Sunday, February 5, 2023
முகப்புசெய்திசச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

-

கிராகன் மீடியா (kraken media) என்ற பிரபலமான ஐரோப்பிய புத்தக வெளியீட்டு  நிறுவனம் சச்சின் டெண்டுல்கரது சுயசரிதையை புத்தகமாக வெளியிடப் போகிறது. இது ஏதோ பத்தோடு ஒன்றாக நினைத்து விடாதீர்கள்.

அரை மீட்டர் குறுக்களவும், 37 கிலோ எடையும் கொண்ட இந்தப் புத்தகத்தில் இதுவரை வெளிவராத சச்சினது குடும்பப் படங்ளும், சுயசரிதை அனுபவங்களும் இடம் பெறுகின்றன. முக்கியமாக சச்சினது இரத்தத்தை கலந்து தயாரிக்கப்பட்ட காகிதக் கூழினால் செய்யப்பட்ட இளஞ்சிவப்பு காகிதம் இந்த நூலில் இடம் பெற்றிருக்கும்.

ரத்தம் கலந்திருக்கும் இந்த விலை மதிக்க முடியாத புத்தகத்தின் விலை ரூ. 35 இலட்சம். மேலும் சச்சினது எச்சிலை பயன்படுத்தி அவரது டி என் ஏ விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதுவும் இணைப்பாக இந்த புத்தகத்தில் இருக்கும். இந்த சிறப்புகளுக்கு பொருத்தமாக அட்டை தங்கத்தில் ஜொலிக்குமாம்.

இவ்வளவு மதிப்புகளைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் மொத்தமாக பத்து பிரதிகளே தயாரிக்கப்படும். அதற்கான ஆர்டரும் முன்பதிவும் முடிந்து விட்டனவாம்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நூலைப்பற்றி கிராகன் மீடியாவின் தலைமை நிர்வாகி கார்ல் ஃபவ்லர் கூறும் போது, “ கிரிக்கெட் இரசிகர்களின் கடவுளாக போற்றப்படும் சச்சினை யாராவது எளிதில் நெருங்க முடியுமா? அதனால்தான் இவ்வளவு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ” என்று காரணத்தை பக்தியுடன் விவரிக்கிறார்.

மேலும் “ இந்த புத்தகத்தின் மூலம் கிடைக்கம் பணம் மும்பையில் உள்ள டெண்டுல்கரது அறக்கட்டளை கட்டி வரும் பள்ளிக்கூடத்திற்கு நன்கொடையாக அளிக்கப்படும் ” என்றும் கூறுகிறார். அதனால் இது கொள்ளை என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. அதாவது சச்சின் தனது இரத்தத்தை விற்று பள்ளிக்கூடம் கட்டுகிறாராம்.

அடுத்து கிடைத்தற்கரிய புத்தகத்தை 35 இலட்சம் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்காக ஒன்றரை இலட்ச ரூபாயில் இதே புத்தகம் தயாராகிறது. ஆனால் ரத்தம் கலந்த காகிதம் இதில் இருக்காது.

பதிப்புலகில் இத்தகைய மைல்கற்களைக் கொண்டிருக்கும் இந்த புத்தகம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வெளியிடப்படுமாம். அதுதானே டெண்டுல்கரது கடைசி உலகக் கோப்பை போட்டி!

மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த இரயில் விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தம் கிடைக்க வில்லை என்பதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன. இது கேள்விப்பட்டு மற்ற பயணிகளும், அருகாமை ஊர் மக்களும் உடன் ரத்தம் கொடுக்கத்  திரண்டனர்.

ரத்த தானத்தின் அருமையை நாம் இப்படித்தான் கேள்விப்படுகிறோம். அதிக ரத்தப்போக்கினால் பெண்கள் படும் அவலங்களையும் அறிந்திருப்போம். கணிசமான பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இப்படி சக மனிதனது இடர் கண்டு கொடுக்கப்படும் இரத்தத்தை சச்சினது புத்தகம் மகா இழிவாக, சுயவிளம்பர வெறிக்காக கேவலப்படுத்துகிறது. ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?

பத்து புத்தகங்களது தொகையான மூன்றரை கோடி ரூபாய் சச்சின் கட்டும் பள்ளிக்குத்தானே போகிறது என்று சிலர் ஆறுதல்படுத்தலாம். ஆனால் டெண்டுல்கரது மூன்று வருடங்களுக்கான விளம்பர ஊதியம் மட்டும் 185 கோடி. இது போக அவரது பந்தய வருமானங்கள், பழைய விளம்பர வருமானங்கள், ஓட்டல் முதலான தொழில் வருமானங்கள் தனி. இப்படி பெரும் முதலாளியாக வாழும் அவருக்கு பள்ளி கட்டுவதற்குகூட தனது இரத்தத்தை காட்டி 3.5 கோடியை வசூலிக்கிறார் என்றால் என்ன பொருள்?

1.5 இலட்ச ரூபாய் புத்தகம் எவ்வவளவு விற்கப் போகிறது என்பது தெரியவில்லை. குறைந்தது 5000 பிரதிகள் என்றால் 75 கோடி ரூபாய் வருகிறது. இதில் பத்து சதவீத ராயல்டி என்றால் சச்சினுக்கு 7.5 கோடி கிடைக்கும். இது போக சுயசரிதை ஒப்பந்தத்திற்கு தனி தொகை. 75 கோடியில் பாதிக்கும் மேல் இலாபம் கிரேகான் நிறுவனத்திற்கு கிடைக்கும்.

இரத்தத்தை காட்டி விளம்பரம் செய்வதற்கு 3.5 கோடி. இலாபம் 30 கோடி.

பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் இந்தியாவில்தான் இத்தகைய ஆபாசங்களும் நடைபெறுகின்றன. சினிமாவைப் போல புதிய மதமாக தலையெடுத்திருக்கும்கிரிக்கெட்டின் வீச்சு காரணமாகத்தான் இந்த ஆபாசங்கள் தைரியமாக சந்தைக்கு வருகின்றன. சாமர்த்தியமாக மோசடி செய்து இரசிகனை ஏமாற்றுகின்றன.

டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள்!!

 1. சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!…

  ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?…

 2. காரி துப்புவதை தவிர வேறு ஒன்றுமே தெரியாதா கம்முனிஸ்டுகளுக்கு

  • இன்னாங்க இப்படி சொல்லிட்டிங்க.. ஒழுங்கா ஓடிகிட்டிருக்கிற பாக்டரிய ஊத்தி மூட வைக்க தெரியும், அதை நம்பி நிம்மதியா குடும்பம் நடத்தி கொண்டிருந்த தொழிலாளிய குடும்பத்தோட தெருவுக்கு கொண்டு வர தெரியும், அமைதியா போய்க்கிட்டிருந்த ஊரில ஜாதி கலவரத்த உருவாக்க தெரியும், பகல்ல பவிசா உண்டி குலுக்கிட்டு ராத்திரியில் தொழிற்சாலை முதலாளி வீட்டிற்கு சென்று தன் தொந்தியை வளர்த்து கொள்ள தெரியும், அவனுக்கு காஸ் தொந்தரவால் வாயு பிரிந்தால் கூட அதற்க்கும் அமெரிக்க சதி என்று ஊரை ஏமாற்ற தெரியும், etc, etc, etc, etc,,,,,

  • இந்த முதலாலித்துவ கைக்கூலி டெண்டுல்கரை வைத்து முதலில் விளையாடும் போது கிரிக்கெட் போர்டு, பின்னர் விளம்பரம் மூலம் பெரும் முதலாளிகள், இப்போது ஓய்வு எடுக்கும் நேரம் புத்தக வியாபாரிகள் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் எல்லாவற்றிலும் ஏமாறுவது என்னவோ ரசிகன் தான். நல்ல வேலை புத்தகம் விலை லட்சக்கணக்கில் உள்ளது; அல்லது சாதாரண ரசிகனின் பணம் நாசமாகும்.

 3. //டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள் //

  முடியாதுங்க.

  • /////
   //டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள் //

   முடியாதுங்க.
   /////

   கரெக்டு…

  • ஏனுங்க, மணிகண்டன் சாருக்கு சுரணை இல்லீங்களா?

   • அதனாலதான் முடியாதுண்ணு சொல்ராறு.
    சரி உங்களுக்கு இருக்காணு பாருங்க.

  • பரவாயில்ல மணிகன்டன் காறித் துப்பவேணாம், இந்த புத்தகத்தை பத்தின உங்க கருத்தையாவது துப்பிட்டுபோங்க, சீனு நீங்களும்தான்!

 4. […] This post was mentioned on Twitter by சங்கமம், ஏழர. ஏழர said: @manikandanvis @orupakkam சச்சின் ரத்தப்புத்தகம் http://bit.ly/bFjzRv #vinavu […]

 5. ஃபோர் அடிச்சா மில்லியனர்!
  சிக்ஸ் அடிச்சா பில்லியனர்!
  விளம்பரத்துல நடிச்சா மல்டி பில்லியனர்!
  ரத்தப்புத்தகம் போட்டா ……………….

  நம்மதான் நாக்அவுட்!!!!

 6. யாருபா அங்க …
  வினவு கய்யில ஒரு மட்டயக் கொடுங்கப்பா ..

  இன்மே அவரு விளயாடுவாறு … இந்தியா சார்பா ..

  சாரி , ரெண்டு மட்ட வேணும் .. ஒண்ணு சிவராமானுக்கு ..

  வினவு இது போன்ற பதிவு எழுதுவதன் மூலம் வினவின் மேலுள்ள விசுவாசம் குறைகின்றது.
  இருக்கும் வாசகர்களையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது.

  • //வினவு இது போன்ற பதிவு எழுதுவதன் மூலம் வினவின் மேலுள்ள விசுவாசம் குறைகின்றது.
   இருக்கும் வாசகர்களையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது.//

   சச்சின் என்ற யாவாரிக்காக வினவை இழக்க விரும்புகிறவர்களை ஒன்றும் செய்ய இயலாது. அவர் தலைவிதி அவரவருக்கு…..

  • ஓரு கேள்விங்க…..கிரிக்கெட் இந்த நாட்டில் எதற்கு விளையாடணும்….

   அந்த விளையாட்டு இல்லைன்னா என்ன குறைச்சல் வந்துடும்

   • இந்தக் கேள்வி எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் மகிழ்நன். இசை, ஓவியம், சிற்பம், நாடகம், விளையாட்டு எதுவுமே விவசாயம் போல, அறிவியல் போல நேரடியாக மனித இனத்துக்கு உதவாதது போல இருக்கலாம். ஆனால் சமூகக் கட்டமைப்பிற்கும், ஒற்றுமைக்கும், தனிமனித ஒழுங்கிற்கும் இவை எல்லாமே உதவி இருக்கின்றன. மதங்கள் போல இல்லாமல் பிரிவினைகளுக்கு எதிராக இருந்திருக்கின்றன. மிகவும் அடிப்படை அளவில் பேசினால் கூட முஸ்லீம்களும் அனைத்து சாதி இந்துக்களும் வெவ்வேறு தளங்களில் செல்வம் படைத்தவர்களும் சமநிலையில் கூடும் இடங்கள் இவைதான்.

    இர்ஃபான் பதானும் (முஸ்லீம்), ஹர்பஜனும் (சீக்கியர்), சச்சினும் (பிராமணர்), சேவாக் (ஜாட்) பாகு பாடு இல்லாமல் சேர்ந்து பணி செய்யும் ஒரு நோக்கத்தை விளையாட்டு தருகிறது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மராத்திய தலித்துகளுக்கு பலூ என்ற கிரிக்கட் வீரரின் சாதனைகள் ஊக்கமாக இருந்திருக்கின்றன. அதே போல தென்னாப்பிரிக்கக் கருப்பர்களுக்கு மகாய இன்டினி.

    “Hoop dreams” என்ற படம் பாருங்கள். போதைப் பொருட்களுக்கு அடிமையாகியிருக்க வேண்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் சேரிக் குழந்தைகளுக்கு கூடைப்பந்து விளையாட்டு தந்த ஒழுக்கமும் சுபிட்சமும் புலனாகும். இது உங்கள் கேள்விக்கு மட்டுமே நான் தரும் பதில்.

 7. அவரோட ரத்தத்தை வியாபாரம் ஆக்கிதானே சம்பாதிக்கிறார்.அடுத்தவர் ரத்தத்தை இல்லையே.இதற்க்கு எதற்கு இந்த பதிவு?அவர் செய்துள்ள சாதனைகளால் அவர் ரத்தம் மதிப்பு பெறுகிறது.

  எதிலும் குறை கண்டு பிடிக்கும் மனநிலை மட்டுமே இதில் தெரிகிறது.

  • அப்புடி நெனச்சா உங்க மனதிலதான் குறை இருக்குன்னு அர்த்தம். சசினைத் தெரிந்த உங்களுக்கு 21000க்கும் மெற்பட்டோர் இறந்து போன போபாலும், தினசரி இறந்து கொண்டிருக்கும் விதர்பா விவசாயிகளையும் தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் போவதற்கு இந்த கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் மூழ்கிப் போகும் மனநிலையும், தனி மனிதனை த்லையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வியாதியும் தான் காரணம்.

   • இவர் தனது புத்தகத்தை அதிக விலை வைத்து விற்பதால் நீங்கள் சொல்லும் விவசாயிகளுக்கும்,போபால் மக்களுக்கும் என்ன பிரச்சினை ? ஒரு அரசு இது போன்ற காரியங்களை செய்யுமானால் குற்றம் சொல்லலாம்.அந்த பணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாமே என்றோ , இத்தனை பேர் கஷ்டப்படும் போது எதற்கு இப்படிப்பட்ட ஒரு ஆடம்பர புத்தகம் என்றோ நிச்சயமாக கேக்கலாம்.

    சச்சின் ஒரு தனி மனிதர்.அரசு , அரசு துறையினருடன் எந்த சம்பந்தமோ ,அரசின் மூலம் வருமானமோ பெறாதவர்.அவர் சட்டதிருக்கு உட்பட்டு எப்படியும் பணம் ஈட்டலாம் ,அதை செலவும் செய்யலாம்.

    • சச்சின் தனியா வூட்டுக்குள்ள ஆடி, தனியா சம்பாதிச்சிருந்தா…இந்த கேள்வியை யாரும் கேக்க போறதில்லை….மக்களின் நேரத்தை வீணடிக்கும் ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டு ( ரம்பா, சிம்ரன் ஆட்டத்தையும் இதற்கு ஒப்பிட்டு கொள்ளவும் தப்பில்லை)…

     சமூக அக்கறையே இல்லாமல் கேணத்தனமா பணத்தை மட்டும் சேர்த்து கொள்ளும் ஒருவன் இந்த சமூகத்திற்கு என்ன தேவை

   • //அப்புடி நெனச்சா உங்க மனதிலதான் குறை இருக்குன்னு அர்த்தம். //

    இன்னும் ஒன்று திரு.புலிகேசி ,நீங்கள் சிந்திப்பதற்கு மாறாக யாரும் சிந்திக்க கூடாது.சிந்தித்தால் அவன் மனதில் குறை என்று சொல்லி விடுவீர்கள்.அருமை உங்கள் வாதமும் , வாதம் செய்யும் முறையும் .

    சச்சினையோ கிரிக்கேட் விளையாட்டை விரும்புபவர்கள் அனைவரும் அதிலேயே மூழ்கி விடுபவர்கள் , அவர்களுக்கு மற்ற எதன் மீதும் கவனமும் ,சமூக அக்கறையும் இல்லை என்று நீங்கள் நினைத்து கொண்டிருபதுதான் வேடிக்கையாக உள்ளது.

    • நான் அப்படி நினைப்பவனல்ல. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். சச்சினுக்கு ஏன் இவ்வளவு முக்கியத் துவம் கொடுக்கிறீர்கள். அந்த முக்கியத்துவத்தை போபால் விடயத்தில் கொடுத்திருந்தால் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஓரளவாவது எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும். மக்களின் உயிர்களை விட சச்சின் முக்கியமாக சித்தரிக்கப் படுகிறாரா இல்லையா? இது நல்லதா கெட்டதா?

  • கட்டுவார்கள் வால் அதில் என்ன சந்தேகம் தனி மனிதனுக்கு சொம்பு தூக்குவதில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது

   • பெரியார், வீரமணி, ரஜினி, குஷ்பு, நமிதா, சே ,செருகூரி – இவர்களைப் போன்றவர்களுக்கு தனி மனித வழிபாடு நடத்தினால் தப்பில்லையா?

   • உண்மை. சச்சின் போன்ற‌ சாதனையாளர்கள் மீது மதிப்பு வைப்பதில் தவறில்லை. ஆனால் இந்தத் தனிமனித வழிபாடு அத்து மீறிப் போவது தான் சினிமா நடிகர்களும், அரசியல் வாதிகளும், கிரிக்கெட் ஆட்டக்காரர்களும் மனசாட்சியில்லாமல் சொத்து குவிக்க ஏதுவாகிறது.
    அந்த‌ ம‌ன‌ப்பான்மையை ஒழிக்க‌ இது போன்ற‌ இடுகைக‌ள் அவ‌சிய‌மாகிற‌து. ஆனாலும் எல்லோரும் ஏற்க‌க் கூடிய‌வ‌கையில் ச‌ற்றே மித‌மான‌ தொனி இருக்க‌லாம்.
    ஆத்திர‌த்தைக் காட்டுவ‌தை (நியாயம் தானென்றாலும்) விட பெரும்பான்மை ம‌க்க‌ளுக்குப் புரிய‌வைப்ப‌து நோக்க‌மாக இருந்தால் ந‌ல்ல‌து என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து.

 8. உண்மை தோழர் ………..காரி துப்ப வேண்டும் ……….இங்கே நெகடிவ் வாக்கு அளிப்பவர்களுக்கு ………….விதர்பா தெரியாது சச்சின் தெரியும்
  கொடுமை …………ஏற்கனவே கரெக்ட் தோழர் என்று தவாறன இடத்தில் போட்டு விட்டேன் நீக்கி விடவும்

 9. சச்சின் டென்டுல்கரினால் எங்காவது இனம், மொழி, மதம் பாதிப்படைந்துள்ளதா?
  புத்தகத்தின் மீது காறித் துப்புவதால் யார்? எங்கே? எப்படி? நன்மையடைவார்கள்….

  • பெப்சி விளம்பரத்தில் நடிக்கிறாரே சச்சின் . அவருக்கு பக்கத்து ஊரில் விதர்பாவில் விவசாயப்படுகொலை நடைபெறுகிறதே .
   இந்த பெப்சி கோக் தான் ஊரில் உள்ள விவசாயியின் தாலியை அருக்கிறதே , அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் . விவசாயம்
   என்பதே இனம் இல்லையா ?????IPL மேட்ச் பார்பர்பவர்கள் மட்டுமே இனம் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள படுவார்களா ….????

    • //Alcohol is more dangerous than Pepsi and coke.
     Tobacco is more dangerous than alcohol
     what are YOU doing to stop it?//

     குடியும், புகையும் மனிதனது கெட்டப் பழக்கங்களாக அவன் நாகரிகமடைந்த காலத்திலிருந்து இருக்கின்றன. அவை கேடான பழக்கம் என்ற வகையில் எதிர்த்து தடுக்கப்பட வேண்டியவை நிறுத்தப்பட வேண்டியவையே.

     இன்னும் சரியாகச் சொன்னால் குடி புகையை விட மிக அபாயகரமாக இருப்பவை மஞ்சள் காமாலை போன்ற நோய்களும், சாலை அராஜகங்கள் உருவாக்கும் விபத்துக்களும். இவை எல்லாமே தடுத்து நிறுத்தப்பட வேண்டியவையே.

     ஆனால், இவற்றை விட மிக முக்கியமாக அடிப்படையாக சில விசயங்கள் முன்னுக்கு வருகின்றன. அவை நாடு அடிமையாவது, இயற்கையின் கொடையாம் தண்ணீர் தனியார்மயமாவது இவை மனிதனது அடிப்படை வாழ்வுரிமையை பாதிப்பவை. எனவே கோக் பெப்ஸி போன்ற மறுகாலனியாக்கத்தின் பிரதிநிதிகள் முதன்மை எதிர்க்களாகிறார்கள்.

 10. காறித்துப்பிட்டா?, Harley Davidsonனை இந்தியாவில் தடை செய்தால்….இந்தியாவில் ஏழ்மை மறைந்துவிடுமா?

  வேறு எதாவது உருப்படியான யோசனை இருந்தால் சொல்லவும்…. 🙂

  • //காறித்துப்பிட்டா?, Harley Davidsonனை இந்தியாவில் தடை செய்தால்….இந்தியாவில் ஏழ்மை மறைந்துவிடுமா?
   வேறு எதாவது உருப்படியான யோசனை இருந்தால் சொல்லவும்…. //

   நண்பரே இங்கு அது அல்ல நோக்கம். முதலில் மக்களாகிய நாம் ஒரு தனி மனிதனின் புகழ்ந்து அவனுக்குக் கொடிப் பிடிப்பதை நிறுத்த வேண்டும். சச்சினைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள் எத்துனைப் பேர் போபால், விதர்பா போன்ற விடயங்களுக்காக கவலைப் பட்டிருக்கிறீர்கள். சச்சினின் ஆட்டத்தை ரசிக்கும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அது வெறும் ரசனை என்ற அளவோடு முடிந்திருந்தால் இது போன்ற பதிவுகள் வந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. ஆனால் அது ரசனையைத் தாண்டி அவரைக் கடவுளாக்கிப் பார்க்கும் அளவுக்கு செல்லும் போது ஒரு விதமான போதையில் மக்கள் சிக்கிக் கொண்டு தன்னை சுற்றி நடக்கும் அநியாயங்கள், கொடுமைகளை எதிர்க்கத் தவறுகின்றனர். இது போல் சினிமா நடிகர்கள், நடிகைகளின் மாராட்டம் இந்த வரிசையில் இடம் பெற்றிருப்பதுதான் இந்தக் கிரிக்கெட். இதனால் மக்களின் சிந்தனைகள் சிதறடிக்கப் பட்டு மூளைகள் மழுங்கடிக்கப் பட்டு சமுதாயப் பிரச்சினைகள் குறித்த எண்ணமற்றவர்களாய் மாற்றப் படுகிறோம். அது போன்ற எண்ணங்கள் தகர்த்தெரியப் பட வேண்டுமெனில் இத்தகையப் பதிவுகள் தேவைதான்.

 11. சச்சின் டெண்டூல்கர், மொழி, இனம், மதம் தாண்டி கிட்டத்தட்ட எல்லா இந்திய ரசிகர்களாலும் மதிக்கப்படக் கூடியவர். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மேதையாக விளங்குகிறார், அவரது வாழ்க்கையே 24/7 கிரிக்கெட்டாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன் (பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை அவர்).

  இது போன்று தமது துறையில் மேதையாக இருப்பவர்களுக்கு மற்ற அக்கறைகள் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருந்தாலும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

  பாகிஸ்தான் மும்பையில் குண்டு வைத்து விட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியுடனான அந்த நாட்டு அணியின் போட்டியை ரத்து செய்து விட்டு, தனது நாட்டிலேயே தனது குடிமக்களையே கொன்று குவித்துக் கொண்டிருந்த இலங்கையில் அவசர அவசரமாக போட்டி ஏற்பாடு செய்து போய் விளையாடும் போது சச்சின் டெண்டூல்கருக்கு எந்த மனசாட்யும் உறுத்தவில்லை, உறுத்தும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

  இதற்கிடையில் கிரிக்கெட்டில் தனக்கு இருக்கும் புகழை பயன்படுத்தி தேவையான அளவு பணம் சம்பாதிப்பதிலும் அவர் அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் திறமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

  இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஏதோ ஒரு வகையில் கிரிக்கெட்டில்தான் ஈடுபட்டிருப்பார் என்று நினைக்கிறேன். (அசாருதீன் போல அரசியலில் வருவது எல்லாம் நடக்காது).

  கிரிக்கெட்டில் அவர் மகத்தான ஹீரோ, கிரிக்கெட்டுக்கு வெளியில் அவரிடமிருந்து எதையும் சிறப்பாக எதிர்பார்ப்பது கூடாது. அடிப்படை சமூகப் பொறுப்புகள் சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுத்துதான் சாதித்துக் கொள்ள வேண்டும்.

  அவர் மீது காரி துப்புவது என்பது எந்த பலனையும் கொடுக்காது என்பது என் கருத்து.

  மா சிவகுமார்

  • மா.சி, வெப் தமிழன், மஹேன்திரா –

   பதிவில்

   @@@டெண்டுல்கரது பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கைதட்டியவர்கள் சுரணையிருந்தால் இந்த ரத்தப் புத்தகத்தின் மீது காறித் துப்புங்கள்!!@@@@

   இப்படித்தானே எழுதியிருக்கிறது.. அப்புறம் ஏன் சச்சின் மீது துப்ப வேண்டும் என்று எழுதுகிறீர்கள்?

   • //இப்படித்தானே எழுதியிருக்கிறது.. அப்புறம் ஏன் சச்சின் மீது துப்ப வேண்டும் என்று எழுதுகிறீர்கள்?//

    இந்த பதிவில் வந்து துப்பிவிட்டால் அது அந்த புத்தகத்தின் மீது துப்புவதாகாதா? தெரியாம போச்சே…!!!

    • சீனு, அதான் இப்ப தெரிஞ்சு போச்சே உங்களுக்கு இந்த துப்பு கெட்ட புத்தகத்து மேல துப்ப துப்பு இருக்கா இல்லயா 🙂

  • இப்பதிவு சமூக பொறுப்பில்லாமல் இருக்கும் அவர் ரசிகர்கள் மீது வைக்கப்பட்டுள்ளது . இங்கே
   விமர்சனமே அந்த ரசிகனின் மனநிலை தான் . அந்த கடவுளை போன்ற மனநிலையை உடைக்க
   வேண்டும் என்றால் இந்த விமர்சனம் தேவை தான் .

  • //சச்சின் டெண்டூல்கர், மொழி, இனம், மதம் தாண்டி கிட்டத்தட்ட எல்லா இந்திய ரசிகர்களாலும் மதிக்கப்படக் கூடியவர். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மேதையாக விளங்குகிறார், //

   துறையில் மேதை அதனால் மதிக்கப்படுகிறார் என்பது புரியவில்லை.

   பீயள்ளுபவர்கள் அவர்கள் துறையில் மேதையாக இருக்கிறார்கள். ஏன் இவர்களை யாரும் மதிப்பது இல்லை? இத்தனைக்கும் அவர்கள் அள்ளுவது அடுத்தவனுக்காக. அதைப் பற்றிப் பேசுவதே அசிங்கம் என்றுதான் நினைக்கிறோம்.

   இந்த நபர்.பொழுதுபோக்கு ஆட்டத்தில் வேலை பார்க்கிறார் காசு சம்பாதிக்கிறார். கொஞ்சம் காசை மறுபடியும் இப்படி விற்று மேலும் காசாக்குகிறார். அதில் கொஞ்சம் அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார். சட்டப்படி சாரயம் காச்சுபவன் திருப்பதிக்கு உண்டியல் போடுவது போல.

   காசு கொடுத்து ஆட்டம் பார்த்தவன் அதைத் தாண்டிப் போகாமல், ஆடியவன் ஆய்போனாலும் அதைச் சேமித்து வைத்துக் கொள்ளப் பார்க்கிறான். இது ஒரு இரசிக மனவியாதி. அந்த வியாதி உள்ளவனிடம் போய் நீ துப்பு என்றால் எப்படி? அவன் மேலேயே துப்பிக்கொள்வானா?

   • கல்வெட்டு, சாராயம் குடிப்பவன் திருப்பதியில் காசு போடுவதும், சச்சின் செய்வதர்க்கும் எப்படி முடிச்சு போடமுடியும்?

    நேர்மை வழியில் சச்சின் சம்பாதிக்கிறார். ஒரு சல்லி காசு கூட அவர் தர்மம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், தருகிறார். மேன்மக்கள் வரிசையில் இடம் கொடுக்கப்பட வேண்டிய ஆள்.

    ஒவ்வொரு துறையில் மேலிடத்தில் இருப்பது பெரிய விஷயம்தான். துறையின் தன்மைக்கு ஏத்த மாதிரி தூக்கி வச்சு கொண்டாடுவதுதானே ஞாயம்?

    நான் ஐ.டி துறையில் ஆணி பிடுங்கி மேலிடத்தில் இருந்தால், என்னை சுற்றிய பத்து பேரு என்னை தூக்கி வைப்பான். லாரி ஓட்டி மேலிடத்தில் இருந்தால் என் கிளீனரு தூக்கி வைப்பான். பாட்டு பாடி மேலிடத்தில் என் ரசிகர்கள் ஆயிரம் பேரு தூக்கி வெக்கப் போறான். etc.. etc..

    ரசிகன் ஆட்டத்தை தாண்டி, மேலும் ஐட்டங்களை வாங்கி பணக்காரன் ஆக்குவதில் ஒண்ணும் தப்பில்லை. நாம பாப்புலர் ஆகி, நாம எழுதர ப்ளாகை நம் ரசிகர் யாராவது 10000 கொடுத்து வாங்கிக்கறேன்னா கசக்குமா என்ன? 🙂

    • //நேர்மை வழியில் சச்சின் சம்பாதிக்கிறார். ஒரு சல்லி காசு கூட அவர் தர்மம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், தருகிறார். மேன்மக்கள் வரிசையில் இடம் கொடுக்கப்பட வேண்டிய ஆள்.//

     நேர்மை வழி என்றால் எனன் சர்வேசன்?

 12. சச்சினுக்கு ஆதராவாக குரல் கொடுப்போரில் எத்தனை பேர் இந்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்க போகிறார்கள். அவர் வாழ்க்கை என்ன இந்த சமுகத்திற்கு பாடமா அல்ல தன்னையே சமுகத்திற்கு அர்பணித்தாரா. சமுகத்திடமிருந்து சுரண்டியதுதான் அதிகம். அதில் சிறு பங்கு திருப்பி செலுத்தவும் விளம்பரம். என்ன செய்ய அவர்கள் அப்படி வளர்த்தெடுக்க பட்டுள்ளனர். அதில் வீழ்ந்த விட்டில் பூச்சிகள் ஜல்ரா அடிக்கின்றன.

 13. அரசியல்வாதிகள் தங்களை விற்றுப் பணம்தேடும்போது அந்த வியாபாரத்தில் ஏழைகளும் தங்களையே விற்று அவர்களை இலாபமடையச் செய்யவேண்டிய கட்டாய அவலத்தை மாற்றுவது கடினம். ஆனால் சச்சின் டென்டுல்கர் போன்றோர் தங்களை விற்றுப் பணம்தேடும்போது வாங்கவேண்டிய கட்டாயநிலமை யாருக்குமில்லை. பணக்கார ரசிகர்களுக்கே இது சாத்தியப்படும். வினவின் பரப்புரை அவர்களை விழிப்படையச்செய்து எங்கே துப்பவேண்டுமோ அங்கே துப்பவைக்கட்டும்.

 14. Flash News: விரைவில் சச்சினின் மூத்திரம் மற்றும் மலத்தால் செய்யப்பட்ட புத்தகம் வருதாம். புக்கை ஆர்டர் செய்ய ரசிகர்களிடையே கடும்போட்டி.

 15. ஒரு மனிதனின் புகழ் உயர்வது கடினம்

  புத்தகத்தை பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும் சாடியவர்கள்
  அவரின் அறக்கட்டளை என்ன செய்கிறது என ஒரு பதிவு போடலாம்

  புரளி கூறுவது
  புரட்சி கரமாக பேசுவது எல்லாம் சரிதான்

  ரத்தம் எச்சில் என்று பேசியவர்கள் அதன் அறிவியல் உள்ளார்ந்த எண்ண வெளிப்பாட்டை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை என்பது வருத்தம்

  நான் பிரபலமாகி விட்டேன் என்பதற்காக மட்டுமே சமுக அக்கறை காட்ட வேண்டும் என்பதில் எந்த வித அர்த்தமும் இல்லை அது ஒரு மனிதனின் உள்ளார்ந்த செயல்பாடு,

  அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கிரிகெட் சார்ந்த துறையில் தான் இருப்பார் என ஜோதிடம் பார்த்து கூறியதற்கு நன்றி

  இப்படியெல்லாம் கூறுவதால் நானும் அந்த சச்சினை தலை மேல் தூக்கி வைத்து கோவில் கட்டி கும்பிடும் ரசிகன் அல்ல
  வினவின் ஒரு சாதாரண வாசகன்

  ஆனால் இந்த பதிவு அந்த புத்தகத்தை பற்றி கூறும் அதே வேளையில் அந்த மனிதனை பற்றி தரக்குறைவாக கூற தேவை இல்லை என்று எண்ணுவதால் இது

  சச்சின் ரசிகர்கள் பொறுப்பு அற்றவர்கள் என கூறும் அதே நேரத்தில் பல ஊர்களில் சச்சின் ரசிகர் மன்றத்தால் வருட வருடம் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கபடும் நோட்டு புத்தகம் பற்றியும் எழுதவேண்டும்

  பொறுப்பு என்பது குறை கூருவதலோ
  கரி துப்புவதலோ வருவது இல்லை

  அது விழிப்புணர்வு
  நமது அடிமட்ட மக்களின் கல்வி அறிவு வளரும் போது தான்
  அன்றாட தேவைகளை பற்றி என்ன தோன்றும்

  இந்த வளரும் மக்கள் வளர்வதும்
  தேயும் மக்கள் தேய்வதும் முடியும் போது நீங்கள் கூறிய பொறுப்பு பிறக்கலாம்

  • //சச்சின் ரசிகர்கள் பொறுப்பு அற்றவர்கள் என கூறும் அதே நேரத்தில் பல ஊர்களில் சச்சின் ரசிகர் மன்றத்தால் வருட வருடம் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கபடும் நோட்டு புத்தகம் பற்றியும் எழுதவேண்டும்//

   நண்பரே இது போன்ற என்.ஜி.ஓ வேலைகள் தான் இன்று நாட்டின் தேவையா? இதிஅத் தாண்டி யாரும் சிந்திப்பதில்லையே. அதற்கு இது போன்ற பிரபலமானவர்கள் தான் ப்ராபளமாக இருக்கிறார்கள். நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து இல்லாதவனுக்கு உணவளிக்கும் இது போன்றவர்கள் அந்த மக்கள் ஏன் அந்த நிலமைக்கு வந்தார்கள் என யோசிப்பதில்லை. மூல காரணம் அறியப் படுவதில்லை. வருடா வருடம் கொடுக்கப் படும் நோட்டு புத்தகங்களால் அந்த ப்ரச்சினைகள் களையப் படும் என நினைத்தால் அது மிகப்பெரிய முட்டாள்த் தனம்.

   • சச்சின் ரசிகர்கள் பொறுப்பற்றவர்கள் என பலி கூறியதால் மட்டுமே இதை இங்கு முன் வைக்கிறேன் குறைகளை மட்டும் தேடும் நீங்கள் அவரின் அறக்கட்டளை பற்றி ஏதும் எழுதவில்லையே
    எனக்கும் அதை பற்றி தெரியாது

    • நண்பரே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் இது போன்ற பிரபலமானவர்கள் செய்யும் என்.ஜி.ஓ வேலைகளை வெளியில் சொல்லும் போது, அதை பிரபலப் படுத்தும் போது அது அந்த ரசிகர்களின் மனதில் அவர்களை இன்னும் ஆழப் புதைத்து தனி மனித தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அது எவ்வளவு பெரிய ஆபத்தில் சென்று முடிந்திருக்கிறது என்பது தான் இப்போது நாம் காண்கின்ற நடுத்தர வர்க்கங்களின் அறியாமை. சச்சினின் அறக்கட்டளைகள் பற்றித் தெரிந்து ஒன்றும் ப்ரயோஜனமில்லை. போபால், விதர்பா அணு ஒப்பந்தம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இன்றைய மக்களுக்குத் தேவை.

 16. //நான் பிரபலமாகி விட்டேன் என்பதற்காக மட்டுமே சமுக அக்கறை காட்ட வேண்டும் என்பதில் எந்த வித அர்த்தமும் இல்லை அது ஒரு மனிதனின் உள்ளார்ந்த செயல்பாடு,//
  அந்த பிரபலத்தின் செயல்கள் சமூகத்தை பாதிக்கும் பொழுது

 17. nanbaa annan tendulkar mumbai baandiraavil 40 kodi veetirku 4 varudangalaa sottu vari baakki ena oru tvil paartha gniyabagam !idukku enna solringa cricket veri ponaaldhan india urupadum!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 18. //மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த இரயில் விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காயமடைந்த மக்களுக்கு தேவையான இரத்தம் கிடைக்க வில்லை என்பதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன. இது கேள்விப்பட்டு மற்ற பயணிகளும், அருகாமை ஊர் மக்களும் உடன் ரத்தம் கொடுக்கத் திரண்டனர்.

  ரத்த தானத்தின் அருமையை நாம் இப்படித்தான் கேள்விப்படுகிறோம். அதிக ரத்தப்போக்கினால் பெண்கள் படும்