ஐ.க்கு விசாரணை மாற்றப்பட்டிருந்தாலோ மக்களின் கடுங்கோபத்தை ஓரளவிற்குத் தவிர்த் திருக்கலாம். ஆனால், நாம் காண்பதோ வேறு. இப்படி பல உதாரணங்களை அடுக்க முடியும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் இடது முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட காலகட்டத்தில், அது வெற்று அரட்டை அடிப்பதற்காக எழுத்தாளர் கட்டிடத்தில் (மே.வங்கத்தின் தலைமைச் செயலகம்) போய் உட்காரவில்லை. மாறாக, மக்களுடன் இருந்து கொண்டு, அவர் களின் அறிவுரைகளைக் கேட்டு, அதற் கேற்ப அரசின் திட்டங்களைத் தீட்டுவ தாகத்தான் அதன் நோக்கம் இருந்தது. இதனை முன்வைத்தே பஞ்சாயத்து முறை மேம்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது அது செயலிழந்து விட்டது. பஞ்சாயத்துகள் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவை பரிதாபகரமான நிலையில்தான் இன்று உள்ளன. அவற்றுக்கு வந்து சேரும் கொஞ்ச நஞ்ச நிதியும் கூட முறையாகச் செலவிடப் படுவதில்லை.
வேதனைமிக்க உண்மைகளை இனிமேலும் தவிர்க்க முடியாது. “”நீங்கள் முன்பு எப்படி இருந்தீர்களோ, அப்படி இன்று இல்லை” என்ற எஸ்.டி.பர்மனின் பிரபல சினிமா பாடல் வரிகளைப் போலத்தான், இன்றைய சி.பி.எம். கட்சியின் நிலைமை உள்ளது.
கட்சியில் இப்போது இருக்கும் உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் 1977க்குப் பின்னர் சேர்ந்தவர்கள். 70 சதவீதம் பேர் 1991க்குப் பிறகு சேர்ந்தவர்கள். இவர்கள் எவருக்கும் கட்சியின் தியாக வரலாறு எதுவுமே தெரியாது. இவர்களைப் பொறுத்த அளவில் புரட்சிக்கான அர்ப்பணிப்பும் சோசலிசமும் வெறுமனே கதை யாடல்கள் மட்டுமே. மேம்பாடுதான் புதிய கொள்கையாகிப்போனதால், சுய மேம்பாட்டுக்காக மட்டுமே இவர்கள் கட்சியுடன் தம்மை இணைத்துக் கொள்கின்றனர். பெறுவதற்காகத்தான் வருகிறார்களே ஒழிய, இழப்பதற்காக அல்ல. இவர்கள் பல்வேறு தந்திரங் களைக் கற்றுக் கொண்டு அரசின் பல்வேறு சலுகைகளை அனுபவிக்க ஆளும் கட்சியுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தலைவர்களை வானளாவப் புகழ்ந்து தள்ளுவதுதான், சலுகைகளைப் பெறுவதற்கு இவர்கள் கையாளும் தந்திரங்களில் முதன்மையானது.
கட்சி முழுக்க துதிபாடிகளும் அரசவை விகடகவிகளும் நிரம்பியி ருக்கின்றனர். அதை விட சமூக விரோதிகளின் ஆதிக்கமும் கட்சிக்குள் பெருகி இருக்கிறது. பல்வேறு காரணங் களுக்காக ஏனைய கட்சிகள் சமூக விரோதிகளை வைத்துக் கொள்ளுவது வாடிக்கைதான். இருப்பினும், அங்கெல் லாம் அவர்கள் பின்னணியில்தான் இயங்குவர். தேவை ஏற்படும்போது மட்டும் அவர்கள் பயன்படுத்தப்படுவர். எழுபதுகளில் இத்தகைய சமூகவிரோதி களின் கூடாரமாக காங்கிரசுக் கட்சி இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதே கதிதான் ஏற்படப் போகிறது என அஞ்சுகிறேன்.
நெடுங்காலமாக கட்சியில் இருந்துவரும், பல்வேறு தியாகங்களைப் புரிந்த வயதான பல தோழர்கள் நம் பிக்கை இழந்து விரக்தியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு வேளை கட்சிக்கு எதிராக ஒருங்கி ணைந்த போராட்டம் ஒன்றை நடத்தி, அதனால் கட்சி அவர்களைத் தூக்கி எறிந்தால், கட்சியை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்தும் அவர்களின் கதி என்ன ஆகும்?
திரு.ஜோதிபாசுவுக்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவருடன் சேர்ந்து 1977, ஜூன் 21இல் பதவி ஏற்றுக் கொண்ட இடது முன்னணி அரசின் 4 அமைச்சர்களில் உயிருடன் இருப்பது நான் மட்டுமே. அவுரங்கசீப்பால் சிறைவைக்கப்பட்ட ஷாஜஹான் போன்ற அவருடைய தற்போதைய நிலை என் இதயத்தையே கசிய வைக்கிறது. அவ்வப்போது அவர் சொல்லும் சின்னச்சின்ன அறிவுரைகளைக் கூட கட்சி மேலிடம் கேட்பதில்லை. அவரு டைய பேச்சு கட்சிக்கு உவப்பில்லாத போது கட்சிப் பத்திரிக்கைகளில் கூட அது வெளியாவதில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கட்சி செயலாளர்களைச் சந்தித்து விட்டுப் படியிறங்கி வரும்போதெல்லாம், அவர் சம்பந்தமேயில்லாத ஒன்றைப் பேச வேண்டி இருக்கிறது. இன்று அவர் சொல்வது கூட, போனமுறை அவர் சொன்னதை மறுதலிக்கும் விதமாகத்தான் உள்ளது.
என்னுடைய அக்கறை எங்கும் விரவியதாக உள்ளது. மம்தா பானர்ஜி ஒருவர்தான் தற்போதைய ஆளும் கட்சிக்கு, பாதுகாப்பான இன்சூரன்சு. இடது முன்னணி அரசின் மீது எவ்வளவு தூரம் அதிருப்தி இருப்பினும், மம்தா பானர்ஜி பதவிக்கு வந்துவிடும் பயங்கரத்தைக் கற்பனை செய்யும் மக்கள், அப்பயங்கரத்தில் இருந்து தப்பிக்க இடது முன்னணியை ஆதரித்தாக வேண்டியிருக்கிறது. இருந்தபோதும், இடதுசாரித் தலைவர்களின் திமிர்த்தனமும் அரை வேக்காட்டுத்தனமும் எல்லை கடக்கும் போது, இரண்டு தரப்புக்குமிடையே எந்த வேறுபாட்டையும் மக்கள் காணமுடியாத நிலை ஏற்படும். அது இன்னமும் கூடுதலான பயங்கரத்தை — மம்தாவின் பாசிசத்தைக் கொண்டு வரும். மம்தாவின் பேச்சு, செயல்படும் முறை, திட்டம் அனைத்துமே பாசிசத்தின் கூறுகள்தான்.
இன்னமும் என்னுடைய கட்சிதான் என நான் மனதார நம்பிக் கொண்டிருக்கும் கட்சியின் மத்தியத் தலைமைக்கு விடுக்கும் தாழ்மையான முறையீடு இதுதான்: மாவோயிசத்தின் பயங்கரத்தைக் கண்டு நீங்கள் அஞ்சி நடுங்குகிறீர்கள். அந்த நடுக்கம், பாசிசத்தின் கழிவறைக்குள் மே.வங்கத்தைத் தூக்கியெறிய உங்களை நிர்ப்பந்தித்து விடும் என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
மனி என்னும் போலி புரட்சி வாதிக்கு,
சோசலிசம் என்பது கம்யுனிசத்தின் ஆரம்ப காலம். அது உனக்கு டதெரிய வாய்ப்பில்லை, ஏன் என்றால் உன் கட்சி உனக்கு சொல்லி இருக்காது, அது போல நாங்களாவது எங்கள் கட்சியின் பெயரில் கம்யுனிஸ்ட் என்று உள்ளது , உன் கட்சியை வெளீயில் சொல்லும் போது உன் கட்சி பேரை சொல்ல முடியுமா? ம.க.இ.க என்று என்.ஜி.ஓ பெயரை சொல்லி திரிவாய்.
//அப்படி என்ன கண்டுபிடிச்சாருன்னு நீங்க சொன்னா புரிஞ்சுக்குவோமில்லா//
இதோ தருகிறேன்
http://santhipu.blogspot.com/2009/02/blog-post_9622.html
தலித் விரோதம் பற்றி
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_21.html
உன் தலைமை பற்றி
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_15.html
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_25.html
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_23.html
படிச்சு புரிந்துகொள்.
//இதனை மக்களும், அறிவுஜீவிகளும், மனித உரிமை அமைப்புகளும் உங்களைப் பார்த்து மேற்கு வங்கத்தில் சொல்ல ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது.//
உன்னைப் பார்த்து சொல்ல ஆரம்பித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது
//அரிப்பு என்ற சொல்லை இருவிதமாக பயன்படுத்தி உள்ளீர்கள். விமர்சனம் என எடுத்துக் கொள்ளலாம் அல்லது மக்களிடம் செல்லுதல் எனப் புரிந்து கொள்கிறேன். வேறு சரியாக புரிய வழியில்லை.. போயஸ் தோட்டத்திற்கு பச்சை சட்டை போட்டுக் கொண்டு போக உங்கள் தலைமைக்குழு தோழருக்கு உடம்பில் எந்த இடத்தில் அரிப்பு எடுத்த்து.//
உன் சொரிப்பு பதில்லாம் வேண்டாம், உனக்கு மம்தா வீட்டிற்கு போகும் போது எந்த இடத்தில் அரிப்பு எடுத்தது/
//ஈழ்ப் போர் உந்தன் போர் என்றாய்//
///அப்படி சொன்னதாக ஆதாரம் தர முடியுமா.////
முத்து குமார் மரணத்தில் ஓடி ஓடி ஆள் பிடிக்கும் போது என்ன சொல்லி ஆள் பிடித்த, ஈழ்ப்போரை எதிர்க்கப் போறோம் என்ரா?
ரதி யை வைத்து கட்டுரை எழுதி அதற்கு இராயகரனிடம் வாங்கி கட்டிக்கொண்டது எதனால்?
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6186:rathyvinavu2&catid=277:2009
//30 வருடமாக அமைப்பு கமிட்டி என்று சொல்லியே உன் கூட்டம் ///நாய் கையில் கிடைத்த தேங்காய் போல் அலையும் உனக்கு, //
உங்கள விடுங்க பாமக கூடத்தான் தம் பேருல கம்யூனிசத்த வச்சிருக்கு.. அதுனாலயே அவங்க புரட்சியாளரா ஆயிடுவாங்களா என்ன•//..
அப்ப நீங்களும் பா ம க போல தான் … அண்ணே எங்கன்ணே பா மக விற்கு திட்டம் இருக்கு? உன்னை ப்ற்றி கேட்டா , உளரி கொட்டாதே…
போலி புரட்சிவாதி மணி,
ஸோசலிசம் பின்பு தான் கம்யுனிசம் மலரும், இது உனக்கு தெரிய வாய்ப்பிள்ளை, ஏன் என்றால் நீ இருப்பது கம்யுனிஸ்ட் கட்சி இல்லை,
இட ஒதுக்கீடு பற்றி உன் பிரசுரம் பின்னுட்டம் இடு, இதோ உன் முகமூடியை கிழிக்கும் கட்டுரை.
http://santhipu.blogspot.com/2009/02/blog-post_9622.html
உன் கோயப்ல்ஸ் பிரசாரதிற்கு சவக்குழி இதோ
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_23.html
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_15.html
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_19.html
தலித் விரோத பிரச்சாரம்
http://santhipu.blogspot.com/2008/04/blog-post_21.html
//ஈழ்ப் போர் உந்தன் போர் என்றாய்//
///அப்படி சொன்னதாக ஆதாரம் தர முடியுமா///
உன் வினவில் ரதியை எழுத சொல்லி, பின் இராயகரனிடம் விமர்சனம் பெற்று , அதற்கு அவரின் த்மிழ் சர்கிலில் பதிவே இதற்கு சாட்சி..
அப்புறம் கொளத்தூரில் முத்துக் குமார் மரணத்தின் இறுதி நிகழ்வில் ஆள் பிடிக்க அளைந்த போது ஈழப் போர் தப்பு , விடுதலைப் புலிகள் பாசிஸ்டுகள் என்று முழ்ங்கினாய?
//உன் அரிப்புக்கு பதில் அளிப்பது அவர் வேலை இல்லை……முத்துக் குமாரின் மரனத்தில் உன் அரிப்புக்கு ஆள் தேடினாய்//
///அரிப்பு என்ற சொல்லை இருவிதமாக பயன்படுத்தி உள்ளீர்கள். விமர்சனம் என எடுத்துக் கொள்ளலாம் அல்லது மக்களிடம் செல்லுதல் எனப் புரிந்து கொள்கிறேன். வேறு சரியாக புரிய வழியில்லை.. போயஸ் தோட்டத்திற்கு பச்சை சட்டை போட்டுக் கொண்டு போக உங்கள் தலைமைக்குழு தோழருக்கு உடம்பில் எந்த இடத்தில் அரிப்பு எடுத்த்து.///
வெண்ணை நீர் எதுவும் புதுச விளக்கி அரிப்புக்கு சொரிய வேண்டாம்..உன் உங்க புதிய ஜன நாயக்கத்தை படித்தாலே ஊர்ல இருகிற சொறி , சிரங்கு , படை எல்லாம் வ்ந்துடும், ஆமாம் நீ மம்தா வீட்டிற்கு போனது எங்கு அரிப்பு எடுத்து போன?
//பச்சோந்தி தனமாய் இருக்கும் உனக்கு அரசியல் விவாதம் பற்றி விவாதிக்க முடியாது//
ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மட்டும் சிகப்பு சட்டை போட்டுவிட்டு முடிந்த உடன் அதை கழற்றீ விட்டு சாதரன உடையில் திரியும் உங்க கூட்டத்தை பல முறை மெமொரியல் ஹால் பக்க்ம் பார்த்திருகிறொம்யா? இதை விட பச்சொந்தி தனத்துக்கு விளக்கம் தரனுமா?
30 வருடமாக அமைப்பு கமிட்டி என்று சொல்லியே உன் கூட்டம் நாய் கையில் கிடைத்த தேங்காய் போல் அலையும் உனக்கு, //
///உங்கள விடுங்க பாமக கூடத்தான் தம் பேருல கம்யூனிசத்த வச்சிருக்கு.. அதுனாலயே அவங்க புரட்சியாளரா ஆயிடுவாங்களா என்ன•..///
வாயா கைப்புள்ள பா.ம.க உம் நீயும் ஒன்னா? அவன் தான் கம்யுனிஸ்ட் கட்சினு சொல்றானா? உன் கட்சி பேரக் கூட சொல்ல முடியம ம.க.இ.க என்று என்.ஜி.ஓ பேரை சொல்லி திரியரையா?
//கம்யுனிஸ்ட் கட்சி என்று சொல்லி ஊரை ஏய்து பிழைக்கும் ஒரு கொள்கை இல்லாத கூட்டம்//
///இதனை மக்களும், அறிவுஜீவிகளும், மனித உரிமை அமைப்புகளும் உங்களைப் பார்த்து மேற்கு வங்கத்தில் சொல்ல ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது.///
உன்னை பார்த்து மக்கள் சொல்ல ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகுது.
நான் மணி
தமிழக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு தோழர்கள் தங்களது அணிகளை நாகரிகமாக பேசுவதற்கும், நேர்மையாக பதில் அளிப்பதற்கும், எதிர்விமர்சனம் வைப்பதற்கு முன் தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமைக்கும் பழக்கப்படுத்த வேண்டும். இதுபோன்ற தேர்டு ரேட் ரவுடித்தனத்துக்கு பதில் சொல்ல முனைவது எனக்கு பழக்கமில்லாத்து.
அடுத்து அரசியலையும், குறைந்த பட்சம் கம்யூனிசத்திற்கும், சோசலிசத்திற்கும் உள்ள வேறுபாடுகளையாவது மார்க்சிய ஆசான்களின் புத்தகத்தின் வழி சொல்லித்தர முயற்சிக்க வேண்டும். விவாதிக்க வருபவர் என்ன சொல்கிறார் என்பதை கவனிக்காமல் சேம் சைடு கோல் போடப் பழக்கப்பட்டிருக்கும் இத்தகைய தோழர்களை அணிகளாகப் பெற்ற அக்கட்சிக்கு ஆழ்ந்த அநுதாபங்கள்.
போலிப் புரட்சிவாதி.. நீங்கள் காட்டிய சுட்டிகளில் எனது விமர்சனங்களுக்கு பதில் இல்லை.
நீங்களாவது இங்கு நீங்கள் சொன்னதையாவது விளக்குங்கள்.
1. கம்யூனிசத்திற்கும் சோசலிசத்திற்கும் என்ன வரையறை வைத்து உள்ளீர்கள். அதாவது இச்சொற்களின் பொருள் என்ன•.
2. கட்சி பேருலயாவது கம்யூனிஸ்டு கட்சின்னு பேரு வைச்சிருந்தா மட்டும்தான் ஒரு கட்சி கம்யூனிஸ்டு கட்சின்னு சொல்ல முடியுமா. ரசியப்புரட்சியிலும், சீனப்புரட்சியிலும் ஆரம்ப காலங்களில் கட்சிப்பெயரில் கம்யூனிஸ்டு என்ற சொல்லே கிடையாதே.. அதற்கு என்ன சொல்கிறீர்கள்…
3. ம•க•இ.க என்ற பெயரே என்ஜிஓ பெயர் என்கின்றீர்களே.. அந்த வரையைறையை எப்படி வகுத்தீர்கள்.. மறுவிமர்சனமாக எடுத்துக் கொள்ளாமல் தமுஎகச என்ற பெயரை எப்படி வரையறுக்கின்றீர்கள். கலை இலக்கிய பெருமன்றத்தை எப்படி வரையைறுக்கின்றீர்கள்.
4. நாங்க ம்ம்தா வீட்டுக்கு போனதுக்கு ஆதாரம் இருக்கா… உங்க தலைவரு பச்ச சட்ட போட்டுட்டு போயசு தோட்டம் போனதுக்கு பத்திரிக்கை தினசரிகளில் வந்த புகைப்படம் ஆதாரம்.
5. ஈழப்போரை ஆதரிப்பது எதிர்ப்பது என்ற சொல்லாடலின் மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள். அந்தக் கூட்டம் ஒரு ஜனநாயகத்திற்கான கோரிக்கை. அதற்கு வந்தீர்களா.. ஏன் பயமா… புலித்தலைமை பாசிசம் என விமர்சிக்கும் நாங்கள் எப்படி அங்கு போக முடிந்த்து. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மக்களிடம் யார் அம்பலப்பட்டார்கள் என்ற உண்மை தெரிந்து விடும். ஆள் பிடிப்பது தவறா.. கம்யூனிஸ்டுகள் தங்களது கருத்துக்கு மக்களை வென்றெடுப்பது தவறா.. நீங்கள் அதனை செய்வது இல்லை என்பதற்காக செய்பவர்களின் சரியான நடைமுறையை ஏன் திட்டுகின்றீர்கள். ஆசான்கள் கூட தங்களது கருத்துக்களுக்கு எதிரகளைக் கூட வென்றெடுக்க வாதம் செய்துள்ளனர். மார்க்சிய இலக்கிய பரிச்சயம் உங்களுக்கு இருந்தால் எளிதாக இது புரிந்து இருக்குமே..
கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தமது கருத்துக்கு ஆதரவாக மக்களை திருப்ப முயன்று கொண்டுதான் இருப்பர். இதைத் தவறு எனச் சொல்பவன் ஜனநாயகத்திற்கு சம்பந்தமில்லாதவன்.
6. சிவப்பு சட்டையை கழற்றி விட்டதால் தமது நடைமுறையை மறந்து விட்டதாக அர்த்தமா…2001 இல் நோம் சாம்ஸ்கி என்ற அராஜகவாத அரசியல் விமர்சகர் வந்து என்.ராம் நடத்திய மியூசிக் அகாடமி கூட்டத்திற்கு தொண்டர் படையாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இருந்த்து. அக்கூட்டத்தில் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். பத்திரிக்கை முதலாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்வரிசை. அமெரிக்க மோகம் பத்திரிக்கை விற்கப் போன தோழர்களைத் தாக்க வந்தவர்கள் சாட்சாத் உங்கள் தொண்டர் படைதான். இதற்கு என்ன செய்ய
இதெல்லாம் படிக்க படிக்க சலிப்பு தான் ஏற்படுகிறது, உங்கள் மீது, போர் அடிக்கவில்லையா? 😉
நாகரிகமாக பேச எங்களூக்கு கற்று தர வேண்டும் என்று பதில் அளித்திருக்கும் மதிப்பிற்குரிய போலி புரட்சிவாதி மணீ அவர்களூக்கு..
தங்கள் பின்னூட்டத்திற்கு முன்பாக.உங்கள் அணீயை சேர்ந்த மற்ற போலி புரட்சிவாதிகள் எவ்வளவு அநாகரிகமாக பின்ணூட்டம் இட்டுள்ளார்கள் என்று பார்த்து அவர்க்ளூக்கு நாகரிகமாக பேச கற்று கொடுங்கள்.
சாத்தான் வேதம் ஒதுவது போல், ஹிட்லர் மத ஓற்றுமை பேசுவது போல் பேசாதிர்கள்.
எங்களுக்கு அரசியல் பேசுவதற்கு நீங்கள் கற்று தர வேண்டிய அவசியம் இல்லை. விதண்டாவதம் பேசும் உங்கள் கூட்டத்திற்கு நீங்கள் கற்று கொடுங்கள்..
அய்யா உங்களது பதில்களின் நாகரீகம் கருதிதான் அவற்றை உங்களுக்கு சொல்லாமல் உங்களுக்கு அரசியலைக் கற்றுத் தந்த்த தோழர்களுக்கு பண்பையும் கற்றுத்தரச் சொல்லிக் கோரினேன். அவர்களோ அல்லது தாங்களோ ‘அரிப்பு’ எனத் தாங்கள் விமர்சனத்தைக் குறிப்பிட்டதை நியாயப்படுத்த முடியாது.
நிற்க•
நான் கேட்ட எண்களிட்ட கேள்விகளுக்கு எதிர்விமர்சனம் வைக்காமல் பதிலை மாத்திரம் முதலில் சொல்லுங்கள். விவாதம் அடுத்த பின்னூட்டத்திற்கு செல்லும் போது எதிர் விமர்சனம் வையுங்கள். இந்த அளவில் கூட விவாத்த்தை நடத்த முயற்சிக்கலாமே
அதே கேள்விதான் திரும்பவும் எளிய வார்த்தையில் கேட்கிறேன்
1. சோசலிசம் னா என்ன, கம்யூனிசம் னா என்ன, வித்தியாசம் என்ன, ஒற்றுமை என்ன
2. கட்சி பேருல கம்யூனிசம் இருந்தாத்தான் ஒரு கட்சி கம்யூனிஸ்டு கட்சியா..
3. ஒரு பெயரை அதாவது சொல்லை என்ஜிஓ சொல் என எப்படி சொல்ல முடியும். மார்க்சிய அடிப்படையில் விளக்கவும்.
4. மெமோரியல் ஹாலுக்கு வந்த ம•க•இ.க தோழர்கள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு சிவப்பு சட்டையை கழற்றாஃமல் இருந்தால் ஏற்படும் அரசியல் பயன் என்ன அல்லது கழற்றியதால் நடந்த சந்தர்ப்பவாத நடைமுறை என்ன•. இதனை பச்சை சட்டை போட்டு போயசு தோட்டத்துக்கு போன தலைமைக்குழு தோழர் ஏன் சிவப்பு சட்டை போடாமல் போனார். ஒருவேளை புகைப்படம் எடுப்பதற்கு முன் கழற்றிவிட்டாரா என்பதை சந்தேகமாக கேட்டுக் கொள்கிறேன்.
5. ஈழத்துப் போரில் ம•க•இ.க செய்தது அதாவது முத்துக்குமார் மரண ஊர்வலத்தில் செய்ததும் என்ன தவறு. நீங்கள் அதில் ஏன் கலந்து கொள்ளவில்லை. விமர்னம் இருந்தாலும் பாராளுமன்றத்தில் நிலக்கிழார்களுக்கு அருகருகே அமர முடிந்த தங்களால் முத்துக்குமார் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் என்ன• ஈழத்திற்கு என்ன தீரவை முன்வைக்கின்றீர்கள்.
தோழர் மணி நீங்க ஏன் போட்டு குழப்புறீங்க ?
அந்த ஆள் உங்க கட்சி பேரு என்னன்னு கேட்டான் சொன்னோம், அதற்கு அந்த பன்னாடை இதுவரைக்கும் ஒரு பதிலையும் சொல்லக்கானோம் நானும் ரெண்டு மூணு முறை கேட்டுட்டேன். அதுக்கு நடுவுல நீங்க ஏன் வேறு வேறு கேள்விகலை கேட்டு திசை மாற்றுகிறீர்கள். நீங்கள் கேட்கிற கேள்விகள் எல்லாத்தையும் இந்த மண்பான்டத் தலையன்கிட்ட நம்ம தோழர்கள் சுமார் கணக்கு வழக்கில்லாத தடவை கேட்டுவிட்டார்கள், அப்புறம் நீங்க ஏன் மொதல்ல இருந்து வர்றீங்க ?
ஏய் போலிக்கம்யூனிஸ்ட் நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கடா கஸ்மாலம் ? என்னோட கேள்விக்கு பதிலைச்சொல்லிட்டு அப்புறம் கோவப்படுடா ங்கொய்யால..
//சோசலிசம் னா என்ன, கம்யூனிசம் னா என்ன, வித்தியாசம் என்ன, ஒற்றுமை என்ன//ஈழத்திற்கு என்ன தீரவை முன்வைக்கின்றீர்கள்.///
மதிப்பிற்குறிய போலி புரட்சிவாதி மணீ அவர்களே..
உங்களீன் மேற்கூரிய கேள்விகலுக்கு எங்களூடைய அதிகார்வபூர்வ இனையத்தளமான http://www.cpim.org ல் உள்ளது. அதை நங்கு படித்துவிட்டு, உங்களின் கேள்விகளுக்கு உங்கள் கட்சியின் நிலை பற்றி இங்கு விவரமாக பின்ணூட்டம் இடவும்,, அதே இனையத்தளத்தில் எங்களின் திட்டமும் உள்ளது..அது போல் தங்களீன் திட்டத்தையும் பின்ணூட்டம் இடவும்.இரு திட்டத்தின்பால் நாம் பின்னர் விமர்சனம் செய்வோம்..
//ஒரு பெயரை அதாவது சொல்லை என்ஜிஓ சொல் என எப்படி சொல்ல முடியும். மார்க்சிய அடிப்படையில் விளக்கவும்.///
சாதரன புரிதல் அடிப்படையில் என் ஜீ .ஓ என்பது மக்களை போரடத்துண்டுவதை தடுக்கும் முதலாளித்துவதின் ஒரு புதிய கண்டுபிடிப்பு..எந்த பிரச்சினையிலும் சமரசம் செய்து கொள்ளும் ஒரு அமைப்பு..அது போல் வெரும் போஸ்டரை ஓட்டி விட்டு புரட்சி வரப்போவதாக சொல்லி திரிவது, சி.பி.எம் பற்றி மக்களிடையே தவரான பிரட்சாரம் செய்வது, ..இந்த தளத்தில் எத்தனை பின்ணுட்டங்கள் முதளாலித்துவத்திற்கு எதிராக இடப்பட்டுள்ளது? மதவாதத்தை எதிர்த்து இடப்பட்டுள்ளதா? இந்த வ்ரையரை போதும் என்று நினைக்கிறேன்..
என்னை நாகரிகமாக பேச சொன்ன தங்களுக்கு உங்கள் அணியினரின் அநாகரிகமான பேச்சுக்களை ஆமோதிக்கிரிர்களா?
///மெமோரியல் ஹாலுக்கு வந்த ம•க•இ.க தோழர்கள் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு சிவப்பு சட்டையை கழற்றாஃமல் இருந்தால் ஏற்படும் அரசியல் பயன் என்ன அல்லது கழற்றியதால் நடந்த சந்தர்ப்பவாத நடைமுறை என்ன•. இதனை பச்சை சட்டை போட்டு போயசு தோட்டத்துக்கு போன தலைமைக்குழு தோழர் ஏன் சிவப்பு சட்டை போடாமல் போனார். ஒருவேளை புகைப்படம் எடுப்பதற்கு முன் கழற்றிவிட்டாரா என்பதை சந்தேகமாக கேட்டுக் கொள்கிறேன்///
// போயஸ் கார்டண் நாங்கள் செல்லும் போது மக்களுக்கு தெரிந்தமுரையில் தான் சென்ரு தொகுதி பங்கிடு பற்றி பேசுகிறொம் . அதில் ஒரு தோழர் பச்சை சட்டை போட்டிருந்தார் என்பது தற்செயல் நிகழ்வாக இருக்காலாம்..ஆனால் மெமொரியல் ஹாலுக்கு வந்து ஆர்பாட்டம் நட்த்தும் பொது மட்டும் தாங்கள்தான் புரட்சி வீரர்கள் என்று காட்டுவதற்காக சிவப்பு சட்டை அணிந்து விட்டு பின்னர் கழட்டுவது ஏன்? ஆர்பாட்டம் நட்க்கும் போது மட்டும் சிவப்பு சட்டை போடுவதின் அரசியல்பயன் என்ன என்பதை தாங்கள் விளக்கவும்//
///ஈழத்துப் போரில் ம•க•இ.க செய்தது அதாவது முத்துக்குமார் மரண ஊர்வலத்தில் செய்ததும் என்ன தவறு. நீங்கள் அதில் ஏன் கலந்து கொள்ளவில்லை. விமர்னம் இருந்தாலும் பாராளுமன்றத்தில் நிலக்கிழார்களுக்கு அருகருகே அமர முடிந்த தங்களால் முத்துக்குமார் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் என்ன///
உணர்சிரீதியாக ஏற்படும் பிரட்சினையில் சென்று அரசியல் ஆதாயம் தேடுவது எங்கள் பழக்கம் இல்லை..அதே போல் நாங்கள் எங்களின் நிலையை 80 களீல் இருந்து தெளிவாக சொல்லி வருகிறொம்….அது இருக்கட்டும்..சர்தார் மகோதாவிற்கு5 வங்கியில் கோடிக்கணக்கில் பணம் உள்ளது எப்படி? .. பாரளமன்ற்த்தின் எங்கள் புரிதல் என்ன என்பதையும் நாங்கள் எங்கள் திட்டதில் சொல்லி இருகிறோம்.. இவற்றை பற்றி தங்களீன் திட்டம் என்ன சொல் கிறது ..என்று சொல்வீர்களா?
///கட்சி பேருல கம்யூனிசம் இருந்தாத்தான் ஒரு கட்சி கம்யூனிஸ்டு கட்சியா..///
நான் சொல்ல வந்தது மிகச்சரியாக தவறுதாலக திசைமாற்றம் தங்களால் செய்யப் படுகிறது..ம.க.இ.க.என்ரு வெளியில் சொல்லி திரிந்து தாங்கள் தான் ஒரிஜினலு என்று சொல்வதால் தான் நான் அதை சொன்ணேன்..
தங்களீன் அடுத்த பிண்ணூட்டம் உங்களீன் திட்டதை அறிமுகப்படுத்தி அதிலிருந்து விவாதாமாக இருக்கும் என்று நம்புகிறேன்,,
//சர்தார் மகோதாவிற்கு5 வங்கியில் கோடிக்கணக்கில் பணம் உள்ளது எப்படி? ..//
இப்படி உணர்ச்சி போங்க கேள்வி கேட்கும் நமது “போலி” அண்ணன், நம்ம செயா அம்மா, ஒரு ரூபா சம்பளம் வாங்கி எப்படி பல நூறு கோடிகளில் திருமணம், நகை, சொத்து என வாங்கியது எப்படி என்ற கேள்வியை என்றாவது கேட்டு இருப்பாரா?
“உணர்ச்சி ரீதியான விசயங்களில் அரசியல் ஆதாயம் தேட முற்பட மாட்டோம் ” – போலி.
சரி அது இருக்கட்டும் அண்ணே, லால்கரில் மக்கள் உணர்ச்சிகரமாக போராடியபோது, ஏன் மம்தா, தீவிரவாதம்,.. என அலறி ஆதாயம் தேட முயற்சித்தது ஏனோ..?
தேர்தலில், ஈழ மக்களின் துயரை காட்டி ஓட்டு பொறுக்க தெரிந்த நமது போலி அண்ணன் , உணர்ச்சிகரமான சூழ்நிலையில் அரசியல் ஆதாயம் தேட மாட்டார்.. !? 😉
திட்டத்தை பற்றி கேள்வி கேட்கும் நம்ம போலி அண்ணன், கடந்த அறுபது ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் நாற்காலியில் அமர்ந்து என்ன மாதிரியான திட்டங்களை நடைமுறை படுத்தினார், என சொல்ல முடியுமா? அல்லது அவர்களின் கட்சி ஆட்சி செய்யும், அல்லது ஆட்சி செய்த பகுதிகளில் மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகள் நிறைவு ஏற்பட்டு உள்ளதா…?
நான் மணி
சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை கட்சி திட்டம் இருந்தால்தான் பேச முடியும் என்ற இழிவான நிலையில் எங்களது கம்யூனிசப் புரிதல் இல்லை. கட்சி எதிலும் இல்லாத இந்த நாட்டின் பல நூறு இளைஞர்கள் இந்த இணையத்திற்குள் வந்து படிக்கின்றார்கள். அவர்களுக்கு புரிவதற்காகவாவது விளக்க வேண்டியது உங்களது கடமை என நினைக்கிறேன். அவர்களுக்கு விளக்குவதற்கு எங்களது அதிகாரப்பூர்வ தளத்திற்குதான வரவேண்டும் எனச் சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் பாராளுமன்றம் கூட உங்களால் நிரம்பியதில்லை. மீறித்தானே போயிருக்கின்றீர்கள்.
ஒருவேளை நான் உங்கள் அமைப்பில் சேர விரும்புகின்ற மாஜி ம•க•இ.க ஆதரவாளன் என்று வைத்துக்
கொள்ளுங்கள். எனக்கு விளக்குங்கள் ஐயா.. இதைவிடவும் எப்படி பணிவாக கேட்பது எனத் தெரியவில்லை.
அடுத்து எந்த முதலாளியோடு நாங்கள் கொஞ்சிக் குழவுகிறோம் உங்களைப் போல எனச் சொல்ல முடியுமா..எந்தப் பிரச்சினையில் சமரசம் செய்கிறோம் உங்களைப் போல எனச் சொல்ல முடியுமா..உதாரணமாக ஈழத்தைப் பற்றி எங்களது கொள்கை இதுதான் என்று சொல்லாமல் கூட்டணி அடிப்படையில் உங்களோடு அறவே வேறுபட்ட பெதிக, மதிமுக, பாமக ஆதரவுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டீர்களே எங்களுக்கு தனி ஈழம் எதிரானது என ஏன் மக்களிடம் சொல்லவில்லை. திட்டம் என்பது எழுதி வைத்து மறைத்து வைப்பதற்கல்ல எனச் சொல்லும் தாங்கள் எந்த அளவு மக்களுக்கு நேர்மையாக இருந்தீர்கள். அதற்கு பிரச்சாரத்திற்கு வந்த ஈழ ஆதரவாளர்களையும் தடுக்காத்தன் மர்ம்ம் என்ன•
புரட்சி வராது அப்படி என்று சொல்ல வந்தால் அத முதலில் சொல்லுங்கள். அப்புறம் எதுக்குங்க திட்டமெல்லாம் பேசணும். மற்றபடி திட்டம் வேணும் அதான•.. ஓ.கே.. அவ்வளவையும் அடித்துப் போட முடியாதுன்னு பேசுறீங்க•. இருந்தாலும் உங்களுக்கு என்ன பிரச்சினைல எது வேணும் னு கேட்டா சொல்லத் தயார். உங்க திட்டம் எனக்கு தெரியும். எங்களோட திட்டமும் உங்களுக்கு தெரியும். திட்டத்த ரகசியமா வைத்திருப்பதாக நீங்கள் நினைப்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பாமரத்தனம்
கம்யூனிசத்துக்கு ஆகாது அய்யா.. சரி ஏன் புரட்சி வராதுன்னு கேட்டா மக்கள் தயாரா இல்லம்பீங்க•.. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற தனது வரலாற்று சிறப்பு மிக்க புத்தகத்தில் லெனினது உரையை பதிவுசெய்திருப்பார். இடது சோசலிஸ்டுகளிடம் லெனின் சொல்வார், மக்களது உணர்வுநிலை அனுமதிக்கும்போது மட்டும்தான் புரட்சியை நடத்த முடியுமென்றால் இன்னும் ஒரு நானுறு ஆண்டு காலத்திற்கு ரசியாவில் புரட்சி நடத்த் முடியாது.
இன்று நவம்பர் 7. காலையில் பேப்பரை திறந்தால் பிரகாஷ் காரத் சொல்கிறார். காலாவதியான, கதைக்கு உதவாத கொள்கைகளை அரசியலாக வைத்துள்ளனர் மாவோயிஸ்டுகள் என்கிறார். நீங்களே தயாராக இல்லாத போது மக்களை ஏன் குறை சொல்கின்றீர்கள்..
திட்டம் எதற்கு நடைமுறைப் படுத்துவதற்குதானே.. உங்களது திட்டம் எத்தனை முறை மாற்றப்பட்டது என்றெல்லாம் நாங்கள் விமர்சனம் பண்ண மாட்டோம். எதற்கு ஆதரவாக என்ன சித்தாந்த தவறுகளை இழைத்தீர்கள் என்பதை விளக்க முடியும்.
உங்களை நாங்கள் அரசியல் ரீதியாக விமர்சிக்கிறோம். உடனே திட்டம் கொண்டு வா, தலைவர